privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விமாணவன் அருண்ராஜை தூக்கிலேற்றியது யார் ?

மாணவன் அருண்ராஜை தூக்கிலேற்றியது யார் ?

-

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் அருண்ராஜ் என்கிற மாணவர் திங்கட்கிழமை தனது வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

அருண்ராஜ்
தற்கொலை செய்து கொண்ட மாணவன் அருண்ராஜ்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் தெற்கு கொடிக்கரம்பையைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. அவருடைய மகன் அருண்ராஜ் அறந்தாங்கிக்கு அருகில் குரும்பக்காடு என்ற ஊரில் உள்ள லாரல் தனியார் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை அருண்ராஜை சந்திக்க தந்தை பள்ளியின் விடுதிக்கு வந்திருக்கிறார். மறுநாள், அதாவது திங்கட்கிழமை காலையில் பள்ளி வகுப்பறையின் மேற்கூரையில் உள்ள இரும்புக்கம்பியில் தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்தார் அருண்ராஜ்.

தகவலறிந்து வந்த பெற்றோர், “நேத்து தான் பார்த்துட்டு போனோம்; இன்னைக்கு தூக்குபோட்டு தற்கொலை பண்ணிக்கிட்டதா சொல்றீங்க நாங்க இதை நம்ப மாட்டோம், எங்க பையனோட சாவில் மர்மம் இருக்கிறது” என்று கூறி உறவினர்களுடன் பள்ளிக்கு எதிரே உள்ள சாலையை மறித்துக் கொண்டு போராட்டத்தில் இறங்கினர்.பெற்றோருடன் சி.பி.எம் கட்சியின் உள்ளூர் தலைவர்களும், முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரனும் மறியலில் கலந்துகொண்டனர். அருண்ராஜின் தந்தை முத்துச்சாமி சி.பி.எம் கட்சியை சேர்ந்தவர்.

அருண்ராஜின் தந்தை முத்துச்சாமி,  தனது மகனிடம் சிறப்புக் கட்டணம் ரூ.20 ஆயிரம் கட்டச்சொல்லி நிர்வாகத்தினர் கூறியதாகவும், பள்ளிக்கு வந்து பணம் கட்டுவதாக தெரிவித்ததாகவும் கூறினார். இதைத் தொடர்ந்து ஜனவரி இறுதியில் நடத்தப்பட்ட முன்னோட்ட தேர்வில்  அருண்ராஜ் குறைவான மதிப்பெண்களை பெற்றதாக அவர் மீது அளவுக்கதிகமாக அழுத்தம் செலுத்தியிருக்கிறது பள்ளி நிர்வாகம். பெற்றோருக்கும் தகவல் தெரிவித்திருக்கிறது.

தகவலறிந்து ஞாயிற்றுக்கிழமை விடுதிக்கு வந்த தந்தை முத்துச்சாமி அருண்ராஜை சந்தித்து பேசியிருக்கிறார். பொதுவாக நடுத்தர வர்க்கம் தனது விருப்பத்திற்கேற்ப படிக்காத தனது பிள்ளைகளை எப்படி திட்டும் என்பது நாம் அறிந்தது தான். பையன் நன்றாக படிக்க வேண்டும் என்று அதிக செலவில் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள் அதன் மூலம் வரும் பொருளாதார அழுத்தத்தை வாரிசுகள் மீது காட்டுவது இயல்பான ஒன்று.

அருண்ராஜின் ஊர் அறந்தாங்கிக்கு அருகில் தான் இருகிறது. எனினும் வீட்டிலிருந்து கொண்டு பள்ளிக்கு போய் வந்தால் பையன் ஒழுங்காக படிக்க மாட்டான், தாங்கள் நினைக்கும் மார்க்கை எடுக்க மாட்டான் என்று கருதிய பெற்றோர் அவனை பள்ளி விடுதியிலேயே தங்க வைத்தனர்.  மகன் மதிப்பெண்கள் குறைவாக எடுத்துவிட்டான் என்று பெற்றோர்கள் திட்டியதால் இந்த தற்கொலை நடந்திருப்பதாக பள்ளி நிர்வாகம் சாமர்த்தியமாக இதை திரிப்பதற்கும் முயலக்கூடும்.

அவ்வாறு பள்ளி நிர்வாகம் இந்த கொலைக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ள நினைத்தாலும் சந்தேகத்திற்கிடமின்றி இது கொலை தான். பல்வேறு பெயர்களில் பெற்றோர்களை கொள்ளை அடித்து லாபம் சம்பாதிக்கும் கல்வி தனியார்மயம் என்கிற கொள்கை தான் இந்த கொலையை செய்திருக்கிறது.

தனியார்மய கொள்கையின் விளைவாக புற்றீசல் போல பெருகியுள்ள தனியார் பள்ளிகளின் நோக்கம் சமூகத்திற்கு நல்ல மாணவர்களை உருவாக்குவதல்ல, மாணவர்களுக்கு பதிலாக மதிப்பெண்களை எடுக்கும் எந்திரங்களை உருவாக்குவதை தான் இவை இலக்காக கொண்டிருக்கின்றன. பெற்றோர் விரும்பும், பள்ளி நிர்ணயிக்கும் மதிப்பெண்களை எடுக்கத் தவறும் இயந்திரங்களின் இயக்கத்தை இந்த நாசகார கொள்கை அருண்ராஜின் இயக்கத்தை நிறுத்தியதைப் போல நிரந்தரமாக நிறுத்திவிடும்.

இன்று தனியார் பள்ளிகளும் தற்கொலைகளும் பிரிக்க முடியாதவையாகி விட்டன. அருண்ராஜின் தற்கொலை தனியார் பள்ளிகளில் நடந்த முதல் தற்கொலையுமல்ல, இறுதி தற்கொலையுமல்ல.

குடிமக்களுக்கு கல்வி அளிக்க வேண்டிய அரசு சிறிது சிறிதாக தனது பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டு தனது இடத்தில் கல்விக் கொள்ளையர்களை அமர்த்தி வருகிறது. எனவே கல்விக்கொள்ளையர்கள் இருக்கும் வரை, கல்வியில் தனியார்மயத்தை ஒழித்துக்கட்டும் வரை இதுபோன்ற தற்கொலைகளையோ கொலைகளையோ தடுத்து நிறுத்த முடியாது. தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு பாடை கட்டினால் தான் மதிப்பெண்களுக்காக மாணவர்கள் இவ்வாறு பாடையிலேறுவதை தடுக்க முடியும்.

  1. I LEFT ARANTANGI 40 YEARS BEFORE. AT THAT TIME THERE WAS ONLY ONE GOVT HIGH SCHOLL THERE FOR ENTIRE TALUK. VERY RICH PEOPLE (ONLY A FEW) SENT THEIR CHILDREN TO DEVAKOTTAI DE BRITTO SCHOOL.
    NOW IT APPEARS THERE ARE SO MANY PRIVATE SCHOOLS IN ARANTANGI.
    FROM YOUR ARTICLE I UNDERSTAND THAT ONLY PAARPANARKAL ARE THE REASON FOR THE POOR QUALITY OF EDUCATION IN GOVT SCHOOLS. AND BECAUSE OF PAARPPANA LOBBY, PRIVATE SCHOOLS CAME TO TAMILNADU. AND BECAUSE OF THESE PARPPANARKAL, THE SUICDE ALSO INCREASING.

    • மிகச் சரியான கருத்து. இந்தக் கருத்தை நீங்கள் இன்னும் பல பேர் மத்தியில் பரப்ப வேண்டும்.

    • அது மட்டுமல்ல உங்களுக்கு இன்று காலை கக்கா வராமல் போனதுக்கும் இந்த பார்பனர்கள் தான் காரணம். பாவிகள் அந்த இடத்திற்கு 144 தடையுத்தரவு வாங்கி பழி வாங்குகிறார்கள். அவர்களை சும்மா விடக்கூடாது மூர்த்தி. வாங்க நாமளும் அவங்களுக்கு உச்சா வர விடாம பண்ணிடுவோம்.

      • இந்தக் கொலைநடந்த பள்ளி கண்டிப்பாக பார்ப்பனப் பள்ளியாக இருக்காது, ஏனெனில் வினவு இந்தப் பள்ளியைத் திட்ட வில்லை.

        இந்தக் கொலைநடந்த பள்ளி கண்டிப்பாக இந்து மதத்தைச் சேர்ந்த எவரும்நடத்துவதாகவும் இருக்காது, ஏனெனில் வினவு இந்தப் பள்ளியைத் திட்ட வில்லை.

        இந்தக் கொலைநடந்த பள்ளி கிறிஸ்தவப் பள்ளியாக இருக்கலாம், ஏனெனில் வினவு இந்தப் பள்ளியைத் திட்ட வில்லை.

  2. கல்வி மருத்துவம் வேலைபோய் கொண்டிருக்கிறது.

    இது இந்தியா மட்டுக்கும் உரித்தானது அல்ல. உலகம் பரந்தது.

    சாமியார்கள் கூட மருத்தவமனை பள்ளிக்கூடங்களை கட்டுகிறார்கள். தாங்களும் பொதுசேவைமனப்பான்மை உடையவர்களாக காட்டுவதற்காக…இல்லையேல் அவர்கள் தங்கள்”லேபிளை” தங்க வைத்துக் கொள்ளமுடியாது.வசூலையும் நிரந்தரமாக்க முடியாது.

    அரசாங்கத்திற்கோ வேலையில்லை. அரசியல் கட்சிகளோ வெற்றி பெற்றால் போட்டமுதலை ஊதியமாக திரும்ப எடுத்துக் கொள்ளுகிறார்கள்.

    இந்த நிலைமை பரந்திருந்தாலும் இந்தியாவில்- இந்தியநாகரீகத்தில் ஒருதனித் தன்மையே கொண்டிருக்கிறது.இந்தியா ஆளும்வர்கத்திற்கு இந்தியபாட்டாளி வர்க்கம் ஒரு கறவைமாடு. ஐந்து வருடத்திற்கொரு முறை புல்லுப்போட்டால் காணும்.

