privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்ஜெய் ராவணா! ஜெய் சம்பூகா! ஜெய் சூர்ப்பனகா! ஜெய் மகாபலி!

ஜெய் ராவணா! ஜெய் சம்பூகா! ஜெய் சூர்ப்பனகா! ஜெய் மகாபலி!

-

டந்த மாதம் ஐதராபாத்தின் ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் (English and Foreign Languages University) நடைபெற்ற ’அசுரர் வாரம்’ என்ற விழாவினைப் பற்றிய செய்தி வினவில் வந்தது. அங்கே படித்து கொண்டிருக்கும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள்  இவ்விழா தொடர்பாகவும், அதன் பின்னான வழக்குத் தொடர்பாகவும் விளக்கி எழுதியுள்ள பதிவை வெளியிடுகிறோம்.

’அசுரர் வாரம்’: பார்ப்பனியப் பண்பாட்டு ஒடுக்குமுறையை எதிர்த்த கலாச்சார விழா.

ந்தியாவில் உயர் கல்வி என்பது சுதந்திரமான, பாரபட்சமற்ற, நடுநிலைமையான ஆய்வுகளுக்கான வெளி என்று பொதுவாக நம்ப வைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் பொதுப் புத்தியில் உறைந்திருக்கின்ற இந்த கருத்தாக்கம் பார்ப்பனிய செயல்பாட்டின் நுண்ணிய வடிவம் தான் என்பதை உயர்கல்வி நிறுவனங்களின் தற்போதைய நிகழ்வுகள் வெட்ட வெளிச்சமாக்குகின்றன. சாதிய, பொருளாதார ஏற்றுத் தாழ்வுகளை எல்லாம் கடந்ததாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்ற இந்திய உயர்கல்வி, தன் செயல்பாட்டு முறைமைகளில் பார்ப்பனியத்தின் விழுமியங்களை மிகத் துல்லியமாக நடைமுறைப்படுத்தும் சேவகன் தான் என்பதை அண்மையில் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் (English and Foreign Languages University) நடைபெற்ற ’அசுரர் வாரம்’ (Asura Week) என்னும் விழாவும், அது சார்ந்த நிகழ்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.

’அசுரர் வாரமும்’ அடையாள மீட்டுருவாக்கமும்

ஐதராபாத்தில் அமைந்துள்ள ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில்(English and Foreign Languages University) நிர்வாகத்தின் துணையுடன் இந்துமதவெறி மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி (ABVP) யினால் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு, எப்போதும் போலவே மாணவர்களின் கடுமையான எதிர்ப்பயையும் மீறி நிர்வாகத்தின் பாதுகாப்புடன் இவ்வாண்டும் கொண்டாடப்பட்டது.

அதை எதிர்க்கும் வண்ணமாகவும், திரிக்கப்பட்ட வரலாற்றினை மீட்டெடுக்கும் விதமாகவும் பல்கலைக் கழகத்தில் உள்ள முற்போக்குச் சிந்தனை உடைய மாணவர்கள் தாங்களாகவே இணைந்து, பார்ப்பனியப் பண்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கி, திராவிடக் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் அசுரர் வாரம் (Asura Week) எனும் எதிர் கலாச்சார (Counter Cultural) விழாவினைக் கொண்டாடுவதென முடிவு செய்தனர்.

இந்துக்களின் பண்டிகைகளாக இந்தியாவில் கொண்டாடப்படுகின்ற விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, ஓணம், சரசுவதி பூஜை போன்ற பண்டிகைகள் வெறுமனே பக்தி சார்ந்த பண்டிகைகள் மட்டுமல்ல, மாறாக இப்பண்டிகைகள் மிகவும் விசமத்தனமான உள்ளடக்கங்களைக் கொண்டவை. இவை இந்த மண்ணின் மைந்தர்களையும், நமது மூதாதையர்களான திராவிட மக்களையும் அசுரர்கள், அரக்கர்கள் மற்றும் கொடூரமானவர்கள் எனச் சித்தரித்தும், வந்தேறிகளான ஆரியர்கள் மேம்பட்டவர்களென கதை கட்டியும், ’இக்கொடிய’ அசுரர்களை, ’புனித’ ஆரியக் கடவுள்கள் கொல்லும் நிகழ்வுதான் இது போன்ற விழாக்கள் என்றும் மக்களை நம்ப வைத்திருக்கின்றனர். பல நூறாண்டு காலமாக பார்ப்பனியத்தின் கொடூரக் கரங்களால் சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஒடுக்கப்பட்ட இம்மண்ணின் உழைக்கும் மக்களை பார்ப்பனியப் பண்பாட்டுக்கு அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இது போன்ற விழாக்கள் ஊக்குவிக்கப்பட்டு அரசின் ஆதரவோடு சங்கப் பரிவாரங்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.

இவ்வாறான கட்டுக் கதைகளின் மூலம் திராவிட மக்களை பார்ப்பனப் பண்பாட்டு மேலாதிக்கத்திற்கு அடிமைகளாக்கி, அவர்களது கலாச்சார வரலாறுகளை அழித்து, அவர்களே அவர்களது பண்பாட்டு வீழ்ச்சியினைக் கொண்டாடும்படி செய்கின்ற, அதாவது திராவிட மக்களின் இறப்பை திராவிட மக்களே கொண்டாடும்படி செய்வதுதான் இது போன்ற விழாக்களின் உள்நோக்கம். தீபாவளி, ஓணம், துர்கா பூஜை போன்ற பண்டிகைகள் முறையே நரகாசூரன், மஹாபலி மற்றும் மகிசாசூரன் ஆகிய திராவிட மன்னர்களின் இறப்பைக் கொண்டாடுவதுதான் என்பதை நினைவில் கொள்க.

இவை போன்ற கட்டுக் கதைகள் வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் புனையப்பட்டு பார்ப்பனியப் பண்பாட்டை மக்களின் அன்றாட வாழ்க்கையில் புகுத்தி, அதன் வழி பார்ப்பனிய மேலாதிக்கம் நிலை நிறுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த முறைமையில்தான், விநாயகர் சதுர்த்தி என்ற பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படாத விழாவானது சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்து தேசியக் கட்டமைப்பின் முக்கிய அங்கமாக, ’திலகர்’ என்ற இந்துமத வெறியரால் இந்தியா முழுவதும் மக்களால் கொண்டாடப்படும் பண்டிகையாக மாற்றப்பட்டது. ’இந்து’ என்ற பட்டியில் சட்ட ரீதியாக அடைத்து வைக்கப்பட்டுள்ள இம்மண்ணின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களும், இவ்விழாக்களின் பின்னுள்ள அரசியல் பற்றி ஏதும் அறியாமல் இவை போன்ற விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். மேலும் தற்பொழுது விநாயகர் சதுர்த்தி என்பது சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டுவதற்கு இந்துமத வெறியர்களின் கைகளில் ஆயுதமாகப் பயன்படுகிறது.

இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் விநாயகர் சதுர்த்தியை எதிர்த்து ’அசுரர் வாரம்’ கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை தெலுங்கானா மாணவர்கள் கூட்டமைப்பு (TSA), தலித், ஆதிவாசி, சிறுபானமையின, பகுஜன் மாணவர்கள் கூட்டமைப்பு (DAMBSA), முற்போக்கு ஜனநாயக மாணவர்கள் சங்கம் (PDSU) ஆகிய மாணவ அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

’அசுரர்வார’ விழாவின் அடிப்படைகள் :

  • இந்து மதப் புராணங்களை மையப்படுத்தி கட்டமைக்கப்படும் பார்ப்பனியப் பண்பாட்டு அரசியலின் முகத் திரையைக் கிழித்து அதன் ஒரு சார்புத் தன்மையை அம்பலப்படுத்தி, அசுரர்களாகவும், தீய செயல்களைச் செய்யும் அரக்கர்களாகவும், கொடூரமானவர்களாகவும், சித்தரிக்கப்படும் இம்மண்ணின் மைந்தர்களைப் பற்றிய புராணக் கட்டுக் கதைகளைக் கட்டுடைத்து எதிர் கதையாடல்களை (Counter Narratives) உருவாக்குதல். (பார்ப்பனியத்தை எதிர்த்து போராடிய இம்மண்ணின் மைந்தர்களது உண்மையான கதைகளை கொண்டாடுதல்வினவு)
  • திராவிட, பார்ப்பனிய எதிர்ப்புக் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிப்பதன் வழியாக மறக்கடிக்கப்பட்ட திராவிட மக்களின் பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுத்தல் .
  • கொலையைக் கொண்டாடுவதும், பகுத்தறிவுக்கு விரோதமானதாகவும், மூடநம்பிக்கைகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதுமான பார்ப்பன இந்து மதப் பண்டிகைகளைப் புறக்கணித்து, உழைக்கும் மக்களிடையே பார்ப்பனிய எதிர்ப்பு மரபைக் கட்டமைத்தல்.
  • நமது அன்றாட வாழ்க்கையில் நுட்பமாகக் கலந்து நம்மையும் அறியாமல் நம்மை ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பனிய விழுமியங்களைத் துடைத்தெறிதல்.

