( இந்தக் கடிதம் பல்வேறு ஊடகங்களில் சுருக்கியும், சிலவற்றில் முழுமையாகவும் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இந்தகத் கடிதத்தின் கையெழுத்து இளவரசனுடையதுதானா என்று உறுதி செய்வதற்கு தடயவியில் துறைக்கு அனுப்பியிருப்பதாக காவல் துறை கூறியிருக்கிறது.  – வினவு )

ன் அன்பு காதலி திவ்யாவுக்கு, நீ என்னுடன் இருந்த நாட்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாது. ஆனால் நீ என்னை விட்டு பிரிந்த நாட்களில் இருந்து என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. காரணம் எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும். ஜூலை 1-ம் தேதி வரை நான் நீ வருவாய், என்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வாய் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

ஒருவேளை நீ அன்று என்னுடன் வரவில்லை என்றால் கண்டிப்பாக நான் இந்த உலகத்தில் இருக்க மாட்டேன். நீ ஏற்கனவே உன் அப்பா இறந்ததற்கு காரணம் நீதான் என்று நினைத்து கஷ்டப்படுகிறாய். நீ அடிக்கடி என்னிடம் சொல்வாய். என் அப்பா உண்மையிலேயே என் மேல் பாசம் வைத்தவராய் இருந்தால் என்மேல் கொலைப் பழியை போட்டு விட்டு என் வாழ்க்கையை இப்படி செய்திருக்க மாட்டார் என்று சொல்வாய்.

திவ்யா - இளவரசன்
திவ்யா – இளவரசன்

அதே போல நீ என்னிடம் கேட்பாய் என்று எனக்குத் தெரியும். ஆனால், உண்மையாகவே என்னால் உன்னை விட்டு வாழ முடியவில்லை. ஏனெனில் அந்த அளவுக்கு நம்ம இரண்டு பேரும் இருந்தோம். எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும். திவ்யா, எனக்கு உன்னன ரொம்ப புடிக்கும்.

நான் உனக்கு என்ன துரோகம் செஞ்சேன், ஏன் என் கூட வாழ வர மாட்டேங்கறனு கண்டிப்பா எனக்குத் தெரியல.

நம்ம இரண்டு பேரும் எவ்வளவு கஷ்டத்திற்கு மேல ஒன்னு சேர்ந்தோம்னு உனக்கு நல்லா தெரியும்.

எனக்கு ரொம்ப ஆசை திவ்யா நம்ம இரண்டு பேரும் நல்லா வாழனும், நம்மள கேவலமா பார்த்தவங்க முன்னாடி பொறாமைப் படும் அளவுக்கு உன்ன அழகா, கண் கலங்காம வெச்சுக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசை.

உனக்கு ஒன்னு தெரியுதா நீ என்னோட எல்லா விஷயத்திலும் சேர்ந்திருந்து ஆனா இப்போ எதிலும் நீ என்கூட இல்ல. ரொம்ப கஷ்டமா இருக்குடா.

Please திவ்யா என்ன வெறுக்காத, எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்.

தயவு செய்து என்னை மன்னித்து விடு. நீ என்னிடம் கேட்கலாம், உண்மையாகவே நீ என்மேல் பாசம் வைத்தவனாக இருந்தால் ஏன் என்ன விட்டு போகனும்னு.

கண்டிப்பா சொல்றேன், நான் உன்னை விட்டு போகனும்னு நினைக்கல. எனக்கு உன்னோட சேர்ந்து வாழணும்னு ரொம்ப ஆசை, ஆனால் என்னால உன்னை பிரிந்து வாழ முடியல திவ்யா என்னை மன்னிச்சுடு, நான் இந்த உலகத்த விட்டு போறேன்.

இன்னொரு ஜென்மம் இருந்தா நீயும், நானும் ஒரே சாதியில பொறந்து பெத்தவங்க சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு ஆசையா இருக்குடா திவ்யா.

I LOVE YOU SO MUCH BABY
I LOVE YOU SO MUCH

எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும் திவ்யா

__________________

ன் பாசத்திற்கு உரிய அப்பாவிற்கு,

என்னை மன்னிச்சிடுங்க. அப்பா அம்மாவையும், பாலாஜி, அக்கா எல்லோரையும் பார்த்துகோங்க. தயவு செஞ்சி அம்மாவ கஷ்டப்படுத்தாதிங்கபா.
__________________

ன் நேசமிகு அம்மாவிற்கு, அம்மா என்னை மன்னிச்சிடு. எனக்கு உன்னை நல்ல வெச்சி பாக்கனும்னு ஆசை.

நீயும் அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீங்க என்ன வளர்த்து, படிக்க வைக்க, ஆனால் என்னால உங்களுக்கு எதுவுமே செய்ய முடியல. என்ன மன்னிச்சிருங்க.

அடுத்து ஜென்மத்துல நீயும், அப்பாவும் எனக்கு குழந்தையா பிறக்கணும். இந்த ஜென்மத்துல பட்ட கடனை நான் உங்களுக்கு அடுத்த ஜென்மம் தீர்க்கணும்.
__________________
ன்னோட Best friend என் அண்ணன் பாலாஜிக்கு, என்னை மன்னிச்சிறு பாலா. நீ எனக்கு எப்பவோ சொன்ன தப்பான முடிவு எடுக்காதன்னு. ஆனா என்னால முடியல பாலா. I am really sorry Bala.
__________________
ன்னோட இறப்புக்கு யாரும் காரணமில்லை. இது என் சுயமான முடிவாகும்.

என்னுடைய கடைசி ஆசை, நான் இறந்த பின்பு என்னை பார்க்க திவ்யா வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி திவ்யா வந்தால் யாரும் அவளை திட்ட வேண்டாம். Please அவளை யாரும் கோவமாக பேச வேண்டாம். திவ்யா ரொம்ப நல்ல பொண்ணு, எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும். என்னால அவ கஷ்டப்படறது எனக்கு பிடிக்கல. அவளாவது வாழ்க்கையில் சந்தோஷமா இருக்கட்டும்.

