privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைபெரியார் பிறந்த நாள் - பிறக்கட்டும் நமக்கும் சுயமரியாதை !

பெரியார் பிறந்த நாள் – பிறக்கட்டும் நமக்கும் சுயமரியாதை !

-

செப்டம்பர் 17, பெரியார் பிறந்த நாள், பிறக்கட்டும் நமக்கும் சுயமரியாதை !

பெரியார்

  • கந்த சஷ்டி கவசமின்றி
    தமிழனால்,
    காலைக் கடனும்
    கழிக்க முடியாத அவலம்,
    உட்கார்ந்து எழுந்தால் கூட
    சிவ,சிவா … ராமா சுலோகம்
  • ஒரு பக்கம்… பார்ப்பன மதர்ப்பு
    மறுபக்கம்… சைவக் கொழுப்பு
    அறிவின் வழியெங்கும்
    ஆரிய அடைப்பு.
  • வெள்ளாமை எங்கும்
    வெள்ளாள, முதலி, பார்ப்பன சவுக்கு
    எதிர்த்துக் கேட்டால்
    மனுதர்மத்தால் ஆளைத் தூக்கு!
  • மூடத் தனத்தால் மூளை கருகி
    சாதித்தமிழன் நெற்றியெங்கும்
    சாம்பல் மேடுகள் …பிராமண வாயுவை
    சுவாசித்து, சுவாசித்து
    ‘ஒரிஜினல்’ தமிழன் குருதிக்குள்ளும்
    பூணூல் கோடுகள்…
  • பெரியார்இதுதான் நிலைமை…
    இனி யாரால் மாறும்? என
    இறுமாந்த பார்ப்பனியத் தலையில்
    இடியாய் விழுந்தார் பெரியார் !”எவன்டா இந்து?
    எல்லோரும் ஒன்று எனில்
    எங்களையும் கருவறையில் விடு!” – என
    பெரியார் போட்ட போடில்
    துடியாய் துடித்தது தர்ப்பை,
    சாதியம் தான் பார்ப்பனியம் – என
    சரியாய் பிளந்தார் பெரியார் !
  • அறிவாளிகள் எல்லாம்
    ஆராய்ச்சியில் இருந்த போது,
    “நீ வேலை செய்தால்
    அவன் தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பான்
    அதான்டா பார்ப்பான்”!
    சுரண்டல்தான் பார்ப்பனியம்
    என சுறீரென்று கொடுத்தார் !”சட்டையைக் கழற்றி விட்டு பாத்தா
    எந்த சாதிக்கும் வித்தியாசமில்ல” – என
    பொட்டில் அடித்தது போல்
    பெரிய விசயங்களை
    எளிதாக எடுத்துப் போடுவதில்
    பெரியாருக்கிணை பெரியார்!
  • பார்ப்பனப் பெண்ணாயினும்
    வேலைக்குப் போய், சுயசார்பு வேண்டுமென
    அறிவுறுத்தியவர் பெரியார்,
    வேலைக்குப் போகும் பெண்கள் சுத்தமில்லை – என
    காவாயைத் திறந்தவன் ‘பெரியவா’
    உரியவா! சொல்லுங்கள்
    யார்? பெரி…யார்?
  • பலரும்
    பயந்து பயந்து
    தொட்டு வைத்த எதையும்,
    பெரியார் விட்டு வைக்கவில்லை,
    பார்ப்பன குதர்க்கம்
    பார்த்த இடமெங்கும் குட்டு வைத்தார்,
    பாருங்கள்,
    சோவின் தலையில்
    இன்னும் பெரியார் வீக்கம்,
    ஜெயமோகன் கிளையில்
    பெரியார் புழுக்கம்…
    பகுத்தறிவுக் கொவ்வா
    தமிழ் பிழைப்புவாதம் பார்த்து
    காட்டுமிராண்டியே பதில் சொல் – என
    கேட்டு வைத்தார் !
    இதோ ஈழத்தாயின்
    பார்ப்பன பிராதுகளோடு இன்று
    ஆஜராகிறார் சீமான்.
  • உயிரோடிருக்கும் கருணாநிதியிடமும், கனிமொழியிடமும்
    உரையாடி ஒரு முடிவுக்கு வாராமல்,
    போயசு மாமியிடமும் ஒரு எட்டு வைத்து
    கட்டுப்பட்ட சிறுத்தை ரவிக்குமார்
    கட்டுடைக்கிறாராம் பெரியாரை.கேட்பவர்களின் யோக்கியதை
    பெரியாரின் போதாமையை விட
    பின் தங்கியிருப்பதால்
    உண்மையில்,
    தமிழியம், தலித்தியம், இந்தியம் என
    பல வண்ண  பார்ப்பனியர்களை
    பெரியார் இன்னும் புட்டு வைக்கிறார்.

    புராணம், இதிகாசமென
    தடித்துப் போன தோளில்
    சுயமரியாதை உணர்ச்சியெழுப்ப
    தமிழனை தட்டி வைத்தார் பெரியார்.

    பார்ப்பன பாசியில்
    வழுக்கிய விதைகளை
    அவர்தான் மான உணர்ச்சியில்
    நட்டு வைத்தார்!பெரியார்அடிமை நாக்கு
    பார்ப்பனர் சுவை
    படர்ந்த நாட்களில்,
    பகுத்தறிவு சுவையை
    பழக்கியவர் பெரியார்
    பகுத்தறிவுக்கு சுவையுண்டா?
    நான்றியேன்,
    ஆனால் பெரியார்
    பார்ப்பானுக்கு கசக்கிறார்
    பாட்டாளி சூத்திரனுக்கு இனிக்கிறார்.

    பார்ப்பன கடுப்பு கூட
    பெரியார் கடவுளை மறுத்ததல்ல,
    பார்ப்பன ஆதிக்கத்தை மறுத்தது தான்,
    “கருவறைக்குள் சூத்திரன் நுழைந்தால்
    பார்ப்பானே கடவுள் இல்லை என்று
    பிரச்சாரம் செய்வான்” – என்று
    சரியாகத்தான் சொன்னார் பெரியார்.

  • தமிழினச் சுருக்கம்,
    தகர்த்த முதுமை,
    எவரெதிர்த்தாலும் எதிர்த்திசை நடந்த
    முதிர்ச்சியின் இளமை,
    எதிரிகள் பேணா(த)
    ஒழுக்கத்தின் தகைமை.
    இனிப்பிறக்கும் பார்ப்பன கிருமிக்கும்
    தீரா பகைமை!பகுத்தறியாமல்
    தான் சொன்னதை அப்படியே ஏற்க வேண்டாம் – என
    விமர்சனத்துக்கு வழி விட்ட பெருமை !
    இதுவன்றோ பெரியார்!
  • சுயமரியாதைக்கென்றே
    ஒரு இயக்கம் தொடங்குமளவுக்கு,
    சுரணையற்ற தமிழக நிலைமை
    கணினி உலகால் மாறி விட்டதா?
    பிறவி இழிவைத் துடைக்க
    பெரியார் சிந்தனை தேவை இன்றும்!
  • பெரியார்சூத்திரனென்றால்
    ஆத்திரம் கொண்டு அடிக்க
    சலவைத் தொழிலாளியால் முடிந்தது,
    முன்னேறியதாய் பீற்றிக் கொள்ளும்
    கணினித் தொழிலாளிக்கோ,
    சுயமரியாதை என்ன
    அவமரியாதையும்
    மவுசுக்குள் அடக்கம்
    நிமிர்ந்து பார்த்தால்
    கனவுகள் முடக்கம்.பாப்பார கம்பெனி
    ஆதிக்கத்திற்கெதிராக மட்டுமல்ல
    பன்னாட்டு கம்பெனி ஆதிக்கத்திற்கெதிராகவும்
    போராடுவதுதான் சுயமரியாதை,
    அதிகாரம் மனுதர்மமாக மட்டுமல்ல
    சாஃப்ட்வேராகவும் எழுதப்படும்கட்டுன  ‘இன்ஸ்டால்மென்ட்டின்’
    கவுரவத்தை ‘கணபதி ஹோமத்தால்’ காப்பாற்ற முடியாது.
    பெரியாரின்
    “மனித வாழ்வின் பெருமை எது? ” நூலைப் படி
    ஐ.டி. அவலத்தை பகுத்தறிவால் முடி !