அறிவுசார் கல்விப் புலத்தில் திணிக்கப்படுகின்ற பார்ப்பனிய விழுமியங்களை எதிர்த்து கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு கல்வி நிறுவனங்களில், குறிப்பாக தில்லி சவகர்லால் நேரு பல்கலைக் கழகம், தில்லி பல்கலைக் கழகம், ஐதராபாத் உஸ்மானியப் பல்கலைக் கழகம் போன்ற இடங்களில் வேறுபட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. சான்றாக, மஹிசாசூர விழா, நரகாசூர விழா, சரசுவதி சிலையை உடைத்தல், மாட்டுக் கறித் திருவிழா (Beef Festival) முதலான விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றன. இந்த மரபின் தொடர்ச்சியாக ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைக் கழகத்தில் அசுரர் வாரம்  (EFLU Asura Week) செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13 வரை நடைபெற்றது. ஆனால் இவ்விழா ஏற்படுத்திய அதிர்வுகளும், அது சார்ந்த சிந்தனைகளும் இன்னும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

’அசுரர் வாரம்’ விழா நிகழ்வுகள் :

  • முதல் நாள்: ராவணன் தினம்
  • இரண்டாம் நாள்: சூர்ப்பனகை தினம்
  • மூன்றாம் நாள்: மகிசாசூரன் தினம்
  • நான்காவது நாள்: தாடகை தினம்
  • ஐந்தாவது நாள்:  “இந்திய வரலாற்றை மறுவாசிப்புச் செய்தல், பல்கலைக்கழக வளாகங்களில் மதச்சார்பின்மையை மறுவரையறை செய்தல்” என்ற தலைப்பில்கருத்தரங்கம்.

இராவணன தினத்தில், இராமாயணத்தைக் கட்டுடைக்கும் எதிர் கதையாடலின் வடிவமாக, மூர்க்கமாகவும் கொடூர அரக்கத் தன்மையுடன் சித்தரிக்கப்பட்ட திராவிட மன்னனான இராவணனின் உருவத்தை முக ஓவியங்களாக வரையும் போட்டி நடைபெற்றது. இதில் 19 மாணவர்கள் கலந்து கொண்டு மாவீரன் இராவணனின் உருவம் வரையப்பட்ட முகத்தோடும், இவர்களுடன் மற்ற மாணவர்களுமாக சுமார் 35-க்கும் மேற்பட்டோர் தங்கள் கைகளில் ‘அய்யனார்’, ’மதுரை வீரன்’ போன்ற நாட்டுப்புற கடவுள்களின் உருவங்களையொத்த படங்களைக் கொண்ட பதாகைகளுடன்

ஜெய் ராவணா! ஜெய் சம்பூகா! ஜெய் சூர்ப்பனகா! ஜெய் மகாபலி!

திராவிடக் கலாச்சாரம் ஓங்குக! ஆரியக் கலாச்சாரம் ஒடுங்குக!

அசுரர்குல வீரர்களுக்கு வீர வணக்கம்!

அசுரர் கலாச்சாரம் ஓங்குக!

அம்பேத்கர், பெரியாரின், பூலே சாதி மறுப்புக் கருத்துகள் ஓங்குக!

என்று முழக்கங்கள் எழுப்பிக்கொண்டே பல்கலைகழக வளாகத்தினுள் பேரணியாக வலம் வந்தனர்.

இராவணன் தின பேரணி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

திரண்ட பெருமுழக்கமாக பல்கலைக்கழக வாயிலை அடைந்த மாணவர்கள், சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு பார்ப்பனியத்தின் நச்சு முகங்களை தோலுரிக்கும் விதமாகவும், திராவிடப் பண்பாட்டைப் போற்றும் விதமாகவும் முழக்கங்களிட்டனர். வாகனங்களில் சென்று கொண்டு இருந்தவர்கள் முழக்கங்களையும், முகஓவியங்கள் மற்றும் பதாகைகளையும் கவனமாகப் பார்த்துச் சென்றார்கள்.

அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், “ஏன் ஜெய் ராவாணா என்று முழக்கமிடுகிறார்கள்” என்று ஆர்வமுடன் கேட்டார். ”இவர்களெல்லாம் திராவிட குலத்தைச் சார்ந்தவர்கள்; நமது மூதாதையர்கள். ஆரியர்களின் ஒடுக்கு முறைக்கு எதிராகப் போரடியவர்கள். இவர்கள் தான் நமது வணக்கத்துக்குரியவர்கள்; ராமர், விநாயகர் போன்றோரெல்லாம் நமது தெய்வங்கள் இல்லை” என்று ஒரு மாணவர் விளக்கினார்.

சூர்ப்பனகையின் மூக்கு

சூர்ப்பனகையின் மூக்கு
சூர்ப்பனகையின் மூக்கு

சூர்ப்பனைகை தினத்தன்று, பெண்ணென்றும் பாராமல் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து, கடவுள் அவதாரத்தின் தனயனாகவும், மாவீரனாகவும் புராணத்தால் போற்றப்படும் இலக்குமணின் கையாலாகாத தனத்தை அம்பலப்படுத்தும் விதமாகவும், சூர்ப்பனகையை போற்றும் விதத்திலும், ஆணாதிக்க எதிர்ப்பின் சின்னமாகவும் அறுபட்ட சூர்ப்பனகையின் மூக்கு உருவாக்கப்பட்டு, மாணவர்கள் கூடுகின்ற ’சாகர் சதுக்கத்தில் வைக்கப்பட்டது.

சூர்ப்பனகை
சூர்ப்பனகை

மகிசாசூரன் தினத்தன்று ”ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வை வெளிப்படுத்துதல்” என்ற தலைப்பில் திரைச்சீலை ஓவியம் (Canvas Painting) வரைதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில்,

  • ‘சமணர்கள் கழுவேற்றப்படுதல்’
  • ‘மகாபலி மன்னன் பார்ப்பன விஷ்ணுவைக் கொல்லுதல்’
  • ‘பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்தும் விதமான ஓவியங்கள்’,
  • ‘சாதிய ஆதிக்கம்’

போன்ற பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. அதில் ‘இரணியன் நரசிம்மாவைக் கொல்வது’ என்ற ஓவியம் ஏ.பி.வி.பிக்கு மிகுந்த வெறுப்பை உண்டாக்கியது. ஏற்கனவே அசுரர் விழாவினால் கொதிப்படைந்திருந்த இந்துத்துவ ஆதரவு நிர்வாகமும், ஏ.பி.வி.பியும் விழாவை நிறுத்த ஏதாவதொரு ’போலியான’ காரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நரசிம்ம ஓவியம் அதற்கான வாய்ப்பாக அமைந்தது.

இலக்குவன் -சூர்ப்பனகை
ஆணாக்க வெறியன் இலக்குவனால் மூக்கறுபட்ட சூர்ப்பனகையின் ஓவியம்

 

இரணியன் - நரசிம்மன்
ஏ.பி.வி.பிக்கு வெறுப்பை உண்டாக்கிய இரணியன் நரசிம்மனைக் கொல்லும் ஒவியம்

இந்நிலையில், ஏ.பி.வி.பி யின் தூண்டுதலின் பேரில் 15 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓவிய நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து ’இரணியன் நரசிம்மனைக் கொல்வது’ என்ற ஓவியத்தை நீக்கி விடும்படியும்,  துயிலுரிக்கப்பட்டு மூக்கறுபட்ட நிலையில் அபலையாய் நின்ற சூர்ப்பனகையின் ஓவியத்தை சீதாவின் நிர்வாண ஓவியம் என்று புரிந்து கொண்டு, அது அவர்களது மத உணர்வைப் புண்படுத்துவதாகவும் முறையிட்டனர். அது மட்டுமில்லாமல், அவர்கள் விழா ஏற்பாடு செய்த மாணவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதத்தின் முடிவில் ஓவியத்தை நீக்கமுடியாது என்றும், இதில் புதிதாக யாரையும் புண்படுத்தவில்லை என்றும், நூறாண்டுகளுக்கும் மேலாக சமூகத்தின் பல்வேறு தளங்களில் பெரியார், அம்பேத்கர், பூலே போன்ற தலைவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களைத்தான் நாங்கள் ஓவியமாக வரைந்திருக்கிறோம் என்றும் பதில்அளிக்கப்பட்டது. ஒன்றும் மறுமொழி சொல்லமுடியாமல் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்நிலையில், வளாகத்தில் சுயமாக இயங்கும் திராணியற்று எதையுமே திரை மறைவில் ஆதிக்க, இந்துத்துவ ஆதரவு நிர்வாகத்தின் கைகோர்ப்போடு செயல்படுத்தும் ஏ.பி.வி.பி, அதன் ஆதரவுப் பேராசிரியர்கள் மூலம் நிர்வாகத்தில் புகார் செய்தனர். நிர்வாகத்தினரும் விழாவை ஏற்பாடு செய்த மாணவர்களிடம் இது பற்றி ஏதும் விசாரிக்காமல் உடனடியாக உஸ்மானியப் பல்கலைக் கழக காவல் நிலையத்தில் வாய்மொழியாகப் புகார் அளித்தனர்.

