privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பா1 கோடி வீடுகள் காலி – 50 லட்சம் பேருக்கு வீடில்லை

1 கோடி வீடுகள் காலி – 50 லட்சம் பேருக்கு வீடில்லை

-

ரோப்பா முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் வீடு இல்லாமல் தெருவில் தவிக்கையில், மறுபுறம் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் யாரும் தங்காமல் “காலியாக”வே இருக்கும் அதிர்ச்சியான தகவலை, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதனின் அத்தியாவசிய தேவையான இருப்பிடத்தைக் கூட முதலீடாக மாற்றி பல மக்களை வீதிக்கு விரட்டியிருக்கும் முதலாளித்துவத்தின் வக்கிரக் கதை இனி விரிவாக.

அயர்லாந்து
அயர்லாந்தில் உள்ள காலியான விற்கப்படாத வீட்டுத் தொகுப்பு.

இங்கிலாந்தின் பிரபல நாளிதழான கார்டியன், ஐரோப்பிய யூனியன் முழுவதும் மேற்கொண்ட ஆய்வில் இங்கிலாந்தில் சுமார் 7 லட்சம் வீடுகளும், ஜெர்மனியில் 18 லட்சம் வீடுகளும், பிரான்சில் 24 லட்சம் வீடுகளும், ஸ்பெயினில் 34 லட்சம் வீடுகளும் கேட்பாரின்றி காலியாக கிடப்பது தெரிய வந்துள்ளது.

இதை விட மிக அவலமான விடயம், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரீஸ், போர்ச்சுகல் போன்ற நாடுகளிலும் லட்சகணக்கான வீடுகள் ஆளில்லாமல் அனாதையாக விடப்பட்டுள்ளன.

அத்தனை வீடுகளும் உலகமயம் உருவாக்கிய புதுப் பணக்காரர்களால் “முதலீடு” என்கிற வகையில் வாங்கி போடப்பட்டவையாகும். லண்டனில் இப்படி முதலீடுகளாக வாங்கிக் குவித்த மிக ஆடம்பரமான வீடுகள் இன்று தங்கவும் ஆளில்லாமல், பராமரிப்பும் இல்லாமல் பாழடைந்து சிதைந்து வரும் காட்சிகளையும் கார்டியன் பத்திரிக்கை படம் பிடித்து வெளியிட்டுள்ளது.

பலகையால் மூடப்பட்டுள்ள வீடுகள்
வடக்கு இங்கிலாந்தில் உள்ள லிவர்பூலில் சீல் வைக்கப்பட்டுள்ள வீடுகள்.

2007-2008-ம் ஆண்டில் ஏற்பட்ட ரியல் எஸ்டேட் துறையின் ஊக பேர வணிக சூதாட்டம் உச்சத்தில் இருந்த போது, வீடுகளை வாங்கி விற்பது பெரும் லாபம் ஈட்டும் முதலீடாக விளம்பரப் படுத்தப்பட்டது. அதன் விளைவாக ஐரோப்பாவின் பல பணக்காரகளும், புது பணக்காரர்களும், தங்கள் முதலீடுகளை விரைவாக இரட்டிப்பாக்கி கொள்ள வீடுகளை வாங்கிக் குவித்தனர். இங்கிலாந்து, ஜெர்மனியில் வசிக்கும் பணக்காரர்கள் ஸ்பெயினில் தனி சொகுசு வீடுகளை (வில்லா) வாங்கிக் குவித்தனர். வீட்டின் மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு வேகமாக உயர்ந்து வரும் அதே நேரம், வீட்டை வாடகைக்கும் விடலாம் என்ற இரட்டை லாப ஆசை, வீடுகளின் மீது முதலீடுகளை குவிக்க வைத்தது.

திடீரென பெருகிய முதலீடுகளால் ஐரோப்பா முழுவதும் குறிப்பாக ஸ்பெயின், பிரான்சு போன்ற நாடுகளில் புதிய பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முளைத்துப் பெருகின. அவர்கள் பல புது திட்டங்களை அறிவித்து அப்பார்ட்மென்டுகள், தனி வில்லாக்கள், அதி சொகுசு வீடுகள், விளையாட்டு மைதானம் இணைந்த வில்லாக்கள், விடுமுறை வீடுகள் என கட்டிக்குவித்து அதை கணிசமாக விற்று லாபமீட்டவும் செய்தனர்.

