ஜெயமோகன்

சீமைச்சாராயத்திற்கும், அரவிந்த ‘சாமியின்’ ஆரோவில் ஆன்மீக மணத்திற்கும் புகழ் பெற்ற பாண்டிச்சேரியில் இருந்து நமது விசாரணையைத் துவங்க வேண்டியிருக்கிறது.

மலையாள சினிமா வேலையின் பொருட்டு பலநாட்களாக கேரளத்தில் இருக்கும் ஜெயமோகன் திருவனந்தபுரத்தில் விமானம் பிடித்து சென்னை வந்து, காரில் புதுச்சேரி செல்கிறார். அங்கே அவரது ‘வாசகர்’ சுனில் கிருஷ்ணனது திருமணம். அதில் பங்கேற்க எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், தேவதேவன் மற்றும் ஜெயமோகனது அபிமானிகள் ஒரு 25 பேரும் வருகின்றனர். ஜமா களை கட்டுகிறது.

முதலில் ஒன்றைச் சொல்லிவிடுவோம். ஜெயமோகனது ஊட்டி குருகுல கோடைக்கால முகாமிற்கு வருவதற்கே ஏகப்பட்ட கண்டிஷன்கள் உண்டு. அந்த நிபந்தனைகளை ஏற்றுச் செல்ல விரும்பும் அப்பிராணிகளின் நிலை குறித்து வினவிலும் விரிவாக எழுதியிருக்கிறோம். அது போல ஜெயமோகனது உள்வட்டத்தில் பங்கேற்றால்தான், நான்ஸ்டாப்பாக அவர் பேசும் (எல்லாம் ஏற்கனவே எழுதியவைதான்) கீறோபதேசத்தை (கீறோபதேசம் – கீறல் விழுந்த ரிக்கார்டு பிளேயர்) கேட்கும் பாக்கியம் உண்டு. சரி அண்ணனது உள்வட்டத்தில் பங்கேற்க என்ன தகுதி வேண்டும்?

ஒன்று அவர் எழுதிய ஏதாவதொன்றை படித்திருக்க வேண்டும். பிறகு அப்படி படித்ததை உள்ளொளி, தரிசனம், ஏகப்பட்ட திறப்பிற்கு காரணம் என்று எழுதியோ, பேசியோ அண்ணனது காதடியிலோ இல்லை கண்ணடியிலோ சமர்ப்பிக்க வேண்டும். அப்புறம் அண்ணன் அவற்றை இழுத்து இன்னும் கொஞ்சம் பேசி தீட்சை அளிப்பார். பிறகென்ன, அவரது வீட்டு நாயை கொஞ்சும் பாக்கியத்திலிருந்து அருகர் பாதையை அளந்து போகும் மகா பாக்கியம் வரை கண்டிப்பாக கிடைக்கும். ஆனாலும் கண்டிஷன்ஸ் அப்ளை உண்டு. அது, அன்னாரது கிச்சன் கேபினட்டில் நீடிக்க வேண்டுமென்றால் சாகும் வரை காதுகளையும், மூளையின் பதிவு நரம்புகளையும் பட்டா போட்டு எழுதிக்கொடுத்து விடவேண்டும். பொறுக்கமாட்டாமல், “போதும் தல ரொம்ப போரடிக்கிறது” மாதிரி ஏதாவது பேசிவிட்டால் விஷ்ணுபுரம் குருகுலத்திலிருந்து மெமோ இல்லாமலேயே நீங்கள் நீக்கப்படுவீர்கள்.

ஏன் வினவு, ஜிங்குச்சாதான் அண்ணனுக்கு பிடித்த இசை என்று ஒருவரியில் முடிப்பதை விட்டு இழுக்கிறீர்களே என்று கோபப்படாதீர்கள், இனி விசயத்திற்கு வருவோம்.

பாண்டிச்சேரி திருமண நாயகனான சுனில் கிருஷ்ணன் லேசுப்பட்ட ஆளல்ல. ‘அண்ணா ஹசாரே ஊழல் எதிர்ப்பு இயக்கத்தால் கவரப்பட்டு பிறகு அதற்கென்று ஒரு இணைய தளம் ஆரம்பித்து இன்று அதை காந்தியின் பெயரில், தமிழில் ஒரு முக்கிய இணைய தளமாக மாற்றி காந்தி குறித்த வார்த்தைகளை சலிப்பில்லாமல் ஏற்றி வருபவர். காரைக்குடியில் ஆயுர்வேத மருத்துவராக பணிபுரிபவர்’. குடும்பமே ஆயுர்வேத பரம்பரைதானாம்.

அண்ணா ஹசாரேவை பார்க்க வரும் நகரத்து அம்பிகளை நம்பி அவரது மகாராஷ்டிரா ராலேகான்சித்தி கிராமத்தில் நாலைந்து டீக்கடை போட்டவர்களே திவாலான நிலையில் சுனிலின் விடாப்பிடியான போக்கு ஆச்சரியமானதுதான். அதுவும் அரவிந்த் கேஜ்ரிவாலை பார்ப்பேன், பார்க்க மாட்டேன், அவரது கட்சிக்கு வாக்கு கேட்பேன், கேட்கமாட்டேன் என்று காமடி கைப்புள்ளையாக டீம் அண்ணா பலூன் புஸ்ஸாகி விட்ட நிலையில் அவரையும், காந்தியையும் உலக அளவில் 18 இலட்சமாவது இணைய தள பிரபலத்துடன் நடத்துவது போற்றுதலுக்குரியது.

சுனில் திருமணம் குறித்த ஜெயமோகன் பதிவைப் படித்த போது சட்டென்று தோன்றியது, திருமணத்தின் புகைப்படங்களைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பம். ஒரு ஆயுர்வேத மருத்துவர், காந்தியவாதி, ஜெமோவின் சீடர் எப்படி தோற்றமளிப்பார் என்று ஒரு எதிர்பார்ப்பு. ஆள் பாதியென்றால் ஆடை பாதியல்லவா! மடிசாரா, கச்சமா, வேட்டியா, காந்தி குல்லாயா, குர்தாவா, பைஜமாவா என்றெல்லாம் யூகித்தவாறு சுனிலைப் பார்த்தால்… ஐயோ என்ன கொடுமை இது, கிறித்தவ ஐரோப்பிய மையவாத காலனியாதிக்கத்தின் கொடையான சூட்டு, கோட்டு, டை, ஷூ (புகைப்படத்தில் ஷு இல்லையே என்று கேட்காதீர்கள், சூட்டு போட்டுவிட்டு ஹவாய் செருப்பு போடமாட்டார்கள் என்று நம்புவோம்) சகிதம் காட்சியளிக்கிறார்.

இவ்வளவுதானா காந்திய, ஆயுர்வேத, ஜெயமோகன, பாரத அபிமானம் என்று வெறுத்துப் போனது. சரி சரி, தலயே மங்காத்தாவில் “இன்னும் எவ்வளவு நாளைக்கு நல்லவனாகவே நடிப்பது” என்று வில்லனாக பொளந்து கட்டும் போது காந்தியெல்லாம் எம்மாத்திரம் என்று சமாதானம் செய்தபடி இந்த திருமணத்தின் சிறப்பு என்ன என்று கண்டுபிடிக்க முனைந்தேன்.

ரொம்ப நுண்ணுணர்வோடு, சலித்துப் பார்த்தாலும் இரண்டு சங்கதிகள்தான் கிடைத்தன. ஒன்று சுனிலுக்கு மணப்பெண்ணை பிடித்திருந்ததால் மகிழ்ச்சியுடன் காட்சியளித்தார். இரண்டு, தேங்காய் போட்ட தாம்பூலப்பையில் ஜெயமோகனது நூல் ஒன்றையும் அன்பளிப்பாக அனைவருக்கும் வழங்கியிருக்கிறார். பிறகு, இலவசமாக நூல் கொடுத்தால் படிப்பார்களா, பரணில் வைப்பார்களா என்றெல்லாம் ஜெயமோகனது தத்துவ விசாரணைகள்.

தீவிர கம்யூனிஸ்ட் எனும் காட்டானாக விதிக்கப்பட்டதனாலோ என்னவோ சாதி மறுப்புத் திருமணமா, வரதட்சணை இல்லையா, தாலி இல்லையா, சடங்கு சம்பிரதாயங்கள் இல்லையா அல்லது குறைச்சலா, எளிய முறையில் திருமணம் நடந்ததா என்று முன்முடிவுடன் தேடிப்பார்த்தால் எதுவும் எழுதப்படவில்லை. ஜெமோவைப் பொறுத்தவரை அவருடைய நூல் கொடுக்கப்பட்டதே மாபெரும் புரட்சிகர நடவடிக்கை. ஜெயமோகன் எந்த விசயத்தை பார்த்தாலும், கேட்டாலும், கலந்து கொண்டாலும் அதில் தனக்கு என்ன இடம் என்று மட்டும் பார்ப்பார் போலும். இந்தப் பார்வைதான் இனி வர இருக்கும் பிரச்சினைக்கு ஒரு முன்னோட்டம்.

என்ன பிரச்சினை? திருமணம் முடிந்த பிறகு புதுச்சேரியில் ஒரு நண்பரை சந்திக்க எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், தேவதேவன் சகிதம் சென்றிருக்கிறார் அண்ணன் ஜெயமோகன். அந்த நண்பர் யார்? ஜெயமோகன் ஸ்டைலில் சொன்னால் வாசிப்பு, ஓவியம், இசை என்று நுண்ணுணர்வு மிக்கவர். இந்த நுண் இல்லாத பன்னுகளுக்கெல்லாம் அண்ணனது நட்பு வட்டத்தில் அனுமதி இல்லை என்பதை ஏற்கனவே பார்த்து விட்டோம்.

அந்த நுண்ணுணர்வு மிக்க நண்பரின் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு எழுபது வயது பெரியவர், புதுச்சேரியில் எழுந்தருளியிருக்கும் படைப்பாளிகளை சந்திக்க வேண்டும் என்று கேட்டு விரும்பி வந்திருக்கிறார். ஜெயமோகன் சொல்லியிருக்கும் விசயங்களின் படி பார்த்தால் அந்த பெரியவர் ஏதோ சில திமுக கூட்டங்களுக்கு, அதுவும் அண்ணாத்துரை காலத்தில் சென்று கேட்டவர், சில பல நூல்கள், சேதிகள் அறிந்தவர். முக்கியமாக தான் கற்றவற்றை கொட்டுவதற்கு மைக்கோ, ஆம்பிளிஃபயரோ, ஸ்பீக்கரோ குறைந்த பட்சம் ஃபேஸ்புக்கில் கணக்கோ கொண்டவரல்ல. எழுத்தாளர்கள் என்றதும் அவர்களிடம் தனது திறமையை பறைசாற்ற விரும்பியிருக்கிறார்.

ஜெயமோகன் புரிந்து கொண்ட விதப்படி சொன்னால் இந்தப் பெரியவர் சரக்கே இல்லாமல் பேசி பிளேடு போடக்கூடிய ஒரு மொக்கை. (டிஸ்கி: இதை எல்லாம் ஜெயமோகன் சொன்ன ஒருதரப்பான விவரங்கள் அடிப்படையில் மட்டும் பேசுகிறோம். உண்மையில் அந்த பெரியவர் தரப்பு வாதம் என்ன என்று கேட்டுப் பெறும் வாய்ப்பு நமக்கில்லை. அதனால் அந்தப் பெரியவர் மன்னிக்க வேண்டும். முக்கியமாக, இங்கு விவாதப் பொருள் அவர் அல்ல.)

இத்தகைய பிளேடு மொக்கைகள் அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிறார்கள் என்று பொதுவில் சொல்லலாம். எனினும் யார் மொக்கை, எது மொண்ணைத்தனம் என்ற அளவு கோல் வர்க்கத்திற்கேற்ப மாறுபடும். அண்ணன் ஜெயமோகனோ, இல்லை அண்ணன் அதியமானோ, ஏன் தம்பி வினவு கூட சமயத்தில் சிலருக்கு மொக்கையாகத் தோன்றலாம். இங்கே நாம் அது குறித்து ஆராயவில்லை.

அந்த பெரியவர் முதலில் நாஞ்சில் நாடனிடம் பிளேடு போடுகிறார். பொறுக்கமாட்டாமல் நாஞ்சில் முடித்துக் கொண்டு வெளியேறுகிறார். அப்போது உள்ளே வரும் ஜெயமோகன், அடக்கப்பட்ட கோபத்தை தணிப்பதற்காக தீர்த்தம் சாப்பிடப் போகும் நாஞ்சிலின் துயரார்ந்த முகத்தைப் பார்த்து சினம் கொள்கிறார். பெரியவர் வெற்றிகரமான தனது பிளேடை ஜெயமோகனிடமும் போடுகிறார். காஞ்சிக்கு என்ன அர்த்தம், தூங்குதலா, தொங்குதலா, வட்ட எழுத்து, பிராமி எழுத்து என்று ஏதேதோ கேட்கிறார். ஆரம்பத்தில் சட்டு பட்டென்று சரியான பதில் சொல்லும் ஜெயமோகன் இறுதியில் இது சரிப்பட்டு வராது என்று அறம் பாடுகிறார்.

எழுபது வயசிலும் மூளையை காலிசட்டியாக வைத்திருக்கும் முட்டாளே என்று வசைபாடி, எழுத்தாளர்களெல்லாம் எவ்வளவு படித்து எழுதியவர்கள் என்று வகுப்பெடுத்துவிட்டு, என்னையோ, நாஞ்சிலையோ ஒரு வரியாவது படித்திருக்கிறாயா என்று சீறிவிட்டு கற்றாய்ந்த சான்றோரை மதிக்கத் தெரியாத முண்டமே என்று விரட்டுகிறார்.

பிளேடுகளை எதிர் கொள்வது ஒரு கலை. ஒரு எளிய கிண்டல் மூலமோ, திசைதிருப்பல் மூலமோ அவர்களை சீண்டிவிட்டு நிறுத்தலாம். இல்லையென்றால் எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று தப்பிக்கலாம். அதற்கெல்லாம் உலகோடு ஒட்ட ஒழுகும் யதார்த்தவாதியாக இருக்க வேண்டும். ஆனால் எப்போதும் டைட்டாகவே இருக்கும் ஜெயமோகன் இத்தகைய பிளேடுகளோடு உரசும்போது எளிதில் தீப்பற்றிக் கொள்கிறார். போகட்டும்.

இங்கே ஒரு மொக்கையிடம் ஜெயமோகன் கோபம் கொண்டது கூட பிரச்சினை இல்லை. அது ஒரு குறையுமில்லை. ஆனால் இந்த சம்பவத்தை விரிவாக எழுதியிருக்கும் ஜெயமோகன் தனக்கு அந்தப் பெரியவரால் நேர்ந்திருக்கும் அபகீர்த்தியின் பொருட்டு முழு தமிழகத்திற்கும் சாபம் விடுகிறார். எழுத்தாளனை மதிக்கத் தெரியாத, முட்டாள்தனம் நிரம்பி வழியும், அறிவை தெரிந்து கொள்ள விரும்பாத என்று உண்டு இல்லையென பிய்த்து விடுகிறார். இவர்கள்தான் தமிழ் இணையத்தையும் நிறைக்கிறார்கள் என்றும் சேர்க்கிறார். இங்குதான் நமக்கு ஒரு கேள்வி வருகிறது. பெரியவரது பிளேடாவது கொஞ்சம் எரிச்சலைத்தான் தருகிறது. ஜெயமோகனதுவோ உடலையே அறுத்து இரத்தம் வரவழைக்கிறது. எனில் எது ஆபத்தான பிளேடு?

ஏற்கனவே ஒரு முறை கேரளம் சென்ற ஜெயமோகன் ஒரு ஓட்டலுக்குச் சென்று அலட்சியமாக “எந்தா வேண்டே” என்று கேட்ட ஒரு பரிசாரகரை வைத்து முழு கேரளத்தின் அடிமைத்தனம், தாழ்வு மனப்பான்மை, அதற்கு காரணமான இடது சாரி வரலாறு, தொழிற்சங்க ஆதிக்கம் என்று பெரும் தத்துவ ஆய்வு செய்து படுத்தி எடுத்திருக்கிறார். அது குறித்து வினவில் வந்த கட்டுரையை படித்துப் பாருங்கள். இப்போதும அதுவே மீண்டும் நடக்கிறது. ஒரு மொக்கையிடம் கோபப்படும் ஜெயமோகன் முழு தமிழ்நாடும் மொக்கையே என்று சாபம் விடுகிறார். அதுவும், தான் ஒரு எழுத்தாளன் என்பதை வெள்ளைக்காரர்கள், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் மதிக்கிறார்கள், தமிழ்நாட்டில் அது சாத்தியமே இல்லை என்று தீர்ப்பளிக்கிறார்.

தனது அப்பாவின் சர்வாதிகாரத்தை வைத்து உலக சர்வாதிகாரிகளை ‘ஆய்வு’ செய்த சுந்தர ராமசாமியின் மாணவர் வேறு எப்படி பேசுவார்? எனில் ஜெயமோகனது அன்றாட வாழ்வில் சந்திக்கும் பாமரர்கள் அவருக்கு ஏதாவது குறைகளை அறிந்தோ அறியாமலோ செய்து விட்டால் அதன் விளைவுகளை முழு சமூகமும், மக்களும் சுமக்க வேண்டியிருக்கும். நாகர்கோவில் நகரசுத்தி தொழிலாளி என்றாவது ஒருநாள் ஜெமோவின் பார்வதிபுரத்து வீட்டின் குப்பையை எடுக்க மறந்துவிட்டார் என்றால் இந்த உலகை குப்பைக் கூளமாக்கி வரும் மனித குலத்தின் அழுக்கு சாரம் குறித்து ஒரு தத்துவவிசாரம் புகழ்பெற்ற அந்த கீபோர்டில் உதிப்பது உறுதி. குப்பை எடுக்குற அண்ணே, பாத்து குப்பையை எடுத்து நம்ம மக்களோட மானத்தை காப்பாத்துங்கண்ணே!

இனி நமது குறுக்கு விசாரணையை தொடங்குவோம்.

அந்த மொக்கை பெரியவரை அறிமுகப்படுத்திய ஜெமோவின் நுண்ணுணர்வு மிக்க புதுச்சேரி நண்பரை விசாரிப்போம். இவ்வளவு நுண்மாண் புலத்து அறிவார்ந்த நண்பர், எழுத்தாளர்கள் அந்த பிளேடு பெரியவரை சந்திக்க ஏன் அனுமதிக்கிறார்? உலகம் போற்றும் உத்தம எழுத்தாளரை கடித்துக் குதறும் அந்த அற்பத்தை அற்பமென்று ஏன் மதிப்பிடத் தெரியவில்லை? இதற்கு ஜெயமோகன் கூறும் சமாதானம், “இத்தகையோரில் பெரும்பாலானவர்கள் ஒருவகை அப்பாவிகளாக, பிறர் தங்கள் மீது ஏறி அமர்ந்து காதைக் கடிக்க அனுமதிப்பவர்களாகவே இருப்பார்கள். அவரும் அப்படித்தான்.” சரி இதுதான் உண்மையென்றால் ஜெயமோகனும் கூட அந்த அப்பாவியின் காதை ஏறிக்கடித்துதானே இமேஜை திணித்திருக்க வேண்டும்?

அல்லது, இவ்வளவு நாட்கள் அந்த நண்பர் ஜெமோவை வாசித்து எதையும் பெறவில்லை என்றாவது கூறவேண்டும். ஒரு மனிதன் நல்லதைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பெறும்போது அவன் ஏன் கெட்டதை கண்டுபிடிக்கவில்லை என்ற கேள்வி வருகிறதல்லவா? அந்த கெட்டதை மதிப்பிடும் அளவுக்குக் கூட அந்த நல்லது லாயக்கில்லை என்றால் அந்த நல்லதின் யோக்கியதை என்ன? நியாயமாக, அந்த மொக்கையிடம் இந்த எழுத்தாளர்களை தவிக்க விட்ட குற்றத்திற்காக அந்த நண்பரை விஷ்ணுபுரம் சிஐடி அரங்கசாமியை விட்டு விசாரித்து, குறைந்த பட்சம் மெமோவாவது கொடுத்திருக்க வேண்டுமே? சாரமாகச் சொன்னால் அந்த நண்பர் ஜெயமோகனையும் ரசிக்கிறார், அந்த பெரியவரையும் ரசிக்கிறார். இதையே “நான் பாலகுமாரனையும் ரசிப்பேன், ரமணி சந்திரனையும் ரசிப்பேன், ஜெயமோகனையும் ரசிப்பேன்” என்று ஒரே போடாக நம்ம ராம்ஜி யாஹூ போட்டதும் பின்னூட்டப் பெட்டி ஒரே புண்ணூட்டப் பெட்டியாகவிட்டது என்று அழுது கொண்டு அண்ணன் ஜெயமோகன் மறுமொழி ஜனநாயகத்தையே தூக்கவில்லையா?

ஆகவே அந்தப் பெரியவர் மொக்கை இல்லை என்று ஜெயமோகனது நுண்ணுணர்வு மிக்க நண்பரே கூறிவிட்டார். எனவே அந்த பெரியவரையும், தமிழர்களையும் கடித்துக் குதறுவதற்குப் பதில் நண்பரை திருத்தும் வேலையை பார்ப்பது சாலச்சிறந்தது. இப்படியெல்லாம் திருத்தப் புகுந்தால் விரைவிலேயே விஷ்ணுபுரம் வட்டம் என்பது ஜெயமோகானந்தா எனும் மூலவர் மட்டும் அனாதையாக அம்போவென உலாவரும் இடமாவது உறுதி.

அந்தப் பெரியவர் தன்னை சிறுமைப்படுத்தியதற்கு கூட ஜெயமோகன் கோபப்படவில்லையாம். முக்கியமாக நாஞ்சில் நாடனை வறுத்தெடுத்ததுதான் அவரது ஆத்திரத்தை அடக்கமாட்டாமல் பொங்க வைத்ததாம். அப்படி என்ன நடந்தது? அந்தப் பெரியவர் தலித்துக்களை பற்றி இழிவாக பேசினாராம். இது பொறுக்காமல் நாஞ்சில் நாடன் சிலவற்றை கடுமையாக பேசினாராம். இறுதியில் பெரியவர் “நீ என்ன சாதி” என்று நாஞ்சிலைக் கேட்க “அதைச் சொல்லும் உசிதமில்லை” என்று மறுத்து விட்டாராம். பிறகுதான் தீர்த்தம் அடித்து சினத்தை குறைக்க வெளியேறியிருக்கிறார்.

இங்கே ஒரு முற்போக்கு சென்டிமெண்ட் தந்திரம் உள்ளது. அதாவது தனது கோபம் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் அநீதியை எதிர்த்து எழும்பியிருக்கிறது என்று காட்டுகிறார் அண்ணன் ஜெமோ. பரவாயில்லை இந்துத்துவவாதிகள் இத்தனை ஆண்டுகள் கழித்து இத்தகைய நேயத்தை காட்டுகிறார்களே என்று மகிழ்ச்சி அடையாதீர்கள். கருவாடு எந்த காலத்திலும் மீனாகாது (உபயம் : காளிமுத்து), இதிலும் நிறைய உள்குத்து அடங்கியிருக்கிறது. முதலில் நாஞ்சில் நாடன் தனது நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் எனும் சாதியையோ அது தரும் சலுகைகளையோ துறந்தவர் அல்ல. இந்த சாதி பார்ப்பனியத்தின் கொடிய வழக்கங்களை இன்றும் பின்பற்றும் ஒரு ‘உயர்’ சாதி. இப்படி இருக்கையில் அந்தப் பெரியவர் கேட்கையில் சாதியை சொல்லாமல் விட்டது ஒன்றும் சாதி மறுப்புக் கொள்கையின் பாற்பட்டதல்ல.

முக்கியமாக தனது மகள் 600க்கு 596 (கட் ஆஃப்பா தெரியவில்லை) எடுத்தும், தான் பிறந்த சாதி காரணமாக அவளுக்கு மருத்துவர் படிப்பு கிடைக்கவில்லை என்று ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார் நாஞ்சில் நாடன். பிறகு கவிஞர் அப்துல் ரகுமானைப் பார்த்து எழுத்தாளர் கோட்டாவில் (திமுக செல்வாக்கு) எம்பிபிஎஸ் சீட்டு வாங்கி கவிஞர் அப்துல் ரகுமான் ஒரு ஆண்மையுள்ள கவிஞர் என்ற வேறு முதுகு சொறிந்திருக்கிறார். இதை பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் அவரது தளத்தில் பதிவு செய்திருக்கிறார். முக்கியமாக அந்தக் கூட்டத்திற்கு போகாமல் இருந்திருந்தாலாவது நாஞ்சில் நாடனைப் பற்றிய மதிப்பு குறையாமல் இருந்திருக்கும் என்று வருத்தப்படுகிறார் கவிதா. நமது எழுத்தாளர்களுக்கும் அவர்களது புகழுக்கும் கவிதாவைப் போன்றவர்கள் பெருந்தன்மையுடன் அளித்து வரும் சலுகையைப் பாருங்கள்!

போகட்டும், நாஞ்சில்நாடன் சொல்லியிருக்கும் இந்த ‘உயர்’ சாதியில் பிறந்ததால் எங்களுக்கு ஒன்றுமே இல்லை எனும் ஒப்பாரி உண்மையில் தாழ்த்தப்பட்ட மற்றும் சூத்திர மக்கள் மீதான சாதி ஆதிக்க வன்மமாகும். நாஞ்சில்நாடன் மகளுக்கு மருத்துவர் சீட்டுதான் கிடைக்கவில்லை. அதுவும் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து கிடைத்து விடுகிறது. ஆனால் சேலம் கட்டியநாயக்கன்பட்டியிலுள்ள தாழ்த்தப்பட்ட சிறுமி தனத்திற்கு பள்ளியில் குடிநீரே கிடைக்கவில்லை. ஆதிக்க சாதியினர் குடிக்கும் பானையில் மொண்டு குடித்தாள் என்று ஆசிரியரால் தாக்கப்பட்டு கண் போகும் நிலையில் இருந்தாள் தனம். அந்த நேரம் அந்த கிராமத்திற்கு சென்று செய்தி சேகரித்திருக்கிறேன். இன்று தனம் ஏதோ விவசாய வேலை செய்து கொண்டு குடும்பத்துடன் வாழ்கிறாள். நாஞ்சில் நாடன் மகள் டாக்டராகி மருத்துவம் பார்க்கிறாள். தாழ்த்தப்பட்ட மக்கள் பள்ளிகளிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும் விரட்டப்படுகிறார்கள். நாஞ்சில் நாட்டு வேளாளர்கள், மருத்துவம் மறுக்கப்பட்டால் கணினி படித்து அமெரிக்கா சென்றுவிடுகிறார்கள். இதுதான் உண்மை.

ஆக தாழ்த்தப்பட்ட மக்களை இட ஒதுக்கீட்டின் பெயரில் இழிவுபடுத்தியது அந்த பெரியவர் மட்டுமல்ல, நாஞ்சில் நாடனும் கூடத்தான். இப்பேற்பட்ட மனிதன் மீது ஜெயமோகன் கொண்டிருக்கும் அபிமானத்தின் தரம் என்ன என்பது இப்போதாவது புரிகிறதல்லவா? சாதி மத பிற்போக்குத் தனங்களோடுதான் இவர்கள் வாழ்கிறார்கள்.

ஏதோ நாஞ்சில் நாடன் மட்டும்தான் பார்க்கவேண்டியவர்களை பார்த்து முதுகு சொறியவேண்டியவர்களை சொறிந்து காரியம் சாதித்துக் கொள்கிறவர் என்று நினைத்துவிடாதீர்கள். அநேக சிறுபத்திரிகை எழுத்தாளர்களும் அப்படித்தான். ஜெயமோகனது மலேசியா, ஆஸ்திரேலியா பயணங்களுக்கு புரவலர்கள் யார் அவர்களது பின்னணி என்ன என்று பார்த்தாலும் அது நிரூபணமாகிறது.

முள்ளிவாய்க்கால் போர் நடந்து கொண்டிருக்கும் போது ஈழத்தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட நாட்களில் ஆஸ்திரேலியா சென்று அந்த நாட்டைப் பற்றி உருகி மருகி தொடரே எழுதியிருக்கிறார் ஜெயமோகன். அவரை வரவேற்று உபசரித்த டாக்டர் நோயல் நடேசன் எனும் ஈழத்தமிழர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர், போருக்கு பிந்தைய வன்னி முகாம்களைப் பார்த்து விட்டு அவை உலகத்தரத்தில் இருப்பதாக பாராட்டியவர் என்று இனியொரு தளத்தில் அசோக் யோகன் என்பவர் எழுதியிருக்கிறார்.

ஜெயமோகன் அளவுப்படி ஒருவர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளராக இருப்பது குற்றமில்லை, அவர் விஷ்ணுபுரத்தை படித்திருக்கிறாரா என்பதுதான் முக்கியமானது. மலேசியாவில் ஒருவர் ஊழல் செய்திருக்கிறாரா என்பது பிரச்சினையல்ல, அவர் அறம் கதைகளை கொண்டாடுகிறாரா என்பதுதான் அளவுகோல். எனில் ஜெயமோகனது அறம் எது, அதன் தரம் என்ன என்பதை வாசகரே முடிவு செய்து கொள்ளலாம்.

இதே பெரியவரை பத்தாண்டுகளுக்கு முன்னர் சந்தித்திருந்தால் அறைந்திருப்பேன் என்று எழுதும் ஜெயமோகன் இன்று நிறையவே பக்குவம் அடைந்துவிட்டதாக கூறுகிறார்.

இறுதியாக “அவரது அசட்டுத்தனத்தை ஒருபோதும் அவர் புரிந்து கொள்ள மாட்டார். அறிவுத்துறை என்று ஒன்று உண்டு, அதில் எதையாவது அறிவதனூடாகவே நுழைய முடியும் என்ற எளிய உண்மையை ஒரு சராசரித் தமிழனுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. அவனுடைய அசட்டுத் தன்னம்பிக்கை அவனை கவசமாக நின்று காக்கும். அதற்குள் நின்றபடி அவன் எவரைப்பற்றியும் கருத்து சொல்வான். எவரையும் கிண்டலடிப்பான். ஆலோசனைகளும் மாற்றுக்கருத்துக்களும் தெரிவிப்பான். இணையத்தில் இந்த ஆசாமியைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் உலவிக்கொண்டிருக்கிறார்கள்…. ஒரு வெள்ளையரிடம், ஈழத்தமிழரிடம் , மலையாளியிடம், கன்னடனிடம் என்னை எழுத்தாளன் என அறிமுகம் செய்து கொள்ள எனக்கு தயக்கமில்லை. ஆனால் ஒருபோதும் தமிழகத் தமிழரிடம் அப்படி என்னை முன்வைக்கும் தைரியம் வருவதில்லை. ஏனென்றால் எழுத்தாளன் என்றால் என்ன, அவனிடம் எதைப்பேசலாம், எதைப் பேசக்கூடாதென்று அவர்கள் அனைவருக்கும் தெரியும். நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம்? நம்மிடம் மிக ஆழமான உளவியல் கோளாறு ஏதோ உள்ளது. அறிவுக்கு எதிரான ஒரு நரம்பு இறுக்கமா அது?” என்று முடிக்கிறார்.

jeyamohan-ooty

மேற்கண்ட தத்துவ முத்துக்கள் எதுவும் புதியவை அல்ல. காலஞ்சென்ற சுந்தரராமசாமியிலிருந்து, “நானெல்லாம் ஷிட்னி ஷெல்டனோடு காபி சாப்பிட வேண்டிய ஆள், ஃபூக்கோ, தெரிதாவோடு ரெமிமார்ட்டின் அருந்த வேண்டிய ஆள், இங்கே வேறுவழியின்றி தமிழ் சுண்டக்கஞ்சியை குடிக்கிறேன்” என்று புலம்பும் சாருநிவேதிதா வரை அனேக சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் கூறிவரும் அரதப்பழசான கருத்து. புலவனை மதிக்கத்தெரியாத மன்னன், ஊர், மக்கள் என்று இந்த அறிவு மற்றும் கோமாளித்தனமான மேட்டிமைத்தனம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் பூராவும் உண்டு. ஓரளவு ஜனநாயகத்திற்கு பழக்கப்பட்ட மேற்குலகில் இத்தகைய அசட்டுத்தனங்கள் தற்போது குறைந்திருக்கலாம். அடிமைகள் அதிகம் வாழும் நம்மைப்போன்ற ஏழை நாடுகளில் அதுவும் அறிவை சாதிரீதியாக பிரித்து வைத்திருக்கும் பார்ப்பனியத்தின் மண்ணில் இந்த அறிவுப் பணக்காரர்கள் இப்படித்தான் பேசுவார்கள்.

லீனா மணிமேகலையின் கவிதை குறித்து எழுதப்பட்ட வினவு கட்டுரைக்கு நள்ளிரவில் அழைத்து ஒருமையில் திட்டிய கவிஞர் செல்மா பிரியதர்ஷன் திரும்பத் திரும்பக் கேட்ட கேள்வி, “உனக்கு கவிதை, இலக்கியம் குறித்து என்ன தெரியும்? லீனா மணிமேகலையின் கவிதை குறித்து விமரிசிக்க நீ யார்?”

இதையே சினிமா குறித்து உனக்கு என்ன தெரியும், ஓவியம் குறித்து என்ன தெரியும் என்று பலமுறை வேறு வேறு தருணங்களில் கேட்டிருக்கிறேன். இவை குறித்து நாம் ஏதும் விமரிசித்தால் அந்த விமரிசனத்திற்கு பதில் தராமல் கேள்வி கேட்பவனது தரம் என்ன என்று கேட்கிறார்கள் இந்த அறிவாளிகள். ஒரு படைப்பு குறித்து வரும் விமர்சனங்களை பரிசீலிக்கும் ஜனநாயகம் இவர்களிடம் இல்லை. மாறாக, விமர்சனம் எழுதுபவனின் தரம் என்ன, அவனுக்கு என்ன உரிமை உள்ளது என்று மறுக்கும் பாசிசத்தையே முன் வைக்கிறார்கள். இதற்கு அந்த காலத்து பார்ப்பனீயம் முதல் இந்தக் காலத்து சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் வரை விதிவிலக்கல்ல.

உண்மையில், இந்தத் தமிழ் எழுத்தாளர்கள் எதிர்பார்ப்பது அவர்களது நூல்களைப்படித்து விட்டு மானே, தேனே என்று ஜால்ரா போடுவதை மட்டும். மீறினால் பாய்ந்து குதறி எடுத்துவிடுகிறார்கள்.

அந்தப் பெரியவர், குறிப்பிட்ட துறை சார்ந்து முழுமையாக வாசிக்காமல் நுனிப்புல் மேய்ந்துவிட்டு ஆட்டம் போடுகிறார் என்று ஜெயமோகன் கோபப்படுகிறாரே அதே போல மற்ற துறை சார்ந்தவர்களுக்கும் ஜெயமோகன் மீது வரலாம் இல்லையா?

ஏன் இந்த வரலாம்? இதோ ஆதாரம். காரல் மார்க்ஸ் ஒரு காட்டுமிராண்டி, மனைவியையும், மகளையும் வெறி கொண்டு அடிப்பவர், இதனாலேயே அவரை காட்டுமிராண்டியெனும் பொருள் கொண்ட மூர் என்ற வார்த்தையால் அழைப்பார்கள் என்று ஜெயமோகன் ஒரு முறை எழுதியிருந்தார். முதலில் இது ஜெயமோகனது சொந்த சரக்கு அல்ல. மார்க்சியத்தை பற்றி பில்லியன் கணக்கில் இருக்கும் மேற்குலக அவதூறுகளை, அதுவும் அரவிந்தன் நீலகண்டன் போன்ற அற்பங்கள் எடுத்துக் கொடுத்ததை காப்பி பேஸ்ட் செய்கிறார். சொந்த முறையில் தெரிந்து கொண்டு எழுதும் எவரும் இத்தகைய அசட்டுத்தனங்களை செய்வதில்லை.

ஐரோப்பாவில் குறிப்பாக ஸ்பெயினில் சில நூற்றாண்டுகள் இசுலாமியரது ஆட்சி நடக்கிறது. அங்கே கற்றறிந்த சான்றோர்களை மூர் என்று மரியாதையுடன் அழைப்பார்கள். இப்படித்தான் ஐரோப்பிய இலக்கிய வட்டாரங்களின் அறிஞர்களை குறிக்கும் சொல்லாக மூர் நுழைகிறது. அதன்படி கார்ல் மார்க்ஸ் நட்பு வட்டாரத்தில் அவரை மூர் என்று செல்லமாக அழைப்பார்கள். இப்படித்தான் மார்க்சின் மகள்கள் மட்டுமில்லை, எங்கெல்சும் கூட மூர் என்று அன்போடு அழைத்து பல கடிதங்களில் எழுதியிருக்கிறார்.

இதுதான் ஜெயமோகனது ஆய்வுத் திறம் என்றால், அந்த புதுச்சேரி பெரியவர் மட்டும் என்ன பாவம் செய்தார்?

வேறு எதனையும் விட உண்மையான கம்யூனிச அறிவே தனது (மேட்டிமைத்தனமான) ஆன்மாவை குறி வைத்து அடிக்கிறது என்பதால் ஜெயமோகன் மார்க்சியம் குறித்து மிக மிக வெறுப்புணர்வை சேர்த்துக் கொண்டிருக்கிறார். அந்த வெறுப்புதான் இத்தகைய அற்பத்தனங்களை எழுத வைக்கிறது; அறிவால் எதிர்கொள்ள முடியாத போது இத்தகைய பூச்சாண்டிகளை வைத்து சமாதானம் அடைகிறது. கம்யூனிசம் குறித்த ஜெயமோகனது உளறல்கள் இந்த ரகம். எனினும் இதற்காக நாங்கள் அவரை என்றைக்காவது அடித்திருக்கிறோமா, இல்லை டேய் முட்டாளே ஒரு புக்கு ஒழுங்கா படிச்சிருப்பியாடா, எடத்தை காலிபண்ணு என்றுதான் வசைபாடியிருக்கிறோமா? இல்லையே. சகித்துக் கொண்டு மரியாதையாகத்தானே எழுதுகிறோம்?

அதே போல அரசியல், மார்க்சியம் தவிர பல்வேறு துறை சார்ந்த அறிஞர்கள் கூட ஜெயமோகனைப் பொறுத்துக் கொண்டிருக்கலாம். இதில் ஜெயமோகனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கோபம் வருகிறது என்று பார்த்தால் அங்கே நார்சிசம் ஒளிந்து கொண்டிருப்பது தெரிய வருகிறது.

காரல் மார்க்ஸை மூர் என்று காட்டுமிராண்டித்தனமாக அழைத்து சுயஇன்பம் காணும் ஜெயமோகன், கைலாயம் சென்ற மூப்பனாரை மிகவும் நுட்பமான ரசனை உடையவர், அரசியல்வாதிகளில் ஒரு மாணிக்கம் என்றெல்லாம் சிவசங்கரி ரேஞ்சுக்கு வெண்பாவே பாடியிருக்கிறார். உண்மையில் மூப்பனாரின் ரசனை அல்லது பொறுக்கித்தனத்தின் யோக்கியதையை கோடம்பாக்கத்திலும், அவரது பண்ணையார்தனத்தை தஞ்சாவூரிலும் விசாரித்துப் பார்த்தால் தெரியவரும். எனினும் நம்மைப் போன்ற பாமரர்கள் மூப்பனார் குறித்து கொண்டிருக்கும் அறிவை விட ஜெயமோகனது மேம்பட்டது என்று ஒத்துக் கொள்ள வேண்டுமாம்.

உண்மையில் அறிவு தொடர்பாக மற்றவர்களிடம் பேசுவதும், அல்லது புரிய வைப்பது, ரசிக்க வைப்பது, கற்றுக் கொடுக்க வைப்பதும், இவையெல்லாம் கூட வர்க்க கண்ணோட்டத்திற்கேற்ப மாறுபடுகிறது. சிறு பத்திரிகை எழுத்தாளர்களும், கம்யூனிஸ்டுகளும் இதில் பாரிய அளவில் முரண்படுகிறார்கள்.

“மக்களிடம் இருந்து கற்றுக் கொண்டு கற்பிக்கவும் செய்ய வேண்டும்” என்றார் மாவோ. காரணம் கம்யூனிஸ்டுகளின் சமூகம் குறித்த அறிவு நடைமுறையோடு பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதால் அது வெற்றியடைய வேண்டுமென்றால் மக்களால் ஏற்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் அதை மீளாய்வு செய்து கொள்ளும் கடமையும் அவர்களுக்கு இருக்கிறது. இதுதான் கற்பது, கற்பிப்பது என்று செயல்படுகிறது.

ஒரு சிறுபத்திரிகையாளனோ தனது அறிவு ரசிக்கப்பட வேண்டும் என்று மட்டும் விரும்புகிறான். மற்றவர்களை எப்படி ரசிக்க வைக்க முடியும், அதற்கான திறமை எது என தேடிப்பிடித்து கற்கிறான். பிறகு தன்னை ரசிப்பது எப்படி என்று பாடமும் எடுக்கிறான். அப்படியும் வரவேற்பு இல்லையென்றால் இந்த நாட்டின் ரசனை சரியில்லை, மட்டரகமான சமூகம், என்று இறுதியில் கோபம் கொள்கிறான். ஒருவேளை தன்னை ரசிப்பவன் பாபு பஜ்ரங்கி (குஜராத் இந்துமதவெறியன்) போன்ற பச்சைக் கொலைகாரனாகவோ, இல்லை பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற சுரண்டல் முதலாளியாகவோ இருந்தாலும் பரவாயில்லை என்று அவர்களது சமூகக் குற்றத்தை கண்டு கொள்ளாமல் விடுகிறான். அவர்கள் காசில் சுற்றுலாவும் போகிறான். விருதும் வாங்கிக் கொள்கிறான். இதுதான் காலம் தோறும் புலவர் மரபினர் செய்து வரும் பிழைப்பு வாதம்.

ஒரு நாட்டின் தரம் அதாவது மக்களின் அரசியல் மற்றும் பண்பாட்டுத் தரம் என்பது அங்கே எத்தனை தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. சான்றாக ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான போராட்டம் தற்போது பின்னடைவு கண்டிருக்கிறது என்பதற்கு அங்கே போதிய எழுத்தாளர்கள் இல்லை என்பதா காரணம்? ஈழத்தின் போராட்டம் குறித்தோ அதன் பின்னடைவு குறித்தோ ஒருவர் கதை எழுதலாம். ஆனால், அப்படி கதை எழுதுவதின் ஊடாக ஈழப் போராட்டம் வளர்ந்து விடாது. அல்லது ஈழத் தமிழரின் பிரச்சினைகள் தீர்ந்து விடாது. அரசியல், சமூகப் போராட்டங்களின் தரம், மக்கள் எந்த அரசியலின் கீழ் எந்த அளவு அணிதிரட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அது தீர்மானிக்கப்படுகிறது. சரி, அரசியலுக்கு இது பொருந்துமென்றால் பண்பாடு குறித்த அறிவுக்கு எழுத்தாளர்கள் தேவைதானே என்று கேட்கலாம்.

இல்லை, இங்கேயும் அது நிபந்தனை அல்ல என்கிறோம். தமிழகத்தில் சுந்தர ராமசாமியோ இல்லை நாஞ்சில் நாடனோ இல்லை ஜெயமோகனே கூட பிறக்கவில்லை என்றால் இங்கே ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. அவர்கள் இல்லை என்பதால் இங்கே இப்போது மக்கள் செய்து கொண்டிருப்பதெல்லாம் ஒன்றும் மாறிவிடாது. இல்லை என்றால் இத்தகைய எழுத்தாளர்கள் தமிழக பண்பாட்டுச் சூழலில் என்ன மாற்றத்தை எங்கே யாரால் என்னவிதமாக மாற்றினார்கள் என்று விளக்க வேண்டும். மாறாக, நாங்கள் இல்லை என்றால் மக்கள் காய்ந்து போய் கதறுவார்கள் என்று உளறக்கூடாது. நாங்கள்தான் தாம்பூலப் பையில் இலவசமாக புக் போடும் பழக்கத்தை கொண்டு வந்தோம் என்று கூட சொல்ல முடியாது. இவையெல்லாம் திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் என்றோ சாதித்தவை. குறிப்பாக தற்போதைய புரட்சிகர திருமணங்களில் பரிசுப் பொருட்கள் என்பதே புத்தகங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலை வந்து விட்டது.

பண்பாட்டு அறிவு என்பது சமூகம் கூட்டுத்துவமாக இருந்தால் மட்டுமே இருப்பும், முன்னேற்றமும் சாத்தியம் என்பதை பண்படுத்தும் நோக்கில் வளரும், விரியும் தன்மை கொண்டது. அது அரசியல், பொருளாதார போராட்டங்களிலிருந்தே வலிமை பெறுகிறது. பண்பாடு என்பது ஓய்வுநேரத்தில் ஒயினை பருகியவாறு கம்ப ராமாயணத்தையோ இல்லை விஷ்ணுபுராணத்தையோ இல்லை ஜீனத் அமனையோ ரசிப்பது அல்ல. இவையெல்லாம், துண்டிக்கப்பட்ட இயக்க நிலையிலிருந்து கற்பித்துக் கொண்ட மயக்கங்களை வைத்து, சுய இன்பம் அடையும் மூளையின் மூடுண்ட நிலை. அந்த நிலையிலிருந்து, திட்டமிடப்பட்ட படி ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு தரும் புதிரின் அளவுக்குத்தான் ரசிக்க முடியும். பிறகு அந்த புதிர் உடைபடும் போது ரசனை மாறிவிடும்.

அல்லது ஒரு நூல் அல்லது கதை அல்லது கவிதையை வைத்து பண்பாட்டின் வேர் வளருவதில்லை. சரியாகச் சொன்னால் அப்படி வளரும் வேரைத்தான் ஒரு இலக்கியம் பிரதிபலிக்குமே அன்றி தன்னளவில் அவற்றிற்கு அப்படி ஒரு சக்தி கிடையாது.

இன்னும் எளிமையாகச் சொன்னால் தமிழ்நாட்டில் சாதி வெறி, மதவெறி, பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், வர்க்க சுரண்டல், இவற்றினை எதிர்த்து நாம் எப்படி மாறியிருக்கிறோம் அல்லது மாறவில்லை என்பதுதான் நமது பண்பாடு குறித்த தரமே அன்றி தமிழகம் எழுத்தாளர்களை மதிக்கவில்லை என்பதல்ல. அதனால்தான் மார்க்சியமோ அல்லது பெரியார், அம்பேத்காரோ ஒரு சில தனி மூளைகள் தவம் செய்து சூப்பர் பவரால் தோற்றுவிக்கப்படவில்லை. குறிப்பிட்ட வரலாற்றுக் காலம் தோற்றுவிக்கும் சமூக உந்து நிலையிலிருந்து அவர்கள் தவிர்க்க முடியாமல் பிறக்கிறார்கள். அனைத்திற்கும் அடிநாதமான அரசியல் வாழ்க்கையின் விதியே இதுதான் எனும் போது அதன் செல்வாக்கில் இருக்கும் இலக்கியம் மட்டும் விதிவிலக்கல்ல.

இதனால் இலக்கியம் இன்னபிற அறிவுத்துறைகளை குறைத்து மதிப்பிடுவதாக பொருள் இல்லை. அல்லது அனைவரும் இவற்றை புறந்தள்ளி வாழவேண்டும் என்றும் பொருள் அல்ல. அறிவு சார்ந்து கிடைக்கும் எதனையும் படிக்க வேண்டும், அப்படி படிக்க முடியாத படி முதலாளித்துவத்தின் பாப்கார்ன் தலைமுறையாக நாம் மாற்றப்படுகிறோம் என்பதே நாங்கள் கொண்டிருக்கும் அக்கறை. ஆனால் ஒரு நாட்டுமக்களது அரசியல் போராட்டத்தின் வீச்சோடுதான் இத்தகைய அறிவு வாசிப்பு வளருவதோ, பலனளிப்பதோ இருக்குமே அன்றி வாசிப்பே முதல் நிபந்தனை அல்ல.

