privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்இன அழிப்புப் போரில் உயிர் நீத்த ஈழத் தமிழருக்கு நினைவஞ்சலி !

இன அழிப்புப் போரில் உயிர் நீத்த ஈழத் தமிழருக்கு நினைவஞ்சலி !

-

மே -17, 2009 :

இன அழிப்புப் போரில் உயிர் நீத்த அனைத்து ஈழத் தமிழருக்கும் எமது நினைவஞ்சலி!

இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே கும்பலை தண்டிக்க நூரம்பர்க் போன்ற போர்க்குற்ற விசாரணைக்கு குறைவாக எதையும் ஏற்க மறுப்போம்!
மே 17, 2013 அன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள்

சென்னையில்
இடம்
: வள்ளுவர்கோட்டம்,
நேரம் : காலை 11 மணி

மாணவர்களே அணிதிரண்டு வாரீர்!

அன்பார்ந்த மாணவர்களே – உழைக்கும் மக்களே!

2009 மே 17 -ல் ஈழ விடுதலைப் போர் மிகக் கொடிய பேரழிவைச் சந்தித்துக் கசப்பானதொரு முடிவை எட்டியது. முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிகட்டப்போரில் மே 17-ம் தேதி விடுதலைப்புலிகளின் அமைப்பு ஏறத்தாழ அழித்தொழிக்கப்பட்டது. இதோடு சேர்த்து மே-18,19 தேதிகளில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களும் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

கொட்டகைகள், கூடாரங்கள், பதுங்குக் குழிகள் என 3 சதுர கி.மீ. பரப்பளவில் சிக்கித் தவித்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டு போர்த் தாக்குதலை நடத்தி ஈவிரக்கமின்றி கோரமாகக் கொன்றொழித்தது, இனவெறி பிடித்த சிங்கள பாசிச அரசு. சூடானின் டார்ஃபுரில் நடந்த இனப்படுகொலையை ஒத்ததாக நடந்துள்ள ஈழத் தமிழினப் படுகொலையில், 2009 மே முதல் நாளிலிருந்து 19-ம் தேதி வரை நாளொன்றுக்குச் சராசரியாக 1,000 பேர் வீதம் குண்டு வீச்சினால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இந்நாட்களில் மட்டும் 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த “தி டைம்ஸ்” நாளேடு கூறியது. இச்செய்தி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனை நினைவு கூர்வதன் மூலம் ஈழத் தமிழ் மக்கள் தமது தன்னுரிமைக்கான போராட்டத்தை தொடர்வதற்கு துணை நிற்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

  • சிங்கள குடியேற்றம், இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை முறியடிக்க குறுக்குவழித்தீர்வு ஏதுமில்லை!
  • ஈழத்தமிழின மக்களின் தன்னுரிமையை நிலைநாட்ட குரல்கொடுப்போம்!
  • தமிழகத்தில் சிறப்பு அகதிமுகாம் எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலைசெய்யப் போராடுவோம்!

இவண்
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

தொடர்புக்கு : 95661 49374

    • இந்த தேதி முள்ளிவாய்க்கால் இன அழிப்பு போர் முடிவுற்ற நாள் என்பதைக் குறிக்கிறது. பதிவில் ஆர்ப்பாட்ட நாள் தற்போதைய தேதி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

  1. “இன அழிப்புப் போரில் உயிர் நீத்த ஈழத் தமிழருக்கு நினைவஞ்சலி !”

    சென்னையில்

    நாள் :17-05-2013

    கிழமை: வெள்ளி

    இடம் : வள்ளுவர்கோட்டம்,

    நேரம் : காலை 11 மணி

  2. மே-17,2013.
    ________________

    2009-மே-17,இன அழிப்புப் போரில் உயிர் நீத்த அனைத்து ஈழத் தமிழருக்கும்

    எமது நினைவஞ்சலி!

    இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே கும்பலை தண்டிக்க நூரம்பர்க் போன்ற

    போர்க்குற்றவிசாரணைக்கு குறைவாக எதையும் ஏற்க மறுப்போம்!

    மே 17, 2013,வெள்ளி- அன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள்.

