privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்வால்மார்ட்டிற்கு நாட்டை விற்கும் காங்கிரசு மாமா கும்பல் !

வால்மார்ட்டிற்கு நாட்டை விற்கும் காங்கிரசு மாமா கும்பல் !

-

“உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவித்து பொருளாதாரத்தை வளர்க்க வேண்டியதுதானே” என்று கேட்டால்,

  • அன்னிய முதலீடு மூலம்தான் வெளி நாடுகளில் பயன்படுத்தப்படும் புதிய தொழில் நுட்பங்கள் நம் நாட்டுக்கு வந்து சேரும்.
  • அன்னிய நிறுவனங்களின் புதுமையான வணிக முறைகளால் உள்ளூர் தொழில்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • போக்குவரத்து, பொருள் சேமிப்பு போன்ற நாட்டின் உள்கட்டமைப்புகள் மேம்படவும் அன்னிய முதலீடு தேவை.

என்று புதிய பொருளாதாரக் கொள்கைகளின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

வால்மார்ட்
சில்லறை வணிகத்தின் அமெரிக்க பெரு நிறுவனம் வால்மார்ட்.

‘இந்தியாவின் சில்லறை வணிகத் துறை மிகவும் பிற்போக்காக உள்ளது, காய்கறிகளையும், பழங்களையும் குளிர்பதனப்படுத்தி சேமிக்கவும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்லவும் தேவையான உள் கட்டமைப்புகள் இல்லாததால், பெருமளவிலான விவசாய விளைபொருட்கள் வீணாக்கப்படுகின்றன. எனவே இந்தத் துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும்’ என்று பன்னாட்டு நிறுவனங்களின் விசுவாச சேவகர்களான காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. தமது ஆட்சியின் போது சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கொள்கை வகுத்த பாஜகவோ இந்த முடிவுகளை எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமில்லாமல், அவற்றுக்கு மறைமுக ஆதரவையும் தெரிவித்தது.

சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள 4 கோடிக்கும் அதிகமான சிறு வணிகர்களும் அவர்களைச் சேர்ந்த 20 கோடி மக்களும் பாதிக்கப்படுவார்களே என்று கேட்டதற்கு,

  • 10 லட்சம் பேருக்கு அதிகமான பேர் வசிக்கும் நகரங்களில் மட்டுமே அன்னிய நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.
  • அன்னிய நிறுவனங்கள் தாம் விற்கும் பொருட்களில் 30% உள்நாட்டில் சிறு தொழில்களிடமிருந்து வாங்க வேண்டும்

என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. கூடவே மொத்த முதலீட்டில் 50%-ஐ கிராமங்களில் குளிர் பதன சேமிப்பு கிடங்குகளை உருவாக்குவது, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது போன்ற உள் கட்டமைப்பு வசதிகளில் அன்னிய நிறுவனம் முதலீடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டிருந்தது. இதன் மூலம் நாட்டின் சில்லறை வினியோக உள் கட்டமைப்பு மேம்படுவது உறுதி செய்யப்படும் என்று அரசு நியாயம் பேசியது.

அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் வால்மார்ட், பார்தி (ஏர்டெல்) குழுமத்துடன் சேர்ந்து கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த சில்லறை விற்பன பெரு நிறுவனம் டெஸ்கோ டாடா குழுமத்துடன் கை கோர்த்துள்ளது. பிரான்சைச் சேர்ந்த கேரஃபோர் இன்னமும் இந்திய தரகு முதலாளி கூட்டாளியை அடையாளம் காணவில்லை. இந்தியாவில் சில்லறை வணிகத்தில் முதலீடு செய்ய இப்படி எல்லாம் நிபந்தனை விதித்தால் நாங்கள் இந்தியாவில் கடை திறக்க மாட்டோம் என்று வால் மார்ட், கேரஃபோர், டெஸ்கோ போன்ற அன்னிய சில்லறை வணிக நிறுவனங்கள் சொல்லி விட்டிருக்கின்றன.

மத்திய அமைச்சரவை
மக்கள் முகத்தில் கரியைப் பூசிய மத்திய அமைச்சரவை (கோப்புப் படம்)

இந்நிலையில் மத்திய அமைச்சரவை சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கான நிபந்தனைகளை ரத்து செய்து மக்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது.

முதலாவதாக, 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை உடைய நகரங்களிலும் மாநில அரசுகள் அனுமதித்தால் அன்னிய நிறுவனங்கள் கடை திறக்கலாம்.

