privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்பாஜக ஆசி பெறும் பாபா ராம்தேவின் பார்ப்பனத் திமிர்

பாஜக ஆசி பெறும் பாபா ராம்தேவின் பார்ப்பனத் திமிர்

-

டகங்களால் உருவாக்கப்பட்ட மோடி ‘அலை’ உண்மையில் காவி சாக்கடையின் கழிவு அலை என்பதை காலம் நிருபித்து வருகிறது. வட இந்தியாவுக்கே அதிகம் உள்ள பார்ப்பனிய நிலவுடமை கொடூரத்தின் விஷ நாக்குகள் பாஜக புண்ணியத்தில் தினவெடுத்து ஆடுகின்றன. அதிலும் முற்றும் துறந்ததாக மறைத்துக் கொள்ளும் சாமியார்கள் இதை நிர்வாணமாக ஒத்துக் கொள்கிறார்கள்.

பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ் தனது கோணல் வாயைத் திறந்திருக்கிறார்.

அதன்படி பாபா ராம்தேவ் தனது கோணல் வாயைத் திறந்திருக்கிறார். “ராகுல் காந்தி தலித்துகளின் வீடுகளுக்கு இன்பச் சுற்றுலாவுக்கும் தேனிலவு கொண்டாடவும் தான் செல்கிறார். ஒருவேளை அவர் தலித் பெண் யாரையாவது கல்யாணம் செய்து கொண்டிருந்தால் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்து பிரதமராக கூட ஆகியிருக்கலாம்” – மோடியை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் பாபா ராம்தேவ் கடந்த 25-ம் தேதி லக்னோவில் பேசும் போது இப்படி திமிராக பேசியுள்ளார்.

தேனிலவு எனும் வார்த்தையும், படிமங்களும் ஒரு சாமியார் பயலின் சிந்தனையில் எப்படி வர முடியும்? சாயி பாபா, ஜெயேந்திரன், நித்தி, ஆஸ்ரம் பாபு, போன்ற பாஜக ஆசி பெறும் பொறுக்கிகளே நாடறிந்த சாமியார்களாக வலம் வரும் போது ராம்தேவ் மட்டும் அமைதி காக்க முடியாதல்லவா?

அடுத்து சாதிய ‘கௌரவத்திற்கு’ குந்தகம் விளையும் வண்ணம் நடக்கும் தனது சொந்த சாதி உறவினர்களை, ஆதிக்க சாதி வெறியர்கள் இப்படித்தான் தலித்துக்களோடு சேர்த்து கேலி செய்வார்கள். தலித்துக்களின் சாதிகளைச் சொல்லி “என்ன அவன் மாதிரி உடையணிகிறாய், அந்த பெண்கள் மாதிரி அழகில்லாமல் இருக்கிறாய், உன் குழந்தை சேரிக் குழந்தை மாதிரியே இருக்கிறது” என்று தினுசு தினுசாக திமிரைக் காண்பிப்பார்கள். எனவே ராகுல் காந்தியை இளக்காரமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக பார்ப்பனியத்தின் அதே ஆதிக்க சாதி திமிரை இதிலும் கக்கியிருக்கிறார், ராம்தேவ்.

ஆக இது வாய்தவறியோ இல்லை உளறிக் கொட்டிய வார்த்தைகளோ அல்ல. தெளிவான பார்ப்பன கொழுப்பு. அதுவும் கேள்வி கூட கேட்கமுடியாது எனும் வட இந்திய பாலைவனத்தில் உறைந்திருக்கும் நூற்றாண்டுகள் கடந்த கொழுப்பு.

