privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதேவர் சாதிவெறிக்கு ஆதரவாக சம்பத் கமிசன் அறிக்கை !

தேவர் சாதிவெறிக்கு ஆதரவாக சம்பத் கமிசன் அறிக்கை !

-

2011 செப்டம்பர் 11 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களில் ஒருவராகிய தியாகி இமானுவேல் சேகரன் குருபூசையையொட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தமிழக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் பலியானார்கள். துப்பாக்கி சூட்டில் இறந்த மஞ்சூரை சேர்ந்த ஜெயபால் என்ற இளைஞனை செத்த நாயைத் தூக்குவது போல நான்கு போலீசார் சேர்ந்து தூக்கிச் சென்ற காட்சி ஊடகங்களில் வெளியான போது ”நாம் ஒரு நாகரீக சமுதாயத்தில் தான் வாழ்கின்றோமா?” என்ற கேள்வியும், அதிர்வுகளும் இந்தியா முழுக்க பல்வேறு தரப்பில் கிளம்பியது. அடுத்த இரு நாட்களில் பரமக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே. சம்பத் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிசனை அமைப்பதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சம்பத் கமிசன்
ஆய்வு செய்யும் சம்பத் கமிஷன் (படம் : நன்றி தி ஹிந்து)

இந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சட்டசபையில் முன் வைக்கப்பட்டுள்ள சம்பத் கமிசனின் அறிக்கை காவல் துறையின் செயல்பாடுகளை, பொறுமையை, விவேகத்தை பாராட்டியதுடன், முதல்வரின் பெருந்தன்மையையும் போற்றிப் புகழ்ந்துள்ளது. தங்களை தற்காத்துக் கொள்வதற்காகத்தான் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அது சட்டப்படி சரி என்றும் சம்பத் தனது அறிக்கையில் கூறியுள்ளார். தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளாக அவரால் கை காட்டப்பட்டிருப்பவர்கள் போலீசின் கொலைவெறித் தாக்குதலால் பாதிக்கப்பட்ட, பலியான தாழ்த்தப்பட்ட மக்கள் தான்.

2011-ல் செப்டம்பர் 9 அன்று பரமக்குடிக்கு அருகிலுள்ள மண்டல மாணிக்கம் என்ற கிராமத்தில் பழனிமுத்து என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பள்ளி மாணவனை முள்காட்டில் வைத்து கொன்று விடுகின்றனர் தேவர்சாதி வெறியர்கள். அதற்கு அச்சிறுவன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை ‘ஒன்பது’ என இழிவுபடுத்தி ஊரில் உள்ள பொதுச்சுவரில் எழுதினான் என்ற ஒரு காரணத்தை ஆப்பநாடு மறவர் சங்கம் முதல் அம்மணி ஜெயலலிதா வரை அனைவரும் ஒரே குரலில் பேசியிருக்கின்றனர். உண்மையில் எப்படியாவது ஆண்டுதோறும் நடத்தப்படும் இமானுவேல் சேகரனுடைய குருபூசையை நிறுத்த வேண்டும் என்பது தான் ஆதிக்க சாதிகளின் நோக்கம். இதனை தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தாக்குதலில் ஈடுபடுகையில் ஆதிக்க சாதிகளை சேர்ந்த குறிப்பாக மறவர் சாதியை சேர்ந்த போலீசார் சொல்லிக் காட்டியே அடித்துள்ளனர். அச்சிறுவனது மரணத்துக்கு அஞ்சலி செலுத்தவும், தியாகி இமானுவேல் சேகரன் குருபூசையில் கலந்துகொள்ளவும் அங்கு வர இருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களில் ஒருவரான ஜான் பாண்டியனை மாவட்டத்திற்குள் நுழைய விடாமல் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

தடையை மீறி குருபூசைக்கு வர முயன்ற காரணத்தால் அன்று காலையில் ஜான் பாண்டியனை வல்லநாட்டில் கைது செய்கிறது போலீசு. உடனே அவரது ஆதரவாளர்கள் சுமார் 50 பேர் திரண்டு பரமக்குடியில் உள்ள ஐந்து முக்கு சாலையில் மறியலில் ஈடுபடுகின்றனர். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரிக்கிறது. அப்போது அந்த வழியாக தாழ்த்தப்பட்ட மக்களின் இன்னொரு தலைவர் கிருஷ்ணசாமி குருபூசைக்கு செல்கிறார். அவருக்கு மாவட்ட நிர்வாகத்தால் செல்வதற்கு அனுமதி தரப்படவே, இரு தலைவர்களின் ஆதரவாளர்களுக்குள்ளும் கூட கொஞ்சம் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. இதனை தனது அறிக்கையில் பெரிதுபடுத்தி காட்டியிருக்கிறார் நீதிபதி கே.சம்பத். இதனாலும் குழப்பம் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சென்னை அடையாறு துணை ஆணையர் செந்தில்வேலன் மற்றும் பரமக்குடி காவல்துறை ஆய்வாளர் சிவக்குமார், வட்டாட்சியர் சிவக்குமார் போன்றோர் மறியல் செய்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் உடனே தடியடியை துவக்கினார். மக்களிடமிருந்து கற்கள் மற்றும் கம்புகள் போன்றவை பறந்து வரவே, பின்வாங்குவது போல முதலில் பம்மி காவல்நிலையத்துக்கு பின்வாங்கிய போலீசார் அடுத்து உடனடியாக வெளியே வந்து தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர். வருவாய்த்துறையிடம் எழுத்துப் பூர்வமான அனுமதி பெற்றுத்தான் அப்போது துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் கூறுகின்றனர். இறந்தவர்களின் உடலையும் கூட மீண்டும் மீண்டும் தாக்கினர். தங்களது வாகனங்களுக்கு அவர்களே தீ வைத்துக் கொண்டனர். வேடிக்கை பார்த்த மக்களையும் போலீசார் விட்டு வைக்கவில்லை. மாலை ஆறு மணி வரை போலீசார் நடத்திய அராஜக தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், எண்ணிடலங்காதோர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் 30 பேர் கைது செய்யப்பட்டனர். பல்லவராயனேந்தல் கணேசன், வீரம்பல் பன்னீர், மஞ்சூர் ஜெயபால் (நாயைப் போல இவரது சடலத்தை போலீசார் தூக்கிச் சென்றனர் – இவர் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டவர்), சடயனேரி முத்துக்குமார், கீழக்கொடுமலூர் தீர்ப்புக்கனி (இவர் எப்படி இறந்தார் என சம்பத் ஆல் கண்டுபிடிக்க முடியவில்லையாம்), காக்கனேந்தல் வெள்ளைச்சாமி ஆகியோரே இறந்த ஆறு பேரும் ஆவார்கள்.

தடியடி
போலீஸ் தடியடி (படம் : நன்றி தி ஹிந்து)

மறுநாள் சட்டசபையில் துப்பாக்கிச் சூடு குறித்து அறிக்கை சமர்ப்பித்த ஜெயலலிதா சம்பவத்திற்கு தாழ்த்தப்பட்டவர்களே காரணம் என்பதை மறைமுகமாக கோடிட்டுக் காட்டியிருந்தார். அடுத்த சில நாட்களில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சம்பத் தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது. கமிசனின் இறுதி அறிக்கை கடந்த மே 7-ம் தேதி முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது வெளியாகியிருக்கும் சம்பத் கமிசன் அறிக்கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு மக்களிடம் போலீசார் சிலர் நடந்து கொண்ட விதம் சரியில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதனை அரசு ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது. அதே நேரத்தில் கலவரக்காரர்கள் துணை ஆணையர் செந்தில்வேலனை தாக்க முயன்றார்கள் என்றும், காவல் நிலையத்துக்கு தீ வைக்க முயன்றார்கள் என்றும், தீ வைப்பது, பெட்ரோல் குண்டு வீசுவது என அவர்கள் கலவரம் செய்ய ஆரம்பிக்கவே துப்பாக்கிச்சூடு தவிர்க்க முடியாமல் போய்விட்டதாக நீதிபதி கே. சம்பத் போலீசாரின் வக்கீலாக பேசியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தி வன்முறையை கட்டுக்குள்ள கொண்டு வர போலீசார் தவறியிருந்தால் தென் மாவட்டம் முழுக்க சாதிக் கலவரம் பரவி இருக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும், அமைதியை நிலைநாட்டவும் துப்பாக்கிச் சூடு அவசியம் என்றும், அது நியாயமானது என்றும் சம்பத் கூறியுள்ளார். இக்கலவரத்தில் போலீசார் அளவு கடந்த பொறுமை காத்தனர் என்றும், அதனை தான் மெச்சுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தாசில்தார் எச்சரிக்கை செய்தும் நிலைமை கட்டுக்குள் வராத காரணத்தால் தான் துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி தரப்பட்டதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பொதுச் சொத்துக்களை நாசப்படுத்திய கலவரக்காரர்களை கண்டறிந்து தக்க தண்டனைகளை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார். உண்மையில் போலீசு வாகனங்களுக்கு அன்று தீ வைத்தவர்கள் பின்வாங்கியது போல நடித்த போலீசாரே.

ஓய்வுபெற்ற ஆசிரியர் வெள்ளைச்சாமி (வயது 72) என்பவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஆய்வாளர் சிவக்குமார் போன்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தீர்ப்புக்கனி என்பவர் எப்படி இறந்தார் என்பது பற்றி கண்டறியப்பட வேண்டும் என்றும் கமிசனால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதலில் வெள்ளைச்சாமியிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த ஆய்வாளர் திடீரென அவரது சாதியை இழிவாக பேசி லத்தியால் கொடூரமாகத் தாக்கியதுடன் நீண்ட நேரம் ரத்தம் வடிய வடிய அவரை தெருவில் போட்டு வைக்குமாறு செய்துள்ளார். ‘பள்ளப் பயலுக்கெல்லாம் எதுக்குடா செருப்பு’ எனக் கூறி செருப்பை எடுக்க முயன்ற போது அம்முதியவரை ரத்தம் வரும் வரை லத்தியால் அடித்துத் தாக்கியுள்ளார். பல போலீசார் துப்பாக்கி சூடு முடிந்த பிறகும் நிராயுதபாணியாக இருந்த மக்களை சூழ்ந்து கொண்டு கொலைவெறியுடன் தாக்கியதை ஏற்க முடியாது என கமிசன் கூறியுள்ளது. ஆனால் அறிக்கையின் இப்பகுதியை விசாரணை கமிசனின் வரம்பை மீறியிருப்பதாக கூறி மாநில அரசின் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் நிராகரித்து விட்டார்.

போலீசாரால் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த 1000 பேரில் சத்தியமூர்த்தி என்ற பத்தாம் வகுப்பு மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும், வேடிக்கை பார்க்கவே அவன் அங்கு வந்திருந்தான் என்றும் கண்டறிந்து கூறியுள்ள சம்பத், காயமடைந்த கார்த்திக் ராஜா என்பவருக்கு இன்னும் ரூ.30 ஆயிரம் வரை இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி தருமாறும் பரிந்துரைத்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு இதுகுறித்த அரசாணை ஒன்றையும் நேற்று பிறப்பித்துள்ளது.

மரணமடைந்தவர்களைப் பற்றி கமிசன் கூறுகையில் ‘கலவரங்களில் ஈடுபடும் வகையில் தவறாக வழி நடத்தப்பட்டு அதனால் பலியானவர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது. தேவர் ஜெயந்தி அன்று உண்மையிலேயே குடித்து விட்டு வீதியில் கும்மியடிக்கும் சாதி வெறியர்களைப் பற்றி இப்படி குறிப்பிட சம்பத் முன்வருவாரா? அதற்கு அவருக்கு தைரியம் இருக்கிறதா? பாதிக்கப்பட்டவர்களது குடும்பத்திற்கு அரசு செய்த உதவிக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், இதில் வெளிப்பட்டுள்ள அரசின் பெருந்தன்மையையும், கருணையையும் கண்டு பெருமிதம் அடைவதாகவும் சம்பத் கூறியுள்ளார். அப்பகுதியில் சமூக அமைதியை நிலை நாட்டவும், தொழில் வளர்ச்சியை பெருக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் சில வழிகாட்டுதல்களை கமிசன் வழங்கி உள்ளது. இவை ஏற்கெனவே அரசிடம் இருப்பதாகக் கூறி மாநில அரசு அப்பரிந்துரைகளை நிராகரித்து விட்டது.

சம்பத் கமிசனின் அறிக்கை ஏறக்குறைய அண்ணா தி.மு.க-வின் கொள்கை விளக்க அறிக்கை போலவே தெரிகிறது. கற்களையும், கம்புகளையும் எதிர்கொள்ள இயலாத சூழலில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக சொல்லும் போலீசாரின் கூற்றை அப்படியே ஏற்றுக்கொண்ட கமிசன், இறந்தவர்களில் ஒருவர் (தீர்ப்புக்கனி) போலீசாரால் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை வெறுமனே மீண்டும் விசாரிக்குமாறுதான் பரிந்துரைத்திருக்கிறது.

போலீஸ் கொடூரம்
காயமடைந்தவரை தூக்கிச் செல்லும் போலீஸ். (படம் : நன்றி தி ஹிந்து).

அழகிரி கைதானால் சாலை மறியல், ஜெயா கைதானால் பேருந்துக்கு தீ வைத்து மாணவிகளைக் கொல்வது என எல்லா அரசியல் கட்சிகளும் செய்யும் போது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு மாத்திரம் மறியல் செய்ய உரிமை கிடையாது எனச் சொல்கிறது போலீசு. ‘பள்ளப் பசங்களுக்கெல்லாம் குரு பூசையாடா’ எனக் குமுறும் தேவர் சாதி வெறியர்கள் ‘தெய்வத் திருமகன்’ என்ற வார்த்தையை கூட முத்துராமலிங்க தேவரை தவிர யாருக்கும் பயன்படுத்த கூடாது என அடாவடி செய்து வருவதும் நாடறிந்த உண்மை. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற துப்பாக்கிச் சூடு அவசியம் எனில் அக்டோபர் 30 அன்று சுற்றியுள்ள எல்லா மாவட்டங்களிலும் தேவர் சாதியினர் நடத்தும் பேரணி அக்கிரமத்தை எப்படி தடுக்கப் போகிறார்கள்? துப்பாக்கிச் சூடு நடத்தியா?

பொறுமையின் உறைவிடமாகவும், நயமாகவும் போலீசார் அன்று நடந்து கொண்டதாக நீதிபதி சம்பத் சொல்லியிருப்பது முழுப்பொய். பொதுவாகவே ‘பாம்பையும், போலீசையும் பார்த்தால் ஒதுங்கு’ என்று தான் மக்கள் காலம் காலமாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். போலீசின் நண்பர்களாக இருந்து போராடும் மக்களை காட்டிக் கொடுக்கும் உள்ளூர் எடுபிடிகளைக் கூட கண்டால் ஒதுங்கும் அளவுக்கு மக்களுக்கு அவர்கள் மீது வெறுப்பிருக்கிறது. மக்களின் நண்பன் என்று போலீசு நெற்றியில் எழுதிக் கொண்டு வந்து சொன்னாலும் நம்புவதற்கு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.

இந்த லட்சணத்தில் சமூகத்தில் புரையோடிப் போயுள்ள ஆதிக்க சாதிவெறி போலீசிலும் நிலவுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களை ஏதோ குற்றவாளிகளைப் போலவும், தண்டிக்கப்பட வேண்டியவர்கள் போலவும் கருதும் இவர்கள், தங்களின் அதிகாரத்திற்கு கீழே எல்லா வகையிலும் குனிந்து நிற்க வேண்டியவர்கள் கேள்வி கேட்கவும் போராடவும் துவங்கவே கண்மண் தெரியாமல் தாக்கத் துவங்குகிறார்கள்.

சம்பத் கமிசனின் அறிக்கை சட்டமன்றத்தில் வைக்கப்பட்டவுடன் புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி அதனை எதிர்த்து வெளிநடப்பு செய்தார். இந்த ஆண்டு தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அம்மாவட்டத்தில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. அக்டோபர் 30 அன்று அதிமுகவின் செல்லூர் கே. ராஜூ மற்றும் சுந்தர்ராஜன் போன்ற அமைச்சர்கள் காரில் பசும்பொன் சென்ற போது தேவர்சாதியினை சேர்ந்தவர்கள் ”144 தடையுத்தரவு போட்டு விட்டு இங்கு எதற்காக வந்தீர்கள்” எனக் கேட்டு அவர்களது கார்களை மறித்துள்ளனர். செங்கற்களும், கம்புகளும் அமைச்சர்களது கார் மீது வீசப்பட்டன.

ஆனால் அத்தேவர்சாதி கும்பல் மீது சிறு தடியடி கூட காவல்துறை நடத்தவில்லை என்பதையும் இத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. இதன்மூலமாக போலீசு, ஜெயலிலிதா, நீதிபதி என எல்லோருமே சாதிக்கு ஒரு நீதியை வைத்திருப்பது தெளிவாக தெரிகிறது. இத்துடன் 2011 செப்டம்பர் 11 அன்று இளையாங்குடி மற்றும் மதுரை சிந்தாமணி பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடுகள் பற்றியும் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது. இதனை ஒரு செய்தியாகவே தமிழக அரசு இதுவரை கருதவில்லை.

சம்பத் கமிசனின் பரிந்துரைகளில் ஒன்று, இனி வரும் காலத்தில் எல்லா சாதித் தலைவர்களுக்குமே குருபூஜை நடத்த அரசு அனுமதி தரக் கூடாது என்பது தான். சுந்தரலிங்கத்தின் பெயரில் போக்குவரத்துக் கழகம் ஆரம்பித்து பிற ஆதிக்க சாதிகளுக்கு அது பிரச்சினையானவுடன் எல்லா போக்குவரத்துகழகங்களுக்கும் இருந்த பழைய பெயரை அரசு நீக்கியது போல இதற்கும் செய்ய முயல வேண்டும் எனப் பரிந்துரைத்தாலும், முத்துராமலிங்கத் தேவரை தேசியம், தெய்வீகம் எனப் புரட்டல் செய்து அதை மட்டும் விழாவாக நடத்தி விடுவார்கள். அந்த உரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்படும்.

தற்போது பாராளுமன்ற தேர்தல் வர இருக்கும் நேரத்தில் தேவர் சாதி மக்களின் வாக்குகளை கவர்ந்திழுக்கவும், அச்சாதியில் இருக்கும் ஒரு சில வெறியர்களை சமாதானப்படுத்தவுமே சம்பத் கமிஷனின் அறிக்கை “தேவர் குரு பூஜை” நாளில் திட்டமிட்டு வெளியிடப்படுகிறது.

போலீசும், அரசும், ஓட்டுக்கட்சிகளும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியையும் வழங்கி விடாது என்பது இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

– வசந்தன்

  1. சம்பத் கொடுத்த அறிக்கையில் ” இனி குருபூஜை விழாக்களுக்கு தடை விதிக்கவேண்டும்’ எனபதை ஏற்றுக்கொள்ளும் உங்களால் அவர் கூறிய “தற்பாதுக்காப்பிற்காக தான் காவல்துறை சுட்டது” என்பதை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    ஒரு தீர்ப்பில் தனக்கு சாதகமாக உள்ளவற்றை மட்டும் ஏற்றுக்கொள்வதும் பாதகமானவற்றை அது பொய் என எக்காலமிடுவதும் இந்த புரட்சியாளர்களின் நியாயமாக இருக்கும் என தெரியவில்லை.

    • தியாகு அவர்களே,உங்களுக்கு தமிழ் தெரியவில்லையா அல்லது அரை குறையாக படித்துவிட்டு கமண்டு போடுகிறீர்களா.குருபூஜை பற்றி பதிவில் என்ன எழுதியிருக்கிறார்கள்.

      \\சம்பத் கமிசனின் பரிந்துரைகளில் ஒன்று, இனி வரும் காலத்தில் எல்லா சாதித் தலைவர்களுக்குமே குருபூஜை நடத்த அரசு அனுமதி தரக் கூடாது என்பது தான். சுந்தரலிங்கத்தின் பெயரில் போக்குவரத்துக் கழகம் ஆரம்பித்து பிற ஆதிக்க சாதிகளுக்கு அது பிரச்சினையானவுடன் எல்லா போக்குவரத்துகழகங்களுக்கும் இருந்த பழைய பெயரை அரசு நீக்கியது போல இதற்கும் செய்ய முயல வேண்டும் எனப் பரிந்துரைத்தாலும், முத்துராமலிங்கத் தேவரை தேசியம், தெய்வீகம் எனப் புரட்டல் செய்து அதை மட்டும் விழாவாக நடத்தி விடுவார்கள். அந்த உரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்படும்.//

      அந்த பரிந்துரை பற்றி கருத்து ஏதுமில்லை.சம்பத் பரிந்துரைத்தவாறு பிற குருபூஜைகளை தடை செய்தாலும் தேவர் குருபூஜை மட்டும் தேசியம், தெய்வீகம் எனப் புரட்டல் செய்தேனும் தொடர்ந்து நடக்கும் என ஆட்சியாளர்களின் எத்துவாளித்தனத்தையே சாடுகிறார்கள்.

      • நீங்கள் நன்றாக படியுங்கள்.. குருபூஜை என்பது தேவருக்கு மட்டுமே செய்யப்படுவது அதை புரட்டல் செயத புரட்சியாளர்களர்கள் யார்? “சம்பத் கமிஷன் சாதிய தலைவர்களுக்குதான் விழாக்களை தடை செய்யுங்கள் என்றது அதை ஏற்றுக்கொண்டது போல் எழுதியுள்ளார்கள். அதைத்தான் குறிப்பிட்டேன்

        • குரு பூஜை உங்களுக்கு மட்டும்தான் சொந்தமா.உங்கள் தலைவருக்கு நீங்கள் எந்த அடிப்படையில் குரு பூஜை கொண்டாடுரீன்களோ அதே மாதிரி இமானுவேல் சேகரனுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் கொண்டாடுனா உங்களுக்கு என்ன கேடு வந்து விடும்.

          • “குருபூஜை” என்றால் என்ன என்று விளக்கம் சொல்லுங்கள். நீங்கள் எந்த அளவுக்கு விவரம் தெரிந்தவர் என்பது உங்கள் பதிலில் தெரிந்துவிடும்! சொல்லமுடியுமா? முடிந்தால் சொல்லுங்கள்..

            • ஏமாறுபவனை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது.பகத்சிங் வரலாறு படி…நான் இறந்தபின் என்னைப்புகழ நேரமெடுக்காதே உருவாக்குவதற்கு எவ்வளவோ உண்டு இந்த உலகத்திலே…படி…படி…நல்லறிவை.

        • புரட்சியவாதி நியாயங்களுக்காகக் குரல் கொடுப்பவன்.நியாயங்கள் உலகில் உண்டென்றால் புரட்சியவாதி உலகில் இருக்கவும் மாட்டான்,தோன்றவும்மாட்டான்.எல்லோர்மீதும் அன்பு கொண்ட அறிவாளியே புரட்சியவாதி.பாபுபகத்.

  2. சம்பத் கமிஷன் அறிக்கைக்கும் தேவர் ஜாதி வெறிக்கும் என்னங்க சம்பந்தம் , தெருவில் போகும் பள்ளரை நாய் கடித்தால் கூட அதற்க்கு தேவர் சாதி வெறிதான் காரணம் என்று தலைப்பிடுவீர்கள் போல .

    முதலில் இது போன்ற sensitiveவான விஷயங்களுக்கு இத்தயகைய கூறு கெட்ட தனமாக தலைப்பை வைப்பதை விடுங்கள்

    • உனது ஆதங்கத்துக்கு அர்த்தம் உண்டு சகோதரா.நிகழ்வுகள் பயங்கரமாக இருந்தாலும் சொல்லப்படும் விதம் உண்மைகளை உரைத்தும்,யார் மனதையும் காயப்படுத்தாமல் அவர்கள் செய்ததவறை உணர வைக்கும்விதத்திலும் இருந்தால் அத்தகு தன்மையே மாற்றத்திற்குவித்திடுமென நாம் நம்பலாம்.கோபதாபங்கள் ஜாதிகளைப்பார்த்துப்போகவேண்டாம், போலிகள் இதில் குளிர் காய்ந்து விடுவர் எனது அன்பான வினவுக் குடும்பமே,தூய்மையான கம்யூனிசத்தோழர்களே அரசியல்வாதிகளும்,அரசியலும் சரியில்லை என்பது மறுக்கப்படமுடியாத உண்மை, அவர்கள் செய்ததவறே அவர்களுக்கு பலமாகிவிடக்கூடாது.இனிமேலும் தேவேந்திர இனத்துக்கு மட்டுமல்ல,யாருக்கும் இந்நிலை வரக்கூடாது.வந்தால் காரணமான கயவர்களுக்கு உடனே பதில் கொடுத்தாகவேண்டும்.பாபுபகத்.

  3. நமது தேசம் சரியில்லை என்பது எழுதித் தெரிய வேண்டியதில்லை,ஆனால் அனைத்து ஜாதியிலும்,மதங்களிலும் நல்ல மனிதர்கள் கட்டாயமாக இருப்பார்கள் அந்த ந்ல்ல மனிதர்கள் எல்லாம் சேர்ந்துதான் நன்மைகள் உண்டாகும் செயல்களைச் செய்யமுடியும்,அவர்கள் மனம் எக்காரணம் கொண்டும் வருத்தப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.ஆதிக்கசக்திகளின் பிரித்தாழும் செயல் வெற்றிபெறும் வகையில் எச் செயலும் நேர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.பாட்டாளிவர்க்கம் எச் ஜாதி,மதங்களுக்குள்ளும் அடங்கிவிடாது,தவறு செய்யும் மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள் அவர்கள் நம்மைத்தவறு செய்ய வைப்பதற்கு நாம் இடமளித்துவிடக்கூடாது என்று நான் நினைக்கிறேன் பாபுபகத்.

  4. //முத்துராமலிங்கத் தேவரை தேசியம், தெய்வீகம் எனப் புரட்டல் செய்து அதை மட்டும் விழாவாக நடத்தி விடுவார்கள். அந்த உரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்படும்.//

    ஒருவரை தேசியத்தலைவர் என போற்ற என்ன காரணிகள் உள்ளதோ அதை வைத்து தேவரை அளவிட்டு பார்த்து பின் சொல்லுங்கள் அவர் தேசியதலவர் இல்லையா என்று!! அவர் தியாகம் இன்றும் பல ஆதரங்களோடு இருக்கிறது.

    ஆனால் நீங்களோ அக்மார்க் குத்திய சாதிய அடியாட் களை எல்லாம் தியாகி, சாதிமறுப்பு போராளி என விடும் புருடாவில் எல்லோரும் மூக்கை பிடித்துக்கொண்டு ஒடுகிறார்கள். தியாகி ஜான்பாண்டியன் என அவர் இறந்தபின் ஒரு பட்டம்வரும். இல்லைனா உங்களை எல்லாம் புரட்சியாளர்கள் என நீங்களே ஒத்துக்கொள்ள மாட்டீர்களே! போங்கய்யா போய் உங்க புள்ள குட்டியாவது படிக்க வைங்க ..போங்க..!

  5. தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவை பெற வடக்கே வன்னிய கட்சியான ப.ம.க வை அடக்குகிறார் ஜெயலலிதா , மரக்காணம் கலவரத்தில் கொல்லப்பட்ட வன்னியர்களுக்கும இதுபோன்ற காரணத்தை சும்மா சொன்ன பொது , இந்த புரட்சி புலிகள் யாருக்காக , எங்கே புரட்சி செய்தார்கள் என்று தெரியவில்லை …………. அதெல்லாம் தங்கள் கண்களுக்கு தெரியவில்லை……….. என்ன பன்றது காமாலை கண்ணோடு பார்த்தல் எல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும். பள்ளன், பறையன், படையாச்சி, கள்ளன், தேவன்ன்னு சாதிவாரியக கூறு போட்டு குளிர் காயுங்கள்………. குழம்புன குட்டையில்தானே மீன் பிடிக்கமுடியும்னு நல்லாவே தெரிஞ்சு வேச்சுரிக்கிங்க….

  6. செய்த தவறை மூடி மறைக்கும் அரசாங்கம். சாதி வெறி இணையம் மாற்று சாதியை தூற்றுகிறது.

  7. தமிழ் நாட்டில் உள்ள தெரு பெயர்களில் உள்ள சாதி அடையாளங்களை நீக்கி விட்டார்கள். உதாரணத்திற்கு “ஆரியா சாலை” , “ராமசாமி சாலை”.

    இது நல்ல விஷயம்தான்.

    ஆனால், “பசும்பொன் முத்துராமலிங்க (தேவர்) சாலை” என்று பழைய சேமியர்ஸ் சாலையை எழுதி உள்ளனர்.

    அது என்ன தேவர் என்பதை அடைப்புக் குறிக்குள் இவர் பெயரில் உள்ள சாலையில் மட்டும் அனுமதிக்கின்றனர்?

    இதை யாரும் ஆட்சேபணை செய்த மாதிரியோ, மாற்ற சொல்லி வலியுறுத்தின மாதிரியோ செய்திகள் இல்லை.

    ஏன் வினவு போன்ற ஒடுக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுப்போர் இதை எதிர்கவில்லை?

    • நீங்கள் தமிழ்நாடா? இல்லை செவ்வாய்கிராகமா? செட்டி ரோடு பெயர் மாத்தியாச்சா? மூப்பனார் பெயர் மாத்தியாச்சா? இன்னும் பெரியா பட்டியல் தரேன் கொஞ்சம் பொறுங்க..!

  8. ஐயா காவல்துறைக்கும் ,நீதிபதி அறிக்கைக்கும் தேவர் சாதியினருக்கும் என்ன தொடர்பு ? சாதி பற்றி எழுதும் போதெல்லாம் அடிக்கடி உங்க வண்டி ஒரு பக்கமா சாயுதே ஏன் ? இது போன்ற வன்மம் வருகின்ற கட்டுரைகளை எழுதிக் கொண்டு எல்லா சாதி உழைக்கும் மக்களையும் எப்படி ஒன்று சேர்ப்பீர்கள் ?

  9. பசும்பொன் தேவர் அவர்கது கொடுக்கப்படும் மரியாதைகள் அவர் சார்ந்த, சாதிப்பற்று மிக்க மக்களை ஆரியத்தின் அடிமையாக்கிக்கொள்ளவே! எந்த அரசியல் கட்சியுமிந்த மிகப்பெரிய வோட்டு வஙியை பகைத்துக்கொள்ள முடியாது!நீதிக்கட்சியின் செயல்பாட்டை தென்மாவட்டஙகளில் ஒடுக்கவும், பெரியாரால் ஆதரிக்கப்பட்ட காமராஜரை ஒரங்கட்டவும், ராஜாஜியால் கொம்புசீவி விடப்பட்ட ஜலிக்கட்டு காளை! ஆனால் ஜைலுக்கு போய் வந்தபின்னர் ஆன்மீக வாதியாக சித்தரிக்கப்பட்டார்! ஆதிக்க சாதி தலைவராகவும், பார்ப்பன ரஜாஜிக்கு கும்பலுக்கு தாசனாகவும் இருந்தவர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்டவர் சென்று வழிபட காரணமாயிருந்தவர் என்பது வரலாறு! அதன் பின்னணி பார்ப்பன நரித்தன்மே என்பது இன்னும் சுவை மிக்க வரலாறு!

    • தேவர்கள் ஆரிய அடிமையாக இருக்கிறார்கள், சரி நீங்கள் எந்த மக்களின் அடிமையாக இருக்கிறீர்கள்? பெரியார் காமராஜரை ஆதரிக்கவில்லை. காமராஜரின் அரசியல் நுழைவே தேவரை வைத்துதான் நடந்தது அனைவரும் அறிந்த உண்மை. ராஜாஜியும் தேவரும் எதிரணியில் நின்றவர்கள், இறுதி காலத்தில்தான் ஒன்று சேர்ந்தார்கள். தேவர் யாருக்கும் தாசனாக இருக்கவில்லை. முற்போக்குத் தலித்கள் வரலாற்றுத் திரிபை செய்யாமல் இருந்தால் சரி.

    • @Ajaathasathru

      பசும்பொன் தேவர் சிறுவயதிலிருந்தே ஆன்மிகவாதிதான்..1932-ல் லிருந்து அவர் ஜெயிலுக்கு போய்தான் வந்திருக்கிறார்.

      நீங்கள் சொன்ன ராஜாஜியைதான் 1946-ல் நடந்த மாநாட்டில் தீர்மாணம் நிறவேற்றி ராஜாஜியின் காங்கிரஸ் தலைமையை நீக்கி காமராஜரை தலைவராக காங்கிரஸ் கொண்டுவந்தார் தேவர்.

      நிறைய பிரமிணர்கள் தேவருக்கு தாசராக இருந்து தன் வாரிசுகளுக்கு தேவருஇன் பெயரை சூடியுள்ளனர்.

      நீங்கள் சொல்வது பொய் வரலாறு ..உண்மை வேறு அதுதான் சரித்திரம்.

      உங்களை போன்றவர்கள் எதுமே தெரியாமல் சொந்த கற்பனையை கருத்தாக வைப்பதினால்தான் தமிழ என்றால் முட்டாள் என்று அந்நியர்கள் நினைக்கிறார்கள்.

  10. //தமிழ் நாட்டில் உள்ள தெரு பெயர்களில் உள்ள சாதி அடையாளங்களை நீக்கி விட்டார்கள். உதாரணத்திற்கு “ஆரியா சாலை” , “ராமசாமி சாலை”. ஆனால், “பசும்பொன் முத்துராமலிங்க (தேவர்) சாலை” என்று பழைய சேமியர்ஸ் சாலையை எழுதி உள்ளனர்.//

    அப்போ சாதிச் சான்றிதழை கொடுப்பது மட்டும் ஏன் வைத்திருக்கிறார்கள்?

    • ஒரு மாற்று திறனாளிக்கு ஏன் அவர் ஒரு மாற்று திறனாளி என்ற சான்று?……அவ்வாறே இவர் பிற்படுத்தப்பட்டவர்,இவர் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்,இவர் தாழ்த்தப்பட்டவர் (அதாவது இந்து மதத்தால்)என்றறிந்து அவரவர் மக்கள் தொகைக்கேற்ப உரிமைகள் தரவே சாதி சான்றிதழ் அளிக்கப்படுகிறது என்றறிக.

      • மாற்று திறனாளிக்கு சான்றிதல்/சலுகை கொடுப்பது சரி அவரின் மகன் மாற்று திறனாளியாக இல்லாமல் இருந்தால் அவருக்கு சலுகைகள் வழங்குவது இல்லை, அதேபோல் அரசின் சலுகைகளை பெற்று பொருளாதாரத்தில் மேன்பட்டவரின் மகனுக்கு எப்படி அவரின் தந்தை(பொருளாதரத்தில் பின்தங்கி இருந்தவர்) அடைத்த சலுகைகளை அவர் பிறந்த சாதி அடிபடையில் கொடுக்கலாம்?

  11. தமிழ் நாடு காவாலி துறை ………பள்ளர்,பறையர் போன்ற மேல்சாதியினரை சுட்டு கொள்ளூவானுங்க….தேவர்,மறவர் போன்ற தாழ்ந்த சாதியினரிடம் அரிவாள் வெட்டு வாங்கி சாவானுங்க…செத்த பொணங்கள்கிட்ட வீரத்தை காட்டுறதுல தமிழ்நாடு காவாலி ,களவாணி துறை மிருகங்களுக்கு இணை யாருமே கிடையாது……இதுல செந்தில்வேலன் போன்றோருக்கு i .p .s ஒரு கேடு.

  12. //நீங்கள் சொல்வது பொய் வரலாறு ..உண்மை வேறு அதுதான் சரித்திரம்..//
    நண்பர் தியாகு மற்றும் பெருமாள் தேவன் அவர்களே! ஆன்மீகம் என்றாலே பிராமண ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு, அவர்களின் தாசனாக இருப்பதுதானே! அல்லது சித்தர்கள் போல சீர்திருத்தங்கள் ஏதாவது செய்திருந்தால், சாதி ஒழிப்பு பொன்ற சீர்திருத்த கருத்துக்களுக்காக போராடியிருந்தால் தெரிவியுங்கள் ! தேவரவர்களைப்பற்றி நான் அறிந்து கொண்டது, மதுரை வைதியனாதய்யர் மூலமாக காமராஜரின் அரிஜன கோவில் பிரவெசத்திற்கு தடையுத்தரவு கேட்டதும், அது முடியாமல் போகவே , அதே வைத்தியனாதய்யர் மூலம் அரிஜன பிரவேசம்நடைபெற்றதும் தான்! காமராஜரின் அரசியல் எழுச்சியில் பெரியாரின் பங்கு அவராலேயே குறிப்பிடப்பட்டுள்ளது! உஙகள் ஆதாரங்களையும் தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்!

    //நிறைய பிரமிணர்கள் தேவருக்கு தாசராக இருந்து தன் வாரிசுகளுக்கு தேவருஇன் பெயரை சூடியுள்ளனர்.//

    ஏன் செய்ய மாட்டார்கள்? சாதி மறுப்பு போராடிய பெரியார் பெயரையோ, காந்தியின் பெயரைக்கூட வைக்காதவர்கள் தேவர் பெயரை நன்றியுடந்தான் வைத்திருக்கிரார்கள்!

    அது இருக்கட்டும் நண்பர்களே! இன்னும் எத்தனை காலம்தான் மக்களை பிரித்தாளும் பார்ப்பன மேலாதிக்க சதியை பொறுத்துக்கொண்டு இருப்பீர்கள்?நான் தேவனுமல்ல, தாழ்த்தபட்டவனுமல்ல! ஆன்மீகத்தில் கரைகாண விரும்பி, கடைசியில் பெரியாரே சிறந்த ஆன்மீக வாதி என்று துணிந்தவன்!

    யாராவது பூனைக்கு மணிகட்ட வேண்டாமா?

    • அஜாதசத்ருநாயுடு அவர்களே – உஙகள் தந்தை ராமசாமியார் எப்போது சாதி மறுப்பு போராடியுள்ளார் என சொல்லமுடியுமா? நம்மிடையே அதாவது தாழ்த்த / பிற்படுத்த / முற்பட்டவர்கள் இடையே காழ்புனர்ச்சியை வளர்த்து குளிர் காய்ந்தார் என்பதுதான் உண்மை. இதை தமிழ்நாட்டில் அனைவரும் அறிவர்.

      • பெரியாருக்கு குளிர் காய நிறைய இடம் உண்டு…
        அவர் எக்காலத்திலும், மக்களைப் பிரித்து
        மேய்ந்ததில்லை….
        பிரித்து மேய்வது பூணூல்களின் அன்றாட வேலை:
        என்றுமே
        “நூல்கள்” அதற்காக முயற்சி செய்யும்.
        .உழைத்து வாழ்வது
        ச்மார்த்த” வழிதோன்றல்களுக்கு தோன்றாத ஒன்று…
        நாஙகள் சொல்வதெல்லாம் உண்மை: பூணூல்கள் எங்கேயாவது வயலில் நாற்று நட்டு,களை பிடுங்கி…ஊகூம்…எங்களை நீங்கள் பிடுங்காமல் இருந்தால் சரி!

    • நியாயங்கள் நம் போன்றவர்களால்தான் உருவாகும்.நன்றி தோழா உன் கருத்துக்கு.பாபுபகத்.

  13. யார் சார் அந்தநாயுடு? இப்படித்தான் அரைகுறை புரிதலோடு அரற்றுகிறீர்! தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்களே, சாதி ஒழிந்த சமத்துவத்திற்கு இவை எதிராக இருந்ததுதான்! சரி! நான் கேட்ட கேள்விக்கு பதிலில்லை போலும்!

    • நான் அரற்றவில்லை-நீர்தான் அரற்றுகிறீர். உஙகள் தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்களே, சாதி ஒழிந்த சமத்துவத்திற்கு இவை எதிராக இருந்ததுதான் என்றால் இனனும் ஏன் தமிழகத்தில் சாதிவெறி இன்னும் ஏன் ஒழியவில்லை. ராமசாமியாரை ஏன் தமிழ்நாட்டு
      தாழ்த்தபட்டவர்கள் (தலித்துகள்) ஏன் முழுமையாக ஏற்கவில்லை?

      • யார் சொன்னது ஏற்க வில்லை என்று? அகில இந்திய அளவில் பார்பனருடன் போராடி இடஒதுக்கீடு, தனிதொகுதி என்று எதிர்பார்த்துகொண்டிருந்த வேளையில், அவர்கள் அடக்கி வாசிக்க விரும்பினர்!
        பெரியாரின் செங்கல்பட்டு மனாட்டை தொடக்கிவைத்தவரே சவுந்தரபாண்டியன் தாழ்த்தப்பட்டவர் தானே! அவரை பெரியாரே தேரில் வைத்து இழுத்துச்சென்றாரே! பார்பன புளுகுக்கு பலியாகாதீர் நண்பரே!

      • அளகரசன் தம்பி..இன்னும் ஏன் தலித்துகள்
        பெரியார் கொள்கையை பின்பற்றவில்லை?
        அதை விடுங்கள்..இன்னமும் சேரியிலிருந்து மீளாமைக்கு
        யார் காரணம்?

