privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்மோடியின் குஜராத்தில் குழந்தைகள், பெண்கள், தற்கொலை, ஊட்டச்சத்து....!

மோடியின் குஜராத்தில் குழந்தைகள், பெண்கள், தற்கொலை, ஊட்டச்சத்து….!

-

க்கள் தொகை அடிப்படையில் இந்தியாவின் 10வது பெரிய மாநிலம் குஜராத். ‘கடந்த 13 ஆண்டுகள் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் குஜராத் மற்ற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி விட்டு வெகு வேகமாக முன்னேறியிருக்கிறது’ என்று பிரச்சாரத்துக்கு மாறாக பல சமூகநலக் குறியீட்டு எண்களில் குஜராத் பின்னடைவை சந்தித்திருக்கிறது என்பதை நிரூபிக்கிறது டெக்கான் ஹெரால்டில் வெளியான கட்டுரை ஒன்று. நீனா வியாஸ் எழுதிய அந்த கட்டுரையிலிருந்து சில தகவல்கள்:

ஏப்ரல் 8ம் தேதி பிக்கி (FICCI) ஏற்பாடு செய்திருந்த ‘சீமாட்டிகளின்’ சந்திப்பில், மோடி சமூகத்தில் பெண்களின் நிலையைப் பற்றி பேசினார். ஆனால், 2001லிருந்து அவரது தலைமையிலான ஆட்சி நடக்கும் குஜராத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு உருப்படியாக எதுவும் நடக்கவில்லை என்பதைக் குறிப்பிடவில்லை.

பெண் குழந்தையின் பாதுகாவலராக தன்னை காட்டிக் கொண்ட மோடிமோடி, அவரது நிர்வாகத்தின் கீழ் குஜராத்திகள் முன்பு எப்போதையும் விட அதிகமான பெண் குழந்தைகளை கருவிலேயே கொல்கிறார்கள் என்பதை மறந்து விட்டார். குஜராத்தின் ஆண்:பெண் பாலின விகிதம் 2001ம் ஆண்டு 1000 ஆண் குழந்தைகளுக்கு 921 பெண் குழந்தைகள் என்பதிலிருந்து 2011ல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 918 பெண் குழந்தைகளாக குறைந்தது. இதே கால கட்டத்தில் அகில இந்தியாவுக்குமான ஆண்:பெண் குழந்தைகள் பாலின விகிதம் 1000க்கு 933 பெண் குழந்தைகள் என்பதிலிருந்து 1000க்கு 940 என்று உயர்ந்தது.

பெண் சிசுக் கொலைகளே நடக்காத பட்சத்தில் ஆண்:பெண் பால் விகிதம் 1000:1000 ஆக இருக்க வேண்டும். பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைவது அதிகமான பெண் குழந்தைகள் கொல்லப்படுவதை காட்டுகிறது.

குஜராத்தை விட குறைவாக ‘முன்னேறிய’ பல மாநிலங்கள், அகில இந்திய எண்ணிக்கையை சரியான திசையில் செலுத்த உதவின. அஸ்ஸாமில் பாலின விகிதம் 932லிருந்து 954க்கும் ஆந்திராவில் 978லிருந்து 992க்கும், மத்திய பிரதேசத்தில் 920லிருந்து 930க்கும் முன்னேறியது. கர்நாடகா, ஹிமாச்சல், மகாராஷ்டிரா மாநிலங்கள் 2001 பாலின விகிதத்தை 3 முதல் 4 புள்ளிகள் வரை மேம்படுத்தியிருக்கின்றன. தமிழ்நாட்டில் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 987 பெண் குழந்தைகள்.

