privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்சாரு நிவேதிதா : மோடிக்கு கொடி பிடிக்கும் இலக்கிய தரகன்

சாரு நிவேதிதா : மோடிக்கு கொடி பிடிக்கும் இலக்கிய தரகன்

-

”நான் நரேந்திர மோடியின் ஆதரவாளன்” என்று வெளிப்படையாக அறிவிக்கிறார் சாரு நிவேதிதா. இவர்தான் முன்பு நித்தியானந்தாவுக்கு சிஷ்யராக இருந்தார் என்பதாலும், அந்த நித்தி காலில் விழுந்து கும்பிட்டவர்தான் நரேந்திர மோடி என்பதாலும் இந்த வட்டத்தை பூர்த்தி செய்து புரிந்துகொள்வது சுலபம்தான். மேலும் முகநூலில் இயங்கிய ஒரு இளம் பெண்ணுடன் சாரு நிவேதிதா நடத்திய ஆபாசமும், வக்கிரமும் நிறைந்த உரையாடல் முன்பு வெளியானது நினைவிருக்கலாம். நித்தியானந்தாவின் லீலைகள் காட்சி வடிவில் இருந்ததால் உடனே அது சூப்பர் ஹிட்டாகிவிட்டது. சாருவின் வக்கிர அரட்டை, எழுத்து வடிவில் இருந்ததால் சுமாரான ஹிட்டுதான். ஒருவேளை எழுத்தாளனை தமிழ்ச் சமூகம் மதிக்கவில்லை என்பது இதுதானோ?

சாரு நிவேதிதா
மோடி பக்தர் சாரு

இப்போது அவர் ‘நான் எப்போதும் political correctness பற்றி கவலைப்படுபவன் அல்ல. நான், நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளன் என்பதிலிருந்தே நீங்கள் இதை அறியலாம்’ என்று எழுதுகிறார். சாரு அவ்வப்போது அடித்துவிடும் அதிரடி ஸ்டேட்மென்டுகளில் இதுவும் ஒன்று என்றபோதிலும், இது சற்று ஜெயமோகன் தனமாக உள்ளது. ஜெமோ எப்போதும் political correctness பற்றி கவலைப்படுபவர் அல்ல. அந்தரங்க மன எழுச்சி, உள்ளொளி தரிசனம் போன்றவைதான் அவரது எழுத்தின் அடிநாதம். அதைப்போல அரசியல் நேர்மை பற்றி கவலைப்படாமல் சாருவின் நெஞ்சு இப்போது, ‘மோடி, மோடி’ என்று துடிக்கிறது.

பொதுவாக மோடியை உள்மனதில் ஆதரிப்பவர்கள் கூட வெளிப்படையாக அதை அறிவிக்கத் தயங்குகின்றனர். கிழக்குப் பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி முதல், பல்வேறு இலக்கியவாதிகள் வரை அனைவருமே ‘குஜராத்… வளர்ச்சி..’ என்று சுற்றி வளைத்துதான் மோடிக்கு கொடி பிடிக்கிறார்கள். அந்த வளர்ச்சியின் யோக்கியதை என்ன என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் வெளியானாலும், அவற்றைப் பற்றி இந்த ‘அறம்’பாடிகள் கவலை கொள்வது இல்லை. ‘2002 இஸ்லாமியர் படுகொலைகள்…’ என்று யாராவது ஆரம்பித்தால், ‘அதைப்பத்தியே இன்னும் எத்தனை நாள் பேசுவீர்கள்? ” என்று பதற்றத்துடன் பதில் சொல்கிறார்கள். இத்தகைய பதற்றம் எதுவும் இல்லாமல் மிகவும் வெளிப்படையாக மோடியை ஆதரிப்பதாக அறிவிக்கிறார் சாரு.

ஜெயமோகன்
ஜெயமோகன்

எழுத்தாளர்கள், சமூகத்தின் மற்ற பிரிவினரை விட பொறுப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்கிறார்கள். அற மதிப்பீடுகளும், ஒழுக்க விழுமியங்களும் எழுத்தாளர்களுக்கு இருப்பதாக மக்கள் நம்புவதால்தான், அவர்களை மதிப்பதாகவும் கருதப்படுகிறது. நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்ததும், அதற்கு எதிராக அமிதவ் கோஷ், அமர்த்தியா சென், யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்ற அறிவுத்துறையினர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனால் தமிழ்நாட்டுக்கு அண்மை காலத்தில் இரண்டு முறை நரேந்திரமோடி வந்து சென்றுவிட்டார். ஒரு எழுத்தாளனும் வாய் திறக்கவில்லை. மிகவும் ஆபாசமான மௌனத்தை கடைபிடித்தனர்; பிடிக்கின்றனர். ‘கையெழுத்து இயக்கம், மின்னஞ்சல் மனு’ போன்ற போண்டா போராட்டங்கள் கூட இல்லை. இவர்கள்தான் மற்ற நேரங்களில் சமூக அற மதிப்பீடுகள் கீழிறங்கிவிட்டதாக மனம் வெதும்புகின்றனர். ‘6 கோடி மக்கள் வாழும் நாட்டில் ஒரு புத்தகம் 1,000 பிரதிகள் விற்பனையாவதற்கு இரண்டு வருடங்களாகிறது’ என்று ஆதங்கப்படுகின்றனர். அந்த 6 கோடி மக்கள் வாழும் நாட்டுக்கு 2,000 முஸ்லிம்களை கொலை செய்த ஒரு கொலைகாரன் வரும்போது, இவர்கள் உடல் துவாரங்கள் அனைத்தையும் மூடிக்கொண்டு தியானம் செய்து கொண்டிருந்தார்களா?