I Love you so much da Baby Dhivya.
__________________

பின் குறிப்பு: இந்தக் கடிதம் ஒரு காதலனது ஏக்கத்திலிருந்து எழுதப்பட்டிருக்கிறது. எவ்வளவு கஷ்டத்திற்கு இடையில் நாம் ஒன்று சேர்ந்தோம் என்று இளவரசன் எழுதியிருப்பதன் பொருள் நாம் அறிந்ததே. பாமக சாதிவெறியர்கள் நத்தம் காலனியில் நடத்திய சூறையாடல் துவங்கி திவ்யாவின் தந்தை தற்கொலை வரை அதன் இழப்புகளும், துயரமும் அதிகம்.  அடுத்த ஜன்மத்தில் ஒரே சாதியில் பிறந்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்வோம் என்ற வரிகள் சாதிவெறியர்களின் முகத்தில் காறி உமிழ்கிறது. வேறு வேறு சாதியில் பிறந்தால் காதலிக்கவோ, திருமணம் செய்யவோ முடியாது என்பது சாதி வெறியர்களின் அட்டூழியத்திற்கு மக்கள் பயப்படுவதையே காட்டுகிறது. அதன் படி இந்த சம்பவத்திற்கு காரணமாக பாமக சாதிவெறியர்களை தண்டிப்பதன் மூலமே சாதிகளை மறுத்து வரும் காதல் திருமணங்கள் சாத்தியமாகும். ஆனால் அந்த சாதி வெறியர்கள் தண்டிக்கப்பட்டு தனது காதல் நிறைவேறாது என்று விரக்திக்கு ஆளானதாலேயே இளவரசன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இனி காதலிக்கும் இளவரசன்கள் தற்கொலை செய்யக்கூடாது என்றால் சாதிவெறியர்கள் இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இறுதியாக ஜீன்ஸ் பாண்ட், கூலிங்கிளாஸ், நாடகக் காதல், பணம் பறிப்பது என்று சாதித்திமிருடன் கொச்சைப்படுத்திய ராமதாஸின் அவதூறுகளுக்கு தனது உயிரை பதிலாய் தந்து விட்டு மரித்திருக்கிறார் இளவரசன். இது உண்மையான காதல் என்பதை இந்த காட்டுமிராண்டிகளுக்கு உணர்த்துவதற்கு அவர் தனது உயிரையே பறித்திருக்கிறார். மேலும் இத்தகைய சூழ்நிலையை உருவாக்கி திவ்யாவை பிரித்த பாமக சாதிவெறியர்களை கடிதத்தில் அவர் குறிப்பிடவில்லை.  ஒருவேளை அப்படி குறிப்பிட்டிருந்தால் திவ்யாவின் நிலை இன்னும் மோசமாகிவிடும் என்று கூட அவர் பயந்திருக்கலாம்.  அதனால்தான் தான் இறந்த பிறகு வரும் திவ்யாவை யாரும் திட்டதீர்கள் என்று வேண்டுகோள் வைக்கிறார். என்னால் அவள் கஷ்டப்பட்டது போதும் என்றும் இனிமேலாவது அவள் சந்தோஷமாக இருக்கட்டும் என்று கடிதத்தை முடித்துக் கொள்கிறார். நாம் பாமக சாதிவெறியர்களை தனிமைப்படுத்தி தண்டிப்பதற்கு தொடர்ந்து போராடுவோம்.

– வினவு
_____________________________

48 மறுமொழிகள்

  1. படிக்கும்பொழுதே கண்கலங்குகின்றது, சாதி வெறி பிடித்த மிருகங்கள் இதை பார்த்தாவது திருந்துங்கள்.

  2. நேற்றுவர பா ம க வன்னியர்கள் கொலை செய்தார்கள் என்று பல கட்டுரை இப்ப உருக்க காதல் கடிதம் அப்ப தற்கொலை செய்ததை இவளவு நாட்கள் பக்கம் பக்கமா கட்டுரை எழுதி என்னத்த சாதித்த , இந்த காதலை யாரும் நாடக் காதல் என்று சொல்லி பேசவில்லை பல காதல் பலரும் நாடக காதலால பாதிகபட்டர்கள் என்றுதான் பல சமுதாய மக்களும் சொல்லுகிறார்கள் , விடுதலை சிறுத்தைகள் பா ம க மேல் பழி போட்டு அரிசயல் பண்ணியதன் விளைவு ஒரு பையநினின் தற்கொலையில் முடிந்தது

    • அட கூறு கெட்ட குக்கரு…இளவரசன் செய்து கொண்டது வெறும் தற்கொலை அல்ல. தற்கொலைக்கு தள்ளிய ராமதாஸ் கும்பல் கொலைகார கும்பல் தான். அதை அம்பலப் படுத்தி போராடும் வினவு தோழர்களுக்கு நன்றிகள்…

      • எதையும் இதயம் வென்டும், இல்லதவருக்கு கதல் எதர்க்கு , அதுவும் வெட்ரு சாதியில்

  3. குடும்பம், ஆச்சாரம், கலாச்சாரம், அரசியல் என்று காதலைக் கொச்சைப்படுத்திய சாதித் திமிர் பிடித்த குண்டர்கள் மீது காரித் துப்புகிறது இந்தக் கடிதம்…

  4. //உனக்கு ஒன்னு தெரியுதா நீ என்னோட எல்லா விஷயத்திலும் சேர்ந்திருந்து ஆனா இப்போ எதிலும் நீ என்கூட இல்ல. //
    இப்படிக் கூறி, இறப்பதற்கு முன், திவ்யாவையும் தற்கொலைக்குத் தூண்டுகிறான்…!!

    –> கண்ணன்: நேற்றுவர பா ம க வன்னியர்கள் கொலை செய்தார்கள் என்று பல கட்டுரை இப்ப உருக்க காதல் கடிதம் அப்ப தற்கொலை செய்ததை இவளவு நாட்கள் பக்கம் பக்கமா கட்டுரை எழுதி என்னத்த சாதித்த?

    வினவு, கண்ணனின் கேள்விக்கு என்ன விடை?

    • திவ்யாவை தற்கொலைக்குத் தூண்டவில்லை.. அவர்களுக்குள் இருந்து பிரிவை, சுட்டிக்காட்டி இருக்கிறது..:(

      இது ஒரு உணர்வு பூர்வமான காதல் அல்ல…திவ்யா விலகிவிட்டாள் என்பதை மனதளவில் உணர்ந்துவிட்டதை இளவரசன் கடிதத்தில் ஒவ்வொரு வரியிலும் வெளிப்படுத்தி இருக்கிறார்…கடிதம் எழுதும்போதய நிலை கிட்டத்தட்ட ஒருதலைக்காதல் போலத்தான்….

      இதுக்கா இந்தப்பாடு?

    • // கொலையா? தற்கொலையா?
      எதற்கடா ஆராய்ச்சி!
      அவன் சாவுக்கு காரணம்
      வன்னிய சாதிவெறி கவுச்சி!//

      வினவில் வெளியிடப்பட்ட தோழர் துரை.சண்முகம் அவர்களின் கவிதை வரிகள்.

      • கவிதை உண்மைகலையும்,உனர்வுகலையும் ஏற்படுத்தியது ஆதலால் ஓட்டு போடாமல்!புரட்சி செய்வோம்

  5. இளவரசன் பணம் கேட்டான் என்று ஒரு பாமக தலை வாதாடியதாக படிச்ச நினைவிருக்கிறது.அது அப்பட்டமான பொய் என்பதை இந்த தற்கொலை நிரூபிக்கிறது.ஆனால் தற்கொலைதான் நிரூபிக்கணுமா…அதுதான் சோகமே…இளவரசனுக்கு சரியான வழிகாட்டுதல் வீட்டிலும் நண்பர்களிடத்தும் கிடைக்கவில்லை போல!

