privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்விவசாயிகளை கொல்லப் போகிறது உங்கள் வாக்கு !

விவசாயிகளை கொல்லப் போகிறது உங்கள் வாக்கு !

-

சிலப்பதிகாரத்தின் கானல் வரி பாடல்களில் களிப்பூட்டிய, வண்டலும், வாழ்க்கையுமாய் நிலத்தை செழிப்பூட்டிய காவிரியை இனி காண்பதெப்போ? ‘

‘உழவர் ஓதை, மதகோதை,
உடைநீர் ஓதை தண்பதங் கொள்
விழவர் ஓதை, சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவிரி!

நடந்தாய் வாழி காவிரி
நடந்தாய் வாழி காவிரி

( உழவரின் ஏர் ஓட்டும் ஓசை, மதகிலே நீர் வழியும் ஓசை, வரப்புகளை உடைத்து பாயும் நீரோசை, புதுப்புனலாடி கொண்டாடும் மக்களின் மகிழ்ச்சி ஆராவார ஓசை… என இரு மருங்கும் ஒலிக்க நடந்து வந்த காவிரி!).

‘திரைவிரி தரு துறையே! திருமணல் விரி இடமே,
விரைவிரி நறு மலரே, மிடைதரு பொழில் இடமே,

புன்னை நீழலே, அன்னம் நடக்க,
பூவர் சோலை மயில் ஆலப்
புரிந்து குயில்கள் இசைபாட
நடந்தாய் வாழி காவிரி!…

என ஊர் செழித்த காவிரியை காண, மீண்டும் நம் நிலம் காண, விவசாயம், விவசாயி உயிர்வாழ உதவுமா இந்த பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தல்?

என்னென்னவோ வாக்குறுதிகள்! எத்தனையோ கட்சிகள்! இத்தனை ஆண்டுகாலம் ஓட்டு வாங்கிப்போன எவனாவது டெல்டா பகுதி மக்களின் உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமான காவிரியில் தமிழகத்தின் உரிமையை பெற்றுத் தந்திருக்கிறானா?

நாட்டின் அடிப்படைத் தேவையான விவசாயத்திற்கு உரிய நீர்ப்பாசனத்தையோ, மின்சாரத்தையோ, இடுபொருட்களின் விலைக் கட்டுப்பாட்டையோ ஏற்படுத்தித் தராமல் விவசாயக் கடனை தள்ளுபடி செய்கிறோம் என்ற பெயரில் முதலாளிகள் தயாரிக்கும் பொருள்களை ஏழை விவசாயிகளின் தலையில் கட்டி, “விவசாயி கடனோடு பிறக்கிறான், கடனோடு வாழ்கிறான், கடனோடே சாகிறான்” என்ற அவல நிலையை ஏற்படுத்தியதுதான் அனைத்துக் கட்சிகளின் சாதனை! இவர்கள் சேவை செய்யும் ஆளும் வர்க்கத்தின் சாதனை!

விவசாயிகளையும், அது சார்ந்த தொழில்களையும் ஓட்டாண்டியாக்கி நம்மை நடுத்தெருவில் வீசி எறியும் இந்த ஆட்சி அமைப்பிற்கான தேர்தலை முதலில் நாம் வீசி எறிந்தாக வேண்டும்!

முப்போகம் விளைந்திருந்த நமது டெல்டா விவசாயத்தை இப்போது ஒரு போகத்திற்கே லாயக்கில்லாமல் மண்ணை கருக்கி, நம் வாழ்வை அழிக்கும் ‘வளர்ச்சி’ க் கொள்கைதான் எல்லா ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகளின் ‘வளமான’ கொள்கையும்!

காவிரி
காவிரி – அன்றும் இன்றும்

நெல், வாழை, கரும்பு, மஞ்சள், மா, பனை, இஞ்சி, கமுகு, தென்னை… என பல வளம் கொழித்த காவிரியை, ”ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் நாளிலும் தன் ஊற்றுப்பெருக்கில் உலகுக்கே ஊட்டும் காவிரியை” இவர்கள் பறித்தது மட்டுமல்ல, எஞ்சியிருக்கும் நம் ஈர நிலத்தையும் பாலையாக்க மீத்தேன் திட்டம், நிலக்கரி எடுக்கும் திட்டம்.

புதிய வேலைவாய்ப்பு என்ற போர்வையில், டெல்டா மாவட்டங்களுக்கே பாடை கட்ட பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளோடு கூட்டணி சேர்ந்து வருபவர்கள்தான் எல்லா ஓட்டுக்கட்சிகளும்!

இந்த முதலாளிகளின் வளர்ச்சிக்காக பாடுபடும் ஒரு அரசை அமைக்கத்தான் நம் காலைச்சுற்றுகின்றன கரைவேட்டி பாம்புகள்!

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தின்று கொழுத்த வயல் எலிகளைப் போல வலம் வரும் கட்சிகள், அதிகாரிகளை நாம் புறக்கணித்து விரட்ட வேண்டும்!

ஏற்கனவே விவசாயப் பகுதிகளில் இறால் பண்ணைகளை உருவாக்கி விளைநிலத்தை நாசமாக்கிய கார்ப்பரேட் முதலாளிகளின் அடுத்தடுத்த திட்டம்.

டெல்டா மாவட்டங்களில் விளை நிலங்களுக்கு அடியில் உள்ள நிலக்கரியை எடுக்க, முதலில் மேல் அடுக்கில் இருக்கும் மீத்தேன் வாயுவை எடுப்பது.

முதல்கட்டமாக 50 ஆழ்துளை கிணறுகளை கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்த நாடு, பாபநாசம், மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல் என படிப்படியாக டெல்டா மாவட்டங்கள் முழுக்க விரிவுபடுத்தி, நிலத்தடி நீரை உறிஞ்சி, கழிவுகளை வெளியேற்றி, விவசாயத்தை அழித்து விவசாயிகளை விரட்டி அடிப்பது என்று ஒரு நாசகார திட்டத்தோடு தி கிரேட் ஈஸ்ட்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் என்ற பன்னாட்டு கொள்ளைக்காரனுக்கு இந்திய அரசு 2010 லேயே உரிமம் வழங்கி விட்டது.

வாடும் பயிர்கள்“காவிரியின் பிள்ளை, கடைமடையின் தொல்லை” கருணாநிதி அரசுதான் 2011-ல் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமைத்தது.

