privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம் : ரங்கநாதன் தெருவில் பெண்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்!

ஈழம் : ரங்கநாதன் தெருவில் பெண்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்!

-

ஜெனிவாவில் அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்தை இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவோடு நிறைவற்றிவிட்டதே பெரிய வெற்றி என்று, பலரும் ஈழப்பிரச்சினை தொடர்பான போராட்டங்களை முடித்துக்கொண்ட நிலையில், இந்த மோசடித் தீர்மானத்தைக் கண்டித்து, பெண்கள் விடுதலை முன்னணியின் சார்பில் 21.03.2013 அன்று தி.நகர் ரங்கநாதன் தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாம்பலம் இரயில் நிலையத்தில், பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் அஜிதா தலைமையில் அணிதிரண்ட பெண்கள், அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் கூடும் தலைநகரின் மிகப்பெரிய அங்காடித் தெருவான ரெங்கநாதன் தெருவை வந்தடைந்தனர்.

வீட்டோடு முடங்கிக் கிடக்க வேண்டியவர்கள் பெண்கள் என்ற பிற்போக்குக் கருத்துக்கள் இன்றளவும் ஆதிக்கம் செலுத்திவருகிற இச்சூழலில், பொதுப்பிரச்சினைக்காக, தெருவில் நின்று கம்பீரமாக முழக்கமிட்ட அந்த பெண்தோழர்களை கண்டு அங்கு கூடியிருந்த மொத்தக் கூட்டமும் ஆச்சரியப்பட்டது. எப்பொழுதும் பரபரப்பாக இயங்கும், ஒருவர் சென்று வரவே திணறிப்போகிற நெரிசல் மிகுந்த ரெங்கநாதன் தெருவில், குழுமியிருந்த மக்கள் இருபுறமும் ஒதுங்கிநின்று பெ.வி.மு. தோழர்கள் கடந்து செல்வதற்கான பாதையை ஏற்படுத்தித் தந்தனர். உணர்வு பூர்வமாக, உணர்ச்சி மேலிட பெ.வி.மு. தோழர்கள் எழுப்பிய முழக்கம் அங்காடித் தெருவெங்கும் எதிரொலித்தது.phogo-1

அப்பாவி ஈழத்தமிழின மக்களையும், போராளிகளையும் ஈவிரக்கமின்றியும் வக்கிரமான முறையிலும் கொன்றொழித்த இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சே கும்பலை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.

ஹிட்லரின் தளபதிகள்  உள்ளிட்ட இரண்டாம் உலகப் போர்க்குற்றவாளிகளைத் தண்டித்த நூரம்பர்க் விசாரணை போன்ற சுதந்திரமான பொதுவிசாரணை நடத்த வேண்டும்.

இப்போரை முன்னின்று வழிநடத்திய இந்திய அரசையும் இப்பொது விசாரணைக்குட்படுத்தித் தண்டிக்க வேண்டும்.

சேனல்4 வெளியிட்ட ஒளிப்பட ஆதாரங்கள் உள்ளிட்டு அடுத்தடுத்து இராஜபக்சே கும்பல் நடத்திய போர்க்குற்றங்கள் குறித்த ஆவணங்கள் வெளிவந்துள்ள போதும், வெறுமனே மனித உரிமை மீறல் என்ற அளவில் அதனை நீர்த்துப் போகச்செய்தும், போர்க்குற்றவாளி இராஜபக்சேவிடம விசாரிக்கும் பொறுப்பையும் வழங்கும் வகையிலான கேலிக்கூத்தான ஜெனிவாவின் தீர்மானத்தைக் கண்டித்தும்

முழக்கங்களை எழுப்பிய படிய, மக்கள் வெள்ளத்தினூடாக முன்னேறி வந்தது பெண்கள் விடுதலை முன்னணியின் பேரணி.

ரெங்கநாதன் தெரு சரவணா செல்வரத்தினம் கடைக்கு எதிரில் ஒன்று கூடிய பெ.வி.மு. தோழர்கள், மேற்கண்ட கோரிக்கைகளை உள்ளடக்கமாகக் கொண்ட கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஈழப்போருக்கு ஆள், அம்பு, சேனையை அனுப்பிவைத்து முன்னின்று வழிநடத்திய ஈழப்போர்க்குற்றங்களின் பங்குதாரர்களான மன்மோகன், சோனியாவைப் போன்ற வேடமிட்ட நபரை கட்டி இழுத்து வந்து செருப்பு மாலை அணிவித்து, ஆயிரக்கணக்கான பொதுமக்களின் முன்னிலையில் விளக்குமாறு, செருப்பால் அடித்தனர். பெ.வி.மு. தோழர்கள் எழுப்பிய கண்டன முழக்கங்களும், காட்சி விளக்கங்களும், ஈழப்போரின் குற்றவாளிகளை அடையாளப்படுத்தி, நாம் முன்னெடுக்க வண்டிய அரசியல் திசைவழியையும் சுட்டிக்காட்டியது.

