privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதேர்தல் குறித்து நாட்டுப்புற மக்கள் கருத்து

தேர்தல் குறித்து நாட்டுப்புற மக்கள் கருத்து

-

ந்த தேர்தல் பத்தி விவசாயம் செய்யற சாதாரண கிராமத்து மக்கள் என்ன சொல்கிறாங்க, தெரிஞ்சுக்குவோன்னு பல பேர்ட்ட பேசினேன். அதுல ஒரு சிலர் பேசியத இங்கே சொல்றேன்.

மதியானம் ஒரு மணி மண்டைய பொளக்குற வெயிலில, மாங்கு மாங்குன்னு காயவச்ச உளுந்துச் செடிய தடிக்காம்பால அடிச்சிட்டு இருந்த சின்னப்புள்ள சித்தப்பா, எளப்பாற நெழலுக்கு வர்ர வரைக்கும் காத்துருந்து, மெதுவா பேச்சுக் கொடுத்தேன்.

“என்னா சித்தப்பா நீங்க மட்டும் ஒத்தையில நின்னு உளுந்தடிக்றீங்க, சித்தி இல்லையா?

“டவுணுக்கு ஜெயலலிதா வந்ததுக்கு குழுவு (மகளிர் குழு) பொம்பளையெல்லாம் வரணுமுன்னு நம்மூரு பெரசிடண்டு ட்ராக்டருல கூப்புட்டு போனாருல்ல, இவளும் போயிருந்தா. நூறு ரூவாதான் காசு குடுத்துருக்கானுவொ, ஏதோ கடையில பிரியாணி வாங்கி குடுத்துருக்கானுவொ, பிரியாணிய தின்னுட்டு மொட்ட வெய்யில்ல உக்காந்திருந்தா என்ன செய்யும். வயித்து கடுப்பு வந்து வயித்தால போயி வீட்ல சுருண்டுகிட்டு படுத்துக்கெடக்கா. வேல கெடக்கு போகவேணான்னு சொன்னேன். எதுக்கு வரலேன்னு பெரசிடண்டு கேட்டா என்ன பதில் சொல்றதுன்னு பயந்துகிட்டு போனா, இப்ப கவுந்தடிச்சு படுத்துருக்கா. சண்டி மாட்ட வச்சுகிட்டு வண்டி ஓட்றது போலதான் அவளோட நான் பொழப்பு நடத்துறது”

“கட்சி கூட்டத்துக்கு போகவும், ஓட்டு போடவும் காசு வாங்கறது தப்புன்னு தோணலையா?”

“தப்புதான் என்ன செய்றது. இந்த உளுந்து பயிரு வெதச்சு புடுங்க ஆன செலவு ஏருவோட்ட, வெதவாங்க, தண்ணி பாச்ச, பயிரெடுக்க ஆளு கூலின்னு 2000 ஆச்சு. இது விளைஞ்சா 1000 ரூவாக்கி கூட விக்காது, பாடுபட்டதுக்கு கூட வெலையில்ல, நம்ம நெலம இப்புடி இருக்க காசு குடுத்தா வேணான்னா சொல்ல முடியும். கோயில்ல திருடிட்டு மன்னிச்சுருன்னு உண்டியல்ல காசு போட்றது போலதான் அவனுவொ நமக்கு காசு குடுக்குறது. எல்லாமே நம்ப காசுதான்”

“ஜெயலலிதாவ பாக்க நீங்க போவலையா?”

“உச்சி வெய்யில்ல நின்னா எனக்கு மண்டகுத்த வந்துரும், நாளு நாளைக்கி மண்டைய கட்டிகிட்டு குப்புறப் படுத்துக்கனும். இந்த வேலையெல்லாம் யாரு செய்வா அதான் நான் போகல.”

“நீங்க எந்த கட்சிக்கு ஓட்டு போடப் போறீங்க?

