privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயேந்திரன் விடுதலை – பார்ப்பனக் கும்பல் கும்மாளம் !

ஜெயேந்திரன் விடுதலை – பார்ப்பனக் கும்பல் கும்மாளம் !

-

”போதிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு தரப்பு தவறியதால் சந்தேகத்தின் பலன்களை குற்றவாளிகளுக்கு அளித்து குற்றம்சாட்டப்பட்டுள்ள காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரன் உள்ளிட்ட 23 பேரையும் விடுதலை செய்கிறேன்” என புதுச்சேரி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி. முருகன் நவம்பர் 27 அன்று வழங்கிய சங்கரராமன் கொலை வழக்கின் தீர்ப்பில் கூறியுள்ளார். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் சங்கரராமன் கொலைவழக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. பிறழ் சாட்சியங்களும், நீதிபதிகளை விலைக்கு வாங்கும் முயற்சிகளும், போலீசின் ஒத்துழைப்பு என பல்வேறு சட்டவிரோத வழிமுறைகளை சங்கராச்சாரி தரப்பு பின்பற்றி தப்ப முயன்றது அப்பட்டமாகவே தெரிந்த பிறகு அவற்றின் தொடர்ச்சியாக நீதிமன்றம் அவரை நிரபராதி என அறிவித்து விடுதலை செய்துள்ளது.

ஜெயேந்திரன் - விஜயேந்திரன்
ஜெயேந்திரன் – விஜயேந்திரன்

சின்னக் காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோவிலின் மேலாளராகப் பணியாற்றி வந்த சங்கரராமன், ஒரு பார்ப்பனர். கடந்த 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி கோவிலின் வசந்த மண்டபத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த ரவுடிகளால் கொலை செய்யப்பட்டார். கோவில் கணக்கர் கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் விஷ்ணு காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. வழக்கை திசைதிருப்பும் நோக்கில் ஆறுமுகம், தில்பாண்டியன், சதீஷ், தேவராஜ், அருண் ஆகிய 5 பேர் தாங்களாகவே நீதிமன்றத்தில் ஆஜராகி சங்கரராமனைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.

அன்று மாவட்ட எஸ்.பியாக இருந்த பிரேம்குமார் (தற்போது இறந்து விட்டார்) இந்த விசாரணைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட பிறகு, நவம்பர் மாதம் 12-ம் (அன்று தீபாவளியும் கூட) தேதி ஆந்திர மாநிலம் மெகபூப் நகருக்கு சென்று அங்கு ஒரு பெரிய பூசையில் இருந்த சங்கராச்சாரியை கைது செய்தார். 2005 ஆம் ஆண்டு ஜனவரி பத்தாம் தேதி சின்ன சங்கராச்சாரியும் கைதானார்.

அப்போது தமிழகத்தில் முந்தைய ஜெயாவின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அகில இந்திய அளவில் பிஜேபி, விஎச்பி உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள் ஜெயாவுக்கு எதிராக அறிக்கைகளை விட ஆரம்பித்தன. முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட சங்கரமட பக்தர்கள் அதிகார மையங்களுடன் பேசி அவரை விடுவிக்க முயன்றார்கள். ஜெயா கும்பலோ ஏதோ நிதி மற்றும் ஈகோ பிரச்சினைகள் காரணமாக ஜெயேந்தரன் கும்பலை கட்டும் கட்டுவது என்று இருந்தது.

அடுத்தடுத்து ரவுடிகள் அப்பு, கதிரவன், ஆடிட்டர் ரவி சுப்ரமணியம், மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 25 பேர் வரை கைது செய்யப்பட்டனர். பலர் ஒப்புதல் வாக்குமூலங்களும் கொடுத்தனர். உச்சநீதி மன்றம் வரை சென்ற பிறகுதான் ஜனவரி 10 அன்று பெரிய சங்கராச்சாரிக்கு ஜாமீன் கிடைத்தது. பிறகு சின்னவருக்கும் கிடைத்தது. எழுத்தாளர் அனுராதா ரமணன் சங்கராச்சாரியின் பாலியல் மோசடி பற்றியும், 1992ல் மடத்தில் தனக்கு கிடைத்த மோசமான பாலியல் சீண்டல்களைப் பற்றியும் எழுதி அம்பலப்படுத்தினார். சங்கராச்சாரியை தண்டிக்கப்பட வேண்டும் என்பதை விடுத்து அவரது சல்லாபக்கதைகளை கிசுகிசுவாக்கி ஊடகங்கள் கல்லா கட்டின.

712 ஆவணங்களுடன் 1873 பக்க குற்றப்பத்திரிக்கையை காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். தாக்கல் செய்வதற்கு முன் வரதராசப் பெருமாள் சன்னதியில் மூலவர் சிலையின் பாதங்களில் வைத்து வணங்கப்பட்ட பிறகுதான் அந்த குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக சீனெல்லாம் போட்டார்கள். அதன்படி பார்த்தால் பெருமாளையே ஜெயேந்திரன் விலைக்கு வாங்கி விட்டார் என்று தெரிகிறது. அதன் பிறகு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் 2005 அக்டோபரில் உச்சநீதி மன்றத்தை அணுகிய சங்கராச்சாரி தரப்பு தமிழகத்தில் வழக்கு விசாரணை நடந்தால் தங்களுக்கு நீதி கிடைக்காது என்றும், எனவே புதுச்சேரிக்கு அதனை மாற்று மாறும் கோரி மனுத்தாக்கல் செய்தது. அதனை ஏற்று வழக்கை புதுவை மாவட்ட செசன்சு நீதிமன்றத்துக்கு மாற்றினார்கள் நீதிபதிகள். தமிழக அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞரும் நியமிக்கப்பட்டனர். இவையெல்லாம் கூட நீதியை விலைக்கு வாங்க சங்கர மட கும்பலுக்கு ஏதுவாக இருந்தன.

எனினும் முறையான வழக்கு விசாரணை 2009-ல் தான் துவங்கியது. ஏற்கெனவே ரவி சுப்பிரமணியம் அப்ரூவராக மாறியிருந்தார். ஆறாவது எதிரியாக இருக்கும் கதிவனை கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை கே.கே நகரில் சிலர் வெட்டிக் கொன்றனர். அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. போலீசு தரப்பில் ரவுடிகளின் உட்பகை என்று சப்பைக்கட்டு கட்டுகின்றனர்.

சங்கரராமனின் மகன் ஆனந்த் சர்மா சாட்சிகளை பதிவு செய்த சிடி காப்பி ஒன்று தனக்கு வேண்டும் எனக் கேட்டு நீதிமன்றத்தை அணுகினார். அதுவரைக்கும் விசாரணையை முடிக்க கூடாது என்றும் அந்த மனுவில் கோரியிருந்தார். ஆனால் அப்படி பதிவுசெய்யப்பட்ட சாட்சிகளின் பேச்சு அடங்கிய சிடியை அவருக்கு தரக்கூடாது என கதிரவன் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில்தான் அவரை ரவுடிகள் வெட்டிக் கொன்றனர். எதற்காக கொன்றார்கள் என்பது பற்றி விசாரணையில் இதுவரை எதுவும் தெரிய வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எல்லாம் பெரியவா சமாச்சாரம் என்பதால் ஊடகங்கள் முதல் போலிசு வரை வாய் மூடின.

