privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்நீயா நானா கோபிநாத் : இளைஞர்களை மொக்கையாக்கும் 2-ம் அப்துல்கலாம்..!

நீயா நானா கோபிநாத் : இளைஞர்களை மொக்கையாக்கும் 2-ம் அப்துல்கலாம்..!

-

ஸ்டார் விஜய் டிவியில் “நீயா நானா” நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமான கோபிநாத், “என் தேசம் என் மக்கள்” என்ற புதிய நிகழ்ச்சி மூலம் விலைவாசி உயர்வு முதல் கல்விக் கட்டண உயர்வு உள்ளிட்ட சமூக பிரச்சனைகளை அலசுவது என்ற பெயரில் இப்பிரச்சனைகளிற்கு அடிப்படை காரணங்களை அறியாமலோ மறைத்தோ விவாதத்தை நகர்த்தி இறுதியில் ஆகாசவாணி டைப் உபதேசங்களை அள்ளிவிடுகிறார்.

கோபிநாத்
கோபிநாத்

இத்தகைய கோபிநாத், “யூனிவர்செல் கடையில செல் வாங்குங்க, இந்த பிராண்ட் வேஷ்டி வாங்குங்க” என விளம்பரங்களில் நடிப்பது மூலம் மக்கள் தலையில் பொருட்களை திணிக்கும் சராசரி சினிமா, தொலைக்காட்சி ‘பிரபலங்கள்’ போலத்தான் என நினைத்துக் கொண்டு இருந்தேன்.

ஆனால் அவருடைய நிகழ்ச்சி வீடியோக்களை இணையத்தில் பார்த்த போது தான் அருகிலேயே ‘நீயா நானா புகழ் கோபிநாத் உரைகள்’ என பல பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுகி சிவம் போல ஆன்மீகத் தமிழில் அப்துல் கலாம் போல அட்வைசு மழையில் ஆற்றிய சொற்பொழிவுகள் பலவற்றை பார்க்க முடிந்தது.

சரி என்ன சொல்கிறார் என அவற்றில் சிலவற்றை பார்த்த போது பொருளாதாரம் முதல் சாதி, மதப் பிரச்சனை என மாணவர்கள் கவலைப்படும்படி ஒன்றும் இல்லை, ’பயம் வேண்டாம், பயம் வேண்டாம்’ என விசுவாசக் கூட்டம் நடத்தி வருவதை கண்டு அதிர்ந்தே போய் விட்டேன். கோமாளி அப்துல கலாமாவது, “நாடு வல்லரசு ஆக கனவு காணுங்கள் இளைஞர்களே” என்றார். ஆனால் நம்ம 2-ம் கலாம் கோபிநாத் அவர்களோ “கனவே (ஆணியே) காண வேண்டாம். ஆல்ரெடி நாடு வல்லரசாக தான் இருக்கிறது” என ஒரே போடாக போடுவதை பார்க்கும் போது என்ன கொடுமை சரவணா என கத்தணும் போலத் தோன்றியது.

பேச்சாளர் கோபிநாத்
அட்வைசு குண்டு மழை வீசும் சொற்பொழிவாளர் கோபிநாத்

வல்லரசு ‘ஸ்பெஷலிஸ்ட்’ அப்துல் கலாமே செல்ப் எடுக்காமல் தள்ளாடி வரும் போது கோபிநாத் மட்டும் எப்படி இன்றைய இளைஞர்களை மொக்கைகளாக்க முடியும். முடியாது என்பதை சில கல்லூரிகளில் சொற்பொழிவு முடிந்த பின் மாணவர்கள் எழுந்து கோபிநாத்தின் முகத்தில் அறைவது போல யதார்த்தமான கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்ததையும் வேட்டி கட்டியஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் பேசுவது போல பேண்டு போட்ட கோபிநாத் சந்தர்ப்பவாதமாக சமாளிப்பதை பார்க்க முடிந்தது.

பழனியில் 2011 அன்று சுப்ரமணிய பொறியியல் கல்லூரியில் கோபிநாத் கலந்து கொண்டு பேசியவற்றை பார்க்கலாம்.

கோபிநாத் உரை இந்த இணைப்பில் உள்ளது.

********************

“50 ஆண்டுகளாக இந்தியா செப்பனிடப்பட்டு, சரி செய்யப்பட்டு இன்று நம் கையில் கொடுக்கப்பட்டு இருக்கு, நம் எல்லோர் கையிலும் செல்போன். உலகிலேயே செல்போன் அதிகம் பயன்படுத்துவது இந்தியன், ஆனால் அதனை தயாரிப்பதில் ஒரு இந்திய நிறுவனம் கூட இல்லை. அதன் சேவைகளை வழங்குவதிலும் சொல்லும்படியான ஒரு இந்திய நிறுவனம் கூட இல்லை. நம்மையே தயாரிக்க வைத்து நம்மிடமே விற்பனை செய்கிறான். நாம் பயன்படுத்தும் அனைத்தும் வெளிநாட்டு பொருட்கள். பேசுகிறவன் தமிழன் , பேசுகின்ற மைக் மேட் இன் இந்தியா கிடையாது.

உலகின் மிகப் பெரிய ஆயுதம் அன்பும், அறிவும் தான். சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்தி என்ற கோவணம் மட்டும் கட்டிய தனி மனிதனுக்கு பின்னால் ஒட்டு மொத்த இந்தியாவும் சென்றதற்கு காரணம், காந்தி இந்த தேசத்தின் மீது, மக்கள் மீது வைத்திருந்த அன்புக்கு பிரதிபலனாகத்தான். அதனால் ஆயுதம் எதையும் செய்யாது. அன்பு மட்டுமே நிலைத்திருக்கும்.

நமது சூழ்நிலைக்கு பொருந்தாத பீட்சாவை விக்கிறான். நம்ம இட்லியை ஏன் அவன் நாடுகளில் மார்க்கெட் பண்ண முடியவில்லை. வேம்பு- மஞ்சள் என அனைத்துக்கும் நமக்கு காப்புரிமை இல்லை என எவனோ ஒருத்தன் விலை பேசுகிறான், அதைப் பற்றி கவலைப்படாமல் ஒரு நல்ல வேலை – வரதட்சணை வாங்கிக் கொண்டு ஒரு கல்யாணம்– ஊருக்கு வெளியே சொந்த வீடு – குழந்தை – அப்புறம் சாவு என நாம் இருக்கிறோம்.… இதெல்லாம் ஒரு வாழ்க்கையா?” –

பேச்சாளர் கோபிநாத்
பேச்சாளர் கோபிநாத்

இவையெல்லாம் 2-ம் அப்துல் கலாம் ஆதங்கப்பட்ட சில கருத்து முத்துக்கள். அத்தனையும் கோர்க்க முயலும் போதே புட்டுக்கொள்ளும் டப்பா முத்துக்கள்!

50 ஆண்டுகளில் செப்பனிடப்பட்டு, சரி செய்யப்பட்டு விட்ட நாடு என கோபி சொல்லுவது கடந்த 20 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட, கனிம வளங்களை கொள்ளையிட ஆயுதப் படைகளாலும் சல்வாஜூடும் போன்ற அரசின் கூலிப்படைகளாலும் பல லட்சம் பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட்டு ஒரு மிகப் பெரிய மக்கள் மீதான போரை நடத்தும் இந்திய நாட்டை!

காந்தி குறித்தும் அன்பு குறித்தும் வகுப்பு எடுக்கும் கோபிநாத் காஷ்மீரிலும், கூடங்குளத்திலும், தண்டகாரண்யாவிலும் யாருக்காக இந்திய அரசு அன்புடன் ஆயுதம் ஏந்தி போர் புரிகிறது என்பதை கூறவில்லை. அரசு மக்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கலாம். ஆனால் அதை எதிர் கொள்ள உழைக்கும் மக்கள் ஆயுதம் எடுக்கக் கூடாது என்று அன்று காந்தி சொன்ன அதே வார்த்தைகளைத் தான் இன்று கோபிநாத் கூறுகிறார். காந்தி செத்த பின்னரும் மக்களுக்கு எதிராக அவர் விட்டுச் சென்ற அகிம்சையின் துரோகம் தொடர்கிறது. ஹிம்சையைக் கூட மக்கள் தமது சொந்த அனுபவத்தில் புரிந்து கொண்டு பின்னர் எதிர்க்கத் துவங்குகிறார்கள். ஆனால் அஹிம்சைவாதிகளின் காயடிப்பைத்தான் அத்தனை சீக்கிரம் மக்கள் உணர்வதில்லை.

மஞ்சள், வேம்பு காப்புரிமை பறி போவதாக பதறும் கோபிநாத்துக்கு ஒரு இந்திய நிறுவனம் செல்போன் தயாரிப்பதுதான் முன்னேற்றத்துக்கான வழியாக தெரிகிறது. ஆனால் நம் நாட்டு வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் ஆட்சியாளர்களை குறித்து அவருக்கு எந்த குறையும் இல்லை. பாரதத் தாய் விற்கப்படும் அவலத்தை விட அவள் அணிந்து கொள்ளும் ஆபரணங்கள் குறித்துத்தான் இந்த கோட்டு சூட்டு கோபிநாத் கவலைப்படுகிறார்.

செல்போன் சேவையினை வெளிநாட்டு கம்பெனிகள் தான் வழங்க வேண்டும் என்ற கொள்கையின் காரணமாக பொதுத் துறை நிறுவனமாக VSNL-யை டாடாவுக்கு விற்றதையும், தொலைத்தொடர்பு துறையில் 74% அந்நிய முதலீட்டுக்கு திறந்து விடப்பட்டு அதுவும் போதாது என அதனை 100% ஆக்க வேண்டும் என தினந்தோறும் வேலை செய்து பி.எஸ்.என்.எல்-ஐ முழுவதுமாக அழித்த அரசின் சதி குறித்து கோபிநாத் என்ன சொல்கிறார்? தினமணியில் நடுப்பக்க கட்டுரை படிக்கும் ஒருவருக்கு தெரியக்கூடிய விஷயம் இந்தியாவின் சிறந்த ‘மீடியாபர்சன்’ என டாக்டர் பட்டம் வாங்கிய கோபிநாத்-க்கு தெரியாதா?

புதிய தலைமுறையில் வந்த பி.எஸ்.என்.எல்-ஐ அரசே அழித்த கதை இதோ

”நமக்கு என்ன கஷ்டம். உலகத்திலேயே நமது நாட்டில் தான் சீரான வெப்பநிலை, அறிவு, இயற்கை வளம் என அனைத்தும் இருக்கிறது. 3 வேளை சோற்றுக்கே இன்னும் எத்தனை நாளைக்கு பயந்து கொண்டு இருக்கப் போகிறீர்கள்? உலகத்துக்கே சோறு போடுவது எப்போது. நாம காப்பாத்தலைனா இந்த உலகத்தை யார் காப்பாற்ற முடியும்? இங்க உட்கார்ந்து இருக்கும் மாணவர்களை நான் எம்.எல்.ஏ, கவுன்சிலராக பார்க்கலை, இங்க இருப்பவர்களில் ஒருத்தர்தான் நாளை ஐ.நாவில் பேசப் போகிறார், பிரிட்டிஷ் அரண்மனையில் இந்திய ஜனநாயகத்தைப் பேசப் போகிறார். நமக்கு அந்த பெருமிதமும் – ஆணவமும் வேண்டும்.

இந்த வயதிலும் நம்ம தலைவர்கள் ஜீ 8 மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டேன் என்பது எந்த துணிச்சலில், பல ஒப்பந்தங்களில் கையெழுத்து போட முடியாது என கூறுவது எந்த துணிச்சலில். எல்லாம் உங்கள் மீதான் நம்பிக்கையில்தான்..

