privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஓடு "தலைவா" ஓடு - பாகம் 2

ஓடு “தலைவா” ஓடு – பாகம் 2

-

வறானவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முன் வைத்து சரியான கொள்கைகளை ஆதரிக்குமாறு கோரினால் தவறானவர்களை தண்டித்த அநீதியான நடவடிக்கையே மேல் என்று மக்கள் முடிவு செய்யக் கூடும்.

சான்றாக ஊர் மக்கள் பலரை கொன்று போட்ட ஒரு நாடறிந்த ரவுடியை ஏதோ ஒரு பிரச்சினை காரணமாக போலி மோதலில் போலிஸ் கொல்கிறது. பொதுவில் போலி மோதலை எதிர்ப்பது வேறு, இந்த ரவுடியின் ஜனநாயக உரிமையை முன் வைத்து எதிர்ப்பது வேறு. பின்னதை நாடினால் மக்கள் பாசிசமே மேல் என்று முடிவு செய்வார்கள். எனவே சாதாரண மக்கள், சமூக ஆர்வலர்கள், ஜனநாயகவாதிகள், புரட்சியாளர்கள் இவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை வைத்தே போலிசின் காட்டுமிராண்டி தர்பாரை எதிர்க்க வேண்டும். அப்போதுதான் மக்களிடம் போலிசு குறித்த உண்மையை உணர வைக்க முடியும்.

விஜய் அரசியல்
தன் படத்தை தமிழக அரசுதான் மறைமுகமாக தடை செய்திருக்கிறது என எங்கேயாவது விஜய் சொல்லியிருக்கிறா?

தற்போது ‘தலைவா’ படப் பிரச்சினையை முன் வைத்து சிலர் ஜனநாயக உரிமை பேசுகிறார்கள். சினிமா எனும் முதலாளிகளின் தொழிலை முன் வைத்துதான் ஒரு நாட்டின், சமூகத்தின் ஜனநாயக உரிமை பேசப்படும் என்றால் அந்நாட்டில் மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு உண்மையிலேயே உரிமை இல்லை என்று பொருள். அதன் பொருட்டே சிட்னி நகரில் டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிடுவதற்கு கருத்துரிமை இல்லை என்று பேச முடிகிறது. விஜய் ஆஸ்திரேலியாவில் ஆடும் சலித்துப் போன நடனமும், சந்தானம் சதா முணுமுணுக்கும் லொள்ளு சபா மொக்கைகளும் நம் பார்வைக்கு வர இயலாததுதான் கருத்துரிமைக்கு அடையாளம் என்றால் இப்பேற்ப்பட்ட கருத்துரிமையே நமக்கு வேண்டாம்.

விஜயை பிடிக்கவில்லை என்றாலும், அவரது அசட்டுத்தனமான படங்களை விரும்பவில்லை என்றாலும் அவரது படத்தை வெளியிடும் ஜனநாயக உரிமை அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று இந்த கருத்துரிமைக் காவலர்கள் சீறுகிறார்கள். இதனால் விஜயை ஆதரிக்கிறேன், தலைவா படம் வெளியிடப்பட வேண்டும் என்று இணையத்தில் பிரச்சாரமும் செய்கிறார்கள். சரி இவர்களுக்காக இவர்களே உருவாக்கி வைத்திருக்கும் வாத வழிப்படியே கருத்துரிமையின் இலட்சணத்தை புரிய வைப்போம்.

முதலில் விஜயின் தலைவா படம் ஏன் வெளியிட முடியவில்லை? அதற்கு, ஜெயலலிதாவின் தலைமையில் உள்ள தமிழக அரசுதான் காரணம் என்பது உலகறிந்த விசயம். அதை நாமும் மறுக்கவில்லை. இந்த மறைமுகத் தடைக்கு என்ன காரணம்? அது ஏதோ தனிப்பட்ட ஈகோ சார்ந்த காரணங்கள். இருக்கட்டும். இந்நிலையில் விஜயை ஆதரிப்போர் என்ன செய்ய வேண்டும்? தமிழக அரசை எதிர்க்க வேண்டும். ஆனால் அவர்கள் தமிழக அரசை எதிர்க்க முடியுமா? இல்லை அவர்கள் தரும் ஆதரவை நடிகர் விஜய்தான் பயன்படுத்திக் கொள்ள முடியுமா?

