privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைவச்சா குடுமி போனால் மழை !

வச்சா குடுமி போனால் மழை !

-

கொண்டைகள் கூட்டம்
குளத்தினில் பார்த்து
கெண்டைகள் நடுங்கின.

kudumiபூணூல் பாம்புகள் புடைசூழ
தண்ணீர் பாம்புகள் பயந்தன.

கலவர சத்தம் கேட்டு
மேலே வந்த தவளைகள்
வேதநிலவரத்தால் மிரண்டுபோய்
தண்ணீர்க்கடியில் தப்பின.

பார்ப்பன பாசியில்
வழுக்கி விழுந்தது
படித்துறைப் பாசி.

கறவை மாட்டுக்கு
பொட்டுத் தண்ணீரில்லை,
பார்ப்பன தொந்திக்கும்
கருங்கல் நந்திக்கும்
‘செட்டு’ தண்ணீர்.

முழுநிர்வாணமாய்
கொள்ளிக்கட்டை பிடித்தால்
மழைவரும் எனும் நம்பிக்கை
மடத்தனம், அசிங்கம் என்றால்,
அரைநிர்வாணத்தோடு
அர்ச்சகர்களை குளத்தில் இறக்கிவிடும்
வருண ஜபம் மட்டும் சுவிங்கமா?

nandhiசூத்திர சம்புகன் நம்பிக்கை
சவம்!
பார்ப்பன அம்பிகளின் நம்பிக்கைக்கு
ஜபம்!

எப்படியோ!
வருண ஜபத்தின் புண்ணியத்தால்
யாகம், கும்பம், கலச ஆவாகனம்
புண்ணியாவாஜனம், சிறப்பு பூஜை
என பார்ப்பனக் காட்டில் மழை!

பூணூல் அறிக்கைக்கு பல கோடி,
படித்த பையன் கேட்கிறான்
வானிலை மையம், வானிலை அறிக்கை
நாட்டுக்கு எதுக்கு டாடி?

மழை வாரா காரணத்தை
மறைக்கும் மறைகளின் பயங்கரம்
அரசும், பார்ப்பனியமும்!

kudumi-2காட்டு மரக் கொள்ளை
ஆற்று மணல் கொள்ளை
இயற்கையைச் சீரழிக்கும்
கனிமவளக் கொள்ளையென
பருவகாலத்தை சீரழித்த பங்காளிகளோடு
வருண ஜபத்தில் தப்பிக்கிறார்கள் கயவர்கள்.

மழைக்கொலை செய்த பாவிகளே
வருண ஜபம் செய்வதைப் பார்த்து
காறித்துப்புகிறது சூரியன்!

புத்திவராத தேசத்தில்
மழைவந்து என்ன ஆகப் போகிறது?
என்று தோலை உரிக்கிறது கோடை!

துரை.சண்முகம்

மேலும் படிக்க

  1. மழை வேண்டி முசுலிம்கள் தொலுகை நடத்தியதை பற்றி வினவு ஏன் கவிதை எளுதவில்லை? அவ்வாறு எலுதினால் முசுலிம்கள் ஆப்பு வைத்து விடுவார்கல் என்ரு பயமா? எல்லாம் வல்ல இறைவனை எப்படி வணங்கினாலும நல்லதே. ஆனால் இந்து கடவுலை மட்டும் விமர்சிப்பது போல் இசுலாமிய கடவுலை விமர்சிக்க வினவுக்கு தைரியம் உல்லதா?

    • Hi Saravanan,

      Here, the issue is not people (any people) praying for rain.

      The issue here is that a special type of middle men (by birth) doing some kind of mysterious actions (and in addition benefitting from it).

      I hope you see the difference. If not, questions are welcome.

    • இந்து முஸ்லிம் கிறிஸ்தவர் யார் வேண்டுமானலும் மழை வேண்டி பிராத்திப்பது மூடநம்பிக்கையாய் இருந்தாலும் அவர்களுடைய தனிப்பட்ட நம்பிக்கை என நினைக்கலாம். ஆனால் ஒரு அரசாங்கமே பார்ப்பானை வைத்து ஜெபம் செய்தால் தான் மழை வரும் என்று பொது மக்கள் செலவில் வருண ஜபம் செய்வதை கட்டாயம் கண்டிக்கத்தான் வேண்டும். அதுவும் பூணூல் தொந்திகள் ஓதினால் தான் பலிக்கும் என்று அவாளை மட்டுமே வைத்து செய்வது வருணாசிரம சாதித் திமிர்தான். மூடநம்பிக்கையும், சாதிவெறியையும் பிரித்து பார்க்க அரசியல் தெரிய வேண்டும். சும்மா இவனத் திட்டுனா அவனையும் திட்டனும், அவன நிறுத்தசொல் அப்புறம் நான் நிறுத்தரன் என்பதுதான் பார்ப்பன மத வெறியர்கள் பதில் சொல்லாமல் தப்பிக்கும் தந்திரம். இதுக்கு பலியாகாமல் பேசப்பட்ட விசயம் சரியா தப்பா என யோசியுங்களேன்.

      வர்க்கத் தமிழன்

  2. அம்பிகள் அலசிய இந்த கலங்கலைத்தான் புனித நீரென மண்டையில் தெளித்து கொஞ்சம் தொண்டையிலும் இறக்குகிறான் நம் பக்தன்.

    குளத்தில் இறங்கினால் குண்டிதானே ஐய்யா நனையும், மழை எப்படி பொழியும்? என்று நாம் கேட்காதவரை இந்தக் குடுமிகளின் கும்மாளம் தொடரத்தான் செய்யும்.

    மழை பெய்யும் என பஞ்சாங்கத்திலே எழுதியவர்களும் இந்தப் பரதேசிகள்தானே! இவர்கள் கணித்தபடி ஏன் மழை பொழியவில்லை என யாராவது கேட்கிறோமா?

    • \\குளத்தில் இறங்கினால் குண்டிதானே ஐய்யா நனையும், மழை எப்படி பொழியும்? என்று நாம் கேட்காதவரை இந்தக் குடுமிகளின் கும்மாளம் தொடரத்தான் செய்யும்.\\

      கவிதை சாடுகிற சாரத்தை ஒருவரியில் சொல்லிவிட்டீர்கள்.

  3. நடக்குதோ இல்லையோ. அட்லீஸ்ட், எல்லோருக்கும் பயன்பெற, இந்த முயற்சியாவது செய்யுறாங்கோ. ஒரு கூட்டம், அதையும் குறை சொல்லிக்கிட்டு காலத்தை கழிக்குது…

  4. வருன பகவான் “ஒன் பாத்ரூம்” போவதுதான் மழை
    என்று அக்கிரகாரம் ஓதுகிறது

  5. பெங்கலூரு சிறப்பு நீதி மன்றத்தை கலைத்துவிட
    இன்னொரு முழுக்கு போட்டால்
    ,தினமலம் அதை
    முதல் பக்கத்தில் போட்டு மகிழுமே?

    • காக்கா உட்கார்ந்தது ஒரு இடத்தில்
      பழம் விழுந்தது வேறு இடத்தில்

      காக்கா தினமும் பணங்காயில் உட்காரும்
      பணங்காய் பழுத்தால் தானே கீழேவிழும்

Leave a Reply to Saravanan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க