இந்தியாவில் படிப்பது என்பது 1980-ல் குடும்பத்தைக் காப்பாற்ற, 1990-ல் கிராமத்தைக் காப்பாற்ற, 2000 ஆரம்பத்தில் தேசத்தைக் காப்பாற்ற, ஆனால் இன்று இந்த உலகத்தைக் காப்பாற்ற. இதை நான் சொல்லவில்லை, பிரிக் ரிப்போர்ட் சொல்லுது. அடுத்த 7 ஆண்டுகளில் உலகில் இந்தியாவில் தான் இளைஞர்கள் அதிகமென்று.”

– ஸ்ஸ்ஃஃஃ செப்பா, இப்பவே கண்ணைக் கட்டுதே என்று அயர்ந்து விடாதீர்கள். இவையும் நமது 2-ம் கலாம் அள்ளி வீசிய அட்வைசு குண்டுகள்.

வார்டு கவுன்சிலராக மாறி ஒரு தெருவை மாற்றுவதற்கு பதில் ஐநா செயலர் ஆனால் ஒரே நாளில் உலகை மாற்றி விடலாம் என்று இவர் யோசித்திருப்பார் போலும்! காசா, பணமா? கனவைக் கூட கொஞ்சம் ரிச்சாகத்தான் காணுவார் போலும். ஐநாவின் யோக்கியதையை ஈரானிடமோ, இல்லை ஈராக்கிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளும் பணிவோ, பக்குவமோ இத்தகைய அமெரிக்க அடிமைகளுக்கு இருப்பதில்லை.

மூன்றில் ஒருவர் இரவு உணவு இல்லாமல் படுக்கப் போகும் இந்திய நாட்டு இளைஞர்கள் தான் உலகத்தை காப்பாற்ற வேண்டும் என்கிறார் கோபிநாத். நாட்டின் 77% மக்களின் தினசரி வருமானம் 20 ரூ என அரசின் புள்ளி விவரமே கூறும் நிலையில் இவர் போகச் சொல்வது யாரைக் காப்பாற்ற?

காட் ஒப்பந்தம் முதல் அணு சக்தி ஒப்பந்தம் வரை போட்டு நாட்டின் இயற்கை வளங்களையும், மக்கள் உயிரையும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு நித்தம் நித்தம் காவு கொடுத்து வரும் இந்திய ஓட்டுப்பொறுக்கி அரசியல் தலைவர்களின் சாதனைகள் போபால், விதர்பா, கூடங்குளம், ஈழம் என தொடர்வதை பார்க்கலாம். இதற்கெல்லாம் ஆதாரம் தேவையில்லை.

வால்மார்ட்டை ஏன் திணிக்கிறான், என்.எல்.சி-யை ஏன் விக்கிறான் என தினசரி பேப்பர் படிப்பவனுக்கு கூட இந்த ஆட்சியாளர்கள் குறித்த மாயை அகன்று வரும் நிலையில், கோபிநாத்துக்கு தெரியவில்லை என்றால், ஒன்று அவர் ரொம்ப நாளாக தூங்கிக் கொண்டு இருக்கிறார் அல்லது அவர் ஒரு அடி முட்டாள் என்று தான் அர்த்தம். ஆனால் அப்துல் கலாம் டைப் அறிவாளிகள் காமடியனா, இல்லை வில்லன்களா என்று பிரித்தறிவு கடினம். வில்லத்தனத்திற்கான காமடியன்கள் என்று வேண்டுமானால் அறுதியிடலாம்.

இந்தியாவில் படிப்பது என்பது சுதந்திரத்துக்கு முன்னர் ஆங்கிலேயனுக்கு தேவையான மூளையினை உற்பத்தி செய்யக் கூடிய மெக்காலே கல்வி என்றால் தனியார்மயம், உலகமயம் என்ற நாசகார கொள்கையினை மன்மோகன் சிங் 1991 புகுத்திய பின்னர் அது பன்னாட்டு கம்பெனிகளின் தேவைக்கான மூளையினை உற்பத்தி செய்யக்கூடிய நவீன மெக்காலே கல்வியாக இருக்கிறது. இதை கோபிநாத்- நடத்தும் நிகழ்ச்சிகளிலேயே மாணவர்கள் சொல்லி கதறி அழுகின்றனர். “மாநில அரசு மின்சார உற்பத்தியில் ஈடுபட முடியாது, ஏன்னா மன்மோகன் சிங் கொண்டு வந்த உலகமயக் கொள்கை அப்படி” என ஆவடி குமார் போன்ற அதிமுக அடிமைகள் பேசும் அளவுக்கு உலகமயக் கொள்கைகள் புளுத்து நாறும் நாட்டில், 3 வேளை சோத்துக்கு கூட இந்த படிப்பு ஆகிறது இல்லை என சிறார்களை வேலைக்கு அனுப்பும் நாட்டில் இருந்து கொண்டு தேச நலனுக்கான தலைவர்கள், உலகத்தையே காப்பாற்றும் படிப்பு என கோபிநாத் புரூடா விடுவது ஏனோ..?

”கேம்பஸ் இண்டர்வியூ கலந்து கொண்டு வேலை வாங்கினால் மட்டும் போதாது, 3 ஆண்டுகளில் ஒரு கம்பெனியை ஆரம்பித்து முதலாளியாக மாறணும். இன்றைக்கு முதலாளியாக மாறுவதற்கு முக்கியம் முதலீடு அல்ல, வாடிக்கையாளர்கள் தான். உலகத்திலேயே மிக அதிகமான வாடிக்கையாளர்கள் இருக்கும் நாடு இந்தியா, சீனாவில் கூட இல்லை. எனது அம்மாவை அழைத்துப் போக ஹெலிகாப்டர் வேண்டும் என கேட்கும் திமிர் வேணும் நமக்கு..”

என்று அறம் பாடுகிறார் கோபிநாத்.

நம் நாட்டில் இளைஞர்கள் அதிகம், அறிவு அதிகம் அதனால் உலகத்தை மாற்றுவோம் என்ற கோபிநாத் இப்ப என்னடா என்றால் இந்தியாவில் தான் வாடிக்கையாளர்கள் அதிகம் அதனால் முதலாளியாக மாறு என பாடம் எடுக்கிறார். வால்மார்ட் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வரை நமது நாட்டை நுகர்வோர் தேசமாகத்தான் பார்க்கும் உண்மையினை மறைத்து வெளிநாட்டு கம்பெனிக்காரன் நம் அறிவைப் பார்த்து மிரள்கிறான் என்று பொய் சொன்ன கோபிநாத் நம் நாட்டு மக்களை வெறும் நுகர்வோராக பாரு என உண்மையை போட்டு உடைக்கிறார். சரி எல்லாரும் முதலாளிகளானால் தொழிலாளிகள் யார் என்று கேட்டால் தொழிலாளிகளும், ஏழைகளும், ஏனைய சாமானியரும் கோபிநாத்தின் கருணைப் பார்வையில் இடம் பெறும் தகுதி கொண்டவர்கள் இல்லை என்பதே பதில்.

”நான் சினிமா பற்றி எண்டர்டெய்ன்மெண்ட் ஆக பேசி கைதட்டல் வாங்கியிருக்கலாம், ஆனால் பஸ்-ல் புஸ்பக் சீட்டை தள்ளத் தெரியாமல் கூச்சப்பட்டு கொண்டு இருந்த என்னை இந்தக் கூட்டம் தான் இந்த இடத்துக்கு வந்து விட்டுருக்கு. அதற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். எனது அடுத்த தலைமுறைக்கு விசுவாசமாக இருக்கனும்….

அரசியலுக்கு போகலாமா? வேணாமா ? என்று சிலர் கேட்கிறார்கள். நீங்க அரசியலுக்கு போங்க.. போகாமல் கூட இருக்க… ஆனா முதலில் ஓட்டுப் போடுங்க. தேசத்தின் தலையெழுத்தை மாற்றுவதற்கு உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே உத்தி இது. அதை செய்யாமல் ஊழல் செய்றாங்க, வடை திங்கிறாங்க.. என்பதும் அரசியல் ஒரு சாக்கடை என்பதும் தவறு. அதனால் ஓட்டு என்பது நான் ஜனநாயகவாதி என்பதற்கான அடையாளம்.”

இது கோபிநாத் இறுதியாக வீசிய கருத்துக் குண்டுகள்.

மக்களாகவே இந்த அரசியல் அமைப்பை புரிந்து கொண்டு தேர்தலை புறக்கணிக்கும் எத்தனித்தில் இருந்தாலும் இத்தகைய அப்துல் கலாம்கள் முதல் ஆனந்த விகடன்கள் வரை உடனே ஓட்டுப் போடு இல்லையென்றால் நீ விசம் கக்கி சாவாய் என்று சாபம் போட்டு மிரட்டுகிறார்கள். கேட்டால் இதுதான் ஜனநாயகமாம்! இந்த ஜனநாயகத்தின் யோக்கியதையை காஷ்மீரிலும், ஐரோம் ஷர்மிளாவிடமும் கேட்டால் பளிச்சென்று விளக்கிவிடுவார்கள். ஆனால் கோபிநாத் மருந்துக்கும் கூட இத்தகைய ஒடுக்கப்படும் இந்தியாவோடு அறிமுகம் கொண்டவரல்ல. ஒடுக்கும் முதலாளிகளின் இந்தியாவின் தூதர் அவர்.

உரையினை முடித்துகொண்ட பின் கோபிநாத்திடம் சில மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதில் ஒரு கேள்வி.

“வறுமை, லஞ்சம், வன்முறை போன்றவற்றில் இந்திய இளைஞனின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது எது?”  என்பது. அதற்கு கோபிநாத் சொன்ன பதில்

“முதலில் இப்படி பேசுவதை நிறுத்துங்க பாஸ், உலகிலேயே அமைதியான நாடு இந்தியா, எல்லோருக்கும் வேலை வாங்கித் தருவது அரசாங்கத்தின் வேலை இல்லை, இது கார்ப்பரேட் உலகம், இதில் போட்டி போட்டு நீங்க தான் வேலை தேடணும். மற்றபடி ஊழல் & லஞ்சம் பற்றி நோ கமெண்ட்ஸ்”

என முடித்து கொண்டார். பாசிஸ்டுகளின் இராணுவம் புல்லட் ஃபுரூப் போட்டுக்கொள்வது போல பாசிஸ்டுகளின் உபதேசியார்கள் போட்டுக்கொள்ளும் கருத்து புல்லட் ஃபூரூப்தான் இந்த நோ கமெண்ட்ஸ்!

ஆனால் நமது கமெண்டசை நாம் நிறுத்த வேண்டியதில்லை.

“சினிமா பற்றி பேசி கைதட்டல் வாங்க முடியும், ஆனால் மக்களுக்கு விசுவாசமாக இருக்கனும்” எனும் கோபிநாத் அவர்களே, நாட்டில நடக்கிற எந்த விஷயத்திற்காவது இதுவரை மக்களுக்காக குரல் கொடுத்து உள்ளீர்களா..?

பெரிய மீடியாபர்சன் என்ற டாக்டர் பட்டம் வாங்கினதாக சொல்லும் நீங்கள் உங்கள் கண் எதிரே கூடங்குளம் மக்கள் மீதான அரசின் அடக்குமுறை ஆகட்டும், ஈழத்தில் போரை முன்னின்று நடத்திய இந்திய அரசாலும், சிங்கள இனவெறியர்களாலும் மக்கள் கொத்து கொத்தாக செத்தபோதும், அதனை தடுப்பதாக சொல்லி கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட ஓட்டுக்கட்சி தலைவர்கள் நாடகமாடிய போதும் இந்திய மேலாதிக்கத்திற்கு எதிராகவும் ஈழத்தமிழ் மக்களுக்காகவும் வீதியில் இறங்கி மாணவர்கள், வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டம் ஆகட்டும், சமச்சீர் புத்தகங்களை கொடுக்க மறுத்த ஜெயா அரசுக்கு எதிரான போராட்டம் ஆகட்டும்…. என எந்த மக்கள் போராட்டத்திற்காவது ஆதரவு கொடுத்து உள்ளீர்களா?