முகநூலில் பலரும் ஜெயமோகனது அகங்காரத்தை அழகாகவும், நுட்பமாகவும் கண்டித்திருக்கிறார்கள். அவர்கள் கூறுவது போல ஒரு சமூகத்தில் டீ மாஸ்டர், நகர சுத்தித் தொழிலாளி, தச்சுத் தொழிலாளி போல எழுத்தாளனும் ஒரு அங்கம். அங்கங்களில் உயர்வு தாழ்வு காண்பது பார்ப்பனியம் மட்டுமே உருவாக்கியிருக்கும் வர்ண பேதம். சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் இன்னமும் அப்படித்தான் பார்ப்பனியத்தின் செல்வாக்கில்தான் கட்டுண்டு கிடக்கிறார்கள். அதனால்தான் ஜெயமோகனது சூப்பர் ஈகோ எழுத்தாளர் நிலையை எளியவர்கள் மறுக்கும்போது இந்துத்துவ வெறியர்களான ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் களத்திற்கு வருகின்றனர்.

இப்படி இணையம் முழுவதும் நமது செல்வாக்கு குறைவாக இருக்கிறது என்பதே ஜெயமோகனது ஆத்திரத்திற்கு காரணம். இப்படி பலரும் கேள்வி கேட்பது, விமரிசிப்பது எல்லாம் அடிமைத்தனம் விதிக்கப்பட்டிருக்கும் நமது சமூகத்தில் ஜனநாயகம் வளர வழிவகுக்கும் என்ற எளிய பாடம் கூட அவருக்குத் தெரியவில்லை. இதனால் இணையத்திலோ இல்லை சமூகத்திலோ மொக்கைகள் இல்லை என்று கூறவில்லை. ஆனால் படிப்பு, ஆர்வம், அரசியல் அனைத்தும் அனைவரிடமும் இப்படி மொக்கையாகத்தான் ஆரம்பிக்கின்றன என்பதால் இதெல்லாம் வாழ்க்கையில் கடந்து போகும் ஒரு நிலை. சமூகத்தை மாற்ற விரும்பவர்கள் இதை ஆரோக்கியமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

மொக்கைகள் கூட பரவாயில்லை. ஜெயமோகனது எழுத்தை படித்து விட்டு வாழ்க்கைப் பிரச்சினை குறித்து கிரிமினல்கள் அருளுரை கேட்டால் கூட அவர் மறுப்பதில்லை. திமுகவிலோ, இல்லை அதிமுகவிலோ முப்பது வயது வரை தீவிரமாக செயல்பட்ட ஒருவர் அதைத் துறந்து ஆன்மீகம், ஜோசியம் என்று மாறி, பிறகு தொழில் செய்து சம்பாதித்து குழந்தைகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு தற்போது புதிய தலைமுறை – எஸ்ஆர்எம் பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சியில் மாநிலப் பொறுப்பில் இருந்து கொண்டு மாத ஊதியத்துடன் வாழ்க்கையை ஓட்டுகிறார்.

இதையெல்லாம் குறிப்பிட்டு விட்டு வாழ்க்கையில் நான் எதை இழந்தேன் என்ற குழப்பம் அவருக்கு வருகிறது. இதனால் தன்னை அருச்சுனனாகவும் ஜெமோவை கிருஷ்ணாகவும் நினைத்து கீதை கேட்கிறார். ஜெமோவும் வாழ்க்கையென்றால் இப்படித்தான், இங்கே ஒற்றைப்படையான நோக்கம் கொண்டு ஒருவர் வாழ்ந்து விளைவை தேட முடியாது, அது இது என்று அடித்து விடுகிறார். ஜெயமோகன் என்ன கூறினார் என்பது பிரச்சினையில்லை. ஒரு கிரிமினலை எப்படிப் பார்க்கிறார் என்பதுதான் முக்கியமானது.

திமுக, அதிமுக போன்ற ஆளும் வர்க்க கட்சிகளில் குறிப்பிட்ட பொறுப்புகளில் இருக்கும் ஒருவன் நிச்சயம் பிழைப்புவாதியாகத்தான் இருப்பான். அதனால்தான் நடுத்தர வர்க்கத்தின் ஆயுட்கால சேமிப்பை பிடுங்கிக் கொண்டு கல்லூரியும், கட்சியும் நடத்தும் பச்சமுத்துவின் கட்சியில் வெட்கம் கெட்டு இருக்கிறான். இடையில் ஜோசியம் எனும் உலக மகா ஃபிராடு தொழிலிலும் ஈடுபடுகிறான். இத்தகைய அப்பட்டமான சந்தர்ப்பவாதிக்கு வந்திருக்கும் குழப்பம் என்னவாக இருக்கும்? மற்றவனெல்லாம் மாளிகை, இனோவா, ரியல் எஸ்டேட் என்று பிச்சு உதறும் போது எனக்கு ஏன் அவை கிடைக்கவில்லை என்பதுதான்.

ஆயுசு முழுக்க உழைத்துப் பிழைக்கும் மக்கள் வாழும் நாட்டில் இத்தகைய ஒட்டுண்ணிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும். ஆனால், அந்த கிரிமினலை அரவணைத்து உச்சி முகர்ந்து ஆறுதல் சொல்கிறார் ஜெயமோகன். இதுதான் ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் உருவாக்கியிருக்கும் அறிவார்ந்த சமூகத்தின் லட்சணம்.

எங்களைப் போன்ற ‘பாமர’ கம்யூனிஸ்டுகள் சேர்ந்து இயங்கும் சமூகமும், மனிதர்களும் எப்படி இருப்பார்கள்?

மே 19 அன்று எங்களுக்கு வந்த மின்னஞ்சலை பெயரை தவிர்த்து இங்கே தருகிறோம்.

“வினவு தோழர்களுக்கு வணக்கம்,

கடந்த மூன்று வருடங்களாக தங்களின் தளத்தை படித்து வருகிறேன். பிற்போக்கான நிலையில் இருந்த என் சிந்தனையை மாற்றி அமைத்ததில் தங்களின் தளத்திற்க்கு பெரும் பங்கு உண்டு. அரசியல் தளத்தில் மட்டுமல்லாது பண்பாட்டு தளத்திலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சிந்தனை மாற்றம் ஏட்டுச்சுரைக்காயாய் இல்லாமல், பெளதீக மாற்றமும் பெற்றது. ஆம், வரும் ______(தேதியில்) எனக்கு திருமணம். சாதி சடங்குகள் எதுவுமின்றி எளிமையான முறையில், தங்கள் அமைப்புத் தோழர் ஒருவரின் மகளுடன் திருமணம் நடைபெறவிருக்கிறது.

மூன்று வருடங்களுக்கு முன் எனக்கு இம்மாதிரியான திருமணம் நடைபெறும் என்று சொல்லியிருந்தால் நிச்சயம் சிரித்திருப்பேன். இன்று இத்திருமணம் என் வாழ்வில் நடைபெறவிருப்பதிற்கு தங்களின் தளத்திற்ககும் ஒரு மிகமுக்கிய பங்குண்டு. இத்துடன் திருமண அழைப்பிதழை இணைத்துள்ளேன். என் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு வினவு தோழர்களை அன்புடன் அழைக்கிறேன்.”

கட்டுரையை முடித்துக் கொள்கிறோம்.
______________________________________________________
பின்குறிப்பு : தலைப்புக்கு என்ன பொருள்? கட்அவுட் என்பது ஜெயலலிதாவையும் கீபோர்ட் என்பது ஜெயமோகனையும் குறிக்கின்றது. தற்போதைய நிலவரப்படி கட்அவுட்டை கீபோர்டு முந்தியிருக்கிறது. ஏன், எப்படி என்பதை ‘அறிவார்ந்த’ வாசகர்களே புரிந்து கொள்ளலாம்.

68 மறுமொழிகள்

  1. To whomever has written this:
    The paradox baffles me! Consider for a moment that Jeyamohan is talking about you and ask yourself the question, whether you have read any work of Jeyamohan or Charu or SuRa or Nanjil. Let me wake you up! The person whom Jeyamohan referring in his post is you! It is the the person who has written a lengthy piece of article about a writer without even reading some of his works properly.

    • யோவ் சிவனேன்னு இல்லாம இந்தக் கட்டுரையை முதல்ல படிய்யா! இந்தக் கட்டுரையை எழுதுனவரு உங்காளுங்க எழுதுனதை படிக்கலேன்னு சொன்னாரா? பெறவு எதை வைச்சு முடிவு பண்ற? இதான்யா பார்ப்பன உதாரு! நாங்கல்லாம் டிகிரி காபி எல்லாம் முடிச்சிட்டு ஐஏஎஸ்,ஐபிஎஸ்,அமெரிக்கான்னு பெரிய இடமாக்கும் நீயெல்லாம் ஒன்னாம் கிளாஸ் படிச்சிருக்கியான்னு கேக்குற திமிரு! சவ சவன்னு வாந்தி எடுக்குற உன்னை உங்காளு ஜெயமோகனே ஒத்துக்கமாட்டாரு,நீயும் அந்த பாண்டிச்சேரி மொண்ணைன்னுதான் சொல்லுவாறு, வேணா கேட்டுப்பாரு!

      • “யோவ் சிவனேன்னு இல்லாம இந்தக் கட்டுரையை முதல்ல படிய்யா! இந்தக் கட்டுரையை எழுதுனவரு உங்காளுங்க எழுதுனதை படிக்கலேன்னு சொன்னாரா?”

        -படித்தேன் என்று அவரால் கூற முடியுமா? அவர விடுங்க நீங்க படிச்சிருக்கிங்களா?

        “இதான்யா பார்ப்பன உதாரு! நாங்கல்லாம் டிகிரி காபி எல்லாம் முடிச்சிட்டு ஐஏஎஸ்,ஐபிஎஸ்,அமெரிக்கான்னு பெரிய இடமாக்கும் நீயெல்லாம் ஒன்னாம் கிளாஸ் படிச்சிருக்கியான்னு கேக்குற திமிரு!”

        -என்ன பாஸ்!நீங்க மட்டும் என்ன பத்தி இப்படியெல்லாம் நான் யாருன்னே தெரியாம முடிவு பண்றீங்க?

        • சவ சவன்னு சுத்தி வளைக்காம ஸ்டிரைட்டா மேட்டருக்கு வாங்க ராசா, இந்தக் கட்டுரையை படிச்சிங்களா, உங்க கருத்து என்ன? இந்த டெஸ்ட்ல பாசானீனா பெறவு நீங்க எனக்கு டெஸ்ட்டோ நேர்காணலோ எதுவேணாலும் வையுங்க !

          • கட்டுரையை படித்து விட்டுத்தான் என் கருத்தை பதிவு செய்திருக்கிறேன்.. ஜெயமோகன் என்கிற எழுத்தாளரை பற்றி மறுத்து சொல்வதற்கு முன்னர் அவருடைய படைப்புகளை படிக்காமல் அல்லது முன் முடிவுகளோடு படித்து விட்டு, அவருக்கு தர வேண்டிய மரியாதையை தராமல் எழுதப்பட்ட கட்டுரை. இதைத்தான் ஜெயமோஹனும் அவர் பதிவில், இது தமிழ் நாட்டில் மட்டுமே நடக்கும் அவலம், என்று கூறுகிறார். அது புரியாமல், அவரை திட்டுவதன் மூலமே, அவர் சொல்வதை உறுதி செய்கிற கட்டுரை என்பதலாயே, இது ஒரு “paradox”!

            • Siva,

              கட்டுரை எழுதியவர் ஜெயமோகனின் எழுத்துக்களை வாசிக்காதவர் என்கிற முன்முடிவு உங்களுக்கு ஏன் வந்தது?

              ஒரு வாதத்துக்காக அப்படி வாசிக்காதவர் என்பதாகவே வைத்துக் கொண்டாலும், வாசிக்க வேண்டியது தான் ஜெயமோகனின் சமூக கண்ணோட்டத்தை விமர்சிக்கத் தேவையான தகுதி என்று ஏதாவது சட்டம் உள்ளதா? சமூக விரோத கருத்துக்களை எவன் சொன்னாலும் அது விமர்சிக்கப்பட வேண்டியது தானே? அப்படிக் கூடாது என்று தீர்ப்பெழுதும் உரிமையை உங்களுக்குத் தந்தது யார்?

              ஜனநாயக விரோதமாக அல்லவா இருக்கிறது?

              • சட்டங்களை பற்றி நான் கூறவில்லை! தீர்ப்பும் எழுத வரவில்லை! ஆனால் , ஒரு இலக்கியவாதியின் சமூக கண்ணோட்டங்களை அவரது படைப்புகளை ஓரளவேனும் வாசித்தால்தான் புரிந்து கொள்ள முடியும் என்று கூறுகிறேன். அதனால்தான் திரும்ப திரும்ப நீங்கள் நேரடியாக வாசித்து இருக்கிறீர்களா , என்று கேட்கிறேன்.

                • Siva
                  you are terribly confusing because of jeyamohana phobia . அவர் தடாலடியாக அடிப்பது எப்படின்னா…”என்னை படிச்சியா… படிக்கலைன்னா… முதல்ல படி”ம்பபார்… அப்படி படிச்சுட்டதா சொன்னா.. ”முழு தரிசனத்தோட நீங்க படிக்கல”ன்னு சொல்வாரு.. எப்படி பேசினாலும் அத வளைச்சு வளைச்சு சொல்லலாம்ல…. இதுகாறும் உலகத்தில் பிறந்த அறிஞர்கள் ஒட்டுமொத்தமா சொன்னத விட இவர் சொல்றது மட்டுமே பெரிசுன்னு prove ஆயிடுச்சுன்னா நீங்க சொல்றத வினவு உட்பட எல்லாரும் பரிசீலனை பண்ணலாம்.. என்ன திருப்தியா..சிவா..

                  • கடைசியாக நீங்கள் சொல்வது. நான் எதையும் விமர்சனம் செய்யும் முன்னர் படிக்க மாட்டேன் ஆனால் விமர்சனம் செய்வேன். என்பதுதானே?

                    • once again you are confusing and misdirecting the issue….நீங்கள் வேண்டுமென்றே இப்படிக் கூறினால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.. நான் முன்பு சொன்னதுதான்.. you deliberately want to put words on my mouth….மன்னிக்கவும்

                    • திசை பிருப்புவது என் நோக்கம் அல்ல. நான் முதலில் கேட்கும் கேள்வியும், இப்போது உங்களை பார்த்து கேட்கும் கேள்வியும் இதுதான். ஜெயமோகன் என்கிற இலக்கிய வாதியின் கருத்துக்களை அவரது இணய தளத்தில் எழுதிய கட்டுரையை விமர்சனம் செய்யும் முன், அவரது எழுத்துக்களை கொஞ்சமாவது படித்து இருக்கிறிர்களா? என்பதுதான். இதில் திசை திருப்ப என்ன இருக்கிறது? படிக்கவில்லை என்றல் படிக்கவில்லை என்று கூறலாமே?

                    • இந்த பதிவில் வினவு சொல்லும் எந்த கருத்தோடு நீங்கள் ஒத்து போகிறிர்கள்? பல கருத்துக்கள் சொல்லி இருப்பதால் கேட்கிறேன். எங்கிருந்து விவாதிக்க ஆரம்பிப்பது?

            • இன்னா நைனா,

              // அவருக்கு தர வேண்டிய மரியாதையை தராமல் எழுதப்பட்ட கட்டுரை // இதுக்கு இன்னா மீனிங்? சூடம், சாம்பிராணி, பழம், வெத்தலை, பூசணிக்கா வெச்சு அண்ணாத்தே ஜெய ஜெய மோகன பவன் பலான அறிஞருன்னு மந்திரம் சொல்லி எழுதணுமா?

              மரியாதங்கிறது கேட்டோ, அடிச்சோ, பிச்சை வாங்கியோ வர்றது இல்ல ராசா, அது மத்தவங்க தானா கொடுக்கணும். கொடுத்துத்தான் ஆகணும்னு கேட்கிறவன் சாதாவா இருந்தாலும், ஸ்பெசலா இருந்தாலும் அதுக்குப் பெரு பாசிசம். இதத்தான்யா கட்டுரை சொல்லுது, என்னத்த படிச்ச, திரும்ப முதல்ல இருந்து படி

              அப்பால வரேன்!

              • மரியாதையை தான வராதுதான். ஆனா ஒரு படைப்பாளி மரியாதைக்குரியவரா, இல்லையா என்று தீர்மானிக்க அவரை கொஞ்சமாவது வசித்து இருக்க வேண்டும் அல்லவா?

                • நைனா ஒருமையில எழுதறேன்னு தப்பா எடுத்தாக்காத, அப்பதான் ஃபுளோ வருது.

                  இங்க நீ போட்ட 5 கமெண்ட வைச்சு நீ யாரு, உன் டேஸ்ட் என்ன, இன்னா தொழில், உனக்கு என்னமேறி பிரண்ட்ஸ், உன் அரசியல் என்ன அல்லாம் புட்டு புட்டு வைக்க முடியும். இதுக்கு நீ பக்கம் பக்கமாக என்ன எழுதியிருக்கேன்னோ இல்லை ஒன் கூட 5 நாள் கூட இருந்து பாக்கணும்முனோ அவசியமில்லை. மைண்ட் ரீடிங் பண்றதுக்கு யாருகிட்ட என்ன வெப்பன் இருக்குங்கிறதுதான் மேட்டர்.

                  இந்தக் கட்டுரையில ஜெயமோகன் இன்னா எழுதிக்கிறீராரோ அத்தனை கட்டுரைக்கும் லிங்கு போட்டுத்தானே எழுதியிருக்காங்க, இதெல்லாம் படிக்காம எழுதுனதா நீ ஏன் நினைக்கிறேன்னா நீயே இன்னமும் இந்தக் கட்டுரையை முழுசாவோ உள்ள விட்டோ படிக்கல.

                  அடுத்து துப்புறதுன்னா மேல இருந்து கீழே துப்பணும், மல்லாக்க படுத்துக்கிணு துப்புணா நம்ம மேலேயேபடும். புரியலையா?

                  வினவுல எப்டியும் 2000த்துக்கும் மேல க்ட்டுரை இருக்கும். 30 வருசமாக புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் பத்திரைகங்க, அவங்க போட்ட ஆயிரத்துக்கும் மேல புக்குங்க, பெறவு மாக்ஸ் முதல் மாவோ வரை ஆயிரக்கணக்கான நூலுங்க இதெல்லாம் படிச்சாத்தான் நீ வினவுக்கு மரியாதை கொடுக்குறதா வேண்டாமான்னு முடிவு செய்யுறதுக்கு தகுதி. இதுல என்னா நீ படிச்சிருக்க எடுத்து வுடு மாமு! அல்லாங்காட்டி ஒத்து ஒத்து!

                  • “இங்க நீ போட்ட 5 கமெண்ட வைச்சு நீ யாரு, உன் டேஸ்ட் என்ன, இன்னா தொழில், உனக்கு என்னமேறி பிரண்ட்ஸ், உன் அரசியல் என்ன அல்லாம் புட்டு புட்டு வைக்க முடியும். இதுக்கு நீ பக்கம் பக்கமாக என்ன எழுதியிருக்கேன்னோ இல்லை ஒன் கூட 5 நாள் கூட இருந்து பாக்கணும்முனோ அவசியமில்லை. மைண்ட் ரீடிங் பண்றதுக்கு யாருகிட்ட என்ன வெப்பன் இருக்குங்கிறதுதான் மேட்டர்”

                    மேலே நீங்கள் சொல்கிற என்னுடைய ரசனை, தொழில், அரசியல் சார்பு போன்றவற்றை நீங்கள் புட்டு புட்டு இங்கே இப்போ வைத்து விட்டால், உங்கள் கருத்துக்களை கேள்வி இல்லாமல் ஒத்துக்கொள்கிறேன். நீங்கள் தவறாக கூறி விட்டால்?

                    • சிவாண்ணே, நீங்க சொல்ற மேறி நான் தப்பா சொன்னா அது விவரப்பிழையாத்தான் இருக்குமுணே, கரு மிஸ்ஸாகாது, அதையும் கரெக்ட் பண்ண்ணும்மான உங்கள ஒரு மணிநேரம் பேசவிட்டா போதும்ணே, இதெல்லாம் ஒரு பிரச்சினையில்ல, நான் கேட்ட மத்த கேள்விக்கும் பதில் போட்டாத்தான் ஆட்டத்துக்கு வருவேன், இல்லேண்ணா போங்காட்டம்ணு போய்கிட்டே இருப்பேன், வாரேண்ணா!

                    • ஓகே நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் கொடுக்க முயற்சி பண்றேன்
                      1) வினவு படிச்சிருக்கேனா? ஒரு ஒரு வருஷமா படிச்சிட்டு வரேன். வினாவோட பல சமூக கட்டுரைகள் முக்கியம்ன்னு நினைக்றேன். முக்கியமா இங்க வெளி வர்ற “இன்றைய தமிழக, இந்திய சுமூக பிரச்சனைகள் குறித்த கட்டுரைகள்”.
                      2) மார்க்ஸ், மாவோ எல்லாம் படிசிருக்கேனா? படிச்சிட்டு வரேன்னு சொல்லலாம், கருத்து சொல்ற அளவுக்கு படிக்கல. ஆனா புரிஞ்சிக்கிற அளவுக்கு படிச்சிருக்கேன்.
                      3) இந்த கட்டுரைய படிச்சேனா? படிச்சேன். நீங்க சொன்னதுக்க்காகவே திரும்ப படிச்சேன். என்ன சொல்ல வராங்க புரியுது. ஆனா “பிளேடுகளை எதிர் கொள்வது ஒரு கலை. ஒரு எளிய கிண்டல் மூலமோ, திசைதிருப்பல் மூலமோ அவர்களை சீண்டிவிட்டு நிறுத்தலாம். இல்லையென்றால் எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று தப்பிக்கலாம். அதற்கெல்லாம் உலகோடு ஒட்ட ஒழுகும் யதார்த்தவாதியாக இருக்க வேண்டும். ஆனால் எப்போதும் டைட்டாகவே இருக்கும் ஜெயமோகன் இத்தகைய பிளேடுகளோடு உரசும்போது எளிதில் தீப்பற்றிக் கொள்கிறார். போகட்டும்.” அப்படின்னு ஜெயமொஹனோட கருத்த ஒத்துக்கிட்டு, இவ்வளவு கோபம் ஏன்?

                      என்னால முடிஞ்சா பதில் சொல்லிருக்கேன். வேற என்ன வேணும்? அத விட முக்கியமா, என்ன பத்தி என்ன புரிஞ்சு கிட்டீங்க ? கரு மிஸ் ஆகாதுன்னு சொல்றீங்களே? அது என்ன?

                    • //இந்த கட்டுரைய படிச்சேனா? படிச்சேன். நீங்க சொன்னதுக்க்காகவே திரும்ப படிச்சேன். என்ன சொல்ல வராங்க புரியுது. ஆனா “பிளேடுகளை எதிர் கொள்வது ஒரு கலை. ஒரு எளிய கிண்டல் மூலமோ, திசைதிருப்பல் மூலமோ அவர்களை சீண்டிவிட்டு நிறுத்தலாம். இல்லையென்றால் எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று தப்பிக்கலாம். அதற்கெல்லாம் உலகோடு ஒட்ட ஒழுகும் யதார்த்தவாதியாக இருக்க வேண்டும். ஆனால் எப்போதும் டைட்டாகவே இருக்கும் ஜெயமோகன் இத்தகைய பிளேடுகளோடு உரசும்போது எளிதில் தீப்பற்றிக் கொள்கிறார். போகட்டும்.” அப்படின்னு ஜெயமொஹனோட கருத்த ஒத்துக்கிட்டு, இவ்வளவு கோபம் ஏன்?//

                      AK47 வச்சு இவ்வளவு அடிச்ச பொறகுதான் சிவாண்ணே கட்டுரைய படிச்சி ஒரு விஷயத்த உள் வாங்கியிருக்காருன்னு தெரியுது. இன்னும் நாலஞ்சு தடவை படிச்சா, சிறு பத்திரிக்கை எழுத்தாளருங்களோட முற்ப்போக்கு லச்சணம், அவங்க இலக்கிய சேவையில சாதிக்கிறது என்னன்னு கட்டுரையில சொல்லியிருக்கிறத்தையும் புரிஞ்சுப்பாரு.

                    • // கருத்து சொல்ற அளவுக்கு படிக்கல. ஆனா புரிஞ்சிக்கிற அளவுக்கு படிச்சிருக்கேன்.//
                      சிவாண்ணே, புரிஞ்சிக்கிற அளவுக்கு தெரிஞ்சா கருத்தும் சொல்ல முடியணும்!

                      இந்தக் கட்டுரையில நீங்க புரிஞ்சுக்கிட்டதா போட்டுருக்குற கோட் ரொம்ப சாதாரணமானது.அதுதான் உங்களுக்கு முக்கியமா படுதுன்னா சாரி பிரதர்

                      கட்டுரையில முக்கியமான கருன்னு நான் கருதரது இதுதான்….

                      // பண்பாட்டு அறிவு என்பது சமூகம் கூட்டுத்துவமாக இருந்தால் மட்டுமே இருப்பும், முன்னேற்றமும் சாத்தியம் என்பதை பண்படுத்தும் நோக்கில் வளரும், விரியும் தன்மை கொண்டது. அது அரசியல், பொருளாதார போராட்டங்களிலிருந்தே வலிமை பெறுகிறது. பண்பாடு என்பது ஓய்வுநேரத்தில் ஒயினை பருகியவாறு கம்ப ராமாயணத்தையோ இல்லை விஷ்ணுபுராணத்தையோ இல்லை ஜீனத் அமனையோ ரசிப்பது அல்ல. இவையெல்லாம், துண்டிக்கப்பட்ட இயக்க நிலையிலிருந்து கற்பித்துக் கொண்ட மயக்கங்களை வைத்து, சுய இன்பம் அடையும் மூளையின் மூடுண்ட நிலை. அந்த நிலையிலிருந்து, திட்டமிடப்பட்ட படி ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு தரும் புதிரின் அளவுக்குத்தான் ரசிக்க முடியும். பிறகு அந்த புதிர் உடைபடும் போது ரசனை மாறிவிடும்.//

                      இத நீங்க புரிஞ்சிக்கிட்டா பெறவு உங்க்கிட்ட கேள்வி இருக்காதுன்னு நினைக்கறேன், டரை பண்ணுங்க பிரதர்…. 🙂

                    • நீங்கள் சொன்ன கட்டுரையின் கருவோடு எனக்கு உடன் பாடில்லை. ஏனென்றால் அதற்க்கு கீழே இப்படி வருகிறது:
                      “இதனால் இலக்கியம் இன்னபிற அறிவுத்துறைகளை குறைத்து மதிப்பிடுவதாக பொருள் இல்லை. அல்லது அனைவரும் இவற்றை புறந்தள்ளி வாழவேண்டும் என்றும் பொருள் அல்ல. அறிவு சார்ந்து கிடைக்கும் எதனையும் படிக்க வேண்டும், அப்படி படிக்க முடியாத படி முதலாளித்துவத்தின் பாப்கார்ன் தலைமுறையாக நாம் மாற்றப்படுகிறோம் என்பதே நாங்கள் கொண்டிருக்கும் அக்கறை. ஆனால் ஒரு நாட்டுமக்களது அரசியல் போராட்டத்தின் வீச்சோடுதான் இத்தகைய அறிவு வாசிப்பு வளருவதோ, பலனளிப்பதோ இருக்குமே அன்றி வாசிப்பே முதல் நிபந்தனை அல்ல.”

                      இலக்கியத்துக்கும், கலைக்கும் , மக்கள் போராட்டங்களுக்கும் உள்ள தொடர்பு உங்களுக்கு புரியவில்லை. அதனால் தன உங்களுக்கு இலக்கிய வாதிகளும், கலைஞர்களும் கிள்ளுகீரைகளாக தெரிகிறார்கள். அதனாலதான் நீங்கள் ஜெயமோகன் போன்ற முக்கியமான படைப்பாளிகளை ஏளனம் செய்கிறீர்கள்.கம்ப ராமாயணத்தை புறந்தள்ளுகிறீர்கள். Dostoyevskyயும், Tarkovskயும் பிறந்தது ரஷ்யாவில்தான்!

  2. கட்டுரையை முழுமையாக படித்து விட்டேன்! வழக்கமான அதிரடி ஆட்டம் தான் என்றாலும் ஐம்பது ஓவரில் 300 பந்துகளிலும் சிக்சர் !!

    2010 வரை வெறும் மொக்கை ப்ளாகராக இலக்கியவாதியாக இலக்கிய கூட்டங்களில் பங்கேற்று எதாவது சிறுகதை, எதாவது ஒரு சிறுபத்திரிக்கையில் வருமா என்று அற்பமாக சுற்றித் திரிந்த என்னை தெளிய வைத்து அரசியல் போராட்டக்களத்துக்கு அழைத்து வந்தது வினவின் கட்டுரைகளே !

    மார்க்ஸ் சொன்ன “காப்பிய மனநிலையில்” இருந்து மீண்டு, மக்கள் போராட்டங்களில் இன்று வரை தொடர்ந்து பங்கேற்பதற்கு வினவின் கட்டுரைகளே வினையூக்கிகளாக இருந்திருக்கின்றன. ( அரசியல் ரீதியாக சில இடங்களில் மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் )

  3. இன்று உலகில் எந்த மூலையில் இருந்தாலும் பெரும்பாண்மையான மக்கள் தங்கள் அடிமைதனத்தை உடைக்கவல்ல ஒரே சிந்தாந்தம் மார்க்சியம் தான் என்பதை அறிந்து அதை உயர்த்தி பிடிக்கின்றனர், அது ஐரோப்பாவாக இருந்தாலும் சரி காட்டில் வசிக்கும் பழங்குடி மக்களாக இருந்தாலும் சரி,

    அதுபோல் இவரையும் உலகில் உள்ள மக்கள் ஜெயமோகனிசம் என்று இவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடினால் சந்தோசப்பட்டிருப்பார், ஆனால் இவர் எதிர்பார்க்கும் அளவுக்கு மதிப்பு கிடைப்பதில்லை. அதுதான் பேராசான் காரல் மார்க்ஸின் மீது உள்ள கோபமாக இருந்திருக்கும்.

  4. // முகநூலில் பலரும் ஜெயமோகனது அகங்காரத்தை அழகாகவும், நுட்பமாகவும் கண்டித்திருக்கிறார்கள். அவர்கள் கூறுவது போல ஒரு சமூகத்தில் டீ மாஸ்டர், நகர சுத்தித் தொழிலாளி, தச்சுத் தொழிலாளி போல எழுத்தாளனும் ஒரு அங்கம். அங்கங்களில் உயர்வு தாழ்வு காண்பது பார்ப்பனியம் மட்டுமே உருவாக்கியிருக்கும் வர்ண பேதம். //

    தான் தெரிந்து வைத்திருப்பது கொஞ்சம்தான் என்பதுகூட தெரியாத ஒரு நபர், ஒரு டீ மாஸ்டரிடமோ, நகர சுத்தித் தொழிலாளியிடமோ, தச்சுச் தொழிலாளியிடமோ, எழுத்தாளரிடமோ சென்று விரலைக் காட்டி அவர்கள் தொழில் தொடர்பான வகுப்பு எடுப்பதோடு நிற்காமல், கேட்கும் கேனத்தனமான கேள்விகளுக்கு பதில் சொல் என்றும் மிரட்டினால், மேற்கூறிய ஒவ்வொருவரும் ஒரே விதமான எதிர்வினைகள்தான் ஆற்றுவார்கள் (அளவிலும், நாசுக்கிலும் வித்தியாசம் இருக்கலாம்)..