    சென்னையில்

    நாள் :17-05-2013

    கிழமை: வெள்ளி

    இடம் : வள்ளுவர்கோட்டம்,

    நேரம் : காலை 11 மணி

  3. அஞ்சலி, கண்டன கூட்டம் என்ற பெயரில் வெறும் நூறு இருநூறு பேர் சேர்ந்து கொண்டு முக்கிய நகரங்களின் ஏதோ ஒரு மூலையில் நின்றுகொண்டு வாய் வலிக்க கூப்பாடு போடுவது எதற்கும் ஆகாது. பல லட்சம் மக்கள் பலியான ஈழத்தின் சோகத்தை, அந்த வலியை, போராட்ட வரலாற்றை தமிழகத்தின் அனைத்து மக்களும் உணரும்படி பரப்புரை செய்ய வேண்டும். ஈழத்தமிழ் மக்களின் இன அழிப்பை இந்திய அரசின் சார்பில் மேற்பார்வை செய்த அப்போதைய உள்துறை அமைச்சர் பிரனாப்குமார் முகோபாத்யாய் இப்போது இந்திய குடியரசு தலைவர். கொடுமை!

    • நீங்கள் இதுவரை எத்தனை பேரிடம் பரப்புரை செய்திருக்கிறீர்கள்? நாங்கள் செய்யவில்லை என்று நீங்களே முடிவு செய்து ஆணையிடுவது எதற்கு? கிணற்றில்தான் வாழ்வது என்று முடிவு செய்துவிட்டு கடல், சமுத்திரம் என்று மற்றவர்களை இம்சிக்காமல் இருக்கலாமே?

  4. என் போன்றவர்கள் முடிந்தவரை மற்றவர்களிடம் இந்த விஷயத்தை பற்றி பேசி வருகிறோம். ஆனால் மக்களை கூட்டமாக ஒருங்கிணைக்க கூடிய அளவுக்கு வளங்கள் கிடையாது. அது தான் பிரச்சினை. இந்த விஷயத்தில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து அரசியல் இயக்கங்களிடையே முடிந்தவரை ஏதாவது ஒரு வகையில் ஒருங்கிணைப்பு தேவை. ஒட்டு மொத்த தமிழகமும் பங்கெடுக்க வேண்டும். அப்போது தான் அந்த மக்களுக்கு ஏதாவது செய்யும் வழி கிடைக்கும். அதை விடுத்து ஒவ்வோர் ஆண்டும் அஞ்சலி, கண்டன கூட்டம் என்ற பெயரில் வெறும் நூறு இருநூறு பேர் சேர்ந்து கொண்டு முக்கிய நகரங்களின் ஏதோ ஒரு மூலையில் நின்றுகொண்டு வாய் வலிக்க கூப்பாடு போடுவது எதற்கும் உதவாது. மேலும் ஏதோ உங்களுக்கு ஆணையிடுவதாக கூறி இருப்பது மிகவும் வருத்ததிற்குறியது.

    • salanam மற்றவர்களிடம் எந்த விசயத்தைப்பேசிவருகிறீர்கள்?. முடிந்தவரை என்கிறீர்களே? அது என்ன முடிந்தவரை என்பதை விளக்குவீர்களா? ஏன் வளங்கள் உங்களைப்போன்றவர்களுக்கு இல்லாமல் போனது? ஏன் நீங்களே ஒருங்கிணைக்கலாமே? யார் கையைப்பிடித்து இழுத்தது? அந்த மக்களுக்கு ஏதாவது செய்ய — என்ன எதைப்பிச்சையாகப் போடலாமென்றா? வலிசோகத்தை உணராதவர்கள் யார்? உம்மைப்போன்றவர்கள்தான். வருகிறீர்களா முகோபாத்யாய வின் கொடும்பாவியை எரிப்போம்?

  5. வினவு அவர்களே,

    மற்ற அமைப்புகள் மே -18 ஐ நினைவேந்தல் நாளாக கடைப்பிடிக்கும் போது,மே-17 ஐ

    நினைவேந்தல் நாளாக ஏன் கடைப்பிடிக்கவேண்டும்.

Leave a Reply to Salanan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க