    காத்திருந்திருக்கலாமே…இது டீன் ஏஜில் வரும் அதீத உணர்ச்சி வசப்படலே…இந்த உணர்ச்சிவசப்படலைத்தான் தமிழ் சினிமா காசாக்குகிறது….இறந்தவனை குற்றம் சொல்ல மனம் குறுகுறுக்கிறது.ஆனாலும் உண்மை அதுதான்.

    ஒரே சாதியாக இருந்தாலும் இந்த வயதில் அவன் இப்படி படித்துக்கொண்டிருக்கையில் அரேன்ஜ்டு மேரேஜை அவர் அப்பா பண்ணிவைக்க முடியுமா என்ன…காத்திருக்கணும்.தகுதியை வளர்த்துக் கொள்ள நேரம் எடுக்கும்.

    அந்த பெண் சொன்னதும் சட்டென்று ஓடிப்போய் ஆந்திராவில் கல்யாணம் செய்த ‘மெச்சூரிட்டி’ இல்லாத் தன்மை தமிழ் சினிமாவின் ஒருகாட்சி மட்டும்தான்.(அந்த பொண்ணை தூக்கறோம்னு ஒரு வசனம் வருமே அது போல)

  6. இன்னொரு ஜென்மம் இருந்தா நீயும், நானும் ஒரே சாதியில பொறந்து பெத்தவங்க சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு ஆசையா இருக்குடா திவ்யா.

    ப்படியானால் இந்த பையனுக்கெ கலப்பு திருமனத்தில்நம்பிக்கையில்லை. ஒரே ஜாதியில் பிறக்க வேண்டும் எஙிறான்.
    இன்னொன்ரும் சொல்லியிருக்கலாம்.19 வயதெல்லாம் படிக்க வேண்டிய வயது. படித்து முடித்து ஒரு வேலையில் சேர்ந்து ஒரு பெண்ணை காப்பாற்றும் தகுதி வந்த பின் காதலிக்கலாம்.
    இப்படி எதிர்த்து போராட முடியாத கோழைக்கெல்லாம் காதல் ஒரு கேடு.

    • நீங்க ரொம்ப அறிவாளிங்க. ஒருவனை தற்கொலைக்கு தூண்டி விட்டு பழியையும் அவன் மேலே போடுகிறீர்கள். பா.ம.க சாதி வெறியர்கள் என்ன பாடு படுத்தியிருந்தால் அந்த இளைஞன் அப்படி ஒரு வார்த்தையை சொல்லி இருப்பான். அது புரியல உனக்கு. நீயெல்லாம் நிஜ மிருகமடா…

      • 1. He has so much “Courage” to commit suicide.
        2. With that courage, he could have faced the issue. All the problems in the world should have made him take a resolve that he will NEVER commit suicide, rather, fight till he gets what he wanted. He did have thousands of supporters (as per vinavu).
        3. Inspite of political support in the form of VC and various other organisations and lawyers and portals like vinavu, he committed suicide. This only means, even if he had not committed suicide now, it was only a matter of time that he resorted to suicide again. For ex: If for some reason, he had not got the Police job he wanted, he would have committed suicide again. He is not capable enough to face issues.
        4. People like Kadavul and others who glorify him after his suicide by saying “His love was true love and thats why he committed suicide”, are only encouraging others for suicide. We should strongly condemn this act.
        5. What a fool he has been by leaving behind his parents at such an old age. Divya is lucky that she has come out of this foolish guy.
        6. Society at large is lucky that such a dumb idiot did not become a police officer.

      • This is called “Mob mentality”. One person does or says something, others stop their thinking process and start “வழி மொழி”-ing…

    • கயல் விழி…

      மொதலில் பொண்டாட்டி அம்மா வீட்டுக்கு போய்ட்ட.. அதனால் தற்கொலை.. கொஞ்சம் அபத்தமா இல்லை? இன்னம் விசாரிக்க வேண்டியது இருக்கு…

      ஒரு பேச்சுக்கு அப்படியே வச்சுகிட்டாலும்…
      காதலிச்சதால் தற்கொலை செஞ்சுக்கலை… படிக்க வேண்டிய வயதால் , வேலையால் எல்லாம் தற்கொலை செஞ்சுக்கலை… இருவரையும் பிரித்தேஆகணும்ன்னு தீயா வேலை செய்த குமாருகளை தெரியும் தானே…

      9 மாதம் கணவுனுடன் வாழ்ந்து, கரு சுமந்து கலைந்துன்னு பல பாதிப்புகளை சந்தித்தித பிறகும் அம்மாவுக்கு உடல் நலமில்லை பொய்சொல்லி கூப்பிட பிறகு தான் அம்மாவீட்டு போய் இருக்கா திவ்யா.. திரும்ப அனுப்பாமல் பிரித்தது திவ்யா அம்மாவும், அவரை தூண்டிய கும்பலும் தான்.

      நீதி மன்றத்தில் அம்மா விருப்படி தான் இளவரசனை விட்டு வந்தேன்னு சொன்னது புரிஞ்சதா…இது எல்லாம் திணீக்கப்பட்டமுடிவு.. இதன் பிறகுதான் தற்கொலை… பெண்டாடி கேட்டதை வாங்கி தரமுடியலை, பணப்பிரச்சனையால் தற்கொலைன்னு சொன்னாத்தான் ,உங்க எதிர்த்து போரடமுடியாத கோழை லாஜிக் பொருதும்..

      இங்கே சாதி சங்க தலைவர், வக்கீல்கள்னு … திவ்யாவிற்கு தனி வீடு கார் எல்லாம் கொத்திருந்தங்க்ன்ன பார்த்துகொண்க்க… அதாவது கிட்டத்தட்ட வீட்டு சிறையில் அடைத்திருந்தாங்க… எப்படி தீயா வேலை பார்த்திருக்காங்க?

      இந்த சூழ்நிலையை மனசில் வைத்து படியுங்க… அப்ப புரியும், இவர்கள் அனைவர் மேலும் தற்கொலைக்கு தூண்டிய வழக்கு போட்டு 7 வருசம் உள்ள வைக்கணும்…

      கலப்பு திருமணத்தில் நம்ப்பிக்கைஇல்லாம எப்படிங்க திருமணம் செஞ்சாங்க… பிரச்சனைக்கு அப்புரம் இப்படி யோசிச்சு இருந்த அது எப்படி தப்பாகும்?

    • நம்ப ஊர் போலீஸ் பத்தி உங்களுக்கு தெரியாதா?,23 வயசுல லவ் பன்னாலும் வேற சாதிய இருந்தா உயர் சாதிக்காரங்கிட்ட பணம் வாங்கிட்டு வீட்டுக்கு வந்து மீறட்டுவானுங்க. இத நான் நிராய நேர்லயே பாதிருக்கேன்.இதே தலித் இனத்து பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் உயர் சாதி ஆண்கள் மேல கம்ப்ளைண்ட் எடுக்க மாட்டாணுங்க.உங்க அட்வைஸ் இந்த கட்டபஞ்சாயத்து பண்ணும் காட்டுமிராண்டி போலீஸ் கிட்ட போயி பண்ணுங்க.