இரண்டாவதாக, 30% பொருட்கள் வாங்குவதற்கான நிபந்தனைக்காக, ரூ 12 கோடி வரை மூலதனம் உடைய நிறுவனங்களையும் சேர்த்துக் கொள்ள அனுமதித்துள்ளது அமைச்சரவை. இதற்கு முன்பு ரூ 6 கோடி வரை மூலதனம் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே சிறு நிறுவனங்களாக கருதப்பட்டன.

மேலும், அன்னிய நிறுவனம் வாங்க ஆரம்பிக்கும் போது மட்டும் மூலதன மதிப்பு ரூ 12 கோடிக்குள் இருந்தால் போதும் என்றும், பின்னர் அதன் கூடுதல் முதலீடு செய்யப்பட்டாலும் 30% நிபந்தனைக்கு அதே நிறுவனத்தை கணக்கு காட்டலாம் என்றும் சொல்லி இந்த நிபந்தனையை நடைமுறையில் ரத்து செய்து விட்டிருக்கிறது அமைச்சரவை

தினமணி 5-8-2013 தேதியிட்ட தனது தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பது போல, இதன் மூலம் அன்னிய நிறுவனங்கள் ரூ 12 கோடி முதலீட்டில் பினாமி நிறுவனங்களை ஆரம்பித்து நிபந்தனையை நிறைவேற்றுவதாக சொல்லி விட்டு அடுத்தடுத்து அவற்றில் மூலதனத்தை அதிகரிப்பது சாத்தியமாகிறது.

மூன்றாவதாக, மொத்த முதலீட்டில் 50%-ஐ உள்கட்டமைப்பில் செலவிட வேண்டும் என்ற நிபந்தனை, முதல் முறை கொண்டு வரும் $100 மில்லியன் (சுமார் ரூ 600 கோடி) முதலீட்டில் மட்டும் 50% செலவிட்டால் போதும் என்று மாற்றப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் ரூ 2,000 கோடி முதலீடு செய்ய வரும் நிறுவனம் முதல் தவணையில் ரூ 600 கோடி மட்டும் கொண்டு வந்து விட்டு அதில் ரூ 300 கோடியை மட்டும் உள்கட்டுமானத்தில் செலவிட்டதாக காண்பித்து விடும். அதன் பிறகு மீதித் தொகையை தன் விருப்பப்படி விளம்பரங்கள், கடைகள் உருவாக்குதல், விற்பனை சலுகைகள் என்று செலவழிக்க பயன்படுத்த முடியும்.

தரகு முதலாளிகள்
நாட்டை கொள்ளயடிக்கும் அன்னிய நிறுவனங்களும், தரகு முதலாளிகளும்.

ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் இன்னும் திருப்தியடையவில்லை என்று ஒரு அன்னிய சில்லறை விற்பனை நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்திருக்கிறார். இப்போது அனுமதிக்கப்படும் அன்னிய முதலீட்டு வரம்பு 49%-ஐ 74% உயர்த்துவதை அன்னிய நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. மாநில அரசுகள் கடைகள் திறப்பதை கட்டுப்படுத்தலாம் என்ற நிலைமையையும் அன்னிய நிறுவனங்கள் விரும்பவில்லை. குறைக்கப்பட்டு விட்டாலும் இன்னும் கணிசமான தொகையை உள் கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்வதையும் அவர்கள் எதிர்க்கின்றனர்.

இந்தப் பிரச்சினைகளையும் படிப்படியாக, தீர்த்து வைத்து அன்னிய முதலீட்டாளர்கள் அவர்களது விருப்பம் போல முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க மத்திய அமைச்சரவை வழி செய்து கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்திய அமைச்சரவை அன்னிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளான இந்திய தரகு முதலாளிகளின் உத்தரவுகளை சிரமேற் கொண்டு செயல்படுத்துகிறது என்பது தெளிவாகிறது. இவர்களுக்கு மாற்றாக வைக்கப்படும் நரேந்திர மோடியின் சாதனையாக, அன்னிய நிறுவனங்களை அனுமதிப்பதில் ஈட்டிய வெற்றிதான் வைக்கப்படுகிறது என்பதை வைத்துப் பார்க்கும் போது ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என்ற பாகுபாடின்றி இந்தியாவை மொத்தமாகவோ, சில்லறையாகவோ விற்பதற்கு இவர்கள் தயாராகியிருக்கிறார்கள் என்பது புரிகிறது.

மேலும் படிக்க

  1. நக்ஸல்பாரி இயக்கத்தை தோற்றிவித்த தோழர் சாருமஜூம்தார் குறிப்பிட்டதைப் போல “நாடாளமன்றத்தில் எதிர் கட்சிகளே இல்லை” என்பதுவே உண்மை.