முதலில் காவல்துறையினர் சேர்த்த 371 சாட்சிகளில் 187 பேரிடம் மட்டும்தான் அரசு வழக்கறிஞர் தேவராஜ் குறுக்கு விசாரணை நடத்தினார். இவர்களில் 83 பேர் பிறழ் சாட்சியங்களாக மாறிப் போயினர். பிறழ் சாட்சியங்களில் முக்கியமானவர் பத்மா, செத்துப்போன சங்கரராமனின் மனைவி. கொலையாளிகளை போலீசு காட்டிய புகைப்படத்தை பார்த்த பிறகுதான் தெரிந்து கொண்டோம் என்று நீதிமன்றத்தில் சாட்சி சொன்னார். இன்னொருவர் அவரது மகள் உமா. அவரால் சாட்சிகளை அடையாளம் காட்ட முடியாமல் போய் விட்டதாம். இதற்கு பின்னால் ஏராளமான பணமும், அதீத மிரட்டல்களும் இருந்திருக்கிறது. அப்போதே சங்கர மட கும்பல் கிட்டத்தட்ட விடுதலை ஆனது மாதிரிதான்.

போலீசாரும் தங்கள் பங்குக்கு இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்களை டம்மியாக உருவாக்கியிருந்தனர். கொலையாளிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை கூட அடையாளம் காட்ட அரசு தரப்பு சாட்சிகளால் முடியவில்லை என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்த பொருட்களையும், ஆதாரங்களையும் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க காவல்துறையினர் தவறி விட்டனர் என்றும் நீதிபதி விமர்சித்துள்ளார். தலைமை விசாரணை அதிகாரியான எஸ்.பி. சக்திவேல் மீது நீதிமன்றம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும் முதலில் விசாரணை அதிகாரியாக இருந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை ஆணையாளர் பிரேம்குமாருக்கு இந்த வழக்கில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருந்ததாகவும், சங்கராச்சாரிக்கு உச்சநீதி மன்றம் பிணை வழங்கிய போது அவர் வெளியிட்டிருந்த கருத்துக்களில் அது வெளிப்படுவதாகவும் நீதிபதி முருகன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். (பிரேம்குமார் 2010 ல் மரணமடைந்து விட்டார்)

உண்மையில் நடந்தது என்ன? ஜெயா கும்பலுக்கும், சங்கர மட கும்பலுக்கும் இருந்த நிதி, ஈகோ பிரச்சினைகள் வெயிட்டாக பஞ்சாயத்து செய்யப்பட்டதா என்பது தேவ ரகசியம்.

குற்றப்பத்திரிக்கையில் சங்கர மடத்தின் ஐசிஐசிஐ வங்கிக் கணக்கில் கொலை நடந்த பிறகு எடுக்கப்பட்ட பணக் கட்டுகளில் இருந்த நோட்டுக்களின் வரிசை எண்களும், பின்னர் கொலையாளியிடம் கைப்பற்ற பணக் கட்டுகளில் இருந்த வரிசை எண்களும் ஒன்றாகவே இருந்தது என்பதும் ஒரு ஆதாரமாக குறிப்பிடப்பட்டிருந்தது. மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யரின் செல்பேசியை வழக்கமாக சங்கராச்சாரிதான் பயன்படுத்துவார் என்றும், அந்த எண்ணில் இருந்து கொலையாளிக்கு பேசப்பட்ட அழைப்புகள் பற்றிய ஆதாரங்களும் இணைக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கிடையிலான சில கடிதங்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த வழக்கில் நீதிபதிகளிடம் பேரம் பேசும் வேலையையும் காஞ்சி சங்கராச்சாரி தரப்பு செய்தது. இப்போது தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதி நான்காவதாக நியமிக்கப்பட்டுள்ளவர். மூன்றாவதாக இருந்தவர் பெயர் நீதிபதி ராமசாமி.

சங்கரராமன் கொலை வழக்கு2011-ல் ஆகஸ்டு மாதம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் சுந்தரராஜன் புதுவையில் நடைபெறும் சங்கர்ராமன் கொலை வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில் ஆதாரத்திற்காக ஒரு சிடியையும் இணைத்திருந்தார். அதில் நீதிபதி ராமசாமி, காஞ்சி சங்கராச்சாரி மற்றும் கௌரியம்மாள் என்றொரு பார்ப்பன சீமாட்டி ஆகியோர் உரையாடும் ஆடியோ பதிவு இருந்தது. நீதிபதியின் பணத்தேவை, பெரியவாள் பணம் தர முன்வருவது, அடுத்து ஆக வேண்டியதை பார்க்க சொல்வது என எல்லாம் வெட்ட வெளிச்சமாகவே 8 வாரத்திற்குள் இம்மோசடியை விசாரித்து அறிக்கை தரச் சொன்னார்கள் நீதிபதிகள். அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் நீதிபதி ராமசாமி நீக்கப்பட்டு முருகன் நீதிபதியாக வந்து அமர்ந்தார். 2012 பிப்ரவரியிலும் இப்படி நீதிபதிகளிடம் பேரம் பேசும் வேலை வெளியாகவே அப்போதும் வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதி மன்றம் தற்காலிகமாக தடை விதித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தங்களது குற்றப் பத்திரிகையில் கொலை செய்யும் நோக்கில் சதித்திட்டம் தீட்டிதான் சங்கர ராமன் கொலை நடைபெற்றதாக போலீசார் தெரிவித்திருந்தனர். தற்போது சதித்திட்டம் தீட்டியதை போலீசு தரப்பு நிரூபிக்க தவறி விட்டதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். ஏற்கெனவே சோமசுந்தர கனபாடிகள் என்ற பெயரில் சங்கர மடத்தில் நடைபெறும் நிதி முறைகேடுகள் மற்றும் பாலியல் முறைகேடுகளை அம்பலப்படுத்துவேன் என சங்கராச்சாரிக்கு அடிக்கடி கடிதம் எழுதி வந்தார் என்றும், ஒரு கட்டத்தில் இதனை பொறுக்க முடியாத இந்துக்களின் புனித குருவான சங்கராச்சாரி ரவுடி அப்பு தலைமையில் ஒரு கூலிப்படையை ஏவி கோவில் சன்னிதியில் வைத்தே சங்கரராமனை போட்டுத்தள்ள திட்டமிட்டு செயல்படுத்தினார் என்பது தான் போலீசின் குற்றப் பத்திரிக்கை சொல்வது. ஆனால் ஆதாரங்களை தருவதில் மோசடி செய்து சங்கராச்சாரியை விடுவித்திருக்கிறார்கள்.

