privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்சுப்புணி சொன்னதிலிருந்து பேதி நிக்கவே இல்லடா அம்பி..

சுப்புணி சொன்னதிலிருந்து பேதி நிக்கவே இல்லடா அம்பி..

-

சங்கராச்சாரி, வாஜ்பாயி
சங்கராச்சாரியும் வாஜ்பாயும்

த்தன நாள் கஷ்டத்தை கக்கத்துல வச்சுண்டு நான் பட்ட அவஸ்தை அந்த பகவானுக்கும் நேக்கும்தாண்டா தெரியும். அப்பப்பா எத்தனை ஏச்சு பேச்சு! எத்தனை அலைக்கழிப்பு! காமாட்சி விளக்கு, காஷாயம், அர்த்தஜாம பூஜைன்னு ஆன்மீக சமாச்சாரங்களோட புழங்கிண்டிருந்த என்னை காராகிரகத்துக்கு அனுப்ப இவாளுக்கு எப்படி மனசு வந்தது? மத்தில வாஜ்பாய் மாமா ஆட்சி நடக்குற தைரியத்துல அன்னைக்கு ஒரு பிரஸ்மீட்டுல நாலு வார்த்தை கூடுதலா பேசிட்டேன். அதுக்காக இந்த பொம்மனாட்டி என்னை என்ன பாடு படுத்திடுத்து பார்த்தேளா?

ஆந்திராவுல சிவனேன்னு கிடந்தவனை ஒரு போலீஸ்காரன் வரியா இல்லை கையைப் பிடிச்சு இழுத்துட்டு போகவான்னு கேக்குறான். அந்த பதட்டத்துல அவனாண்ட பூணூல் தட்டுப்படுதான்னு செக் பண்ண முடியுமா இல்ல அவன் என்ன ஜாதின்னு கேக்கத்தான் முடியுமா சொல்லுங்கோ.. மனச கல்லாக்கிகிட்டு கார்ல ஏறிட்டேன். அப்போ, இந்த தின்னுட்டு தூங்குற சின்னப்பய “நேக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னா பேஷா அழைச்சுண்டு போங்கோ”ன்னு சொல்றான். இதுக்குத்தான் வாரிசா நாம பெத்த புள்ளை இருக்கணும்குறது. அந்த சமயத்துலதான் நேக்கு இந்த பங்காரு, கல்கி சாமியாருங்க மேலேயெல்லாம் பொறாமை வந்துட்டுது.

போலீஸ் காவலில் சங்கராச்சாரி
போலீஸ் காவலில் சங்கராச்சாரி

நான் அப்படி என்னடா தப்பு பண்ணினேன்? முருகன் சூரனை என்ன பண்ணினார்? கிருஷ்ணன் கம்சனை என்ன பண்ணினார்? சிவன் தன் மருமான் மன்மதனை என்ன பண்ணினார்? அதெல்லாம் விடுங்கோ… நீங்கல்லாம் கொசு கடிச்சா என்ன செய்வேள்? நீங்கள்ல்லாம் வதம் பண்ணினா நியாயம். எனக்கு மட்டும் இபிகோ முன்னூத்தியேழா? அதுவும் பெருமாள் கோயில்லயே மர்டரான்னு சிலர் புலம்பறதா கேள்விப்பட்டேன். ஏண்டா மாபாவிகளா.. அதுக்காக நாமக்காரவாளே கவலைப்படலை, உங்களுக்கு ஏன் மேலும் கீழும் எரியறது? ஸ்பாட்டை எல்லாம் முடிவு பண்ண நான் என்ன தெலுங்கு வில்லனா? அது அனுப்பி வச்ச அப்புவோட வசதிக்காக இருக்கலாம் இல்ல அழைச்சுண்ட பெருமாளோட விருப்பமா இருக்கலாம். இடையில என்னை ஏன் இழுக்கறேள்? சங்கர்ராமன் பையனே வெட்டினவாளுக்கு மட்டும் தண்டணை கிடைச்சா போதும்னு சொல்றான். ஆனா இந்த பக்தியில்லாத மனுஷாதான் என்னை கோத்து விடணும்ங்கறதுலேயே குறியா திரியறா. அவாள்ளாம் ஒண்ணை நினைவுல வைக்கணும், மனுநீதிக்கு அப்புறம்தான் மனுஷாளோட நீதியெல்லாம்.

மடத்தோட தொடர்பில் இருந்த பொம்மனாட்டிகளுக்கெல்லாம் செலவு பண்ணினேன்னு பத்திரிக்கையெல்லாம் எழுதினா.. நான் கேக்குறேன் மடத்து சேவை செய்யிறவாளுக்கு மடம் பணம் தராட்டா வேற யாருதான் செய்வா? நான் அவாளுக்கு மட்டுமா பண்ணினேன்? இந்த பேப்பர்காரவாளுக்கு பக்கம் பக்கமா விளம்பரம் தரல? அதை ஒரு அறிக்கையா கொடுக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆயிருக்கும்?? என்னண்ட பணம் வாங்கி தின்னுட்டு எனக்கெதிரா சாட்சி சொன்ன ரவி சுப்பிரமணியன் மாதிரிதாண்டா இந்த பத்திரிக்கைக்காரவாளும். என்ன செய்ய, நன்றி கெட்டவா சகவாசமும் நமக்கு தேவைப்படறதே!!

மனுநீதியை காப்பாத்தற என்னையே மனு போட்டு பார்க்கும்படியா வச்சுட்டா.. ஜட்ஜு போஸ்டுக்கு ஆளை ரெக்கமண்டு பண்ற என்னையே ஒரு ஜட்ஜு முன்னால கையை கட்டி நிக்க வச்சுட்டா. ஆனானப்பட்ட தொழிலதிபரெல்லாம் கால்ல விழுந்து ஆசி வாங்குற என்னையே மல்லாக்க படுத்த வாக்குல வாக்கு மூலம் தர வச்சுட்டா.. சீனாவுக்கு யாத்திரை போறச்சே கூட போர்வெல் போட்டு தண்ணி குடிச்சவன் நானு, என்னை சென்ட்ரல் ஜெயில்ல வெந்நீர் வாளி தூக்க வச்சுட்டாடா. டிவியில அருளுரை சொன்ன என்னை ஒரு சப் இன்ஸ்பெக்டர் அக்யூஸ்டுன்னு கூப்பிட்டாண்டா. என்னை பெட்டிஷனர்னு கூப்பிட வைக்கவே நம்மவாளெல்லாம் ரொம்ப சிரமப்பட்டுட்டா. அப்போவெல்லாம் நேக்கு யாருமே இல்லையான்னு அழுதேன்.

அப்போதான் பகவானா பார்த்து குருமூர்த்தி, சோ ராமசாமி, சுப்புரமணியன் சாமின்னு பலரை அனுப்பினான். மயிலாப்பூர், மாம்பலம் மாமியெல்லாம் கச்சேரியைத் தவிர வேற எதுக்காவது சேர்ந்தாப்ல வெளியே வந்து பார்த்திருப்பேளா? அவாள்ளாம்கூட எனக்காக மனித சங்கிலி அமைச்சாடா.. நேக்கே கண்ணுல தண்ணி வந்துடுத்து. முடிஞ்சா அவா எல்லாருக்கும் ஒரு தங்க சங்கிலி வாங்கித் தரணும். ஆனா அதுக்கும் இந்த பீடை ஜென்மங்கள் ஏதாச்சும் கிண்டல் பண்ணி வைக்கும்.

ஆனாலும் சமயத்துல நம்ம சப்போர்டர்ஸ் கூட ஏதாச்சும் வினையா பண்ணிடறா. நம்ம சுப்புணிய பாருங்கோ, எனக்காகவும் நம்ம மதத்துக்காகவும் எவ்வளவோ பண்ணிண்டுருக்கான். நம்ம தீர்ப்பு வந்ததும் வாய வச்சுகிட்டு சும்மாயில்லாம ஜெயலலிதா மன்னிப்பு கேக்கணும்னு சொல்றான். அதை கேட்டதுலேருந்து எனக்கு பேதி நிக்கவேயில்லை. கார்த்தாலேருந்து ரெண்டு கட்டு வாழையிலை ஆயிடுத்துடாம்பி. நான் சுப்புணிக்கு ஒன்னேயொன்னு சொல்லிக்கிறேன் “நாமல்லாம் ஊரான் குடியை கெடுக்கத்தான் பூமிக்கு வந்திருக்கோம். நம்ம காலை நாமளே வார வரலை”.

sankaracharya-courtநம்ம குருமூர்த்தியை பத்தி சொல்லலைன்னா நேக்கு போஜனம் கிடைக்காதுடா. நான் அரஸ்ட் ஆன நாள்ல இருந்து அவன் இந்தியன் எக்ஸ்பிரஸ்ல மாஞ்சு மாஞ்சு எழுதுறான்டா. தீர்ப்பு வந்த மக்கா நாளே தினமணில முக்கா பக்கத்துக்கு ஒரு கட்டுரை எழுதினான் பாரு, காவியம்டா அது. அவனுக்கு கொஞ்சம் புலமை மட்டும் இருந்ததுன்னா நமக்கு இன்னைக்கு ஒரு மாணிக்கவாசகரே கிடைச்சிருப்பார். அப்பேற்பட்ட குருமூர்த்தியே தன் கட்டுரையில உண்மை குற்றவாளிகள கண்டுபிடிக்கணும்னு போற போக்குல சொல்றாண்டா. இன்னொரு இலைக்கட்டுக்கு ஆர்டர் பண்ற மாதிரிதான் இவா பேச்செல்லாம் சமயத்துல ஆயிடறது. பத்தாத்துக்கு தீர்ப்பு வாசிக்கறச்சே ஒரு பிரம்மஹத்தி “ சாமி நீதி ஜெயிச்சுடுச்சு”ங்கறான்.. நேக்கு ஈரக் குலையெல்லாம் நடுங்கிடுத்து. நாம் ஜெயிச்சோம்னு சொன்னா ஆகாதா, வயசான காலத்துல எனக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிடுத்துன்னா இந்த லோகத்த யார் காப்பாத்தறது?

அப்பப்போ கசமுச வீடியோ பார்க்குறதுக்காக இண்டர்நெட்டை பார்க்கறச்சே, பலரும் நமக்கு எதிரா பேசறது புரியறது. அதை எழுதறெதெல்லாம் சின்னப்பயலுகளா இருக்கா. நம்ம சப்போர்ட்டர்செல்லாம் சஷ்டியப்பபூர்த்தி முடிஞ்சு ஒரு மாமாங்கம் ஆன மாதிரி இருக்கறதுகள். நேக்கு இதெல்லாம் சரியா படலடா அம்பி. இண்டர்நெட் பாக்கற பழக்கம் ஆரம்பிக்கறச்சே அதை கட்டி ஆண்ட நம்மவாளெல்லாம் இப்போ எங்கே? சூத்திரால்லாம் கம்பியூட்டர் வழியா வந்து கருவறையை கைப்பற்றிடுவாளோன்னு நேக்கு பயமா இருக்கு. ஒன்னு அரசாங்கத்தை தூண்டிவிடுங்கோ இல்லை ஒரு வைரசை அனுப்பியாவது இவாளையெல்லாம் ஒடுக்குங்கோ.

என்னைப் பத்தி சொன்ன அவதூறுக்கெல்லாம் இப்போ பதில் சொல்லிடறேன். லேடீஸ் ஹாஸ்டல்ல எனக்கு ஒரு சொகுசு அறை கட்டிண்டதா அரசாங்க வக்கீல் டிவியில ஒரு முறை சொன்னார். ஆமா, அந்த பெண்டுகள்ளாம் என்னை நம்பின்னா அங்க இருக்கா.. அவாளை பத்திரமா பார்த்துகறது என் பொறுப்போல்லையோ, அதான் அங்க எங்களுக்கு ஒரு ரூம் கட்டினோம். நம்ம மோடி புள்ளாண்டான் சமாச்சாரத்தை கேட்டதுக்கு பிறகுதான் நேக்கே இந்த காரணம் உறைச்சது. ஒரு எழுத்தாளர்கிட்ட ஏடாகூடம் பண்ணினேன்தான். அவா நட்சத்திரப்படி நம்மளாண்ட ஒத்துப் போயிருக்கனும். கிரகநிலைகள் சாதகமா இல்லாததால கொஞ்சம் சிக்கலாயிடுத்து. ஒத்துக்குவான்னு நினைச்சு பண்ணிட்டேன் (தருண் தேஜ்பாலுக்கு ஒரு நமஸ்காரம்), பிராமணாளா வேற போயிட்டா அதனால மன்னிச்சுக்குங்கோ.

பால சுவாமிகளுக்கு பூக்கூடையில் வச்சு புளூ ஃப்லிம் சிடி கொடுத்ததா ஒரு கம்ப்ளெயின்ட் சொல்றா. ஆமா அதையெல்லாம் பப்ளிக்காவா எடுத்துண்டு வர முடியும்? மடம்கறது நாலுபேர் உலாவற இடம், அங்கேயெல்லாம் கொஞ்சம் லஜ்ஜையோடதான் நடந்துக்க முடியும். அதோட இல்லாம நம்ம சின்னவன் கொஞ்சம் அசமஞ்சம். கோயில் செலையெல்லாம் அவனுக்கு புரியறதில்லை. அதனால ஒரு கிளாரிஃபிகேஷனுக்காக பார்த்திருக்கலாமோல்யோ? அது மட்டுமா, ஆதிசங்கரரே சவுதர்ய லஹரி பாடினவர்தான். நம்ம அம்பியும் அப்படி ஏதாச்சும் டிரை பண்ணி இருக்கலாமோனோ?

நம்மவா எல்லோரும் ஒன்னை புரிஞ்சிக்கனும். சிவபெருமானே “பிட்டுக்காக” மண் சுமந்து பிரம்படி வாங்கியிருக்கார். அதைப்போல இதுவும் நம்ம மடத்துக்கு வந்த சோதனைன்னு நினைச்சுக்குங்கோ. ஒரு பிராமணனை கொன்னதால வந்த பிரம்மஹத்தி தோஷம் இந்த தீர்ப்போட போச்சுன்னு நினைச்சுக்கோங்கோ. பகவான் அந்த கறையெல்லாம் துடைச்சுட்டார். அதனால பக்தாளெல்லாம் மீண்டும் மடத்துக்கு அடிக்கடி வரனும். அதைவிட முக்கியம் நம்மாத்து பொம்மனாட்டிகளையும் அழைச்சுண்டு வரணும்.

ஹரஹர சங்கர..ஜெய ஜெய சங்கர.

– வில்லவன்

  1. உங்க வாதப்படி அவாள் சாட்சிகள் முதல் ஜட்ஜ்வரை எல்லாவற்றையும் விலைகொடுத்து வாங்க முடியும். பார்ப்பனப் பத்திரிகைகள், மாமிகள், அம்பிகள் ஆதரவும் இருக்கு. அப்புறம் சுப்புணி, குருமூர்த்தி சொன்னதுக்கு எதுக்கு இவ்வளவு பயம், புலம்பல்? லாஜிக் இடிக்குதே.

    • ஆக ஆனத்துக்கு மேட்டர் பிரச்சினை இல்லை. லாஜிக் தான் பிரச்சினை…..கதிரவன் சாமிக்கு “ப்பூ” போட்டதில் லாஜிக் இருக்குதா அதுபோலதான்……..

      • லாஜிக் இல்லாம மேட்டர் எப்படி இருக்க முடியும்? லாஜிக் இல்லாத மேட்டர் ஒட்டுமொத்தமா கட்டுக்கதை ஆகிடுமே? அப்ப மேட்டரே பிரச்சினை ஆயிடுமே?

          • கதையில் எதுக்கு சார் லாஜிக்? 1% கூடத் தேவை இல்லியே? நானே லாஜிக் இல்லாத மேட்டரைக் கட்டுக்கதை என்றுதானே சொன்னேன்? கடவுள் பற்றிய கதைகள் மட்டுமின்றி எந்தக் கதையிலுமே முரண்பாடுகள் இருக்கலாம், அவை கதைக்கு அழகு சேர்க்கவும் கூடும். பகுத்தறிவுக்கு எட்டாத விஷயங்களைக் குறியீடு என்று சொல்லலாம். வழக்கு என்று வந்துவிட்டால் லாஜிக் வேண்டுமே? கடவுள் பற்றிய கதைகளுக்கும் கோர்ட் வழக்கு பற்றிய விவாதத்துக்கும் எப்படி முடிச்சு போட முடியும்?

    • என்னன்னா!! லாஜிக் இன்னமுமா புரியவில்லை. திரும்பவும் அதே மாதிரி, ஆனால் கையை மாற்றி
      ஊன்றி உட்காரும் படி “ஜெ” வைத்து விட்டால், வாழை இலையை யார் கொண்டு வந்து தருவார்கள் என்ற கவலை அவருக்கு இருக்காதா?

      • ஆக, அம்மாவுக்குக் கோபம் வந்தா கைது. அவ்வளவுதான். இல்லியா?
        குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றம் செய்தாரா இல்லையா என்பது பிரச்சினை அல்ல என்றாகிவிட்டது இல்லியா?
        இப்ப உண்மை வெட்டவெளிச்சமாகிவிட்டதா? இதைத்தான் நாங்க ஒன்பது வருஷமா சொல்லிட்டிருக்கோம்.
        குருமூர்த்தியோ சுப்புணியோ பேசினதுக்கு இவர் மீது கோபம் வந்து கைதாக வாய்ப்பு உள்ளது என்று நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். முதல் கைதுக்கும் இதுபோல் அவலை நினைத்து உரலை இடித்த அம்மாவின் ஏதோ ஒரு கோபமே காரணமாக இருந்திருக்கலாம் அல்லவா?
        (அப்போது இதுதான் சாக்கென்று அவர் மீது மானாவாரியாகக் குற்றம் சாட்டிய யாரும் – அனுராதா, சுவர்ணமால்யா உட்பட யாரும் இன்றுவரை எந்த ஆதாரமும் காட்டவில்லை. எதுவுமே நிரூபிக்கப்படவும் இல்லை. அஜ்மல் கசாப் துப்பாக்கியால் சுட்ட கேமிரா பதிவு இருந்தாலும் அப்பாவி என்று பதிவு போடுவீங்க. பெரியவர் விஷயத்தில் ஆதாரம் இல்லியே என்றால் ஆதாரங்களை அவர் அழித்துவிட்டார் என்று அதுக்கும் ஒரு பதிவு போடுவீங்க. ஆனால் சட்டத்துக்கு ஆதாரம் மட்டும்தான் தேவை.)

        • நான் ஜெ என்கிறேன். நீங்கள் அம்மா என்கிறீர்கள். இதிலேயே உங்கள் பயம் தெரிகிறது. ஜெ, தெரியாமல் (அறியாமல்) சில நல்ல விஷயங்களையும், தெரிந்து பல தவறுகளையும் செய்பவர் என்பது உலகறிந்தது. ஆனால் சங்கரனை கைது செய்தது தெரிந்தே செய்த சரியான செயலாகும்.

          எப்படீங்கண்ணா, அனுராதாவும், சொர்ணமால்யாவும் அந்த மாதிரி நேரங்களில் கேமரா எதுவும் கொண்டு செல்லாததால் சங்கரன் செய்தது சரியாகிவிட்டது என்று சொல்ல வருகிறீர்களா? அல்லது அனுராதா, சொர்ணமால்யா போன்றவர்களே இல்லை என்கிறீர்களா?

          • அனுராதா, சொர்ணமால்யா இல்லை என்று சொல்லவில்லை. கேமிரா கொண்டு செல்லவும் சொல்லவில்லை. சட்டத்துக்கு ஆதாரம்தான் முக்கியம் என்பதே என் கருத்து.இது போன்ற குற்றச்சாட்டை யார் வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானாலும் சுமத்தலாம் அல்லவா?
            ஹரிச்சந்திரனைக்கூடப் பொய்யன் என்று ஒருவர் குற்றம் சாட்ட இயலும். மன்னிக்கவும், உங்களுக்கெல்லாம் புராண நிகழ்வுகள் தேவைப்படும்போது மட்டும்தானே உண்மையாகும். உறைக்கிற மாதிரி வேறொரு உதாரணம் சொல்லட்டுமா?
            வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருந்தார் என்று கார்ல் மார்க்ஸ் மீது கூட ஒருவர் குற்றம் சாட்டலாம். (சுரணை கெட்ட ஜனங்கள் எதையும் எளிதில் நம்பிப் பின் விரைவில் மறந்தும் விடுவார்கள் என்ற தைரியத்தில்) வெட்கம் கெட்ட மீடியா அதையும் வித்தையாகக் காட்டிப் பிழைக்கும். மீடியாவில் யாரோ நாலுபேர் கூச்சலிட்டால் மார்க்ஸ் சொத்து சேர்த்தார் என்றும் நீங்கள் நம்பிவிடுவீர்களா?
            நான் கேட்க வருவது: சில நாள் மீடியா வெளிச்சத்துக்க்காக மானாவாரியாக வீசப்பட்ட குற்றச்சாட்டுகளின் கதி என்ன? அப்படியானால் வருங்காலத்தில் யார் மீதாவது இது போன்ற குற்றச்சாட்டுகள் வாரி இறைக்கப்பட்டால் அவற்றின் நம்பகத்தன்மையும் எளிதில் சந்தேகத்துக்கிடமாகும் அல்லவா? நிற்க.
            இது போன்ற வழக்குகளில் கேமிரா கண்டுபிடிப்பதற்குமுன் நீதி வழங்கப்படாமலா இருந்தது? ஒரு கேஸ் போடப்பட்டதும் சிறிதுகூட கூச்சநாச்சமின்றி சந்தடி சாக்கில் சேற்றை அள்ளி வீசிக் கூக்குரலிட்டவர்களில் ஒருவராவது வேறு ஏதாவது ஆதாரங்களைத் திரட்டி நீதியை நிலைநாட்ட முயன்றிருக்கலாமே?
            (பி.கு)
            அம்மா என்ற பதப்பிரயோகம் யாரைக்குறிக்கும் என்பது ஊரறிந்தது தானே? அது சரி, நீங்க ஏன் ஜெயலலிதா என்று முழுதாகச் சொல்லவில்லை? ஒரு வேளை உங்களுக்கு உள்ளூர பாதி பயம் இருக்கிறது என்று நான் பொருள் கொள்ளலாமா?

            • சாட்சி இல்லை என்பதால் சங்கரன் தப்பவில்லை. சாட்சியை விலை பேசி, மிரட்டி திரித்தது உலகறியும். வினவிலேயே பல கட்டுரைகள் இருக்கிறது. மேலும் நீதி வழங்கும் இடத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல, பெரும் பதவியில் (ஜனாதிபதி) இருப்பவர்கள் கூட சங்கரனின் காலுக்கு மரியாதை செய்யும் போது, தீர்ப்பு இப்படித்தானே இருக்கும் என்பது என்னைப் போன்ற அறிவிலிகளுக்கே தெரியும் போது, உங்களைப் போன்றவர்களுக்கு உரைக்காதது ஏனோ?
              பி.கு. நாதாரி சுப்ரமணி சாமியை “சு..மணி” என்று அழைப்பது அவரை பெருமைப்படுத்துவதற்காக அல்ல. அதைப் போல் தான் ஜெ என்று விளிப்பதும்.

              • சாட்சிகள் விலை பேசப்பட்டதாகச் சொல்லப்பட்டது சங்கரராமன் வழக்கில். நான் கேட்டது அனுராதா, சுவர்ணமால்யா விவகாரம். அதுபற்றி முதலில் வீசி எறிந்த சேற்றுக்குப்பின் ஆதாரபூர்வமாக எந்தத் தகவலும் இல்லை.

                • அப்பாடி, கடைசியாக சங்கரன் கொலை செய்ததை ஒத்துக்கொள்கிறீர்கள்.(சாட்சிகள் விலை பேசப்பட்டதாகச் சொல்லப்பட்டது சங்கரராமன் வழக்கில்.) அனுராதா ரமணன் சொன்னது என்ன? சங்கரமடத்தில் ஓதும் சுலோகத்தையா சொன்னார்? நாங்கள் சொன்னால் அது டுபாக்கூர். நீங்கள் சொன்னா அது டங்குவாரா?

                  • கொலை செய்ததாக எங்கே ஒத்துக் கொண்டேன்?
                    //சாட்சிகள் விலை பேசப்பட்டதாகச் சொல்லப்பட்டது சங்கரராமன் வழக்கில்.// சங்கரன் கொலை செய்ததை” என்று நீங்கள் பொருள் கொள்கிற மாதிரியாக எந்தச் சொல்லும் என் கமென்டில் இல்லையே? கொலை வழக்கு என்றுகூட நான் குறிப்பிடவில்லை. சாட்சிகள் விலைபேசப்பட்ட என்று கூட அல்ல, விலை பேசப்பட்டதாகச் சொல்லப்பட்ட என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.
                    அனுராதா ரமணன் சுலோகம் சொல்லவில்லை. கொலையைப் பற்றியும் பேசவில்லை. அவரது குற்றச்சாட்டு என்ன என்பதே மறந்துவிட்டதா? Hahaha…

                    • சங்கரராமன் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது என்று சொல்லிவிடுங்கள். இந்த விவாதம் முற்றுப் பெற்று விடும். எஸ்.வி. சேகர் என்ற பல பாத்திரங்களை நக்கிய நரி தான் ஜால்ரா அடிப்பதில் மோசமானவன் என்று நினைத்தால், நீங்கள் அவனை விட திறமைசாலியாக இருப்பீர்கள் போலிருக்கிறதே.

                    • வாதம் என்று வந்துவிட்டால் சரியாக இருக்க வேண்டும். நீங்கள் நான் சொல்லாததை சொன்னதாக எண்ணிக் கொண்டு ஒரு கமென்ட் போட்டீர்கள். அதற்கு நான் பதில் சொன்னேன். இதில் ஜால்ரா எங்கே வந்தது?

            • இது அஃசல் குருவுக்கும், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ரூதீனுக்கும் பொருந்தும் அல்லவா?

              • நீங்கள் குறிப்பிட்டவர்கள் மட்டுமின்றி நாடெங்கிலும் உள்ள குற்றம் சாட்டப்பட்ட, நிரூபிக்கப்பட்ட, தீர்ப்பு நிறைவேறக் காத்திருக்கிற எல்லாருக்குமே பொருந்தும்.
                எந்த வழக்கானாலும் அரசுத்தரப்பு குற்றத்தை நிரூபித்துவிட்டால் குற்றவாளிதான். தவறிவிட்டால் நிரபராதிதான்.ஆனால் ஒரு வித்யாசம்.அஃப்சல் குரு, கசாப் போன்றவர்கள் மீது வழக்கு முழுதாக நடத்தப்பட்டுத் தீர்ப்பு வெளியானது. கருணை மனு நிராகரிக்கப்பட்டது. அவர்கள் விஷயத்தில் போலீசு பொய்க்கேசு போட்டு விட்டதாகப் புலம்பியவர்கள் பெரியவர் விஷயத்தில் கைது நடந்ததுமே தீர்ப்பே வெளிவந்த மாதிரி எகிறிக் குதித்தார்கள் அல்லவா? அதைத்தான் சுட்டிக்காட்டுகிறேன்.
                நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது சட்டத்துக்கு சாட்சிதான் முக்கியம். சாட்சிகள் அடிப்படையில் கோர்ட் தந்த தீர்ப்பை விமர்சிப்பது தவறு என்ற மத்தியவர்க்க மனநிலையைத்தான் நான் பிரதிபலிக்கிறேன். அவ்வளவே.

                கோர்ட் தீர்ப்பு விலைக்கு வாங்கப்பட்டது என்று கூவ உங்களைப்போல் நான்கு பேர் இருந்தால் முதலில் குற்றம் சாட்டப்பட்டதே பொய் என்று கூவ என்னைப்போல் நான்கு பேர்களும் இருப்போம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

                நீதி முறையைக் கேள்வி கேட்பதானால் இதுநாள்வரை விடுதலையான யாரை வேண்டுமானாலும் சாட்சிகளை விலைக்கு வாங்கி விட்டார்கள் என்று கூற முடியும். நாட்டில் அமைதி ஒழுங்கு எல்லாமே கேள்விக்குறியாகிவிடும். என் போன்ற மத்தியவர்க்கத்தினர் நிச்சயம் அதை ஏற்க மாட்டோம்.
                மற்றொரு விஷயமும் நினைவில் கொள்ளப்பட வேண்டும். இந்த வகை வாதம் ஒரு இருமுனைக்கத்தி. பிறிதொரு சந்தர்ப்பத்தில் அது நீங்கள் ஆதரிக்கும் ஒருவர் விடுதலையாகும்போது அவருக்கு எதிராகவும் உபயோகப்படலாம் அல்லவா? அப்போது அதை எப்படி எதிர்கொள்வீர்கள்?

                • // எந்த வழக்கானாலும் அரசுத்தரப்பு குற்றத்தை நிரூபித்துவிட்டால் குற்றவாளிதான். தவறிவிட்டால் நிரபராதிதான். //

                  ராஜீவ் காந்திக்கும் போபோர்ஸ் ஊழலுக்கும் தொடர்பில்லை. கலைஞருக்கும் வீராணத்துக்கும் தொடர்பில்லை. இன்னும் தீர்ப்பு வெளிவராததால், ஆ ராசா, கனிமொழி ஆகியோருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் தொடர்பில்லை. மன்மோகன் சிங்குக்கும் நிலக்கரி ஊழலுக்கும் சம்பந்தம் இல்லை. தினகரன் ஊழியர் மூவர் எரிக்கப் பட்டதற்கும் அழகிரிக்கும் தொடர்பில்லை. இவற்றை எல்லாம் ஆனந்தம் ஏற்கிறார். இவர்கள் எல்லாம் உத்தமர்கள் என ஏற்கிறார். போக்குவரத்து போலீசார் மிகைக் குறைந்த பேர்களே லஞ்சம் வாங்கியதாக இது வரை நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டுள்ளனர். எனவே, தெரு ஓரமாக வண்டிகள் நிறுத்தி சோதனை செய்து கொண்டிருக்கும் போலீசார், வருவோர் போவரிடம் சினிமா கிசுகிசு பேசிக் கொண்டு இருக்கின்றனர்! “எங்கிட்ட 50, கோர்ட்டுக்கு போனால் 1000” என்ற வார்த்தைகளை ஆனந்தம் இதுவரை கேட்டதில்லை. அப்படியே கேட்டாலும், அதை ஒரு கனவு என்றே நினைப்பார்.

                  • //ராஜீவ் காந்திக்கும் போபோர்ஸ் ஊழலுக்கும் தொடர்பில்லை. கலைஞருக்கும் வீராணத்துக்கும் தொடர்பில்லை. இன்னும் தீர்ப்பு வெளிவராததால், ஆ ராசா, கனிமொழி ஆகியோருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும்
                    தொடர்பில்லை. மன்மோகன் சிங்குக்கும் நிலக்கரி ஊழலுக்கும் சம்பந்தம் இல்லை. தினகரன் ஊழியர் மூவர் எரிக்கப் பட்டதற்கும் அழகிரிக்கும் தொடர்பில்லை.//

                    ஆம், சட்டப்படி இவர்கள் நிரபராதிகள்தாம். எனது தனிப்பட்ட கருத்துகளோ விருப்பு, வெறுப்புகளோ எப்படி இருந்தாலும் சட்டரீதியான உண்மை அதுதான்.

                    //இவற்றை எல்லாம் ஆனந்தம் ஏற்கிறார்//

                    நான் ஏற்பது, ஏற்காதது பிரச்சினை அல்ல. நீங்களோ நானோ ஏற்பதாலோ மறுப்பதாலோ எதையும் மாற்ற முடியாது. சட்டம், நீதி நிர்வாகத்தில் குறைகள் இருப்பின் அவற்றைச் சரிசெய்யப் போலீஸையும் நீதிமன்றத்தையும் அவமதிப்பது வழியல்ல. நீண்டகால நோக்குடன் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அதற்கு நீங்கள் அந்த அமைப்புகளை மதித்து அவற்றுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். அமைப்புகளை ஒட்டுமொத்தமாக இகழ்கிறவர்களால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. அதற்கென்று இருக்கும் அமைப்புகள், FORUMகளில் குரல் கொடுத்து பொதுக்கருத்தை உருவாக்குவது போன்ற ஆக்கபூர்வ முயற்சிகளை மேற்கொள்வதுதான் வழி.

                    //போக்குவரத்து போலீசார் மிகைக் குறைந்த பேர்களே லஞ்சம் வாங்கியதாக இது வரை நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டுள்ளனர். எனவே, தெரு ஓரமாக வண்டிகள் நிறுத்தி சோதனை செய்து கொண்டிருக்கும் போலீசார், வருவோர் போவரிடம் சினிமா கிசுகிசு பேசிக் கொண்டு இருக்கின்றனர்! “எங்கிட்ட 50, கோர்ட்டுக்கு போனால் 1000″ என்ற வார்த்தைகளை ஆனந்தம் இதுவரை கேட்டதில்லை.அப்படியே கேட்டாலும், அதை ஒரு கனவு என்றே நினைப்பார். //
                    கனவல்ல, உண்மைதான், ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இந்தப் போக்குக்கு யார் காரணம்? போலீசார் மட்டுமா? 50 ரூபாய் தந்து கேசை முடிக்கிற பொதுஜனம்தானே? பொதுஜனத்தின் இந்தப் போக்குக்கு மூலகாரணம் மக்களிடம் நீதிமன்றம் பற்றிய மரியாதை இல்லாமற்போனதுதான். சாதாரண வாகன ஓட்டிகள் 50 ரூபாய் தந்து கேஸை முடித்துக் கொண்டால் நீங்கள் உதாரணம் காட்டியுள்ள நபர்கள் 50 கோடியோ 500 கோடியோ தந்து தப்பித்துக் கொள்ளத்தான் செய்வார்கள். இந்த நிலையை மாற்றத்தான் நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமென்கிறேன். அது திடீரென்று புரட்சி போல் ஒரு நாளில் செய்கிற காரியமல்ல. இதுபோன்ற பல சந்தர்ப்பங்களில் நமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நீதிமன்றத்தின் முடிவை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அமைப்புகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறையக் குறையத்தான் ஊழல் அதிகரிக்கிறது. நாம் ஒழுங்காக இருந்தால் அமைப்புகள் தாமே சரியாகும்.

                    • //ஆம், சட்டப்படி இவர்கள் நிரபராதிகள்தாம். எனது தனிப்பட்ட கருத்துகளோ விருப்பு, வெறுப்புகளோ எப்படி இருந்தாலும் சட்டரீதியான உண்மை அதுதான்.//

                      அப்போ…சட்டப்படி ஜெயேந்திரன் நிரபராதி…? “சட்டரீதியான உண்மை” என்பது இல்லாமல் “உண்மை” என்று ஒரு உண்மை இருக்கும் பாருங்க அதன்படி பார்த்தால் ஜெயேந்திரன் கொலைகாரன் தானே….ஆத்தாடி எப்டி??? இப்டி?????

                    • //அப்போ…சட்டப்படி ஜெயேந்திரன் நிரபராதி…? “சட்டரீதியான உண்மை” என்பது இல்லாமல் “உண்மை” என்று ஒரு உண்மை இருக்கும் பாருங்க அதன்படி பார்த்தால்//
                      விவாதத்தை முழுதும் நன்கு படித்துப் பார்க்கவும். சட்டத்தை மதிப்பது, நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வது பற்றிய வாதம் என்பதால் இந்த வார்த்தைப் பிரயோகம்.

                      தற்போது “உண்மை” என்று ஒரு உண்மை இருப்பதாகத் தங்களுக்குத் தோன்றுவதுபோல வழக்கு போடப்பட்ட போது “சட்டரீதியான உண்மை என்பது இல்லாமல் உண்மை என்று ஒரு உண்மை இருக்கிறது” என்று குருமூர்த்தி, மயிலாப்பூர் மாமிகள், அம்பிகளுக்கும் தோன்றியிருக்கலாம் அல்லவா? அது மட்டும் தவறா?

                      வழக்கு தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் இல்லை. உங்களிடமும் இல்லை. (இருந்திருந்தால் உங்களைப்போன்ற உண்மை விரும்பி “உண்மையான உண்மை”யை நிலைநாட்டப் போராடியிருப்பீர்கள் அல்லவா?) இங்கு வாதம் செய்யும் அனைவருமே பத்திரிகை, தொலைக்காட்சி செய்திகளின் மூலம் அறிந்தவற்றின் அடிப்படையில் தானே வாதித்துக் கொண்டிருக்கிறோம்? ““உண்மை” என்று ஒரு உண்மை” என்று நீங்கள் சொல்வது எந்த அடிப்படையில்?

                      ஆக, ““உண்மை” என்று ஒரு உண்மை” இருக்கிறது என்பது உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலான நம்பிக்கை. அவ்வளவுதானே? அதே மாதிரி நம்பிக்கை பெரியவர்களின் பக்தர்களுக்கு இருந்தால் என்ன தவறு? அவர் நிரபராதி என்பதே உண்மையான உண்மை என்று அவர்கள் நம்பினால் அதை மட்டும் அயோக்கியத்தனமாக சித்தரிக்க ஏன் முயல வேண்டும்?

                      இந்த உண்மையான உண்மையும் சட்டரீதியான உண்மையும் ஒன்றுதானா இல்லையா என்ற கேள்வி எல்லா வழக்குகளுக்குமே பொருந்தும்.
                      அறிவியல் தொழில்நுட்பம் போன்றவை எவ்வளவு வளர்ந்தாலும் மனித அறிவு
                      எல்லைகளுக்குட்பட்டதே. பல சமயங்களில் சட்ட / நீதி நிபுணர்களும் நம்பிக்கை உள்ளுணர்வின் அடிப்படையில்தான் இயங்க வேண்டியுள்ளது. உலகின் எந்த நாடாக இருப்பினும் (வர்க்கப் புரட்சியில் தோன்றிய பாட்டாளி அரசாங்கமாகவே இருந்தாலும் கூட) தவறுகள் நடக்க வாய்ப்புண்டு.
                      “உண்மை என்று ஒரு உண்மை இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்கள் அல்லவா? அதைத்தான் நான் கடவுள் என்று நம்பி வணங்குகிறேன். அதன்முன் யாராக இருப்பினும்- மடாதிபதியோ முதலாளியோ பார்ப்பனரோ அபார்ப்பனரோ நீதிபதியோ சாட்சியோ எல்லாரும் சமம். அவரவர் மனசாட்சி என்றும் இதைக் கூறலாம். குற்றவாளிகள் யாராயினும் அதனிடமிருந்து தப்ப இயலாது, பதில் சொல்லியே ஆக வேண்டும்.

  2. அக்டோபர் மாசம் பூரா மோடி புராணம்..

    போன மாசம் பூரா தமிழ் தேசிய அர்ச்சனை..

    இந்த மாசம் பூரா நேக்கும், சுப்புணிக்கும், தீட்சிதாளுக்கும் பரிவட்டம்..

    அடுத்த மாசம் பூரா யாரோ, என்னமோ பகவானுக்குத்தான் வெளிச்சம்..

    ஆனா ஒரு நல்ல விஷயம் என்னான்னாக்கா, இந்தப்படி பிசியாருக்கற இந்த பிரம்மஹத்திகளுக்கு புரட்சி வெறும் பார்ட் டைம் ஜாபாயிடும்டா அம்பி..

  3. அருமையான பதிவு, அவாள்கலின் அட்டொலியங்லை அலகாக விருவிருப்பாக பதிந்தமைக்குநன்ரி

  4. சாட்சிகள் முதல் ஜட்ஜ் வரை எல்லாரையும் விலைபேசி வாங்கிட்டார்னு சொல்றீங்க. அப்புறம் சுப்புணி, குருமூர்த்தி உளறினா மட்டும் பயந்து புலம்புவாராமா? லாஜிக் புரியலியே?

  5. ஏன்ன ஆனந்தம் !!! அம்மாவுக்கு கோவம் வந்துடத்துன்னா மறுபடியும் கம்பி எண்ணனும். அதுக்காகத்தான் ஒரே கவலையா இருக்கு ! நோக்கு அதெல்லாம் தெரியாதுடா அம்பி !!!

    • தமிழ் அவர்களுக்கும் உங்களுக்கும் சேர்த்து பதில் தந்திருக்கிறேன்.

  6. இனிமேல் ஐகோர்ட்டுத்தானே பார்த்துடலாம்..
    என்ன ரேட்டு கொங்சம் கூட கேப்பாளோ?

  7. ஆனந்தங்கள் இருக்கும் வரை சங்கராச்சரிக்கு ஏதுகவலை, போட்டுத் தள்ளுங்கடா? சங்கடராமன்களை, கூட்டி வாரிங்கடா… கூத்தடிக்க .
    ஐயோ ஐயோ சங்கராச்சாரி….

  8. அதெல்லாம் விடுங்கோ! வீரமணி கீரமநிஎல்லாம் ஒரு லேவளா அவாவா வேலையைப் பாக்கப் போயிட்டா… இந்தக் கறுப்புச் சட்டக் கூட்டம் கூட அவளவு ஜாச்த்தியா இல்லை…. எண்ணப் பாடைகட்டித் தூக்கினாலே பாருங்கோ, அந்த சிவப்புச் சட்ட அபிஷ்ட்டுங்கதான் இப்போ ப்ராபலமே! இவாளுக்கு எதுக்கு இதெல்லாம்? மத்த செவப்புச் சட்ட கோஷ்ட்டி அம்பின்கேல்லாம் சிவப்புக்கும் காவிக்கும் வித்தியாசமே தெரியாத மாதிரி எப்படிச் சமத்தா பிஹேவ் பண்றா? இந்த ஒரு கோஷ்ட்டிக்கு மட்டும் பகவான் ஏதாச்சும் சிஷ்ட்டை செஞ்சு வைக்கணும்னு நான் வாழை எலைல அப்லோடு பன்றச்சேயும் டௌன்லோடு பன்றச்சேர்யும் தவறாம சேவிச்சிண்டுருக்கேன்… பத்து வருஷமா ஒன்னுமே நடக்கல… நான்தான் கோர்ட்டுக்கு நடந்தேன்! பேசி பேக் டோர்ல செட்டில் பண்ணிடலாம் நா இவா அதுக்கெல்லாம் மசியமாட்டா… ஜெயா மாமிகிட்ட சொள்ளலாம்னா இவா அந்த மாமிய போட்டுக் கிழிக்கிரதுக்கே அவ ஒன்னும் பண்ண முடியாம தேமேன்னு இருக்கா… இனிமேல் மோடிதான் நேக்கு கண்பாக்கணும் நு பார்த்தா அவனையும் இவா கண்டபடி திட்டித் தொரத்திடுவா போல! இதுக்குள்ள அந்தத் தீட்சித அம்பிகலோட பொழப்புல வேற ஆசிட்ட ஊத்திட்டா… அந்த அம்பிங்க கொஞ்சம் ஓப்பன் டைப்… பிரியாணி, சாராயம் பொம்பள எல்லாத்தையும் கருவரைக்குல்லேயே முடிச்சிட்ரா… அவா பாபுல்லேசன் வேற அதிகம்… பாவம் என்ன பண்ணுவா? நாங்க எந்தக் கோயிலக் கட்டிருக்கோம்? இவா என்னமோ புதுசா இந்தக் கோயில் அந்த தீசிதர்கலோடது இல்லைன்னு அத கேளரிவிட்டுட்டா… இப்போக் கல்லா அங்க சுத்தமா படுத்திடுத்து… என்னோட பேதிஎல்லாம் ஒரு தினுசா நன்னா அலம்பிண்டு அவாளுக்கு மொதல்ல ஆறுதல் சொல்லணும்…. நல்ல வேலை அவாளுக்கு டௌன்லோடிங் பண்ண வாழை இள தேவையில்ல, இல்லனா டெல்ட்டா பகுதி வாழ இள கட்டு அத்தன லோடும் அந்த தீட்சித அம்பிங்க கழியரதுக்கே காளியாயிடும்!

  9. ஆனாலும் சமயத்துல நம்ம சப்போர்டர்ஸ் கூட ஏதாச்சும் வினையா பண்ணிடறா. நம்ம சுப்புணிய பாருங்கோ, எனக்காகவும் நம்ம மதத்துக்காகவும் எவ்வளவோ பண்ணிண்டுருக்கான். நம்ம தீர்ப்பு வந்ததும் வாய வச்சுகிட்டு சும்மாயில்லாம ஜெயலலிதா மன்னிப்பு கேக்கணும்னு சொல்றான். அதை கேட்டதுலேருந்து எனக்கு பேதி நிக்கவேயில்லை. கார்த்தாலேருந்து ரெண்டு கட்டு வாழையிலை ஆயிடுத்துடாம்பி. நான் சுப்புணிக்கு ஒன்னேயொன்னு சொல்லிக்கிறேன் “நாமல்லாம் ஊரான் குடியை கெடுக்கத்தான் பூமிக்கு வந்திருக்கோம். நம்ம காலை நாமளே வார வரலை”.

    சிரிப்பை அடக்க முடியலை. எப்படி?

  10. கட்டுரையை தட்டச்சு செய்யும் போது சில வரிகள் தவறுதலாக விடுபட்டு விட்டன. அவற்றை இங்கே அடைப்புக்குறிக்குள் தந்திருக்கிறோம் — வினவு.

    ———————————————————————-

    ஆனாலும் சமயத்துல நம்ம சப்போர்டர்ஸ் கூட ஏதாச்சும் வினையா பண்ணிடறா. நம்ம சுப்புணிய பாருங்கோ, எனக்காகவும் நம்ம மதத்துக்காகவும் எவ்வளவோ பண்ணிண்டுருக்கான். நம்ம தீர்ப்பு வந்ததும் வாய வச்சுகிட்டு சும்மாயில்லாம ஜெயலலிதா மன்னிப்பு கேக்கணும்னு சொல்றான். அதை கேட்டதுலேருந்து எனக்கு பேதி நிக்கவேயில்லை.

    (இருந்தாலும், சப்போர்ட்டுக்கு கருணா மாமா இருக்கறச்சே நமக்கென்னடா கவலை. 2010 வாக்குல ஜம்போ சர்கஸ், ஜெமினி சர்கஸ் எல்லாம் தோத்துப் போற மாதிரி சாட்சிகள் பல்டி அடிச்சா. மாமா சந்தோஷமா பாத்து ரசிச்சார். இப்போ இன்னொரு பிரச்சனைன்னா நமக்கு ஒத்தாசை பண்ணாமையா போயிடப் போறார். இந்த மாமியை நம்ப முடியாது. பொழுதுக்கு பொழுது மூடு மாறிண்டே இருக்கும். மாமாவை நம்பறது சாஸ்வதம். அடுத்த வாட்டி கொலை பண்ணும்போது மாமா ஆட்சி நடக்கும் போது பண்ணனும். அப்பதான் கோர்ட்டு, கேசு எதுவும் இல்லமா சுளுவா தப்பிக்கலாம். அந்த துலுக்கப் பய தூக்குல தொங்கினானே. ஏதாவது கோர்ட்டு கேசு உண்டா. கூடாரைவல்லி அன்னிக்கு நாமக்காரா ஒரு பருக்கை விடாம சக்கரை பொங்கலை வழிச்சு திங்கரா மாதிரி கேசை ஆரம்பத்திலயே வழிச்சு தொடச்சிட்டா. அந்த மாதிரி நமக்கும் ஒத்தாசை பண்ணுவா)

  11. வெங்கடேசனுக்கு கருணானிதியின்மீது ஏன் இவ்வளவு காய்ச்சல்? இந்த கேசு ஆரம்பம் முதலே பான்டிச்செரிக்கு மாற்றிகொண்டு அவாள் அரசு வழக்கறிஞர் தானேநடத்துகிரார்? 80சாட்சிகள் பிறழ் சாட்சியானது கூட ஜெ ஆட்சிக்கு வந்த பின்னர் தானே? தேவயற்ற திசை திருப்பல் எதற்கு?

    • அஜாதசத்ரு,
      விவாதத்தை தொடர்வதற்கு முன் ஒரு உண்மையை (fact) இருவரும் சரி பார்த்துக் கொள்வோம். தீர்ப்பின் படி அனைவரும் விடுதலை செய்யப்பட முக்கியக் காரணங்களில் ஒன்று அரசு தரப்பு சாட்சியங்கள் பல்டி அடித்தது. இந்த வகையில் ஒரு முக்கிய விஷயத்தை நீங்கள் சொல்லி உள்ளீர்கள்.

      // 80சாட்சிகள் பிறழ் சாட்சியானது கூட ஜெ ஆட்சிக்கு வந்த பின்னர் தானே? //

      முதலில் இதன் உண்மைத்தன்மையை ஆராய்வோம்.

      — மொத்த பிறழ் சாட்சிகள் 83
      — புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கியது ஏப்ரல் 2, 2009
      — அரசு தரப்பு அப்ரூவர் ரவி சுப்ரமணியம் பிறழ் சாட்சியானது ஜனவரி 21, 2010.
      — கீழே உள்ள சுட்டியில் உள்ள ஜனவரி 25, 2011 தேதியிட்ட செய்தி குறிப்பின் படி, அந்த நாள் வரை 72 அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகள் ஆகி இருந்தனர். (http://www.dnaindia.com/india/report-5-more-witnesses-turn-hostile-in-sankararaman-murder-case-1499018)
      — ஜெ இன்றைய அரசு அமைத்தது 2011, மே 16.

      நீங்கள் சொன்ன 80 சாட்சிகள் எப்போது பிறழ் சாட்சி ஆனார்கள்? ஜெ வின் முந்தைய ஆட்சி காலத்திலா? எனக்கு புரியவில்லை. விளக்கவும்.

      நன்றி:

      http://www.dnaindia.com/india/report-5-more-witnesses-turn-hostile-in-sankararaman-murder-case-1499018

      http://en.wikipedia.org/wiki/Jayalalitha_III_government

      http://www.deccanchronicle.com/131127/news-current-affairs/article/chronology-events-sankararaman-case

      • //– புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கியது ஏப்ரல் 2, 2009
        – அரசு தரப்பு அப்ரூவர் ரவி சுப்ரமணியம் பிறழ் சாட்சியானது ஜனவரி 21, 2010.//

        அய்யா!உங்கள் வாதப்படியே ஏப்ரல் 2, 2009 லேயே வழக்கு புதுச்சேரி போய்விட்டதே! மத்திய்ல் ஆண்டவர்கள் அப்போதே கருணானிதியை காவு கொடுத்து பார்பன புத்தியை காட்டிவிட்டதே!

        • அஜாதசத்ரு,
          மேலே உள்ள என் மறுமொழி வாதம் அல்ல. முக்கிய உண்மைகளை (facts) இருவரும் முதலில் சரி பார்த்துக் கொள்வது மட்டுமே. இதை மறுமொழியிலேயே குறிப்பிட்டு இருந்தேன்.

          // விவாதத்தை தொடர்வதற்கு முன் ஒரு உண்மையை (fact) இருவரும் சரி பார்த்துக் கொள்வோம். //

          நீங்கள் முன்பு இவ்வாறு சொல்லி இருந்தீர்கள்.

          // 80சாட்சிகள் பிறழ் சாட்சியானது கூட ஜெ ஆட்சிக்கு வந்த பின்னர் தானே? //

          நான் கேட்டிருந்த கேள்வி இது.

          // நீங்கள் சொன்ன 80 சாட்சிகள் எப்போது பிறழ் சாட்சி ஆனார்கள்? ஜெ வின் முந்தைய ஆட்சி காலத்திலா? எனக்கு புரியவில்லை. விளக்கவும். //

          கேள்விக்கு பதில் நேரடி பதில் சொன்னால் மேலே பேசலாம். இல்லாவிட்டால் எனக்கு உங்களோடு பேச விருப்பமில்லை.

          • //(இருந்தாலும், சப்போர்ட்டுக்கு கருணா மாமா இருக்கறச்சே நமக்கென்னடா கவலை. 2010 வாக்குல ஜம்போ சர்கஸ், ஜெமினி சர்கஸ் எல்லாம் தோத்துப் போற மாதிரி சாட்சிகள் பல்டி அடிச்சா. மாமா சந்தோஷமா பாத்து ரசிச்சார். இப்போ இன்னொரு பிரச்சனைன்னா நமக்கு ஒத்தாசை பண்ணாமையா போயிடப் போறார்.//
            அய்யா! வெங்கடெசன்! நீங்கள் மட்டும் எந்த ஆதாரத்தில் கருணனிதி மீது பாய்ந்தீர்கள்?
            அம்மாவின் அதிகார போஓர்வ ஆட்சியில் நடக்காவிட்டாலும், புதுச்சேரி ஆட்சி யார் தயவில் நடக்கிறது? ஆளும் கட்சியும் நானே எதிர் கட்சியும் நானே என்று மக்களை ஏமற்றும் உங்கள் கூட்டணி தானே?
            எனக்கும் உங்களோடு பேச தனிபட்ட விருப்பமில்லை.

            • // 80சாட்சிகள் பிறழ் சாட்சியானது கூட ஜெ ஆட்சிக்கு வந்த பின்னர் தானே? //

              இப்படி ஒரு தவறான தகவலை சொல்லிவிட்டு, சொன்னது தகவல் தவறு என ஒப்புக்கொள்ள கூட உங்களுக்கு மனம் இல்ல.

              // அம்மாவின் அதிகார போஓர்வ ஆட்சியில் நடக்காவிட்டாலும், புதுச்சேரி ஆட்சி யார் தயவில் நடக்கிறது? //

              சொன்ன தகவல் தவறென சொல்லிவிட்டு, மேலே உள்ளதை சொல்லி இருந்தால் இது பற்றி பேசி இருக்கலாம்.

              • அதே போல கலைஞரை ஆதாரமின்றி குறைகூறியநீங்களும் ஒப்புக்கொள்விகள் என எதிர்பார்க்கிரேன்!

                • அஜாதசத்ரு,
                  தகவல் (fact) என்பதும், கருத்து (opinion) என்பதும் வெவ்வேறானவை. கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் ஒவ்வொருவரும் பல்வேறு கருத்துகளை உருவாக்கிக் கொள்கிறோம். இவ்வாறு செய்யும் போது சம நிலை நோக்கின்றி, நமது விருப்பு வெறுப்புகளும் கலந்து விடுகின்றன. எனினும் தகவல்கள் முக்கியமானவை. தவறான தகவல்கள் தவறான கருத்துகளுக்கு வழி வகுக்கும்.

                  சங்கராச்சாரிகள் இருவரும் கொலைகார்கள் என்றும், இவர்கள் குறுக்கு வழியில் விடுதலை பெற்றனர் என்பதும் ஒரு கருத்து. இதை நான் ஏற்கிறேன். நீங்களும் ஏற்கிறீர்கள்.

                  மறுமொழி 13 இல் நான் வேறொரு ஒரு கருத்தை முன் வைத்தேன். இவர்கள் குறுக்கு வழியில் விடுதலை பெற்றதில் கலைஞருக்கும் பங்கு உண்டு என்பது என் கருத்து. இதை நீங்கள் ஏற்கவில்லை என நினைக்கிறேன். எனவே, இருவரும் விவாதம் செய்ய இடம் உண்டு.

                  அந்த மறுமொழி கட்டுரையை சார்ந்து கிண்டல் நோக்கில் எழுதப் பட்டது. எனவே அங்கே ஆதாரம், விவாதம் செய்ய பொருத்தம் கிடையாது.

                  இதற்கு மறுமொழி சொன்ன நீங்கள் “83 சாட்சிகள் பல்டி அடித்தது ஜெயா ஆட்சியில்” என சொன்னீர்கள். யார் ஆட்சியில் சாட்சிகள் பல்டி அடித்தனர் என்பது நமது விவாதத்துக்கு முக்கிய விஷயம். அந்த வகையில் சில செய்திக் குறிப்புகளை மேற்கோள் காட்டி நீங்கள் சொன்ன தகவல் உண்மைதானா என கேள்வி எழுப்பி இருந்தேன் (மறுமொழி 16.1). அதன் முதல் வரியில் இப்படி சொல்லி இருந்தேன்.

                  // விவாதத்தை தொடர்வதற்கு முன் ஒரு உண்மையை (fact) இருவரும் சரி பார்த்துக் கொள்வோம். //

                  இந்த சரி பார்ப்பு நடக்கும் முன் நீங்கள் கீழே கண்டதை சொல்லி வேறொரு தகவலுக்கும், உங்கள் சொந்த வெறுப்பு சார்ந்த வேறொரு கருத்துக்கும் தாவி விட்டீர்கள்.