  2. பன்னாட்டு நிறுவனங்களுக்கு, இந்திய பெரு நிறுவனங்களுக்கு இப்ப பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை. பல நேரங்களில் சிவம் சக்தியாவதை (அல்லது சக்தி சிவனாவதை போல !!) போல இரண்டுக்கும் வித்தியாசம் இல்லாமல் மாறுகின்றன. உதாரணமாக ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ் போன்றவை இந்தியாவை தலைமையாக கொண்டு இயங்கு பன்னாட்டு நிறுவனங்கள்.

    2005வாக்கில் இந்திய பெரு நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் நுழைய இந்திய அரசு அனுமதித்த போது, இதே போன்ற எதிர்ப்புகள், வாதங்கள் பெரிய அளவில் உருவாகின. ம.க.இ.கவினர் ரிலையன்ஸ் ஃப்ரெஸ்சை எதிர்த்து போராடி ரணகளமே நடந்தது. கல்வீச்சுகள், கைதுகள், தர்ணா, etc. ரிலையன்ஸ் ஃப்ரெஸ் வந்தால், கோயம்பேடு காய்கறி சந்தை மற்றும் சிறுவணிகர்கள் அழிந்து போவார்கள் என்றெல்லாம் பயம் காட்டப்பட்டது. இன்று 8 வருடம் பிறகு இவை எல்லாம் அர்த்தமில்லாமல் போய், வீண் பயம், வீண் போராட்டம் என்றாகிவிட்டது. சிறுவணிகர்களிடம் வாங்குபவர்கள் தொடர்ந்து அங்கே தான் வாங்கி வருகின்றனர்.

    இன்று பன்னாட்டு நிறுவனங்கள் சிறு வணிகத்தில் நுழைய அனுமதி. பல கட்டுபாடுகள் தளர்த்தபட்டுள்ளன. (இந்திய பெரு நிறுவனங்களுக்கு இத்தகைய கட்டுபாடுகள் இந்த அளவு இல்லை). தளர்த்தபட காரணம் கடந்த 8 மாதங்களில், ஒரு புதிய பன்னாட்டு நிறுவனம் கூட ஆர்வம் இந்தியாவில் சில்லரை வணிகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை என்பது தான்.

    சரி, இந்திய பெரு நிறுவனங்களால் அழிக்க முடியாத சிறுவணிகர்களை இந்த பன்னாட்டு நிறுவனங்கள் வந்து அழித்து விடும் என்பதும் வீண் பயம் தான். கட்டுபாடுகளே கூடாது என்பது தான் சரியான சந்தை பொருளாதார நிலைபாடு. என்னமோ செய்துவிட்டு போகிறார்கள். அதை கட்டுபடுத்தி இப்ப என்ன சாதிக்கபோகிறார்கள். 1991இல் அன்னிய நேரடி முதலீடுகளை உற்பத்தி துறையில் தாரளமாக அனுமதித்த போதும் இதே போல் பெரும் ரகளை. இன்று அந்த ‘எதிர்ப்பு’ மாயமாய் மறைந்து போய்விட்டது. யாரும் அதை நினைப்பதொ அல்லது அலட்டிக்கொள்வதோ கூட இல்லை. எனென்றால் உற்பத்தி துறையில் நேரடி அன்னிய முதலீடு பெரும் நன்மையையே உருவாக்கியது என்பதை ‘ஞானம்’ உடைய பெரும்பாலானவர்கள் உணர்ந்து கொண்டுவிட்டார்கள். அதே போல் தான் சில்லரை வணிகத்திலும் இன்னும் சில வருடங்களில் ‘மாயை’ தெளிந்து ‘மெய்ஞானம்’ உண்டாகும்.

  3. Mr Athiyaman himself told that there will be “Meignanam” shortly.True,all common people including SMES,Small Traders will be roaming in the streets with Thiruvodu chanting Adhiyaman brand “Meignanam”

    • காலம் பதில் சொல்லும் சூரியன். 2005,2006களில் இவர்கள் ரிலையஸ் ஃப்ரெஸ் நிறுவன கிளைகளை எதிர்த்து வணிகர் சங்கமும், ம.க.இ.கவினரும் பெரும் போராட்டம் நடத்தினர். ஆனால் இன்று அப்போராட்டம் நீர்த்து போய், அதை பத்தி பேசுவதே இல்லை. அன்று அவர்கள் இதே காரணிகளை தான் முன்வைத்தனர். 8 ஆண்டுகளில் அவை பொய்த்து போய்விட்டன. இதே போல் தான் இன்னும் சில ஆண்டுகளில் உங்க யூகங்களும், வீண் பயங்களும் பொய்த்து விடும்.

      1991இல் உற்பத்தி துறை (manufacturing sector)இல் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்ட போதும், இப்படி தான் பெரும் எதிர்ப்பு. சிறு தொழில் நிறுவனங்கள் முற்றாக அழிந்து, அன்னிய பெரு நிறுவனங்களின் மோனோபாலி உருவாகிவிடும் என்று பயம் காட்டினார்கள். இன்று அப்படி எதுவும் நடந்துவிடவில்லை. அன்று எதிர்தவர்கள் யாரும் இப்ப இதை பத்தி பேசுவதே இல்லை.

      எனவே தான் சொல்கிறேன்,இன்னும் சில ஆண்டுகளில் மாயை தெளிந்திவிடும். வால்மார்ட் பாட்டுக்கு, இன்று ரிலையஸ் ஃப்ரெஸ் செயல்படுவதை போல், இயல்பாக இயங்கும். சிறுவணிகர்களும் தொடர்ந்து இயங்குவார்கள்.

  4. அண்ணாச்சிகளை விட வால்மார்ட் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் தரும் என்றொரு வாதம் சொல்லப்படுகிறது. இது சரியா?

  5. இப்படி முன்னோர் சொத்தை விற்று குடும்பம் நடத்தும் மன்மோகனை பொருளாதார மேதை என்கிறார்கள் . விற்பதையோ ரீபார்ம் என்று கொண்டாடுகிறார்கள்

    • திராவிட முன்னேற்ற கழக சலவை நிறுவனம்
      (குறைந்த கட்டணத்தில் இத்தாலிய உள்ளாடைகளை

      உலர்த்தி கொடுக்கும் புகழ் வாய்ந்தநிறுவனம்)

  6. ரிலெயன்ஸ், ஸ்பென்சர் போன்ற கடைகள் திறக்கும் முன்னே இதே போலத்தான் எல்லோரும் கூப்பாடு போட்டனர் ஆனால் அதனால் ஒரு பாதிப்பும் யாருக்கும் எற்ப்படவில்லை….. கலப்படத்திலேயே ஊரிப்போன சில்லறை வியாபாரிகளுக்கு இப்போதுதான் அடி வயிரு எரியுது….

  7. அதியமான் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது!பன்னாட்டு நிறுவனங்கள் வருகை நமது நிர்வாக அமைப்பையும், ஊழியர்களின் கெளரவத்தையும் நிச்சயம் உயர்த்தும்! மற்றபடி அவர்கள் கொள்ளயடிப்பார்கள் என்பது மொக்கைவாதம் ! எந்த முதலாளிதான் கொள்ளையடிப்பதில்லை? சூழ்னிலைக்கேற்ப மக்களின் விழிப்புணர்வும், புதிய தொழிலாளர் அமைப்புகளும் தோன்றும்! அமைப்பு சாராத தொழிலாளர்கள், தொழிலாளர்நல சட்டங்களின் பயனை அடைவார்கள்!

  8. அய்யா அதியமான் அவர்களே கொள்ளை அடிப்பார்கள் என்பது மொக்கை வாதம் தான் .
    ஆனால் எதிர்பதற்கு வேறு பல காரணங்களும் இருக்கிறது,

    1. அமெரிக்கா சந்தை பொருளாதாரத்தை மட்டுமே நம்பி இருன்த நாடு , இன்று மிக பெரியவீழ்ச்சி யை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது .
    2. சீனா உற்பத்தி பொருளதரையே நம்பி இருக்கும் தேசம் , இன்று அமெரிக்காவையே
    மிரட்டும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறது .

    சுதந்திரத்தின் போது உலகின் மிக பெரிய விவசாய நாடாக இருந்து , இன்று 60 சதவிகித விவசாயத்தை இழந்து, இன்று அமெரிக்காவின் அடி வருடியாகவே மாறி விட்ட இந்தியாவின் எதிர்கால பொருளாதாரம்?

    உண்மையை ஒரு படிக்க தெரியாதவன் கூட சொல்லி விடுவான் , நாம் எந்த பொருளாதார மேதையும் தேடி செல்ல வேண்டாம் .