ஏன் உங்களை போன்று சன் டிவியில் வேலை செய்த அகிலா என்ற பெண்-க்கு பாலியல் தொல்லை கொடுத்த அதன் மேலாளர் ராஜாவுக்கும் அவனுக்கு ஆதராவாக நின்ற சன் டிவி ஓனருக்கும் எதிராக போராட்டம் வலுத்த போது ஒரு சிறு குரலையாவது பதிவு செய்து இருக்கிறீர்களா..? இல்லையே.

உலகத்தை மாற்ற முதலாளியாக மாறு என்று சொன்ன நீங்கள் இறுதியில் தேசத்தை காப்பாற்ற நம்மிடம் இருக்கும் ஒரே உத்தி ஓட்டுரிமை என ஓட்டுரிமைக்கு ஒளிவட்டம் போடுவது ஏன்?

அருந்ததி ராய், சாய்நாத் போன்ற பல பத்திரிக்கையாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இந்தியாவின் வல்லரசு கனவையும், மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மகிமையையும் மறுக்க முடியாமல் அம்பலப்படுத்தி எழுதிவிட்ட பின்னரும் விசுவாசம், ஓட்டுப்போட்டாத்தான் ஜனநாயகவாதி என 1-ம் வகுப்பு பையனிடம் வித்தை காட்டுவது போல பேசுவது ஏன் கோபிநாத்.?

நாட்டை எப்படி காப்பாற்றணும் என போராட வர வேண்டியவர்களிடம் உலகத்தை காப்பாற்ற வாடா என ’இண்டிபெண்டன்ஸ் டே‘ படம் காட்டுவதுதான் கோபிநாத்தின் உத்தி. காப்பிரைட் அப்துல் கலாமுடையது.

மொத்தத்தில் கோபிநாத் அவர்களுக்கு நான் சொல்ல வருவது, விசுவாசம், சின்சியர் மேன் நான், என மாணவர்களை, இளைஞர்களை மொக்கையாக்காமல் பவர் ஸ்டாருடன் ஒரு நாள், ரிகார்டு டான்ஸ் விஜய் டிவி அவார்ட்ஸ் போன்ற நிறைய மொக்கை நிகழ்ச்சிகளை தயார் செய்து காம்பெயர் மட்டும் செய்தால் அதுவே இன்றைய மாணவ இளைஞர்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய நல்லதாக இருக்கும்.

-தோழர் இலக்கியன், புமாஇமு

  1. ”டாடா, பில்கேட்ஸூம் பணக்காரனாக இருப்பதற்கு காரணம் மற்றவர்களுக்கு உதவனும் என தாங்கள் சம்பாதித்த பணத்தை எல்லாம் மக்களுக்கே அள்ளி அள்ளி கொடுக்கும் அவர்கள் மனசு தான்”

    என கொடுத்ததை விட அதிகமாக முதலாளிகளுக்கு கூவும் கோபிநாத் முகத்திரையினை கிழித்து தொங்கவிட்டு விட்டீர்கள்…

  2. மாணவர்களிடம் அரசியல் ஆர்வம் இல்லை என்று குறைபட்டு ஒரு ‘நீயா நானா’ நிகழ்ச்சியை நடத்தினார். கடந்த ஆண்டு மாணவர்கள் ஈழப்பிரச்சினைக்காக வீதியிறங்கி போராடிய போது அது குறித்து ஒரு நிகழ்ச்சியையும் நடத்தவில்லை.

    • மப்புல இருந்துருப்பாரு….
      ஏதாவது கம்பனி ஸ்பான்சர் செய்தால்,வாய் திறப்பார்

  3. உலகத்துக்கே சோறு போடுவது எப்போது?….
    நிச்சயம் அவர் (கோபி) ஏதாவது திட்டம் வத்திருப்பார்:
    எதற்கும் வாழை இலைக்கட்டு 25 பில்லியன் தயாறாக வைத்திருப்போம்..
    கோபி சொன்னவுடன் உலகத்தில் உள்ள எல்லோருக்கும் ஒரே பந்தியில் வடை
    பாயாசத்துடன் சாப்பாடு(எவனாவது பிசா/பர்ஜர் கேட்டால் மூஞ்சி மேலேயே குத்து)
    ஏங்க,,,போஸ்டரில் போட்டுருக்கே…விசய் டி.வீ.புகழ்,ன்னு…

  4. கேட்பவர்கள் கேனையர்களாக இருக்கும் போது இவரைப் போன்றவர்கள் கேப்பையில் நெய் வடிகிறது என்று தான் கூவுவார்கள்.

  5. கோபிநாத்துக்கு இவ்வளவு பெரிய கட்டுரை கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் அவரால் திணிக்கப்படும் பொய்,திரிபு பிரச்சாரத்திற்கு இது அவசியமாகிறது.கோபிநாத் சம்பளமோ கூலியோ வாங்கிக் கொண்டு தன் பேச்சுத் திறமையை விற்கிறார்.அதற்கு அவர் பேச்சின் ஜோடிப்புகள்தான் இந்த அளப்புகள்.இவர் இதற்கு முன் முகநூலில் 5000கோடிக்கு நாம் போர் விமானம் வாங்கியதையும் அதை பார்த்து சீனா பயப்படுவதாகவும் அளந்திருந்தார்.அதிலிருந்தே அவரது அயோக்கியத்தனம் அம்பளப்பட்டு நிற்கிறது.சொந்த நாட்டு மக்களின் இன்றைய உண்மை நிலையை மறைப்பதற்கும் இவர் எவ்வளவு காசு வாங்குகிறார் என்று தெரியவில்லை.

  6. ////நமக்கு என்ன கஷ்டம். உலகத்திலேயே நமது நாட்டில் தான் சீரான வெப்பநிலை, அறிவு, இயற்கை வளம் என அனைத்தும் இருக்கிறது. 3 வேளை சோற்றுக்கே இன்னும் எத்தனை நாளைக்கு பயந்து கொண்டு இருக்கப் போகிறீர்கள்? ////

    ’பசி’னா என்னன்னு புக்குல படிச்சு “ஜெனரல் நாலெட்ஜ்” வளத்த கூட்டம் இப்புடித்தான் பேசும் ..

    • கண்டிப்பா ! பட்ட்றிவு உள்ள நமக்கு ப. சி யை பற்றி நல்லாவே தெரியும்.

      • எதுக்கு வட்டிக்கடை மஸ்தானை இழுக்குறீங்க?
        அவர் பாட்டுக்கு ஈழத் தமிழர்களை அழிக்க
        இலங்கைக்கு கொடுத்த பணம் பட்டுவாடா இன்னபிற அம்சங்களை
        சோடாபுட்டி கண்ணாடியில்….

  7. கோபிநாத்…”கல்லுரி மாணவர்களின் கருத்துக்களுக்குக் காயடிக்க அணுகவும்” என்று போர்டு போட்டு உக்காரலாம்.

    ஒரு நிகழ்ச்சிக்கு ரூபாய் 2 லட்சம் வரை வாங்குவதாக சொல்கிறார்கள்…லஞ்சம், ஊழல் பற்றி அவருக்கென கவலை…

  8. தமிழ்,

    கோபிநாத் போன்ற ஒட்டுண்ணிகள் கண்டிசன்ஸ் அப்ளை (கேட்பவர்கள் கேனையர்களாக) எதுவும் பார்ப்பதில்லை.

    //“வறுமை, லஞ்சம், வன்முறை போன்றவற்றில் இந்திய இளைஞனின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது எது?” என்பது. அதற்கு கோபிநாத் சொன்ன பதில்

    “முதலில் இப்படி பேசுவதை நிறுத்துங்க பாஸ், உலகிலேயே அமைதியான நாடு இந்தியா, எல்லோருக்கும் வேலை வாங்கித் தருவது அரசாங்கத்தின் வேலை இல்லை, இது கார்ப்பரேட் உலகம், இதில் போட்டி போட்டு நீங்க தான் வேலை தேடணும்.//

    இப்படி யாராவது கேள்வி கேட்டாலும் திரும்ப திரும்ப அடிவருடிக் கருத்தையே பிரதிபலிப்பார்கள். திட்டமிட்டு ஆழ்ந்து யோசித்து பதில் சொல்லும் சிரமமும் அவர்களுக்கு இருப்பதில்லை. வேறென்ன, இயல்பிலேயே இது போன்ற அடிவருடிகளின் இரத்தத்தில் ஊறிக் கிடக்கும் வர்க்கப் பாசம் என்ற விஷம்தான் காரணம்.

    சிறப்பான கட்டுரை அளித்த தோழன் இலக்கியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  9. இளைஞர்களை மொக்கையாக்காமல் பவர் ஸ்டாருடன் ஒரு நாள், ரிகார்டு டான்ஸ் விஜய் டிவி அவார்ட்ஸ் போன்ற நிறைய மொக்கை நிகழ்ச்சிகளை தயார் செய்து காம்பெயர் மட்டும் செய்தால் அதுவே இன்றைய மாணவ இளைஞர்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய நல்லதாக இருககும்— ஆமாம் போலி நாத்து,ஓம் பொழப்புல மண்ண அள்ளி போடாம இருக்கலாம்-

  10. கோபிநாத் கம்யுனிசம் பற்றி பேசவில்லை என்ற கோபம்தான் இங்கே தெரிகிறது. இதே கோபிநாத் ரஷ்யா லெனின் சே குவாரா மா.செ என பேசினால் இதை கட்டுரை அவருக்கு ஜால்ரா அடித்து இருக்கும்.

    உங்கள் பாதை வேறு அவரது பாதை வேறு. ஈழ பிரச்சனையை எந்த தமிழ் நாய் நியமாக செய்தது. முடிந்தால் தீக் குளிப்பான் அந்த பிணத்தை வைத்து ஆயிரம் கட்சிகள் குளிர் காயும். இந்த வெற்று அரசியல் வேண்டாம் என பலர் ஓங்கிவிடுகின்றனர்.

    இல்லை இவரைப் போன்றவர்கள் ஆயுதம் ஏந்து இரத்தம் சிந்து என கலவரத்தை தூண்டுகின்றார.. சுயத்தொழில் செய் என்பதைத்தானே வலியுறுத்துகிறார்..

    • //கோபிநாத் கம்யுனிசம் பற்றி பேசவில்லை என்ற கோபம்தான்..//

      நாட்டு நடப்பு பற்றிய உண்மையை பேசவில்லை என்ற கோபம்தான்…அப்போ நாட்டில் லஞ்சம், ஊழல் என எதுவுமே இல்லை…ஒளிருது இந்தியா….

      • ///ஐநாவின் யோக்கியதையை ஈரானிடமோ, இல்லை ஈராக்கிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளும் பணிவோ, பக்குவமோ இத்தகைய அமெரிக்க அடிமைகளுக்கு இருப்பதில்லை.///

        ரொம்ப சரி! மார்க்சிச மாவோயிச கம்யூனிச சீனாவின் யோக்கியதையை ஈரானிடமோ, ஈராக்கிடமோ வேறு எந்தநாட்டிமோ கேட்கத் தேவை இல்லை. சீன மக்களிடமே கேட்டால் போதும். அப்படிக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் பணிவோ, பக்குவமோ (வினவு போன்ற) சீன அடிமைகளுக்கு இருப்பதில்லை.

        மார்க்சிச லெனினிய கம்யூனிச ரஷ்யாவின் யோக்கியதையை ஈரானிடமோ, ஈராக்கிடமோ வேறு எந்தநாட்டிமோ கேட்கத் தேவை இல்லை. ரஷ்ய மக்களிடமே கேட்டால் போதும். அப்படிக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் பணிவோ, பக்குவமோ (வினவு போன்ற) ரஷ்ய அடிமைகளுக்கு இருப்பதில்லை.

        ரஷ்யா துண்டாகப் போனதன் காரணத்தை ஒப்புக் கொள்ளும் பணிவோ, பக்குவமோ (வினவு போன்ற) ரஷ்ய அடிமைகளுக்கு இருப்பதில்லை.

