privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்நீங்கள் ஒரு போதும் கேட்க விரும்பாத பாரதக் கதை !

நீங்கள் ஒரு போதும் கேட்க விரும்பாத பாரதக் கதை !

-

சிகாகோ பல்கலைக் கழகத்தின் தெற்கு ஆசிய ஆய்வுத் துறையில் படிக்கும் மிகேலா கிராஸ் என்ற அமெரிக்க மாணவி சென்ற ஆண்டு தனது படிப்பின் ஒரு பகுதியாக இந்தியா வந்த போது ஏற்பட்ட அனுபவங்களை குறித்து எழுதியிருக்கிறார்.

மிகேலா கிராஸ்
மிகேலா கிராஸ்

பெண்கள் அனைவரையும் தாயாக, நதியாக, தாய் மண்ணாக பார்க்கும் பாரத கலாச்சாரத்திற்கு ஈடு இணையில்லைஎன்று சங்க பரிவாரங்களால் விதந்தோதப்படுகிறது. நீலி வழிபாட்டிற்கும் தேசபக்திக்கும் உள்ளொளி இணைப்புள்ளதாக இந்து ஞான மரபின் உபன்னியாசர்கள் கதை விடுகிறார்கள்.  பொய்யான இந்த போற்றுதல்கள் மற்றும் வருணணைகளின் பின்னே பெண்ணடிமைத்தனத்தின் ஆதாயம் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை எவரும் சுலபமாக கண்டுபிடிக்க முடியும்.

இப்படி நம் நாட்டின் பார்ப்பனிய இந்து மதத்தின் பிற்போக்கு கலாச்சாரமும், பின்னர் வந்த மேற்கத்திய நுகர்வுக் கலாச்சாரம் வளர்த்து விட்டிருக்கும் பாலியல் வக்கிரங்களும் இந்தியச் சூழலை பெண்களுக்கு நரகமாக மாற்றியிருப்பதை மிகேலா கிராஸ் அதிர்ச்சியுடன் தெரிவிக்கிறார். ஆரம்பத்தில் அவரும் கூட இந்தியாவை மாபெரும் ‘ஞானிகளின்’ நாடு என்று அசட்டுத்தனமாக நினைத்திருப்பாரோ தெரியவில்லை.

இந்திய பெண்கள் பிறந்ததிலிருந்தே இந்த சூழலில் வாழ்வதால் அதை சமாளித்து வாழப் பழகிக் கொள்வதோடு, மனதளவிலான பாலியல் துன்புறுத்தல்களை பெரும்பாலும் புறக்கணித்தும் போகிறார்கள். வெளியிலிருந்து வந்த மிகேலா கிராஸ் இந்த நச்சுச் சூழலால் பாதிக்கப்பட்டு மனவியல் சிகிச்சை தேவைப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அதே நேரம் பாரதமாதாவின் கருணையற்ற முகத்தை உலகு அறியவேண்டும் என்று அதை அனைவருக்கும் அறியத் தருகிறார். எனினும் இதை ஒரு காலனியாதிக்க அடிமைத்தனத்தின் சதி என்று சங்க பரிவார அம்பிகள் புறக்கணிக்கலாம். அதனால் உண்மை சுடாமல் போய்விடுமா என்ன? இதோ ‘பெருமை’ வாய்ந்த இந்து ஞான மரபின் இழை அறுபடாத பாரதத்தை தரிசியுங்கள் !

– வினவு

————–

ந்தியாவிற்குப் போன எனது அனுபவத்தைக் குறித்து யாராவது கேட்கும் போது எப்போதுமே குழப்பத்துக்குள் சிக்கிக் கொள்கிறேன். கடந்த சில மாதங்களாக என் வாழ்க்கையை குதறிக் கொண்டிருக்கும் ஒரு முரண்பாட்டை சுருக்கமாக ஒரு வரியில் எப்படி விளக்குவது?

“இந்தியா அற்புதமானது,” என்று ஆரம்பித்து, “ஆனால் பெண்களுக்கு மிகவும் அபாயகரமானது” என்று முடிக்கிறேன். இது குறித்து மேலும் கேள்விகள் வருமோ என்று என் மனதின் ஒரு பக்கம் நடுங்குகிறது, இன்னொரு பக்கம் மேலும் கேள்விகள் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. உண்மையின் சக்தியில் நம்பிக்கை வைத்து நான் சொல்ல விரும்புவற்றுக்கும், கேட்பவர்கள் எவ்வளவு தாங்குவார்கள் என்பதை முடிவு செய்வதற்கும் இடையே நான் திணறுகிறேன்.

ஒரு பாதி இனிய கனவாகவும், மறு பாதி கொடூர சொப்பனமாகவும் இருந்த எனது மூன்று மாத இந்திய பயணத்தை எப்படி விவரிப்பது. எந்தப் பாதியை நான் சொல்ல வேண்டும்?

மிகேலா கிராஸ்
பூனே கணேசா திருவிழாவிற்கு பிறகு எடுக்கப்பட்ட புகைப்படம்.

இந்தியாவிற்கு போய்ச் சேர்ந்த முதல் நாள் பூனேவின் விநாயகர் திருவிழாவில் நாங்கள் நடனம் ஆடியதை சொல்லி விட்டு அத்தோடு விட முடியுமா? அல்லது அமெரிக்க பெண்கள் ஆட ஆரம்பித்ததும் திருவிழாவே நின்று போய் விட, ஒரு பெரிய ஆண்கள் கூட்டமே எங்கள் ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தோம் என்பதையும் சொல்ல வேண்டும் அல்லவா?

ஒரு சில டாலர்கள் விலையிலான அழகான புடவைகளை பேரம் பேசி வாங்குவதற்கான  கடைகளைப் பற்றி குறிப்பிடும் அதே நேரம், எங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஆண்கள், எங்களை இடித்துக் கொண்டு, மார்பையும் அடி வயிற்றையும் தொட்டும் தாக்கியும் சென்றதை சொல்லாமல் விட முடியுமா?

என்னுடைய அழகிய இந்திய செருப்புகளை புகழும் ஒருவரிடம், அவற்றை நான் வாங்கிய பிறகு 45 நிமிடங்களுக்கு என்னைப் பின் தொடர்ந்து வந்த மனிதனைப் பற்றிச் சொல்லி பெரும் கூட்டத்தின் மத்தியில் அவனை முகத்துக்கு நேராக திட்டி துரத்திய பிறகுதான் விலகினான் என்பதையும் பேச வேண்டும் அல்லவா?

கோவாவில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் குறித்த எனது ஆழமான நினைவு, என் அறை தோழியை பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்த ஹோட்டல் ஊழியர், அறை தொலைபேசியில் மீண்டும் மீண்டும் மூச்சிரைக்க அழைத்துக் கொண்டிருந்த போது அவன் கதவை உடைத்துக் கொண்டு அறைக்குள் வந்து விடக் கூடாது என்ற பயத்தில் கதவை தாழிட்டு விட்டு, கைகளில் ஒரு கத்தரிக்கோலை இறுகப் பற்றிக் கொண்டு, பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்ததாக இருக்கும் போது அந்த ஹோட்டலின் அழகைப் பற்றி நான் எப்படி விவரிக்க முடியும்?

