privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்புதிய கார்ப்பரேட் வங்கிகள் : திருடன் கையில் பெட்டிச்சாவி !

புதிய கார்ப்பரேட் வங்கிகள் : திருடன் கையில் பெட்டிச்சாவி !

-

ந்து மதப் புராணக் கதையான மஹாபலி சக்கரவர்த்தி வதத்தில் வாமன அவதாரத்தில் வந்த பெருமாள் எடுத்து வைத்த மூன்றாவது அடி முக்கியமானது.  அந்த மூன்றாவது அடிதான் மஹாபலியின் தலையில் இறங்கியது. வங்கித் துறையைத் தனியார்மயமாக்குவதிலும் அப்படிபட்டதொரு மூன்றாவது அடியை எடுத்து வைத்திருக்கிறது, மன்மோகன் அரசு. முதல் அடியில், வங்கித் துறையில் தனியார் நுழைய அனுமதிக்கப்பட்டனர்; இரண்டாவது அடியில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பங்குகள் தனியாருக்கு விற்க அனுமதி அளிக்கப்பட்டது. மூன்றாவது அடியில், கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாகவே வங்கிகளைத் திறந்து கொள்ள அனுமதி அளித்து, இதன் மூலம் வங்கிகள் தேசியமயமாக்குவதற்கு முன்பிருந்த நிலையை – வங்கித் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கோலோச்சும் நிலையை மீண்டும் உருவாக்க முனைந்திருக்கிறது, காங்கிரசு அரசு.

மங்களூர் வங்கி ஊழியர் போராட்டம்
வங்கி ஒழுங்காற்றுச் சட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக செய்யப்பட்ட திருத்தங்களை கண்டித்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் மங்களூர் நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

26 இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் அனுமதி வேண்டி விண்ணப்பித்திருப்பதாகவும், தகுதி வாய்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கிகளைத் திறந்துகொள்ள உரிமம் வழங்கும் உற்சவம் ஜனவரி 1, 2014 முதல் தொடங்கி விடுமென்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த 26 நிறுவனங்களுள் டாடா, பிர்லா, எல் அண்ட் டி, ரிலையன்ஸ், டி.வி.எஸ். ஆகிய தொழில் குடும்பங்கள் மட்டுமின்றி, நவீனமான முறையில் கந்துவட்டித் தொழிலை நடத்தி வரும் முத்தூட் பைனான்ஸ் உள்ளிட்டுப் பல்வேறு ”பிளேடு” கம்பெனிகளும் அடங்கியுள்ளன.

நிதித்துறையில் அரசின் கட்டுப்பாட்டை முற்றிலுமாக ஒழித்துக்கட்டி விட்டு, அதனை முழுமையாகத் தனியார்மயமாக்க வேண்டும் என்று சர்வதேச நிதி நிறுவனங்களும், தர மதிப்பீட்டு நிறுவனங்களும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. அவர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தோடுதான் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி வங்கித் துறையில் மூன்றாம் கட்ட தாராளமயத்தை அமலாக்க முயலுகிறது, காங்கிரசு கும்பல். இந்த உண்மையை மறைத்து விட்டு, ”வங்கிச் சேவை இன்னும் இந்திய கிராமங்களை முழுமையாகச் சென்றடையவில்லை. அதனை நிறைவு செய்யும் நோக்கத்தில்தான் வங்கித் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைவதற்கு அனுமதி அளித்திருப்பதாக” நாடகமாடுகிறது, மைய அரசு. வங்கித் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிப்பதால் வாடிக்கையாளர்களுக்குத் தரமான சேவை கிடைக்கும்; அத்துறையில் நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்படும் எனப் பின்பாட்டு பாடுகிறார்கள், தனியார்மயத்தின் ஆதரவாளர்கள்.

இதே வாதத்தை முன்வைத்துதான் தனியார் வங்கிகளுக்கு அரசு அனுமதி அளித்தது. அவ்வங்கிகள் கடனை வசூலிக்க குண்டர் படையை அறிமுகம் செய்து வைத்து, தமது ‘சேவை’யை மேம்படுத்தின. ”இந்தியாவில் செயல்பட்டு வரும் 12 தனியார் வங்கிகளுக்கு நாடெங்கிலும் 15,630 கிளைகள் இருந்தாலும், இதில் 2,699 கிளைகள்தான் கிராமப்புறங்களையொட்டி அமைக்கப்பட்டிருக்கிறது” என நிதி அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சுட்டிக் காட்டியிருக்கிறது. ”50 சதவீதத்திற்கும் மேலான தனியார் வங்கிகள் 2010-11ஆம் ஆண்டில் விவசாயத்திற்கு ஒரு பைசா கூடக் கடனாக வழங்கவில்லை; பொதுத்துறை வங்கிகள் வழங்கியிருக்கும் மொத்தக் கடனில் 30 சதவீதம் மட்டுமே விவசாயத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது” என இந்திய ரிசர்வ் வங்கி பிலாக்கணம் பாடியிருக்கிறது.

