privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

தாலி பாக்யா

-

ந்து ஞானமரபு பல ஆயிரம் ஆண்டுகளாக பல சவால்களையும் சமாளித்து உயிர்ப்போடு இருப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தொழில் நுட்ப புரட்சியின் காலத்தில் கூட சனாதான தருமம் தனது வருண சாதிப் புனிதத்தை காப்பாற்றிக் கொள்ள என்னவெல்லாம் செய்கிறது என்று அறிய வேண்டுமா, கீழ்க்கண்ட செய்தியை படியுங்கள்.

தாலி தூண்டில்
தாலி தூண்டில் (படம் : நன்றி – தி ஹிந்து)

5 ஆண்டுகளாக பாரதீய ஜனதா ஆட்சி புரிந்து வந்த காலத்தில் பெண்களுக்கு இந்து தர்மப்படி சரியான சாதியில், சரியான வர்க்கத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக கர்நாடகாவில் “தாலி பாக்யா” என்ற திட்டத்தை உருவாக்கியிருக்கின்றனர் மேட்டுக்குடி இந்துக்கள். அரசு உயர் பதவிகளுக்கான தேர்வுகளில் முதல் கட்டத்தை தாண்டி விட்ட இளைஞர்களை மகளுக்கு மாப்பிள்ளையாக வளைத்துப் போட செல்வாக்கு மிகுந்த பணக்கார மாமனார்கள் உருவாக்கிய திட்டம்தான் இது.

மாநில தேர்வுத் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு நடக்கும், “தாலி பாக்யா” திட்டம் திருமணத்துக்கு தகுதி வாய்ந்த இளைஞர்களிடம் பணம் கறப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது என்கிறார் அஜய் எனும் பாதிக்கப்பட்ட நபர்.

இந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி நடந்த உயர் பதவிகளுக்கான கர்நாடகா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் கலந்து கொண்ட அஜய் 1,800-க்கு 1,040 மதிப்பெண்கள் பெற்று 34-வது இடத்தைப் பிடித்திருந்தார். 362 பதவிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வில் துணை காவல்துறை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பதவியின் விலை அதிகம். அஜய் குடும்பத்தை அணுகிய ஒரு கல்யாண தரகர், ‘ரூ 80 லட்சம் முதல் ரூ 90 லட்சம் வரை லஞ்சம் கொடுத்தால்தான் டிஎஸ்பி பதவி நியமனம் பெற முடியும்’ என்று சொல்லியிருக்கிறார்.

ஒரு மத்திய அரசு அதிகாரியின் ஒரே மகளுடன் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டால் லஞ்சத் தொகையில் 80 சதவீதம் வரை பெண்ணின் அப்பா கொடுத்து விடுவார் என்றும் நேர்முகத் தேர்வில் அஜய் தேர்வு பெறுவதையும் அவர் உறுதி செய்து விடுவார் என்றும் அந்த தரகர் சொல்லியிருக்கிறார். தேர்வு பெற்ற இளைஞர்களின் பட்டியலை அலசி தனது சாதியைச் சேர்ந்த அஜயை அடையாளம் கண்டிருக்கிறார் அந்த செல்வாக்கு படைத்த அதிகாரி. சாதி, செல்வாக்கு, பணம் எல்லாம் ஒத்து வந்தாலும் அஜயின் தந்தை கணேஷ் இந்த டீலிங்கை ஏற்றுக் கொள்ளவில்லை.

தரகருடனான உரையாடலை அஜய் பதிவு செய்திருக்கிறார்.

அஜய் ஏப்ரல் 1-ம் தேதி நடந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டிருக்கிறார்; மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் எவை, பெங்களூருக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு என்ன போன்ற பல கேள்விகளுக்கு டாண் டாண் என்று பதில் சொல்லியிருக்கிறார்; நேர்முகத் தேர்வு நடத்தியவர்கள் அவரை பாராட்டியிருக்கிறார்கள். ஆனால், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் அஜய் அதிர்ச்சியடைந்திருக்கிறார். தேர்வில் 200-க்கு 55 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. தர வரிசைப் பட்டியலில் அவரது இடம் 34-லிருந்து 157-க்கு வீழ்ச்சியடைந்தது. டிஎஸ்பி பதவிக்கு அவரை தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சாத்தியங்கள் திடீரென்று மறைந்து விட்டன.

“தாலி பாக்யா” திட்டம் ஆண்களுக்கு மட்டும்தான் செயல்படுகிறது” என்றும் “இது கடந்த 2 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது” என்றும் தெரிவிக்கிறார் டாக்டர் மைத்ரி என்பவர். வருவாய்த் துறை துணை ஆணையர் பதவி பெறுவதற்கு லஞ்சம் கேட்டு அவரை அணுகியிருக்கின்றனர் தரகர்கள்.

அஜய்க்கு தெரிந்த ஒருவர் சென்ற ஆண்டு இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டு அரசுப் பதவியும் பெற்று, திருமணமும் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறாராம்.

பாரதீய ஜனதா கட்சியை அழிவிலிருந்து காப்பாற்ற தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக நரேந்திர மோடி அவதாரம் எடுத்திருப்பது போல சாதி அழிந்து இனக் கலப்பு நிகழும் சூழல் ஏற்பட்டு, தர்மம் பலவீனமடையும் போதெல்லாம் “தாலி பாக்யா” போன்ற திட்டங்களின் மூலம் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அவதாரம் எடுக்கிறார்.

மேலும் படிக்க