  7. இந்தக் கடிதம் இளவரசன் எழுதிய கடிதம் தான் என்று வினவு நம்புகிறதா?காவல் துறையே தடயவியல் துறைக்கு அனுப்ப முடிவுசெய்திருக்கும் வேளையில் காவல்துறையும் அப்படித்தான் உறுதியாக நம்பியிருக்கும் போல் தெரிகிறது.இது தற்கொலையானாலும் வன்னிய,ஆதிக்க சாதி வெறியர்கள் செய்த படுகொலையே.காரணமானவர்களுக்கு கொலைக் குற்றத்திற்கான தண்டனையே தரப்படவேண்டும்.

    • 1. First, police should thoroughly investigate if this was suicide. Post-mortem has only ocnfirmed death due to head injury. At the moment, everyone calls it suicide. But there are unanswered questions like: a) Did the train driver report any such incident to the station master? b) Does the kurla express contain any blood stains or dents? etc..

      2. Too early to blame PMK for this. Everyone should wait till investigation reports are out. If PMK is made to accept moral responsibility, then VC and Vinavu should also take moral responsibility for “Instigating” ilavarasan at every point.

      3. Protect Divya now. There can be retaliations from certain zealous Dalit groups who are being provoked by sites like Vinavu into believing that PMK is responsible for the suicide.

      4. If proved as Murder, strict actions should be taken against perpetrators of the crime so that it becomes a lesson for all those who want to get involved in such atrocities.

      • No,dont use your old stories and justify this coward’s motives.

        You think he is the only one with failed love/problems in life.

        If a paarpan boy tells me this,i ll smash his face,just for being stupid enough to contemplate suicide.

        You get so many things,reservations,oppurtunities and so on…. and u want to commit suicide for divya,kadhal kondane dhanush maadhiri.

    • அனைத்து சாதிவெறியர்களையும் அவர்களது சாதித்திமிர் எனும் ஆண்குறியையும் தமிழக மக்கள் நசுக்கி ஒழிக்கும் காலம் வராமல் போகாது…………………..

  8. இந்த வெகுளிப்பையன் காட்டுமிராண்டிகளின் அரசியலால் கொல்லப்பட்டதை நினைச்சு வேதனையா இருக்கு , இளவரசனையும் திவ்யாவையும் வைத்து அரசியல் செய்த ஒவ்வொருவரும் குற்றாவாளிகள் . இளவரசா அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்காதே . சாதியிலும் வர்க்கம் இருக்கு தம்பி .

  9. உங்கள் லிஸ்ட்-ல எப்போ மத்த ஜாதி கட்சிகள சேர்க்க போகிறீர்கள்….ஒரு கட்சியை மட்டும் சேர்ப்பதால் அந்த கட்சி உங்கள் ஓரவன்ஜனையை காரணம் சொல்லி மீண்டும் பல மடங்கு பலம் பெரும்…

    இந்த கடிதம் உன்மை என்ற பட்சத்தில் இளவரசனின் தற்கொலை உறுதி செய்ய படுகிறது…

    பொய் என்ற பட்சத்தில் கொலை என்று உறுதியாகிறது….

    ஒரு மிக துரதிஷ்டமான நிகழ்வை அதன் உன்மை நிலை முடிவுக்கு வரும் முன் உங்கள் தனிப்பட்ட ஊர்ஜித்தால் ஒரு குறிபிட்ட ஜாதி கட்சியை குறை கூறினால்….உன்மை வெளி வரும் போது , அந்த உன்மை உங்கள் ஊர்ஜிதத்திற்க்கு சிரிதளவு மாறாக இருப்பின்…அந்த குறிபிட்ட ஜாதி கட்சியின் பலம் பன்மடன்கு பெருகி அதன் நச்சு கிளை இன்னும் பல குடும்பத்தையும், காதலயும் நாசம் செய்யும்….

    நான் வன்னிய சாதியை சேர்ந்தவன்.. அதனால் எனக்கு பெருமையும் இல்லை,வெட்கமும் இல்லை…சாதி ஒழிய வேண்டும் என்பதாலேயே நான் பல எதிர்ப்புக்களை தாண்டி வேறு ஜாதி(செஙுகுந்தார் ஜாதி) பெண்ணை திருமணம் செய்து கொண்டேன்…இதில் வன்னிய ஜாதி கட்சிகள், செஙுகுந்தார் ஜாதி கட்சிகள் சம்பந்தமே இல்லாமல் ஆஜர் ஆகின… முதலில் செஙுகுந்தார் கட்சி என் வீடு படி ஏறியது…பிறகு என்னை காக்க (அவர்களாகவே சொல்லி கொன்டது)என் ஜாதி கட்சி என் வீடு படி ஏறியது….. இறுதியில் நாஙகள் இருவரும் வெளிநாடு (நாஙகள் இருவரும் மென்பொருள் பொறியாளர்கள்..) சென்று விடுவோம் என்று சொன்னதும் எஙகள் பெற்றோர்கள் கட்சிகளை வெளியேற்றினார்கள்..

    இந்த நிகழ்வை நான் கூற காரணம் … வெறும் பாமக-வை தனிமை படுத்துவதன் மூலம் ஜாதியை ஒழித்து விட முடியாது…..ஒவ்வொரு ஜாதி கட்சியும் ஒழிய வேண்டும்…அப்படி பட்ட பிரசாரமே ஜாதியை முழுமையாய் ஒழிக்கும்…

    இந்திராகாந்தி கொலைக்கு பின் நடந்த சீக்கிய படுகொலையால் மட்டுமே அகாலி தல் என்ற சீக்கிய கட்சி மிகப்பெரிய பலத்தை பெற்றது…தீவிரவாததத்தை தனிமை படுத்தாமல் ஒரு குறிபிட்ட ஜாதியையோ மதத்தயோ தனிமை படுத்தினால் அது ஒரு மிக வலிமையான அரண் சக்தியாக உருவெடுக்கும் என்பதிற்க்கு வரலாறு சாட்சியம் ஏராளம்..

    இந்திராகாந்தி-யை கொன்றது தீவிரவாதம்… சீக்கியம் அல்ல….

    இளவரசனை கொன்றது ஜாதி அரசியல்….வண்ணியன் அல்ல…

    இதை போன்ற ஒருதலை பட்சமான கட்டுரைகள் ஒட்டு மொத்த வண்ணிய சமூகத்தை தனிமை படுத்தும்…. அந்த தனிமையில் உன்மையில் ஜாதி ஒழிய வேண்டும் என்று சொல்லும் கூட்டமும் இருக்கும்…

    இந்த கட்டுரையால் ஊந்தபட்ட ஒரு பொது மனிதன் அப்படி தனிமை படுத்தபட்ட, ஜாதி ஒழிய வேண்டும் என்று நினைக்கும் ஒரு வன்னியனை உரசும் அந்த புள்ளியில் பாமக போன்ற கட்சிகள் மீண்டும் பீனீக்ஸ் பலம் பெரும்….!!!!

    ஆக உங்கள் லிஸ்டில் அனைத்து ஜாதியையும் சேர்க்கவும்…..

    அது மட்டுமே இளவரசனை ஜாதி சாவின் கடைசி அமரனாக காலத்தை பேச வைக்கும்…

    அது மட்டுமே விதையாய் வீழ்ந்த அவன் விருட்சமாய் வள்ர்ந்து வரும் தலைமுறையின் பேதமற்ற காதலின் நிழலாய் நிற்கும்…

  10. இந்த ”தற்கொலை கடிதம்” அப்பட்டமானதொரு நாடகம்.எப்படின்னு பாருங்க.

    அந்த கடிதம் இளவரசனின் உறவினர்களிடம் சுற்றுக்கு விடப்பட்டதாகவும் உளவுத்தகவல் அறிந்த புலனாய்வு புலிகள் பாய்ந்து சென்று அதை கைப்பற்றியதாகவும் சொல்லப்படுது.

    இளவரசன் அப்படி ஒரு கடிதம் எழுதியிருந்தால் அது உரியவர் கையில் கிடைக்கணும்னு தன சட்டை அல்லது பேண்ட் பாக்கெட்டுல வைத்து இருந்திருப்பார்.அல்லது சாவும்போது சேதமாயிடும்னு பேக்கில் வைத்து இருந்திருப்பார்.அப்படியானால் உடலையும் அதனுடன் இருந்த அவரது பொருட்களையும் கைப்பற்றிய காவல்துறையிடம் அந்த கடிதம் ஏன் சிக்கவில்லை.

    சரி ஒரு வாதத்துக்கு போலீஸ் வர்றதுக்கு முன்னாலேயே இளவரசன் சம்பந்தப்பட்டவர்கள் அதை எடுத்து மறைத்து வைத்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்.இளவரசனின் பேக்கிலிருந்து அவர் திவ்யாவுடன் பரிமாறிக் கொண்ட மூன்று கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.ஆக மொத்தம் நான்கு கடிதங்கள் போலிஸ் வாதப்படி அந்த இடத்தில் இருந்துள்ளன.ஒவ்வொரு கடிதமாக படித்து பாத்து தற்கொலை கடிதத்தை மட்டும் தனியே எடுத்து மறைப்பது கூட்டம் கூடி விட்ட அந்த சூழலில் சாத்தியமா.

    மேலும் இளவரசன் அப்பா தன்னை சந்தித்த தேசிய NCSC உறுப்பினரிடம் இப்படி புகார் சொல்றார்.

    E. Ilavarasan’s death was only a fall out of the conspiracy by leaders of caste-based political parties in the State, said T. Elango, father of the deceased, in a petition to M. Shivanna, Member, National Commission for Scheduled Castes here on Sunday.

    In his petition, Mr. Elango, a record room clerk at the Government Hospital, said there should be an unbiased, impartial and fair investigation to unearth the conspiracy and bring them to book.

    The circumstances leading to the death of his son should be investigated by either the Central Bureau of Investigation or a Special Investigation Team. Action should be taken against leaders of the Pattali Makkal Katchi

    அப்படி பா.ம.க மேல குற்றம் சாட்டுபவர் தனது மகன் தற்கொலை செய்து கொண்டான் என்று காட்டும் இந்த ஆதாரத்தை அழிக்காமல் ஏன் விட்டு வைக்க வேண்டும்.
    சரி இறுதி கடிதம் என்பதால் செண்டிமெண்டாக வைத்திருந்தார் என்றாலும் அதை எங்காவது தொலை தூரத்தில் பதுக்கி வைக்காமல் சுற்றுக்கு விடுவாரா.
    ரயில முன் விழுந்து இளவரசன் செத்திருந்தால் எஞ்சின் டிரைவர் அருகில் உள்ள ஸ்டேஷனில் தகவல் தெரிவிக்காதது ஏன்.இப்போது அவரை கூப்பிட்டு விசாரித்த போலிஸ் அவர் சொன்னதை ரகசியமாக வைத்திருப்பது ஏன்.ரயில் டிரைவரையும் ரயில்வே ரெக்கார்டுகளையும் சரிக்கட்டும் வரை ”ரகசியம்”பாதுகாக்கப்படலாம்.போஸ்ட் மார்ட்டம் அறிக்கை,காதல் கடிதம்,ATM ல் பணம் எடுத்தது தற்கொலை கடிதம் என அனைத்தையும் பகிரங்கப்படுத்திய போலிஸ் எஞ்சின் டிரைவர் சாட்சியத்தை மட்டும் ரகசியமா வைத்திருப்பது ஏன்.

    ஆகவே இந்த கடிதம் ஒரு செட்டப் என்பதில் சந்தேகமில்லை.

    மேலும் இளவரசன் ரயிலில் அடிபட்டு இறக்கவில்லை என தர்க்கபூர்வமாக விளக்கும் இந்த கட்டுரையையும் படியுங்கள்.
    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=24357:2013-07-06-01-54-17&catid=1:articles&Itemid=264

  11. இது நாள் வரை இல்லாத கடிதம் இப்போது எப்படி வந்தது . ………… காவல் துறை உணர்ச்சி பூர்வமாக காய் நகர்த்துகிறது …………. இதில் வினவும் ஏமாற்றப்பட்டுவிட்டது என்றே கருதவேண்டியுள்ளது.

  12. படிப்பு முடியதற்குள் திருமணம் செய்துகொண்டார்களாம், மெச்சுரிட்டி இல்லையாம்,
    அடேங்கப்பா! என்னமா பேசுராங்கே இந்த சாதிவெறிப்பிடித்த ஜந்துக்கள்!!

    இன்று 1000 காலியிடங்கள் உள்ள Group IV தேர்வுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் போட்டிப்போடுகின்றனர். அப்படினா, இவர்கள் எல்லாம் வேலையில்லாததால் திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது, அப்படித்தானே?

    ஆனால் இளவரசன் (காவல்) அரசுப்பணிக்கு தேர்வானவர். அதை இப்பொழுது தடுத்தவர்கள் யார்? பாமக சாதி வெறி மிருகங்கள்!

    முட்டாள் பயல்களா இன்றும் நிறைய இடத்தில் சிறுவர்களுக்கே திருமணம் செய்துவைக்கிறார்கள். எனது பக்கத்துவீட்டில் (கள்ளர் சாதியை சேர்ந்த) பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது பெண்ணுக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற போகிறது. இது என்ன உங்க சட்டத்திற்கு தெரியாமலா நடக்குது??

    இந்த சாதி வெறி மிருகங்களை நாடு கடத்த வேண்டும், அதுதான் சரியாக இருக்கும, இந்த நாய்கள் வெளிநாடுகளில் தங்கள் சாதியை வளர்த்துக்கொள்ளட்டும்!

    இல்லையேல் ஆளில்லா தீவுக்கு விரட்டிவிடலாம் அங்கேப்போய் சங்கம் வைத்துக்கொள்ளட்டும்!