நீதிமன்றத்தில் சாட்சிகளின் சிடி பதிவுகள் வேண்டும் என முன்னர்  கேட்டிருந்த சங்கர ராமனின் மகன் ஆன்ந்த் சர்மா, பிறகு தனக்கும் தன் குடும்பத்தினருக்கு போலீசு பாதுகாப்பு வேண்டும் என்றும், அரசு வழக்குரைஞரை மாற்ற வேண்டும் என்றும் கோரி நீதிமன்றத்தை நாடினார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, கடந்த 5-ம் தேதி புதுவை நீதிமன்றத்துக்கு வந்த ஆனந்த சர்மா தனது மனுவை திரும்ப பெறுவதாகவும், விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்குவதில் தனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் கூறி விட்டார். கடைசியில் சங்கராச்சாரி சாட்சிக்காரன் காலில் விழுவதை சண்டைக்காரனின் பையன் காலில் விழுவதே மேல் என்பதை புரிந்து கொண்டு, பணத்தாலும், ஆள் படை பலத்தாலும் சங்கர்ராமன் மகனை ‘விலைக்கு’ வாங்கி விட்டார் என்பது அப்போதே அப்பட்டமாக வெளிப்பட்டு விட்டது.

இன்று நீதிமன்றத்துக்கு வந்த அப்ரூவரான ஆடிட்டர் ரவிசுப்பிரமணியம் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வந்திருந்தார். தீர்ப்பு வெளியான பிறகு அரசு வழக்கறிஞர் தேவராஜ் கூறுகையில் ”தமிழக அரசுடன் கலந்தாலோசித்து பின் மேல்முறையீடு செய்வோம். சங்கரராமன் குடும்பத்தினரின் பிறழ்சாட்சியம் காரணமாகத்தான் 23 பேரும் விடுதலையானார்கள்” என்றார்.

சங்கரராமன் மகன் ஆனந்த் சர்மா கூறுகையில் ”அதிர்ச்சியாக உள்ளது. எனது தந்தை தனாகவே தன்னை கொலை செய்து கொள்ளவில்லை. சிலர் வந்துதான் வெட்டி கொலை செய்துள்ளனர். அப்படியிருக்க, ஒரு சிலருக்காவது தண்டனை கிடைத்திருந்தால் இந்த தீர்ப்பை நம்பியிருக்க முடியும். அடுத்து என்ன செய்வது என்பது பற்றி குடும்பத்தினருடன் பேசிய பிறகுதான் முடிவு செய்வோம்” என்று சொல்லியிருக்கிறார்.

போலீசு, நீதித்துறை போன்ற அரசுத் துறைகள் மட்டுமின்றி, சங்கரராமன் குடும்பத்தினரையும் விலைக்கு வாங்கியோ மிரட்டியோ ‘நீதி’யை நிலைநாட்டி உள்ளார் லோககுரு சங்கராச்சாரி. தங்களுக்குள் உள்ள பணபேரம், நிலபேரம், மருத்துவமனை பேரம், அதிகார பேரம் என எல்லாவற்றையும் ஜெயா தரப்பும், சங்கராச்சாரி தரப்பும் இடைப்பட்ட ஒன்பது ஆண்டுகளில் ஏறக்குறைய செட்டில் பண்ணி விட்டனர். எனவே அரசு தரப்பில் மேல்முறையீடு செய்தாலும் அது ஒரு பேருக்குதான் இருக்குமே தவிர குற்றவாளியை தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்காது.

நீதி கேட்டு கொலையுண்ட சங்கரராமன் குடும்பம் எதாவது வம்பு செய்யாமல் இருக்க பணத்தால் அடித்திருக்கிறார்கள், முடியாதபோது மிரட்டல். அதற்கு பயந்துதான் ஆனந்த் சர்மா முதலில் போலீசு பாதுகாப்பு கேட்கிறார். மிரட்ட மாட்டோம் என சங்கராச்சாரி தரப்பு உறுதிசெய்த பிறகு புகாரை வாபஸ் வாங்குகிறார். தீர்ப்பு வெளியான பிறகு ”நேரடியாக கொலையில் ஈடுபட்டவர்களையாவது தண்டித்திருக்கலாம்” என்று இப்போது கூறுகின்றார். அதாவது அவரே சங்கராச்சாரி விடுவிக்கப்படுவதை எதிர்க்க விரும்பவில்லை. இவர் எப்படி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முன்வருவார்? கடைசியில் நிரபராதியாகி விட்டான் நாடறிந்த ஒரு கொலைகார சங்கராச்சாரி.

”தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்பதை முன்னரே நாங்கள் எதிர்பார்த்தோம்” என சங்கராச்சாரி தரப்பு வழக்கறிஞர் திமிராக கூறியுள்ளார். தீர்ப்பை கேட்ட பிறகு காரில் திருச்செந்தூருக்கு கிளம்பியுள்ளார் சங்கராச்சாரி. தன் வைர வேலையும், அறநிலையத்துறையின் உதவி ஆணையர் சுப்பிரமணிய பிள்ளையின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளையும் முப்பது ஆண்டுகள் முடிந்த பிறகும் கண்டறிய முடியாத முருகனை வணங்க, தன் காலடியில் வைத்த குற்றப் பத்திரிக்கையை நிரூபிக்க வக்கில்லாத வரதராச பெருமாளின் சன்னிதியில் இருந்து ஒரு ஏ-1 அக்யூஸ்டு போகிறான். திருச்செந்தூர் முருகனுக்கு தான் இருக்கும் கடற்கரையை மணற்பரப்பையே மொத்தமாக ஸ்வாகா பண்ணும் வைகுண்டராசனை தட்டிக் கேட்க துப்பில்லாத போது பாவம் காஞ்சிபுரம் வந்து அவரால் எப்படி புலன்விசாரணை செய்து சங்கரராமனுக்கு நீதி வழங்க முடியும்.

தீர்ப்பை வரவேற்ற சு.சாமி, ”இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் சங்கராச்சாரியை கைது செய்த ஜெயா அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் வழக்கு தொடருவேன்” என்று கூறியிருக்கிறார். தர்மம் வெற்றி பெற்றிருப்பதாக நடிகர் எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறார். இப்படி பார்ப்பன கும்பலும், ஆர்.எஸ்.எஸ் வானரங்களும் ஜெயேந்திரன் விடுதலை குறித்து கும்மாளம் போடுகின்றன. இறுதியில் இது ‘இந்து’ தேசம்தான் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது என்ற பார்ப்பனத் திமிர் கரை புரண்டு ஓடுகிறது.

நேற்று சென்னை சேத்துப்பட்டு சங்கர மடக் கிளையில் சங்கராச்சாரியின் விடுதலைக்காக 300 பேர் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டார்களாம். எந்த தெய்வத்திடம் என்றுதான் தெரியவில்லை. குற்றவாளியை அநீதியாக காப்பாற்றிய அந்த தெய்வத்தின் பெயர் ஜெயலலிதவா என்று தெரியவில்லை.