        காஷ்மீரத்து தீவிரவாதிகளின் யோக்கியதையை அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்ட காஷ்மீரத்து இந்துக்களிடமும், பண்டிட்டுகளிடமும் கேட்டால் போதும். அப்படிக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் பணிவோ, பக்குவமோ (வினவு போன்ற) சீன/ ரஷ்ய அடிமைகளுக்கு இருப்பதில்லை.

        • காஷ்மீரத்தில் இந்திய ராணுவம் செய்வது தேசப் பாதுகாப்பு.

          ஆனால் டியனான்மென் சதுக்கத்தில் சீனா நடத்திய ஜனநாயக எதிப்புப் படுகொலை குறித்து வினவு சொல்வது என்ன?

          • காஷ்மீரில் இந்தியா செய்வது ஆக்கிரமிப்பு. காஷ்மீர் மக்களுக்கு பொதுவாக்கெடுப்பு உரிமை கொடுக்கப்பட்டு அவர்கள் பிரிந்து போவதா சேரந்து இருப்பதா என்று அவர்கள் முடிவு செய்யட்டும்.. க்நேரு இந்திய ராணுவத்தை பாகிஸ்தானிய படைகளை விரட்ட அனுப்பியது போல் ஆக்கிரமித்த வரலாறை காஷ்மீரிகளிடம் கேளுங்கள்..நேரு காஷ்மீரிகளுக்கும், ஐ.நாவுக்கும் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது?

            காஷ்மீரில் கல்லடிபடும் ராணுவத்தை முதலில் திரும்பி வர சொல்லுங்கள்

            • First make Jammu & Ladakh Separate states of the Indian Union,then we can discuss a vote for the Kashmir valley.

              Kashmir is used by Pakistan to send terrorists into India,so the Army ll be there in Kashmir.

              Kashmiris can be wiped out in 10 days but the army stays patient.

              Who is Nehru to promise anything,he is not the owner of India?

            • காஷ்மீரத்தின் உண்மையான வரலாற்றை மறைத்து விட்டுப் பேசும் இதுபோன்ற பேச்சுக்கள் தேசனலன் சார்ந்தன அல்ல, ஜன்நாயகத்துக்கும் எதிரானவை.

              காஷ்மீரம் மகாராஜ அரிசிங் வசம் இருந்தது. சர்தார் படேலின் நடவடிக்கை காரணமாக இந்தியாவுடன் இணைக்கப் பட்டது. அந்த உடன்படிக்கை 1947 அக்டோபரில் செய்யப்பட்டது. ஆக காஷ்மீரம் இந்தியாவின் ஓர் அங்கம் என்பதற்கு வரலாற்று, சட்டபூர்வமான ஆதாரங்கள் உள்ளன.

              தவிர, காஷ்மீரத்துப் மூன்றரை லட்சம் பண்டிட்டுகள் காஷ்மீரத்தை விட்டுத் துரத்தப்பட்டதை கண்டுகொள்ளாமல் பொது வாக்கெடுப்பு பற்றிப் பேசுவது முறையல்ல.

              காஷ்மீரத்துக்கு என அரசியல் அமைப்புச் சட்டத்தில் வேறெந்த நாட்டிலும் இல்லாத படிக்கு சட்டப் பிரிவு 370 வழங்கப் பட்டிருப்பது இந்தியப் பேரரசின் ஜனநாயகநெறிமுறைக்கு சான்றாகும்.

              காஷ்மீரத்தில் பரம்பரையாக வாழ்ந்து வந்த பண்டிட்டுகளைத் துரத்திய தீவிரவாதிகளும் ராஜபக்சேயும்தான் ஒரு போல பாசிசநடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் எனப்துதான் உண்மை.

              • காஷ்மீர் குறித்த வரலாறை ஆதாரம் என்ன்வென்றால இந்திய பிரதமர் பொது வாக்கெடுப்புக்கு சம்மதித்து ஐ.நாவுக்கும் , இந்திய மக்களுக்கும் காஷ்மீர் மக்களுக்கும் பொய்யான உறுதியளித்து காஷ்மீரை ஆட்ட்யபோட்டார்.

                ஈழ ஆக்கிரமிப்பை செய்த இராஜபக்சே தான் இந்திய ராணுவம். இதே இந்திய ராணுவம் ஈழத்தை ஆக்கிரமிப்பு செய்த போது , நாயை அடித்து விரட்டுவது போல அடி வாங்கி குரைத்து கொண்டே ஒடி வந்ததே நியாபகம இல்லையா?அமைதிபடை என்ற பெயரில் ஈழத்தை ஆக்கிரமிக்க முயன்று அடிவாங்கி ஒடிவந்த இந்தியா தான் இராஜபக்சேவுக்கு நல்ல உதாரணம் கூட்டாளியும் கூட

                காஷ்மீர் மக்கள் தான் இந்திய ராணுவத்தை சொறிநாயை அடிப்பது போல கல்லால் அடிக்கிறார்களே இன்னுமா புரியவில்லை,காஷ்மீர் மக்களின் சுதந்திர தாகம்.

                • // காஷ்மீர் மக்கள் தான் இந்திய ராணுவத்தை சொறிநாயை அடிப்பது போல கல்லால் அடிக்கிறார்களே இன்னுமா புரியவில்லை,காஷ்மீர் மக்களின் சுதந்திர தாகம்.//

                  காசுமீரில் ஒரு செண்ட் நிலம் வாங்கி பெரியாருக்கு ஒரு சிலை வைங்க பார்ப்போம்..

                • The ruler of J&K signed accession papers to India,this is how all princely states joined either of the countries.

                  Nehru is not the owner of India,his promises dont hold weight after his death.

                  Kashmir people also take Indian money like stray dogs,so how should i look at people who spit on their own plate?

        • இன்றைய சீன ஆட்சியாளார்கள் குறித்தோ, ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் பின்னடைவு குறித்தோ பல கட்டுரைகள், கவிதைகள் வினவில் வந்து உள்ளன.

          நேர்மையாக பரிசீலிப்பவன் எவனும் கம்யூனிசம் தோற்றிருக்க கூடாத ஒரு உன்னத சமூக அமைப்பு என்பதை உணராமல் இருக்க முடியாது.

          மற்றபடி ஐ.நா-வில் பேசுறதை, பிரட்டிஸ் அரண்மனையில் பேசுறதை மிகப் பெரிய விசயமாக கோபிநாத் பேசுவது எதற்கு ஒளிவட்டம் போடுவதற்கு என விளக்கி சொன்னால் சரியாக இருக்கும்.

          //காஷ்மீரத்து தீவிரவாதிகளின் யோக்கியதையை அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்ட காஷ்மீரத்து இந்துக்களிடமும், பண்டிட்டுகளிடமும் கேட்டால் போதும்.// 1 லட்சம் பேரை ஒழித்து கட்டி 5 லட்சம் இரானுவத்தை அத்தி மீறி நிறுத்தி உள்ள இந்திய அரச பயங்கரவாதிகளின் யோக்கியதை நித்தம் நித்தம் சந்தி சிரிக்கிறது.
          இதை விடவா ஒரு தீவிரவாதம் இருக்க முடியும்…?

          ”காஷ்மீர் இந்தியா என்ன செய்து கொண்டு இருக்கிறதோ அதை தான் நாங்கள் செய்கிறோம்” ராஜபக்சே சொல்வதை கேட்கவில்லையா?

          • /// ”காஷ்மீர் இந்தியா என்ன செய்து கொண்டு இருக்கிறதோ அதை தான் நாங்கள் செய்கிறோம்” ராஜபக்சே சொல்வதை கேட்கவில்லையா?///

            ராஜபக்சே சொல்வதெல்லாம் உண்மை என்று நீங்கள் ஏற்றுக் கொண்டுவிட்டீர்களா?

            ராஜபக்சே ஒரு அப்பட்டமான புளுகன் என்பது உலகம் அறிந்தது. தத்தம் சொந்த விருப்பு வெறுப்பு, சுய லாபம், நாட்டுக்கான அரசியல் பொருளாதார லாபத்துக்காக பலநாடுகள் ராஜபக்ஸேக்குப் பிடிக்கும் கொடியை நீங்களும் எதற்காக ஏந்துகிறீர்கள்.

            காஷ்மீரில் தீவிரவாதிகள் செய்ததை ஈழத்தில் செய்தவர் ராஜபக்ஸே. காஷ்மீரத்தில் இருந்து கிட்டத்தட்ட 3,50,000 பண்டிட்டுகளை விரட்டி அடித்து இன்னமும் அவர்கள் சொந்தநாட்டிலேயே அகதிகள் முகாம்களில் இருப்பது உங்களுக்குக் கண்ணில் ஏன் படவில்லை? அவர்கள் இந்துக்கள், பிராமணர்கள் என்பதால்தான் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி. மனித உரிமை என்பது எல்லா மனிதருக்கும் உண்டு என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீகள்? இந்துவின் ரத்தம் தக்காளி சட்னி, முஸ்லீம் ரத்தம் மட்டுமே ரத்தமோ? அப்படியானால் சீனாவிலும் ரஷ்யாவிலும் நசுக்கப்பட்ட கிற்ஸ்தவர்கள், முஸ்லீம்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?

            காஷ்மீரத்துப் பண்டிட்டுகளின் நிலத்தில் மறு குடியிருப்பாக முஸ்லீம்களை அமர்த்தியது போலத்தான், ராஜபக்ஸே ஈழத்தில் இன்று சிங்களரகளைத் தமிழர் பகுதிகளில்,நிலங்களில் குடியிருப்பு செய்கிறார். இதுதான் சரியான ஒப்புமை, இதைத்தான் பதிலாக ஒவ்வொரு இந்தியனும் இனப்படுகொலையாளி ராஜபக்சேக்கு சொல்லவேண்டும். இந்தியா அப்படிச் சொல்லது, ஏனெனில் இந்த விஷய்த்தில் இனப்படுகொலையாளி ராஜபக்சேயின் முதல் கூட்டாளி சொக்கத்தங்கம், தியாகத் திருவிளக்கு அன்னை சோனியா காந்தி.

            • காஷ்மீரில் பண்டிட்டுகள் விரட்டப்பட்டட்டது சரி என்று வினவு சொன்னது இல்லை.. இந்த விசயத்தை பேசுதற்கு முன்பு எப்படி சிங்கள் அரசு தமிழர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததோ அதே போன்று இந்திய அரசு காஷ்மீரை ஆக்கிரமிப்பு செய்துள்ளதே அதை குறித்து பேசபட வேண்டும்.

              சரியான ஒப்புமை எது என்றால்?

              காஷ்மீர் – ஈழம்
              இலங்கை – இந்தியா
              ராஜபகசே- ஐ.நா சபைக்க்கு வாக்குறுதி அளித்து அதை மீறி மக்களை ஏமாற்றிய இந்திய அரசு

              இராக்கில் உள்ள அமெரிக்க படைகளை விட அதிக படைகளை குவித்து காஷ்மீரை ஆக்கிரமித்து இருக்கும் இந்திய அரசு தான் இந்த பிரச்சனைகளுக்கு காரணம்.

            • முதலில் உங்கள் கமெண்டை படிக்கும் போது நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு தெரியுல, ஆனா கடைசியதன் புரியுது,

              //காஷ்மீரத்துப் பண்டிட்டுகளின் நிலத்தில் மறு குடியிருப்பாக முஸ்லீம்களை அமர்த்தியது போலத்தான், //

              இத சொல்ல எதுக்கு சீனா, ரஸ்சியாவை, இழுக்கணும். ஹா ஹா ஹா…

        • 1993-ல் ம.க.இ.க திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்திய பொழுது இந்து முண்ணனி ராமகோபாலன், ம.க.இ.க வுக்குப் பாகிஸ்தானிடமிருந்து பணம் வருகிறது என்ற அறிவுப்பூர்வமாகக்(?) கண்டுபிடித்தார். திருவாளர் அஞ்சன் குமார் அவர்களும் இராமகோபாலனின் அடிவருடியாக இருப்பார் போலும்.