    • அடப்பாவி!: No doubt, child marriages are happening even now. And, you are also right when you are fighting for the marriage rights of jobless and immature youth. They also have a right to get married. But the question is: Will you give your sister or daughter to someone who is jobless, immature and has not reached legal age?

      Many people break rules and do things that are not rational. Does that mean, they are right and others can follow them as role-models?

      • //But the question is: Will you give your sister or daughter to someone who is jobless, immature and has not reached legal age?//

        இந்த கேள்வி இரு குடும்பங்கள் சார்ந்தது. இதை திவ்யா இளவரசன் இருவருமே தங்களது பெற்றோர்களுடன் கூடி அமர்ந்து முடிவெக்க வேண்டியது. அதை விடுத்து நீ வேறு சாதி, பக்குவமில்லாதவன், வேலையில்லாதவன் அதனால் காதலிக்கக்கூடாது சேர்ந்து வாழக்கூடாது என்று சொல்வதற்கு உங்களுக்கும் எனக்கும் எந்த ஒரு சாதி வெறியர்களுக்கும் உரிமை இல்லை. அப்படி சாதியை காட்டி இந்த விசயத்தில் மற்றவர்கள் தலையிட்டதால் நடந்தது தான் தர்மபுரி கலவரமும் தம்பி இளவரசனின் மரணமும். அப்படி இருக்கும் போது அந்த கலவரத்துக்கும் இளவரசனின் இந்த சோகமான நிகழ்வுக்கும் காரணமான சாதி அரசியல் செய்பவர்களையும் சாதியை தூக்கிப்பிடிக்கும் சாதி வெறியர்களையும் கண்டித்தால் உங்களை போன்றோர் ஏன் கண்டிப்பவர்களை எதிர்க்கிறீர்கள்.

        உங்களுக்கு வினவின் மேல் கோபம் இருந்தால் அதை தனிப்பட்ட விடயமாக அவர்களிடம் காட்டுங்கள். ஆனால் இங்கு நடைபெறுவது சாதியை தூக்கிப்பிடிக்கும் சாதிவெறியர்களுக்கும் அதை எதிர்ப்பவர்களுக்குமான ஒரு போராட்டம். வினவு கூறுவது பா.மா.க வின் சாதிவெறியர்கள் என்று தானே. இது வன்னியர்களை மட்டும் குறை சொல்வது என்பதில்லை. பள்ளர் சாதியை சேர்ந்த ஒருவர் தனக்கு கீழ் இருக்கும் சாதியை ஒடிக்கினால் அவனும் சாதி வெறியன் தான். (மேல் சாதி கீழ் சாதி என்று நான் சொல்லவில்லை, இந்து மதத்தையும் சாதியையும் தூக்கிப்பிடிப்பவர்கள் தான் விடாம சொல்றாங்க.) ஆனால் நீங்கள் சாதிவெறியர்கள் என்று பொதுவாக சொன்னால் ஏன் எதிர்த்து வாதிடுகிறீர்கள். அப்படிஎன்றால் நீங்கள் சாதியை தூக்கிப்பிடிப்பவரா?

        சாதி கலப்பு திருமணம் செய்தவர்களை சாதி வெறியர்கள் விடாமல் துரத்துவார்களாம். ஆனால் உங்களை போன்றோர் துரத்தும் அந்த சாதி வெறியர்களை ஒன்றும் சொல்ல தைரியமில்லாமல் அவர்கள் அப்படித்தான் துரத்துவார்கள் நீங்கள் தான் அவர்களை எதிர்த்து போராடி வாழ வேண்டும் என்று இளவரசன் போன்றோருக்கு அறிவுரை சொல்கிறீர்கள். அப்படி துரத்துவதால் மனவுளைச்சலுக்கு ஆளாகி அந்த தம்பதியினர் உயிரிழந்தால் உடனே அவர்களைப் பார்த்து போராட துப்பில்லாமல் கோழைத்தனமாக முடிவெடுத்துட்டாங்கனு அவங்களையே கேவலமா பேசுறிங்க. இந்த மனநிலை மேலும் மேலும் சாதியை வளர்க்குமே தவிர அதை ஒழிக்காது.

        • Divya Appa Nagaraj police stationukku thaana ponaaru,vanniyar sangathukke illaye,anga vachi avurey kaatama pesa kandu thaana tharkolai senjaaru.

          advpcoate Rajnikanth/VCK/POlive ivungalukku ellam kootu illainnu solreengala,athanaala thana nagaraj tharkolai pannikittaru.

  13. முன்னுக்குப்பின் முரணான செய்திகள்.

    1.இளவரசனின் சட்டைப் பையிலிருந்து 2 கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். -தினகரன் (4-7-2013).

    2.மேலும், உடலின் அருகில் ஒரு பீர்பாட்டிலும், ஒரு வாழைப்பழமும் இருந்தன. அதன் அருகில் ஒரு மோட்டார் சைக்கிளும், கறுப்பு நிற பை ஒன்றும் கிடந்தது. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.- தினத்தந்தி (4-7-2013).

    3.காவல்துறையினர் இளவரசன் உடலை கைப்பற்றுவதற்கு முன்பாக, அவரது உறவினர்களே இளவரசன் பையிலிருந்த நான்கு பக்க கடிதத்தை எடுத்து மறைத்து வைத்திருந்ததாகவும் – அதனை காவல்துறையினர் உரிய புலனாய்வு விசாரணைகள் மூலம் கண்டறிந்து கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா (அருள் தளத்திலிருந்து)

    4.இதுதொடர்பாக தடங்கம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன், தர்மபுரி ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதில் ‘‘தடங்கம் அரசு கலைக்கல்லூரி பின்புறம் 20 வயது வாலிபர் ஒருவர் மூளை சிதறி இறந்து கிடந்ததாகவும், அவர் அருகில் மதுபாட்டில், ஒரு கறுப்பு நிற பை, அதற்குள் போட்டோக்கள், கடிதம் ஆகியவையும் இருந்தது. மேலும் கறுப்பு நிற மோட்டார் சைக்கிள் அருகில் இருந்ததாகவும், விசாரித்த போது இறந்தது வெள்ளாளப்பட்டியை சேர்ந்த இளங்கோ மகன் இளவரசன் என தெரிய வந்ததாக’’வும் கூறியிருந்தார். தினத்தந்தி (5-7-13)

    5.கோவை – மும்பை செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் பிற்பகல் தர்மபுரிக்கு வந்துள்ளது. அந்த நேரம் ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார். இதைக்கவனித்த ரெயில் என்ஜின் டிரைவர் ‘ஹாரன்’ அடித்துள்ளார். ஆனால் அந்த வாலிபர் எழுந்திருக்கவில்லை.
    இந்த நிலையில் ரெயில் அருகில் வந்ததும் அந்த வாலிபர் எழுந்துள்ளார். அதன்பிறகு என்ன நடந்தது என்று ரெயில் என்ஜின் டிரைவருக்கு தரியவில்லை. அதற்குள் அந்த இடத்தை ரெயில் கடந்து தர்மபுரி ரெயில் நிலையம் வந்து விட்டது. இதுபற்றி என்ஜின் டிரைவர் தர்மபுரி ரெயில் நிலையத்தில் உள்ள அதிகாரி ஒருவரிடம், ரெயில் தண்டவாளத்தில் ஒரு வாலிபர் இருந்ததாகவும், அவரது கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை என்றும் தெரிவித்து சம்பவ இடத்தை பார்வையிட கூறி உள்ளார். – தினத்தந்தி (5-7-13)