இப்போது மட்டுமில்லை…  தாமிரபரணி படுகொலை தொடங்கி தர்மபுரி வன்முறை வரை…  கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால் பாபர் மசூதி இடிப்பு, ஈழப்போர் என்று அனைத்துத் தருணங்களிலும் இவர்களின் எதிர்வினை மௌனம் மட்டுமே. (அந்த மௌனத்தையும், ‘மௌனத்தின் வலி’ என்று புராஜெக்ட் போட்டார் பாதிரியார் ஜெகத் கஸ்பார்.). கூட்டத்துடன் சேர்ந்து கும்மியடிக்க‌ வாய்ப்புள்ள பிரச்சினைகளிலேயே இவர்கள் மௌனம் காத்தார்கள் என்றால்… கருணாநிதி குடும்பத்தின் ஊழல், ஜெயலலிதாவின் அடக்குமுறை போன்ற குறிப்பான பிரச்னைகளை எப்படிப் பேசுவார்கள்? அந்த சந்தர்ப்பங்களில் இவர்கள் ‘இயற்கை உணவு; சிட்டுக்குருவிகள் அழிந்துவிட்டன’ என்று பாதுகாப்பான, பிரச்சினைகள் இல்லாத ஐட்டங்களை பேசுகின்றனர்.

வண்ணதாசன்
வண்ணதாசன்

இப்போது கூட வைகுண்டராஜன் என்ற சமூக விரோதி தாதுமணலை வகைதொகையின்றி தோண்டி தென் தமிழக கடற்கரையை சூறையாடுகிறான். சமகால தமிழ் இலக்கியப் பரப்பில் செல்வாக்கு செலுத்தும் தென்பகுதி இலக்கியவாதிகள் ஒருவர் கூட அதைப்பற்றி வாய் திறக்கவில்லை. இவர்களின் கரிசனம் எல்லாம், திருநெல்வேலி சைவப் பிள்ளைமார் வீடுகளில் சொதிக்குழம்பு அதிகம் வைக்காததால், அந்த டெக்னாலஜி அழிந்துகொண்டே வருகிறது என்பதில்தான் இருக்கிறதேத் தவிர… தாதுமணல் கொள்ளையினால் அழியும் இயற்கையைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ அல்ல. கூடங்குளம் அணு உலை வெடித்து, கதிரியக்க அபாயம் பாளையங்கோட்டை வரை வந்தாலும் கூட ‘கணபதி அண்ணனைப் பற்றியும் காந்தி டீச்சரைப் பற்றியும்தான்’ வண்ணதாசன் எழுதிக்கொண்டிருப்பார். இந்த பொருளற்ற சென்டிமென்ட் மொக்கைகளை இவர்கள் 24×7 பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

”நடப்புல உள்ளதை எழுத நாங்க என்ன நியூஸ் சேனலா நடத்துறோம். current affairs எழுதத்தான் நியூஸ் பேப்பர் இருக்கே?”  என்று அவர்கள் சொல்லக்கூடும். வரலாறு என்பது இவர்கள் வாழ்கிற, இயங்குகின்ற, மாறுகின்ற இந்த கணத்தையும் சேர்த்துதான். அதைப் புறக்கணித்து விட்டு இன்னும் எத்தனை காலத்துக்குதான் பிணத்துக்கு பூச்சூடிக் கொண்டிருப்பார்கள்? சமச்சீர் கல்விக்கு எதிரான  ஜெயலலிதாவின் பாசிச நடவடிக்கையை நேருக்கு நேராக கண்டிக்கத் துணிவில்லை எனினும், படிமமாக; குறியீடாக சொல்வதற்குக் கூட துப்பில்லை என்றால் ‘நானும் எழுத்தாளர்’ என்று கூறிக்கொண்டு திரிய வெட்கப்பட வேண்டாமா? இன்னமும் இராமயண கதையையே ரீ-மிக்ஸ் செய்துகொண்டிருப்பதற்கு காரணம், தண்டகாரன்யா கதைகளை எழுதி மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதுதான். ‘ஆசிரியன் இறந்துவிட்ட’ பின்னரும் புளியமரத்தின் கதையை புகழ்ந்துகொண்டே இருப்பார்களே தவிர கூடங்குளத்தின் கதையை எப்போதும் எழுத மாட்டார்கள்.

ஆக, சமூகத்தின் நடைமுறை இயல்பில் இருந்து துண்டித்துக்கொண்டு, ஒரு மோன நிலையில், உட்டோப்பிய மனநிலையில் வாழ்வது என்பது தமிழக எழுத்தாளர்களுக்குப் பழகிப்போன ஒன்று. அவர்களின் கற்பனை உலகத்தை எட்டிப்பிடிக்கும் திறனுள்ள வாசகனால் அவர்ளது அற்பமான அந்தரங்க உலகத்தை எளிதில் தரிசிக்க முடியும்.

சாரு நிவேதிதா
தரகன் சாரு நிவேதிதா

இந்தப் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ளும்போது, சாரு நிவேதிதா தற்போது செய்திருப்பது ஒரு ‘கலக நடவடிக்கை’. அதாவது நிகழ்கால சர்ச்சைகளின் நாயகனாக இருக்கும் மோடி குறித்து தன் அபிப்பிராயத்தை வெளிப்படையாக முன்வைத்துள்ளார். ‘‘ஆமா.. முஸ்லீம்களை கொன்னோம். அதுக்கு இப்போ என்னாங்குற?” என்று பாபு பஜ்ரங்கி தெனாவட்டாக கேட்டதுபோல, ‘முஸ்லீம்களை கொன்ற மோடியை ஆதரிகிறேன். அதுக்கு இப்போ என்னா?’ என்கிறார் சாரு நிவேதிதா.