அன்று மாலையே காவல் துறையினர் பல்கலைக் கழக வளாகத்தினுள் நுழைந்து அசுரர் தினவிழா ஏற்பாடு செய்த மாணவர்களை அழைத்து “நீங்கள் அசுரவிழா கொண்டாடுவதன் மூலம் இந்துமத உணர்வைப் புண்படுத்துவதாக நிர்வாகம் புகார் அளித்திருக்கிறது, அப்படிஏதேனும் நாங்கள் கண்டு பிடிக்க நேர்ந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும்” என்று  ‘அன்பாக’ எச்சரித்துச் சென்றனர்.

காவல் துறையினருக்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆளுயர விநாயகர் சிலை மதச்சார்பினமையின் அடையாளமாகவும், பிற மதத்தவரின் மத உணர்வை ஒரு சிறிதும் புண்படுத்தாத, புண்ணியம் தருகின்ற ‘கடவுளா’கத் தெரிந்தது போலும்! உச்சமன்ற நீதிபதிகளே ஆர்.எஸ்.எஸ் இன் கொ.ப.செவாக செயல்படும் போது பார்ப்பனிய அரசமைப்பின் ஏவல் அடிமைகளாகச் செயல்படும் காக்கிகளிடம் எப்படி மதச் சார்பின்மையை எதிர்பார்க்க முடியும்?

இந்த நிகழ்வுகளுக்குப் பின் ’அசுரர் வாரம் ’ விழாவைப் பற்றிய செய்திகள் அனைத்து செய்தித் தாள்களிலும் வரத் தொடங்கின. பெரும்பாலான செய்தித் தாள்கள் நிர்வாகம் சொன்னதைத்தான் அப்படியே வாந்தி எடுத்தன. சில நாளிதழ்கள் விழா ஏற்பாடு செய்த மாணவர்களின் தரப்புக் கருத்துக்களையும் செய்திகளாக வெளியிட்டன. நிர்வாகம், ஏ.பி.வி.பி மற்றும் காவல்துறை என பல்முனைகளில் இருந்து வந்த தாக்குதல்களையும் பொருட்படுத்தாது திட்டமிட்டிருந்தபடியே நிகழ்ச்சிகள் வெற்றிகரமாகத் தொடர்ந்து நடத்தப்பட்டன.

தொடர்ந்து வந்த தாடகை தினத்தன்று ”ஆதிக்கத்தை எதிர்த்தல், கலாச்சார எதிர்ப்பை வெளிப்படுத்துதல்” என்ற தலைப்பில் விவாத அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டு பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பின் வழி உருவாக்கப்பட்ட ஏற்றுத் தாழ்வுள்ள சமூகத் தன்மைகள் விவாதிக்கப்பட்டன.

அசுர வார விழா நிறைவாக ”இந்திய வரலாற்றை மறுவாசிப்புச் செய்தல், பல்கலைக்கழக வளாகங்களில் மதச் சார்பின்மையை மறுவரையறை செய்தல்” என்றதலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இவ்விழாவில் “துண்டி(Dhundi)” என்றநாவலை எழுதியதற்காகக் கைது செய்யப்பட்ட கன்னட எழுத்தாளர் யோகஷ் மாஸ்டர் கலந்துகொண்டு அவர் எழுதிய நாவலைப் பற்றி விளக்கிப் பேசினார். இந்நாவல் எப்படி கணத்தின் (குழு) தலைவனான கணபதி இப்பொழுதுள்ள விநாயகன் ஆக்கப்பட்டான் என்பது பற்றி ஆராய்ந்து எழுதப்பட்டதாகும்.

’விக்நாயக்’ (Vighnanayak) என்றால் தடைகளை உருவாக்குபவன் என்று பொருள். புராணங்களிலும் கூட விநாயகன் தீமைசெய்யும் கடவுளாகத்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறான் என்ற உண்மையைக் கூறியதற்காக, இந்நாவல் வெளியான கர்நாடகாவில், இந்து மதவெறி அமைப்பான ஸ்ரீராம்சேனா போன்ற இந்துத்துவ அமைப்புகள், இந்நாவல் இந்து மக்களின் கடவுளான விநாயகனைக் கொச்சையாகச் சித்தரிக்கிறது என்றும், நாவலைத் தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர். இதனால் நாவல் விற்பனை தடை செய்யப்பட்டதோடு, நாவலை எழுதிய யோகேஷ் மாஸ்டர் கைதும் செய்யப்பட்டார்.

பிணையில் வெளி வந்த அவர், கருத்தரங்கத்தில் இந்நாவலைப் பற்றியும், நாவல் வெளியான பிறகு தான் சந்தித்த அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார். பேராசிரியர் வி.பி.தாரகேஸ்வரும், உஸ்மானியாப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர்.ஏ.சத்தியநாராயணாவும், ஆய்வு மாணவரும், களப்போராளியுமான சுதர்சனும் மதச்சார்பின்மை, விநாயகர் சதுர்த்தியின் வரலாறு, பார்ப்பனிய மேலாக்க எதிர்ப்பு ஆகியன பற்றிப்பேசினர். பெரும்பான்மையான மாணவர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

விழாவை ஏற்பாடு செய்த மாணவர்கள் மீது பிணையில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு :

அசுரர் வார விழா முடிவடைந்து சுமார் ஒரு மாதம் ஆன நிலையில் அக்டோபர் 3-ம்தேதி அசுரர் வாரம் கொண்டாடியதற்காக அதை ஏற்பாடு செய்த மாணவர்கள் ஆறு பேர் மீது ‘மதவுணர்வைப் புண்படுத்துதல்’ என்ற அடிப்படையில் பிணையில் வெளிவர இயலாத 153 A என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆறு மாணவர்களுக்கும் விளக்கம் கேட்டு அறிவிக்கை (Notice) அனுப்பப்பட்டது.

விழா ஏற்பாடு செய்த மாணவர்களிடம் எந்தவித விளக்கமும் கேட்காமல் நேரடியாக நிர்வாகம் காவல் துறையிடம் புகார் அளித்தது. இப்படி நிர்வாகம் அடாவடியாக நடந்து கொள்வது இது முதன்முறை அல்ல. ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்பதால், பார்ப்பனரைத் துறைத் தலைவராகக் கொண்ட ஜெர்மன் மொழிப் பிரிவு மாணவரை தேர்ச்சியற்றவராக்கி கல்வியில் தொடர முடியாமல் செய்தது, இந்துத்துவ ஆதரவு நிர்வாகத்தின் துன்புறுத்தலால் முதாஸிர் (Mutassir) என்ற காஷ்மீரத்து இஸ்லாமிய மாணவன் விடுதி அறையிலேயே தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டது ஆகிய நிகழ்வுகளிலெல்லாம் நிர்வாகம் நேரடியான மாணவர் விரோதப் போக்கையே கடைப் பிடித்திருக்கிறது.

விளக்கம் அளிக்கும் பொருட்டு, தாங்கள் மீதுள்ள குற்றம் என்னெவென்றும், குற்றம் சாட்டியவர்கள் யார் என்றும், காவல் துறையினரிடம் கேட்டபொழுது அவர்கள் ஒரு புகார் கடிதத்தை காண்பித்தார்கள். அதில் பெயர், கையொப்பம் முதலிய தகவல்கள் எதுவுமே தெளிவாக இல்லை. பின்னர் அதுபற்றி வளாகத்தில் விசாரித்த போது, ஏ.பி.வி.பியின் தூண்டுதலின் பேரில் சில மாணவர்கள் விழாவின் மூன்றாம் நாளன்றே காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்கள் என்றும், அதன் பேரிலும், நிர்வாகத்தின் தூண்டுதலாலும் தான் காவல் துறை வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் தெரிய வந்தது.

நிர்வாகத்திற்கும், பார்ப்பனிய மேலாண்மைக்கும் தலை சாய்க்காத மாணவர்கள்யாரேனும் காவல் துறையிடம் புகார் அளிக்கச் சென்றால், அவர்களது பெயர், துறை, விடுதி அறை எண் ஆகியவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல், அவர்களது அடையாள அட்டையை நுணுகிப் பரிசோதிக்கவும் அவர்கள் தவறுவதில்லை. மாறாக அசுரர் வாரம் விழாவைப் பற்றிய புகாரில் மேற்சொன்ன எதையுமே காவ ஞநல்துறை பின்பற்றவில்லை. இது நிர்வாகமும், காவல் துறையும் எவ்வளவு நேர்மையாக(?) செயல்படுகிறது என்பதைக் காட்டுகின்றது.

கடந்த அக்டோபர் 11-ம் தேதி TSA, DAMBSA, PDSU ஆகிய மாணவர் அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி பல்கலைக்கழக நூலகத்தில் நூலக அதிகாரியின் ஆதரவுடன் துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. இதனை எதிர்த்து காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாருக்கு ’’துர்கா பூஜை பெரும்பான்மையினரால் கொண்டாடப்படும் பண்டிகை என்றும் அதையெல்லாம் தடுக்க முடியாது.’’ என்றும் அல்ட்சியமாகக் கூறி விட்டனர்.

துர்கா பூஜை போன்ற மத விழாக்கள் கொண்டாடுவதில் அதிகமாக அக்கறை காட்டாத உழைக்கும் மக்களையும் வலுக்கடாயமாக இந்தப் பெரும்பான்மையில் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்தப் பெரும்பான்மை என்னும் குதிரையின் மீதுதான் இந்து மத வெறியர்கள் வெகு சுலபமாகப் பயணிக்கிறார்கள்.

மதவுணர்வு என்பது இந்துக்களுக்கு (பெரும்பானமையான உழைக்கும் மக்கள் இந்துக்கள் இல்லை என்ற போதிலும்) மட்டுமே என்பதாகத்தான் காவல் துறை, கல்வி நிறுவனங்கள், பத்திரிக்கை, நீதிமன்றம் போன்ற அமைப்புகள் புரிந்து கொள்கின்றன. பாரபட்சமற்று நடந்து கொள்வதாகவும், ’சமூக நீதியை’க் காக்கும் காவலர்கள் என்றும் மார்தட்டிக் கொண்டே இந்நிறுவனங்கள் இவ்வாறு ஒரு சார்புத்தன்மையுடன் தான் நடந்து கொள்கின்றன. பிற மதத்தவர்களுக்கு மதவுணர்வே இல்லையென்பது போலவும், பிறப்பால் ஒரு கிறிஸ்தவராகவோ, ஒரு இஸ்லாமியராகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு மதத்தவராகவோ இருந்தாலும், அவர்கள் இந்துவாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸின் கூற்றைத் தான் இதுபோன்ற நிறுவனங்கள் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துகின்றன. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக(!?) நாடான இந்தியாவினுடைய மதச்சார்பின்மையின்(?) யோக்கியதை இதுதான்.

பாசிசமயமாகி வரும் பல்கலைக்கழக நிர்வாகம்

அசுரர் வார விழா கொண்டாடுவதை எதிர்த்து புகார் அளித்தவுடன் பாய்ந்து நடவடிக்கை எடுத்த நிர்வாகம், வளாகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்திய போது பெரும் கூச்சல் எழுப்பி, தொந்தரவு செய்ததாக வளாகத்தில் தங்கியிருக்கும் 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் புகார் செய்தும் கூட விநாயகர் சதுர்த்தி கொண்டாடியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.

அசுரர் வார விழாவினை எதிர்த்து ’பின் வழியில்’ சில ஏ.பி.வி.பி மாணவர்கள் அளித்த புகாரைக் கொண்டு உடனே காவல்துறைக்குத் தெரிவித்த நிர்வாகம், அசுரர் வார விழாவினை ஏற்பாடு செய்த மாணவர் இயக்கங்களை ஒரு பேச்சுக்குக்  கூட அழைத்து எந்தவித விளக்கமும் கேட்க முயலவில்லை. இதைப் பற்றி பல்கலைக்கழகத்தின் துணை ஒழுங்குநரிடம் (Deputy Proctor)பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “நமது அறிவைக் கொண்டு அந்த மாணவர்களைத் திருப்திப் படுத்த முடியாது” என்று திமிராகப் பதிலளித்திருக்கிறார்.

ஒழுக்கம், பாதுகாப்பு என்ற பல காரணங்களைக் கூறி வளாகம் முழுவதும் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் பல்கலைக்கழகத்தில் பணியில் உள்ள பாதுகாவலர்கள் (Securities), வளாகத்தில் கவனத்தை ஈர்க்கும் எந்த நிகழ்வையும், யாருடைய முன் அனுமதியுமின்றி பதிவு செய்யலாம் என்றும், அவற்றிற்கெதிரான எந்தவித நிகழ்வும் கடமையாற்ற விடாமல் தடுத்த குற்றத்தின் கீழ் தண்டனைக்குரியது என்றும் விளக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பல்கலைக்கழக மாணவர் விரோதப் போக்குக்கு எதிரான எந்தவித நியாயமான குரல்களையும் ஒடுக்கி, அவற்றைக் கிரிமினல் குற்றங்களாக சித்தரித்து, அச்சுறுத்தி, மாணவர்களின் எதிர்ப்பை முற்றாக நசுக்குவதுதான் நிர்வாகத்தின் எண்ணம்.

சமீபத்தில் நடந்த ஆண்கள் விடுதி உணவகத்தின் செயற்குழுவிற்கான தேர்தலில் எந்தவித முன்னறிவிப்புமின்றி ஆறு பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த ஆறு பேரும் ஏ.பி.வி.பியைச் சார்ந்தவர்கள் என்பது தற்செயலானதல்ல. பின்னர், அது தொடர்பாக பதிவாளரிடம் புகார் அளித்துக் கேள்வி எழுப்பியவுடனே வேறு வழியின்றி அந்தத் தேர்தலை பதிவாளர் ரத்து செய்தார்.

மேலும், வருகின்ற அக்டோபர் 29-ம் தேதி பல்கலைக்கழக மாணவர் அவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் விதிமுறைகள் தொடர்பான பல்கலைக்கழக அரசியலமைப்பில், மாணவர் அவை (Student’s Council) யின் சுயசார்பினைக் கேள்விக்குள்ளாக்குகின்ற வகையில் மாணவர்களின் அனுமதியின்றி நிர்வாகம் பல திருத்தங்களை செய்துள்ளது.

உச்சநீதிமன்றம் தனது பல தீர்ப்புகளில் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கும், காவல் துறைக்குமான உறவுகளைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

“மாணவர்களின் ஒழுக்கமின்மையோ, துர்நடத்தையோ அவர்கள் சார்ந்த கல்வி நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் தீர்க்கப்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்வில் ஆசிரியர் எவரேனும் ஈடுபட்டால், நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகத்தினால் ஒழுங்கு நிலையை சரி செய்ய முடியாத பட்சத்தில் மட்டுமே காவல் துறையின் உதவியை நாடவேண்டும். கற்பதற்காக கல்வி நிலையம் செல்லும் மாணவர்கள் எவ்விதத்திலும் காவல் துறையாலோ, சிறைச்சாலை பயத்தாலோ, நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகவோ மனம் உடைந்து போவதான நிலையினை உருவாக்கக் கூடாது. (Supreme Court of India, 4th May 2001; Equivalent Citations: AIR 2001 SC 2814, 2001 (3) SCALE 503, (2001) 6 SCC 577).”

இந்நிலைக்கு மாறாக, எவ்வித நிகழ்வாயினும், பல்கலைக்கழக நிர்வாகம் காவல் துறையின் உதவியினை நாடுவதும், இந்த உறவின் மூலம் சீருடையணிந்த அணிந்த காவலர்கள் அடிக்கடி வளாகத்தினுள் வலம் வருவதும், விசாரணை என்ற பெயரில் மாணவர்கள் காவல் நிலையத்திற்கு இழுக்கப்படுவதும் இங்கு யதார்த்தமாகி விட்டது.

இந்திய அரசின் சட்டங்களில் பெரும்பாலானவைகள் சாதி ஏற்றத் தாழ்வு, இந்துமத வெறி ஆகியவற்றை நியாயப்படுத்துபவையாகத் தான் இருக்கின்றன. கொட்டை எழுத்தில் மதச்சார்பற்ற, இறையாண்மையுள்ள, சோசலிச ஜனநாயகக் குடியரசு என்று போட்டுக் கொண்ட இந்திய அரசாங்கத்திடமும் அதன் நிறுவனங்களிடமும் மதச்சார்பின்மை பற்றி பேசினால் மதச்சார்பின்மையா? கிலோ என்ன விலை? என்று கேட்கும் நிலைதான் உள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள கொஞ்ச நஞ்ச உரிமையைப் பயன்படுத்துவதற்கும் இது போன்ற பல்கலைக்கழக நிர்வாகங்களும், காவல் துறையும் தடையாக உள்ளன.சட்டத்தை மதிக்காத இவர்கள் தான் சட்ட ஒழுங்கு பற்றியும், ஒழுக்கம் பற்றியும் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள்.

பகுத்தறிவுக்கு விரோதமான, மூட நம்பிக்கைகளை வளர்க்கும் மதவிழாக்களையும், நுகர்வுக் கலாச்சாரத்தை வளர்க்கும் கேளிக்கை விழாக்களையும் அனுமதிக்கும் நிர்வாகம்,’சமத்துவம்’, ’மதச்சார்பின்மை’ ஆகியவற்றை வலியுறுத்தும் ’அசுரர் வாரம்’ போன்ற கலாச்சார விழாக்களுக்கு அனுமதி தருவதில்லை. ஏனெனில் ’எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளுங்கள்;ஆனால் நிர்வாகத்தின் செயல்பாடுகளையும், அதன் அதிகாரத்தையும் கேள்வி கேட்காதீர்கள்’ எனபது தான் ஐ.ஐ.டி முதல் ஜவகர்லால் நேரு போன்ற மதிப்பு மிக்க பல்கலைக் கழகங்களிலும் உள்ள நடைமுறை யதார்த்தம்.

மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் ஐதராபாத்தின் ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் (English and Foreign Languages University) மட்டும் இருப்பதல்ல. மாறாக இந்தியாவில் உள்ள அடிப்படைக் கல்வி முதல் ஆய்வுக் கல்வி வரையான அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. காலத்திற்க்கிற்கேற்ப வெவ்வேறு வடிவங்களை எடுக்கும் பார்ப்பனியத்தை எதிர்த்து வீழ்த்த பெரியாரையும், அம்பேத்கரையும் போன்ற பார்ப்பனிய எதிர்ப்புப் போராளிகளின் கருத்துகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது அதிகமாகத் தேவையாக உள்ளன. பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் வண்ணம் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதியன்று வளாகத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதியில் உள்ள உணவகங்களில் (Mess) பெரியாரின் உருவப் படம் நிறுவப்பட்டது. ஏற்கனவே உணவகத்தில் அம்பேத்கர், பூலே அவர்களின் படங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி நிறுவனங்களில் ஆழமாக வேரூன்றி உள்ள பார்ப்பனியத்தைக் களையெடுக்க ’அசுரர் வாரம்’ போன்ற விழாக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு அதன் வழியாக ஒரு வீரியமான எதிர்கதையாடல் மரபினை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

பார்ப்பனிய பண்பாட்டு ஒடுக்குமுறைய எதிர்கொள்வோம்! முறியடிப்போம்!

_______________________________

– முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள்,
ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைக்கழகம்
(English and Foreign Languages University),
ஐதராபாத்.

பெரியார் பிறந்த நாளன்று ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதியில் உள்ள உண்வகங்களில் பெரியாரின் உருவப்படம் நிறுவும் போது எடுக்கப்பட்ட படங்கள் :

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

  1. உச்சமன்ற நீதிபதிகளே ஆர்.எஸ்.எஸ் இன் கொ.ப.செவாக செயல்படும் போது பார்ப்பனிய அரசமைப்பின் ஏவல் அடிமைகளாகச் செயல்படும் காக்கிகளிடம் எப்படி மதச் சார்பின்மையை எதிர்பார்க்க முடியும்? பார்ப்பனிய பண்பாட்டு ஒடுக்குமுறைய எதிர்கொள்வோம்! முறியடிப்போம்!

    _______________________________

  2. பார்ப்பன பண்பாட்டு விழாக்கள் கொண்டாடும் பொழுது அசுரர்களின் மணம் புண்படாதா??

    இந்த அசுரவிழாக்கள், பல்கலைக்கழகங்களில் மட்டும் கொண்டாடினால் போதாது அகில

    இந்தியாவிலும் கொண்டாடவேண்டும்.இராவணலீலா கொண்டாட்டம் பெரியாரால்

    துவக்கிவைக்கப்பட்டது.பெரியாரின் படத்தை பல்கலைக்கழக மாணவர்கள் திறந்துவைத்து விழா

    கொண்டாடியது சிறப்புடையது.நமது மூதாதையரை நாம் கொண்டாடவிடாமல் கவர்ந்து

    கொண்டதை, நாம் மீட்டெடுப்போம்,கள்வரை ,அந்த கவரை விரட்டியடிப்போம்.

  3. தீபாவளி நரகாசுரனை வதம் செய்து கொன்ற நாள்.நாம் அதற்கு எதிர் வினை ஆற்றவேண்டும் நாம் அந்த நாளை நமது நாளாக்கவேண்டும்.

    • Timepass move by half baked and unemployed people.

      mr harikumar

      Is it so ,then whatelse ,you are doing here.pl try to understand,what others are saying,
      give your fullll backed reply.

  4. It is reported that the Asst Proctor of the university told,”With our knowledge we can not counter the students” So is the case with Harikumar.He could not put forth his constructive arguments.That is why he says that the actions by students as “half baked”,”timepass”.He betrays his half baked “knowledge”

  5. பார்ப்பனியத்தின் மீது கடுமையான விமர்சனம் வைக்கும் இந்த பதிவு பக்கம் பார்ப்பன அம்பிகள் எட்டிக் கூட பார்க்கவில்லையே.அப்போ இவங்கட்ட கருத்து ரீதியாக மோதி வெல்ல சரக்கு கிடையாதுங்கிறது தெளிவாகுது.

    • // அப்போ இவங்கட்ட கருத்து ரீதியாக மோதி வெல்ல சரக்கு கிடையாதுங்கிறது தெளிவாகுது. //

      யாரைச் சொல்கிறீர்கள்..?

      // கல்வி நிறுவனங்களில் ஆழமாக வேரூன்றி உள்ள பார்ப்பனியத்தைக் களையெடுக்க ’அசுரர் வாரம்’ போன்ற விழாக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு அதன் வழியாக ஒரு வீரியமான எதிர்கதையாடல் மரபினை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. //

      இதை எழுதியவர்களையா..?! மக்கள் கலை, இலக்கியம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இறுதியாக இப்படி ராவணன், சூர்ப்பனகை, நரகாசுரன் etc புராண பாத்திரங்களுக்கு விழா எடுக்கச் சொல்லும் நிலைக்கு வந்துவிட்டதைப் பார்த்தால் பார்ப்பன அம்பிகளுக்கு சந்தோசம் வருகிறதோ இல்லையோ நியாயமாக உங்களுக்கு வருத்தம் தானே வரவேண்டும்.. இல்லை கம்யூனிசப் புரட்சிக்காரர்கள் பார்ப்பனியத்தை எதிர்ப்பதாய் கூறிக்கொண்டு போலி பெரியாரியவாதிகளாக மாறிப்போய் நிற்பதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறதா..?

      • பெரியார் சொல்வார். “பார்ப்பனர்களுக்கு முன்புத்தி கிடையாது. பின் புத்தியும் கிடையாது”. மற்றவர்கள் கேட்கிறார்கள். “அவர்கள் தான் சாத்திர சம்பிரதாயங்களையெல்லாம் இயற்றி இந்நாட்டின் பெரும்பானமையான உழைக்கும் மக்களை சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாக இத்தனை ஆண்டுகளாக ஒடுக்கி வைத்திருக்கிறார்கள். மக்களையும் அதுபோலவே நம்ப வைத்திருக்கிறார்கள். அவர்களைப் போய் முன்புத்தி, பின்புத்தி கிடையாது என்கிறீர்களே”. பெரியார் பதிலளிக்கிறார். ” பார்ப்பனர்களுக்கு முன் புத்தியும் கிடையாது, பின் புத்தியும் கிடையாது. ஒரே ஒரு புத்திதான் உள்ளது. அது வஞ்சக புத்தி” என்று கூறினாராம்.

      • பதிவுக்கு அம்பி பதில் சொல்லிட்டார்பா.இல்ல இல்ல சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் தீர்ப்பு சொல்லிட்டாரு.பார்ப்பனிய ஆதிக்கத்தின் மூலஸ்தானமான கருவறைக்குள் நுழைந்த சூத்திர பஞ்சம சாதியினரான கம்யூனிச புரட்சியாளர்கள் போலி பெரியாரியவாதிகளாம்.கம்யூனிச புரட்சியாளர்கள் பெரியாரின் கொள்கைகளையும் ஆயுதமாக ஏந்துறது அம்பிகளுக்கு வயித்துல புளிய கரைக்குது போல.

      • // பார்ப்பனியத்தின் மீது கடுமையான விமர்சனம் வைக்கும் இந்த பதிவு பக்கம் பார்ப்பன அம்பிகள் எட்டிக் கூட பார்க்கவில்லையே.அப்போ இவங்கட்ட கருத்து ரீதியாக மோதி வெல்ல சரக்கு கிடையாதுங்கிறது தெளிவாகுது.//

        என் புரிதலில் எரிமலை இப்படிக் கூறியது பிறப்பால் மட்டும் பார்ப்பனர்களை அல்ல. பிறப்பால் மட்டுமின்றி பார்ப்பனியத்தை தங்கள் வாழ்வில் கடைபிடிக்கும் பார்ப்பனர்களைத்தான். ஆனால் இதைப்பார்த்து அம்பி அவர்கள் ஏன் கொதிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. இன்னும் உங்கள் பார்ப்பன உணர்வு உங்களை விட்டுப் போகவில்லையோ?

        அறிவுக்கொவ்வாத கட்டுக்கதைகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்ட இந்துமதப்பண்டிகைகளை கொண்டாடிக்கொண்டிருக்கும்ப் பெரும்பானமை மக்களிடம் பார்ப்பனிய எதிர்ப்பு குறித்த அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கண்டிப்பாக இவ்விழாக்கள் உதவும்.