காலி வீடுகள்
இங்கிலாந்தில் 7 லட்சம் காலி வீடுகள் உள்ளன.

தனி குடும்பத்திற்கு (நபருக்கு) விளையாட்டு மைதானம், நீச்சல் குளம் இணைந்த வீடுகளும்,  விடுமுறை நாள் வீடுகள் அதாவது விடுமுறையை கழிக்க கடற்கரை வீடுகள் என உருவாக்கப்பட்டன. பணம் இருப்பவருக்கு வேலை நாளில் தங்க ஒரு வீடு, விடுமுறையில் தங்க தனி வீடு என இவர்களின் ஆடம்பர அராஜகத்திற்கு அளவே இல்லாமல் இருந்தது.

ஆனால், விரைவில்இத்தகைய அராஜக முதலாளித்துவ பொருளாதாரத்தை தவிர்க்க இயலாமல் தாக்கும் கடும் பொருளாதார நெருக்கடி ஐரோப்பாவையும் பதம் பார்த்தது. பலர் வேலை இழந்தனர். அமெரிக்காவில் 2008-ல் வங்கிக் கடன் நெருக்கடியில் சிக்கி வங்கிகள் திவாலானதற்கு கட்டுப்பாடில்லாமல் வழங்கப்பட்ட வீட்டுக் கடன்கள் தான் ஆணி வேர். இந்தக் கடன்களை வம்படியாக வழங்க வைத்து பின்னர் மக்களை மொட்டையடித்தது கட்டுமானத் துறை முதலாளிகள்தான்.

ஐரோப்பிய காலி கட்டிடங்கள்
ஐரோப்பிய நாடுகளில் காலியாக உள்ள வீடுகள் எண்ணிக்கை விபரம்.

இந்த பொருளாதார நெருக்கடியின் விளைவாக பல நடுத்தர வர்க்க குடும்பங்கள் வேலையில்லாமல் வீதிக்கு விரட்டப்பட்டனர், அவர்களால் வாடகையும் கொடுக்க முடியாது என்பதால் ஐரோப்பா முழுவதும் வீடுகள் காலியாகத் தொடங்கின.

கட்டிடக் கலையின் உச்சத்தை தொட்ட பிரான்சில் வீடிழந்து வீதிக்கு வருபவர்களின் எண்ணிக்கை 2009-ம் ஆண்டிலிருந்து இன்று வரை சுமார் 5 லட்சமாக உயர்ந்து விட்டது.

கட்டப்பட்ட வீடுகள் அப்படியே தான் இருக்கின்றன. அவற்றில் தங்குவதற்கான விலையை இவர்களால் கொடுக்க முடியவில்லை. அதனால் வீட்டை காலியாக வைத்துவிட்டு இவர்களை விரட்டி விட்டார்கள். ஆம். அஃறிணை பொருட்கள்தான் உயிருள்ள மனிதர்களை விட முக்கியமானது. அடுத்து உலகமயமாக்கலின் மூலம் லாபத்தை அதிகப்படுத்த மக்களின் வேலைகளையும் பிடுங்கி விட்டார்கள். உழைக்க அவர்கள் தயார் தான், ஆனால் அவர்களுக்கு வேலை இல்லை. வருமானம் இல்லை, வீடில்லை உணவில்லை.

இது தான் சுதந்திர சந்தை எனும் முதலாளித்துவ விதி. மக்கள் வீதியில் விடப்பட்டு சிதைந்து போனாலும் கூட காசில்லாதவர்களை வீடுகளில் தங்க வைக்கக் கூடாது என்பதுதான் சந்தையின் “மனிதாபிமானம்”. சிதைந்து போய் கொண்டிருக்கும் அந்த வீடுகளை, வீடில்லாதவர்கள் ஆக்கிரமித்து விடாமல் போலீசைக் கொண்டு பாதுகாப்பது “ஜனநாயக“ அரசின் கடமை. இந்த ஜனநாயகத்தைத்தான் முதலாளிகள் உச்சி மோந்து வருடிக் கொடுக்கிறார்கள்.

முதலாளித்துவ மனிதாபிமானமும், ஜனநாயகமும் அதன் லாபத்தில் உறைந்து போய் இருப்பதை, இதை விட எளிதாக எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்.

லிவர்பூல் காலி வீடுகள்
லிவர்பூலில் சீல் வைக்கப்பட்ட காலி வீடுகள்.

இங்கிலாந்தின் வீடில்லாதவர்களுக்கான அமைப்பின் ஆதரவளாரான டேவிட் அயர்லாந்து இதை பற்றி கூறுகையில் “வீடுகள் மக்கள் தங்குவதற்காக தான், ஆனால் வீடுகள் இப்படி காலியாக உள்ளது என்றால் ஏதோ தவறாக உள்ளது. வீடுகளை முதலீட்டு பொருளாக நினைப்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோருகிறார். ஏதோ தவறு இல்லை, ஒட்டு மொத்த முதலாளித்துவ கட்டமைப்பே தவறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வீடில்லாதவர்கள் அனைவரையும் நிரப்பிவிடும் அளவு வீடுகள் இருந்தும் ஸ்பெயினில் மேலும் பலர் வீடிழந்து புதிதாக வீதிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்று புலம்புகிறார் ஸ்பானிய வீட்டுவசதி கழக உறுப்பினரான மரியா.

ஐரோப்பிய யூனியனின் வீடில்லாதவர்களுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பின் இயக்குனரான ப்ரிக் ஸ்பின்வின் கூறுகையில் ”வீடில்லாதவர்கள் நிலைமை மோசமாக உள்ளது, அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்து பல வீடுகளை சந்தையில் விற்பனைக்கு தயார் செய்ய வேண்டும்” என்று கோருகிறார். இது போன்று அழுகிப் போன பிணத்துக்கு அலங்காரம் செய்ய அல்லது செயற்கை சுவாசம் கொடுத்து உயிர்ப்பிக்க கோருவதுதான் இவர்களைப் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளின் திருப்பணி.

வீடு வெளியேற்றம்
ஸ்பெயின் – மாட்ரிடில் மாற்றுத் திறனாளி ஒருவரை வீட்டிலிருந்து வெளியேற்ற வந்திருக்கும் போலீஸ் படையும், அதை எதிர்த்து நிற்கும் அண்டை வீட்டுக்காரர்களும்.

இந்த வாதங்கள் மேலே அதிகாரத்தில் இருப்பவர்களின் காதில் கேட்காமல் இல்லை. ஐரோப்பிய யூனியன் கமிசனில் இந்த பிரச்சனை விவாதிக்கப்பட்டு, வீடில்லாதவர்களுக்கு தீர்வை வழங்க உரிய தந்திரத்தை வகுக்க வேண்டும் என்ற கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது.

1 கோடி வீடுகள் காலியாக உள்ளன, 50 லட்சம் பேர் வீடில்லாமல் இருக்கிறார்கள். இதற்கு என்ன தீர்வு, வீடு இல்லாதவர்களுக்கு 50 லட்சம் வீடுகளை கொடுத்தால் கூட 50 லட்சம் வீடுகள் மிஞ்சி விடும். எளிமையான கூட்டல் கழித்தல் கணக்கு சிறு குழந்தைக்கு கூட தெரியும். எளிமையான இந்த தீர்வை கண்டுபிடிக்க ஐரோப்பிய கமிசன் இனிமேல் ஒரு தந்திரத்தை கண்டுபிடிக்க வேண்டுமாம். இது கோரிக்கையாம், அது கமிசனில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாம். முழுப் பூசணிக்காயை இப்படி சரவண பவன் முழுச் சாப்பாட்டில் மறைக்க முனைகிறார்கள். இதை என்னவென்று சொல்வது? ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நோபல் பரிசு கிடைத்தது ஏனென்று இப்போது புரிகிறதா?

தன்னார்வ தொண்டு நிறுவன இயக்குனர் பிரிக் ஸ்பின்வின்னின் கோரிக்கையை கவனமாக கேளுங்கள், வீடுகளை சந்தைக்கு திறந்து விட வேண்டுமாம், சந்தையில் வேலைகள் ஒழித்துக் கட்டப்பட்டதால், வேலை இழந்து, வருமானம் இழந்து கடன் தவணையோ, வாடகையோ கட்ட முடியாமல் வீட்டை விட்டு வீதிக்கு வந்தார்கள் மக்கள். மீண்டும் வீடுகளை சந்தைக்கு விட்டு என்ன செய்வது? தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த பிரச்சனைக்கு எப்படிப் பட்ட தீர்வை முன் வைக்கிறார்கள் என்று பாருங்கள்?

இப்படியான ஏற்றத் தாழ்வுக்கு இது தான் குறிப்பிட்ட காரணம் என்று ஒன்றை கூறிவிட முடியாது. இதற்கு பல காரணங்கள் இருகின்றன. பல கோணங்களில் இதை ஆராய வேண்டும் என்று நழுவுகிறார்கள் முதலாளித்துவ நிபுணர்கள். அதற்கு ஒரு ஆய்வு நிறுவனத்தை உருவாக்கி, பல ஆண்டுகள் உழைத்து, ஆய்வறிக்கை வெளியிட்டு ஒரு சிலர் நோபல் பரிசு கூட வென்று விடலாம். யார் கண்டது. மக்களின் துயரத்தில் விருது ஜெயிப்பது என்பது அன்னை தெரேசாவிலிருந்து, நுண்கடன் நிபுணர் முகமது யூனுஸ் வரை நீள்கிறது.

முன்னர் லாபமீட்டும் நோக்கத்தில் பல புதிய வீடுகளை கட்டி தள்ளிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இந்த வீழ்ச்சியை சரி கட்ட அரை குறையாக கட்டிய வீடுகளை இடித்துவிட்டு செயற்கை பற்றாக்குறையை உருவாக்கி லாபம் பார்க்கலாம் என்று கடப்பாறையுடன் களத்தில் இறங்கியிருக்கின்றனர்.

இவ்வளவு வீடுகள் காலியாக இருக்க இன்னும் வாங்குவார்களா? என்று நீங்கள் கேட்கலாம். இன்னும் லண்டனில் ரியல் எஸ்டேட் விலை உயர்வில் தான் இருக்கிறது என்று உரக்கக் கூறுகிறார் ரியல் எஸ்டேட் முகவர் சாவ்லிஸ்.

வீடில்லாதவர்களுக்கு வீடுகள் கொடுத்தாலும் உபரியாக மீந்து போகும் அளவற்று வீடுகள் உள்ளது என கார்டியன் ஆராய்ந்து கூறிய பின் என்ன நடந்தது?

கார்டியன் கூறுவதற்கு முன்னரே பல இடங்களில் வீட்டு கடன் தொகையை  கட்டாதவர்களின் வீடுகளை ஜப்தி செய்யும் இடங்களில் கணிசமான போரட்டங்கள் நடந்தபடி உள்ளன.

ஆனால் வீடிழந்த மக்களுக்கு ஆக்கிரமிப்பு, போராட்டம், இருப்பவனிடமிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் போன்ற சிந்தனைகள் வராமல் இருக்க அரசிடம் கோரிக்கை வைக்க சொல்லி கொடுத்து கொண்டிருக்கின்றன தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். நமது அன்னா ஹசரேவை கூப்பிட்டு ஐரோப்பிய ‘ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கச் சொல்வார்களா’ என்று தெரியவில்லை.

பலர் தேர்தலில் தாங்கள் தெரிவு செய்த பிரதிநிதிகள் மூலம் இந்த பிரச்சனை தீர்க்கப்படலாம் என நம்பிக்கொண்டிருக்கலாம். ஆனால் தீர்வு எளிமையானது, குடியிருக்க வீடு தேவைப்படுபவர்கள் அவற்றை எடுத்துக் கொள்வதுதான் தீர்வு. அவர்களை சுரண்டிய பணத்தில் கட்டப்பட்ட வீடுகள் தான் அவை.

–    ஆதவன்

படங்கள் : நன்றி theguardian.com , rt.com

மேலும் படிக்க

  1. //குடியிருக்க வீடு தேவைப்படுபவர்கள் அவற்றை எடுத்துக் கொள்வதுதான் தீர்வு. அவர்களை சுரண்டிய பணத்தில் கட்டப்பட்ட வீடுகள் தான் அவை.//

    This is the most natural and sensible solution. The pity is most of the human beings have lost the common sense.

  2. The case is same in India also.

    You can find such ‘investor’ houses in Gurgaon and India too. In India too as per latest census lakhs are houses are empty, whereas many people are in need of housing.

    The reason is same. Investment. World over all the governements want to save the ‘rich’ crooks who is invested in real estate. In India many middle class morons heavily invested in real estate and they dont want real estate to crash. So they pitch for Modi and they think Modi will do some magic to save their real estate investments.

    This is not going to happen. We will see collapse of Indian Banking System and India Real estate soon

  3. I know many Indians in Dublin & Cork (Ireland) who took millions in mortgages to invest in real estates in 2008-09 period.
    Apartments which went for 400,000 EURO is now going for 150,000 odd EURO. So they are happy for the Banks to repossess it instead of paying the remaining 350,000 odd EURO amount.

  4. //அந்த வீடுகளை, வீடில்லாதவர்கள் ஆக்கிரமித்து விடாமல் போலீசைக் கொண்டு பாதுகாப்பது “ஜனநாயக“ அரசின் கடமை. இந்த ஜனநாயகத்தைத்தான் முதலாளிகள் உச்சி மோந்து வருடிக் கொடுக்கிறார்கள்.//

    முதலில் அரசாங்கம் என் கட்டுமான துறையை ஊக்குவிக்கிறது ?

    ஒரு வீடு கட்டினால் கட்டுமான தொழிலாளர் , வாகன் ஓட்டிகள் , பர்னிச்சர் செய்பவர்கள், வீட்டு தரகர்கள் ,வாங்கி பணியாளர்கள் என்று பலருக்கு வேலை கிடைக்கிறது . ஒருவர் கடன் வாங்கி வீடு கட்டும் போது , அவர் சமூகத்திற்கு வேலை அளிக்கிறார் . அதாவது அவரது எதிர்கால உழைப்பின் ஊதியத்தை இன்றைக்கே நிகழ்காலத்திற்கு கொண்டுவந்து சக மனிதர்களுக்கு வேலையாக அளிக்கிறார் .

    இதை உணர்ந்து கொண்ட அரசாங்கங்கள் வீடு காட்டுவதை ஊக்குவிக்கின்றன . வட்டிக்கு வரி சலுகை கொடுத்து பொறி வைத்து பிடிக்கின்றன .

    இதை முதலாளித்துவ நாடுகள் மட்டும் செய்யவில்லை , சீனாவிலும் இதே கதை தான் . பேயி நகரங்கள் என்று சீனாவில் அழைகிறார்கள்.

    இப்பாடைபபட்ட மக்களுக்கு மக்களே வேலை வழங்கும் திட்டமான கட்டுமான தொழிலை பாதுகாக்க முதிலீதுகளுக்கு அது காலியாக இருந்தாலும் பாதுகாப்பு கொடுப்பதே புத்திசாலித்தனம் .

    ஆனால் எனது ஊரில் இப்போது புதிதாக மணமானவர்கள் அனைவருக்கும் இருக்கும் கவலை வாடகைக்கு

    வீடு பிடிப்பது . சொந்தமாக வீடு வாங்குகிறாருவார்கள் மிகவும் குறைவு, வாங்குவது எட்டாக்னவு , முன்னோர் சொத்தை விற்று வாங்குபவர்களே அதிகம் .

    • சீனாவும் என்று ஏன் சொல்கிறீர்கள். பிற நாடுகளிடமிருந்து தன்மை ரீதியில் வேறுபடுத்திக்காட்ட அங்கு எதுவும் இல்லை. சீனாவும் ஒரு முதலாளித்துவ நாடு தான்.

      முதலாளித்துவம் என்றாலே மிகை உற்பத்தி தான். சமூகத்தின் தேவைக்காக அது எதையும் திட்டமிட்டு உற்பத்தி செய்வதில்லை. அனைத்து பண்டங்களையும் தேவையை விட பல நூறு மடங்கு மிகையாக தான் உற்பத்தி செய்கிறது. ஆனால் அதில் நான்கில் ஒரு பங்கை கூட (மொத்த சமூகத்திற்கும் போதுமான பங்கை கூட) சமூகத்திற்கு தருவதில்லை. பிற பண்டங்களை எப்படி அராஜகமான முறையில் மிகையாக உற்பத்தி செய்து தள்ளுகிறதோ அவ்வாறே வீடுகளையும் கட்டித்தள்ளியிருக்கிறது.