உரிமைகளற்ற மக்கள்

“எந்த கட்சிக்கி ஓட்டு போட்றோம்ன்னு யார்டையும் சொல்ல கூடாதுன்னு சொல்றாங்க. சொன்னா ஏன் எனக்கு போடலைன்னு வேற கட்சிக்காரங்க சண்டைக்கு வருவானுவ. பெறவு லோனு கீனு ஏதும் இவுனுவள கேட்டு வாங்க முடியாது.  நம்ம பிள்ள நீ கேக்குற யார்டையும் சொல்லாத, நான் ரெட்டலைக்கிதான் போடப் போறேன். எம்.ஜி.ஆர் காலத்துல இருந்து நான் ரெட்டலைக்கிதான் போடுவேன், மாத்தி போட்டது இல்ல.”

“ரெட்டலைகிதான் போட்றேன்னு சலிப்பா சொல்றீங்க. புடிக்கலன்னா மாத்தி போட வேண்டியதுதான?

“இருந்த ஒரே கட்சில இருக்கனும், மாறுனா துரோகம் செய்றது மாறிதான் அதுக்குதான் நான் மாறல”

“கட்சுக் காரங்களே மாத்தி மாத்தி கூட்டணி சேத்துக்குறாங்க நீங்க என்ன சித்தப்பா இப்புடி சொல்றீங்க?

“அவைங்க பணக்காரங்க, எதுவேனா செய்வாங்க, நாம நேர்மையா இருக்கனும்ல தாயி”

“நேர்மை எல்லாம் பேசிகிட்டு தி.மு.க. கரை போட்ட வேட்டி கட்டிருக்கீங்க, இது என்னா கணக்கு?”

சிரித்தார். “இது எங்கக்கா மொவனோட வேட்டி. ஓரமா கொஞ்சோண்டு கிழிஞ்சு போச்சு, கட்ட மாட்டேங்குறான்னு எங்கக்கா குடுத்துச்சு. பத்து தையலு போட்டு நஞ்சுப் போன  என்வேட்டிக்கி இது தேவலான்னு கட்டிகிட்டேன். கறையா முக்கியம், வேட்டிதான் முக்கியம்.”

“அப்ப செயலலிதா ஆட்சி நல்லாச்சின்னு சொல்றீங்களா?

“ம்…… அப்புடி சொல்லல. முன்னடிதான் தப்பு பன்னுச்சு இப்ப பரவால்ல நெறையா நல்லது செய்து”

“அப்புடி என்ன நல்லது செஞ்சுருக்கு?

“என்னா அப்புடி சொல்லிபுட்ட மிக்சி, கிரைண்டர், காத்தாடி குடுக்குது. இலவசமா அரிசி குடுக்குது. எம்மகளோட கல்யாணத்துக்கு 50,000 ஆயிரம் பணம் குடுத்துருக்கு. இது பத்தாதா. என்னா ஒன்னு, கொஞ்சம் கரண்ட மட்டும் ஒழுங்கு பன்னி விட்டுச்சுன்னா தேவலாம்”

“உங்க பொண்ணுக்கு படிச்சதுக்கு பணம் கொடுத்துச்சு சரி! வேல கொடுத்துச்சா? வேல கெடச்சுருந்தா அந்த புள்ள, நூறு, பத்தாயிரம்னு சம்பாரிச்சுருக்குமே, அத யோசிக்கலையே நீங்க?

“ஊருகாட்டுல எம்மகளாட்டம் ஆயிரம் பேரு படிச்சுட்டு இருக்குதுவொ எல்லாருக்கும் கெவுருமெண்டு எங்கேருந்து வேல குடுக்கும்.”

“சரி! குடுத்தத வச்சுகிட்டு குடும்பத்த நடத்தாம இந்த வயசுலயும் வயல் வேலையும் பாத்துக்கிட்டு கேரளா, திருப்பூருன்னு கல்லு ஒடைக்கவும், சாயப் பட்டறைக்கும் எதுக்கு சம்பாரிக்க போறீங்க”

“முன்ன மாரியா நெலம இருக்கு, வெல வாசி கூடிப் போயி கெடக்குது. ஆத்துல தண்ணி வந்தாத்தான் வயல்ல வேல அதுவும் நாலு, அஞ்சு மாசம் தான் இருக்கும். பொட்டப் புள்ளைய வச்சுருக்கமே அதுக்கு செய்றத செஞ்சு கட்டிகுடுக்கனுமே! பொறவு என்னத்த செய்யறது”

“வேலை இல்ல, வெலவாசி ஏறிப்போச்சு அப்ப இதுக்கெல்லாம் வழி பண்ணாத அரசு, அரிசியும் பருப்பும் குடுத்துட்டா சரியாப் போச்சான்னு யோசிக்கிறது சரியா சித்தப்பா?