முதலில் தன் படத்தை தமிழக அரசுதான் மறைமுகமாக தடை செய்திருக்கிறது என எங்கேயாவது விஜய் சொல்லியிருக்கிறா? இல்லை அவரது தந்தை, தயாரிப்பாளர், இயக்குநர் தரப்பினர்தான் சொல்லியிருக்கிறார்களா? இல்லையே! உயிரோடிருப்பவன் செத்துவிட்டான் என்று சொல்லி எப்படி ஐயா அழ முடியும்? அவர்கள் சொல்லவில்லை என்பது மட்டுமல்ல, என்ன சொன்னார்கள் என்பதும் முக்கியம்.

தலைவா படப் பிரச்சினைக்காக விஜய் தரப்பு கொடநாட்டிற்கு சென்று ஜெயாவை பார்க்க முடியவில்லை. பிறகு ஜெயா சென்னை திரும்புகிறார் என்றதும் அடித்துப் பிடித்து, “அம்மா ஆட்சியின் மகிமைகள்” என்று விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டாரே! அது ஏன்? ஜெயலலிதா எப்படி மறைமுகமாக தடை செய்திருக்கிறாரோ அது போல விஜயும் செய்த பாவத்துக்கு மன்னியுங்கள் என்று மறைமுகமாக இறைஞ்சுகிறார். இப்படி அவர்களது சண்டையும், மன்னிப்பும், சமாதானமும் அந்தரங்க, கிசுகிசு, மறைபொருள் வழியில் இருக்கும் போது இங்கே ஜனநாயக உரிமைக்கு எங்கே இடம்?

வெளிப்படையாக இருப்பது உண்மையான ஜனநாயகத்தின் விதிகளில் ஒன்று. மறைமுகமாக பேசுவது என்பது சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்யும் முதலாளிகளுக்கு உரியது. விஜய் தரப்பினர் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் போது கூட தமிழக அரசை திட்ட முடியாதவர்கள். ஆனால் திட்டும் விருப்பம் உள்ளவர்கள். அதனாலேயே வெளிப்படையாக தினமும் அம்மா பஜனையை செய்து வருபவர்கள். அதிலும் நடிகர் விஜய், புரட்சித் தலைவியின் சாதனைகளை பட்டியல் போட்டு தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக வைத்திருக்கிறார் என்று தீர்ப்பே அளித்து விட்டார். இப்பேற்பட்டவரை யாரய்யா ஆதரிக்க முடியும்?

ஒருவேளை விஜய் வெளிப்படையாக பேச இயலாத சூழ்நிலையில் இருக்கிறார், அதனால்தான் இப்படி சரணடைந்து பேசுகிறார் என மேற்கண்ட கருத்துரிமைக் காவலர்கள் சொல்லக்கூடும். சரி, அவர் என்ன ‘அல்கைதா’வின் பணையக் கைதியாகவா இருக்கிறார்? ஏன் வெளிப்படையாக பேச முடியவில்லை? விஜயின் ரசிகர்கள் கூட அப்படி வெளிப்படையாக பேசக் கூடாது என்பதை திரும்பத் திரும்ப உத்தரவாகவே போட்டு வருகிறார்களே அது ஏன்? தன்னால்தான் முடியவில்லை என்றால் மற்றவர்களை வைத்துக் கூட பேச முடியாதபடி உங்களை யார் பிடித்து வைத்தது?

விஜய், வடிவேலு
“வடிவேலுக்கு நடந்தது போல விஜய்க்கும் நடக்கும், அவரை வைத்து படம் தயாரிக்க எந்த தயாரிப்பாளர்களும் முன் வரமாட்டார்கள், இது தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும்”

சில இடங்களில் விஜய் ரசிகர்கள் இருக்கும் உண்ணாவிரதத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று விஜய் தரப்பு போலிஸ் கமிஷனர் அலுவலகம் சென்று பதிவு செய்கிறது. ஏனிந்த பயம்? இத்தனைக்கு பிறகும் அம்மாவின் கடைக்கண் பார்வை கிடைக்க வில்லை என்பதால் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் காமரா முன்னால் கண்ணீர் விட்டு வேறு பார்க்கிறார். படம் வெளியாகவில்லை என்றால் இவர் நடுத்தெருவுக்கு வந்துவிடுவாராம். இதென்ன சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதால் வேலை, வசதிகளை இழந்து வாடுபவர் போலவா?

இந்த தயாரிப்பாளர் கடன் வாங்கி படம் எடுக்க வேண்டும் என்று யாராவது அழுதார்களா? இல்லை 50 கோடி தயாரிப்பில் விஜய் விரலை அசைத்து பஞ்ச் டயலாக் பேசவேண்டும் என்று எவராவது தவமிருந்தார்களா? ஏதோ சமூகத்திற்கு மாபெரும் சேவை செய்வது போலவும், அந்த சேவை நிறுத்தப்பட்டது போல அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்றால் இவர்கள் திரையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் ‘நன்றாக’ நடிக்கிறார்கள் என்றே சொல்ல முடியும். இல்லையென்றால் இந்த சமூக சேவகர் சந்திரபிரகாஷ் ஜெயின் இந்த தலைவா படத்திற்கு விஜயுக்கு கருப்பும் வெள்ளையுமாக எவ்வளவு கொடுத்தார் என்ற உண்மையையாவது சொல்ல முடியுமா? அவருக்கு கடன் கொடுத்தவர்கள் கருப்பில் எவ்வளவு கொடுத்தார்கள் என்று சான்றிதழைத்தான் காட்ட முடியுமா?

இல்லை பாடல் உரிமை, சாட்டிலைட் உரிமை, தமிழகம் தவிர்த்த ஏனைய ரிலீஸ் இவற்றில் எவ்வளவு சம்பாதித்தார் என்பதை சொல்வாரா? இத்தனை கோல்மால் இருந்தும் இவர்கள் அழுகாச்சி புராணத்தின் மூலமாவது ஏதாவது சிம்பதி கிடைக்குமா என்று வெறியுடன் அலைகிறார்கள். இடையில் விஜய் தரப்பு, தலைவா படத்தை வெளியிடக்கோரி உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள் என்று ஒரு செய்தி. அதுவும் போலிஸ் அனுமதி கொடுத்தால், தானும் கலந்து கொள்வதாக விஜய் தெரிவித்திருக்கிறாராம். ஏன் அனுமதி கொடுக்க வில்லை என்றால் மீறி இருக்க மாட்டீர்களா? அப்படி இருந்தால் கைது செய்வார்கள் என்று பயமா?

முதலில் அந்த உண்ணாவிரதம் யாரை எதிர்த்து? தலைவா படத்தை யார் தடுத்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லாமலேயே யாரை எதிர்த்து இந்த அறப் போராட்டம்? ஒருவேளை சத்யம் திரையரங்க புரஜெக்டர் எந்திரம்தான் எங்கள் தலைவா படத்தை டிஸ்பிளே செய்ய மறுக்கிறது என்றாவது சொல்லித் தொலையுங்களேன்! உங்களது ஜனநாயகப் போராட்டத்தின் தரம் என்ன என்பதை இதற்கு மேலும் விளக்கினால் அந்த ஜனநாயகமே அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஓடிவிடும்.

சரி, விஜய்தான் சூழ்நிலைக் கைதி நாங்கள் களத்துக்கு வருகிறோம் என்று ஏனைய நாயகர்கள் எவராவது களத்திற்கு வந்தார்களா? வெந்த ஸ்டார், விளக்கெண்ணை ஸ்டார் என்று பட்டம் போட்டுக்கொள்வதில் உள்ள வீரம் இங்கே ஜெயாவை எதிர்ப்பதற்கு ஏன் வரவில்லை? ரஜினி, கமல், அஜித், சிம்பு, எல்லாரும் வம்பு எதற்கு என்று ஏன் ஒளிய வேண்டும்? கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒரு சினிமாக்காரனுக்கு இன்னொரு சினிமாக்காரனே போராட மாட்டான் என்றால் மக்கள் மட்டும் என்ன எழவுக்கு போராட வேண்டும்? விஜயை ஆதரிக்கும் அப்பாவிகள் பதில் சொல்லட்டும்.

ஜெயலலிதா நினைத்தால் ஒரு படத்தைக்கூட வெளியிட அனுமதிக்க மாட்டார், வடிவேலுக்கு நடந்தது போல விஜய்க்கும் நடக்கும், அவரை வைத்து படம் தயாரிக்க எந்த தயாரிப்பாளர்களும் முன் வரமாட்டார்கள், இது தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் என்றெல்லாம் இதற்கு பொழிப்புரை போடுகிறார்கள்.

இங்கேதான் மீண்டும் அந்த கேள்வியை நினைவுபடுத்துகிறோம். சினிமா வழியாகத்தான் உங்களுக்கு ஜனநாயக உணர்வும் அதன் உரிமை குறித்த கவலையும் நினைவுக்கு வருமா? அதுவும் தலைவா படத்தை எந்தப் பிரச்சினையுமின்றி அனுமதித்திருந்தால் ஜெயலலிதா மாபெரும் ஜனநாயகப் போராளி என்று இவர்களே நம்மிடம் சண்டைக்கும் வருவார்கள்.

டெரர் ஜெயா
“தலைவா படத்தை எந்தப் பிரச்சினையுமின்றி அனுமதித்திருந்தால் ஜெயலலிதா மாபெரும் ஜனநாயகப் போராளி”

கூடங்குளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்கு, தருமபுரியில் நேற்று போலி சுதந்திரம் என்று பிரசுரம் வினியோகித்த எமது தோழர்கள் மீது ராஜத்துரோக குற்றம் சாட்டி சிறையிலடைப்பு, பரமக்குடியில் தலித் மக்கள் மீது துப்பாக்கி சூடு என்று ஜெயலலிதா இந்த ஆட்சிக் காலத்திலேயே தனது ஜனநாயக ரிக்கார்டுகளை ஏராளம் பதித்துத்தான் வைத்திருக்கிறார். ஆகவே நம்மைப் பொறுத்த வரை இந்த அரசு சர்வாதிகாரமாகத்தான் செயல்படுகிறது என்பதற்கு தலைவா படம் தேவையில்லை. அன்றாடம் நமது வாழ்க்கையிலேயே அதை சந்தித்து வருகிறோம்.

தமிழ் சினிமா என்பது கருப்பு பணத்தில் தயாரிக்கப்பட்டு, மக்களின் பணத்தை சட்டபூர்வ பிக்பாக்கெட் கொள்ளையுடன் ஓரிரு வாரங்களில் பறிமுதல் செய்யும் ஒரு அநீதியான தொழில். இதற்கு அரசும் உடந்தை என்பதும், அரசியல் கட்சிகள் சினிமா நட்சத்திரங்களை பிரபலம் காரணமாக தமக்கு பயன்படுத்திக் கொள்வதும், பதிலுக்கு சினிமா முதலாளிகள் கேளிக்கை வரி ரத்து, படம் வெளியாகும் போது டிக்கெட் விலைக்கு வரம்பில்லாமல் கட்டணம் வைக்கலாம் என்று சலுகைகள் பெறுவதும் கண்கூடு.

எனவேதான் தமிழகத்தில் அரசியல் விவாதம், உரிமைப் போராட்டம் அதிகம் நடக்காமல் மக்கள் மீது திணிக்கப்படும் சினிமாவில் வாரம் முழுவதும் கழிக்கிறார்கள். மக்களின் இந்த போதையை பயன்படுத்திக் கொண்டுதான், ரெண்டு சைக்கிள், மூன்று அயனிங் மிஷன், நான்கு தையல் எந்திரத்தை கொடுத்து விட்டு அடுத்த முதல்வர் என்ற எரிச்சலூட்டும் வரியை அலறவிடும் நட்சத்திரங்களின் ஊளையை அடிக்கடி எதிர்கொள்கிறோம்.

ஆகவே அதன் பொருட்டு அதாவது உண்மையான ஜனநாயகம் வளர விரும்புவோர் தலைவா படத்தில் இரண்டு தரப்பும் அடித்துக் கொள்வதை ஆதரிக்க வேண்டும். எத்தரப்பையும் ஆதரிப்பதோ இல்லை கருத்துரிமையின் பாற்பட்டு பேசுவதோ அபத்தம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் சினிமாவின் மாயையிலிருந்து விடுபடுவதும், பாசிச ஜெயாவின் அரசியலை எதிர்ப்பதும் வேறு வேறு அல்ல. ஆளும் வர்க்கங்களுக்குள் சண்டை நடக்கும் போது நாம் அதில் ஒரு தரப்பை ஆதரிக்க முடியாது என்பது இங்கேயும் பொருந்தும். தலைவா படத்தின் உரிமைக்காக குரல் கொடுப்போர் எக்காலத்திலும் பாசிச ஜெயவை எதிர்த்துக் குரல் கொடுக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு எது ஜனநாயக உரிமை, எது கருத்துரிமை என்பதே தெரியாது.

  1. பெட்டிப் பாம்புகள் எப்போதும் பெட்டிக்குள்தான் இருக்கும்:

  2. இந்தியா வாங்கியுள்ள கடனை ,இந்திய மக்கள் தொகையால் வகுத்து ஒவ்வொரு இந்தியனையும் கடன் கட்ட சொன்னவர் விஜய்!கடனே வாங்காத மக்களை கடன் காரன் ஆக்கிய பெருமை இவரை சேரும்!

  3. உண்மையாகவே, மிகச்சிறந்த பதிவு. பாராட்டுக்கள். இன்றைக்கு தமிழகத்தில் அறிவுஜீவிகள் என்றும், ஆர்வலர்கள் என்றும், எழுத்தாளர்கள் என்றும் சொல்லிக்கொள்ளும் பலரும் மேலோட்டமான கருத்தாழம் கொண்டவர்களாகவும், நுனிப்புல் மேய்பவர்களாகவுமே இருப்பது மிக துரதிருஷ்டமானது. ஒரு பிரச்னையை பல கோணங்களில் ஆய்வதற்கு வேண்டிய உழைப்பை முதலீடு செய்ய விருப்பமில்லாமல், அல்லது தெரியாமல், கருத்து கந்தசாமிகளாக அவதாரம் எடுப்பதை உணரமுடிகிறது. ஆய்வு மனப்பான்மையுடன், ஒருப்பிரச்சனையின் ஆழத்திற்குள் நேர்மையாகப் பயணிக்க முடிந்தால் மட்டுமே ‘உண்மை’ புலப்படும். அப்பொழுதுதான், அந்த ‘உண்மைக்காக’ தார்மீகத் தளத்தில் போராடவும், குரல் எழுப்பவும் முடியும்.

    ஆனால், நமது தமிழ்ப்படங்களில் பெரும்பாலானவை போன்று நம் இன்றைய தமிழ் சமூகமும் மிகச் சுமாரான சராசரி சமூகமாகவே செயல்படுகிறது என்றால் மிகையில்லை. நமது ஊடகங்களும் சரி, விவாதங்களும் சரி, பகுப்பாய்வுக்கும், அறிவியல் பார்வைக்கும் தயாரில்லை. அதற்கான உழைப்பையும், சிந்திப்பதற்கான நேரத்தையும் அளிக்கத் தயாரில்லை. தமிழகத்தின் சமீபத்திய பல நிகழ்வுகளிலும், பிரச்சனைகளிலும், இத்தகையச் சூழலைப் பார்க்க முடிகிறது. தமிழகத்தில் ஒரு இண்டெலெக்சுவல் டெபிசிட் (intellectual deficit) இருப்பது உண்மை. இதற்கு கல்வியிலும், கற்றலிலும், கற்றுக்கொடுப்பதிலும், வாசிப்பிலும் மாற்றம் வேண்டும். அது மட்டுமே, ஜனநாயக மாற்றத்திற்கும், சமூக மாற்றத்திற்கும் தளம் அமைக்கும்.

    அ.நாராயணன்

  4. விஜய் ரஜினி அண்ணா அசாரே ஜெயமோகன் போன்றவர்களை நக்கல் பண்ண வேண்டும் என்றால் ஒமக்கு எப்படித்தான் இப்படி flow வருகிறதோ…. ஆண்டவனுக்கே வெளிச்சம்

    • பொய்மையை சொல்லத்தானே தயங்கி தயங்கி சொல்ல வேண்டும்!
      உண்மையை அதிரடியாய் ஒரே ஃப்ளோவில் உரக்கச் சொல்லலாம்தானே??

      ஆண்டவனுக்கு டார்ச் அடித்து என்னாகப் போகிறது?

  5. கூடங்குளம் போராட்டத்தின்போது எமது தோழர்களை சிறையில் அடைத்த ஜெயலலிதா.

    கூடங்குளம் போராட்டத்துக்கும் மக இ க வுக்கும் , வினவுக்கும் என்ன சம்பந்தம் ??????

  6. செவிட்டில் அறைந்து சொல்வது போன்ற கட்டுரை. இதற்கு மேலும் தொடர்புடையவர்களுக்குப் புரியவில்லை என்றால் செவிட்டுப் பக்கம் இருக்கும் தோல் நாலு இன்ச் எருமைத் தோலினால் ஆனது என்றே கூறவேண்டும்.

  7. யப்பா இப்பவே கன்ன கட்டுது …………. கருத்து சுதந்திரத்துக்கு இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா.?

    • Dear nice of your enlargement. I know its difficult to talk against JJ. But we the society like these movies,so you people produsing. Now we people like this situation let it happen until it goes.

      Its called Indian Democracy.

  8. 1+1=2 There is nothing to argue about it

    Vijay has the right to take a movie,call himself a leader,start a party….

    1. Author says since Vijay is selfish, deals in black money and not a good leader, he deserves it.
    If I apply this argument, everybody bribes and deals in black money for real estate. So if govt behaves against fellow citizens , we can say he deserves it.

    2. Why should Vijay pay tax?
    Does our govt makes sure no pirate DVDs and provides legal protection for his movies?

    Our legal system offers no quick solution

    3. Why Vijay fighting against the Govt openly or transparently ?

    No one can do business fighting against the Govt. Govt plays the card and It is JJ working behind the scenes. Remember Vaiko was in Jail for long?

    Our legal system is made by british to govern the slaves. It is of no use to anybody. It will never provide speedy timely delivery of solution.

    If Vijay can challenge the govt in court and if govt is penalized for its action then people will be open. Here you are fighting the powerful ,cunning enemy and transparent blah blah will not work

    4. Who asked the producer to make movie?
    A society has all sort of needs and business finds opportunity to make money . thats it.
    Not everybody is budda here. You cannot force everybody to make documentary. My counter question is “Who are you to decide what others should be doing? This is not Cuba/North Korea.”

    //ஏன் வெளிப்படையாக பேச முடியவில்லை? விஜயின் ரசிகர்கள் கூட அப்படி வெளிப்படையாக பேசக் கூடாது என்பதை திரும்பத் திரும்ப உத்தரவாகவே போட்டு வருகிறார்களே அது ஏன்? //

    He is doing business and not politics. Why do you guys mix both?

    So Govt can do whatever it wants to may be acceptable and can be justified in communist countries and should not be encouraged in democracy

  9. மிக அருமை.
    இப்படிப்பட்ட மேதாவிகளுக்கு ஆதரவு கொடுப்ப்வர்களை, அவர்களை சிரிக்கவைத்தே செருப்பால் அடிப்பது போல் இருக்கிறது உங்கள் எழுத்து.

  10. இரு திருடர்கள் கொள்ளை அடிகிறார்கள் . அவர்கள் ஒப்பந்தப் படி கொள்ளை பொருளை விற்று வருவதில் பங்கு பிரிக்கப் பட வேண்டும். ஓர் திருடன் பொருளை விற்க விடவில்லை. : இந்த வழக்கை காவல் நிலையத்தில் /நீதி மன்றத்தில் பதிவு செய்ய முடியுமா? : திருடனுக்கு தேள் கொட்டியடியது மாதிரி பொத்திக்கிட்டு இருக்கணும். : நம்ம நடிகர் விஜய் அதை தான் செய்கிறார். சினிமா தொழில் அப்படிப் பட்டது தான். நீ என்ன தொழிற் சாலை கட்டினாய இல்லை விளைந்த பொருளை விற்க முடியாமல் இருக்கியா. போடாங்..

  11. Dear nice of your enlargement. I know its difficult to talk against JJ. But we the society like these movies,so you people produsing. Now we people like this situation let it happen until it goes.

    Its called Indian Democracy.

    To day you(Industry) make money but not tomorrow.

  12. விசையெல்லாம் ஏதோ பெரிய பொடலங்காய் போலவும், அதுக்கு கொடிபிடிப்பதும் கருத்து சுதந்திரம் எண்டு சொல்ல வழியில்ல தான். விஸ்வரூபம் கூட இந்துத்துவாஸ் குளிர்காய நினைத்ததால் பில்டப்பான மேட்டருதான். ஆனாலும், ஜெயாம்மாவோட ஆணவத்தை சும்மாவிடுவதும் சொரணைகெட்டத்தனம் அல்லவா.

  13. மிகச் சிறந்த கட்டுரை. ஆனால் இதைப் போன்று சென்ற ஆட்சிக் காலத்தில் உங்கலால் எழுதி இருக்க முடியுமா ? அப்போது எவருமெ படம் எடுத்து வெலியிடப் பயந்தர்கள் என்பதை மறந்து விட்டிர்களா? மூசசுக்கு மூச்சு ஜெயாவை திட்டுவதில் என்னநியாயம்?

  14. இந்த விமர்சனம் சரியாக எனக்குப் படுகிறது. அதே சமயத்தில் கமலின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு வேரு வர்ணம் அடித்து விமர்சனம் வினவு தந்தது. அதுதான் கொஞ்சம் நெருடலாக உள்ளது.

  15. //விஜய்தான் சூழ்நிலைக் கைதி நாங்கள் களத்துக்கு வருகிறோம் என்று ஏனைய நாயகர்கள் எவராவது களத்திற்கு வந்தார்களா? வெந்த ஸ்டார், விளக்கெண்ணை ஸ்டார் என்று பட்டம் போட்டுக்கொள்வதில் உள்ள வீரம் இங்கே ஜெயாவை எதிர்ப்பதற்கு ஏன் வரவில்லை? ரஜினி, கமல், அஜித், சிம்பு, எல்லாரும் வம்பு எதற்கு என்று ஏன் ஒளிய வேண்டும்? கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒரு சினிமாக்காரனுக்கு இன்னொரு சினிமாக்காரனே போராட மாட்டான் என்றால் மக்கள் மட்டும் என்ன எழவுக்கு போராட வேண்டும்?//

  16. அருமையான பதிவு. செருப்பாலடிப்பதைப் போன்ற கேள்விகள். வாழ்த்துக்கள் வினவு.

  17. Building strongu… Base weaku…Ivaru oru herova iruntha enna pannanum. Bolda pesanum pa. Screenla mattum pesuna pothuma. Ivaru eppavum avanga appa solli kuduthatha rhymes mathiri oppiparu.. All the actors are leg shakers. Even comedians like vadivelu, senthil spoke something boldly. Ivangaluku makkala pathi kavala illai. Avangala pathi dhaan ellamey kavala paduvaanga. Idhu ellamey oru form of narcissism dhan..Ivangaluku sombu thukkum rasigargal than romba pavapatta piraveenga.. Ellamey nasama pogattum…

  18. நாளைக்குப் படம் வெளிவருது. எப்படி வருது? தெரியாது. நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்!!!

    எது எப்படியோ.. போய் இந்த மொக்கைப் படத்தைப் பார்த்து எல்லாரும் ஜென்ம சாபல்யம் அடையலாம்.

  19. oh ippadi thaan thooinndi viduvaargal pola irukku idhellm rajiniku work out aagum. Vijaykku irukkardhu 2ns standard 3rd standard padikkum fans thaan jaasthi paddicchavargal vivaram therinhjavargal evarum avarukku siupport pannna maatargal adhanaal better luck next time

  20. //தவறானவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முன் வைத்து சரியான கொள்கைகளை ஆதரிக்குமாறு கோரினால் தவறானவர்களை தண்டித்த அநீதியான நடவடிக்கையே மேல் என்று மக்கள் முடிவு செய்யக் கூடும்.

    சான்றாக ஊர் மக்கள் பலரை கொன்று போட்ட ஒரு நாடறிந்த ரவுடியை ஏதோ ஒரு பிரச்சினை காரணமாக போலி மோதலில் போலிஸ் கொல்கிறது. பொதுவில் போலி மோதலை எதிர்ப்பது வேறு, இந்த ரவுடியின் ஜனநாயக உரிமையை முன் வைத்து எதிர்ப்பது வேறு. பின்னதை நாடினால் மக்கள் பாசிசமே மேல் என்று முடிவு செய்வார்கள். எனவே சாதாரண மக்கள், சமூக ஆர்வலர்கள், ஜனநாயகவாதிகள், புரட்சியாளர்கள் இவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை வைத்தே போலிசின் காட்டுமிராண்டி தர்பாரை எதிர்க்க வேண்டும். அப்போதுதான் மக்களிடம் போலிசு குறித்த உண்மையை உணர வைக்க முடியும்.//

    இது தவறான வாதம். முதலில் நாடறிந்த ரவுடியை போலி மோதலில் கொல்வார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சிறிய குற்றவாளிகள் பிறகு போராடும் மக்கள் என்று முடிப்பார்கள். புலிகளும் இப்படித்தான் ஆரம்பித்து கடைசியில் கட்டாய ஆள்சேர்ப்பு தப்பிஓடும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு என்று வந்து சேர்ந்தார்கள். இலங்கை அரசும் இப்படித்தான் பாசிசப் போக்கில் வளர்ந்தது.
    மற்றப்படி விஜய்யின் போராட்டம் பற்றி எனக்கொரு கருத்தும் இல்லை. அதுபற்றி நான் அக்கறைப்படவும் இல்லை.

Leave a Reply to A.Narayanan, editor, paadam பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க