privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்காமன்வெல்த் மாநாட்டிற்கு அனுப்பிய பிரதிநிதிகளை திரும்ப பெறு !

காமன்வெல்த் மாநாட்டிற்கு அனுப்பிய பிரதிநிதிகளை திரும்ப பெறு !

-

1. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்  ஆர்ப்பாட்டம்

இந்திய அரசே !
இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டிற்கு அனுப்பிய பிரதிநிதிகளை திரும்ப பெறு!

காமன்வெல்த் நாடுகளே !
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை நிறுத்து!
காமன்வெல்த்திலிருந்து இலங்கையை வெளியேற்று!

என்ற முழக்கங்களின் கீழ் மனித உரிமை பாதுகாப்பு மையம் 13.11.2013 அன்று மதியம் 1.45 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றம் ஆவின் வாயில் முன்பு உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னை கிளைச் செயலாளர் வழக்குரைஞர். மில்ட்டன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் துணைத் தலைவர் திரு. கினி இமானுவேல் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்ட முழக்கங்கள் :

காமன்வெல்த் மாநாட்டில்
இந்தியா பங்கேற்பதை
கண்டித்து ஆர்ப்பாட்டம்!

இலங்கை அரசு பாதுகாக்க
காமன்வெல்த் மாநாட்டை
இலங்கையில் நடத்த
ஏற்பாடு செய்து
இராஜபக்சேக்கு ஆதரவாக
ஆள்திரட்டும் இந்தியாவை
கண்டித்து ஆர்ப்பாட்டம்!

ஈழம் சிந்திய ரத்தம் கண்டும்
ஈழத்தமிழன் கண்ணீர் கண்டும்
மௌனம் ஏன்! மௌனம் ஏன்!

சர்வதேச சமூகமே!
கண்ணைக்கட்டி நிர்வாணமாய்
கொத்து கொத்தாய் கொலைசெய்த
இசைப்பிரியா பாலச்சந்திரன்
இளந்தளிர்களை கருக்கிய
இராஜபக்சே ஓநாயின்
சிங்கள கொலைவெறிக்கு
சாட்சியங்கள் போதாதா?

மன்மோகனும் இராஜபக்சேவும்
ஒருஉடலின் இருதலைகள்
இனப்படுகொலை குற்றவாளிகள்
மன்மோகன் இராஜபக்சேவை
தண்டிக்க போராடுவோம்!

மன்மோகனும் ராசபக்சேவும்…
வேறல்ல! வேறல்ல!

ஈழத்தமிழனை கொன்று குவிக்க
சிங்கள ராணுவம் கைகளிலே
இருந்ததென்ன! இருப்பதென்ன
இந்திய அரசு வழங்கிய
துப்பாக்கிகள்! ஆயுதங்கள்!

ஈழத்தமிழன் அழிவுக்கு
இனப்படுகொலைக் குற்றத்திற்கு
ராசபக்சே கொலையாளியென்றால்
மன்மோகன் அவன் பங்காளி!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

2. புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆர்ப்பாட்டம்

  • இந்தியா இலங்கையில் நடைபெற இருக்கும் காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது !
  • இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது !
  • காமன் வெல்த்திலிருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும் !

என்ற கோரிக்கையை முன் வைத்து 14-11-2013 அன்று புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் பு.ஜ.தொ.மு மாநில பொருளாளர் தோழர். செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பு.ஜ.தொ.மு. மாநில பொதுச் செயலாளர் தோழர். கலை கண்டன உரை நிகழ்த்தினார்.

இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை நடத்தப் போவதாக காமன் வெல்த் கூட்டமைப்பு அறிவித்த நாள் முதல் ஜனநாயக சக்திகளும், புரட்சிகர அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ள போதிலும், இந்திய அரசும், அதன் கூட்டாளியான சிங்கள இனவெறி பாசிச ராஜபக்சே கும்பலும், காமன் வெல்த் மாநாட்டை நவம்பர் 15 முதல் 19 வரை நடத்த திட்டமிட்டுள்ளன.

ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை குற்றத்திலிருந்து ராஜபக்சே கும்பலை தப்ப வைக்கும் நோக்கத்துடன் இந்த காமன்வெல்த் மாநாட்டை நடத்தி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ராஜபக்சேவிற்கு தலைமை பொறுப்பு கொடுத்து மகுடம் சூட்டும் கீழ்த்தரமான செயல் அரங்கேறிக் கொண்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் சூரியன் அஸ்தமனம் ஆகாத பிரிட்டனின் அடிமைகளாக இருந்த ஒடுக்கப்பட்ட நாடுகள் பிரிட்டனின் காலனியாதிக்கம் ஒழிக்கப்பட்ட பின்னர் தமக்குள் ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு அதற்கு காமென் வெல்த் என்று வெட்கமின்றி பெயர் சூட்டிக் கொண்டுள்ளனர். இதில் 54 நாடுகள் உறுப்பினராகவும் உள்ளனர்.

இப்பேர்பட்ட புகழ் கொண்ட காமன் வெல்த் அமைப்பின் மாநாடு தான் தற்போது இலங்கையில் நடக்கவுள்ளது. பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனமான ஏர்டெல் கம்பெனிதான் இந்த மாநாட்டின் புரவலர் என்பதிலிருந்தே மாநாட்டின் நோக்கத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். ஈழத்தை தனது பிராந்திய விரிவாக்க கொள்ளைக்காக ஒழித்துக் கட்டிய இந்திய ஆளும் வர்க்கக் கும்பல் இலங்கையின் தேயிலை, இயற்கை நறுமண பொருட்கள் முதற் கொண்டு கனிம வளங்களையும், கடல் வளத்தையும் முழுங்கும் நோக்கத்துடன் இந்த மாநாட்டை இலங்கையில் ஏற்பாடு செய்து நடத்துகிறது.

”எரிகின்ற வீட்டில் பிடுங்கியது வரை ஆதாயம்” என்பது போல ஈழத்தமிழரை கொன்றொழித்த சிங்கள பாசிச வெறிபிடித்த இலங்கையில் மறுநிர்ணயம் என்ற பெயரிலும், வளர்ச்சிக்கான முதலீடு என்ற பெயரிலும் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை முதலீடாக கொட்டத் துடிக்கின்றனர் பன்னாட்டு முதலாளிகள். உலக வர்த்தக கழகமோ, முதலீட்டுக்கான சூழல் சாதகமான ஆசிய நாடுகளில் இலங்கையை மூன்றாவது இடத்திலும், உலக அளவில் 81-வது இடத்திலும் அறிவித்துள்ளது. காமன் வெல்த் கூட்டமைப்பில் இல்லாத ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் தமது முதலீட்டை கொட்ட இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உல்ளன. இவை அனைத்தும் காமன் வெல்த் மாநாட்டின் யோக்கியதையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

இது மட்டுமின்றி அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், ஆகியோருடன் பல்வேறு இராணுவ ஒப்பந்தங்களையும் போட்டுக் கொள்ள துடிக்கின்றார் சிங்கள இனவெறியன் ராஜபக்சே.

இது ஒருபுறம் இருக்க, சிங்களர், தமிழர், மூர் என்று வெவ்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இலங்கையை பௌத்த சிங்கள நாடாக அறிவிக்கும் வகையிலும், சுடுகாடாக்கப்பட்ட தமிழ் ஈழ பகுதிகளில் சிங்கள குடியேற்றம், சிங்கள பெயர் மாற்றம், தமிழ் தேசிய, இன, கலாச்சார அழிப்பு என பாசிச வெறியாட்டம் போட்டு வரும் ராஜபக்சேவின் நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் கொடுத்து மெச்சவும் இந்த மாநாடு துணைபுரிகிறது.