“நீ என்னா சொல்ல வர்ர. அப்பன்னா சூரியனுக்கு போடலான்னு சொல்றீயா?

” இல்லப்பா, அரசியல்ல யாருமே உதமங்க கெடையாது. மாத்தி மாத்தி ஓட்டு போட்டு மட்டும் என்னத்த கண்டோம்?

“யாருக்குமே போடலன்னா ஓட்டு வீணாப் போயிருமுல்ல”

“உங்களுக்கு நெனவு தெரிஞ்ச நாள் முதலா ஓட்டு வீணா போகாம போட்றீங்களே, அதுனால உங்க வாழ்க்க நெலம ஏதும் மாறிருச்சா?”

“பத்து வெரலால பாடுபட்டாதான் அஞ்சு வெரலால அள்ளி திங்க முடியுன்னு எங்கப்பா சொல்லுவாரு. அதுதான் நம்ம பொழப்பு. ஓட்டு போடலன்னா மட்டும் நாம என்ன குபேரனா ஆவப் போறோம், அப்பையும் இது போலதான் மண்ண கிளறிக்கிட்டு கெடக்கனும். ஓட்டு போடாம வீணா போறத விட, ஓட்ட போட்டா எவனோ ஒருத்தெ நல்லாருந்துட்டு போறான் போ” என்று தன் இயலாமையின் ஆதங்கத்தோடும், ‘தான் கெட்டாலும் அடுத்தவன் நல்லாருக்கட்டும்’ என்ற சாதாரண உழைக்கும் மக்களுக்கு உள்ள யதார்த்தமான மனநிலையோடும் பேசினார்.

இதுதான் பொதுவாக கிராமத்து ஜனங்களோட நிலமை. நாம நல்லா இல்லேங்கிறதுக்கு காரணமே இப்படி நல்லா இல்லாத அரசியல் கட்சிங்களும், கவருமெண்டும்தாங்கிறது, அவங்களுக்கு கொஞ்சமா புரிஞ்சாலும், அதுக்கு என்ன செய்ய முடியும்னு விதி மேல பழிய போட்டு பொழப்பை ஓட்டுறாங்க.

அடுத்து புளி கொட்ட எடுத்துட்டு இருந்த அத்தாச்சியிடம் பேச்சுக் கொடுத்தேன்.

“தேர்தல் வருதே அதப் பத்தி என்ன நெனைக்கிறீங்க?”

புளி சுவை நாக்குல பட்ட சுளிச்ச முகத்தோட “அதப் பத்தியெல்லாம் என்னாடி தெரியும் நான் சொல்றதுக்கு” என்றார்.

“நீங்க எதுக்காக ஓட்டு போட்றீங்க? அத சொல்லுங்க!”

“கட்டாயம் ஓட்டு போடனுமாம். போடலன்னா நாம செத்ததுக்கு சமன்னு சொல்றாங்க”

“நீங்க ஓட்டு போட்டது, போடாதது எல்லாம் யாருக்கு தெரியப் போவுது?

“ஓட்டு போட்ற எடத்துலதான் பேரு எழுதி சீட்டல்லாம் குடுக்குறாங்கல்ல, போடலன்னா அப்ப தெரிஞ்சு போயிரும்ல?”

“சரி தெரிஞ்சு போகுதுன்னே வச்சுக்குவோம் என்ன செஞ்சுருவாங்க?”

“என்ன…. தலையா எடுத்துப் புடுவாங்கெ. பயிர் லோனு வந்தா தரமாட்டாங்கெ, பயிரு வெள்ளத்துல போனா இழப்பீடு தரமாட்டாங்கெ, எதுக்காச்சும் ஒரு கையழுத்து வேணுன்னு வி.ஓ, பெரசிடண்டுன்னு போனோன்னா இழுத்தடிப்பாங்கெ. என்னோமோ ஊரு நெலவரமெ தெரியாத மாரி பேசுற.”

