privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விபேராசிரியர்கள் வேலை நீக்கம் - வேல்டெக் கல்லூரியின் அராஜகத்தை முறியடிப்போம்!

பேராசிரியர்கள் வேலை நீக்கம் – வேல்டெக் கல்லூரியின் அராஜகத்தை முறியடிப்போம்!

-

பேராசிரியர்களின் சான்றிதழ்கள் பறிப்பு – வேலைநீக்கம்!
வேல்டெக் பொறியியல் கல்லூரியின் அராஜகத்தை முறியடிப்போம்!

வேல்டெக்தமிழக அரசே!

  • வேலை நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்களின் சான்றிதழ்களையும்,
    உரிய இழப்பீட்டையும் உடனே வழங்க நடவடிக்கை எடு!
  • பல்கலைக் கழக மானியக்குழுவின்(UGC) விதிமுறைகளைத் தூக்கியெறிந்துவிட்டு
    பேராசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கை, தரச்சான்றிதழ் ஆகியவற்றில்
    முறைகேடு செய்யும் வேல்டெக் கல்லூரியை அரசே ஏற்று நடத்து!
  • நிர்வாகிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்!
  • வேல்டெக் நிர்வாகத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்!

அண்ணா பல்கலைக்கழகமே!

  • எம்.இ, பி.எச்.டி பட்டம் பெற்ற பேராசிரியர்களை வகுப்புக்கு அனுப்பாமல்
    முழு நேர அலுவலக ஊழியர்களாக்கி கசக்கிப் பிழிகின்ற,
    வேல்டெக் போன்ற கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்!

பேராசிரியர்களே!

  • எதிர்கால மாணவ சமுதாயத்தை உருவாக்கும் பேராசிரியர்களை
    கொத்தடிமை போல் நடத்துவதைப் பொறுத்துக் கொள்வது அவமானம்!
  • நிரந்தரமான வேலை, பணி பாதுகாப்பு, கௌரவமான பணிச்சூழல்
    ஆகியவற்றை நிலைநாட்ட துணிச்சலுடன் போராடுவதே தன்மானம்!

பொறியியல் கல்லூரி மாணவர்களே!

  • எதிர்கால வாழ்க்கை பாழாகிவிடும் என்று தனியார் கல்லூரிகளின்
    சித்திரவதைகளைப் பொறுத்துக் கொள்வதை நிறுத்துவோம்!
  • தனியார் கல்விக் கொள்ளையர்களின் அடக்குமுறைக்கு எதிராக
    பேராசிரியர்களோடு ஒன்றிணைந்து போராடுவோம்!

பெற்றோர்களே! உழைக்கும் மக்களே!

  • வேல்டெக் கல்லூரியின் அராஜகத்திற்கு எதிராக மாணவர்கள், பேராசிரியர்களோடு
    கரம் சேர்ப்போம்! களமிறங்குவோம்!
  • தரமான கல்வி, உத்தரவாதமான வேலைக்கு வேட்டு வைக்கும்
    கல்வி தனியார்மயக் கொள்கையை ஒழித்துக் கட்டுவோம்!

வேல்டெக் பொறியியல் கல்லூரியின்
அராஜகத்தை முறியடிப்போம்!

பேராசிரியர்களின் சான்றிதழ் பறிப்பு – சட்டவிரோத வேலை நீக்கம்!
சான்றிதழ்களையும், உரிய இழப்பீட்டையும் உடனே வழங்கு!

கண்டன ஆர்ப்பாட்டம்

நிகழ்ச்சி நிரல்

தலைமை : தோழர் நெடுஞ்செழியன், மாநில அமைப்புக் குழு உறுப்பினர், பு.மா.இ.மு தமிழ்நாடு

கண்டன உரை :

தோழர் கணேசன், மாநில அமைப்பாளர், பு.மா.இ.மு, தமிழ்நாடு

தோழர் ம.சி. சுதேஷ்குமார், மாநில இணை செயலாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு

நேரம் : 28.12.2013, மாலை.4 மணி அண்ணா சிலை,ஆவடி.

இடம்  : பேருந்து நிலையம் அருகில்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தொடர்புக்கு : 9445112675 – 9444834519

  1. எதுக்காக பேராசிரியர்கள வேலைய விட்டு நீக்கினாங்க? ஆக்சுவலா என்ன பிரச்சினை?

  2. பேராசிரியர்களின் சான்றிதழ்கள் பறிப்பு –?

    There is no law to protect people from this modern day slavery / Middle class cant stand against this modern day slavery.
    I have been through this painful stage in my life.

    I wish the success for
    புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
    புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

  3. எதிர்கால மாணவ சமுதாயத்தை உருவாக்கும் பேராசிரியர்களை
    கொத்தடிமை போல் நடத்துவதைப் பொறுத்துக் கொள்வது அவமானம்!

    எதிர்கால வாழ்க்கை பாழாகிவிடும் என்று தனியார் கல்லூரிகளின்
    சித்திரவதைகளைப் பொறுத்துக் கொள்வதை நிறுத்துவோம்!

    தரமான கல்வி, உத்தரவாதமான வேலைக்கு வேட்டு வைக்கும்
    கல்வி தனியார்மயக் கொள்கையை ஒழித்துக் கட்டுவோம்!

  4. இது பொல திருச்செங்கோட்டில் விவேகானந்தா பெண்கள் கல்லூரி இல் தற்பொழுது 16 பேராசிரியர்கள் வீட்டுக்கு அனுப்ப பட்டு உள்ளனர்.

  5. சான்றிதழ் வாங்கிக்கறதுங்கறது பல நூறு எஞ்சினியர்ங் காலேஜ்கள்ல இருக்கற பிரச்சனைதான். டாப் லெவல் காலெஜ்கள்ல கூட இந்த பிரச்சனை இருக்குது. விசாரிச்சுப் பாருங்க தெரியும். அந்தந்த காலேஜ் ஆபிசு ரூமுங்க தீப்பிடிச்சின்னா அத்தனையும் போச்சு.

Leave a Reply to Raman பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க