இன்று “நான் வந்தால் விவசாயிகளை காப்பாற்றுகிறேன்” என்று தேர்தல் சவடால் அடிக்கும் கருணாநிதியும், தேர்தலுக்காக திட்டத்தை அடக்கி வாசிக்கும் ஈத்தேன் தலைவி ஜெயலலிதாவும், யாராய் இருந்தாலும் இவர்களின் கொள்கை, ‘வளர்ச்சி, வல்லரசு’ என்ற பெயரில் விவசாயத்தை அழித்து நிலத்தை கையகப்படுத்தி பன்னாட்டு முதலாளிகள் லாபத்திற்கும், ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு மண்ணை விற்பதும்தான் தேசியக் கொள்கை.

கூடங்குளம் அணு உலை போராட்டத்தில், “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று பாவ்லா காட்டி கடைசியில் போராடிய மக்களை போலீசை வைத்து அடித்து, உதைத்து, பத்து வயது பையன் மீது கூட தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை பாய்ச்சி ஒடுக்கியவர்தான் இந்த ஜெயலலிதா. இன்று டாஸ்மாக் எனர்ஜி கம்பெனி ஈஸ்ட்டர்ன் எனர்ஜி கம்பெனியை விரட்டும் என்று நம்பி, ஏமாறக்கூடாது!

தவிர, இந்தத் தேர்தலால் நமக்கு விவசாயி நலன் என்ற அளவில் கிடைக்கப்போவது என்ன?

நாம் நெடுநாளாக போராடிக் கேட்கும் விளை பொருட்களுக்கான விலை நிர்ணய உரிமையை இந்தத் தேர்தல் நமக்கு தருமா?

விவசாயிஎங்கிருந்தோ வரும் ஒரு வெளி நாட்டுக்கம்பெனி முதலாளி, நம்ம ஊர் தண்ணியை உறிஞ்சி ஒரு பாட்டிலில் போட்டு தன் இஷ்டத்துக்கு விலை வைத்து விற்பதை அனுமதிக்கின்றன இந்த அரசும், ஆளும்வர்க்கமும், இதற்கு கடமையாற்றும் அதிகார வர்க்கமும்.

விவசாயிகள், விலை கிடைக்காமல், போண்டியாகி தற்கொலை செய்து கொள்வதை தடுத்து நிறுத்த இந்தத் தேர்தலுக்கு வக்கில்லாத போது, எதுக்கு திரும்பத் திரும்ப வாக்கு!

உலகவங்கி, உலகவர்த்தகக் கழகம் தான் இங்குள்ள எல்லா கழகங்களுக்கும் தாய் கழகம், அவன் உத்திரவுக்கு வாலாட்டும் இந்த ஓட்டுச் சீட்டு கட்சி நரிகள்.

எவன் ஆட்சிக்கு வந்தாலும், தேசிய தண்ணீர்க் கொள்கை என்ற பெயரில் மெல்ல, மெல்ல, தண்ணீரை காசுக்கு மட்டுமே விற்பது, தண்ணீரை வியாபார பொருளாக்கி விவசாயமே செய்ய முடியாமல், விவசாயிகளை விளைநிலத்தை விட்டு துரத்துவது என்ற கார்ப்பரேட் முதலாளிகளின் நில அபகரிப்பு கொள்ளைக்கு, கைக்கூலி வேலை பார்க்கும் கழிசடைகள்தான் அம்மா, அய்யா, மருத்துவர், கேப்டன், ராமதாசு, பா.ஜ.க. காங்கிரசு… எல்லா தனியார்மய, தாராளமய தவப்புதல்வர்களும்!

காவிரிப் பிரச்சனை தொடங்கி, டெல்டா மாவட்டத்தை சூறையாட வரும் மீத்தேன், அம்பானியின் நிலக்கரி எரிவாயு திட்டம், ஓ.என். ஜி.சி. பெட்ரோலியத் திட்டம் அனைத்தையும் அமல்படுத்த துடியாய், துடிக்கும் இந்தக் கட்சிகளை நம்பி இனி பயனில்லை.

எதற்கெடுத்தாலும் ஒரு கேசை போட்டு உச்சநீதிமன்றத்திடம் தள்ளிவிட்டு பிறகு  உச்சநீதிமன்றமே ‘வளர்ச்சித்திட்டம்’ என்று சிங்காரித்து அனுப்புவதையும் இந்த தேர்தல் பாதையால் தடுக்க முடியாது.

விவசாயிகள்அதற்கு மக்களுக்கே அனைத்து அதிகாரங்களும் உள்ள, உள்ளூரிலிருந்து உயர்மட்டம் வரை மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் கமிட்டிகளின் அதிகாரத்திற்குட்பட்ட அரசமைப்பு நமக்கு வேண்டும்!

சட்டம் போடுபவர் ஒருவர், அதை அமல்படுத்தும் அதிகாரவர்க்கம் ஒருவர் என்ற போலி ஜனநாயகத்தின் இரட்டை ஆட்சிக்கு பதில், அரசின் எல்லா மட்டங்களிலும் மக்களின் அதிகாரத்தை செல்லுபடியாக்கும் ஒரு புதிய ஜனநாயக அரசமைப்புக்கு போராட வேண்டிய தருணம் இது!

விவசாயிகளால் தேர்வு செய்யப்பட்ட விவசாய கமிட்டியின் அதிகாரத்திற்குட்பட்டு மக்களுக்கு வேண்டிய, விவசாயத்திற்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றித்தரும் பணியாளராக அரசு ஊழியர் முதல் அரசு வரை இருக்கும் படியான ஒரு புதிய ஜனநாயகமே இனிநமக்கு தேவை!

நமக்கு தண்ணி தர மாட்டான், நமக்கு விலை தர மாட்டான், விவசாயிகளை வாழ விட மாட்டான், விளைநிலங்களை அபகரிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் பயங்கரவாத திட்டங்களையும் நிறுத்த மாட்டான்.

இவைகளை லத்தி, துப்பாக்கி முனையில் நம்மேல் அமல்படுத்தும் இவர்களுக்கு ஏன் ஓட்டு போடவேண்டும்?

பயிர் விளைய வேண்டுமானால் களைகளை பிடுங்க வேண்டும்! இனி நாம் உயிர் வாழ வேண்டுமெனில் இந்த போலி ஜனநாயகத்தை பிடுங்கி எறியவேண்டும்!