மிகேரா கிராஸ்

இவற்றை எல்லாம் ஒரு கிறிஸ்துமஸ் விருந்தில் எப்படி பேச முடியும்? ஆனால், எனது நண்பர்கள், உறவினர்கள், கிறிஸ்துமஸ் மரம் இவை அனைத்தையும் விட பேருந்தில் என்னைப் பார்த்து சுய இன்பம் கண்ட ஒரு மனிதனின் பிம்பம் வலுவாக மனதை ஆக்கிரமித்திருக்கும் போது நான் வேறு எதைப் பற்றி பேச முடியும்? தங்கள் கேள்விகளுக்கான உண்மையான பதில்களை தங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்று தெரியாமல் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள் அந்த நல்ல மனிதர்கள்.

ஒரு ஆண்டுக்கு முன்பு நான் இந்தியாவுக்கு போன போது அந்தச் சூழலில் வாழ நான் தயார் செய்து கொண்டதாகத்தான் நினைத்தேன். நான் இதற்கு முன்பே இந்தியாவுக்கு போயிருக்கிறேன்; தெற்கு ஆசிய துறையில் படிக்கிறேன்; ஓரளவு இந்தி பேசுவேன். ஒரு வெள்ளை இனப் பெண்ணான நான் பாலியல் வெறி பிடித்தவளாக பார்க்கப்படுவேன் என்றும், பாலியல் ரீதியாக வென்றெடுக்கப்பட வேண்டிய பொருளாக கருதப்படுவேன் என்றும் நான் அறிந்திருந்தேன். சிகாகோ பல்கலைக் கழகத்தின் அறிவுறுத்தலின் படி, கவனத்தை ஈர்க்காத உடைகள் அணியவும், பொது இடங்களில் அன்னியர்களை பார்த்து புன்னகை செய்யாமலும் இருக்க மனதளவில் தயாராக இருந்தேன். என் செந்நிற கேசமும், வெண்ணிற சருமமும், நீல நிற கண்களும் தூண்டக் கூடிய குறுகுறுப்பை எதிர் கொள்ள என்னை தயாரித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால், இவ்வளவுக்கும் பிறகும் அந்த சூழலுக்கு நான் தயாராகியிருக்கவில்லை.

அந்தக் கண்களை எதிர் கொள்வதற்கு யாராலும் தயார் படுத்திக் கொள்ள முடியாது. எனது உடலை தமக்கு சொந்தமாக பார்க்கும் கண்கள்; நான் அவர்களது பார்வையை சந்திக்கிறேனா இல்லையா என்பதை பற்றிக் கவலைப் படாமல் என் உடலை சொந்தம் கொண்டாடும் கண்களை எதிர் கொள்வதற்கு எப்படி தயாரித்துக் கொள்வது? பழக் கடைக்கோ, தையல் கடைக்கோ போகும் வழியில் குத்திக் கிழித்த பார்வைகள் என்னை செதில் செதிலாக செதுக்கி சிதைத்தன. என்னுடைய நடை, உடைகள் பாலியல் சைகைகளாக புரிந்து கொள்ளப்படலாம் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாக இருக்க தயாரித்திருந்தேன். ஆனால் அந்த நாட்டில் பாலியல் சைகைகள் என்ற விஷயமே இல்லை,  பெண்களின் உடல்கள் அனைத்துமே ஆண்களால் சொந்தமாக்கிக் கொள்ளப்பட வேண்டியவை அல்லது ஆண்களால் மறைத்து பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதை ஏற்றுக் கொள்ள நான் தயாராகியிருக்கவில்லை.

நான் என் உடலை போர்த்திக் கொண்டேன், ஆனால் மறைத்துக் கொள்ளவில்லை. எனவே, ஒவ்வொரு கண்ணாக, ஒவ்வொரு படமாக நான் சொந்தமாக்கிக் கொள்ளப்பட்டேன். நான் நடக்கும், திட்டும், துரத்தும் எத்தனை புகைப்படங்கள் இந்தியாவிலும் இணையத்திலும்  உலா வருகின்றன என்று யாருக்குத் தெரியும். என்னுடைய, என் தோழிகளுடைய உருவத்தை எத்தனை அன்னியர்கள் பாலியல் பிம்பங்களாக பயன்படுத்தினார்கள் என்று யாருக்குத் தெரியும்? என்னால் முடிந்த அளவுக்கு நான் பலவற்றை அழித்தேன், ஆனால் நான் அழித்தது அந்த பெருங்கடலில் ஒரு துளி மட்டும்தான். அவர்கள் எடுத்துக் கொண்ட ஒவ்வொன்றையும் திரும்பி பெறுவதற்கு  வாய்ப்பே இல்லை.

மிகேலா கிராஸ்மூன்று மாதங்களாக நான் ஒரு பயணியின் சொர்க்கத்தில், ஆனால் ஒரு பெண்ணின் நரகத்தில் வாழ்ந்திருக்கிறேன். நான் பின் தொடரப்பட்டேன், தடவப்பட்டேன், சுய இன்பத்துக்கான பாலியல் பொருளாக பயன்படுத்தப்பட்டேன். இருந்தும் நான் நினைத்துப் பார்த்திராத பல நல்ல அனுபவங்களை பெற்றேன். என்னுடைய அந்த கெட்ட கனவு வீடு திரும்பும் போது விமான நிலைய ஓடுகளத்தில் முடிவுக்கு வரும் என்று நம்பினேன். ஆனால் உண்மையில் அங்குதான் வதை ஆரம்பமானது.

ஊருக்குத் திரும்பிய பிறகு, குங்குமத்தின் ரத்தச் சிவப்புக்கு பழகிய கண்களுக்கு கிறிஸ்துமசின் சிவப்பு நிறம் வெளிறியிருந்தது. உணவு காரசாரமற்று சப் என்று இருந்தது. எனது வலியும், மற்ற அனைத்து சத்தங்களையும் மூழ்கடிக்கும்படி ஓலமிட்டுக் கொண்டு என் ரத்தத்தில் ஓடிக் கொண்டிருந்த கோபமும் நண்பர்கள், குடும்பத்தினர், கல்லூரி வகுப்புகள், மருத்துவர் ஆலோசனைகள் எதையும் விட நிஜமாக இருந்தன. சுதந்திரமான வாழ்க்கைக்கு திரும்பி விட்டது குறித்த உற்சாக உணர்வை தாண்டிய சில மாதங்களுக்குப் பிறகு, என்னைத் துரத்தும் நினைவுகளிலிருந்து நகர்ந்து விட்டதாக நினைத்த போது ஏப்ரல் முட்டாள்கள் தினத்தன்று காலையில் செத்து விடும் ஆசையோடு கண் விழித்தேன்.

கல்லூரியின் மனோதத்துவ ஆலோசகர்கள் எனக்கு “ஆளுமை முறைகேடு” ஏற்பட்டிருப்பதாக முடிவு செய்து பரிந்துரைத்த மாத்திரைகளை நான் சாப்பிட மறுத்தேன். பொது இடத்தில் நடந்த ஒரு கலாட்டாவுக்குப் பிறகு என் விருப்பத்துக்கு எதிராக ஒரு மனநோய் இல்லத்தில் பிடித்து அடைக்கப்பட்டேன். கல்லூரியிலிருந்து “மன நோய்க்கான விடுமுறை” எடுத்துக் கொண்டு போய் விட வேண்டும் என்ற நிபந்தனையோடு விடுவிக்கப்பட்டு சில நாட்கள் அம்மாவுடன் போய் வாழ்ந்தேன். என் சித்தம் கலங்கி விட்டது என்று நினைத்தேன்.