    பார்ப்பனக் கொலைகாரன் ராமனை
    செருப்பாலடித்து,
    பார்ப்பனக் கட்டுக்கதை விநாயகனை
    தேங்காய்க்கு உடைத்து
    தமிழகத்தை இந்துத்துவத்தின்
    கல்லறையாக்கினார் தந்தை பெரியார்

    பார்ப்பனப் பகைமை முடிந்தபாடில்லை,
    போராட்ட மரபினைத் தொலைத்த
    தமிழக வீதியில்
    பிள்ளையார்கள் ஊர்வலம்.
    உரிமை மறுக்கப்பட்ட
    தமிழன் வாயில் ‘பாரத் மாதாகீ ஜெய்!’

    பிள்ளையார் கையில்
    பிச்சுவா கத்தி
    பெரியார் மண்ணில்
    நரேந்திர மோடி,
    கார்ப்பரேட் தர்மத்தை காப்பாற்ற
    தேசவளத்தை அந்நியன் சூறையாட
    மறுகாலனியாக்க ராமனாய்
    மறுபடியும் அடியாளாய் அடிவைக்கும்
    பார்ப்பன கொலைகாரன் மோடி,
    தமிழகத்தில் கால் வைப்பதை எதிர்ப்பதே
    பெரியார் பிறந்தநாளின்
    சுயமரியாதைக் கொண்டாட்டம் !

– துரை சண்முகம்

  1. வினவு அவர்களே –
    நேற்று அண்ணாத்துரை பற்றிய ( 2009 ம் ஆண்டு ) பதிவை படித்தேன். அதில் அண்ணாத்துரை பற்றிய குற்றசாட்டுகள் அனைத்தும் தந்தை பெரியார் ராமசாமிநாயக்கருக்கும் பொருந்தும்- உதாரணத்திற்க்கு ஒன்று
    ” தேர்தலிலே காஞ்சிபுரம் தொகுதியில் நின்ற அண்ணாதுரை, வாக்காளர் பட்டியலில் தன்னை “அண்ணாதுரை முதலியார்” எனப் பதிவு செய்து சாதி அரசியல் செய்ய முயன்றார். “சிலருக்கு திடீரென முதலியார் என்ற வால் முளைத்து இருக்கிறது” என்று பெரியார் இதனை அம்பலப்படுத்தினார்”.
    இதே போல பெரியாரும் மணியம்மை திருமணம் போது ராமசாமிநாயக்கர் என ப்திந்தாராமே? – உண்மையா ?

  2. இன்னமும் காலம் மாறவில்லை…
    நான் வசிக்கும் கீழமனை கிராமத்தில் வினாயகர் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத காரணத்தால்
    எனது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து உள்ளார்கள்….
    நஷ்டம் எனக்கு அல்ல….
    பெரியார் தளத்தில் உள்ள எனக்கு கிடைத்த அன்புப் பரிசு….

        • நிச்சயம் அல்ல ரகு…

          ராமதாஸ் கோதண்டராமன் சீத்தாபதி நாயுடு..

          வேண்டுமென்றால் பதிவேட்டைப் பார்க்கலாம்
          உங்க ரெண்டு பேருக்காக,எனது பெயரை:
          உத்தம்சந்து காந்தி என்று மாற்றிக்கொள்ள முடியாது!

        • what has the tuft got to do with it?

          Many people dont have a tuft these days and who is interested here asking what to do or not to do?

          Just pointing out,what are you doing keeping your caste name as your surname.

    • ஜாதி பெற வச்சிகிட்டு பெரியாரியல் பேசுவது முரண்பாடு. நீதி கட்சி முதலில் நிறைவேற்றிய தீர்மானங்களில் ஒன்று சாதி பெயரை நீக்க வேண்டும்.

      • மன்னிக்கணும் அஸ்வின்…
        ஒரு “களத்துக்காக” அதை நான் வைத்துள்ளேன்….
        தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பனர்கள்,தனது குடுமியைநீக்கும் அதேநொடியில்
        எனது ஜாதிப் பெயரை தூக்கி கடாசி விடுவேன்…
        முன்பே சொன்ன மாதிரி ஆட்டுக்கு தாடிமாதிரிதான் ஜாதிப் பெயர்கள்….

        • என்னங்க மொக்க காரணம் சொல்லுறீங்க.

          //தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பனர்கள்,தனது குடுமியைநீக்கும் அதேநொடியில்
          எனது ஜாதிப் பெயரை தூக்கி கடாசி விடுவேன்…// இப்படி எந்த பெரியார் கொள்கைவாதியும் பேசமாட்டான். இதையே பார்ப்பனர்கள் கூட திருப்பி சொல்லலாமே .

          • மொக்கை காரணம் அல்ல-
            எனது ஜாதிப் பெயர் “பலரை” உறுத்துவதை நான் அவதானிக்க முடிகிறது..
            குடுமியை அகற்ற,இது ஒரு சிறந்த வழி…
            சரி,இன்னொரு வழி சொல்கிறேன்…
            1) நம்ம அய்யர்(எலெக்சன் கமி சனர்(சென்னை)
            2) சிவசஙகர (மேனோன்)
            3)கி.கே.பிள்ளை
            4) நிருபமா ராவ்…இவர்கள் எல்லோரும் ஜாதிப் பெயருடன் உலாவருவது
            உங்கள் கண்களுக்கு தென்படுவதில்லையா?
            குறந்தபட்சம் இவர்கள் சாதிபெயரை விடட்டும்:பிறகு நான் செய்கிறேன்!

            • அவர்கள் தங்களை பெரியார் கொள்கைகளை பின்பற்றுபவர்களாகவோ,சாதி மறுப்பாளர்களாகவோ சொல்லி கொள்ளவில்லையே ? பார்ப்பன ய்திற்ப்பு பேசும் பல பேரை நெருக்கி பிடித்தால் இப்படிதான் சுய சாதி மோகம் பல்லிளிக்கிறது.

              • அஷ்வின்…மன்னிக்கவும்.எனக்கு தோன்றிய முறையில் நான் போராட
                முயல்கிறேன்…வெற்றி கிட்டும்..(அ)குறந்தபட்சம்..ராமர்களும்,அம்பிகளும் இன்னபிற அக்கிரகாரத்து ஆசாமிகளும் எரிச்சல் அடைவதை நான் துவக்க வெற்றியாக
                உணர்கிறேன்…

                • ராமதாச கோதண்டராம சீத்தாபதி நாயக்கரய்யா சமூகத்துக்கு,

                  வணக்கம்.. ஊரில் உங்களை எல்லாரும் சாதிப் பெயரை விடாத பாதி புரட்சியாளர்-மீதி சாதியாளர் என்று கூறிவந்தாலும், பார்ப்பனர்களை ஒழிக்க பெரியாரே சீனா பானா நாயுடுவாக மீண்டும் பிறந்து, இம்முறை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் போராட சாதி அடையாளத்துடன் களத்தில் வந்திறங்கிவிட்டார் என்று எனக்கு புரிந்து விட்டது.. உங்கள் சுயசாதிப் பாசம் உறுத்தினாலும், ஐ லைக் யுவர் நேர்மை நைனா..!

                  // பார்ப்பன ய்திற்ப்பு பேசும் பல பேரை நெருக்கி பிடித்தால் இப்படிதான் சுய சாதி மோகம் பல்லிளிக்கிறது.//

                  Ashwin,

                  அப்படி நெருக்கிப் பிடித்து உண்மையை வெளியே கொண்டுவரும் சிரமத்தை உங்களுக்கு தராத சீனா பானா நாயுடுவின் நேர்மையை நீங்கள் பாராட்டித்தான் ஆகவேண்டும்..