      ஒரு முதலாளிய நாட்டில் வாங்கு சக்தியற்றவெறும் ஆயிரம் பேர் இருந்து, அந்த நாட்டில் பல கோடி வீடுகள் காலியாக இருந்தால் கூட அந்த ஆயிரம் பேரும் வீதியில் தான் உறங்க வேண்டும். இது முதலாளித்துவ சமூக அமைப்பில் உள்ள அடிப்படையான முரண்பாடு. இந்த முரண்பாடு தீர்க்கப்படாத வரை வீடு பிரச்சினை மட்டுமல்ல மக்களின் ரொட்டி பிரச்சினையை கூட தீர்க்க முடியாது.

      • தலையில் தீ பற்றி விட்டது. முதாலிளித்துவ அமைப்பு முறையே கேள்விக் உள்ளாகிற காலம் இது.

        தாங்கள் பாதிப் பக்கத்தை தான் கண்டுள்ளீர்கள். மிகுதி பாதி இன்னிமேல் தான் நடக்க இருக்கிறது.

        சில புள்ளி விபரங்கள் எம்மைத் திகைப்பில் ஆழ்த்துகின்றன.

        பிரித்தானியாவில் பத்துமில்லியன் வீடுகள் குடியிருக்க ஆள் இல்லாமல் பூட்டியிருக்கின்றனவாம். இது மிகவும் அதிகப்பட்ட வர்ணணை போல் இருக்கிறது போல் தோன்றுகிறது. இதுவே உண்மையாக இருந்தால்….?

        புரட்சி. அது தானே புரட்சி. இப்படிதானே வரலாற்றில் புரட்சி செய்து அரசனின் தலையே மக்கள் கொய்தார்கள். இதுவே இன்றளவும் வரலாறுயாக இருக்கிறது.

        கையில் ஆயுதம் எடுத்தால் புரட்சி செய்துவிட முடியும் என கற்பனையில் மிதக்கிறார்கள் சிலர்.அறிவிலாதவர்கள் ஆயுதம் எடுத்து அழிவை தேடிக் கொடுத்த வரலாறு ஈழத்தமிழர் வரலாறு.

        இங்கு ஆயுதம் தீர்க்கமான அம்சமல்ல. இந்திய தொழிலாளவர்க்கத்தின் ஒருங்கிணைப்பும் அவர்களின் போர் குணமுமே வலுவான ஆயுதம். இதை புரியவைப்பது தான் இன்றுள்ள மிகப் பெரிய போராட்டமாக இருக்கிறது.

        நேற்றைக்குரிய காலம் இன்றைக்குரிய தல்ல.எல்லாம் மாறி மாறி வரும்.இதுவே முதாலிளித்துவ அமைப்பு முறையில் உள்ள தீர்க்க முடியாத முரண்பாடு.

        இந்த முரண்பாடுகளே இறுதியில் போராட்டத்திற்கும் புரட்சிக்கும் இட்டுச் செல்லுகின்றன.இனியும் இட்டு செல்லும் இது தவிர்க்க முடியாதது.

        ஆகமொத்தத்தில் இந்த முதாலித்துவ அமைப்புமுறைக்கு எதிராக போரிட்டவர்களே நாம் மாக்ஸியவாதிகள் என அடையாளப் படுத்துகிறோம்.இந்த வகையில் ஈ.வே.ரா வோ. அம்போத்தவரோ நெருங்க முடியாதவர்கள். இவர்களின் வேலைத்திட்டமே முதாலித்துவ அமைப்பு முறை எப்படி பாதுகாப்பது என்பது தான். இதற்கு மேல் அவர்களால் சிந்திக் முடியாதது அவர்களின் அரசியல் வறுமை.

        தாங்கள் சொன்ன குடியிருக்க வீடு-ரொட்டி என்பதும் அதற்காக போராடுவதும் முன்பு என்றும் இல்லாத வகையில் நடக்கத்தான் போகிறது.

        இது நிச்சியம் புரட்சியாலையே நடத்துவிக்கப்படும்.

        இந்த புரட்சியை எப்படி நடத்துவது என்பது தான் இன்றுள்ள கேள்வி.இதற்கு பதில் சொல்வது உங்களை போல எம்மை போல உள்ளவர்களின் தற்காலிக கடமையாகிறது.

        • I would like to get your perspective on China. Why did China chose , Capitalist path?
          What happened to their revolution?

          And not sure , why you chose the killer name as pet name ?

