privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விமறுமதிப்பீடா - மதிப்பெண் கொலையா ?

மறுமதிப்பீடா – மதிப்பெண் கொலையா ?

-

மறுமதிப்பீடு செய்யும் பேராசிரியர்களின் மண்டைக்கனம்!
திமிருக்கு சாமரம் வீசுகிறது அழகப்பா பல்கலைக்கழகம்!
பாதிக்கப்படும் மாணவர்களே! யோசிப்பீர்!

பூனைக்கு மணி கட்டப் போவது யார்?

அழகப்பா பல்கலை
அழகப்பா பல்கலைக் கழகம்

திக அளவில் மதிப்பெண் எடுக்காத கல்லூரி மாணவர்களைப் பற்றி பேராசிரியர்களால் கூறப்படும் நக்கலான வசனங்கள் ஏராளம். ஒரு மாணவன் அதிக அளவில் மதிப்பெண் எடுக்காததற்குக் காரணம் கல்விமுறையும் பேராசிரியர்கள் பாடம் நடத்தும் லட்சணமும்தானே தவிர மாணவனல்ல. அதே சமயத்தில் அதிக அளவில் மதிப்பெண் எடுக்கக்கூடிய மாணவர்களுக்கு ஏற்படும் கதிகளை பார்க்கும்போது சிலநேரங்களில்  அப்படி மதிப்பெண் எடுக்காமலேயே இருந்துவிடலாம் என்றே தோன்றுகிறது. அப்படிப்பட்ட அடிவயிறு கலங்க வைக்கும் வேலைகளைச் செய்வதும் அதே கல்லூரிப் பேராசிரியர்கள்தான். இவர்கள் பேராசிரியர்களா? அல்லது பேராசிறியர்களா?

அதிகமான மதிப்பெண் எடுத்தால்தான் ஏதேனும் வேலை பார்க்கலாம் என்பதை தலையெழுத்தாக மதித்துப் போற்றி நடக்கும் ஒரு மாணவர் தனக்குக் கிடைக்கப்போகும் ஒவ்வொரு மதிப்பெண்ணையும் கவனித்தே தேர்வுகளை எழுதுகிறார். அதுபோல தேர்வு முடிந்ததும் எத்தனை மதிப்பெண்கள் கிடைக்கும் என பலமுறைகளில் மதிப்பீடு செய்து பார்க்கிறார். தேர்வு முடிவு வந்து மதிப்பெண்ணைப் பார்க்கும்போது அவருக்குக் கிடைத்த மதிப்பெண் குறைவாக இருப்பதாக எண்ணினால், உடனே மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கிறார். மறுமதிப்பீடு செய்யப்பட்டு மீண்டும் வருகின்ற மதிப்பெண்ணைப் பார்த்தால் ஒன்று அதே மதிப்பெண் இருக்கவேண்டும் அல்லது சற்றுக்கூடி இருக்கவேண்டும், ஆனால் மதிப்பெண் அதலபாதாளத்திற்குக் குறைந்தால்………?

காரைக்குடி அழகப்பா பலகலைக்கழகத்தின் கீழ் வருகிற ஒரு கல்லூரியில் ஒரு மாணவர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கிறார். அவர் எடுத்த மதிப்பெண் 74. ஆனால், அவர் எதிர்பார்த்த மதிப்பெண் 83. எனவே, மறுமதிப்பீட்டிற்கு அனுப்புகிறார். ஆனால், மறுமதிப்பீடு செய்து அவருக்கு வந்த மதிப்பெண் 4. அதாவது வெறும் 4. பதறிப்போன அம்மாணவர் அந்தப் பாடத்தை நடத்திய தனது கல்லூரிப் பேராசிரியரிடம் கேட்கிறார். அவர் துறைத் தலைவரைப் போய்ப் பார்க்கச் சொல்கிறார். இவர் துறைத் தலைவரைப் போய்ப் பார்க்கிறார். அவர் முதல்வரைப் போய்ப் பார்க்கச் சொல்கிறார். இவரும் முதல்வரைப் போய்ப் பார்க்கிரார். அவரோ, இது பல்கலைக்கழக விவகாரம். அங்கே போய்க் கேட்டுக்கொள் என்கிறார். மாணவர் உடனே காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு வருகிறார். மறுமதிப்பீட்டுத்துறையில் போய்க் கேட்கிறார். அதற்கு அங்கே அவருக்குக் கிடைத்த பதில் என்ன தெரியுமா?

“அப்படித்தான் போடுவோம். நீ என்ன செய்வ? ஒழுங்கா கிடச்ச மார்க்க வச்சுக்கிட்டு இருந்திருக்கலாம்ல. இப்ப இதுதாம்ப்பா மறுமதிப்பீட்டு மார்க்கு. நீ என்ன செய்ய முடியுமோ? செஞ்சுக்க. எங்க போக முடியுமோ? போய்க்க.”

எப்படி இந்த பதில்!. மாணவர் பதறிப்போய் மீண்டும் கல்லூரிக்கு வந்து பேராசிரியர்களிடம் சொல்கிறார். ஆனால், அதற்குக் கிடைத்த பதில்

அழகப்பா பல்கலை
அழகப்பா பல்கலைக் கழகம்

“அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.”

ஏன் பேராசிரியர் இப்படிச் சொல்கிறார்? இவரும் மறுமதிப்பீட்டிற்குப் போவார். நாளைக்கு இவர்மீது ஏதாவது புகார் வந்தால் யார் காப்பாற்றுவார்? பல்கலைக்கழகமா? மாணவரா?

ஆக, மொத்தமாக பட்டை நாமம் சாத்தப்பட்ட நிலையில் கொல்லங்குடிக் காளியாத்தாவிற்கு காசு வெட்டிப் போடுவதைத்தவிர மாணவருக்கு வேறு வழியில்லை.

அப்படியே காசு வெட்டிப்போட்டாலும் ஒரு பயனும் இல்லை. காரணம், இது அழகப்பா பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இதே நிலைதான் நிலவுகிறது.

மறுமதிப்பீடு செய்யும் பேராசிரியர் காலை பத்துமணிக்கு வருகிறார். ஒருநாளைக்கு அவர் 50 விடைத்தாள்கள் திருத்தவேண்டும். அதற்கு அவருக்கான கூலி 1000 ரூபாய். இந்தக்கூலி அவரது வருமானத்தில் சேராது. அதாவது இந்தக் கூலிக்காக அவர் அரசுக்கு வரி எதுவும் செலுத்துவதில்லை. ஆனால், 11 மணிக்கு டீ வருவதற்குள்ளேயே அவர் 50 விடைத்தாளையும் திருத்திவிடுவார். எந்திரன் படத்தில் இயந்திர மனிதனான ரோபோ சிட்டி புத்தகத்தை முகத்திற்கு நேரே வைத்துக்கொண்டு இப்படியும் அப்படியும் ஆட்டியதும் படித்தாகச் சொல்லுமே, அது போலக்கூடச் செய்யாமல், இந்தப் பேராசிரிய எந்திரங்கள் விடைத்தாளைக் கையில் எடுக்காமலேயே மதிப்பெண்ணை மறுமதிப்பீடு செய்து விடுகிறது. இந்த அக்கிரமம் குறித்து பல்கலைக்கழகத்திற்கு நன்றாகத் தெரியும். ஆனால், வேலை சீக்கிரமாக நடந்தால் சரி, எவன் தாலி அறுந்தால் நமக்கென்ன? என அது கல்விக் கடமையாற்றிய பொறுப்போடு இருந்துவிடுகிறது. மாணவர் கதிதான் அதோ கதியாகி விடுகிறது.