மிகேலா கிராஸ்இது எதையும் நான் இந்திய அனுபவங்களுடன் தொடர்புபடுத்தவில்லை – அந்த அனுபவங்களிலிருந்து நான் நகர்ந்து விட்டதாக நினைத்தேன். ஆனால் ஒரு மனவியல் நிபுணர் எனக்கு பிடிஎஸ்டி (கடும் பாதிப்புக்குப் பிறகான மன அழுத்த முறைகேடு) இருப்பதாக கண்டறிந்த போதுதான் நான் அந்த அனுபவங்களிலிருந்து சிறிதளவு கூட விடுபட்டிருக்கவில்லை என்பதை உணர்ந்தேன். நான் அந்த காலகட்டத்தில் உறைந்து போயிருக்கிறேன்; விழுந்து விட்டிருக்கிறேன்; சிதறி விட்டிருக்கிறேன்.

ஆனால், நான் மட்டும் தனி இல்லை. பிடிஎஸ்டி வந்து மனநோய் இல்லத்தில் அடைக்கப்பட்ட, செத்துப் போக நினைத்த நபர் நான் மட்டும் இல்லை. சிகாகோ பல்கலைக் கழகத்திலிருந்து என்னுடன் பயணம் செய்தவர்களில் மனநோய்க்கான விடுப்பு எடுத்துக் கொண்டு, வகுப்புகளை விட்டுச் சென்ற பெண் நான் மட்டும் இல்லை.

எனது வலியை புரிந்து கொண்டது, அதை போக்க உதவா விட்டாலும் ஏற்றுக் கொள்ள உதவியது. “மன அழுத்த முறைகேடு” என்பது பொருத்தமற்ற சொல்லாக எனக்குத் தோன்றுகிறது. ஒரு முறைகேடு என்றால் அதை சரி செய்ய முடிய வேண்டும். ஆனால், நிதர்சனத்தை நேருக்கு நேர் சந்தித்ததற்கான, ஒருவரது மனிதம் பறிக்கப்படுவதை மூன்று மாதங்களாக உணர்ந்ததற்கு என்ன தீர்வு? இந்தியாவில் நான் பெற்ற அனுபவங்களுக்கும் எனக்குக் கிடைத்த ஏமாற்றங்களுக்கும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். உண்மை ஒரு பரிசு, ஒரு சுமை, ஒரு பொறுப்பு. அதை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்தியாவைப் பற்றி என்னிடம் கேட்ட நீங்கள் கேட்க விரும்பாத கதை இது. ஆனால், உங்களுக்குத் தேவையானது இந்தக் கதைதான்.

தமிழாக்கம் : அப்துல்

படங்கள், கட்டுரை – நன்றி:  சிஎன்என் CNN

  1. I have seen two particulary severe cases.

    One western girl came to Anna university on an exchange program for few months. She stayed in the University hostel. Her experiance in the hostel and outside should have affected her. Within a month she became mentally sick and can no longer stand Indians. She was repatriated on an emergency through the consulate.

    Another western girl had come to volunteer in a slum. On seeing the very pitiable condition of the slum she became very sick. In two days she cannot even stand on her leg. She begged for a return flight and be taken to airport immediately. Next day she was found a seat and was sent back.

  2. ஒங்களுக்குத் தேவையான மட்டும் அமெரிக்கக்காரங்கள கொண்டாடுவிங்க.. இவுங்க அமெரிக்காவில அப்படி என்ன பெண் நடு ராத்திரியில ’அந்த’ப் பகுதியில தைரியமா நடமாடுவாங்களாமாம்.. அட நீங்க அமெரிக்காவ ஒத்துகிறிங்களான்னு சொல்லுங்க பிறகு பேசுவோம்

    • ella a penlum anga nadamadarathu ila ana inraya sulalil 99% angal oru pennai partha ava kannai parkirathu ila … angangalai matumthan parkiranga . Apadi ilana ivlo gang rape en nadakuthu ivlo palial kodumai en pengaluku. Indiarkalaie vidatha nam angal amerika pengalaia vitu vaika podaranga, muthala jewel potu nadamada payama irunthuch ipo nadamadave payama irukarailaimaiku pengal thalla patirukanga.

  3. // வெளியிலிருந்து வந்த மிகேலா கிராஸ் இந்த நச்சுச் சூழலால் பாதிக்கப்பட்டு மனவியல் சிகிச்சை தேவைப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அதே நேரம் பாரதமாதாவின் கருணையற்ற முகத்தை உலகு அறியவேண்டும் என்று அதை அனைவருக்கும் அறியத் தருகிறார். எனினும் இதை ஒரு காலனியாதிக்க அடிமைத்தனத்தின் சதி என்று சங்க பரிவார அம்பிகள் புறக்கணிக்கலாம். அதனால் உண்மை சுடாமல் போய்விடுமா என்ன? இதோ ‘பெருமை’ வாய்ந்த இந்து ஞான மரபின் இழை அறுபடாத பாரதத்தை தரிசியுங்கள் ! //

    பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள 2-வது சுட்டியில், மிக்கேலா கிராஸ் படிக்கும் அதே சிகாகோ பல்கலைக்கழகத்தில் படிக்கும் இன்னோரு மாணவியான கேத்தரின் ஸ்டூவர்ட் என்ற கருப்பின அமெரிக்க மாணவி இந்தியாவைப் பற்றி மிகவும் தெளிவாகவும், முதிர்ச்சியுடன் கருத்து வெளியிட்டுருக்கிறாரே.. :

    ”Another woman who said she was on the same University of Chicago sponsored trip to India, posted a response on CNN iReport calling on people to resist stereotyping Indian men and recognize that sexual assault happens all over the world.

    The student, Katherine Stewart, said she dealt with her own share of harassment on the trip, but “in my experiences in India, I have met a solid handful of warm and honest Indian men — men who are also college students, men who also love the thrill of riding on a motorcycle in the busy streets, men who defended me at necessary times, and men who took the time to get to know me and my culture. And that should not at all be surprising.”

    Stewart said she believed Cross “had every right to tell her story” and in no way wanted to lessen the significance of her experience. But Stewart, who is black, cautioned that “when we do not make the distinction that only some men of a population commit a crime, we develop a stereotype for an entire population. And when we develop a negative stereotype for a population, what arises? Racism.”

    http://edition.cnn.com/2013/08/20/world/american-student-india-sexual-harassment-irpt/index.html

    இதைத் தமிழாக்கம் செய்து பதிவின் பின்னுரையாகப் போட்டால் உங்களது இந்து ஞான மரபு விரோத முன்னுரைக்கு தக்க பதிலாக அமையும்..!!!

    • அம்பி,

      இரண்டாவது சுட்டி கட்டுரையை படித்தபின் எனக்கும் கேதரின் ஸ்டீவார்டின் கருத்தை எடுத்து எழுத வேண்டும் என தோன்றியது. நீங்கள் செய்து விட்டீர்கள்!

      இந்த பெண்ணிற்கு நமது நாட்டில் நடந்த கொடுமை வெட்கப்பட வைக்கிறது என்பதை சொல்லி விட்டு சில விஷயங்கள். இந்த பாலியல் வக்கிரங்கள் இந்து ஞான மரபின் தொடர்ச்சி என்றால், அதற்கு வெளியே இருப்பவர்கள் சுத்த சுயம்பிரகாசமானவர்களா? உங்கள் கொள்கை படி, சூத்திரர்களும், தலித்களும் இந்த ஞான மரபில் சேர்க்கப் படாமல் வெளியே வைக்கப் பட்டவர்கள் தானே? கிருத்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்களும் வெளியே தானே இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம், காந்தியாக – மன்னிக்கவும்- அம்பேத்கராகவா வாழ்கிறார்கள்? இந்த பெண்ணை துன்புறுத்தியவர்களும், மற்ற வகைகளில் பாலியல் வக்கிரம் செய்பவர்களும், பார்ப்பன-பனியா ஜாதியினராக மட்டுமே அல்லவா இருக்க வேண்டும்? தசரதன் அறுபதினாயிரம் மனைவிகள் வைத்திருந்தது இந்து ஞான மரபு என்றால், அக்பர் ஆயிரம் பெண்களை அந்தப்புரத்தில் வைத்திருந்தது என்ன மரபு?