ஏனெனில் இதை பொருத்தமான தருணமாக அவர் கருதுகிறார். மோடி ஆதரவு என்ற மைதானம் இலக்கிய வட்டத்தில் கொஞ்சம் காலியாக இருக்கிறது. பா.ஜ.க. ஆதரவு இலக்கியகாரர்களைத் தவிர வேறு யாரும் அப்பட்டமாக ஆதரிக்கவில்லை. தவிரவும், மோடி ஆதரவு என்பது வெறுமனே பா.ஜ.க.வின் அஜண்டாவாக இல்லை. அதுதான் இந்து நடுத்தர வர்க்கத்தின் மன விருப்பமாகவும் உள்ளது. ஆகவே அதை துணிவுடன் வெளிப்படையாகப் பேசினால் இதற்கு ஒரு மார்க்கெட் இருக்கிறது.  கூட்டம் கம்மியாக இருக்கும்போதே உள்ளே நுழைந்துவிட்டால் முன் வரிசையில் இடம் பிடித்து முக்கியஸ்தர் ஆகிவிடலாம். அதனால்தான் மோடி ஆதரவு வண்டியில் வேகவேகமாக ஓடிச்சென்று ஏறியிருக்கிறார் சாரு.

மறுபுறம், அவருக்கு இலக்கிய மார்க்கெட்டும் கொஞ்சம் டல்லடிக்கிறது.  இணையத்தில் கூட யாரும் மதிப்பதில்லை. ஜெயமோகன் மாதிரி வசனம் எழுதிப் பிழைக்கலாம் என்றால், இப்போது ஷகீலா படங்கள் வேறு வருவது இல்லை. முந்தா நாள் ஆரம்பித்த ‘தி இந்து’வில் கூட ஜெயமோகனுக்கு வழங்கும் வாய்ப்பின் சிறு சதவிகிதம் கூட சாருக்கு வழங்கப்படுவது இல்லை. என்ன பண்ணலாம்? ஓபனாக மோடியை ஆதரித்து ஒரு ஸ்டேட்மென்ட் அடித்துவிட்டிருக்கிறார். இது பிக்-அப் ஆனால் தேர்தல் வரையிலும் தாக்குப் பிடிக்கும் என்பது அவரது கணக்காக இருக்கலாம்.

இதைவிட கேவலமான ஒரு ஜந்துவை யாரும் பார்க்க முடியுமா? ஒரு மாபெரும் கொலைகாரனை, ஈவு இரக்கமற்று சுட்டு வீழ்த்த வேண்டிய மனிதகுல விரோதியை ஆதரிப்பதாக சொல்வதும், அதை வைத்து ஆதாயம் அடைய முயல்வதும் கேவலத்திலும் கேவலம். எழுத்தாளனின் போர்வையில் இதை செய்யும் சாரு நிவேதிதா இதன் பொருட்டு எந்த அசிங்கத்தையும் சுமக்கத் தயாராக இருக்கிறார். காசுக்கு உடலை விற்கும் விபசாரிக்குக் கூட மானமும், ரோசமும் உண்டு. அந்தப் பெண்களை வைத்துத் தொழில் செய்யும் மாமாக்களுக்கு இத்தகைய மானமோ, ரோசமோ எதுவும் கிடையாது. சாரு நிவேதிதா இந்த மாமாக் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்பதை ஏற்கனவே நிரூபித்திருக்கிறார். இப்போது இரண்டாவது முறையாக.

– வளவன்.

  1. சாருவின் திறமையே திறமை.
    ‘என்னடா இது, திட்டியாவது நம்மளப்பத்தி ஒருத்தனும் பேச மாட்டேனுன்றானுங்களே’ ன்னு மோடிய நான் ஆதரிக்கிறேன்னு ஒரு பிட்ட போட்டான். வினவுல கபால்னு பத்திக்கிச்சு. இலவச விளம்பரம். பய புள்ள நினச்சத சாதிச்சுட்டான்.

    • I don’t think vinavu has any other work apart from tarnishing Modi.

      Still no condemnation for the bomb blast in patna in this website. You can understand the hatred these people have.

  2. போலீஸ் பக்ருடீன் பண்னா இஸ்மாயிலை நீர் ஆதரிக்கிறீரா? எதிர்க்கிறீரா?

    //இதைவிட கேவலமான ஒரு ஜந்துவை யாரும் பார்க்க முடியுமா? ஒரு மாபெரும் கொலைகாரனை, ஈவு இரக்கமற்று சுட்டு வீழ்த்த வேண்டிய மனிதகுல விரோதியை ஆதரிப்பதாக சொல்வதும், அதை வைத்து ஆதாயம் அடைய முயல்வதும் கேவலத்திலும் கேவலம். எழுத்தாளனின் போர்வையில் இதை செய்யும் சாரு நிவேதிதா இதன் பொருட்டு எந்த அசிங்கத்தையும் சுமக்கத் தயாராக இருக்கிறார். காசுக்கு உடலை விற்கும் விபசாரிக்குக் கூட மானமும், ரோசமும் உண்டு. அந்தப் பெண்களை வைத்துத் தொழில் செய்யும் மாமாக்களுக்கு இத்தகைய மானமோ, ரோசமோ எதுவும் கிடையாது. சாரு நிவேதிதா இந்த மாமாக் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்பதை ஏற்கனவே நிரூபித்திருக்கிறார். இப்போது இரண்டாவது முறையாக.//

    • வினவு, செந்தில்குமார் முதலியோர் பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன் ஆகியோரின் தீவிர ரசிகர்கள், தீவிர ஆதரவாளர்கள்

  3. \\நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்ததும், அதற்கு எதிராக அமிதவ் கோஷ், அமர்த்தியா சென், யு.ஜி.அனந்தமூர்த்தி போன்ற அறிவுத்துறையினர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.\\
    அது யு.ஆர்.அனந்தமூர்த்தி வினவு.

    • ஆமா, ஆமா, அமர்த்தியா சென், யு.ஆர். அனந்தமூர்த்தி ஆகியோர் இலக்கியத் தரகர்கள் பொருளாதாரத் தரகர்கள் இல்லவே இல்லை !

