privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்ஊழல்ன்னா அது ஐசிஐசிஐ லம்பார்ட்தான் பேஷ் பேஷ் !

ஊழல்ன்னா அது ஐசிஐசிஐ லம்பார்ட்தான் பேஷ் பேஷ் !

-

ந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ-ன் காப்பீட்டு பிரிவு, ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்ட். இது இந்தியாவின் முதல் பெரிய தனியார் துறை காப்பீட்டு நிறுவனமாகும்.

ஐசிஐசிஐ லம்பார்ட்
மக்களுக்கு சென்று சேர வேண்டிய நிதியை பொறுக்கித் தின்னும் ஐசிஐசிஐ லம்பார்ட்

மருத்துவம், உணவு பாதுகாப்பு, விவசாயிகளுக்கு நிவாரணம் போன்ற மக்களின் அடிப்படை தேவைகளை அரசு வழங்குவதை ஒழித்துக் கட்டுவதன் ஒரு பகுதிதான் காப்பீட்டு நலத் திட்டங்கள். மத்திய அரசு அறிவித்துள்ள பல்வேறு மருத்துவக் காப்பீட்டு நலத்திட்டங்கள் ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்டு நிறுவனத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய தனியார் வங்கித் துறையின் ”வெற்றிக்” கதைக்கு ஐ.சி.ஐ.சி.ஐ ஒரு துலக்கமான உதாரணம். தனியார் சேவை என்றாலே கேள்வி முறையின்றி ஆராதிக்கும் முதலாளித்துவ அடிவருடிகள் அடிக்கடி பயன்படுத்தும் உதாரணங்களில் முக்கியமானது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் கனிவான வாடிக்கையாளர் சேவை. ஸ்வீடனைப் பார் / நோர்வேயை பார் என்று பீட்டர் விடும் அல்பமான்களில் இருந்து சராசரி அப்பாவிமான்கள் வரை விதந்தோதும் இந்த தனியார் நிறுவனங்களின் யோக்கியதை என்னவென்பதை சில விவரங்களைப் பார்த்த பின் நீங்களே உணர்வீர்கள்.

கைவினைஞர்களுக்கான ராஜீவ்காந்தி மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (Rajiv Gandhi Shilpi Swasthya Bima yojana), ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (Comprehensive health insurance scheme), பருவகால அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம் (Weather Based Crop insurance scheme) உள்ளிட்ட திட்டங்களுக்காக அரசின் நிதி ஐ.சி.ஐ.சிஐ லம்பார்டு நிறுவனத்திற்கு பிரீமியமாக வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி திட்டங்களுக்கான பிரீமியம் 75-லிருந்து 90 சதம் வரை மத்திய அரசாங்கத்தாலும் மீதித் தொகை மாநில அரசாங்கத்தாலும் வழங்கப்படுவதாகும்.

ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்டு வழங்கி வரும் இந்த சேவைகளில் பெருமளவு ஊழல் நடந்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. மேலே பட்டியலிடப்பட்டுள்ள அரசுத் திட்டங்களுக்கான பிரீமியம் உண்மையான பயனாளிகளின் அடிப்படையில் தரப்பட வேண்டும். ஆனால், ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்டு நிறுவனம் பல்வேறு போலி கணக்குகளை உருவாக்கி இந்த நிதியை பெற்றுள்ளது. கைவினைஞர்களுக்கான ராஜீவ்காந்தி மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இவ்வாறு நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தியிருக்கும் ஜவுளித் துறை அமைச்சகம், சுமார் 11,000 போலிக் கணக்குகளை அடையாளம் கண்டுள்ளது. இந்தப் போலிக் கணக்குகளுக்கு பெறப்பட்ட நிதியுடன் கூடுதலாக 10 சதவீத அபராதத் தொகையையும் ஐ.சி.ஐ.சிஐ வங்கி அரசுக்குத் திரும்ப செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

