privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்மோடி ஆசியுடன் போட்டியிடும் சன்னியாசி ரவுடி

மோடி ஆசியுடன் போட்டியிடும் சன்னியாசி ரவுடி

-

ந்தியாவைக் கடைந்தேற்றுவதே தாங்கள் அவதரித்ததன் ஒரே நோக்கம் என்று பறைசாற்றிக் கொள்ளும் காங்கிரசு கூட தங்கள் அணி வரிசையில் லோக்கல் ரவுடிகளை பின்னால் நிற்க வைத்து விட்டு கோட்டு சூட்டு அணிந்த டூன் ஸ்கூல் கேடிகளைத் தான் முன்னே நிற்க வைக்கிறார்கள். அது நூற்றாண்டு கால பயிற்சி!

யோகி ஆதித்யநாத்
கோரக்பூரை கடந்த பதினைந்து ஆண்டுகளாக கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் உள்ளூர் தாதா யோகி ஆதித்யநாத்

இந்துத்துவ முகாம் அந்த வகையில் சோலார் ஸ்டாரை விட மட்டமான நடிப்பையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. மோடி வளர்ச்சி என்கிறார். ஆனால் அவரது அணிவரிசையில் ‘ஓம் காளி ஜெய் காளி’ என்று அலறும் சுடுகாட்டு கஞ்சா சாமியார்களே தென்படுகிறார்கள்.

நேபாளத்தின் லும்பினியில் இருந்து சாலை வழியாக இந்தோ-நேபாள் எல்லையைக் கடந்து கிழக்கு உத்திரபிரதேசத்துக்குள் நுழைந்தால் சுமார் 80 கிலோ மீட்டர்கள் தொலைவில் எதிர்ப்படும் முதல் பெரிய நகரம் கோரக்பூர். குறிப்பிட்ட அளவு மக்கள் தொகையைக் கடந்தால் அதை நகரம் என்று அழைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் கோரக்பூரை நகரம் என்கிறோம். ரயிலடி ஒன்று இருப்பதை தவிர்த்துப் பார்த்தால் நம் வேப்பூர் கிராமத்தில் இருக்கும் வசதிகள் கூட இல்லாத ஒரு ஊர். அனேகம் பேர் படிப்பறிவில்லாதவர்கள். இருந்த ஒரே ஒரு உரக்கம்பெனியும் 1990-ம் ஆண்டே மூடப்பட்டு விட்டது. அடுத்த சில ஆண்டுகளிலேயே மிஞ்சியிருந்த சில சர்க்கரை ஆலைகளும் மூடப்பட்டு விட்டன. சுமார் 70 சதவீத வீடுகளில் கழிவறை இல்லை. ராப்தி நதிக் கரையில் அமைந்துள்ள கோரக்பூர் வலதுசாரி இந்துத்துவ அரசியலின் தளமாகவும், கூடவே வருடத்துக்கு நூற்றுக்கணக்கான உயிர்களை பலி வாங்கும் யானைக்கால் நோயின் உறைவிடமாகவும் விளங்குகிறது.

கோரக்பூரை கடந்த பதினைந்து ஆண்டுகளாக கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது யோகி ஆதித்யநாத். 1999-ம் ஆண்டிலிருந்து அவர் கோரக்பூர் பாராளுமன்றத் தொகுதியில் தொடர்ந்து வென்று வருகிறார். இம்முறையும் அவரே வேட்பாளர், அவரே வெற்றி பெறுவார் என்று பரவலாக கருதப்படுகிறது. கோராக்நாத் மடத்தின் தலைமை பூசாரியாகவும் இருக்கும் ஆதித்யநாத், ஹிந்து யுவ வாஹினி என்கிற குண்டர் படை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார்.

ஹிந்து யுவ வாஹினியின் மூலமாக சிறு சிறு உள்ளூர் தகராறுகளில் தலையிடும் ஆதித்யநாத் கடந்த பத்தாண்டுகளில் சிறிதும் பெரிதுமாக சில பத்து கலவரங்களை நடத்தியிருக்கிறார். தானே முன்னின்று 2007-ம் ஆண்டு கோரக்பூரில் கலவரம் ஒன்றை ஒருங்கிணைத்து நடத்தி அதற்காக சிறை சென்றும் திரும்பியிருக்கிறார். கலவரங்களின் ஊடாக இந்து முசுலீம் மக்களிடையே பிளவுண்டாக்கி இந்துக்களின் காப்பாளராக தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார். தற்போது கிழக்கு உத்திரபிரதேசத்தின் சில பல சட்டமன்றத் தொகுதிகளது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவிலான செல்வாக்கையோ ஆதிக்கத்தையோ அவர் அடைந்துள்ளார்.