கல்வித் துறையில் கூட மாணவர்களுக்கு குறைந்தபட்ச ஜனநாயக உரிமை இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. மறு மதிப்பீடு கேட்டாலே பேராசிரியர்களும், நிர்வாகமும் ஆண்டைகள் போல நடந்து கொள்ளுகின்றார்கள். அதிகார வெறியில் ஆட்டம் போடும் இந்தஆண்டைகளுக்கு மாணவர்கள் தக்க பாடம் கற்பித்தால்தான் போதையை தெளிய வைக்க முடியும். செய்வார்களா?

– செய்தியாளர், பு.ஜ

  1. பல்கலைகழக பொருசாளிகளுக்கு மணி கட்டப் போவது யார்?
    ——————————————————————————————————————————————–

    உங்கள் “மறுமதிப்பீடா – மதிப்பெண் கொலையா ?” கட்டுரையை படிக்கும் போது நினைவுகள் 5 ஆண்டுகள் பின்நோக்கிச் செல்கின்றன. விளக்கம் அளிக்க அனுமதி தருவிர்கள் என நினைக்கின்றேன்.சேலம்,நாமக்கல்,தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த கலை அறிவியல் கல்லூரிகளுக்கு எல்லாம் மையமான பெரியார் பல்கலைகழகம் தான் விடைத்தாள் திருத்தும் மையம்.

    [1] ஒவ்ஒரு பாட தேர்வு முடிந்ததும் மாணவர்கள் அப் பாடத்தை நடத்திய எங்களை [ஆசிரியாரை] அணுகி விவாதிபார்கள். “out off syllabus” கேள்விகள் உள்ளனவா என்று பார்ப்போம். “out off syllabus” கேள்விகளுக்கு மதிபெண் அளிக்க வேண்டியது பல்கலைகழகத்தீன் கடமை. எனவே துறை தலவர் மூலம் பல்கலைகழக Controller of Examination [CEO] க்கு கடிதம் எழுதபடும். இது போல் பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் CEO] க்கு கடிதம் எழுதுவார்கள்.

    [2] அப் பாடத்தீன் விடைத்தாள் திருத்தும் போது Chief Examiner எங்களுடன் அக் கடிதங்கள் [ “regarding out off syllabus questions ” ] பற்றி விவாதிபார். இருதியில் out off syllabus questionsக்கு எவ்வளவு மதிப்பெண் அளிக்க வேண்டும் என்று முடிவு செய்வோம். அதன் படி மதிப்பெண் கூடுதலாக அளிபோம். பின்பு கல்லூரியில் மாணவர்களை சந்திக்கும் போது out off syllabus questionsக்கு மதிப்பெண் அளிக்கபட்டதை கூறி நம்பிக்கை அளிப்போம்.

    [3]முதுகலை தேர்வு விடைத்தாள் திருத்தும் போது காலை 20 மதியம் 20 என்று மொத்தம் 40 விடைத்தாள் ஒவ்ஒரு ஆசிரியருக்கும் அந்த அந்த வேலைகளில் தான் அளிக்கப்படும். “11 மணிக்கு டீ வருவதற்குள்ளேயே அவர் 50 விடைத்தாளையும் திருத்திவிடுவார்” என்பது சாத்தியம் இல்லை.

    [4] கூலி ரூ1000 என்பது தவறு.

    [pg ]முதுகலை விடைத்தாள் திருத்த : 40 * 12 = Rs 480
    Da : = rs 220
    total = rs 700

    ug தேர்வுகளுக்கு விடைத்தாள் திருத்தும் போது இத் தொகை மோலும் குறையும்.

    [5]மறுமதிப்பீடு விடைத்தாள் திருத்தும் போது அனுபவத்தில் முதிர்ந்த ஆசிரியர்கள் மட்டுமே கலந்து கொள்வேம்.நீங்கள் கூறுவது போல 74 marks 04 marks ஆன தவறுக்கு ஆசிரியர்கள் காரணம் இருக்க முடியாது. foil sheetல் மதிப்பெண்களை

    Dummy No Marks[numeric] Marks[letters]

    என்ற formatல் பதிவு செய்து Chief Examiner இடம் கொடுபதுடன் எங்கள் வேலை முடிந்தது.

    அதற்கு பின் மதிப்பெண்கள் “பல்கலைகழகத்தால்” கணினியில்” உள்ளீடு செய்யப்படும்.தவறு அங்கு “பல்கலைகழகத்தில்” நடைபெற்று இருக்க மட்டுமே சாத்தியம்.

    [6]ஆசிரியர்கள் மீது பல்வேறு தவறுகளும்[phd guide money scandal etc] இருக்க இவ் விசயத்தில் ஆசிரியர்களை குறை கூறுவது என்னால் ஏற்க முடீயவீல்லை

    நன்றி.

    • புத்திசாலித்தனமாக சரவணன் என்று பெயரை மாற்றிவிட்டு, முட்டாள்த்தனமாக கட்டம் கட்டி பின்னூட்டமிடும் ஸ்டைல் (கட்டம் கட்டி பின்னூட்டமிடும் பாணி உலகத்தில் அண்ணன் செந்தில்குமாருக்கு மட்டுமே உரியது) அண்ணனை காட்டிக்கொடுத்துவிடுகிறது.

      • கைபுள்ள,

        வியாசன் இடம் பொம்மை . 🙂 வரைய கற்றுக்கொண்டேன்

        செந்தில்குமாரிடம் கட்டம் கட்டி பின்னூட்டமிடும் ஸ்டைலை கற்றுக்கொண்டேன்

        திப்பு இடம் விவாதிக்க கற்றுக்கொண்டேன்

        கற்றது கையளவு இடம் சமரச பேச்சு வார்தத்தை நடத்துவது எப்படி என்று கற்றுக்கொண்டேன்

        கைபுள்ள உங்களீடம் எவ்வளவு அடிவாங்கினாலும் தாங்கி கொள்ளவது எப்படி என்று கற்றுக்கொண்டேன்

        ID proof, Address proof கொடுத்தா தான் “கருத்தாட” முடியுமா கைபுள்ள?

          • கைபுள்ள,

            அப்துல் ரகுமான் அவர்களீன் கவிதை ஒன்று கல்லூரி நாட்களில் படித்தது. தூங்கும் சிங்கத்தின் மீது ஏறி சுண்டெலிகள் விளையாட்டும். சிங்கம் கண் வீழித்து எழும் போது சுண்டெலிகள் பயந்து ஓடும். அது போல உங்கள் “செந்தில்குமார் அண்ணே” மீண்டும் வினாவுக்கு வரும் போது உங்கள் நிலையை நினைத்து பருங்கள் . 🙂

            • அவரு எப்பங்க வருவாரு? நீங்க போனாதான் அவரு வரமுடியுமா? மீசை வச்சா செந்தில் மீசை இல்லாட்டி சரவணனா?

          • ஆசிரியர்கள் எல்ல்லாம் பாயிண்ட் பை பாயிண்டாக எழுதறாங்க … அதுதான் ஒற்றுமை 🙂

    • 74 marks 04 marks ஆன தவறுக்கு ஆசிரியர்கள் காரணம் இருக்க முடியாது. foil sheetல் மதிப்பெண்களை

      Dummy No Marks[numeric] Marks[letters]

      என்ற formatல் பதிவு செய்து Chief Examiner இடம் கொடுபதுடன் எங்கள் வேலை முடிந்தது.

      அதற்கு பின் மதிப்பெண்கள் “பல்கலைகழகத்தால்” கணினியில்” உள்ளீடு செய்யப்படும்.தவறு அங்கு “பல்கலைகழகத்தில்” நடைபெற்று இருக்க மட்டுமே சாத்தியம்.

      — Did you read the article. The concerned official has deliberately done the mark change and he arrogantly replies do whatever you can do like a rowdy.

      Pathetic that a person who cannot read is a teacher.

  2. இதைக் கூறுவது பல்கலைகழக அலுவலர் என்றால் ஆசிரியர்கள் என்ன செய்வார்கள் ?

    //“அப்படித்தான் போடுவோம். நீ என்ன செய்வ? ஒழுங்கா கிடச்ச மார்க்க வச்சுக்கிட்டு இருந்திருக்கலாம்ல. இப்ப இதுதாம்ப்பா மறுமதிப்பீட்டு மார்க்கு. நீ என்ன செய்ய முடியுமோ? செஞ்சுக்க. எங்க போக முடியுமோ? போய்க்க.”//

  3. மாணவர்களுக்கு பாடம் நடத்துவது , விடைத்தாள் திருத்துவது இவைதான் ஆசிரியர்கள் வரம்பிற்கு உட்பட்டது. பல்கலைகழக கணினியில்” மதிப்பெண்கள் உள்ளீடு செய்யப்படும் போது நடைபெறும் தவறுகளுக்கு ஆசிரியர்கள் என்ன செய்வார்கள் ?

    //“அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.”

    ஏன் பேராசிரியர் இப்படிச் சொல்கிறார்? //

  4. Yes it[Exception of Income Tax] is a matter of debt

    //அதற்கு அவருக்கான கூலி 1000 ரூபாய். இந்தக்கூலி அவரது வருமானத்தில் சேராது. அதாவது இந்தக் கூலிக்காக அவர் அரசுக்கு வரி எதுவும் செலுத்துவதில்லை. //

    • Payment for Exam valuation:
      —————————————-

      முதுகலை விடைத்தாள் திருத்த கூலி : 40 papers * Rs12/paper = Rs 480/per day

      பஞசப்படி Da : = rs 220/per day

      பயணப்படி TA = rs 7 * no of km travelling from/to his/her college to valuation center FOR ENTIRE SESSION NOT FOR DAY.[ONE PAYMENT NOT FOR EVERY DAY]

      பஞசப்படி, பயணப்படிகலுக்கு வரி விதிக்க முடியாது.
      ஏன் என்றால் பஞசப்படி, பயணப்படி இரண்டுமே ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த செலவு செய்வது.
      விடைத்தாள் திருத்தும் கூலிக்கு வேண்டுமானால் அவர்களீன் மொத்த ஆண்டு வருமானத்தை பொருத்து வரி விதிக்கலாம்.

  5. முதல் முறை விடைத்தாளை மதிப்பிடு செய்யும் போது வரும் மதிப்பெண்னுக்கும் மறுமதிப்பீடு செய்யும் போது வரும் மதிப்பெண்னுக்கும் இடையே வித்தியாசம் அதிகம் எனில் இரு ஆசிரியருமே CEOவின் விசாரணைக்கு உட்படுத்த படுவார்கள். தவறு செய்தவர்கள் மீண்டும் விடைத்தாளை மதிப்பிடு செய்யும் வேலைக்கு தகுதி நீக்கம் செய்யபடுவார்கள். இது தான் பல்கலைகழகங்களீன் பொதுவான நடைமுறை.

    எனவே முதல் முறை 74 க்கும், மறுமதிப்பீடு செய்யும் போது 04 க்கும் வந்து இருப்பின் அம் மாணவர்
    கீழ் கண்டவருக்கு பதிவு அஞ்சல் மூலம் விளக்கம் கோரலாம்.

    Controller of Examinations,
    Alagappa University ,
    Karaikudi
    Phone : 91-4565- 229330
    Fax : 04565-225624.

    மேலும் மதிப்பெண் 74 க்கு 04 ஆனதற்கு காரணம் ஆசிரியர்களா? இல்லை “பல்கலைகழகத்தால்” கணினியில்” மதிப்பெண் உள்ளீடு செய்யப்படும் போது ஏற்பட்ட தவறா? என்பது விவாதத்துக்கு உரியது.

    //“அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.”

    ஏன் பேராசிரியர் இப்படிச் சொல்கிறார்? இவரும் மறுமதிப்பீட்டிற்குப் போவார். நாளைக்கு இவர்மீது ஏதாவது புகார் வந்தால் யார் காப்பாற்றுவார்? பல்கலைக்கழகமா? மாணவரா?//

    • “Write to the Controller of Examination….”

      — This is usually the response given by rowdy Police Sub-Inspector.
      They will file false case against innocent people and if you question them, rowdy govt employee will say go to the court and get justice.
      While the rowdy govt employee will get paid, innocent person has to spend time and money to prove his innocence.

    • இப் பிரச்சனைக்கு எனக்கு தெரிந்த,நடைமுறையில் சாத்தியம் உள்ள வழியை கூறி உள்ளேன். இதனை ஏற்றுக்கொள்வதும் மறுதலிப்பதும் அவர் அவர் விருப்பம்.

      எங்க தல தோழர் லெனினிடம் சிறப்பான ரஸ்சியன் மொழியை USSR முழுவதும் நடைமுறை படுத்த வேண்டும் என்ற வாதத்தை அவர் தோழர்கள் முன் வைக்கும் போது ஒன்று கூறுவார்.

      “சொர்கத்துக்கு யாரையும் தடியால் அடித்து துரத்த முடியாது ” என்பார். . 🙂

  6. [1]பொதுவாக மொத்த மதிப்பெண் 75 எனில் 30 மதிப்பெண் பெற்றால் தான் மாணவர்கள் தேர்ச்சி பெறுவர். விடைத்தாளை மதிப்பிடு செய்யும் மையயங்களில் 4 Examinerக்கு 1 chief Examiner நியமிக்கபடுவர். chief Examiners , Examiners க்கு கொடுக்கும் ஆலேசனை என்ன என்றால் மதிப்பெண் 23 to 29 வந்தால் 30 மதிப்பெண்க்கு கொண்டு வந்து வீடுங்கள் என்பது தான். ஏன் என்றால் அம் மாணவர் மீண்டும் மறுமதிப்பீடு செய்ய ரூ 750 [not refundable even if the student get more marks] பல்கலைக்கழத்துக்கு செலுத்த வேண்டும் என்ற சுமையை நீக்க தான்.

    [2]இளம் Examiners குறிபாக பெண் ஆசிரியர்கள் மிக்க நேர்மையுடன் ” சார் பேப்பர்ல ஒன்னுமே விசயம் இல்லை… எப்படி சார் 25 ஐ 30 ஆக்குவது என்று chief Examiners இடம் பொறுப்பு உடன் வாதடுவர். “பாஸ் ஆக்க பேப்பர்ல எதாவது extra points இருக்க பாருங்க்கள் மேடம் ” என்று chief Examiners ஆகிய நாங்கள் இளம் Examiners இடம் பணிவுடன் கோருவோம்.

    [3]இரு நிலையீலும் [இளம் Examiners மற்றும் chief Examiners] நான் பணி செய்தமையால் என்னால் இன்னும் பல விசங்களை Exam valuation பற்றி கூற முடியும் .

    [4] தேர்வில் தேர்ச்சி பெறாத எனது மாணவர்களுக்கு மறு மதிப்பீடு கோருவதை தவிர்க்கவே ஆலோசனை கூறுவேன்.

