privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்இளவரசன் உடலை உடன் புதைக்க சதி !

இளவரசன் உடலை உடன் புதைக்க சதி !

-

ன்றைய ஊடகங்களில் இளவரசன் மரணம் குறித்து இரண்டு செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஒன்று அவரது பிரேத பரிசோதனை அறிக்கை. அதன்படி இளவரசன் தலையில் அடிபட்டு இறந்தார், அப்படி தலையில் அடிபடுவதற்கு ரயிலில் மோதியதே என்பதாகவும், இரண்டாவதாக இதை வைத்து போலீசார் இந்த மரணத்தை தற்கொலை என வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. அரசு மற்றும் போலீசு தரப்பிலும் இப்படித்தான் முடிவெடுத்திருக்கிறார்கள் என்பதால் இவை வெறுமனே செய்தி மட்டுமல்ல.

ஆனால், நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு தாக்கல் செய்த வழக்கில் இடைக்காலமாக உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், இளவரசன் தரப்பினருக்கு பிரேதப் பரிசோதனை அறிக்கை தரப்படவேண்டும், அந்த அறிக்கை அவர்களுக்கு திருப்தியாக இல்லையெனும் பட்சத்தில் மீண்டும் பரிசோதனை நடத்துவதற்கு ஏதுவாக உடலை பாதுகாக்க வேண்டும், மேற்கொண்டு இந்த வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை நடக்குமெனவும் கூறியிருக்கிறார்கள்.

இதன்படி பிரேதப் பரிசோதனை அறிக்கை இளவரசன் தரப்பினருக்கு அளிக்கப்பட்டு அவர்கள் அதை ஏற்கவில்லை. மறு பரிசோதனை நடத்த வேண்டும், அந்த பரிசோதனையில் தங்களுக்கு தெரிந்த மருத்தவர்கள், தடவியல் நிபுணர்கள் பங்கேற்க வேண்டும் என்று இளவரசனது தந்தை உறுதியாக போராடி வருகிறார். அவருக்கு ஆதரவாக மக்களும், எமது தோழர்கள் மற்றும் வழக்கறிஞர்களும் போராடி வருகிறார்கள்.

ஆனால் அரசுத் தரப்பில் இதுதான் இறுதி அறிக்கை, இதை ஏற்றுக் கொண்டு உடன் உடலை புதைக்க வேண்டும், அதுவும் இன்றே முடித்துவிட வேண்டும் என்று சதி செய்து நிறைவேற்ற முயல்கிறார்கள். இதற்கு சில ‘அரசியல்’ கட்சிகளும் உதவியாகவும் உடந்தையாகவும் இருக்கிறார்கள். விரைவில் அவர்கள் யார் என்பதை மக்கள் முன் அம்பலப்படுத்துவோம்.

அடுத்து இளவரசனது தந்தை இளங்கோ அவர்கள் தனது மகன் மரணத்திற்கு (அது கொலை அல்லது தற்கொலையாகவே இருந்தாலும்) மூல காரணம் என்று பாமக ராமதாஸ் உட்பட பிற தலைவர்கள் மீது புகார் அளித்திருக்கிறார். அந்தக் ‘குற்றவாளிகளை’ கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் இந்த மறு பிரேத பரிசோதனை கோரிக்கையில் அடங்கியிருக்கிறது.

தற்போது இளவரசன் உடலை உடன் புதைத்து விட்டால் இதை வெறுமனே தற்கொலை, யாரும் காரணமில்லை என்று வழக்கை ஊற்றி மூடிவிடுவார்கள். இதுதான் போலீசு, அரசுத் தரப்பின் திட்டம். இதற்கு சில அரசியல் கட்சிகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் இளவரசனது பெற்றோரும், உறவினரும், மக்களும், தோழர்களும் இந்த சதிதிட்டத்தை எதிர்த்து இந்தக் கணம் வரை விடாது போராடி வருகிறார்கள்.

இந்த போராட்டம் குறித்த செய்தி ஊடகங்களில் வருவதற்கும், தமிழக மக்களிடையே பரப்ப செய்வதற்கும் நாம் துணை நிற்க வேண்டும்.

இளவரசனது மரணத்திற்கான நீதி கேட்கும் போராட்டத்திற்கு இறுதி வரை துணை நிற்போம். சதி திட்டங்களை முறியடிப்போம்.

__________________________________________________________