privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் - 10/05/2013

ஒரு வரிச் செய்திகள் – 10/05/2013

-

செய்தி: பிளஸ் 2 பொதுத் தேர்வில் நாமக்கல் பகுதியிலுள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களே மீண்டும் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.

நீதி: இதன் மூலம் நாமக்கல் பிராய்லர் பள்ளி முதலாளிகள், நாமக்கல் பிராய்லர் கோழி முதலாளிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டனர்.

______

செய்தி: இப்ப ஃபெயில் ஆனா என்ன? நம்பிக்கை வேணும்! உங்க அப்பா கூடதான் 5-ஆம் கிளாஸ் ஃபெயில்! இப்ப அமைச்சராகி நாட்டுக்கு சேவை செய்யலையா? – தினமணி “அடடே” பகுதியில் மதி

நீதி: நிலக்கரி ஊழலில் இலட்சம் கோடிகளில் கார்ப்பரேட் முதலாளிகளுடன் சாதனை படைத்திரும் மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் படித்தவர்தான் என்பது மதி மயங்கிய மதிக்குத் தெரியுமா?

______

செய்தி: நாஜிக்கள் பிடியிலிருந்து உலகை விடுவித்தது ரஷியா. நமது வீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து போராடியிருக்கவிட்டால், உலகம் முழுவதும் நாஜிக்களின் ஆதிக்கத்துக்கு சென்றிருக்கும் என்று ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்தார்.

நீதி: கம்யூனிஸ ரசியாவின் புகழை முதலாளித்துவ ரசியாவின் புதின் கூட மறுக்க முடியாது.

______

செய்தி:  பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கடந்த நிதி ஆண்டில் (2012-13) ரூ.1,581 கோடி லாபம் ஈட்டியது. இதே ஆண்டின் வராக் கடன் மட்டும் ரூ.1,306 கோடியாகும்.

நீதி: லாபத்தை பெருமையுடன் பேசும் இந்தியன் வங்கிக்கு வராக் கடனாக ஆட்டையப் போட்ட முதலாளிகளை அடையாளம் காட்ட தில் உண்டா?

______

செய்தி: பாகிஸ்தானில் உள்ள பழங்குடியினப் பகுதியில் அமெரிக்கா நிகழ்த்தி வரும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் சட்டவிரோதமானது என்று பெஷாவர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதி: உங்கள் தீர்ப்பிற்கு வெள்ளை மாளிகை நாய்கள் அறையிலிருக்கும் கழிப்பறைக் காகிதத்தின் அருகதை கூட கிடையாது நீதிபதி அவர்களே!

______

செய்தி: வங்கதேச சுதந்திரப் போரின்போது படுகொலைகளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் துணைச் செயலாளர் முகமது குவாமருஸமானுக்கு (60) வங்கதேச சிறப்புத் தீர்ப்பாயம் வியாழக்கிழமை மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

நீதி: அல்லாவின் பெயரால் ஆட்டம் போட்ட மதவெறியர்களை அல்லாவே வந்து தடுத்தாலும் காப்பாற்ற முடியாது.

______

செய்தி: லஞ்சப் புகாரில் சிக்கி உள்ள பன்சாலுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய சிங் கூறுகையில், “எல்லோருக்கும் உறவினர்கள் இருக்கிறார்கள், அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது” என்றார்.

நீதி: அதானே,  இதற்காக இனி அமைச்சர்களின் உறவினர்கள் ஊழலில் ஈடுபட்டால் அமைச்சர்களை விசாரிக்க முடியாது என்று ஒரு சட்டம் கொண்டு வந்தால் போயிற்று!

______

செய்தி: எந்த ஒரு விவகாரம் தொடர்பாகவும் அளிக்கப்படும் மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகத்தின் (சிஏஜி) அறிக்கை வேத வாக்கு அல்ல; அதையே இறுதியானது என முடிவு செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதி: மன்மோகன் சிங் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் வயிற்றில் பால் வார்க்கும் கருத்து! தீர்ந்தது கவலை, முடிந்தது தொல்லை!

