privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்கா அகம் பிரம்மாஸ்மி அமெரிக்காவே உன் சாமி !

அகம் பிரம்மாஸ்மி அமெரிக்காவே உன் சாமி !

-

து நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது !
எது நடக்குமோ
அதுவும் நன்றாகவே நடக்கும்.
மகாபாரதத்தை
புரிந்து கொள்ள முடியாதவர்கள்
மன்மோகன் சிங்கை புரிந்து கொள்ளுங்கள்!

dollar-rupeesதனியார்மய – தாராள மய
தர்ப்பணக் கரையில்
இந்திய ரூபாய்க்கு
எள்ளும், தண்ணியும் இரைத்து விட்டு
ஏங்கி நிற்கும்
பங்குச் சந்தை அர்ச்சுனர்களுக்கு
பக்குவமாக விளக்குகிறார்.

“கருமம் டாலரில் உதித்தது
டாலர் பரமாத்மாவினின்றும் வந்தது
ஆகையால் எங்கும் நிறைந்துள்ள டாலர்
யாண்டும் அமெரிக்க யக்ஞத்தில் நிலைபெற்றுள்ளது”

வினையின் விளை பயனைக் கணக்கிட்டு
சாங்கியம் பார்ப்பவர்களுக்கு,
பரமாத்மா ஒபாமா
பட்டென விடையறுக்கிறார்,
“இல்லாததற்கு இருப்பு கிடையாது
இருப்பது இல்லாமல் யாவதுமில்லை
உண்மையை அறிந்தவர்க்கே
இவ்விரண்டின் முடிவு விளங்கும்”

ரூபாய் என்னுடைய
கீழான பிரகிருதி
டாலர் என்னுடைய
மேலான பிரகிருதி
இரண்டும் நானே
முரண்டு பிடிக்காமல்
கடமையைச் செய்!
பலனை எதிர்பார்க்காதே!
அகம் பிரம்மாஸ்மி
அமெரிக்காவே உன் சாமி !

விழுந்து கும்பிட்டே
வில் வளைந்த பாஜக படை
ஆர்ப்பரிக்கிறது குருச்சேத்திரத்தில்,
“சூதாடத் தெரிந்தால் ஆடு !
இல்லையேல்,
சொக்காட்டானை விட்டு ஓடு!
பங்குச் சந்தையிலிருந்து
அழகிப் போட்டி வரை
‘பாரத மாதாவை’ வைத்து சூதாடி
சேர்த்த பணத்தை
மதிப்பிழக்க வைத்த நீயுமொரு மன்னனா?
என்னிடம் விடு பாரதமாதாவை!
இரண்டே மாதத்தில்
எத்தனை டாலருக்கு ஆடுகிறேன் பார் !” என
மோடி முறுக்குகிறார்.

சேலை,
துகிலுரியப்படுவதைப் பார்த்து
பீதி வேண்டாம் !
அதன் ‘ஆக்சுவல்’ நீளம்
அதிகம் என்பதைப் புரிந்து கொண்டு
அமைதியாய் இருங்கள் ! – என
ஆசுவாசிக்கிறார் சிதம்பர ஜீவாத்மா !

பொருளாதாரம்
ஆட்டத்தின் விதிப்படி டாலரோடு தேசத்தை அனுப்பி வைக்கும் மன்மோகனின் மன உறுதி

யார் என்ன சொன்னாலும்
ஆட்டத்தின் விதிப்படி
டாலரோடு தேசத்தை அனுப்பி வைக்கும்
மன்மோகனின் மன உறுதியைப் பார்த்து
காண்டீபத்தை எறிந்து விட்டு
‘தலைவா’ என காலில் விழுகிறான் அர்ச்சுனன்

நீரா ராடியாவின் டேப்பில்
அம்மணமாய் திரியும்
டாடாவின் ஆசைகள்
உலகுக்கு உபதேசிக்கிறது.
“…. பிரச்சனையே, அரசின் கொள்கைகளை
தனியார் சுய லாபத்துக்காக மாற்றுவதுதான்!!”
நித்ய கருமத்தின் பூஜா பலன்களை
சுத்த அயோக்கியன் சுலோகமாக்கும் வித்தை
டாடா பகவானுக்கும் வாய்த்திருக்கிறது.