சாமானிய மக்களுக்கு நீதி கிடைப்பது குதிரைக் கொம்புதான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி இருக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு நீதி மறுக்கப்படுவதுதான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சங்கர ராமன் பார்ப்பனராகவே இருந்தாலும், எதிர்த்தது ஒரு ஒரு மடாதிபதியை என்பதால் அவருக்கும் நீதி மறுக்கப்படும் என்பதுதான் ‘இந்து’ தேச நீதித்துறையின் சார்புநிலை. பணமும், அதிகார பலமும், பார்ப்பனிய கட்டுமானங்களும் தான் நீதிபதிகளின் மனச்சாட்சியையும் ஆள்கிறது என்பதும் நிரூபணமாகி உள்ளது.

–    வசந்தன்

  1. சூத்திர பெருமக்களே பேரரிவாளனுக்கு துாக்குல போடக்கூடாதுன்னு உயிர்தன்னி போக கத்தி இரத்தம் சிந்தி போராட்டம் பன்னிங்களே துரும்பு அளவுக்கு ஏதாச்சும் நடந்ததா…??

    ஆனா இங்க பாருங்கோ…அவாள் யாரும் போராட்டம் பன்னாமலேயே உலகரிய ஒரு கொலை செஞ்சும் வெளிய வந்துட்டா…!! இப்போ தெரியுதா பெரியாரோட பார்பனிய எதிர்ப்பு ஏன் வந்துச்சுன்னு…!! நீயெல்லா உசுப்பி விட்டா யோசிக்காம அருவாள எடுத்துட்டு சண்ட போடத்தான் இலயாக்கி அம்பி….! அவாளே ஆள விட்டு கொலை செய்யுவா…அப்படியே மாட்டிக்கிட்டாலும் அவாள வெச்சு வெளிய வந்துடுவா..! ஆனா நீங்க சூத்திர முன்டம்னு தெரியாம இப்படியே சாதி சண்ட போட்டு ஒருத்தர ஒருத்தன் அடிச்சுட்டு சாவுறீங்க…அப்படியே சாவுங்கோ…அவாள் இவ்வளோ நேத்திக்கு மடத்துல பொம்பநாட்டியோட மஜா செஞ்சுட்டு இருப்பா….!!!

    #இன்றைய இளைஞர்கள் பார்பனியம் எத்தனை ஆபத்தானது என்பதை சங்கரராமன் கொலை வழக்கின் இந்த தீர்ப்பின் மூலமாவது உணர வேண்டும்…!! உணர்வார்களா….

    யார் யாரோ கேட்கின்றனர். தமிழ் இனமே நீயேன் கேட்க மாட்டேன் என்கிறாய்
    “100-க்கு 97-பேர் நாமதான் இருக்கிறோம். பார்ப்பனன் 3-பேர்தானே இருக்கின்றான்? அந்த 3- பேருக்காகவே சட்டம், ஆட்சி என்று வைத்துக் கொண்டானே ஏன்? என்று எவனாவது கேட்கிறானா?”

    — தந்தை பெரியார் —

    “””” வைணவம் தோற்றது !! சைவம் வென்றது !!

    நீதி வழங்கிய நீதிமான் தமிழ் கடவுளாம் (பெயர்- முருகன்)

    அம்மையாரின் அடுத்தகட்ட நடவடிக்கையால்
    வைணவம் மீண்டெழுமா மா மா மா ??? “””””

    தீர்ப்பு சொன்ன நீதிபதிக்கும் நல்ல பதவி உயர்வு உண்டு என்று நினைக்கின்றேன் , இப்போ இது தானே டிரண்ட்

    சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து வந்த நீதிபதியிடம் , வழக்கில் இருந்து தம்மை விடுவிக்கும்படி ஜெயேந்திரர் பேரம் பேசிய ஒலிநாடா அண்மையில் வெளியாகி அத்தனை ஊடகங்களிலும் ஒளிபரப்பானது.

    அந்த ஒலிநாடாவின் உண்மைத்தன்மை பற்றி ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய சைபர் குற்றப் பிரிவு போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது .அதற்கு சைபர் பிரிவு போலீசார் ஆறு மாதம் கழித்து உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த பதில் என்ன தெரியுமா ?

    # அந்த சிடி கர்ரப்ட் ( Corrupt ) ஆகிடுச்சுங்க .. அதுனால அதுல என்ன இருக்குன்னு கண்டுபிடிக்க முடியலைங்க

    ஹ ஹா 2013 நல்ல கமெடி தான் போங்கோ தமிழக அரசு, பிராமியத்தினை ஒழித்திட உதவிய எம் மக்கள் நாசமாக போகட்டும் என்று இன்று ஊருக்கு ஊரு டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அழித்து கொண்டு இருக்கிறாள், இன்னும் கொஞ்சம் நாள்தான் எதிர்க்க ஆள் இன்றி இருக்கும் ஊரில் அவள் வைத்தது தான் சட்டம் என்று இருப்பர்கள் பார்க்கத்தானே போகிறீர்கள். இது முன்னோட்டமே ? திராவிட பெயர் துணையோடு ஆட்சிக்கு வந்த பிராமண கோடாரி கொம்பாக இருக்கும் இவளின் சதி தெரியாமல் இருக்கும் அப்பவிகாளாக எம் மக்கள் , தீர பழிதீர்க்கும் பிராமண கூட்டம் திரும்பவும் உருவாகுமோ அக்ராஹார சங்கடம் ,

    இப்போதே உங்கள் தெருவுக்கு போக வேறு வழி பாருங்கள்,

    சங்கடத்தை தீர்க்கும் அந்த சங்கட சங்கரானே காக்க வேண்டும் எம் தமிழினத்தினை

    ஆத்தா ஆட்சியில் உள்ளே போன கொலைகாரப் பாவிகள்………….

    ஆத்தா ஆட்சியிலேயே வெளியே வந்துட்டானுக……………

    தமிழக அரசுடன் ஆலோசனை செய்த பிறகு அப்பீல் போவாங்களாம்……………..போவாங்களா?

    சங்கரராமன் குடும்பத்தாரின் பிறழ்சாட்சியமே அனைவரும் விடுதலையானதற்கு காரணம் என்கிறார் அரசு வழக்குறைஞர்………..

    அப்பீல் செஞ்சா தெய்வக்குத்தம் ஆகிடும்னு வுட்டுருவாங்களா?

    • வாய்மையே வெல்லும்…!! தெய்வம் இருக்கிறது..!! பிராமண துவேஷத்திற்குத் தோல்வி..!!

      • ஆனா அதுக்கு ஊத்தவாயன் குடுத்தது 20 கோடி….இதையும் சேத்து எழுதுங்கோ…..

