privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகுறி சொல்ல ஜக்கம்மா வந்திருக்கேன், வெளியே வாம்மா !

குறி சொல்ல ஜக்கம்மா வந்திருக்கேன், வெளியே வாம்மா !

-

“மறுகாலனியாக்கத்துக்கான போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம் ! உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசமைப்பைக் கட்டியெழுப்புவோம் ! கொலைகார மோடி தலைமையிலான பார்ப்பன பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டியடிப்போம் !” என்கிற தலைப்பில் புரட்சிகர அமைப்புகள் நடத்திவரும் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சார இயக்கத்தில் ‘பெண்கள் விடுதலை முன்னணி’ பல்வேறு வடிவங்களில் ரயில், பேருந்து, குடியிருப்பு என்று தனது பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது.

பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக கடந்த 12-ம் தேதி மாலை பெண்கள் விடுதலை முன்னணியும், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியும் இணைந்து, மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவிலும், அதைச் சுற்றியுள்ள பல்வேறு தெருக்களிலும் வீடு வீடாகச் சென்று தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

தமிழக மக்களிடம் குறிகேட்பதும், அந்த குறி பலிக்கும் என்று நம்பிக்கை வைப்பதும் ஒரு வகையான மூடநம்பிக்கையாக நிலவி வருகிறது. அந்த மூடநம்பிக்கையை ஒத்தது தான், இந்த போலி ஜனநாயக தேர்தலில் வாக்களிப்பதும். எனவே தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்திற்கு குறி கூறுவதையே பிரதான வடிவமாக எடுத்துக்கொண்டோம். குறி கூறுபவர் போல ஒரு பெண் தோழர் வேடமிட்டுக் கொண்டு ஒவ்வொரு வீட்டிற்கு முன்பும் சென்று, ஜக்கம்மா வந்திருக்கேன் வெளியே வாம்மா என்றழைத்ததும், வீட்டிற்குள்ளிருப்பவர்கள் என்ன இது பகல் நேரத்தில் ஜக்கம்மாவா என்று வாசலில் வந்து நிற்கின்றனர்.

“கேட்டுக்கம்மா, உங்க குடும்பத்துல யாராவது ஒட்டுப்போட்டீங்கன்னா, குடிக்கிற தண்ணியை காசு கொடுத்து தான் வாங்கணும். அதுக்கு மட்டும் மாசம் 1000 ரூபாயை எடுத்து வைக்கணும். பிள்ளைகளை படிக்க வைக்கணும்னா லட்சக்கணக்கில பணத்தைக் கொட்டணும். ஊருக்குள்ள ரேசன் கடை இருந்த இடமே தெரியாம போயிரும். அரசு ஆஸ்பத்திரி இருக்காது. நாட்டுல நடக்கக்கூடாதது எல்லாம் நடக்கும். ஓட்டுப் போடுறது உனக்கு மட்டுமில்ல இந்த ஊருக்கே ஆகாதும்மா. ஜக்கம்மா எச்சரிக்கும்போதே முழிச்சிக்க, ஜெய் ஜக்கம்மா” என்று போலி ஜனநாயகத் தேர்தலை அம்பலப்படுத்தி ஜக்கம்மா குறி கூறி முடித்ததும், கூடி நிற்கும் பெண்கள், “யாருக்கு ஓட்டுப்போட்டாலும் எதுவும் நடக்காதுன்னு தெரியும்மா, ஆனா ஒட்டுப்போட்டா இவ்வளவு பிரச்சினைகள் வரும்னு இப்பதாம்மா தெரியுது” என்று ஆச்சரியப்பட்டு உண்மைகளை ஆமோதித்து ஏற்றனர்.

சில இடங்களில் “ஓட்டுப்போடலைன்னா செத்ததுக்கு சமம்னு சொல்றாங்களேம்மா” என்றனர். உடனே ஜக்கம்மாவும், தோழர்களும் ஓட்டுப்போடுறது தான் தற்கொலைக்கு சமம் என்றும், ஏன் ஓட்டுப்போடக்கூடாது என்றும் விரிவாக விளக்கிக்கூறினர். இவ்வாறு தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மக்களின், நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய உண்மைகளை குறியின் மூலம் கூறிய பிறகு தெருவின் முனையில் பிரச்சாரத்தின் நோக்கத்தை விளக்கி இறுதியாக தோழர்கள் சற்று நேரம் பேசுவார்கள்.

அவ்வாறு பேசும் போது, “இந்த பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை, கழிவறை, பள்ளிக்கூடம், விளையாட்டுத் திடல் என்று அனைத்தும் எப்படி கிடைத்தது?எதுவும் ஓட்டுப்போட்டதால் கிடைக்கவில்லை என்பது உண்மை. மாறாக பகுதி மக்களும் பு.மா.இ.மு, பெ.வி.மு தோழர்களும் போராடியதால் இவற்றை நாம் பெற்றிருக்கிறோம். எனவே ஒட்டுப்போட்டதால் பெற்றதை விட நாம் இழந்தது தான் அதிகம் என்பதை நீங்களே உங்களுடைய சொந்த அனுபவத்தின் மூலம் அறிந்திருப்பீர்கள்.

குடிக்கிற தண்ணீரைக்கூட பல போராட்டங்களுக்கு பிறகு தான் நம்மால் பெற முடிந்தது. எனவே ஓட்டுப்போட்டால் எதையும் பெற முடியாது. மாறாக, போராடினால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்பதற்கு நாமே நல்ல உதாரணமாக இருக்கிறோம். எனவே இந்த அதிகாரமற்ற போலி ஜனநாயகத் தேர்தலில் வாக்களித்து பெற்ற உரிமைகளையும் பறிகொடுக்கப் போகிறீர்களா, அல்லது புறக்கணிக்கப்போகிறீர்களா? 100, 200 என்று வாங்கிக்கொண்டு மொத்த நாட்டையும் கொள்ளையடிக்க அணுமதிக்கப்போகிறீர்களா, அல்லது தேர்தலை புறக்கணித்து நாட்டைக்காப்பாற்றப் போகிறீர்களா?” என்று விளக்கிப்பேசியதும் கூடியிருந்த மக்கள் குறிப்பாக பெண்கள், “இதுவரை போட்டுட்டோம்பா, இந்த முறை கண்டிப்பா போடமாட்டோம்” என்றனர்.

மக்களிடம் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை இவ்வாறு புதிய வடிவத்தில் எடுத்துச் சென்றது நல்ல வரவேற்பை பெற்றது, கவனத்தையும் ஈர்த்தது. இந்த தேர்தல் முறையின் மீது மக்களுக்கு துளியும் நம்பிக்கையோ, மதிப்பு மரியாதையோ இல்லை என்பது நாம் அறிந்த ஒன்று தான். எனினும், ஆவி எழுப்புதல் கூட்டங்களை போல இந்த போலி ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை எழுப்பும் வேலைகளை ஆளும் வர்க்கம் முக்கி முக்கி செய்து வருகிறது. ஆனால் மக்களின் வெறுப்பு மேலும் அதிகரித்திருக்கிறது என்பதை தான் இந்த பிரச்சார அனுபவம் உணர்த்துகிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை.

