privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாவில் வரதட்சணை கொலைகள் - புள்ளி விவரங்கள் !

இந்தியாவில் வரதட்சணை கொலைகள் – புள்ளி விவரங்கள் !

-

ரதட்சணை மற்றும் தொடர்புடைய குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இந்தியாவில் உள்ளன. வரதட்சணை என்ற சமூக நோய்க்கு எதிராக பலரும் பிரச்சார இயக்கங்கள் நடத்துகின்றனர். இருப்பினும் கடந்த 12 ஆண்டுகளில் இந்த கொடிய பழக்கம் தொடர்பான மரணங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வரதட்சணை கொடுமைஜனவரி 1, 2001 முதல் டிசம்பர் 31, 2012 வரையிலான 12 ஆண்டுகளில் இந்தியா முழுவதிலும் 91,202 வரதட்சணை தொடர்பான மரணங்கள் நடந்திருக்கின்றன. இவற்றில் 84,013 வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதி மன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டன. எஞ்சியவை விசாரணை கட்டத்திலோ அதற்கு முன்பாகவோ அரசால் கைவிடப்பட்டன. 5,801 வழக்குகள் விசாரணைக்குப் பிறகு பொய்யானவை என்று பதிவு செய்யப்பட்டன.

21-ம் நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில், உலகமயமாக்கல் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒவ்வொரு ஆண்டும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போயிருக்கின்றது. வரதட்சணை தொடர்பாக 2001-ம் ஆண்டில் 6,851 மரணங்களும், 2006-ல் 7,618 மரணங்களும், 2012-ல் 8,233 மரணங்களும் நடந்திருக்கின்றன. இது தொடர்பான போலீஸ் விசாரணைகளைத் தொடர்ந்து 2001-ல் 6,539 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 6,060 வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டன. 2012-ல் இந்த எண்ணிக்கைகள் முறையே 8,022 மற்றும் 7,537 ஆக உயர்ந்தன. 2001-ம் ஆண்டு துவக்கத்தில் நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருந்த வழக்குகளின் எண்ணிக்கை 21,922 ஆக இருந்தது. 2012-ம் ஆண்டு எண்ணிக்கை 29,669 ஆக உயர்ந்தது.

12 ஆண்டு கால கட்டத்தில் 1,389 வழக்குகள் பல்வேறு காரணங்களுக்காக திரும்பப் பெறப்பட்டன. இந்தக் கால கட்டத்தில் 44,668 வழக்குகளில் மட்டும் குற்றம் உறுதி செய்யப்பட்டது. அதாவது மொத்த வரதட்சணை தொடர்பான மரணங்களில் 48 சதவீதம் வழக்குகளில் மட்டுமே நீதிமன்ற தீர்ப்பு குற்றம் நடந்ததை உறுதி செய்திருக்கிறது. எஞ்சியவை போலிஸ் விசாரணையின் பலவீனம், அரசுத் தரப்பின் உறுதியின்மை இவற்றால் நீர்த்துப் போயிருக்கின்றன.

மாநில வாரியான புள்ளிவிபரங்களின் படி இந்தி பேசும் பகுதியில் உள்ள பின் தங்கிய மாநிலங்களில் நிலைமை மோசமாக உள்ளது. உத்தர பிரதேசத்தில் மிக அதிகமான வரதட்சணை இறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன (23,824 அவற்றில் 19,702 நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டன). அடுத்தபடியாக பீகார் மாநிலம் உள்ளது (13,548 வழக்குகளில் 9,984 நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டன). குற்றம் உறுதியாகும் வீதம் உத்தர பிரதேசத்தில் சுமார் 50 சதவீதமாகவும், பீகாரில் சுமார் 30 சதவீதமாகவும் உள்ளது. எல்லா மாநிலங்களிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவது, தண்டனை வழங்கப்படுவதை விட அதிகமாகவே இருந்தது. குறிப்பாக, பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்ததாக கருதப்படும் மகாராஷ்டிராவில் நீதிமன்ற குற்ற நிரூபண வீதம் மிகக் குறைவாக உள்ளது. நடத்தப்பட்ட 3,485 வழக்குகளில் 3,066-ல் (88 சதவீதம்) குற்றம் தள்ளுபடி செய்யப்பட்டன.

உத்தர பிரதேசத்தில் பெரும்பான்மை ஆண்டுகளில் இறப்பு எண்ணிக்கை 2,000-ஐ விட அதிகமாக இருந்தது. பீகாரில் 1,000-க்கும் அதிகமாக இருந்தது. மத்திய பிரதேசத்தில் இந்த எண்ணிக்கை ஆய்வுக் காலத்தின் ஆரம்பத்தில் சுமார் 600-க்கும் அருகில் இருந்தது பின்னர் உயர்ந்து சுமார் 800 ஐ கடந்தது.

பார்ப்பன இந்து மத திருமணங்கள்
பார்ப்பன இந்து மத திருமணங்கள் – மணம் செய்தவர்கள் பணம் கொடுக்க முடியாமல் கொலை செய்யப்படுகிறார்கள்..

நாட்டின் தலைநகரான டெல்லியில், அரசியல் தலைவர்களும், தொழில் துறை பெரிய மனிதர்களும் வசித்து வந்தாலும், 12 ஆண்டு காலத்தில் வரதட்சணை சாவுகளின் எண்ணிக்கை 1,582 ஆக இருந்திருக்கிறது. அனைத்து மாநிலங்களிலிலும் நாகாலாந்தும், யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவும் மட்டுமே ஒரு வரதட்சணை சாவு கூட பதிவாகாத பகுதிகள். மற்ற இந்திய பகுதிகள் அனைத்திலும் பிற்போக்கான கிரிமினல் கலாச்சாரம் இன்னும் தாக்கம் செலுத்துகிறது என்று தெரிகிறது.

பார்ப்பனிய இந்து மதத்தின் சட்ட திட்டங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் அனைத்தும் பெண்களை அடிமைப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. நவீன காலத்திலும் கூட அத்தகைய கொடிய பழக்கங்கள் குறைந்து விடவில்லை. பெண்களை மணம் செய்து கொடுக்கும் போது வரதட்சணை கொடுத்து செய்ய வேண்டும் என்பது இந்தியா முழுவதும் வழக்கத்தில் இருக்கிறது. அந்த வகையில் பெண்களை சக மனிதர்களாக பார்க்காமல் பணம் கொடுத்து வாங்கி விற்பனை செய்யும் ஒரு பொருளாகவே பார்க்கிறார்கள். பெண் சிசுக் கொலை நடப்பதற்கும் இதுவே காரணம். வரதட்சணை பிரச்சினையால் பல பெண்கள் உரிய வயது வந்தும் திருமணம் செய்ய முடியாமல் வாழ்க்கையைத் தள்ளுகிறார்கள். மணம் செய்தவர்களோ பணம் கொடுக்க முடியாமல் கொலை செய்யப்படுகிறார்கள்.

இந்துமதவெறியர்களின் செல்வாக்கு பகுதிகளான இந்தி பேசும் மாநிலங்களில் இந்தப் போக்கு அதிகம் என்பதிலிருந்தே அங்கு பெண்களுக்கு எந்த மதிப்பும், மரியாதையும் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். இன்று பெண்கள் அதிகம் வேலைக்கு போக ஆரம்பித்திருந்தாலும் வரதட்சணையின் அளவு மாறிவிடவில்லை. பெண்களுக்கும் சுய மரியாதை கிடைத்து விடவில்லை. இந்து மதவெறியர்களை அரசியல் ரீதியில் எதிர்த்து போராடுவது போல பார்ப்பனியத்தை பண்பாட்டு ரீதியிலும் நாம் முறியடிக்க வேண்டியிருக்கிறது. இல்லையேல் நமது நாட்டு பெண்கள் வரதட்சணைக்காக கொல்லப்படுவது நின்று விடாது.
__________________

இந்து நாளிதழில் வெளியான செய்தியை தழுவி எழுதப்பட்டது.

  1. ஒரு ரிசானவுக்காக கண்ணீர் கடலில் மிதந்தவர்கள்
    ஜனவரி 1, 2001 முதல் டிசம்பர் 31, 2012 வரையிலான 12 ஆண்டுகளில் இந்தியா முழுவதிலும் 91,202 வரதட்சணை தொடர்பான மரணங்கள் நடந்திருக்கின்றன. இவற்றில் 84,013 வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதி மன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டன. எஞ்சியவை விசாரணை கட்டத்திலோ அதற்கு முன்பாகவோ அரசால் கைவிடப்பட்டன.
    இது பற்றி ஒப்ரு சொப்ட்டு கண்ணீர் வடிக்கவில்லையே

    • பொய்யான புள்ளிவிபரங்களுக்கு கண்ணீர் வடிக்க வேண்டியதில்லை. “வினவு” உண்மையை எழுதிவருகிறது என்று நீங்கள் நினைத்தால் அது வினவுவின் குற்றமல்ல!!!

  2. வரதச்சனையில் கூட மதம் சார்ந்து இருப்பது இல்லை. ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக இங்கு எழுதப்பட்டு உள்ளது. நீங்கள் நேசிக்கும் இஸ்லாமியத்தில் மட்டும் என்னவாம். அங்கு இதைக்காட்டிலும் கொடுமைதான் நடக்கிறது. இதனை மறைத்து அவர்களின் தயவை வேண்டி பெற்றுக்கொண்டு வாழவேண்டி உள்ளது!!!! இதுதான் கொடுமை.

    இஸ்லாமியத்தில் நான்கு மனைவிவரை ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ளலாம். இஸ்லாமிய நாடுகளில் இது கடுமையாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. எந்தப் பெண்கிடைத்தாலும் போதும் என்று இழுத்துக்கொண்டு சென்று விடுகிறார்கள். அதனால்தான் இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறார்கள்.

    இந்துக்களில் உள்ள வரதச்சனையை எதிப்பதாக கூறும் நீங்கள் ஒன்று செய்யலாம். இனி வரும் நாட்களில் கணவன் வீட்டிற்கு மனைவி குடியேறுவதை எதிர்த்து , மனைவி வீட்டிற்குத்தான் ஆண்கள்(கணவன்) செல்ல வேண்டும் என்று உங்கள் “புரச்சியாளர்களை” கொண்டு புரட்சி செய்யவேண்டும். அப்போது “புதிய ஜனநாயகம்” செயல் பாட்டுக்கு வந்துவிட்டது என்று நீங்கள் மகிழ்ச்சி அடையலாம்!!!! மக்களும் புதிய ஜனநாயகம் என்றால் என்ன வென்று தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

  3. ஒரு பெண்ணை விவாகரத்து செய்தால் இந்து மதத்தில் பெண்ணுக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும். இஸ்லாமிய சட்டத்தில் அது இல்லை. அதனால் எத்தனை பெண்கள் கொடுமைக்கு உள்ளகிரர்கள் என்று தெரியுமா? முஸ்லீம் பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுக்கத்தேவை இல்லை என்று சட்டமே கொண்டு வந்தார்களே அது தெரிய வில்லை போலும்.

    இதுதான் இஸ்லாமிய “புரட்சி” மற்றும் “புதிய ஜனநாயகம்”!!!!!!!!!

    • Quran Chapter 4 Verse 4
      நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் – அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.

      Quran Chapter 2 Verse 237
      ஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன் – ஆனால் மஹர்(திருமணக்கொடை) நிச்சயித்த பின் நீங்கள் தலாக் சொல்வீர்களாயின், நீங்கள் குறிப்பட்டிருந்த மஹர் தொகையில் பாதி(அவர்களுக்கு) உண்டு- அப்பெண்களோ அல்லது எவர் கையில் (அத்)திருமணம் பற்றிய பிடி இருக்கிறதோ அவர்களோ முழுமையும்) மன்னித்து விட்டாலன்றி; –

      ஆனால், (இவ்விஷயத்தில்) விட்டுக் கொடுப்பது தக்வாவுக்கு
      (பயபக்திக்கு) மிக்க நெருக்கமானதாகும்;

      இன்னும், உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உபகாரம் செய்து கொள்வதையும் மறவாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்(த்துக் கூலி கொடு)ப்பவனாக இருக்கின்றான்.

      • நல்ல கருத்துக்கள் அநேக புத்தகங்களில் உள்ளன. இந்தியாவில் இதற்கு குறைவே இல்லை. ஆனால் அவைகள் எங்கு எப்படி நடைமுறைப்படுத்தப் படுத்தப் படுகின்றன என்பதுதான் கேள்வி. தினமும் ஏராளமான மக்கள் உலகின் பல பகுதிகளில் பயங்கர வாதிகளால் கொல்லப்படுகிறார்களே அதுவும் புத்தகத்தில் உள்ளதுதானா? திருக்குறளில் இல்லாத கருத்துக்கள் எதுவும் உலகில் இல்லை. அதுதான் உண்மையும் சத்தியமும்.

  4. When you talk about Dowry harassment, Please include the new harassment by women to move out of joint family

    http://data.498a.org/

    One of my colleague committed suicide along with parents.
    My friend is running a case for the past 6 years. He was found innocent in 498a, but still the girls family continue to run domestic violence case.

    • Well said. I am tired of people citing evidence for dowry related deaths. Our society is extremely biased towards men also. India is one of the worst place to live for men and turning out to be misandric society. Vinavu should also get the statistics for number of men who commits suicide everywhere. Indian law is generally not favorable for men. Even in courts also divorce favors more for women than for men. I know a lot of men personally who got slapped with fake dowry case. I am not against the punishment for abusing women. But also we need to understand that there is a mass paranoia which is created in media after Delhi rape case. Now there are more likely for men to be viewed as rapists and psychopaths than normal humans. I also know a lot of elderly people who are forced to go to jail with the husbands for no purpose. I favor gender neutral which could protect everyone. But unfortunately we are marching towards self-destructive society. I am afraid this is only going to be worse.

    • //joint family//

      What do u mean by this term ?? Will u allow the girls family also stay in the joint family ??… A GIRL is bought up by her father and mother for 25 years she learns, searches for a job , competes with men to get a job.. with all these qualities in the name a marriage she has to move to a house which she has never seen and supposed to adjust with everyone in that house.. ISn’t this called slavery ?? If the Girl’s parents can stay alone why can’t the boy’s family ?? I think u r staying in US will any US women agree to the above conditions ?? JOINT FAMILY is a STONE AGE culture which needs to be abolished.. what’s wrog i women asking to come out of JOINT FAMILY ??

      • Joint family is not slavery,nuclear family is not some new age liberation.

        I know many girls who insisit to live with the parents of the boy.

        I know guys buying 3 bedroom houses to give one room for the parents.

        It is just a choice,there are arguments for and against both systems.

        • iam really happy if people are taking three bedroom flats ad having everyone together… But is this a coommon phenomea or a rare case ?? because most of last generation couples had more than one kid.. if the groom has a sister and the bride has a younger brother how will it work in this case ?? can u deny that in most of the cases the bride goes and lives with the groom’s family ???.. Is this NOT slavery in disguise of CULTURE ??? Y shud the girl alone leave her family alone and go with the groom’s family ?? Is it NOT true tat in most of the families the GIRL needs to get permission from her in laws just to visit her family ??? Aren’t the above scenarios NOT slavery ??

  5. Dowry death is a legal fiction. The fiction is created by Section 304B, and Men are prosecuted based on presumptive legal evidence against accused in violation of all civilized jurisprudence. Have a look at Section 113B of Indian Evidence Act, which says “When the question is whether a person has committed the dowry death of a woman and it is
    shown that soon before her death such woman had been subjected by such person to cruelty or harassment for, or in connection with, any demand for dowry, the court shall presume that such person had caused the dowry death.”
    With this presumptive evidence every unnatural death of women, be it accident or suicide, is turned into a dowry death by mere statements of bride family. Dowry death is hoax created by legal fiction. Through legal fiction, and such definition you can create any statistics. When such fiction is based on loose terms like cruelty and harassment, which anybody can claim on any pretext, it is surprising why is so few statistics. These are anti-men laws which punishes men through legal fictions.
    https://www.facebook.com/498aLegalTerror/posts/259199024148400

Leave a Reply to rizwan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க