கிராமப்புற சிறு விவசாயிகளுக்கும் சிறுதொழில்களுக்கும் கடன் வழங்குவதை விட, ஆடம்பர நுகர்பொருட்களுக்கும், வீடு வாங்குவதற்கும் கடன்கள் கொடுப்பதற்குத்தான் வங்கிகள் முன்னுரிமை தருகின்றன என்பது வெளிப்படையாகத் தெரியும் நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் கிராமப்பற மக்களின் நிதித் தேவையை ஈடு செய்யும் விதத்தில் தமது வங்கிகளை நடத்துவார்கள் என மைய அரசு கூறுவதை அப்பாவிகள் கூட நம்ப மாட்டார்கள்.

வங்கிகளைத் திறக்கவுள்ள கார்ப்பரேட் கும்பல் விவசாயத்திற்குக் கடன் வழங்குவதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இவ்வங்கிகளில் போடப்படும் பணம் பாதுகாப்பாக இருக்குமா என்பதுதான் முக்கியமான கேள்வி. இந்திய நடுத்தர வர்க்கப் பிரிவு, தமது பணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளிலோ அல்லது அக்கம்பெனிகள் வெளியிடும் கடன் பத்திரங்களிலோ முதலீடு செய்வதை விட, வங்கிகளில் சேமிப்பதைத்தான் நம்பகமானதாகக் கருதுகிறது.  இப்பிரிவின் இந்த மனநிலையைத் தனியார்மயத்தால் கூட மாற்ற முடியவில்லை. இந்நிலையில் அவர்களின் பணத்தைச் சேமிப்பாகப் பெற்று, அதனைப் பங்குச் சந்தைக்கு மடைமாற்றி விட கார்ப்பரேட் கும்பலுக்கு வங்கி என்ற குறுக்கு வழி திறந்து விடப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் கடனை வாங்கிவிட்டு ஏப்பம் விட்டதில் முன்னணியிலிருப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் என்பது அம்பலமாகி, அம்மோசடிகள் குறித்து இப்பொழுது சி.பி.ஐ. விசாரணை நடந்துவரும் வேளையில் வங்கிகளைத் திறந்துகொள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது திருடன் கையிலே பெட்டிச் சாவியைக் கொடுப்பதற்கு ஒப்பானது.

அப்படிப்பட்ட மோசடிகள் நடைபெறாத வண்ணம் தடுக்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டிருப்பதாகச் சமாதானம் சொல்கிறது, மைய அரசு.  இதைக் கேட்கும்பொழுது கள்ளன் பெருசா, இல்லை காப்பான் பெருசா என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்டுப் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் 7,500 கோடி ரூபாயைக் கடனாக வாங்கி, அதனைக் கட்டாமல் ஏமாற்றி வரும் விஜய் மல்லையாவைச் சட்டம் என்ன செய்து விட்டது? அதிக வட்டி தருவதாக ஆசை காட்டிப் பொதுமக்களிடமிருந்து பெற்ற சேமிப்புகளை ஏப்பம் விட்ட, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு நிதி நிறுவன அதிபர்கள் ஆயுள் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டிருக்கிறார்களா? அல்லது, ஏமாந்தவர்களுக்கு அவர்களின் பணம்தான் முழுமையாகக் கிடைத்து விட்டதா?

பங்குச் சந்தை ஊழல், 2ஜி ஊழல், நிலக்கிரி ஊழல் எனப் பல்வேறு ஊழல்களின் ஊற்றுக்கண்ணாக இருந்துவரும் கார்ப்பரேட் கும்பல், ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி ரூபா பெறுமான வரி மோசடிகளில் ஈடுபட்டு வரும் கார்ப்பரேட் கும்பல், வங்கிகளை நாணயமாக நடத்தும் என்பதற்கு ஏதேனும் உத்தரவாதமுண்டா? வங்கிகள் அரசுடமை ஆக்கப்படுவதற்கு முன்பாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தி வந்த வங்கிகளில் நடந்த மோசடிகளைக் கணக்கில் கொண்டால், எப்பேர்பட்ட அபாயத்தை மீண்டும் இந்திய மக்களின் தலையில் சுமத்த காங்கிரசு கும்பல் தயாராகி வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