                  // அய்யா!உங்கள் வாதப்படியே ஏப்ரல் 2, 2009 லேயே வழக்கு புதுச்சேரி போய்விட்டதே! மத்திய்ல் ஆண்டவர்கள் அப்போதே கருணானிதியை காவு கொடுத்து பார்பன புத்தியை காட்டிவிட்டதே! //

                  இது நியாயமான விவாத முறை தானா?

                  —————————————————————————————————————————–

                  போகட்டும்.

                  சங்கராச்சாரிகளின் விடுதலையில் கலைஞருக்கு பங்குண்டு என்பது பற்றி ** எனது விவாதத்தை முன் வைக்கும் முன் ** இதே கருத்தை கொண்டிருக்கும் மதிமாறன் அவர்களின் கட்டுரைக்கு சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்.

                  http://mathimaran.wordpress.com/2013/11/30/what-a-performance-715/

                  இதில் அவர் கூறுகிறார்:

                  // இப்படி ஒரு தீர்ப்பு வருவதற்கு திமுகவின் ‘சூத்திர’ ஆட்சிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இது ஒரு மிகப் பெரிய வரலாற்றுத் துரோகம். //

                  நாங்கள் இருவரும் ஒரே கருத்தை முன்வைத்தாலும், இவ்வாறு செய்வதற்கான அடிப்படை உணர்வுகள் வேறானவை என்பதை நான் உணர்கிறேன். அவருக்கு பார்ப்பன வெறுப்பு. எனக்கு கலைஞர் வெறுப்பு.

                  (தொடரும்)

                  • வார்த்தை ஜாலம் செய்து தப்பிக்காதீர்கள்!உஙகள் கருத்தை நீங்கள் கூறுவது போல எனது கருத்தை, பார்ப்பன அம்மையாருக்கு பஙகு உண்டு என்பதை கூற எனக்கும் உரிமை உண்டு!
                    யாரோ சொன்னதைநீங்கள் உங்கள் கருத்தாக முன்வைக்காமல் சுட்டி ஆதாரம் ஆரம்பத்திலேயே கொடுத்திருக்கலாம்!

                    இன்னுமொன்று! பொதுவான பார்பன வெறுப்பு என்றில்லாமல், தனக்கு என்றால் பதக்கு என்னும் அவர்கள் நீதியை பற்றியதுதான்! உங்களையும் இனம் கண்டுகொண்டேன் நன்றி!

                  • மதிமாறன் சுட்டியின் முக்கியமான பகுதியையும், அதன் நோக்கத்தையும் தவராக பயன்படுத்தியிருக்கிரீர்கள்! அதே சுட்டிய்ல் மற்மொழியையும் படிதிருந்தால்நலமாக இருந்திருக்கும்!

                    ”ற் Cகன்ட்ரசெகரன் சய்ச்:
                    7:48 பிப இல் நவம்பர்30, 2013
                    அய்யா.. தன்னளவில் யோக்யனாக வாழ்ந்து தன் உலகில் சுற்றியுள்ள அசிங்கங்களைத் தட்டிக் கேட்டு தான் நம்பும் நம்பிக்கைகளை (அது சரியா இல்லையா என்பது வேறு விசயம்) விசுவாசமாக இருக்கும் அப்பாவியை ரத்தக் குளத்தில் மிதக்கவிட்டார்கள்.. ஆனால் உங்கள் முந்தய பதிவில் அவரிடம் மார்க்ஸீய லெனிஈய மாவோவிஈய கண்ணோட்டம் உண்டா என்றகிற ரீதியில் உங்களைப் போன்ற மதிகள் கேட்கிறார்கள்… இந்த அழகில் கலைஞர் மட்டும் துரோகியாம்.. அட சங்கரா… பணம் அதிகாரம் அரசியல் என்னும் போது அண்ணன் என்னடா தம்பி என்னடா,,, திராவிடம் என்னடா ஆரியம் என்னடா கதைதான்…சரி.. நாம் ஈய சண்டையை தொடர்வோம்.. நான் ஈயம்.. நீங்கள் பித்தளை/
                    /

                  • இந்த விவகாரத்தில் கலைஞருக்கும் பங்குண்டு என்ற எந்த கருத்து கீழ்கண்ட தகவல்கள் மற்றும், வாதங்களை அடிப்படையாக கொண்டது.

                    வழக்கு 2005 இல் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டது. 2009 இல் வழக்கு (trial) தொடங்கியது. 83 சாட்சிகள் பல்டி அடித்த்தனர். இவர்களுள், சங்கரராமன் மனைவி, மகள், அவருடன் பணிபுரிந்தோர், அப்ரூவர் ரவி ஆகியோர் அடக்கம். 2011 க்குள் 72 சாட்சிகள் பல்டி நடந்து முடிந்து விட்டது. சங்கராச்சாரிகள் உட்பட அனைவரையும் விடுதலை செய்ததில் இந்த பல்டி முக்கியம் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வழக்கின் இந்த முக்கிய காலகட்டத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சி. மத்தியில் காங்கிரஸ் அரசு. திமுக அதில் அங்கம் வகித்தது. புதுச்சேரியிலும் காங்கிரஸ் அரசு. திமுக அதன் கூட்டாளி. இது வரை சொன்னவை தகவல்கள். தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.

                    இனி சொல்வது கருத்து. விவாதத்துக்குரியது. தீர்ப்பில் அரசு தரப்பு ஒழுங்காக வழக்கை நடத்தவில்லை என நீதிபதி குறிப்பிடுகிறார். தில்லி, தமிழ் நாடு, புதுச்சேரி என அனைத்து அரசுகளிலும் நேரடியாகவோ, கூட்டாளியாகவோ திமுக பங்கு பெற்ற நிலையில் அரசு தரப்பு ஏன் வழுக்கியது? கலைஞர் என்ன செய்து கொண்டிருந்தார்? எல்லா சாட்சிகளும் பல்டி அடித்தபோது, கண்காணித்து ஆவன செய்திருக்க வேண்டாமா? சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் என்றால், அவர்களுக்கு போதிய பாதுகாப்பும், பக்க பலமும் தந்திருக்க வேண்டாமா? அரசு நம் பக்கம் என்ற நம்பிக்கையை தந்திருக்க வேண்டாமா?

                    ஆட்சி, அதிகாரம் இல்லாவிட்டாலும் திராவிட இயக்கத்தின் இன்றுள்ள தலைவர்களில் முக்கியமானவர் என்ற வகையில் கலைஞர் இந்த வழக்கில் அக்கறை செலுத்தி இருக்க வேண்டாமா? அனைவரும் அர்ச்சகர் வழக்கு, தில்லை தீட்சிதர் வழக்கு என வினவு இவ்வளவு அக்கறையோடு செயல்படுகிறதே. அதனிடம் ஆட்சி, அதிகாரமா உள்ளது? பார்ப்பனீயத்தை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் கலைஞர் சங்கரராமன் வழக்கில் இது போன்ற அக்கறை காட்டி இருக்க வேண்டாமா? ஜெ சொத்து குவிப்பு வழக்கில் இப்போது இவ்வளவு அக்கறை காட்டுகிறாரே? ச.ராமன் வழக்கில் ஏன் அக்கறை காட்டவில்லை?

                    ஜெ வழக்கு பற்றி பொழுதொரு அறிக்கை விடுகிறாரே! ஆனால், ச. ராமன் வழக்கு பற்றி மூச்சு விடவில்லை. “No comments” என்று நிறுத்திக் கொண்டு விட்டாரே. ஏன் ஐயா? பூனைக்குட்டி வெளியே வந்து விடும் என்ற அச்சமா?

                    கொலைகாரர்கள் தப்பித்ததில் கலைஞருக்கு பங்குண்டு என்பது என் கருத்து. ஆனால், இது எவ்வகையிலானது என எனக்கு தெளிவில்லை. நீதிதேவதை மானபங்கம் செய்யப்பட்டதில் அவர் சகுனியாகவோ, துரியோதனனாகவோ, துச்சாதனாகவோ இருந்திருக்க மாட்டார் என நம்புகிறேன். திருதராஷ்டிரனாக கூட இருந்திருக்க வாய்ப்பில்லை. அவர் பீஷ்மப் பிதாமகன் போல இருந்திருக்கிறார். வாய் மூடி, மௌனியாக. ஏன் என்றும் எனக்கு நிச்சயமில்லை.

                    ————————————————————————————

                    பி கு.
                    1. இதற்கு மேல் இந்த விஷயத்தில் சொல்ல எனக்கு எதுவுமில்லை.

                    2. மேலே சொன்ன வாதங்களும், மதிமாறன் சொல்லும் வாதங்களோடு ஒத்துப் போகின்றன. இது தற்செயல் நிகழ்வு. சுட்டி தராமல் திருடுபவன் என சொல்லி மீண்டும் என்னை இழிவு செய்து விடாதீர்கள்.

                    3. // உங்களையும் இனம் கண்டுகொண்டேன் நன்றி //வாழ்த்துக்கள்! என்ன இனம் என்று சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன்.

                • அஜாதசத்ரு,
                  உங்களோடு பெரிய ரோதனையாக போய் விட்டது. விவாத ஒழுங்கு முறைகள் (principles) மீது உங்களுக்கு சுக்குக்கும் மரியாதை கிடையாதா? நான் “தொடரும்” என்றும் போட்டிருந்தேனே ஐயா! அதற்குள் உமக்கு என்ன அவசரம்? ஒருவர் பேசி முடிக்கும் வரை காத்திருக்க வேண்டாமா? தகவல் (fact) என்பதற்கும், கருத்து (opinion) என்பதற்குமான வித்தியாசத்தை நீங்கள் மதிப்பதாக தெரியவில்லை.