மோடி தாயின் சக்தி பற்றி பேசினார். ஆனால் அவர் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் குழந்தை பிறக்கும் போது இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கையை குறைப்பதில் போதிய கவனம் செலுத்தவில்லை. 2004-06க்கும் 2007-09க்கும் இடையே தமிழ்நாடும் கேரளாவும் மகப்பேற்றின் போதான இறப்பு வீதத்தை 14 புள்ளிகளும் குஜராத்தை அடுத்திருக்கும் மகாராஷ்டிரா 26 புள்ளிகளும் குறைத்திருக்கும் போது குஜராத்தில் அது 12 புள்ளிகள் மட்டும் குறைந்தது. அதாவது மகாராஷ்டிராவில் நிகழும் ஒவ்வொரு 100 தாய்மார்களின் இறப்புக்கும் குஜராத்தில் 145 தாய்மார்கள் உயிரிழக்கிறார்கள்.

பெண்களின் தற்கொலை விஷயத்திலும் குஜராத்தின் நிலவரம் மோடி பெருமைப்பட்டுக் கொள்ளும் அளவில் இல்லை. தேசிய குற்றவியல் பதிவு ஆணையத்தின் புள்ளிவிபரங்களின்படி 2007ம் ஆண்டு குஜராத்தில் தற்கொலைகளின் எண்ணிக்கை 10.5 சதவீதம் அதிகரித்தது. குடும்பத் தலைவிகளின் தற்கொலைகள் 28 சதவீதம் அதிகரித்தன. அகில இந்திய அளவில் தற்கொலைகள் அந்த ஆண்டு 2.2 சதவீதம் மட்டுமே அதிகரித்திருந்தன.

மோடியின் பெண்கள், குழந்தைகள் மீதான அக்கறையின் இன்னொரு வெளிப்பாடு பெண்கள் மற்றும் குழந்தை முன்னேற்ற அமைச்சராக மாயாபென் கோட்னானியை அவர் நியமித்திருந்தது. 2002 கலவரங்களின் போது நரோடா பாட்டியாவில் பெண்களும் குழந்தைகளும் கொடூரமாக கொலை செய்யப்படுவதையும், பெருமளவிலான பாலியல் வன்முறைகளையும் வழிநடத்தியதாக மாயாபென் கோட்னானி குற்றம் சாட்டப்பட்டிருந்தார். கூடுதல் முதன்மை நீதிபதி ஜ்யோத்சனா யக்னிக் மாயாபென்னுக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பளித்தார். உலகத்திலேயே இத்தகைய பெருமையுடைய பெண்களுக்கான அமைச்சர் மோடியின் மாயாபென்னாக மட்டும்தான் இருப்பார்.

2001, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களின்படி எழுத்தறிவு விகித வரிசையில் குஜராத் 17வது இடத்திலிருந்து 18வது இடத்திற்கு இறங்கியிருந்தது. தனிநபர் மாநில உற்பத்தியில் 1996-97ல் நாட்டில் 4வது இடத்தில் இருந்த குஜராத் அதற்கு பிறகு 6வது, 7வது இடங்களில்தான் இருக்கிறது.

தேசிய மாதிரி கணக்கெடுப்பு புள்ளிவிபரங்களின்படி குஜராத்தில் 44.6 சதவீதம் மக்கள் ஊட்டச்சத்து குறைவினால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். 5 வயதுக்குட்பட்ட 66 சதவீதம் குழந்தைகள் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2004-05க்கும் 2009-10க்கும் இடையே மகாராஷ்டிரா 14 புள்ளிகளும், மத்திய பிரதேசம், தமிழ்நாடு மாநிலங்கள் 12 புள்ளிகளும் வறுமை வீதத்தை குறைத்தன. ஆனால் குஜராத்தில் 8.6 சதவீதம் மட்டுமே வறுமை குறைந்தது.

பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா முழுவதிலுமே சமூக நலக் குறியீடுகள் மோசமான நிலையிலேயே இருக்கின்றன. ஆனால் 13 ஆண்டுகளாக மோடி ஆட்சி செய்து வரும் குஜராத் எந்த சமூக நலத் துறையிலும் இந்திய மாநிலங்களிடையே கூட முதலிடத்தை பிடிக்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.

மேலும் படிக்க

In reality Modi does not