-குப்பன்
_____________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2013

_____________________________

  1. இவர்கள் இதை செய்யாமல் இருந்திருந்தால் தான் நாம் யோசித்து இருக்க வேண்டும். இந்திரா காந்தி அம்மையார் வங்கிகளை தேசியமயமாக்கினார், அவரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு இந்த திருடர்கள் தனியார் மயமாக்கும் வேளையில் இறங்கி இருக்கிறார்கள். இது புது ரிசர்வ் வங்கி மேலாளர் வந்ததுமே எடுத்த முதல் முடிவு. இதுவே பா.ச.க. ஆட்சியாக இருந்திருந்தால் எப்பொழுதே நடந்து இருக்கும். இதை மறைக்க எந்த புண்ணியவான் தலைப்பு செய்தியாக வரப்போகிறானோ??? உலகில் எந்த ஒரு பொருளாதார பாதிப்பு இருந்த போதும் அது இந்தியாவை அதிகம் பாதிக்காமல் இருந்ததற்கு ஒரே காரணம் இந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தான்.தற்பொழுது அதையும் எடுத்து விடுவார்கள், எப்படி சைப்ரஸ் நாட்டில் பொருளாதார நெருக்கடி வந்தபோது இந்த தனியார் வங்கிகள் வங்கிக்கணக்கு வைத்திருந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்ததோ அது போல தான் இந்தியாவிலும் நடக்கப்போகிறது. நான்காவது அடியாக வங்கித்துறையை முழுவதாக தனியார் இடத்தில ஒப்படைத்து விடுவார்கள். பெருவாரியான நாடுகளில் அதிலும் குறிப்பாக மேலை நாடுகளில் வங்கிகள் தான் நாட்டை ஆண்டுக்கொண்டு இருக்கிறது. நம் நாட்டையும் அவர்கள் தான் ஆள போகிறார்கள் என்பதற்கான சான்று தான் இது. மக்களுக்கு நான் தனிப்பட்ட ஒரு விஷயத்தை கூற வேண்டுமானால் இதை தான் சொல்வேன். இஸ்லாமிய வங்கி முறையை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். மற்ற வங்கிகள் வெறும் காகித நோட்டுகளை சேமிப்பாக வைக்கும் நேரத்தில்,இஸ்லாமிய வங்கிகள் உண்மையான செல்வமான தங்கத்தையும் வெள்ளியையும் இருப்பாக வைக்கின்றன.வட்டியை ஒழிக்கும் அது தான் சரியாகவும் தோன்றுகிறது. ஐந்தாம் அடியாக அமெரிக்கா போன்ற நாடுகளில் தன் நாட்டின் பணத்தை எப்படி தனியார் நிறுவனம் அச்சடிக்கிறதோ அது போல நம் நாட்டிலும் கொண்டு வருவார்கள். காத்திருந்து பாருங்கள்.

    • ffff,

      // இஸ்லாமிய வங்கி முறையை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். மற்ற வங்கிகள் வெறும் காகித நோட்டுகளை சேமிப்பாக வைக்கும் நேரத்தில்,இஸ்லாமிய வங்கிகள் உண்மையான செல்வமான தங்கத்தையும் வெள்ளியையும் இருப்பாக வைக்கின்றன.வட்டியை ஒழிக்கும்//

      The saying that the Islamic banking does not charge interest is a joke. Instead it wants rent or profit sharing. இது தலையைச் சுற்றி மூக்கை தொடுவதற்கு சமம்.

      In addition, the Islamic consultants (mullahs) have to be paid to verify the transactions to see if they are halal. Finally, a share of profit also has to go to jihad. தன் கையை வைத்தே தன் கழுத்தை…

      • In addition, the Islamic consultants (mullahs) have to be paid to verify the transactions to see if they are halal. Finally, a share of profit also has to go to jihad

        எல்லாவற்றிற்கும் ஆதாரம், சரித்திரம், பூகோளம் என்று சொல்வீர்களே!!! மேற்கண்ட உங்களின் வரிகளுக்கும் ஆதாரம் தாருங்கள்.

        • it is obvious that a maulana has to certify the application.

          Islamic Banking is a fraud,they are not going to give interest free loans by any imagination.

          The share of the profit ll certainly go to jihad.

