privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இளவரசன் வழக்கறிஞர்களை விடுவிக்க மறுப்பு !

இளவரசன் வழக்கறிஞர்களை விடுவிக்க மறுப்பு !

-

ருமபுரியில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நேற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சேலம் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்ட அந்த பிணை உத்தரவில் கிரைம் நம்பர் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அதனால் விடுவிக்க முடியாது என்றும் சேலம் சிறையின் கண்காணிப்பாளர் மறுத்திருக்கிறார். இது ஒரு எழுத்துப் பிழைதான் (clerical error) என்பதையும், அவரே உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெளிவு படுத்திக் கொள்ளலாம் என்பதையும் எவ்வளவோ எடுத்துக் கூறினோம். சிறைக் கண்காணிப்பாளர் ஏற்பதாக இல்லை. வழக்குரைஞர்களுக்கு பிணை கிடைத்து விட்டது என்ற செய்தி நாடு முழுவதும் உள்ள பத்திரிகைகளில் வெளிவந்து விட்டது. இது தெரியாத ரகசியம் அல்ல. இருந்த போதிலும் சிறைத்துறை இவ்வாறு நடந்து கொள்வதிலிருந்து இது ஒரு திட்டமிட்ட நாடகம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இளவரசனுக்காகவும், தலித் மக்களுக்காகவும் சமரசமின்றிப் போராடும் வழக்குரைஞர்கள், இளவரசனின் இறுதி ஊர்வல நிகழ்ச்சிக்கு வரவிடாமல் முடக்குவதற்கான திட்டமிட்ட சதியே இது என்று கருதுகிறோம். இதனை எதிர்த்து வழக்குரைஞர் ரஜனிகாந்த், செங்கொடி உள்ளிட்ட அனைவரும் சேலம் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.

ஊழல் பேர்வழிகள், கொலைக்குற்றம் சாட்டப்பட்ட சாமியார்கள் போன்றோருக்காக ஞாயிற்றுக் கிழமைகளில் கூட நீதி வழங்கும் சென்னை உயர்நீதிமன்றமும், அதன் பதிவாளர் அலுவலகமும் தான் செய்த தவறுக்கு பொறுப்பேற்று உடனே வழக்குரைஞர்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோருகிறோம். நீதியிலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கையுள்ள அனைத்து வழக்குரைஞர்களும் அப்பட்டமான இந்த சாதிவெறிச் சதிகளை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.

இவண்

இராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமைப்பாதுகாப்பு மையம்.