privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாசூது கவ்வும் - வடிவம் கொல்லும் !

சூது கவ்வும் – வடிவம் கொல்லும் !

-

தையை விட கதை கூறும் முறையை அடிநாதமாகக் கொண்டிருக்கும் சூது கவ்வும் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்படுவது ஆச்சரியமல்ல. அதே நேரம் ஆரோக்கியமும் அல்ல.

சூது கவ்வும்விஜய் சேதுபதியின் தலைமையில் மூன்று வேலையிழந்த இளைஞர்கள் சேர்ந்து சின்ன சின்ன ஆள் கடத்தல் செய்து இறுதியில் அமைச்சர் மகனை கடத்துகிறார்கள். அமைச்சர் சிபாரிசில் வரும் என்கவுண்டர் போலீஸ் இன்ஸ்பெக்டரை சமாளித்து வாழ்க்கையில் செட்டிலாவதை ‘நகைச்சுவை’ கலந்த விறுவிறுப்புடன் காட்டும் படம், காய்ந்திருக்கும் ரசிகர்களை குளிர வைக்கிறது. ஆனால் இந்த செயற்கை குளிரூட்டல் உடலுக்கு நல்லதா?

இந்தப் படத்தில் கவர்ச்சி இருப்பதாக கூறினால் அண்ணன் உண்மைத்தமிழனே சண்டைக்கு வந்துவிடுவார். அந்த அளவுக்கு நேற்றிருந்த ‘கவர்ச்சி’ குறித்த பார்வை இன்று மாறியிருக்கிறது. கொஞ்சம் லூசு போலத் தோற்றமளிக்கும் சேதுபதி கடவுளிடம் பேசும் இறைத்தூதர்கள் போல, இல்லாத காதலியுடன் எந்நேரமும் பேசுகிறார். அன்றைய கூத்தில், கதை மீதான எடுப்பு தொடுப்பு விமரிசனங்களை கட்டியங்காரன் செய்வதை இங்கு காதலி செய்கிறார். ரசிகர்கள் ஆடியோவில் சேதுபதியையும் விஷுவலில் காதலியையும் பின் தொடர்கிறார்கள். கட்டியங்காரன் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் கதையில் குறுக்கிடுகிறான் என்றால் இங்கு சஞ்சிதா ஷெட்டி எனும் கவர்ச்சி நடிகை ஆண் ரசிகர்களை வயப்படுத்துவதற்கு குறுக்கிடுகிறார்.

அரை லூசு தமிழ் மற்றும் அமெச்சூர் கிரிமினலுக்கு மும்பை மாடல் நடிகை காம்பினேஷனே தாங்க முடியவில்லை எனும் போது ஷெட்டி “மாமா” என்று விளிக்கும் போது சகிக்க முடியவில்லை. காதலியின் பின்பாட்டு வசனங்களை பார்க்கும் ரசிகர்கள் அத்தோடு நின்றுவிடக்கூடாது என்று எப்போதும் அரை நிக்கர் அல்லது அதற்கும் கம்மியான உடையுடன் காதலியை நடமாட விட்டிருக்கிறார் இயக்குநர். ரசிகர்களின் ஆசையை ஏமாற்ற விரும்பாத காதலியும் தீடீரென்று நீச்சல் உடையுடன் தோன்றுகிறார். கவர்ச்சியையே வித்தியாசமாக காட்டியிருக்கிறார் அல்லவா என்று வெரைட்டி பிராண்ட் ரசிகர்கள் வாதாடக்கூடும். பழைய சோறு எனும் அற்புதத்திற்கு பிசா ஊறுகாய்தான் தொட்டுக் கொள்வேன் என்று வெரைட்டியான காம்பினேஷன்களுக்கு அடம் பிடிப்பவர்களை என்ன செய்ய முடியும்?

சூது கவ்வும்படத்தில் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக வாழும் அமைச்சராக எம்.எஸ். பாஸ்கர் வருகிறார். கட்சிக்காக ஒரு வருடம் 300 கோடி ரூபாய் வசூல் செய்ய ஆணையிடும் தலைவரின் விருப்பத்திற்கு இணைங்க, ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் மகன் அப்பாவை டம்மி பீசாக்கிவிட்டு அமைச்சராகிறான். சூரியனை கிழக்கே காண்பித்து விட்டு நிழலை ஒரே நேரத்தில் நான்கு திசைகளிலும் காண்பிப்பதாக லாஜிக் மீறலை கண்டுபிடிக்கும் விற்பன்னர்களுக்கு இந்த அமைச்சர் பாத்திரமே ஒரு அபாண்டம் என்று தோன்றவில்லை. கட்சிப் பணம் 2 கோடியை சுருட்ட நினைக்கும் மகனை எதிர்த்து போராடும் அப்பா அமைச்சர் 300 கோடியை வசூலிக்கச் சொல்லும் முதலமைச்சரை எதிர்த்து ஒன்றும் பேசவில்லை என்றாலும் அத்தகைய சுருட்டல் கட்சியில் சேர்ந்து எப்படி குப்பை கொட்டுகிறார்?

அதனால்தான் அப்பா பாத்திரத்தை லூசில் விடும் இரசிகர்கள் பிறகு மகன் அமைச்சராகி தேர்தல் பிரச்சாரம், வசூல் என்று பட்டையைக் கிளப்பும் போது மனம் ஒன்றி கைதட்டுகிறார்கள். நேர்மை யதார்த்தமில்லை, ஊழல் யதார்த்தமானது என்பதால் இங்கே இயக்குநரும் இரசிகர்களும் ஒன்றுகிறார்கள். நீதியும் நேர்மையும் விலகிச் செல்கின்றது.

இவையெல்லாம் காமடிக்குத்தானே சொல்லப்பட்டிருக்கின்றன என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு செண்டிமெண்டாக ஒரு கேள்வி. உங்கள் அம்மா வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுந்ததை தத்ரூபமாக நடித்து காண்பித்து காமடியாக பக்கத்து வீட்டு மாமியிடம் சொல்லி, சிரிப்பீர்களா? இதற்கு சற்றும் குறையாத பாத்திரம்தான் படத்தில் வரும் சைக்கோ இன்ஸ்பெக்டர் என்கவுண்டர் பிரம்மா.

தமிழக போலீஸ் போலி மோதலில் சுட்டுக்கொல்லும் சம்பவங்கள் மாதந்தோறும் நடக்கின்றன. இது அரசு எந்திரம் சட்டம், நீதிமன்றங்களை சட்டபூர்வமாக ஏமாற்றிவிட்டு பாசிசமாகி வருகிறது என்பதற்குச் சான்று. கிரிமினல்களோடு பங்காளிச் சண்டை வலுத்த போதும், சில குற்றங்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதாக மக்களுக்கு காட்டிக் கொள்வதற்காகவும் நடக்கும் என்கவுண்டர் இங்கே பாதிப்படம் முழுக்க சிரிப்பதற்காக இழுத்து வரப்படுகிறது.

வாய் பேசாமல் துப்பாக்கியுடன் மட்டும் கொடூரமாக பேசும் பிரம்மாவைக் கண்டு இரசிகர்கள் ஆரவாரத்துடன் சிரிக்கிறார்கள். இறுதிக் காட்சியில் ஓட்டைத் திருட்டுத் துப்பாக்கியை பின்புறம் சொருகும் போது தவறுதலாக அவர் சுட்டுக் கொள்கிறார். சேதுபதி கும்பல் என்கவுண்டரிலிருந்து தப்பிக்கிறது. ஒரு வேளை என்கவுண்டர் போலிஸை இப்படி ஒரு காமரா காமடி கவித்துவ நீதியில் காட்டியிருக்கிறார்கள் என்று பின் நவீனத்துவவாதிகள் நியாயப்படுத்தலாம். ஆனால் படம் பார்க்கும் இரசிகர்கள் ஏற்கனவே போலிஸ் என்கவுண்டரை ஆதரிக்கும் பாசிச மனோபாவத்தின் செல்வாக்கு கொண்ட நடுத்தர வர்க்கத்தினர் என்பதால் இந்த கிச்சு கிச்சு அவர்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்சம் குற்ற உணர்வையும் கொன்று விடுகிறது.

ஐ.டி துறையில் பிளாக் லிஸ்டில் சேர்க்கப்படும் இளைஞன் பின்னர் வேலை கிடைக்காமல் சேதுபதியிடம் சேருகிறான். இதற்கு காரணம் அவனை ஒரு தலையாக காதலிக்கும் ஒரு ஐ.டி பெண் நிர்வாகத்திடம் தவறாக போட்டுக் கொடுத்து வேலையை விட்டு நீக்க வைக்கிறாள். இது பெண்களை இழிவு படுத்தும் மலிவான ஆணாதிக்கம் என்பது போக சுயமரியாதை, பணிப் பாதுகாப்பு, தொழிற்சங்கம், இன்னபிற உரிமைகள் இல்லாத ஐ.டி துறை முதலாளிகளது ஆதிக்கத்தை மறைத்து விட்டு அங்கே ஒரு பெண்ணை வில்லனாக காட்டுகிறார் இயக்குநர். ஆண்டான் ஓரத்தில் மமதையுடன் ஒயின் பருக நடுவில் அடிமைகள் தமக்குள் அடித்துக் கொள்கிறார்கள். ரசிகர்கள் சிரிக்கிறார்கள்.

நயன்தாராவுக்கு கோவில் கட்டியவனும் சரி, ஜாகுவார் காரை ஓட்டி வேலையிழந்தவனும் சரி, இருவரும் நாள் முழுவதும் குடிப்பதும் சரி, எல்லாம் நகைச்சுவைக்காக சாகாவரம் பெறுகின்றன. இவற்றின் உட்கிடையான நுகர்வு கலாச்சாரம், சினிமா மோகம், ஆடம்பர வாழ்வு நாட்டம், பிறர் காசில் வாழும் ஒட்டுண்ணித்தனம், பொறுப்பற்ற தனம், விட்டேத்தித்தனம் அனைத்தும் நகைச்சுவையோடு என்றாலும் கடிந்துரைக்கப்பட வேண்டும். ஏனெனினல் சமூகத்தில் ஹாயாக உட்கார்ந்து டிவியோ, சினிமாவோ பார்க்கக்கூட நேரமற்று உழைத்தும் அதற்காக குடித்தும் தன்னை அழித்தும் வாழும் பாமரர்களை பார்த்து யாருக்கும் சிரிக்கத் தோன்றுமா? முடியுமெனில் அவர்கள் குடிக்காமலேயே தங்களை அழிக்கும் கருத்துக்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல முடியும். இங்கே இயக்குநர் அதையே செய்கிறார்.

திருட்டையும் நகைச்சுவையையும் சேர்த்து புனையப்படும் ஒரு காட்சி ஒரு படத்தில், ஓரமாக வரும் வடிவேலு காமடியாக இருந்தால் பிரச்சினை இல்லை. அதுவே முழுநேரக் கதையாக இருந்தால்? மிகுந்த பொறுப்புணர்வோடு கையாளப்படவேண்டியதை இங்கே இப்படத்தின் படைப்பாளிகள் மிகுந்த அலட்சியத்தோடு கையாண்டிருக்கிறார்கள்.

சார்லி சாப்ளின்யாருக்கும் ஆபத்தில்லாத வகையில், ஆயுதம் இல்லாமல், துன்புறுத்தல் இல்லாமல் ஆட்களைக் கடத்தி சம்பாதிக்கலாம் என்று சேதுபதி மற்ற மூவருக்கும் எடுக்கும் வகுப்பே யதார்த்தத்தின் நினைவுகளோடு எரிச்சலூட்டுகிறது. இந்தப் படத்தைப் பார்த்து செலவுக்கு வழியில்லாக கல்லூரி இளைஞர்கள் காமடியாக ஆள்கடத்திலில் ஈடுபட்டு பின்னர் உண்மையான குற்றவாளிகளாக காலந்தள்ள நிறையவே வாய்ப்பிருக்கின்றது.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் இளைஞர்கள்தான் முதலில் அமெச்சூர் திருடர்களாக ஆரம்பிக்கிறார்கள். பின்னர் ஈவு இரக்கமற்ற பக்கா கிரிமினல்களாக மாறுகிறார்கள். சமயத்தில் கொலையும் செய்கிறார்கள். சென்னையிலேயே மேட்டுக்குடி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டி முதல் முறையாக ஆள்கடத்தல் செய்த பல மாணவர்கள், இளைஞர்கள் கொலையே செய்திருக்கிறார்கள். அது குறித்து வினவிலும் நிறைய கட்டுரைகள் வந்திருக்கின்றன.

இத்தகைய சமூக விகாரங்களின் மத்தியில் காமடித் திருடர்கள் என்பது எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய விசயம் என்று இயக்குநருக்குத் தெரியவில்லை. அவர் தெரிந்து கொள்ள விரும்பினால் நூறாண்டுகளுக்கு முந்தைய சார்லி சாப்ளினது படங்களை “பார்க்க” வேண்டும்.

இந்தப் படத்தில் வரும் சுய எள்ளல்கள் வெறுமனே சலிப்பூட்டும் சந்தானம் பாணியிலிருந்து கொஞ்சம் மேம்பட்ட வார்த்தை அலங்கார நகைச்சுவையாக மட்டும் இருக்கின்றன. உண்மையில் ஒரு சுய எள்ளல் என்பது ஒருவர் தன்னைக் குறித்த சுயவிமரிசனத்தின் நேர்மையில் நடக்கும் நகைச்சுவையாகும். அதனால் இங்கே நகைச்சுவை என்பது குற்றத்திற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு வருகிறது. படத்தில் அத்தகைய சுயமோ இல்லை சுய விமரிசனமோ இல்லை என்பதோடு இருக்குமளவு அந்தப் பாத்திரங்களும் மண்ணில் நடமாடவில்லை.

ஒரு திரில்லர் வகைப்படங்களின் ஆன்மாவை கூரிய சமூக பார்வையோடு புரிந்து கொண்டவர்கள் இயக்கினால் அது பல்வேறு கணக்குகளோடு சேர்ந்தும், பிரிந்தும், மறுத்தும், தொடுத்தும், தவிர்த்தும் இயங்கிக் கொண்டிருக்கும் சமூகப் பெருவெளியின் மர்மத்தை வியப்பூட்டும வகையில் இழுத்துக் கொண்டு வரும்.

ஸீக்ஃப்ரீட் லென்ஸ்
ஸீக்ஃப்ரீட் லென்ஸ்

ஸீக்ஃப்ரீட் லென்ஸ் எழுதிய “நிரபராதிகளின் காலம்” அத்தகையது. நாசிச ஜெர்மனியின் மக்கள் ஹிட்லரை கருத்து ரீதியாக ஆதரிக்கும் போக்கில் அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள். அதை ஒரு கற்பனைக் கதை மூலம் நிஜத்தின் விசாரணையோடு தம்மைத்தாமே மக்களை கேள்வி கேட்க வைக்கிறார் ஸீக்ஃப்ரீட். இதன் தமிழ் மொழிபெயர்ப்பை பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்திருந்தாலும் இந்த இலக்கியம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. யார் கொலை செய்தார்கள் என்ற கேள்வியுடன் அதை கண்டு பிடித்தோ இல்லாமலோ போவதற்கு எதை இழந்தோம் என்று பாத்திரங்களின் விசாரணையில் விறுவிறுப்புடன் செல்கிறது இந்த நாடகம். ஒரு நேர்த்தியான த்ரில்லர் என்ற வகையிலும் பரந்து விரிந்த மனித குலப் போராட்டத்தின் உந்து விசையை குறிபார்த்தும் எழுதப்பட்ட இத்தகைய இலக்கியங்களை நமது நாளைய இயக்குநர்கள் படித்தார்களா தெரியவில்லை. படித்திருந்தாலும் அதில் அவர்களை எது ஈர்த்திருக்கும் என்று யூகம் செய்தால் விரக்தியே மிஞ்சுகிறது.

ஏதோ ஒரு கதையை எடுத்துக் கொண்டு எள்ளலான வசனங்கள், எதிர்பாராத திருப்பங்கள், முடிச்சுக்கள், வித்தியாசமான பாத்திரச் சித்தரிப்புகள், காட்சிக்கொரு மர்மம் என்பன போன்ற சமாச்சாரங்கள்தான் ஒரு சினிமாவிற்கு போதுமானது என்று இந்த இயக்குநரும் இவரைப் போன்றவர்களும் இத்தகைய படங்களை ரசிப்பவர்களும் நினைக்கிறார்கள். ஆனால் வாழ்க்கைப் பெருவெளியில் மையம் கொள்ளாத இந்த அலங்காரங்கள் தோன்றும் போது வேண்டுமானால் கவரலாம். விரைவிலேயே இவையும் சலித்துப் போய்விடும். கதையை விட கதையை கூறும் முறை நேர்த்தியாக பின்னப்படுவதால் கிச்சு கிச்சு வேண்டுமானால் மூட்டலாமே தவிர சிந்திக்க வைக்க முடியாது. சிந்தனையில் தங்காத படைப்புகளால் ஒரு சமூகத்தை கிஞ்சித்தும் பண்படுத்த முடியாது.

எல்லாக் கதைகளும் சரியாகவோ தவறாகவோ சமூகக் களத்தை பிரதிபலிப்பதிலிருந்தே உதிக்கின்றன. காமடிக்கும் கவர்ச்சிக்கும் பாத்திரச் சித்தரிப்புக்கும் வேகத்திற்கும் எளிய முரண் உரையாடல்களுக்கும் அளவு கடந்து மெனக்கெட்டிருக்கும் இயக்குநர் அவை இயங்கிக் கொண்டிருக்கும் சமூகப்பாத்திரத்தை கிஞ்சித்தும் சட்டை செய்யவில்லை. இன்னொரு விதத்தில் சொன்னால் இது நமது நாளைய இயக்குநர்கள் அறியாதது, அறிய வேண்டியது.

  1. if soodhu kavvum director makes a film what vinavu had suggested, then his career will be over. Yesterday he is normal guy who is trying to get producer for his story. But today, he became a famous director and he got lot of money. This is capitalism. In communism, first of all, for his story he wont get any producer. Second, if he produces on his own, no theaters will show his movie. Even if they show, people wont see. Finally, he will be under poverty only. Common vinavu, change a little bit and enjoy.

  2. “வடிவேலு காமடியாக இருந்தால் பிரச்சினை இல்லை” என்கிறீர்கள். ஆனால் வடிவேலு ஏற்படுத்திய பாதிப்பு இதையெல்லாம் விட ஆழமானதல்லவா? நீங்கள் சொல்வது போல் படமெடுத்தால் அது டாக்குமென்ட்ரி.

  3. //உங்கள் அம்மா வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுந்ததை தத்ரூபமாக நடித்து காண்பித்து காமடியாக பக்கத்து வீட்டு மாமியிடம் சொல்லி, சிரிப்பீர்களா? இதற்கு சற்றும் குறையாத பாத்திரம்தான் படத்தில் வரும் சைக்கோ இன்ஸ்பெக்டர் என்கவுண்டர் பிரம்மா.//

    சரியான ஒரு விமர்சனத்தை படித்தவுடன் உணர முடிகிறது.

    தொடர்ச்சியாக திரைப்படம் குறித்த விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம் வினவிடம் இருந்து.

  4. படம் உலகமயமாக்கத்தின் சினிமா! ஓட்டுவது, கலாய்ப்பது என்றெல்லாம் இவைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால், உண்மையை விட மிகச்சிறந்த கலாய்ப்பு வேறெதுவும் இல்லை. இன்று ப.சிதம்பரம்,`செபி யாருக்கும் அடி பணியாது, என வீரம் பேசியிருக்கிறார். அம்மா சட்டசபையில் பேசுவதையெல்லாம் கேட்டுப்பாருங்கள். அவைகளைவிடவா இத்தகைய படங்கள் கலாய்க்கின்றன. இதுபோன்ற படங்கள் சீரியசானவையல்ல என்று அந்தப்படம் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும். ஆனால், பார்வையாளர்கள் மீதான அதன் தாக்கம் மிகவும் சீரியசானதல்லவா!கலாய்ப்பதற்கு முதலில் நேர்மை வேண்டும். இதை நாளைய இயக்குனர்களாக இருந்து இன்றைய இயக்குனர்களாக மாறியிருக்கும் அனைவருக்கும் இது பொருந்தும்.

  5. உண்மையில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் இந்தப் படத்தைப் பற்றி ஒரு வரிக் கூட எழுத எனக்கு விருப்பமில்லை.

    ரசனை மலடுகளின் கூடாரமாக தமிழ்நாடு ஆகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. சர்க்கரை வியாதிக்காரனுக்கு ஏற்று தயாரிக்கப்படும் உணவு தான் அவனுக்கு ஆரோக்யம். ஆனால் அது தான் உலகத்திற்கே ஆரோக்யம் என்று சொல்வது போல் தான் எல்லோரும் வாதிடுகிறார்கள்.

    எல்லோருக்கும் தெரியும். எப்படித் தெரியும்…? அப்படித் தெரிந்திருந்தால், டாஸ்மார்க் நஷ்டத்தில் அல்லவா ஓடிக் கொண்டிருக்க வேண்டும். இப்படிப்பட்ட முட்டாள்கள் இருக்கும் தமிழகத்தில் டாஸ்மார்க்கில்லை. இன்னும் சில தினங்களில் விபசாரம் கூட கொடிக் கட்டிப் பறக்கும் தொழிலாக மாறும். அதற்கு கைத் தட்டி சிரிப்பார்கள் வெட்கம் கெட்டவர்கள். எல்லோரும் வியாதிக்காரர்கள்.

    • உங்கள் அம்மா வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுந்ததை தத்ரூபமாக நடித்து காண்பித்து காமடியாக பக்கத்து வீட்டு மாமியிடம் சொல்லி, சிரிப்பீர்களா?

      Nalla sirinkaga

  6. கிரிக்கெட் சூதாட்டத்தை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்றால் விபச்சாரத்தையும் ஆட்கள் கடத்தைளையும் அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் – வரி கட்டிட்டா போச்சு. (அதுலயும் கடத்தப்பட்ட ஆள் வருவானா மாட்டானா அப்படின்னு கூட ஒரு பெட்டிங் வைக்கலாம்)

  7. இந்தப்படத்தை பார்த்தபின் படத்தை பாராட்டிய நண்பர்களோடு கடும் விவாதத்தில் ஈடுபட்டேன்….நகைச்சுவை என்ற பெயரால் எதை வேண்டுமானாலும்நியாயப்படுத்திவிடக்கூடாது….. இன்றும் உலகம் ஓரளவேனும் ஒழுங்காக இருக்கிறதென்றால் அதன் முக்கிய காரணம் தவறான வழியில் சம்பாதிக்க பெரும்பாலான மக்கள் தயங்குவதால்தான்……எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்று மக்கள் எல்லோரும் முடிவு கட்டிவிட்டால் உலகம் தாங்குமா?

    சினிமாநடிகர்களை மட்டுமே அரசியல் தலைவர்களாக ஏற்போம் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் தமிழக மக்களிடம் இதுபோன்ற படங்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றுநினைத்தால் பயமாக இருக்கிறது…… மேலும் டாஸ்மாக்கின் அறிவிக்கப்படாத விளம்பர தூதர்களாக மாறிவிட்ட இளம் இயக்குனர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்…..

  8. ”மேலும் டாஸ்மாக்கின் அறிவிக்கப்படாத விளம்பர தூதர்களாக மாறிவிட்ட இளம் இயக்குனர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்…..”

    அருமையாக சொன்னீர்கள்

  9. Boss, I was laughing at your review more than what I laughed watching the movie. Cinema is for entertainment and is a representation of day to day life, I watched this movie and I didnt become a smuggler neither my friends or the audience watched the movie. I didnt realize any glamour in that movie except for that kaasu panam song. As people commented before, it will become a documentary and the same media would say producers lost so much movie by investing in that film. While I enjoyed funny movies like this, I also enjoyed watching Paradesi. [I would really like to see your review on Paradesi].