______

செய்தி: இந்திய விமானப்படை சார்பில் 56 புதிய போக்குவரத்து விமானங்கள் ரூ. 13,000கோடி செலவில் வாங்கப்பட உள்ளன.

நீதி: பத்து சதவீதம் கழிவு வைத்தாலும் 1,300 கோடி ரூபாய்! தின்று கொழுக்கப் போவது யார்?

______

செய்தி: பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் 361 கட்சியினரை ராமநாதபுரத்தில் தங்கியிருக்குமாறு நிபந்தனை பிணையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது.

நீதி: வன்னிய குல ஷத்திரியர்களை மறவர் சீமையில் தங்கச் சொன்னால் இரண்டு ஆண்ட பரம்பரையினரும் சேர்ந்து ஏதாவது மெகா திட்டம் போட்டால் என்னாவது நீதிபதி அவர்களே?

______

செய்தி: முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் 30 கோடி ரூபாயில் ஏழு மலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

நீதி: இனி உண்டியலில் கருப்புப் பணம் போடும் முதலாளிகள் கன்னியாகுமரியிலும் போடலாம்.

______

செய்தி: கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்திருந்தாலும், முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில், அந்த கட்சி மேலிடம், பெரிய அளவில் திணற ஆரம்பித்து உள்ளது. தலைவர்கள் இடையே கடும் போட்டியும் நிலவுகிறது.

நீதி: இந்த போட்டியினை அடுத்து இரண்டு லாரி லோடுகளில் ராம்ராஜ் மினிஸ்டர் காட்டன் வேட்டி, சட்டைகள் பெங்களூருவினை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றது.

______

செய்தி: பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவில், பெல்லாரி சகோதரர்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. எனினும், பிற சுரங்க அதிபர்கள் வெற்றி பெற்று, பெல்லாரி மாவட்டம், சுரங்க மாவட்டம் என்பதை நிரூபித்துள்ளனர்.

நீதி: ரெட்டி சகோதரர்களின் பெல்லாரி தோல்வியினால் தில்லியில் சுஷ்மா ஸ்வராஜ் பூட்டிய அறைக்குள் அழுது கொண்டிருக்கிறார்.

______

செய்தி: “தமிழகத்தில் உள்ள, அனைத்து கோவில்களிலும் வி.ஐ.பி., பாஸ் ரத்துசெய்யப்பட்டுள்ளது,” என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், ஆனந்தன் கூறினார்.

நீதி: இருக்கட்டும், இனி கோவில்களுக்கு செல்லும் ஜெயாவும், உடன்பிறவா சகோதரியும் மக்களோடு மக்களாய் வரிசையில்தான் செல்வார்களா, அமைச்சர் அவர்களே?

______

செய்தி: மதுரை, கோவையில்  ரூ. 30 கோடி செலவிலும், விழுப்புரம், தர்மபுரி, திருப்பூர் மாவட்டங்களில் ரூ. 39 கோடி செலவிலும் பெண்கள் சிறைச்சாலை  அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார்.

நீதி:  ( இந்த செய்தியின் நீதியை வாசகர்களே எழுதலாமே)

  1. //… மதுரை, கோவையில் ரூ. 30 கோடி செலவிலும், விழுப்புரம், தர்மபுரி, திருப்பூர் மாவட்டங்களில் ரூ. 39 கோடி செலவிலும் பெண்கள் சிறைச்சாலை அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார்…//

    பெண்களுக்கு சம உரிமை தரும் தாய்மை உள்ளம் கொண்ட இந்த இந்த அரசு.. பெண்களுக்கு தனி சிறை அமைத்து, இப்போது பெண்களுக்கு சிறப்புரிமை தருகிறது என்பதை தெரிவித்துகொள்கிறேன்..

    (பலத்த கைதட்டல்)

    ஆனால் இதேன்ன…

    மதுரை, கோவையில் ரூ. 30 கோடி செலவிலும், விழுப்புரம், தர்மபுரி, திருப்பூர் மாவட்டங்களில் ரூ. 39 கோடி செலவிலும்

    மதுரை கோவை மாவட்ட பெண்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் ? அவர்களுக்கு மட்டும் ஏன் தரம் குறைந்த 30 கோடி சிறை ? மற்ற மாவட்ட பெண்களை போலவே அவர்கட்கும் 39 கோடி சிறை வழங்கி அவர்களின் உள்ளத்திலும்….