  2. அது மட்டும் அல்ல இங்கே கவனிக்க பட வேண்டியது ஒன்று கொலை செய்து விட்டோம் என்று எந்த கொலைகாரன் வந்து சரணடைந்தானோ அவனை பிடித்து விசாரித்தால் தெரிந்து விடும் யார் இவர்களை ஏவியது என்று, மேலும் அக்ரோசமாக இருந்த சங்கராமன் மனைவி தற்போது எதுவும் கூறாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை, இருக்கும் ஒரு மகனும் மிச்சமாகவேண்டும் என்ற எண்ணமா ? கொலை நடந்து இடையில் பார்பண எதிர்ப்பில் இருந்து உதித்த ராஜ கலைஞர் கருணாநிதி கூட இந்த கொலை சம்பந்தமகா எந்த ஒரு கல்லை கூட நகர்த்தவில்லை யென்பது ஏன் என்று தெரியவில்லை , பிராமணனை கொண்றால் பழி வரும் என்றா ? அல்லது அவன் கொண்றது பிராமணன் என்ற கருத்தாலா என்று தெரியவில்லை ? ஆனால் ஊர் அறிந்த கொலைகாரான் அழகாக சிக்க வைத்து விட்டான் கடவுள் ஆனால் சூத்திரன் தன்னுடைய மடமையால் மறுபடியும் மடையான் ஆனான்

    • அதான் சாமி.. பாப்பான இருந்தாலும் தலித்தா இருந்தாலும் ஏழையா இருந்தா … அம்புட்டுதேன் என்பதுதான் தீர்ப்பின் சாரம்….

      • அது மட்டுமா…பாப்பானா பொறந்துட்டா, எவ்வளவு நல்லவனா இருந்தாலும் பெரியாரிஸ்ட்களின் / திராவிடர்களின் அயோக்கியத்தனத்திற்கு ஆளாகி கஷ்டப்பட வேண்டியிருக்கும்…9 வருடம் அவரைப் போட்டு படுத்தி இருக்கிறார்கள்…அவரைக் கிண்டல் செய்தவர்கள், இப்பொழுது மன்னிப்பு கேட்பார்களா?For all the character assassination done by vinavu and others, will they honestly write an apology now that he has not been proved guilty? நேர்மை இருந்தா அதை செய்யுங்க முதல்ல…

        • அப்படி அவங்க மன்னிப்பு கேட்டா, ஊத்தவாயன் விடுதலையாக நீதிபதி முருகனுக்கு குடுத்த 20 கோடி பணத்த திருப்பி குடுத்துறுவானா…….

          • //நீதிபதி முருகனுக்கு குடுத்த 20 கோடி பணத்த// பொய் சொல்லனும்னு முடிவு பண்ணியாச்சு…ஏன் 20 கோடி-னு சொல்றீங்க…50 கோடி-னு சொல்லுங்க..

  3. இடையில் ஐந்து ஆண்டுகள் கலைஞர் ஆட்சி நடந்தது. அது பற்றி கட்டுரை எதுவும் பேசவில்லை.

  4. குற்றவாளியை அநீதியாக காப்பாற்றிய அந்த தெய்வத்தின் பெயர் ஜெயலலிதவா என்று தெரியவில்லை.-சரி தான் என்ன சந்தேகம்-சங்கர் திருநெல்வேலி

  5. மூவர் தூக்கு பற்றியும் கூடங்குளம் பற்றியும் சமீபத்தில் ஒரு பதிவும் இல்லையே

  6. சுஷ்மா சுவராஜ் மகிழ்ச்சி தெரிவிக்கிறார். குருமூர்த்தி போன்ற ஆர் எஸ் எஸ் அறிவாளிகள், ஜெயேந்திரனை சிக்க வைக்க வேண்டும் என போடப்பட்ட பொய் வழக்கு தோற்று நீதி வென்றுவிட்டது என அங்கலாய்க்கின்றனர். சு.சாமி ஜெயலலிதா மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறுகிறார்.

    சங்கராமன் மகன், என் தந்தை தானாக சாகவில்லை என்று கூறுகிறார்.

    வாழ்க ஜனநாயகம்!!!!

  7. இன்னும் கொஞ்ச நாளைக்கு உங்க புலம்பல் தாங்காது!

    உங்களுக்கு சாதகமா தீர்ப்பு வந்தா சரி இல்லைனு வந்தா கண்டிப்பா சதி!!! என்னவோ போங்க…

    அவர் இவஙக் கொலைசெய்ததை நீங்க பார்த்தா மாதிரி எழுதறிங்களே? இதுவே மாட்டினது ஒரு முஸ்லீம் மத தலைவரா இருந்திருந்தா உடனே இந்துதுவா வெறினு சொல்லியிருப்பிங்க..

    ஒன்னும் மட்டும் உண்மை.. நமக்கு எது உண்மைனு தெரியவேண்டிய அவசியம் கிடையாது… நமக்கு வேண்டாதவர்கள் மாட்டுவது தான் முக்கியம்.. மாட்டினா சரி இல்லைனா சதி!

    • என் நகம் வெட்டப்பட்டாலே என் பக்தர்கள் கொதித்துவிடுவார்கள் என 2004ல் கொக்கரித்த ஒரு கிரிமினலை எதிர்க்க கூடாது என நீங்கள் பேசுவதிலிருந்தே தெரிகிற்து நேற்று ராமகோபாலன் சொன்ன மகிழ்ச்சி அடையும் பக்தகேடிகள் யாரை என்று…

  8. தமிழனும் நல்ல தீர்ப்பு குடுப்பான் என்று நிரூபனம் ஆகியுள்ளது…!!

  9. இரு சங்கராச்சாரிகளும் விடுதலை ஆனதற்கு பார்ப்பனீய பின்புலம் காரணம் என என்னால் கருத முடியவில்லை. தினகரன் ஊழியர்கள், தா கிருஷ்ணன் கொலை போன்ற ஒரு விஷயம்தான் இதுவும். பணபலமும் அதிகாரமும் உள்ள ஒருவன் தப்பிக்கிறான்.

    ————————————————————————

    கூலிக்கு கொலை செய்தவர்களிடம் இருந்த நோட்டுகளின் சீரியல் நம்பரை ஆதாரமாக ஏற்கிறீர்கள். ஆனால், அப்சல் குரு வாடகைக்கு எடுத்த வீட்டில் பாராளுமன்ற தாக்குதலில் இறந்த தீவிரவாதிகள் தங்கினர் என அந்த வீட்டு உரிமையாளர் சொன்ன சாட்சியத்தையோ, பாராளுமன்றத்தில் கைப்பற்றப் பட்ட வெடிபொருள்களும், மேலே சொன்ன வீட்டில் கிடைத்த வெடிபொருள்களும் ஒரு கலவையிலானவை என்பது போன்ற ஆதாரங்களையோ நீங்கள் ஏற்பதில்லை. அறிவுப் பூர்வமாக அன்றி அவரவர் விருப்பு வெறுப்புகளுக்கு தக்கவாறே நிலைப்பாடுகளும் அமைகின்றன.