ராம்தேவ் -  மோடி
பிரிக்க முடியாத ராம்தேவ் – மோடி அரசியல்

ராம்தேவின் கருத்து வெளியானதைத் தொடர்ந்து நாடெங்கும் தலித் அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. பல்வேறு பகுதிகளில் ராம்தேவுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கத் துவங்கின. வெவ்வேறு அமைப்புகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் நீதிமன்றங்களில் ராம்தேவுக்கு எதிராக வழக்குகள் தொடுத்து வருகின்றன. தனது சகல நம்பிக்கைகளும் தகர்ந்து போய் தோல்வி மனப்பான்மையில் தேர்தல் முடிவுகளுக்குப் பின் மூன்றாம் அணிக்கு ஆதரவு அளிப்பது குறித்து புலம்பலை ஆரம்பித்திருந்த காங்கிரசு கட்சி, வந்த வாய்ப்பை தவற விடவில்லை. உடனடியாக உத்திரபிரதேச தேர்தல் ஆணையத்திடம் ராம்தேவுக்கு எதிரான புகாரை தட்டி விட்டிருக்கிறது. இதன் மூலம் இழந்து விட்ட தலித் வாக்கு வங்கியை கொஞ்சமாவது மீட்கலாம் என்ற நப்பாசையும் காரணம்.

தனது தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்குத் தடை என்கிற அளவில் விவகாரம் இருந்த வரை அமைதியாக இருந்த ராம்தேவ், அதைத் தொடர்ந்து தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவானதையும், ஹிமாச்சல் பிரதேச மாநில தேர்தல் கமிஷனர் அம்மாநிலத்தில் ராம்தேவ் யோகா முகாம் நடத்த தடை செய்து உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்தும் தனது திமிரை மறைப்பதற்கு  முயன்று வருகிறார்.

ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் இப்படி இயல்பான திமிரில் பேசி மாட்டிக் கொள்ளும் போது கையாளும் அதே உத்தியான “எனது பேச்சு தவறாக திரிக்கப்பட்டு விட்டது” என்பதையே ராம்தேவும் பயன்படுத்தியுள்ளார். ஆனால் அது தவறில்லை, இயல்பான பார்ப்பன வன்மம் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

இவ்வாறாக ஊரே அல்லோலகலப் பட்டுக் கொண்டிருக்கும் போது பாரதிய ஜனதா மட்டும் இதெல்லாம் ஒரு மேட்டரா என்பதாக கண்டு கொள்ளாமல் இருந்தது. பிறகு தலித் மக்களின் எதிரி எனும் உண்மை அதிகம் பேசப்படுமோ என்று பயந்த பாரதிய ஜனதா, இந்த சம்பவம் பற்றி கட்சியின் இசுலாமிய முகமூடியான ஷா நவாஸ் ஹுசைனை வைத்து வெளியிட்டது. அதாகப்பட்டது ராம்தேவ் ஒரு சாமியார் என்பதால் ஹனிமூன் (தேனிலவு) என்கிற ஆங்கில வார்த்தையை அவர் பயன்படுத்தியதை, அந்த சூழலுக்குப் பொருத்தி தான் அர்த்தம் கொள்ள வேண்டுமாம். கட்சிகளிடையேயான உறவை தேனிலவு என்று சொல்லும் அர்த்தத்தில் கூட அவர் சொல்லியிருக்கலாம் என்று இந்த நாடும், மக்களும் புரிந்து கொள்ள வேண்டுமாம்.

சொல்லப்பட்ட இடம், சூழல், பின்னணியிலேயே ஆதிக்க சாதித் திமிர் தெளிவாக இருக்கும் போது இது பொதுவாகச் சொல்லப்பட்ட உவமை என்று அதுவும் பாய் ஒருவரை நரித்தனமாக பேச வைத்து வெளியிட்டிருக்கிறது பாரதிய ஜனதா. அதோடு நில்லாமல், பாரதிய ஜனதாவில் தலித் அடையாளத்தோடு செயல்பட்டு வரும் உதித் ராஜ் என்கிற விபீஷணத் தலைவர் ஒருவரை விட்டு ராம்தேவ் சொல்லியதில் தவறு ஏதும் இல்லை என்றும் அறிவிக்கச் செய்திருக்கிறது.

ராம்தேவ்
ராம்தேவ் யோகா முகாம் நடத்த தடை செய்து உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து பயந்து பின்வாங்கும் ராம்தேவ்.