    அடுத்து கலப்டதிலேயே ஊறி போன சிலறை வியாபாரிகள் .- அதை விடுங்கள் இதனால்
    பாதிக்க படுவது இந்தியாவில் பிறந்த பாவ பட்ட ஜென்மங்களகிய நாம் தான் ,
    இங்கு புழங்கும் பணத்துக்க வாவது ஒழுங்காக கண்காணித்து வரி வசூலிக்கும் துப்பு
    இருகிறதா நமது வல்லரசு நாடாகிய இந்தியாவிற்கு ? (உடனே பன்னாட்டு நிறுவனங்கள்
    மிக நேர்மையாக நடந்து அரசாங்கத்திற்கு லாபம் சம்பாதித்து தருவார்கள் என்று பம்மாத்து
    காண்பிக்க வேண்டாம் )

    நம் வீட்டு குழந்தைகளுக்கு நம் பெயரை தான் இன்சியலாக போட வேண்டும் என்கின்றேன் நான் , இல்லை இல்லை நம்மை விட அந்தஸ்தில் உயர்ந்த பக்கத்துக்கு வீட்டு காரனின் பெயரை போட வேண்டும் என்கிறிர்கள் நீங்கள் வேறு என்ன சொல்ல ?

    (இதை மேலும் புரிந்து கொள்ள, சமிபத்தில் வெளியான ‘உருமி’ என்கிற திரை படத்தை பாருங்கள், இது வாஸ்கோடா காம வின் இந்திய விஜயத்தை பற்றிய கதை )

    • சீனாவும் இப்போது சந்தைப் பொருளாதாரத்தை நம்பித்தானே இருக்கிறது?

  9. //1. அமெரிக்கா சந்தை பொருளாதாரத்தை மட்டுமே நம்பி இருன்த நாடு , இன்று மிக பெரியவீழ்ச்சி யை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது .
    2. சீனா உற்பத்தி பொருளதரையே நம்பி இருக்கும் தேசம் , இன்று அமெரிக்காவையே
    மிரட்டும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறது //.

    சீனாவின் வளங்கள் அமெரிக்காவிற்கு இல்லை, மனித வளம் உட் பட! ஆனால், அதை ஈடுகட்ட உலக வளங்கள் அனைத்தையும் நிர்வகிக்கும் அதிகார மைய்யமாக திகழ்கிறது! உலகநாடுகளில் எந்தநாட்டில் யார் ஆள வேண்டுமென்பதை தீர்மானிக்கிறது! கடவுளால் வரமளிக்கப்பட்ட இஸ்ரேலுக்கு, பாலஸ்தீனத்தை பட்டா செய்து தருகிறது! ஆfகானிஸ்தானிலும், சிரியா , எகிப்துநாடுகளில் ஜன(?)நாயகத்துக்காக போராடுகிறது! அவ்வளவு ஏன், நமது மெத்த படித்த அறிவு ஜீவிகள்(என் வாரிசுகளும்), அமெரிக்க சொர்க்கத்தையே நாடிச்செல்கின்றனர்! ஆகவே சந்தை பொருளாதாரத்தை குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்!

    கடந்த கால சோவியத் யூனியன், இன்றைய சீனா இவர்களின் அனுபவங்களிருந்துநாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்! சந்தை பொருளாதாரம் மேல்னாட்டை காப்பியடித்து நாலுகால் பாய்ச்சலில் துள்ளியோடுகிறது! ஊற்பத்தி பொருளாதாரமும் அதற்கு இனையான வேகத்துடன் செல்ல ஊக்குவிக்கபபட வேண்டும்! எது என் மொழி, நாடு,கலாச்சாரமென்ற தெளிவில்லாமல், எல்லா ஒடுக்கப்படும் இனங்களும் சிறுபான்மையினராக, உண்மையான சிறுபான்மை மதம்,கல்வி,அரசு எந்திரம் இவற்றில் கோலோச்சுகிறது! அங்கஙகு எழும் புரட்சி வித்துக்கள், மத வாத, இன வாத, தேசியத்தின் பெயரால் ஒடுக்கப்படும்போது, உற்பத்தி துறை எவ்வாறு துள்ளியோடும்? கிராமப்புற விவசாயம் படுத்து, விலைவாசி ஏறுவது அதனால் தானே! அண்ணன்மார்கள் அயல்நாட்டு காரில் பவனி வர வேண்டுமென்றால், தம்பிமார்கள் கழனியில் களை வெட்ட வேண்டியது அவசியம் தானே? இதில் நிலவும் ஏற்றத்தாழ்வு மனநிலையே சாதீயத்திற்கான முத்ற்காரணம்! அது களையப்பட்டால் சமத்துவமும், சுகவாழ்வும் தானே வரும்! பிழைப்பிற்கு அயல்னாடு ஓடவேண்டியதில்லை!

Leave a Reply to K.R.Athiyaman பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க