தோழர்கள பல்லாயிரக்கணக்கான மக்களையும் தங்களை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தனர்; தங்களது போராட்டத்தில் அவர்களையும் பங்கேற்க வைத்தனர். திருவிழாக்கூட்டம் போல திரண்டு நின்ற மக்களின் பேராதாரவோடு, உஸ்மான் சாலையை மறித்து நின்றனர். பரபரப்புக்குப் பெயர் போன சந்தை நகரின் மொத்த இயக்கத்தையும நிறுத்திவைத்திருந்தனர்.

பெ.வி.மு. தோழர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தால், தினமும் கோடிகளில் புரளும் தமது கடையின் வியாபாரம், ஒரு நிமிடம் கூட தடைப்படுவதை சகித்துக்கொள்ள முடியாமல், போராடும் பெண் தோழர்களிடம் சண்டையிட வந்தார் சரவணா செல்வரத்தினம் கடையின் உரிமையாளர்.குளிர்பதன வசதிகொண்ட காரில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை சுட்டிக்காட்டி “பெண்கள் நடத்தும் போராட்டத்தால் பெண்கள் சிரமப்படுகிறார்கள் பாருங்கள்” என்றார் .

“தமிழன் கொடுக்கிற காசை நம்பி கடை நடத்துவ, அவன் பொதுப் பிரச்சினைன்னு போராடினா உனக்கு நோவுதா” என்பது தொடங்கி அச்சிலேற்ற முடியாத வார்த்தைகள் வரையில் அடிக்காத குறையாக அவனை அர்ச்சித்து அனுப்பினர் அங்க குழுமியிருந்த பொதுமக்கள்.

“பரபரப்பான உஸ்மான் சாலையை பத்து நிமிடம் முடக்கியதே பெரிய விஷயம். நீங்க அரைமணிநேரமா மறிச்சிகிட்டு நிக்கிறீங்க. கலைந்து போங்க. ” என்று கெஞ்சாத குறையாக, கேட்டுப் பார்த்தது போலீஸ்.

போலீஸ் நைச்சியமாகப் பேசிய போதும், அப்புறப்படுத்த பலவந்தமாக முயன்றபோதும் முழக்கமிடுவதை நிறுத்தவில்லை, பெ.வி.மு. தோழர்கள்.

பெ.வி.மு. தோழர்களின் விடாப்பிடியான உறுதியைக்கண்டு பீதியடைந்த போலீஸ், போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்று கொண்டிருந்த பேருந்து ஒன்றிலிருந்த பயணிகளையெல்லாம் கீழே இறக்கிவிட்டு, தோழர்களை வலுக்கட்டாயமாக ஏற்ற முயற்சித்தது.

அப்பொழுதும் கூட, ‘நாங்கள் இங்க எதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறாம்’ என்பதை பொதுமக்களிடம் அறிவித்துவிட்டு கைதாகிறாம் என்று போலீசிடம் வாதாடினர் தோழர்கள். அதன்படி, தோழர் அஜிதா அவர்கள் ஆர்ப்பாட்ட நோக்கத்தை திரண்டிருந்த மக்களிடைய அறிவித்து உரையாற்றினார். பின்னர், பெ.வி.மு. சென்னைக்கிளை செயலர் தோழர் உஷா மற்றும் போராட்டத்தில் பங்கெடுத்த 8 குழந்தைகள் உள்ளிட்டு பெண் தோழர்கள் அனைவரையும் கைது செய்தது போலீஸ்.

அதிரடியாகவும் முன் அனுமதி பெறாமலும் பெ.வி.மு. தோழர்கள் நடத்திய இந்த பேரணி ஆர்ப்பாட்டத்தால், அரசியல் கோரிக்கைகளுக்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாகத் தேர்ந்தெடுத்து அங்குதான் நடத்திக்கொள்ள வேண்டுமென்று நிர்ப்பந்திக்கும் போலீசின் முகம், கொஞ்சம் மாறித்தான் போயிருந்தது!

– வினவு செய்தியாளர்