  14. இந்தியாவின் முதல் குடிமகன் பெயர் ப்ரனாப் ‘முக்கர்ஜி’.
    இதிலு முக்கர்ஜி என்பது மேற்குவங்கத்திலுள்ள ஒரு சாதியின் பெயர்.
    சாதி இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ளது.
    1000 ஆண்டுகளுக்கும் மேலாய் உள்ள சாதியை வெரும் 60 ஆண்டில் அழித்து விடமுடியாது. அழித்தே தீருவேன் என கலம் இரங்கினால் தமிழகத்தில் பல உயிரை கொடுக்க தயாராக வேண்டும். அது அந்த உயிர் எந்த சாதியாக வேண்டமானாலும் இருக்கலாம்.

  15. ஆகா… இது போதும்ல…

    பள்ளன் களுக்கு இம்மானுவேல் கெடச்ச மாதிரி இப்பொ பறையன் களுக்கு இளவரசர் கெடச்சுட்டாரு.

    கைப்புள்ள… இன்னும் ஏன்டா தூங்கிட்ருக்க..

    எடு செங்கல… கட்டு சமாதிய.

    வெளங்கிரும்.

  16. கொலையா, தற்கொலையா என்பது வெளிவருமுன் வினவு அதிக தூரத்திற்கு செல்லகிறது. அந்தக்கடித்ம் இளவரசன் எழுதியதா கொலையாளிகளால் பாக்கெட்டில் திண்க்கப்பட்டதா என்பது தெரியாமல் இந்த கட்டுரையும் பின்னோட்டங்களும் வீணாணது. வினவு அவசரப்படக் கூடாது

  17. கஷ்டப்பட்டு குடும்பத்தை காப்பாத்திட்டு இருக்குற ஒரு பையன் பொண்ணு தேடுனா, ஆயிரம் குறை சொல்லி பொண்ணு தரமாட்டாங்க. ஆனா பள்ளிக்கூடம் போகும்போதே குடிச்சுட்டு ஊதாரியா சுத்துற ஒருத்தன நம்பி இன்னொரு புத்திகெட்ட பொண்ணு ஓடுவா, அவங்க குடும்பம் அலையும். ஆனா அரிப்பெடுத்த ரெண்டும் தியாகி ஆகிடுதுங்க.

  18. first of all, let us ascertain whether he has committed suicide or its a murder.. there is no use in arguing without the proof.. for everybody, speaking is very easy but its difficult to follow practically.unless we face the similar situation we would be talking like this..

  19. இளவரசன் மரணத்திற்கு அவரது மனைவி திவ்யா ஓரளவு பங்கற்றியுள்ளதை மறுக்க முடியாது என்பது சில சம்பவங்களை பார்க்கும் போது தெரியவருகிறது. இதனை பலரும் பேசத் தயங்குகின்றனர். இளவரசனை போன்றே அவரையும் அனுதாபத்துடன் அணுகுகின்றனர். தீவிர விடுதலை சிறுத்தை ஆதரவாளர்கள் திவ்யாவை ஆபாசமாகத் திட்டுகின்றனர். அது தவறு.

    திவ்யாவிடம் காதலுக்கு எதிரான சிந்தனைகள் திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. தன் அம்மாவிடமிருந்து போன் வந்தால் அவர் மாடிக்குப் போய் மணிக்கணக்காகப் பேசுவாராம். தான் இதனை அச்சத்துடன் கவனித்து வந்துள்ளதை இளவரசனின் தந்தை பதிவு செய்துள்ளார். தன் தாயை அவர் சந்திக்க முடிவெடுத்தப் பின்னர் இளவரசனுக்கு திவ்யா அதனை ஒரு தகவலாக தெரிவித்துள்ளார். (அது அவர் உரிமை என்பதை மறுக்கவில்லை). ஒரு மணி நேரத்துக்குள்ளாக திவ்யாவை சந்திப்பதாகவும், அவசரப்பட வேண்டாம் என்றும் இளவரசன் தெரிவித்துள்ளார். திவ்யா அப்போது வீட்டை விட்டு கிளம்பி இருக்கிறார்.

    அவர் சென்ற பிறகு இளவரசனிடம் பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. மாறாக இளவரசன் தான் பலமுறை திவ்யாவுடன் பேச முயன்றுள்ளார். அப்போது அவர் தாய், சித்தி போன்றோர் மறுமுனையில் இருந்துள்ளனர். இதனை ‘தந்தி டி.வி’ ஒளிபரப்பிய இளவரசனின் பேட்டியில் குறிப்பிட்டார்.

    திவ்யா இளவரசனை விட்டு பிரிந்து தாய் வீடு வந்த பிறகு அவர்கள் காதலை இளவரசன் மட்டுமே சுமந்துள்ளார். பொதுவாக பெண்களிடம் இது போன்ற நிலையில் காணப்படும் வைராக்கியத்தை திவ்யா இழந்துள்ளார். இளவரசன் குடும்பத்தினரிடம் திவ்யாவை நன்றாக கவனிக்க வேண்டும் என்ற அதிகப்படியான பதற்ற உணர்வு இருந்துள்ளது. இதனை திவ்யா, இளவரசன் இறப்புக்கு முன்னர் வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.

    பலரும் திவ்யா சிறை பறவை போல இருப்பதாகவே பேசினர் அப்போது. வழக்கறிஞர் அருள்மொழி போன்றோரும் அவ்வாறே கருத்து தெரிவித்தனர். அவர் பேசிய கருத்துக்களின் தேர்வு வழக்கறிஞர் பாலுவினுடையதாக இருக்கலாம். ஆனால், திவ்யாவிடம் ஒரு தீர்மானகரம் இருந்தது. இளவரசனின் மரணம் தற்கொலையாக இருக்கும் பட்சத்தில் திவ்யாவின் வார்த்தைகளுக்குப் பின் இருந்த மனநிலையை இளவரசன் நன்கு உணர்ந்திருக்க வேண்டும்.