          ரஷ்யா, சீனா வில் முதலாளித்துவ மீட்சி நடந்தேறிவிட்டது. அங்கு இருப்பது முதலாளித்துவ அரசு தான் என்று வினவு பல முறை எழுதியிருக்கிறது. அதையெல்லாம் படிக்காமல் இன்னும் அஞ்சன் குமார் போன்ற ஜென்மங்கள் ரஷ்யா, சீனா என்று கூவிக்கொண்டிருக்கின்றனர்.

          • அது சரி boss. Communism சொக்க தங்கம்னா அத விட்டுட்டு ஏன் முதலாளித்துவத்த பிடிச்சாங்க?
            கொஞ்சம் யோசிச்சு பதில் சொல்லுங்க

            • கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்த காலம் வரை ரஷ்யா எப்படி இருந்தது என்பதை ( குறிப்பாக “பாராளுமன்றத்துக்கு சென்ற பால்காரம்மா” என்ற கட்டுரை)வினவில் தேடி படியுங்கள்… முதலாளித்துவம் இன்று ரஷியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் புளுத்து நாறுவது குறித்தும் கட்டுரைகள் மிக அதிகமாக நித்தம் நித்தம் வந்து வருகிறது.

              இவற்றை மறுத்து ஆதாரத்தோடு ரஷிய புரட்சிக்கு பின் மக்கள் கஷ்டம் தான் பட்டார்கள் என எழுதவும்…. அல்லது ரஷியா உள்ளிட்ட இன்றைய உலகம் முழுவதும் முதலாளித்துவம் எந்த விதத்தில்’’’ நன்றாக’’ மக்களை வைத்து உள்ளதை என்பதை ஆதாரத்தோடு எழுதவும்…..

              அல்லது இப்படி யோசிக்காமல் மட்டை அடி அடிப்பதை நம்பி உங்களை போன்றோர் இன்னும் எவ்வளவு காலம் தள்ளுவதாக உத்தேசம் …. என்பதையாவது எழுதவும்.

              • why did Russia indulge in Imperialism by conquering the CIS states and alsos ending the army to Warsaw/Vienna to make the Iron curtain including imposing it on Germany,if communism was a natural choice then why did Russia not support a local workers revolution like it did in Afghanistan?

                Are you saying no common man has made it big in Capitalist countries?

              • ///கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்த காலம் வரை ரஷ்யா எப்படி இருந்தது என்பதை ( குறிப்பாக “பாராளுமன்றத்துக்கு சென்ற பால்காரம்மா” என்ற கட்டுரை)வினவில் தேடி படியுங்கள்… முதலாளித்துவம் இன்று ரஷியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் புளுத்து நாறுவது குறித்தும் கட்டுரைகள் மிக அதிகமாக நித்தம் நித்தம் வந்து வருகிறது. ///

                புளுத்து நாறுவது கம்யுனிசமே…. அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கன் விறகு வெட்டியின் மகன். என்ன பால்கார அம்மா தவிர வேறு ஓரு எடுத்துக்காட்டு இல்லையா.. கம்யுனிச வட கொரியாவில் அதிபர் மகன் தானே புதிய ஆட்சியாளர். கம்யுனிச ரஸ்யாவில் பால்கார அம்மாவைப் போல் எத்தனை பேர் ஆட்சியாளர்கள் அதே சமயத்தில் ஆட்சியில் இருந்த ராணுவ அதிகாரிகள் எத்தனை பேர் என்ற விகிதாசரத்தை கூற முடியுமா.. ரஸ்ய புரட்சிக்கு பின் பசி பட்டினியில் இறந்த குடிமக்களை பற்றி விவரங்கள் மரண தண்டனை பெற்றவர்கள் பட்டியல் ரொம்ப நீளம்.. கம்யுனிச சீனாவில் மாணவர் புரட்சி வெறும் ஓட்டுரிமைக்குத்தான் Tankman china story டைனை மேன் புளுத்து நாறுவது கம்யுனிசமே

          • கம்யூனிச ரஷ்யாவும் சீனாவும் செய்த செய்துவரும் மனித உரிமை மீறல்கள் பற்றி. அப்படிப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி எந்த அளவுக்கு எத்தனை முறை நீங்கள் மறுமொழியில் எழுதி இருக்கிறீர்கள்?

            சீனாவில்நடக்கும் கம்யூனிச அரசின் மனித உரிமைப் படுகொலைகள் குறித்து வினா எழுப்பினால் உடனே “இராமகோபாலனின் அடிவருடியாக இருப்பார் போலும்” என்று சொல்வது உண்மையை நேரடியாகச் சந்திக்க துணிவு இல்லை என்பதைக் காட்டுகிறது. பன்னா இஸ்மாயிலுக்கும், போலீஸ் பக்ருதீனுக்கும், அல் உம்மாநிறுவனர் ஜவகரிருல்லாவுக்கும், அவர்களது மறைமுக முதலாளி தாவூத் இப்ராகிமுக்கும் அடிவருடிகளாக இருப்பவர்களை விட நான் எவ்வளவோ மேல்!

            • முதலாளித்துவ சீனா குறித்தும், சமூக ஏகாட்கிபத்தியமாக சீரழிந்த ரஷ்யா குறித்தும் வினவில் செய்தி உள்ளது.. யாரோ மண்டபத்தில் எழுதி கொடுத்ததை அப்படியே வாந்தி எடுப்பது ஏன்?

              • ரஷியாவையும் சீனாவையும் சீரழித்தது கம்யூனிசமே. அவை சீரழிந்த காரணத்தால் அவை சமூக ஏகாதிபத்தியமானதால்தான் சீரழிந்தது என்று புரட்டுகிறீர்கள்.

                யாரோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததை வாந்தி எடுக்கநான் ஒன்றும் மனோஜ் அல்ல!

    • கல்நெஞ்சம் அவர்களே…

      கோபிநாத் கம்யூனிசம் குறித்து பேசவில்லை என்பதற்கான கோபம் கட்டுரையில் எந்த இடத்தில் தெரிகிறது ?
      நாட்டின் உண்மை நிலைமையினை முழுசாக மறைத்து மிக கேவலமாக முதலாளிகளுக்கு ஜால்ரா அடிப்பது ஏன்? என்று தான் கேட்கப்பட்டு உள்ளது.

      2 லட்சம் வாங்கி கொண்டு சொற்பொழிவு ஆற்றியே ஆகனும் என பேசுவதற்கு மக்கள் வாழ்நிலை தான் கிடைத்ததா?….

      ”டாடாவும் பில்கேட்ஸும் சம்பாதித்த பணத்தை அள்ளி அள்ளி கொடுக்குறான், வயதான காலத்திலும் நம் நாட்டு தலைவர்கள் உங்களை நம்பி தான் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட மாட்டேன், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட மாட்டேன் என அயராமல் உழைக்கின்றனர்…” என போகிறபோக்கில் கோபி பேசுவாராம், அது குறித்து விமர்சனம் செய்ய கூடாதாம் என நீங்கள் கூறுவது என்ன நீதி?

      போகிற இடத்தில் எல்லாம் பார்வையாளர்களையே கேள்வி கேட்டு தலைப்பை தேர்தேடுக்கும் மிகப் பெரிய அறிவுஜீவி’’’ கோபிநாத்-க்கு அறிவு, நேர்மை என்பது சிறிதாவது இருந்தால் கோபிநாத்தை சொல்ல சொல்லூங்கள் பார்க்கலாம், டாடாவும், பில்கேட்ஸூம் சம்பாதித்தது எவ்வளவு, மக்களுக்கு கொடுத்தது இவ்வளவு என? (மக்களுக்கு எதை கொடுக்க நீரா நாடியா – கனிமொழியுடன் இணைந்து எந்த துறைக்கு எந்த அமைச்சர் வரனும் என பேசினார்…)

      காட் முதல் 123 வரை எந்த ஒப்பந்தத்தில் இந்த ஆட்சியாளர்கள் கையெழுத்து போட மாட்டேன் என்று சொன்னார்கள்? இது போல கட்டுரையில் குறிப்பிட்டு உள்ள விமர்சனஙளை மறுத்து ஒரு விஷயத்தை யாவது கோபி பதில் கூறுவாரா?

      சுயதொழில் செய் என மட்டும் கோபி எந்த இடத்திலாவது பேசி உள்ளார் என நிரூபிக்க முடியுமா?

      அல்லது

      ஒவ்வொரு விசுவாச கூட்டத்திலும் “ வேம்பு- மஞ்சள் என அனைத்துக்கும் நமக்கு காப்புரிமை இல்லை என எவனோ ஒருத்தன் விலை பேசுகிறான், அதைப் பற்றி கவலைப்படாமல் ஒரு நல்ல வேலை – வரதட்சணை வாங்கிக் கொண்டு ஒரு கல்யாணம்– ஊருக்கு வெளியே சொந்த வீடு – குழந்தை – அப்புறம் சாவு என நாம் இருக்கிறோம்.… இதெல்லாம் ஒரு வாழ்க்கையா?” -” என ஒரே வசனத்தை வைத்து மக்களை மடையர்களாக ஆக்க பார்க்கும் கோபிநாத்தின் கருத்துக்கு வக்காலத்து வாக்கும் நீங்களாவது இந்த கட்டுரையில் உள்ள விமர்சனஙளை மறுத்து பதில் கூற தயாரா?

  11. “முதலில் இப்படி பேசுவதை நிறுத்துங்க பாஸ், உலகிலேயே அமைதியான நாடு இந்தியா, எல்லோருக்கும் வேலை வாங்கித் தருவது அரசாங்கத்தின் வேலை இல்லை, இது கார்ப்பரேட் உலகம், இதில் போட்டி போட்டு நீங்க தான் வேலை தேடணும்”

    ஆனா முதலில் ஓட்டுப் போடுங்க. தேசத்தின் தலையெழுத்தை மாற்றுவதற்கு உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே உத்தி இது. அதை செய்யாமல் ஊழல் செய்றாங்க, வடை திங்கிறாங்க.. என்பதும் அரசியல் ஒரு சாக்கடை என்பதும் தவறு

    All are very clear points. I cant understand what is there he is missing to be blamed?
    Everybody have their approach to upliftment of soceity. This is yet another stomuch burning article.

    Rather then writing this article, author could have written

    “Only I am fighting for all the problems for all the soceity. Only my solution is best.
    Look at me me how great I am. “

    • ராமன் சார் யாருக்கு வோட்டு போடணும்?
      எமது இனத்தை அழிக்க அனைத்து வேலைகளையும் செய்த
      “கை”க்கா
      (அ)
      அதை வேடிக்கைப் பார்த்த “வானர” சேனைகளுக்கா?
      எதுக்கும் மனசை அகலமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்

    • மதச்சண்டை இல்லாத நாடு இந்தியா,ஜாதிச்சண்டை இல்லாதநாடு இந்தியா, இதையும் சேர்த்துக்கொள் ராமன், உணர்ச்சியே இல்லாத மனிதன் அதிகமாக வாழும்நாடும் நம் நாடே.எங்களுக்கும் தேசத்தை மிகவும் பிடிக்கும்.

  12. இந்தியாவுக்கு விவசாயம் முக்கியம் தான் மறுக்கவில்லை. ஆனால் நூறு கோடி மக்களும் விவசாயத்தை மட்டும் செய்ய முடியாது.அப்படிசெய்தால் விவசாயிக்கு தேவையான டிரக்டரை யார் செய்வது. அதற்கு டீசல் யார் எடுப்பது.. பருவ நிலையை அரிய செயற்கைகோளை அனுப்புவது எப்படி.. இப்படி தொழிற்சாலைகள் இருப்பதால் தான் கம்யுனிச தொழிற்சங்க நிர்வாகிகளும் ஜாலியாக வேலையே செய்யாமல் ஏமாற்றலாம்..