                  • அம்பி..மறுபடியும் சொல்கிறென்…அக்கிரகாரத்தில் உள்ள “அத்திம்பேர்” குடுமியை
                    சிரைங்கோ…
                    நான் எனது ஜாதிப்பெயரை அடுத்தநொடியே காடாசி விடுகிறேன்…
                    அது என்ன “அம்பி”?
                    என்னைப் பார்த்து புலம்பி புலம்பி அழுவதில் ஒரு பிரையோசனமும் இல்லை..

                    எனது வாழ்க்கை,எனது முன்னேற்றம்,எனது குறிக்கோள் எல்லாமே எனது நன்பர்கள்/உறவினர்கள் மத்தியில் ஒரு மாதிரி வினா:
                    முடிந்தால் போட்டுப் பாருங்கள்!

                    • அத்திம்பேர் குடுமியைவிட உங்க கொண்டை பெருசா இருக்கே நைனா..

                    • எனது கொண்டை பெரிசாக இருந்தாலும் யாருக்கும் பாதிப்பில்லை…
                      உங்களது “அத்திம்பேர்” குடுமி எங்களது வருமானத்தை சுரண்டுகிறதே..
                      சூடம் கொளுத்தி..சூத்திரனின் காசை களவாடுவது குடுமியன் கைவண்ணம்….
                      இப்போ சொல்லுங்கள் அம்பி,எதை முதலில் அறுக்க வேண்டும்?

                    • // எனது கொண்டை பெரிசாக இருந்தாலும் யாருக்கும் பாதிப்பில்லை… //

                      பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் அந்த கொண்டைக்குள்ளே இருக்கிறார்கள்..

            • // நம்ம அய்யர்(எலெக்சன் கமிசனர்(சென்னை)

              இந்த “அய்யர்” ஜாதி பெயர் அல்ல. இவர் தேவர் ஜாதியை சார்ந்தவர். இவருக்கு பெற்றோர் வைத்த பெயரே “அய்யர்” என்பது தான்! இந்த சொல்லுக்கு “அறிஞர்” என்பது போல எதோ ஒரு பொருளும் உண்டு. அந்த பொருள் பற்றியே இவருக்கு இந்த பெயர் வைத்தார்கள் என செய்தி படித்த ஞாபகம். இணையத்தில் தேடிய பொது இந்த வலை பதிவு கிடைத்தது (பின்னூட்டத்தை படியுங்கள்).

              http://maniblogcom.blogspot.in/2011/10/blog-post_17.html

              • அய்யர் என்ற பெயரை வைத்துக்கோண்டது..அரசாங்க பதவி பெற
                குறுக்கு வழி: சரிதானே?

                • இதே சூத்திரம் எனக்கு பொருந்தாது…60 வயதில் எந்த அரசாங்க
                  வேலைக்கும் நான் அப்ப்லிகேசன் போடவில்லை:
                  சொந்தக் காலில் நிற்கும் சூத்திரனுக்கு வாயும் நீளம்தான்!

              • who told u that we are dravita kazhakam loyalists?
                I have no policy in LIFTING the chariot for anyone:If Harikumar feels of doing it,better go to kanchipuram and carry Jeyanthiran on his way to Puducherry attending his criminal case!

  3. காலத்தால் அழியாதவன் கறுப்புச் சட்டைக்காரன்…

    சாதியே உன் கொடுக்கு எங்கே?
    மதமே உன் கிரீடங்கள் எங்கே?
    இந்த கிழவனை கண்டதும் ஒழிந்து கொண்டாயோ?
    மூடநம்பிக்கை எனும்
    மாபெரும் எரிமலையை அணைக்க
    இவன் ஆயுதம் ஏந்தவில்லை,
    மாறாக கைத்தடி ஏந்தினான்,
    கடவுளின் பெயரைச்சொல்லி
    நம்மையெல்லாம்
    வேசிகளின் மகன் என்றழைத்த
    பிராமணனின்
    வேரறுக்க இவன் அரிவாள் ஏந்தவில்லை,
    மாறாக அறிவினை ஏந்தினான்
    பகுத்தறிவினை ஏந்தினான்.
    சாதியெனும் பன்றி மலம் தின்கையில்,
    இவன் மனிதநேயம் வளர்த்தான்.
    சாதியே உன் கொடுக்கு எங்கே?
    மதமே உன் கிரீடங்கள் எங்கே?
    கருப்புச்சட்டைக்குள் கதிரவனாய்
    மத ஓநாய்களிடையே சிங்கமாய்
    எழுந்து நின்றவன்..
    காலத்தால் அழியாதவன் கறுப்புச் சட்டைக்காரன்…

    தோழமையுடன்,
    ஸ்டேன்லி தெரேசா…

    • இவர் எந்த மதத்தையும் விட்டு வைக்க வில்லை. பரிசுத்த ஆவியால் இட்லி வேகுமா ? என கேட்டவர். அல்லாவுக்கு அரபி மட்டும் தான் தெரியுமா ! எனவும் கேட்டவர். ஆனால் கூட இருந்தவரே முதுகில் குத்திவிட்டனர் .

      • ssrinivas கண்டு பிடிச்சிட்டாருய்யா , இதை பற்றி பெரியாரிடம் கேட்ட போது, ‘எனக்கு இந்த பெயரின் மீது எந்த மரியாதையும் கிடையாது. உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் “மசிரு” என்று வேண்டுமானாலும் கூப்பிட்டு கொள்ளுங்கள் .எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை ‘ என்றார்.

          • ஆரிய மசிரை விட,பெரியார் மசிரு நிச்சயம் பெரிசுதான்:
            இன்னமும் உங்களால் புடுங்க முடியவில்லை…

            • அவரது சீடன் திமுக கட்சி – ஆரம்பித்து கட்டிங் , மொட்டை எல்லாம் அடித்து விட்டார். அப்பு !

          • ஓ படிக்க தெரியாத. திரும்ப ஒரு கா படி. உனக்கு வேணும்னா கூப்பிட்டுக்கோ…

  4. Hats off to you Durai Shanmugam.Superb.You are the true follower of Periyar since each and every word of yours is like a hammer on superstitions and Brahmanism.We the Vinavu readers welcome your poems on contemporary topics often.

  5. மிகநல்ல பதிவு! பெரியாருக்கு எதிரிகளே இருக்க முடியாது! அவரது விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று யாரையும் கூறமுடியாது! உள்ளதை சொல்லும் உறுதியும், இழிவையும் எதிர்கொள்ளும் ஆற்றலும், எதிரி என்று எவரையும் கருதாத பண்பும் அவரின் தனிச்சிறப்பு! கடவுளின் பெயரால், வியாபாரம் நடத்தும் கும்பல், மக்களின் பகுத்தறிவு வளர்ச்சிக்கு தடையாக இருப்பது தான் அவரது சினத்துக்கு காரணமாகி, கடவுள் மறுப்பு இயக்கம் காண வைத்தது! தமிழன், தலை குனிந்து, தாழ்வு மனதுடன் கிறங்கிகிடப்பதை கண்டு மனம் பொறாத காரணத்தல், தமிழில் பக்தி இலக்கியங்கள் தவிர மற்ற நீதிநூல்கள் திட்டமிட்டு அழிக்கபட்ட காரணத்தால், தமிழன் காட்டு மிராண்டியாகவே இருக்கிரான், தமிழ் காட்டுமிராண்டி கால மொழியாகவே இருக்கிறது என்றார்! ஆங்கிலம் படித்து அறிவை வளர்த்துகொள்ளாமல், புலவர்கள் பக்தி பாடல்களையே பாடி, சமூதாய சிந்தனை களை மழுங்கடிக்கின்றனர் என்றவர்! அவர் திருவள்ளுவரையும் விட்டுவைக்கவில்லை! பெண்களுக்கு மட்டும் கற்புநிலை பேசுவது தவறு, ஆண்களுக்கும் யோக்கியம் வேண்டும் என்றவர்! 1925-லேயே குடும்பக்கட்டுபாட்டு பிரச்சாரம் செய்த துணிச்சல்காரர்! வாழ்க அவர் நினைவு!