        ராவணன், சூர்ப்பனகை, நரகாசூரன் போன்றோர் கற்பனைப் பாத்திரங்கள் தான் என்றாலும் அப்புராணக்கதைகளின் பின்னுள்ள அரசியல் வெறுமனே இப்பாத்திரங்களை மட்டும் சார்ந்ததல்ல. ராவணனைக் கொடூரமான அரக்கனாக புராணங்கள் சித்தரிப்பது ராவணனுக்கு மட்டுமல்ல, அவன் சார்ந்த அனைத்து திராவிட இனமக்களையும் தான் அச்சித்தரிப்புகள் சுட்டுகின்றன. ஆகவே ராவணனை நாயகனாகச் சித்தரிப்பது, மக்களை ராமனுக்கு எதிராக நிறுத்தும். இதுதான் எதிர்கதையாடல்(). இந்துமதப் புராணங்களின்படியே ராமன் என்பவன் ஒரு ஏகப்பத்தினி விரதனல்ல ஏகப்பட்டபத்தினி விரதன். ராமன் ஒரு நிறவெறியன், இனவெறியன், ஆணாதிக்கவாதி, உழைக்கும் மக்களின் எதிரி, மனுநீதியைப் பாதுகாப்பவன், கோழை, பேடி……. இப்படிப்பட்ட அயோக்கியனைத் தூக்கி எறிந்துவிட்டு மக்கள் ராவணனைக் கொண்டாடுவதில் எந்த மூட நம்பிக்கையும் இல்லை.

        இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?
        https://www.vinavu.com/2012/12/21/conversion-25/

        இப்படிப் புராணப்புராணப் பாத்திரங்களைக் கொண்டாடுவதை போலி பெரியாரியவாதிகள் என்று நீங்கள் புரிந்து கொண்டால், உங்களைப் பார்த்துப் பரிதாபப்படத்தான் வேண்டும். பெரியார் இராவணலீலா கொண்டாடியது தங்களுக்குத் தெரியாதோ? அதனால் சங்கப்பரிவாரங்களின் தெய்வப்புருசன் ராமன் தமிழ்நாட்டில் செருப்படி வாங்கினான்.

        • // ராவணனைக் கொடூரமான அரக்கனாக புராணங்கள் சித்தரிப்பது ராவணனுக்கு மட்டுமல்ல, அவன் சார்ந்த அனைத்து திராவிட இனமக்களையும் தான் அச்சித்தரிப்புகள் சுட்டுகின்றன. //

          வால்மீகி ராமாயணத்தில், கிட்கிந்தா காண்டத்தில், சுக்ரீவன் 4 திசைகளுக்கும் வானரப்படைகளை சீதையைத் தேட அனுப்புகிறான்.. கடத்திச் சென்ற ராவணன் ‘திராவிட’ அரசனென்றால் தென் திசையில் மட்டும் தேடினால் போதாதா.. ராவணன் ‘திராவிட’ அரசன் என்றே கொண்டாலும், மேற்படி காண்டத்தில் 41வது அத்தியாயத்தில் தென்பகுதி பிரதேசங்களை வருணிக்கும் போது, ஆந்திரா, சோழ, கேரள, பாண்டிய என்றே தெளிவாக பெயருடன் அப்பிரதேசங்கள் குறிப்பிடப்படுகின்றன் .. இலங்கையை ராட்சச அரசனான ராவணன் நாடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.. சோழ, கேரள, பாண்டிய நாடுகளை ராட்சச நாடுகள் என்று குறிப்பிடவில்லை.. திராவிட அரசனான ராவணனுடன் வானரப்படைகளுடன் வந்த ஆரிய ராமன் மோதிய போது சேர, சோழ, பாண்டியர்கள் எங்கிருந்தார்கள்..? நடுநிலை வகித்தார்களா..?! ஏன் ’திராவிட’ அரசர்களான சேர,சோழ, பாண்டியர்களைப் பற்றிய குறிப்பு யுத்த காண்டத்திலோ அல்லது ராவணன் திராவிடர் தலைவன் என்பது போன்ற குறிப்பு எதுவும் சேர, சோழ,பாண்டிய வம்ச வரலாறுகளிலோ, பழந்தமிழ் இலக்கியங்களிலோ இல்லை..? திராவிட என்ற வார்த்தையே பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லை என்பது வேறு விசயம்.. ஆனால் ராவணன் தமிழன் என்ற ஒரு குறிப்பாவது இருக்கிறதா..? பிறகு ராவணன் யார்..? வால்மீகி ராமாயணம் ராவணனன் ராட்சசன் என்கிறது.. தமிழ் பெருவேந்தர்களின் வம்ச வரலாறுகளும், பழந்தமிழ் இலக்கியங்களும் பெரு மன்னனான ராவணனை ஒரு தமிழ் மன்னன் என்று சொந்தம் கொண்டாடவில்லை.. நீங்கள் திராவிடன் என்கிறீர்கள்.. ஒரிஜினல் திராவிடர்கள் இலங்கையில் மட்டும்தான் இருந்தார்களா..?!

          • ராவணன் தமிழனா, திராவிடனா என்பதெல்லாம் இருக்கட்டும். இம்மண்ணில் மைந்தர்களை ஆரியர் வீழ்த்திய வரலாற்றைத்தான் வெவேறு புராணங்களில் விதவிதமான புராணப் பெயர்களை உருவாக்கி எழுதி வைத்துள்ளனர். அப்புராணப் பாத்திரங்களைக் கெட்டவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ராம அவதாரம் செய்ததைப் போல் அப்புராணப் பாத்திரங்கள் எதுவும் கேவலமாகச் செய்யவில்லை (புராணங்களின் படி பார்த்தாலே). ஆகவே ராம அவதாரம் உள்ளிட்ட கடவுள் அவதாரங்களின் எதிரி களாக அசுரர்களாக, அரக்கர்களாக, தீயவர்களாகப் புராணத்தில் சித்தரிக்கப்பட்டோரை பார்ப்பனிய எதிர்ப்பிற்காகக் கொண்டாடுவது ஒன்றும் தவறில்லை என்ற புரிதலில் தான் அசுரர்விழா கொண்டாடப் பட்டது.

            • No puranam makes absolute villains of anyone.

              Ravana is shown to be an educated and powerful king with great noble qualities and his people love him.

              Only his lust gets the better of him.

              The arakkar’s guru is also a rishi called shukraacchariyar and there are many many tales talking about indran and his misdeeds.

              This is the only religion where facts are mentioned freely and fairly.

              This asurar vizha is a timepass festival of people with low self esteem and misguided priorities.

            • // ராவணன் தமிழனா, திராவிடனா என்பதெல்லாம் இருக்கட்டும். //

              ராவணன் தமிழனுமல்ல, திராவிடனுமல்ல..

              // இம்மண்ணில் மைந்தர்களை ஆரியர் வீழ்த்திய வரலாற்றைத்தான் வெவேறு புராணங்களில் விதவிதமான புராணப் பெயர்களை உருவாக்கி எழுதி வைத்துள்ளனர். //

              அயோத்தியின் ‘ஆரிய’ படைகளா ராவணனை வீழ்த்தியது..?!

              கோட்டை கொத்தளங்களுடன் அரண்மனையில் வாழ்ந்து ஆண்ட மண்ணின் மைந்தரான ராவணரின் புராண காலத்து ‘ஏகாதிபத்திய’ அரசை, புராண காலத்து மலைவாழ் பழங்குடியினரான வானரர்கள் வீழ்த்திய கதை தெரியவில்லையா..?!!!

              // அப்புராணப் பாத்திரங்களைக் கெட்டவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். //

              வால்மீகி ராமாயணத்தில், ராவணன், மண்டோதரி, கும்பகர்ணன், வீபிடணன், இந்திரஜித் மற்றும் பலரை புகழ்ந்து எழுதப்பட்டிருப்பதை படித்துப் பாருங்கள்.. கிட்நாப்பிங் கேசுதான் ராவணரின் மீதுள்ள ராமாயணக் குற்றச்சாட்டு..

              // ராம அவதாரம் செய்ததைப் போல் அப்புராணப் பாத்திரங்கள் எதுவும் கேவலமாகச் செய்யவில்லை (புராணங்களின் படி பார்த்தாலே). //

              காட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரமாக தூக்கிக் கொண்டு போய் வைத்து துன்புறுத்தியது சாதா கேவலமா..?!!

              // ஆகவே ராம அவதாரம் உள்ளிட்ட கடவுள் அவதாரங்களின் எதிரி களாக அசுரர்களாக, அரக்கர்களாக, தீயவர்களாகப் புராணத்தில் சித்தரிக்கப்பட்டோரை பார்ப்பனிய எதிர்ப்பிற்காகக் கொண்டாடுவது ஒன்றும் தவறில்லை என்ற புரிதலில் தான் அசுரர்விழா கொண்டாடப் பட்டது. //

              எதிரியின் எதிரி நண்பன் என்பதுதான் கொள்கைகளிலேயே நல்ல கொள்கையா..!

        • // இப்படிப் புராணப்புராணப் பாத்திரங்களைக் கொண்டாடுவதை போலி பெரியாரியவாதிகள் என்று நீங்கள் புரிந்து கொண்டால், உங்களைப் பார்த்துப் பரிதாபப்படத்தான் வேண்டும். பெரியார் இராவணலீலா கொண்டாடியது தங்களுக்குத் தெரியாதோ? அதனால் சங்கப்பரிவாரங்களின் தெய்வப்புருசன் ராமன் தமிழ்நாட்டில் செருப்படி வாங்கினான். //

          பெரியார் ராவணலீலா கொண்டாடியது போல் நீங்களும் சிவப்புச் சட்டை போட்டுக்கொண்டு கொண்டாடுவதால்தான் போலி பெரியாரியவாதிகள் என்றேன்.. ஒரிஜினல் பெரியாரியவாதிகளாக வேண்டுமென்றால் கருப்புச் சட்டை போட்டுக்கொண்டு கொண்டாடுங்கள்..

          • // பெரியார் ராவணலீலா கொண்டாடியது போல் நீங்களும் சிவப்புச் சட்டை போட்டுக்கொண்டு கொண்டாடுவதால்தான் போலி பெரியாரியவாதிகள் என்றேன்.. ஒரிஜினல் பெரியாரியவாதிகளாக வேண்டுமென்றால் கருப்புச் சட்டை போட்டுக்கொண்டு கொண்டாடுங்கள்..//

            அம்பி அவர்களின் கண்மூடித்தனமான பெரியார் எதிர்ப்பினால் என்னென்னவோ எழுதுகிறார். முதலில் இந்தக் கட்டுரை யாரால் எழுதப் பட்டது? இந்த அசுரர் வார விழா எங்கு நடந்தது? என்ன பிண்ணனியில் எதற்காகக் கொண்டாடினார்கள்? என்ற எதையுமே சரியாகப் புரிந்து கொள்ளாமல்( அல்லது புரிந்தும் புரியாதது போல் நடிப்பது) சிவப்புச் சட்டை, கருப்புச் சட்டை என கண்டதையும் எழுவது எதற்காக? பார்ப்பனியம் என்று கூறினாலே உங்களுக்கு எதற்கு பட படக்கிறது?

            முதலில் கட்டுரை யாரால் எழுதப் பட்டது, எதைப் பற்றியது என்பதை நன்றாகப் படியுங்கள் அம்பி அவர்களே..
            // கடந்த மாதம் ஐதராபாத்தின் ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் (English and Foreign Languages University) நடைபெற்ற ’அசுரர் வாரம்’ என்ற விழாவினைப் பற்றிய செய்தி வினவில் வந்தது. அங்கே படித்து கொண்டிருக்கும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் இவ்விழா தொடர்பாகவும், அதன் பின்னான வழக்குத் தொடர்பாகவும் விளக்கி எழுதியுள்ள பதிவை வெளியிடுகிறோம்.//

            இவ்விழாவைக் கொண்டாடியது ம.க.இ.க அல்ல. அப்படிக் கொண்டாடினாலும் ஒன்றும் தவறில்லை. பார்ப்பனிய எதிர்ப்பு கருத்தாக்கம் உடைய யார் வேண்டுமானாலும் இவ்விழாக்களைக் கொண்டது. முட்டாள் தனமான இந்து மதப் பண்டிகைகளுக்கு எதிராக, பார்ப்பனிய எதிர்ப்பின் அங்கமாக இதைக் கொண்டாடுவதால் பார்ப்பனர்கள் தான் பதறவேண்டும்..

            • முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களை உங்கள் அணிகளில் ஒன்றாக தவறாக எண்ணிவிட்டேன்..

              // இவ்விழாவைக் கொண்டாடியது ம.க.இ.க அல்ல. அப்படிக் கொண்டாடினாலும் ஒன்றும் தவறில்லை. //

              கொள்கை அளவில் உடன்பாடுதான் என்கிறீர்களா..

              // இந்து மதப் பண்டிகைகளுக்கு எதிராக, பார்ப்பனிய எதிர்ப்பின் அங்கமாக இதைக் கொண்டாடுவதால் பார்ப்பனர்கள் தான் பதறவேண்டும்.. //

              இதில் பார்ப்பனர்கள் பதறுவதற்கு என்ன இருக்கிறது.. முனைவர் பட்டம் பெற்ற பிறகு இவர்களில் பெருவாரியினர் பார்ப்பனியத்துக்கு சேவை செய்யும் வளமான பணிகளை தேடிப் பறக்கப் போகிறவர்கள்தானே.. அந்த பல்கலைக் கழகத்தில் இனிமேல் அசுரர் வாரத்துக்குப் போட்டியாக ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, ஆயுத பூசை, இன்ன பிற இந்து பண்டிகைகளையும் கொண்டாட வழி இலகுவாகிறது..

              • // அந்த பல்கலைக் கழகத்தில் இனிமேல் அசுரர் வாரத்துக்குப் போட்டியாக ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, ஆயுத பூசை, இன்ன பிற இந்து பண்டிகைகளையும் கொண்டாட வழி இலகுவாகிறது..//

                அசுரர் வாரம் என்ற விழாவே இந்து மதவெறி மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி வளாகத்தில் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தியை எதிர்த்துதான் கொண்டாடப்பட்டது. மேலும் இனிமேல் தான் ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, ஆயுத பூசை ஆகியவையெல்லாம் கொண்டாட வேண்டும் என்பதில்லை, ஏற்கனவே கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

                // கொள்கை அளவில் உடன்பாடுதான் என்கிறீர்களா..//

                ‘பார்ப்பனிய எதிர்ப்பு’ என்ற கொள்கை அளவில் உடன்பாடு தான்.

                • // மேலும் இனிமேல் தான் ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, ஆயுத பூசை ஆகியவையெல்லாம் கொண்டாட வேண்டும் என்பதில்லை, ஏற்கனவே கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். //

                  அந்தப் பல்கலைக் கழகத்தில் விநாயகர் சதுர்த்தியைத் தவிர மேற்படி பண்டிகைகளைக் ஏற்கனவே கொண்டாடிக் கொண்டிருப்பதாக பதிவில் காணமுடியவில்லை..

                  // ‘பார்ப்பனிய எதிர்ப்பு’ என்ற கொள்கை அளவில் உடன்பாடு தான். //

                  இதைத்தான் முதலில் குறிப்பிட்டேன்..!

          • அம்பி சொல்வது சரிதான்! ராவணன் தமிழ் அரசானாக எஙேயும் சொல்லப்படவில்லை! தேவர்களும் அரக்கர்களும் ஒரே தந்தையின் இரு மனைவிகளுக்கு பிறந்தவர்கள் என்றே குறிப்பிடபடுகிறது! ஆனால், அம்பிகளே! யாருடைய குதர்க்கத்தால், ராவணன் முதலிய அசுரர்கள் கருப்பானவர்களாகவும்,மீசை வைத்தவர்களாகவும் சித்தரித்து ராவண லீலா கொண்டாடுகிறீர்கள்!

            • // தேவர்களும் அரக்கர்களும் ஒரே தந்தையின் இரு மனைவிகளுக்கு பிறந்தவர்கள் என்றே குறிப்பிடபடுகிறது! //

              ஆனால் அதெல்லாம் புராணம், செல்லாது என்பார்கள் அஜாதசத்ரு அவர்களே..

              // யாருடைய குதர்க்கத்தால், ராவணன் முதலிய அசுரர்கள் கருப்பானவர்களாகவும்,மீசை வைத்தவர்களாகவும் சித்தரித்து ராவண லீலா கொண்டாடுகிறீர்கள்! //

              ராம் லீலாவில் ராமர் மட்டும் சிவப்பாகவா இருக்கிறார்.. வில்லன் என்றால் கருத்து,முறுக்கு மீசையுடன் அச்சம் தரும் தோற்றத்துடன் இருக்கவேண்டும் என்பது சர்வதேச திரைப் பட மரபாக இருப்பது போல் இதுவும் இருக்கலாம்.. நேருவும் இதைப் பார்த்து ராவணன் திராவிடன் என்று கூறினாரா அல்லது அடுத்தவன் மனைவியை லவட்டிய தன் ஆதர்ச ஹீரோவை ஆரியன் என்று கூறி பாராட்டினால் ஓட்டு விழாது என்று எண்ணி திராவிடன் என்று கூறி, திராவிட முற்போக்காளர்களை மகிழ்வித்து, ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்தாரா என்று தெரியவில்லை..