    டீ மாஸ்டர் கொஞ்சம் வென்னீரை பயன்படுத்தலாம், நகர சுத்தித் தொழிலாளி அந்த நபரை மோந்து பாத்து மூக்கைப் பிடித்துக் கொண்டு வெறுப்பேற்றலாம், தச்சுத் தொழிலாளி கொட்டப்புளியின் திசையை லேசாக மாற்றி சாரிபா மிஸ்ஸாடிச்சு என்று கூறி சமாளிக்கலாம்.. ஆனால் எழுத்தாளர்கள் மட்டும் உணர்ச்சிவேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து எதிர்வினையாற்றினால் உடனே பார்ப்பனீய மேட்டிமை வர்ணபேத வகுப்புவாத இந்துத்துவ எழவு என்று இணையத்தில் கூச்சல்களை எழுப்புகிறவர்களில் பெரும்பாலோர் தாங்கள் எப்படி எதிர்வினையாற்றுவோம் என்று மட்டும் சிந்திப்பதேயில்லை..

    • // டீ மாஸ்டர் கொஞ்சம் வென்னீரை பயன்படுத்தலாம், நகர சுத்தித் தொழிலாளி அந்த நபரை மோந்து பாத்து மூக்கைப் பிடித்துக் கொண்டு வெறுப்பேற்றலாம், தச்சுத் தொழிலாளி கொட்டப்புளியின் திசையை லேசாக மாற்றி சாரிபா மிஸ்ஸாடிச்சு என்று கூறி சமாளிக்கலாம்.//

      இங்கு பிரச்சனை ஏன் எதிர்வினையாற்றினார் என்பது அல்ல. டீ மாஸ்டரை சீண்டினால் அவர் ஏன் தமிழ் சமூகத்தையே குறைசொல்ல வேண்டும். தமிழர்கள் ஏன் டி சாப்பிடவில்லை, மதிக்கவில்லை என்றெல்லாம் புலம்ப வேண்டும், வீண் வகுப்பு எடுக்க வேண்டும் என்பது தான் கேள்வி?

    • அம்பிண்ணா உங்க பிரச்சினை என்னண்ணா? சாதாரண ஜனங்க சண்டை போட்டாங்கன்னா அது அவுங்களுக்குள்ள மட்டும் முடிஞ்சிரும். ஆனா உங்க எழுத்தாளருங்க சண்டை போட்டாங்கண்ணா அது எப்புடியிருக்குமங்கிறதுதான் இந்த கட்டுரை சொல்லுற பாயிண்ட். ஒரு சேரியிலிருந்து ஒரு குப்பனை கைது செஞ்சிருந்தா சாதாரண ஜனங்க என்ன பேசியிருப்பாங்க? ஆனா சங்கராச்சாரியை கைது பண்ணுணதாலதான் சுனாமி வந்து மக்கள் செத்தாங்கன்ன அப்போ பார்ப்பானர்கள் பேசுனாங்க,புரியலையாண்ணா? அது தாண்ணா பார்ப்பனியம்

    • முதலில் இந்த ஒப்பீடே உண்மையற்றது. எந்த ஊரில் எப்போது டீ மாஸ்டர் கோபத்தில் வெந்நீர் ஊற்றியுள்ளார். சினிமா உதாரணங்களை சொல்லக் கூடாது. ‘கோவில்’ என்றொரு படத்தில் வடிவேல் மீது இன்னொரு காமெடி நடிகர் வெந்நீர் ஊற்றும் காட்சி உள்ளது. அந்த காமெடி அழுகையை தோற்றுவிக்கும் அபத்த காட்சி என்பதையும் மறக்க முடியாது. இப்படி உண்மை இல்லாத சினிமா படக் காட்சிகளை ஜெயமோஹனுக்காக உதாரணம் காட்டும் நிலை தான் உள்ளது.

      ஜெயமோகனின் விசிறிகள் இந்த கட்டுரையை ரசிக்கிறீர்களா? தாம் சொல்ல முடியாததை இக்கட்டுரை சொல்லியிருப்பதாக நினைத்து உள்ளுக்குள் குதூகலிக்கிறார்களா?

  5. சுரண்டலை ஒழிக்க எழுதுவோர் சிலர். தங்கள் அரிப்பை சொரிந்து கொள்ள எழுதுவோர் ஒரு சிலர். அரிப்பு சொரிய சொரிய சுகம் தரும் அதே வேளையில் அது மேலும் விகாரமடையும். இதைத்தான் இந்த கட்டுரை எனக்கு உணர்த்துகிறது.

  6. ஜெயமோகனது வாசகர் & காந்தி பக்தரான சுனில் கோட்டு சூட்டு போட்டு திருமணம் செய்ததை இந்தக்கட்டுரை எழுதியிருந்ததை குறிப்பிட்டு சுனிலை கண்டித்து கூகிள் பிளசில் அவரது நண்பரான போகன் என்பவர் எழுதியிருந்தார். இதற்கு அந்த காந்தி பக்தர் அளித்திருக்கும் பதில் கீழே
    ___________________________________________
    போகன்,
    ரெண்டு நாள் ஊர்ல இல்லை, திரும்பி வந்தா ஒரே அதகளம்:) நீங்கள் சொல்வது புரிகிறது. காந்தியை நான் நெருங்குவதற்கு இன்னும் பல காலம் ஆகும்.. இது மனைவி மற்றும் அவர்கள் வீட்டாரின் விருப்பத்தின் பெயரில் வாங்கியது. வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்திருக்கலாம் தான், அது ஒரு மாதிரி இருக்கும் மேலும் உள்ளுக்குள் எனக்கும் விருப்பம் இருந்தது என்பதே உண்மை. இது ஒருவிவாத புள்ளியாக மாறும் என நான் எதிர்பார்க்கவில்லை. என்னளவில் இப்போதும் இது ஒரு பெரும் தவறாக தெரியவில்லை. என்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏதுமில்லை. இன்னும் வயதிருக்கிறது காலப்போக்கில் மாற்றங்கள் வரலாம், முக்கியமாக இயல்பாக வரவேண்டும். அதுவரும்வரை காத்திருப்பதைத்தவிர வேறு வழியில்லை.
    _____________________________________________________

    ஏன் சார் நீங்களே காந்தியை நெருங்க நெடுங்காலம் ஆகும்ணு சொல்லிக்கிணு காந்தியை மத்த முட்டாளுங்க ஏத்துக்கணும்னு தளம் நடத்துரிங்களே? ஊருக்கு உபதேசம் உங்களுக்கு மட்டும் ஜல்சாவா, நல்லா இல்லை சார் உங்க ஞாயம்!

    • அவர் மிக்சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். காந்தியை நெருங்குவது அவ்வளவு சுலபமல்ல, இங்கே நெருங்குவது என்றால் காந்தியவாதியாக ஆவது என்று அர்த்தம். காந்தியவாதியாக ஆகிறோமோ இல்லையோ ஆக முயற்சிப்பதற்கும் காந்தியத்தை புரிந்து கொள்வததற்கும்தான் அந்தத்தளம்.

  7. முதலாவதாக இந்த உலகமகா மொக்கைக்கு இவ்வளவு பெரிய கட்டுரை தேவையா என நினைத்தேன்.
    //பிளேடுகளை எதிர் கொள்வது ஒரு கலை. ஒரு எளிய கிண்டல் மூலமோ, திசைதிருப்பல் மூலமோ அவர்களை சீண்டிவிட்டு நிறுத்தலாம்./// அப்புறம் யோசிச்சா அறிவுச்’சீ’வியாக தன்னை மார்க்கெட்டிங் செய்து மக்களை பயமுறுத்தும் இந்த மொக்கைகளை அம்பலப்படுத்துவதே சரியென தோன்றியது

    ஆனாலும் இந்த மொக்கையை வினவு படிக்கும் முன்னரே மார்க்ஸிய அறிவு கொள்ளும் முன்னரே காமெடியாதான் பார்த்தோம்.சினிமா அது இதுன்னு போயிட்டு இருந்த எனக்கு ஒரு இயக்குனர் பரிந்துரைத்த எழுத்தாளர் இவர் அப்படி ஒருமுறை நாவல் பழம் சம்மந்தமான இவரின் அறிவைக்கண்டு விழுந்து விழுந்து சிரித்திரிக்கிறோம் நானும் என் நண்பர்களும்

    • ஃபெரோஸ் பாபண்ணே முதல்ல இந்த கட்டுரையில இருந்து நீங்க என்ன கத்துக்கிட்டீங்க ? பாருங்க, இந்த கட்டுரை தேவையான்னு நினைச்சுட்டு பின்னர் தேவைன்னு முடிவு பண்ணுனதுல உங்களட்ட என்ன தப்புன்னு சொல்லணும், இல்லேன்னா ஏதோ நீங்க மனமிறங்கி அருள்பாலிச்சீங்கன்னு வரும். முதல்லேயே நாவல் பழம் மேட்டர் தெரியும்கிறதெல்லாம் ஞானப்பால் ஞானசம்பந்தம் மேட்டரோடு ஒத்துப் போகும். திரும்பவும் கேக்குறேன், இந்தக் கட்டுரையில இருந்து நீங்கள் என்ன கத்துக்கீட்டீங்க?

      • அய்யா அதத்தான் தெளிவா சொல்லறேன் கேட்டுக்கோங்க கோவை நண்பர் ஒருவர் அதிதீவிர ஜெ.மோ வாசகர் வினவு,செங்கொடி போன்ற தளங்களை கொஞ்சம் காலமா படிச்சிட்டு வரார் ஆனாலும் ரொம்ப நாளா ஜெ.மோ ஆதரவில் இருந்து வினவையும்,செங்கொடியய்யும் விமர்சிப்பார் (தோழர்களை தேடிவந்து இப்படி விமர்சிப்பது முன்பு அவரின் பொழுது போக்கு)ஆனால் தொடர்வாசிப்பால் அவரிடம் மாற்றம் வந்துள்ளது எனவே சில விடயங்கள் பற்றி எழுதுவது தேவைதான் என கருதுகிறேன் நீங்கள் கேட்ட பதில் கிடைத்து விட்டதா? சொல்லுங்க ஏக்கே 47!!??அண்ணே

        • பெரோஸண்ணே தப்பா நினைச்சுக்காத, ஒங்க பிரண்டு ஜெமோ கிட்டேருந்து வினவ தேடி வந்த மேறி நீங்க இங்கருந்து ஜெமோகிட்ட போ மாட்டேங்கிறதுக்கு என்ன கியாரண்டி? மத்தவங்க மாறுனதெல்லாம் இருக்கட்டும், நீங்க முதல்ல இந்தக் கட்டுரை தேவையா, பிறகு தேவைன்னு பெரிய மனசு பண்ணி முடிவு எடுதத்துக்கு என்ன காரணம்? அத்த மொதல்ல சொல்லுங்கண்ணா! ஏன்னா இந்தக் கட்டுரைய நீங்க படிச்சீங்களான்னு எனக்கு டவுட்டா இருக்குது, சாரின்னா,

          • எது சரியா இருக்கோ கண்டிப்பா அதை நோக்கி நகரத்தான் செய்வேன் AK 47 (வெடிக்குமா இல்ல வெத்து 47ஆ?) ஆனால் கண்டிப்பா ஜெமோ கிட்ட போக மாட்டேன் சரியா? அப்புறம் இங்க வந்து அடிக்கடி மொன்னையா பதில் சொல்ல வேண்டியே இங்கே ஒவ்வொரு முறையும் வந்து பார்த்துட்டு இருக்க வேண்டி இருக்கு அதனால எதுனா கேட்க்கனும்னா என் மெயிலுக்கு அனுப்புங்க ஏக்கே 47 ferozdlegend@gmail.com படிச்சனா இல்லையா விளஙிகிட்டனா? இல்லையானு எல்லாம் பேசுவோம் ஒருவேளை உங்க அளவுக்கு விளங்காம இருந்தா விளக்குங்க (ஏன்னா அறிவு உங்க தனிச் சொத்துதானோ என்னவோ)

            • படிச்சன படிக்கலையா எனும் ஆய்வை நீங்களா செய்யும் முன் ஒரு செய்தி புரிஞ்சுக்கோங்க வினவை பொருத்தவரை அப்படியே மேஞ்சிட்டு போரதுன்னு இல்லாம ப்ரிண்ட் அவுட் எடுத்து கூட்டாக படிக்கும் வழக்கமே இங்கே உள்ளது அதுவும் விமர்சனப் பார்வையோடுதான் ஆமாம் சாமி போடுவது போலல்ல 2.///அப்புறம் இங்க வந்து அடிக்கடி மொன்னையா பதில் சொல்ல வேண்டியே இங்கே ஒவ்வொரு முறையும் வந்து பார்த்துட்டு இருக்க வேண்டி இருக்கு /// இங்கே வந்து பார்ப்பது என்பது வினவை குறித்து அல்ல என்ன கேட்க்கிரீர்கள் என்பதே விளங்காமல் கேட்க்கும் உஙகள் கேள்விகளை தேடி வருவதைத்தான் சொன்னேன்

            • அண்ணே இன்டர்நெட்டுல வினவும் இருக்கு,மெயிலும் இருக்கு, அங்க வந்து பேசுறத விட இங்க பேசுறதுதான் எனக்கு புடிச்சிருக்கு. ஆனா நாங் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரல.
              முதல்ல இந்தக் கட்டுரையை தேவையான்னு நினைச்ச நீங்க பின்னாடி எப்புடி வேணும்ணு மாறினீங்க, அதுக்கு பதில் சொல்றதுல ஏன் இம்புட்டு தயக்கம்? எது சரியா இருக்கோ அங்க நகருவேன்னு சொல்றதுல எது சரின்னு எத வைச்சு முடிவு பண்ணுவீங்கன்னு தெரிஞ்சாத்தான் அந்த கேள்விக்கும் பதில் புரியும்.

              • என்னன்னே பண்றது உங்க அளவுக்கு நமக்கு உடம்பு பூரா அறிவு கிடையாது அண்ணே..
                மிடில அப்புறம் எது சரியோ அதை நோக்கி நகருவேன் என சொன்னது புரியலைனு சொன்னீங இல்ல இனி எது சரி என படுதோ அத உங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிறேன் சரியா ஆனா உங்க பேரு பயங்கர டெரரா இருக்குன்னா சரி வரட்டா இனியும் இங்கே உங்களூக்கு பதில் தர எனக்கு மூளை இல்லைனா சோ மரக்கடை இரவுக்கடையில் இன்று இரவு முதல் ஒரு
                ப்ளேட் வாங்கி சாப்பிட்டு அப்புறமா வரேன் பை

                • ப்ரோஸ் அவர்களுக்கு வணக்கம்.

                  உங்களுடைய முதல் பின்னூட்டத்தில், முதலில் இந்த கட்டுரை வேண்டாம் என்று தோன்றியது பிறகு வேண்டும் என்று தோன்றியது என்று கூறியுள்ளீர்கள். முதலில் ஏன் வேண்டாம் என்று தோன்றியது,பிறகு ஏன் வேண்டும் என்று தோன்றியது என்று மேலே நண்பர் ஏ.கே 47 உங்களிடம் கேட்டுள்ளார். இதர்கு பதிலளிப்பதில் என்ன பிரச்சினை.

                  • நல்லது நீங்கள் இப்படி நக்கல் இல்லாமல் கேட்க்கும் போதுதான் ஒரு விஷயம் புரிகிறது நான் என்ன நினைத்து எழுதினேன் எனும் என் மனநிலை இங்கே வெளியே இருந்து பார்த்தா புரியவில்லை என்பதாக
                    நான் முதலில் இதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய கட்டுரை என வழக்கமாக வாசிக்க ப்ரிண்ட் போட்டு வரும் நண்பரிடம் கேட்டேன் அவரிடம் நான் (கட்டுரை நாங்கள் படிக்கும் முன்) “அதான் இலக்கிய மொக்கைகள் எனும் புத்தகத்திலேயே இவனுக எல்லாம் அம்பலப்பட்டு போயாச்சே இன்னும் எதர்க்கு நாம இதபத்தி எழுதனும் படிக்கனும்னு (நினைத்ததால் கேட்டேன்) கேட்டேன். அதென் பிறகு படித்து நாங்கள் பேசிக்கொண்ட பொழுது தேவைதான் என தோன்றியது அதை ரெண்டு வரில எழுதும் போது அப்படி மற்றவர்களுக்கு புரியாம போய்டுது போல என்ன

  8. Jeyamohan is plagued by a feeling of inadequacy, hence this tirade against perceived anti-intellectualism and a resultant lack of respect for writers in TN.