    காரணம்

    [a]மறு மதிப்பீடுக்கு ஆகும் கட்டணம் rs 750[not refundable even if the student get more marks/pass marks in revaluation ]

    [b] மறு மதிப்பீடு மதிப்பெண் வருவதற்க்கு ஆகும் கால தாமதம்.

    [c] மீண்டும் அத் தேர்வைக்கு[applying as aerier exam only students have to pay Rs100+] நல்ல முறையில் படித்தால் just 30 Marks க்கு பதில் மிகவும் சிறபான மதிப்பெண் பெற முடியும் எனற காரணம் தானே தவீர வினவு கூறுவது போல ஆசிரியார்களீன் “அதிகார வெறியில் ஆட்டம்” அல்ல.

    //கல்வித் துறையில் கூட மாணவர்களுக்கு குறைந்தபட்ச ஜனநாயக உரிமை இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. மறு மதிப்பீடு கேட்டாலே பேராசிரியர்களும், நிர்வாகமும் ஆண்டைகள் போல நடந்து கொள்ளுகின்றார்கள். அதிகார வெறியில் ஆட்டம் போடும் இந்தஆண்டைகளுக்கு மாணவர்கள் தக்க பாடம் கற்பித்தால்தான் போதையை தெளிய வைக்க முடியும். செய்வார்களா?//

    • \\தேர்வில் தேர்ச்சி பெறாத எனது மாணவர்களுக்கு மறு மதிப்பீடு கோருவதை தவிர்க்கவே ஆலோசனை கூறுவேன்//

      கடந்த ஆண்டு இரண்டாம் பருவத்தேர்வு முடிவில் இரண்டு தாள்களில் எனது உறவுக்கார மாணவி தோல்வியுற்றதாக மதிப்பெண்கள் வந்தன.நன்கு எழுதியதாக அவள் சொன்னதையடுத்து சென்னை பல்கலை கழகத்திற்கு நானும் உடன் சென்று மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தோம்.மறுமதிப்பீடு முடிவுகள் வந்தபோது இரண்டு தாள்களிலுமே அவள் வெற்றி பெற்றிருந்தாள்..அவளது வகுப்பில் உடன் பயிலும் இன்னும் சில மாணவியரும் அதே சமயத்தில் விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றார்கள்

      • நன்று திப்பு.

        மறு மதிப்பீடு கோருவதை தவிர்க்க நான் கூறிய காரணங்களை கவனித்திர்களா ?

        மதிபெண் கிடைத்தது சரி. மறு மதிப்பீடு கட்ட ணம் திரும்ப கிடைத்ததா? தவறு மாணவர் இடம் இல்லாத போது மறு மதிப்பீடு கட்ட ணம் திரும்ப கிடைக்க வேண்டும் அல்லவா ?

        ஒரு பருவத்துக்கு[அனைத்து பாடத்துக்கும்] உரிய தேர்வு கட்டணத்தை rs 750 ஒரே ஒரு பாடத்துக்கும் மறு மதிப்பீடுக்காக செலுத்த எத்தனை மாணவர்களால் முடியும் ?

        மேலும் மறு மதிப்பீடு என்னும் மாணவர்களுக்கு உரிய வாய்ப்பை நான் எதிர்க்கவில்லையே !

      • திப்பு,

        பெரும்பாலும் மறு மதிப்பீடு மதிபெண் வர தாமதம் ஆகும் நீலையீல் அடுத்த பருவத்துக்கு உரிய தேர்வு கட்டணத்தை செலுத்த இறுதி நாளும் நெருங்கும் போது மாணவர்களுக்கு ஏற்படும் பதட்டம் மிகவும் கவலைகுரிய விசயம். மாணவர்கள் மீண்டும் அத் தேர்வுக்கும் arrrier [மறு மதிப்பீடு செய்த ]தேர்வு கட்டணத்தை செலுத்தும் நிலைக்கு தள்ளபடும் அவலத்தை பார்க்கிறேம்.

      • திப்பு ,

        தேர்வில் தேர்ச்சி பெறாத எனது மாணவர்களுக்கு மறு மதிப்பீடு கோருவதை தவிர்க்க நான் கூறிய காரணங்கள் பொதுவானவை தான்.

        விதிவிலக்காக மறு மதிப்பீடு செய்ய ஆலோசனை கூறுவதும் உண்டு.

        [1] அத் தேர்வில் தேர்ச்சி பெறாமையால் மட்டும் சில சமையங்களில் மாணவர்களுக்கு Distinction வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டால்,

        [2] அத் தேர்வில் தேர்ச்சி பெறாமையால் மட்டும் சில சமையங்களில் மாணவர்களுக்கு First class வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டால்,

        [3] இறுதி பருவ தேர்வு என்றால் ,

        மட்டுமே மறு மதிப்பீடு செய்ய ஆலோசனை கூறுவேன்.

        குறிப்பு :

        ***Distinction பெறுவதர்க்கு அனைத்து பாடங்களிலும் முதல் முறையே “first attempt” தேர்ச்சி பெற்றும் ,அனைத்து பாடங்களிலும் 60% க்கு குறையாமலும் , சராசரி 75%க்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

        ***First class பெறுவதர்க்கு அனைத்து பாடங்களிலும் “முதல் முறையே ” first attempt” தேர்ச்சி பெற்றும் , சராசரி 60%க்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

  7. வினவு ,

    நீங்கள் நினைப்பது போல 99% ஆசிரியர்கள் ஒன்றும் ‘Rules RangaChari” கலே இல்லை அதிகார வெறியில் ஆட்டம் போடும் இந்தஆண்டைகலே இல்லை. ஒரு சில ஆசிரியர்கள் 1% மீது வேறு பல குற்றச்சாட்டுகளும் தவறுகளும்[phd guide money scandal etc] இருக்க, ஆசிரியர்களீன் வரம்புக்கு வராத விசங்களில் அவர்களை குற்றம் சுமத்துவது தர்க்க படியும் ,நியாய படியும் தவறு.

    அன்புடன் ,
    சரவணன்

    • Again usual tactics of corrupt and arrogant govt employees.
      If you ask about corruption, usual reply not all are like that only few are that way.
      But we all know what is the status of our country.

    • ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள்

      [1]M.Phil,P.hd போன்ற ஆய்வுகளில் guide ஆக உள்ள ஒரு சில ஆசிரியர்கள் மாணவர்களிடம் பண ,பாலியல் பொறுக்கிகளாக நடந்து கொள்வது.

      [2]பல்கலைக்கழகம்,AICTE சார்பாக கல்லூரிகளுக்கு inspection வரும் ஆசிரியர்கள் கல்லூரி உரிமையாளர்களீடம் கவர்,பெட்டி கையுட்டாக வாங்குவது

      [3]பல்கலைக்கழகங்களில்,அரசு கல்லூரிகளில் வேலை செய்யும் ஒரு சில ஆசிரியர்கள் மாணவர்கலுக்கு பாடம் நடத்தாமல் நிர்வாக பணிகளில் ஈடுபடுவது.

      [4] M.Phil,P.hd போன்ற ஆய்வுகளில் guide ஆக உள்ள “பல” ஆசிரியர்கள் ஆய்வின் தரத்தை செழுமை படுத்த மாணவர்கலுக்கு உதவாமல் மேலோட்டமான ஆய்வுகளையும் copy அடிக்கபட்ட ஆய்வுகளையும் ஊக்குவிப்பது

      போன்ற விசயங்களில் வினவு கவனம் செலுத்தி[அவலங்களை வெளிப்படுத்தி] செழுமையான கட்டுரைகள் எழுதி தமிழகத்தின் கல்வி திரனை மோம்படுத்த உதவலாம்.