  1. ஓட்டுப் போடாவிட்டால் நீங்கள் கூறும் அத்தனை பிரச்சனைகளும் (//குடிக்கிற தண்ணியை காசு கொடுத்து தான் வாங்கணும். அதுக்கு மட்டும் மாசம் 1000 ரூபாயை எடுத்து வைக்கணும். பிள்ளைகளை படிக்க வைக்கணும்னா லட்சக்கணக்கில பணத்தைக் கொட்டணும். ….//) இல்லாது போய்விடுமா?

    நீங்கள் கூறும் புரட்சிக்கு யாரெல்லாம் தலைமை தாங்கப் போகிறார்கள்? அவர்களது தகுதி என்ன?

    • ///தலைமை தாங்கப் போகிறார்கள்? அவர்களது தகுதி என்ன?///

      உழைக்கும் மக்களும், காலங்காலமாக ஒடுக்கப்படும் மக்களும் இழப்பதற்கு ஏதுமற்றவர்களும், இந்த சமூக அமைப்பு இனி மேலும் நீடித்திருக்க முடியாது – அனுமதிக்க கூடாது – என்பதை உணர்ந்தவர்களும் தலைமை தாங்குவார்கள்.

    • //நீங்கள் கூறும் புரட்சிக்கு யாரெல்லாம் தலைமை தாங்கப் போகிறார்கள்? //
      கம்யூனிஸ்டுகள்.

      //அவர்களது தகுதி என்ன?//
      வர்க்க உணர்வு

    • தகுதி என்னன்னு தெரிந்துவிட்டால் உடனே வந்து கலந்துக்குவீங்களா இனியன்?

    • CPI(MAOIST)கேள்வி பட்டு இருப்பீர்கள் இனியன்.

      [1]Indian Gov announced that 87 districts in the country as affected by “Left Wing Extremism”CPI(MAOIST), with another 86 districts in ideological influence.

      [2]The Maoists denounce globalization as a war on the people by market fundamentalists and the caste system as a form of social oppression.

      [3]The CPI (Maoist) claim that they are conducting a “people’s war”, a strategic approach developed by Mao Zedong during the guerrilla warfare phase of the Communist Party of China. Their eventual objective is to install a “people’s government” via a New Democratic Revolution.

        • Dear இனியன்,

          Whether we like them are not but they[CPI(MAOIST)] are the only alternative for against this current corrected Indian gov.

          People believe them for forming a new “people’s government” via a New Democratic Revolution.

          It is up to you to take decision to support this corrected Indian gov or New Democratic Revolution to form a “people’s government”.

          • What prevents them from contesting in elections? It is utter stupidity call it “new democratic revolution” while boycotting elections, and by those spineless people who never dare to prove their acceptance by the society.

    • ஏனோ புரியவில்லை, யாரும் எனது முதலாவது கேள்விக்குப் பதில் கூறவில்லை. திரும்பவும் கேட்கிறேன் ஓட்டுப் போடாவிட்டால் நீங்கள் கூறும் அத்தனை பிரச்சனைகளும் இல்லாது போய்விடுமா?

      கம்யூனிஸ்டுகள் என்று பலரும் தங்களைத் தாங்களே கூறிக்கொள்கிறார்கள். கேட்டால் நாம்தான் அக்மார்க் கம்யூனிஸ்டுகள் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். சரி நாங்கள்தான் அவர்களின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ளவேண்டும் என்று வைத்துக்கொண்டால் கூட, உண்மையான வர்க்க உணர்வுகொண்ட கம்யூனிஸ்டு வேட்பாளர்களை காண்பது அரிது. வேறு சில கம்யூனிஸ்டுகளுக்கோ தேர்தலில் போட்டிபோடும் தைரியமே கிடையாது, ஆனால் புரட்சி மட்டும் செய்யப்போகிறார்களாம்.

      • ஓட்டுப்போடாமல் வீட்டிற்குள் உட்கார்ந்துகொண்டிருந்தால் ஒரு பிரச்சினையும் தீராது இனியன் மாறாக அதிகரிக்கும். அப்படியானால் என்ன செய்யலாம் என்பதை பேசுவோம். அதற்கு முன்பு ஓட்டுப்போட்டால் இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டுவிடுமா? ஆம் எனில் எப்படி தீர்க்கப்படும் என்பதை முதலில் விளக்குங்கள். மேலும் வாக்களித்தால் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்பதற்கு நான் உத்திரவாதம் அளிக்கிறேன் என்று நீங்கள் உத்திரவாதமும் அளிக்க வேண்டும்.

        • முதலில் “ஓட்டுப் போடாதே” என்று பிரச்சாரம் செய்பவர்கள்தான் முதலில் விளக்கம் கொடுக்க வேண்டுமே தவிர, அது குறித்துக் கேள்வி கேட்பவர்களல்ல. கேள்விகளுக்குப் பதில் கூறாது, மறு கேள்வி கேட்பது அர்த்தமற்றது. எதற்காக உங்கள் பதிலை தவிர்க்கிறீர்கள்?

          பிரச்சாரம் செய்யப் புறப்படுபவர்கள் கேள்விகளுக்கும் பதில் சொல்லத் தயாராக இருக்கவேண்டும். அதைவிடுத்து பின்னர் பதில் கூறுகிறோம் என்பதுவும், சில கேள்விகளைத் தவிர்ப்பதுவும் கேலிக்குரியது.

          வாக்களித்தால் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்பதற்கு உத்திரவாதம் அளிப்பதற்கு நான் ஒன்றும் அரசியல்வாதியுமல்ல, பிரச்சாரம் செய்பவனுமல்ல.

            • இதையெல்லாம் படித்தேனா இல்லையா என்பதை எப்படி நிருபிப்பது? அடுத்து இந்தக் கட்டுரைகளில் உள்ள விடயங்கள் குறித்துப் பரீட்சை வைத்து தேறினால் மட்டுமே விவாதிக்கலாம் என்பீர்களோ?

              • நான் வாதம் செய்வேன். ஆனால் விதண்டாவாதம் செய்து உங்கள்,என் நேரத்தை வீணடிக்க மாட்டேன் !

                இனியன் நம் இருவரை தவீர பலரும் படிக்கும் களம் வினவு என்பதையும் நினைவு கூருங்கள்

                “முதலில் “ஓட்டுப் போடாதே” என்று பிரச்சாரம் செய்பவர்கள்தான் முதலில் விளக்கம் கொடுக்க வேண்டுமே தவிர, அது குறித்துக் கேள்வி கேட்பவர்களல்ல. கேள்விகளுக்குப் பதில் கூறாது, மறு கேள்வி கேட்பது அர்த்தமற்றது. எதற்காக உங்கள் பதிலை தவிர்க்கிறீர்கள்?”