இஸ்மாயில் என்கிற முசுலீம் பெயரைப் பச்சை குத்திக் கொண்டு காந்தியை சுட்டுக் கொன்றே கோட்சேயின் அந்தச் செயலுக்கு பின் இருந்த அதே உத்திதான் இங்கும் தொழிற்படுகிறது. பார்ப்பனிய ஆதிக்க சாதி வன்மத்தின், தலித் விரோத கருத்துக்களை தலித்துகளாகவும் இசுலாமியர்களாகவும் அறியப்படும் தனது கட்சியின் முகமூடிகளைக் கொண்டே வெளியிடச் செய்துள்ளது பாரதிய ஜனதா. இதுவரை ராம்தேவின் பொறுக்கித்தனமான பேச்சுக்கு கேடி மோடியோ, இல்லை பாஜக தலைமையோ கண்டிக்கவில்லை என்பது எதிர்பார்த்ததுதான்.

பொதுவாக ஓட்டுக் கட்சிகள் எதிர்பார்க்கும் தலித் மக்களின் ஓட்டு வங்கியை விட பார்ப்பன ஆதிக்கம்தான் பெரிது என்று இந்துமதவெறியர்கள் கருதுகிறார்கள். முக்கியமாக வட இந்தியாவில் தலித்துக்களை விட ஆதிக்க சாதிகள்தான் இந்துமதவெறியர்களின் அரசியல் அடிப்படையாக இருக்கிறார்கள். அவர்களை விட்டுக் கொடுக்க முடியாது எனுமளவிலும் இந்த தலித் விரோதம் காவிக் கூட்டத்திற்கு தேவையாகத்தான் இருக்கிறது.

’தலித் மக்கள் மலம் அள்ளுவதை ஆத்ம சுத்தியோடு செய்தால் ஆன்ம விடுதலை பெறமுடியும்’ என்று பீயள்ளுவதை கர்மயோகமாக, ஒடுக்கப்பட்ட மக்களின் தலையில் கட்டிய மோடியின் சொந்தக் கருத்தும், தலித்துகளைப் பற்றி எத்தகையதாக இருக்கும் என்பதை தனியே விவரிக்கத் தேவையில்லை.

அவ்வகையில் பார்ப்பன இந்துமதவெறி பாசிசக் கும்பல் தலித்துகளுக்கு விரோதமானவை என்பதில் நமக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை – ஏனெனில், இந்துத்துவத்தின் ஆன்மாவான பார்ப்பனியம் தன் இயல்பிலேயே தலித்துகளுக்கும் இசுலாமியர்களுக்கும் மட்டுமின்றி தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்ளும் அனைத்து உழைக்கும் மக்களுக்குமே எதிரானது தான்.

ராம்தேவிடம் வெளிப்பட்ட கருத்துக்கள் என்பது தனிப்பட்ட ஒரு சாமியாரின் திமிரில் இருந்து எழுந்தது அல்ல. தமிழை நீச பாஷை என்று சிதம்பரம் கோயிலில் பூணூலை உருவிக் காட்டும் தீட்சிதனிடமும், கருவறைக்குள் நுழைந்தால் தீட்டு என்று சூத்திரர்களையும் கோயிலுக்குள் நுழைந்தாலே தீட்டு என்று பஞ்சமர்களையும் விலக்கி நிறுத்தியிருக்கும் பார்ப்பன இந்துத்துவத்தின் இயக்கு சக்தியே இந்த தீண்டாமை தான்.

தேர்தல் முடிவடையாத நிலையிலேயே கூட இந்தளவுக்கு பார்ப்பன மேலாதிக்கத் திமிரை வெளிப்படுத்த முடிகிறது என்றால், இவர்கள் வெற்றி பெற்றால் பார்ப்பனியத்தின் வன்கொடுமை, உழைக்கும் மக்கள் மீது எவ்வாறெல்லாம் ஏவிவிடப்படும் என்பதை நாம் புரிந்து கொள்ளவதோடு அந்த பாசிச ஒடுக்குமுறையை எதிர்கொள்ளவும் தயாராக வேண்டும்.

ராம்தேவை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்து தண்டிக்குமாறு போராடுவதோடு இந்துத்துவ பாசிஸ்டுகளை அரசியல் ரீதியில் முறியடிப்பதே இதற்கான ஒரே தீர்வு.

–    தமிழரசன்