        • தமிழ்,
          // ஆதாரம் தாருங்கள்//

          1. Banks doing ‘Islamic banking’ has to employ/use ‘Islamic consultants’ to certify the ‘halality’ () of the transactions. See http://en.wikipedia.org/wiki/Islamic_banking#Advisory_councils_and_consultants

          This is like the worldwide certification racket of halal meat/medicines/cosmetics/drinks/food which nets about billions to Muhamadans

          2. I hope you won’t ask for proof of zakat on profit which goes to finance mainly jihad.

          • 1. இஸ்லாமிய வங்கி என்று வரும் போது அதில் “Islamic consultants ” – ஐ வைக்காமல் திருவரங்க ஓதுவாரையா வைப்பார்கள்.
            2). ஜகாத்தின் பணம் எதற்காக கொடுக்கப்படுகிறது என்பதை விசாரித்து பார்க்க வேண்டும். பிறகு உங்களிடம் வருகிறேன். இருந்தாலும் மொட்டைத்தாத்தா குட்டையில் விழுந்தார் என்பது போல் பொத்தாம் பொதுவாக ஜகாத் பணம் ஜிகாத்திற்கு போகிறது என்று சொல்லாமல் அதற்கும் ஆதாரம் தாருங்கள்.

    • இஸ்லாமிய வங்கிகள் உண்மையான செல்வமான தங்கத்தையும் வெள்ளியையும் இருப்பாக வைக்கின்றன.வட்டியை ஒழிக்கும் அது தான் சரியாகவும் தோன்றுகிறது

      In that system,How will you measure the wealth of the country…?
      One country produces food and and technology will still be poor where as country with goldmine will be the richest in the world.

      How will it support population growth?

      Slavery and war are the result of gold standard.

      Poor never get access to wealth and rich people will bury gold under house.

      Relgious solutions are given for that time and situation.Accepting without questioning will take you nowhere.

  2. வினவின் பார்வை சரி. அமெரிக்காவிலும் இதே தனியார் மய கதைதான். மேலும் அங்கே ரிசர்வ் வங்கியும் (ஃபெடரல் ரிசர்வ்) தனியார்தான். அமெரிக்காவில் வங்கிகள் திவாலான கதைகள் ஏராளம். அதில் பணம் இழந்த பொதுமக்கள் ஏராளம், ஏராளம். ஹர்ஷத் மேத்தா மாதிரி ஆட்கள் இந்தியன் வங்கியின் கோவணத்தை உருவியபோது, அரசாங்க மயமாக இருந்ததால் தப்பியது.

    இந்தியாவில் 9% வட்டி கிடைப்பதால் அதுவும் அரசு வங்கியில் கிடைப்பதால் கொஞ்சம் நிம்மதியாய் இருக்கலாம். இதற்கு அடுத்தபடியாக வங்கிகள் அனைத்தும் தனியார் மயமாகும்போது இந்த நிம்மதி போய்விடும். ஆனால் அதற்கு குறைந்தது 20வருடம் ஆகுமென நினைக்கிறேன். அப்படி அதுவும் நடந்துவிட்டால், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக 9% வட்டி 2அல்லது 3% த்தில் வந்து நிற்கும். பிறகு அமெரிக்க பொருளாதாரம் போல நாமும் நுகர்வோர் பொருளாதாரமாக மாறி வங்கியில் பணம் போடாமல் அதிக வட்டி தரக்கூடிய வேறு (பங்கு சந்தை போல)இடங்களில் போட்டு முதலையும் இழந்து தெருவில் நிற்கலாம்

    வேலையிலிருந்து ஓய்வு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. எல்லா ஓய்வும் செத்ததுக்கப்பறம் மொத்தமா எடுத்துக்கவேண்டியதுதான். வேலையும் நிரந்தரம் கிடையாது. மொத்தத்துல சமுதாயம் மாறும் வேகத்திற்கு நாமும் மாறி ஏதோவொரு வகையில் (ஒட்டுண்ணியாகவோ, சாறுண்ணியாகவோ)பலன் பெற்றாகவேண்டும். ரொம்பகஷ்டமா இருந்திச்சின்னா புண்ணியம் பண்ணி அடுத்த ஜென்மத்துல ஆடு மாடா பொறந்து கசாப்புக்கு போற வரை ஒரே வேலையை அதாங்க அந்த இலை தழையை மெல்லறது அதை செஞ்சிக்கிட்டிருக்கலாம்.

    மனுசனா பொறக்கறதுன்னா பின்ன சும்மாவா? டவுசர் கிழிஞ்சுருமுல்ல!

Leave a Reply to harikumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க