  6. ஆமாம்பா.. பூணூலும், தர்பையும் தான் தலித்த அடக்கிச்சு. அவன் தெருவுக்குள்ள வரவிடாம தடுத்துச்சு. தேவன்மாரும், கவுன்டமாரும் இந்த கொடுமைய பாக்க முடியாம கண்ண மூடிகிட்டாங்க.

  7. வெறும் அறிவால் (பகுத்தறிவு)மட்டுமே சமூகத்தை மாற்றியமைத்துவிட முடியாது. இதற்குத் தேவைப்படுவது சுரண்டலற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கான ஒரு சமுதாயச் செயல். அப்பொழுதுதான் மக்களிடையே பிற்போக்குத்தனத்தை பரப்பியும் நிலைநிறுத்தியும் வரும் சமய வடிவமும் மறைந்து போகும்.

    பெரியாரை எங்கெல்சாக, காரல் மார்க்சாக வளர்த்தெடுப்பதே பெரியாருக்கு நாம் செய்யும் மரியாதை.

    • // பெரியாரை எங்கெல்சாக, காரல் மார்க்சாக வளர்த்தெடுப்பதே பெரியாருக்கு நாம் செய்யும் மரியாதை.//

      ஏன் லெனின், ஸ்டாலின் எல்லாம் என்ன பாவம் செய்தார்கள்.. அவங்களை விட்டுட்டீங்களே ஊரான் சார்..

  8. பெரியாரின் இந்து மத எதிர்ப்பு பிரசாரம் எந்த அளவு வெற்றி பெற்றது என்பதற்கு ஏதாவது புள்ளி விவர கணக்குகள் கிடைக்கின்றனவா? உதாரணமாக, இந்து என தன்னை கூறிக்கொள்வோர் 1950 இல் தமிழக மக்கள் தொகையில் எத்தனை சதவீதம்? தற்போது எவ்வளவு? 1950 இல் தமிழகத்தில் எத்தனை பிள்ளையார் கோவில்கள் இருந்தன? இப்போது எவ்வளவு? உதாரணத்துக்கு தான் இந்த கேள்விகள் கேட்டேன். இது மாதிரியான மற்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தாலும் பரவாயில்லை. பொதுவான பதிலாக இல்லாமல் புள்ளிவிவரமாய் சொன்னால் நலம். நன்றி.

      • // பெரியார் கடவுள் மறுப்பாளராக மட்டும் தான் இருந்தாரா?

        நான் அப்படி சொல்லவில்லையே. ஒன்றுகொன்று தொடர்புடைய பல விஷயங்கள் பற்றி பெரியார் பிரச்சாரம் செய்தார். அதில், இந்து மத எதிர்ப்பு என்ற ஒரு இழையை மட்டும் எடுத்துக் கொண்டு கேள்வி கேட்டேன். கவிதையில் இது பற்றியும் அதிகம் சொல்லி இருப்பது ஒரு காரணம். இணையத்தில் நான் தொடர்ந்து வாசிக்கும் தமிழ் பக்கங்களை வைத்து பார்க்கும் பொது அவரது நோக்கம் வெற்றி பெற்றதாகவே தோன்றுகிறது. ஆனால், அந்தக் காலத்தில் இணையம் இல்லை என்பதால் ஒப்பிட்டு பார்க்க முடியவில்லை. மறுபுறம், விடுதலை பத்திரிகையை விட சக்தி விகடன் வகையறாக்கள் அதிகம் விற்பதாக நினைக்கிறேன் (சரிதானா?). எனவே, என்னால் நிச்சயமாக ஒன்றும் சொல்ல முடியவில்லை. அதனால்தான் இந்த விஷயமாக குறித்து ஏதாவது புள்ளிவிவரங்கள் கிடைக்கின்றனவா என கேட்டேன். இங்கே பெரியாரின் பணியை இகழ்வது அல்ல என் நோக்கம். நன்றி.

        • \\விடுதலை பத்திரிகையை விட சக்தி விகடன் வகையறாக்கள் அதிகம் விற்பதாக நினைக்கிறேன் //

          ஆமாங்கோ,நுங்கு எளனி விக்கிறத விட டாஸ்மாக் கூடத்தா விக்குது.

          • நான் விடுதலை, சக்தி விகடன் இவற்றில் எது சிறந்தது என ஏதும் சொல்லவில்லையே. முன்னதை விட, பின்னது அதிகம் விற்கிறது என்று புத்தகக் கடையில் பார்த்த என் அனுபவத்தை வைத்து ஒரு கணிப்பு சொன்னேன். தவறான செய்தி என்றால் திருத்துங்கள்.

            நான் பெரியார் கருத்துக்களின் உயர்வு, தாழ்வு பற்றி இங்கே நான் எதுவும் சொல்லவில்லை. பெரியாரின் இந்து மத எதிர்ப்பு பிரச்சாரத்தின் தாக்கம் என்ன என்பதை பற்றி தான் ஒரு கேள்வி கேட்டேன். இந்த கேள்வியை இரு விதமாய் அணுகலாம். ஒன்று, இந்த கவிதை செய்வது போன்ற subjective வகை. மற்றொன்று புள்ளிவிவரங்கள் அடிப்படையிலான objective வகை. இரண்டாம் வகை ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டு கட்டுரைகள் ஏதும் எழுதப்பட்டுள்ளனவா என்று தான் கேட்டேன். ஒரு விஷயம் பற்றி தெரிந்து கொள்வதற்காக ஒரு கேள்வி கேட்கும் போது, கேள்வியின் வட்டத்துக்குள் நிற்காமல் வட்டத்தின் வெளியே நின்று சிலம்பம் ஆடுவது முறைதானா, எரிமலை? மற்றவர்கள் செய்தால் விட்டு விடலாம். பெரியார், மார்க்ஸ் ஆகியோரின் கொள்கைகளில் ஈர்ப்புடையோர் இப்படி செய்வது சரி தானா?

          • யார் கண்டது?
            ஆத்தா..மக்கள் நலன் கருதி…..திறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை

          • இந்த நூற்றாண்டின் சிறந்த பதில், இது RSS காரனுக்கு தெரியும் ஆனாலும் தெரியாத மாதிரி நடிக்கிறான். அவன் பொழப்பு பொய் பிதலட்டதிலேயே தான் ஓடுது.

            • பெரியாரின் இந்து மத எதிர்ப்பு பிரசாரம் எந்த அளவு வெற்றி பெற்றது என்பதற்கு ஏதாவது புள்ளிவிவரங்கள் அடிப்படையிலான கட்டுரைக்கு சுட்டி கேட்டால், வெறும் retort மட்டும் செய்வதும் உரையாடல் ஆகாது. உரையாடலில் உள்ள மற்றவன் மேல் முத்திரை குத்துவது அதைவிட மோசம். இது பகுத்தறிவுக்கு உகந்ததன்று. அறிவியல் முறையும் அன்று. பெரியார் பெயரால் இவ்வாறு செய்யும் நீங்கள் பெரியாருக்கு அவமரியாதை செய்கிறீர்கள்.

    • Venkatesan, the way they define Hindu is those who are not Muslims, Christians, Parsis, Jews are Hindus. By this cunning classification, Jains, Buddhists, Shiks and unfortunately Atheists are categorized as Hindus in India. So the statistics won’t speak real number.

      But as you noticed, only Guindy railway station has Unmai (monthly twice magazine by DK). Most other railway stations I checked have many books related to astrology, yoga, meditation, spiritual junks written by unknown sithars and babas but no works of Periyar or such rational magazines.

      In my opinion, Periyar’s victory can’t be measured by number of atheists. In the same way Jesus’s success can’t be measured by number of Christians.

      • @HisFeet,
        // In my opinion, Periyar’s victory can’t be measured by number of atheists.

        இந்து என்பதை வரையறுப்பது கடினம் என்பதால்தான், “யார் எல்லாம் இந்து என தன்னை சொல்லிக் கொள்கிறாரோ அவெரல்லாம் இந்து” என்ற வரையறையை பயன்படுத்தலாம் என்பது என் எண்ணம். பெரியாரின் பிரச்சாரத்தில் நாத்திகவாதம், குறிப்பாக இந்து மத எதிர்ப்பு முக்கிய இடம் பிடித்தது. அதன் வெற்றியை அளவிட இந்துக்களின் எண்ணிக்கையை அளவிடுவதும் ஒரு வழி என்றே நான் நினைக்கிறேன். இது மட்டுமே சரியான கேள்வி என நான் சொல்லவில்லை. இதை ஒரு உதாரண கேள்வியாகத்தான் சொன்னேன். மற்ற கேள்விகளும் கேட்கலாம். உதாரணமாக, தமிழர்களில் எத்தனை பேர் இந்து மதத்தை தங்கள் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக கருதுகிறார்கள்? எத்தனை பேர் வாரம் ஒருமுறை கோவிலுக்கு செல்கிறார்கள்?

        விகிபெடியாவில் ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா பற்றி இப்படிப்பட்ட சில புள்ளிவிவரங்கள் கிடைக்கின்றன. இந்தியா பற்றிய விவரங்கள் எனக்கு முழு திருப்தி அளிக்கவில்லை.

        http://en.wikipedia.org/wiki/Religion_in_Europe

        http://en.wikipedia.org/wiki/Religion_in_the_United_States

        http://en.wikipedia.org/wiki/Religion_in_India

        http://en.wikipedia.org/wiki/Irreligion_in_India

        • நண்பர் வெஙகடேசன் அவர்களே! பெரியாரின் வெற்றி அவரை எத்தனை பேர் பின்பற்றுகிரார் என்பதிலில்லை! அவர் சாக்ரடீஸ், புத்தர் போல உண்மையை உரைத்துவிட்டு பலனைபற்றி கவலைப்படாதவர்! பின்னால் திரும்பி பார்த்து, தன் இமேஜை காப்பாற்றிக்கொள்ளவும் கூட்டத்தை கவரவும் அண்ணாயிசம் பேசிய கவர்ச்சி அரசியல் வாதியல்ல!

          தான் உழைத்த பணத்தை போட்டு, தமிழ் மக்களுக்கு தன்மானம் பிறக்க இயக்கம் நடத்தியவர்! கவர்ச்சி படம் போட்டு இதழ்நடத்தியவர் அல்ல!

          அவரே பல கூட்டங்களில் குற்பிட்டதைப்போல அவர் வெறும் கடவுள் மறுப்பாளர் மட்டுமல்ல, சமூதாய சீர்திருத்தக்காரர்! அவரின் சீர்திருத்த் கருத்துக்களை மக்கள் பரவலாக ஏற்றுக்கொண்டுதான் உள்ளார்கள்! மூடநம்பிக்கைகள் பல படித்தவர் மத்தியில் தவிடுபொடி ஆகிக்கொண்டுதான் வருகிறது!

          அன்னாரின், பெருமையை கடையில் தொங்கும் கவர்ச்சி பத்திரிகைகளை கொண்டு எடைபோடாதீர்கள்!

    • தடுப்பூசி புழக்கத்துக்கு வந்த வுடனேயே கிருமி எல்லாம் ஓடி ஒளிஞ்சுருமா என்ன.யாருக்கு வீரியம் அதிகம்னு போவ போவத்தான் தெர்யும்.

  9. // பகுத்தறிவுக் கொவ்வா
    தமிழ் பிழைப்புவாதம் பார்த்து
    காட்டுமிராண்டியே பதில் சொல் – என
    கேட்டு வைத்தார் ! //

    1330 குறள்களில் கடவுளைப் பற்றியோ, பார்ப்பனர்களைப் பற்றியோ ஒரு குறள் இருந்தால் போதாதா பெரியாருக்கு.. திருவள்ளுவரே பிழைப்புவாதி, காட்டுமிராண்டி தமிழ்ப் புலவன் ஆகிவிட்டார்.. தொல்காப்பியர், இளங்கோ என்று வரிசை வைத்து எல்லா தமிழ் கவிஞர் பெருமக்களையும் காட்டுமிராண்டியாக்கினார்.. வைணவரான கம்பரைப் பற்றி சொல்லவே வேண்டாம்..

  10. // பகுத்தறிவு சுவையை
    பழக்கியவர் பெரியார்
    பகுத்தறிவுக்கு சுவையுண்டா?
    நான்றியேன், //

    அறியாமலேயே நம்புவதுதான் பகுத்தறிவோ..
    கவிஞரே, உம் கவிதையைப் பெரியார் படித்தால் என்னத்தைச் சொல்லித் தொலைப்பாரோ.. அவரைப் புகழ்ந்து பாடியிருப்பதால் ”தமிழு கவிதன்னா இப்பிடியில்லா இருக்கணும், அதவிட்டுப் போட்டு சிலப்பதிகாரங்கறான், ராமாயணங்கறான், தொல்காப்பியங்கறான்.. எல்லாம் காட்டுமிராண்டிப் புலவனுங்கங்க” என்று சொன்னாலும் சொல்வார்..

    // பகுத்தறியாமல்
    தான் சொன்னதை அப்படியே ஏற்க வேண்டாம் – என
    விமர்சனத்துக்கு வழி விட்ட பெருமை !
    இதுவன்றோ பெரியார்! //

    தூத்துக்குடி மாநாட்டில், தன்னைப் பின்பற்றுபவர்கள் பகுத்தறிவை மூட்டைகட்டி வைத்துவிட்டு விமர்சனமோ, கேள்விகளோ கேட்காமல் தன் பின்னால் வந்தால் போதும் என்ற பாசிசத் தலைமை.. இதுவன்றோ பெரியார்..!!!

    // பார்ப்பனக் கொலைகாரன் ராமனை
    செருப்பாலடித்து, //

    அதனால்தான் தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் எல்லா நாட்களும் வைணவக் காக்கைகள் பெரியார் தலைமீது உச்சா போய்கொண்டிருக்கின்றன..

    // பார்ப்பனக் கட்டுக்கதை விநாயகனை
    தேங்காய்க்கு உடைத்து
    தமிழகத்தை இந்துத்துவத்தின்
    கல்லறையாக்கினார் தந்தை பெரியார் //

    கல்லறை முழுக்க பிள்ளையார் கோவில்கள்..

  11. // ஆனால் பெரியார்
    பார்ப்பானுக்கு கசக்கிறார்
    பாட்டாளி சூத்திரனுக்கு இனிக்கிறார். //

    கீழ்வெண்மணி தியாகிகளுக்கு..?

    • அம்பி, உங்கள் வார்த்தைகளில் பெரியார் மீதான காழ்ப்புணர்வு பொங்கி வழிகிறது… பெரியாரின் ஒரு சில வார்த்தைகளை வைத்துக் கொண்டு அவரை ஒட்டுமொத்தமாகப் பழி தூற்றுவது எப்படி உங்களுக்கு நியாயமாகப் படுகிறது?
      நீங்கள் பார்ப்பன சாதிப் பற்று உள்ளவரா இல்லையா?
      இல்லையென்றால் பார்ப்பானைப் பற்றித் திட்டினால் உங்களுக்கு எதற்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிற்து?
      பார்ப்பனர்களின் சூதை, அவர்கள் சாதி ஏற்றத்தாழ்வை வைத்துக் கொண்டு காலங்காலமாக வேலை ஏதும் செய்யாமல் மக்கள் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்த அவர்கள் வாழ்க்கையை பற்றி விமர்சித்தால் அப்படிப்பட்ட சிந்தனை ஏதும் இல்லாத உங்களுக்கு ஏன் கோபம் வர வேண்டும்?