  4. modi is not famous because of his growth in gujarat, because growth in gujarat is pretty ordinary, ,he got famous by killing those musilim civilians .modi, if not killed those civilians, advani will possible to become the pm candidate ,(gujarat riot)if it is happened in developed country, he will be hanged

  5. இதைவிட கேவலமான ஒரு ஜந்துவை யாரும் பார்க்க முடியுமா?…நிச்சியமாக முடியாது

  6. மனிதன் பின்நவீனத்துவ ஒளியை கடைசியாக பாரதிய ஜல்சா பார்ட்டியில் கண்டிருப்பார் போலும்.ஒரு வழியாக சாரு நதி இந்துத்துவ கடலில் சங்கமித்துவிட்டது. என்ன கொஞ்சம் லேட்டு….

  7. கேவலத்திலும் கேவலம்…

    “…நக்கிக்குடி! அதை நல்லதென்று சொல்!
    தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்த நாயினும்
    தாழ்ந்துபோ!…”

    என்ற புரட்சிக்கவிஞரின் வரிகள்தான் நினைவிற்கு வருகின்றன…(அதை கவிஞர் வேறொரு பிண்ணனியில் சொல்லியிருந்தாலும்)

  8. I fully agree with the content of this article. One suggestion. Don’t mind Charu. Kindly ignore him. if you start reacting him then his purpose is achieved. That is all he wants.

  9. ஐயோ பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆவம் என்று உம்மைப்பார்த்ட்கு பரிதாபப்படுவதைத்தவிர வேறொன்றும் செய்யத்தோன்றவில்லை.

  10. சாரு நிவேதிதா ஒரு மானங்கெட்ட பிறவி. எவ்வளவு திட்டினாலும், விமர்சித்தாலும் அதைப் பற்றி அந்தப் பிறவி கவலைப்படுமா என்பது கேள்விதான்.. ஆனால் நம்முடைய இலக்கு இந்தப் பொறுக்கியை ஆதரிக்கும் வாசகர்கள் தான். இவ்வளவு வெளிப்படையாகத் தனது அயோக்கியத் தனத்தை அறிவித்த சாருவை ஆதரிக்கும் வாசகர்கள்(யாராவது இருந்தால்) என்ன பிறவி?

    • //Looks like huge money has come from middle east and paid to media/blogs to defeat Modi.//
      அப்போ மோடியை ஜெயிக்க வைக்க உங்களைப் போன்றவர்களுக்கு குஜராத்திலிருந்தும், NRI அம்பிகளிடமிருந்தும் பணம் வருகிறதோ?

      • First, I am in USA.
        Second, I am not a Brahmin.
        The last 10 years of Congress rule is responsible for the rise of Modi at the national level. Had there been no corruption in UPA rule, Modi name would not have come up.

        Islam is not a religion. Its a war group. Wherever it goes, it breeds and multiplies in number and destroys others.

        What happened to the 25% Hindu population in Pakistan in 1947? What happened to the Pandits population in Jammu Kashmir?

        Muslims are afraid of Modi because he will not hesitate to retaliate against terror activities of Muslims.

        • If some one supports BJP or Modi, paint him as brahmin, hindu fascist etc..I’ve a muslim school friend (used to be too naive in those days) supports whole heartedly the terror activities of islamic groups in the name of religion (He feels more for his muslim cousins in Arab & african world than local friends/relatives of Tamilnadu). Vinavu is OK with such terrorists. This is the type of politics brought by dravidian movement (for your kind information, most of my family memebers were part of the Dravidian movement of 1950s & 1960s). Ideal qualities of Vinavu like Pseudo tamil groups: Hate anything that is Hindu, Anti Brahmin (in the name of threat to tamil/dravidan community, though no iota of evidence), Caste fanatic (no particular one), just blindly support LTTE in the name of supporting Tamil elam etc.. Brand Jaya as Brahmin dictator but the fact is “all the parasites arround her are caste driven groups. The same tamil population including christian missionaries & islamin terrorists elected Jaya as CM in 2001 just because MK had an alliance with BJP.

  11. அந்த நாயை எல்லாம் கணக்கில் எடுத்து ஒரு பதிவை போட்டு வினவை களங்கபடுத்தியிருக்கிண்றீர்கள்.

    அந்த நாயை எல்லாம் கணக்கில் எடுக்க கூடாது. அது எதிர்பார்ப்பதே இந்த மாதிரியான விளம்பரத்தை தான்

    https://www.facebook.com/groups/charuvimarsagar/

    வினவு வாசகர்கள் இந்த லிங்கில் வந்து அந்த நாய்க்கு கல்லால் அடிக்குமாறு கேட்டுகொள்கின்றேன்

    • போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில் செய்கின்ற படுகொலைகள் பற்றியும், குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாதச் செயல்கள் பற்றியும் வினவு எழுதாதது ஏன்?

      கோத்ரா ரயிலை முஸ்லீம்கள் கொளுத்தி இந்துப் பெண்கள், குழன்ட்கைகள் உள்ளிட்டவர்களைத் தீயில் உயிரோடு கொளுத்தியதை வினவுநியாயப் படுத்துவது ஏன்?

      பாட்னாவில் மோடி பொதுக் கூட்டத்தில் முஸ்லீம் பயங்கரவாதிகள் வைத்த வெடிகுண்டுகள் பற்றி வினவு எழுதாதது ஏன்?

      மேலே குறிப்பிட்ட ஆரிஸ் டாவித் எழுதியபடிதான் காரணம் என்பது புரிகிறது.

      • பைபிளில் ஒரு பெண் ஏசுவைப் பார்த்துக் கேட்பார். அவர்கள் உங்களை நம்பாதவர்கள்.அவர்களை நீங்கள் ஏன் ஆதரிக்கிறீர்கள் என்று கேட்பார். ஏசு பதில் சொல்வார்,நமது குழந்தைக்கு ரொட்டி கொடுக்கும்போது சிறிது துண்டு கீழே விழ, அதை அங்கிருக்கும் நாய்க்குட்டி சாப்பிடுவதில்லையா? அதுபோலத்தான் நம்மை நம்பாதவர்களை (வேற்று மதத்தவர்களைக் குறிப்பிட்டு) ஆதரிப்பதும் என்பார். (இதைப் போய் மோடி பேசியதோடு ஒப்பிட்டு விடாதீர்கள், அவர் அப்படிச் சொல்லாமல் கவுரவமாகத்தான் சொன்னார்)

        ஆரிஸ் பைபிளைப் படித்ததன் தாக்கம் “தன்னைத் தவிர மற்ற எல்லோரும் நாய்களே” என்ற ஏசுவின் வழியில் வருகிறது வார்த்தைகள்!

  12. சொம்பு தூக்குவோர்கள் சங்கம்,
    ,பாதந்தாங்கிகள் சங்கம்
    ,கூஜா தூக்குவோர்கள் கழகம்
    முதுகு சொறிவோர்கள் கழகம் சார்பாக
    அருமை அண்ணன் “சுய இன்பம்” சாருவுக்கு
    இந்த பழைய செருப்பு மாலையை
    பழைய செருப்பு மாலையாகவே அணிவித்து மகிழ்கிறோம்…

  13. காசுக்கு உடலை விற்கும் விபசாரிக்குக் கூட மானமும், ரோசமும் உண்டு. அந்தப் பெண்களை வைத்துத் தொழில் செய்யும் மாமாக்களுக்கு இத்தகைய மானமோ, ரோசமோ எதுவும் கிடையாது. சாரு நிவேதிதா=== இலவச விளம்பரம். பய புள்ள நினச்சத சாதிச்சுட்டான்டே…..

    • இது தானே நமது தமிழர்களின் தனி சிறப்பான ராஜ தந்திரம் ,அரசியல் நுண்ணறிவு.

  14. “அதுதான் இந்து நடுத்தர வர்க்கத்தின் மன விருப்பமாகவும் உள்ளது. ஆகவே அதை துணிவுடன் வெளிப்படையாகப் பேசினால் இதற்கு ஒரு மார்க்கெட் இருக்கிறது. கூட்டம் கம்மியாக இருக்கும்போதே உள்ளே நுழைந்துவிட்டால் முன் வரிசையில் இடம் பிடித்து முக்கியஸ்தர் ஆகிவிடலாம். அதனால்தான் மோடி ஆதரவு வண்டியில் வேகவேகமாக ஓடிச்சென்று ஏறியிருக்கிறார் சாரு.” I think this is the same technique Vinavu is following. You also just got on the bus early to ride on the opposition wave(If at all there is anything like that outside this website….). You are just angry because now there is another person to share the stage. Only difference you oppose and he supports. But both for “Mileage”. Interesting to read…

  15. தனது இணையதளத்துல மோடியை ஆதரிக்கறேன்னு ரெண்டு வரி எழுதினவருக்கு இவ்வளவு அர்ச்சனைன்னா, பிஜேபியோட கூட்டு சேர்ந்து மோடிக்கு ஆதரவா தெருவுக்கு தெரு பிரசாரம் செய்யப் போறதா கிசுகிசுக்கப்படும் வைகோ கதி என்னாகப் போகுதோ!

      • நான் வைகோ எதிர்காலம் என்னாகும்னு சொல்லலை சார். வினவு கிட்டேர்ந்து அவருக்கு கிடைக்கப் போகும் அர்ச்சனையை சொன்னேன்!

        • அர்ச்சனைதான் நடக்கும். இருந்தாலும் ஏற்கனவே அவர் சீண்டுவார் இல்லாமல்தான் இருக்கிறார் என்பதைத் தான் நான் சொல்ல வந்தேன்.

          மேலும் பேரம் படியவில்லை என அண்மைகால தகவல்கள் வெளிவந்துள்ளன. தனியா நின்னா கௌரவமா தப்பிக்கலாம். அல்லது கடைசி காலத்தை கஷ்ட காலமாகத் தான் வைகோ அனுபவிக்கனும்.

          வைகோ காந்திய மக்கள் இயக்கத்தின் நான்காம் ஆண்டுவிழாவின் போது பேசிய பேச்சையும் நான் கேட்டேன். கொஞ்சம் ஒதுங்கி இருக்கிற மாதிரிதான் தெரிந்தது. விருதுநகர் மாநாட்டுக்கு பின்னர் அது நடந்தது.

  16. // இலக்கிய தரகன் // சாரு போன்ற பொறுக்கிகளை இலக்கியவாதிகள் என அங்கீகரிப்பதே பெரிய குற்றம் . ஆபாசமும் காவியும் ஒட்டி பிறந்தவை .

  17. பேசாம என்ன செய்வது தலைவா. இதற்கு முன்னால் குஜராத்தில் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியவர்களை ஏன்டா கோயிலுக்கு போறீங்க என்று 58 பேர்களை எரித்து கொன்ற முஸ்லிம்கள் ரொம்ப நல்லவங்க. அதற்காக பதற்றத்தில் நிகழ்ந்தவைதான் மீதி. சும்மா இதையே சொல்லி மோடிக்கு ஆப்பு வைக்க முடியாது . வேறு எதாவது முயற்சி செய்ங்க.
    எந்த நல்லமனது உள்ளவர்களும் இந்த நிகழ்வுக்கு மோடி காரணம் என்று சொல்ல மாட்டார்கள்.

    The Godhra Train Burning was an incident that occurred on the morning of 27 February 2002, in which 58 people including 25 women and 15 children died in a fire inside the Sabarmati Express train near the Godhra railway station in the Indian state of Gujarat.[2] Many of the victims were Hindu pilgrims and activists who were returning from the holy city of Ayodhya.
    The event also triggered more violence, resulting in the deaths of 790 Muslims and 254 Hindus as well as widespread loss of property and homelessness

  18. இதே சாரு ஒரு காலத்தில் உங்களை போன்ற பொரட்சி கும்பலில் கோவிந்தா போட்டவர்தான் என்பதை சொல்ல மறந்ததேன்?
    (இந்த கமன்ட் மட்டறுக்கப்படும் என்பது திண்ணம்)

  19. ////////”நான் நரேந்திர மோடியின் ஆதரவாளன்” என்று வெளிப்படையாக அறிவிக்கிறார் சாரு நிவேதிதா. இவர்தான் முன்பு நித்தியானந்தாவுக்கு சிஷ்யராக இருந்தார் என்பதாலும், அந்த நித்தி காலில் விழுந்து கும்பிட்டவர்தான் நரேந்திர மோடி என்பதாலும் இந்த வட்டத்தை பூர்த்தி செய்து புரிந்துகொள்வது சுலபம்தான். மேலும் முகநூலில் இயங்கிய ஒரு இளம் பெண்ணுடன் சாரு நிவேதிதா நடத்திய ஆபாசமும், வக்கிரமும் நிறைந்த உரையாடல் முன்பு வெளியானது நினைவிருக்கலாம். நித்தியானந்தாவின் லீலைகள் காட்சி வடிவில் இருந்ததால் உடனே அது சூப்பர் ஹிட்டாகிவிட்டது. சாருவின் வக்கிர அரட்டை, எழுத்து வடிவில் இருந்ததால் சுமாரான ஹிட்டுதான். ஒருவேளை எழுத்தாளனை தமிழ்ச் சமூகம் மதிக்கவில்லை என்பது இதுதானோ?//////////

    இந்த முன்னுரை எதுக்கு மக்களே…….. வரலாறு எப்பொழுதும் முக்கியம். ஒருவரை பற்றி எழுதும்போது இப்படி ஒரு கதையை முன்னோட்டம் விட்டுவிட்டால் படிப்பவர்களுக்கு எளிதில் ஒரு எதிரியை உருவாக்கி விடலாம் அல்லவா……..? பிறகு எழுவதெல்லாம் உண்மைதான்…….. அதனால்தான் கம்முனிசத்தை முதலாளிதுவவாதிகள் விமர்சிக்கும் பொது முதலில் ஜனநாயகம், மந்த உரிமை, பத்திரிக்கை சுதந்திரம் பற்றி எழுதிய பிறகுதான் கம்யுனிசம் பற்றி கூறுவார்கள்…….. அதே உத்திதான் இங்கும்………… புரின்சிகோங்க மக்களே….

  20. நரேந்திர மோடியும் நாஜி ஜெர்மனியும்
    (Charuvin Konal pages – 2)

    நாடாளுமன்றத்தில் நடந்து வரும் அமளி துமளி பற்றி சமீபத்தில் இரண்டு பேர் மிகவும்
    கவலைப்பட்டிருக்கின்றனர். ஒருவர் சோ. இவரது கவலைகள் பற்றி எனக்கு
    அக்கறையில்லை. ஆனால் அந்த இரண்டாவது நபரின் கவலை பற்றி நாம் கவலைப்பட
    வேண்டியுள்ளது. காரணம் அவர் தமிழ் இலக்கிய உலகில் 50 ஆண்டு காலமாக விமர்சகர்
    என அறியப்படுபவர். பெயர்: வெங்கட் சாமிநாதன். இவர்தான் நாடாளுமன்றத்தில்
    எதிர்க்கட்சியினர் செய்து வரும் ரகளை பற்றி மிகவும் விசனப்பட்டிருக்கிறார். பல கோடி
    ரூபாய்கள் வீணாய்ப் போகிறதாம்.

    ‘ரகளை செய்பவர்களை அவைத் தலைவர் ஏன் மன்றத்தை விட்டு வெளியேற்றக் கூடாது?
    ஏன் குண்டுக்கட்டாகத் தூக்கி சபைக்கு வெளியே போடக்கூடாது?’ என்று நாடாளுமன்ற
    அவைத்தலைவருக்கு அரிய யோசனையெல்லாம் வழங்கியிருக்கிறார் வெ.சா. கலை
    இலக்கியக் காவலராக இருந்த அவர் திடீரென்று இன்று நாடாளுமன்றக் காவலராக
    மாறியிருப்பதற்கு நம்முடைய வாழ்த்துக்கள்.

    ஆனால் நாடாளுமன்றத்தில் இவ்வளவு கூச்சல் குழப்பத்திற்கும் காரணம் என்ன என்று
    பார்த்தால் அங்கே தான் வே`றாரு பூதம் கிளம்புகிறது. குஜராத் முதல்வர் நரேந்திரமோடி
    பதவி விலக வேண்டும் என்பதற்காகத் தான் இவ்வளவு கூச்சலும் குழப்பமும்!
    ஒரு அரசு ஊழியர் நூறு ரூபாய் லஞ்சம் வாங்கினால் அவரை வேலையை விட்டுத் தூக்க
    முடியும். சட்டம் அத்தனை கடுமையாக உள்ளது. ஆனால் குஜராத்தில் கடந்த இரண்டு
    மாதங்களில் நடந்த கலவரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் குரூரமான முறையில்
    கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்(இன்றைய தேதியில் எண்ணிக்கை மூவாயிரத்தை
    எட்டியுள்ளது).ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்ச்சி
    செய்யப்பட்டிருக்கின்றனர். ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் அகதிகளாகியிருக்கின்றனர்.
    சொந்த ஊரில் சொந்த நாட்டில் வாழமுடியாத நிலைமை!

