privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ராஜபக்சே போர்க்குற்றவாளி - 4 கிராம மக்கள் போராட்டம்!

ராஜபக்சே போர்க்குற்றவாளி – 4 கிராம மக்கள் போராட்டம்!

-

பென்னாகரம் அருகே 4 கிராம பொதுமக்கள் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி தர்ணா போராட்டம்.

இலங்கையில் ஈழத்தமிழ் மக்களை படுகொலை செய்த சிங்கள இனவெறியன் ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும், ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வரக் கூடிய தீர்மானத்தால் ஈழத்தமிழின படுகொலை போர்க்குற்றவாளிகளை தண்டிக்க வாய்ப்பு இல்லை என்பதை விளக்கியும் கரியம்பட்டி, ரெங்காபுரம், கூத்தப்பாடி, கே அக்ரகாரம் ஆகிய 4 கிராம மக்கள் தங்கள் கிராமங்களில் 18.3.2013 அன்று காலை 10 மணி முதல் தர்ணா போராட்டத்தில் (தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில்) ஈடுபட்டனர்.

  • 2009-ல் இலங்கையில் ஈழத்தமிழ் பகுதியில் நடந்தது மனித உரிமை மீறல் என்று அமெரிக்கா சுருக்கி பார்க்கிறது. அங்கு நடந்தது இனப்படுகொலை.
  • இந்த இனப்படுகொலைக்கு இந்திய அரசு ஆயுதங்கள், நிதி உதவி, இந்திய இராணுவத்தையெல்லாம் அனுப்பி போராட்டத்தை முறியடித்தது. மக்களை படுகொலை செய்தது. இலங்கை அரசின் இனப்படுகொலையில் இந்திய அரசும் சேர்ந்தது. அதனால் இந்திய அரசு மீதும் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும்.
  • போர்க்குற்றவாளிகளை சுதந்திரமான, நடுநிலையான விசாரணை மூலம் தண்டிக்க இரண்டாம் உலகப் போருக்கான நூரம்பர்க் போர்க்குற்ற விசாரணை போல் சுதந்திரமாக நடத்தினால்தான் தண்டிக்க முடியும்

என கோரிக்கை வைத்து முழக்கமிட்டனர்.

கரியம்பட்டியில் நடந்த தர்ணா போராட்டத்தில் பெண்ணாகரம் சட்டமன்ற உறுப்பினர் என் நஞ்சப்பன் அவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்தினார்.

4 கிராமங்களிலும் தலா 200 பேர் கலந்து கொண்டனர். தர்ணா போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

தகவல்
செய்தியாளர், புதிய ஜனநாயகம், பெண்ணாகரம்