குறுவை, சம்பா, தாளடி, ஊடுபயிர்கள், என உழைத்து வாழ்ந்த நம் வாழ்க்கையை கடன், வட்டி தற்கொலை என மானமிழந்து ஊரை விட்டுத் துரத்தும், இந்த முதலாளிகளுக்கான ஜனநாயகத்தை கருவறுப்போம்!

போராடி! போராடி, பூமியை பிளந்து வரும் விதையைப் போல… போராட்டங்களின் வழி நமக்கான கண்டு முதல் காணும் புதிய ஜனநாயக அரசமைப்பை வளர்த்தெடுப்போம்!

போடாதே ஓட்டு! அது நம் பூமிக்கே வேட்டு!

துரை. சண்முகம்

  1. விவசாயத்த ஒழிச்சுட்டு அரசியல் வாதி எப்படி சோறு தினபாயடா ,சாரி தெரியாமல் சொல்லி விட்டேன் பன்றிகள் மலம் அல்லவா தின்னும் அவற்றிக்கு விவசாயத பத்தி என்ன கவலை

    • ஆலோ ஜோசப் …

      பன்றின்னு சொல்லுங்க நாய்னு சொல்லுங்க இன்னம் என்ன வேண்ணா சொல்லுங்க..
      தேர்தல் பதவிகளை பார்த்து வெளியில் தெரியும் அளவிலேயே பல ஆயிரம் கோடிகள் ஈட்டி இருக்கும் இவர்கள்..
      இவர்களீன் வாரிகள் , இந்த மண் தரிசானால், சுவிஸ்ல் போய் பனி மலை சாரலில் பிளேன் விட்டு பொழுதை கழிப்பர்.

      இங்கிருப்பவ்வர் தான் சோறு கிடைக்காமல் மலம் தின்னவேண்டி வரும். அதனால் திட்டுவதை விட்டு யோசியுங்கள்..

      • என்ன யோசிக்கனும் பாஸ் எப்பிடி ப்ளேன் விடுரதுனா ,இல்ல யாருக்கு ஓட்டு போடுரதுனா ,இல்ல ஓட்டு போடாம புரட்சி எப்பிடி பன்றதுனா இல்ல விவசாயத்தயே கை விட்டிடலாமுனா ,விளக்கமா சொல்லுங்க தெரிஞ்சுகிறேன்

        • ஜோசப் அவர்களே…

          என்ன செய்யுறதுன்னு நீங்க தான்முடிவு செய்யணும், திட்டுவதுடன் நிறுத்தினால் என்ன பயன் யோசிசியுன்க்கள் என்று தான் சோனேன்.

          • ஆமாம் ஜோசப், வினோத் சொல்வது சரிதான். திட்டுவதால் பயனில்லை. ஆக்கபூர்வமாக யோசிக்கலாம். இந்த பிரச்சினைக்கு என்ன தீர்வாக இருக்க முடியும்? நாம் அனைவரும் சற்று மூளையை கசக்கி தான் பார்ப்போமே…

            என்னை பொறுத்தவரை வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் மக்கள் கவனம் செலுத்தலாம். கட்சி என்ற வகையில் ஒட்டு மொத்தமாக வாக்குறுதி அளிப்பதை போல தொகுதி ரீதியாக வாக்குறுதிகள் எல்லா கட்சிகளும் வழங்க வேண்டும். வாக்குறுதியை நிறைவேற்றாத வேட்பாளரை, ஊழல் செய்பவரை, ஆளும் திறமையில்லாதவர்களை, தொகுதி பக்கம் எட்டி பார்க்காத வேட்பாளரை மக்கள் திரும்ப பெற (RECALL CANDIDATE) வழி செய்ய ஒரு சட்டம் உருவாக்க வேண்டும். மக்கள் நினைத்தால் ஐந்து வருடம் அல்ல, ஒரே வருடத்தில் வேட்பாளரை பதவியிறக்கம் செய்யகூடிய சக்தி தேவை. தேவைப்பட்டால் வேட்பாளர் மட்டும் அல்ல, ஒட்டு மொத்த ஆட்சியையே மக்கள் சக்தி ஐந்து வருடங்களுக்கு முன்பே தூக்கி ஏறிய என்ன வழி என்று யோசிக்கலாம்.

            வேட்பாளரை திரும்ப பெற்றால் அந்த வேட்பாளர் மீண்டும் போட்டியிட 5 அல்லது 10 வருடங்கள் தடை விதிக்க வேண்டும். ஒரு வருடத்துக்குள் மீண்டும் தேர்தல் செலவு வருவதை தவிர்க்க, வேட்பாளரை மக்கள் திரும்ப பெரும் பட்சத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த நிலை வந்தால் அரசியல்வாதிகளுக்கு எப்போதும் மக்கள் மேல் ஒரு பயம் இருக்கும். நல்லாட்சி, திறமையான, நேர்மையான ஆட்சி கொடுத்தால் தான் ஐந்து வருடங்கள் நீடிக்க முடியும். இல்லையென்றால் ஒரே வருடத்தில் கல்தா தான் என்றால் அவர்களுக்கும் ஒரு பயம் வரும்.

            மேற்கூறிய கருத்து ஒரு சிறிய தீப்பொறி தான். இது போல மாற்று தீர்வு உங்களில் யாருக்கேனும் இருந்தால் தயவு செய்து பகிருங்கள் நண்பர்களே.

            ஏதேனும் செய்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.

            • தேர்தல் முறையை சீரமைத்தால் ஜனநாயகம் சிறப்பாக வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

              அதற்கான எனது பதிவு. கொஞ்சம் பெரியதாக இருப்பதாலும், முதலிலேயே எழுதியதாலும் லின்க்க் தந்துள்ளேன் பார்த்து பதிலளிக்கவும்

              http://vinothpakkangal.blogspot.in/2011/04/vs.html

              என்னை பொறுத்தவரை தேர்தல் அவுட் ஆப் டேட் மாடல்.
              நேற்று வாசிங்டன், ஏமன் பல உலக நாடு ரோட்டரி சங்க பிரதிநிதிகளீன் சந்திப்பு நடந்தது.என்ன செலவு ஆகியிருக்கும்னு நினைக்கிறீங்க? இந்த சந்திப்புக்கக 10 பைசா கூட செலவு இல்லை. ஏன்னா அவங்கவங்க அங்கங்கயெ இருக்க ஆன்லைனில் நடந்த சந்திப்பு.