        ,நான் மன வலியுடன் பார்த்துவறுகிறேன்…
        ஒரே ஒரு காரணம்: இன்னமும் அவர்கள் சுய விமர்சனம் (அ)
        எது நல்லது, எது கெட்டது என்று தீர்மானிக்க முடியாதவாறு
        அவர்களின் நிலைமை உள்ளது..நாமும் இத்ற்கு ஒரு முக்கிய காரணம்…ஏனெனில் சேரி என்பது
        இந்தியாவில்குறிப்பாக தமிழ்நாட்டில் வெளியேற முடியாத காரணிகளைக் கொண்டுள்ளது

  14. // ராஜாஜியும் தேவரும் எதிரணியில் நின்றவர்கள், இறுதி காலத்தில்தான் ஒன்று சேர்ந்தார்கள். தேவர் யாருக்கும் தாசனாக இருக்கவில்லை. //

    என்ன நோக்கத்திற்காக சேர்ந்தார்கள்? பெருமாள்தேவன் அவர்களே!

    • காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த முதல் புள்ளி வைத்தவர் தேவர் அதில் தன்னையும் இணைத்துக்கொண்டவர் ராஜாஜி. 1962-ல் தனது பொது உரையில் தேவர் ராஜாஜியை பற்றி சொல்லும் போதே ” ஆச்சாரியர் அனைத்து பதவிகளையும் அனுபவித்துவிட்டு அதன் மீது சலித்து மக்கள் சேவை ஒன்றே போதும் என வந்துள்ளார்” என்றார்.

      தேவர் காங்கிரசை வீழ்த்த முதல் புள்ளிவைத்தவர்..இன்று உங்களை போன்றவர்கள் காங்கிரசை வீழ்த்த பாடுபடுகிறீர்கள்.ஆக தேவரின் சிந்தனையில் ராஜாஜியைப்போல் நீங்களும் ட்HஏVஅருடன் இணைந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் தோழர்களே!

  15. பட்டி தொட்டியெங்கும் பாடசாலைகள் அமைத்து அனைவருக்கும் இலவச கல்வி அளித்த, பச்சை தமிழனை வீழ்த்தவே ராஜாஜி காங்கிரசை எதிர்த்தார்! வழக்கம்போல தேவரும் ராஜாஜிக்கு சாமரம் வீசினார்! காமராஜரை கழட்டிவிட்ட காங்கிரசுடன் அவாள் கும்பல் சேர்ந்துகொனண்டது வேறுவிஷயம்!
    என்ன நோக்கத்திற்காக சேர்ந்தார்கள்? இன்னும் விளக்கவில்லையே! தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீடுகளை முறியடிக்கவும், தமிழ்னாட்டில் மீண்டும் பார்ப்பன ஆட்சியை கொண்டு வருவதே நோக்கம்! வழக்கம்போல விபீஷணர்களின் உதவியால் இடைக்கால வெற்றி பெற்றனர்!

  16. பரமக்குடி துப்பாக்கிச் சூடு – உண்மையறியும் குழு அறிக்கை

    வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்த ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) உண்மை அறியும் குழு செப்டம்பர் 19-20 தேதிகளில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டது. 700 கிலோமீட்டர்களுக்கு மேலாக பயணம் மேற்கொண்ட குழு, பலியானவர்கள் அனைவரது குடும்பத்தினர், பொதுமக்கள், தலித் அமைப்புகளின் தலைவர்கள், காவல்நிலையங்கள், மாவட்டக் காவல்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், சம்பவம் நடந்த இடங்கள் அனைத்தையும் பார்வையிட்டு கருத்தறிந்தது. கட்சியின் மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் தலைமையில் சென்ற குழுவில், டி.சங்கரபாண்டியன் (எஅய்சிசிடியு மாநிலத் துணைத்தலைவர்), ஆவுடையப்பன் (அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர்), திவ்யா (அகில இந்திய மாணவர் கழக மாநிலக் குழு உறுப்பினர்), சி.மதிவாணன் (மதுரை மாவட்டச் செயலாளர்), ஜீவா (சிவகங்கை மாவட்டப் பொறுப்பாளர்), கே.ஜி.தேசிகன் (ஒருமைப்பாடு ஆசிரியர்குழு உறுப்பினர்) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    1. செப்டம்பர் 11 அன்று காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு நடவடிக்கைகள் எதுவும் காவல்துறை சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்கு விதிகளின் படி நடத்தப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் கையாளப் படவில்லை. பல்வேறு ஆதாரங்கள், வாக்குமூலங்கள், நிகழ்ச்சிவிவரங்கள் அனைத்தும் உறுதிப் படுத்துவது, அமைதி, ஒழுங்கை ஏற்படுத்துவதற்கு மாறாக அச்சம், பீதியை ஏற்படுத்தும் வன்மத்துடனும் முன்முடிவுடனும் பரமக்குடியிலும் மற்ற பிற இடங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

    2. பரமக்குடி 5 முக்கு சாலையில் திரண்டிருந்தவர்களை அமைதிப் படுத்த காவல்துறை உயர் அதிகாரிகளோ மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களோ முயற்சி எதுவும் எடுக்கவில்லை. மாறாக தியாகி இமானுவேல் சேகரன் பேரவையின் மாநிலத்தலைவர் சந்திரபோஸ், சாலைமறியலை கைவிடச் செய்யவும் நிலமையை கட்டுக்குள் கொண்டுவரவும் கூறிய அனைத்து ஆலோசனைகளையும் கூட காவல் துறை உயர் அதிகாரி சந்தீப் பட்டீல் முரட்டுத்தனமாக மறுத்துவிட்டார். இதன்மூலம், உயர்அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்துவதையே குறியாகக் கொண்டிருந்தது உறுதியாகிறது. கூட்டத்தைக் கலைப்பதற்கு தண்ணீர் பீச்சியடிப்பதற்கென்று நிறுத்தப்பட்டிருந்த வஜ்ரா வாகனம் பயன்படுத்தப்பட வில்லை. கலைப்பது நோக்கமல்ல, சுடுவதே நோக்கம் என்பது தெளிவாகிறது.

    3. தடியடியும் துப்பாக்கிச்சூடும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. எனவே தடியடி பயனளிக்காமல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்ற காவல்துறை கூற்றும் முதலமைச்சரின் அறிக்கையும் உண்மைக்கு மாறாக உள்ளன. துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்கள் பலர், நெற்றியிலும், மார்பிலும் வயிற்றிலும் குண்டுபாய்ந்து பலியாகி உள்ளனர். இது கூட்டத்தைக் கலைப்பதற்கு நடத்தப்படும் துப்பாக்கிச்சூடாக அல்லாமல் குறி பார்த்து சுட்டு உயிரைப்பறிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டிருக்கிறது.

    4. ஐந்து முக்கு சாலையில் திரண்டிருந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது எனும் காவல்துறை கூற்று உண்மைக்கு புறம்பானது. மாறாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பின்னரே திரண்டிருந்தவர்கள் கல்வீசுவது போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கூட்டம் சிதறிய பின்னரும் துப்பாக்கிச் சூடு மாலை வரை பலமுறை நடத்தப் பட்டிருப்பதும் 5 முக்கு சாலை சந்திப்பை மாலைவரை காவல்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததும் இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு யாரும் செல்ல முடியாது என்ற நிலமையை ஏற்படுத்துவதற்கென்றே செய்யப்பட்டிருக்கிறது. *மாலை 4 மணிக்கு மேல் இரண்டுஇளைஞர்கள் பிடிக்கப் பட்டு கொல்லப் பட்டிருக்கின்றனர் என்பதை நேரடி சாட்சியங்கள் உறுதிப் படுத்துகின்றன. இவர்கள் காவல் துறையினரால் அடித்தோ அல்லது சுட்டோக் கொல்லப் பட்டிருக்கின்றனர் என்பதும் தங்களைக் காத்துக்கொள்ள, பொதுமக்களை காக்க, வேறுவழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையும் சட்டமன்றத்தில் முதலமைச்சரும் கூறியதும் தவறு என்பது நிரூபணமாகிறது.

    5. ஜான்பாண்டியனுக்கு முதலில் அனுமதி அளித்துவிட்டு பின்னர் கைது செய்து தடுத்து நிறுத்தியதற்காக கூறப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. அவரது பயணப்பாதையையும் நேரத்தையும் முன்கூட்டியே முடிவு செய்து போதிய போலிஸ் காவலுடன் அவரது வருகையை சச்சரவற்ற ஒரு நிகழ்ச்சியாக நடத்தியிருக்கமுடியும். மாறாக நினைவு நிகழ்ச்சிக்கு கூடியிருப்பவர்களை ஆவேசமடைய செய்யவும் ஆத்திர மூட்டுவதற்காகவுமே ஜான்பாண்டியனது வருகை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. பரமக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சற்றேறக்குறைய அதே நேரத்தில், 25-30 பேர்கள் மட்டுமே கூடியிருந்த மதுரை சிந்தாமணியிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது! இவை அனைத்தும் பரமக்குடியை நோக்கி அணிதிரள்பவர்களை ஆங்காங்கே தடுத்து திருப்பி அனுப்புவது, தலித் சமூகத்தினரை ஆத்திரமூட்டுவது, துப்பாக்கிச்சூடு நடத்தி இமானுவேல் சேகரன் நினைவஞ்சலி நிகழ்ச்சியை தடுத்து நிறுத்துவது என்ற முன்முடிவுடன் செய்யப்பட்டிருக்கிறது.

    6. தனியாக சிக்கியவர்களை, குண்டடிபட்டவர்களை, பலியானவர்களை, பலியானவர்களின் உறவினர்களை காவல்துறை நடத்தியவிதம் மனிதத் தன்மையற்ற கொடூர சம்பவங்களாகவே உள்ளன. தனியாக சிக்கிய முதியவர்கள் பலரும் கொடூரமாக அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் இருவர் பலியாகி இருக்கிறார்கள். 20 பேர் கூடிய இடத்தில் 200 பேர் மீது வழக்கு, 500 பேர் கூடிய இடத்தில் 1000க்கு மேற்பட்டோர் மீது வழக்கு, இரவு நேர தேடுதல் வேட்டை போன்ற அடக்குமுறை நடவடிக்கைகள் தொடருகின்றன. இவை பரமக்குடியை சுற்றியுள்ள தலித் இளைஞர்கள், தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை நிரந்தரமான அச்சத்தில் ஆழ்த்தவும் அடுத்தடுத்து அணிதிரளாமல் செய்யவுமான திட்டத்துடன் செய்யப்பட்டு வருகிறன்றன.

    7. துப்பாக்கிச்சூடு, தடியடி, உள்ளிட்ட அனைத்தையும் உள்ளூர் போலிசே முன்னின்று நடத்தியுள்ளனர். ‘அனுபவம் வாய்ந்தவர்கள்’ என்று கூறப் படுவோரான, கடந்தகாலத்தில் சாதிய பாரபட்சத்துடன் தலித்துகள்மீது வன்முறை நடத்திய அனுபவம் உள்ள அதிகாரிகள் செந்தில்வேலன், இளங்கோ, சிவக்குமார் போன்றவர்களின் தலைமையிலேயே அனைத்தும் நடந்துள்ளன.

    8. உள்துறைப் பொறுப்பை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், லட்சக் கணக்கான தலித் மக்கள் சம்பந்தப்பட்ட உணர்ச்சிபூர்வமான இந்த விவகாரத்தில் பொறுப்பற்ற முறையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமலும் முழுக்க முழுக்க காவல் துறையிடம் விட்டு விட்டதாகவே தெரிகிறது. காவல்துறை உயர் அதிகாரிகள், ஆட்சித்தலைவர்களின் கூட்டத்தை முன்கூட்டியே கூட்டி அமைதி குலையாமல் இருக்கவும், இமானுவேல் சேகரன் நினைவுநாள் நிகழ்ச்சி அமைதியாக நடக்கவும் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாணவர் பழனிக் குமார் திட்டமிட்ட கொலை, இமானுவேல் சேகரன் குருபூஜை நிகழ்ச்சியை தடுக்கும் நோக்கத்துடன் ஆப்பநாட்டு மறவர் சங்கம் நடத்தியக்கூட்டம் இவற்றை முன்கூட்டியே அறிந்து உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கத்தவறியுள்ளது. மாறாக, நினைவுநிகழ்ச்சியை சீர்குலைக்க விரும்புவோரது திட்டத்தை நிறைவேற்றுகிற வகையில் அனைத்தும் அரங்கேறுவதற்கு காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது.

  17. முத்துராமலிங்கத்தை ஒரு வழிகாட்டியாகக் கொண்டு தேவர் சாதியினரில் ஒருவரும் முன்னேறியதாகத் தெரியவில்லை
    முத்துராமலிங்கத்தை ஒரு வழிகாட்டியாகக் கொண்டு தேவர் சாதியினரில் ஒருவரும் முன்னேறியதாகத் தெரியவில்லை தமிழகத்தில் தொடர்ந்து சாதிய வன்முறை இன்றளவும் தொடர்ந்து வரக் காரணமான துவக்கம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் – அரசியல் காரணங்களுக்காக கட்டமைக்கப்பட்ட ஒரு பொய்த்தேவு. தமிழகத்தில் தொடர்ந்து சாதிய வன்முறை இன்றளவும் தொடர்ந்து வரக் காரணமான துவக்கம். அவர் தேவர் சாதியினருக்குமே நல்ல முன்னுதாரணம் அல்ல. தொடர்ந்து தம் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருந்தவர். சாதியத்தை தேசிய சாயத்தில் கலந்தவர். ஈ.வெ.ரா போல சமூக சீர்திருத்தாவாதியோ, ராஜகோபாலாச்சாரியார், காமராஜர் போன்ற தேசிய அரசியல் முன்னோடியோ, அண்ணாதுரை போன்ற வெகு மக்கள் தலைவரோ, ராமச்சந்திரன் போல கூத்தாடியோ(entertainer) அல்ல. தன் சாதி மக்களைச் சுற்றி அவர் அமைக்கத் துவங்கிய சுவர் இன்றளவும் விரிவடைந்தும் வலுவடைந்து கொண்டும் இருக்கிறது. முத்துராமலிங்கத்தை ஒரு வழிகாட்டியாகக் கொண்டு தேவர் சாதியினரில் ஒருவரும் முன்னேறியதாகத் தெரியவில்லை. மற்ற சாதியினரின் மேல் குறிப்பாக தென்பகுதி தலித்துகளின் மேல் தங்கள் ஆதிக்கத்தை தொடர்ந்து நிலை நிறுத்த தேவர் சாதியினரின் ஆதிக்கச் சக்திகள் மு.ராமலிங்கத்தை தொடர்ந்து கல்லறையில் இருந்து எழுப்பிக் கொண்டிருக்கின்றன. ராமநாதபுர மாவட்டத்தில் பொதுத் தண்ணீரை திருடி விற்கிற கும்பல் இந்த சாதியைச் சேர்ந்ததுதான். அம்பேத்கர் மாதிரி தேர்ந்த அறிவாளியோ தன் சமூகத்தைச் சேர்ந்தவரை கல்வி சார்ந்த மேன்மைகளுக்கு இட்டுச் செல்பவரோ அல்ல. மு.ரா ஏற்படுத்திய தாக்கம் என்னவென்றால் தொடர்ந்து தலைமுறைகளுக்கும் அப்பால் தேவர் சாதியினரின் உடைபட்டுக் கொண்டிருக்கும் சாதிய அதிகாரத்தை வன்முறை மூலம் தற்காத்துக் கொள்ள ஒரு வரலாற்றுத் துவக்கத்தை உருவாக்கிக் கொடுத்தது மட்டுமே. தேவர் குருபூஜை என்பது RSS முறைகளில் ஒன்று. தமிழகத்தில் மிகப் பெரிய சமூக சீர்திருத்தம் பேசிய ஈ.வெ.ராவை நாம் அதிக பட்சம் பெரியார் என்று மட்டுமே அழைக்கிறோம். எந்தப் பெரும் தலைவருக்கும் (காந்தி உட்பட) நாம் குருபூஜை நடத்துவதில்லை. இவரை குரு என ஏற்றுக் கொள்கிற அரசியலே மிகத் தவறான போக்கின் துவக்கும். தேவர் சாதியினர் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ள எந்த விதத்திலும் தம் சமூகத்தை நாகரிகக் காலத்திற்கு வழிநடத்திச் செல்கிற ஒரு தலைவர் கூட இல்லாமல் செய்ததும் இவர் பங்களிப்பே. 2011ல், Acer laptop, Ubuntu OS, Google browser, Facebook, Unicode தமிழ் எழுத்துருவில் ஒரு நில உடமைச் சமூக சூழல் இன்றளவும் நிலவிக் கொண்டிருப்பதை எழுதுவதும் முத்துராமலிங்கத்தின் பங்களிப்பே.

    • He contributed thousands of volunteers to the Indian national army of Subash Chandra Bose,He also helped boost Kamaraj’s candidature by giving him a goat.

      He is thousand times better than Ramaswamy Naicker,Annathurai Mudaliar,Kamaraj nadar etc etc as he had no shame in being the leader of his caste,unlike others who cheat people by being british stooges and then later harm and fool people with empty promises and half baked speeches,he was an honest person who is highly respected by his people until today.

      All castes exist even today and receive alms from the government with their caste reservation certificate.

      and no technological development seems to have caused a problem.

    • சிவகுமார், உங்கள் கண்மூடித்தனமான பதிவிலிருந்து நீங்கள் யாதும் அறியாமல் மேஜையில் அமர்ந்துக்கொண்டு தன் கற்பனை குதிரையை தட்டிவிட்டு கருத்து பதிபவர் போலும்..

      *ஒட்டுமொத்த இந்தியாவில் முத்துராமலிங்கத்தேவர் மட்டுமே தன் சொத்துக்களை உழுதவனே எடுத்துக்கொள் என்று உயில் எழுதினார் (அதாவது 5 ஏக்கர் நிலம் உழுபவம் 5 ஏக்கர் நிலத்தையும் 2 ஏகார் உழுபவன் இரண்டு ஏக்கரையும் எடுத்துக்கொள்ளலாம் எவ்வளவு காலம்காலமாக உழைத்தானோ அவ்வளவும் உழுதவனுக்கே)இதில் அதிகம் நிலத்தை பெற்றது தலித்கள். கிராமங்கள் சிட்டவண்ணங்குளம், வீரசோழபுரம்,திருச்சூழி மற்றும் 11 கிராமங்கள்.முடிந்தால் திறமையிருந்தால் உண்மையை கண்டறியும் மனமிருந்தால் நேராடியாக விருதுநகர் மாவட்டத்திலிருக்கும் தலித்களிடம் விசாரனை செய்யாலாம்.இதுப்போன்று தன் சொத்துக்களை தலித்துக்களுக்கு எழுதிவைத்த எந்த தலைவரையாது இந்தியாவில் காட்டுங்கள் பார்க்கலாம் அம்பெத்கர் உள்பட..!

      *தேவருக்கு முதல் சிலை வைத்தது பிள்ளைமார்கள் கிராமமான சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லூரணி இந்த கிராமத்தினர் நிறைய பேர் ஐ.என்.ஏ சேர்ந்து தேசத்திற்காக சண்டையிட்டவர்கள்.நீங்கள் சொல்லும் கூற்று உண்மையெனில் பிள்ளைமார்கள் அதுவும் ஐ.என்.ஏவில் பணிபுரிந்தவர்கள் தேவருக்கு இறந்த 2 மாதத்திலேயே சிலை வைப்பார்களா?

      *தேவரை முழ்குமையாக புரிந்தால்தான் அவரை பின்பற்றி வளர்ந்தவர்களை பற்றி உங்களுக்கு தெரியும் , வெறும் தேவர் சாதி அரசியல் செய்யும் தேவர்சாதி பிழைப்புவாதிகளை வைத்து பசும்பொன் தேவரை நீங்கள் அளக்க நினைத்தால் அது தவறான கணிப்பாகவே போகும்.

      *காமராஜ் என்ற தனது பெயரை 1969ல் நடந்த நாகர்கோவில் இடைத்தேர்தலில் காமராஜ் நாடார் என மாற்றிக்கொண்டவர் உங்களுக்கு தேசியவாதியா? சாதியில்லை ஆனால் எல்லா சாதி மாநாட்டிலும் கலந்துக்கொண்ட ஈ.வெ.ரா உங்களுக்கு சீர்திருத்தவாதி? இதுதான் பகுத்தறிவு.. எதையும் ஆராயமல் எழுதினால் அடுத்த தலைமுறை உங்களை எவ்வாறு பார்க்கும் எனபதை உங்கள் சுய பரிசோதனைக்கே விட்டுவிடுகிறேம். காழ்ப்புணர்ச்சியால் கருத்து பதியாமல்..எதையும் அறிவுக்கொண்டு ஆராய்ந்து பதியுங்கள்!