    பொதுவாக காதல் உணர்வு என்பது சமம் தானே. இளவரசனுக்கு இருந்தது போல திவ்யாவுக்கும் இருக்க வேண்டும் அல்லவா என்று வாதாடலாம். உண்மை தான். பொதுவாக இந்த வகை உறவில் சமூக ரீதியில் சற்று தாழ்ந்து இருப்பவர்கள் சற்று possessive ஆக இருப்பார்கள். சமூக ரீதியில் உயர்ந்து இருப்பவர்களிடம் ஒரு அலட்சியம் இருக்கும். நித்ய சிறீ என்ற பாடகியின் கணவன் இந்த வகை பிரச்சினையால் அவதிப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஒரு ப்ராய்டியன் உளவியல் கூறு இவ்வாறு சொல்கிறது. ”What was exciting before is no more exciting once you received it” — அதாவது ஓன்று கிடைப்பதற்கு முன் இருக்கும் வேகம் கிடைத்த பிறகு அது இருப்பதில்லை என்பது. திவ்யாவை கெட்ட விளக்கொளியில் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை சொல்லவில்லை. திவ்யாவின் இந்த மாறிய மனநிலையை சாதிவெறியர்கள் பயன்படுத்திக்கொண்டனர். திவ்யாவின் மாறிய மனநிலை என்பது அரசியல் செயல்பாட்டுக்கு பயன்படாமல் போகலாம். ஆனால், இதில் அரசியல் லாப–நட்ட கணக்கையும் மீறிய ஒரு உண்மை இருப்பதாகத் தோன்றுகிறது.

    • திரு சுக்தேவ்:
      உங்கள் உளவியல் பார்வை நன்று. ஆனால் இந்த விசயத்தில் பிரச்சினை அதுவல்ல.
      இன்னும் சிறிது நாளில் உண்மை வெளி வரும். அந்த பெண்ணே நீதி விசாரணையில்/போலீஸ் விசாரணையில் என்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போமே. ஏன் இப்போதே யூகம் செய்யவேண்டும்?
      போலீஸ் கூற்றுப்படி ஒரு cognizable offense நடந்துள்ளதாக தகவல். இதில் போலீஸ் துறையை சேர்ந்தவர்கள்,வருவாய் துறையை சேர்ந்தவர்கள்,சாதிக்கட்சிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற ரீதியில் விசாரணை செல்கிறது. பிரச்சினை அரசியல் ஆக்கப்பட்டு உள்ளதால் விசாரணை அரசால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆளும் கட்சிக்கு ஒரு தயக்கம் உள்ளது. நாளை நமதே நாற்பதும் நமதே என்ற கனவு முக்கியம். இந்த பிரச்சனையை கையாளும் போது கனவில் மண் விழாமல் பார்த்துக்கொள்ள அவர்கள் முயற்சிப்பார்கள். ஒன்று நிச்சயம்:-குற்றச்சாட்டுகள் அரசியல் முழக்கங்களாக வைத்து வோட்டு பொறுக்கப்படும். உண்மை உலோக முலாம் பூசப்பட்டு உலா வரும். யாருடைய முகத்திரை கிழியவேண்டும் என்பதை அரசியல் தீர்மானிக்கும்.
      நிற்க.
      வினவுக்கும் பஞ்சாங்ககுண்டய்யனுக்கும் என்ன வித்தியாசம் ஒற்றுமை என்பதை உளவியல் ரீதியாக கணித்து சொன்னால் வரவேற்போம்.
      நன்றி.

  20. நமக்காக எல்லைகளில் தன் உயிரை கொடுத்து இறக்கும் இராணுவ வீரன் உடல் வீட்டுக்கு வந்தால் எத்தனை பேர் கூடுகிறார்கள். எத்தனை ஊட்கங்கள் அதை குறித்து எழுதுகின்றன ?

    முதிர்ச்சியில்லாத ஒரு முட்டாள்தனமான காதலும், அதன் காரணமாக கலவரமும், பல சொத்துக்கள் சேதமும்,

    அந்த பெண் பார்க்க அசிங்கமாய் இருந்திருந்தால் முளைத்திருக்குமா இந்த புனித‌ காதல். காமத்துக்கு இப்படி ஒரு வார்த்தையை போட்டு அசிங்கப்படுத்துகிறார்கள். உண்மையாகவே அவர் காதலித்திருந்தால், அந்த பெண் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்திருப்பான். அவன் தந்தை இறக்கும் போது அந்த பெண்னை திருப்பி அனுப்பி, இப்படி ஒரு துயரம் உனக்கு வேண்டாம் என்று சொல்லியிருப்பான். நாம் தனித்தனியே இருந்தாலும் நம்மை யாரும் பிரிக்க முடியாது என்று இருவரும் இருந்திருப்பார்கள்.

    காமத்தில் வந்த காதல், பிரிவை தாங்காது. அது சுயநலம் சார்ந்தது. உண்மை பிரிவினாலும், அக்கறையாலும் வரும் காதல் தன் நிலையை மற்றும் பார்க்காமல், தன் காதலரை குறித்தே கவலைப்பட வைக்கும். சுயநலவாதிகளும், கோழைகளும்தான் தற்கொலை முடிவுக்கு வருவார்கள்.

    இதை வைத்து அரசியல் செய்யும் கேடுகெட்ட ஜாதி வெறி கூட்டங்கள் மட்டும் ஓயப் போவதில்லை

  21. இறந்த இளவரசனின் மரணத்திற்கு இரங்கல் ஏன்?
    நாட்டிற்காக போரிட்ட வீர மரணமா ?
    அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டு தானே இறந்தார் ? அது எப்படி வீர மரணம் ?அவரின் செயல் கோழைத்தனமானது. காதலித்த இருவரும் வாழும் தகுதி இல்லாமல் காதல் செய்தவர்கள் .

    அதே நேரத்தில் அன்று ஒரு தந்தை இறந்ததும் , சீராட்டி, பாராட்டி வளர்த்த பெண் , அவரின் வளர்ப்பையும் , தாயின் பாசத்தயும் , கூட பிறந்தவர்களை உதறி ஓடுகிறாளே என்ற இதே அவமானத்தால் தானே..

    அன்று அவரின் இறப்பை இதே ஜாதியின் பேரால் தானே தவிர்த்து பதுங்கியது இந்த சமுதாயம்?

    பல இன்னல்களை தாங்கி வளர்த்த பெண் பிரிவை தாங்காமல் இறந்தவர் ஜாதி வெறியர்
    பெண்ணை கூடி கொண்டு ஓடியவர் செய்து கொண்ட தற்கொலை வீர மரணம்

    என்ன கொடுமை சார் இது ….

    இன்றும் , நாளையும், என்றும் புனிதமான காதல் செய்யும் இளைய சமுதாயம் சார்பாகவும் ,
    ஒரு பெண்ணை பெற்ற தந்தைகள் சார்பாகவும் , அதே நேரத்தில் மகனை இழந்த தந்தை சார்பாகவும் கேட்கிறேன் அரசியல் வாதிகளே , நாடு நிலை என்று சொல்லிகொள்ளும் அதற்க்கு துளியும் ஒத்தே வராத நாடு நிலையளர்களே உங்கள் சித்து விளையாட்டு இவர்களுடன் முடியுமா ? அல்லது தொடருமா ?

    கோழையின் முடிவிற்கு ஜாதி என்ன செய்யும் ?

Leave a Reply to இளையோன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க