நீங்கள் ஒருவேளை நன்றாக படித்தவராகவோ, ’மெல்லிதயம்’ கொண்டவராகவோ இருக்கலாம். என்னவாகவோ இருந்து விட்டுப்போங்கள்; ஆனால், மோடி சொல்கிறாரே என்று ஆதித்யநாத்திடம் போய் ‘நாட்டின் வளர்ச்சி, சிறந்த அரசாளுகை…’ என்றெல்லாம் இழுத்தீர்கள் என்றால் செவுள் பிய்ந்து போக எல்லா வாய்ப்புகளும் உள்ளது. ”உத்திரபிரதேசத்தையும் (!) இந்தியாவையும் இந்து ராஷ்டிரமாக்கும் வரை நான் ஓயமாட்டேன்’ என்பது தான் அவரது சூளுரை லட்சியம் இலக்கு நோக்கம் எல்லாம். அந்த லட்சியத்துக்கு தோதுபட்டவராக மோடி இருப்பார் என்பது ஆதித்தியநாத்தின் நம்பிக்கை.

மோடிஜியை பாபா ஆதித்யநாத் தேர்வு
மோடிஜி எனப்படும் பிராணியை பாபா ஆதித்யநாத் தெரிவு செய்திருக்கிறார்.

மற்றபடி பாரதிய ஜனதாவிடம் இந்துத்துவத்தை கொடுப்பதும் செத்தவன் கையில் வெற்றிலை பாக்கு கொடுப்பதும் ஒன்று தான் என்பது ஆதித்யநாத்தின் தனிப்பட்ட கருத்து.  தனது சொந்த கம்பேனியான ஹிந்து யுவ வாஹினியின் பலத்தில் தானே இந்து ராஷ்டிரத்தை உருவாக்கி விடமுடியும் என்கிற தன்னம்பிக்கை இருப்பதால் தாய்க் கட்சியுடனான அவரது உறவு அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை என்றாலும், கழுத்தை அறுப்பதாக இருந்தாலும் ஈரத்துணி போட்டு நாசூக்காக அறுக்க வேண்டும் என்கிற நடைமுறை யதார்த்தத்தை உணர்ந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் அவ்வப்போது பஞ்சாயத்து பேசி ஆதித்தியநாத்தை அமைதிப்படுத்தி வைத்திருக்கிறது. இந்த முறை உத்திரபிரதேச மாநில பாரதிய ஜனதாவின் தேர்தல் பணிக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவி ஆதித்ய நாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

மோடியால் உபியை வளைக்க அனுப்பப்பட்ட அமித் ஷா கூட ஆதித்யநாத்தின் தம்பி போன்றவர்தான். எனவே தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஆதித்யநாத் காவிப் பட்டையை கிளப்ப எந்த தடையும் இல்லை.

கோரக்பூர் மற்றும் கிழக்கு உத்திரபிரதேசத்தைப் பொருத்தவரை மோடிஜி எனப்படும் பிராணியை பாபா ஆதித்யநாத் தெரிவு செய்திருக்கிறார் என்பதே வாக்காளர்களிடம் பாரதிய ஜனதா வைத்திருக்கும் வளர்ச்சி குறித்த பம்மாத்து ஒரு மோசடி என்பதைக் காட்டுகிறது. பொருளாதார வளர்ச்சி சிறந்த அரசாளுகை என்பதெல்லாம் எங்கோ மருதைக்கு அங்கிட்டு திண்டுக்கல் பக்கமாக இருக்கிறது என்பதாக பாவ்லா காட்டுவது தான் அந்த பிராந்தியத்தில் பாரதிய ஜனதாவின் தேர்தல் செயல் தந்திரம்.

கோரக்பூரின் பெரும்பான்மை வாக்காளர்கள் யோகி ஆதித்யநாத்தை தேர்ந்தெடுத்து விட்டதாக தோன்றினாலும், சிறுபான்மை மதத்தினரும், தலித்துகளும் இதில் சேர்த்தியில்லை. கோரக்பூரில் உள்ள 20,000 கிறிஸ்தவர்கள் பாரம்பரியமாக காங்கிரஸ் ஆதரவாளர்கள், இந்த முறை சிலர் ஆம் ஆத்மி கட்சிக்கும், சிலர் சமாஜ்வாதி கட்சிக்கும் வாக்களிக்கப் போவதாக சொல்கின்றனர். “முஸ்லீம்களைப் போலவே கிறிஸ்தவர்கள் பா.ஜ.கவின் வாக்கு வங்கியாக இல்லை” என்கிறார் செயின்ட் ஜான் சர்ச்சின் ரெவரண்ட் ரோஷன் ஆல்.

லோக்நீதி மற்றும் சி.எஸ்.டி.எஸ் அமைப்பு கடந்த 15 ஆண்டுகளில் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி, தேசிய அளவில் பிரதமர் வேட்பாளராக யார் நிற்கிறார்கள், அவர்களைச் சுற்றி அலை அடிக்கிறதா, சூறாவளி வீசுகிறதா என்பதைப் பற்றியெல்லாம் மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்களுக்கு எந்த கவலையும் இருப்பதில்லை. வேட்பாளர்கள் மற்றும் வட்டார விவகாரங்களை முன்னிறுத்தியே அவர்கள் வாக்களிக்கிறார்கள் என்று இந்த ஆய்வு சொல்கிறது. பாரதிய ஜனதா என்ன தான் மோடி அலை மோடி சுனாமி என்று மேல்மட்டத்தில் சீன் போட்டாலும் கீழ் மட்டத்தில் தனக்கு எது பயன்படுமோ அதையே செய்து வருகிறது.

உலகளாவிய சிந்தனை, உள்ளூர் அளவில் செயல்படுதல் (Think Global act local) என்கிற அதே பழைய கார்ப்பரேட் தாரக மந்திரம் தான். பிராந்திய அளவில் மத மோதல்களைத் தூண்டி விட்டு வாக்காளர்களை மத ரீதியில் பிளவு படுத்தி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வேலையைத் தான் செய்து வருகிறது. எழவு வீட்டில் ஓட்டுக் கேட்கப் போனால் கொள்கை விளக்கப் பாட்டு போட்டா கேட்க முடியும்? ஒப்பாரி ராகத்தில் தானே ஓட்டு கேட்க முடியும். அதனால் தான் மேலே ஓவர் கோட்டும் கீழே லங்கோடும் அணிந்த வினோத ஜந்துவாக பாரதிய ஜனதா காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

பிரவீன் தொகாடியா
தொகாடியா, ”முசாஃபர் நகரை மறந்து விடாதீர்கள், அசாமில் கோக்ரஜாரை மறந்து விடாதீர்கள், குஜராத்தை மறந்து விடாதீர்கள்” என்று நேரடியாக இசுலாமியர்களை மிரட்டுகிறார்

இது பாரதிய ஜனதாவின் தனிச்சிறப்பான பிரச்சினை. காங்கிரசைப் பொருத்தவரை வந்தால் மலை போனால் மயிர் என்ற ஜென் நிலைக்குப் போய் விட்டதால் எந்தக் கூச்சமோ தயக்கமோ இல்லாமல் மினு மினுக்கும் சிலுக்கு ஜிப்பாவும் கட்கத்தில் லெதர் பேக்குமாக ’பார்த்தீர்களா எங்கள் கடந்த பத்தாண்டு கால சாதனையை’ என்று நெடுஞ்சாலைகளை வெள்ளைக்காரனுக்கு விற்றதையெல்லாம் சாதனை என்று ஏடுகளில் பக்கம் பக்கமாக விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் பாரதிய ஜனதா பக்கமே வருவோம். ஒருபக்கம் வளர்ச்சி, சிறந்த அரசாளுகை, ஊழல் ஒழிப்பு என்று பேசிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் ப்ரவீன் தொகாடியா இசுலாமியர்கள் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் வீடோ நிலமோ வாங்குவதை தடை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பேசுகிறார். கேரளாவில் பிரசாரம் செய்ய வந்த தொகாடியா, ”முசாஃபர் நகரை மறந்து விடாதீர்கள், அசாமில் கோக்ரஜாரை மறந்து விடாதீர்கள், குஜராத்தை மறந்து விடாதீர்கள்” என்று நேரடியாக இசுலாமியர்களை மிரட்டுகிறார். பீகார் மாநில பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரான கிரிராஜ் சிங் , மோடி பிரதமராக வரகூடாது என்று நினைப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிப் போகட்டும் என்கிறார்.