  6. பெரியார் கூறுகிறார்: “பார்ப்பனர்களுக்கும் முன்புத்தி கிடையாது, பின் புத்தியும் கிடையாது”. மற்றவர்கள் கேட்கிறார்கள்: “பார்ப்பனர்கள்தான் சாத்திர சம்பிரதாயங்களையெல்லாம் உருவாக்கி, பிறப்பின் அடிப்படையில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் ஒடுக்கி வைத்துள்ளனர். அதை மக்களையும் ஏற்றுக் கொள்ள வைத்துள்ளார்கள். அவர்களுக்குப் போய் முன் புத்தியும் இல்லை, பின் புத்தியும் இல்லை என்கிறீர்களே”
    பெரியார் கூறுகிறார்: ” பார்ப்பானுக்கும் முன்புத்தியும் கிடையாது பின் புத்தியும் கிடையாது. ஒரே ஒரு புத்திதான் உள்ளது. அது ‘வஞ்சகபுத்தி'”.

        • Thanks for the link. I am sorry, I dont see convincing argument.

          Reward should be given for people to give up the caste system.
          Do you see a need for reservation for Velalar,Devar like castes?

          The above blog argues, though these people indulged in caste discrimination in the past, they deserve it. It further argues based on few peoples act , we are not supposed to deny reservation to these BC/OBC community.

          With that morale , one can argue even the priest community needs reservation. becase we are not supposed to judge based on few peoples act right?

          All I see is scapegoating the priest community for all their sins. Nothing else.

    • இதையும்தான் ராமசாமியார் கூறிணாராம் ” திருமணஙகள் ஒத்துகொள்ளபட்ட விபசாரம் என்றும்-” இதனால் பெரியாரிஸ்ட்டுகளை எப்படிபட்டவர்கள் என்று அறிவது?

      • அய்யா அழகரசரே! உமது புரிதல் அவ்வளவுதான்! திருமணம் என்ற சடங்கின் மூலம் பெண் அடிமையாக்கப்பட்டு கணவன் வீட்டில் தாசியாகவும், சம்பளம் பெறாத அடிமையாகநடத்தப்படுவதை சாடியே அப்படி சொன்னார்! உத்தம மான மனிதரை புரிந்து கொள்ளவும் உத்தம குணம் வேண்டும் தோழரே!

        • did he also say that in the absence of divorce laws,the woman does enjoy significant privileges and the dowry or the property she brings is for her own good?

          this is why we think ramasamy naicker is a man of limited intellect and excessive emotion.

        • உத்தமரே-
          1.அதற்க்கு எப்படி விபசாரம் என்ற சொல் பொருந்தும்? கணவனுக்குத்தான்
          தாசிபோல மகிழ்விக்கவேண்டும் என கேள்விபட்டுள்ளேன். அது எப்ப்டி கணவன் வீட்டில் தாசியாகமுடியும்?
          2. பெரும்பாலும் ஏன் , எல்லோர் வீட்டீலும் பெண்களே மனமுவந்து குழந்தை வளர்ப்பு , கல்வி உட்பட வீட்டு பணிகளை சேவை / கடமை உணர்வோடுதான் செய்கின்றனர். அத்ற்க்கு சம்பளம் எதிர்பார்ப்பதில்லை. பெரியாரிஸ்ட்டுகள் வீடுகளில் எப்ப்டி சம்பளம் , போனஸ் , ஊக்கத்தொகை எல்லாம் உண்டு என நினைக்கிறேன்.

          • அய்யா அழகேசரே! தொழில்முறை கடமை என்று காசுக்காக, மனசுக்கு பிடிக்கிறதொ இல்லையோ, கட்டாயமாக பிறரை மகிழ்விப்பதே விபச்சாரம்!
            இப்பொது சொல்லும், பெரியார் காலத்தில், ஏன் இப்பொது கூட, கண்வனை தேர்ந்து எடுப்பதில் பெண்களுக்கு என்ன உரிமை உள்ளது?
            சன் டீ வீ மகாபாரதத்தில் கூட பீஷ்மர் என்ன சொல்கிரார்? சுயம்வரம் நடந்தாலும் போரில் வென்ற சத்திரியனுடன் செல்ல வேண்டியவளே பெண் என்று கூறவில்லையா? திருமண மந்திரங்கள் பற்றி சாத்திரங்கள் கூறுவதை தாத்தாச்சாரியார் தோலுரித்து காட்டிவிட்டாரே!
            பெரியாரைன் முழுமையான உரையை படித்துவிட்டு, அவரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற புத்தகத்தை படித்துவிட்டு, பிறகு, மனசாட்சியுடன் பதிலளியுங்கள் அய்யா!

            // பெரும்பாலும் ஏன் , எல்லோர் வீட்டீலும் பெண்களே மனமுவந்து குழந்தை வளர்ப்பு , கல்வி உட்பட வீட்டு பணிகளை சேவை / கடமை உணர்வோடுதான் செய்கின்றனர்.//

            நம் வீட்டு பெண்களின் கடமை உணர்வுக்கு தலை வணங்குகிறேன்! அதே சமயத்தில் இந்த வேலைகளையெல்லாம் ஆண்கள் செய்யக்கூடாது என்று எந்த சாத்திரம் கூறுகிறது?

            குடும்பம் என்றால் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்ளத்தான் வேண்டும்! கூட்டு குடும்பத்தில் ஆண்கள் சம்பாதிக்க, பெண்கள் வீட்டு வேலை பார்த்தனர்! இன்று வேலைக்கு போகும் பெண்கள் உரிமைக்குரல் எழுப்புகின்றனரே! வேலைக்கு போகாத பெண்கள் இன்றும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்!

            மிகவும் நாகரிக மற்ற குடும்பங்களில்தான், பெண்கள் சம்பாதித்து கொடுக்க, அதை வாங்கி ஆண் குடித்து கூத்தடிக்கும் செயல் நடக்கிறது! சமூக கட்டுப்பாட்டிற்கு அஞசியே பெண்கள் இத்தகைய குடிகார கணவன்மார்களை பொறுத்துக்கொண்டிருக்கின்றனர்! அதைத்தான் பெரியார் சாடுகிறார்! புரிந்த கொள்ள மனமிருந்தால், புரியும்!

            • நமதுநாட்டில் அதுவும்நமது கலாச்சாரத்தில் பெண்களுக்கு சம உரிமையோடுதான்நடத்த்படுகினறனர், உதாரணமாக மனைவியை இழந்த ஆண்மகன் தன் பெண்/மகன் திருமணத்தைநடத்த்முடியாது. இப்படி சொல்லி கொண்டே போகலாம. இதெல்லாம் பெரியாரிஸ்ட்டுகள் / ராமசாமியருக்கு தெரிய் வாய்ப்பில்லை.நீர் சொல்லியுள்ள விதிவிலக்குகள் விதியாகாது உத்தமரே.

        • @Ajaathasathru
          உத்தம மான மனிதரை புரிந்து கொள்ளவும் உத்தம குணம் வேண்டும் தோழரே:-

          உன்மைதான் தோழ அனால் அது பன்னாடை பாப்பானுக்கு எப்படி தெரியும்

  7. Silly statement and answer by Periyar,

    He should what work his dad venakatappa nayakar was doing,what work did evks elangivan,evk sampath etc did to fill their stomachs?

    modhalla sondha veetu gappa adaikka sollunga,piravu veedhiyila sandai podalam.

  8. What Venkatappa nayakkar was doing?Harikumar,first learn their background before asking your silly questions. He need not do any work other than taking care of his flourishing business.Do you know they were rich and EVR also looked after his father”s business for sometime.There should be something in your head before talking about stalwarts like EVK Sampath

  9. I doubt Harikumar learned anything at Vinavu. Father of Periyaar was a quary worker raised to become a mundy owner during his lifetime! No one claims Periyaar was a labourer! He was inheritted wealth still, he is intollerant towards partisan bhraminical practices; His social reform started from his house; he married a poor, childhood friend against the wishes of his parrents; He got his widowed sister married to a willing friend, much against the wishes of elders! Likewise, he undertook social reform which was already inculcatted in his way of thinking! He is a born rationalist! He has to be against brahminical lies and the brahmins naturally were against him due selfishness! But very few supported him , like ASK Iyengar, one even donated a Motor Van to help his propoganda, I was present at that function. Even Mahatma Gandhi, Ambedkar, VOC pillai like leaders are adored him for his Walient attack on all sort of social injustice! Better Harikumar, do not get exposed! But I thank you for this opportunity !

  10. //பெரியாரிஸ்ட்டுகள் வீடுகளில் எப்ப்டி சம்பளம் , போனஸ் , ஊக்கத்தொகை எல்லாம் உண்டு என நினைக்கிறேன்.//
    மனைவியை நேசிப்பவர்கள் குக்கர் வாங்கி தரவேண்டாம், அவரை தோழியராக கருதி மனதாலும், உடலாலும் உறுதுணையாக இருங்கள்! பெரியாரிஸ்டுகள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அவர் வாழ்க்கையே உதாரணம்! சம்பளம், போனஸ், ஊக்கத்தோகை எல்லாம் அன்பளிப்பாக தரப்பட வேண்டும் தான்! இல்லையென்றால் வீட்டு செலவு கணக்கில் பட்டுபுடவை,நகை சீட்டு என்று எகிறிவிடும் சாக்கிரதை!

Leave a Reply to Tamil பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க