பருவகால அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்படி தொடர் மழை, வெள்ளம், பஞ்சம் போன்ற பருவகால மாற்றங்களை அரசின் வானிலை ஆராய்ச்சி மையம் ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்டு நிறுவனத்திற்கு தெரிவிக்கும். இந்த தகவல்களின் அடிப்படையில் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள, 3,158 பயனாளிகள் கண்டறியப்பட்டு லம்பார்டு நிறுவனத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இவர்களுக்கு சேர வேண்டிய நிவாரண நிதியை நீண்டகாலம் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது லம்பார்டு நிறுவனம். பின்னர் மாநில அரசு தலையிட்டு வலியுறுத்தியதைத் தொடர்ந்து நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவக் காப்பீடு
மக்களை பிணைக் கைதிகளாக்கும் மருத்துவக் காப்பீட்டு முறை.

ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்டு நிறுவனம் இதே போன்ற நிதி முறைகேடுகளை உ.பி மகராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் அரங்கேற்றியுள்ளது. பாதிப்புக்குள்ளான பயனாளிகளுக்கு சேர வேண்டிய நிவாரண நிதியை நீதிமன்ற தலையீட்டுக்குப் பின்னரே வழங்கியுள்ளது. 2011-ம் ஆண்டு ஜனவரி மாதமே இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தகுந்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த முறைகேடுகளை சி.பி.ஐ உள்ளிட்ட புலன்விசாரணை அமைப்புகளிடமும் மத்திய மாநில அரசாங்கங்களிடமும் தெரியப்படுத்தியிருந்தார். எனினும், இன்று வரை இந்நிறுவனத்தின் மேல் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஐ.சி.ஐ.சி.ஐ ஊழியர் அளித்த தகவல்களின் படி, பயனாளிகளைக் கண்டறிய மிகுந்த கால தாமதமாவதாகவும், குறித்த காலத்துக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனாளிகளைக் கண்டறிய முகவர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், இலக்கை அடைய நிறுவனத்தின் சார்பாக அளிக்கப்படும் அழுத்தங்களும் போலிக் கணக்குகள் உருவாக்கப்படுவதற்கு காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். நடந்துள்ள ஊழல் போலிக் கணக்குகளில் துவங்கவில்லை – மக்களுக்கு வழங்க வேண்டிய நலத் திட்டங்களுக்கான நிதியை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட அரசு முடிவிலிருந்து தான் ஊழல் முறைகேடுகளுக்கான ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்டுள்ளது.

மேலும், அரசின் நிதி மக்களின் நலத்திட்ட உதவிகளுக்காக பயன்படுத்தப்படுவதை எதிர்த்து கடும் கூச்சலிடும் தனியார்மய தாசர்கள், அப்பாவி மக்களுக்கு சென்று சேர வேண்டிய அந்த நிதியையும் பொறுக்கித் தின்ன துடிக்கும் தனியார் நிறுவனங்களைக் குறித்து வாய் திறப்பதில்லை. தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாகச் சொல்லப்படும் ”இனிமையான சேவையின்” யோக்கியதை என்னவென்பதை லம்பார்டு நிறுவனத்தின் நடத்தையிலிருந்து மட்டுமல்ல தனியார் நிதி நிறுனங்கள் தங்கள் கடன்களை வசூலிக்கப் பின்பற்றும் வழிமுறைகளிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். இவையெல்லாம் யாருக்கும் தெரியாத ரகசியங்கள் இல்லை.

பக்கெட்டு கம்பெனி ரவுடிகளை வீட்டுக்கு அனுப்புவதுதான் கனிவான சேவை என்றும், மக்களுக்குச் சேர வேண்டிய நிதியைக் களவாடுவது தான் நேர்மையான போட்டியென்றும் இதற்காகத் தான் தனியார்மயம் தேவை என்றும் வரிந்து கட்டிக் கொண்டு வாதாடுபவர்களை அப்பாவிகள் என்பதா அயோக்கியர்கள் என்பதா?

மேலும் படிக்க