                என்று நீங்கள் கேட்டதற்க்கு தான் நான் என் பின்னூட்டத்தில் “ஓட்டுப் போடாதே” என்ற வினவு கட்டுரைகளை refer செய்தேன். படிப்பதும் ,படிக்காமல் இருப்பதும் உங்கள் விருப்பம்.

                bye

                //இதையெல்லாம் படித்தேனா இல்லையா என்பதை எப்படி நிருபிப்பது? அடுத்து இந்தக் கட்டுரைகளில் உள்ள விடயங்கள் குறித்துப் பரீட்சை வைத்து தேறினால் மட்டுமே விவாதிக்கலாம் என்பீர்களோ?//

              • After reading all these articles, I am still not convinced about Vinavu’s alternate ideology. Sorry to say this, May be I am not that intelligent. But Vinavu should also understand that the average public are like me.

                I understand the current flaws in the system. But what is your alternative.
                You seem to focus more on the “Do not Vote” campaign and not focussing on what is the real alternative solution. Suppose, let us imagine, the whole public did not vote. Then what? Please tell us clearly how will this type of new setup function.

                In my opinion, whatever the setup whether Democratic, or others, the key lies in accountability, democracy and ability to rule. Removing the flaws in the current system should be better than burning the entire democratic setup.

                What will happen if the rulers of the new setup become autocratic, stamping their foot on any kind of opposition?
                What will happen if they become greedy after coming to power?
                What can the public do if the new rulers are incapable of governing the whole country (For eg, if the new rulers act like Arwind Kejriwal and doesnt perform and put the blame on the previous rulers)

                Please give me a proper answer to all my questions.
                Please do not give me links. I need specific answers to my specific questions above.
                Treat me as a General Public, whom you need to convince.
                If you people are not able to convince an ordinary citizen like me, then how it will be possible to convince the mass public?

                Think and Answer my Vinavu Friends!

                • தங்களது புதிய புரட்சிகர ஆட்சி அமைப்பில், ஜெயலலிதா போன்ற சர்வாதிகார மனப்பான்மை கொண்டவர் கையில் ஆட்சியை கொடுத்தால் நாடு என்ன ஆகும்?

                  இம் என்றால் சிறை வாசம், ஏன் என்றால் வனவாசம்.

                  Accountability கொண்டு வருவதற்கு தற்போது வோட்டு பலம் இருப்பதால் மக்களிடம் ஆட்சியாளர்கள் தேர்தல் சமயத்திலாவது பயப்படுகிறார்கள். புரட்சிகர ஆட்சியில் சர்வாதிகாரம் தலைதூக்கினால் என்ன ஆவது? மறுபடியும் புரட்சி செய்து ஆட்சியை கலைப்பீர்களா?

                  தெளிவாக பதில் கூறுங்கள். மீண்டும் மீண்டும் தேர்தலை புறக்கணிப்பதை மட்டும் சொல்லிகொண்டிருக்காமல் உங்களது தீர்வை பற்றிய விளக்கங்களை அளித்தால் எங்களை போன்ற சாமானியர்களுக்கு புரியும். உங்களது புரட்சிகர மாற்று அமைப்பை பற்றி விலாவரியாக ஒரு விவாதம் செய்யலாமே?

                  உங்களது புரட்சிகர மாற்று அமைப்பை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளவே நான் இதனை கேட்கிறேன். உங்களை கிண்டல் செய்யவோ, இல்லை ஏட்டிக்கு போட்டியாக விவாதம் செய்யவோ நான் கேட்கவில்லை.

                  பொதுமக்களின் பிரதிநிதியாக என்னை நினைத்து கொண்டு நீங்கள் விளக்கமளியுங்கள்.
                  எந்த லிங்க் ஐயும் தராமல் நீங்களே உங்களுக்கு புரிந்த வரை, தெரிந்த வரை உங்களது மொழியில் எனக்கு விளக்கம் தாருங்கள்.

                  • கற்றது கையளவு,

                    நீங்கள் கேள்வி கேட்பது யாரிடம் ? திரு இனியன் இடமா ? என்னிடமா?
                    pls check your feedback threads !

                    • சரவணன் சார்,

                      ஒட்டு போடாதே புரட்சி செய் என்று கூறும் ஓவ்வொரு வினவு நண்பர்களுக்கும் என் கேள்வி பொருந்தும். இதில் இனியனும் நானும் ஒரே கோட்டில் பயணிப்பதாக தான் நான் கருதுகிறேன். வினவு ஆதரிக்கும் இந்த புரட்சிகர மாற்று அமைப்பை பற்றி எனக்கு சரியாக விளங்கவில்லை. நீங்கள் கொடுத்திருக்கும் பல்வேறு லிங்க் களிலும் ஒட்டு போடதே, ஒட்டு போடுவதினால் ஒன்றும் நேர்ந்து விட போவதில்லை, ஒட்டு போடுவதால் கெடுதி தான் என்று தான் மீண்டும் மீண்டும் விளக்கப்பட்டுள்ளது. வினவின் புரட்சிகர புதிய ஆட்சி அமைப்பை பற்றி தெளிவான விளக்கத்தை காணோம். நீங்கள் இந்த லிங்க் களை கொடுத்ததால் இந்த புரட்சிகர மாற்று அமைப்பை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்று கருதுகிறேன். அப்படி ஒட்டு போடாதிருப்பதை நீங்கள் ஆதரிப்பது உண்மை என்றால் என்னை போன்ற சராசரி பொதுமக்களுக்கு புரியும் வண்ணம் நீங்களோ இல்லை வினவில் நீண்ட காலம் பின்னூட்டம் எழுதும் நண்பர்களோ எனக்கு விளக்கலாம்.

                  • உங்கள் கேள்விக்கு practical ஆக பதில் கூறட்டுமா ?

                    [1]இந்தியாவின் மத்தியமாக இருக்கும் மாநிலங்களான Chattisgharh, Odisha, Bihar, Jharkhand, Maharastra, and West Bengal ஆகிய மாநிலங்களில் நடக்கும் CPI(maoist) கட்சியீன் ஆட்சி பற்றி கூறப்போகிறேன்.

                    [2]நம் பாரத பிரதமர் அவர்களீன் வாக்கு மூலத்தில் இருந்து தெடங்குகிறேன்.

                    ” Prime Minister Manmohan Singh referred to the Naxalites as “the single biggest internal security challenge” for India, and said that the “deprived and alienated sections of the population” forms the backbone of the Maoist movement in India.By the end of 2012, the Ministry of Home Affairs declared 87 districts in the country as affected by “Left Wing Extremism”, with another 86 districts in ideological influence.”

                    [3]என்ன காரணத்துக்காக அம் மக்கள் Indian constitution க்கு எதிராக மக்கள் அரசை புதீய சனநாயக புரட்சி மூலம் நிறுவ முயலுகின்றனர். ஏழை ,எளீய ,பழங்குடி இம் மக்களுக்கு இதற்கான அரசியல் அறிவை புகட்டியது யார் ? ஆம் தோழர் காரன் மார்க்ஸ் ,லெனின் ,மாஒ ஆகியவர்கள் தான். நம்ப முடிய வீல்லையா ?
                    ஆனால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என்பதற்க்கு வரலாற்று ஆதரங்கள் பல உள்ளன்.நம் நாட்டில் இந்தியா சுதந்திரம் அடையும் போதே[1950’s ] புரட்சியும் தெடங்கி விட்டது.Hyderabad நிஜம் மற்றும் நில பிரபூக்கலுக்கு எதிராக மக்களீன் தீயகம் செறிந்த புரட்சி அது. Hyderabad நிஜமையே துரத்தும் அளவுக்கு மக்கள் தீர்க்கமாக போரடினர்.தெலுங்கானா முழுவது Hyderabad நிஜம் ஆட்சியில் இருந்து விடுவிக்கபட்டு மக்கள் ஆட்சி நிலைநாட்ட பட்டது. திரு நேரு ,பட்டேல் ஆகியவர்கள் அம் மக்கள் மீது போர் தொடுத்து மக்களை அடிமை படுத்தினர். இம் மக்களீன் பாராம்பரியத்தில் வரும் நம் மக்கள் தான் இன்று CPI(maoist) கட்சியீன் தலைமையில் மக்கள் அரசை புதீய சனநாயக புரட்சி மூலம் நிறுவ முயலுகின்றனர்.

                    [4]மேலும் 1960 களில் உருவான நக்சல்பாரி இயக்கத்தீன் பாராம்பரியத்தில் வரும் நம் மக்களும் CPI(maoist) கட்சியீன் தலைமையில் மக்கள் அரசை புதீய சனநாயக புரட்சி மூலம் நிறுவ முயலுகின்றனர்.

                    [5]இவர்கள் நடைமுறை படுத்தும் யுத்த தந்திரம் மிகவும் எளிமையானது. கிராமங்களை கைபற்றி நகரங்களை முற்றுகை இடுவது. இம் முறை இந்தியாவை பேன்றே இருந்த சீனாவில் நடைமுறை படுத்த பட்டு வெற்றி அடைந்த முறை.

                    [6]இந்தியாவின் இயற்கை வளங்கள் [கனிமம்,கடல் சார் வளங்கள்] பற்றி எம் ஏழை ,எளீய ,பழங்குடி மக்களுக்கு உள்ள அக்கறை அவர்களை இவ் அரசுக்கு எதிராக போரட தூண்டுகின்றது. பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டு இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கும் அவலத்துக்கு எதிராக போராடும் அவர்கள் ஏழை ,எளீய ,பழங்குடி மக்கள் தான் நம் நாட்டின் உண்மையான தேசபக்தர்கள்.

                    தொடரும்….

                    • Part II
                      உங்கள் கேள்விக்கு practical ஆக பதில் கூறட்டுமா ?

                      [7]2000-வது ஆண்டில் மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்ட, கனிம வளங்கள் நிறைந்துள்ள சத்தீஸ்கர் மாநிலத்தைச் சூறையாடுவதற்காகவே,‘வளர்ச்சி’ என்ற பெயரில் பழங்குடியின மக்கள் அவர்களின் மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களின் சூறையாடலுக்காக, பழங்குடியினரின் நிலங்களைப் பறித்து அவர்களை நாடோடிகளாக வெளியேற்றினால்தான் இந்த ‘வளர்ச்சி’ சாத்தியப்படும். மாவோயிஸ்டுகளும் பழங்குடியினரும் இந்த ‘வளர்ச்சி’யைத் தடுக்கிறார்கள். எனவேதான் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை இராணுவப் படைகளைக் குவித்து, அவர்கள் மீது “காட்டுவேட்டை” என்ற பெயரில் பயங்கரவாதப் போரை அரசு தொடுத்து வருகிறது.

                      [8]சத்தீஸ்கரில் கார்ப்பரேட் நலன்களுக்காக ஒரு உள்நாட்டுப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்புச் சட்டம் பழங்குடியினருக்கு வழங்கியிருக்கும் உரிமைகளை வலியுறுத்தி வழக்குகள் பதிவு செய்ததற்காக சத்தீஸ்கரின் காந்தியவாதியான ஹிமான்சு குமார் தண்டிக்கப்பட்டார்.

                      [9]சத்தீஸ்கரில் நிலவும் அரசு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்திய குற்றத்திற்காக பிரபல மருத்துவர் பினாயக் சென் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டார். இந்த ஜனநாயகத்தின் மீது பெருமதிப்பும் பக்தியும் கொண்டுள்ள வலது கம்யூனிஸ்டு கட்சியினரே மாவோயிஸ்டுகள் என்று குற்றம் சாட்டப்பட்டு சத்தீஸ்கரில் சிறையிடப்பட்டுள்ளார்கள். வலது கம்யூனிஸ்டு தலைவர்களான பரதன், ராஜா போன்றோர் ஜனநாயக முறைப்படி பலமுறை கண்டனம் தெரிவித்தும், நீதி மன்றங்களில் மனு செய்தும் கூட அவர்களை சத்தீஸ்கர் அரசு விடுவிக்கவில்லை.

                      [10]அரசு பயங்கரவாதத்தையே ஜனநாயகமாகச் சித்தரிக்கும் ஆளும் கும்பலும் ஊடகங்களும் சத்தீஸ்கரில் முன்னைவிட மூர்க்கமாகத் தாக்குதலை ஏவிப் போராடும் மக்களையும் மாவோயிஸ்டுகளையும் ஒடுக்கத் துடிக்கின்றன. ஆனால், அரசு பயங்கரவாதம் சத்தீஸ்கரில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக இத்தகைய சிவப்பு பயங்கரவாதம் மேலும் மூர்க்கமாகத் தொடரவே செய்யும்.

                      தொடரும்……

                    • Part III
                      உங்கள் கேள்விக்கு practical ஆக பதில் கூறட்டுமா ?
                      இழப்புகள் இன்றி புரட்சியா?
                      ——————————-
                      [11]இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)இன் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான கிஷன்ஜி என்றழைக்கப்படும் தோழர் மலோஜுலா கோடேஸ்வரராவ், மத்திய ரிசர்வ் போலீசு படையினரால், 24.11.2011 வியாழனன்று படுகொலை செய்யப்பட்டு தியாகியானார். தன்னுடைய வாழ்க்கையை மக்களின் விடுதலைக்கு அர்ப்பணிப்பதென்று முடிவு செய்து புறப்பட்ட தோழர் கோடேசுவர ராவ், இன்னல்மிக்க தலைமறைவு வாழ்க்கையை ஏற்று, புரட்சி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு கிராமங்கள், நகரங்கள், காடுகள் என 33 ஆண்டு காலம் எங்கெங்கும் சுற்றிப் பணியாற்றி, கடந்த நவம்பர் 27 அன்று தியாகி கிஷன்ஜியாக பெட்டபள்ளிக்குத் திரும்பியிருக்கிறார். 33 ஆண்டுகளுக்குப் பின் தனது மகனைப் பிணமாகப் பார்க்க நேர்ந்த அவரது தாய் மதுரம்மா நெஞ்சம் வெடித்துக் கதற, திரண்டிருந்த தோழர்கள் “தியாகி கிஷன்ஜிக்கு செவ்வணக்கம்” என்று முழங்க, ஆயிரக்கணக்கான மக்களும் பல்வேறு அரசியல் அமைப்புகளின் தலைவர்களும் அஞ்சலி செலுத்த தோழர் கிஷன்ஜி விடைபெறுகிறார்.