      அவரது முதன்மையான நோக்கம் சாது ஒழிப்பு தான். அதற்காக அவர் இறக்கும் வரையில் அயராது உழைத்தார். அவர் யாரையும் அவர் சொல்வதைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தியது கிடையாது. அவரே பலமுறை கூறியிருக்கிறார் “நான் இந்தத் திராவிட சமூகத்துக்கு மானமும், அறிவும் கிடைக்க வேண்டிப் போராடி வருகிறேன். இந்த வேலைக்கு நான் தகுதி உடையவனா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் தகுதியுடையவர்கள் யாரும் இதைச் செய்யவில்லை என்பதால் தான் நான் செய்ய வேண்டியிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

      அவரிடம் குறைகளே கிடையாது என்று யாரும் கூற முடியாது. ஆனால் அக்குறைகள் எந்த விதத்தில் பார்க்கப்பட வேண்டும் என்பதுதான் பிரச்சனை.பார்ப்பான் என்பதற்கு பெரியார் சொன்ன விளக்கம் “நாம் வேலை செய்தால் அவன் ஒதுங்கி நின்று பார்ப்பான்” என்பதுதான்.நீங்கள் சாதிப்பற்று உள்ளவரென்றால் பெரியார் உங்களுக்குக் கசக்கத்தான் செய்வார்.

      • Many many people apart from Brahmins are involved in mental work,which according to vinavu and perhaps periyar is not real work.

        Many people of justice party and dk never did any real work,including mu ka and Anna.

        Writing stories is not real work.

      • // பார்ப்பனர்களின் சூதை, அவர்கள் சாதி ஏற்றத்தாழ்வை வைத்துக் கொண்டு காலங்காலமாக வேலை ஏதும் செய்யாமல் மக்கள் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்த அவர்கள் வாழ்க்கையை பற்றி விமர்சித்தால் அப்படிப்பட்ட சிந்தனை ஏதும் இல்லாத உங்களுக்கு ஏன் கோபம் வர வேண்டும்? //

        பாதிக்கப்பட்ட சாதிக்காரர்கள் விமர்சித்தால், நாங்கள் மட்டுமே காரணம் இல்லை என்று குற்றவுணர்வுடன் முணுமுணுக்கலாம்..

        பலனடைந்த, பலனடைந்து கொண்டிருக்கும் கூட்டத்திலிருந்து ஒரு ’உத்தமர்’ தோன்றி பார்ப்பனர்களை மட்டும் குறிவைத்து தாக்கினால் வேறு என்ன சொல்வது..

        // அவரது முதன்மையான நோக்கம் சாது ஒழிப்பு தான். அதற்காக அவர் இறக்கும் வரையில் அயராது உழைத்தார். //

        எந்த சாதியை என்றும் தெளிவாகத் தெரிகிறது..

        // அவர் யாரையும் அவர் சொல்வதைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தியது கிடையாது. //

        குறிப்பாக தன் சொந்த சாதிக்காரர்களை..

        • // பலனடைந்த, பலனடைந்து கொண்டிருக்கும் கூட்டத்திலிருந்து ஒரு ’உத்தமர்’ தோன்றி பார்ப்பனர்களை மட்டும் குறிவைத்து தாக்கினால் வேறு என்ன சொல்வது..//

          பெரியார் அவர் சார்ந்த சாதிக்காகவோ அல்லது பார்ப்பனரல்லாத உயர்சாதிகளுக்காகவோ மட்டுமா போராடினார். அனைத்து ஒடுக்கப்பட்ட சாதிகளுக்காகவும் தான் போராடினார்..

          அவர் சாதி வேறுபாடு கருதும் உயர்சாதியிடம் பலமுறை கூறியிருக்கிறார்:”நாம் அனைவரையும் பார்ப்பான் சூத்திரன் என்று எழுதி வைத்திருக்கிறான். அதை அறியாமல் நீங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாகக் கருதுவது சரியாகாது” என்று..

          ஆனால் பெரியாருக்கு அடுத்து வந்த திராவிடப் பிழைப்புவாதிகள் பெரியாரைப் பொறுக்கித் திண்பதற்காகத் தான் பயன்படுத்தினரே ஒழிய அவர் கொள்கையை மூட்டை கட்டி வைத்துவிட்டனர். பெரியார் திராவிடர் கழகம் ஓரளவு சாதி ஒழிப்பு தொடர்பான போராட்டங்கள் நடத்தினாலும் இப்போது பெரும்பாலும் ஈழத்தோடு மட்டும் தங்கள் செயல்பாடுகளைச் சுருக்கிக் கொண்டுவிட்டனர்..

          பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்பைக் கொண்டு முன்னேறிய உயர் மட்டும் இடைநிலை சாதிகள் இப்போது பெரியாருக்கு எதிராகத்தான் அனைத்து வேலைகளையும் செய்கின்றனர்.. வன்னிய பா.ம.க வின் குரு தங்களைப் பெரியாரின் உண்மைத் தொண்டர்கள் என்று கூறிக்கொண்டு தாங்கள் அக்கினியில் இருந்து பிறந்தவர்கள் என்றும் கூறிக்கொள்கிறார்கள்..

          பார்ப்பனர்கள் எல்லாம் இப்போது சாதி பார்ப்பதில்லை என்ற கூற்று தில்லை தமிழ் நுழைவுப் போராட்டத்திலும், அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் போராட்டத்திலும் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது.. ஆகவே தற்போது நாம் பார்ப்பனர்கள், உயர்சாதியினர், தலித் பிழைப்புவாதிகள் என அனைவரையும் எதிர்த்துதான்(அதைத்தான் பார்ப்பனியம் என்கிறோம்)போராட வேண்டியிருக்கிறது..

          • // அவர் சாதி வேறுபாடு கருதும் உயர்சாதியிடம் பலமுறை கூறியிருக்கிறார்:”நாம் அனைவரையும் பார்ப்பான் சூத்திரன் என்று எழுதி வைத்திருக்கிறான். அதை அறியாமல் நீங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாகக் கருதுவது சரியாகாது” என்று.. //

            அவனை மட்டுமே திட்டிக்கொண்டிருக்காதே.. இவனையும் திட்டு என்பதுதான் அதன் பொருள்..
            பஞ்சமன் பட்டம் போகாமல் சூத்திரன் பட்டம் போகாது என்று தலித் மக்களின் கூட்டத்தில் முழங்கியதை ஆதிக்க சாதிகளிடையே முழங்கியிருக்கிறாரா..?!!!

  12. அம்பி கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு ,வேற ஏதாவது உருப்படியா பெரியார் கருத்துக்களுக்கு மறுப்பு எழுதுங்கோ.
    பார்ப்பனர்களுக்கு பெரியார் குறித்த அவதூறுகள் ,இகழ்ச்சிகள் மட்டுமே செய்ய முடியும்.

    • உம்மை போனற்வர்களுக்கு பெரியார் சொன்ன பார்ப்பன அவதூறுகள் ,இகழ்ச்சிகள் மட்டுமே
      புரியும். தன் ஜாதியை புகழ்ந்து , தமிழை / தமிழர்ளை குறித்த அவதூறுகள் ,இகழ்ச்சிகள் உம க்ண்ணை மறைத்து விடும்

      • பெரியார் கருத்தியலை விமர்சிக்க, சரியான மறுப்பு தெரிவிக்க கொஞ்சமாவது அறிவு வேண்டும். அது இல்லை என்றால் இப்படிதான் அத சொன்னாரு இத சொன்னாரு..என்று மட்டும் தான் உளற முடியும்.