  18. சாதி வெறியனின் குருபூஜைக்கு மலர் மாலை, அதை எதிர்த்து போராடியவனின் குருபூஜைக்கு துப்பாக்கிக் குண்டு
    கடந்த (11/09/2011) ஞாயிறன்று பரமக்குடியில் நடந்ததை கலவரம் என்கிறார்கள் சிலர். சாதிக்கலவரம் என்கிறார்கள் வெகுசிலர். காவலர்களைத் தாக்கியதால் துப்பாக்கிச்சூடு என்கிறார்கள். பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்து வன்முறை என்கிறார்கள். அனைவரும் சிந்திக்க மறுப்பவர்களா? அல்லது உண்மையைப் பேசுவதில்லை என சத்தியம் செய்தவர்களா? செய்தி ஊடகங்கள் அனைத்தும், காட்சி ஊடகங்களானாலும், அச்சு ஊடகங்களானாலும் கலவரத்தில் துப்பாக்கிச்சூடு ஏழுபேர் மரணம் என்று தான் தம் வாசகர்களிடம் பூசுகின்றன. காட்சி ஊடகங்கள் இன்னும் சற்று மேலே போய் பேருந்துக்காக காத்திருப்பவர்களை, தாங்கள் நெடுந்தொலைவிலிருந்து வந்து செய்வதறியாது பதைத்து நிற்கிறோம் என்று கூறவைத்து, கலவரத்தின் பாதிப்பாக காட்சிப்படுத்துகிறார்கள். ஆனால், அங்கு நடந்திருப்பது திட்டமிடப்பட்ட போலிமோதல் (என்கவுண்டர்) கொலைகள். வழக்கமான போலிமோதல்களில் குறிப்பிட்ட ஒருவரோ, பலரோ கொல்லப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிப்பார்கள். பரமக்குடியில் குறிப்பாக யார் என்பது முடிவு செய்யப்படவில்லை, அவ்வளவு தான் வித்தியாசம். கடந்த சில ஆண்டுகளாகவே இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்ட நாள் இம்மானுவேல் சேகரன் குருபூஜையாக தேவேந்திரகுல மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற குருபூஜைகள் சாதிவெறிக்கு எதிரான போராட்ட குணத்தை கூர்தீட்டும் என்றோ, ஆதிக்க சாதியினரை கேள்விக்கு உள்ளக்கும் என்றோ கூறிவிட முடியாது. ஒருவகையில் பார்ப்பனிய பண்பாட்டு விழுமியங்களுடன் நடக்கும் இதுபோன்ற குருபூஜைகள் அவர்களை இன்னும் சாதிய அமைப்புகளுக்குள் கண்டுண்டு கிடக்கச் செய்யவே உதவும். என்றாலும், முத்துராமலிங்கத்தின் குருபூஜை அரசு மதிப்புடன், குறிப்பிட்ட நாட்களுக்கு விடுமுறை அறிவித்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்தும் அரசே ஏற்பாடு செய்து நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. சாதிவெறிக்கு குறியடையாளமான முத்துராமலிங்கத்தின் குருபூஜையே அந்தப்பகுதி தேவேந்திரகுல மக்களின் பதைப்பையும், பாதிப்புகளையும் பொருட்படுத்தாமல் ஆண்டுதோறும் நடந்து கொண்டிருக்க; சாதிவெறி ஆதிக்கத்திற்கு எதிராக போராடி அந்த சாதி வெறியர்களாலேயே கொலையுண்டு போன இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அதே போல் ஏன் கொண்டாடக் கூடாது எனும் எதிர்ப்புணர்ச்சியின் காரணமாகவே இம்மானுவேல் சேகரன் குருபூஜை நடத்தப்படுகிறது. ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றாலே அதற்கு தகுந்த பாதுகாப்பளிப்பது அரசின் வேலை. சாதிவெறியின் அடையாளமான பசும்பொன் குருபூஜைக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்யும் அரசு, குறிப்பாகச் சொன்னால், ஓட்டுப் பொறுக்க உதவும் என்பதால் படம்காட்ட வரும் அத்தனை ஓட்டுப் பொறுக்கி தலைவர்களையும் ஒரே நேரத்தில் வந்தால் பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்று தனித்தனியாக நேரம் ஒதுக்கிக் கொடுத்து படம் காட்டச் சொல்லும் அரசு, வழிநெடுக தேவேந்திரகுல மீது தேவர் சாதிவெறியர்களின் சீண்டலை கண்டும் காணாமல் இருக்கும் அரசும் காவல் துறையும் ஜான் பாண்டியனை மட்டும் ஏன் கைது செய்து வரவிடாமல் தடுக்க வேண்டும்? சட்டம் ஒழுங்கு பூச்சாண்டி காட்டி இம்மானுவேல் சேகரனின் குருபூஜையை தடுத்து நிறுத்த வேண்டும். அதை முத்தராமலிங்கத்தின் குருபூஜைக்கு இணையாக வளரவிடக் கூடாது என்பது தான் தமிழக அரசின் நோக்கமாக இருக்கிறது. அதிமுக தேவர்சாதி ஆதரவுக் கட்சி என்பது அனைவரும் அறிந்தது தான். ஊழலுக்காக நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டு ஓபியை முதல்வராக்கியபோது, “நான் வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும் தேவர் சமுதாயம் மீது நான் எவ்வளவு பற்றுக் கொண்டிருக்கிறேன் என்பதற்கு ஓபியை முதல்வராக்கியதே சான்று” என்று வெளிப்படையாக அறிவித்தார் ஜெயா. ஓட்டுப் பொறுக்கி அரசியல் என்பதைத்தாண்டி சட்டமன்றத்திலேயே தன்னை ’பாப்பாத்தி’ என்று அறிவித்த ஜெயா, இயல்பாகவே ஆதிக்க சாதியின் மீது விருப்பும் தேவேந்திரகுலமக்களின் மீது வெறுப்பும் கொண்டவராகவே தன்னை எப்போதும் வெளிக்காட்டியிருக்கிறார். மட்டுமல்லாது, கடந்த தேர்தலில் தேவர்சாதியின் ஒரு பிரிவினர் திமுகவை ஆதரித்ததும், அவர்களை மீண்டும் அதிமுக வாக்குவங்கியாக தக்கவைத்துக் கொள்ளும் தேவையும் சேர்ந்துகொள்ள, கலவரபயத்தை விதைத்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எழுப்பி படிப்படியாக இம்மானுவேல் சேகரனின் குருபூஜையை இல்லாமல் செய்துவிட வேண்டும் எனும் நோக்கிலேயே இந்த போலிமோதல் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஜான் பாண்டியனை இரண்டு நாள் ஏன் தடுத்து வைத்திருந்தீர்கள்? ஏன் எந்த நீதிமன்றத்திலும் நேர்நிருத்தவில்லை? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. இப்போது, பரமக்குடி பகுதியில் ஒரு சிறுவன் சிலரால் கொல்லப்பட்டதற்கு ஆறுதல் தெரிவிக்க ஜான் பாண்டியன் அந்த வீட்டுக்குச் சென்றால் பதட்டம் ஏற்படும் கலவரம் வரும் என்று காரணம் கூறுகிறார்கள். இப்போது மட்டும் என்ன நடந்திருக்கிறது? ஜான் பாண்டியனை கைது செய்தால் சாலை மறியல் உள்ளிட்ட பிரச்சனைகள் எழும் என்று காவல் துறைக்கு தெரியாதா? ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பரமக்குடி பகுதியில் மூவாயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டதற்காக சாலை மறியல் செய்ததோ இருநூறு பேர். இவர்களை காவல் துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் ஒரு வாரமாக அங்கு காவல்துறை செய்தது என்ன? கூட்டம் கட்டுக்கு அடக்கவில்லை என்றால், எச்சரிக்கப்படும், தடியடி நடத்தப்படும், கண்ணீர்புகை குண்டுகள் வீசப்படும், ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தப்படும், அதையும் மீறினால் மாவட்ட ஆட்சியரின் அனுமதியின் பேரில் கால்களில் துப்பாக்கிச் சூடு நடத்தி அப்போதும் கலையவில்லை என்றால் வேறுவழியில்லாமல் மரண நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட வேண்டும். இப்போது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலையவில்லை என்பதால் துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்கிறார்கள். கொல்லப்பட்ட அனைவரும் மார்பிலும் தலையிலும் குண்டு தாக்கி இறந்திருக்கிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்பே ஆயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். முதலில் அமைதியாக சாலை மறியல் மட்டுமே நடந்திருக்கிறது. என்றால் அதை கலவரமாக மாற்றி துப்பாக்கி சூடு நடத்தும் அளவுக்கு கொண்டு சென்றது யார்? அப்போது காவல் துறை என்ன செய்து கொண்டிருந்தது? மாவட்ட ஆட்சியரிடம் துப்பாக்கிச் சூடு நடத்த முறைப்படி அனுமதி பெறப்படவில்லை என்பதும் தெரிகிறது. மேலே இருக்கும் படம் கற்களை குவித்து வைத்துக் கொண்டு காவல்துறையினர் வாய்ப்புக்கு காத்திருந்ததை தெளிவாகக் காட்டுகிறது. என்றால் இது திட்டமிடப்பட்ட போலிமோதல் கொலைகள் தான் என்பதற்கு இதற்கு மேலும் சான்றுகள் வேண்டுமோ? காஷ்மீரிலும், வடமேற்கு மாநிலங்களிலும் எப்படி மக்களைக் கொல்கிறதோ அதுபோலவே இங்கும் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கூறப்படும் காரணங்கள் வேறு, நடத்தப்பட்ட நாடகங்கள் வேறு. அங்கு அது தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இங்கு கலவரத்தை தடுக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. எங்கும் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக காட்டிக் கொண்டே அரசால் மக்களை கொன்று குவிக்க முடிகிறது, அதுவும் வேறு வழியில்லாமல்தான் நடவடிக்கை எடுக்க நேர்ந்தது என்று காட்டிவிட்டால் போதும், மக்களின் ஆதரவும் கிடைத்துவிடும் என்று தான் அரசுகள் எண்ணுகின்றன. அன்று மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது ஊர்வலம் நடத்தியவர்கள் பெண் காவலாளியை மானபங்கப் படுத்த முயன்றார்கள் என்று கூறப்பட்டது. இன்றும் காவல்துறை உயரதிகாரிகள் காயம்பட்டார்கள் என்று கூறப்படுகிறது. தங்கள் மீது கல்லெறி நடந்துவிட்டாலோ, காயம்பட்டுவிட்டாலோ, மக்கள் மந்தைகளைப் போல் சுட்டு வீழ்த்தப்படுவார்கள் என்றால் காவல்துறையை வெறிகொண்ட விலங்குகள் என்று கூறுவது எப்படி தவறாக இருக்க முடியும்? எப்போதுமே பிரச்சனையை திசை திருப்புவதே அதை நீர்த்துப் போகச் செய்வதற்கான உத்தியாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் எந்த ஓட்டுக்கட்சியும் இது குறித்து பேச மறுக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்டிருக்கிறது, துப்பாக்கிச் சூடு நடத்தாமலேயே கலவரத்தை அடக்கியிருக்க முடியும், இழப்பீட்டுத்தொகையை இன்னும் அதிகரித்துத் தரவேண்டும், விசாரணைக் கமிசன் போதாது சிபிஐ விசாரணை வேண்டும். சட்டசபையில் விவாதிக்க வேண்டும், தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும் இதுபோன்ற ஓலங்களைத்தான் எல்லா வண்ண ஓட்டுக் கட்சிகளும் ஒச்சமிட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் இரண்டு மாதகால முடிவில் அல்லது நீட்டப்படும் காலங்களின் முடிவில் விசாரணை அறிக்கை எப்படி இருக்கும் என்பதோ, அதன் பரிந்துரைகளுக்கு அரசு என்ன மதிப்பளிக்கும் என்பதோ யாருக்குமே தெரியாத ஒன்றல்ல. கயர்லாஞ்சிகளும், திண்ணியங்களும், இரட்டைக் குவளைகளும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலம் ஒடுக்கப்பட்டுக் கிடந்தவர்கள் சிறு அளவில் எதிர்ப்பைக் காட்டினாலும் இது தான் நடக்கும் என்று அரசு துப்பாக்கியை உயர்த்திக் காட்டுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை காலம்தான் இந்த ஓட்டுக் கட்சிகளின் ஒட்டப்பட்ட வாலாக இருப்பது என்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் முடிவு செய்தாக வேண்டிய காலம் இது.

    • நன்று. மக்களில் பெரும்பாலோர் மாக்களான(விலங்குகள்)பின்பு,முடிவு வேண்டுமென்றால் 80 உன்னதமான வீரர்களால் 80,000 படைவீரர்களை எதிர்த்து வென்ற கியுப வரலாறு இங்கு நிகழ்த்தப்படவேண்டும்.

    • நன்றி அரிகுமார்!நீங்கள் சொல்வது உண்மைதான்! அப்படியாயின் அவர்களை விமரிசிக்கும்போது அதை எல்லா பார்பனர் மீதான வெறுபாக, தாக்குதலாக நீங்கள் கருதக் கூடாது! பெரியாரை ஆதரித்த பார்பனர்கள் பலரை நான் அறிவேன்! அதற்காக ச்மூகநீதியை, சமத்துவத்தை ஒழிக்கநினைப்பவர்கள் எந்த போர்வையில் வந்தாலும் அவர்களை நாம் முறியடிக்க வேண்டாமா?

      • In Tamil Political spheres and especially here,Brahmin is as good as an untouchable.

        Every opinion or action of a person born to brahmin parents is vivisected and even a small shred of negativity or disagreement is focused upon as the primary thing.

        But the problem is a brahmin person in TN faces prejudice right from when is 4 years old and is mentally prepared to be resistant to everything.

        So in a way you all made them better than what they already were.

  19. பெரியார் அண்ணா காமராஜர் போன்று அனைவரும் ஏற்றுகொண்ட தலைவர் இல்லை மு ரா.கொலைகுற்றச்சாட்டில் உள்ளே போனவர் யாருக்கு குரு?எதற்கு அரசு செலவில் குருபூஜை?

  20. அப்பா சிவகுமரா…….இப்படி அசராமல் விமரிசனங்களுக்கு நாகரீகமாக பதிலடி கொடுக்கும் உனக்கு ஒரு சல்யுட்பா …….

  21. சிவகுமார், அதென்ன சலுகைக்கு மட்டும் பள்ளன் என்றும் போஸ்டருக்கு மட்டும் தேதேந்திரன் என்றும் பதிவு? பள்ளன் என்றால் கூச்சமா? தேவேந்திரர் என்றால் பெருமையா? இழிநிலையை எந்த மொழியில் எந்த பெயரில் அழைத்தாலும் அது இழிவு தானே?

    பறையரையும் சக்கிலியரையும் பள்ளர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பது வினவுப்போன்ற போலிகள் கண்மூடி தெரியாததுப்போல் இருக்கலாம் ஆனால் ஒரு பறையனும் சக்கிலியனும் உங்கள் போலித்தனத்தை எளிதாக உரித்துவிடுவான்.

    • பள்ளர் என்ற நாங்கள் தேவேந்திரர்கள் என்ற மாற்றம் போலியானது அல்ல சலுகைகளிருந்தும், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பெயரில் இருந்து விடுபடுவதற்கான ஒரு தொடக்கம்தான். இன்னும் சில காலம் கழித்து இந்த சலுகைகள் அரசாங்கத்தால் மறுக்கப்படலாம் அன்று எங்கள் மீது படிந்த தாழ்த்தப்பட்டவர்கள் என்ற நிலைமை மாறிவிடும் என்ற உத்தரவாதத்தை கொடுத்துவிட்டா அரசாங்கம் எங்களுக்கு சலுகைகளை மறுக்கும். எல்லாம் சரி தேவர் ஜாதி உயர்ந்த ஜாதி என்று பறைசாற்றிக்கொண்டு அரசின் சலுகைகளையும் பெற்றுக்கொண்டிருக்கிறீர்களே அது என்ன பகல் வேஷமா. குற்ற பரம்பரை என்று பெயர் மாற்றம் செய்வதற்கு பாடாய் பட்டீர்களே அது எதற்கு. அப்புறம் எங்களுக்கும் உங்களுக்கும் என்னதாங்க வித்தியாசம். ஒரு மண்ணும் கிடையாது. இதுதான் உண்மை.

  22. தமிழர் நாட்டின் வரலாறு தெரியாதோருக்கு இது தலித் பிரச்சனை. தமிழர் பற்றியும் தமிழின வரலாறு பற்றியும் அறிந்த்தவர்களில், தமிழர் அல்லாதோர் சற்று நடுங்குகின்றனர்; தமிழர் மண் பற்றி அறிந்தோரோ சற்று புருவம் உயர்த்தி ஆழ்ந்து நோக்குகின்றனர். நடுங்குவோர் ஆரிய-திராவிடர்.புருவம் உயர்த்தி பார்ப்போர் இம்மண்ணின் மீதும் மக்களின் மீதும் இணையில்லா பற்றும் பாசமும் கொண்ட தமிழினச் சான்றோர்.
    ஆம் .. இது ஆரிய-திராவிடருக்கும் தமிழினத்திற்கும் இடையே நடக்கும் மீண்டெழுதலின் முதற்போர். தமிழர் மண்ணிலே மூவேந்தர்களையும் முற்றிலும் ஒழித்து தமிழினத்தையே ஒடுக்கி தமிழர் மண்ணை சூறையிட்டு, இன்றும் தமிழர் மண்ணை ஆண்டுகொண்டிருக்கும் ஆரிய-திராவிட தெலுங்கு விஜய நகர கூட்டணிக்கும் தமிழினத்திற்கும் இடையே நடுக்கும் மண்ணுரிமைப்போரே இன்று இவ்வடிவம் கொண்டுள்ளது. அன்று முதல் இன்றுவரை தெலுங்கு-விஜய நகர கூட்டணிக்கு குற்றேவல் புரிந்த அதே கள்ளர்-மறவர்களே இன்றும் தமிழினத்தை ஒடுக்கும் கருவிகளாக ஆரிய-திராவிடரால் பயன்படுத்தப்படுகிறார்கள். இந்த ஆரிய-திராவிடர்கள் தமிழினத்தை ஒடுக்க எவ்வாறு கள்ளர்-மறவர்களை இன்று வரை யன்படுத்தி வருகிறார்கள் என்பதை வரலாற்றின் பக்கங்களை புரட்டினால் தெளிவாய் விளங்கும்.
    1. மூவேந்தர்களை வீழ்த்த தெலுங்கு-விஜய நகர கூட்டணிக்கு பேராதரவாய் இருந்தோர் கள்ளர்-மறவர் மற்றும் அகமுடையார்களே. அக்காலத்திலே இம்மொவருக்கும் இடையே இன்றுள்ளதுபோல எவ்வித உறவும் கிடையாது. அதனால் தான் இவர்களால் தெளுங்கர்களுக்குப்பின் ராமநாதபுரம்,சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற பாளையங்கள் விட்டுகொடுக்கப்பட்டன.(எனவே தான் அரசகுடிகளுக்கு எதிரான குடிகள் என்று இவர்கள் அழைக்கப் பட்டனர்.)
    2. 1890-களில் ஆடு திருடிய மறவர்களுக்கும், பறிகொடுத்த நாடார்களுக்கும் இடையே நடந்த மண்ணுரிமைப்போரில் ஆரியர்கள் கள்ளர்-மறவர்களை பின்னின்று இயக்கி தமிழினத்தை ஒடுக்கினர்.
    3. 1957-இல் ஈகியர் இம்மானுவேல் தேவேந்திரர் முத்துராமலிங்கத்தின் குற்றேவல் படையினால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து முதுகுளத்தூர் போரிலே கள்ளர்-மறவர்களுக்கு ஆரிய-திராவிடர்கள் உறுதுணையாய் இருந்தனர்.
    4. 1980-களில் மள்ளர்களுக்கும் கள்ளர்-மறவருக்கும் இடையே நடந்த மண்ணுரிமைப்போரிலே இதேபோல்தான் காவல் துறையில் உள்ள கள்ளர்களைக்கொண்டே கள்ளர்களுக்கு துப்பாக்கிகள் கொடுத்தும் , மள்ளர்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்தியும் தமிழினம் ஒடுக்கினார்கள் தெலுங்கு வடுகர்கள்.
    1995-இல் கொடியங்குளம் போரிலே காவல் துறையைச் சேர்ந்த 1000- கும் மேற்ப்பட்ட கள்ளர்களும் சென்னை அழகு செக்யூரிட்டி என்ற கள்ளரால் நடத்தப்படும் நிறுவனத்தில் பணி புரிந்த கள்ளர்-மறவர்கள் காவல் துறை சீருடை அணிந்தும் , தமிழர் மண்ணின் மைந்தர்களான மள்ளர்களின் மேல் பெரும் போர் புரிந்தனர். இங்கு தமிழினம் ஒடுக்க கள்ளர்-மறவர்களை இயக்கியது ஆரிய கூட்டம்(ஜெயலலிதா).
    1998-களில் நடந்த விருதுநகர் , ராஜபாளையம் போரிலே தமிழின மல்லர்களுக்கு எதிராய் நடந்த போரிலே கள்ளர்-மறவர்களுக்கு உறுதுணையாய் இருந்தவர்கள் தெலுங்கர்களே(ராஜூக்கள்). அவர்களை இயக்கியவர்கள் தெலுங்கு திராவிடர்களே(கருணாநிதி)..
    2011- பரமக்குடி போரிலே அதே கள்ளர்-மறவர்களை காவல் துறையாகக் கொண்டு மண்ணின் மைந்தர்களான மள்ளர்கள் எட்டு போரை சுட்டுக்கொன்றது ஆரிய கூட்டமே. இங்கும் தமிழினத்தை ஒடுக்க இவ்வாரிய-திராவிடர்கள் பயன்படுத்தியது கள்ளர்-மறவர்களையே.
    மேலே குறிப்பிட்ட அத்தனை போரிலும்(சிவகாசி போர் தவிர்த்து) ஆரிய-திராவிட தெலுங்கு விஜயநகர கூட்டணி தமிழினம் ஒடுக்கியது கள்ளர்-மறவர் கொண்ட குற்றேவல் படை கொண்டே.
    மேலே குறிப்பிட்ட அத்தனை போர்களிலும் இன்னும் சொல்லாமல் விட்டவற்றிலும் மள்ளர்கள் மட்டுமே தனித்து நின்று போர் புரிந்து உள்ளனர். பறையர்களோ அல்லது தெலுங்கு அருந்ததியர்களோ ஒருவர்கூட பங்கு கொண்டது இல்லை.பலியானதும் இல்லை. இது வரலாறு. ஏனைய சகோதர தமிழ்ச் சாதிகளுக்கும் மள்ளர்களுக்கும் என்ன உறவோ அதே உறவுதான் பறையர்களுக்கும் மள்ளர்களுக்கும்.
    ஒருங்கிணைந்த இந்திய ஒன்றியம் உருவானபோது தோன்றிய பட்டியல் சாதிகளுக்கான(SC) பிரிவில் மள்ளர்களும் சேர்க்கப்பட்டதனால் ஏனைய தமிழ்ச் சாதிகளிடம் இருந்து மள்ளர்கள் தந்திரமாய் பிரித்தாளப் பட்டனர்.
    தமிழின உறவுகளே .. தமிழினப் பகைவர்களும் துரோகிகளும் கூறுவதுபோல் இது ஒன்றும் தலித்துகளின் பிரச்சனை இல்லை. மூவேந்தர்களான மள்ளர்களுக்கும் தமிழினப் பகைவருக்கும் இடையே நடக்கும் மண்ணுரிமைப்போரே. உலகையே வெல்லும் ஆற்றல் கொண்ட தமிழினப் படை படைத் தலைவன் இன்றி தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஆரிய-திராவிடரை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட வலிமை கொண்ட மூவேந்தர் படையை இந்த ஆரிய திராவிடர் கள்ளர்-மறவர் எனும் சாரைப் பாம்புகளைக்கொண்டு காலைச் சுற்றச் செய்து உள்ளார்கள். ஆரிய-திராவிடர் எனும் யானை வேட்டைக்குப் புறப்பட வேண்டிய தமிழர் படையை கள்ளர்-மறவர் எனும் சாரைப் பாம்புகள் சுற்றிக்கொண்டிருப்பது தமிழினத்தின் பெருங்கேடே. தமிழர் தாயகம் மீண்டால் தான் தமிழீழமென்ன உலகெங்கும் தமிழினம் தலை நிமிரும். மூவேந்தர் படை எழும் நாள் வெகு தொலைவில் இல்லை. இது மீண்டாளத் துடிக்கும் தமிழனின் துடிப்பு.

    • பள்ளர் என்ற சாதியே கீழ்சாதி என்று சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டுகளில் உண்டு அ.மார்ஸ் தரும் ஆதாரம் இங்கே.மள்ளர் வரலாறு நூல் குறித்து – அ.மார்க்ஸ்

      http://amarx.org/?p=838

      பிற்கால சோழர்கள் கல்வெட்டிலேயே பள்ளு வரி என்றும் பள்ளத்தில் வாழும் குடியே சேரி என்றும் அவர்களே பள்ளர் என்றும் இருப்பது உங்களுக்கு யாரும் படிக்க காட்டவில்லையா..

      • மொத்ததில் ஆடையின்றி அம்மணமாகத் திரிந்த குரங்கிலிருந்து தோன்றிய காட்டுமிராண்டியே இன்றைய மனிதன்,பிரிவினையாம் பிரிவினை…திரிக்கப்பட்ட வரலாறுகளும்….திருந்தாதகாட்டுமிராண்டிகளும்….

  23. 1957 முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது.

    இந்தக் கூட்டத்தில், ‘இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?’ எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தலித்களின் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு ‘அமைதி திரும்பிட’வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தலித்களின் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.

    “என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?”
    எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடனே எதிர்க்கட்சிகள் காமராஜ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.

    அத்தீர்மான விவாதத்தின்போது, அமைச்சர் பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கையில் தேவர் அவர்கள் இம்மானுவேலைக் குறித்து என்ன பேசினார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது – “(சமாதான) மகாநாட்டிலிருந்து வெளியே வரும்போது சிறீ முத்துராமலிங்கத்தேவர், இம்மானுவேல் போன்ற பள்ளன் கூட எதிர்த்துப் பேசும்படியாக விட்டு விட்டீர்களே! என்று தம் ஆதரவாளர்களைக் கடிந்து கொண்டார்”. கடிந்து பேசிய அக்கோபமே, இம்மானுவேலை வெட்டிப் போட்டது.

    அதனை அடுத்து மூண்ட கலவரத்தின்போது கொண்டலாதி எனும் ஊரில் தலித் மக்கள் குடிநீர் கோரும் கிணற்றில் மண்ணெண்ணெய்யும், மனித மலமும் கொட்டப்பட்டன. தேவமார்கள் தன் சாதி மக்களை அடையாளம் கண்டு கொள்ள மஞ்சள் வேட்டி அணிந்து கொண்டு வேல் கம்புடன் போருக்கு செல்வது போன்று கும்பலாய் சென்று தலித்களின் வீடுகளையும், வைக்கோல் போர்களையும் கொழுத்தினர். 8 ஊர்களில் பெண்களைக் கற்பழித்தனர். பல ஊர்களில் தலித் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக விடப்பட்டனர்.

    இது சமயம், தேவர், மதுரை கோரிப்பாளையத்தில் தற்போது அவரின் சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்கிய அரசுக் குறிப்பு (நாள் 28/09/1957) கூறுவதாவது:- “ராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் முத்துராமலிங்கத்தேவரும் கலந்து கொண்டார். ஹரிஜனங்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஓர் ஹரிஜன் முன்வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் முத்துராமலிங்கத் தேவர் மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, முத்துராமலிங்கத் தேவரின் சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. “முத்துராமலிங்கத் தேவருக்குச் சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம்? என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டியபோது கேட்டார்.”
    (தலித்களுக்குத் தாம்தான் தலைவர் என்றும், தானே பல தலித்களுக்கு உதவி செய்திருப்பதாகவும், இம்மானுவேலை அவர்களின் தலைவராகத் தன்னால் ஏற்க இயலாதென்றும் தேவர், அக்கூட்டத்தில் கூறி இருந்தார். சாதி இந்து மனதில் ஆண்டாண்டு காலமாய் வேரோடிய சாதி வெறிதான் தலித்தின் தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறது. இதே போன்று தான், வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கரை, தீண்டப்படாதவர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்று காந்தி வாதிட்டார்.)

    இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.

    நீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் “ஒரு ஹரிஜன இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே! நீங்கள் மறவர்களா? என்று தமது ஆதரவாளர்களிடம் முத்துராமலிங்கத் தேவர் கூறியதை நான் கேட்டேன்” என்றார் அவர்.

    கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமராஜர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதம், தேவரின் பல பரிமாணங்களை சட்டசபைக் குறிப்பேடுகளில் பதிய வைத்துள்ளது. இனி, சட்டமன்றக் குறிப்பேடுகள் பேசட்டும்.
    உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் 26 அக்டோ பர் 1957 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து:
    “..The Government received petitions alleging several cases of lawlessness as a result of the inflamatory speeches by Sri.Muthuramalinga Thevar, inciting his followers to harass Nadars and Harijans….”

    கலவரத்தை நிறுத்திட கூட்டப்பட்ட சமாதான மாநாடு பற்றி அந்த அறிக்கை பின்வருமாறு சொன்னது:
    “Recognized leaders of the different communities were invited to attend this Conference. It is on record, Sir, that Sri Muthuramalinga Thevar who attended the Conference questioned the leadership of one Sri Emmanuel, Leader of the Local Depressed Classes League, who was representing the Harijans, Sri Thevar is reported to have asked Emmanuel whether he could pose as a Leader of the same stature as Sri Thevar, and whether his assurances on behalf of the Harijans were worth having.”

    “It is also learnt, Sir, that while coming out of the Conference, Sri Muthuramalinga Thevar chided his followers for allowing even Pallans like Emmanuel to talk back to him. The very next day, Sri Emmanuel was brutally murdered at Paramakudi.”

    முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஜாதிக் கலகத்தை விதைக்க வெறியூட்டும் பேச்சை எங்கெல்லாம் தேவர் பேசினார் என்பதை அவ்வறிக்கை பட்டியலிட்டது – இவ்வாறு: “On 16th September 1957 addressing a public meeting at Vadakkampatti, Sri Thevar refered to the communal strife raging in Mudukulathur and Paramakudi areas. Obviously the reference was to the incidents which had occured at Arunkulam, Keelathooval, Veerambal, Ilanjambur, Irulandipatti and Sandakottai between 10th and 16th September 1957”.

    கீழத்தூவலில் இம்மானுவேலைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்கப்போன போலீசாருடன் மோதிய மறவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பற்றி விசாரிக்க அனுப்பப்பட்ட எஸ்.வெங்கடேஸ்வரன் I.C.S. முன்பு ஆஜராக வந்த மக்களை மிரட்டும் வகையில் தேவர், தனது காரினை விசாரணை நடந்த இடத்துக்கெதிரில் நிறுத்தி வைத்து அந்தக் காரிலே அவர் இருந்த செயலையும் பக்தவச்சலத்தின் அறிக்கை அம்மணமாக்கியது.

    “In connection with the enquiry by Sri. S. Venkateswaran I.C.S. into the Police firing at keelathooval village through Sri Thevar had orally announced that he and his party would not take part in the enquiry, he seated himself in a car at the entrance of the building where the enquiry was held. This had the effect of preventing witness coming forward to tender evidence which might clash with Sri. Thevar’s contentions.”

    திமுக உறுப்பினர் டாக்டர் சத்தியவாணிமுத்து அம்மையாரின் பேச்சில், 1937 தேர்தலில், ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றபோது தனக்கு வாக்களிக்காத ஹரிஜனங்களுக்கு அவர் (தேவர்) செய்த பயங்கரக் கொடுமைகள் குறித்தும், அதற்காக அவர் மீது மதுரை அடிஷனல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த விசாரணையும் வெளிப்பட்டது. டெபுடி தாசில்தார் சிதம்பரம் முதலியாரின் கால் வெட்டப்பட்டதும், சப்-மாஜிஸ்திரேட் ஒருவர் கொல்லப்பட்டதும் தேவரின் தூண்டுதலால் நடந்தது என்பதும் சட்டமன்ற விவாதத்தின்போது வெளியானது.

    திமுக எம் எல் ஏ அண்ணாதுரை பேசும்போது ‘முத்துராமலிங்கத் தேவர் 1933ஆம் வருஷத்திலிருந்தே பாண்டிய மண்டலத்தில் சாதித் துவேஷம் வளர்க்கக் கூடிய வகையில் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்’ எனக் குறிப்பிட்டார்.

    முதுகுளத்தூர் கலவரத்தில் ஆதிக்க சாதி வெறி தேவர்களிடம், வெட்டுப்பட்டு சாகும்போது கூட தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் அளவிற்கு சாதி வெறி உச்சத்திற்குப் போய் இருந்தது. கலவரத்தில் வெட்டுப்பட்டு சாகப்போகும் சமயத்தில் முத்துராமன் சேர்வை என்ற மறவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. ஒரு மனிதன் சாகும்போது சொல்லும் வார்த்தைகள் பொதுவாக உண்மையாக இருக்கும் என்பது உலகத்தாரிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. முத்துராமன் சேர்வையின் மரண வாக்குமூலத்தை அன்றைய உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் வெளியிட்டார் ” நான் ஒரு அரிஜன். அரிஜன வீட்டை நானே கொளுத்தினேன்”. அந்த நபர் செத்த பிறகு, பிணத்தை வாங்க வந்தவர்களோ மறவர்கள். இவ்வாறெல்லாம் சாகும்போது கூட ஒருவன், தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் படி, சாதி வெறியேற்றிவிடும் அளவிற்கு அவர்களின் அன்றைய தலைவர் இருந்தார்.

    முதுகுளத்தூர் கலவரம் ஆரம்பமாகும் முன்,முத்துராமலிங்கத் தேவர், தன் சாதி மக்களிடம், “தேவர்கள் தேவர் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டுமென்றும்”,”நாடார் கடைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்றும்” கூறி இருந்தார். இப் பேச்சு, ராம.கோபாலன் வெறியேற்றிவிடும் “இந்துக்கள், இந்துக் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டும்” எனும் பேச்சுடன் மிகச் சரியாகப் பொருந்துகிறது.

    **********************கேப்பை, நெய், கேனைப்பயல்கள் மற்றும் தேவர்:

    இரண்டாம் உலகப் போரில் மர்மமான முறையில் மாண்டுபோன நேதாஜியை, ‘அவர் சாகவில்லை, மறைவாய் வாழ்கிறார்’ என்று கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வதந்தி ஒன்று மக்களிடையே பரவி இருந்தது. அதனை ஊதி ஊதிப் பெருக்கி விட்டவர்களில் தேவரும் ஒருவர். தாம், 1950 இல் கொரியப் போரின்போது கொரியா சென்றிருந்ததாகவும் அப்போது நேதாஜியை சந்தித்ததாகவும் கூறிவந்தார். வட தென் கொரியப் போரில் நேதாஜி பங்கெடுத்ததாகவும், தேவரும் அப்போரில் ராணுவப் பயிற்சி எடுத்ததாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

    அவருடைய பேச்சுக்கள் பல இடங்களில், எதைச் சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள் எனும் அதீத நம்பிக்கையால் வெளிப்பட்டிருக்கும்.

    உதாரணமாக ஒரு கூட்டத்தில் தேவர் “வரும் அக்டோ பர் 28 அன்று யாம் செந்திலாண்டவருடன் சேவற்கொடியேற்றி, வேல் கைப்பிடித்து, மயிலாசனத்தில் வானத்தில் தரிசனம் கொடுப்போம். அப்பொழுது, சென்னை செண்ட் ஜார்ஜ் கோட்டையில் குண்டு வீசி, காமராஜரைக் கைது செய்வோம். பின்னர், டில்லி செங்கோட்டையில் குண்டு வீசி, நேருவைக் கைது செய்வோம்” என்று பேசியதையும்,

    “இதோ 50 லட்சம் பேர் கொண்ட படையுடன் நேதாஜி வருகிறார்” என்றும், “திபெத்தில் நேதாஜி நுழைந்து விட்டார்” என்றும்,
    “நேபாளில் சுதந்திர சேனை”, “சிங்கியங்கில் நேதாஜி” என்றெல்லாம் அளந்து வந்ததையும் என்.ஆர்.தியாக ராஜன் எனும் எம் எல் ஏ சட்டசபையில் பேசி இருக்கிறார்.

    “மடியில் அணு குண்டு(??) வைத்திருப்பதாகவும்”, “மூன்றாம் உலக யுத்தத்தை முதுகுளத்தூரில் ஆரம்பிப்பேன்(!!!)” என்றும் மேடையில் முழங்கிய தேவரின் பல சவடால்கள் விநோதமாய் இருக்கும்.

    “மாக்னெட் நோஸ் (காந்தக் கருவி) ஒன்றை வைத்து சமுத்திரத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் பனிக்கட்டி ஆக்கி விட முடியும், அதனால் கப்பல்கள் எல்லாம் அங்கங்கே ஸ்தம்பித்துப் போய்விடும் , இதன் மூலம் இங்கிலாந்து அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளை எல்லாம் நாம் பிடித்து விடலாம்” என்றும் சொன்ன தேவர், இப்படியாப்பட்ட மாக்னெட் நோசை, தன் மடியில் கட்டி வைத்திருப்பதாகவும் சொன்னதுதான் விசேசம்.

    இம்மாபெரும் தலைவர், பல முறை மக்களால் பயம் கலந்த பக்தியுடன் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்யப்படுவதை எதிர்த்தவாறுதான் இருந்து வந்துள்ளார்.

    காமராஜரின் காலகட்டத்தில் பட்டி தொட்டி எல்லாம் பள்ளிக்கூடங்கள் பெருகியபோது “பள்ளிக்கூடம் எல்லாம் வந்தா எல்லா சாதிப்பயலுகளும் படித்து விட்டு, டவுனுக்குப் போயி இங்கிலீஷ் படித்து விட்டு, நம் ஜாதி ஆட்களுக்கு மரியாதை தராமல் இருப்பார்கள்” என யூகித்து, பள்ளிகள் வருவதை எதிர்த்து வந்தார்.

    சட்ட மன்ற உறுப்பினர் சிதம்பர பாரதியின் சட்டமன்ற உரை “அங்கே ரோடு வசதியைப் பெறுவதற்கு முயற்சி செய்யலாம் என்று கூறினால், “இல்லை. ரோடு வேண்டாம். ரோடு வந்தால் ரொம்ப ஆபத்து. நாங்கள் ஏதாவது கோபத்தில் சண்டையிட்டு அடித்துக் கொள்வோம். உடனே போலீசில் புகார் கொடுக்க மாட்டோ ம். பிறகு 4,5 நாட்கள் ஆனவுடன், நாங்களே பஞ்சாயத்து பண்ணிக் கொள்வோம். ஆகவே ரோடு வந்தால் ரொம்ப ஆபத்தாகிவிடும்” என்று தேவரின் ஆதரவாளர்கள் சொல்லியதிலிருந்தே, அவர் தொகுதியில் நடைபெற்ற வளர்ச்சிப் பணியின் யோக்யதை தெரிந்திருக்கும்.

    *****************இந்துத்துவத்திற்க்கு விளக்கு பிடித்த கதை:

    தேவரின் பல கருத்துக்கள், இந்து மதவெறிக் கட்சியினரின் கருத்துக்களோடு ஒத்துப் போகின்றன.
    “அரசியலுக்கு வரும்போது ‘அரசியல் வேறு மதம் வேறு. இரண்டையும் சேர்த்துக் குழப்புகிறார்கள்’ என்ற பேச்சு நடைபெறுகிறது. அரசியல் இல்லாமல் மதமில்லை. மதமில்லாமல் அரசியல் இல்லை. மதம் இல்லாத தேசம், வேரில்லாத மரம் போல. எந்தக் காற்றிலும் விழுந்து விடும்” என்றும் “இங்கே மதமும், அரசியலும் சேரக் கூடாதென்று சொல்லி இங்கிலீஷை காலேஜில் சொல்லிக் கொடுத்துக் கெடுத்தான்” என்றும் 1957 காஞ்சிபுரம் கூட்டத்தில் கூறி இருக்கிறார்.

    “சுதந்திரம் வாங்கிய பிற்பாடு நாட்டில் ஏற்பட்ட நிலைமை என்ன? பாகிஸ்தானிலே மாட்டிக் கொண்ட 1 1/2 கோடி மக்களின் கதி என்ன ஆயிற்று? அவர்கள் நடுச்சந்தியிலே நிறுத்தப்பட்டார்களே? சொத்தை இழந்து, வாழ்க்கை நிலைமை இழந்து, மனைவி மக்களை இழந்து அலறித் துடித்தார்களே? அதற்காக இங்கே இருக்கும் முஸ்லீம்களைப் பாகிஸ்தான் ஓடு என்று ஆச்சாரியார் கோஷ்டி (சூதறிஞர் ராஜாஜி-அழுத்தம் எமது)யால் விரட்ட முடிந்ததா? அல்லது அவர்களைத்தான் நீங்கள் “பாகிஸ்தான் பிரஜை போ” என்று சொல்ல முடிந்ததா?” என்று பால் தாக்கரே, அத்வானி போன்ற பாசிஸ்ட்கள் போன்று தேவர், சட்டசபையில் 1952 ஜூலை 3 ல் பேசி இருக்கிறார்.

    கோல்வால்கர், இந்து மகாசபைத்தலைவர் மதுரைக்கு வந்தபோது அவருக்கு பணமுடிப்புக் கொடுத்து சிறப்பு செய்ய ஏற்பாட்டை செய்தவர், முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அதற்காக அவர் சொன்ன காரணம்-“ஹிந்து மதத்தின் விரோதி மகாத்மா காந்தி. ஆதலால் தான் நான் கோல்வால்கர் அவர்களுக்குப் பண முடிப்புக் கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இசைந்தேன்.”

    காங்கிரசு உறுப்பினர் சுவாமி சகஜானந்தாவின் பேச்சில் வீராம்பல் ஊரில் நடந்த இரட்டைக் கொலைக்கான (கொல்லப்பட்டவர்கள் தலித்கள்) வேறொரு காரணம் வெளிப்பட்டது.”வீராம்பலில் எப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடந்திருக்கின்றன? அங்கே இரண்டு ஹரிஜனப் பையன்கள், தாங்கள் முஸ்லீம் மதத்தில் சேர வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே அவர்களுடைய பிரசிடெண்டையும் செக்ரெட்டரியையும் கொலை செய்து விட்டார்கள்”.

    ****************சட்டசபை உறுப்பினர் டி.எஸ்.ராமச்சந்திரன் (1957-62ல் உறுப்பினர்) முதுகுளத்தூர் பிராந்தியத்தில் பயணம் செய்தபோது, மறவர் குலப் பெண்கள், அவரிடம் கேட்ட கேள்வி “ஹரிஜனங்கள் முக்குலத்தாரைப் பெண் கேட்க வந்தார்களாமே? பெண் கேட்க வருவதற்கு அத்தனை துணிச்சலா?” என்பதாய் இருந்தது. இது அப்போதைய கலவரத்தில் பொது மக்களிடையே பரப்பப்பட்ட வதந்திகளில் முக்கியமான ஒன்று. அச்சம்பவத்திற்கு இது வரை ஆதாரம் ஏதும் கிடைக்காதபோதும், ஜாதி இந்து மக்கள் அவ்வதந்தியை இன்னமும் எளிதில் நம்பி உணர்ச்சி வசப்பட்டு, சாதிக் கலவரத்திற்கு தயாராகி விடுகின்றனர்.

    அப்படி என்ன வதந்தி அது?தேவரும், இம்மானுவேல் சேகரும், சமாதானக் கூட்டத்திற்கு வந்தபோது, இம்மானுவே, தேவர் முன்னால் சிகெரெட் பிடித்தபிடி, கால்மேல் கால் போட்டபடி சரி சமமாய் அமர்ந்தாராம். உடனே தேவரய்யாவுக்கு ஜிவ்வென்று கோபம் ஏறி “..க்காளி.. இவனுக எல்லாம் நம்ம கூட சரி சமமா வந்திட்டானுங்க..” என்றாராம். இது இம்மானுவேல் காதில் விழுந்ததும், அவரது ஆதரவாளர்களுடன் பழம்,பூவுடன் சென்று தலித் பையன் ஒருவருக்கு, தேவர் வீட்டுப் பெண்ணைக் கேட்டனராம். காரணம், தேவரே, இம்மானுவேலிடம், மைத்துனனிடம் பேசிடக்கூடிய வசைச்சொல்லான ‘..க்காளி’ என்பதனைப் பேசினாரே என்பதாம்.

    கலவரத்தில் எண்ணெய் வார்க்க இந்த வதந்தி பயன்பட்டது.

    இதே வதந்தி, சிற்சில மாறுபாடுகளுடன், 1989ல் போடி நாயக்கனூர் பகுதியில் ஜான் பாண்டியனை மையமாக வைத்துப் பரப்பப்பட்டு, கலவரத்தை விசிறி விட்டது.
    ****************
    சமீப காலகட்டங்களில் தேர்தல் கமிஷன் பல கெடுபிடிகளைப் போட்டு, பிரச்சாரத்தை இரவு பத்து மணியுடன் நிறுத்திடச் சொல்லியதும், சில கட்சி வேட்பாளர்கள், பத்து மணிக்கு மேல் பேசுவதை நிறுத்தி விட்டு வெறுமனே கைகளைக் கூப்பி வணங்குவதுடன் சென்று விடுகின்றனர். இதெல்லாம் ஏதோ புதுமை என்று எண்ணி இருக்கையில், 1952 தேர்தலுக்கு முன்பிருந்தே தேவர் இவ்வாறுதான் செய்திருக்கிறார். ஆனால் தேவரைப் பேச விடாமல் தடுத்தது தேர்தல் கமிஷன் அல்ல. அரசாங்கம். இவர் வாய் திறந்து பேசினாலே சாதி மோதல்தான் உருவானது. எனவே அரசு இவருக்கு வாய்ப்பூட்டு போட்டது.
    ஆனால் தேவர், 1957 முதுகுளத்தூர் கலவரத்தின்போதும், ‘மவுனமாகக் கைகூப்பும் முறையை’ கலவரத்தை தூண்டிவிட பயன்படுத்தினார். அறிக்கை ஏதின்றி வெறுமனே தேவரின் கைகூப்பிய முழுப்படம் ஒன்றை ‘தினமணி’ என்றெல்லாம் விளம்பரமாய்ப் பிரசுரித்ததோ, அன்றெல்லாம், கலவரம் உக்கிரம் பெற்றுள்ளது.

    இங்கு எண்ணற்ற ஆதாரங்களை தேவரின் சாதி வெறிப்போக்கிற்கான சான்றாகக் காட்டினாலும் தேவர் அபிமானிகள், ‘தேவர் தனக்கு சொந்தமாய் இருந்த எக்கச்சக்கமான ஏக்கர் நிலங்களை தலித்களுக்கு எழுதிக் கொடுத்தவர்’ என்று சொல்வது வழக்கமே. அவ்வாறு தேவர் நிலம் தந்தமைக்கு இருந்த உள்நோக்கத்தை அன்றைய அமைச்சர்கள் பக்தவச்சலமும், சி.சுப்பிரமணியமும் சட்டசபையில் போட்டு உடைத்துள்ளனர் ‘தனக்கு விசுவாசமாய் வாலாட்டும் ஓர் அடியாள் படையை தேவர் இவ்வாறுதான் உருவாக்கினார்’ என்று.

  24. தேவர் மீது மதுரை கிரைம் பிராஞ்சு போலிசார் தொடுத்த வழக்கின் (எம்.சி.நிர் 20/1939) தீர்ப்பு 5.6.1940 அன்று வெளியானது. மதுரை மாவட்டக் கூடுதல் மாஜிஸ்திரேட்டான எம்.ஏ. குற்றலலிங்கம் பிள்ளை அத்தீர்ப்பில் பின்வருமாறு கூறியிருந்தார்
    அவரை (ஸ்ரீ உ.முத்துராமலிங்கத் தேவரைத்) கடந்து செல்பவர்கள் ஆபத்தில்லாமல் தப்ப முடியாது. அவருக்கு விரோதமாகச் சாட்சி சாட்சி சொன்னார் அதனாலேற்படும் ஆபத்திலிருந்து தப்பிக்க தக்க சமயத்தில் போலீஸ் உதவி கிடையாதென்பதால் சாட்சிகள் முன்வரத் தயக்கமடைவதில் ஆச்சரியம் இல்லை. எதிர் மனுதாரர் மிகவும் ஆபத்தானவர் என்பதிலோ அல்லது ஆப்பநாட்டு, கொண்டையன் கோட்டை மறவர்களுக்குள்ளே மிகவும் அபாயகரமானவர் என்பதிலோ இருவித அபிப்ராயங்கள் இருக்க முடியாது. எதிர் மனுதாரர் கிரிமினல் குற்றங்களை வழக்கமாக செய்து வருகிறார் என்றும் சமாதான பங்கம் விளைவிக்க்க் க் ஊடிய குற்றச் செயல்களை தூண்டி வருகிறார் என்றும் உண்மையிலேயே அவர் பயங்கரமானவராகவும், ஆபத்தானவராகவும் இருப்பதால் அவரிடம் ஜாமீன் வாங்காமல் விடுவதால் சமுதாயத்துக்கு மோசம் ஏற்படுமாதலால் அவரிடம் நன்னடத்தை ஜாமீன் வாங்குவது அவசியமென முடிவு செய்கிறேன். ஆகவே இதற்கான ஆரம்ப உத்தரவை உறுதி செய்து ஒரு வருட கால நன்னடத்தை எதிர் மனுதாரர் ரூ.3000 க்கும் அதே தொகைக்கு வேறு இரண்டு நபர்களும் ஜாமீன் பத்திரம் எழுதிக் கொடுக்கும்படி உத்தரவு செய்கிறேன்.
    இந்த தீர்ப்பை எதிர்த்து மதுரை செசன்ஸ் கோர்ட்டில் தேவர் மேல் முறையீடு செய்தார். (நிர்.சி.ஏ) 87/1940) 3.9.1940 அன்று இதனை தள்ளுபடி செய்து நீதிபதி எஸ்.பி.தாம்சன் ஐ.சி.எஸ் அளித்த தீர்ப்பின் இறுதி பகுதி வருமாறு:
    “அப்பீல்தார்ரை மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் ஜாமீன் கொடுக்கும்படி உத்தரவிட்டிருப்பது முற்றிலும் நியாயமே. ரூ.3000/- க்கு அப்பீல்தாரர் ஜாமீன் பத்திரமும் அதே தொகைக்கு வேறு இரண்டு நபர்களும் ஜாமீன் கொடுக்கும்படி செய்திருப்பது அதிகமல்ல. தேவையான காலத்துக்கு தண்டனை ஜாமீன் வாங்க வேண்டுமென்று போலீசார் கேட்டிருக்கிறார்கள். இ.பி.கோ.112 வது செக்சன்படி உத்தரவிட்டுள்ள மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் ஒரு வருட கால நன்னடத்தை ஜாமீன் போதுமென கருதியிருக்கிறார். அதை மூன்று வருட காலமாக்கவில்லையே என்பது பற்றி ஆச்சரியப்படுகிறேன். அப்பீலை தள்ளுபடி செய்கிறேன்.”
    இந்த தீர்ப்பையும எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவர் மேல்முறையீடு செய்தார் (நிர். 1094/1940). இது தொடர்பாகத் தீர்ப்பளித்த நீதிபதி இலட்சுமணராவ், கீழ் நீதிமன்றங்களின் உத்தரவு சரிதான் என்றும் அதில் தலையிடுவதற்கு ஆதாரம் இல்லை என்றும் கூறி 28.2.1941 அன்று இம்மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.

  25. இரண்டாம் உலகப் போரில் மர்மமான முறையில் மாண்டுபோன நேதாஜியை, ‘அவர் சாகவில்லை, மறைவாய் வாழ்கிறார்’ என்று கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வதந்தி ஒன்று மக்களிடையே பரவி இருந்தது. அதனை ஊதி ஊதிப் பெருக்கி விட்டவர்களில் தேவரும் ஒருவர். தாம், 1950 இல் கொரியப் போரின்போது கொரியா சென்றிருந்ததாகவும் அப்போது நேதாஜியை சந்தித்ததாகவும் கூறிவந்தார். வட தென் கொரியப் போரில் நேதாஜி பங்கெடுத்ததாகவும், தேவரும் அப்போரில் ராணுவப் பயிற்சி எடுத்ததாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

    அவருடைய பேச்சுக்கள் பல இடங்களில், எதைச் சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள் எனும் அதீத நம்பிக்கையால் வெளிப்பட்டிருக்கும்.

    உதாரணமாக ஒரு கூட்டத்தில் தேவர் “வரும் அக்டோ பர் 28 அன்று யாம் செந்திலாண்டவருடன் சேவற்கொடியேற்றி, வேல் கைப்பிடித்து, மயிலாசனத்தில் வானத்தில் தரிசனம் கொடுப்போம். அப்பொழுது, சென்னை செண்ட் ஜார்ஜ் கோட்டையில் குண்டு வீசி, காமராஜரைக் கைது செய்வோம். பின்னர், டில்லி செங்கோட்டையில் குண்டு வீசி, நேருவைக் கைது செய்வோம்” என்று பேசியதையும்,

    “இதோ 50 லட்சம் பேர் கொண்ட படையுடன் நேதாஜி வருகிறார்” என்றும், “திபெத்தில் நேதாஜி நுழைந்து விட்டார்” என்றும்,
    “நேபாளில் சுதந்திர சேனை”, “சிங்கியங்கில் நேதாஜி” என்றெல்லாம் அளந்து வந்ததையும் என்.ஆர்.தியாக ராஜன் எனும் எம் எல் ஏ சட்டசபையில் பேசி இருக்கிறார்.

    “மடியில் அணு குண்டு(??) வைத்திருப்பதாகவும்”, “மூன்றாம் உலக யுத்தத்தை முதுகுளத்தூரில் ஆரம்பிப்பேன்(!!!)” என்றும் மேடையில் முழங்கிய தேவரின் பல சவடால்கள் விநோதமாய் இருக்கும்.

    “மாக்னெட் நோஸ் (காந்தக் கருவி) ஒன்றை வைத்து சமுத்திரத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் பனிக்கட்டி ஆக்கி விட முடியும், அதனால் கப்பல்கள் எல்லாம் அங்கங்கே ஸ்தம்பித்துப் போய்விடும் , இதன் மூலம் இங்கிலாந்து அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளை எல்லாம் நாம் பிடித்து விடலாம்” என்றும் சொன்ன தேவர், இப்படியாப்பட்ட மாக்னெட் நோசை, தன் மடியில் கட்டி வைத்திருப்பதாகவும் சொன்னதுதான் விசேசம்.

    இம்மாபெரும் தலைவர், பல முறை மக்களால் பயம் கலந்த பக்தியுடன் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்யப்படுவதை எதிர்த்தவாறுதான் இருந்து வந்துள்ளார்.

    காமராஜரின் காலகட்டத்தில் பட்டி தொட்டி எல்லாம் பள்ளிக்கூடங்கள் பெருகியபோது “பள்ளிக்கூடம் எல்லாம் வந்தா எல்லா சாதிப்பயலுகளும் படித்து விட்டு, டவுனுக்குப் போயி இங்கிலீஷ் படித்து விட்டு, நம் ஜாதி ஆட்களுக்கு மரியாதை தராமல் இருப்பார்கள்” என யூகித்து, பள்ளிகள் வருவதை எதிர்த்து வந்தார்.

    சட்ட மன்ற உறுப்பினர் சிதம்பர பாரதியின் சட்டமன்ற உரை “அங்கே ரோடு வசதியைப் பெறுவதற்கு முயற்சி செய்யலாம் என்று கூறினால், “இல்லை. ரோடு வேண்டாம். ரோடு வந்தால் ரொம்ப ஆபத்து. நாங்கள் ஏதாவது கோபத்தில் சண்டையிட்டு அடித்துக் கொள்வோம். உடனே போலீசில் புகார் கொடுக்க மாட்டோ ம். பிறகு 4,5 நாட்கள் ஆனவுடன், நாங்களே பஞ்சாயத்து பண்ணிக் கொள்வோம். ஆகவே ரோடு வந்தால் ரொம்ப ஆபத்தாகிவிடும்” என்று தேவரின் ஆதரவாளர்கள் சொல்லியதிலிருந்தே, அவர் தொகுதியில் நடைபெற்ற வளர்ச்சிப் பணியின் யோக்யதை தெரிந்திருக்கும்.

  26. 1952-57க்கு இடைப்பட்ட காலத்தில் முத்துராமலிங்கம், முதுகுளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆக இருந்தபோது பர்மா நாட்டிற்கு சென்றிருந்தார். அஞ்சாறு மாசமாய் ஆள் பர்மாவிலேயே இருந்து முருகன் புகழைப் பேசியபடியே இருந்து விட்டார். இங்கோ பெருமழையும் புயலும் வந்து ராமநாதபுரம் மாவட்டமே வெள்ளத்தில் மிதந்தது. நிவாரணப்பணிகள் எதனையும் செய்திடவோ, மேற்பார்வையிடவோ தேவர் அங்கில்லை. அமைச்சர் குழுவினர் முதல்வர் காமராஜ் தலைமையில் ஓடியாடி வேலைகளைக் கவனித்தனர். அச்சமயத்தில்தான் ஓர் ஊருக்கு சென்று மக்களை சந்திக்க காமராஜர் வெள்ளத்தில் நீந்திச்சென்ற சம்பவமும் நடந்தது. எல்லாம் முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியபிறகு ஒரு நாள் சாகவாசமாய் பர்மப்பயணம் முடித்த பின்னர், தேவர் ஊர் திரும்பினார். அவருக்கு வரவேற்பும் கொடுத்தார்கள் அவரது அடிப்பொடிகள். ஊர் மக்களிடம் கேட்டார் ” எல்லாப்பயலுகளும் வந்தானுங்களா? உதவி செய்யச்சொல்லி, நான் பர்மாவுல நேதாஜிகிட்டே (!! 1950களில்!!) சொன்னேன். அவரு டில்லிக்கு டிரங்கால் போட்டு நேருகிட்டே சொல்லிட்டாரு. அங்கிருந்து காமராஜ்கிட்டே உத்தரவு வந்து, நான் சொன்ன் வேலைகளைச் செஞ்சிருப்பாங்களே!”ன்னு ஒரே போடா போட்டாரு பாருங்க! அதுதான் முத்துராமலிங்க தேவரு.

    • மக்கள் நலனையே பார்க்கவில்லை என்றால் பின் எப்படி மீண்டும் மீண்டும் பாராளுமன்றத்திற்க்கும் சட்டசபைக்கும் ஒரு சேர அதிக வாக்குகளால் வென்றார். இதிலிருந்து உங்கள் கட்டுகதை அம்பலமாகிறது.

      1957ல் இந்தியாவிலேயே ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு செய்யப்படுகிறது அது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் அருப்புக்கோட்டை பாராளுமன்ற தொகுதி. நிறைய நாடார் காங்கிரஸ் கிராமங்களை கிராமங்களை சேர்த்தனர் இருந்தும் தேவர் பிரச்சாரத்திற்கு போகாமலே முன்னைவிட அதிக ஓட்டுகளில் 1957ல் வென்றார்.

  27. தேவரின் சாதிவெறிப்போக்குக்கு மற்றோர் சான்றைத்தருகிறேன். அறிஞர் அண்ணா, மதுரையில் ஓர் மேடையில் ஏறிப்பேசியிருக்கிறார். அதே மேடையில் தேவருக்கும் பேச அழைப்பு விடுக்கப்பட்டது. தேவர் கோபத்தின் உச்சிக்குப் போய் சொன்ன அந்த வாக்கியம் “தேவடியாள் மகன் ஏறிய சபையில் நான் கால்வைக்க மாட்டேன்”.
    (பின் குறிப்பு: அறிஞர் அண்ணா, தேவதாசி மரபின்பாற்பட்ட இசைவேளாளர் வகுப்பினர். அண்ணாவின் சாதியைப் பற்றி இருவேறு கருத்து நிலவினாலும், கண்ணதாசனின் ‘வனவாசம்’ நூல் தரும் சாட்சியம் அண்ணாவை, இசைவேளாளர் என்றே சொல்கிறது).

    இக்குறிப்பும் தேவரின் சாதிவெறி மனதைப் பகிரங்கப்படுத்துகின்றது

  28. ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு தேவர் சிறைக்கு சென்றார் என்று நீர் சுட்டிய குறிப்பில் இல்லையே. 1930களில் ஒத்துழையாமை என்பது கேலிக்கூத்தாக காங்கிரசால் நடத்தப்பட்டு, அது காந்தி-இர்வின் எனும் துரோக ஒப்பந்தம் மூலம் நின்றுபோனதும், இந்த ஆசாமிகள் வட்டமேசை மாநாடு போனதும், பின்னர் கொஞ்சக்காலம் ஒத்துழையாமை சடங்கு செய்து அதுவும் போய் ஜில்லாபோர்டு எலெக்சனில் பதவிக்கு சண்டைபோட்டதும் நாறிப்போன விசயம். 1936ல் ஜில்லாபோர்டு எலெக்சனுக்கு தேவர் பிரச்சாரம் செய்தார்- அதுதான் அவரின் ஆரம்பம்-தீவிர அரசியல் வேலையில்– ஒத்துழையாமையில் அவர் கைது செய்யப்பட்டதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. 1937ல் காங்கிரசு ஆட்சிக்கு வந்தபோது மகாலட்சுமி மில் ஸ்டிரைக்கில் தேவர், காங்கிரசு பிரதமர் ராஜாஜியாலேயே கைது செய்யப்பட்டார். அதுதான் முதல் கைதாக இருக்கும் என எண்ணுகிறேன். அல்லது, அதற்கு முன்பு, ஜட்ஜ் காலை வெட்டிய கேசிலோ, துணை தாசில்தாரைக் கொன்ற வழக்கிலோ அவர் ஜெயிலுக்குப் போயிருக்கலாம்.