  8. எங்கள் மாணவர்கள் phd போன்ற உயர்ந்த படிப்புகளை முடிதபின்பும் ஆசிரியர்களை [எங்களை]சந்திக்க [இணைய்த்திலும், தொலைபேசியீலும்,நேரிலும்] முனைவதும், நாங்கள் எம் ஆசிரியர்களை சந்தீக்க அவர்களை தேடிசெல்வதும் எதன் அடிபடையில் ? கல்லூரீயில் படிக்கும் போது சுமாரக படிக்கும்,குரும்பு செய்யும் மாணவ்ர்கள் பின்பு எங்களை அடையாறு,சைதை போன்ற பொது இடங்களில் ஆசிரியர்கள்[நாங்கள்] “பெக்குகள்” போல ரோட்டி நடந்து செல்லும் போது அவர்களே வந்து அன்புடனும்,பணிவுடனும் நலம் விசாரிக்கும் மர்மம் என்ன? அப்போது எமக்கு நீனைவில் இல்லா மாணவர்களை ‘வாங்க’ என்று நாங்கள் அழைத்தால் ” சார் நான் அதே கார்திக் தான் …. வாட போட னே கூப்பிடுங்க” என்று உரிமை கொண்டாடும் psychology எத்தகையது? மாணவர்கள் எடுக்கும் மதிபெண்கள் அவர்கள் IQ சார்ந்தது. ஆனால் அவர்கள் வாழ்வில் சாதிப்பது அவ்ர்களீன் EQ[emotional quantity] சார்ந்தது. அதிக மதிபெண் எடுக்கும் மாணவர்கள் எங்களை போன்றே பாவப்பட்ட ஆசிரியர் ஆவதையும் ,குறைந்த மதிபெண் எடுக்கும் மாணவர்கள் அவர்களீன் EQ காரணமாக வாழ்வில் சாதிப்பதையும் அனுபவ ரீதியில் நாங்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேம்.

    //அதிக அளவில் மதிப்பெண் எடுக்காத கல்லூரி மாணவர்களைப் பற்றி பேராசிரியர்களால் கூறப்படும் நக்கலான வசனங்கள் ஏராளம். ஒரு மாணவன் அதிக அளவில் மதிப்பெண் எடுக்காததற்குக் காரணம் கல்விமுறையும் பேராசிரியர்கள் பாடம் நடத்தும் லட்சணமும்தானே தவிர மாணவனல்ல. இவர்கள் பேராசிரியர்களா? அல்லது பேராசிறியர்களா?//

  9. திரு.சரவணன் உங்களுக்கு இங்கு[வினவில்] பதிவிடும் கெ.செந்தில்குமரனை தெரியுமா?

      • சரவணன்,
        உங்களுடைய பின்னுட்டங்கள் அவரது பாணியில்[சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வது] இருப்பதால் கேட்டேன்.அவ்வளவு மொக்கை கவிதையை மேற்கோள் காட்டுகிறீர்கள் என்றால் என் சந்தேகம் அதிகமாகிவிட்டது.

        • எனக்கு கூட உங்கள் கருத்துக்களை படிக்கும் போது வியாசன்,தாயுமானவன் போன்றவர்கள் நீனைவுக்கு வருகின்றனர். என்ன செய்ய ?

  10. //”ஒரு மாணவன் அதிக அளவில் மதிப்பெண் எடுக்காததற்குக் காரணம் கல்விமுறையும் பேராசிரியர்கள் பாடம் நடத்தும் லட்சணமும்தானே தவிர மாணவனல்ல.” //
    ஒரு மாணவன் குறைந்த மதிப்பெண் பெறுவதிற்கு மாணவன் காரணமேயல்ல என்றும் பழியை கல்விமுறை மற்றும் பேராசிரியர்கள் மீது மட்டும் போடுவதன் மூலமும் வினவு தனது அரைவேக்காட்டுத்தனத்தை இன்னுமொருமுறை நிரூபித்துள்ளது.

    • இனியன்,

      ஒரு மாணவன் அதிக அளவில் மதிப்பெண் எடுக்காததற்கு பல காரணங்கள் இருப்பினும் , ஆசிரியரும் ஒரு காரணம் தான்.

      • இதனை எதற்காக எனக்குக் கூறுகிறீர்கள்?
        குறைந்த மதிப்பெண் பெறுவதில் ஆசிரியர்களிற்குப் பங்கில்லை என்று நான் கூறவில்லையே. அதேநேரம் குறைந்த மதிப்பெண் பெறுவதில் ஒரு மாணவனிற்கு எந்தப்பங்குமில்லை என்று வினவு கூறுவது கேலிக்குரியது.

        • Yes I agree with you sir.

          //குறைந்த மதிப்பெண் பெறுவதில் ஒரு மாணவனிற்கு எந்தப்பங்குமில்லை என்று வினவு கூறுவது கேலிக்குரியது.//

  11. இந்த பேராசிரியர்கள் எனப்படும் பொறுக்கிகளிடம் பிஎச்டி மற்றும் எம்பில் ஆய்வு மாணவர்கள் படும் பாடு இருக்கிறதே அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஓரிரு மாணவர்கள் தற்கொலை வரை கூட போவதுண்டு. இதை பற்றியெல்லாம் அலசி ஆராய்ந்து ஒரு தொடர் கட்டுரையை வினவு வெளியிடலாம். மனித உரிமைகள் என்றால் என்ன என்று கேட்கும் துறை தான் ஆராய்ச்சி துறை. இதை பற்றியும் கொஞம் ஆராய்ந்து எழுதுங்கள்.

    • yes I accept you allegation!

      phd guide செய்யும் சில ஆசிரியர்கள் பண ,பாலியல் பொறுக்கிகளாக உள்ளனர்.

  12. தேர்வில் தோல்வியுற்றால் தற்கொலை, மதிப்பெண் குறைந்தால் தற்கொலை, ஆசிரியர் திட்டினால் தற்கொலை, இதற்கெல்லாம் காரணம் தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைகளும், பெற்றோரின் அதீத ஆசையும் தான். தற்போதைய கல்வி முறையில் மனனம் செய்யும் மாணவர்கள் மட்டும் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும் என்று உள்ளது.

    நான் படிக்கும் காலத்தில் முதல் மூன்று ரேன்க் வாங்கும் பார்ப்பன நண்பர்களிடம் பாடங்கள் குறித்த சந்தேகங்களை நான் கேட்கும்போதெல்லாம் அவர்கள் தங்களுக்கும் அது புரியவில்லை அதனால் அந்த பதில் மொத்தத்தையும் மனப்பாடம் செய்து தேர்வில் ஒப்பித்து விட வேண்டியது தான் என்று பதிலளிப்பார்கள். இந்த மாணவர்கள் தான் அந்த பாடத்தில் 99, 100 என மதிப்பெண் வாங்குவார்கள்.

    ஆசிரியர்களும், ஒரு கருத்தை சொந்த வாக்கியத்தில் எழுதும் மாணவர்களை ஊக்குவிக்காமல் புத்தகத்தில் உள்ள வாக்கியங்களை புள்ளி, அரைபுள்ளி உட்பட அப்படியே ஜெராக்ஸ் செய்யும் மாணவர்களுக்கு தான் முதல் மதிப்பெண் வழங்குகிறார்கள். இங்கு தான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

  13. வாழ்த்துகள் வினவு .

    இக் கட்டுரை மிகவும் மேலோட்டமாக இருந்தாலும் , மணவர்களின் வலிகுரலாக ஒலித்ததற்கு வினாவுக்கு நன்றி.

    கல்வி சார் பிரச்சனைகளை மேலும் நன்கு ஆய்ந்து கட்டுரைகளை எழுதுங்கள்.

  14. Hi Saravanan,
    What you are referring kind of professor or lecturers are out dated. Now a days finding 1% of such people are very difficult. So there are high chance of this incident might have happened. Someone has to bring this kind of issues to public (students). Without their protest no change will happen.
    I heard that for 10th and 12th std student can ask for the answer sheet to verify their marks. Why this is not is place for universities?? Other than student, who else can justify their answers in their papers?
    Even I heard some cases (most of the cases) evaluators are from other subject background and asking them to correct answer paper which are not part of their knowledge (Ex: Physics prof is asked to correct Maths or Biology) then this kind of errors are 100% possible.
    And now days very few people are working with dedication in college and university. You may be part of this group, in that case big salute to you. If people from other group happen to read this at least they can think about it. If that happens then that is a big success for this kind of article.
    Regards
    Balaji S

    • Hello Balaji,

      pls refer my comment 5

      More over in the range of 1% to 5% of students are applying for revaluation.I mean in a college out of 1000 students from 10 to 50 students are applying for revaluation.
      What about the reaming range of 95% to 99% of students those who are satisfied with valuation? What does it mean? Do you think Exam valuation system is fully corrupted?

      In my comment no 5 I show you the simple way how to deal with this problem .Ask the CoE about this issue and ask the CoE to take action about Teacher who commit this mistake.

      //What you are referring kind of professor or lecturers are out dated. Now a days finding 1% of such people are very difficult. So there are high chance of this incident might have happened. Someone has to bring this kind of issues to public (students). Without their protest no change will happen.//

    • This system of asking xerox for the answer sheet is available in most of the universities like Madars Uni,periyar Uni etc.I support revaluation system too.In my comments, am I speaking against these two facilities?

      //heard that for 10th and 12th std student can ask for the answer sheet to verify their marks. Why this is not is place for universities?? Other than student, who else can justify their answers in their papers?//

    • In bioinformatics department there are some papers[perl,c,DBMS etc] related to computer science.In colleges that computer science related papers are handled by computer science teachers.While valuation that bioinformatics subjects are valuated by computer science teachers alone. I hope this is right and have logic.

      Like that the department of physics, Computer science, computer application etc are having applied papers in Math in semester I and II. In colleges Math teachers are handling that math subjects and while valuation too they[math teachers] are ONLY involved.

      Like that for B.Com Computer application course there are some computer papers handled by us[cs teachers] and while valuation we are only involved.

      But the situation what u have explained in your comment I referred below have not happened in my experience.

      //Even I heard some cases (most of the cases) evaluators are from other subject background and asking them to correct answer paper which are not part of their knowledge (Ex: Physics prof is asked to correct Maths or Biology) then this kind of errors are 100% possible.//

    • In a society producing the Teacher(I can not say good or bad teacher) is a matter of chain reaction. I took some [teachers] as role models and following her/him in my profession of teaching along with updating my own skills. In the same manner Our students took some one of us as his/her role model and so forth…..

      Yes we can justify a teacher based on her/his Communication skills and Subject skills. Some times our good communications skills will create negative impact among the students.Some times our high subject matter too create class room session boring.

      So We as a teacher need to adjust our standard of Communication skills and subject content according to the nature of student’s environment.

      In my schooling and colleging , I can not say a single teacher as a bad teacher but I can have several teachers as my role models from my I std to M.Phil.

      I hats off and salute all my beloved Teachers

      //What you are referring kind of professor or lecturers are out dated. And now days very few people are working with dedication in college and university. You may be part of this group, in that case big salute to you. If people from other group happen to read this at least they can think about it. If that happens then that is a big success for this kind of article.//

  15. இந்த பதிவு அதிர்ச்சி அளிக்கிறது. மறுமதிப்பீடுகளில் தோல்வியடையும் மாணவர்கள் பெரும்பாலும் வெற்றி பெறவே வாய்ப்புகள் அதிகம். இந்த மாணவர் பிரச்சினை சற்று வேறாக உள்ளது. இதற்கு தொழில்நுட்பக் காரணங்கள் ஏதும் இல்லையென்றால் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஏனெனில், மாணவர் நிலையில் இருந்து இது ஏற்படுத்தும் மனஉளைச்சல் சாதாரணமானதல்ல. தேர்வுத்தாள் மதிப்பீடு சார்ந்த வேலைகளில் ஆசிரியர்கள் மட்டுமல்லாது கற்பித்தலில் ஈடுபடாத ஊழியர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையில் உண்மையை அறிந்து கொள்ள வேண்டுமானால், சம்பந்தபட்ட மாணவர் தனது விடைத்தாளின் ஒளி பிரதியை கோரி பெற வேண்டும். இதில், எங்கு தவறு நடந்துள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

    விடைத்தாள்களை திருத்தும் தேர்வாளர்கள் அரக்கபரக்க திருத்துகிறார்கள் என்பது உண்மைதான். எனினும், மாணவர்களை வேண்டுமென்றே தோல்வியடைய செய்ய எந்த தேர்வாளரும் விரும்புவதில்லை. தேர்வாளர்களின் இந்த எந்திரன் பாணி திருத்தல் முறைக்கு முதல் காரணம், பெரும்பாலான மாணவர்களின் விடைத்தாள்களில் பொருட்படுத்தும்படியாக எதுவும் இருப்பதில்லை. இது விடைத்தாள்கள் குறித்த பொது முன் அனுமானத்தை ஆசிரியர்களிடம் ஏற்படுத்துகிறது. இரண்டாவது, விடை திருத்தும் பணியை யாரும் மகிழ்ச்சிக்குரியதாக பார்ப்பதில்லை. (ஆனால், அதில் வருகின்ற வருமானத்தை யாரும் இழக்க முன்வருவதில்லை.) மூன்றாவது, ஒவ்வொரு வரியாக படித்துப் பார்த்து திருத்துவது தொடக்கநிலை தேர்வாளருக்கு மட்டுமே அடிப்படையான தேவை. விடைத்தாள்கள் ஊடாக கிடைக்கும் உளவியலை உள்வாங்கிய பிறகு ஆழ்ந்த அலசல் தேவையில்லாததாகிறது. ஆசிரியராக பரிணமிக்க முடியாத ஒருவர் கூட தேர்ந்த தேர்வாளராக உருப்பெற முடியும்.

    பழைய தலைமுறை தேர்வாளர்கள் மதிப்பெண் கஞ்சர்களாக இருந்துள்ளார்கள். புதியவர்கள் அப்படியில்லை. ஒரு முறை எனக்கு பல்கலைக்கழகம் சார்பாக வந்த பொது விடைக் குறிப்பில் (answer key) சற்று நீக்குபோக்காக மதிப்பெண்கள் வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இன்று தாராளமாக மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. மதிப்பெண்கள் பெற்று வெளியே வருபவர்கள் அதற்குரிய இயல்புடன் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இன்று பரவலாக எழுந்துள்ளது.