                      [12]2004இல் ராஜசேகர் ரெட்டியுடனான பேச்சு வார்த்தையை முறிந்தவுடனே, நல்லமலா காட்டுப் பகுதியை சுற்றி வளைத்து தோழர் ராமகிருஷ்ணாவைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. மாவோயிஸ்டுகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக ப.சிதம்பரம் நாடகமாடிக் கொண்டிருந்த போதே, கோப்ரா படையினரால் தோழர் ஆசாத் நயவஞ்சகமாகக் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அளித்த ஒப்புதலின் பேரில், மாவோயிஸ்டுகளுடன் ஒரு போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை சுவாமி அக்னிவேஷ் நடத்திக் கொண்டிருந்த சூழலில் நடத்தப் பட்டிருக்கிறது இந்தப் படுகொலை. போர்நிறுத்தம் தொடங்குவதற்கான தேதியை மட்டுமே முடிவு செய்யவேண்டியிருந்தது என்றும், அது தொடர்பான செய்தியை தோழர் ஆசாத்திடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த சூழலில்தான் இந்தப் படுகொலை நடந்திருக்கிறது என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார் சுவாமி அக்னிவேஷ். ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்து, இந்தப் படுகொலை குறித்து நீதிவிசாரணை நடத்தவேண்டும் என்று கோரியதற்கு, “அதுபற்றியெல்லாம் ஆந்திர அரசுதான் முடிவு செய்யவேண்டும்” என்று சிதம்பரம் மிக அலட்சியமாகப் பதிலளித்ததாகவும் கூறியிருக்கிறார் அக்னிவேஷ். “அன்று நான் வேறு சிதம்பரத்தைப் பார்த்தேன். அவரது தோரணையே பகைமையாக இருந்தது. அவர் என் கண்ணைப் பார்த்துப் பேசுவதையே தவிர்த்தார். போர்நிறுத்தம் பற்றிய பேச்சே அவரிடமிருந்து வரவில்லை” என்று கூறியிருக்கிறார் அக்னிவேஷ்.

                      தொடரும்….

                    • நன்கு விளக்கமாக பதிலளித்தீர்கள் சரவணன், நன்றி.

                      தங்களது நீண்ட பதில்களை முழுதும் படித்தேன். சில குழப்பங்கள், சில கேள்விகள். கேட்கிறேன்.

                      1. சட்டீஸ்கர் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இயற்கை வளங்களை கார்பரேட் நிறுவனங்களுக்கு அரசியல்வாதிகள் விற்பது பற்றி கூறியுள்ளீர்கள். இது கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். உண்மை.

                      2. இதற்கு ஆயுதம் ஏந்திய புரட்சிகர மாவோயிஸ்ட் முறை தான் தீர்வு என்று சொல்கிறீர்கள். பலம் மிக்க அரசுகளுக்கு அல்லது எதிரான ஆயுதம் ஏந்திய போராட்டங்கள் தற்போதைய நிலவரத்தில் எப்போதும் தோல்வியையே தழுவுகிறது. இலங்கையை உதாரணத்திற்கு எடுத்து கொள்ளலாம். விடுதலை புலிகளின் தோல்வி எங்கு ஆரம்பித்தது? அவர்களால் ஜனநாயகமுறையில் போராட முடியவில்லை என்ற பட்சத்தில் ஒரு நாட்டின் இராணுவத்தை எதிர்த்து எத்தனை நாட்கள் போராட முடியும். அவர்கள் இத்தனை காலம் தாக்கு பிடித்ததே பெரிய விடயம்.

                      3. நீங்கள் சொல்லும் சட்டீஸ்கர் மாநிலத்தில் ஏன் மாவோயிஸ்ட்களுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. பொதுமக்கள் அனைவரும் மாவோயிஸ்டுகளின் முயற்சியை பாராட்டினால் அவர்கள் மாவோயிச்டுகளையே அவர்கள் மாநிலத்தை ஆள தேர்ந்தெடுத்திருக்கலாம் இல்லையா? ஏன் அது நடக்கவில்லை.

                      4. பொதுமக்களின் ஆதரவில்லாமல் எந்த புரட்சியும் நடக்காது. பொதுமக்களின் நம்பிக்கையை மாவோயிஸ்டுகளால் இத்தனை ஆண்டு காலம் ஆன பின்பும் ஏன் பெற முடியவில்லை.

                      5. மாவோயிஸ்டுகளால் பொதுமக்களின் ஒட்டு மொத்த ஆதரவை பெற முடியாததற்கு என்ன காரணம் என்று ஆழ்ந்து யோசிக்க வேண்டும். நேற்று பெய்த மழையில் முளைத்த ஒரு அரவிந்த் கேஜ்ரிவாலை நம்பும் மக்களால் ஏன் இத்தனை காலம் போராடும் மாவோயிஸ்டுகளை நம்ப முடியவில்லை. சற்று ஆய்ந்து பாருங்கள்.

                      6. ஆயுதம் ஏந்திய போராட்டங்களின் மேல் மக்களுக்கு ஒரு பயம் உள்ளது. ஒரு வேளை இவர்கள் ஆட்சியை ஏற்றால் நம்மை எல்லாம் ஆயுதம் மூலம் அடிமைபடுத்தி விடுவார்களோ, சர்வாதிகாரம் தலை தூக்குமோ என்ற பயம். அதனை எப்படி மாவோயிஸ்டுகள் நிவர்த்தி செய்வார்கள்.

                      7. மக்களுக்கு நேரடியாக நன்மை பயக்கும் நபர்களுக்கு மக்களின் ஆதரவு என்றும் உண்டு. யுனிவர்பட்டி சொல்வது போல ஒட்டு மொத்த மக்களும் தேர்தலை நிராகரிப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை.

                      8. மக்கள் ஆதரவை பெற வேண்டுமானால் மாவோயிஸ்டுகள் ஆயுதம் ஏந்துவதை விட்டு விட்டு மக்களோடு மக்களாக அவர்கள் பிரச்சினைகளுக்கு துணை புரிந்தால் முதல் படியாக ஒரு கவுன்சிலர் அல்லது பஞ்சாயத்து தேர்தல் அளவில் மாவோயிஸ்டுகளால் பதவியை அடைய முடியும். படிப்படியாக நல்லாட்சியை கொடுத்தால் தானாக மக்கள் அவர்களை அடுத்த அடுத்த அளவில் ஏற்றி ஒரு மாநிலத்தை ஆளும் பலத்தை தானாக தருவார்கள்.

                      9. தவறான மனிதர்களை தேர்வு செய்தது தான் பிரச்சினையே தவிர தேர்தல் முறை தவறு இல்லை. ஒரு பேச்சுக்கு நீங்கள் சொல்லும் புரட்சி அமைப்பில் ஆட்சி அமைப்பவர்கள் ஆட்சியை அடைந்த பின் கார்பரேட் நிறுவனங்களுடன் கூட்டணி போட்டால் என்ன செய்வது.