    ————————————————————————-

    இரண்டு சங்கர் ஆச்சாரிகளையும் ஜீவ சமாதி ஆக்கி விட்டால் நன்றாக இருக்கும். அவர்களாக செய்ய மாட்டார்கள். பக்தர்கள்தான் முன்னின்று நடத்தி முடித்து விட வேண்டும். லோகம் க்ஷேமமடையும்.

  10. “சிறப்பு” நீதிபதியே தீர்ப்பு சொல்கிறார்…
    புடுச்சேரியில் எல்லாமே ” தள்ளாட்டத்துடன்” இருக்கும்…
    அதனால் என்ன:
    எவனாவது இனிமேல் காஞ்சி மடத்தைப் பற்றிப் பேசினால்….கோவில்ன்னுகூட பாக்கமாட்டோம்…
    போட்டு தள்ளிவிடுவோம்….இருக்கவே இருக்கு புடுச்சேரி நீதிமன்றம்…இருக்கவே இருக்கார் “சிறப்பு” நீதிபதி

  11. யாரங்கே ………..அந்தப்புரம் தயாராகட்டும் ……..ஆன்மீக லீலைகள் தொடரட்டும் …..பெண் பக்தைகளின் வருகை தொடரட்டும் ……சங்கர ராமன் குடும்பத்தினர் பெரியாரைபின்பற்றுபவர்கள்
    என்ற உண்மையை உரக்கசொல்வொம்……ஆதி சங்கரனுக்கே அல்வா கொடுத்து ஆரம்பிக்கப்பட்ட மடமல்லவா ?இனி மனு நீதியைக்காப்பாற்றுவோம் என சபதம் எடுப்போம் …..கூப்பிடு சும்மா உட்கார்ந்திருக்கும் நம்ம சாதிக்காரன் சச்சின் டெண்டுல்கரை ……….சின்னசுவாமி பந்துடன் காத்திருக்கிறார் பவுலிங் போட!ஆசிவாங்க வருபவன் குடும்பத்துடன் வரவேண்டுமென்பதை கட்டாயமாக்கு ….!என்ன எஸ்.வி .சேகர் தலைதெறிக்க திரும்பி ஓடுகிறாரா …..?வெட்கம்….வெட்கம்…!

  12. “இனி எங்களை தண்டிக்க முடியாது..” ராமகோபாலன் முதல் குருமூர்த்தி வரை பார்ப்பன கும்பல் வெளிப்படையாக கொக்கரிக்கிறது.

    தினமணியில் குருமூர்த்தி கட்டுரையிலிருந்து…

    அப்படியானால் உண்மையான குற்றவாளி யார்? விசாரணை அதிகாரியிடம் 2004 ஆம் ஆண்டு நான் எழுப்பிய அதே கேள்வியை காவல்துறை எழுப்பினால் ஒருவேளை அதற்கு விடை கிடைக்கக் கூடும். ஆனால், காலம் கடந்துவிட்ட பிறகு ஆதாரங்களையும், சாட்சிகளையும் தேடிக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. அப்போதே செய்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?

    http://dinamani.com/editorial_articles/2013/11/28/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81—%E0%AE%92%E0%AE%B0/article1915075.ece

    இதையே தான் நேற்று புதிய தலைமுறையிலும் ராமகோபாலன் பேசினார்.

  13. கடைசியில் நிரபராதியாகி விட்டான் நாடறிந்த ஒரு கொலைகார சங்கராச்சாரி.இனி அடுத்த கொலைகாரன் பிரதமராக வருவான்.

  14. அதிசயம், ஆனால் உண்மை:
    கலியுக அதிசயம். மக்கள் எல்லாரும் ஓடியாங்க, ஓடியாங்க. வினவுக்கு திடீர் என்று இந்திய சனநாயகம், கிரிமினல், சிவில், தண்டனை சட்ட நடவடிகைகள், போலீசு, அரசுத்(ப்ராசிக்யூஷன்)தரப்பு மீதெல்லாம் நம்பிக்கை வந்திடுச்சு, மக்களே, இது மாதிரி பயாஸ்கோப்பு போனா வராது, வாங்க, வாங்க, வாங்க. இந்த ஒர்ர்ர்ரே ஒர்ர்ர்ரு வழக்கில் மட்டும் அரசுத்தரப்பால் சுமத்தப்பட்ட குற்றம் அப்படியே உண்மை.
    போலீசு என்றாலே பொய்க்கேசு என்று முழங்கும் வினவுக்கு – அப்சல் குரு, அஜ்மல் கசாப், சாந்தன், பேரறிவாளன், முருகன் போன்றவர்கள்மேல் குற்றம் சுமத்தப்படும்போது அப்பாவி நிரபராதிகள் மேல் போலீசு பொய்க்கேசு போட்டதாகக் கதறும் வினவுக்கு – ஜெயேந்திரர் வழக்கில் மட்டும் போலீசு தயாரித்த குற்றப்பத்திரிகை, செட்அப் பண்ணிய சாட்சிகள் எல்லாம் ஒலகமகா உண்மையாத் தெரியுது. இந்த சீனை மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் என்மேல வருத்தப்படாதீங்க. ஓடியாங்க, ஓடியாங்க, ஓடியாங்க……..

  15. சங்கர ராமன் தன்னை தானே கொலைசெய்துக்கொண்டார் என சொன்னாலும் சொல்லும் நிதிகளால் நிரப்பபடும் நீதிகள், சங்கராச்சாரியார் என்ன சாதாரண “அப்சல் குரு” வா..? அவர் ஜகத் குருவல்லவா…? குருவை தண்டிக்கும் உரிமை சிஷ்யர்களுக்கா..? அபத்தம் வாழ்க நிதி சாரி நீதி

    • அதான?அப்சல் குரு என்ற அப்பாவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையை சொல்லி மாளாது

  16. டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு செய்திகள் கொடுக்க ஆரம்பித்த நேரம்… ஒருநாள் சங்கரராமன் வந்தார். ‘சங்கர் சார், இந்த காமாட்சியம்மன் சந்நிதியில் நடக்கும் அக்கிரமத்தை எழுத மாட்டேளா… குடிச்சிட்டு பூஜை பண்றான்… வெளிப் பிரகார மண்டபத்துக்குள் சாயங்காலம் ஆச்சுன்னா யாரும் போக முடியாத அளவுக்கு அசிங்கம் நடக்குது.. அங்கங்க நிரோத் உறை கிடக்குது. எல்லாத்தையும்விட கொடுமை, மூலஸ்தானத்தில் அம்மனுக்கு சிறப்பாக நடக்கும் தங்க, வெள்ளி நாணய அபிஷேகம் முடிஞ்சதும், அந்த நாணயங்கள் எல்லாம் குறிப்பிட்ட நபரின் தனி கணக்கில் போய் சேருது… இதையெல்லாம் எப்போ எழுதுவேள்,’ என்று வந்து நின்றார்.
    “ஸாரி சங்கரராமன்… ஒரு வார்த்தை கூட இதுபத்தி இப்போ இருக்கிற பேப்பர்ல எழுத முடியாது,” என்றேன். ‘என்னண்ணா சொல்றேள்…’ என சற்று அதிர்ச்சியுடன் கேட்டபடி வெளியேறினார் சங்கரராமன். Reference:http://namathu.blogspot.in/2013/11/blog-post_4798.html

