privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம்: FICCI அலுவலகம் முற்றுகை!

ஈழம்: FICCI அலுவலகம் முற்றுகை!

-

FICCIர்த்தகம் மற்றும் தொழில்துறைகளுக்கான இந்திய சங்கங்களின் கூட்டமைப்பின் (FICCI) ஒருங்கிணைப்பில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சவுகதா ராய், காங்கிரசைச் சேர்ந்த சந்தீப் தீக்ஷித், கவுத் யாஸ்கி, பா.ஜ.க.வைச் சேர்ந்த அனுராக் தாக்கூர், பிரகாஷ் ஜாவேத்கர், பி.எஸ்.பி. கட்சியைச் சேர்ந்த தனஞ்சய் சிங் ஆகிய எம்.பி.க்களை கொண்ட குழு இலங்கைக்கு செல்கிறது. ஏப்ரல் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்த பயணத்தின் போது எம்.பி.க்கள் குழுவினர் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.எம்.பி.க்கள் குழுவினர் இலங்கை எம்.பி.க்களை சந்திப்பதோடு, மூத்த அமைச்சர்களையும் அரசியல் தலைவர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈழத்தில் இனப்படுகொலை நடத்திய சிங்கள இனவெறி அரசுடன் தமது வர்த்தக விரிவாக்கத்துக்காக உறவாடும் இந்திய தரகு முதலாளிகளை அம்பலப்படுத்தி,

இந்திய அரசே! தரகு முதலாளிகள் சங்கத்தின் (FICCI) எடுபிடியாக ஈழத்தை (கொள்ளையிட) நோட்டமிட இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவின்பயணத்தை ரத்து செய்!

என்ற முழக்கத்துடன் மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்புகள் சென்னை சேத்துப்பட்டு விவேகானந்தர் சாலை, ஸ்ரீமிட்டாய் அருகில் உள்ள FICCI அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவுள்ளன.

நாள் : 09.04.2013
நேரம்
: காலை 11 மணி

அனைவரும் கலந்து கொண்டு இந்திய தரகு முதலாளிகள் சங்கத்தை முற்றுகையிடும் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய அழைக்கிறோம்!

தகவல் :
மக்கள் கலை இலக்கிய கழகம்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி