privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்மோடியின் குஜராத்தில் தலித்துக்களுக்கு குடிநீரில்லை!

மோடியின் குஜராத்தில் தலித்துக்களுக்கு குடிநீரில்லை!

-

modi“உலகுக்கே வழி காட்டிய மரியாதை புருஷன் ஸ்ரீராமனின் ஆட்சியில் குடிமக்கள் அனைவரும் வளமாக வாழ்ந்தார்கள். அவரவருக்கு விதித்த கடமைகளை செய்து செழித்திருந்தார்கள். அவ்வாறாக கல்வியிலும், அறிவிலும் சிறந்து விளங்கிய நம் பாரதம் கடந்த 1000 ஆண்டுகளாக படையெடுத்து வந்த முஸ்லீம் கிருத்துவ ஆக்கிரமிப்பாளர்களால் சீரும் சிறப்பும் இழந்து அடிமையாகிப் போனது.

இப்போது நாட்டை ஆளும் போலி மதச் சார்பின்மை பேசும் கட்சிகளை ஒழித்து விட்டு ஸ்ரீமான் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சியை ஏற்படுத்தினால் நமது நாட்டின் பாரம்பரிய பெருமைகள் மீட்கப்பட்டு பாரதம் உலகில் தனக்கே உரிய தலைமை இடத்தைப் பெறும்.

அதற்கு எடுத்துக்காட்டாக ஸ்ரீமான் மோடி 10 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்து ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் நாளைய பாரதத்தின் முன்மாதிரியாக விளங்குகிறது. ஆதர்ச இந்து சமூகம் எப்படி இருக்கும் என்று குஜராத்திற்கு போய்ப் பாருங்கள். 24 மணி நேரமும் மின்சாரம், தண்ணீர் வளம், பளபளப்பான சாலைகள் என்று பாரதத்தின் ஒளிமயமான எதிர்காலத்தை முன்னறிவித்துக் கொண்டிருக்கிறது குஜராத்.”

இது மோடியின் ரசிகர்களான இந்துத்துவ ஊடகங்களும் மேட்டுக் குடி அம்பிகளும் வைக்கும் குஜராத் பற்றிய பிம்பம். ஆனால் இந்து சமூகத்தின் சாதீய அடக்குமுறைகள் குஜராத்தில் எப்போதும் போலவே கொடூரமாக தொடர்கின்றன என்பதை அம்பலப்படுத்துகிறது டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான செய்தி ஒன்று.

சித்தாலியா (ராஜ்கோட்):

வறட்சி பாதிக்கப்பட்ட சவுராஷ்டிராவின் ஜஸ்தான் தாலுக்காவிலுள்ள கிராமங்களில் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்கள் மவுனமாக இருப்பதையே விரும்புகிறார்கள். 2014 தேர்தலில் தனது பிரதமர் கனவை நிறைவேற்ற புனித பிம்பமாக நரேந்திர மோடி முன் வைக்கும் குஜராத்தில், அவர்கள் ஆதிக்க சாதியினர் பற்றிய பயத்தில் மவுனம் சாதிக்கிறார்கள்.

“நாங்கள் ஏதாவது சொன்னால் அவர்கள் (ஆதிக்க சாதியினர்) எங்களை மீண்டும் கொடுமைப்படுத்துவார்கள்” என்று முணுமுணுத்தார் ஒரு பெண். சூழ்ந்திருந்த மற்றவர்கள் அவரை எச்சரிக்கும் விதமாக முறைத்தார்கள்.

சவுராஷ்டிராவின் தண்ணீர் தட்டுப்பாடு மழை பொய்த்துப் போனதால் ஏற்பட்ட ஒன்று, ஆனால் தாழ்த்தப்பட்ட சாதியினர் எதிர் கொண்டிருக்கும் அவலம் மனிதர்கள் உருவாக்கியது. குடிநீருக்கு ஒரே ஆதாரமான நர்மதா நீரை பயன்படுத்துவதற்கு தாழ்த்தப்பட்ட சாதியினரை ஆதிக்க சாதியினர் அனுமதிப்பதில்லை. வேதனை என்னவென்றால், ஆதிக்க சாதி விவசாயிகள் பலரிடம் சொந்தமாக ஆழ்துளை கிணறுகள் இருப்பதால் அவர்களுக்கு நர்மதா தண்ணீர் தேவைப்படுவதில்லை.

குஜராத் தண்ணீர் பஞ்சம்இந்த தாலுக்காவின் 10 கிராமங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியினர், பிரதான நீர் ஆதாரத்திலிருந்து தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. மிக மோசமாக பாதிக்கப்பட்ட கிராமங்கள் சித்தாலியா, கத்வாவாடி, கனேசாரா, பாரேவாலா, ஜீவாபர், நானி லகவாத், கோதி, பர்வாலா, மற்றும் தேவ்தாரி. கோலி சாதியினர் ஆதிக்கம் செலுத்தும் இந்த கிராமங்கள் ஒவ்வொன்றிலும் சுமார் 100 தாழ்த்தப்பட்ட சாதி குடும்பங்கள் வசிக்கின்றன. “நாங்கள் தண்ணீர் குழாய்க்கு அருகில் போனாலே, சாதி ரீதியான வசவுகளை கேட்க வேண்டியிருக்கிறது. மிரட்டலை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது” என்கிறார் ஜெயா மக்வானா. அவர் 3 கி.மீ. தொலைவில் உள்ள இடத்திலிருந்து கொளுத்தும் வெயிலில் தண்ணீர் எடுத்து வருகிறார்.

இந்த அநியாயத்தையும் தண்ணீர் இல்லாமையையும் பொறுக்க முடியாமல் இந்த கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் தமது துயரக் கதைகளுடன் மாவட்ட துணை ஆட்சியரை அணுகினார்கள். ஆனால் அதிகாரிகளிடம் பிரச்சனையை கொண்டு போனதற்காக கிராமத்துக்குத் திரும்பியதும் அவர்கள் மிரட்டப்பட்டார்கள். “நாங்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதால், தாகத்தில் சாக வேண்டுமா?” என்று கொதிக்கிறார் மக்வானா.

சித்தாலியாவுக்கு வாரத்துக்கு ஒருமுறை கூட நர்மதா தண்ணீர் வருவதில்லை. துணை ஆட்சியரின் அலுவலகத்துக்குப் போய் வந்த பிறகு ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடப்படுகிறது. ஆனால், நர்மதா குழாயிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இன்னமும் அனுமதி கிடைக்கவில்லை. தாழ்த்தப்பட்ட சாதியினர் பயன்படுத்தும் குழாய்க்கு நர்மதா நீர் ஒரு சொட்டு கூட வந்து சேர்வதில்லை.

கோத்தி கிராமத்தின் தாழ்த்தப்பட்ட சாதியினர் பகுதியில் உள்ள தண்ணீர் குழாய்க்கு நர்மதா இணைப்பு கொடுக்கப்படவேயில்லை. “ஒரு கைப்பம்புதான் நாங்கள் தண்ணீர் எடுக்கும் ஒரே ஆதாரம். அது சென்ற மாதம் வறண்டு விட்டது” என்கிறார் 65 வயதான தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மணிபென் மக்வானா.

“சாதீயக் கொடுமை பற்றிய புகார்களை நாங்கள் பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம். கைப்பம்புகளையும் நர்மதா நீருடன் இணைக்கும்படி நீர்வளத் துறைக்கு உத்தரவிட்டிருக்கிறோம்” என்கிறார் துணை ஆட்சியர் ஆர்.எச் கதாவி.

–  விஜய் சிங் பர்மார்.
_______________________________________________
மோடியாக இருந்தாலும் சரி, கேடியாக இருந்தாலும் சரி, இப்போதைய அரசமைப்போ, இந்துமதவெறியர்களின் அரசாங்கமோ இந்தியாவின் சாதீய சமூகத்தை தகர்க்க முடியாது என்பதைத்தான் குஜராத்தில் நிலவும் இந்த நிலைமை காட்டுகிறது.

In Mod’s Gujarath, no Narmada water for dalits

  1. முற்றிலும் உண்மை! குஜாராத்ில் தான் இன்னமும் சாதிக் கொடுமைகள் தொடர்கின்றன. அங்கே ஐயர்கள் அதிகம். தமிழ்நாட்டில் சாதி கொடுமைகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. கம்யூனிஸ்துகள் ஆளும் கேரளத்திலும், மேற்கு வாங்ககதிலும் சாதி என்றால் என்ன என்று கேட்கிறார்கள்

  2. மனிதர்கள் அத்தனை பெருக்கும் பொதுவனது காற்றூ நீர் நெருப்பு இதர்க்கு யாரும் உரிமை கொன்டாட கூடாது ஏனென்ரால் இது இறைவனின் அருட் கொடை …….இது மனிதர் களூக்கும் மிருகங்களூக்கும் பறவைகளூக்கும் புலு பூஷ்ஷிகலுக்கும் அனைத்து ஜிவஙலுக்கும் வலங்கப்பட்டது இங்கெ எவன் ஒருவன் அனிதம் செஇகின்ரனொ அஙகெ இறய்வனின் கோபம் இரஙும்

Leave a Reply to Raman பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க