  5. இங்கே மட்டும் என்ன வாழ்கிறது

    விற்று தீர்ந்து விட்டது என மூன்று ஆண்டுகளுக்கு முன் சொன்ன அடுக்குமாடி கட்டிடங்களில் பாதிக்கு மேல் இன்றும் விற்கவில்லை

    ஐ டி நெடுஞ்சாலையில் எத்தனை வீடுகள் காலியாக இருக்கின்றன. எத்தனை நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன.

    ஆனால் பூசி மொழுப்பி வருகின்றனர்.

    பல்வேறு கண்காட்சிகள் நடத்தி பொய்யான தகவல்களை செய்தியாக தருகின்றனர்.

    உண்மை வேறு

    இங்கும் அப்படிதான்

  6. Though I want to post my comments in Tamil, I am unable because I do not know how to translate it by computer.

    I stay in Mumbai. During 2008-09 there was a real estate boom here. Apartments/villas were sold in astronomical prize. Exhibitions were conducted in various places to lure the customers. Last year it was published in one local magazine that thousands of apartments are vacant in Mumbai city because people cannot affort to pay crores of rupees.

    One sorry site I happen to see in every construction site. Hundreds of labourers are forced to occupy small shanties near the under-construction buildings. Makeshift shanties with no toilet, water facilities and they cook outside. The builders do not even give them proper water facilities. For months together, they stay there until those buildings are finished and they move to another construction site to live like the same, if not worse.

  7. மக்கள் உழைப்பல் உருவாக்கப்பட்ட வீடுகள் இவையனைத்தும் இதை மக்கள் கைப்பற்ற வேண்டும்.

  8. தமிழ் நாட்டின் பெரிய நகரங்களில் இப்படி கட்டிக் குவிக்கப் பட்டுள்ள வீடுகள் ஏராளமாக காலியாகக் கிடக்கின்றன. நகரின் நடுவில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வீடுகளை வாங்குவாரில்லாமல் இரவு நேரங்களில் இருளடைந்துகிடப்பதைத் தவிர்க்க வராண்டாவில் விளக்குப் போட்டு வைத்துவிட்டு பின்னிரவில் விளக்கை நிறுத்திவிடுகிறார்கள். நல்ல வாடகைக்கும் ஆள் கிடைக்காமல் வீடுகள் பூட்டிக்கிடக்கின்றன.வங்கிகளில் மக்கள் சேமிக்கும் பணம் ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு குறைந்த வட்டிக்கு கடனாகத் தரப்படுகிறது.திரும்பி வருவதைப் பற்றி அரசுகள் கவலைப் படுவதில்லை.ஆனால் தெருவோரவாசிகள் அன்றாடம் பெருகிவருகிறார்கள் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

  9. இவை எல்லாம் ஒன்றுமே இல்லை.தமிழகத்திலும் குறிப்பாக சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள புற நகர்களில் காலியாக உள்ள flats கணக்கு எடுத்தால் ஐரோப்பாவையே மிஞ்சி விடும். இதையே இந்தியா முழுக்க கணக்கு எடுத்தால் உலக புள்ளி விவரத்திற்கு ஒத்து போகும்

    • Logic is simple.

      In OMR, 2 grounds land comes to 2 crores max. Construction cost is another 1.5-2 crore max.
      Builder will construct 16/24 apartments in that depending on size. Even if he sells 8 apartments at 50 lakhs each, he easily makes 100% profit. Rest of inventory he will sell at slow phase hoping the apartment price will increase over 2-3 years.

      Most of the Banks NPA is from big public limited cos like DLF, IB, Unitech…, Even the big cos gave useless land well outside metros as surety, so they don’t mind Banks possessing it.

      Many builders got investment from corrupt govt employees – mostly from PWD, Commercial Tax, EB, Police. So regional builders are not dependent on Banks for loans neither are they in hurry to repay loans.

      There is a comedy for these corrupt govt employees. Builders will return investment with profit as long as they are Govt employees. Once they retired, Builders know that they are powerless and they will not return their share. Its black money so they cannot go to court. Also builders have rowdies with them. Anyway most of these corrupt govt employees die of poor health (too much money to spend on restaurant, alcohol and little physical work) within 2-3 years of retirement especially police, pwd and commercial taxes. They also indulge in too many sins and the curse of the innocents catch up.

      Biggest advantage for Builders – apartments are not perishable goods unlike airlines tickets or food materials.

Leave a Reply to Raman பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க