    சிறை கான்டிடிராக்டர் மற்றும் கமிசன் பெறுவோர் முக மலர்ச்சியுலும் பங்கு பெறுமாறு இந்த அரசை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்…

  2. //… மதுரை, கோவையில் ரூ. 30 கோடி செலவிலும், விழுப்புரம், தர்மபுரி, திருப்பூர் மாவட்டங்களில் ரூ. 39 கோடி செலவிலும் பெண்கள் சிறைச்சாலை அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார்…//

    விரைவில் ஜெ’வே அதில் ஏதாவதொரு சிறைச்சாலைக்கு வந்து சிறப்பிக்க வாழ்த்துக்கள்..:)

  3. பெங்களுரிலோ, , சென்னையிலோ ஒரு அதிநவீன சிறை வைத்தால், பிற்காலத்தில் முதல்வருக்கும், உடன்பிறவா சகோதரிக்கும் பயன்படும்.

    • ஜெயலலிதா போன்ற பயங்கரமான பாசிஸ்டுகளை எல்லாம் சிறையில் போடக்கூடாது, பத்து நாள் பொது கழிப்பிடத்தை கழுவுவது / பேருந்து நிலையத்து கூட்டுவது, பத்து நாள் நாற்று நடுவது / களைப் பிடுங்குவது, பத்து நாள் சுமை தூக்குவது போன்ற வேலைகளை செய்ய வைக்க வேண்டும். வயது முதிர்ந்த நிலையிலும் இன்னும் உழைத்துக்கொண்டிருக்கும் ஒரு பாட்டியின் கையில் சாட்டையை கொடுத்து வேலைவாங்க வைக்க வேண்டும். அதை மக்கள் பார்வையிடச் செய்ய வேண்டும்.

    • தோழர்வலிப்போக்கன் ஏன் மாறாநிலைக் கண்ணோட்டத்தில் உள்ளார்? பாட்டாளிகள் அதிகாரத்திற்கு வரமாட்டார்கள் என முடிவு செய்து விட்டாரா? இந்த தண்டனை சரியா? தவறா?

  4. நான் மாற நிலைக் கண்ணோட்டத்தில் சொல்லவில்லை, பாட்டாளிகள் அதிகாரத்து க்கு வரமாட்டார்கள் என்ற முடிவுக்கும் செல்லவில்லை, சில விறும்பிகள் நாளைக்கே புரட்சி வந்திடுமா? என்று வினவும்போது, நம் கொள்கை. கண்ணோட்டம் அந்த விறும்பிகளுக்கு தெரியாததால், நீங்கள் ஒரு துரும்பை எடுத்து போடாததால் நாளைக்கெல்லாம் புரட்சி வராது
    என்று சொல்லும் அர்த்தத்தில்தான் அடப்பாவியின் கருத்துரைக்கு தண்டனை சரியே தவிர அது உடனனியாக நடக்காது என்றே பின்னுமிட்டேன்.தோழர்.

  5. செய்தி: இந்திய விமானப்படை சார்பில் 56 புதிய போக்குவரத்து விமானங்கள் ரூ. 1,300 கோடி செலவில் வாங்கப்பட உள்ளன.

    நீதி: பத்து சதவீதம் கழிவு வைத்தாலும் 1,300 கோடி ரூபாய்! தின்று கொழுக்கப் போவது யார்?

    பத்து சதவீதம் 130 கோடி மட்டுமே, 1,300கோடி அல்ல. பிழை திருத்த படுமா?

    • கழிவுத் தொகை சரிதான், வாங்கும் தொகைதான் 13,000 கோடி என்பது 1,300 கோடியாக தவறாக எழுதப்பட்டது. தவறு திருத்தப்படது, நன்றி.

Leave a Reply to Idhayendran பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க