அன்னிய முதலீடு
எனும் அஸ்த்திரம் ஏவியே
நாடு வளருது – வல்லரசாகுது
என கண்ணை மறைத்த கயவர்களின்
இப்போதைய கவலையும்,
ரூபாய்க்கு மதிப்பு குறைந்ததை விட
டாலரின் அழகு
கெட்டு விடக் கூடாது என்பதுதான்.

காய்ந்த வயல்கள்
கலர், கலராய் மொபைல்கள்,
முறிக்கப்பட்ட தொழில் இதயங்கள்
முதுகுக்குப் பின்னால் கணினிகள்
வாடிப்போன தாய் முலைகள்
வகைவகையாய் புட்டிப்பால்கள்!
அன்னிய முதலீட்டில் யாருக்கு லாபம்?

விவசாயிக்கு மதிப்பில்லாத நாட்டில்,
தொழிலாளிக்கு மதிப்பில்லாத நாட்டில்,
நெசவாளிக்கு மதிப்பில்லாத நாட்டில்,
மீனவருக்கு மதிப்பில்லாத நாட்டில்,
பணத்துக்கு மட்டும்
மதிப்பு வருமா என்ன?

தேசத்தின் மதிப்பை
உலகச் சந்தையில் விற்று விட்டு,
பணத்தின் மதிப்பை
பங்குச் சந்தையில் தேடும்
இந்த அயோக்கியர்களே ஒரு அன்னிய முதலீடு!

டாலர் - ரூபாய் மோதல்
டாலருக்கு நிகராக எகிற முடிந்த அடிமைகள் இப்போது எகிருங்கள் பார்க்கலாம்.

நடக்கும் நாடகத்தைப் பார்க்க
இது மகாபாரதம் அல்ல,
அதனினும் கொடிய மறுகாலனியம் !
உபதேசம்
இப்போது பகவத்கீதையான
உலகமயம்.

எல்லையில்
இரண்டு அடி வந்து விட்டானாம் பாகிஸ்தான்!
எகிறி குதிக்கும் அம்பிகளே
உன் தொண்ணையில் வந்து
‘ஆய்’ போய் விட்டான் அமெரிக்கா!
டாலருக்கு நிகராக
எகிற முடிந்த அடிமைகள்
இப்போது எகிறுங்கள் பார்க்கலாம்.

– துரை சண்முகம்

    • ரூபாய் மதிப்பு குறைவை மட்டும் பேசாமல் பார்பனர்கள் பற்றிய வார்த்தை எதைற்கு இங்கு சேர்க்கப்பட்டது? இதுதான் மதவாத அரசியலா?

      • இங்கு இருக்கும் பதிவிர்க்கும் இந்த tag ( பார்ப்பன இந்து மதம்) சொல்லிற்கும் என்ன சம்பந்தம், ஹிந்துகளை பற்றி ஒரு நாளும் வினவினால் தவறாக எழுதாமல் இருக்க முடியாத ?

  1. தொண்ணையில் என்பதை தொண்டையில் என்று படித்து வயிறு வலிக்க சிரித்தோம்…

    • அமெரிக்கா ஆங்காங்கே ஆய் போய்வதைப் பார்த்து ஓடு அண்டு பிரதர்சுக்கு வயிறு வலிக்க சிரிப்பு வருகிறதாக்கும்.. வாய் திறந்து சிரித்துக் கொண்டிருக்காதீர்கள்..