      இந்த இழி நிகழ்வில் மூன்று இழைகள் தெரிகின்றன. ஆணாதிக்கம், பெண்களை போகப் பொருள்களாக பார்ப்பது, வெளிநாட்டினர் மீதான வெறுப்பு (aversion). இம்மூன்றுமே உலகம் முழுதுக்கும் பொது என்றே நான் கருதுகிறேன். ஆணாதிக்கம், இந்தியா உட்பட, குறைந்து வருகிறது. உதாரணமாக, தமிழக அளவில் இப்போதெல்லாம் 50% மருத்துவ படிப்பு இடங்களை பெண்கள் பிடிக்கிறார்கள். 10, +12 படிப்புகளில் பெண்கள் பட்டையை கிளப்புகிறார்கள். மேலும் முன்னேற்றம் வரும். இரண்டாவது சமாச்சாரம் நிச்சயம் உலக அளவிலானது. இங்கே ஐட்டம் டான்ஸ் என்றால், சீனா, ஜப்பான் முழு நீள நீலப் படங்களை அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது! மூன்றாவது விஷயத்தை பொறுத்தவரை எனக்கு நேரடி அனுபவம் உண்டு. அலுவலக வேலையாக சில நாடுகள் சென்றுள்ளேன். கனடா தவிர எங்கும் என்னை இயல்பாய் ஏற்றது கிடையாது. என் நிறம் அப்படி. சமீபத்திய ஒரு நிகழ்வு மட்டும் உதாரணத்திற்கு. போர்சுகல் நாட்டில் ஒரு சிறிய ஊருக்கு சென்றிருந்தேன். ஒருமுறை ATM இல் இருந்து பணம் எடுக்க வேண்டி இருந்தது. எல்லாம் போர்த்துகீசிய மொழியில் இருக்க ஒரே குழப்பம். சாலையில் சென்ற நாலைந்து பேரை உதவி கேட்டேன். எல்லாரும், நான் அருகில் சென்று பேச தொடங்கியதுமே ஒரு பயந்த பார்வை பார்த்துவிட்டு அவசரமாக நடையை கட்டினர்! ஒருவர் மட்டும் பெரிய மனது வைத்து சற்று தொலைவில் இருந்த போலீஸ் காரை காட்டி அவர்களிடம் உதவி கேட்குமாறு அறிவுரை சொல்லிவிட்டு சென்று விட்டார். அந்த போலீஸ்காரர் உதவி செய்தார் என்பது வேறு விஷயம். இந்த பெண் அனுபவித்த கொடுமைக்கும், நான் சொன்ன நிகழ்விற்கும் பெரும் வேறுபாடு உண்டு என்பது சரி தான். நான் சொன்ன நிகழ்வை சிரித்து விட்டு சாதாரணமாக என்னால் கடந்து செல்ல முடிந்தது. அவரது அனுபவம் வேறு வகை. என்றாலும் வெளிநாட்டினர் மீதான aversion உலகளிவிலானது என்பதை மறுப்பதற்கில்லை.

      வெளி நாட்டில் இருந்து இந்தியா வந்து தங்கிய ஒரு பெண்ணின் பதிவை உங்கள் புண்ணியத்தில் படித்தாகிவிட்டது. அதேபோல, இந்தியாவில் இருந்து வெளி நாட்டிற்கு தனியாக சென்று வந்த பெண்களின் அனுபவ பகிர்வுகள் இருந்தால் படிக்க ஆசை. உதாரணமாக, காரகாஸ் நகரத்தில் மூன்று மாதம் தனியாக தங்கியிருந்த ஒரு இந்தியப் பெண்ணின் பதிவுகள்.

      • //இப்போதெல்லாம் 50% மருத்துவ படிப்பு இடங்களை பெண்கள் பிடிக்கிறார்கள். 10, +12 படிப்புகளில் பெண்கள் பட்டையை கிளப்புகிறார்கள்.//

        This is not a sign of reduced ‘Aanaathikkam’. Girls score more on their own and get the seats as per the rank list. In this aspect, there is very less chance of Men controlling the girls.

    • ur comment itself has the answers ,

      1. The girl u have mentioned herself had her own share of harassment, But instead of highlighting that she says about a few men who helped her taht does not nullifies the harassment she had gone through..

      2. The reason for the less harassment she faced may be becos she is an african decentant and we very well know how our men are obessed towards WHITE colour..

      3. even if we consider 50 – 50 in favour and against INDIA, Have u ever heard even one GIRL from INDIA been to US give a comment like this ?? Does that p[roves that the AMERICAN way of life is far civilised than ur so called இந்து ஞான மரபு ???

    • அம்பி அண்ணா. இந்திய நாயிகளுக்கு வெள்ளைத் தொலியை பார்த்தால்தான் நட்டுக்கும். கறுப்பு என்னிக்கும் இந்த சாக்கடை புழுக்களுக்கு ஒரு அற்பமான ஒன்றுதான். அந்த கறுப்பின பெண்ணைப் பார்த்து சுய இன்பம் கொள்ளாதது இந்த மலம் தின்னிகள் கொண்ட நிறவெறியைத்தான் காட்டுகிறதே ஒழிய இந்த தே . . . மகன்களின் உத்தம நிலையை காட்டவில்லை. இதை கொணர்ந்தமிக்கு நன்றி.

  4. What I beleive could be the reason

    1.Indians had early marriage.My grand father married at the age of 17 and grandma 15
    So the rule “No sex before marriage” made sense , if one has to wait from 13 to 17.

    2.Due to industrialization , marriages are pushed to the late twenties.It is not a problem in Western countries , sice they enjoy sex early but marry in thirties. but for Indians, carrying the “NO sex before marriage” tradition and getting married around 30 starves them.
    Though the new generation is changing , current generation has this problem

    3.Since white women change partners,our people assume
    “Anyway she will be having sex with anybody she wishes, why not with me? or May be I get a chance too” attitude

    • But now problem in india is the guys who is married and settled also need sex with other girls… is it mean they are not changing partners or how it is. white womens are changing the partners they are ready to tell it frankly but tell how many boys are ready in india?

    • சிறு வயதில் திருமணம் செய்ததால் வேண்டுமானால் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் திருமணத்திற்கு பின் மனைவியைத் தவிர தன் வக்கிரத்தைத் தணித்துக் கொள்வதற்கு எத்தனை பெண்களை வைப்பாட்டியாக வைத்திருந்தார்கள் என்ற கதைகளை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? கோவலன் கதையிலிருந்து சொல்லிக் கொண்டே போகலாம். இதிலும் நம்முடைய புராணங்கள் தான் முன்னிலை வகிக்கிறது. (தாத்தாச்சாரியாரைப் பார்த்தீர்களென்றால் தெளிவு பிறக்கும்.)

      இன்றைய நிலையில் திருமணத்திற்காக காலம் தாழ்த்த வேண்டியிருக்கிறது. அதனால் 30 வயது வரை காய்ந்து கிடப்பதும் இப்படிப்பட்ட தவறுகளுக்கு காரணம் என்றால், அந்த 30 வயது வாலிபன் அதை தணித்துக் கொள்வதற்கு ஏன் தன் தாயையோ அல்லது தங்கையையோ நாடுவதில்லை. எது தடுக்கிறது அவனை.