பால்கோவாவை சுவைக்கும் போது பல்லில் தட்டுப்படும் கல்லுக்கு முகம் சுளிப்பது போல் இந்தப் பேச்சுக்களை முதலாளித்துவ ஊடகங்கள் எதிர்கொள்கின்றன. டைம்ஸ் நௌ தொலைக்காட்சியின் விவாதம் ஒன்றில் ‘இன்னுமா இவிங்க திருந்தலை’ என்று ஆச்சர்யப்படுவது போல் நடிக்கிறார் அர்னாப் கோஸ்வாமி. ஆனால், இவர்கள் தான் இந்துத்துவத்தின் உண்மையான முகங்கள் என்பது நம்மை விட கோஸ்வாமிகளுக்குத் தான் நன்றாகத் தெரியும். பாரதிய ஜனதாவின் தேர்தல் வெற்றிக்காக பிரதேச அளவில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் மட்டுமல்ல, அதன் வேட்பாளர்களும் இத்தகையவர்கள் தான்.

“இல்ல பாஸ், அதான் மோடி இப்பல்லாம் வளர்ச்சி பத்தி மட்டும் தானே பேசறாப்ல” என்று வைக்கோத்தனமாகவோ கேணத்தனமாகவோ சிலர் கேட்கக் கூடும். காமக் கொடூரர்கள் எல்லா நேரங்களிலும் வல்லுறவுக்கு ஆயத்தமான கோலத்திலேயே திரிவதில்லை என்பதை அவர்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளோம். பல் விளக்கும் போதோ, ஆய் கழுவும் போதோ அவர்களும் சராசரி மனிதர்களைப் போலவே நடந்து கொள்வார்கள். இதற்கு மேலும் அப்பிராணிகளாக இருப்பவர்களுக்கு அதிரடிப்படை திரைப்படத்தில் அமாவாசையின் சுயரூபம் வெளிப்படும் காட்சியை பரிந்துரைக்கிறோம்.

வெற்றி உறுதிப்படுத்தப்படும் வரை அடக்கி வாசிக்கும் கட்டாயம் மோடிக்கு இருக்கிறது. நாற்காலியில் அவர் அமர்ந்த பின் தான் அந்த டிசைனர் குர்த்தா, டிசைனர் கூலர்ஸ், நாசூக்கான சிகையலங்காரத்துக்குப் பின்னே ஒளிந்து கொண்டிருக்கும் பிணந்தின்னும் நாகா அம்மணச் சாமி வெளிப்படுவான். அதாவது கீழே பீறிடத் துடிக்கும் எரிமலையின் முனையின் மேல் தடுப்பாக தனது புட்டத்தையே பொருத்தி அமர்ந்திருப்பவனின் நிலை அது.

ஆயிரம் அவஸ்தைகள் இருந்தாலும் மோடியைப் பொறுத்த வரையில் நாய் வேஷம் போட்டால் குரைக்க வேண்டும், பேய் வேஷம் போட்டால் முருங்கை மரம் ஏறியாக வேண்டும் என்று தொழில் தர்மத்தை பேணுபவராகவே இருக்கிறார். கிரிராஜ் சிங் மற்றும் ப்ரவீன் டொகாடியாவின் கருத்துக்கள் பற்றி ட்விட்டர் தளத்தில் “தங்களை பாரதிய ஜனதாவின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் பொறுப்பற்ற பேச்சுக்கள் பிரச்சாரத்தை வளர்ச்சி மற்றும் சிறந்த அரசாளுகையில் என்கிற கேந்திரமான பிரச்சினையில் இருந்து விலகச் செய்கிறது” என்றும் ”இது போன்ற பொறுப்பற்ற பேச்சுக்களை நான் ஒப்புக்கொள்வதில்லை. அவ்வாறு பேசுபவர்கள் இனிமேல் அப்படிப் பேசக்கூடாது” என்றும் எழுதியிருக்கிறார்.

அவர் வார்த்தைகளில் இருக்கும் நாசூக்கான கொலைவெறியை கவனித்தீர்களா… “ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களாம்”. பிரவீன் தொகாடியாவை ஹரேன் பாண்டியாவைப் போல் அட்டு பீசு என்று நினைக்கும் அளவுக்கு மோடி மொக்கை அல்ல. இந்தப்பக்கம் ட்விட்டரில் இப்படி எழுதி விட்டு அந்தப்பக்கம் தனியே அவருக்கு போன் போட்டு ‘கொஞ்ச நாள் பொறு தலைவா…” என்று சுதி சேர்த்திருப்பார். என்றாலும் தற்போதைய சூழ்நிலையில் மோடியிடம் நாம் காணும் அந்த அவஸ்தை இருக்கிறதே.. அது தான் வரலாற்றின் பக்கங்களில் பதியப்படாத யூதாஸ் இஸ்காரோத்தின் உணர்ச்சி.