    • பெரும்பாலும் பேராசியா்கள் படித்துத்திருத்துவதில்லை. நல்லா எழுதுபவனுக்கும், நல்லா எழுதாதவனுக்கும் ஒரே மாதிாி மதிப்பெண்களை வழங்குவார்கள். சராசாி மதிப்பீடு செய்வர் மதிப்பீ்ட்டுக்கான கால அளவு 10 முதல் 1 வரை அடுத்து 2 முதல் 5 வரை ஆனால் ஒரு மணி நேரத்தில் முடித்துவிட்டுச் சென்றுவிடுவா். Chairman முதலில் போய்விடுவாா். அடுத்து Chief சென்று விடுவாா். பேராசிாியா்கள் இந்த மறுமதிப்பீட்டை தங்களுக்கு வேண்டிய மாணவனுக்கு மதிப்பெண் வழங்கவே பயன்படுத்துகிறாா்கள். மொத்தமான முதல் மதிப்பீட்டில் தங்களுக்கு வேண்டிய மாணவாின் தாளைக் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் மறுமதிப்பீட்டை குறிப்பிட்ட மாணவனைச் செய்யச் செய்து அந்தத்தாளில் அதிக மதிப்பெண் இடுவாா்கள். பேராசிாியா்கள் யோக்கியா்கள் அல்ல. ஆய்வு எழுதிக் கொடுத்துச் சம்பாதிப்பவா்கள் எத்தனை போ் தொியுமா? எம்.ஏக்கு ஒரு ரேட், எம்.பிக்கு ஒரு ரேட் பி.எச்டிக்கு செம காசு.ஒவ்வொரு பேராசியருக்கும் கலெக்டரை விடக் கூடுதல் சம்பளம். 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை சம்பளம். வேலை நேரம் அரசுக்கல்லுாாிகளில் காலை 9.00 மணி முதல் 1 மணி வரை விடுப்பு. ஒரு நாளைக்கு மூன்று 50 நிமிட வகுப்புகளே. அதுவும் அவா்கள் விரும்பினால் தான் வகுப்பு. நீதி நோ்மையைக் கற்றுக்கொடுக்கும் தொழில்தான் லஞ்சம் இன்றைக்குத் தலை விாித்தாடுகிறது. கல்வியில் மாபெரும் ஊழல், பள்ளி ஆசிாியருக்குத் தோ்வு வைத்துத் தகுதியானவரைத் தோ்வு செய்கின்றனா். ஆனால் கல்லுாாி ஆசிாியருக்கு நோ்காணல் மட்டுமே. நோ்காணலில் வெற்றிபெற லஞ்சம். அரசு உதவி பெறும் கல்லுாாிக்கு 25 லட்சம். அரசுக் கல்லுாாிக்கு 20 லட்சம். உயா் கல்வித் துறையில்தான் தமிழ்நாட்டில் மாபெறு் ஊழல். இங்கு செயல்படுகின்ற தொழிற்சங்கங்கள் கேடுகெட்ட பேராசியா்களைக் காப்பாற்ற மட்டுமே. கல்வித்துறை ஊழல்களை அம்பலப்படுத்தியதுண்டா? சி.பி.எம் தொழிற்சங்கம் MUTA கூட கண்டு கொள்வதில்லை. அரசுக்கல்லுாாிச் சங்கங்கள் அரசு கல்லுாாிகளில் பணியாற்றுகின்ற இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கவுரவ விாிவுரையாளா்களுக்காக போராடியதுண்டா? இந்த ஒப்பந்த முறையை நீக்கக் கோாியதே இல்லை. ஓய்வு பெற்ற பேராசியா்களை போராடி மீண்டும் மறுநியமனம் செய்தாா்கள். கவுரவ விாிவுரையாளா்கள் இவா்களுக்கு அடிமை வேலை செய்ய மட்டுமே. கவுரவ விாிவுரையாளா்களைச் சங்கத்தில் கூட சோ்க்க மாட்டாா்கள். கல்விக்காகவும், சமூகத்துக்காகவும் அ.மாா்க்ஸ், கல்யாணி, கோச்சடை, கோ.கேசவன், மீரா, திருமாவளவன் போன்ற பேராசியா்கள் போராடினாா்கள். இன்றைக்கு எந்தப் பேராசிாியரையாவது சுட்டிக்காட்ட முடியுமா?

      • ஒரு பக்கம் ஆசிரியர்கள் மறுமதிப்பீட்டை ஆதரிக்கவில்லை என்று வினவின் குற்றச்சாட்டு !

        மறுபக்கம் “மறுமதிப்பீட்டை குறிப்பிட்ட மாணவனைச் செய்யச் செய்து அந்தத்தாளில் அதிக மதிப்பெண் இடுவாா்கள்” என்று தமிழ் அவர்களீன் குற்றச்சாட்டும்.!

        தமிழ் , மறுமதிப்பீட்டுக்கு செல்லும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.பெரும்பாலான சுய நிதி கல்லூரி ஆசிரியர்கள் எங்கள் பணிக் கடமை காரணமாக மறுமதிப்பீட்டுக்கு செல்லும் வாய்ப்பை புறகணிப்பு செய்துவிடுவோம்.

        வினவு ://மறு மதிப்பீடு கேட்டாலே பேராசிரியர்களும், நிர்வாகமும் ஆண்டைகள் போல நடந்து கொள்ளுகின்றார்கள்.

        தமிழ்://ஆனால் மறுமதிப்பீட்டை குறிப்பிட்ட மாணவனைச் செய்யச் செய்து அந்தத்தாளில் அதிக மதிப்பெண் இடுவாா்கள்.

      • தமிழ் ,

        UGC NET OR SLET OR phd before ஜூலை 2009 ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசுக் கல்லுாாி பணிக்கு ஆசிரியர் தகுதி பெறுவர்! ஊழலுக்கு வழிவகுக்கும் நோ்காணல் தவிர்க்கபட வேண்டும் என்பதே என் எண்ணம்.

        //நீதி நோ்மையைக் கற்றுக்கொடுக்கும் தொழில்தான் லஞ்சம் இன்றைக்குத் தலை விாித்தாடுகிறது. கல்வியில் மாபெரும் ஊழல், பள்ளி ஆசிாியருக்குத் தோ்வு வைத்துத் தகுதியானவரைத் தோ்வு செய்கின்றனா். ஆனால் கல்லுாாி ஆசிாியருக்கு நோ்காணல் மட்டுமே. நோ்காணலில் வெற்றிபெற லஞ்சம். அரசு உதவி பெறும் கல்லுாாிக்கு 25 லட்சம். அரசுக் கல்லுாாிக்கு 20 லட்சம். உயா் கல்வித் துறையில்தான் தமிழ்நாட்டில் மாபெறு் ஊழல்//

      • is it true Tamil? No Tamil!

        Professor:
        Rs. 37400-67000 (Pay Band – 4) with academic grade pay of Rs. 10000 (minimum starting salary at Rs. 43000).

        Associate Professor:
        Rs. 37400-67000 (Pay Band – 4) with academic grade pay of Rs. 9000.

        Assistant Professor :
        Rs. 15600-39100 (Pay Band – 3) with academic grade pay of Rs. 6000.

        More over a gov professor rank is only equivalent to Asst.Collector only not equivalent to collector.

        //ஒவ்வொரு பேராசியருக்கும் கலெக்டரை விடக் கூடுதல் சம்பளம். 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை சம்பளம்

      • [1]Tamil, Miss Jaya Gov is only favorable for guest lecturers right from the beginning because of ‘CAST CUTTING’ measures.Her Gov is violating the court orders even in the recruitment of gust lecturer. Court strictly says that do not recruit gust lecturers but says only permanent lecturers.

        [2] If TN gov is recruiting permanent lecturers than it is good. If not at least we can satisfy that more than 2000 guest lecturers[people] are getting a simple job in this poor cost cutting economic environment! i hope you are not against the services of these >2000 guest lecturers.

        [3] Fighting for making these guest lecturers to be permanent lecturers in gov colleges will affect others who[like me] are working in private colleges with NET or SLET qualification. If guest lecturers are also qualified with NET or SLET than they can also participate in the TRB recruitment process that is based on BC/MBC/SC/ST quota system. Other wise if TRB directly recruit the guest lecturers in to the permanent lecturers than that will violate the quota system and also do injustice to the private college lecturers.

        [4]Fighting for dignified consolidated salary around Rs 30,000 for guest lecturers is a good move in this forth coming academic year2014-15.

        [5]Fighting for their[guest lecturers] rights is only in their hands!Yes they should only start the struggle by organizing them as a “guest lecturers union”.I like to close this comment with a proverb that is taken from Miss Bama’s Novel preface “Karuku”.

        “பன மரத்துல ஏறுறவன கை எட்டுற மட்டுந்தான் தூக்கிவிட முடியும்”

        //அரசுக்கல்லுாாிச் சங்கங்கள் அரசு கல்லுாாிகளில் பணியாற்றுகின்ற இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கவுரவ விாிவுரையாளா்களுக்காக போராடியதுண்டா? இந்த ஒப்பந்த முறையை நீக்கக் கோாியதே இல்லை. ஓய்வு பெற்ற பேராசியா்களை போராடி மீண்டும் மறுநியமனம் செய்தாா்கள். கவுரவ விாிவுரையாளா்கள் இவா்களுக்கு அடிமை வேலை செய்ய மட்டுமே. கவுரவ விாிவுரையாளா்களைச் சங்கத்தில் கூட சோ்க்க மாட்டாா்கள்//

      • [1]”Ganapathy was born to Gopal Rao at Beerpur village in Sarangapur mandal in Karimnagar district of Andhra Pradesh. He is a science graduate and also hold a B.Ed. degree. He worked as teacher in Karimnagar district but deserted his job to pursue higher education in Warangal.”

        [2]”Ganapathy is one of the most wanted persons by the Indian security forces for his role in several naxal activities. National Investigation Agency has announced an award of INR 1,500,000 for any information leading to his arrest”

        தமிழ் ,

        இவர்[Ganapathy] யாருங்கள் ?
        இவர் யாருக்காக போராடுகிறார் ?
        ஏன் அரசு இவரை கொல்ல “கொலை வெறியுடன்” அலைகின்றது?

        //கல்விக்காகவும், சமூகத்துக்காகவும் அ.மாா்க்ஸ், கல்யாணி, கோச்சடை, கோ.கேசவன், மீரா, திருமாவளவன் போன்ற பேராசியா்கள் போராடினாா்கள். இன்றைக்கு எந்தப் பேராசிாியரையாவது சுட்டிக்காட்ட முடியுமா?//

  16. இன்று வரை மொத்தம் 44 மறுமொழிகளில் கிட்டதட்ட 25 சரவணன் என்ற செந்தில்குமார் என்ற 118 பெயருடையவரால் இடப்பட்டிருக்கிறது. இவரை எதற்காக இப்படி பொங்கல் வைக்க அனுமதிக்க வேண்டும்?

    மறுமொழிகள் பக்கத்தில் கமெண்ட் போடாமல் பலர் வாதம்- எதிர் வாதங்களிலிருந்து கற்றுக்கொள்ள முடியும், தங்களது தெளிவை பெற முடியும். இவர் இப்படி பொங்கல் வைப்பதால் மறுமொழிகளின் பக்கமே வராமல் ஓட வேண்டியிருக்கிறது.

    வினவு தயவு செய்து எங்களை காப்பாற்றுங்கள்.

    • “செந்தில்குமார் என்ற 118 பெயருடையர் நான் இல்லை” என்று எவ்வளவு கூறினாலும் உங்களால் ஏற்றக முடியவில்லை. சரி அவர்தான் நான் என்று ஏற்றுக்கொள்ளவதால் ஏற்றப்படும் நடைமுறை சிக்கலை நினைத்து பாருங்கள்.

      புவிமைந்தன் என்பவர் கீழ் கண்ட கேள்வியை நேற்று செந்தில்குமார் இடம் கேட்டு உள்ளார் !

      ” செந்தில்குமரன், ஏகாதிபத்திய எதிர்ப்புத் தேசிய விடுதலைப் புரட்சியை நீங்கள் வெறுமனே வால்மார்ட்டுக்கு எதிரான போராட்டமாகச் சுருக்கி விட்டீர்கள். நல்லது, உங்கள் வாதப்படியே வருவோம். வால்மார்ட்டுக்கு எதிராகத் தமிழ் தேசிய முதலாளிகளுடன் இணைந்து போராடும் பாட்டாளி வர்க்கம் எந்தத் திட்டத்துடன் அதில் இணைந்து போராடும். தேசிய இன முதலாளிகள் வைக்கும் திட்டத்தின் கீழ் இணைந்து போராடுமா அல்லது பாட்டாளி வர்க்கம் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் ஒரு திட்டத்தை வைத்து அதன் கீழ் தேசிய முதலாளிகளை இணைத்துப் போராடுமா? இதுதான் எனது கேள்வி.”

      உங்களுக்கு புரிகிறதா ஆணி ? எனக்கு என் அறிவுக்கு ஏதும் புரியவில்லை.

      புவிமைந்தன் மற்றும் செந்தில்குமார் இடையே நடை பெறும் ஆழந்த விவாதத்தில் எனக்கு புரியாத விசயங்கள் பல இருக்க நான் எப்படி செந்தில்குமார் என்று ஒப்புக்கொண்டு பதில் அளிப்பது ?

      மேலும் பொங்கல் வைக்க ஆணிக்கு ஏதும் தடை இல்லையே !

      • யப்பா என்னால உங்க கிட்ட பேச முடியாதுப்பா.. சாமி.
        உங்கள பத்தி கமெண்ட் போடும் போதே எப்படி உளறியிருகேன் பாருங்க. பாத்து கொஞ்சம் தயவு பண்ணுங்க, ப்ளீஸ்.

    • உங்களால புவிமைந்தன் கூறிய கீழ் கண்ட விசயங்களை உதாரணத்துடன் சிந்திக்க முடியுதா ஆணி ?

      [1]ஏகாதிபத்தியம் யாரு ?
      [2]தமிழ் தேசிய முதலாளிகள் யாரு ?
      [3]பாட்டாளி வர்க்கம் யாரு ?
      [4]தேசிய இன முதலாளிகள் வைக்கும் திட்டம் அப்படினா என்ன ?
      [5]பாட்டாளி வர்க்கம் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் ஒரு திட்டம் அப்படினா என்ன ?

      நீங்க சொல்லிக் கொடுத்திங்கனா நானும் “செந்தில்குமாரா” மாறி புவிமைந்தனுக்கு பதில் சொல்ல முடியும்

    • நீங்க வேர ஆணி எவ்வளவு கமெண்ட்ஸ் வினவுக்கு அனுப்பினேன் தெரியுமா ? அதுல கொஞ்சம் தான் வினவுகாரர் வெளியிட்டார்.

      என்னோட கமெண்ட் 5ஐ வெளியீட 1 day வினவுகாரர் எடுத்துக் கொண்டார் ஆணி !

      மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு ஆணி !

      //இவரை எதற்காக இப்படி பொங்கல் வைக்க அனுமதிக்க வேண்டும்?

  17. செந்தில் குமரன் எதுக்கு இப்படி பேர மாத்திவச்சுகிட்டு வந்து இருக்கார்னு இப்பதான் புரியுது.தனக்கு தானே பில்டப் கொடுக்கதான்.சும்மா சொல்ல கூடாது நல்லாவே பில்டப் கொடுக்குறார்.நடக்கட்டும் நடக்கட்டும்.

Leave a Reply to Saravanan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க