      வெள்ளைத் தோல் பெண்கள் மட்டும் தான் தாங்கள் விரும்பியவாறு உறவு வைத்துக் கொள்கிறார்கள் என்ற உங்கள் வெளிப்பாடு தவறானதாகும். உங்களுக்குத் தெரிந்த டாக்டர்கள் அல்லது மருத்துவமனை செவிலியர்களைக் கேட்டுப் பாருங்கள். பத்து வருடங்களுக்கு முந்தைய செய்தி. ஊரைச் சொல்லாமல் குறிப்பிடுகிறேன் – என் நண்பனின் மனைவி ஒரு +2 வரையிலான பெண்களுக்கான பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்கிறார். ஒரு நாள் 8-ஆவது படிக்கும் மாணவி மயக்கமடைந்து விழுந்துவிட பதறிய ஆசிரியைகள் அப்பெண்ணை டாக்டரிடம் அழைத்துச் செல்ல, அப்பெண் கர்ப்பம் தரித்திருக்கும் செய்தியை டாக்டர் சொல்ல, ஆசிரியைகளுக்கு மயக்கம் வந்து விட்டதாம். அம்மருத்துவமணை செவிலியர் மூலம் அவர்கள் அறிந்தது – அப்பள்ளியைச் சார்ந்த 40% பெண் பிள்ளைகளுக்கு (பல்வேறு வயதினர்) இவ்வாறு சுத்தம் செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

      உலகலாவிய அளவில் பெண்களை செக்ஸிற்கான ஒரு வடிகால் உபகரணமாகவே பார்க்கும் நிலையில் மனோபாவம் இருக்கிறது. உங்கள் கருத்துப்படியே வெள்ளைத்தோல் பெண்கள், திருமணத்திற்கு முன் விரும்பிய வகையில் உறவு வைத்துக் கொள்கிறார்கள் என்றால் அங்கும் பெண்களை பலாத்காரம் செய்வது குறையவில்லை.

      உங்களுக்குகாக ஒரு சென்ஸஸ் விபரம்:

      உலகலாவிய அளவில் பெண்கள் பாலியல் வக்கிரத்திற்கு அதிகளவில் உள்ளாகும் முதல் 10 நாடுகளின் பட்டியல்:
      1). யு.எஸ். ஆப் அமெரிக்கா —- 84,767
      2).(இந்து ஞான மரபில் ஊறிய) இந்தியா —- 22,172
      3). யு.கே. —– 15,934
      4). மெக்ஸிகோ —– 14,993
      5). ஜெர்மனி —– 7,724
      6). ஸ்வீடன் —– 5,960
      7). ரஸ்யன் பெடரேஷன் —— 4,907
      8). தாய்லாந்து —— 4,636
      9). கொலம்பியா —— 3,149
      10). பெல்ஜியம் —— 2,991

      மூலம்: யு.என். ஸ்டேடிஸ்டிக்ஸ்

      இந்த புள்ளி விபரத்தில் நம் ஞான மரபில் ஊறிய இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். நம் நாட்டில் பேசுவது போல் கலாச்சாரம், பண்பாடு என்று வேறு யாரும் அதிகம் பேசுவதாகத் தெரியவில்லை. அப்படிப் பேசியே அதை மீறுபவர்களும் நம் நாட்டைப் போல் வேறு எங்கும் அதிகமில்லை. பலாத்காரம் செய்யும் போது அண்ணா என்று அழையுங்கள் என்று சொன்ன அஸ்ரம் பாபு கூட அச் சிறுமியின் வாயைத் திறக்கவிடாமல் (திறந்தால் அண்ணா என்று சொல்லிவிடுவாறோ) தன் காரியத்தை முடித்திருப்பாரோ என்னமோ?!
      நல்லவேளை அந்தப் பெண்மணி அஸ்ரம் பாபுவையும், சங்கரனையும், நித்தியானந்தா வகையறாக்களையும் சந்திக்கவில்லை. சந்தித்திருந்தால் இந்தியாவின் ஞான மரபு இன்னும் சந்தி சிரித்திருக்கும். அந்த வகையில் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்வோம்.

      • what about does those countries where women don’t have freedom to report their problems or consider it a shame to go to the police,you know who i am talking about?

      • secondly Nityananda is not accused of rape,he is accused of having a consensual sexual relationship with a woman which is wrong as a madathipathi but not wrong legally.

        • நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை. இந்து ஞான மரபுப்படி அந்த பெண்ணை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது சரி என்கிறீர்களா? இந்திய சட்ட மாண்புபடி அது தவறில்லை என்கிறீர்களா?

      • இது போன்ற புள்ளியல் விவரங்களில் மக்கள் தொகையை கணக்கில் கொள்ள வேண்டுமே ஐயா! உதாரணமாக, மெக்ஸிகோவின் மக்கள் தொகை 11 கோடி. இந்தியாவின் மக்கள் தொகை நூறு கோடி. இதை கணக்கில் கொண்டால் இந்தியாவை போல், மெக்ஸிகோவில் சுமார் ஆறு மடங்கு அதிகம் வருகிறது!

          • 5.2.3 மற்றும் 5.2.3.1 – க்கான பதிலாக இதை எடுத்துக் கொள்ளுங்கள்.
            மக்கள் தொகை விகிதாசார அடிப்படையில் இதை நோக்குவதே தவறு. ஏனெனில் நம் இந்தியாவில் தான் நதிகளை பெண்ணாக உருவகப்படுத்தி அழைக்கிறோம். தேசத்தை பெண்ணாக உருவகப்படுத்தி சேலை உடுத்திவிட்டிருக்கிறோம். பூமியை தாய் மண் என்று அழைக்கிறோம். இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். இப்படியாக பெண்ணைப் போற்றுவதாக பெருமைப்பட்டுக் கொண்டே பெண்ணை வக்கிரமாக எப்படி கையாள்வது (புணருவது)என்பதையும் இதிகாசங்கள் மூலமாக சொல்லிக் கொடுத்திருக்கிறோம்.
            ஆகவே, குறிப்பாக பிரகாஷ் அவர்களுக்கு மல்லாக்கப் படுத்துக் கொண்டு நமக்கு நாமே எச்சில் துப்பிக் கொள்ளவேண்டாம்.

      • அமெரிக்காவில் கற்பழிப்பு என்பது,
        மனைவிக்கு விருப்பம் இல்லாமல், அல்லது காதலியுடன் காண்டம் இல்லாமல் உறவாடுதல் குறிப்பாக போதையில் இருக்கும் போது.. அந்த நாட்டு சட்டத்தை இந்தியாவில் கொண்டுவந்தால் பாதி ஆண்களுக்கு சிறைவாசம்தான்..

        18 Plus; அமெரிக்காவில் அதிகமான கற்பழிப்புக்கு காரணம் கலாசாரமே!
        http://www.nambalki.com/2013/01/18-plus_17.html
        நன்றி நம்பள்கி

  5. நம் பாரத தேசம், பண்பாடு, கலாசாரம் உள்ளிட்டவற்றில் உலகிற்கு வழிகாட்டும் தேசமாக உள்ளது…..:-))))))) :-)))) சிப்பு வந்திருச்சு சிப்பு….