                      10. ஒட்டு மொத்தமாக தேர்தலை புறக்கணிப்பதை விட தேர்தலில் நீங்கள் கலந்து கொண்டு மக்களுக்கு தூய தொண்டாற்றலாம். மக்கள் ஆதரவு உங்களுக்கு அப்போது தான் முழுமையாக கிடைக்கும். ஆயுதம் எந்தியவனுக்கு ஆயுதத்தால் தான் அழிவு.

                    • கற்றது கையளவு ,

                      எம்மால் இந்த TATA ,முகாஷ் அம்பானி போன்ற முதலைகள் அமைக்கும் பொம்மை இந்திய அரசுகளை ஏற்க முடியாது.

                      நீங்கள் tata ,முகாஷ் அம்பானி போன்ற முதலைகள் அமைக்கும் பொம்மை இந்திய அரசுகளை ஏற்று வாழுங்கள்.

                      நன்றி.

                      //1. சட்டீஸ்கர் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இயற்கை வளங்களை கார்பரேட் நிறுவனங்களுக்கு அரசியல்வாதிகள் விற்பது பற்றி கூறியுள்ளீர்கள். இது கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். உண்மை.//

                      பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டு இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கும் அவலத்துக்கு எதிராக போராடும் ஏழை ,எளீய ,பழங்குடி மக்கள் தான் நம் நாட்டின் உண்மையான தேசபக்தர்கள்.அவர்களும் தேசதுரோகிகளாக மாறவேண்டுமா ?

                      //2. இதற்கு ஆயுதம் ஏந்திய புரட்சிகர மாவோயிஸ்ட் முறை தான் தீர்வு என்று சொல்கிறீர்கள். பலம் மிக்க அரசுகளுக்கு அல்லது எதிரான ஆயுதம் ஏந்திய போராட்டங்கள் தற்போதைய நிலவரத்தில் எப்போதும் தோல்வியையே தழுவுகிறது. இலங்கையை உதாரணத்திற்கு எடுத்து கொள்ளலாம். விடுதலை புலிகளின் தோல்வி எங்கு ஆரம்பித்தது? அவர்களால் ஜனநாயகமுறையில் போராட முடியவில்லை என்ற பட்சத்தில் ஒரு நாட்டின் இராணுவத்தை எதிர்த்து எத்தனை நாட்கள் போராட முடியும். அவர்கள் இத்தனை காலம் தாக்கு பிடித்ததே பெரிய விடயம்.//

                      வீட்டை வீட்டு வெளியே வரும்போதும் சைக்கில் மோதி உயிர் வீட்டவரும் உண்டு ,புரட்சி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு கிராமங்கள், நகரங்கள், காடுகள் என 33 ஆண்டு காலம் எங்கெங்கும் சுற்றிப் பணியாற்றி, தியாகியான கிஷன்ஜிகளும் உண்டு.

                      இழப்புகள் இன்றி புரட்சியா?

                      //for 3 to 10//

                      வரும் 20 ஆண்டுகள் இந்தியாவின் தலை எழுத்தை தீர்மணீக்க போகும் நாட்கள்.

                      இந்தியா காவி நாடா ? இல்லை இந்தியா கம்யூனிஸ்ட் நாடா ? என்பதை முடிவு செய்யும் யுத்தம் நடை பெற போகும் நாட்கள் இவை

                    • Part IV
                      உங்கள் கேள்விக்கு practical ஆக பதில் கூறட்டுமா ?

                      தமிழகத்தில் புரட்சி சாத்தியமா ?
                      ————————————————————
                      [13] இந்தியா என்பதே ஒரு தேசம் அல்ல. பல்வேறு தேசிய இனங்களீன் கூடமைப்பு தான். ஒவொரு தேசிய இனத்துக்கும் ஒரு நில பரப்பு ,மொழி,மத்திய அரசின் அதிகரத்துக்கு உட்பட்ட ஆட்சி உள்ளன. மேலும் எல்லா மாநிலமும் ஒரே சிரான வளர்சியை பெற வீல்லை. இன் நிலையில் ஏழை ,எளீய ,பழங்குடி மக்கள் cpi(maoist) கட்சிக்கு மத்திய இந்தியாவில் ஆதரவு அளிப்பது போல தமிழக மக்கள் புரட்சிக்கு யாரை தலைமை ஏற்க்க அழைப்பர்கள் என்பது ஒரு வினா.
                      [a ]தமிழகத்தில் சமுக-அரசியல் மாற்றம்[socio-political revolution] ஏற்பட ஒரு புரட்சிகர Communist கட்சி தேவை. ஆனால் cpi(maoist) கட்சியும் தமிழகத்தில் 100% இல்லை. அப்படி என்றால் புதீய சனநாயக புரட்சிக்கு வழி இல்லையா என்ற கேள்வியும் எழுகின்றது. cpi(maoist) தவிர வேறு ஏதாவது Communist கட்சி தமிழகத்தில் உள்ளதா என்ற கேள்வியும் எழுகின்றது.

                      நம் கேள்விக்கான பதில் …………………….

                      https://www.vinavu.com/2014/04/18/boycott-elections-this-is-pseudo-democracy/

                • Hi KK,

                  //I am still not convinced //

                  Not votings is just a one step out of n steps. As elections are around the corner, “Do not Vote” campaign is on. I am note voting this time. I request you not to. Lesser turnout will boost the morale of revolutionary groups and reflect the mood of people to those in positions of oppression.

                  // let us imagine, the whole public did not vote//

                  We are not there yet. Before we reach there, we will get new setup.

                  //What will happen ***//

                  Don’t panic. It is still a long way. But it is done in a step at a time. Only when the significant number of the working people become free of cults, aware of their common destiny, organize themselves into a group or federation, able to handle things as leaders based on well written procedures and systems that can handle the traitors, etc., the new setup will dawn.

                  // I need specific answers//

                  The above is for today. Lets discuss.

          • ஓட்டு போடாமல் இருப்பது மட்டும் இந்த கட்டுரையில் கூறப்படவில்லை. புரட்சிகர அமைப்பு அமைப்புகள் புரட்சிகர பகுதிகளில் செயல்படுகின்றன மேலும் அங்குள்ள் பல பிரச்சனைகளை புரட்சிகர அமைப்புகளுடன் இணைந்து போராடி தீர்வினை அடைந்துள்ளனர். ஆக போராட்டம் தான் தீர்வினை தரும் என்பதை உணர்த்துவது தான் நோக்கம் என நினைக்கிறேன். ஓட்டு போடாதே ஒரு பகுதியை பிடித்து கொண்டு நீங்கள் கேள்வி கேட்பதாக தெரிகிறது. மேலும் வினவின் கட்டுரை தொடர்ச்சியாக படிக்கும் பட்சத்தில் அதற்கான தீர்வினை நீங்கள் அறிந்து கொள்ளலாம்

            • எதனால் “புரட்சிகர அமைப்பு அமைப்புகள்” செயற்படும் “புரட்சிகர பகுதிகளில்” மட்டுமாவது “புரட்சிகர அமைப்புக்கள்” தேர்தலில் போட்டியிட முன்வருவதில்லை?

              தேர்தலில் போட்டியிடத் தைரியமில்லை. ஆனால் ஓயாமல் ஓட்டுப் போடாதே என்று கூவுவதில் மட்டும் குறைச்சலில்லை.

              ஓட்டுப் போடாமல் விட்டால் யாரோ ஒருத்தன் என்பெயரில் யாரோ ஒரு பொறுக்கிக்கு கள்ள ஓட்டுப் போவதற்கான சாத்தியங்கள்தான் அதிகமே தவிர நன்மையில்லை.

              கீழே பின்னூட்டம் 4 இற்கு “புரட்சிவாதிகள்” யாரும் பதில் சொல்வதாக இல்லை.

              • வாக்களிப்பதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்கிறோம் இனியன்.

                ஏன் இல்லை?

                ஏனென்றால் மக்கள் பிரதிநிதிகள் என்று பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுபவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

                மக்களுக்கான ஒரு நல்ல சட்டத்தை உருவாக்கவோ அதை நடைமுறைப்படுத்தவோ, அல்லது மக்கள் விரோதமான சட்டங்களையும் கொள்கைகளையும் தடுக்கவோ ஒழித்துக்கட்டவோ அவர்களுக்கு துளியும் அதிகாரம் கிடையாது.

                அப்படியானால் யாருக்கு அந்த அதிகாரம் உண்டு?

                மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளுக்குத்தான் அந்த அதிகாரம் உண்டு. சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் இயற்றப்படும் அனைத்து சட்டங்களையும் அவர்கள் தான் உருவாக்கி நடைமுறைப்படுத்துகின்றனர். எனவே எப்படிப்பட்ட சட்டங்களையும் திட்டங்களையும் கொண்டு வர வேண்டும் என்பதை மக்கள் வாக்களித்து தேர்வு செய்த பிரதிநிதிகள் முடிவு செய்ய முடியாது. மாறாக தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளே முடிவு செய்கின்றனர்.

                அடுத்து,
                பாராளுமன்றத்திடமிருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளும் கடந்த பத்தாண்டுகளில் சிறிது சிறிதாக பறிக்கப்பட்டுவிட்டன. இப்போது மொத்த பாராளுமன்றமும் அதிகாரமற்ர டம்மியாக இருக்கிறது. Trips மற்றும் 123 ஒப்பந்தத்தை இதற்கு உதாரணமாக கூறலாம். இவை இரண்டும் பாராளுமன்றத்திற்கு வெளியில் ரகசியமாக நிறைவேற்றப்பட ஒப்பந்தங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் கூடிய பாராளுமன்றம் இருக்கும் போது இந்த ஒப்பந்தங்கள், அதுவும் ரகசியமான முறையில் பாராளுமன்றத்திற்கு வெளியில் வைத்து போடுவானேன்? அப்படியானால் பாராளுமன்றம் என்பது எதற்காக இருக்கிறது? இந்த கேள்விக்கு வாக்களிக்க வேன்டும் என்று மக்களை துன்புறுத்துபவர்கள் பதிலளிக்க வேன்டும்.

                மேலும் இனி வரும் காலங்களில் ஏகாதிபத்தியங்களுடன் செய்துகொள்ளப்படும் அனைத்து ஒப்பந்தங்களும் இவ்வாறு தான் போடப்படவிருக்கின்றன. பாராளுமன்றத்தில் வைத்து அதில் வாக்கெடுப்பு நடத்தி நாட்கணக்கில் இழுக்கடித்து தாமதமாவதெல்லாம் ஏகதிபத்திய எஜமானர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே தான் இதெல்லாம் வேலைக்காகாது பாராளுமன்றத்தை விளையாட்டு பொம்மையாக்கிவிட்டு ஒப்பந்தங்கள் அனைத்தையும் வெளியில் வைத்து நிறைவேற்று என்று உத்தரவிட்டு அதன்படி சில ஒப்பந்தங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

                மொத்த நாட்டையும் அமெரிக்காவிற்கு விற்பதாக ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டால் கூட அதை இந்திய பாராளுமன்றமோ பிரதமரோ, முதல்வர்களோ, ‘மக்கள் பிரதிநிதிகளோ’ தட்டிக்கேட்க முடியாது எனில் எதற்காக வாக்களிக்க வேண்டும் என்கிற கேள்வியில் நியாயம் மட்டுமா இருக்கிறது?

  2. நல்ல சமூக சேவை. எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் – எப்படி ரேஷன் கடைகள் காணாமல் போகும், எப்படி அரசு ஆஸ்பத்திரிகள் மூடி விடும் இத்யாதி – பொது மக்களிடையே பீதியைக் கிளப்பி. ஓட்டுப் போடாமல் இருக்க வைக்கச் செய்யும் இவர்களது முயற்சி மிகவும் பாராட்டத் தக்கது.

    • தோழரே சில வருடத்திற்கு முன் H முத்திரை என்ற ஒன்று அமுலுக்கு வந்ததே நினைவிருக்கிறதா. அதெல்லாம் அழம் பார்கிற வேலையல்லாமல் வேறென்ன…

    • புரட்சிகர அமைப்புகள் எதற்கு பீதியை கிளப்ப வேண்டும்? ஆளும் வர்க்கமும், ஓட்டுப்பொறுக்கிக்கட்சிகளும் தான் மக்களை மிரட்டுகிறார்கள், இழிவுபடுத்துகிறார்கள், பீதியிலும் வைத்திருக்கிறார்கள்.

      ஆம்,மக்கள் ஓட்டுப்போடக்கூடாது என்பது தான் பிரச்சாரத்தின் நோக்கம். மக்களை முட்டாளாக்கி ஓட்டுப்போட வைப்பதன் மூலம் அரை அம்மண நிலையிலிருக்கும் இந்த போலி ஜனநாயகத்தின் கோவணத்தை கொஞ்சம் சரி செய்துவிடலாம் என்று ஆளும் வர்க்கங்கள் முயற்சிக்கின்றன. நாங்கள் முழு கோவணத்தையும் அவிழ்த்துக்காட்ட முயற்சிக்கிறோம். இதில்0 என்ன ரகசியம் இருக்கிறது?

      இந்த நாடு கொள்ளையடிக்கப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள உங்களுக்கு என்ன மாதிரியான ஆதாரம் வேண்டும்? மன்மோகன்சிங்கை விட, அல்லது மன்மோகன்சிங்கை விட கொடூரமான கைக்கூலியான மோடி முன்னிறுத்தப்படுவதை விட சிறந்த ஆதாராம் ஏதும் இருக்க முடியுமா?
      அல்லது ஏகாதிபத்தியங்களெ நேரடியாக ரசீது போட்டுத்தந்தால் தான் ஒத்துக்குவீங்களா? அப்படியானால் ஒரே ஆதாரம் காட் ஒப்பந்தம் மற்றும் காட்ஸ் ஒப்பந்தம் தான். பழைய கட்டுரைகள் நிறைய இருக்கிறது தேடிப்படியுங்கள். அல்ல தோழர்களை தொடர்பு கொண்டு விவாதித்து அறிந்துகொள்ளுங்கள்.

    • உ.வ.க. பாலி மாநாடு : ரேசன் கடையின் சாவி இனி அமெரிக்காவின் கையில்!(https://www.vinavu.com/2014/01/23/us-controls-indian-food-subsidies/) எனும் வினவு கட்டுரையினை சிவா அவர்கள் படிக்க வேண்டும். ரேசன் கடை மூடுதல் என்பது கட்டுக்கதை கிடையாது மாறாக இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் விவசாயத்திற்கும் உணவிற்கும் தரும் மானியங்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அமெரிக்காவிடம் தாரை வார்க்கப்பட்டுள்ளது. இது நமக்கு எதை காட்டுகிறது சிறிது சிறிதாக ரேசன் கடையை மூட வழி வகையினை அரசு செய்து வருகிறது. மேலும் “ரேசன் கடை ஒழிப்பே நேரடிப் பணப் பட்டுவாடா திட்டம் !”(https://www.vinavu.com/2013/01/10/direct-cash-scheme-to-abolish-pds/) எனும் வினவு கட்டுரையும் ரேசன் கடை ஒழிப்பு பற்றி பேசுகிறது. படித்து பாருங்கள்

  3. ஓட்டுப் போடுறது உனக்கு மட்டுமில்ல இந்த ஊருக்கே ஆகாதும்மா. ஜக்கம்மா எச்சரிக்கும்போதே முழிச்சிக்க, மொதல்ல ஓட்டு போடுறத நிறுத்து…அப்புறம் என்ன ஏதுன்னு ஜக்கம்மா தொடர்பு கொண்டு விவாதித்து அறிந்துகொள்ளுங்கள்.

  4. பெரும்பான்மையான மக்களை ஒட்டு போடுவதை புறக்கணிக்க செய்வது நடைமுறையில் சாத்தியம் அல்ல. நாம் ஒட்டு போடவில்லை என்றால் நாடு தலைகீழாக மாறாது. அரசியல் ஒரு சாக்கடை என்று நீங்கள் மூக்கை மூட சொல்கிறீர்கள். நாம் அனைவரும் சேர்ந்து அந்த சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யலாம் என்று நான் நினைக்கிறேன்.

    மூட்டைபூச்சிக்கு பயந்து வீட்டை எரிக்க முடியாது. அதே சமயம் மூட்டை பூச்சி கடியை அப்படியே பழகிக்கொள்ள சொல்லவில்லை. அதனை ஒழிக்க வேறு நடைமுறையில் சாத்தியமான வழி ஏதாவது இருந்தால் யோசிக்கலாம் என்றே கூறுகிறேன்.

    ம.க.இ.க. தலைமையில் இளைஞர்கள் ஒன்று கூடுங்கள். பொதுமக்களுக்கு அன்றாடம் இருக்கும் பிரச்சினைகளை அரசாங்க உதவியில்லாமல் நம்மால் ஆன வரை தீர்த்து வையுங்கள். பின் மக்கள் ஆதரவு தானாக உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் சொல்லும் வழிமுறையை மக்கள் தானாக ஆதரிப்பார்கள். மக்களுக்கு நீங்கள் பயன்பட்டால் தான் அவர்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வரும். பெரிய அளவில் இல்லை என்றாலும், சிறிய அளவில், ஒரு வார்டு கவுன்சிலர், பஞ்சாயத்து தேர்தல் அளவில் ம.க.இ.க. உறுப்பினர்கள் தேர்வாகி, மக்களுக்கு நேர்மையாக, உண்மையாக, திறமையாக செயல்புரிந்து அடுத்த முறை உங்களது செல்வாக்கை மேலும் விரிவாக்கி ஒரு சட்டமன்ற தொகுதி என்ற ரீதியில் பணிபுரிந்து முன்னுக்கு வாருங்களேன்.

    அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு காமெடி பீசோ, இல்லை சந்தர்ப்பவாதியோ, அரசியல் ஸ்டண்ட் பார்டியோ, இல்லை உண்மையிலேயே நேர்மையான மனிதரா தெரியவில்லை. அவர் எப்படி பட்டவராக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் டெல்லியில் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு அவரால் மக்கள் ஆதரவை திரட்ட முடிந்ததே, ஏன் என்று யோசித்து பார்த்தீர்களா?

    மக்கள் தற்போது எல்லா கட்சிகளின் மேலும் நம்பிக்கை இழந்து தான் உள்ளனர். வேறு மாற்றம் தேவை என்று உணர்ந்து தான் உள்ளனர். ஆனால் மாற்றத்தை யார் தருகிறார்? உண்மையில் அந்த மாற்றத்தை ம.க.இ.க. வினால் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    மக்கள் பிரச்சினைகளுக்கு உங்கள் தீர்வுகளை மக்களிடமே நீங்கள் விவாதித்து தெளிவு படுத்துங்கள். மக்கள் இப்போது யாருக்கு வாக்களித்தாலும் எந்த வித நன்மையையும் இல்லை. அதனால் இருக்கும் கட்சிகளில் ஓரளவுக்கு சுமாராக தங்களுக்கு நன்மை தரக்கூடிய கட்சியை தேடி வாக்களிக்கிறார்கள். உங்களால் நேர்மையான ஆட்சியை, திறமையான ஆட்சியை கொடுக்க முடியும் என்று அவர்கள் நம்பினால் உங்களை அவர்களே ஆட்சி பீடத்தில் உட்கார வைத்து விடுவார்கள்.

    ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் நீங்கள் அரவிந்த் கேஜ்ரிவால் போல் பின்வாங்கினால் மறுபடி ஒன்றும் செய்ய இயலாது.

  5. ஓட்டுப் போடாதே என மக்களின் எதிர்ப்பை மறைத்து தமது ஆட்சியை தாமே மீண்டும் பெற்றுவிடும்
    தந்திரம் கையாளப்படுகிறதோ என்ற பயமே எனக்கு வருகிறது. எனவே வாக்காளர்களே நோட்டா போடாமல் வோட்டா போட்டு வேண்டாத பேர்களை பெப்பாசிட்டும் இல்லாமல் வீட்டுக்கு அனுப்பி விடுவதே நல்லதாகத் தெரிகிறது. வாக்களிப்பது வாக்களரின் தனி உரிமை. அதைப் புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது ஒன்றேதான் நல்ல வழி.

  6. @கற்றது கையளவு, சரியான points.
    இவர்கள் ஓட்டு போட வேண்டாம் என்று சொல்வதே எப்போ பெரும்பான்மை மக்கள் ஓட்டு போடலையோ அது தான் “புர்ச்சி” பண்ண சரியான நேரம் என்பதை கணிக்கத்தான். ஆனா பாவம் மக்கள் ஓட்டு போடும் சதவிகிதம் ஒவ்வொரு தேர்தலுக்கும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

  7. இவங்க ஒவ்வொரு எலக்சன் லயும் ஓட்டு போடாத ஓட்டு போடாதனு சொல்லி பிரச்சாரம் பன்றிங்களே யாரு கேக்குறா ஊழல் செஞ்சு சம்மாதிச்ச வேட்பாளர் எலக்சன் ல நிக்காதே நின்னு ஓட்டு கேட்டு வந்தேனா உத விழும்நு மக்களை திரட்டி போராடலமே அல்லது நீங்களே எலச்சன் ல நிக்கலாமே

Leave a Reply to யோகி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க