    இந்தியபாட்டாளிவர்கத்திற்கு ஒருகட்சியில்லாமல் இருப்பதும் இந்திய முதலாளித்துவத்தை எப்படி? எதிர்கொள்வது?? என்பது அறியாத வரை அருண்ராஜ்கள் வந்து போய் கொணடேயிருப்பார்கள்.

    அரசியல் அறிவை உயர்த்துவது தான் முதல் பணி.கடைமை.

  3. ஒரு எழுத்துப் பிழை.

    வேலை போய்கொண்டிருக்கிறது என்பதை விலை போய் கொண்டிருக்கிறது என மாற்றம். நன்றி.

  4. “பொதுவாக நடுத்தர வர்க்கம் தனது விருப்பத்திற்கேற்ப படிக்காத தனது பிள்ளைகளை எப்படி திட்டும் என்பது நாம் அறிந்தது தான். பையன் நன்றாக படிக்க வேண்டும் என்று அதிக செலவில் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள் அதன் மூலம் வரும் பொருளாதார அழுத்தத்தை வாரிசுகள் மீது காட்டுவது இயல்பான ஒன்று.”

    “அருண்ராஜின் தந்தை முத்துச்சாமி, தனது மகனிடம் சிறப்புக் கட்டணம் ரூ.20 ஆயிரம் கட்டச்சொல்லி நிர்வாகத்தினர் கூறியதாகவும், பள்ளிக்கு வந்து பணம் கட்டுவதாக தெரிவித்ததாகவும் கூறினார். இதைத் தொடர்ந்து ஜனவரி இறுதியில் நடத்தப்பட்ட முன்னோட்ட தேர்வில் அருண்ராஜ் குறைவான மதிப்பெண்களை பெற்றதாக அவர் மீது அளவுக்கதிகமாக அழுத்தம் செலுத்தியிருக்கிறது பள்ளி நிர்வாகம்.”

    “மாணவர்களுக்கு பதிலாக மதிப்பெண்களை எடுக்கும் எந்திரங்களை உருவாக்குவதை தான் இவை இலக்காக கொண்டிருக்கின்றன.”

    இன்றைய சூழலின் மிகச் சரியான கணிப்பு. பள்ளிகளும் பெற்றோரும் மாணவர்களின் மேல் அளவுக்கதிகமான அழுத்தம் தருவதைத் தவிர்க்க வேண்டும்.

    பள்ளிகளும் இம்மாதிரியான சிறப்புக் ?? கட்டணங்களை கந்து வட்டி போல வசூல் செய்யாமல் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.

  5. “அவ்வாறு பள்ளி நிர்வாகம் இந்த கொலைக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ள நினைத்தாலும் சந்தேகத்திற்கிடமின்றி இது கொலை தான்.”

    மிக மிகத் தவறான கருத்து. மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுக்கும் போது ( அதுதான் இன்றையக் கல்வியின் குறிக்கோள் என்ற தவறான சூழ்நிலையில்) பள்ளி நிர்வாகம் மாணவர்களைக் கண்டிப்பதையோ பெற்றோர்களை வரவழைத்து சொல்வதையோ நிச்சயம் தவறு சொல்ல முடியாது.

    பணம் கட்ட முடியாததுதான் மாணவனின் மன அழுத்ததிற்குக் காரணமா என்பது தெரியாத நிலையில், மூர்த்தி போன்று பஸ் லேட்டாக வந்தாலும் பார்ப்பனர்கள்தான் காரணம் என்று சொல்வது முட்டாள்தனம்.

    பார்ப்பன எதிர்ப்பு என்பது 50 வருடங்களுக்கு முன்னால் மக்களை கூட்டம் கூட்டுவதற்கு உபயோகப் பட்டது. இன்றும் பார்ப்பன எதிர்ப்பு என்று கூவிக் கொண்டிருந்தால் நம்மை முந்திக் கொண்டு எல்லோரும் போய்விடுவார்கள். நம்மை அடுத்தவர்கள் உபயோகப்படுத்துவதுதான் மிச்சமாக இருக்கும்.

    புமாஇக தோழர்கள் ஒவ்வொரு அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர்களை ஒழுங்காகப் பள்ளிக்கு வந்து, பாடம் சொல்லித் தரச் சொல்லி போராட வேண்டும்.தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் தரம் உயரப் பாடுபட வேண்டும்.

  6. இன்று தனியார் பள்ளிகளின் லாப வெறிக்காக மாணவர்கள் தூக்கில் தொங்குகிறார்கள் வரும் காலங்களில் தனியார் மருத்துவ மனைகளின் லாப வெறிக்காக ஏழை மக்கள் நோயினால் தூக்கில் தொங்குவார்கள் இப்பெற்ப்பட்ட பேராபத்தை தடுக்க உழைக்கும் மக்கள் அணைவரும் விதியில் இரங்கி போராட வேண்டும் என்பதை நான் உணர்கிறேன்.

  7. கல்வி கட்டண கொள்ளை , கல்வி தனியார்மயம், இருக்கும் வரையில் இது போன்ற மாணவர் மர்ம சாவு நடந்துகொண்ட இருக்கும்!

Leave a Reply to mao பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க