privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்நாடு மீண்டும் அடிமையாகுது! பகத்சிங் பாதை உன்னை தேடுது!!

நாடு மீண்டும் அடிமையாகுது! பகத்சிங் பாதை உன்னை தேடுது!!

-

கோவையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி – தமிழ்நாடு சார்பில் அண்ணாமலை ஹோட்டலில் “நாடு மீண்டும் அடிமையாகுது … பகத்சிங் பாதை உன்னை தேடுது…” என்ற தலைப்பில் பகத்சிங் நினைவு நாள் அரங்கக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் தீவிரமாக நடந்துவரும் நிலையில் கோவையிலும் அரசு சட்டக்கல்லூரி, அரசு கலை-அறிவியல் கல்லூரி, தனியார் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து கூட்டமைப்பினை உருவாக்கி உண்ணாவிரதம், சாலை மறியல், மத்திய-மாநில அலுவலகங்கள் முற்றுகை மற்றும் விமானநிலையம், இராணுவ ஆயுதக்கிடங்கு, விமான பயிற்சி பள்ளி முற்றுகை, மேலும் சட்டக்கல்லூரி மாணவிகள் மட்டுமே பங்கேற்ற போலீஸ் ஸ்டேசன் முற்றுகை, பள்ளி மாணவர்கள் மறியல், போராட்டம் செய்து கைதான மாணவர்களை பொதுமக்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து உணவு வழங்குதல் என கோவை போராட்ட பூமியாக காட்சி தரும் நிலையில்…

மார்ச் 23 அன்று பகத்சிங் நினைவு நாள் அரங்கக்கூட்டம் நடைபெற்றது. பகத்சிங்கின் போராட்ட வரலாற்றை விளக்கி இன்றைய மாணவர்களின் போராட்டத்தில் என்ன கோரிக்கை வைப்பது? யாரிடம் கோரிக்கை வைப்பது? என்று கோரிக்கை வைப்பதில் உள்ள பிரச்சனைகளை விளக்கி இந்திய அரசும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் தங்களுடைய மேலாதிக்க வெறியுடன் செயல்படுவதையும் மக்கள் பங்கேற்புடன் எழுச்சிமிக்க போராட்டம்தான் ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமையை பெற்றுத் தரும் என்றும் இந்திய அரசிடம் கோரிக்கை வைத்தால் போர் குற்றத்திலிருந்து இந்தியாவை தப்ப வைக்கும் முயற்சி என்றும் மாணவர்கள் ஓட்டுச்சீட்டு அரசியல் கட்சிகளை புறக்கணித்ததை போன்று சரியான புரட்சிகர அரசியல் பாதையை தேர்ந்தெடுப்பதன் மூலம் இனவெறி அரசியலில் மாணவர்கள் பலியாகாமல் இருக்கலாம் என சுமார் ஒன்றே முக்கால் மணிநேரம் தங்களது சிறப்புரையின் மூலம் ம.க.இ.க.வை சேர்ந்த தோழர் துரைசண்முகம் விளக்கி பேசியதோடு, மாணவர்களுடன் விவாத நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு “ஆதலினால் காதல் செய்” கவிதை மற்றும் ஈழம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து ம.க.இ.க. வின் ஈழம் தொடர்பான அரசியல் நிலைப்பாட்டை விளக்கினார்.

தோழர் அலாவுதீன் தலைமையிலும், தோழர் வழக்குரைஞர் ஆனந்தகுமார் வரவேற்புரையுடனும் நடந்த அரங்க கூட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி, அரசு கலை-அறிவியல் கல்லூரி மற்றும் கோவையை சுற்றியுள்ள அனைத்து தனியார் கல்லூரி மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர். மேலும் கோவை இசைக்கல்லூரி மாணவிகள் ம.க.இ.க. வின் புரட்சிகரமான பாடல்களை இரண்டு நாட்கள் மட்டுமே பயிற்சி எடுத்து கலைநிகழ்ச்சி வழங்கினர். இறுதியாக ம.க.இ.க. வின் கோவை பகுதியின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் சட்டக்கல்லூரி மாணவி உமா நன்றி கூறினார்.

  1. ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் தீவிரமாக நடந்துவரும் நிலையில்……. என்னய்யா தூங்கிட்டு இருக்கியா…நான் தான் அப்பவே சொன்னேன்ல… தமிழகமே கொந்தளிக்குது… மாணவர்கள் புரட்சி நடக்கப்போவுது… லிபியா, எகிப்து மாதிரி இந்தியாவுல ஏதாவது எழவு நடக்கும்னு எதிர் பார்த்து ஏமாந்தியா….
    அடிப்படை தெரியாத ஆளா இருக்கீயே…. சின்ன சின்ன நாட்ல இதெல்லாம் சாத்தியம்… ஒரே இனம், ஒரே மொழி, ஒத்த கருத்துடைய கூட்டம், இது போல பல காரணங்கள் உண்டு… லிபியா மாதிரி வெற்றியும் நடக்கலாம்… இலங்கை மாதிரி தோல்வியும் கிடைக்கலாம்… ஆனா அமெரிக்கா, ரஸ்யா, சீனா, இந்தியா, கனடா போன்ற பரப்பளவு மிக அதிகம் உள்ள நாட்டில்.. பணமும், அதிகாரம் நாடு முழுவதும் மிக சரியாக பிரிந்துள்ள போது… போராட்டம் எதுவும் இங்கு பெரிய அளவில் வெற்றீ பெறாது…. சும்மா வாய்கால்ல தண்ணி வரலை… ரோடு சரியில்லை… ஸ்டர்லைட் ஆலை…. இது மாதிரி ஏதாவது நடக்குமே அன்றி… இலங்கை பிரச்சனை, பாக்கிஸ்தான் பிரச்சனை, கூடங்குளம் மாதிரி வேலையெல்லாம் போராடினாலும் நடக்காது, இவனுங்க தீக்குளிச்சாலும் நடக்காது… இது சும்மா தமாஸ் கூட்டம்யா…விஜய் படமோ, அஜித் படமோ ரீலிஸ் ஆவட்டும்… போராட்டப் பந்தலிலேயே பால் அபிசேகமும், பீர் அபிசேகமும் நடக்கும்….

  2. indian sonna maadhiri,ivlo thaan matter.

    periya periya pagai ullavan,sandai pottavan,sethu poavan ellam ellathayum maranthu sumoogama irukkayila,

    otta nallanaa kooda sambathikka vakku illatha groupu ellam inga scene poduthu,hayyo hayyo!!

  3. அமெரிக்க எகாதியபதியத்தை ஒழிப்போம் . சீன ,வடகொரிய போன்ற பொது உடைமை தத்துவத்தின் வழி ஏற்றம்(?!) காண்போம் .

    இப்படிதான் புரட்சி புரட்சி என்று ஏத்தி விட்டு அதிகாரம் கைக்கு வந்த பின்னர் மாணவர்களை ஏறி மிதிப்பார்கள் இந்த கம்யூனிஸ்டுகள்

    டினாமேன் சதுக்கத்தை நினைவில் கொண்டு ஜாக்கிரதியாக இருங்கள் இளைஞர்களே

    • ஈழத்தமிழர்களுக்காக மாணவர்கள் நடத்திய போராட்டம் கட்சிக் கொள்கைகளைக் கடந்த, பாராட்டத்தக்க, பெருமை கொள்ளத்தக்க, தமிழர்களின் எதிர்காலத்தில் நம்பிக்கை கொள்ளச் செய்த எழுச்சி.. ஜனநாயகமுறையிலான அவர்களது போராட்டம் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஜனநாயகத்தின் வலிமையை மீண்டும் நினைவுறுத்தி, எச்சரித்திருக்கிறது..

  4. Communism is not the solution. It is part of the problem. It ends in totalitarian dictatorships that never respected people. The real solution is common ownership of knowledge, science, services like medicine, transport etc. An upper and lower cap on income and properties, grassroot democracy with global agenda through co-operation.

  5. கம்முனிசம் அல்லது பொது உடமை என்பது, கேட்பதற்கு எளிமையாய் இருப்பது போல, செபடுத்த எளிமையானதல்ல! ஆதலினால்,சில அறிவு ஜீவிகள், ஜனனாயகம் என்ற பெயரில் கொக்கு தலையில் வெண்ணை வைப்பதைவிட, பாதிக்கபடும் பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தினால் மட்டுமே பொது உடமை செயல்பட முடியும் என்று கருதினர்! சுயநலமற்ற தலைவர்கள், சோவியத் ரஷிய கூட்டமைப்பு, சீனா உள்ளிட்டநாடுகளில் செயல்படுத்தினர்! ஆனால் சர்வ தேச ஆதிக்க சக்திகளினால் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகின்றன! தொடர்ந்து பதவிக்கு வரும் தலைவர்களின் செயல்பாடுகள், அரசை மக்களிடமிருந்து அன்னியபடுத்தி விட்டன! போராட்டம் தொடர் கதையானது! ஏகாதிபத்தியஙள் புத்திசாலி களை ஈர்க்கிறது! மதஙகள் சொர்க்கத்தில் சுகம் பெற அழைப்பதில்லையா, அது போல!

Leave a Reply to @HisFeet பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க