                  “ஜெயலலிதா அம்மையாருக்கு இந்த விடுதலையில் பங்குண்டு” என்பது ஒரு கருத்து. இப்படி ஒரு கருத்து சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை என்று நான் எங்கே கூறினேன். ஆனால், யார் ஆட்சி நடக்கும் போது சாட்சிகள் பல்டி அடித்தது நடந்தது என்பது ஒரு தகவல் சார்ந்த கேள்வி. கூகுளில் தேடி விடை கண்டுபிடிக்க வேண்டிய ஒன்று. இங்கே “இது நடந்தது ஜெ ஆட்சியில்” என நீங்கள் தவறான தகவல் தந்தீர்கள். அது தவறு என நான் சுட்டிக் காட்டினேன். நீங்கள் சொன்ன தகவல் தவறு என இது வரை நீங்கள் உணர்ந்ததாக தெரியவில்லை.

                  எனது கருத்து சுட்டி தராமல் மதிமாறன் இடமிருந்து சுடப்பது என சொல்லி என்னை இழிவு படுத்தி விட்டீர்கள். இந்த வழக்கு தொடர்பாக கலைஞர் கருத்து கூற மறுத்து விட்டார் என ஒரு செய்தி படித்தபின் நான் உருவாக்கிக் கொண்ட கருத்து அது. மதிமாறன் இடமிருந்து சுடப்பட்டதல்ல. (ஆதாரம் கேட்பீர்களோ? நவம்பர் 27 அன்று நான் எழுதிய மறுமொழி https://www.vinavu.com/2013/11/27/sankararam-case-accused-jayendran-acquited/#comment-115524. மதிமாறன் கட்டுரை நவம்பர் 30 அன்று எழுதப்பட்டது).

                  மதிமாறன் வேறொரு நோக்கில் இதை கூறுகிறார் என்பதை அறியாத அளவு மூடனல்ல நான். ஆனால், இந்த விடுதலையில் கலைஞரின் பங்கு உண்டு என்பதை அவரும் ஏற்கிறார். என்னை போல கருத்து சொல்லி இருக்கிறார் என்ற வகையில் அந்த சுட்டி கொடுத்து இருந்தேன். அவ்வளவே. அவரது கட்டுரைதான் எனது கருத்தின் ஆதாரம் என நான் கூறவில்லை.

                  மேலே சொன்ன எதையும் புரிந்து கொள்ள முடியாத, அல்லது புரிந்து கொள்ள விரும்பாத, விடாக்கொண்டனான உங்களோடு விவாதம் செய்வது பயனுள்ளதுதானா என எனக்கு சந்தேகம். இந்த விடுதலையில் கலைஞரின் பங்கு குறித்து எனது வாதத்தை அடுத்த மறுமொழியில் எழுதிவிட்டு நிறுத்திக் கொள்கிறேன்.

                  • அஜாதசத்ரு,
                    மேலே எனது இரண்டு மறுமொழிகளை வரிசை மாறிப்போய் பதித்து விட்டேன். மன்னிக்கவும். கீழே உள்ளதை முதலிலும், மேலே உள்ளதை அடுத்தும் படிக்கவும்.

                    இத்துடன் இந்த “விவாதத்தில்” இருந்து விடை பெறுகிறேன். இது தொடர்பாக என்னோடு பேசியமைக்கு நன்றி.

  12. கண்ணுல தண்ணி வந்துடுத்து. தண்ணியா ஜலமா சரியா சொல்லுடா அம்பி .

    • பாலப் பெரியவா “ஜலம்” சாப்பிடும் வழக்கம் உண்டாம்…
      வடகலை பூணூல்கள் இனிமேல் டாஸ்மாக் “ஜலம்”
      பிரசாதம் சமர்ப்பித்து பாலப்பெரியவாளின் அனுகிரகம்
      அடையலாம்:
      கூடவே சேர்ந்து “ஜலப் பிரசாதம்” அருந்தி (மடத்திலேயே)
      அருந்தி மகிழலாம்…பெண்களுக்கு தனி இட வசதி இல்லை….

  13. வெங்கடெசன் அவர்களே!நீங்Kஅள் தொடரும் என்று கூறியது டிசெம்பெர் 7, 2013, 6:14 காலை!
    னான் அதை பார்த்து பதிலளித்தது அன்று மதியம் டிசெம்பெர் 7, 2013, 12:56 ! தூங்கிவிட்டீர்களோ!
    பரவாயில்லை!

    //தகவல் (fஅச்ட்) என்பதற்கும், கருத்து (ஒபினிஒன்) என்பதற்குமான வித்தியாசத்தை நீங்கள் மதிப்பதாக தெரியவில்லை.//

    எந்த இடத்திலும் நீங்கள் சொன்னது தகவலல்ல, வெறும் கருத்துதா என்று கூறவில்லை! இடையில் மதியின் கருத்து என்றீர்கள்! அதிலும் ஒருபகுதியை மட்டும் கையாளுகிறிர்கள்! மாமியார் உடைத்தால், மண்குடம்; அதையே மருமகள் செய்தால் அய்யோ பொன் குடமாயிற்றே என்ற பழ மொழி ஏனோ நினைவுக்கு வருகிறது!

    //ஆனால், யார் ஆட்சி நடக்கும் போது சாட்சிகள் பல்டி அடித்தது நடந்தது என்பது ஒரு தகவல் சார்ந்த கேள்வி. //

    ரொம்ப புத்திசாலித்தனமாக குழப்புகிறிர்கள்! தமிழ்னாட்டில் யார் ஆட்சி செய்தால் என்ன? புப்லிச் ப்ரொசுகுட்டர் உட்பட கதை பாண்டிச்செரிக்கு போய் விட்டதே! அங்குநடக்கும் சிகண்டி ஆட்சி பின்புலம் யார்? அதையும் விளக்குங்களேன் ! பார்ப்பன மூளை எப்படி வேலை செய்யும் என எனக்கு தெரியும்! இனி நீஙகள் கஷ்டப்பட்டு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை! திருவாளர் சோ அவர்களிடம் பயிற்சி பெற்றால் மிகச்சிறந்த வக்கீலாக வர வாய்ப்பிருக்கிறது! வாழ்த்துக்கள்!

    • // வழக்கின் இந்த முக்கிய காலகட்டத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சி. மத்தியில் காங்கிரஸ் அரசு. திமுக அதில் அங்கம் வகித்தது. புதுச்சேரியிலும் காங்கிரஸ் அரசு. திமுக அதன் கூட்டாளி. //

  14. //ஜெ சொத்து குவிப்பு வழக்கில் இப்போது இவ்வளவு அக்கறை காட்டுகிறாரே? ச.ராமன் வழக்கில் ஏன் அக்கறை காட்டவில்லை?//

    ஆதங்கம் புரிகிறது! பார்ப்பனநீதி புரிந்து தான் அவர் மவுனமானார் ! ஆமாம் இந்த கேள்வியை ஜெயாவிடம் ஏன் கேத்க வில்லை? அப்பீலாவது செய்வாரா? இல்லை தில்லை தீஷிதர் வழக்கு போலத்தானா?

    • // ஆமாம் இந்த கேள்வியை ஜெயாவிடம் ஏன் கேத்க வில்லை? //

      அது வேற டிபார்ட்மெண்ட். கேள்வி கேட்டு விட்டு யார் களி தின்பது? சுவையான புளியோதரை இருக்க யாராவது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டு களி தின்ன விரும்புவார்களா? கனி இருக்க காய் கவர்ந்தற்று!

      கலைஞர் பற்றி தைரியமாக கேட்கலாம். ஒன்றும் செய்ய மாட்டார்! பேச்சுரிமையை மதிப்பவர். எனக்கு அவர் மீது வெறுப்பு இருந்தாலும், இந்த விஷயத்தில் அவரை பாராட்ட வேண்டும்.

      மேலும், ச.ராமன் கொலை வழக்கு பற்றிய முதல் கட்டுரையிலேயே இந்த வழக்கில் ஜெ வின் பங்கு பற்றி வினவு பேசி விட்டது. எனக்கு புதிதாக சொல்ல எதுவுமில்லை. வினவு கலைஞர் பற்றி எதுவும் சொல்லாததால்தான் நான் சொல்ல வேண்டி வந்தது.

  15. கருணா மாமா ஏன் எதுவும் பேசவில்லை? சோ கல்யாணப் பத்திரிகையைக் கொண்டு போய் கொடுத்தாரே, அப்போது அவர் எதுவும் சொல்லியிருப்பாரோ?

  16. காஞ்சி சங்கராச்சாரியார் வழக்கினால் புதுவை ஆளுநராக இருந்த கட்டாரியா டிஸ்மிஸ்?

    புதுச்சேரி: காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ‘தன்னிச்சையாக’ முடிவெடுத்ததாலேயே புதுச்சேரி ஆளுநர் கட்டாரியா மாற்றப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்தது முதலே பல மாநில ஆளுநர்கள் மாற்றப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. மத்திய உள்துறை செயலரும் சில மாநில ஆளுநர்களை தொலைபேசியில் அழைத்து ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியது சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், நாகாலாந்து மாநில ஆளுநர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். அதே நேரத்தில் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் சிக்கிய மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன், கோவா ஆளுநர் வான்சூ ஆகியோரும் ராஜினாமா செய்தனர்.

Leave a Reply to ஆனந்தம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க