    இக்பால் ஜாஃப்ரி ஒரு முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அவர் வீட்டில் ஒரு கும்பல்
    நுழைந்திருக்கிறது. அவர் வீட்டுக்குப் பாதுகாப்பாக அங்கே வேன்களில் இருந்த
    போலீஸ்காரர்கள் இதைக் கண்டுகொள்ளவில்லை. எம்.பி.யின் கண் முன்பாகவே அவரது
    பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டு பின்னர் கொளுத்தப்பட்டுள்ளனர். பிறகு இக்பால்
    ஜாஃப்ரியின் தலை வெட்டப்பட்டு அவரது உடலும் துண்டாடப்பட்டிருக்கிறது.
    கலவரக்காரர்களெல்லாம் வெறும் ரவுடிகளோ காலிகளோ அல்ல. மத்திய தர
    வர்க்கத்தினர். கையில் செல்போன்களுடன் கலவரத்தை ‘ஒருங்கிணைத்திருக்கின்றனர்’.
    முஸ்லீம்களின் வியாபார ஸ்தலங்களுக்கு கேஸ் சிலிண்டர்கள் நிரப்பப்பட்ட லாரிகளுடன்
    வந்து கொளுத்தியிருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு!
    ‘கோத்ரா ரயில் பெட்டியில் 69 பேர் உயிரோடு எரிக்கப்பட்டதற்கான எதிர்வினையே இது’
    என்கிறார் மோடி. ஆனால் இரண்டுக்கும் அடிப்படையில் வித்தியாசம் இருக்கிறது.
    கோத்ரா சம்பவம் திடீரென்று நடந்த ஒன்று. ஆனால் அதற்குப் பிறகு நடப்பதெல்லாம்
    அரசாங்கத்தின் உதவியோடு நடக்கும் திட்டமிட்ட படுகொலை

    நாஜி ஜெர்மனியில் யூதர்களுக்கு நேர்ந்த கொடுமை தான் ஞாபகம் வருகிறது.

    ஒரு சம்பவம். மதிய வேளையில் ஒரு தம்பதி ஸ்கூட்டரில் வந்து கொண்டிருக்கின்றனர்.
    அப்போது ஐம்பது பேர் கொண்ட கும்பல் ஸ்கூட்டரை நிறுத்துகிறது. கும்பலின் கைகளில்
    வாள், அரிவாள், திரிசூலம், கத்தி போன்ற ஆயுதங்கள். ஸ்கூட்டரை ஓட்டி வந்த நபரின்
    பெயரைக் கேட்கிறது கும்பல். அந்த நபர் ஏதோ ஒரு இந்து பெயரைச் சொல்கிறார்.
    கும்பலுக்கு நம்பிக்கையில்லை. ”பேண்ட்டைக் கழற்று” அடுத்த கணம் அந்த நபரின் மீது
    பாய்கிறது திரிசூலம்.

    அவர் பெயர் முன்னா பாய். வயது 28. சந்தர்ப்பவசமாகப் பிழைத்து விட்டதால்
    இப்போது மருத்துவமனையில் கிடக்கிறார். ஆனால் அவர் மனைவி மும்தாஜ் பானுவுக்கு
    அந்த அதிர்ஷ்டம் இல்லை. அந்தக் கும்பல் அவரை நிர்வாணமாக்கி அவரது
    பிறப்புறுப்பில் தொடர்ந்து கத்தியால் குத்திக் கொன்று விட்டது.
    மற்`றாரு இடம். 5000 பேர் கொண்ட கும்பல். அவர்களுக்கு நடுவே ஒரு பெண்.
    அத்தனை பேருக்கும் எதிரே அப்பெண் பலராலும் தொடர்ந்து வன்புணர்ச்சி செய்யப்பட்டு
    தீயில் தூக்கியெறியப்படுகிறாள்.

    இந்தக் கலவரத்தில் மாட்டிக்கொண்டு அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து சென்னை
    திரும்பிய என் நண்பர் ஒருவர் சொன்ன சம்பவம். சுற்றிவர பெட்ரோல் கேன்களுடன்
    கலவரக்காரர்கள். நடுவில் உயிர்ப் பீதியில் நண்பர். ‘நீ யார்? பேர் என்ன?’ என்று
    கேட்டிருக்கின்றனர். பெயரைச் சொல்லியிருக்கிறார் நண்பர். அவர்களுக்கு நம்பிக்கை
    ஏற்படவில்லை. வழக்கம் போல் பிறப்புறுப்பை பரிசோதித்த பிறகே அவரை விட்டுச்
    சென்றிருக்கிறது கலவரக் கூட்டம். இதைக் கேட்டதும் நான் நடுங்கிப் போனேன்.
    ஏனென்றால் மருத்துவக் காரணங்களுக்காக நான் ஷகூசுஷயுப்ஷகூசூசூகூச்பி செய்து கொண்டவன்.
    நண்பரின் இடத்தில் நான் இருந்திருந்தால்… நினைத்தாலே குலை நடுங்குகிறது.
    இதுபோல் ஒன்றல்ல, இரண்டல்ல, ஆயிரக்கணக்கான சம்பவங்கள். எல்லாவற்றுக்கும்
    சான்றுகளும் ஆதாரங்களும் இருக்கின்றன. சில டாக்யுமென்ட்ரி படங்கள் கூட
    எடுக்கப்பட்டுள்ளன. மனித உரிமை கமிஷனைச் சேர்ந்தவர்களும் நேரில் பார்த்துவிட்டு
    இதைத்தான் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

    நான்கு தினங்கள் ஒரு பொந்தில் ஒளிந்து கிடந்து தப்பித்து தில்லிக்கு அகதியாக ஓடி
    வந்துள்ள ரேஷ்மா பென் என்ற பெண் சொல்லியிருக்கும் சம்பவம் இது:
    முதலில் அவர்கள் ஒரு பத்து வயதுப் பெண்ணைக் கற்பழித்தார்கள். பிறகு எனக்குத்
    தெரிந்த கௌஸர் பானு என்ற கர்ப்பிணிப் பெண்ணை மாற்றி மாற்றி ஒரு கும்பலே
    கற்பழித்தது. பிறகு அவள் வயிற்றை அரிவாளால் வெட்டினார்கள். வெளியில் வந்து
    விழுந்த குறைமாதக் கருவை எரியும் தீயில் தூக்கிப் போட்டார்கள். பிறகு அவளையும்
    கண்டதுண்டமாக வெட்டி தீயில் போட்டார்கள்.

    தப்பிப் பிழைத்து ஓடி வரும் அகதிகள் சொல்லும் சம்பவங்கள் அனைத்தும் ஒரே மாதிரி
    இருக்கிறது. பெண்களின் வயிற்றைக் கத்தியால் கிழித்து எரியும் துணிப் பந்தை அதற்குள்
    திணிப்பது; கத்தியால் முஸ்லீம்களின் நெற்றியில் ‘ஓம்’ போடுவது… இதையெல்லாம்
    முன்னின்று நடத்துவது எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள். உதவி செய்வது போலீஸ்.
    எங்கு பார்த்தாலும் கரிக்கட்டையாய் எரிந்து கிடக்கும் சிறுவர்களின் உடல்கள், தலை
    துண்டிக்கப்பட்ட உடல்கள், எரிந்து போன வாகனங்கள், வீடுகள், கடைகள், மசூதிகள்…
    குவியல் குவியலாக மனித உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
    நிலைமையை நேரில் கண்ட மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ‘வார்த்தைகளால்
    விவரிக்க முடியாத பயங்கரம்’ என்று சொல்லியிருக்கிறார்.
    ஆனால் பிரதம மந்திரிக்கோ, கலவரம் துவங்கி ஒரு மாதம் வரை நேரில் வர
    நேரமில்லை. இடையில் கவிதை எழுத வேண்டிய அவசரமான இலக்கியப் பணி. என்ன
    செய்ய?

    ஒரு மாதம் கழித்து வந்து பார்த்தார். உணர்ச்சி வசப்பட்டு அழுதே விட்டார். ஆனால்
    மறுநாள் கோவாவுக்குச் சென்றவர் பால்கோவா சாப்பிட்டது போல் போட்டோவுக்கு
    போஸ் கொடுத்து முஸ்லீம்களைப் பற்றியும் திருவாய் மலர்ந்தார். ”இந்த முஸ்லீம்கள்
    எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் அமைதியாக வாழ
    விரும்புவதில்லை!”

    இரண்டு மாதங்களாகியும் இன்னும் குஜராத்தில் கலவரங்கள் அடங்கினபாடில்லை.
    இவ்வளவுக்குப் பிறகும் குஜ்ராத் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று
    நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் அமளி துமளி. இந்த அமளியால் வீணாகும்
    பணத்தைப் பற்றியும், பாராளுமன்றத்தின் புனிதத்தைப் பற்றியும் கவலைப்படும்
    விமர்சகர்கள்.

    ‘குஜராத் முதல்வர் பதவி விலக வேண்டும்’ என்ற கோரிக்கையைப் பார்த்தால் எனக்கு
    என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. ஹிட்லரை உலக நாடுகள் ராஜினாமா செய்யச்
    சொல்லியா கோரிக்கை விடுத்தன?
    குஜராத்தின் இப்போதைய நிலைமை நாஜி ஜெர்மனியுடன் மட்டுமே ஒப்பிடக் கூடியது
    என்பதில் சந்தேகமேயில்லை.

    இவ்வளவுக்குப் பிறகும் ஏன் ஒன்றுமே நடக்காதது போல் இருக்கிறது இந்தியச் சமூகம்?
    காரணம், மும்தாஜ் பானுவும், கௌஸர் பானுவும் நமக்கு சகோதரிகளோ மகள்களோ
    அல்ல. கௌஸர் பானுவின் வயிற்றிலிருந்த கருவிற்கும் நமக்கும் எந்த உறவும் இல்லை.
    தீவட்டியும் திரிசூலமும் நம் வீட்டுக் கதவைத் தட்டாதவரை நாம் நாடாளுமன்றக்
    கூச்சலைப் பற்றியும் அதற்காக ஆகும் மின்சார செலவைப் பற்றியும் கட்டுரைகள் எழுதிக்
    கொண்டிருக்கலாம்.

    • காங்கிரசு மூவாயிரம் சீக்கியர்களை,ஒரு லட்சம் தமிழனை கொன்றதே..அது நாசிசம் இல்லையோ…சரி சரி…ஒரு முஸ்லிமை கொன்றாலும் அவன் நாஸி பிற மதத்தினரை எத்தனை ஆயிரம் கொன்றாலும் விமர்சிக்காது வினவு…நல்ல பாலிசி

    • This is a frustrated person who just bothers about muslim communitiy (at the expense of others) & they alone have right everywhere. Despite venomous efforts from media, cbi, central government, various NGOs, SIT of Godhra riots for more than 10 years, there is no iota of evidence against Modi or Gujarat government. These are fabricated stories (by your religion fundamentalists and congress party) just to keep muslim community in peril & never allow them to think beyond religion. Please read Slim Khan’s (Salman Khan’s dad) interview about Modi. Please grow up!

      • Please grow up!/.///…
        .
        .
        நண்பரே… அவர்களால் செய்ய முடிந்ததை மட்டும் கூற முயற்ச்சிக்கலாமே?

  21. யு.ஆர். அனந்தமூர்த்தி பற்றி எந்தவித எதிர்வினையோ விமர்சனமோ இல்லையே…ஏன் அவர் காங்கிரசை ஆதரிபப்தாலா?அது சரி

  22. இவ்ளோ கத்து கத்தி என்ன ஆச்சு? மோடி தான் ஜெயிச்சார்! இந்தியா இந்து நாடாவோ இந்தி நாடாவோ மாறி விட்டது! போய் எல்லாரும் இந்தி படிக்கிற வழியப் பாருங்க! சாரு இப்பல்லாம் இந்தியில பத்தி எழுதுகிறாராம்! அக்கவுண்ட் நம்பர் மட்டும் இன்னும் மாறவில்லையாம்!

Leave a Reply to Raju பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க