    கொலைக்கேசிலும், அடிபுடி கேசிலும் செயிலுக்குப்போன ஆசாமிக்கு ஒத்துழையாமை வேசம் போட மேலும் சான்றுகளோடு வாரும். பார்க்கலாம்.

    • //1937ல் காங்கிரசு ஆட்சிக்கு வந்தபோது மகாலட்சுமி மில் ஸ்டிரைக்கில் தேவர், காங்கிரசு பிரதமர் ராஜாஜியாலேயே கைது செய்யப்பட்டார். அதுதான் முதல் கைதாக இருக்கும் என எண்ணுகிறேன்//

      நீர் வரலாற்றுப் பொம்மை புலி என்பதை நிரூபிக்கவேண்டாம் ..நன்றாக ஆராய்ந்து படித்துவிட்டு வாருங்கள்!

  29. முத்துராமலிங்கத்தேவர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் 1957 தேர்தலுக்கு சற்று முன்னர், கமுதி, முதுகுளத்தூர் வட்டாரங்களில் ‘தேவர்கள், நாடாரின் கடைகளில் சரக்கு வாங்கிடக் கூடாது. தேவர்கள், தேவர்களின் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்கிடல் வேண்டும்” எனும் நல்லிணக்கப் பிரச்சாரம் செய்து வந்தனர். இது குறித்து நாடார் சாதிப் பிரமுகர் வேலுசாமி நாடார் ஒரு புகார் தந்திருக்கிறார். 1957 கலவரத்தின்போது நடந்த சமாதானக் கூட்டத்தில் அனைத்து சாதிப்பிரமுகர்களும் கலந்து கொண்டனர். அதில் நாடார் தரப்பில் கலந்து கொண்டவர் வேலுசாமி நாடார் ஆவார். இவர் காங்கிரசுக்கட்சியில் இருந்தவர். கலவரத்தினை விசாரிக்க மத்தியமந்திரி வந்தபோது, ‘கடைகளில் சாமான் வாங்கக் கூடாதென்று’ இடைஞ்சல் செய்கிறார்கள் என்று வேலுசாமிநாடார் செய்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை என்று கூறப்பட்டது அப்போது.

    அன்று தேவர் சொன்ன ‘பகிஸ்காரத்தை’த்தான் சமூக அமைதியைக் குலைக்கும் இந்து மத பயங்கரவாதி ராமகோபாலன் செய்து வருகிறான்.

    • //‘தேவர்கள், நாடாரின் கடைகளில் சரக்கு வாங்கிடக் கூடாது. தேவர்கள், தேவர்களின் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்கிடல் வேண்டும்” எனும் நல்லிணக்கப் பிரச்சாரம் செய்து வந்தனர்.//

      இன்றும் அந்த கொடுமை நடந்துக்கொண்டிருக்கிறது. விவசாயிக்கு குறைந்த விலைக்கொடுத்து வாங்கி கடையில் பெரும் லாபம் வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு எதிரான போராட்டம் அதில் நாடார் மட்டுமல்ல தேவர்,செட்டியார்,ராவுத்தர் கடைகளும் அடக்கம். விவசாயிகளில் எல்ல சாதியினரும் தலித்களும் உண்டு. விவசாயிகளுக்கு நல்ல விலை வைத்துதர வேண்டும் எனபதே அந்த போராட்டம்.

      இன்றும் அந்த கொடுமை நடப்பதால்தான் “உழவர் சந்தை” வந்தது? இதுப்போன்ற திட்டங்கள் வகுக்க விவசாயிகளை காக்க இடைதரகர்களை ஒழிக்க தேவர் அன்றே பாடுபட்டார். –

  30. //தேவரின் சாதிவெறிப்போக்குக்கு மற்றோர் சான்றைத்தருகிறேன். அறிஞர் அண்ணா, மதுரையில் ஓர் மேடையில் ஏறிப்பேசியிருக்கிறார். அதே மேடையில் தேவருக்கும் பேச அழைப்பு விடுக்கப்பட்டது. தேவர் கோபத்தின் உச்சிக்குப் போய் சொன்ன அந்த வாக்கியம் “தேவடியாள் மகன் ஏறிய சபையில் நான் கால்வைக்க மாட்டேன்”.//

    சிவகுமார், நடந்த சம்பவங்களை எழுதி இதை குறிப்பிட்ட தைரியமில்லாமல் உங்களுக்கு சாதமாக பதிவிடுவது கோழைத்தனம்.

    கடவுள் மறுப்பு பிரச்சாரம் செய்துக்கொண்டு அதே வேளையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் வந்தட்கு மட்டுமல்லாமல் “ஆரிய திராவிடம் என்று எதுமில்லை எல்லாம் கலப்பாகிவிட்டது” என முத நாள் பேசிய ராஜாஜியின் பேச்சை மேற்க்கோள் காட்டி “ராஜாஜியின் பிறப்பிலே சந்தேகம் இருக்கிறது” என மீனாட்சியம்மன் கோவிலுக்குள்ளேயே பேசினார் அண்ணா. (இதற்கு அர்த்தம் என்ன பத்தினி மகன் என்றா அர்த்தம் வரும்)

    அதுமட்டுமல்ல அங்கு 6 வயது குழந்தை திருவாசகத்தை மனனம் செய்து மேடையில் ஒப்புவித்தது அதற்கு பரிசு கொடுக்க அழைக்கப்பட்ட அண்ணா கோவிலென்றும் பாராமல் “நல்ல வேளை இந்த குழந்தை இந்த யுகத்தை சேர்ந்தது இல்லையென்றால் இதை கடவுள் குழந்தை மீனாட்சியின் முளையில் வடிந்த பாலை குடித்த வளர்ந்த குழந்தை என்று சொல்லியிருப்பர்” என்று ஆபாசமாக பேசி கிண்டல் தோரனையில் குரல் உயர்த்தியது அண்ணா.

    இதை கண்டிக்க அன்று யாருமில்லை இதைப்போன்று மற்ற மத கோவிலுக்குள் சென்று அண்ணா பேசியிருப்பாரா இல்லை பேசினால் உயிருடன் விட்டுருப்பார்களா?

    அதை அன்று கண்டித்து திராவிட கொள்கை பேசும் இவர்களின் பாதங்கள் என் அன்னை மீனாட்சியின் புன்ணிய தளமான இத்த தளத்தில் பட அனுமதித்தது யார்? இன்னோரு முறை இது போன்றவர்கள் இங்கு அன்னையை அவமதிப்பார்களானால் அவர்களின் ரத்தததை என் அன்னை மீனாட்சியின் பாதத்தில் தெளித்துவிடுவேன்” என்றார். அதன்பின் மீனாட்சியம்மன் கோவிலுக்குள் சங்கதமிழ் கூட்டம் நடைப்பெறவில்லை.

    திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என பெரும் கூச்சலிடும் கூட்டங்களுக்கு முன்னோடியாய் அன்றே திராவிடத்தை ஓழிக்க பிள்ளையார் சுழிப்போட்டவர் தேவர்.

  31. //இரண்டாம் உலகப் போரில் மர்மமான முறையில் மாண்டுபோன நேதாஜியை, ‘அவர் சாகவில்லை, மறைவாய் வாழ்கிறார்’ என்று கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வதந்தி ஒன்று மக்களிடையே பரவி இருந்தது. அதனை ஊதி ஊதிப் பெருக்கி விட்டவர்களில் தேவரும் ஒருவர். தாம், 1950 இல் கொரியப் போரின்போது கொரியா சென்றிருந்ததாகவும் அப்போது நேதாஜியை சந்தித்ததாகவும் கூறிவந்தார். வட தென் கொரியப் போரில் நேதாஜி பங்கெடுத்ததாகவும், தேவரும் அப்போரில் ராணுவப் பயிற்சி எடுத்ததாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.//

    சிவகுமார், தேவர் சொன்னதில் உண்மையில்லை எனில் ஏன்? உங்கள் பிரமர் நேரு “ஷா நாவாஸ்கான்”
    கமிஷன் அமைத்து நேதாஜி பற்றிய விசாரனை செய்யவேண்டும் அங்கு விசாரனைக்கு தேவரை ஏன் அழைக்கவேண்டும்?

    ஒட்டுமொத்த இந்தியா தேவரின் சொல்லை ஏற்க்கொண்டது அதனால்தான் இந்திரா காந்தி கோஸ்லா கமிசன் மைத்தார். கல்கத்தா உயர் நீதிமன்ற ஆனைப்படி வாஜ்பாய் முகர்ஜி கமிசனை அமைத்தார்.

    தேவர் சொன்னதில் உண்மை இருந்ததால்தான் இந்திய அரசு மூன்று கமிசனை அமைத்தும் குழப்பமான முடிவையே சொன்னது.

    இந்த புத்தகங்களை படித்தால் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும் இருளில் வெளிச்சம் அடித்ததுப்போல் உண்மை புரியும்.

    “India’s biggest cover up” and “No secrets” – Anuj dhar

    படித்தால் தேவர் கூறி 62 ஆண்டுகளுக்கு பின்னும் ஏன் இன்னும் இது ஆராயப்படுகிறது என்பது புரியும்

  32. ஒரு பானை சோறுக்கு ஒரு பருக்கை பதம் போதமானதாக இருந்தாலும் பல பருக்கைகளை கொடுத்து விட்டீர்கள் சிவகுமார்.

  33. செப்டம்பர் 11: இந்த நாள் பலருக்கு பயங்கரவாதிகளால் அமெரிக்க இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்ட நாளாக நினைவிருக்கும். இன்னும் சிலருக்கு அமெரிக்கப் பயங்கரவாதத்தால் சிலி அதிபர் அலண்டே படுகொலை செய்யப்பட்டது நினைவு வரும். ஆனால் நம் நாட்டில், அதுவும் தமிழகத்தில் நடந்த ஒரு படுகொலையும், அதனைத் தொடர்ந்த கலவரமும் நம்மில் பலருக்கு தெரிந்திருக்குமா என்று சொல்லமுடியவில்லை. தனக்கு நிகராக எதிரில் அமர்ந்து, தன்னால் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படுவோரைத் தலைமை தாங்கி நடத்துகிறார் என்பதற்காக ஒருவர் கொல்லப் படக் கூடுமா? கூடும் என்கிறது தமிழக வரலாறு…

    துரோகத்தின் நூற்றாண்டும், தியாகத்தின் பொன்விழாவும்!

    • இந்த பக்கத்தை படித்தேன் அத்தனையும் அபத்தம் அதுவும் திருமாவளவன் தேவர் ஜெயந்தி சிறப்பாக நடக்க வேண்டும் என தீர்மாணம் நிறவேற்றப்பட்டதை சொல்லி சொல்லி பிண்ணுட்டம் முழுவதும் ஒரே அழுகை..கிருஷ்ணசாமி அதே நூற்றாண்டு விழாவில் தேவர்சிலைக்கு மாலைப்போட்டு மரியாதை செய்த புகைப்படமும் முகநூலில் உலா வருவது இவருக்கு தெரியாதா?

  34. நண்பர் சிவகுமார் அவர்களே, எல்லாவற்றிற்கும் ஆதாரத்தோடு நாகரிமாக விளக்கம் கொடுத்திருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். தேவர் சமுதாயத்தை பொறுத்தமட்டில் ஜாதி அவர்கள் சிந்தனையை மறைக்கிறது. முருகனை கண்ணால் பார்த்தேன் என்று சொல்லும் ஒருவரை தேவர் ஜாதியை சார்ந்த பகுத்தறிவாளர்கள் எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள். அவர் பொய்யானவரா இல்லை உண்மையானவரா என்று இப்போதிருக்கும் தலைமுறையினர் சிந்திப்பார்களா என்று தெரியவில்லை? முத்துராமலிங்க தேவர் தொகுதிக்கு செல்லாமலேயே வெற்றி பெற்றார் என்றும் தாழ்த்தப்பட்டவர்கள் எல்லோரும் அவருக்குத்தான் வாக்களித்தார்கள் என்றும் இன்று வரை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த காலத்தில் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சிறுபான்மையாக இருக்கும் ஒரு ஜாதியினரின் செயல்களை இவர்களுக்கு கொடுத்த மரியாதையாக இவர்கள் எடுத்துக்கொண்டால் என்ன சொல்வது? ஏதோ ஒரு காரணத்திற்க்காக முத்துராமலிங்க தேவருக்கு ஆதரவாய் இருந்த ஒரு பத்து தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் இவர் கூட்டி சென்று விட்டால் உடனே இவர் தாழ்த்தபட்ட மக்களுக்கு சம அந்தஸ்து கொடுத்து விட்டார் என்று அர்த்தமா?பயத்திற்கும், மரியாதைக்கும் வித்தியாசம் தெரியவில்லையா இவர்களுக்கு. இன்று வரைகூட தேவர் ஜாதி ஆதிக்கம் நிறைந்த இடங்களில் தாழ்த்தபட்ட மக்கள் அவர்களை சார்ந்து வாழவேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலை உள்ளது அதற்காக அந்த மக்கள் எல்லோரும் தேவர் இனத்தவர் மீது மரியாதை வைத்துள்ளார்கள் என்றா சொல்ல முடியும். உண்மைலேயே முத்துராமலிங்க தேவர் தாழ்த்தப்பட மக்களை மதித்திருந்தால் இன்று அவர் சமுதாயத்து மக்கள் முத்துராமலிங்க தேவர் ஒரு தேசிய தலைவர் என்று கூவி கூவி விளம்பரம் செய்கிறார்களே அந்த நிலைமை வந்திருக்காது. தேசிய தலைவர் என்று தகுதி அவருக்கு எப்போவோ யாரும் சொல்லாமலேயே கிடைத்திருக்கும். தேவர் சமுதாயத்தில் ஒவ்வொரு தலைமுறைகளுக்கும் அதற்கு முந்தினவர்கள் முத்துராமலிங்க தேவரை பற்றி சொல்லி ஜாதி வீரியம் குறையாமல் பார்த்துக்கொள்கிறார்கள். குறு பூஜை என்ற பெயரில் கால காலமாக இவர்கள் செய்தது இவர்களுடைய ஜாதி வலிமையை பறை சாற்றுவதற்குத்தானே. அதையே மற்றவர்கள் செய்தால் பொறாமை போட்டி என்கிறார்கள். கெஜட்டில் இப்படி ஒரு ஜாதி இருக்கிறதா என்று யோசிக்கும் அளவிற்கு உள்ள ஜாதிகள் கூட தங்களது உரிமைகளுக்கு போராடும் காலம் இது. அப்படி இருக்கையில் தேவேந்திரர்கள் பெரிய ஆதரவின்றி வினவு போன்ற பத்திரிக்கைகளின் துணையோடு சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட முன்னேற்றம் கண்டுள்ளார்கள்.இது மேலும் தொடரவும், ஜாதிகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் நமது பயணம் இருக்கவும் வாழ்த்துக்கள்.

  35. எண்.28 — சிவகுமார், அதென்ன சலுகைக்கு மட்டும் பள்ளன் என்றும் போஸ்டருக்கு மட்டும் தேதேந்திரன் என்றும் பதிவு? பள்ளன் என்றால் கூச்சமா? தேவேந்திரர் என்றால் பெருமையா? இழிநிலையை எந்த மொழியில் எந்த பெயரில் அழைத்தாலும் அது இழிவு தானே?

    பதில் – பள்ளர் என்ற நாங்கள் தேவேந்திரர்கள் என்ற மாற்றம் போலியானது அல்ல சலுகைகளிருந்தும், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பெயரில் இருந்து விடுபடுவதற்கான ஒரு தொடக்கம்தான். இன்னும் சில காலம் கழித்து இந்த சலுகைகள் அரசாங்கத்தால் மறுக்கப்படலாம் அன்று எங்கள் மீது படிந்த தாழ்த்தப்பட்டவர்கள் என்ற நிலைமை மாறிவிடும் என்ற உத்தரவாதத்தை கொடுத்துவிட்டா அரசாங்கம் எங்களுக்கு சலுகைகளை மறுக்கும். எங்கள் சமுதாயத்திற்கு போராடிய தியாகி இம்மானுவேல் சேகரனார் தாழ்த்தப்பட்ட சமுதாயமாக இருந்தாலும் கிறிஸ்தவர்கள் என்றால் சலுகைகள் கிடையாது என்று இந்திய அரசாங்கத்தால் சலுகை மறுக்கப்பட்ட பள்ளர் என்ற தேவேந்திரர். விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய ஜான்பாண்டியன் சலுகை மறுக்கப்பட்ட பள்ளர் என்ற தேவேந்திரர்தான். எல்லாம் சரி தேவர் ஜாதி உயர்ந்த ஜாதி என்று பறைசாற்றிக்கொண்டு அரசின் சலுகைகளையும் பெற்றுக்கொண்டிருக்கிறீர்களே அது என்ன பகல் வேஷமா. குற்ற பரம்பரை என்று பெயர் மாற்றம் செய்வதற்கு பாடாய் பட்டீர்களே அது எதற்கு. அப்புறம் எங்களுக்கும் உங்களுக்கும் என்னதாங்க வித்தியாசம். ஒரு மண்ணும் கிடையாது. இதுதான் உண்மை.

  36. தேவரை சுதந்திரப் போராட்ட வீரர் என்று புளுகும் செயல் பற்றி..

    தேவர், 1934க்கு பிறகுதான் காங்கிரஸ் கூட்டங்கள், மாநாடுகளுக்கு வர ஆரம்பிக்கிறார். அது அவரின் தவறும் இல்லை.. அப்போது அவரின் இளம்வயதைக் கணக்கில் கொண்டால், அது பெரிய தவறில்லைதான். காங்கிரசின் பெரிய போராட்டங்களில் ஒன்றான உப்புக்காய்ச்சும் சடங்கில் தேவர் கலந்து கொண்டதில்லை. நேரடியாக 1937 தேர்தலில் காங்கிரசு சார்பில் ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றார். அவர் வெற்றிபெற்றாலும், சில இடங்களில் ஓட்டுபோடாத தலித் மக்களைத் தாக்கிடத் தூண்டுதலாய் இருந்தார். இது சம்பந்தமான வழக்கில் தேவருக்கு பாதகமாய் தீர்ப்பு சொன்ன நீதிபதியின் கால் வெட்டப்பட்டது. ஒரு டெபுடி தாசில்தார் கொல்லப்பட்டார். வெள்ளைக்கார அரசு, தேவர் வாயைத்திறந்து பேசினாலே கலவரம் வருவதால் பேசக்கூடாது என்று உத்தரவு போட்டது. அதன் பின் காங்கிரசும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டபோதும் அதில் தேவர் கலந்து கொள்ளமுடியவில்லை. ஏனென்றால் அப்போதும் அவர் வாய்ப்பூட்டு சட்டத்தில் சிக்கி இருந்தார். அக்காலகட்டத்தில் தேவர் ஒரு மில் ஸ்டிரைக்கில் கலந்திருந்தார். அப்புறம், சி டி ஆக்டை (குற்றப்பரம்பரை சட்டம்) நீக்க வேண்டும் என்று ஒரு போராட்டம்.

    1947ம் வந்து விட்டது.. 1948, 1949 களில் ராமநாதபுரத்தில் சாதிக்கலவரங்கள்… தேவரும் பார்வர்டு பிளாக்கில் 1949ல் ஐக்கியமாகி விடுகிறார். இடைப்பட்ட காலத்தில் 1946 தேர்தலில் எம் எல் ஏ ஆகி, அட்டெண்டன்ஸ் இல்லாததால் தகுதி நீக்கம் ஆகி விட்டார்.

    இதுதாம் 1947க்கு முன் தேவரின் நிலை. இதில் தேவர் சுதந்திரப்போராட்டத்தில் எங்கே நிற்கிறார்?

  37. சுதந்திரப்போராட்டத்தில் தேவரின் விசுவாசம் எப்பேர்ப்பட்டது என்பதைப் பார்ப்போம்.
    காந்தி மீது பலருக்கு பலவகையில் விமர்சனம் இருப்பினும், அக்காலகட்டத்தில் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக சுதந்திரப்போரின்போக்கை மாற்றும் வலிமை, செயல்தந்திரம் காந்தியிடம் இருந்தது என்பதனை அனைவரும் ஒத்துக்கொள்வர். அவரின் இறுதிக்காலம், மதவெறி சக்திகளிடம் போராடுவதில் கழிந்தது என்பதும், இந்து மதவெறிக்கூட்டத்தின் துப்பாக்கிக்கு அவர் கொல்லப்பட்டதும் எண்ணற்பாலது. காந்தியிடம் கடும் கருத்துவேறுபாடு கொண்டிருக்கும் இடதுசாரிகளோ, அல்லது ஏனைய தேசியவாதிகளோ அவரின் கொலையை ஆதரித்திட்டதில்லை. ஆனால் தேவரய்யா காந்தியின் சாவைக்கூட கொச்சைப்படுத்திப் பேசியவர்தான். “இந்துக்கள் பட்ட கஷ்டங்களுக்கு அவர் செவிமெடுக்க மறுத்தார். அதனால்தான் அவரின் சாவு கூட தரமற்ற சாவாக இருந்தது”.. இது தேவரய்யா வசனம்.