  2. “” தேசத்தின் மதிப்பை
    உலகச் சந்தையில் விற்று விட்டு,
    பணத்தின் மதிப்பை
    பங்குச் சந்தையில் தேடும்
    இந்த அயோக்கியர்களே ஒரு அன்னிய முதலீடு!””

    முற்றிலும் உண்மை !

  3. Once upon a time our ‘Indian Idiots’ made YAGA in Hyderabad to bring up the Doller from inflation. The god (mad!) answer their prayer. Now Doller rises against rupees and India sucks. Mad Bless India. It is better to buy aluminum plates now itself for begging over the road otherwise that price will also be raised. Thank mad, we may have GABALAMS instead aluminum plates as soon as BJP come to power. Human flash may me served along with GABALAM after all everybody going to become AGORY. அகம் பிரம்மாஸ்மி

  4. ஆரம்பத்தில் நக்கலும் நையாண்டியுமாக ஆரம்பிக்கும் கவிதை முடிவில் காத்திரமாக பொடனியில் அடிக்கிறது. தோழர் துரை சண்முகத்தின் கவிதை வரிகள் எவ்வளவு வீரியமானவை!! அருமை தோழரே. ஆனாலும் நாட்டு மக்கள் அடுத்து மோடிக்கோ இல்லை ஏதேனும் ஒரு கேடிக்கோதான் ஓட்டுப் போடுவார்கள். வாக்கரசியலை விட்டு வெளியே வருவது எப்படி என்றும் கவிதையில் வடித்திருக்கலாம்.

  5. /….விவசாயிக்கு மதிப்பில்லாத நாட்டில்,
    தொழிலாளிக்கு மதிப்பில்லாத நாட்டில்,
    நெசவாளிக்கு மதிப்பில்லாத நாட்டில்,
    மீனவருக்கு மதிப்பில்லாத நாட்டில்,
    பணத்துக்கு மட்டும்
    மதிப்பு வருமா என்ன?……../

    அருமையான வரிகள்!

    நமது உழைப்பு சுரண்டப்படுவது, மூலதனம் தவிர்த்த, பிற ஆடம்பர பொருளின், முக்கியமாக தங்கம் உள்ளிட்ட இறக்குமதியால்தான்! டாடா, அம்பானிகள், மிட்டால், ருயாக்கள், வெளினாடுகளுக்கு எடுத்துச்செல்லும் பணம், என்ரொன் உள்ளிட்ட ஏமாற்று காண்ட்ராக்ட்டுகள் வழியாக கரையும் பணம் மூலமாகத்தான்! இவை டாலரில் சுரண்டப்படுகின்றன!

  6. இதொ என் தீர்ப்பு! ஆடம்பரத்தை பகிஷ்கரியுங்கள்! ஆரியக் கூத்தாடி காரியம் சாதிக்கும் , தங்க விற்பனைக்கும்பலை தவிருங்கள்! முக்கியமாக டீவீ விளம்பரங்களுக்கு அடிமையாகாதீர்கள்! தூய்மையான தங்கும் இடத்துக்கும், சுகாதாரமான தண்ணீர் மற்றும் உழைப்புக்கு ஏற்ற உணவுக்கும் செலவிடுங்கள்! எதிர்கால உயர் சிகிச்சைக்காகவும், குழந்தைகளின் படிப்புக்காகவும் சேமியுங்கள்! கடைசியாக, வோட்டு போடும்போது, ஏற்கெனவே உங்கள் வோட்டு போடப்படாமலிருந்தால்,நீஙகள் அனுகக்கூடிய நல்லவருக்கு வோட்டு போடுங்கள்!

  7. I agree completely with most things ajaatashatru said here,

    But i dont see any relevance between Gold and others,I completely agree that the fundamanetal goal should be Unavu,Udai,Iruppidam but i dont understand why Gold is not a good investment.

    Vaithakatti,vaaya katti thangam semikka vendam,adhukkaga thangathula enna prachanai?