  6. மதவாத ஆணாதிக்கமும், முதலாளித்துவ சமுதாயம் வளர்த்துவிடும் வக்கிர பாலுணர்வு கிளர்ச்சிகளும், பெண்களை, அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் சரி, வெறும் போக பொருளாக மட்டுமே காட்டுகிறது! ஆண்மை என்றாலே பெண்களை இம்சைபடுத்தி இச்சையை பூர்த்திசெய்துகொள்வது என்றுதான் இளைஞர்களின் புரிதல் இருக்கிறது!புராணஙகளில் கட்வுளர்கள் செய்தலீலைகளும், சினிமா கதானாய்கர்கள் செய்யும் லீலைகளும், காசுக்காக விலைமாதர்கள் செய்யும் லீலைகளைவிட கேவலமாக இருக்கிறதே!

    • \\!புராணஙகளில் கட்வுளர்கள் செய்தலீலைகளும், சினிமா கதானாய்கர்கள் செய்யும் லீலைகளும், காசுக்காக விலைமாதர்கள் செய்யும் லீலைகளைவிட கேவலமாக இருக்கிறதே!//

      அஜாதசத்ரு அநியாயமாக அம்பியின் சினத்திற்கு ஆளாகிவிட்டீர்கள்.23 ஆம் புலிகேசியின் எச்சரிக்கை நினைவிருக்கட்டும்.
      ”என்றைக்கு என் சினத்திற்கு ஆளாகி சின்னாபின்னமாக போகிறீர்களோ தெரியவில்லை”
      நாளைக்கு பாருங்கள்

      • மிக்கேலா கிராஸ் கோவா விடுதியில் தங்கி இந்து ஞான மரபு ஆராய்ச்சி செய்யாமல் அஜாதசத்ரு அய்யாவிடம் வந்து புராண விளக்கம் கேட்டிருக்க வேண்டும்..

        • //அஜாதசத்ரு அய்யாவிடம் வந்து புராண விளக்கம் கேட்டிருக்க வேண்டும்….//

          நிச்சயமாக!நான் இந்துக்களை மட்டும் நான் குறை கூறவில்லையே! பூகோள அடிப்படையில் குளிர்பிரதேசங்களில், மக்கட்தொகையும், அவர்கள் பெண்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தையும் மற்ற வெப்ப பிரதேசநாடுகளில் மக்கட்தொகையும், பெண்கள் சுதந்திரத்தையும் ஒப்பிட்டு பாருஙகள்!

          மத அடிப்படைவாதம், மக்கட்தொகை பெருக்கம், பெண்களை பிள்ளைபெரும் எந்திரமாக கருதும் கலாச்சாரம், மனித மனங்களை வக்கிரமாக செயல்பட வைக்கிறது! சாமியார்கள் கூட விதிவிலக்கில்லை! சிறுமிகளை காளிதேவியாக பூஜித்து, பலர் புணர்வது தாந்த்ரிகம் ( ஆதாரம்:ராஜச்தானத்து அந்தப்புரஙகள்).இந்து, கிருத்துவ , இசுலாமிய குருமார்கள் சிறுவர்களை புணர்வது இந்தநூற்றாண்டிலும் தொடர்கிறது! காரணம் செயற்கையான மத கட்டுப்பாடுகள், இயற்கையான பாலியல் வேதையை தடை போட முடியாததினால்தான்! துருவ பிரதெசங்களில் மதக்கட்டுப்பாடுகள் பெண்கள் சுதந்திரத்தில் தலையிடுவதில்லை! பூமத்ய வெப்ப பிரதேசங்களில் கடவுளர் கூட பெண்களுக்கு வஞசகம் செய்திருக்கிரார்கள் ! வெங்கடெசன் மன்னிப்பாராக! க்ரிஷ்னனையும், ராமனையும் வைத்துக்கொண்டு பெண் சுதந்திரம் பற்றி பேச முடியுமா? மனசாட்சியுடன் சிந்திப்பீர்!

  7. இங்கு இருக்கும் இந்தியர்களும் சுத்தமாக கருப்பின பெண்களை விரும்புவதில்லை. அவர்களை date செய்வதில்லை. நண்பர்களாக கூட இருபதில்லை. வெள்ளையாக இருப்பது தான் அழகு என்று கருதுவது. இங்குள்ள வெள்ளைக்காரர்களும் கருப்பின் பெண்ணுடன் போவதே இல்லை என்று சொல்லாம். கருப்பு அழகு இல்லை என்று நினைப்பது ஒரு காரணம்.

    ஆனால், வெள்ளைக்காரிகள் அதிக அளவியல் கருப்பின ஆண்களுடன் செல்கிறார்கள்; ஏன் திருமணமும் செய்து கொள்கிறார்கள். நம்ம ஊரில் உயர் ஜாதி பெண்கள் அவர்களை விட கீழே உள்ள ஜாதி ஆணை கல்யாணம் செய்வது மாதிரி என்று என்று வேண்டுமானால் வைத்துக்கோள்ளலாம்.

    இந்திய ஆண்கள் மனைவிகள் தான் எல்லா வீட்டு வேலையையும் செய்யவேண்டும் என்ற எண்ணம் இங்கும் உண்டு; Division of labor கிடையாது. பெற்றோர்கள் தான் காரணம். ஆணாதிக்கம் அடுத்த காரணம்.

    வெள்ளைக்காரிகள் இதானால் இந்திய ஆண்களை திருமணம் செய்து கொள்வதில்லை!

  8. // என்னுடைய நடை, உடைகள் பாலியல் சைகைகளாக புரிந்து கொள்ளப்படலாம் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாக இருக்க தயாரித்திருந்தேன். ஆனால் அந்த நாட்டில் பாலியல் சைகைகள் என்ற விஷயமே இல்லை, பெண்களின் உடல்கள் அனைத்துமே ஆண்களால் சொந்தமாக்கிக் கொள்ளப்பட வேண்டியவை அல்லது ஆண்களால் மறைத்து பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதை ஏற்றுக் கொள்ள நான் தயாராகியிருக்கவில்லை.// இவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை இங்கே ஆண்களுக்கு இந்த கருத்து இருக்கிறது. நிறைய பேர் அப்பிடியில்லை என்று வாதிடுபவர்கள் அவர்கள் மிகேலா கிராஸ் போன்றோர் வைக்கும் குற்றசாட்டை ஏற்றுகொள்வதில்லை, அப்படி ஏற்றுகொல்பவர்கள் மட்டும் இந்த சமுகத்தில் இல்லை. ஒவ்வொரு பெண்ணும் இந்த நாட்டில் மனநோய்க்கு ஆளாகி கொண்டுதான் இருகிறார்கள். இவர்கள் வைக்கும் குற்றசாட்டை விட இந்திய பெண்கள் வைக்கும் குற்றசாட்டை கேட்க்க கூட இவர்களால் முடியாது.

  9. அடித்தட்டு ஆண்களின் எண்ணம் என்ன வென்றால் வெள்ளைகார பெண் செக்ஸ் வெறி பிடித்தவள் என்ற நினைப்புதான் அதற்கு காரணம் “போரனோகிராபி” படம் பார்த்து அப்படி ஆகியிருக்கிறான்.எப்படி மலையாள பெண்கள் மீது அப்படி ஒரு எண்ணம் ஒரு கிராமத்தானுக்கு வருகிறதோ அதேப்போல்..!
    இதுப்போன்ற எண்ணங்கள் வளர்வதற்கு மதமா தூண்டிவிடுகிறது? இதற்கும் இந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம்?

  10. I have lived in almost all continents. I am not able to understand why an North American or or South American or South East Asian or European wants to visit India. Only Africans may find Indian cities better than their country.