        • சாரத்தில், பெரியார் வசவியல்-சிலை உடைப்பியல்-பட அடிப்பியல்-ஆட்சியாளர்களுக்கு மணியடிப்பியல் போன்றவைதான் இன்று பெரியார் கருத்தியலாக வியந்தோதப்படுகிறது..

          நீங்களும் கூட பெரியார் அதை அப்படிச் சொன்னார், இதை இப்படி உடைத்தார்-அடித்தார் என்று சொல்லிச் சொல்லி புளகாங்கிதம் அடைகிறீர்கள்.. இதை அறிவாராய்சி என்று நினைத்துக் கொண்டு உணர்ச்சிவசப்படவும் செய்கிறீர்கள்..

    • அஷ்வின்…சனி ஏழரை ஆண்டுகள் தாக்குமாம்..
      திருநள்ளாறு சனிக்கு சூடம் கொளுத்தி நம்மை 2013 ஆண்டுகளாக தாக்கும்

      இந்த “சனியஙளை” நாம் எப்போது தாக்கப்போகிறொம்?

  13. நான் கூட வினவு மாற்று கருத்துக்களை பறந்த மானத்தோட அனுமதிக்கும்னு நினச்சு காமென்ட் போட்டா, அத அழிச்சிபுட்டாங்கயா. So வினவும் ஒரு டுபாக்கூரு

  14. Periyaar married young maniammai only with the intention to safe guard hard earned thulabaram money he collected equal to his weight. Anna and co felt and wanted to loot . Rajaji advised to marry maniammai. Pagutharivu singam followed poonool advice . As the result DMK was formed. Eduppu Veeramani smelt cash balance and started enjoying so groups formed district wise .Why dont you arrange Ramar and Pillaiyar statue breaking now . I would like to join . Thamizha un veeram engey pochu ?

  15. அரிகுமார் அப்போது பிறந்திருக்கவில்லை போலும்! ராஜாஜி கூறாத அறிவுரையை நமது அறிவுகொழுந்துகள் கண்டுபிடித்துள்ளன! பெண் குழந்தைகளை, அதுவும் கன்னி பருவத்து பெண்னை, மனைவியில்லாத ஆண் தத்தெடுக்க முடியாது! பெரியாரின் மிக உயர்ந்த பண்பாக நான் கருதுவது அவரின் அறிவுநேர்மையும், தனக்கு அவமானம் வருமே என்றுகூட அஞ்சாத மன உறுதியும் தான்! பார்ப்பனர்களை அவர் எதிர்ப்பது கூட, அவர்களாகவே வரவழைத்துக்கொண்டதுதான்! பெரியாரை அழிக்க சத்ரு சம்கார யாகம் செய்ததாக நினவு! கீழ வெண்மனிக்கும், பெரியாருக்கும் முடிச்சுபொடும் அம்பிகளின் சிண்டுமுடியும் அயொக்கிய தொழிலை நான் வெறுக்கிறேன்! பெரியாரும் காமராஜரும், தாழ்த்தபட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் அனைவருக்கும் கல்வி கண்பெற காரணமானவர்கள்! ரஷியாவின் டால்ஷ்டாய் போல, அற்புதமான மனிதநேயர்! இந்த நூற்றாண்டின் இனணையற்ற மாமனிதர்! எம்ஜியார் ஊருக்கு ஊர் பெரியார் தூண்கள்நிறுவியதும், அம்மையார் கூட ஒரு காலத்தில், பெரியார் திடல் சென்று, மலர் வளையம் வைத்து நானும் பெரியாரின் சிஷ்யை என்றதும் , வெறும் நடிப்பு அல்ல!

    • இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அம்பிகளும்,அத்திம்பேர்களும்
      குடுமியை ஆட்டுவதை நிருத்தமாட்டார்கள்….
      நம்மைப் போன்றவர்கள் நாலு சாத்தினால்தான் திருந்துவார்கள்

        • பேருந்து நிலையத்தில் பிக் பாக்கெட் அடிச்சவனை என்ன செயிகிறோம்?

          கண்ணுக்கு எதிரே ஏமாற்றும் கயவாளிகலை என்ன செய்யலாம்,அம்பி?

          திருவரங்கப்பொடி கதை தெரியுமோ?

          • // பேருந்து நிலையத்தில் பிக் பாக்கெட் அடிச்சவனை என்ன செயிகிறோம்?

            கண்ணுக்கு எதிரே ஏமாற்றும் கயவாளிகலை என்ன செய்யலாம்,அம்பி? //

            கண்ணுக்கு தெரியாமல் கொள்ளையடிக்கும் உங்கள் வித்தையை கற்றுக் கொடுங்கள்..

    • 1.”சொத்துக்காக திருமணம் – ஆதிக்க சாதிகளின் அயோக்கியத்தனம் ! தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சமீபத்தில் நடந்த்துள்ளது இந்த திருமணம். ஆதிக்க சாதியைச் சேர்ந்த 17 வயதே ஆன அந்த மாணவியை 35 வயதுக்கு மேலே உள்ள ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்கள். ” என்று சமீபத்திய வினவில் படித்தேன். அப்படியானால் மணியம்மை திருமணம் எப்படி அறிவுநேர்மையாக முடியும் ?நண்பரே-
      2. காமராஜரதான் தாழ்த்தபட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் அனைவருக்கும் கல்வி கண்பெற காரணமானவர். ப்ள்ளிக்கூடம் , மதிய உணவு போன்ற ஏழைகளுக்கான திட்டஙகள் கொண்டு வந்தார்.ராமசாமிநாயுடுகாரு நம்மிடையே வேற்றுமை / வெறுப்புணர்ச்சி வளர்த்து தானும் வ்ளர்ந்தார்

  16. 1,50,000 தமிழர்கள் வதைக்கப் பட்டு இனம் அழிந்ததை….போர் வெற்றி என்று சொல்கிறான்
    இந்து ராம்…
    இதை இலங்கை சிங்களவர்கள் போர் வெற்றி தினமாக கொண்டாடவேண்டுமென்று சொல்கிரான்..சு…சாமி..
    அம்பி இப்போது சொல்லுங்கள்..
    இவர்களை கட்டிப் பிடித்து “உம்மா” கொடுப்பீர்களா?(அ) சூரிய உதயத்துக்கு முன் சுண்ணாம்பு
    காளவாயில் போடுவீர்களா?

    • இவர்களை சீனாவுக்கோ, அமெரிக்காவுக்கோ, சீமாந்திராவுக்கோ, தெலுங்கானாவுக்கோ நாடு கடத்திவிடலாம் மன்னா.. இல்ல.. நைனா..

    • உம்மை போடவேன்டியதுதான் ! சீதபேதி !திராவிடன் அரசு தானெ திமுக? என்ன கிழித்தார் சொட்டை இத்தாலி அம்மாவுக்கு தமிழ் சொல்லி தந்தாரா?

      • நீங்கள் சொலவதைப் பார்த்தால்,மஞ்சள் துண்டு எனக்கு மாமா முறையும்,இத்தாலி சனியன்
        அத்தை முறையுமா?
        நான் சீதபேதியாக மாற்றம் பெறுவதில்,திருமங்கை மன்னர்களுக்கு என்ன ஆனந்தம்?
        எல்லோரும் விழித்தால்,பூணூல்களின் கொட்டம் அடங்கும்…
        காலம் காலமாக ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர் கூட்டத்துக்கு என்ன ஆணவம்?
        திவசம்,கருமாதி என்று இழவு வீட்டில் புடுங்கி திங்கும் இனம் உங்களது
        ரத்ததில் ஊறியது..பார்ப்போம்.எவ்வளவு காலம் ஏய்த்த்ப் பிழைப்பீர்கள்?

        • neenga adichu pudunguna pala acre nilam,sradhathukku kudukurathu 100 roova thaal,ithukke ivarukke valaikithaam.