    ஈழப் போரட்டம் தமிழகத்தில் அது வெற்று தூப்பாக்கிதான்.. ஈழத்தீற்காக தீக்குளித்து இறக்கும் மனிதர்கள் அத்தனை பேரும் அன்னாடம் காய்ச்சிகள். இவர்கள் அனைவரும் தீக்குளிப்பதற்கும் முன் முகவரி அற்றவர்கள். முத்துக்குமாரும் செங்கொடியும் எத்தனை தடவை மத்திய அரசிடம் அல்லது மாநில அரசிடம் முறையிட்டு இருப்பார்கள்.. அல்லது இவர்கள் மக்கள் மாணவர்களைத் திரட்டி எத்தனை போராட்டம் நடத்தி இருப்பார்கள். இவர்கள் பிணத்தை வைத்து செய்த போலி போராட்டங்கள்தான்..

    இலங்கை போராட்டத்திற்கு எந்த பெரிய தலைவனவது தீக்குளித்து இருக்கிறானா.. அல்லது தீக்குளிப்பது போலவாது நடிக்கிறனா… ஏனெனில் அவர்களுக்கு தெரியும் இது வெறும் அரசியல்..இந்த போலிகளின் கூட்டத்தில் சேராமல் மனித நீ உழைத்து முன்னேறு. இந்தியா நல்ல நாடுதான் சொந்தமாக தொழில் நுட்பங்களை செய் என்று கூட சொல்லக்கூடாதா.. கம்யுனிசவாதியாக இருந்தாலும் வடகொரியா கீயூபாவில் போராடினால் மரண தண்டனைதான். அங்கன போய் உங்க வாய்ஜாலத்தை கட்டுங்கடா தோழர்களே….

    @RAMADOSS KOTHANDARAMAN SEETHAPATHI @Maakkaan
    நீங்கள் கம்யுனிசவாதிகள் தானே.. உங்களைப் போன்ற கம்யுனிசவாதிகள் எல்லோரும் ஓன்றுப்பட்டு ஓரு கம்யுனிச நாட்டை உருவாக்குங்களை
    என கேட்கவில்லை. உங்கள் கொள்கைப்படி ஓரு ஆட்டோ சங்கத்தை நடத்திக்காட்டுங்கள் பார்ப்போம். எந்த தமிழக கம்யுனிச ஆட்டோ சங்கம் ஓட்டுனர்கள் நியமான பணம் வாங்குகிறார்கள். அய்யோ ஆட்டோ வாங்க காசுயில்லை என நீங்கள் புலம்பலாம். மாவோக்களிடம் தூப்பாக்கி வாங்க காசு இருக்குது தம்பிகளாா

    • கோபிநாத்தையே மிஞ்சும் கல்நேஞ்சமே,

      உங்கள் பொய்க்கு ஒரு அளவே இல்லையா? நீங்கள் விவசாயம் செய்யுங்கள் அல்லது ஓசி சோறு திண்ணுங்கள். அது இங்குள்ள சுரண்டல் சமூகம் உங்களுக்கு அளித்த வாய்ப்பு. அதற்காக, இங்குள்ள தொழிற்சாலைகள் எல்லாம் விவசாய முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு ட்ராக்டர், செயற்கைக்கோள் உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்று கப்சா உடுறீங்களே..இது ஓவராகத் தெரியல?

      ஈழப் போராட்டத்திற்கு தீக்குளிப்பதுதான் தீர்வென்று எங்கு படித்தீர்கள். உங்கள் குப்பைகளை நீங்களே வைத்துக் கொள்வது நன்று.

      பறப்பயலுக்கு கோவிலுக்குள்ளே என்ன வேலை? வேணுமின்னா தனி கோவில் கட்டி அதில் பூசாரி ஆகுங்கள் என்று கொக்கரிக்கிறது பார்ப்பனக் கூட்டம். அந்த கொழுப்பில் திளைக்கும் நீங்களும் வேணுமின்னா உங்களுக்கு வேறு நாட்டை உருவாக்குங்கள் என்று விஷம் கக்கித் திரிகிறீர்கள். இது கோடான கோடி உழைக்கும் மக்கள் உருவாக்கிய நாடு என்பதை விரைவில் உங்களுக்கும் உணர்த்துவோம்.

      நாங்கள் கஷ்டப்பட்டு ஆட்டோ வாங்கி நியாய விலை வைத்து உங்களுக்கு சேவை செய்யணும். அதுவரை நீங்கள் இந்த நாட்டை விற்றுக் கொண்டு உலா வரும் திருப்பணியை செய்வீர்கள் என்றால், அதை பார்த்து அமைதி காக்க நாங்கள் மானம் கெட்டவர்கள் அல்ல.

      • // பறப்பயலுக்கு கோவிலுக்குள்ளே என்ன வேலை? வேணுமின்னா தனி கோவில் கட்டி அதில் பூசாரி ஆகுங்கள் என்று கொக்கரிக்கிறது பார்ப்பனக் கூட்டம் //

        பார்ப்பன மற்றும் ஆதிக்க சாதி கூட்டம் என்பதே சரி

      • நான் ஓண்ணும் கோபிநாத்துக்கு வக்காலத்து வாங்கவில்லை கனேஷ்

        என் கோபம் கோபிநாத் நாட்டு நடப்பை பற்றி பேசவில்லை கோபிநாத் ஈழத்துக்கு குரல் கொடுக்கவில்லை கோபிநாத் கம்யுனிசத்தை பற்றி பேசவில்லை என வாய் கீழிய கத்தும் நீங்கள் எத்தனை முறை போராடி இருப்பீர்கள். (இது கனேஷ்க்கு மட்டும்)

        ஈழப் போராட்டம் எப்போது எல்லாம் தீவிரமாகிறதோ அப்போது சிலர் மட்டும்தான் தீக்குளிப்பதை தொடங்கி வைக்கின்றனர். அவர்கள் எல்லாம் அன்னாடம் காய்ச்சிகள்தானே. தீக்குளிப்பதற்கு முன் எத்தனை பேருக்கு முத்துக்குமார் செங்கொடியைத் தெரியும்.கம்யுனிச சித்தானந்தை படித்த செங்கொடிதான் தீக்குளித்தாள்.

        அது சரி கம்யுனிசம் பொருளாதர சீர்திருத்தம் என கூக்குரல் இடும் தோழர்கள் கம்யுனிசம் வெற்றி பெற்ற ஏதேனும் ஓரு நாட்டைக் காட்டுங்கள் பார்க்கலாம். வெறும் ஏட்டில் உள்ள கம்யுனிசம் கறிக்கு உதவாது..தோழா…

        • மிஸ்டர் கல்நெஞ்சம்,

          //நீங்கள் எத்தனை முறை போராடி இருப்பீர்கள்//
          தெரியவில்லை என்றால் அதை கேட்பதுதானே நியாயம். நீங்களாக ஒன்றை மனதில் வைத்து ஏன் அவதூறு செய்கிறீர்?

          கம்யூனிச சித்தாந்தத்தைப் படித்துதான் செங்கொடி தீக்குளித்தார் என கல்நெஞ்சம் ஆணித்தரமாக கூறுவதால், கம்யூனிச சித்தாந்தத்தில் எங்கு தீக்குளிப்பது பற்றி உள்ளது, அது செங்கொடியிடம் என்ன மாற்றத்தை உருவாக்கியது என கல்நெஞ்சம் விளக்கக் கடமைப்பட்டுள்ளார்.

          உலகில் இதுவரை உருவான மனிதகுல சமூகத்தில் சோசலிசத்தை விட சிறந்த சமூகம் வேறு ஒன்றிருந்ததை நீங்களும் காட்டுங்கள் பார்க்கலாம். கம்யூனிசம் ஏட்டில் மட்டும் இருப்பதாக அலட்டிக் கொள்ளும் நீங்கள் முதலாளித்துவம் ஏட்டில் இருக்கக் கூட முடியாத அளவு புழுத்து நாறுகிறதே ஏன் என்று கொஞ்சம் பரிசீலியுங்களேன்.

          • ///கம்யூனிச சித்தாந்தத்தைப் படித்துதான் செங்கொடி தீக்குளித்தார் என கல்நெஞ்சம் ஆணித்தரமாக கூறுவதால், கம்யூனிச சித்தாந்தத்தில் எங்கு தீக்குளிப்பது பற்றி உள்ளது, அது செங்கொடியிடம் என்ன மாற்றத்தை உருவாக்கியது என கல்நெஞ்சம் விளக்கக் கடமைப்பட்டுள்ளார்.//

            https://www.vinavu.com/2011/08/29/senkodi/

            கணேஷ், மேற்கண்ட வினவின் லிங்கை இணைத்து உள்ளேன்.. இவ்வளவு தீவிர கம்யுனிச அருவடியான செங்கொடி ஏன் தீக்குளிக்க வேண்டும். அப்படி என்ன புரட்சி செய்ய வேண்டும்.. அது ஏன் அன்னாடம் காய்ச்சிகள் மட்டும் தீக்குளிக்கின்றனர். உங்கள் கம்யுனிச சித்தாந்தம்தான் brianwash செய்து தீக்குளிக்க வைத்தது..

            //உலகில் இதுவரை உருவான மனிதகுல சமூகத்தில் சோசலிசத்தை விட சிறந்த சமூகம் வேறு ஒன்றிருந்ததை நீங்களும் காட்டுங்கள் பார்க்கலாம்//

            கம்யுனிசம் என்பது கட்டுக்கதைதானே. இஸ்லாத்திலும் கிறிஸ்தவத்திலும் இதைப்போல சிறந்த கதைகள் உண்டு. அதுவும் உங்களுக்கு நல்ல தெரியும்.

            • லிங்க் கொடுத்த நீங்க அத கொஞ்சம் படிச்சு பார்த்திருக்கலாம்.

              //பொதுவா நாங்க இணையத்துல வினவு, கீற்று போன்ற தளங்கள்ள சமூக நிலமைகள் சார்ந்து எழுதப்படற கட்டுரைகளோட பிரிண்ட் அவுட் எடுத்து அதை படிச்சுட்டு விவாதிப்போம். அந்த விவாதங்கள் எல்லாத்துலயும் செங்கொடி பங்கேற்பா. தவறாம தன்னோட கருத்து, விமர்சனத்தை முன் வைப்பா. ஆனா, எந்தச் சூழ்நிலைலயும் நாங்க, தனி நபர் போராட்டத்தையோ அல்லது சமூக நிலை சார்ந்த தற்கொலை முயற்சியையோ ஆதரிச்சதில்ல. //

              கட்டுக்கதையான கம்யூனிசத்தை தடுக்கத்தான் அனைத்து நாடுகளும் கங்கணம் கட்டி ஆடுகின்றன போலும். கல்நெஞ்சத்துக்கு இருக்கும் அறிவு அந்த முட்டாப்பசங்களுக்கு இல்லை …பாவம்.

        • ஐயா கல்நெஞ்சம் கோபிநாத் கம்யுனிசம் பற்றி பேசவில்லை என கட்டுரையில் எங்கையா வருது… நாட்டின் உண்மை நிலையை மறைத்து வல்லரசு ஆகிடுச்சு, வளர்ச்சி வந்துடுச்சு என முழுக்க முழுக்க புரூடா விட்டு இளைஞர்களை மொக்கையாக்குவது ஏன்> என்று தான் கேட்கப்பட்டு உள்ளது.

          அரசு போட்டு உள்ள நிபந்தனைகளை கூட பின்பற்றாமல் மிக ஆபத்தான முறையில் கட்டப்பட்டு உள்ள கூடங்குளம் அணு உலை குறித்து எதுவும் பேசாமல் அப்துல் கலாம் அன்னபூர்ணா ஹோட்டலில் சாப்பாடு சாப்பிட்டு விட்டு துபாய் எங்கையோ துத்துக்குடி பக்கம் இருக்கு என பைத்தியம் போல பேசிக்கிட்டு இருந்தார் என்றால் அவரை யாரும் விமர்சனம் செய்ய போறதில்லை. ஆனால் கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுக்காப்பாக உள்ளது, பயந்தால் கார் ஓட்ட முடியுமா? என அரசு பயங்கரவாதிகளின் ஊதுகுழாக பேசும் போது தான் நாளைக்கு மக்கள் கையினால் செருப்படி உனக்கு நிச்சியம் என நாட்டு பற்றாளர்கள் வெடிக்க வேண்டி உள்ளது.