    • பதிலை ஓரளவு நீங்களே கூறிவிட்டீர்கள், அரிகுமார் ! வயிற்றைகட்டி, வாயைக்கட்டி சேமிப்போர், நினைத்த பொழுமாற்ற முடியாத, தரம் வெளிப்படையாக தெரியாத, பத்திரமாக பாதுகாப்பதற்கே பெட்டகங்கள் தேவைப்படும் தங்கத்தில் எப்படி முதலீடு செய்ய முடியும்?

      அட்சய திரிதியை அன்று கால்கடுக்க வரிசையில் நின்று வாங்கும் தங்கத்தின் தரம் எவ்வளவு? தள்ளுபடி எவ்வளவு? ஒவ்வோருமுறை மற்றும்பொழுது, மீண்டும் மீண்டும் மற்றுமொரு சேதாரம் ஏன்? கடைசியில் வியாபாரிக்கு அன்றி, வேறு யாருக்கு லாபம்?

      தங்க பத்திரங்களில், அதுவும் மற்ற கமாடிட்டி போல வியாபார ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டதுதான், முதலீடு செய்யலாம்! அதுவும் அரசுத்துறை வங்கியில் முதலீடு செய்வதே பாதுகாப்பானது!

      மிக முக்கியமானது, உழைப்பை சேமித்து உட் கார்ந்து சாப்பிட இனி முடியாது! விழிப்புடன் இல்லாவிட்டால், நமது சேமிப்பு நம்மைவிட்டு போய்விடும்! எனது சொந்த அனுபவமும் உண்டு, அரிகுமார்!

  8. இந்தியக் கருவூலத்தில் கிட்டத்தட்ட 5.6 லட்சம் கிலோ. திருப்பதி ஏழுமலையானிடமோ 8000 கோடி டாலர் மதிப்பு தங்க ஆபரணங்கள். இன்றைய கணக்கில் 20 லட்சம் கிலோவுக்கு குறையாது. கடந்த ஆண்டு 8.6 லட்சம் கிலோ தங்கம் இறக்குமதி வேறு.

    இன்று அமெரிக்க நாட்டிலேயே மொத்தக் கருவூல கையிருப்பு ஏறத்தாழ 50 லட்சம் கிலோ. நம் நாட்டில் புழங்கும் வர்த்தகத் தங்கமோ கிட்டத்தட்ட 3 கோடி கிலோ.

    கிட்டத்தட்ட 1.3 லட்சம் கோடி டாலர் மதிப்பு வரும். இதற்கு மத்தியில் சீனாவும் கதற ஆரம்பித்துவிட்டது. அமெரிக்காவில் தங்களின் 1.25 லட்சம் கோடி டாலர் முதலீடு திரும்பி வருமோ என்று கலங்குகிறது.

    எப்படியோ, இன்றைய தங்கக் கணக்கைப் பார்த்தால் இந்தியா தான் உலகிலேயே பொன்னான நாடு.
    http://bit.ly/19Rw5gK

  9. இந்தியாவில அரிசி இலவசம், காட்டில கழனியில வேலைக்கு ஆள் இருக்கோ இல்லையோ தின வேலைக்கு கூலி , டி வி இலவசம், 5 பவும் தங்கம் இலவசம், ஆடு மாடு கடன் வாங்கினால் திருப்பி தர வேணாம்ன்னு ஊர் ஊரா இலவசம் குடுத்து உழைக்காத இலவச இந்தியாவின் கஜானாவை காலி பண்ணிட்டு ரூபாய் மதிப்பு குறைஞ்ச்சு போச்சுன்னா, போவாம என்னாங்க செய்யும் ???? வெளி நாட்டில மக்கள் நாயா உழைச்சாத்தான் சாப்பிடக் கூட முடியும் …. கீதையையும் ஒபாமாவையும் பாடுப்பாடி என்ன பயன்…. ????

Leave a Reply to ஓடு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க