  11. Assuming Mexico is in Latin America,

    Apart from Western Europe,US,Canada and parts of Eastern Europe like Hungary/Romania/Poland,Australia/NZ/Singapore/Malaysia,India has much less crime and better weather and a better place to live.

    You think this is crime,i want you guys to go to South America/Latin America.

  12. என் தம்பி ஒருவன் என்னுடன் சாட் பண்ணும் தருணமெல்லாம்,
    என்ன பண்ணுறீங்க என்று வினவுவான், ஒன்றும் செய்யவில்லையடா என் சகோதரா
    என்று நான் பதில் இயம்பினால்,
    வேறு யாருடனும் சாட் செய்யவில்லையா என்று பதில் கேள்விஉரைப்பான்
    இல்லையே என்று மீண்டும் இயம்பினால்,
    வேறு எந்தப் பெண்ணிடமும் கதைக்கவில்லையா
    என்று மீண்டும் ஒருமுறை சந்தேகமாய் வினவுவான்..
    ஆமாம் எனதருமை சகோதரா, வேறு எவருடனும் பேசவில்லை என்று உறுதியளித்தாலும்
    அவன் மனதில் ஐயம் அகலவே இல்லை.
    முகநூலும், இணையமும் பெண்ணை தேடும் இடமாகவே
    என் சகோதரனனுக்கு சொல்லப்பட்டிருப்பதை நான் என்னவென்று சொல்வேன்.
    இணையம் ஒருவரபிரசாதம்,
    நாம் நினைப்பதை ஒரு சொடுக்கில் நம் கண்முன்னே கொணர்ந்து நிறுத்தும் என்ற புரிதல் இருப்பினும்,
    நாம் கணநேரமும் நினைப்பது பெண்ணின் அங்கங்களை என்று எப்போது உணருவோம்.

  13. விஜயபாசஸ்கர்! இணைய தளம் புராணங்களில் வரும் அட்சயபாத்திரம், காமதேனு போல, எதை தேடுகிறோமோ அதை தருகிறது! கெட்ட விடயங்களை தடை செய்ய சட்டமிருக்கிறது! ஆனால் பயனாளிகளுக்கு தூண்டில் போடவே இவை ஓரளவு அனுமதிக்கப்படுகிறது! எல்லாமே வியாபாரத்திற்கு என்ற முதலாளித்துவ சூழலில் இவை தவிர்க்க முடியாதவை! ஆனால்,நாளடைவில் சகித்துக்கொள்ள நாம் பழகிகொள்ள வேண்டும்! கெட்ட விடயஙகளைநாடிச்செல்வோர் எத்தனை சதவீதம்? அடிப்படையான குடிமைப்பயிற்சி கல்வி மூலம் கொஞசம் தடுக்கலாம்!

  14. இந்திய இதிகாசத்தில் சமீபத்திய முக்கிய நிகழ்வுகள். அரசாங்கத்தால் புகாராக பதிவு செய்யப்பட்டவை மட்டும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாதவை இவை போல் பதின்மடங்கு அதிகமாகத் தான் இருக்கும். திருச்சி சிறுமி சுல்தானா போல் சிதைக்கப்பட்டவர்கள் எத்தனை பேரோ?

    இந்த நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள், அண்ணா என்று அழைக்க வேண்டும் என்று சொன்ன அஸ்ரம் பாபுவின் அறிவுரையை அறியாமல் போனதுதான் மிக முக்கிய காரணமாகும்.

    February 28: An eight year old girl is allegedly raped inside the premises of a municipal school in Delhi when the child went to eat her midday meal.

    March 2: A 19 – year old girl in Delhi alleges that she was gang raped by three men with whom she shared an autorickshaw in Ghaziabad, Uttar Pradesh.

    March 4: A three year old girl is kidnapped while sleeping next to her mother and gang raped in Mallapuram district

    March 8: A 19 year old girl attending coaching classes for medical entrance exams in Kota, Rajasthan is gang-raped in front of her male friend by two former military persons.

    March 10: A 33 year old woman alleges that she was gang-raped by a group of men in a moving car after they abducted her from East Delhi.

    March 11: A minor girl is allegedly gang-raped in Kolkata’s Jadavpur area.

    March 15: A Swill woman tourist is gang-raped by seven men in Datia district of Madya Pradesh in front of her husband.

    April 15: A five year old girl is in stable condition after being raped and tortured by a man who held her in a locked room in New Delhi for two days.

    April 17: A four year old girl is allegedly abducted from Ghansaur in central India. She dies a week later from cardiac arrest in Nagpur.

    June 3: A 21 year old Irish charity worker is allegedly drugged and raped while volunteering with an aid agency in Kolkata.

    June 4: An American woman is allegedly gang-raped by three men in Manali, Himachal Pradesh.

    June 20: A 22 year old medical student in India is reportedly abducted and gang-raped on her way to her college apartment at Kasturba Medical College in Karnataka.

    July 5: A 22 year old woman training to be a nun is held captive and gang-raped for nearly a week by a group of men in Odisha.

    August 10: A 7 year old child is reportedly raped in the restroom on the Howrah-Kurla Express in Chhattisgarh state.

    August 22: A woman police constable is gang-raped by a gang of robbers near Jagaldaga in Jharkhand.

    August 22: A 22 year old woman photojournalist is gang-raped by a group of five men in Mumbai. Police arrest all five suspects.

    August 23: A three year old girl is raped by her school bus driver in Bahraich, Uttar Pradesh.

  15. அனைத்து சிருமிகளுக்கும் இலவச கல்வியுடன், கட்டாய கராத்தே பயிற்சியும் தரலாம்! மகளிருக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய புலனாய்வு நிருவனம் தனி பிரிவைநியமித்து கண்காணிக்கலாம்! தொண்டு நிறுவனங்கள் வீட்டுக்கு வீடு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்! குறிப்பாக மாணவிகள் சமூகத்தொண்டாக இதை செய்யலாம்!

  16. it is funny that nobody did this when people went to the temples full of eroticism but all this happens only when liberal/secular/dravidian cinema shows vulgarity making men commit suchc rimes.

    • டெல்லி பாலியல் பலாத்காரக் குற்றவாளிகளின் பின்னனி பற்றி எல்லா பத்திரிக்கையிலும் விரிவாக வெளி வந்த பின்னும் எப்படி இங்ஙனம் சப்பை கட்டுகிறீர்களோ தெரியவில்லை. அந்த சிறுவன் சென்னையில் வந்து தங்கியிருந்து திராவிட சினிமாக்களைப் பார்த்து பின் தான் அந்த செயலில் இறங்கினான் என்று நீங்கள் சொல்வது 100 – க்கு 120% சரியான ஒரு அறிவுபூர்வமான ஆராய்ச்சி என்பதை ஒத்துக் கொள்கிறோம்.

        • பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவதில் தமிழ்நாட்டிற்கு இது தான் காரணமென்று எப்படி உறுதியாக கூறுகிறீர்கள்? வடநாட்டினருக்கு வேறு காரணம் என்றால் அதை விளக்குங்களேன். பாலியல் விரசம் மிகுந்த சிற்பங்கள் நிறைந்த கோயில்கள் (கஜீரஹா போன்ற கோயில்கள்) இல்லாத நாட்டிலும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகிறார்களே அதற்கு என்ன காரணம் என்பதையும் சொல்லுங்களேன்.