    It’s not easy to win the hearts and minds of Tamils and there’s no point being sore about it if they reject you. This ‘sour grapes’ attitude is also manifested in the disdain that so-called writers and intellectuals and classical musicians have for cinema and film stars. They have contempt for those appearing on screen and despise the Tamil people for choosing movie stars over matters of the mind.

  9. Singapooran,

    He is not even that bothered and yeah it is so difficult to win the hearts of tamils,thats how Khushboo becomes a power centre in DMK.

    hahaha,nice comedy.

    • Hari,

      Clearly he is very much bothered about winning adulation in his homeland. Why else would he go on such a rampage, trashing everyone? Jeyamohan thinks a great deal of himself and is pissed off that the rest of TN doesn’t.

      “yeah it is so difficult to win the hearts of tamils,thats how Khushboo becomes a power centre in DMK.

      hahaha,nice comedy.”

      I don’t know what’s so funny. Yes, Khush has won the hearts of Tamils, can you deny it? And yes, she’s a greater crowd puller than Jeyamohan will ever be. That’s exactly what I meant. Many Tamil writers crave popular adulation, but in TN cinema holds sway (for better or for worse). No wonder they are pissed off at movie stars (and some try to get into movies). Why, ever many Carnatic stars are dying to sing playback because that ensures instant popularity and greater reach.

      • well,if they get jealous of such film stars,they are just desperate.

        I feel he gets enough adulation here,his original works if not his screenplays are highly loved and reviewed by people.

        I dont agree with you on this,may be dravidian parties encourage such behaviour,even theepori aarumugam/vetrkondan get recognition and applause but i dont want to compete against them.

        And khushboo has won the hearts,she has won something else of the tamils.

        Simran/tamanna also have done so,but i dont see why genuinely talented people should feel jealous.

  10. படம். கட்டுரையின் சாரம் எல்லாம் அருமை.

    என்ன ஒரே ஒரு வருத்தம். ஜெயமோகனைப் பத்தி எழுதுவதற்கு காளமேகம் அண்ணாச்சி வந்தால் தான் களைகட்டும். அவர் என்ன கோடை விடுமுறையில் இருக்கிறாரா? 🙂

    அண்ணன் காளமேகம் அண்ணாச்சி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!

  11. அந்த பெரியவரிடம் ஏதாவது ‘கோளாறாக’ இருப்பின் அது அவரது முதுமையாக மட்டுமே இருக்கும். இன்று பணக்கொழுப்பில் அந்த பெரியவரை இழிவுபடுத்திய ஜெயமோகன் தனக்கும் ஒரு நாள் முதுமை வரும் என்பதை மறந்து விடுகிறார், ஜெயகாந்தன் ஒருமுறை, ”என்னிடம் எல்லோரும் ஏன் எழுதவில்லை, என்று விசாரிக்கிறார்கள். எனக்கு நன்றாக தெரியும் எனக்கு இப்போது listeners இல்லை என்பது” என்றார். அந்த பெரியவர் நிலையும், ஜெயகாந்தன் நிலையும் வேறுவேறல்ல. இருவருக்கும் மறுக்கப்பட்டிருப்பது அவர்கள் சொல்ல விரும்பும் சேதிகளை கேட்க விரும்பும் அன்பான காதுகள்.

    இந்த பிரச்சினைகள் உள்ளவர்களை நாம் சமூகத்தில் நிறைய பார்க்க முடியும். நம்மிடம் ஏதாவது பேச்சு கொடுப்பார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இரண்டு வரிகள் நாம் பதில் இறுத்ததும், அது அவர்கள் மனதில் அவர்கள் முன்பு வாழ்ந்த காலத்து நினைவலைகளை கிளர்த்தும். பிறகு நம்மை பேச விடாது ஓயாது பேசிக்கொண்டே இருப்பார்கள். ஒருமுறை நானும் எனது தந்தையும் கருணாநிதியின் உரை ஒன்றை ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியில் பார்த்துக்கொடிருந்தோம். அது நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. கருணாநிதி பேச ஆரம்பித்த சில விநாடிகளிலே தந்தை வேறுவிதமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார். அவர் முன்பு கும்பகோணத்தில் பணிபுரிந்த நினைவலைகளை கடுமையாக மனதில் கிளப்பி விட்டுள்ளது. என்னென்னமோ பேச ஆரம்பித்தார். கருணாநிதியை போன்று தானும் முன்பு கோடு எடுத்து தலை சீவுவதாகவும், தான் கருணாநிதி போன்றே இருப்பதாக அவருடைய நண்பர்கள் சொன்னதாகவும் கூறினார். பின்பு ஓடி சென்றார். பழைய ட்ரங் பெட்டியை துழாவி ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தை காட்டி, தான் கோடு எடுத்து தலை சீவுவதை காண்பித்தார். அன்று வழக்கத்துக்கு மாறான தந்தையாக இருந்தார். நான் அவரிடமிருந்து கண்களை திருப்பிய போது அம்மாவை பார்த்து அரசியல் பேசியது கொஞ்சம் நடுக்கமுறச் செய்தது. ஆம்! இது முதுமையின் பிரச்சினை. பல விஷயங்கள் பொதுவானவை; நமக்கு முக்கியமற்றவையாகவே இருக்கும். ஆனால், நிச்சயமாக அவற்றில் ஒரு விஷயம் உபயோகமுள்ளதாக இருக்கும். அது ஒரு பழைய, அரிய தகவலாக இருக்கலாம். எனக்கும் எனது தந்தை கூறிய பழைய அரசியல் தகவல்கள் ஏராளம்.

    ஜெயமோகன் கொஞ்சம் நிதானித்து இருந்தால், அந்த பெரியவரை பலி வைத்து ஒரு சிறுகதையை எழுதியிருக்க முடியும். அப்படி செய்பவர் தான் அவர். ஆனால், அதனை செய்ய மறுத்ததில் ஒரு உள்நோக்கம் இருப்பதாக கருத முடிகிறது. அவர் திட்டமிட்ட ரீதியிலே அந்த பெரியவரிடம் உணர்ச்சிவச்ப்பட்டுள்ளார். வினவு சொல்லியிருப்பது போல அவரது ஆத்திரம் அந்த பெரியவராக இருக்க முடியாது. அவரை அம்போவென விட்டுவிட்டு முகநூலுக்கு ஓடிய ப்ளாக் வாசகர்களாக இருக்கலாம். அவர் வெளிப்படையாக சொல்ல முடியாத ஒன்றில் தான் அந்த பெரியவர் பலியிடப்பட்டுள்ளார்.

    எல்லா குற்றவாளியும், ஏதோ ஒரு தடயத்தை விட்டு செல்வதாக தாஸ்தோவ்ஸ்கி தனது Crime and Punishment என்ற புகழ்பெற்ற நாவலில் குறிப்பிட்டு இருப்பார். நமக்கும் அந்த பெரியவரின் ஊரை எல்லாம் தனது கட்டுரையின் நம்பகத்தன்மைக்காக சொல்லியிருக்கிறார், ஜெ மோ. நினைத்தால் அந்த பெரியவரை சந்தித்து நடந்தது என்ன என்று கேட்பது அவ்வளவு சிரமமா என்ன?

    • // ஜெயமோகன் கொஞ்சம் நிதானித்து இருந்தால், அந்த பெரியவரை பலி வைத்து ஒரு சிறுகதையை எழுதியிருக்க முடியும். அப்படி செய்பவர் தான் அவர். ஆனால், அதனை செய்ய மறுத்ததில் ஒரு உள்நோக்கம் இருப்பதாக கருத முடிகிறது. //

      கட்டுரையாசிரியர் சொல்வது போல இதை கையாண்டிருக்கலாம்.. :

      // பிளேடுகளை எதிர் கொள்வது ஒரு கலை. ஒரு எளிய கிண்டல் மூலமோ, திசைதிருப்பல் மூலமோ அவர்களை சீண்டிவிட்டு நிறுத்தலாம். இல்லையென்றால் எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று தப்பிக்கலாம். அதற்கெல்லாம் உலகோடு ஒட்ட ஒழுகும் யதார்த்தவாதியாக இருக்க வேண்டும். ஆனால் எப்போதும் டைட்டாகவே இருக்கும் ஜெயமோகன் இத்தகைய பிளேடுகளோடு உரசும்போது எளிதில் தீப்பற்றிக் கொள்கிறார். போகட்டும். //

      ஜெயமோகன் தனியாக மேற்படி பெரியவரிடம் மாட்டிக் கொண்டிருந்தால், ஒரு வேளை இந்தக் கூத்தை வைத்து ஒரு நகைச்சுவைக் கட்டுரையாக்கியிருப்பார் என்று தோன்றுகிறது.. ஆனால், ஜெமோ தான் மதிக்கும் நண்பர்களை, வழிகாட்டிகளை அவர்களது எழுத்துக்களை வாசிக்காத பிறர் அவமதிப்பதை சகிக்க முடியாமல் சீற்றங்கொள்கிறார்.. தமிழகத்தில் உலவும் கணிசமான மொக்கைகளின் பிரதிநிதியாக அப்பெரியவர் ஜெயமோகனுக்கு காட்சிகொடுக்க, அவரையும், தமிழகத்தின் பல மொக்கை அறிஞர்களையும், அவர்களை ஆதரிக்கும் தமிழக மக்களையும் சாடுவதற்கு ஒரு காரணமாக இந்த பாண்டிச்சேரி என்கவுண்ட்டர் காரணமாகிவிட்டது.. ஜெயமோகனை விமர்சிக்கக் காத்திருக்கும் வினவு அறிவாளிகள் முதல் தமிழகமெங்கும் கணிசமாக நிறைந்துள்ள போலி முற்போக்குவாதிகள் வரை பலதரப்பட்ட ’எதிரிகளின்’ விமர்சனங்களுக்கும் ஆளாக நேரிட்டாலும் இந்த மொக்கைகள் பிரச்சினை விரிவாக விவாதிக்கப்படவேண்டும் என இன்னுமோர் வாய்ப்பையளித்திருக்கிறார் என்று தோன்றுகிறது..

      • அம்பியண்ணா, நீங்களே ஒரு மொக்கைண்ணு எனக்கு ஃபீலாவுது, இத்த எப்படி ஃசால்வ் பண்றது? இந்தக் கட்டுரையில என்ன வேறுபாடுன்னு குறிப்பா எட்த்து அடிக்கமா விரிவா விவாதிக்கணும்னு சொல்றது மடை மாத்தி விடற மேறி இருக்கு. அத்தத்தான் எங்க மொக்க தமிழாளுங்க பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டப்பாக்குக்கு விலை சொல்றான்பாங்க! அதுனால வழியைச் சொல்லுங்க, விலை வேண்டாம்ணா!

        • // நீங்களே ஒரு மொக்கைண்ணு எனக்கு ஃபீலாவுது //

          உங்களது ஃபீலிங்கு இயல்பானது.. எனக்கும் அந்த ஃபீலிங்கு இருக்கு..

          // எங்க மொக்க தமிழாளுங்க //

          உலக மொக்கைகளிடமிருந்து உங்கள் தமிழக மொக்கைகளை வேறுபடுத்த தமிழக மொக்கைங்க என்ற பதம் பொருத்தமாக இருக்கும்.. மொக்க தமிழாளுங்க என்றால் மொத்த தமிழாளுங்களும் மொக்கைகள் என்று பொருள் தரும் மொக்கைச் சொல்லாகிவிடும்..

  12. கட்டுரையின் மையப் பொருளாக நான் பார்ப்பது அதன் முடிவில் உள்ள வாசகர் கடிதத்தையே. உண்மைதான். எனக்கு நாஞ்சில் நாடன் படைப்புகள் மிகவும் பிடிக்கும் என்றாலும் அவை பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. கம்பராமாயணத்தை படித்து பார்க்க வேண்டும் போன்ற சில எண்ணங்களை உண்டக்கியதுக்கு மேல் எதுவும் செய்யவில்லை. வினவு கட்டுரைகள் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டன என்ற கூற மாட்டேன். ஆனால் மாற வேண்டுமோ என்ற எண்ணத்தையும், எனது பல முன்முடிவு கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தி உள்ளன.

    இருப்பினும் நாஞ்சில் நாடனை என்னால் புறக்கணிக்க முடியாது. இளையராஜா பாடல்கள், வான்கா ஓவியங்கள், திருமங்கை ஆழ்வார் பாசுரங்கள், ராகுல் டிராவிட் பாட்டிங் போன்றவை மனதுக்கு எழுச்சி தராவிட்டாலும், இதம் தருபவை. வெளிச்சமற்ற வெட்ட வெளியில் மல்லாந்து படுத்துக் கொண்டு வானத்தை பார்க்கும் இனிமை போன்றவை. இந்த வரிசையில் நாஞ்சில் நாடன் படைப்புகளை நான் வைக்கிறேன். இவற்றை என்னால் புறந்தள்ள முடியாது. இவையும் தேவையே என்பது என் எண்ணம்.

    *****************************************************

    நாஞ்சில் நாடனின் “596/600” பேச்சை ஒரு தந்தையின் ஆதங்கமாகவே நான் பார்க்கிறேன். இட ஒதுக்கீட்டுக்கு ஆயிரம் நியாங்கள் இருந்தாலும் collateral damage என்ற வகையில் தனி மனிதர்கள் பாத்திக்கப் படத்தான் செய்கிறார்கள். அவர்கள் புலம்பவதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. சாலை போட அரசுக்கு நிலத்தை தாரை வார்த்த ஒருவன் வருத்த படத்தான் செய்வான். புத்தனைப் போல் புன்முறுவல் பூக்க முடியாது. ஆதங்கப் படவோ, அங்கலாய்கவோ கூட உரிமை கிடையாதா?

    இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக நாஞ்சில் நாடன் பல இடங்களில் எழுதி உள்ளார். தனிக் கட்டுரைகளும் உண்டு. அதே போல ஜாதி நிலைகளுக்கு எதிராக எழுதி வந்தாலும், அவரது மகளுக்கு தன் சாதியில் தான் மணம் செய்தார். தனக்கென வரும்போது சதை ஆடும் போலும்!

    ****************************************************
    சில துக்கடா கேள்விகள்.

    இந்த அப்துல் ரகுமான் மேட்டர் சந்தேகமா இருக்கு. CM கோட்டா கேள்விப்பட்டிருக்கேன். எழுத்தாளர் கோட்டா எல்லாம் உண்டா என்ன? அப்துல் ரகுமான் சொன்னா மெடிக்கல் சீட்டு அப்படின்றது நம்புறாப்புல இல்ல.

    நீர் என் ஒய் இந்த பொள்ளாச்சி மகாலிங்கத்தை அப்பப்போ குத்திக்கிட்டே இருக்கிறீர்? இந்த மணிமேகலை காப்பியம் மாதிரி இதுக்கு பின்னாடியும் ஏதாவது மேட்டர் இருக்கா?

  13. http://www.jeyamohan.in/?p=36719

    This is the real article,Basically Vinavu’s problem is Jeyamohan thinks very low of dravidian leaders and the kind of morons they inculcate in the society who think they are smart.

    I see nothing wrong in his reactions,but no need to get angry.He should have just ignored people like him,

    Naan annathurai pecha ellam kettavan,hahahaha,idhukku railway gateula MGRaaye paathi irukkalam.

    • ஜெயமோகன் கட்டுரையை கண்டுபிடிக்க இவ்வ்வளவு நாட்களா? முதலிலேயே கேட்டிருந்தால் இந்தக் கட்டுரையில் வரும் 6-ஆவது லிங்க் என்று உதவியிருப்போமே! இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படும் ஜெயமோகன் கட்டுரைகள் அனைத்திற்கும் லிங்க் – நீல நிறத்தில் – கொடுக்கப்பட்டிருக்கிறது.

    • ஹ ஹ ஹ. பெரிசா எதுவோ கண்டு பிடிச்சு லிங்க் கொடுத்திருக்காருன்னு நெனைச்சு தெறந்து பாத்தா, ஜெமோவின் எந்த கட்டுரைக்கு இது எதிர்வினையோ அதுக்கே லிங்க் கொடுத்திருக்காரு!