  17. தினகரன் மூணு பேர் எரிப்பு,அண்ணாமலை உதயகுமார் கொலை,அண்ணா நகர் ரமேஷ் கொலை,பனையூர் ரெட்டை கொலை,சாதிக் பாஷா கொலை ,தா கிருஷ்ணன் கொலை இதெல்லாமும் பார்ப்பன கும்பல்தான் செய்து தப்பித்தது..அதையும் குறிப்பிடுங்கள்

    • கரக்ட் பிரகாசு.. அதானே.. அவாளும் பண்ணா.. நாமளும் பண்றோம்… கணக்கு சரியாடுத்தா…? சும்மா ஏதாச்சும் சொல்லிண்டு…

  18. சங்கர மடத்தில் அடிக்கடி பிணங்கள் விழும் ! அசிங்கம் நடக்குது. அங்கங்க நிரோத் உறை கிடக்குது.!

    சங்கரராமனும் சங்கர மடமும்… ஒரு ப்ளாஷ்பேக்!

    மடத்தில் அடிக்கடி பிணங்கள் விழும். இளம் ஆண் பிணங்கள். அதனை எந்த செய்தித் தாளிலும் செய்தியாகப் பார்க்க முடியாது. அப்படியே வந்தாலும், மின்சாரம் தாக்கி பலி என்பதோடு நின்றுவிடும். பெரும்பாலும் குருகுலத்தில் படிக்கும் மாணவர்கள் அல்லது வெளி மாநில இளம் பக்தர்கள் இப்படி ஷாக்கடித்து இறந்திருப்பார்கள் –

    டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு செய்திகள் கொடுக்க ஆரம்பித்த நேரம்…
    ஒருநாள் சங்கரராமன் வந்தார். ‘சங்கர் சார், இந்த காமாட்சியம்மன் சந்நிதியில் நடக்கும் அக்கிரமத்தை எழுத மாட்டேளா… குடிச்சிட்டு பூஜை பண்றான்… வெளிப் பிரகார மண்டபத்துக்குள் சாயங்காலம் ஆச்சுன்னா யாரும் போக முடியாத அளவுக்கு அசிங்கம் நடக்குது.. அங்கங்க நிரோத் உறை கிடக்குது. எல்லாத்தையும்விட கொடுமை, மூலஸ்தானத்தில் அம்மனுக்கு சிறப்பாக நடக்கும் தங்க, வெள்ளி நாணய அபிஷேகம் முடிஞ்சதும், அந்த நாணயங்கள் எல்லாம் குறிப்பிட்ட நபரின் தனி கணக்கில் போய் சேருது… இதையெல்லாம் எப்போ எழுதுவேள்,’ என்று வந்து நின்றார் சங்கரராமன் .

    எஸ் ஷங்கர் (Shankar is Spl Correspondent in Oneindia Tamil)):

    ஒரு செய்தியாளனாக என்னால் மறக்க முடியாத நபர், நண்பர். காஞ்சிபுரத்தில் நான் இருந்த நாட்களில் தினசரி காலையும் மாலையும் என்னை தவறாமல் சந்திக்க வந்துவிடுவார். அவருடன் ஒரு மெல்லிய துண்டு போர்த்திக் கொண்டு அவரது மகன் கொழுக் மொழுக்கென்று வந்து நிற்பான். சின்னகாஞ்சிபுரத்தைச் சேர்ந்த மகேஷ் என்ற நண்பர்தான் சங்கரராமனை அறிமுகப்படுத்தி வைத்தார்.

    ஒவ்வொரு கோயிலிலும் நடக்கும் முறைகேடுகள் பற்றி துல்லியமாக புள்ளிவிவரம் தருவார் சங்கரராமன். எந்தக் கோயிலில் என்ன விசேஷம், அதன் வரலாறு, இப்போதுள்ள நிலைமை என எனக்குத் தேவையான விவரங்களை தினமும் தருவது அவர் வழக்கம். முடிந்தவரை தமிழகத்தின் அனைத்து கோயில்கள் பற்றியும் எனக்குப் புத்தகங்கள் தந்திருக்கிறார்… ஒரு நாள் விட்டு ஒருநாள் நான் எழுதிய கோயில் கட்டுரைகளை இப்போது தொகுத்தாலும் தனிப் புத்தகம் தேறும். அதற்கான பெருமை சங்கரராமனுக்குத்தான்!

    ஒரு முறை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு 400 ஏக்கர் நிலமிருந்தும் ஒரு மூட்டை நெல்லுக்கு வழியில்லை என்ற தகவலை ஆதாரங்களோடு தந்தார். ‘குத்தகைதாரர்கள் தெய்வத்தையே ஏமாற்றும் கொடுமையை யாரும் எழுதமாட்டறாளே’ என குமுறினார். அதை படங்களோடு முதல் பக்க செய்தியாக்கினோம். சில தினங்களில் வரதராஜருக்கு வரவேண்டியவற்றில் ஓரளவுக்காவது வர ஆரம்பித்ததை மகிழ்ச்சியோடு சொல்லி, அந்தக் கோயிலின் பிரசித்தி பெற்ற பிரசாதமான ‘படி இட்லி’ – புதினா சட்னியை கொடுத்துவிட்டுப் போனார்!

    இந்தக் கோயிலில் நடந்த இன்னொரு அக்கிரமம்… கட்டாய அர்ச்சனை டிக்கெட் விற்பனை. அதாவது கோயிலுக்குள் நுழையும்போதே இந்த டிக்கெட்டை பணம் கொடுத்து பெற்றே தீர வேண்டும். கிட்டத்தட்ட நுழைவுச் சீட்டு. இது மிகப் பெரிய மோசடி என்பதை கவனத்துக்குக் கொண்டு வந்தார் சங்கரராமன். அப்புறமென்ன.. முதல் பக்க செய்தியானது. அதன்பிறகு, அந்த டிக்கெட் கவுன்டர் காணாமல் போனது.

    சங்கர மடத்தில் எதிர்மறையாக என்ன நடந்தாலும், அது செய்தியாக வெளிவரக் கூடாது என்பது எழுதப்படாத உத்தரவு. எனவே புதிதாக வந்த என்னிடம்தான் அவர் சங்கர மடத்து சமாச்சாரங்களை அதிகமாகப் பகிர்ந்து கொள்வார்.

    அந்த மடத்தில் அடிக்கடி பிணங்கள் விழும். இளம் ஆண் பிணங்கள். அதனை எந்த செய்தித் தாளிலும் செய்தியாகப் பார்க்க முடியாது. அப்படியே வந்தாலும், மின்சாரம் தாக்கி பலி என்பதோடு நின்றுவிடும். பெரும்பாலும் குருகுலத்தில் படிக்கும் மாணவர்கள் அல்லது வெளி மாநில இளம் பக்தர்கள் இப்படி ஷாக்கடித்து இறந்திருப்பார்கள்.