    • பெண்களின் மீதான வன்முறை இப்பொதுதான் தோன்றியதல்ல! என்று தில்லைநடராஜன் காளி மகா சக்தியை ஆணுறுப்பைகாட்டி அவமானப்படுத்தி தோல்வியுறச்செய்ததாக புனையப்பட்டதோ, அன்றே ஆணாதிக்கமும், அதற்கு இடம் கொடாத பெண்ணை வண்புணர்ச்சி செய்து தண்டிப்பதும் ஆரம்பித்தாகிவிட்டது! முற்றும் துறந்த முனிவன் ஆசிரமத்திலிருந்து கொண்டு, கந்தர்வனைநினைத்து மயங்கிய பெண் தெய்வத்தின் தலை கொய்யப்பட்டது! ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்று பெற்ற மகனே கொன்றது ஆணாதிக்கத்தின் உச்சம்! ஆதி பராசக்தியான காளியை நிர்வாண சாமியாக்கி, காளி பூஜை என்ற பெயரிலும், எல்லம்மா என்ற பெயரிலும் சிறுமிகளை சீரழிக்கும் செயல் நடக்கிறதே!
      இதற்கு எந்த மந்திரம் சொல்கிரார்கள், என்ன பூஜை செய்கிரார்கள் ? இவற்றின் பரிணாம வளர்ச்சிதானே தேவ தாசி முறை? உண்மையில் பக்தியை வளர்க்க ஏற்பட்டிருந்தால், அவர்களை எல்லா சாதியினருக்கும் மேலாக அல்லவா சமூகம் மதித்திருக்க வேண்டும்?

      • // பெண்களின் மீதான வன்முறை இப்பொதுதான் தோன்றியதல்ல! என்று தில்லைநடராஜன் காளி மகா சக்தியை ஆணுறுப்பைகாட்டி அவமானப்படுத்தி தோல்வியுறச்செய்ததாக புனையப்பட்டதோ, அன்றே ஆணாதிக்கமும், அதற்கு இடம் கொடாத பெண்ணை வண்புணர்ச்சி செய்து தண்டிப்பதும் ஆரம்பித்தாகிவிட்டது! //

        பக்கத்தில் இருந்து பார்த்தது போலவே பேசுகிறீர்களே.. நடராஜர் சிலை எங்காவது பிட்சாடனரைப் போல் அம்மணமாக இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா..?! அப்படி பார்த்திருந்தால் அது நடராஜராக இருக்காது, வேறு ஏதாவது புள்ளிராஜாவாக இருக்கலாம்.. மேலும், கையில் வெட்டரிவாள் வைத்திருக்கும் காளியை ஆணுறுப்பைக் காட்டி அவமானப்படுத்தவோ அச்சுறுத்தவோ முடியுமா..?! நடராஜருக்கும் காளிக்கும் நடந்த நடனப் போட்டியில் இறுதியாக நடராஜர் ஒரு காலை உயர்த்தியபோது (ஊர்த்துவ தாண்டவம்) அதைப் போல காலை உயர்த்த காளியின் நாணம் தடுத்தது.. பெண்கள் மட்டும் நாணத்தை விட்டுவிட்டால் ஒரு பயல் குடும்பம் நடத்தமுடியாது என்று ஆணாதிக்கவாதிகள் உணரவேண்டும்..

        // முற்றும் துறந்த முனிவன் ஆசிரமத்திலிருந்து கொண்டு, கந்தர்வனைநினைத்து மயங்கிய பெண் தெய்வத்தின் தலை கொய்யப்பட்டது! //

        ஒரு கந்தர்வ ஜோடியின் (கார்த்தவீர்யார்ஜுனன் & மனைவியர் என்றும் கூறுவார்கள்) காதல் களியாட்டத்தில் சில நொடிகள் கவனம் செலுத்தியதால் ரேணுகா தேவி தவம் வழுவியதாகக் கூறி கண்வரான ஜமதக்னி முனிவர்தான் அவசரப்பட்டு ஆணாதிக்க உணர்வு முந்த தண்டனை கொடுத்தார் என்றால், அதை விட கொடுமையாயிருக்கிறது ரேணுகாதேவி கந்தர்வனை நினைத்து மயங்கினார்கள் என்று நீங்கள் கூறுவது..

  17. devadasis are legalized anthapura relationship,when they merely exist in the personal quarters,they become whores but when you legalize it,they get a legal status and they had a lot of wealth,even more than the queens.

    Having said all this,i do not support the system.

    The rishi did not fore go sex,he just used to meditate.

  18. வினவின் வாசகன் என்ற முறையில் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.

    குறிப்பாக இந்தப் பதிவின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்களென்று எனக்கு சரியாகப் புரியவில்லை.

    1. இது சங்பரிவாரங்களின் முகத்தில் இந்த வெள்ளைக்காரப் பெண்ணின் வாயால் காரி உமிழவைக்கும் முயற்சி மட்டும்தானா?

    2. இந்தப் பெண் பாலியல் துன்பத்துக்கு ஆளானது நுகர்வுகலாச்சாரத்தின் விளைவு என்றால், அதை ஊக்குவிக்கிற, அதன் உச்சத்திலிருக்கிற ஒரு அமெரிக்கப் பிரஜையின் இந்தப்பேட்டியை வினவு பதிப்பித்திருப்பதன் அடிப்படை என்ன?

    3. நாம் பழைய பாலியல் ஒடுக்கு முறையிலிருந்து முற்றிலும் விடுபடாமலும்,பாலியல் தேவைகளைச் தீர்த்துக்கொள்வதற்கான சுதந்திரமான சூழல் இல்லாமலும் இருக்க, இணையங்களும், இதர ஊடகங்களும் பாலியல் தூண்டுதல்களைத் தொடர்ந் செய்துகொடே இருப்பது தானே இதற்கெல்லாம் காரணம்.

    4. ஆணும் பெண்ணும் முதல் உடலுறவு அனுபவத்தை சராசரியாக 13 வயதிலேயே அனுபவித்துவிடும் அமெரிக்கச் சூழலையும், 25 வயதிலும் முதல் முத்தத்தைக்கூட அனுபவித்திராத இந்தியச் சூழலையும் ஒப்பிடாமல், இங்கு நிலவும் பாலியல் ஏழ்மையைப் பற்றிய துளிகூட விவரிக்காமல், சங்க பரிவாரங்களையும், நுகர்வு கலாச்சாரத்தையும் மட்டும் விமர்சிப்பது ஞாயமா?

    5. வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்கிற ரீதியில் ஏழ்மையையும், பொருளாதாரப் பின்னடைவையும், வர்க்க பேதங்களையும் பற்றி இவ்வளவு எழுதும் வினவு, பாலியல் ஏழ்மையையும் அதற்கான சரியான தீர்வையும் விரிவாக எழுதாது ஏன்?

    6. இந்த பதிவைக்கூட அப்படித்தானே அணுகி இருக்க வேண்டும்?

    இத்தனைக் கேள்விகளுக்கும் பின்னால் ஒரு சிறு மன உறுத்தல் உள்ளது. அந்த வெள்ளைக்காரப் பெண் உன் எதிரில் வந்தால் நீ கண்களால் தடவியிருக்க மாட்டாயா? என்று என் உள்மனது கேட்கிறது.

    இதில் எந்த உத்தமத்தனமும் தேவையில்லையென்றே நினைக்கிறேன்.

  19. women are always pretends to be sex machine by some of the mankind in all of the countries. And India is not an exception. Neither all countries are good nor bad. But the behavior of the people does affect the people outside the country. they can’t stand while the want to stand with our culture. This suits to everyone. But it is a shame this is happened and still happening in our country. As a girl i can understand the feeling of treating a girl like a sex slave.

Leave a Reply to Mindspeaker பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க