2009 இறுதி யுத்தத்தில் இனப் படுகொலை செய்த குற்றங்களுக்கு மட்டுமின்றி, இன்று நடைபெறும் கார்ப்பரேட் மயமாக்கம், சிங்கள மயமாக்கம் என்ற குற்றத்திற்காகவும் இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்பது மட்டுமின்றி காமன் வெல்த் கூட்டமைப்பில் இருந்தே இலங்கையை நீக்கும் வகையில் இந்திய அரசை நிர்ப்பந்தித்து போராட வேண்டும்.

  • பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டைக் காடாக மாற்றி காலனி, அரைக்காலனி, நவீன காலனி நாடுகளை மறுகாலனியாக்க வெறியாட்டம் போடும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் ஒற்றைத் துருவ ஆதிக்க கனவையும் அதன் அடிவருடி கும்பலான பிரந்திய மேலாதிக்க வெறி பிடித்த இந்திய அரசின் சந்தைக்கான முயற்சிகளையும் தகர்த்தெறியும் வகையில் போராடுவோம்!
  • இந்திய அரசின் அலுவலகங்களை, நிர்வாக அமைப்புகளை, அதிகாரத்தை ஏற்க மறுத்து – முடக்குகின்ற வகையில் போராடுவோம்! அதற்கான போராட்டக் களமாக தமிழக புதுச்சேரி வீதிகளை, ஆலைகளை, கல்விக் கூடங்களை, கல்லூரிகளை மாற்றுவோம்! போர்க்குணமிக்க போராட்டத்தின் மூலம் இந்திய அரசை பணிய வைப்போம்.
  • காஷ்மீரிலும், அசாமிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் மக்களின் மீது தாழ்நிலை போரை நடத்திவரும் இந்திய அரசின் யோக்கியதையை, மனித உரிமை மீறல்களை போர்க் குற்றங்களை திரை கிழிப்போம்! ஈழப் போரில் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்களின் படுகொலைக்கு காரணமான ராஜபக்சே – மன்மோகன் – காங்கிரசை போர்க் குற்றத்திற்காக நூரம்பர்க் போன்றதொரு சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கும் வரையிலும், போருக்கு துணை நின்ற பா.ஜ.க., இடது – வலது போலிகள், சந்தர்ப்பவாத தமிழின பிழைப்புவாதிகள் உள்ளிட்டோரை மக்கள் வெறுத்து ஒதுக்கும் வரையிலும் போராடுவோம்!

என்ற கண்ணோட்டத்தில் அறைகூவல் விடுக்கப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
புதுச்சேரி

3. சென்னை சாஸ்திரி பவன் முன் ஆர்ப்பாட்டம்

  • இந்தியா இலங்கையில் நடைபெற இருக்கும் காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது !
  • இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது !
  • காமன் வெல்த்திலிருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும் !

என்ற கோரிக்கையை முன் வைத்து 14-11-2013 அன்று சென்னை சாஸ்திரி பவன் முன்பு புரட்சிகர அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண் :

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

4. காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கு – நெய்வேலியில் ஆர்ப்பாட்டம்

காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கையை வெளியேற்று,
இந்தியாவே மாநாட்டில் பங்கேற்காதே!

என்ற முழக்கத்தின் கீழ் நெய்வேலி மந்தாரகுப்பம் பேருந்து நிலையத்தில் கடலூர், விருத்தாசலம், நெய்வேலி பகுதியில் ஒருங்கிணைந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் 14.11.2013 அன்று மாலை 5.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி காவல்துறையில் மனு கொடுத்திருந்தும், அனுமதி மறுத்து தடை செய்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பு.மா.இ.மு அமைப்பாளர் குழந்தைவேல் தலைமை தாங்க, கடலூர் நகர பு.மா.இ.மு செயலாளர் கருணாமூர்த்தி, நெய்வேலி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர் சங்கர் கண்டன உரையாற்றினார். முடிவில் தோழர் பகத்சிங் நன்றியுரை ஆற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண் :

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
நெய்வேலி – கடலூர் – விருத்தாச்சலம்

5. மதுரை

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை