privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதேவருக்கு தங்கம் – அதிமுக மீது நடவடிக்கை எடுக்குமா அரசு ?

தேவருக்கு தங்கம் – அதிமுக மீது நடவடிக்கை எடுக்குமா அரசு ?

-

சும்பொன் முத்துராமலிங்கத்தின் சிலைக்கு 13 கிலோ தங்கத்தில் கவசம் அணிவித்து வந்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை பறந்து, அங்கிருந்து பசும்பொன்னுக்கு ஹெலிகாப்டரில் சென்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். தங்கக் கவசத்தின் மதிப்பு 4.70 கோடி ரூபாய்.

தேவர் சிலைக்கு தங்கக் கவசம்
பசும்பொன் முத்துராமலிங்கத்தின் சிலைக்கு 13 கிலோ தங்கத்தில் கவசம் அணிவித்து வந்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

இது அ.தி.மு.க சார்பில் செலவழிக்கப்பட்டாலும், ஜெயலலிதா அன்றைக்கு சென்று வந்த செலவு, பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்டத்தினருக்கான குவார்ட்டர்&பிரியாணி செலவு மற்றும் இன்னபிற செலவீனங்களையும் சேர்த்தால் நிறைய வரும். கேட்டால் இது முதலமைச்சரின் புரோட்டோகால் அடிப்படையில் தவிர்க்க முடியாமல் செய்யப்படும் செலவு என்று ‘ஜனநாயகத்தை’ ஆராதிக்கும் அறிஞர்கள் மல்லுக் கட்டுவார்கள். சரி, புரோட்டோகாலுக்கு இருக்கும் மரியாதை அரசின் மதச்சார்பின்மைக்கும், சாதி சார்பின்மைக்கும் கிடையாதா?

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழக மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் ஜெயலலிதா பேசியது நினைவிருக்கிறதா? “சாதி, இன, மத, சமூக ரீதியாக துவேசத்தையும், பிளவுகளையும், மோதல்களையும் தூண்டிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழக அரசின் ‘நீதி நெறி பிறழா சத்திய ஆவேசத்தை’ முழங்கினார் ஜெயா. இதன்படி பார்த்தால் நாட்டில் சாதிய பிளவுகளையும், மோதல்களையும் மற்றவர்களை விட ஜெயாதான் தூண்டி வருகிறார். இதற்கு இந்த தேவர் தங்க கவச திக் விஜயம் ஒரு சான்று.

பசும்பொன் முத்துராமலிங்கத்தை யார் ஆராதிக்கிறார்கள்? பொதுவில் தேவர் சாதி வெறியர்கள் – சங்கங்கள்தான் அவரை ஒரு சாதிக்குரிய கடவுளாக சந்தைப்படுத்தியிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களும், தேவரால் எதிர்க்கப்பட்ட நாடார் முதலான மற்ற சாதிகளும், இன்னபிற ஜனநாயக – புரட்சிக அமைப்புகளும் முத்துராமலிங்கத்தை சாதிவெறியராகத்தான் கருதுகின்றனர். ஆனால் பொதுவில் ஆதிக்கசாதிக்கு வாக்கு அதிகம் என்பதால் பசும்பொன் தேவரை அனைத்து ஓட்டுப்பொறுக்கி கட்சிகளும் தேசியத் தலைவர் என்று வெறும் வாயிலில் பந்தல் போட்டு தேவர் சாதி வெறியர்களை மகிழ்விக்கிறார்கள். இப்படி ஒருவரின் இருப்பே ‘டிஸ்பியூட்டு’க்குள் இருக்கும் போது  அரசு இவர்களே சொல்லிக்கொள்ளும் விளக்கப்படியும் அந்த தலைவர் குறித்து குறைந்த பட்சம் எந்த நிலைப்பாடும் எடுக்காமல் அல்லவா இருக்க வேண்டும்?

ஜெயலலிதா பூஜை
தமிழ்நாட்டில் சாதிய முரண்பாடுகளையும், துவேசத்தையும் பெரும் அளவில் தூண்டி வருவது அ.தி.மு.க கட்சிதான்

முக்கியமாக தென்மாவட்டங்களில் முத்துராமலிங்கத்தின் காலத்திலும் சரி, இப்போதும் சரி ஆதிக்க சாதியான தேவர் சாதிக்கும், தாழ்த்தப்பட்ட பள்ளர் அல்லது ‘தேவேந்திர குல வேளாளர்’ சாதிக்கும் முரண்பாடும், கலவரங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. 90-களின் பிற்பகுதியில் துவங்கி பல மாதங்கள் நீடித்த கொடியங்குளம் கலவரத்தின் பாதிப்புகளே இன்னமும் மறைந்திருக்கவில்லை. இடையில் தேவர் குருபூஜை என்று அந்த துவேசத்தையும், கலவரத்தையும் தேவர் சாதியைச் சேர்ந்த சில சங்கங்கள் அரசு, கட்சிகளின் உதவியுடன் அதிகப்படுத்தியிருக்கின்றன.

இந்நிலையில் ஒரு ‘நடுநிலைமையான’ அரசு என்ன செய்ய வேண்டும்? இவற்றில் இருந்து விலகி இருக்க வேண்டும். அரசு சார்பிலோ இல்லை ஆளும் கட்சி சார்பிலோ இத்தகைய ஆதிக்க சாதி ஆராதானைகளை செய்வது மாபெரும் குற்றமாகும். ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த மக்கள் கொண்டாடுவதை ஒரு அரசும், கட்சியும் பின்பற்றுவதை விட சாதி மோதலை தூண்டிவிடும் விசயம் வேறு ஏது? நியாயமாக குருபூஜைகளை தடை செய்ய வேண்டிய அரசும், அந்த தடையை ஆதரித்திருக்க வேண்டிய கட்சிகளும் நேர்மாறாக பூஜைகளுக்கு ஷிப்டு போட்டு தலைவர்களையும், பரிசுகளையும் அனுப்பி வருகின்றன.

ஆகவே ஜெயலலிதா தான் முதலமைச்சர் என்ற முறையில் அந்த அதிகாரிகளின் மாநாட்டில் பேசியது உண்மையென்றால் அதிமுகவின் பொதுச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காடுவெட்டி குருவுக்கு ஒரு நீதி, சசிகலா கட்சிக்கு ஒரு நீதி என்று இருக்க முடியாது. தமிழ்நாட்டில் சாதிய முரண்பாடுகளையும், துவேசத்தையும் பெரும் அளவில் தூண்டி வருவதில் முன்னணி வகிப்பது அ.தி.மு.க கட்சிதான் என்பதற்கு வேறு விளக்கம் தேவையில்லை.

ஆனால் அரசு என்ற முறையில் இப்படி ஆதிக்க சாதி சார்பாக களமிறங்க ஜெயலலிதாவுக்கு ஒரு கணக்கு இருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. வாக்குகளை அறுவடை செய்தாக வேண்டும். பெரும்பான்மை தேவர் சாதி ஓட்டுக்கள் அ.தி.மு.க.வுக்குத்தான் போகும் என்பது அனைவருக்கும் தெரியும் என்றாலும், அந்த உறவை இன்னும் இறுக்கமாக்கிக் கொள்ள இந்த கவசத்தை அணிவித்திருக்கிறார். தவிரவும், கடந்த ஆண்டு தேவர் ஜெயந்தியின்போது ஏற்பட்ட வன்முறைகளில் மூன்றுக்கும் மேற்பட்ட முக்குலத்தோர் இளைஞர்கள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். அது ஒரு எதிர்மறை விளைவை உண்டாக்கி, தனது செல்வாக்குத் தளத்தை சரித்துவிடக்கூடாது என்ற ஜெயலலிதாவின் எண்ணமும் இந்த கவசத்தின் பின்னே நிச்சயம் இருக்கும்.

பரமக்குடி தாக்குதல்
பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஜெயலலிதா அரசின் போலிஸ் ஏழு தலித்களின் உயிரைப் பறித்தது.

ஏற்கெனவே, பரமக்குடியில் தலித்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஜெயலலிதா அரசின் போலிஸ் ஏழு தலித்களின் உயிரைப் பறித்தது. அந்த சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சம்பத் கமிஷன், ‘துப்பாக்கிச் சூடு நடத்துவதைத் தவிர காவல்துறைக்கு வேறு வழியில்லை. சொல்லப்போனால் அன்றைய துப்பாக்கிச் சூட்டின் மூலம், அதைவிட பெரிய கலவரம் ஒன்றை தடுத்துள்ள காவல்துறையின் செயல் பாராட்டத்தக்கது’ என்று கூறியது. காவல்துறையின் வெறியாட்டத்தை அடியோடு மூடிமறைத்த, அரசின் சாதிவெறி ஆதரவை தூக்கிப்பிடித்த அந்த அறிக்கையை கடந்த தேவர் ஜெயந்தியின்போது வெளியிட்டு முக்குலத்தோரை அகம் குளிர வைத்த ஜெயலலிதா, இப்போது தேவர் சிலையின் தேகம் குளிருமே என்று தங்கச் சொக்காய் மாட்டிவிட்டுள்ளார். தங்கக் கவசம் தந்த தங்கத் தலைவி, கவசம் தந்த காவிய நாயகி என்ற விளம்பர வாசகங்களை வரும் தேர்தலில் எதிர்பார்க்கலாம்.

ஆனால் இராமநாதபுரம் போன்ற ஆதிக்க சாதி கட்டுமானம் இறுக்கமாக உள்ளப் பகுதியில், அரசின் இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் பெரும் விளைவுகளை உண்டுபண்ணக் கூடியது. ஆதிக்கச் சாதிக்கு ஆதரவான அ.தி.மு.க அரசின் இந்த நடவடிக்கை அவர்களின் சாதிவெறிக்குக் கொம்பு சீவி விடுவது போல் உள்ளது. இதன் எதிர்விளைவாக எதிர் தரப்பான பள்ளர் சாதி இயக்கங்களும் தங்களின் சாதி பிடிமானத்தை இன்னும் கெட்டியாக்கிக் கொள்கிறது.

இறுதியில் பகையையும், வெறுப்பையும் என்றென்றைக்குமானதாக மாற்றும் இத்தகைய சிலைகளும், கவசங்களும் அப்பகுதியின் உழைக்கும் மக்களை நிம்மதியிழக்கச் செய்கிறது. கலவரங்களும், வன்முறைகளும் மூளும்போது அதில் பலியாவது இத்தகைய எளிய உழைக்கும் மக்களே. அவர்களின் மனதில் படிந்திருக்கும் சாதிவெறியை எளிதில் தூண்டிவிட்டு இறையாகச் செய்து விடுகின்றனர். தற்போதைய தங்கக் கவசத்திலும் இத்தகைய வன்முறை கூறுகள் அதிகம் உள்ளதை இப்போதேக் காண முடிகிறது.

கோவை காமாட்சிபுரி ஆதீனம்
கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சிவலிங்கேஸ்வர சுவாமிகள், ‘தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தாராம். அதை தொடர்ந்துதான் இந்த கவசம்.

மொத்தம் மூன்று பாகமாக இருக்கும் இந்த தங்கக் கவசம் தற்போது தேவர் சிலையின் மீது மாட்டப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் போலீஸ் பாதுகாப்புக்கு நிற்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் கவசம் அகற்றப்பட்டு, வங்கி லாக்கரில் வைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தியின்போது கழற்றிக் கொண்டுவந்து மாட்டிவிட்டு, எல்லோரும் பூ தூவி முடித்ததும் எடுத்துச் சென்று மறுபடியும் லாக்கரில் வைத்துவிடுவார்கள். இருக்கும் பிரச்னை போதாது என்று இது வேறு.

ஏற்கெனவே பழனி நவபாஷான சிலையை சுரண்டிவிட்டார்கள்; திருச்செந்தூர் முருகனின் தங்கவேலைத் திருடி விட்டார்கள் என்று ஏகப்பட்ட பஞ்சாயத்து. அதையே இன்னும் கண்டுபிடித்தப் பாட்டைக் காணோம். இப்போது இதுவேறு. கவசத்தை சுரண்டிவிட்டார்கள், வளைத்துவிட்டார்கள் என்று வரும் ஆண்டுகளில் எவனாவது ஏழரையைக் கூட்டி அது ஒரு பிரச்னையாக உருவெடுக்கும் சாத்தியங்கள் அதிகம்.

இத்தகைய சில்லறைப் பிரச்சினைகளே மாபெரும் கலவரங்களை தூண்டிவிடும் என்பதிலிருந்தே அரசும், கட்சிகளும் சாதி சார்பாக இருக்க கூடாது என்பதை புரியவைத்துவிடும்.

இந்த கவசத்தை யாருடைய கோரிக்கையின் பெயரால் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார் என்பது முக்கியமானது. 2010-ம் ஆண்டு தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த ஜெயலலிதா பசும்பொன் சென்றபோது அங்கு வந்த கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சிவலிங்கேஸ்வர சுவாமிகள், ‘தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தாராம். அதை தொடர்ந்துதான் இந்த கவசம்.

‘இந்த காமாட்சிபுரி ஆதீனம் என்ற காமெடி பீஸை நாம் முன்பின் கேள்விப்பட்டது கூட இல்லையே.. ஜெயலலிதாவையே ஆட்டுவிக்கிற அளவுக்கு அவ்வளவுப் பெரிய அப்பாடக்கரா?’ என்று விசாரித்தால் கோவையில் இவர் மீது நிலமோசடி, நிதிமோசடி என்று பல பஞ்சாயத்துகள் சொல்லப்படுகின்றன. ஆதீனம் என்றாலே மோசடி என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இந்த ஆதீனம் கோரிக்கை விடுத்தாராம்… அதை ஏற்றுக்கொண்டு இந்தம்மா தங்க கவசம் கொடுத்தாராம். பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் கடுமையாகப் போராடினார்கள். அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாதது மட்டுமல்ல… போராடியவர்களை மிரட்டி பின்வாங்கச் செய்தது ஜெயலலிதாவின் அரசு. ஆனால் தேவர் சிலைக்குத் தங்க கவசம் அணிவிக்கச் சொல்லி ஒரு அனாமத்து சொன்னதும் உடனடியாக அதை நிறைவேற்றிவிட்டார். காரணம் ஒரு அனாமத்து கோரியிருந்தாலும் தென்தமிழக ஆதிக்க சாதி வாக்குகள் லம்பாக கிடைக்குமென்ற சுயநலத்தான் இதற்கு அடிப்படை. பால் விவசாயிகள் போன்று வர்க்க, தொழில் ரீதியாக உழைக்கும் மக்கள் அணிதிரண்டு போராடாமல் சாதி ரீதியாக பிரிந்து சண்டையிட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த ஆதிக்க சாதி ஆராதனைகள் பயன்படுமில்லையா?

ஏற்கனவே தென்மாவட்டங்களில் இருக்கும் பல்வேறு சிலைகளெல்லாம் இரும்புக் கூண்டிற்குள் பூட்டப்பட்டு போலீசால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சிலையை அவமதித்து விட்டார்கள் என்று அன்றாடம் ஒரு கலவரம் நடக்கும் போது தங்க சிலை என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்? நாளைக்கு போட்டியாக மற்ற தலைவர்களுக்கு பிளாட்டினக் கவசம், வைர அங்கி, அதற்கு வசூல், கோரிக்கை, அரசு, கட்சிகள் ஏற்பு, பின்னர் அதைக் காணோம் என்று கிளப்பினால் தமிழக அரசின் ஒரே செயல்பாடாக சிலை பாதுகாப்பு பணி ஆகிவிடாதா?

சென்ற நூற்றாண்டின் இறுதியில் மாவட்டங்களுக்கும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் தலைவர்கள் பெயரை வரிசையாக வைத்து பின்னர் அது ஆதிக்க சாதிகளுக்கிடையேயான அடையாளச் சண்டையாக மாறியது நினைவிருக்கிறதா? இறுதியில் அரசு அந்த பெயர்களை ரத்து செய்து இனி பெயரே வேண்டாமென்று முடிவெடுத்ததும் ஜெயலலிதாவுக்கு தெரியாதா? இப்படி பட்டுத் தெரிந்து கொண்ட பிறகும் இப்படி சாதிவெறிக்கு பட்டுக்குஞ்சம் கட்டும் செயலை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? உழைக்கும் மக்களின் ஒற்றுமையை விட ஆதிக்க சாதிகளின் வாக்குகளை அள்ளிக் கொள்வது, அதுவும் சாதிவெறியை தூண்டிவிட்டு திரட்டுவதை எல்லா சாதிகளையும் சேர்ந்த உழைக்கும் மக்கள் கண்டிக்க வேண்டும்.

பரமக்குடி போலீஸ் வன்முறை
பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் வன்முறை

ஐந்து கோடி செலவழித்து தங்க கவசம் பூட்டுவதற்கு பதில் கல்லூரிகள், பூங்காக்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள் முதலானவற்றை ஆரம்பித்திருக்கலாமே என்று சேவ தமிழ்ஸ்’ முதலான தமிழார்வ அறிஞர் பெருமக்கள் அ.தி.மு.கவிற்கு வகுப்பு எடுக்கிறார்கள். குறிப்பிட்ட சாதி,மதவெறி குறித்த பிரச்சினைகள் வரும் போது ஆதிக்க சாதி, பெரும்பான்மை மதவெறியை கண்டித்தால் அந்த பிரிவு மக்களிடம் அந்நியப்படுவோம் என்று அந்தக்காலத்து போலிக் கம்யூனிஸ்டுகள் முதல் நேற்று முளைத்த திடீர்ப் புரட்சியாளர்கள் வரை செய்யும் பச்சையான சந்தர்ப்பவாதமே இது.

அதற்குத்தான் சிலைப் பிரச்சினையை திசை திருப்பி அப்துல் கலாம் டைப்பில் பொருளாதார நல்லெண்ண அபிப்ராயங்களாக கவலைப்படுகிறார்கள். அதன்படி இவர்கள் அம்மா குடிநீர், அம்மா அரிசி, அம்மா மருந்தகம், அம்மா உணவகம் போன்ற திட்டங்களுக்கு சுவரொட்டி அடித்து பாராட்டியிருப்பார்கள் போலும். மேலும் கோவில்களை விட கழிப்பறைகளே தேவை என்று மோடி சொல்லியிருப்பதை வைத்துப் பார்த்தால் இந்த சேவ தமிழ்ஸ் அறிஞர்கள் அவருக்கும் வாழ்த்து தெரிவிப்பார்களோ, தெரியவில்லை. மசூதியும் வேண்டாம், கோவிலும் வேண்டாம், பள்ளிகளே வேண்டும் என்று போலி கம்யூனிஸ்டுகளின் தமுஎகச கவிராயர்கள் எழுதிய கவிதைகளை, மில்லியன் கணக்கில் பார்த்த மண்ணில் சேவ்தமிழ்ஸ்சின் கவிதை ஆச்சரியமான ஒன்றல்ல.

இதில் நாம் கவனிக்க வேண்டியது இந்த விஷயத்தில் ஜெயலலிதா மட்டும்தான் குற்றவாளியா? போலி கம்யூனிஸ்டுகள் முதல் நேற்று முளைத்த சீமான் வரையிலும் யாரும் இதுகுறித்து ஒரு சொல்லும் சொல்லவில்லை. போலிக் கம்யூனிஸ்டுகளும் முத்துராமலிங்கத்தை வாக்கு வங்கி காரணமாக ஆதரிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காத்தான் அவரை ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்றெல்லாம் ஜெயா பேச முடிகிறது.

ஒட்டு மொத்தமாக தமிழகத்தின் ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் பசும்பொன் குருபூஜையில் முன்வரிசையில் இடம்பிடிக்கப் போட்டிப் போடுகின்றனர். இவர்கள் வேறு வேறு அணிகளில் இருக்கலாம். கட்சிக் கொடிகளின் வண்ணங்கள் மாறலாம். அவர்களின் சின்னங்கள் மாறலாம். ஆனால் ஆதிக்க சாதிவெறியை தூண்டி விட்டு குளிர்காயும் இவர்கள் அனைவரும் ஒரே அணிதான்.

இந்த மக்கள் விரோத அணியையும் என்றைக்கு தேவர் சாதி மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி உழைக்கும் மக்கள் புரிந்து கொள்கிறார்களோ அன்றுதான் தென்மாவட்டங்களில் உண்மையான சமூக நல்லிணக்கம் நிலவும்.

–    வளவன்

  1. ஜெயலலிதா ஆட்சியில் இல்லாத போது என்ன செய்தார் என்பது அவரது சொந்த விஷயம்.

    சாதி அடிப்படையிலான சங்கங்களை அரசே அங்கீகரிப்பது எந்த வகையிலும் ஒத்துக் கொள்ளக் கூடியதல்ல.

    சரியான கட்டுரை.

  2. ஜெயலலிதாவிற்க்கு ஆட்சியில் இருக்கும் அருகதையே இல்லை என்பது இந்த கட்டு
    ரை மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. சாதி மோதலை தூண்டும் சிலை கலாச்சாரத்தை ஓட்டுக்காக தங்கம் ஊற்றி வளர்ப்பது பொருக்கி அரசியல் இதை காடுவெட்டி குரு செய்தால் ஒரு நாயம் ஜெயா செய்தால் ஒரு நாயமா? ஜெயலலிதாவை மக்கள் மன்றத்தில் வைத்து தண்டிப்போம்.

  3. “கடந்த ஆண்டு தேவர் ஜெயந்தியின்போது ஏற்பட்ட வன்முறைகளில் மூன்றுக்கும் மேற்பட்ட முக்குலத்தோர் இளைஞர்கள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்”

    “பரமக்குடியில் தலித்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஜெயலலிதா அரசின் போலிஸ் ஏழு தலித்களின் உயிரைப் பறித்தது”

    Vinavu knows how many Dalits exactly died but he doesn’t know how many Backward community people died(mentioned as BC because the victims(died)belonged to more than one community).

    vinavu will give exact data when dalits are affected but he doesn’t have time to get the data when the victims belonged to other community’s…………

    is it?

  4. ///காடுவெட்டி குருவுக்கு ஒரு நீதி, சசிகலா கட்சிக்கு ஒரு நீதி என்று இருக்க முடியாது. தமிழ்நாட்டில் சாதிய முரண்பாடுகளையும், துவேசத்தையும் பெரும் அளவில் தூண்டி வருவதில் முன்னணி வகிப்பது அ.தி.மு.க கட்சிதான் என்பதற்கு வேறு விளக்கம் தேவையில்லை.///
    yes i accept this

  5. சாதி வெறியை தூண்டி அதில் ஓட்டு பொருக்குவது என்பது மனித மலத்தில் உணவு தேடுவது போன்றது இப்படி ஒரு கேவலமான செயலை இந்தியவில் உள்ள அணைத்து ஓட்டு பொறிக்கி கட்சிகளும் செய்து வருகின்றது இவர்கள் செய்யும் இந்த கேவலமான செயலை உழைக்கும் மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் ஒருநாள் இந்த உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து அவர்கள் முகத்தில் காறி உமிழ்வார்கள் இப்போது.

    இப்போது ஜெய அரசு செய்துருக்கும் இந்த செயலுக்காக நான் காறி உமிழ்கிறேன்

  6. தேவருக்குப் பார்ப்பனர்கள் பூசை செய்ய ஆகமவிதிகள் அனுமதிக்கிறதா??

    செல்வி.ஜெயலலிதா முத்துராமலிங்கத் தேவரின் குருபூசையில் கலந்து கொண்டு தங்கக்கவசம் சாத்தும் விழாவில், தேவர் சிலைக்குப் பக்கத்தில் ஒரு பூணூலும் நிற்கிறது. அப்படியானால் பார்ப்பனர்கள் தேவரின் குருபூசையில் கலந்து கொண்டு அவரின் சிலைக்கு பூசை செய்கிறார்கள் என்பது தெரிகிறது…..

    கண்ணகி, ஐயனார், கறுப்பண்ணசாமி, சுடலை முனி, மாடசாமி, போன்ற சிறு தெய்வ வழிபாடே ஆகம விதிகளுக்கு எதிரானவை என்று அதை எதிர்த்தார் ஆறுமுகநாவலர். அப்படியானால், தமக்கு வசதிப்படும் போதெல்லாம், ஆகமவிதிகளை ஆதாரம் காட்டும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் தேவர் சிலைக்கு பூசை செய்வது எந்த ஆகமத்தின் அடிப்படையில் அல்லது அதை ஆகம விதிகள் அதை அனுமதிக்கிறதா என்பது தான் என்னுடைய சந்தேகம். அல்லது தமக்கு வருமானம் கிடைக்குமேயானால், தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் ஆகம விதிகள் மட்டுமல்ல, இந்து மதத்தின் எந்த விதிகளையும் வளைப்பார்கள் என்பது தான் அதன் கருத்தா?

    http://viyaasan.blogspot.ca/2014/02/blog-post_18.html

    • //ஆறுமுகநாவலர்//

      யார் இந்த ஆள்? யார் யாரை வழிபட்டால் இந்த ஆளுக்கு என்ன வந்தது?

      //கண்ணகி, ஐயனார், கறுப்பண்ணசாமி, சுடலை முனி, மாடசாமி//

      அது என்ன சிறு தெய்வம்? பெரு தெய்வம்? உங்களின் சிவனும் ஒருகாலத்தில் ஒரு குடியின் மனிதனாக இருந்து சிலையாக்கப்பட்டு வழிபாட்டிற்கு வந்தது தான்.

      இந்த சிறு பெரு போன்ற அடையாளங்கள் ஏய்த்தலால் வாழும் எத்தர்களால் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. மற்றவர்கள் இவற்றை ஏற்றுக் கொள்வது முட்டாள்தனம்.

      • யுனிவர் புட்டி,

        ///யார் இந்த ஆள்///

        பிரபஞ்ச மொழியாகிய ஆங்கிலத்தை உங்களின் மொழியாக கொண்டதால் தமிழுக்கு தொண்டு செய்த ஆறுமுக நாவலரை உங்களுக்கு தெரியாததில் ஆச்சரியம் இல்லை.அவருடைய கறாரான சைவ அணுகுமுறை விவாதத்துக்கு உரியதுதான்.ஆனால் தமிழ் உரைநடைக்கு அவர் ஆற்றிய தொண்டுக்காக தமிழர்களால் எப்பொழுதும் போற்றதக்கவர்.

        ///உங்களின் சிவனும் ஒரு காலத்தில் ஒரு குடியின் மனிதனாக இருந்து சிலையாக்கப்பட்டு வழிபாட்டிற்கு வந்ததுதான்///

        இது பிரபஞ்சஞானத்தால் நீங்களே அறிந்ததா? இல்லை அதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா?

        • Hi தேவார நாயனார்,

          //கறாரான சைவ அணுகுமுறை//

          சில மக்களின் தெய்வங்களை சிறுமைப்படுத்துவதை அநாகரிகமான அணுகுமுறை என்றுதான் நான் கூறவேன். அதனால் தான் அவ்வாறு எழுதினேன். In addition. I have never heard of him before Viyasan’s another comment in ‘Pasuvin Punitham’.

          //தமிழ் உரைநடைக்கு ஆற்றிய தொண்டு/

          ஒரு மொழியின் உரைநடைக்குக் கூட தொண்டாற்ற வேண்டுமா? விந்தையாக இருக்கிறது. What did he write is very important. In that count, he does not seem a guy worthwhile to notice.

          //இது பிரபஞ்சஞானத்தால் நீங்களே அறிந்ததா?//

          இது பிரபஞ்சஞானத்தால் எல்லோராலும் அறியக்கூடியதுதான். மனிதனின் ஆதி மதம் முன்னோர் வழிபாடுதான். சிவனின் ஆதியைப்பற்றி ஒரு விரிவான நூலைப் படித்தும் இருக்கிறேன். தற்பொழுது நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. குடைந்து கொண்டுதான் இருக்கிறேன். தட்டுப்பட்டால் தெரிவிக்கிறேன்.

          • இப்படியும் அறிவாளிகள் இருக்கிறார்களா.

            யுனிவெர்

            நாம் என்ன மொழியில் பேசுகிறோம்.அதன் வரலாறு என்ன.அதன் வடிவங்கள் என்ன [உரைநடை,பாடல்கள்].இலக்கியங்கள் எனப்படுபவை என்ன.அவை முற்காலத்திலும் தற்காலத்திலும் என்னென்ன வடிவங்களில் படைக்கப்பட்டு வருகின்றன.ஒரு சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் இலக்கியங்களின் பங்களிப்பு என்ன என்பன போன்ற கேள்விகளை எழுப்பி எண்ணிப்பாருங்கள் அல்லது நீங்கள் பொளந்து கட்டும் இங்கிலிபீசுல prose and poetry என்று தேடிப்பார்த்து படியுங்கள்.

            அதற்கு பிறகு \\ ஒரு மொழியின் உரைநடைக்குக் கூட தொண்டாற்ற வேண்டுமா? விந்தையாக இருக்கிறது// என்பது போன்ற ”லூசுத்தனமான” கேள்விகள் எல்லாம் கேட்க மாட்டீர்கள்.

            பழங்காலத்தில் பேச்சு வழக்கில் எழுதுவது என்பதே கிடையாது.எதற்கெடுத்தாலும் காரைக்கால் அம்மையார் மாதிரி பாட்டுதான்.நவீன காலத்தில்தான் உரைநடை இலக்கியங்கள் தோன்றி வளர்ந்தன.உங்கள் இங்கிலிபீசுலயும் அப்படித்தான்.

            பார்க்க.

            http://shakespeare.about.com/od/shakespeareslanguage/a/prose.htm

            சுட்டியிலிருந்து

            In Shakespeare’s day, it was conventional to write in verse, which was seen as a sign of literary excellence. By writing some of his most serious and poignant speeches in prose, Shakespeare was fighting against this convention. It is interesting that some plays like Much Ado About Nothing are written almost entirely in prose – an exceptionally brave move for an Elizabethan playwright.

            உங்கள் நாகரீகத்தின் மட்டத்தையும் காட்டி விட்டீர்கள்.ஒரு அறிஞரை பற்றி மற்றவர்கள் பேசுகிறார்கள்.அவரை பற்றி உங்களுக்கு தெரியவில்லை.அது ஒரு குற்றமில்லை.அதற்காக

            //யார் இந்த ஆள்//

            என்று மரியாதை குறைவாக விசாரிக்கிறீர்கள்.வான் உள்ளளவும் கடல் உள்ளளவும் தமிழ் வாழும்.தமிழ் வாழும் காலமெல்லாம் ஆறுமுக நாவலர் போன்ற தமிழறிஞர்கள் அவர்தம் தமிழ் தொண்டுக்காக நினைவு கூரப்படுவர்.வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற அப்படிப்பட்ட ஒருவரை யுனிவர்பட்டி என்கிற சொந்த அடையாளம் எதையுமே வெளிக்காட்டாத ஒரு அனாமதேயம் தரக்குறைவாக பேசுவது பெரிய கொடுமை.இவ்வளவு திமிரும் தெனாவெட்டும் ஒரு மனிதனுக்கு அழகல்ல.நினைவிருக்கட்டும்.

            அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
            ஆரிருள் உய்த்து விடும்.

          • ///ஒரு மொழியின் உரைநடைக்குக் கூட தொண்டாற்ற வேண்டுமா? விந்தையாக இருக்கிறது///

            விடயம் தெரியா விட்டால் விந்தையாகதான் இருக்கும்.இது பற்றி திப்பு விரிவாக கூறிவிட்டார்.மேலும் சில தகவல் மட்டும்.
            1.19ம்நூற்றாண்டில்தான் தமிழில் உரைநடை வடிவம் உருவாகி வந்தது.

            2.சிவஞான முனிவர்,வள்ளலார்,ஆறுமுக நாவலர் ஆகியோரே அந்த உருவாக்கத்தில் முக்கியமானவர்கள்.இவர்களில் ஆறுமுக நாவலரின் பங்களிப்பே அதிகம்.

            3.அதன் பொருட்டே அவர் தமிழ் உரைநடையின் தந்தை என போற்றப்படுகிறார்.
            4.”ஆங்கில உரைநடைக்கு டிரைடன் போன்று தமிழ் உரைநடைக்கு ஆறுமுகநாவலரே சிறந்து விளங்கினார்” என்று பரிதிமாற் கலைஞர் புகழ்கிறார்.

            5.நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்
            சொல்லு தமிழ் எங்கே? சுருதி எங்கே?
            என்று சி.வை.தாமோதரம் பிள்ளை புகழ்கிறார்.

            சிவ வழிபாடுகுறித்து அந்தநூல் கிடைத்தவுடன் பேசலாம்

    • உங்களின் சிவனும் ஒருகாலத்தில் முத்துராமலிங்கம் போன்ற மனிதனாக இருந்திருக்கலாம்.

      இந்த முத்துராமலிங்கமும் ஒருகாலத்தில் சிவனைப்போன்று பரவலாக வழிபடப்போகக்கூடிய அபாயமும் இல்லாமல் இல்லை. இதுதான் சிலைவழிபாட்டில் உள்ள முக்கியமான குறை.

  7. முத்துராமலிங்கத்துக்கு பாதுகாவலராக இருந்த சோலை குடும்பனுக்கும் தவசிகுறிச்சி எனும் பசும்பொன்னில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்

  8. எதிர்வரும் 22 ஆம் தேதி, தில்லையாடியில் வள்ளியம்மையின் நூற்றாண்டு….
    புரட்சித் தலைவிக்கி நேரமில்லையாம்…..
    இந்திய சுதந்திர போராட்டத்திற்கு தனது
    வாழ்வை இழந்த 16 வயது பெண், தனது கைகளில் இருந்த
    பொன் நகைகளை நமது “காந்தி தாத்தா” பெற்றார்…
    இன்று வரை திருப்பித் தரவைல்லை….இதுதான் காந்தி கணக்கு!

  9. வளவன் என்ற புனைபெயருடையவர்க்கு,

    /தங்கக் கவசத்தின் மதிப்பு 4.70 கோடி ரூபாய். இது அ.தி.மு.க சார்பில் செலவழிக்கப்பட்டாலும், ஜெயலலிதா அன்றைக்கு சென்று வந்த செலவு, பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்டத்தினருக்கான குவார்ட்டர்&பிரியாணி செலவு மற்றும் இன்னபிற செலவீனங்களையும் சேர்த்தால் நிறைய வரும். கேட்டால் இது முதலமைச்சரின் புரோட்டோகால் அடிப்படையில் தவிர்க்க முடியாமல் செய்யப்படும் செலவு /

    ஆக மொத்த செலவினத்தொகை 4 கோடியாக இருந்தால் என்ன? 40 கோடியாக இருந்தால் என்ன? ஒரு மாநில முதலமைச்சரின் பாதுகாப்பு செலவை குறைக்க சொல்ல எந்த வளவனுக்கும் தார்மீக உரிமை இல்லையே. அதிமுக சார்பில் வழங்கப்பட்ட 4.70 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கவசம் என்பது ஏற்கனவே பசும்பொன்னில் சொன்ன வாக்குறுதி தானே? ஜெயலலிதா சொன்ன எல்லா வாக்குறுதியையும் நிறைவேற்றி விட்டாரா? யென்று கேட்கலாம்; அதைப்பற்றி இங்கே பேசவேண்டிய அவசியமில்லை; ஏனெனில், இது சரிந்த முக்குலத்தோரின் வாக்கு வாங்கியை கைப்பற்றும் யுக்தி என்பது அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் தெரிந்த ஒன்று. எல்லோருக்கும் தெரிந்த இந்த சங்கதி, முக்குலத்து மக்களுக்கும் தெரியாதா என்ன? எல்லாவற்றையும் தேவரின இளைஞர்கள் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு முக்குலத்து வாக்குகளை ஜெயலலிதாவின் காலடியில் கொட்டிய சமுதாயம் மெல்ல மெல்ல மாறி வந்துகொண்டிருக்கிறது என்பதுதான் எதார்த்தம். எத்தனை கோடி செலவு செய்தாலும், சுயமரியாதையுள்ள இனம் தன் சுயத்தை காண்பித்தே தீரும் என்பது வரலாறு. அந்த வரலாறு மீண்டும் இங்கே வெளிப்படும் நாள் தொலைவில் இல்லை.

    /நாட்டில் சாதிய பிளவுகளையும், மோதல்களையும் மற்றவர்களை விட ஜெயாதான் தூண்டி வருகிறார். இதற்கு இந்த தேவர் தங்க கவச திக் விஜயம் ஒரு சான்று./

    ஜெயலலிதாவின் இந்த சூழ்ச்சிகளை அனைத்து தரப்பட்ட மக்களும் உணரத்தொடங்கி விட்டார்கள். இது பார்பனீய புத்தி என்பதை முக்குலத்தோரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

    /கடந்த ஆண்டு தேவர் ஜெயந்தியின்போது ஏற்பட்ட வன்முறைகளில் மூன்றுக்கும் மேற்பட்ட முக்குலத்தோர் இளைஞர்கள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். அது ஒரு எதிர்மறை விளைவை உண்டாக்கி, தனது செல்வாக்குத் தளத்தை சரித்துவிடக்கூடாது என்ற ஜெயலலிதாவின் எண்ணமும் இந்த கவசத்தின் பின்னே நிச்சயம் இருக்கும்./

    சின்ன திருத்தம்; கடந்த 2012ம்ஆண்டு தேவர் ஜெயந்தியின் போது மதுரை – சிந்தாமணி பகுதியில் வேனில் சென்றவர்களை வழிமறித்து பெட்ரோல் சமூக பயங்கரவாத கும்பல் குண்டு வீசியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை, பரமக்குடி – பாம்புவிழுந்தான் பகுதியில் அதே நாளன்று பைக்கில் பசும்பொன் சென்றவர்களை வழிமறித்து கற்கால் அடித்து கொலையானவர்களின் எண்ணிக்கை, மருதுபாண்டியர் நினைவேந்தலின் போது காவல்துறையின் என்கவுண்டரால் கொல்லப்பட்ட பிரபு – பாரதி – குமார் மூவரின் எண்ணிக்கையையும் சேர்த்து பத்துக்கும் மேற்பட்ட முக்குலத்து இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதுதான் நிதர்சனம். நீங்கள் சொல்லிருப்பது போல 3 பேர் என்பது சரியான அளவீடு அல்ல.

    /அ.தி.மு.க அரசின் இந்த நடவடிக்கை அவர்களின் சாதிவெறிக்குக் கொம்பு சீவி விடுவது போல் உள்ளது. இதன் எதிர்விளைவாக எதிர் தரப்பான பள்ளர் சாதி இயக்கங்களும் தங்களின் சாதி பிடிமானத்தை இன்னும் கெட்டியாக்கிக் கொள்கிறது./

    உண்மை. தேவர் – பள்ளர், வன்னியர் – பறையர் சாதி மட்டுமில்லாது எல்லா சாதி அமைப்புகளும் தற்போதைய சூழலில் தங்களது பிடிமானத்தை இறுக்கமாக்கி கொண்டுதான் இருக்கிறது. அதற்கு காரணம் போலி திராவிட அரசியல் வாதிகளால் தான்.

    /‘இந்த காமாட்சிபுரி ஆதீனம் என்ற காமெடி பீஸை நாம் முன்பின் கேள்விப்பட்டது கூட இல்லையே.. ஜெயலலிதாவையே ஆட்டுவிக்கிற அளவுக்கு அவ்வளவுப் பெரிய அப்பாடக்கரா?’ என்று விசாரித்தால் கோவையில் இவர் மீது நிலமோசடி, நிதிமோசடி என்று பல பஞ்சாயத்துகள் சொல்லப்படுகின்றன. ஆதீனம் என்றாலே மோசடி என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்./

    காமாட்சிபுரி ஆதீனம் காமெடி பீசு தான் என்பதை எதை வைத்து சொல்கிறீர்கள் வளவன்? உங்களுக்குதான் கேள்வியே படவில்லையென்றுதானே சொன்னீர்கள்? அப்பறம் எப்படி, அவர் செய்யாத நிலமோசடி, நிதி மோசடிகளை சொல்கிறீர்கள்? உங்களுக்கும் ஏதாவது சிறப்பு ஆன்மபலம் வந்து விட்டதா? ஆதாரமில்லாமல், வினவில் எழுத வேண்டாமே! உங்களுக்கு திராணியிருந்தால், அந்த காமாட்சிபுரி ஆதினத்தின் நிதி/நில மோசடியை ஆதாரத்தோடு வினவின் மூலமாக இன்னொரு கட்டுரையை உங்களிடம் எதிர்பார்க்கிறேன். அதுவரை இந்த பொய் குற்றச்சாட்டை சொன்ன உங்களைத்தான் காமெடி பீசாக நினைக்கத்தோன்றும். மேலும், சேவ் தமிழ்ஸ் மீதான் உங்களது வெறுப்பும் கட்டுரையின் இறுதி பத்தியில் பட்டவெளிச்சமாக தெரிகிறது. ஏனெனில், சாதி கட்டமைப்பு, ஹிந்து மதம் போன்றவற்றின் மீதான உங்குளுக்குள் உள்ள காழ்ப்புணர்ச்சி மட்டுமே இந்த கட்டுரையின் நெடுகிலும் தென்படுகிறது. உங்களது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை கட்டுரையில் திணிக்க வேண்டாம் என்பது என் விருப்பம். மற்றபடி இந்த கட்டுரையின் வாயிலாக சொல்லப்பட்டுள்ள அரசியல் வியாபாரிகளின் நரிக்குணத்தையும், அனைத்து சாதிக்களிலும் சிக்குண்டுள்ள எளியவர்களின் உணர்வை வெளிக்காட்டும் விதமாக உள்ளது.

    /இந்த மக்கள் விரோத அணியையும் என்றைக்கு தேவர் சாதி மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி உழைக்கும் மக்கள் புரிந்து கொள்கிறார்களோ அன்றுதான் தென்மாவட்டங்களில் உண்மையான சமூக நல்லிணக்கம் நிலவும்./

    தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்ல; தேவர் சாதி மக்களிலும் பெரும்பாலோனோர் உழைக்கும் மக்களே என்பதையும் வளவன் போன்ற புனைப்பெயர் எழுத்தாளர்களும் புரிந்து கொண்டு அரசியல் சித்தாந்தங்களை சீர்திருத்தினால் நலம். ஏனெனில், நானும் விவசாய பெருங்குடியில் வளர்ந்த காவிரி டெல்டா தேவர் மகன்தான். உழைக்கும் மக்களான விவசாயி மகனும் தான் என்பதால் இங்கே இந்த கட்டுரைக்கு என் பின்னோட்டத்தை இடுகிறேன். எல்லா சாதியில் உழைக்கும் வர்க்கமும் உண்டு, உண்டு கொழுத்து திரியும் கூட்டமும் உண்டு. இங்கே தலித், ஒடுக்கப்பட்ட, ஆண்ட சாதி, அடிமை சாதி என்ற பாகுபாடு துளியும் இல்லை.

    – இரா.ச.இமலாதித்தன், நாகப்பட்டினம்

  10. அதிமு கட்சியின் நிதி என்றாலும் அது கட்சி உறுப்பினர்களின் நிதிதானே என்றொரு கேள்வியை அம்மாவிடம் யார்தான் கேட்டுவிட முடியும்.காமாட்சிபுரி ஆதீனம் காமெடி பீஸு என்றால் அமைச்சர்கள் எல்லாம் டம்மி பீசு.எல்லா சாதியையும் சேர்ந்த அமைச்சர்கள் இருக்கிறார்கள்.ஆனால் அதற்குள் அதிகாரம் படைத்தவர்கள் ஓபிஎஸ் நவிஸ் முனிஸ் போன்றவர்கள்தானே?எல்லா அவமானங்களையும் தாங்கிக்கொண்டாலும் அமைச்சர் பதவிக்கும் உத்திரவாதமில்லை.அம்மா தொண்டர்களைக் கேட்டா தங்கம் வாங்கினார் என்றும் சிந்தித்துவிட முடியாது.சென்ற ஆண்டு தேவர் ஜெயந்தியின் போது வாடகை வாகனங்களில் போகத் தடை விதித்து பூச்சாண்டி காட்டி வெறுப்பேத்தினார்.சம்பத் அறிக்கையை வெளியிட்டு ஆறுதல் படுத்தினார்.இதுவெல்லாம் முக்குலத்தோர் வாக்கு வங்கியைத் தக்கவைக்க அம்மா விள்யாடும் சித்து விளையட்டு.இதை இளைஞர்கள் யாரோ புரிந்துகொண்டிருப்பதாக இமலாதித்தன் கூறுகிறார்.தேவர் சாதியினர் கொல்லப்பட்டதாக கணக்கு கூறுகிறார்.அவர் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும்.கொல்லப்பட்டவர்களில் விஞ்சி நிற்பவர்கள் தலித்துகளா மற்றவர்களா என்று?மொத்தத்தில் பார்ப்பன பாசிசம் எல்லாருடைய முதுகிலும் சவாரி செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

  11. செங்கதிர்செல்வன்,

    /இளைஞர்கள் யாரோ புரிந்துகொண்டிருப்பதாக இமலாதித்தன் கூறுகிறார்/

    யென்று நீங்கள் சொல்லும் தொனியில், நான் என்னமோ குத்துமதிப்பாக சும்மா அடிச்சுவிடுற மாதிரி சொல்வது போல இருக்கிறது. ஆனால் உங்களது கணிப்பை பொய்யாக்கும் விதமாகவும், நான் சொன்ன இளைஞர்களின் புரிந்துணர்வையும் எதிர்கால அரசியலின் மூலமாக தெரிந்துகொள்ள முடியும். ஹிந்தியத்தின் ஒவ்வொரு வருடமும் லட்சகணக்கான புதுப்புது வாக்காளர்கள் மாநிலம் வாரியாக வந்தவண்ணம் உள்ளதாக கணக்கெடுப்பு கூறுகிறது. அந்த புதிய வாக்காளர்கள் அனைவரும் இளைஞர்களே. எனவே, நீங்கள் சொன்ன பார்பன பாசிசத்தை வேரறுக்கும் முடிவோடு இளைஞர்கள் களம் காண ஆயத்தமாகி வருகிறார்கள். காலம் காலமாக அன்புக்கு அடிபணிந்த கூட்டம், அதனால் தான், அதிமுக கரை வேட்டியை கழட்டியெறிய அவ்வளவு எளிதாக முடியவில்லை. ஓ.பி.எஸ் போன்ற தேவர் சாதியென அடையாளப்படும் சில பிறவிகளும் பதவி/புகழ்/பணம் போன்ற அற்ப சுகத்திற்காக ஒட்டுமொத்த தேவர் சாதியின் களங்கம்நிறைந்த அடையாளமாக திகழ்கின்றன. தேனி பக்கம் டீக்கடை கல்லாவில் உட்கார்ந்திருந்தவருக்கு நிதித்துறை அமைச்சர் பதவி வழங்கி காலில் விழ வைக்கும் பார்பன புத்தியை பற்றிய கவலை, காலில் விழுந்தே கிடக்கும் அப்பிறவிகளுக்கு தெரிய வேண்டிய அவசியமுமில்லை; தெரிந்து கொள்ள போவதுமில்லை. ஏனெனில், லாபம் கிடைத்தால் போதும் என்ற மனப்போக்குதான். ஜெயலலிதாவின் அந்த போலியான அன்பை, சமீபத்திய சில நகர்வுகள் மூலம் தேவரின இளைஞர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு மூலக்காரணியான பார்பனிய பின்புலத்தையும் அறிந்து கொண்டிருக்கிறார்கள். ஊருராக திராவிடத்தின் சூழ்ச்சிகளை பரப்புரை செய்து வருகிறார்கள். எதுவும் இங்கே எளிதாக நடந்து விடுவதில்லை. தேவர்மகன் படத்தில் சிவாஜி சொல்லும் வசனம்தான் இங்கே ஓப்பீடாக சொல்லமுடியும்; கொஞ்சம் பொறுமையாத்தான் வருவான்; ஆனால் விதையை விதைச்சாசு; பார்பனிய – திராவிட எதிர்ப்பு என்ற அந்த விதையைத்தான் தேவரின இளைஞர்கள் இன்றைக்கு ஆழ விதைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது மரமாக வளர இன்னும் சில காலம் எடுக்கலாம். ஆனால், கண்டிப்பாக விருட்சமாகியே தீரும். அப்போது பள்ளர் – பறையர் – நாடார் – கவுண்டர் – வன்னியர் – தேவர் யென்ற சாதிய வெறிகொண்ட பாகுபாடுன்றி, சகோதரத்துவமாய் வாழ்வார்கள். அன்றைக்கும் தமிழகத்தை தமிழர்களே ஆள்வார்கள். அது நடக்கும் வரையிலும், இந்த இமலாதித்தன் சொல்வதெல்லாம் சும்மா அடிச்சு விடுவதுபோலத்தான் இருக்கும். பார்பனீயம் தலைதூக்காத அன்றைய நாளில், எல்லோரும் பேருக்கு பின்னால் பிள்ளை, தேவன், காலாடி, படையாட்சியென சேர்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் அன்றைக்கு சாதிவெறி இல்லை. இன்றைக்கு, ஈ.வெ.ரா போன்றவர்களால் பெயருக்கு பின்னால் சாதியை போட்டுகொள்வதில்லை; ஆனால், பார்பனீயத்தின் தலையீட்டால் சாதிவெறி மேலோங்கி நிற்கிறது. அந்த பார்பனீயத்தை வேரறுக்கு எம் தேவரின இளைஞர்கள் களம் காண ஆயத்தமாகி வருகிறார்கள். கண்டிப்பாக பார்பனீயத்தையும் – திராவிடத்தையும் வேரறுப்பார்கள்.

    /தேவர் சாதியினர் கொல்லப்பட்டதாக கணக்கு கூறுகிறார்.அவர் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும்.கொல்லப்பட்டவர்களில் விஞ்சி நிற்பவர்கள் தலித்துகளா மற்றவர்களா என்று?/

    தேவர் சாதியினர் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட என் கணக்கு சரிதான்; அது கடந்த இரு ஆண்டுகளில் நடந்தது. இதை 30 வருடம் பின்னோக்கி சென்று அதற்கான எதிர்வினைதான் இது என்று சு.ப.வீ. மாதிரி சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். மேலும், வரலாற்றை புரட்டி பார்த்து ஒரு மண்ணும் ஆகப்போவதில்லை. இங்கே விஞ்சி நிற்பவர்கள் யாராகினும், அவர்கள் பாதிப்படைய பார்பனீயமும் ஒரு காரணம் என்பதையே நான் புரட்டி பார்க்க விரும்புகிறேன்.

    • \\வரலாற்றை புரட்டி பார்த்து ஒரு மண்ணும் ஆகப்போவதில்லை.//

      எங்கிருந்து வருகிறோம் என்பதை அறியாதவர்கள் எங்கும் போக முடியாது.அப்படியே தேங்கி கிடக்க வேண்டியதுதான்.

      • //எங்கிருந்து வருகிறோம் என்பதை அறியாதவர்கள் எங்கும் போக முடியாது.அப்படியே தேங்கி கிடக்க வேண்டியதுதான்.//

        எல்லோரும் ஆப்பிரிக்காவிலிருந்துதான் வந்திருக்கிறோம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்..அதற்கு என்ன செய்யாலாம் என்று சொல்லுங்கள்

    • “பார்பனீயம் தலைதூக்காத அன்றைய நாளில், எல்லோரும் பேருக்கு பின்னால் பிள்ளை, தேவன், காலாடி, படையாட்சியென சேர்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் அன்றைக்கு சாதிவெறி இல்லை.”

      இந்த மாதிரி நீங்கள் சொல்வது வினவுக்குத் தெரியுமா? ஏனென்றால் வினவின் படி இந்த உலகம் ஆரம்பித்ததிலிருந்து பார்ப்பனீயம் தலை தூக்கி ஆடிக் கொண்டிருக்கிறது.எனவே அன்றைக்கு சாதி வெறி இல்லையென்று நீங்கள் சொல்வது சரியானால் …. எங்கேயோ உதைக்கிறது.வினவின் பள்ளியில் படித்த எங்களுக்குப் புரியவில்லை.

      “இன்றைக்கு, ஈ.வெ.ரா போன்றவர்களால் பெயருக்கு பின்னால் சாதியை போட்டுகொள்வதில்லை; ஆனால், பார்பனீயத்தின் தலையீட்டால் சாதிவெறி மேலோங்கி நிற்கிறது.”

      பலே பாண்டியா!

      ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

    • // ஆனால், பார்பனீயத்தின் தலையீட்டால் சாதிவெறி மேலோங்கி நிற்கிறது. அந்த பார்பனீயத்தை வேரறுக்கு எம் தேவரின இளைஞர்கள் களம் காண ஆயத்தமாகி வருகிறார்கள்.//

      இது என்னப்பா புதுசா.. தேவரியமா..?! களம், குளம் எல்லாம் என்னத்துக்கு.. முதலில் தேவேந்திரர்களையும், நாடார்களையும் சகோதரர்களாகப் பாருங்கள், பார்ப்பனீயம் வெகுவாக குறைந்துவிடும்..

      • அம்பி சார்,
        நீங்களும் முன்னுதாரணமாக தேவேந்திரர்,நாடார் உள்பட அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக ஆதரவு தந்து பார்பனீயத்தை குறைக்க முயற்சிக்கலாம்.

        • கவின் அவர்களே,

          அனைத்து சாதியினரும், அனைத்து கோயில்களிலும் அர்ச்சகராகலாம் என்பது காலத்தின் கட்டாயம்.. அது ஜனநாயக உரிமையும் கூட..

          2 விசயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பது என் கருத்து..

          1. பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் பூசை செய்து வரும் பல கோயில்களில் பூசை உரிமை அந்த பூசாரிகளின் குடும்பத்திற்கு பரம்பரையாக இருந்து வருகிறது.. இதற்கு பக்தி சார்ந்த நம்பிக்கைகளும், கதைகளும், வரலாறும் உண்டு.. இவர்களுக்கு பதிலாக, அவர்களின் சம்மதமின்றி எல்லோரும் (பார்ப்பனர்கள் உள்ளிட்டு) அந்தக் கோயில்களிலும் பூசை செய்ய வேண்டும் என்பது ஜனநாயக உரிமையை வேண்டுமானால் நிலைநாட்ட உதவலாமே தவிர பக்தி சார்ந்த நம்பிக்கைகளை புறக்கணிப்பதில் முடியும்.. நாத்திகர்களுக்கு அதில் பிரச்சினை இல்லை, ஆத்திகர்கள் அதைப் பற்றி விவாதித்து முடிவுக்கு வரவேண்டும்..

          2. சமூகத்தில் சாதி வெறி தலைவிரித்தாடும் போது, வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களிடையே கருவறைக்குள்ளும் சாதிச் சண்டைகள் நடந்தால் எப்படி தடுப்பது..?! அப்போது நாத்திகர்களுக்கு கோயிலையும் சமூக நீதிப் போர்க்களமாக்கி கோயிலுக்குள் உற்சாகமாக மறியல், போராட்டம் நடத்த எந்த தயக்கமும் இருக்கப்போவதில்லை, ஆத்திகர்கள் அதைப் பற்றி விவாதித்து முடிவுக்கு வரவேண்டும்..

          இது பற்றி வேறு பொருத்தமான பதிவுகளில் விவாதிப்பதையே விரும்புகிறேன்.. ’உச்சிக்குடுமி’ மன்றத்தின் தீர்ப்பு வரும்போது விவாதிக்கலாம்..!

          • அம்பி ஐயா!

            உங்களது சில பின்னுட்டங்களை பார்க்கும் போது பார்ப்பன சாதி மீது தூசி,துரும்பை கூட அண்டவிடமாட்டேன் என்று சபதம் எடுத்தவர்போல் தோன்றுகிறது.நீங்கள் மற்றவர்களின் சாதிவெறியை பற்றி பேசுகிறீர்கள்.

            பார்ப்பனர்களிடம் சாதி மேட்டிமை மனோபாவம் இருக்கிறதா இல்லையா?

            • தேவார நாயனார் அவர்களே,

              உங்கள் பெயரைப் பார்த்தாலே உங்களுக்கும் ஏதோ மேட்டிமை உணர்வு இருப்பது போல் தோன்றுகிறது.. மேலும், பெரியார், இமலாதித்தர், வியாசர் போன்றவர்கள் பார்ப்பானைத் திட்டும் போதெல்லாம் ‘அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும் துண்டைப் போடலாம்’ என்ற நினைப்பில் பேசுவது போலவே தோன்றுகிறது.. அதனாலேயே பார்ப்பனர்கள் ஒரு பாதுகாப்பு கருதி தங்கள் மேட்டிமை மனோபாவனைகளை மேலும் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறார்கள்..

              மற்றபடி, பார்ப்பனர்களிடம் உள்ள மேட்டிமை உணர்வை எல்லா மதங்களிலும் உள்ள புரோகித வர்க்கத்திடமும் கூடக்குறைய காணலாம்.. பார்ப்பனர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே உள்ள அத்தைகைய மேட்டிமை உணர்வு முழுமையாக கைவிடப்பட வேண்டிய ஒன்று என்பதுதான் என் கருத்து..

              • /மேலும், பெரியார், இமலாதித்தர், வியாசர் போன்றவர்கள் பார்ப்பானைத் திட்டும் போதெல்லாம் ‘அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும் துண்டைப் போடலாம்’ என்ற நினைப்பில் பேசுவது போலவே தோன்றுகிறது../

                ஈ.வெ.ராவுக்கும் வியாசருக்கும் இடையில் அடியேன் பெயரையும் இணைத்து சொல்லிருக்கும் விதத்தில்தான் பார்பனீயத்தின் சாயல் தெரிகிறது. ஆனால் அம்பியாக வந்திருக்கும் நீங்கள் கண்டிப்பாக பார்பனர் கிடையாது என்பதும் புரிகிறது. 🙁

              • ///உங்கள் பெயரைப் பார்த்தாலே ஏதோ மேட்டிமை உணர்வு இருப்பது போல் தோன்றுகிறது///

                ஏன் அப்படி தோனுது? விளக்க முடியுமா?

                ///பெரியார்,இமாலதித்தர்,வியாசர்….. .கெட்டியாய் பிடித்து கொள்கிறார்கள்///

                ஆக பார்ப்பனர் என்பவர்கள் வெறும் சமய புரோகிதர்கள் மட்டும் இல்லை அவர்களே சாதி அடுக்கு சமூகத்தின் பெரியண்ணன் என்கிறீர்கள்.மேலும் அவர்களை திட்டுபவர்கள் அனைவரும் அந்த இடத்தை பிடிக்க முயலுபவர்கள் என்கிறீர்கள்.அதுமட்டுமின்றி அந்த பெரியண்ணன் இடத்தை அவர்கள் கெட்டியாக பிடித்துகொள்வது சரி என்றும் நியாய படுத்துகிறீர்கள் அப்படிதானே.

                ///எல்லா மதங்களிலும் உள்ள புரோகித வர்க்கத்திடமும் கூடக்குறைய காணலாம்///

                எந்த மதத்திலும் புரோகிதர்கள் பிறப்பின் அடிப்படையிலேயே தகுதி பெறுவது இல்லை.எனவே அவர்களிடம் சாதி மேட்டிமை உணர்வு இருப்பதாக கூறுவது பொய்.

                ///பார்ப்பனர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே உள்ள அத்தைகைய மேட்டிமை உணர்வு முழுமையாக கைவிடப்பட வேண்டிய ஒன்று என்பதுதான் என் கருத்து///

                முழுமையாக கைவிடப்பட வேண்டிய ஒன்றை உங்களது பின்னுட்டம் முழுவதும் நியாயப்படுத்துகிறீர்கள் ஏன் இந்த முரன்பாடு?

                • // ஆக பார்ப்பனர் என்பவர்கள் வெறும் சமய புரோகிதர்கள் மட்டும் இல்லை அவர்களே சாதி அடுக்கு சமூகத்தின் பெரியண்ணன் என்கிறீர்கள்.மேலும் அவர்களை திட்டுபவர்கள் அனைவரும் அந்த இடத்தை பிடிக்க முயலுபவர்கள் என்கிறீர்கள்.அதுமட்டுமின்றி அந்த பெரியண்ணன் இடத்தை அவர்கள் கெட்டியாக பிடித்துகொள்வது சரி என்றும் நியாய படுத்துகிறீர்கள் அப்படிதானே.//

                  ‘அனைவரும்’, ‘சரி’ என்ற சொற்களைச் செருகி விளக்கம் கொடுத்த நீங்கள்,

                  // ஏன் அப்படி தோனுது? விளக்க முடியுமா? //

                  இதற்கும் ஒரு விளக்கத்தை உங்களால் கொடுக்க முடியுமா..?! அதன் பிறகு இரண்டையும் நான் விளக்குகிறேன்..

                  // எந்த மதத்திலும் புரோகிதர்கள் பிறப்பின் அடிப்படையிலேயே தகுதி பெறுவது இல்லை.எனவே அவர்களிடம் சாதி மேட்டிமை உணர்வு இருப்பதாக கூறுவது பொய். //

                  புரோகித வர்க்கத்தின் மேட்டிமை உணர்வைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன், சாதி மேட்டிமை உணர்வு என்று எங்கே கூறியிருக்கிறேன்..?! சாதி மேட்டிமை உணர்வைப் பற்றி மட்டும்தான் விவாதிக்க வேண்டுமா..?!

                  // முழுமையாக கைவிடப்பட வேண்டிய ஒன்றை உங்களது பின்னுட்டம் முழுவதும் நியாயப்படுத்துகிறீர்கள் ஏன் இந்த முரன்பாடு? //

                  மேட்டிமை உணர்வு யாரிடம் இருந்தாலும் கைவிடப்பட வேண்டிய ஒன்று எனக் கூறுவதாகப் புரிந்து கொண்டால் முரண்பாடு தெரியாது..

              • வியாசர் என்றதைப் பார்த்து விட்டு, அது வேறு யாரோ என்று நினைத்து, நான் முழுதாக படிக்கக் கூடவில்லை. 🙂

              • //அதனாலேயே பார்ப்பனர்கள் ஒரு பாதுகாப்பு கருதி தங்கள் மேட்டிமை மனோபாவனைகளை மேலும் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறார்கள்.//

                தமிழ்நாட்டில் பார்ப்பனர்களின் மேட்டிமைக்கும், திமிருக்கும் காரணம் பிள்ளைமார்களும், வெள்ளாளர்களும், அவர்களை தாங்கிப் பிடிக்கும் ஏனைய தேவர், செட்டியார் போன்ற ஆதிக்க சாதித் தமிழர்கள் தான். தில்லையில் தீட்சிதர்களின் திமிருக்குக் கூட காரணம், அவர்களை பல ஆதிக்கசாதி இந்து தமிழர்கள் ஆதரிக்கிறார்கள் என்பது தான். தமிழுக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென்பதற்கான போராட்டமாக இருந்தாலும் கூட அதில் தலைமை தாங்கிறவர்கள் அல்லது அந்த போராட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்களின் பங்களிப்புமிருந்தால், ஆதிக்கசாதி தமிழர்களின் சாதிவெறி அவர்களுடன் ஒத்துழைக்க மறுக்கிறது. இந்த நிலை தொடரும் வரை பார்ப்பனர்களின் பாடு கொண்டாட்டம் தான். அவர்கள் மேலும், மேலும் தமது மேட்டிமை மனப்பான்மையைப் பயமின்றி தமிழர்க்ளிடம் காட்டுவார்கள்.

                தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் என்ன தான் அரசியல், கல்வி, ஊடக வலிமையுடன் இருந்தாலும் பார்ப்பனர்களின் மேட்டிமையை அடக்கும் கடிவாளம் ஆதிக்க சாதித் தமிழர்களிடம் உண்டு. அதனால், உண்மையில் “அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும் துண்டைப் போடலாம்’ என்ற நிலையில் ஆதிக்க சாதியினர் இல்லை, அவர்கள் நினைத்தால் அண்ணன் (பார்ப்பனர்) சாக முன்பே திண்ணையிலிருந்து தூக்கி வெளியில் போடலாம். ஆதிக்க சாதியினரின் ஆதரவு தான் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஈழத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளில் கூட பார்ப்பனர்களின் பாதுகாப்பு. ஈழத்தில் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டைப் போல் மேட்டிமை காட்டாதற்குக் காரணம், அவர்களின் குணம் தெரிந்து, யாழ்ப்பாணத்து வெள்ளாளர்கள் அவர்களை அதிகம் தலை தூக்க விடாமல், தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது காரணம் போல் தெரிகிறது. 🙂

                • vyasan,

                  Brahmins in yaazhpanam are mere priests and very few in number,moreover vellalars are the elite of northern province,is not the case in TN.

                  secondly,what happened in yaazhpanam did not happen here in TN,so u shud perhaps think if u should be so proud after all.

                  thirdly,85% of the tamil brahmins already live outside and are never going to return to TN.

                  The remaining 15% are just looking for an oppurtunity to move away.

                  Most of the so called BC castes of TN are highly marginalized by upwardly mobile OBC castes of TN and their dream of sitting as the elites of TN is long dead,now they are just nursing their wounds.

                  i can also point out the cunningness of yaazhpanam vellalars who sit in europe earning refugee allowance/citizenship/jobs and letting commonfolk die in mullivaikkal.

                  All Srilankan elite,Tamil/Sinhalese were converted by the portuguese including the king of jaffna,that never happened in TN.

                  so i dont understand what r u proud of?

                  finally,the chidambaram temple case is purely that of one upmanship,an atheistic government ll never be able to touch any temple.If the saiva siddhantar people talk face to face,there ll be a resolution but they always rely on proxies just like how u did in yaazhpanam.

                • one more point is that without brahmins/hinduism,the first people to be slaughtered will be the so called BC caste,they are the worst perpetrators of real violence and will suffer the most,they need the brahmins to pacify the society more than other way around.

                  • Harikumar,

                    //finally,the chidambaram temple case is purely that of one upmanship,an atheistic government ll never be able to touch any temple.If the saiva siddhantar people talk face to face,there ll be a resolution but they always rely on proxies just like how u did in yaazhpanam.///

                    தமிழில் தேவாரம் பாடப்பட வேண்டுமென்பது மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட குழுவினரின் பொறுப்பில், அவர்களில் கட்டுப்பாட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும், உலகத்தமிழர்களனைவருக்குமே முக்கியமான கோயில் இருக்கக் கூடாதென்பது தான் தில்லைக் கோயில் விடயத்தில் தமிழர்களின் கருத்து, அதிலும் அந்தக் குறிப்பிட்ட குழுவினர் தமிழையும் எதிக்கிறார்கள் என்பது அந்தப் பிரச்சனையை மிகவும் பாரதூரமானதாக்கிறது. வெளிநாடுகளில் கூட வரலாற்றுச் சிறப்புள்ள, பழமையான தேவாலயங்கள் அரசாங்கத்தின் கண்காணிப்பில் தான் உள்ளன. ஜேர்மனியில் பழமையான சின்னங்களையும், தேவாலயங்களையும் பராமரிப்பதற்கென்றே, மேலதிக சிறப்பான(Special) வரியை செலுத்துகின்றனர். உதாரணமாக, சவூதி அரேபியாவில் மெக்காவை பாதுகாக்க வேண்டியது. சவூதி அரசரின் கடமை. சிதம்பரம் சைவத் தமிழர்களுக்கு மெக்கா போன்றது, அது தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டுக்குள், கண்காணிப்பின் கீழ் தானிருக்க வேண்டுமே தவிர படிப்பறிவற்ற தீட்சிதர்களின் கையில் அல்ல. யாருடைய கட்டுப்பாட்டுக்குள் கோயில் இருப்பது என்பது தானிங்கு பிரச்சனையே தவிர எந்த அடிப்படையில், யார் பூசை செய்ய வேண்டுமென்பதல்ல.

                    //All Srilankan elite,Tamil/Sinhalese were converted by the portuguese including the king of jaffna,that never happened in TN.///

                    உங்களுக்கு யாழ்ப்பாண அரசினதும், யாழ்ப்பாணனத்தமிழர்களினதும் வரலாறு தெரியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. உலகிலேயே சைவத்தைக் காப்பதற்காக தமது நாட்டை, அரசை இழந்தவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள்.

                    கோவாவிலிருந்த புனித சவேரியாரின் பாதிரியார்களால், மன்னாரில் தமிழ்ப்பரவர்கள் கத்தோலிக்கத்துக்கு மதமாற்றப்பட்டதைக் கேள்விப்பட்ட யாழ்ப்பாண அரசன் சங்கிலி குமாரன், மன்னாருக்குப் படைகளுடன் சென்று, மதம் மாறிய அத்தனை பரவர்களையும் (மீனவர்கள்) வெட்டிக்கொலை செய்தான். அதற்குப் பழிவாங்குமாறு சவேரியார் போத்துக்கேய ஆளுனரை வேண்டிக் கொண்டதால் தான் போத்துக்கேயர், யாழ்ப்பாண அரசுடன் போர் தொடுத்தனர். அக்காலத்தில் மதுரையை ஆண்ட சொக்கநாதநாயக்கர், நீ போத்துக்கேயருடன் சண்டைக்குப் போ, நான் படையனுப்புகிறேன் என்று உறுதி மொழி கொடுத்து விட்டுப் படையனுப்பாததால் தான், யாழ்ப்பாண அரசு வீழ்ந்தது. அதனால் தான் ஈழத்தில் இன்றும் “வயிற்றுவலியை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பாதே” என்ற பழமொழி உண்டு. அதாவது வயிற்று வலி இருக்கும் போது கூட, எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்து பயணம் போகலாம், ஆனால் வடக்கத்தையானை (இந்தியனை) நம்பி எந்தக் காரியத்திலும் இறங்காதே. 🙂

                    அத்துடன் எந்த யாழ்ப்பாண அரசனும் ஆட்சியிலிருந்த போது அல்லது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவதற்காக மதம் மாறவில்லை. யாழ்ப்பாணத்தின் கடைசி அரசனின் இரண்டு ஆண் குழந்தைகளும் போத்துக்கேயரால் கோவாவில் மதம் மாற்றப்பட்டனர் என்று கூறுவர். போத்துக்கேயர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிலைமை, தமிழ்நாட்டில் நிலைமை வேறு. யாழ்ப்பாணத்தை முற்றாக கிறித்தவமயமாக்கலாம் என ஐரோப்பியர்கள் நம்பினர். அக்காலத்தில் சைவத்தை கடைப்பிடித்தவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது மட்டுமன்றி தண்டனையும் அளிக்கப்பட்டது. மதம் மாறாத யாழ்ப்பாண் மக்கள், ஐரோப்பியர்களுக்கு ஆளுக்கொரு மாட்டை இறைச்சிக்குக் கொடுக்குமாறு பணிக்கப்பட்டனர். அதை எதிர்த்துப் பலர் தமிழ்நாட்டுக்கு ஓடினர். அப்படி வந்தவர்களில் ஒருவர் தான் சிதம்பரத்தில் ஞானப்பிரகாசர் மடமும், குளமும் கட்டிய யாப்பாணம் ஞானப்பிரகாசர். அந்த மடமும், குளமும் இன்றும் சிதம்பரத்திலுண்டு. அத்துடன் போத்துக்கேயர் யாழ்ப்பாணத்தில் மட்டும், 500 சிவாலயங்களை இடித்துக் கொள்ளை அடித்தனர், அந்தக் கற்களைக் கொண்டு, யாழ்ப்பாணத்துக் கோட்டையைக் கட்டினர். அதனால் பல யாழ்ப்பாணத்தமிழர்கள் தமது கோயில் சிலைகளைக் காப்பாற்ற அவற்றைத் தூக்கிக் கொண்டு வன்னிக் காட்டுக்குள் ஓடினர். அல்லது கிணறுகளுக்குள் போட்டு மறைத்தனர். யாழ்ப்பாணத்தில் வைரவர் வழிபாடு இன்று பரவலாக இருப்பதற்குக் காரணம், போத்துக்கேயர் சைவ வழிபாடுகளை மேற்கொள்ளும் சைவர்களுக்கு தண்டனை விதித்ததால், வைரவர் வழிபாடு இலகுவானது. வழிபாடு முடிய சூலத்தை எடுத்து தலைகீழாகக் குத்தி விடுவார்களாம். வேறு சிலைகள் வைத்திருந்தால் கண்டு பிடித்து விடுவார்கள் என்ற பயம். போத்துக்கேயர் களத்தில், திருநீற்றை ஒரு சிரட்டையில் போட்டு, கூரைக்குள் செருகி மறைத்து வைத்த பழக்கத்தால், அது இன்றும் பல கிராமங்களில் வீட்டில் தாழ்வாரத்தில் கூரைக்குள் செருகி வைக்கும் வழக்கம் உண்டாம். அப்படி நெருக்கடியான கால கட்டத்திலும், எத்தனை துன்புறுத்தலின் மத்தியிலும், சைவத்தை மறக்காமல், காத்தவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள். ஆங்கிலக் கல்விக்காக கிறித்தவத்துக்கு மாறிய பல யழ்ப்பாணத் தமிழர்கள், படித்து முடிந்ததும் முழுச் சைவப்பழங்களாகி, பல கோயில்களை மீண்டும் கட்டியது மட்டுமல்ல, மதமாற்றத்துக்கெதிராகப் போராடியுமுள்ளனர். சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை மட்டுமல்ல, பிரிக்க முடியாதவை அது தான் பெரும்பான்மை ஈழத்தமிழர்களின் நிலைப்பாடு.

                    • Most people do not support the government of TN managing the temple and it is an ego battle not a real issue,thats why the supreme court did not rule in favour of the Tn govt.

                • // ஈழத்தில் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டைப் போல் மேட்டிமை காட்டாதற்குக் காரணம், அவர்களின் குணம் தெரிந்து, யாழ்ப்பாணத்து வெள்ளாளர்கள் அவர்களை அதிகம் தலை தூக்க விடாமல், தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது காரணம் போல் தெரிகிறது. //

                  தமிழ் நாட்டில் பார்ப்பான், ஈழத்தில் வியாசர் போன்ற வேளாளர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா..?! ஏனென்றால் தமிழ்நாட்டில் வியாசராகப்பட்ட உங்களைப் போன்ற வேளாளர்கள் இருந்திருந்தால் பார்ப்பன எதிர்ப்புக்கு பதில் வேளாள எதிர்ப்பு பரவலாயிருக்கும்..

                  • யாழ்ப்பாணத்து வேளாளர் ஒரு கலப்புச் சாதியினர்.அநேகமான பள்ளர்களின் கோயில்கள் பிடுங்கப்பட்டு,அவைகள் இப்போதும் கலப்பு சாதியினராகிய வெள்ளாளரிடத்தில்தான் இருக்கிறது.
                    http://yaalppaanam.wordpress.com

          • //பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் பூசை செய்து வரும் பல கோயில்களில் பூசை உரிமை அந்த பூசாரிகளின் குடும்பத்திற்கு பரம்பரையாக இருந்து வருகிறது.. *** ஆத்திகர்கள் அதைப் பற்றி விவாதித்து முடிவுக்கு வரவேண்டும்.. //

            ஆடு நனைகிறதே என்று ஒநாய் கவலைப் பட்டதாம்.

            பெருச்சாளிகளே சிலிர்த்துக்கொண்டு எதிர்க்கும் போது சில சுண்டெலிகள் சிறிது கத்தத்தான் செய்யும்.
            பெருச்சாளிகளை வழிக்குக் கொண்டு வந்து விட்டால் சுண்டெலிகளும் பலனடைவார்கள் என்பதால் சில சுண்டெலிகளின் சத்தமும் உடனே அடங்கிவிடும்.

            //’உச்சிக்குடுமி’ மன்றத்தின் தீர்ப்பு வரும்போது விவாதிக்கலாம்//

            ok.

    • பார்ப்பனீயம் என்று ஊளையிடும் ஆதிக்கசாதி குள்ளநரிக்கூட்ட ஓலம் போல் இருக்கிறது உங்கள் பின்னூட்டம்…

      பார்ப்பனீயம் என்ற பெயரில் ஆதிக்கசாதியினரின் அட்டூழியங்களை மறைக்கப்பார்க்கிறீர்கள்…

      ஏன்? உங்கள் முன்னோர்கள் முட்டாள் கூமுட்டைகளா? சொந்த புத்தி கிடையாதா? கை சூப்பிகளா?

  12. /\\வரலாற்றை புரட்டி பார்த்து ஒரு மண்ணும் ஆகப்போவதில்லை.//

    எங்கிருந்து வருகிறோம் என்பதை அறியாதவர்கள் எங்கும் போக முடியாது.அப்படியே தேங்கி கிடக்க வேண்டியதுதான்./

    திப்பு,

    நான் ஆண்ட பரம்பரை,ஆண்ட பரம்பரை யென்ற பீத்தல்கள் மட்டும் போதுமென்று நினைக்கிறீர்களா? இந்த ஆண்டான் – அடிமை பிரச்சனையால் தானே, ஊருக்குள்ள் உள்ள அனைத்து சாதியும் ஏதாவது ஒரு மன்னரை தங்கள் சாதியென சொல்லிக்கொண்டு, மன்னர் பரம்பரையென பீற்றிக்கொண்டு திரிகின்றன? இதனால் தானே சாதிப்பிரச்ச்னைகளும் அதிகம் வளர்கின்றன. நேற்றைய வரலாறை அறிந்து அதை ஓர் உத்வேகமாக கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட வரவில்லையே யாரும்… மாறாக, நான் உன்னை விட பெரியவன் என்ற அடக்கியாளும், அடிமைப்படுத்தும் போக்குத்தானே நீடிக்கிறது. இந்த வரலாறால், இன்றைய சமூக சூழல் சிதறடிக்கப்படுமாயின், அப்படிப்பட்ட வரலாறு தேவையே இல்லை என்பது (நான் தேவரினத்தில் பிறந்திருந்தாலும்)என் தனிப்பட்ட கருத்து இதுவே.

    • ஆண்ட பரம்பரை என்ற பீத்த பெருமை தேவையில்லை என்ற உங்கள் கருத்து
      மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்த்தால் ஆக பெரும்பான்மையான சாதியினர் மறவர்கள் உட்பட ஒடுக்கப்பட்டவர்கள்தான் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளலாம்.

      \\நேற்றைய வரலாறை அறிந்து அதை ஓர் உத்வேகமாக கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட வரவில்லையே //என்று நீங்கள் ஆதங்கப்படுவது போலத்தான் சமூக எதார்த்தம் உள்ளது.சாதிகளை கடந்து,சொந்த சாதியினரின் வெறியூட்டல்களுக்கு பலியாகாமல் மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட உண்மையான வரலாற்றை அறிந்திருப்பது அவசியம் என்ற அளவில் வரலாறு அவசியம் என்றுதான் நான் சொல்ல வருகிறேன்.

      • // வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்த்தால் ஆக பெரும்பான்மையான சாதியினர் மறவர்கள் உட்பட ஒடுக்கப்பட்டவர்கள்தான் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளலாம். //

        கள்ளர், மறவர், அகம்படியார் எனப்படும் முக்குலத்தோரை முழுமையாக ஒடுக்க எந்த ஆட்சியாளர்களாலும் இயலவில்லை என்பதுதான் வரலாறு.. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ரேகைச் சட்டத்தால் கடுமையாக ஒடுக்க முயன்றபோதுகூட முக்குலத்தோர் பசும்பொன் தேவர் தலைமையின் கீழ் போராடி வெற்றியடைந்திருக்கிறார்கள்.. இத்தகைய வீரமிக்க போர்க்குடிகள் பிற தமிழ்குடிகளிடம் தங்கள் வீரத்தைக் காட்டி ஒடுக்குவதில் நேரத்தையும், ஆற்றலையும் செலவிடாமல் முன்னேற்றம், சகோதரத்துவ உணர்வு இவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் தமிழர், தமிழக முன்னேற்றத்தை விரும்புவோர் அனைவரின் விருப்பமும்..

        // சாதிகளை கடந்து,சொந்த சாதியினரின் வெறியூட்டல்களுக்கு பலியாகாமல் மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட உண்மையான வரலாற்றை அறிந்திருப்பது அவசியம் என்ற அளவில் வரலாறு அவசியம் என்றுதான் நான் சொல்ல வருகிறேன். //

        மிகவும் சரி, கச்சிதமாக சொல்லிவிட்டீர்கள்..

  13. Pandaram nu oru caste thaniya irukappo yen iyer matrum rss ellaraiyum pandaram endru thituhirargal? pandaram enbavar yar? anybody please explain me.. thanks in advance…

  14. i am from salem district. here they are present in many a villages in and around Gangavalli taluk.. thats why i am asking.. do they also belong to the self-claimin “aanda parambari”??

  15. வரலாறு என்பது நமது வேர். அதனை உதறி விட்டு விட முடியாது. அதே சமயம் கடந்த கால வரலாற்றின் மிதப்பில், போதையில் நிகழ்காலத்தை தொலைப்பது சரியல்ல. ஆண்ட பரம்பரை, மன்னரினம் போன்ற பழம்பெருமையில் எத்தனை காலம் அப்படியே இருப்பீர்கள்? காலத்திற்கு ஏற்ற வகையில் நாமும் மாற வேண்டாமா? அரசியல்வாதிகளும் சாதி தலைவர்களும் மக்களிடையே கொம்பு சீவி அதில் பலனடைய பார்கிறார்கள். அதற்கு இடம் கொடுக்கலாகாது. இன்னும் எத்தனை காலத்திற்கு என் சாதி, என் இனம் என்று இருக்க போகிறீர்கள். விபத்தில் உயிர் போகும் தருவாயில் இரத்தம் தேவைப்படுகிறதென்றால் அப்போது என் சாதி இரத்தம் மட்டும் தான் வேண்டும் என்று அடம் பிடிப்பீர்களா? மக்களே, தயவு செய்து நிகழ் காலத்திற்கு வாருங்கள்.

  16. பள்ளர் தான் தேவேந்திரவேளாளர்.தேவேந்திரவேளாளர்தான் பள்ளர் என்பது உலகறிந்த ஒன்று.எதர்க்காக இங்கே அவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று எழுதவேண்டும்?இது உள்நோக்கம் கொண்டதில்லையா? எங்காவது கள்ளர்,மறவர்,ஆதிக்க சாதி என்றும்,பள்ளர் அல்லது தேவேந்திரவேளாளர்,தாழ்த்தப்பட்டவர்கள் என்று அரசாணையிலோ,பிறப்பு சான்றிதழில் இருக்கிறதா? ஆகவே இல்லாத ஒன்றை, வினவு நடைமுறையில் இருப்பதாக காட்டுவது உள்நோக்கம் கொண்டது.

  17. ///’அனைவரும்’,’சரி’ என்ற சொற்களைச் செருகி விளக்கம் கொடுத்த நீங்கள்///

    நான் வலிந்து செருகி விளக்கம் கொடுக்க வில்லையே./பெரியார்,இமலாதித்தர்,வியாசர்/ என்ற தொடராக சொல்கிறீர்கள் இதை பெரியாரில் தொடங்கி இமலாதித்தர்,வியாசர் முதலிய தற்கால வலைபதிவர்கள் வரை குறிப்பதாக பொருளாகிறது.இதை அனைவரும் என சொல்வதில் என்ன தவறு?

    குறை சொல்பவர்களை அந்த இடத்தை பிடிக்க முயல்பவர்கள் என்று உள்னோக்கம் கற்பிக்கிறீர்கள்.எனவே அந்த இடத்தில் அவர்கள்தான் இருக்க வேண்டும் என்ற உங்கள் விருப்பம் வெளிப்படவில்லையா? நான் சரி என பொருள் கொண்டதில் என்ன தவறு?

    ///இதற்கும் ஒரு விளக்கத்தை உங்களால் கொடுக்க முடியுமா..?!///

    இது என்ன மாதிரி கேள்வி? உங்கள் மனதில் தொனுவதற்கு நான் எப்படி விளக்கம் கொடுக்க முடியும்.

    ///புரோகித வர்க்கத்தின் மேட்டிமை உணர்வைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன்///

    பிற மதங்களில் உள்ள புரோகிதர்களிடம் என்ன மாதிரி மேட்டிமை உணர்வு உள்ளது என்று தெரியவில்லையே? கொஞ்சம் விளக்குங்களேன்.

    ///மேட்டிமை உணர்வு யாரிடம் இருந்தாலும் கைவிடப்பட வேண்டிய ஒன்று///

    நீங்கள் ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்கிறீர்கள் என்பதுதானே என் வாதமே

    • // நான் வலிந்து செருகி விளக்கம் கொடுக்க வில்லையே./பெரியார்,இமலாதித்தர்,வியாசர்/ என்ற தொடராக சொல்கிறீர்கள் இதை பெரியாரில் தொடங்கி இமலாதித்தர்,வியாசர் முதலிய தற்கால வலைபதிவர்கள் வரை குறிப்பதாக பொருளாகிறது.இதை அனைவரும் என சொல்வதில் என்ன தவறு?//

      ’திருநாவுக்கரச நாயனார், திருஞானசம்பந்த நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் போன்றவர்கள்’ என்று குறிப்பிட்டுச் சொன்னாலும் திருநாவுக்கரசரில் தொடங்கி சுந்தரமூர்த்தி நாயனாரின் காலம் வரையிலான அனைத்து நாயனார்களையும் குறிப்பதாக பொருள் கொள்வீர்களா..?!

      // குறை சொல்பவர்களை அந்த இடத்தை பிடிக்க முயல்பவர்கள் என்று உள்னோக்கம் கற்பிக்கிறீர்கள்.//
      குறை சொல்பவர்கள் அனைவருக்கும் அந்த உள்நோக்கமே இல்லை என்று உத்திரவாதம் கொடுக்கிறீர்களோ..? நீங்களும் வரிசையில் நிற்பதாகவே எனக்குத் தோன்றுகிறது..

      // எனவே அந்த இடத்தில் அவர்கள்தான் இருக்க வேண்டும் என்ற உங்கள் விருப்பம் வெளிப்படவில்லையா? நான் சரி என பொருள் கொண்டதில் என்ன தவறு?//

      அண்ணனை திண்ணையிலிந்து கிளப்பி ஏதேனும் ஒரு தம்பியை அங்கே உட்காரவைக்க நான் ஏன் துடிக்க வேண்டும்..?! இதனால் அண்ணன்தான் திண்ணையில் இருக்கவேண்டும் நான் அடம் பிடிப்பதாக ஏன் எண்ணுகிறீர்கள்..

      // இது என்ன மாதிரி கேள்வி? உங்கள் மனதில் தொனுவதற்கு நான் எப்படி விளக்கம் கொடுக்க முடியும். //

      என் மனதில் தோன்றியதற்கு (”பெரியார், இமலாதித்தர், வியாசர் போன்றவர்கள் பார்ப்பானைத் திட்டும் போதெல்லாம் ‘அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும் துண்டைப் போடலாம்’ என்ற நினைப்பில் பேசுவது போலவே தோன்றுகிறது.. ”) நீங்கள் ஏற்கனவே விளக்கம் கொடுத்திருக்கிறீர்களே, அதே போல் இதற்கும் (”உங்கள் பெயரைப் பார்த்தாலே உங்களுக்கும் ஏதோ மேட்டிமை உணர்வு இருப்பது போல் தோன்றுகிறது..”) விளக்கம் கொடுக்க முடியாதா..? அதற்கு விருப்பம் இல்லாவிட்டால் உங்கள் மனதில் என்ன தோன்றியதால் இந்தப் பெயர் வைத்துக் கொண்டீர்கள் என்றாவது கூறுங்கள்.. அது மேட்டிமை உணர்வா அல்லது அடக்கவுணர்வா என்று எட்டிப்பார்க்கலாம்..

      // பிற மதங்களில் உள்ள புரோகிதர்களிடம் என்ன மாதிரி மேட்டிமை உணர்வு உள்ளது என்று தெரியவில்லையே? கொஞ்சம் விளக்குங்களேன். //

      தெரிந்தும் தெரியாதது போல் கேட்கிறீர்கள்.. என் வாயால் சொல்லிக் கேட்கவேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது..

      பாவக்கணக்கை உங்கள் அக்கவுண்ட்டிலிருந்து இயேசுபிரானின் அக்கவுண்ட்டுக்கு சர்வ சாதாரணமாக தன்னம்பிக்கையுடன் மாற்றுவதையும், சில நிமிடங்களில் உங்களை புனிதப்படுத்திவிட்டதாகக் கூறி இன்று போய் நாளையும் வராதே, அப்படியே வந்தாலும் இவ்வளவு லேட்டாக வந்து கழுத்தறுக்காதே பாவிப் பயலே என்று அனுப்பி வைக்கும் பல priest-களை பார்த்ததில்லையா..?

      குரான், ஹதீதுகளிலிருந்து தலையை நிமிர்த்தி, ’அடே ஷைத்தானே அப்படிச் செய்யாதே,இப்படித்தான் செய்ய வேண்டும்’ என்று தனக்குப் புரிந்ததுதான் சரியாயிருக்கும் என்று நம்பி, அல்லாஹ் மீது அச்சம் இல்லாமல், ஃபத்வா விடும் பல முல்லாக்களைப் பற்றி கேட்டதில்லையா..?

      // நீங்கள் ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்கிறீர்கள் என்பதுதானே என் வாதமே //

      இதை முதலிலேயே சொல்லியிருக்கலாமே.. நான் என்ன நாயனாரா கோவித்துக் கொள்வதற்கு..
      ஆனால் இது முற்றிலும் உண்மையல்ல.. உங்களுடன் விவாதிப்பதால் எனக்கும் கொஞ்சம் மேட்டிமை உணர்வு அவ்வப்போது வந்து போவதென்னவோ உண்மைதான்..

      • ///திருநாவுக்கரச நாயனார்,….குறிப்பதாக பொருள் கொள்வீர்களா///

        அப்படி பொருள் கொள்ள மாட்டேன்.அவர்கள் தேவாரம் பாடிய மூவர்,மேலும் போன்றவர்கள் என்பதால் அவர்கள் காலத்தில் சிவனை பாடிய நாயன்மார்கள் யாராவது இருந்தால் அவர்களையும் குறிப்பதாக கொள்ளலாம்.

        நீங்கள் மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறீர்கள்.பெரியார்,இமலாதித்தர்,வியாசர் போன்றவர்கள் என்பதில் எந்த பொதுதன்மையும் இல்லை.பார்ப்பனரை குறை சொல்வதை தவிர,மேலும் அவர்கள் காலத்தில் அதை அவர்கள் மட்டுமே செய்யவும் இல்லை.எனவே அனைவரும் என பொருள் கொண்டதில் எந்த தவறும் இல்லை.

        ///குறை சொல்பவர்கள்…..எனக்கு தோன்றுகிறது///

        முதலில் என்னை பற்றி சொல்லி விடுகிறேன்.உங்களுக்கு பரிமள சுகந்தமளிக்கும் அந்த திண்ணை அதன் வர்ணாசிரம பித்தால் எனக்கு சாக்கடையாக நாறுகிறது.எனக்கு அப்படி தோனுவதால் மற்றவருக்கும் அப்படிதான் இருக்குமோ என எண்ணிவிட்டேன்.மாற்று கருத்தும் இருக்கலாம்.

        ///அண்ணனை திண்ணையிலிருந்து கிளப்பி///

        உங்களை அண்ணனை திண்ணையிலிருந்து கிளப்ப சொல்லவில்லையே.யாராவது அதை செய்தால் முதல் ஆளாக வந்து தடுக்குறீர்களே அது ஏன் என்றுதான் கேட்கிறேன்.அதன் நோக்கம் அண்ணனை திண்ணையில் இருத்திவைப்பதுதானே?.

        தொடரும்.

        • // அப்படி பொருள் கொள்ள மாட்டேன்.அவர்கள் தேவாரம் பாடிய மூவர்,மேலும் போன்றவர்கள் என்பதால் அவர்கள் காலத்தில் சிவனை பாடிய நாயன்மார்கள் யாராவது இருந்தால் அவர்களையும் குறிப்பதாக கொள்ளலாம். //

          ஏன் அத்துடன் நிறுத்திவிட்டீர்கள், ஆழ்வார்களையும் சேர்த்துக் கொண்டு பக்தி இயக்கம் எனலாம், சமணர்களையும், பவுத்தர்களையும் சேர்த்துக் கொண்டு தமிழ் வளர்த்தோர் எனலாம்..

          // நீங்கள் மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறீர்கள்.பெரியார்,இமலாதித்தர்,வியாசர் போன்றவர்கள் என்பதில் எந்த பொதுதன்மையும் இல்லை. பார்ப்பனரை குறை சொல்வதை தவிர,மேலும் அவர்கள் காலத்தில் அதை அவர்கள் மட்டுமே செய்யவும் இல்லை.எனவே அனைவரும் என பொருள் கொண்டதில் எந்த தவறும் இல்லை. //

          மூவருக்கும் பார்ப்பன எதிர்ப்பு என்ற பொதுத்தன்மைக்குப் பின் வேறொரு பொதுத்தன்மையும் உண்டு.. அதைக் கூறியதால்தானே, நீ மட்டும் யோக்கியமா என்கிறீர்கள்..! விமலாதித்தரும், வியாசரும் அதை மட்டுமே செய்யவில்லை என்றால் வேறு எதையெல்லாம் செய்தார்கள்..? போன்றவர்கள் என்பதில் உங்களையும் சேர்த்துக் கொள்ளலாம் போலிருக்கிறது..

          // முதலில் என்னை பற்றி சொல்லி விடுகிறேன்.உங்களுக்கு பரிமள சுகந்தமளிக்கும் அந்த திண்ணை அதன் வர்ணாசிரம பித்தால் எனக்கு சாக்கடையாக நாறுகிறது.எனக்கு அப்படி தோனுவதால் மற்றவருக்கும் அப்படிதான் இருக்குமோ என எண்ணிவிட்டேன்.மாற்று கருத்தும் இருக்கலாம். //

          எனக்கு திண்ணை பிடிக்கவில்லை என்றாலும் மாற்று கருத்துள்ள தம்பிகள் யாராவது அண்ணனுக்கு பதில் அதில் உட்கார்ந்து கொள்வதை யார் தடுத்தாலும் சும்மா விடமாட்டேன் என்கிறீர்களா..?! நல்ல கொள்கை..

          // உங்களை அண்ணனை திண்ணையிலிருந்து கிளப்ப சொல்லவில்லையே.யாராவது அதை செய்தால் முதல் ஆளாக வந்து தடுக்குறீர்களே அது ஏன் என்றுதான் கேட்கிறேன்.அதன் நோக்கம் அண்ணனை திண்ணையில் இருத்திவைப்பதுதானே?.//

          திண்ணையை கழுவப் போவதாகச் சொல்லி அண்ணனைக் கிளப்புகிறவர்கள் துண்டு, தலகாணி, ஜமுக்காளம், கூஜா, சொம்போடு வந்திருக்கிறார்களே.. ஏன் என்று கேட்டால், நீ ஏன் தடுக்கிறாய் என்கிறீர்கள்..

      • ///என் மனதில் தோன்றியதற்கு…..என்று எட்டி பார்க்கலாம்///

        மறுபடியும் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு.பெரியார் என்று தொடங்குவது உங்களின் கருத்து மனதில் நினைத்தது இல்லை.அதற்குதான் நான் விளக்கம் கொடுத்தேன்.என் பெயரில் மேட்டிமை உணர்வு இருப்பதாக சொன்னதுதான் நீங்கள் மனதில் நினைத்தது.அதற்கு எப்படி பதில் சொல்வது? பெயரை நானா வைத்து கொண்டேனா இல்லை பெற்றோர் வைத்தார்களா என்று உங்களுக்கு தெரியாமலேயே எப்படி நானா வைத்து கொண்டதாக முடிவெடுத்தீர்கள்? அப்படி ஒரு பெயர் வைப்பதில் என்ன மேட்டிமை உணர்வு உள்ளது என்று சொல்லுங்களேன்?.

        ///தெரிந்தும் தெரியாதது போல் கேட்கிறீர்கள்///

        எனக்கு எல்லாம் தெரியும் என்று எப்பொழுதாவது சொன்னேனா? நீங்கள் குறிப்பிடும் பாவமன்னிப்பும்,பாத்வாவும் தீவிர மதநம்பிக்கையால் உருவாவது அதை வர்னாசிரம சாதி மேட்டிமை உணர்வோடு எப்படி ஒப்பிடுவது என்று தெரிவில்லை.

        ///உங்களுடன் விவாதிப்பதால் எனக்கும் கொஞ்சம் மேட்டிமை உணர்வு அவ்வப்போது வந்து போவதென்னவோ உண்மைதான்///

        உண்மையை ஒத்து கொண்டமைக்கு நன்றி.அம்பி என்ன சொல்கிறார் என்று புரியாதவர்க்கு மட்டும்:அதாவது காலில் பிறந்த சூத்திரனாகி என்னுடன் தலையில் பிறந்த பிராமணராகிய அவர் விவாதம் செய்யும் போது தான் சாதியால் உயர்ந்தவன் என்ற மேட்டிமை உணர்வு அவ்வப்போது வந்து போகிறதாம்.வர்ணாசிரம பற்று கொண்டவர்களுக்கு அது இயல்புதானே.

        • // மறுபடியும் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு.பெரியார் என்று தொடங்குவது உங்களின் கருத்து மனதில் நினைத்தது இல்லை.அதற்குதான் நான் விளக்கம் கொடுத்தேன்.என் பெயரில் மேட்டிமை உணர்வு இருப்பதாக சொன்னதுதான் நீங்கள் மனதில் நினைத்தது.அதற்கு எப்படி பதில் சொல்வது? //

          உங்கள் பெயரில் மேட்டிமை உணர்வு இருக்கிறது என்பதும் என் கருத்துதான்.. ’உங்கள் கருத்து தவறு அது என் பெற்றோர் வைத்த இயற்பெயர்’ என்று எளிமையாக இதற்கும் விளக்கம் கூறிவிட்டுச் செல்லாமல் கண்ணாமூச்சி ஆடுகிறீர்களே, ஏன்..?!

          // பெயரை நானா வைத்து கொண்டேனா இல்லை பெற்றோர் வைத்தார்களா என்று உங்களுக்கு தெரியாமலேயே எப்படி நானா வைத்து கொண்டதாக முடிவெடுத்தீர்கள்? அப்படி ஒரு பெயர் வைப்பதில் என்ன மேட்டிமை உணர்வு உள்ளது என்று சொல்லுங்களேன்?.//

          பெற்றோர் வைத்த பெயர் – இயற்பெயர் என்றால் ஏன் இன்னும் அதைத் தெளிவாகச் சொல்லாமல் கேள்வி கேட்கிறீர்கள்..?! அது உங்கள் இயற்பெயரா அல்லது நீங்கள் வைத்துக் கொண்ட பெயரா..?

          // நீங்கள் குறிப்பிடும் பாவமன்னிப்பும்,பாத்வாவும் தீவிர மதநம்பிக்கையால் உருவாவது அதை வர்னாசிரம சாதி மேட்டிமை உணர்வோடு எப்படி ஒப்பிடுவது என்று தெரிவில்லை. //

          சாதி மேட்டிமை உணர்வு மட்டும்தான் மேட்டிமை உணர்வா, அதைப் பற்றி மட்டுமேதான் விவாதிக்கவேண்டுமா என்று அதனால்தான் கேட்டேன்..

          // உண்மையை ஒத்து கொண்டமைக்கு நன்றி.அம்பி என்ன சொல்கிறார் என்று புரியாதவர்க்கு மட்டும்:அதாவது காலில் பிறந்த சூத்திரனாகி என்னுடன் தலையில் பிறந்த பிராமணராகிய அவர் விவாதம் செய்யும் போது தான் சாதியால் உயர்ந்தவன் என்ற மேட்டிமை உணர்வு அவ்வப்போது வந்து போகிறதாம்.வர்ணாசிரம பற்று கொண்டவர்களுக்கு அது இயல்புதானே. //

          மேட்டிமை உணர்வை மறைத்துக் கொள்ளும் உங்களுடன் விவாதிப்பதால் எனக்கும் மேட்டிமை உணர்வு அவ்வப்போது வந்து போகிறது என்ற பொருளில் கூறினேன்.. நீங்கள் ‘சூத்திரர்’ என்பது எனக்கு எப்படி தெரிந்திருக்கமுடியும்..?! எப்படியோ, இந்த விவாதம் வேறுதிசையில் திரும்புவதால் விவாதத்திலிருந்து விலகிக் கொள்கிறேன், வெற்றி விழா கொண்டாடிக் கொள்க..

          • அம்பி மிகுந்த கோபத்தில் இருக்கிறார் என நினைக்கிறேன்.அதனால்தான் நான்

            //அவர்கள் காலத்தில் அதை அவர்கள் மட்டுமே செய்யவும் இல்லை// என்று சொன்னதை தவறாக புரிந்து கொண்டு

            ///விமலாதித்தரும்,வியாசரும் அதை மட்டுமே செய்யவில்லை என்றால் வேறு எதையெல்லாம் செய்தார்கள்…? போன்றவர்கள் என்பதில் உங்களையும் சேர்த்துக் கொள்ளலாம் போலிருக்கிறது///

            என்று திட்டுகிறார்.

            ///விவாதத்திலிருந்து விலகிக் கொள்கிறேன்///
            என்று அவர் சொல்பதால் அவரின் மறுமொழிக்கு எந்த மறுப்பையும் நான் சொல்ல போவதில்லை.
            மீறி சொன்னால்,அவர்”மற்றவர்களாவது துண்டு,தலகாணியோடுதான் வந்தார்கள்,நீயோ எங்கள் அண்ணனை விரட்ட ஒரு டெம்போவில் அடியாட்களோடும்,அவரை விரட்டி விட்டு நீ தங்க மற்றோரு டெம்போவில் தட்டுமுட்டு சாமான்களோடும் வருகிறாயா” என கேட்பார்.அதையும் மீறி கேட்டால் அண்ணனை கொல்ல வருவதாக போலீஸ்சில் புகார் கொடுப்பார்.ராமனுக்கு லட்சுமணன் போல,திண்ணையில் இருக்கும் அண்ணனுக்கு அவர்.

            எனவே எனது விவாதத்தை இத்துடன் முடித்து கொள்கிறேன்.

  18. அம்பிக்கு,

    உங்களின் மறுமொழி 25க்கான பதில் மறுமொழி 18ல் மாறிபதிவாகி உள்ளது.

  19. தேவார நாயனார்,

    //19ம்நூற்றாண்டில்தான் தமிழில் உரைநடை வடிவம் உருவாகி வந்தது//

    Prose came into common use because of the invention of paper, fountain pen, printing press, etc. Before these inventions, it is difficult to write on a palm leaf with a sharp nail or on leather with a feather dipped in ink. This is for one copy. You just can’t imagine multiple copies. So people wrote as little as possible and as concise as possible. So the better form available then was verse. This does not mean people did not have prose before 19th century. It was in oral form. If, at all we should give credit to the common availability of prose, it would be to those inventors.

    //உரைநடையின் தந்தை //

    I don’t see any need for such identification to a person and I never heard of this title to a person. I judge this person based on the facts presented about him in this discussion, I value the content to the form or pages and so, going by his contemptible classification of deities, he does not deserve my respect. For this, you are sure to find me arrogant, unworthy of your respect, etc. But, as the discussion is not about me, I don’t mind.

    The above reply also holds good to Tippu’s ”லூசுத்தனமான” பதில். (As he has not responded to my question in a previous discussion, in spite of asking twice, I would avoid, as far as possible, to directly responding to him)

    • பிரபஞ்ச தோழரே!

      நான் ஒரு பாமர தமிழன் என்னுடைய பாமர மொழியில் பேசினால்தான் என்னால் பதில் அளிக்க முடியும்.மன்னிக்கவும்.

    • Univerbuddy இன் பிரச்சனை என்னவென்றால், அவருக்குத் தெரியாத அல்லது அவர் கேள்விப்படாதவை எல்லாமே தவறானவை, என்று அவர் நினைத்துக் கொள்வது தான். நாவலர் காலத்துக்கு முன்னால் பேச்சு வழக்கில் வசனநடை இருந்தாலும் தமிழ்ப்பண்டிதர்கள் செய்யுள் நடையில் தான் தமது ஆக்கங்களை உருவாக்கினர். தமிழில் வசனநடையில் இலக்கியங்களுக்கு உரை எழுதிய பெருமை மட்டுமல்ல, தமிழ் ஏட்டுச் சுவடிகளை அச்சுவாகனத்தில் ஏற்றுவதிலும் முன்னோடியாக இருந்தவர் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர். அதனால் தான் அவரை “வசனநடை கைவந்த வல்லாளர்” எனப் போற்றினார்கள் அவர் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த புலவர்களும், தமிழறிஞர்களும். இவையெல்லாம் FACTS தானே தவிர, யாரும் இங்கு நாவலரின்ன் மீதுள்ள அபிமானத்தால் அப்படி எந்த கட்டுக்கதையையும் இயற்றவில்லை. நீங்கள் நாவலரை மதிப்பதும், வெறுப்பதும் உங்களின் தனிப்பட்ட விடயம். நாவலரை விரும்புமாறு அல்லது அவரை மதிக்குமாறு உங்களை யாரும் வற்புறுத்தவில்லை. அல்லது நீங்கள் அவரை மதிக்காத காரணத்தால், நாவலரின் தமிழ்த்தொண்டுகள் அல்லது அவரது புகழ் எல்லாம் பொய்யாகிப் போய் விடாது. 🙂

  20. harikumar,

    //Brahmins in yaazhpanam are mere priests and very few in number,moreover vellalars are the elite of northern province,is not the case in TN.///

    தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் குருமார்களுக்குரிய அந்தஸ்தையும், உரிமைகளையும், சலுகைகளையும், கடவுள் நம்பிக்கையுள்ளவர்களின் ஆதரவையும் பெற்றுக் கொண்டு மற்றவர்களுடன் ஏனைய துறைகளிலும் போட்டி போடுகிறார்கள். அவர்கள் குருமார் அல்லது பூசாரிகள் என்ற தமது பரம்பரைத் தொழிலை விட்டு வெளியே வந்து ஏனைய மக்களுடன் போட்டிக் போட்டுக் கொண்டே, சாதியடிப்படையில் மேட்டிமையையும் எதிர்பார்க்கிறார்கள் அத்துடன் தமது மேட்டிமை மனப்பான்மையையும் காட்டுகிறார்கள்.. யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையினர் சாதியடிப்படையில் வெள்ளாளர்கள், அவர்கள் தான் “Elites” ஆக இருக்கிறார்கள் ஆனால், தமிழ்நாட்டில் மிகவும் சிறுபான்மையினரான பார்ப்பனர்கள் பெரும்பான்மை மக்களின் நலன்களை, அவர்களின் மொழியை எதிர்க்குமளவுக்கு “Elites” ஆக இருக்கிறார்கள். பிரச்சனைக்குக் காரணமே அது தான் என்று நான் நினைக்கிறேன்.

    //secondly,what happened in yaazhpanam did not happen here in TN,so u shud perhaps think if u should be so proud after all.///

    நான் பெருமைப்படுவதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. நான் உண்மையைக் கூறினேன். ஈழத்துப் பார்ப்பனர்களில் பெரும்பான்மையினர், ஈழத்தமிழர்களால் தமது கோயில்களில் வேலை செய்வதற்காக இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள். ஏனையோர் வெள்ளாள பூசாரிகள், பார்ப்பன பழக்க வழக்கங்களைக் (Sanskritization) கைக்கொண்டு, தமது அடுத்த தலைமுறைக்கு தமிழ்நாட்டின் ஏழைப் பிராமணக் குடும்பங்களில் பெண்ணெடுத்து அதன் வழியாகிய பார்ப்பனர்களாகிய வெள்ளாளர்கள்.

    தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் தமக்குச் சொந்தமாகக் கோயில்களைக் கொண்டிருக்கின்றனர். பல முக்கியமான, தமிழர்களுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் கூட அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டிலேயே தமிழை எதிர்க்கும் “தில்” அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் அது, ஈழத்தில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதவொன்று. பார்ப்பனர்களின் குணமறிந்தோ அல்லது என்ன காரணத்தாலோ, யாழ்ப்பாண வெள்ளாளர்கள் பார்ப்பனர்களை கருவறைக்கும், மடப்பள்ளிக்குமிடையில் மட்டும் அலைய அனுமதித்து விட்டு, கருவூலத்தினதும், கோயில் திறப்பையும் தாங்கள் வைத்துக் கொண்டார்கள். அது தமிழ்நாட்டுத் தமிழர்களைப் போல் அவர்கள் ஏமாளிகள் அல்ல என்பதைக் காட்டுகிறது. தமிழ்நாட்டுக் கோயில்களில் பார்ப்பான அட்டகாசங்களைப் பார்க்கும் போது, அவர்கள் தமிழர்களை மரியாதையின்றி நடத்தும் போது, நான் யாழ்ப்பாண வெள்ளாளர்களின் புத்திசாலித்தனத்தை எண்ணிப் பெருமைப்பட்டதுண்டு என்பதை எதற்காக நான் மறுக்க வேண்டும். 🙂

    //Most of the so called BC castes of TN are highly marginalized by upwardly mobile OBC castes of TN and their dream of sitting as the elites of TN is long dead,now they are just nursing their wounds.///

    இதில் எந்தளவுக்கு உண்மையிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய அனுபவத்தில் இன்றும், தமிழ்நாட்டின் ஆதிக்க சாதிகளிடம் தான் நிலமும், அதிகாரமும், பணமும் உண்டு. இட ஒதுக்கீடு ஒரு சில தாழ்த்தப்பட்டவர்களை பணக்காரர்களாக்கி, அரசாங்க வேலையையும் பெற்றுக் கொடுத்திருக்கலாம். ஆனால் அவர்களால் ஆதிக்க சாதிகளின் அந்தஸ்தையும் செல்வாக்கையும் அசைத்து விட முடியவில்லை. நான் கூறியதென்னவென்றால், தமிழ்நாட்டில் பார்ப்பான ஆதிக்கம் இந்தளவுக்கு வளர்ந்ததற்கும், அவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தமிழை எதிர்க்குமளவுக்கு திமிர் வந்தற்கும் காரணம், ஆதிக்க சாதிகள் தமது தாழ்த்தப்பட்ட சகோதர்களின் மீதுள்ள வெறுப்பால், சாதி வெறியால் அல்லது தம்மை மேலும் உயர்த்திக் கொள்வதற்காக, பார்ப்பனர்களுக்கு ஆதரவளித்தனர், இன்றும் ஆதரவளிக்கின்றனர். ஆதிக்க சாதிகளின் ஆதரவு தான் பார்ப்பனர்களின் அகங்காரத்துக்கு அடிப்படை என்பது என்னுடைய கருத்தாகும்.

    //i can also point out the cunningness of yaazhpanam vellalars who sit in europe earning refugee allowance/citizenship/jobs and letting commonfolk die in mullivaikkal.///

    இது உங்களின் அறியாமையை மட்டுமல்ல, ஈழத்தமிழர்களின் மீதுள்ள காழ்ப்புணர்வையும் தான் காட்டுகிறது. இப்படிக் கூறுவதால், யாழ்ப்பாணத் தமிழர்களை இழிவு படுத்தி விட்டதாக நீங்கள் நினைத்தால், உங்களை நினைக்க எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. யாழ்ப்பாண வெள்ளாளர்கள் அனைவருமே வெளிநாடுகளிலா இருக்கிறார்கள். ஈழத்தில் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் அனைவரும் தமிழர்களாகத் தான் இறந்தார்கள், தமிழர் என்ற காரணத்தால் தான் கொல்லப்பட்டார்கள். அதற்கு சாதிப்பூச்சு பூசுவதை எந்த ஈழத்தமிழனும் அனுமதிக்க மாட்டான். அதனால் அடுத்த முறை யாராவது ஈழத்தமிழனுடன் நேரடியாகப் பேசும் சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைத்தால், கொஞ்சம் அவதானமாக உங்களின் கருத்தைத் தெரிவிக்கவும்.

    அப்படியானால், புலம்பெயர்ந்த தமிழர்களின் பொருளாதார ஆதரவில்லாமல் விடுதலைப் புலிகள் 30 முப்பது வருடங்கள் போரை நடத்தினார்களா, அது சாத்தியமா என்பதை முதலில் சிந்தித்துப் பாருங்கள். இரண்டாம், மூன்றாம் தலைமுறை ஈழத்தமிழர்கள் ஒவ்வொரு மேலை நாட்டிலும் எல்லாத் துறைகளிலும் முன்னணியில் உள்ளனர். இலங்கை அரசே புலம்பெயர்ந்த தமிழர்களின் பொருளாதார வளர்ச்சியும் தமிழீழ ஆதரவும் தான் தமக்கு இன்றும் தலையிடியாக இருப்பதாக ஒப்புக் கொள்கிறார்கள். பல நாடுகளின் உதவிகளைப் பெற்று யுத்தத்தை நடத்திய இறைமையுள்ள ஒரு நாட்டுடன் விடுதலைப் புலிகள் ஒரு நாளைக்கு பல மில்லியன் டாலர் பணம் செலவில் போர் நடத்தினர், அது வெளிநாடுகளில் கொடுக்கப்படும், மிகவும் குறைந்தளவு Welfare பணத்தினால் நடத்தப்பட முடியும் என ஒரு அடிமுட்டாள் கூட நினைக்க மாட்டான்.

    அதை விட, உலகின் மூலை முடுக்கெல்லாம் ஈழத்தமிழர்கள் எத்தனை கலையழகுள்ள, பெரிய கோயில்களைக் கட்டியுள்ளார்கள், அத்துடன் தமிழ்நாட்டுப் பார்ப்பனரக்ளை மட்டுமல்ல, கேரளத்துப் பார்ப்பான்களையும் அழைத்து வந்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பளித்ததால் தான் , வண்ண வண்ண பட்டுக்களையும், தங்க நகைகளையும் அணிந்து கொண்டு Drag queens போல எங்களின் கோயில்களில் நிற்கிறார்கள் பார்ப்பனர்கள், அதுவும் கூட Welfare பணத்தில் தான் நடக்கிறதோ? எழுதுமுன்பு கொஞ்சம் யோசித்து எழுத வேண்டும். 🙂

    • I have nothing against Yaazhpanam Tamils.I have friends amongst them and they are fine people.

      I wanted to mention that some people living abroad do benefit both ways whether eazham is formed or not.

      People of TN talk in the same tone,that u didn’t stay back,u didn’t fight the british or the invaders xyz.

    • // வண்ண வண்ண பட்டுக்களையும், தங்க நகைகளையும் அணிந்து கொண்டு Drag queens போல எங்களின் கோயில்களில் நிற்கிறார்கள் பார்ப்பனர்கள் //

      நீங்கள் ராயல் ராமசாமி என்று எண்ணிக் கொண்டு அதற்கேற்றவாறு கோட்டுசூட்டு போடமுடியாததால் இப்படி ஆடம்பரம் காட்டுகிறார்கள் போலிருக்கிறது.. கோயிலுக்குப் போனால் பல்வகைக் குயின்களைத் தேடுவதும், பூணூல் யார் போட்டிருக்கிறார்கள் என்று தேடுவதும்தான் உமக்கு வேலையா..

      • எனது Drag queen உதாரணம் அம்பி அவர்களின் மனதைப் புண்படுத்தி விட்டது போல் தெரிகிறது, அதற்காக வருந்துகிறேன். 🙂

        • வருந்துகிறேன் என்று சொல்லி ஸ்மைலி போட்டு சிரிக்கும் அளவுக்கு என் மனம் புண்பட்டு விடவில்லை.. தங்கள் வாழ்க்கை லட்சியம் உங்களை எங்கே கொண்டு போய்க்கொண்டிருக்கிறது என்பதை உங்கள் பின்னூட்டங்கள் வாயிலாக அறியமுடிகிறது.. 🙂

          • நீங்கள் ஏதோ இலட்சியத்தின் அடிப்படையில் வினவில் பின்னூட்டமிடுகிறீர்கள் போல் தெரிகிறது. ஆனால் எனக்கு இது வெறும் பொழுது போக்கு தான், ஆனால் பின்னூட்டங்கள் வாயிலாக வாழ்க்கை லட்சியம் தெரிகிறது என்று உங்களைப் போன்ற ஞானிகள் சொல்வதைப் பார்க்கத் தான் எனக்குத் திடீரென்று பயமாக இருக்கிறது. 🙂

  21. திருத்தம்:

    சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை மட்டுமல்ல, பிரியக் கூடாதவை.

  22. மதுரையில் உள்ள கள்ளர்களின் குல தெய்வம் ஒச்சாயி.ஒச்சாயி என்பது தமிழா அதற்க்கு அர்த்தம் என்ன

    • ஒச்சு = ஒன்று, ஒருமை, முதன்மை, பொது,

      ஆயி= ஆச்சி, ஆத்தா, அம்மா, தாய், கிழவி

      ஒச்சு + ஆயி = ஒச்சாயி = அம்மன் அல்லது கொற்றவை என்றும் கொள்ளலாம்.

      முதல் தெய்வம், பொதுவான கடவுள், முதல் தாய்,

      பேச்சு + ஆயி = பேச்சாயி (கல்விக் கடவுள் = சரஸ்வதி)- அம்மன்

      பேச்சு = பேசக்கூடிய(அவையில்) தன்மை, கல்வி, அறிவு

  23. தேவார நாயனார்,

    //என்னுடைய பாமர மொழியில் பேசினால்தான் என்னால் பதில் அளிக்க முடியும்.//

    நீங்கள் ‘பாமர’ என்ற வார்த்தை இல்லாமலே எழுதியிருக்கலாம்.

    I have less time. not enough to type in Tamil. மன்னிக்கவும்.. I hope you understood atleast a little from English text. A short form of my above reply follows.

    1. உரைநடை எழுதப்பட்டதற்கு காகிதம் பேனா, அச்சு எந்திரம் போன்ற கண்டுபிடிப்புகள் தான் காரணம். அதற்கு முன்னர் உரைநடை பேச்சு வழக்காக இருந்தது. ஒலையில் எழுத்தாணி கொண்டு உரைநடை எழுதுவது சாத்தியமில்லாதது.

    2. உரைநடைக்கு தாயோ தந்தையோ தேவையில்லை. ஆறுமுகரைப் பற்றி எனக்குத் தெரிந்ததெல்லாம் இவ்விவாதத்தில் அவர் சொன்னதாக கொடுக்கப்பட்ட தகவல் மட்டுமே. அதை வைத்தே அவர் எனது மரியாதைக்கு தகுதியானவர் இல்லை என்று கூறகிறேன். அவர் கருத்து வெறுக்கத்தக்கது. அவருக்கு எப்படி அவ்வாறு கூறும் உரிமை வந்தது. I wrote some text in Tamil also above. Please read them again now.

    • உங்களது மறுமொழியில் உள்ள கருத்து”1″ முழுவதும் ஏற்கதக்கது.விளைவு என்னவெனில் கவிதை என்ற வடிவத்தில் அனைத்து சோதனைகளும் செய்து பார்க்கப்பட்டது,அதற்கு இலக்கணங்களும் உருவானது.மாறாக உரைநடை என்ற வடிவம் மக்களின் பேச்சு வழக்கிலேயே நின்றதால் அது வளர்ச்சி அடைய வில்லை.அதற்கான இலக்கணங்களும் தமிழில் முற்காலத்தில் இல்லை.தொல்காப்பியம் செய்யுளுக்கு இடைவரும் உரையை பற்றியே பேசுகிறது.

      வீரமா முனிவர் தொடங்கி ஆறுமுக நாவலர் வரை அதன் வடிவ உருவாக்கம்,காற் புள்ளி,அரை புள்ளி,முற்று புள்ளி வரை செய்தார்கள்.நான் சொன்னது அதைதான்.

    • //ஒலையில் எழுத்தாணி கொண்டு உரைநடை எழுதுவது சாத்தியமில்லாதது.///

      எப்படி சாத்தியமில்லை என்பதை விளக்குங்கள். ஓலையில் எழுத்தாணி கொண்டு செய்யுள் எழுதுவது சாத்தியமானால், அதையே உரைநடையில் எழுதுவது ஏன் சாத்தியமில்லை. அவர்கள் செய்யுளில் எழுதி வந்ததை, ஆறுமுக நாவலர் வசன நடையில் எழுதினார், அதனால் தான் அவரை உரைநடையின் தந்தை என்று புகழ்ந்தனர். அதன் கருத்து அவருக்கு முன்னால் யாரும் உரைநடையில் பேசவில்லை என்றல்ல, தமிழிலக்கிய உலகத்தில் உரைநடையை அறிமுகப்படுத்தியவர் அல்லது ஆரம்பித்தவர் என்பது தான் அதன் கருத்து. ஆயிரக்கணக்கான செய்யுள்களை ஓலைச் சுவடிகளில் எழுத முடியுமேயானால், அதையே ஏன் உரைநடையில் எழுத முடியாது.

      Univerbuddy இன் எல்லா வாதங்களுமே, வெறும் அனுமானம் தான். செய்யுள் என்றால் நான்கு வரிகள், உரை என்றால் நிறைய வரிகள், அதனால், நான்கு வரிகளை ஓலையில் எழுதுவது இலகுவானது, அதனால் தான் உரைநடையில் எழுதவில்லை, இது தான் அவருடைய வாதம். முற்காலப் புலவர்கள் நான்கு வரிச் செய்யுளை ஓலையில் எழுதியவுடன் முடித்து விடவில்லை, பல ஆயிரக்கணக்கான செய்யுள்களை எழுதினார்கள். அவர்கள் விரும்பினால் அதையே உரைநடையில் ஓலையில் எழுதியிருக்கலாம். அது முடியாத காரியமல்ல. அவர்கள் அப்படி எழுதவில்லை, ஏனென்றால் செய்யுள் நடையில் எழுதுவது தான் அக்கால வழக்கமாக இருந்ததி தவிர உரைநடையில் அல்ல. அது தான் காரணமே தவிர, கொஞ்சமாய் எழுதுவதற்காக ஓலையில் எழுதி விட்டு, அச்சு இயந்திரமும், பேப்பரும் வந்ததும் தமிழர்கள் உரை நடையில் அதிகம் எழுதத் தொடங்கினார்கள் என்பது வெறும் அபத்தம்.

  24. Mr. Viyasan,

    //கேள்விப்படாதவை எல்லாமே தவறானவை//

    I came to know, from your text, of his stand on various deities and I see it (கேள்விப்பட்டவை) as something very wrong.

    //முன்னோடியாக இருந்தவர் //

    I value the content over the form. You have given me a sample of his content. Based on it, I think he was a regressive person.

    //நீங்கள் அவரை மதிக்காத காரணத்தால், *** அவரது புகழ் எல்லாம் பொய்யாகிப் போய் விடாது//

    It suits me.

Leave a Reply to அம்பி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க