          Oru naalavadhu tasmac pakkam pogama irukka 100 roova selavu,ithellam oru prachanaya?

        • //திவசம்,கருமாதி என்று இழவு வீட்டில் புடுங்கி திங்கும் இனம் உங்களது//

          Money paid for the work done. Its not extortion as you have mentioned. FYI, even if you have to burn the body, you have to pay “vettiyaan”. Does that mean, his caste is also “புடுங்கி திங்கும் இனம்”?

          • வெட்டியான் வேலை செய்து சம்பளம் பெறுகிறான்: தவறு இல்லை…
            பூணூல்கள்?
            1)பிரதி மாதமும் 1 ஆம் தேதி சம்பளம்..
            2) ஒவ்வொரு அர்ச்சனை டிக்கட்டிலும் அர்ச்சனை செய்யும் பூணூலுக்கு 25 காசுகள்
            3)(இதுதான் எஙகளை வாடி வதைக்கும் கொடுமையிலும் கொடுமை) சூடத்தை ஏத்தி
            சூடத் தட்டுடன் பிச்சை எடுக்காத குறையாக….
            சொல்லுங்கள்:,
            வெட்டியானுக்கும் பூணூலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது?
            ஒரே வெலைக்கு 3 வித வருமானம்-அதுவும் எந்த உடல் உழைப்பும் இல்லாமல்:நாங்கள் விழித்துக்கொண்டால்,உனக்கு குடைச்சல்? ஏன் வராது?
            எத்தனை நூற்றாண்டுகளாய் இப்படி தமிழ் இனத்தின் வருவாயை பிடுங்கி தின்று ஏப்பம் விட்ட மமதை உல்லவா இப்படி கிண்டல் செய்யத் தூண்டுகிறது:
            அர்ச்சகர்கள் இல்லாமல் நாம் இருந்துவிடலாம்…ஆனால்
            வெட்டியான் இல்லாமல் வேலை ஆகாது?
            உங்களது பிணம் நாறி விடும்..அக்கிரகாரத்தை தாண்டி நாற்றம்…..

            • //சூடத்தை ஏத்தி சூடத் தட்டுடன் பிச்சை எடுக்காத குறையாக….//

              First decide if they are புடுங்கி திங்கும் இனம் or பிச்சை எடுக்கும் இனம்.

              //அர்ச்சகர்கள் இல்லாமல் நாம் இருந்துவிடலாம்//

              Then why do you call them for திவசம்,கருமாதி and later complain that they are charging..!!

              Thamizhargal is only famous for “Accepting freebies”. First kaasu vaangaamal vote-u poda katrukollungal…

              Periyar and prophet mohammad are in a way same…both of them married young girl in their thalladum vayadhu…Celebrate pannunga…vaazhga pagutharivu….

  17. அம்பியும்,அரிகுமாரும் இப்படித்தான் பேசுவார்கள்! பிரித்தாளுதல் (மித்திரபேதம்) அவர்கள் ரத்தத்தில் ஊறியது அல்லவா! இயற்கையாக,தாங்கள் ஏகபோகமாக அனுபவித்து வரும் சமூதாய அந்தஸ்து, அரசு வேலை பறி போவதை அவர்களால் எப்படி பொறுத்துக்கொள்ளமுடியும்? புலிக்கு பயந்தவர்கள் என் மேலே படுத்துகொள்ளுங்கள் என்று தலித் மற்றும் பிந்தங்கிய வகுப்பினரை மாற்றி மாற்றி பயன்படுத்தி கொள்கின்றனர்! விபீஷனர்கள் விலை போகிரார்கள்! இதில் பெரியாருக்கு என்ன நஷ்டம்? அம்பி சொன்னது போல இப்பொது பக்தி அதிகரித்து வருகிறது உனண்மையே! காரணம் பெரியார் சிந்தனைகள் இருட்டடிப்பு செய்யப்படுவதுதான்! பெரியாருக்கு பின் அவரது சொத்துக்கள் அரசால் முடக்கப்பட்டல்லவா இருந்தது? பெரியார் இயக்கத்தை அழிக்க நினைத்து, அதில் வெற்றி பெற முடியாமல், அடுத்து கெடுக்கும் வேலையில் அல்லவா பார்ப்பனர்கள் இறங்கினர்? முட்டாள் தமிழர்களுக்கு அது உரைக்காதது பெரியாரின் தவறல்லவே! தலித்துகளை வெறுக்கும் பிற பிந்தங்கிய சாதிகள், பெரியார் காலத்திலேயே அவரை காட்டிகொடுத்த விபீஷணர்கள் தானே! அய்யாயிரம் ஆண்டு அடிமைத்தனம், அவ்வளவு விரைவில் சீரடையுமா? ஆனால், சமூதாயம் விரைந்து சீரடைந்து வருவதன் எதிர்வினைதானே அவாளின் இன்றைய சீற்றம்?

    • தவறு பெரியாரிடம் இல்லை,,தம்பி…
      எனது கோபமெல்லாம்,சூ…வா…. மூடிக்கொண்டு
      ஆளும்கட்சிக்கு காவடி தூக்கும் வீரமணி ஸ்வாமிகள்மீதுதான்….

    • //பிரித்தாளுதல் (மித்திரபேதம்) அவர்கள் ரத்தத்தில் ஊறியது அல்லவா//

      அதாவது சாதி உள்ளது, ஒரு குறிப்பிட்ட சாதியினர் இப்படித்தான் இருப்பார்கள், அந்த சாதியில் பிறந்தவன் இப்படித்தான் இருப்பான் என்பது சரி என்பது போல் உள்ளது உங்கள் கூற்று…

      இதில் பகுத்தறிவு பற்றிபேச கிளம்பி விட்டீர்கள்…
      புரட்சி, பகுத்தறிவு – திராவிட அரசியலால் கேவலப்படுத்தப்ப்பட்ட வார்த்தைகள்…
      உங்களைப்போன்றவர்கள் இருக்கும் வரை சாதி ஒழியாது…

      • திருவாளர் வீரன்! சாதி இருக்கிறது என்று அளப்பவர்களிடம் வேறு எப்படி பேசுவது? அவர்களின் சரித்திரம் அறிந்துதான் அப்படி கூறினேன்! குறுக்கே புகுந்து குட்டையை குழப்பினாலும் உண்மையை மறைக்கமுடியாதே! இந்த குதர்க்கவாதம், முன்பெ அம்பிகளிடம் தன் கண்டிருக்கிறேன்!

        • அவர்கள் இருக்கட்டும்….நீங்கள் சாதிநம்பிக்கை உடையவராக இருக்கிரீர்கள்…

          இதைத்தான் நான் கருஞ்சட்டை மடக்கொள்கை என்கிறேன்..

  18. You keep saying why is it that brahmins hate periyar etc etc?

    But nobody is willing to tolerate any criticism of him,his talks/thoughts?

    How can some person be accepted when there is a bunch of people willing to commit any kind of violence and dastardly acts to preserve his image.

    This is shows the deep inferiority complex his supporters suffer from.

  19. //But nobody is willing to tolerate any criticism of him,his talks/thoughts?//

    Arikumaar! We welcome any sort of criticism based on TRUTH! But do you agree it has to be based on truth? If not, why shouldnt we question the intentions of KOEBALISTIC propoganda by vested interests?

    //How can some person be accepted when there is a bunch of people willing to commit any kind of violence and dastardly acts to preserve his image.//

    Can you prove any violence by DK activists, other than the Raama idol incident? In contrary, can you say so about the atrocities committed by hinduthvaa and sivasena parivaar? Can any one who has witnessed Post gothra violences in north?

    //This is shows the deep inferiority complex his supporters suffer from.//

    No buddy! This only shows your SUPERIORITY COMPLEX! Better take early treatment (psyhiatric)!

Leave a Reply to Venkatesan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க