கிழவியை கட்டிப் பிடித்து முத்தமிட்ட பின் வாயைப் பன்னீரில் கொப்பளிக்கும் தலைவர்கள் நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா… மோடியைப் பொறுத்தவரையில் இது வளர்ச்சி பற்றி பேசும் சீசன், அடுத்து வென்ற பின் அவர் இந்துத்துவ பன்னீரால் வாயைக் கொப்பளித்து துப்புவார் – அது இந்நாட்டு மக்களின் தலையில் அமிலமாகப் பொழியும்.

வைகோ போன்றவர்களுக்கு அது பிரச்சினையில்லை மலத்தில் ஊறவைத்த செருப்பால் அடிவாங்கிய பின்னும் தோளில் தொங்கும் அந்த ரேமாண்ட் பேண்ட் பிட்டை இழுத்து விட்டுக் கொண்டு ‘அய்யகோ.. ரோமாபுரியில் அன்று ஏமாந்தானே ஸ்பார்ட்டகஸ்’ என்று எதையாவது உளறிக் கொட்டுவார். ‘அட நம்ம கலிங்கப்பட்டியாரு நல்லவருதேங்.. ஆனா பாவம் பொழைக்கத் தெரியாதவரு’ என்று அதையும் நம்ப அவருக்கு தமிழ்நாட்டில் ஆட்கள் இருக்கிறார்கள்.

இதனால் பாரதிய ஜனதாக் கட்சியை வெறும் இந்துமதவெறிக் கட்சியாக மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது. ஆளும் வர்க்கங்களும் குறிப்பாக முதலாளிகளும் மோடியை கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று வெறியாய் வேலை செய்யக் காரணம் என்ன? புதிய பொருளாதாரக் கொள்கை மூலம் இந்தியாவை வேகமாக சுரண்டும் வேலையை மோடி மூலம் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். இதனாலேயே அவர்கள் மன்மோகன் காங்கிரசு கும்பலை கடாசி விட்டு மோடியை கையில் எடுத்திருக்கிறார்கள்.

முதலாளிகளுக்கு இந்த கடமையை செய்ய உறுதி பூண்டுள்ள மோடி மறுபுறம் தனது இந்துத்துவ கட்சி, அணிகளின் வெறிக்கும் தீனி போடுவது அவசியம். இதை ஒரு வரம்புக்குட்பட்டு முதலாளிகளும் கண்டுகொள்ளமாட்டார்கள். ஏனெனில் இத்தகைய மத ரீதியான செல்வாக்கும், சிந்தனையும் மக்களை பிளவுபடுத்தும் என்பதால் அவர்களுக்கும் ஒகேதான். அதே நேரம் இதை ‘தொழில் அமைதி’க்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் செயல்படுத்தக் கூடாது.

அடுத்து நகர்ப்புறங்கள், தென்மாநிலங்களில் வளர்ச்சி குறித்து பேசும் பாஜக இந்தி பேசும் மாநிலங்களில் இந்துமதவெறியையே முதன்மையாக பேசிவருகிறது. இது முரண்பாடில்லை, ஒத்திசைவு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த பின்னணியில்தான் இந்த கோரக்பூர் கொலைவெறி சாமியார் எம்பியாக போட்டியிடுகிறார். ஆக பாஜக இரண்டு முனைகளிலும் இந்திய மக்களின் எதிரியாக வலம்  வருகிறது.

காதுள்ளவர்கள் கேட்கக் கடவர்; சொரணை உள்ளவர்கள் சிந்திக்கக் கடவர்.

–    தமிழரசன்.

  1. தமிழரசா,நேற்று காஷ்மீரில் முஸ்லீம் தீவீரவாதிகள் குண்டு வைத்ததில், ஏழு பேர் இறந்தார்களே அதை பற்றியும் எழுதவேண்டியது தானே…. உனக்கு இந்தியா நாசமாய் போகனும்,நக்சல்பாரி கூட்டம் வளரனும், நீயும்,நீ சார்ந்த வினவும், மற்ற பு.ஜ.க பசங்களும் வெட்டியா கூட்டம் போட்டு பிரச்சனைய பெருசாக்ககதான் லாயக்கி….உங்க கூட்டம் போராடிய அனைத்து விசயங்களும் ஏன் தோற்றது என்று யோசித்தது உண்டா???? கூடங்குளத்தில் 66 சதவிகீதம் வாக்கு பதிவு!!! … அடுத்த ஆட்சி யார் என்பது மே மாதம் 16 தான் தெரிய வரும் அதற்க்குள் ஊரில் உள்ள எல்லோர் மீதும் சேற்றை வாரி இறைப்பது கேவலமாக இருக்கிறது… இதைத்தான் சொல்லவார்கள், ” கெட்டாலும் மேன்மக்கள், மேன்மக்களே”…நீ..நீ தான்…