    அதி நவீன வசதிகள் அனைத்தும் கொண்ட சங்கர மடத்தில் ஏன் அடிக்கடி ஷாக் அடிக்கிறது என்பது குறித்து சங்கரராமன் சொன்ன பின்னணி பயங்கர ஷாக்கான சமாச்சாரம்!
    ஜெயேந்திரரைப் பார்க்க வரும் வெளி மாநில, வெளிநாட்டுப் பக்தர்கள், தரும் ரொக்க – தங்க காணிக்கைகள் குறித்து அவர் அடிக்கடி கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தார். சங்கரராமனுக்கு ஜெயேந்திரர் வைத்திருந்த பெயர் துஷ்டன்! நேருக்கு நேர் பார்த்தால் பக்கத்திலிருப்பவர்களிடம் ‘இந்த துஷ்டப் பய எதுக்கு வந்திருக்கான் கேளு.. அவனை முதல்ல போகச் சொல்லு’, என்பாராம். இதுவும் சங்கரராமன் சொன்னதுதான்.
    எழுத்தாளர் அனுராதா ரமணன் ஜெயேந்திரர் மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகளை, தொன்னூறுகளிலேயே பலரிடமும் சொன்னவர் சங்கர்ராமன்.

    பல முறை தன்னை யாரோ துரத்தியதாகவும், தாக்க முயன்றதாகவும் சங்கரராமன் சொல்வார். ஆனால் அதை பெரிதாக நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு நாள் தன்னை சங்கர மடத்து ஆட்கள் அடித்துவிட்டார்கள் என்று கூறி, முழங்காலில் ரத்த காயத்துடன் வந்தார்.
    அதன் பிறகு அவரைப் பார்த்தாலே மற்ற நிருபர்கள் தெறித்து ஓட ஆரம்பித்தனர். ‘இதுக்கு வேற வேலயே இல்ல. கண்டுக்காதீங்க… இதுமேலயும் தப்பு இருக்கு,’ என்றனர்.
    ஒரு கட்டத்தில் சங்கரராமன் தரும் எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை என்னால் செய்தியாக வெளியிட முடியவில்லை. காரணம், அலுவலகத்தில் பலரும் சங்கர மடத்தின் அறிவிக்கப்படாத பிஆரோக்களாக செயல்பட்டதுதான்.

    இதனால் நானே கூட சில சந்தர்ப்பங்களில் சங்கரராமனைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டேன். ஆனால் அந்த மனிதர் புரிந்து பக்குவமாகத்தான் நடந்து கொண்டார்.
    டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு செய்திகள் கொடுக்க ஆரம்பித்த நேரம்… ஒருநாள் சங்கரராமன் வந்தார். ‘சங்கர் சார், இந்த காமாட்சியம்மன் சந்நிதியில் நடக்கும் அக்கிரமத்தை எழுத மாட்டேளா… குடிச்சிட்டு பூஜை பண்றான்… வெளிப் பிரகார மண்டபத்துக்குள் சாயங்காலம் ஆச்சுன்னா யாரும் போக முடியாத அளவுக்கு அசிங்கம் நடக்குது.. அங்கங்க நிரோத் உறை கிடக்குது. எல்லாத்தையும்விட கொடுமை, மூலஸ்தானத்தில் அம்மனுக்கு சிறப்பாக நடக்கும் தங்க, வெள்ளி நாணய அபிஷேகம் முடிஞ்சதும், அந்த நாணயங்கள் எல்லாம் குறிப்பிட்ட நபரின் தனி கணக்கில் போய் சேருது… இதையெல்லாம் எப்போ எழுதுவேள்,’ என்று வந்து நின்றார்.
    “ஸாரி சங்கரராமன்… ஒரு வார்த்தை கூட இதுபத்தி இப்போ இருக்கிற பேப்பர்ல எழுத முடியாது,” என்றேன். ‘என்னண்ணா சொல்றேள்…’ என சற்று அதிர்ச்சியுடன் கேட்டபடி வெளியேறினார் சங்கரராமன்.
    ஆனால் அவருடனான நட்பில் மாற்றமில்லை. நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் வரதராஜ பெருமாள் கோயிலுக்குப் போனாலே போதும், எங்கிருந்தாலும் ஓடி வருவார்… ஒவ்வொரு பிரகாரம், சந்நிதிகளுக்கும் அழைத்துப் போய் கோயிலின் பெருமை சொல்வார். தவறாமல் படி இட்லி பிரசாதம் பெற்றுத் தருவார். அந்த ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள், கற்சங்கிலிகள் குறித்து அவர் தரும் விளக்கம் சிறப்பாக இருக்கும்.
    கடைசியாக 2001-ம் ஆண்டின் டிசம்பர் மாதம் என்னைப் பார்க்க படி இட்லியோடு வந்திருந்தார் சங்கரராமன்.

    பத்திரிகைகள் கைகொடுக்காத நிலையில், ஒரு நாள் தன்னுடைய சொந்த பெயரிலே ‘எச்சரிக்கை’ என்ற தலைப்பில் ஜெயந்திரர், விஜயேந்திரர், ரகு மற்றும் மேலும் சிலர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அதை திருத்திக்கொள்ளும்படி கேட்டு ஜெயந்திரருக்கு அனுப்பி வைத்தார்.
    அடுத்த நான்காவது நாள், சங்கரராமன் ஒரு நாற்காலியோடு மல்லாக்க ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துப் பதைத்தேன்!
    இதையெல்லாம் விலாவாரியாக சொல்லக் காரணம், சங்கரராமன் என்ற மனிதர் ஜெயேந்திரருக்கு எந்த அளவுக்கு பெரும் தலைவலியாகத் திகழ்ந்தார் என்பதைச் சொல்லத்தான்! -எஸ் ஷங்கர்

    LinK: http://namathu.blogspot.in/2013/11/blog-post_4798.html

    SourCe: http://tamil.oneindia.in/news/tamilnadu/a-personal-experience-with-sankarraman-188377.html#

    AUTHOR PROFILE:

    The article is published by S.SANKAR(Shankar is Spl Correspondent in
    our Oneindia Tamil)

    http://tamil.oneindia.in/sitemap/authors/shankar.html

    https://plus.google.com/113406318869319724898/posts

  19. கேரள சினிமா உலகம் இப்போது சந்தோசத்தில்..
    12 மணி படத்துக்கு ரேப் சீனுக்கு 2 ஆசாமிகள்(காஞ்சியில்)
    இருப்பதை அறிந்து….அதுவும் சாமியார் காஸ்டுயுமில் ரேப்
    ரொம்ப நன்னாவே இருக்கும்? சரிதானா அம்பி?

Leave a Reply to அப்புக்குட்டி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க