      அடுத்து என்ன? இராமாயண உபன்யாசம் நடுவுலே எழுந்து நின்னு “இதெல்லாம் எங்கேர்ந்து எடுத்தாரு தெரியுமா? வால்மீகி புக்குல இருந்து” அப்பிடின்னு சொல்வாரு போல 🙂

  14. \\பாண்டிச்சேரி மொண்ணையும் இணைய மொண்ணைகளும்//

    இப்பதிலில் ஜெமோ குறித்த விமர்சனங்கள்,பண்பாடு,சிறு பத்திரிக்கையாளர்கள்,மார்க்சியம்………….உள்ளிட்ட கட்டுரையின் சாரமான பல்வேறு விசயங்களுக்குப் பதில் இல்லை. ஜெமோ கூறுவதுபோல் இணைய குப்பைகளைப் படிக்க அவருக்கு நேரம் இல்லாமல் இருக்கலாம்!!!!!!!!!!!!!(இதையும் இணையம் மூலமே கூறுகிறார்!)
    ஆனால் விசயம் அதுவல்ல! ஒரு வருட காலம் எடுத்துக் கொண்டாலும் ஜெமோ-வின் அறிவாற்றலால் வினவு கட்டுரைக்குப் பதிலளிக்க முடியாது. ஒருவேளை அவ்வாறு முயற்சித்தாலும் அப்பதில் அவரை மேலும் அம்பலப்படுத்தும்.இதைத் தெரிந்துதான் எழுதுவதையே தொழிலாக வைத்திருப்பவர் பதில்
    எழுத மறுக்கிறார். வினவு கட்டுரையின் வலிமை அதன் அறிவின் தரத்தில் மட்டும் இருப்பதல்ல,மாறாக அதன் உண்மையில்,நேர்மையில் இருக்கிறது. எத்தனை பெரிய அறிவாற்றலும் உண்மையின் முன்பு மண்டியிட்டே ஆக வேண்டும்.வினவின் தோழர்கள் தான் என்பதை விட்டு நாம் என்றே சிந்திக்கிறார்கள்-தமது அறிவு ஓர் கூட்டுத்துவ அறிவு – ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள்,கம்யூனிஸ்டுகள்,முற்போக்காளர்கள்……உழைப்பில் உருவானது என்றே சிந்திக்கிறார்கள்.இதனால் அறிவு குறித்த அகந்தை அவர்களுக்கு இல்லை.சுய முரண்பாட்டில் மாட்டும் அவசியமும் இல்லை.மேலும் தங்கள் பெயரைக்கூட வெளியில் சொல்லாமல், அங்கீகாரம் கோராமல் சமூகத்திற்க்கு உழைப்பவர்கள்.தவறுகள் செய்தால் சுயவிமர்சனம் மூலம் மாற்றிக் கொள்ளத் தயங்காதவர்கள்.
    கம்யூனிசத்தை கொள்கையாக வரித்து-அமைப்பு ரீதியாக இயங்குபவர்களால் மட்டுமே இவ்வாறு செயல்பட முடியும். ஆனால் ஜெமோ போன்றவர்கள்…..வெளியிலே வேடமிட்டு, சுயமுரண்பாட்டில் வாழ்பவர்கள்.விளம்பரம்,அங்கீகாரம் இல்லாவிட்டால் பைத்தியமாக மாறிவிடுவார்கள்! ஆக
    ஜெமோ-தன்னை மாற்றிக் கொள்ளாதவரை வினவு கட்டுரைக்குப் பதிலளிக்க முடியாது.
    வேண்டுமென்றால்……..இன்னைக்கு வெள்ளிக் கிழமை நான் சண்டை போடுரது இல்ல!
    கேரளாவுக்கு வாங்க(என் ஏரியாவுக்கு) சண்டை போடலாம்!……..எனச் சொல்லிக் கொண்டே போகலாம்!……….பரிதாபமான நிலைதான்! என்ன செய்ய …..காரல் மார்க்சையா குற்றம் சொல்ல முடியும்!….இல்ல இணையத்தில் வினவுக்குத் தடை விதிக்க முடியுமா?

    • // வினவு கட்டுரையின் வலிமை அதன் அறிவின் தரத்தில் மட்டும் இருப்பதல்ல,மாறாக அதன் உண்மையில்,நேர்மையில் இருக்கிறது. எத்தனை பெரிய அறிவாற்றலும் உண்மையின் முன்பு மண்டியிட்டே ஆக வேண்டும். //

      உண்மைதான்.

      ஜெமோ சொன்னது:
      // சிறுமை கொண்டு கொதிக்கும் மனம் என்று எழுத்தாளனை விட்டுச் செல்கிறதோ

      காண்டிராக்டர் சொகுசு பங்களாவிலும், வெயிலில் காலில் ரப்பர் மாட்டிக்கொண்டு ரோடு போடும் தொழிலாளி தகர கொட்டகையிலும் தூங்குவதே எனக்கு இப்போதெல்லாம் மிகப் பெரும் சிறுமையாக தோன்றுகிறது. இது குறித்து ஜெமோ ஏதாவது பேசியிருக்கிறாரா?

  15. \\தமிழகத்தில் உலவும் கணிசமான மொக்கைகளின் பிரதிநிதியாக அப்பெரியவர் ஜெயமோகனுக்கு காட்சிகொடுக்க, அவரையும், தமிழகத்தின் பல மொக்கை அறிஞர்களையும், அவர்களை ஆதரிக்கும் தமிழக மக்களையும் சாடுவதற்கு ஒரு காரணமாக இந்த பாண்டிச்சேரி என்கவுண்ட்டர் காரணமாகிவிட்டது..//

    வினவில் யார் விமர்சிக்கப்பட்டாலும் அவர்கள் தரப்பு வழக்கறிஞராக தன்னை அமர்த்திக் கொள்கிறார், அம்பி. ஜெயமோகனுக்கே தோன்றாத அவரது நடவடிக்கையின் சிறப்பை அவருக்கு சாத்துகிறார். உண்மையிலே, அம்பி கருதுவது போல உயர்ந்த நோக்கத்துடன் தான் ஜெமோ செயல்பட்டிருப்பாரா?

    நமக்கு அன்னா ஹசாரே என்ற அரசியல் மொக்கையை தெரியும். கார்ப்பரேட் மீடியா கண்டெடுத்த அரசியல் கோமாளி என்று வினவில் கட்டுரை வந்துள்ளது. அன்னா ஹசாரேவின் உளறலுக்கு ஜெமோவின் சப்பைக் கட்டு இப்படி இருக்கிறது. ” அன்னா ஹசாரேவின் மொழி ஒரு ராஜதந்திரியின் மொழி அல்ல; அவர் மொழியின் மீது கட்டுப்பாடு கொண்டவர் அல்ல; அவர் காந்தியவாதியே தவிர காந்தி என்ற வழக்கறிஞர் அல்ல; அவரை அப்படி புரிந்து கொள்ளக் கூடாது; இப்படி புரிந்து கொள்ளக் கூடாது” என்று ஹசாரேவின் மொக்கைகளுக்கு ஒரு பெரிய கட்டுரையை தினமணியில் எழுதியிருக்கிறார். இது போக ஜெமோவின் வலைதளத்தை அன்னாவுக்கே அர்ப்பணித்து சிலகாலம் நடத்தினார். பல கட்டுரைகள் அன்னாவின் மொண்ணைத்தனத்தை வியந்து எழுதியுள்ளார். மொக்கைகளின் ஆயுட்காலம் கம்மி என்பதால் அவரால் தொடர்ந்து அந்த திக்கில் செயல்பட முடியவில்லை.

    பொதுவாக ஜெயமோகநிசத்தில் வழக்கறிஞருக்கு வேலையில்லை. ஒரு வேளை ஜெமொவிடம் தன்னை ‘வினவில் உங்களுக்காக வாதாடியவன்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டாலும் அம்பியை புறங்கையால் ”போ போ” என்று தான் சொல்வார். ஏனெனில் ஜெமோவை பொருத்தவரையில் வினவை பார்ப்பதே குற்றம்; இதில் வாதாடியவர் என்றால் அது டபுள் குற்றம். இப்படி சொல்வதற்கு ஏதாவது தருக்க அடிப்படை இருக்கிறதா? என்றால், ஆம், இருக்கிறது. லீனா மணிமேகலை பிரச்சினையில் ஜெமோ வழங்கிய தீர்ப்பு ‘லீனாவும் வினவும் வேறுவேறல்ல’ என்பதே.

    ஜெயமோகனிசத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால், மோடியையும், ஜெயலலிதாவையும், அவர்களின் விசேட குணங்களையும் நாம் ஓரளவாது அறிந்திருக்க வேண்டும். மோடியும், ஜெயாவும் பார்ப்பன பாசிஸ்ட்கள் தாம். ஆனால், ஆசிஷ் நந்தி எனும் சமூக உளவியலாளர் மோடியின் இந்துத்துவத்தை மோடித்வா என்றார். ஜெயலலிதா பற்றி ‘புதிய கலாச்சாரத்தில்’ முன்பு வந்த ‘ஜெயிலலிதேந்திர சரஸ்வதி’ கட்டுரை அவரின் சிறப்பியல்பு கொண்ட பார்ப்பனியத்தை அறிய தருகிறது. மோடியோ, ஜெயலலிதாவோ, ஜெயமோகனோ நிச்சயம் ஆர்.எஸ்.எஸ் தான்; ஆனால், ஆர்.எஸ்.எஸுக்கு கட்டுப்பட்டவர்கள் இல்லை இவர்கள். ஜெயமோகன் பலமுறை சத்தியம் செய்துள்ளார்– தான் ஆர்.எஸ்.எஸ் இல்லை என்று. சிபிஎம் மிற்கு தான் ஒட்டு போடுவேன் என்று ‘கணையாழியில்’ ஒரு முறை சத்தியம் செய்தார். ஆனால், அவரது ‘எனது இந்தியா’ கட்டுரையை படியுங்கள், அவர் யாரென அறிந்து கொள்ளலாம்.

    ஜெமோவே சொல்லிக் கொள்வது அவர் கொஞ்சம் சிக்கலான ஆளுமை தான். ஆனால், அந்த ஆளுமையையும் அறுதியிட முடியும் என்பதே வினவு கட்டுரையின் சிறப்பு. ஜெமொவோ தப்பித்துக் கொண்டு எர்ணா குளம் மெரைன் டிரைவ் –ல் இளைப்பாறுகிறார். அது தற்காலிக ஆசுவாசத்தை அவருக்கு அளிக்கட்டும். இங்கே, அம்பி போன்றவர்கள் வெறும் நகைச்சுவை மனிதர்கள் தான்.

  16. // வினவில் யார் விமர்சிக்கப்பட்டாலும் அவர்கள் தரப்பு வழக்கறிஞராக தன்னை அமர்த்திக் கொள்கிறார், அம்பி. //

    அப்படியா..?!!!

    // பொதுவாக ஜெயமோகநிசத்தில் வழக்கறிஞருக்கு வேலையில்லை. ஒரு வேளை ஜெமொவிடம் தன்னை ‘வினவில் உங்களுக்காக வாதாடியவன்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டாலும் அம்பியை புறங்கையால் ”போ போ” என்று தான் சொல்வார். //

    ஆத்தாடி..!!!

    // இங்கே, அம்பி போன்றவர்கள் வெறும் நகைச்சுவை மனிதர்கள் தான். //

    அய்யய்யோ..!!!

    சுகதேவ், உங்களுக்கு என் மேல் அப்படி என்ன கோவம்..?!!!

    • அம்பி,

      நான் முன்னமே சொன்னேனில்லையா, முற்போக்கு பிற்போக்கு ரெண்டுல எதையாவது ஒன்னத்தான் பேசனும். ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் மாதிரி போனா இப்படித்தான் அசிங்கப்படனும்.

      • என்னை முற்போக்கான பிற்போக்குவாதி என்கிறீர்களா அல்லது பிற்போக்கான முற்போக்குவாதி என்கிறீர்களா..?!!!

        // இப்படித்தான் அசிங்கப்படனும். //

        ஹிஹிஹி.. ரொம்பவே முற்போக்கான ஆசை அய்யா உமக்கு..

        • பிற்போக்கை ஆதரித்துக்கொண்டே சிலசமயங்களில் மட்டும் முற்போக்கைப் போல பேசும் பிற்போக்கு வேடதாரி.

  17. ///என்பதுதான். இதில் திசை திருப்ப என்ன இருக்கிறது? படிக்கவில்லை என்றல் படிக்கவில்லை என்று கூறலாமே?//
    அண்ணன் சிவா… உமது பின்னூட்டபெட்டியில் ரிப்ளை வேலை செய்யவில்லை.
    கேள்வி ஜெ மோ வை படித்திருக்கிறீர்களா
    பதில் படித்திருக்கிறேன்.. வி.பு, ரப்பர், பி. தொ.நி கு. மேலும் பல சிறுகதைகள் பல கட்டுரைகள்
    என்னளவில் விபு வைவிட பி.தொ.நி.கு வைவிட யானை டாக்டர் மிகச் சிறந்த நெடுங்கதை.
    உங்களைப் போல ரசிகர் மன்றத்தில் உறுப்பினர் இல்லை. அதே போல ஆகும் உத்தேசமும் ,
    இல்லை.. ஆனால் என்னை திஜாவை போல இவர் அதிகம் பாதிக்கவில்லை.
    அப்படியுள்ள சூழலில்தான் நான் என்னுடைய கருத்துக்களைச் சொன்னேன். இந்த விசயத்தில் வினவு சொல்வதில் பெருமளவு ஒத்துப் போகிறேன். அதே சமயம் வினவுடன் பல சமங்களில் பல கருத்துக்களை ஏற்றுக் கொண்டவன் இல்லை. கடுமையாக பின்னூட்டம் இட்டவன்.. ஆக வினவு சொன்னாலும் ஜெமொ சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்க மாட்டேன்.. இனி என் பின்னூட்டத்தை இந்தக் கோண்ம் கொண்டு படிக்கவும்

  18. //////////நாம் ஏதும் விமரிசித்தால் அந்த விமரிசனத்திற்கு பதில் தராமல் கேள்வி கேட்பவனது தரம் என்ன என்று கேட்கிறார்கள் இந்த அறிவாளிகள். ஒரு படைப்பு குறித்து வரும் விமர்சனங்களை பரிசீலிக்கும் ஜனநாயகம் இவர்களிடம் இல்லை. மாறாக, விமர்சனம் எழுதுபவனின் தரம் என்ன, அவனுக்கு என்ன உரிமை உள்ளது என்று மறுக்கும் பாசிசத்தையே முன் வைக்கிறார்கள். இதற்கு அந்த காலத்து பார்ப்பனீயம் முதல் இந்தக் காலத்து சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் வரை விதிவிலக்கல்ல.////////////100 % true………….

  19. This post touches upon the arrogance of Tamil creative writers, which is a common malaise in both India and Sri Lanka. Jeyamohan seems to think he is a great intellectual just because he is a writer. Is that generally true? Life and human knowledge are much more diverse than Jeyamohan imagines. There are many branches of knowledge, including medicine, law, engineering, computer science, socialogy, economics and so forth. While Jeyamohan may know something about socialogy and fine arts, what does he know about engineering, computer science and medicine? Moreover, while there are many engineers and doctors (for example: other professionals too) are good creative writers – may be not as good as Jeyamohan but decent – Jeyamohan himself would not know ABCD in these fields. Therefore Jeyamohan is a frog in the well if he thinks that he is ‘smart’ or intellectual in any way. He is just good at one field, thats all. That (and I am deliberately being confrontational here, to drive a point) is a traditionally ‘soft’ field which does not require high IQ. Jeyamohan cannot hold a handle to an Abdul Kalam, or a Prof. Sivanathan (recognized by white house) in IQ or intellectual ability. So he and his ilk can stop thinking that they are the ultimate intellectuals (‘Arivaalikal’) in Tamil world. Again, to be deliberately confrontational, you guys (i.e the ilk of Jemo) have a toilet paper arts degree (or often, not even that), stop thinking you are smart.

  20. if you are going to praise someone in an article, you can write it in a lengthy way. if you are going to put someone down, you should write it very shortly. if you are genuinely interested in literature, you would have not wasted this much time in writing this sarcastic piece of shit. ofcourse you have no taste in literature. spend time wisely ..do whatever you like. but don’t waste time putting someone down . it actually increases your blood pressure..writing and expressing this much shit.

Leave a Reply to AK 47 பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க