    (edited)

    • //தமிழரசா,நேற்று காஷ்மீரில் முஸ்லீம் தீவீரவாதிகள் குண்டு வைத்ததில், ஏழு பேர் இறந்தார்களே அதை பற்றியும் எழுதவேண்டியது தானே…. //
      நன்பா குண்டு வைத்தது தீவிரவாதிகள் என்பது பொய்…
      மோடி விளம்பரத்திற்கான வெடி…
      இந்திய இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வெடி..
      இதை உண்மையான புலனாய்வு அமைப்பின் மூலம் புலன் விசாரனை செய்தால் உண்மை தெரியும்

  2. இண்டியன் உன்னை இண்டியன் என்று சொல்லாதே.பாரதபுத்ரன் என்று சொல்லு.இல்லாவிட்டால் உன்னையும் குறிவைத்துவிடுவார்கள் இந்து பயங்கரவாதிகள்.கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்றால் என்னப்பா?இனப் படுகொலை,சாதிப் படுகொலை,கவுரவக்கொலை,மதக்கலவரங்கள்,கட்டை பஞ்சாயத்து,கூட்டிக்கொடுப்பது,பன்னாட்டு முதலாளிகளின் காலை நக்குவது, நாட்டின் இயற்கை வளங்களை அன்னியனுக்கு தாரைவார்ப்பது,மக்களிடம் ஓட்டு வாங்கும்போது பொய் சொல்லி ஏமாற்றுவது .இவர்கள்தானே நீ சொல்கிற மேன்மக்கள்? நக்சல்பாரிகள் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் அதிகாரத்துக்காகப் போராடுகிறார்கள். நீ பாராளுமன்றப் பன்றித் தொளுவத்தைப் பற்றிப் பேசுகிறாய்.கிரிமினல் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்கிறது மோடி.அதுவே மிகப் பெரிய கேடி.கஞ்சா சாமியார்கள், நரமாமிசப் பட்சிணிகள்,எடியூரப்பா,ரெட்டி சகோதரர்கள் போன்ற கொள்ளைக்காரர்கள் இன்னுஞ் சொல்லப் போனால் அதிகமான கிரிமினல் வேட்பாளர்களை காவி கும்பல்தான் நிறுத்தியிருக்கிறது என்கிறது புள்ளிவிவரம்.இதை காவித் தலைமை மறுக்கவில்லை.கிரிமினல்கள் மோடிக்கு அல்லக்கைகளாக வந்தால் தான் மக்களை ஆன் தி ஸ்பாட்டிலேயே அடக்கி ஒடுக்கமுடியும் என்பது ஆர்.எஸ்.எஸ்.குண்டர்களின் கணிப்பு.இந்தப் பிக்காலிப் பயலுக என்னத்த சாதிச்சிட்டானுக. நாட்டை கூறுபோட்டு விற்றதைத் தவிர?இந்தியா உன் சப்போட் சந்தி சிரிக்கிறது பார்.

  3. மொத்தத்தில் இந்தியா நாசமாகனும் ,அதை “நீ செய்தால் என்ன ,நான் செய்தால் என்ன” என்று இரண்டு கட்சிகளும் சேர்ந்து (காங்கிரஸ் ,பா ஜா க )வேலை செய்கின்றது ,

    செருப்பால் அடித்து சொல்லியது போல் “நச்” என்று இருக்கிறது செய்தி ,வைகோ ,போன்ற சைக்கோக்களுக்கு புரிந்தால் சரி ….

  4. தாதுபுஸ்டி லேகியம் மொத்தம்&சில்லறை விற்பனை தாதுபுஸ்டி லேகியம் மொத்தம்&சில்லறை விற்பனை

    ஒரு பாட்டில்….ஒரே ஒரு பாட்டில் வாங்கி சாப்பிடுங்கள்
    இந்தியா வல்லரசு ஆகிவிடும்!
    கலாம் பாய் விரும்பி சாப்பிடும் லேகியம்….
    பாரதா மாதா தாது புஷ்டி லேகியம்

Leave a Reply to Jawahar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க