  10. சினிமா பொழுதுப்போக்கு…. சினிமாவை சினிமாவாகப் பார்க்க வேண்டும்… சிரிப்புத் தான் வருது… அப்படியெனில் அதைப் பார்த்து ஏன் சிரிக்கிறீர்கள், உங்களின் நகைப்பு என்ற ஒரு உணர்வைத் தூண்டுகிறதல்லவா…? உலகத்தில் வாழ்க்கையே பொழுதுப் போக்குத் தான்.நீங்கள் சொல்லும் சினிமா பலரின் அயராத உழைப்பின் பிரதிபலிப்பே… எனவே அது மக்களின் மனங்களை சென்று நிச்சயம் ஆக்கிரமிக்கும். உங்களுக்கு புரியவில்லை என்றால்… நீங்கள் வாழ்க்கையைப் பற்றிய புரிதலிலேயே இல்லை என்று அர்த்தம்… ஏனெனில் காதலையும் பொழுதுபோக்கு என்று சொல்லும் கலாச்சாரத்தில் தான் நாம் இருக்கிறோம். இது எப்படி வந்தது, அதற்கு சினிமாவும் ஒரு காரணம் தான். இதை நீங்கள் ஒத்துக் கொள்ளவில்லையென்றால்… பொழுதுப்போக்கின் விளைவினை நிச்சயம் ஒரு நாள் காணுவீர்கள்…

  11. Dear Vinavu,

    U only teaches us to view the movies as movies but not to take in real life. Same vinavu mission is changed in this article. My doubt is, the director fail to give “maamul” to your publication? So such kind of article lauched by vinanu.

  12. புதுகோட்டை அருகே மாணவர்கள் இது போன்று கடத்தி பின் மாட்டிய பின் சூது கவ்வும் படம் பார்த்து தான் இந்த செயல் செய்த்ததாக கூறியுள்ளதாக கூறினார். திருச்சி மாவட்ட செய்தி தாள் ஞாயிறு 23.06.2013 தேதி முடிந்தால் பாருஙகள். (செய்தி எவ்வளவு சரி என தெரியவில்லை)

  13. all that happened in the movie is happening in real world also,intha olagathla ipdi padam ilatiyum makal iruka maari thaan irupaanga athuku onnum seiya mudiyathu.athuvum ellam padathayum vitutu intha padatha,oru hit moviea poy kilikireengale boss? sariye ila konjam commona yosinga intha padatha paakura 100la 2 peruku thaan pudikama irukum onu neenga rendathu ne kaasu kuduthu vechurkaven ethathu oru mocka padatha poi kutham sollunga ponga.

  14. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல இருக்கிறது வினவின் விமர்சனங்கள். எல்லா சர்வாதிகாரிகளுக்கும் எதிராக சதிகள் செய்யப்படும் என்பது யதார்த்தம்தான் என்றாலும், தன்னைச் சுற்றி இருக்கிரவர்களின் இயல்பான செயல்களிலும்கூட தனக்கு எதிரான ஒரு சதியின் அம்சம் இருப்பதாகப் பார்க்கிற பைத்தியம் பிடித்த சர்வாதிகாரியின் துப்பாக்கிக்கும் இவர்களின் கீபோர்டுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

  15. ஒரு படத்தின் பகுதி (வடிவேலு கமெடி)-யின் எதிர்மறை அம்சங்கள் பக்கவிளைவுகள் இல்லாதபடி நகைச்சுவை என பக்குவமாக பார்க்கப்படுமென்றால், ஏன் அந்த வகையறாவில் வரும் ஒரு முழுப்படமும் அதே பக்குவத்துடன் பார்க்கப்படமுடியாது? உங்கள் பிரச்னை எதிர்மறை அம்சங்களா, இல்லை அவற்றின் நீளமா?

    ஒரு நாயகனுக்கான வறையறைகளெல்லாம் தரம் குறைந்துகொண்டே வருகிறதே என்கிற கவலை எனக்கும் உண்டு.நிச்சயமாக, ஒரு நண்பர் சொன்னதுபோல், “இளம் இயக்குனர்கள் டாஸ்மாக்கின் அறிவிக்கப்படாத விளம்பர தூதர்களாக மாறிவிட்டார்கள்” என்பது வருத்தப்படவேண்டிய விஷயம்தான். ஆனால்,நாயகன் என்று ஒருவனை முன்னிறுத்தாத படத்தில்கூட குணசீலர்கள் மட்டுமே அணிவகுக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒரு விதமான தேங்கிப்போன மனநிலையைத்தான் காண்பிக்கிறது.

  16. எதொ அங்கொன்னும் இங்கொன்னுமா த்மிழ்ல வித்தியாசமான படம் வருது அது பிடிக்கைலயா உமக்கு
    அகிரா குரொசோவா படத்த இங்க ஓட்டுனா அட்டு பிலாப் தான் ஆகும்

Leave a Reply to AAR பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க