              இதேபோல் பாரளுமன்றாத்தில் மக்கள் கருத்தை ஆன்லைனில் கேட்டு மக்கள் ஓட்டளிப்பு நடத்தி சட்டங்களை போட்ட எப்படி இருக்கும் ? இதோ நாம் எழுதற இந்த பிளாகுக்கு பதில் நாம் நேரா சட்டமன்றம் நாடாளூமன்றத்தில் நம் கருத்தை பதிவு செய்யலாம். இங்க இடுப்பழகி அனுஷ்காவா vs திரிஷாவா ங்கிறதுக்கு வாக்களிக்கறதுக்கு பதில் நேர சட்ட மசோதாவுக்கு வாக்களிக்கலாம்.

              அதேபோல் நம் கருத்தையும் , அதுக்கு எதிர் கருத்தையும் ஆதரவையும் எதிர்ப்பையும் கண்கூடா பார்க்கலாம். இந்த மாதிரி மக்கள் நேரடியா பங்கேற்க முடியும்ன மக்கள் பிரதிநிதிகளை எதுக்கு? கந்தன் சார் பதிவுக்கு எதிர் பதிவு மாதிரி… நம் கருத்தை நாடாளூமன்றாத்தில் பதிவு செய்யலாம்.
              இதெல்லாம் தேறாது சர்வர் எப்பவும் டவுன் தானு நம்ம முருகேசன் அண்ணன் சொல்லலாம்.

              இதுக்கும் பதில் இருக்கு.. சர்வர் வேலை செய்யலைன்ன சர்வருக்கு பொறுப்பான அமைச்சகம் மற்றும் அதிகாரிகளூக்கு தூக்கு தண்டனைனு அறிவிச்சுட்டா ? இதை செய்யணும்னாலும் .. இல்லை தேர்தல் தான் வேணும்னாலும் 100% கட்டாய வாக்களிப்பை கொண்டு வரணும். அதுதான் முதலில் முக்கியம்.

              அதைவிட முக்கியம் சரியான வாக்காளர் பட்டியல் தயார் செய்யபடணும்.
              இப்போ தேர்தல் ஆணயம் மத்திய அமைப்பு, தேர்தலின் போது மத்திய மானில அரசுகளின் உட்கட்டமைப்பை( அதிகாரிகள், வாகனங்கள்) பயன் படுத்துது.

              இதுக்கு பதில் குடியுரிமைதுறைன்னு ஒண்ணு வைச்சு எல்லா வார்டு அளவில் கட்டாயமக எல்லாருடைய பெயரிலிருந்த்து எல்லா விபரத்தையும் பதிவு செய்ய வைக்கலாம்.

              பிறப்பிலேயே பதிவு ஆரம்பிக்கும்.இப்போ இருக்கும் மக்கள் தொகை கணக்கில் சிக்கல் இருக்கு. அது என்னானா மக்கள் பற்றிய கணக்கு. அரசாங்கத்தால் மிக மட்டரகமாக பராமரிக்கபடும் கணக்குன்ன அது மக்கள் தொகை. பற்றிய கணக்கு தான். மக்கள் தொகை கணக்கு படி தமிழக மக்கள் தொகை 5 கோடி, ஆன பொது வினையோக (ரேசன் கார்டு ) கணக்குபடி 7.5 கோடி

              மக்கள் தொகை பற்றி அந்த ஒரு தகவல் சரியா இருந்தா வாக்களர் பட்டியல்,மேலவைக்கான பட்டதாரி வாக்காளர் பட்டியல், பொது வினையோக (ரேசன் கார்டு), டிரைவிங் லைசென்சு பேன் கார்டு, ஐடி கார்டு, பாஸ்போர்ட்ன்னு மக்கள் பராமரிக்க வேண்டியது இல்லை. அரசாங்கமும் ஒவ்வொரு துறைக்கும் தனி தனி தகவல் சேகரிப்பு வைக்கவேண்டியது இல்லை.அரசாங்கமும் மத்திய மானில அலுவலகங்களில் அன்றைய நடப்பை பற்றி மட்டும் பதிவு வைச்ச போதும்.
              http://vinothpakkangal.blogspot.in/2011/04/vs.html

              • நன்றாக யோசித்திருக்கிறீர்கள் வினோத். மிக்க மகிழ்ச்சி!
                நீங்கள் சொன்ன வழியில் ஒரு குறை அல்ல தடை இருக்கிறது.
                பெரும்பாலான மக்கள் ஒரு சட்டத்தை உருவாக்க முடியும் என்றால் அதனால் சிறுபான்மை மக்களுக்கு ஒரு பாதிப்பு வருகிறதென்றால் அதை எப்படி சமாளிப்பது?
                சில சமயம் ஆட்சி செய்பவர்கள் கசப்பு மாத்திரையை (தேவையான விலை உயர்வு, அனாவசிய விலை உயர்வல்ல)கொடுக்கும் கட்டாயத்தில் இருக்கும்போது பெரும்பாலான மக்கள் அந்த கசப்பு மாத்திரையை விரும்ப மாட்டார்கள். அப்போது நாடு திவாலாகும் நிலைக்கு தள்ளப்படும்.
                அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் தர வேண்டும் என்பதையும் எவ்வளவு நேரம் அவர்கள் வேலை செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் கையில் விட்டு விட்டால் அவர்கள் வேலையே செய்ய மாட்டார்கள், சம்பளம் மட்டும் வாங்கி கொள்வார்கள்.
                பெரும்பாலான மக்கள் ஒரு தவறான பாதையை, சட்டத்தை உருவாக்கும் நிலையை தவிர்க்க என்ன கடிவாளம் அமைக்க முடியும்? யோசித்து சொல்லுங்கள்.

              • நாடு முன்னேற வேண்டுமென்றால் மக்களிடையே சோம்பேறித்தனம் முற்றிலுமாக விலக்கப்படவேண்டும். அதற்கு என்ன வழி என்றும் நாம் யோசிக்கலாம். ஒவ்வொரு மனிதனும் நாட்டிற்கோ அல்லது அவனது வீட்டிற்கோ உபயோகமாக அவன் நேரத்தை செலவிட்டால் போதும். Increase Productive Man Hours of Every Citizen of the country.

                இளைஞர்கள் “சும்மா” இருப்பதாலேயே நாட்டில் பாதி பிரச்சினை ஏற்படுகிறது.
                வீட்டில் சும்மா இருக்கும் நபர்களை எல்லாம் கட்டாயமாக ஏதாவது வேலை செய்ய வைக்கலாம் (நதி நீர் இணைப்பு வேலை, கூவம் நதி சீரமைப்பு வேலை, etc.) நாட்டில் ஒருத்தனும் சும்மா இருக்க கூடாது. தானாக இந்த சாதி பிரச்சினை, மத பிரச்சினை, தகராறுகள் ஒழிந்து விடும்.

                • ஊருக்கு ஊர் அரசே மாபெரும் தொழிற்சாலைகள் (மின்அணுவியல் , இயந்திரவியல், உணவு பதப்படுத்தும் தொழில்கள்) போன்றவைகளை உருவாக்கி நாட்டில் உள்ள அனைத்து சோம்பேறிகளையும் கட்டாயம் வேலை செய்ய வைக்க வேண்டும்.

                  மனித உழைப்பின் மூலமும் மின்சாரம் தயாரிக்கலாம். சைக்கிள் டைனமோ பார்த்திருக்கிறீர்களா, நாம் வண்டியை மிதித்து சக்கரம் சுற்ற சுற்ற மின்சாரம் உருவாகி சைக்கிள் முன் ஒளி வருகிறது. இதே போல ஒரு தொழிற்நுட்பத்தை கொண்டு ஒவ்வொரு சோம்பேறியிடம் இருந்தும் மின்சாரத்தை உருவாக்கினால் நாட்டில் மின் தட்டுபாடே வராது. அணு சக்தியின் பால் நாம் கவனம் செலுத்தவும் தேவையில்லை.

                  • எனக்கு தெரிந்த அளவில் ஜனநாயகம் என்பதும் கம்யூனிசம் என்பதும் (முறைப்படி கம்யூனிச வகுப்புகளின் கற்றதில்லை) மக்களிடம் கற்றுகொள்ளுதல், மக்களூக்கு கற்றுகொடுத்தல் என்பது தான் செயல்முறை.

                    இப்படி பொது மக்களிடம் பொது அவையிடம் அரசு வரும்போது , விலை உயர்வு, போலீஸ் நடவடிக்கை போன்றவை தேவைப்பட்டால், பொது மன்றத்தில் அவை விவாதிக்கபடும்போது, இன்றைய தேதியைவிட மிக சிறப்பாக தீர்வுகள் கிடைக்கும்.

                    சிறு அளவிலான சங்க கூட்டங்களிலேயே இதை கவனித்தால் தெரியும். உதாரணமாக 40 வீடுகள் இருக்கும் ஒரு காலனியில் குடியிருந்தேன். அங்கு ஒரு சிறு பள்ளி ,கோவில் இருந்தது. பள்ளி மற்றும் கோவில் இரவு நேரங்களில் சேதப்படுத்தப்பட்டது.

                    இதற்கு என்ன செய்யலாம் என்று குடியிருப்போர் பேசுகையில் ஒரு இரவு காவலாளியை அமர்த்தலாம் என்று முடிவானது. இரவு காவலாளிக்கு குறைந்தது 5000 சம்பளம் போனஸ் வேண்டும். அந்த குடும்பங்களில் சொந்த தொழில் செய்வோர், வேலைக்கு செல்வோர், விதவை பெண்கள் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

                    காவலர் சம்பள பங்காக குடும்பத்துக்கு என்ன தொகை நிர்ணயிக்கலாம் என்று விவாதம் வந்த்போது அவர் அவர் முடிந்த தொகையை சொல்ல, வீட்டுக்கு 100 என்று முடிவானது. சொந்த தொழில் செய்வோர் மற்றூம் கொஞ்சம் வசதி படைத்தோர் மட்டும் தாங்களாக தங்கள் பங்குக்கு 150 தருகின்றோம். விதவை பணம் தரவேண்டாம் என்றனர். உண்மையில் விதவை பெண்ணின் பொருளாதராம் கொஞ்சம் சிரமமே.

                    விதவை பெண் குழந்தைகளுக்கு இரவில் பால், பிஸ்கட் கொடுத்து தூங்க செய்ப்வர், இரவுகாவலாளி வந்தவுடன், தேனீர் தயாரித்து வழங்கதுவங்கிவிட்டர். தினமும் இரவு காலலாளீக்கு தேனிர் தருபவர் இவரே, காவலாளி விடுப்பி இருந்தால் அந்த பகுதியை சேர்ந்த யாரும் காவலாளி வேலைய பார்த்தாலும், தேனீர் தருபவர் இவரே,

                    இப்போது கணக்கிட்டால் தேனீர் விலை ரு 5 என்று வைத்தாலும் 30 நாட்களுக்கும் 150. அதாவது அதிகம் கொடுத்தவ்ரை விட அதிகம் கொடுத்தார் என்று பொருளாகின்றது. பணமாக கொடுத்தவர் பணத்தை கொடுத்துவிட்டு அவர் வேலையை பார்க்க போய்விட்டர். இவர் இத்துடன் தவறாத உழைப்பையும் கொடுத்திருக்கின்றார்.

                    இன்னொரு சம்பவத்தையும் பார்த்திருக்கின்றேன். இது ஒரு இறந்தவர்க்கு இறுதி காரியம் செய்வதற்கான சங்கம் சம்பந்தப்பட்டது. அதாவது சங்க்த்தில் யாரும் இணையலாம். இணையும்போது 1000 நன்கொடை தரவேண்டும்.
                    இது போக மாதம் 20 தரவேண்டும். சங்க உறுப்பினர்குடும்பத்தில் யார் இறந்தாலும், சங்க உறுப்பினர் அனைவரும் பங்கேற்பர். இறப்பு மற்றும் இறுதி காரியங்கள் அனைத்துக்கும் ரூ 3000 சங்க சார்பில் வழங்கப்படும். சங்க செயற்குழு உறுப்பினர் 10 பேரில் 5 பேர் ஈம சடங்குகள் அனைத்தையும் நடத்தி வைப்பர்.

                    இந்த சங்கத்திலும் மக்களின் கூடுதல் முடிவு எடுத்தல், விலைஉயர்வு போன்ற பிரச்சனைகள், சங்கத்திகு வாரமல் சந்தாவும் செலுத்தாதவர்களை கையாளுதல், பொருளாதார சூழ்நிலையில் சந்தா செலுத்தாதவர்களை கையாளூதல் என்று பலதரப்ப்ட்ட நிலைகளில் ஒன்றுபட்ட மக்களீன் நடவடிக்கைகலை கவனித்திருக்கின்றேன்.

                    இப்படி பார்க்கையில் பொது மக்களை நிச்சயம் 100 சதம் நம்பலாம். மக்களுக்கு பிரச்சனையை புரியவைப்பதில் தான் கொஞ்சம் கால தாமதம் எற்படுமே தவிர, புர்ந்த பின் முடிவு எடுப்பதிலோ, இல்லை அதை செயல் படுத்துவதிலோ எந்த தயக்ககும் இருப்பதில்லை. சங்கத்திகாக பொது உழைப்பை கொடுப்பதிலோ, தியாகம் செய்வதிலோகூட தயக்கம் இருப்பதில்லை. புரிந்துகொள்தல் மட்டுமே சிரமம்.

                    இந்த மக்கள் மன்றமே இன்றய பாராளூமன்றத்திற்கு மாற்றாகவும், அது வேறும் சட்டம் இயற்றும் அமைப்பாக மட்டும் இல்லாமல், அதை செயல்படுத்தும் அதிகார வர்க்கத்தை நிர்வக்க, அதிகார வர்க்கம் தவறிழைக்கும்போது அதை மாற்றும், தண்டிக்கும் உரிமை பெற்ற அமைப்பாக ஏற்படுத்தினால் நிச்சயம் இன்றை ஜனநாயககத்தை விட பண்மடங்கு சிறப்பான ஆட்சி நமக்கு கிடைக்கும்.

                    • வினோத், தங்களின் கருத்துக்களுக்கு நூறு சதவீதம் ஆமோதிக்கிறேன். நன்றி. இது போல அனைவரும் தங்களால் முடிந்த தீர்வுகளை Brain Storm செய்தால் நமக்கு இன்னும் பல பிரச்சினைகளுக்கு எளிய தீர்வுகள் கிடைக்கும்.

                      வினவு சகோதரர்களே, நண்பர்களே, எல்லோரும் கூடி தேர் இழுப்போம். வாருங்கள். கொஞ்சம் நாட்டை உருப்பட வைக்க முயற்சிக்கலாம். சும்மா வெட்டியாக எல்லோரையும் குறை சொல்வதை தவிர்த்து ஆக்கபூர்வமாக ஏதாவது யோசிக்கலாம்.

                      நம் வாழ்வின் முக்கிய பிரச்சினைகளை விட்டு விட்டு தேவையில்லாத விடயங்களுக்காக பல பதிவுகளை வீணடிக்கும் நண்பர்கள் வியாசன், செந்தில்குமரன், இன்னும் பல நண்பர்களுக்கு இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். ஆக்கபூர்வமாக வாதிடுங்கள். வாருங்கள்.

  2. மோடி அலை போயி,
    இப்போ
    விஜகாந்த் வாடை அடிகிது தமிழநாட்ல,
    இந்த மக்களுக்கு யார் யாருக்கு ஓட்டு போடனும்னு தெரியல,
    பணதிற்க்கும், குவாட்டர்கும், பிரியாணிக்கும் அவர்களின் வாழ்வுரிமை பரிக்கபடுகிறது..,
    —————————-
    நடிப்பவர்கள் மதிக்கபடுறான்
    படித்தவர்கள் மிதிக்கபடுகிறார்கள்.. .,
    ———————————-

    க்ப்க

  3. என்ன கவிஞரே,
    திரிகூடராசப்ப கவிராயருக்கு நேர்ந்த கதி இளங்கோவடிகளுக்கும் நேர்ந்துவிடாமல் கட்டுரை எழுதி தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.. தேர்தல் வேகம் உங்களையும் பற்றிக் கொண்டுவிட்டதோ..?!!!

  4. அம்பி,
    //திரிகூடராசப்ப கவிராயருக்கும் இளங்கோவடிகளுக்கும் நேர்ந்த கதி
    என்ன?..// விரிவாக சொல்லுங்கள் தமிழ் புலவரே…
    தேர்தல் பாதை திருடர் பாதை தெரிந்து கொண்டேம் அனுபவரீதியக,
    ஆதாலல் தேர்தல் புறக்கணிப்பு செய்வீர்…

  5. காவிரி – அன்றும் இன்றும்….Today no watar but lot of sand!!!! Please tell me where is that place… I need sand.. sand… sand…….

  6. அதான் தேர்தல் வாக்குறுதிப்படி முப்பது கிலோ இலவச அரிசி கொடுக்குறாங்க…அப்படியும் இல்லன்னா அம்மா உணவகத்தில் சூடா சாப்பிட்டு போறேன்.மற்றபடி விவசாயம் இருந்தா என்ன இல்லாட்டி என்ன?

  7. நம்ம பூமியை மலடு ஆக்கிக்கிட்டு இருக்கிறான் இனிமேயும் அவனுக்கு ஓட்டு போட்டு காப்பாத்துவான்னு நம்பாம தூக்கிபோட்டுதான் மிதிக்கணும்.

  8. விவசாயிகள் தற்கொலை செய்யாமல் தடுக்க, அவர்களும் மற்ற பொருள் உற்பத்தியாளர்களை போல இலாபம் பார்க்க என்ன வழி?
    கொஞ்சம் அனைவரும் சேர்ந்து யோசித்தால் ஒரு வழி கிடைக்காமலா போய் விடும்.
    ஆக்கபூர்வமாக இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண யோசிப்போம் நண்பர்களே.

    அந்த தீர்வை மக்களிடம் நேரடியாக பகிர்வோம். விவசாய மக்களிடம் தங்களுக்கு புகழ் கிடைக்குமென்றால் அரசியல்வாதிகளும் ஆதரிப்பார்கள்.

    தேர்தலை புறக்கணிப்பதால் விவசாயிகளின் தற்கொலை நிகழ்வுகளை நிறுத்த முடியாது. இதற்கு வேறு தீர்வு ஏதாவது இருந்தால் யோசித்து முடிவெடுப்போம்.

  9. தேர்தல் புறக்கணிப்பு என்பது ஓட்டுப்போடாமல் வீட்டுக்குள் இருப்பது அல்ல, அவ்வாறு புறக்கணித்துவிட்டு இருப்பதால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. ஜனநாயக கடமை, ஜனநாயகத் திருவிழா என்கிற பெயரில் மக்களை முட்டாளாக்கும் இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்கு மாற்று என்ன என்பதை முன்வைக்க வேண்டும். அத்தகைய மாற்று என்பது இனிமேல் யோசித்து தயாரிக்க வேண்டிய ஒன்றல்ல. மாற்று என்பது இந்த சமூக அமைப்பை மாற்றியமைப்பது தான், அதன் மூலம் தான் மக்களுக்கு உண்மையான அரசியல் அதிகாரத்தை வழங்க முடியும். தேர்தல் புறக்கணிப்பை இவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்.

    இந்த தேர்தல் முறைக்குள் நின்று கொண்டு விவசாயிகளின் தற்கொலைகளை அல்ல நம்முடைய தெருவில் உள்ள பிரச்சினைகளை கூட தீர்க்க முடியாது.

    • நண்பரே,

      //இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்கு மாற்று என்ன என்பதை முன்வைக்க வேண்டும். அத்தகைய மாற்று என்பது இனிமேல் யோசித்து தயாரிக்க வேண்டிய ஒன்றல்ல. மாற்று என்பது இந்த சமூக அமைப்பை மாற்றியமைப்பது தான், அதன் மூலம் தான் மக்களுக்கு உண்மையான அரசியல் அதிகாரத்தை வழங்க முடியும். தேர்தல் புறக்கணிப்பை இவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்.//

      சத்தியமாக எனக்கு புரியவில்லை. என்ன சொல்ல வருகிறீர்கள் நண்பா? நீங்களே உங்களது மேற்கூறிய கருத்துக்கு என்ன விளக்கம் என்று கூறுங்கள்.
      தெளிவாக, பாமரனுக்கும் புரியும் வகையில் கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்.

      மாற்று வேண்டும் என்கிறீர்கள்.
      மாற்று இனிமேல யோசித்து தயாரிக்க வேண்டிய ஒன்று இல்லை என்கிறீர்கள்.
      சமூக அமைப்பை மாற்றுவது தான் மாற்று என்கிறீர்கள்.
      தேர்தல் புறக்கணிப்பை இவ்வாறு தான் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறீர்கள்.

      உங்கள் கருத்திலிருந்து எனக்கு புரிந்தது – சமூக அமைப்பை மாற்றுவது தான் மாற்று. இது தான் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு.

      சரி, சமூக அமைப்பு என்பது என்ன, அதில் என்ன மாற்றம் ஏற்படுத்த வேண்டும். யார் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்?

      தற்போதுள்ள தேர்தல் முறைப்படி நாம் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் திறமையாக இல்லாமலோ, தவறிழைத்தாலோ அவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியில் இருந்து தூக்கி எறியக்கூடிய அதிகாரம் மக்களிடம் உள்ளது. வேண்டுமென்றால் தவறிழைக்கும் அரசியவாதிகளை மக்களே விலக்கி கொள்ள செய்யும் RECALL சட்டம் இருந்தால் நன்றாக இருக்கும்.

      மற்றபடி நீங்கள் கூறும் சமூக அமைப்பின் மாற்றத்தை யார் மூலம் நீங்கள் நடத்த விரும்புகிறீர்களோ, அவர்கள் ஊழலுக்கு அப்பாற்பட்டவராக இருந்தால் தான் இது சாத்தியம். நடைமுறையில் இது கடினம்.

      உங்களது மாற்று பற்றிய தெளிவான விளக்கத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

      • கற்றது கையளவு,
        நீங்கள் புரிந்துகொண்டது போல மாற்றம் என்பது சமூக மாற்றம் தான், அதாவது இந்த சுரண்டல் சமூக அமைப்பையே அடியோடு மாற்றியமைக்கும் புரட்சி தான், அது மட்டும் தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு.

        ஏன் ஓட்டுப்போடக்கூடாது என்கிறோம்?

        ஏனெனில் இங்கே மக்கள் வாக்களித்து தேந்தெடுப்பது மக்களின் பிரதிநிகளை அல்ல, தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பவர்களும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்கிற நோக்கிலோ, சமூக அக்கறையுடனோ நிற்கவில்லை, பதவியில் அமர்ந்துகொண்டு பொறுக்கித்தின்பதே நோக்கம். மேலும் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ, எம்.பிகளுக்கு எந்த திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் அதிகாரமும் இல்லை. எனவே தான் இந்த போலி ஜனநாயகத் தேர்தலை நாம் புறக்கணிக்க வேண்டும் என்கிறோம்.

        இப்போது ஒவ்வொன்றாக பார்ப்போம்.

        முதலில், மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் இவர்கள் அனைவரும் மக்களின் பிரதிநிதிகள் இல்லை. பிறகு யாருடைய பிரதிநிதிகள்? ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகள், முதலாளிகளின் பிரதிநிதிகள். இவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள், யாருடன் ஊர் சுற்றுகிறார்கள் என்பதெல்லாம் அவ்வப்போது அம்பலமாகக்கூடிய விசயம் தான். டாடாவுக்கும் அம்பானிக்கும், அதானிக்கும் தான் இவர்கள் சேவை செய்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல அமைச்சர்கள் வெளிப்படையாகவே முதலாளிகளின் தோள்கள் மீது கையை போட்டுக்கொண்டு போஸ் கொடுப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இது தொடர்பாக வினவில் பல கட்டுரைகள் வந்துள்ளன வாசித்துப்பாருங்கள்.

        இரண்டாவது, தேர்தலில் கோடிக்கணக்கான ரூபாயை செலவளிப்பவர்கள் மட்டும் தான் போட்டியிட முடியும் என்பது எதார்த்தம். எனவே வேட்பாளர்களாக நிற்கின்ற அனைவருமே கோடீஸ்வரர்களாகவும், கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளாகவும், கிரிமினல் குற்றப்பின்னணி கொண்ட மக்கள் விரோதிகளாகவுமே உள்ளனர். எனவே தேர்தலில் போட்டியிட்டு பதவியை பிடிப்பது என்பது போட்ட காசை எடுப்பதற்கும், வெற்றி பெற்ற பிறகு கூடுதலாக கொள்ளையடிப்பதற்கும், பதவியில் அமர்ந்துகொண்டு மக்களை மிரட்டுவதற்குமான அதிகாரமாக தான் இருக்கிறது. எனவே இதில் சமூக அக்கறை, மக்கள் நலன் என்பதற்கெல்லாம் வேலை இல்லை.

        முதலாளித்து பாராளுமன்றங்கள் அனைத்தும் முதலாளிகளின் நலங்களுக்காக தான் இருக்கிறது, அந்த உறுப்பில் பங்கேற்று உழைக்கும் மக்களின் நலன்களை நிலைநாட்டிவிட முடியாது. எனவே தான் லெனின் முதலாளித்துவ பாராளுமன்றங்களை பன்றித்தொழுவம் என்றார். இந்திய பன்றித்தொழுவத்திற்கு மேலும் சில பிற்போக்கு சிறப்பம்சங்கள் உண்டு. பூனூலால் சுற்றிக்கட்டப்பட்டிருக்கும் இந்திய பாராளுமன்றத்தில் முதலாளித்துவ நாடுகளில் உள்ள ஜனநாயகம் கூட இல்லை. எனவே எந்த நாடாக இருந்தாலும் பாராளுமன்றம், சட்டமன்றம் என்பதெல்லாம் ஆளும் வர்க்கங்களின் உறுப்புகள். கம்யூனிஸ்டுகளின் வேலை அதில் பங்குபெற ஓட்டுப்பொறுக்குவது அல்ல, (முதலாளித்துவ நாடுகளில் வரம்புக்குட்பட்டு, அதைப்பற்றிய மாயைகளை விட்டொழித்து பாட்டாளி வர்க்கத்தின் நலங்களுக்கான திட்டத்துடன் பங்கேற்கலாம்) மாறாக மக்களை அமைப்பாக்குவது தான் முதன்மையான வேலை.

        பாராளுமன்றத்தில் பங்கேற்று எதையும் சாதிக்க முடியாது என்பதற்கு மக்களுக்காக போராடுவதாக கூறிக்கொள்ளும் CPI, CPM போலிக்கம்யூனிஸ்டுகளே தக்க சான்று. மக்களுக்கு நல்லது செய்யப் போகிறோம் என்று கூறிக்கொண்டு தான் அவர்களும் அரை நூற்றாண்டுக்கு மேலாக ஓட்டுப்பொறுக்கிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் பாராளுமன்றத்தில் எந்த மாற்றமும் வரவில்லை, மாறாக அவர்கள் தான் கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளாவும், கேடுகெட்ட ஓட்டுப்பொறுக்கிகளாகவும் சீரழிந்து போயுள்ளனர். எனவே இந்த பாராளுமன்றத்தின் மூலம் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்ய முடியாது. அப்படியானால் எந்த மாதிரியான பாராளுமன்றம் வேண்டும்? இது தொடர்பாகவும் வினவில் பல கட்டுரைகள் வந்துள்ளன. உதாரணத்திற்கு இது.

        மூன்றாவது, வேட்பாளர்களில் யாருக்கும் மக்கள் மீது துளியும் அக்கறை இல்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், ஒருவேலை சிலருக்கு இருப்பதாக வைத்துக்கொண்டாலும், அல்லது நீங்கள் நல்லவர்கள் என்று பரிந்துரைக்கும் நபர்களில் (ம.க.இ.க தோழர்களைப் போன்றவர்கள்) ஒரு சிலர் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவதாக வைத்துக்கொண்டாலும், அவர்களுக்கு உண்மையில் எந்த அதிகாரமும் கிடையாது. மக்களுக்கு சாதகமான திட்டங்களை அல்ல, முதலாளிகளுக்கு சாதகமான திட்டங்களை கூட நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் அவர்களுக்கு கிடையாது.

        சட்டமன்றமும், நாடாளுமன்றமும் வெறுமனே சட்டம் மட்டும் (சட்டமும் முதலாளிகளுக்கு விரோதமானதாக இருக்க முடியாது) தான் இயற்ற முடியும், அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கோ இல்லை, மாறாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகார வர்க்கத்திற்கு தான் அந்த அதிகாரம் இருக்கிறது. மக்களுக்கு ஆதரவான ஒரு நல்ல சட்டம் இயற்றப்பட்டாலும் அதிகார வர்க்கம் அதை நடைமுறைப்படுத்தவிடாமல் தூக்கு எறிந்துவிடும். அப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களோ, எம்.பிகளோ ஏன் என்று கேட்க முடியாது. இந்த அட்டைக்கத்தியை தான் தேர்தல் ஆணையமும் ஊடகங்களும் மாபெரும் ஆயுதம் என்று சித்தரித்துக்கொண்டிருக்கின்றன.

        இந்த காரணங்களால் தான் இந்த போலி ஜனநாயக தேர்தலை புறக்கணிக்க வேண்டும், ஒரு புதிய ஜனநாயக சமூகத்தை படைக்க வேண்டும் என்கிறோம்.

  10. ##போராடி! போராடி, பூமியை பிளந்து வரும் விதையைப் போல… போராட்டங்களின் வழி நமக்கான கண்டு முதல் காணும் புதிய ஜனநாயக அரசமைப்பை வளர்த்தெடுப்போம்!

    போடாதே ஓட்டு! அது நம் பூமிக்கே வேட்டு!##

    • மோகன் சார்,

      கொஞ்சம் ப்ராக்டிகலாக யோசிப்போமே.
      ஒட்டு போடாதே, ஒட்டு போடாதே என்று நீங்கள் எத்தனை பேரை வற்புறுத்த முடியும். ஒருவேளை உங்களின் விடாமுயற்சியின் மூலம் உங்களது மாற்று சமுதாய சீரமைப்பின் பெருமைகளை மக்களுக்கு விளக்குவதன் மூலம் ஒரு தொகுதியின் பெரும்பாலான வாக்காளர்களை நீங்கள் ஒட்டு போடாமல் இருக்க உங்களாலோ வினவாலோ முடியும் என்றால், நீங்களே ஒரு வேட்பாளராக ஆகி அந்த மக்கள் உங்களை தேர்ந்தெடுக்க செய்யலாமே. நீங்கள் உருவாக்க நினைக்கும் அந்த மாற்றை மக்கள் மூலம் தேர்ந்தெடுக்க பட்ட நீங்களே செய்யலாமே. மாற்றி யோசித்து பார்ப்போம் மோகன் சார்.

Leave a Reply to mohan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க