            • ராமன் அய்யா..கூடங்குளம் பத்திரமானதா?
              அப்படியானால், 2 கிரவுண்டு இடம் வாங்கி.வீடு கட்டி,
              வல்லரசு தாத்தா கலாம் பாயுடன் குடியேறுங்க…
              பால் காய்ச்சி குடிக்கிற அன்னிக்கே பால் ஊத்திக்கலாம்

    • முக்கியமான விசயம்:
      எனது குடும்பத்துக்கான நிதி தேடல் வேறு விசயம்…
      பன்னாட்டு பகாசுர கம்பனிகளுக்கு(விளம்பரம்) இல்லாமல்
      ஆட்டம் காட்டும் ஒரு நிறுவனத்தை எனது குடும்பம் கொண்டுள்ளது…
      அதனால்தான் என்னால் உங்களிடம் போராடமுடிகிறது…
      உங்களின் வேண்டுகோள் ஏற்றுகொள்ளப்பட்டது…
      ஒரு புதிய நாடு உருவாகும்..( இந்த பூமிப் பந்தில் இது மிகவும் சாத்தியமான் விசயம்
      (-இந்தியா என்ற வட இந்திய பருப்பு…இங்கே வேகுவது மாதிரி இல்லாமால்,சுரண்டல்
      குறிப்பாக,பூணூல்களின் ஏமாற்று வேலைகளை நீக்கிய ஒரு நாடு நிச்சயம் உருவாகும்…எந்த பூணூலும்,செவ்வாய்,புதன்,சனி கிரகங்களுக்கு இடம் பெயர்ந்து(ஏமாந்தவன் இருந்தால்) மிளகாய் அரைக்க முயற்சி செய்யலாம்

      • @RAMADOSS KOTHANDARAMAN SEETHAPATHI
        //ஒரு புதிய நாடு உருவாகும்.//

        150 வருட பழைய கட்டுரை படித்து உருவாக்க முடியாதவர்கள் புதிய நாட்டை உருவாக்க போரீங்களா… கம்யுனிசம் என்பது செத்து போன ஓன்று. அது வெறும் fairytale கட்டுக்கதை. என்பது புரிந்ததா RAMADOSS

        இதிலே பூணுல்காரன் எங்கு வந்தான். கதையை மாற்ற வேண்டாம்.ஆட்டோ ஓரு எடுத்துக்காட்டுதான்.. கம்யுனிச தோழர்கள் பலர் விவசாயம் செய்கின்றனர். அதில் ஓரு தோழனை எனக்கு காட்டுங்கள் அந்த தோழர் கம்யுனிச கொள்கையின் அடிப்படையில் அவர்கள் தன்னிடம் வேலை பார்க்கும் கூலிகளிடம் எவ்வாறு கூலி கொடுக்கிறான் சொல்லமுடியுமா. கம்யுனிச கொள்கைப்படி அனைவரும் உரிமை என சொல்கின்றானா…

          • Yeah they have spoilt everything succesfully,

            They only missed out on colonizing south america and Africa with brutal violence funded by the catholic church and the Inquisition over native working class people,

            They are all still ruing the opportunity missed.

        • நமது முப்பாட்டனும்,அப்பனும் தூங்கிட்டாங்க..
          நாம் விழிப்புடன் போராடுவோம்…
          கொசோவா நாடு தெரியும் இல்லையா?
          நமது காலத்தில் புதிய கொடி,புதிய நாடு…
          யாருக்கெல்லாம் இந்திய பாரதமாதாவை கட்டி அழ ஆசையோ..தாராளமாக அழலாம்!

        • கம்யூனிசம் பாதையே இல்லாத இடத்தில் புதிய பாதையை உருவாக்கியது,உருவாக்குவது…உனக்கு என்ன தெரியும் கம்யூனிசம் பற்றி.பல வருடங்களாக ஊறிப்போன உன் போன்ற மனிதர்களை மாற்றி எழ எங்களுக்கு சற்று காலம் பிடிக்கும்,சறுக்கலை அழிவு என்று எண்ணாதீர்கள்.போலிகளைப் பார்த்து, உண்மைகளை எள்ளிநகயாடாதீர்கள்.பதில் சொல்லும் காலம் வருந்தப்போகிறீர்கள்.

          • @babubagath
            //கம்யூனிசம் பாதையே இல்லாத இடத்தில் புதிய பாதையை உருவாக்கியது,உருவாக்குவது…உனக்கு என்ன தெரியும் கம்யூனிசம் பற்றி.//
            டேய் மக்கா உங்க கம்யுனிசம் இதுவரைக்கும் ஓண்ணும் கிழித்தது இல்லை. கிழிக்கப்போவதும் இல்லை. அதை எள்ள நகையாடவும் இல்லை..கீயுபாவில் அதிபரின் உறவினர்கள், வடகொரியாவில் அதிபரின் மகன், கம்யுனிச ரஸ்யாவில் ராஜ வாழ்க்கை ராணுவ அதிகாரிகள்,அப்புறம் கம்யுனிச தொழிற்சங்க நிர்வாகிகள், கம்யுனிச விவசாய பண்ணைகள் என பல கம்யுனிச தோழர்களை உருவாக்கியது கம்யுனிச கொள்கைகளே.பல வருடங்களாக கம்யுனிச கற்பனைகளில் ஊறிப்போன உன் போன்ற மனிதர்களை மாற்றி எழ சற்று காலம் பிடிக்கத்தான் செய்யும்.

            • மரியாதைக்குரியவனே! உன் அறிவு மேம்படும்போதுதான் இது உனக்குப் புரியவரும்.1930ல் தாகூர் ரசியாவிலிருந்து எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது இது,”நான் ரசியாவிற்கு வராமல் இருந்திருப்பேன் எனில், என், இப் பிறவி முழுமை பெற்றிருக்காது…..இக் கல்வியறிவை நினைக்கும் போது,முப்பது கோடி முட்டாள்களுக்கும் இக் கல்வியை எங்கனம் கொடுப்பது…”என்று வருந்தினாராம்.மனப்பாடக்கல்வி எந்திரமே!எங்களுடன் விவாததிலேயே இரு உனக்கு கம்யூனிசம் பற்றி புரியவைக்கிறோம்.

      • I am reading all your responses.Cant you write anything without bringing “பூணூல்”.? If allowed, you will even say that Earth will rotate in less than 24 hours if “பூணூல்”s are not around. You are thinking for every bad thing happening, “பூணூல்” is the reason. So blind to all the good people around you. You need some therapy. Please visit a psychiatrist to get trained to see “Good in people”

  13. இப்படி குமுறி கொந்தளிக்கற மாதிரி கோபி ஒன்னும் தப்பா பேசுன மாதிரி எனக்கு தெரியல. சாதாரண கல்லூரி விழாக்களில் பேசும் உற்சாகமூட்டும் பேச்சுதான்.
    பேசறவங்க எல்லாம் உங்கள மாதிரியே communist சித்தாந்தம் தான் பேசணும் என்று எதிர்பார்ப்பது; தம்மை தவிர மற்ற சிந்தனைவாதிகள் அல்லது சாதாரண மக்கள் அடி முட்டாள்களாக நினைப்பது; தாம் தான் எல்லாம் தெரிந்த மேதாவியாக நினைப்பது – இவையெல்லாம் typical communist mentality.

    • ஆகம்

      ///பேசறவங்க எல்லாம் உங்கள மாதிரியே சொம்முனிச்ட் சித்தாந்தம் தான் பேசணும் என்று எதிர்பார்ப்பது; தம்மை தவிர மற்ற சிந்தனைவாதிகள் அல்லது சாதாரண மக்கள் அடி முட்டாள்களாக நினைப்பது; தாம் தான் எல்லாம் தெரிந்த மேதாவியாக நினைப்பது///

      அது மட்டும் அல்ல, அவ்வாறு மாற்றுக் கருத்து எழாமல் இருக்க, வினவு தரும் தீர்வு, வன்முறை வழியிலான நக்சலைட் புரட்சி.

      மாற்றுக் கருத்தை வன்முறையால் நசுக்க முற்படுவதன் மறு பெயர் – பாஸிசம், அது கம்யூனிசம் அல்ல, அங்கே ஜனநாயகத்துக்கு வேலை இல்லை.

    • உற்சாகமூட்ட வேண்டும் என்றால் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரது பிரச்சனை பற்றி பேசாமல் வடிவேலு மாதிரி தன்னை தானே அடித்துக்கொண்டு கவலை மறக்க சிரிக்க வைக்க கோபி பேசட்டும்.

      அதைவிட்டு விட்டு இல்லாத ஒன்றை மறைத்து எல்லாம் இருப்பது போல ஏன் பேச வேண்டும்…?

  14. “மாவோக்களிடம் துப்பாக்கி வாங்க பணம் இருக்கிறது தம்பிகளா”

    இலங்கையன: அதுவும் ஆயுதம் வாங்க பணம் இருக்கிறது. ஐயோ தமிழ்நாடும் நாம் பட்ட சீரழிவைப் பட்டிருமோ என்பதை நினைக்க பயமாக இருக்கிறது.

    லிஸ்ட் எல்லாம் தயாராகிவிட்டதா? துரோகிகள் எல்லாம் அடையாளம் காணப்பட்டு விட்டார்கள்??

    ஈழப்போராட்டம் கற்றுத்தந்த பாடமே உங்கள்சிந்தனைகளை ஆயுதங்களாக மாற்றுங்கள் என்பதுதான்.

    சீனாவில் மாவோ காலத்தில் என்ன நிர்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டதோ தெரியாது.ஆனால் இது இந்தியாவிலும் இலங்கையும் தவறுதலாகவே புரியவைக்கப்பட்டுள்ளது.

    ஐம்பது ஏக்கர் விவசாய நிலவுடைமைக்ககாரன் “வர்க்கஎதிரி”
    ஊரில் இருக்கும் ஒரு மொத்தவியாபாரி “முதலாளி” போன்ற எண்ணங்கள். இது ஒட்டுமொத்தமாக உழைப்பாளி மக்களுக்கு துன்பம் விளைவிப்பதும் அல்லாமல் தேசியமுதாலித்துவத்தின் இராணுவம் போலீஸ்களைக் கொண்டு உழைப்பாளர்களுக்கு அடிவாங்கி கொடுப்பதற்கு ஒப்பாகும்.

    இன்னொரு வகையில் இந்தியமுதாலித்துவத்தை தோற்கடிப்பதற்கு வழிவகைகளை தேடாமல் தந்தோரபாயங்களை ஏற்படுத்தாமல் காப்பிரேட் நிறுவனங்களுக்கு எதிராக போர் கொடி தூக்குவதற்கு ஒப்பாகும்.

    இந்தியமுதாலித்தவம் தோற்கடிக்கும் போது காப்ரோட் நிறுவனங்களும் அத்துடன் அழிந்து போகும் என்பது அரிவரிப் பாடம்.

    ஆச்சிமசாலாவை விட்டு வெகுதூரம் வந்ததிற்கான காரணங்களை வாசகர்கள் விளங்கிக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

  15. கண்முன்னே கூடங்குளம், தண்டகாரண்யா போன்ற இடங்களில் மக்கள் ஒடுக்கப்படும் பொழுது அதைப்பற்றி ஒன்றுமே பேசாது, இந்தியப் போலி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைக்கத் தூண்டுவது துடிப்பு மிக்க இளைஞர்களைக் காயடிக்கும் அயோக்கியத்தனம். இப்படிப் பட்ட அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்துவதற்கு ஒருவர் கம்யூனிஸ்டாக இருக்க வேண்டும் என்பதில்லை. அண்ணா கசாரே என்ற கோமாளியின் ஊழல் எதிர்ப்பு நாடகத்தை அருந்ததி ராய் போன்ற ஜனநாயகவாதிகள் பலர் அமபலப்படுத்தியுள்ளனர்.