    அடுத்து இன்னொரு காரியம் செய்துள்ளார். நாடே, காந்தியைக் கொன்ற கூட்டத்தை வெறுத்து ஒதுக்கும் வேளையில் அக்கொலைக்கூட்டத்தின் சகாவான கோல்வல்க்கரை மதுரைக்கு அழைத்து வந்து பொன்முடிப்பு கொடுத்து வாழ்த்திப் பேசினார் தேவர். அச்செயலை நியாயப்படுத்தி “காந்தி இந்து மதத்தின் விரோதி. எனவே கோல்வல்க்கருக்கு பணமுடிப்புக் கொடுக்க இசைந்தேன்” என்றும் கூறி இருக்கிறார்.

    சுதந்திரப்போரை எல்லா இடங்களிலும் காட்டிக்கொடுத்தும், பிரிட்டிஷ் காரனுக்கு மன்னிப்புக்கடுதாசி எழுதி எழுதியே கிலோக்கணக்கில் பேப்பர்களை வீணடித்த வீர சாவர்க்கர் பரம்பரையினருக்கு (வாஜ்பேயி கூட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்ட நபர்களை வெள்ளைக்காரனுக்குக் காட்டிக்கொடுத்த கயவாளிதான் என்பதை நாடே அறியும்) இந்துவெறிக்கும்பலுடன் கூடிக்குலாவிய தேவரய்யாவை சுதந்திரப்போர் தியாகி என்பது தகுந்த செயல்தானா?

  38. இம்மானுவேல் கொல்லப்பட்டதில் தேவரின் பங்கு என்பது உங்களது நம்பிக்கையைப் பொறுத்து ‘உண்டு’ (அ) ‘இல்லை’ என அமைவதில்லை என்பதையும், 1957ல் இச்சதி வழக்கில் தேவருக்கு எதிராக அரசுத்தரப்பில் வாதிட எந்த வக்கீலும் முன்வரமுடியாத அளவிற்கு கொலைமிரட்டல்கள் வக்கீல்களுக்கு வந்தன என்பதினையும் நினைவில் கொள்ளுங்கள்..

    துணிந்து வழக்காட வந்த எத்திராஜ் (எத்திராஜ் கல்லூரியை நிறுவியவர்) பல்வேறு மிரட்டல்களுக்கு ஆளாகினார். வழக்கு நடந்த புதுக்கோட்டை நீதிமன்றத்துக்கு எத்திராஜ், சென்னையில் இருந்து சென்று வரும்போதெல்லாம், ஆயுதப்போலீசார் அவருக்கு துணையாகச் செல்லவேண்டி இருந்தது.

    தேவருக்கு தூக்குக் கயிறை செய்யும் பெருமாள் பீட்டரின் சாட்சியத்தைக் குறுக்கு விசாரணை செய்யும் சூழலில், பல்வேறு இடைஞ்சல்களால், எத்திராஜ் மவுனமாகி நின்றதும், ஜட்ஜ் கேட்டபோது, ‘பீட்டரின் சாட்சியம் மட்டுமே தேவரின் இன்வால்வ்மெண்டை உறுதிசெய்யாது’ என சேம்சைடு கோல் போட்டுத்தான் தேவரய்யா கொலைச்சதியில் இருந்து தப்பினார். இவ்வழக்கில் ஏ.1 குற்றவாளியான தேவர் தப்பினாலும், ஏ3லிருந்து மற்ற குற்றவாளிகள் பலருக்கு ஆயுள் தண்டனை கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

  39. தேவரின் வாழ்நாளிலேயே அவர் செய்த பயனுள்ள செயல் சி.டி.ஆக்டை எடுக்கச்சொல்லி கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் போராடியதே. ஒரு சாதியினரையே ஒட்டுமொத்த குற்றப்பரம்பரையாக வெள்ளையன் வரையறுத்த அநீதியை அவர் அகற்றிட உறுதியாய் நின்ற ஒரு செயலை அனைவரும் பாராட்டவே செய்வர்.

  40. All Indians made peace and they did so because they had to survive,trying to the fight the brits would have made India a Zimbabwe/Eazham.

    Veer Savarkar was tortured in Andaman and he wrote what he wrote in a dire situation and want for survival,same with vajpayee.

    This is better than what Muslims did,have liasions with the brits.

  41. //’எலியும், பூனையும், நாயும் ஒரே தட்டில் சாப்பிடுவது போன்ற சர்க்கஸ். சாதி வெறியர்களுக்கு ஆதரவாக ஊர்வலமாம், கடையடைப்பாம், நிதி திரட்டாம், நீதி மன்ற வழக்காம்’ என்று எள்ளி நகையாடுகிறது ‘விடுதலை’ நாளிதழ், விசாரணையின் தீர்ப்பு என்ற தலைப்பில்.(12.10.1957)
    ஓட்டுக்காக என்று எல்லோரும் பயந்தபோது, கொஞ்சமும் கவலைப்படாமல் தந்தை பெரியார் தான் அன்றைய முதல்வர் காமராஜருக்கு ஆதரவாக இருந்தார். தைரியமாக களத்தில் இறங்கி, கலவரத்தை அடக்கிக் கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டையும் தேவர் கைதையும் முழுமையாக ஆதரித்தார். கீழத்தூவல் கலவரத்தின் போது போலீஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்யாவிட்டால் இருபுறமும் நூற்றுக்கணக்கான உயிர்கள் அழிந்திருக்கும். ஆதிதிராவிடர்களின் குடிசைகள் எரிந்திருக்கும் என கவலை கொள்கிறார் பெரியார்.//
    நன்றி! சிவகுமார்!

    • Periyar never had the balls to do his propoganda in southern tamizhnadu.

      Luckily Tirunelveli & Kanyakumari were spared of the nonsense of dravidian parties and more importantly without much naidus and reddiars,we were spared of silly politics.

  42. @சோழமள்ளன், நாயக்கர் ஆட்சிக்கு முன்புதானா அது; அப்படியே தேவேந்திரர்கள்தான் மூவேந்தர்கள் என்ற ஆதாரத்தையும் கொடுத்துடுங்க எல்லாரும் தெரிந்துகொள்ளட்டும்

  43. I have lot of family in kanyakumari,

    I believe neither the mukkulathor and nor the pallar are original moovendhar,from my opinion the mukkulathor are amongst the senior warriors of the army,so were the vanniyar.

    Vanniyar/Kallar were more prominent in the Chozha army and Maravar in the Pandyan army.

    Pallar are most likely a land holding community indulgent in agriculture,they are amongst the best of farmers.

    Our lands were leased and now owned by pallar and they are fine people.

    Maravar were warriors and thus had less land but after the vijayanagar invasion land holdings became important and the maravars became overlords of the pallars who lost their land ownership and ended up merely taking care of their own lands but this time without ownership.

    Nadar story is also similar and they are more native to kanyakumari and trivandrum.

    Pallars ll have to combat mukkulathor domination in their native lands but they should not try to provoke the maravars unnecessarily.

    It ll end up with loss of sometimes innocent and sometimes stupid lives.

  44. தங்களுக்குள் சண்டையிட்டு அழிந்து, ஒற்றுமையின்மையால் ஒழிந்து போன மூவேந்தர் புராணம் இப்போது எதற்கு? தற்பெருமைக்காக சாதி பெருமை பேசுவதை விடுத்து படித்து முன்னேறும் வழியை பாருங்கள் அய்யா! சாதி சண்டைகள் இன எதிரிக்குத்தான் சாதகமாகும்! இதில் குளிர்காய்பவபர்கள் யார்?

  45. பள்ளர்களே பாண்டியர்கள் — நிலை நாட்டும் நீதி மன்ற தீர்ப்பு
    ========================================================
    “செங்கோட்டையில் நடந்த பள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் இடையே தொடர் சாதிய மோதலையோட்டு 1920 கலீல் பாண்டியர் என்னும் பட்டம் தங்களுக்கே உருயதேன்ரும், பள்ளர்கள் தங்களைப் பாண்டியர் என்று அழைத்துக் கொள்ளக் கூடாதென்றும் மறவர்கள் சார்பாக திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட கொல்லம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். அந்த வழக்கில் செங்கோட்டைப் பள்ளர்கள் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட வளரார்று ஆவணங்கள், நிலா ஆவணங்கள், அரசுப் பதிவுகள் ஆகிய ஆதாரங்களை ஏற்று ‘பள்ளர்கள் தான் பாண்டியர்கள்’ என்று கொல்லம் நீதி மன்றம் தீர்ப்பு தந்துள்ளது.”

    Quilon District Court Judegement, Travancore State.
    நாவலாசிரியர் பூமணி (நேர்காணல்)

  46. சுந்தர பாண்டியன் கல்வெட்டு பற்றி அ.மார்க்ஸ் கருத்துக்கு அண்ணன் பதிலே கூறவில்லை. கொல்லம் தீர்ப்பை கொண்டு வந்துட்டார். அது பாண்டியன் பட்டம் தங்களை தவற மற்றவர் [பள்ளர்,நாடார்]போட்டுக்கொள்ள தடை விதிக்க மறவர் வழக்கு தொடுத்தனர். கோர்ட் தடை விதிக்க மறுத்து விட்டது.அன்றைய ஆங்கிலேய நீதிமன்றங்களின் நிலை பற்றி அனைவரும் அறிந்ததே அது கிறிஸ்தவ பாதிரியார் மற்றும் ஆங்கில ஆட்சியாளார் கட்டுபாட்டில் இருந்தது.கொத்து கொத்தாக மதம் மாறிய பள்ளர் மற்றும் நாடார்களுக்கு எதிராக நீதிமன்றம் எப்படி தீர்ப்பு சொல்லும்? தீர்ப்பின் நகல்தான் உங்களிடம் உள்ளதே ஸ்கேன் செய்து லிங்க் கொடுங்கள் அனைவரும் தெரிந்துகொள்ளட்டும்தடைவிதிக்க மறுத்ததா பள்ளர்தான் பாண்டியர் என்றதா என்று.

    • தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறியதால் கிடைத்த தீர்ப்பு என்று யோசித்து சொல்லியிருக்கிறீர்கள். ரெம்ப நல்லது. அப்படியே நீங்கள் தேவர்கள் பாண்டியர்கள்தானா, இல்லையா என்பதற்கும் காரணங்கள் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏன் என்றால் இன்றைய தேவர் ஜாதியினர் கடந்த கால தொழில் என்ன என்பது யாருக்கும் தெரியாதது அல்ல. அதனாலேயே இந்தியாவை ஆண்ட வெள்ளைக்காரன் அவர்களை குற்றபரம்பரை என்று அறிவித்ததும் பின்பு அது முத்துராமலிங்க தேவரின் முயற்சியால் நீக்கப்பட்டது என்பதும் தெரிந்த விஷயம்தான். ஆனால் என்ன இடிக்கிறது என்றால் பாண்டிய மன்னன் எப்படி இந்த குற்றபரம்பரையை சேர்ந்தவராக இருப்பார். அப்படி அது உண்மை என்றால் பாண்டிய மன்னர் களவு, அடியாள் வேலையையும் செய்தாரா? எப்படியோ போகட்டும் விடுங்கள் மனிதனை மனிதன் மதிப்பவனே உயர்ந்த பரம்பரையை சார்ந்தவன். அப்படி இல்லாதவன் எந்த அரச குல பாரம்பரியத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் மனிதனாக இருப்பதே வீண்.

  47. அய்யா சேர, சோழ, பாண்டிய, பல்லவ(இன்னும் பல பல..) இளவரசர்களே!எப்பொது ஆரியத்திற்கு பல்லக்கு தூக்கி,நம் மக்களையே அடித்து பிடிங்கி அராசாளநினைத்தீர்களோ அன்றே வீழ்ந்தது தமிழ் இனம்! கல் தோன்றி, மண் தோன்றாத காலத்தில் முன் தோன்றி, மூத்த குடி என பெருமை பெறும் தமிழ் மக்கள் உங்களுக்கெல்லாம் பல்லக்கு தூக்கி, பவிசை இழந்தது போதும்! இனிமேலாவது, தமிழன் என்ற சாதாரண மனிதனாக வாழவிடுஙகள்! மனிதன் சொல்வதை, செய்வதை பாருங்கள்! அவன் எந்த சாதி என்று ஏன் பார்க்கிறீர்கள்?

  48. அ.மா ர்க்ஸ் பற்றி அனைவருக்கும் தெரியும் நம் தமிழ் அறிவு சூழலில் குறிப்பிட தகுந்த ஆளுமை.சமூகம்,அரசியல் இலக்கியம் ஆகிய துறைகளில் தீவிரமாக இயங்கிவருபவர்.அவர் சுந்தரபாண்டியன் காலத்திய கல்வெட்டு குறித்தும்,அதில் பள்ளர் இழிசினர்[தாழ்ந்தவர்]என்று உள்ளது என கூறிய கருத்து குறித்தும் மள்ளர் அரசியல் பேசுபவர்கள் ஏன் பதில் கூறவில்லை? பாண்டியன் பள்ளர் இனத்தில் பிறந்தவன் என்றால் தன் இனத்தை பற்றி இழிவாக தனது கல்வெட்டிலேயே எழுத காரணம் என்ன? பதில் கூற ஆள் உண்டா?

  49. கனகராஜன் அவர்களே……அ.மார்க்சு பிற்போக்கு தனத்தில் எப்போதுமே முற்போக்கானவர்.இது அவரை பற்றீ அறிதந்தவர்களுக்கு தெரியும்…….சரி, பள்ளர் இழிவினர் என்றால் மற்ற சாதியினரை விட உடல் உறுப்புகள் எதுவும் குறைந்தவர்களா?…இல்லை உங்கள் உடல் உறுப்புகளை விட அவர்களுக்கு எதிலும் நீளம்-அகலம்-உயரம்- அதிகமா?…ஏன்யா உங்களுக்கு இந்த சாதி வெறி?…….பிறப்பினால் நீரும் நானும் ஒரே சாதீதான்.இதை புரிந்து கொள்ளாமல் அரைவேக்காடு மார்க்சுவை வேறு இழுக்கிறீர்.இலக்கிய உலகில் உமக்கு நண்பர்கள் யாராவது இருந்தால் அந்த ஆளைப்பற்றி கேட்டுப் பாரும்.

    • மெய்யன் ,”மீண்டெழும் பாண்டியர் வரலாறு” என்ற நூலில் மற்ற சாதிகளை திட்டி எழுதும் நீங்கள் முற்போக்குவாதிகள் அ.மார்க்ஸ் பிற்போக்குவாதியா? நல்ல கண்டுபிடிப்பு.பறையர் பாலியல் ஒழுங்கு அற்றவர் என்று எழுதிய நீங்கள் சமத்துவவாதிகள், நான் சாதி வெறியனா? இதுவும் நல்ல கண்டுபிப்பு.உங்கள் மூவேந்தர் புளுகை அம்பலபடுத்துவதே என் விருப்பம்.என் பின்னுட்டம் தங்கள் மனதை காயபடுத்தியிருந்தால் வருந்துகிறேன். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று உலகிற்கு முதலில் கூறிய தமிழ் இனத்தில் பிறந்ததற்காக பெருமை கொள்பவன் நான்

  50. சோழன் காலத்தில் பள் வரி மற்றும் பறை வரி என்பது கிடையாது. 14 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட அந்நியர் ஆட்சியில்தான் பள் வரி என்ற வரி இருந்தது.

    ஆதாரம்:

    […….மேலும் அவர்களுக்கு நிலம் கொடையாக வழங்கப்பட்டுள்ளது அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதனை சேதுபதிசெப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.
    பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208) பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்….ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242) பள்ளுப்பறை… சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451) பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது (மேலது, 528)]

    “பள்ளக்குடிக்கு வாசல் பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது”. http://ta.wikipedia.org/s/18sm

    இது எந்த மன்னர் காலத்தியக் கல்வெட்டுச் செய்தி என்று சொன்னால் நன்றாக இருந்திருக்கும். விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்துப் போட்டுவிட்டு, அதை தெளிவாக மறைத்து விடுகிறீர்களே!

    • சிவகுமார், \\14ம்நூற்றாண்டுக்கு பிற்பட்ட அந்நியர் ஆட்சியில்தான் பள்ளூவரி என்ற வரி இருந்தது//—14ம் நூற்றாண்டுக்கு முந்தைய கால கல்வெட்டு ஆதாரம் கொடுத்தால் பள்ளர் -பாண்டியர் இல்லை என்று ஒத்துக்கொள்ள தயாரா?

  51. தமிழ் இலக்கியங்கள் யாவிலும் ஏர்த்தொழிலையும், போர்த்தொழிலையும் குலத்தொழிலாகக் கொண்ட மருத நிலக் குடிகளான மள்ளர்களே மரபு பிறழாமல் பண்டையக் குலத்தொழிலோடும், பண்பாட்டு வழக்காறுகளோடும் மரபறியும் வகையில் தடம் பதித்து வாழ்ந்து வருகின்ற பள்ளர்கள் என்பதைப் பல்வேறு அறிஞர் பெருமக்கள் ஆய்ந்தறிந்து கூறியுள்ளனர். அவ்வறிஞர் பெருமக்களின் கூற்றுகள் உரைக்கும் உண்மைகள் வருமாறு:

    முனைவர் வின்சுலோ

    “இன்று தென்னகத்தில் வேளாண்மைத் தொழில் புரிந்து வரும் பள்ளர், மள்ளர் என்பதின் உச்சரிப்பு வேறுபாடு ஆகும்” என்கிறது வின்சுலோவின் தமிழ் ஆங்கில அகராதி (Dr.Winslow Dictionary pp.174).

    டி.கே.வேலுப்பிள்ளை

    “பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் மள்ளர் பிற்காலத்தில் பள்ளர் என வழங்கலாயினர்” என்கிறார் டி.கே.வேலுப்பிள்ளை. (T.K.Veluppillai, Travancore State manual 1940)

    முனைவர் சி.ஒப்பார்ட்

    “மள்ளர் பள்ளர் ஆனது உச்சரிப்பு வேறுபாடாகும்” என்கிறார் மேலை நாட்டு அறிஞரான சி.ஒப்பார்ட் (Dr.G.Hobart, Dravidians, The Original inhabitants of India, pp.101)

    ஞா.தேவநேயப் பாவாணர்

    “பள்ளர் என்பவர் மள்ளர், மருதநிலத்தில் வாழும் உழவர்” என்கிறார் மொழி ஞாயிறு பாவாணர் (செந்தமிழ்ச் செல்வி 1975 ஏப்ரல் வெளியீடு)

    ந.சி.கந்தையாப் பிள்ளை

    “பள்ள என்பது மள்ள என்பதன் உச்சரிப்பு வேறுபாடாகும். பண்டைய மள்ளரே இன்றைய பள்ளர்” என்கிறார் ந.சி.கந்தையா பிள்ளை (தமிழர் சரித்திரம் பக்.206 ). இக்கருத்தினைப் பண்டித சவரியாரும் வலியுறுத்துவார். இவ்விருவரும் யாழ்ப்பாணத்து அறிஞர்களாவர்.

    சேலம் மாவட்டக் குடிக் கணக்கு

    1961 ஆம் ஆண்டு எடுக்கப் பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேலம் மாவட்டம் கணக்கன்கிரி ஊர் பற்றிய கையேட்டில் “பள்ளர் என்பவர் மருத நில மக்களாகிய மள்ளர்” எனக் கண்டுள்ளது. (1961 Census of India, Vol.IX, Madras Part VI, Village Survey Monograph, Kanakkangiri Village, Salem District)

    கேரளா பண்பாட்டு வரலாற்று நிகண்டு – II

    எசு.கே.வசந்தன் என்பவரால் எழுத்தப்பட்டு,திருவனந்தபுரம், கேரள மொழிப் பயிற்சியகம் வெளியிட்ட கேரளப் பண்பாட்டு நிகண்டு பாகம் 2 பக்கம் 123 இல் பள்ளர் என்பவர் சங்க இலக்கியங்களில் மள்ளர் என அறியப்படுவதைத் தெளிவுபடுத்துகிறது.

    • சிவகுமார், \\ ஏர்த்தொழிலையும் போர்த்தொழிலையும் குலத்தொழிலாக கொண்ட மருத நிலகுடிகளான மள்ளர்களே\\–எப்படி காலைலே கலப்பையை பிடித்துட்டு மத்தியானம் வாளை பிடித்தார்களா? நீங்கள் பட்டியலிட்டதைவிட பலமடங்கு அதிக ஆவணங்கள் “வெள்ளாளரே” மருத நில நிலவுடமை சாதி என்று கூறுகிறதே தெரியுமா உங்களுக்கு?

Leave a Reply to Ajaathasathru பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க