  16. கல்லூரியில் ஒரு நிகழ்ச்சிக்கு யாரை அழைத்து வருவது என்று கேள்வி எழுந்த போது சீரியலில் நடித்து வரும் மாணவி ஒருவர் ‘நீயா நானா’ கோபிநாத்தை அழைத்து வர தாம் பொறுப்பேற்பதாக தடாலடியாக அறிவித்தார். ஏகோபித்த குரலில் உடனே ஆசிரியர்கள் அனைவரும் ஆரவாரத்துடன் ஒத்துக்கொண்டனர். அந்த பெண்ணுக்கும், கோபிநாத்துக்கும் இருக்கும் பழக்கத்தை எல்லாம் விசாரிக்க தொடங்கினர். அந்த நிகழ்ச்சிக்கு கோபிநாத் செட்டாக மாட்டார் என்று எனது மனம் மட்டும் அங்கு தனியாக அடித்துக் கொண்டிருந்தது. சிறிது நாட்கள் கழித்து அந்த மாணவியை அழைத்து என்னாயிற்று என்று விசாரித்ததில், கோபிநாத் வருவதற்கு ஐம்பதாயிரம் கொடுக்க வேண்டுமாம் என்றார். அதோடு கோபிநாத் திட்டம் கைவிடப்பட்டது. கோபிநாத்தை நேரில் பார்ப்பதற்கு ஐம்பதாயிரம் வேண்டும் போல!

    பணம் கொட்டி படிக்கும் இஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு உளவியல் அதிர்வு (psychological jerk) அவ்வவப்போது தேவைப்படும். அதற்கு கோபிநாத் போன்றவர்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். கோபிநாத் போன்று வேறு சிலரும் இருக்கிறார்கள். கேட்டரிங் கிங் சரத்பாபு தென்சென்னை பகுதியில் பிரபலம். ஒரு நாள் அவரை கல்லூரிக்கு அழைத்து வந்தனர். வறுமையில் உழன்ற அவரது இளமை பருவத்திலிருந்து மீண்டு வெற்றி பெற்ற மனிதர் ஆன கதையை உணர்ச்சிப் பெருக்கோடு சொல்லி முடித்தார். மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் இ மெயில் ஐ.டி மற்றும் போன் நம்பர் கொடுத்தார். அனைவருமே அவர் அருகில் சென்று தரிசித்தனர். நான் மட்டும் செல்லவில்லை. சட்டமன்றத் தேர்தலிலும் நின்றார்.

    கம்யூனிசம் தவிர்த்து அனைத்தும் பேசுகிறார் கோபிநாத். ஒருமுறை நீயா நானாவில் ஜர்னலிசம் படிக்க விரும்பிய மாணவன் தனது விருப்பத்துக்கு மாறாக இஞ்சினியரிங் படித்தை இப்படி சொன்னார் கோபிநாத். ஹோ! Parliamentary Democracy – வாட் எ க்ரேட் கான்செப்ட் இட் ஈஸ்! அதனை படிக்காமல் செய்து விட்டீர்களே என்று பெற்றோரை பார்த்து முறைத்தார். அவர் தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசுவதை கேட்க நமக்கு குமட்டுகிறது. ஆனால், அற்புதம் என்று மயங்குகிறது மத்தியதர வர்க்கம்.

    • கோபிநாத்தை பேசுவதற்கு ஐம்பதாயிரம் கேட்டார்…! இதற்கு என்ன சொல்ல சொல்கிறார்கள் 2ம் கலாம் ரசிகமணிகள்..?

  17. “இந்தியாவில் படிப்பது என்பது 1980-ல் குடும்பத்தைக் காப்பாற்ற, 1990-ல் கிராமத்தைக் காப்பாற்ற, 2000 ஆரம்பத்தில் தேசத்தைக் காப்பாற்ற, ஆனால் இன்று இந்த உலகத்தைக் காப்பாற்ற. இதை நான் சொல்லவில்லை, பிரிக் ரிப்போர்ட் சொல்லுது. அடுத்த 7 ஆண்டுகளில் உலகில் இந்தியாவில் தான் இளைஞர்கள் அதிகமென்று.”

    கோபிநாத்தின் முட்டாள் தனத்திற்கு இந்த சொற்றொடர் ஒன்று போதும்!

    ”பெண் மனம் பெரிதும் விரும்புவது தன் அழகையா? அறிவையா?” என்ற தலைப்பில் கோபிநாத் நடத்திய நீயா – நானா? நிகழ்ச்சி பற்றி பதிவு.http://hooraan.blogspot.in/2011/07/blog-post.html

  18. கற்பில் சிறந்தவள் மாதவியா கண்ணகியா?

    இப்படியான கேள்வியை கேட்டு நேரத்தை றப்பராக இழுத்து போக்கடிக்கிறது தமிழ்நாட்டு படித்தவர்க்கம்(மத்தியதரவர்க்கம்)

    அதில் கோபிநாத் வேறுயொரு மொடலில் அறிமுகமாகிறார். அவருக்கு இருக்கும் சமூக உணர்வு இந்தியகம்யூனிஸ்ட் யாருக்கும் இருந்ததில்லை போல் தோன்றும்

    உண்மை அதுவல்ல..

    சமர் ஆச்சாரிஜி யை வளர்த்துவிட்ட சிவப்புகட்சி பேரூர் ஏரிக்குள் உ.ரா.வரதராஜனை தற்கொலை செய்ய வைத்த மாக்ஸிய கம்யூனிட்கட்சி தலைமை ஆகியோரை கேள்விக்கு உட்படுத்தாத வரை இன்னும் பல கோபிநாத்துகளுக்கு கொண்டாட்டம் தான்.

    இவர்களும் புகழ்பெற்று பணத்தை குவித்த “சுப்பர்ஸ்ரார்” நடிகர்கள் தான்.

  19. விஜய் டிவி உருவாக்கிய நட்சத்திரங்கள் என்பதற்கு அடையாளம் என்ற தொகுப்பில் கோபிநாத் குறித்த விடியோ இது…
    http://www.youtube.com/watch?v=VH1SGsq-ij8

    இதில் அவர் நடத்திய நிகழ்ச்சி குறித்து பேசும் கோபிநாத்,

    கலைஞர் முதல் ப.சிதம்பரம் போன்ற மக்கள் விரோத ஆட்சியாளர்களின் ‘திறமை’ களை மெச்சுவதையும்… கல்வி என்பது உரிமை என்பதை மறுத்து வியாபாரம் அல்லது பிச்சை என நம்ப சொல்லும் சூர்யா போன்ற கழிசடை பிழைப்புவாதிகளை பாராட்டி வாழ்த்துவதையும் நீங்கள் பார்க்கலாம்…

    ’என் தேசம் என் மக்கள்’ என மாணவர்கள், பொதுமக்கள் அழுகையினை பார்த்து உச் கொட்டி விட்டு அரங்கத்துக்கு வெளியே கல்லூரிகளில் அப்துல் கலாமாக அவதாரம் எடுக்க எப்படி முடியும் என யோசிப்பவர்கள் மேற்கண்ட அளவு- பண்பாக மாறிய தொகுப்பை பார்தால் புரியும் கோபிநாத் என்ற ’சின்சியர் மேன்’ வளர்ச்சி எப்படி நிகழ்ந்தது என.

    • கோபிநாத் கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பதில் வல்லவர், மீன் பிடிக்கும் திறமை இவருடையது, ஆனால் தூண்டில் யார் தருகிறார்கள் என்று தான் தெரியவில்லை, கனவு காண சொல்லும் இரண்டாம் கலாம் தான் இவர் ….

  20. 2ம் அப்துல்கலாம் இன்றைக்கு கொக்கையாக்க வரும் இடம்: RENGANAYAGI VARATHARAJ COLLEGE OF ENGINEERING – is located at Salvarpatti Village

    http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/MADHURAI/2013/11/25/Article/251/25_11_2013_251_012.jpg

    பட்டாசு விபத்து என்ற பெயரில் அப்பாவி மக்களும், குழந்தை தொழிலாளர்களும் நித்தம் நித்தம் உயிரை இழக்கும் இடத்தில் நின்று கொண்டு “அம்மாவை அழைத்துவர ஹெலிகாப்டர் வேண்டும் என்ற திமீர் வேணும் நமக்கு” என பேசப்போகும் கோபிநாத்தின் நேர்மையை என்னவென்பது..?

    • போர்களத்திலிருந்து செய்தி கொண்டுவருகிறான் ஒற்றன்,”அன்னையே!,உனது மகன்கள் போர்களத்திலே இறந்து விட்டனர்”என்றவனை “நமது தேசம் போரிலே வென்றிருக்கிறது, வழி விடு, நான் ஆலயத்திற்குச் சென்று வணங்கவேண்டும்”என்ற வீரத்தாய்களைப்பற்றி கோபிநாத்துக்கு எங்கே தெரியப்போகிறது.முதலாளித்துவத்தில் அத் தாய்கள் இல்லை என்று ஆணவமாக நினைத்துக் கொண்டாரா?

  21. கோபிநாத் கனவுகளை ‘விற்கிறார்’ என்பது அவரது ஆளுமைக்கு கிடைக்கிற வாய்ப்பு அதை ஏன் கேள்வி கேட்க வேண்டும் என்பதே வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வளர்சி அடைய விரும்பும் கல்நெஞ்சம் போன்றோரின் கருத்து.எத்துணை முறை ஜெ தன் அராஜகம் மூலமாக ஆட்சியை இழந்தாலும் மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்பவர்கள் தான் கம்யூனிசம் தோற்று விட்டது என்று அது எங்கெல்லாம் எப்படி தோற்றது என்கிற விமர்சனங்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டர்கள். ஏன் மாட்டார்கள் என்றால் அவர்கள் ‘வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வளர்சி அடைய விரும்பும்’ தமக்கு தாமே திட்டத்தில் நம்பிக்கை கொள்பவர்களேயன்றி இந்த சமூகம் ஒரு நியாயமான சித்தாந்தம் மூலமாக ஒன்றுபட்டு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் உள்ளபடியே நம்பிக்கை இல்லதவர்கள்.

  22. // அவர்கள் ‘வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வளர்சி அடைய விரும்பும்’ தமக்கு தாமே திட்டத்தில் நம்பிக்கை கொள்பவர்களேயன்றி இந்த சமூகம் ஒரு நியாயமான சித்தாந்தம் மூலமாக ஒன்றுபட்டு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் உள்ளபடியே நம்பிக்கை இல்லதவர்கள்.//

    மிகச் சரியான விமர்சனம்..

  23. ஸ்விட் எடு கொண்டாடு………இந்தியா வல்லரசு ஆகிடிச்சாம்………..கோமாளீ கோபிநாத் சொல்லிட்டாரு……..ஏய் ஜாலி………..

  24. […] அல்லலூயா கூட்டத்தை தோலுரித்து இளைஞர்களை மொக்கயாக்கும் 2ம் அப்துல்காலம் என விமர்சித்து […]

  25. அப்துல்கலாம் கற்பனாவாதியாக இருந்தது உன்மை.ஆனால் அவர் இறந்தபோது நாடே அஞ்சலி செலுத்திய விதம் மக்கள் மத்தியில் அவர் பெற்றிருந்த செல்வாக்கு இதுபற்றி சிந்திக்க வேண்டும்.நேர்மையான வாழ்க்கை மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தியது.அதுமட்டும் தான் காரணமா.மாணவர்களை மக்களை கவருவது வெறும் சவடால் வார்த்தைகளால் மட்டுமே சாத்தியமா.செல்வாக்கின் காரணங்களை மேதாவித்தனமாக அலசாமல் புரியும்படி எனக்கு பதில் சொன்னால் நல்லது.உங்கள் மேதாவித்தனம் சில நேரங்களில் எரிச்சலாகவும் உள்ளது என்பதை புரிந்து பதில் சொல்லுங்கள்.

Leave a Reply to samaran பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க