“நீங்கதான் ஓட்டு போட்றது கடமை. போடலன்னா செத்ததுக்கு சமமுன்னு சொன்னீங்க. இப்ப பயந்துகிட்டு ஓட்டு போட்றாப்போல பேசுறீங்க எதுதான் உண்மை?”

“எம்மவளும், மருமவனும் படிச்சவங்க. அவங்கதான் சொன்னாங்க ஓட்டு போடாம இருக்க கூடாது அது நம்மளோட உரிமைன்னு. மெட்ராசுல இருந்து ஓட்டு போட்றதுக்குன்னே ஊருக்கு வர்ராங்க. ரெண்டு மாசத்துக்கு முந்தியே ரயிலுக்கெல்லாம் டிக்கெட்டு எடுத்துட்டாங்க. எவ்வளொ முக்கியமான வேலை இருந்தாலும் அத விட்டுட்டு, செலவு பன்னிக்கிட்டு வருவாங்க அவங்களுக்கு தெரியாததா நமக்கு தெரியப் போவுது. என்ன நான் சொல்றது”

“அததான் நான் கேக்கறேன். வெளியூர்ல இருந்தெல்லாம் வேலையெல்லாம் உட்டுட்டு வந்து ஓட்டு போட வேண்டிய அவசியம் என்னா?

“வெளியூர்ல இருந்தாலும் கோயில் திருவுழாவுக்கு வந்து தாம் பங்கு வரிய குடுத்துட்டு போகனுங்கற கடம இருக்குல்ல, இல்லன்னா உரிம போயிரும், அதுபோலதான் ஓட்டு போட்றதும். திரும்ப திரும்ப கேட்டுட்டே இருக்க இப்ப புரியுதா!”

அத்தாச்சி சொன்னது மாதிரி பல மக்கள் இப்பவும் ஓட்டு போடறது ஒரு சடங்கு, சம்பரதாயம், அத வுட்டுக் கொடுக்க முடியாதுன்னு உடும்பு பிடியா பேசுறாங்க.

நாங்க பேசும்போது பக்கத்துலேயே இருந்தும், காதுல வாங்காதது போல தன் வேலையில் கவனமாக இருந்த செல்வி, சென்னையில் ஒரு பெரிய மொதலாளிகிட்ட வீட்டோட தங்கி கணவன் மனைவி இருவருமா வேல செய்றாங்க. செல்வியிடம் பேசினேன்.

“என்ன செல்வி வாயே தொறக்க மாட்டேங்குற. நீ சொல்லு ஓட்டு எதுக்க போட்றோம்?

“என்ன பொருந்த வரைக்கும் ஓட்டு போட்றது நம்மோட உரிமை, கடமை. நம்ம உரிமைய என்னைக்கும் உட்டுத் தரப்புடாது”

“நீ கடமையா நெனைக்கிற இந்த ஓட்டு உரிமை ஒனக்கு என்ன செஞ்சுருக்கு?

“எனக்குன்னு தனியா எதுவும் செய்ய வேண்டாம். பொதுவா எல்லா மக்களுக்கும் நல்லது செஞ்சா போதும்.”

“பொதுவான்னா எத சொல்ற?”

உழைக்கும் மக்களை சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகள்“நமக்கு கை கால் நல்லாருக்கு, எங்கேயோ ஓடியாடி பொழச்சுக்கலாம். ஆனா இல்லாதப்பட்ட பிள்ளைங்க, அனாதப் பிள்ளைங்க, கை, காலு, கண்ணுன்னு ஊனமான பிள்ளைங்க எவ்வளோ பேரு இருக்காங்க. அவங்களுக்கு நல்ல படிப்பு, இருக்க எடம் இப்புடி எதாச்சும் செய்யலாம். ஆனா பதவிய புடிச்சு ஆட்சிக்கி வந்த உடனே சொத்து சேக்குறதுலேயே அவைங்களுக்கு பொழப்பு சரியாப் போவுது, நம்மள மறந்தர்ரானுவொ”

“இல்லாதப் பட்டவங்களா இருக்குறதுக்கும், பிள்ளைங்க அனாதையா போறதுக்கும் காரணம் என்ன?

“வேல இல்லாததும் வறுமையும் தான் காரணம்.”

“அப்ப இத சரி செஞ்சா, நீ சொல்ற பிள்ளைங்க பிரச்சன தீந்துரும்ல?

“சரிதான், ஆனா எவெஞ் செய்றான். மக்களுக்கு நல்லது செய்யனுன்னா நெறையா கம்பனிங்க தொறக்கலாம். எல்லாருக்கும் வேல கொடுக்கலாம். இப்ப பாரு பிள்ளைய புடுச்சு வச்சுகிட்டு, ஒரு நாள் லீவு குடுக்குறான் மொதலாளி. அப்புடியெல்லாம் இல்லாமெ நம்ம தேவைக்கி வேலைக்கி போகலாம், பிள்ளைய, பாத்துக்கலாம் சந்தோசமா இருக்கலாம், உயிர பணயம் வச்சு வேல செய்ய வேண்டியதில்ல. தேர்தல் வரும்போது மட்டும் மக்கள் நலம் மயிரு நலம்னு பேசுவானுவொ, அப்பறோம் மறந்துருவானுவொ”

“அப்ப ஓட்டு போடறதுக்காக நீ ஊருக்கு வரலையா?

“இல்ல இல்ல. ஒரு நாளுதான் லீவு தந்தாரு எங்க மொதலாளி. எங்க போனா தங்கிருவேன்னு  எவ்வீட்டுக்கார்ட்ட பிள்ளைய விட்டுட்டு நீ மட்டும் போய்ட்டு வான்னு சொல்லிட்டான் அந்தாளு. எங்க அம்மா செத்தப்பவே மூணு நாளுதான் லீவு குடுத்தான். இன்னும் ரெண்டு நாள் தங்கி ஓட்டு போட்டுட்டு போனா சம்பளம் தரமாட்டான். வாங்குன கடனுக்கு வட்டி கட்ட முடியாமெ கைய பெசஞ்சுகிட்டு நிக்கனும். வட்டிப் பணம் குடுக்கத்தான் வந்தேன், இன்னைக்கி ராத்திரி பேயிருவேன்” என்று தன் குடும்ப கடமையில் தேர்தல் கடமையை மறந்தாள் செல்வி.

டிவி புண்ணியத்துல நம்ம நாட்டுப்புறத்து ஜனங்க இப்படித்தான் தேர்தலை புரிஞ்சு வச்சுருக்காங்க. ஓட்டுப் போடறது நம்மளோட யோக்கியதைன்னு சித்தப்பா சொன்னா, லோனு கிடைக்காதுன்னு பயந்துகிட்டு, கூடவே சடங்கு சம்பரதாயமுன்னு அத்தாட்சி சொல்லுது. செல்வியோ சென்னையில வாழுறதால கொஞ்சம் விவரமா பேசுனாலும் என்னத்த செய்யன்னு சலிச்சிக்கிது.

வீணாப் போன தேர்தல் அரசியல இவங்க ஏதோ ஒரு விதத்துல புரிஞ்சிருக்காங்க. அதை தெளிவுபடுத்தி மாத்து அரசியல, போராட்டத்தோட கொண்டு போன இதே ஜனங்க முன்னாடி நின்னு போராடுவாங்க. நீங்க என்ன சொல்றீங்க?

–    சரசம்மா

  1. நல்லா இருக்கு ஒங்க கட்டுரை . அப்படியே காசு வாங்கிட்டு ஓட்டு போடற கதையையும் சொல்லிடுங்கோ. காசு கொடுத்து ஓட்டு வாங்கன கதை, தேர்தலுக்கு முன் 2 நாள் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியை கண்டு கொள்ளாத கதை, தேர்தலுக்கு 2 நாள் முன்பு இரவோடு இரவாக அத்தியாவசிய ஊர்திகள் வழியாக பணம் பயணம் புறப்பட்டு அல்ல கை இடைசாதியை வந்தடைந்த கதை, தேர்தல் ஆணைய அறிவுப்புக்கு முன்பே பணம் வந்திறங்கிய கதை, மக்களுக்கு வழங்கிய கதை யாவற்றையும் இதே போல எழுதலாம். என்ன எழுதி என்ன செய்ய இந்த மண்ணுல நீதிமன்றம் இருக்கும்வரை ஜெ.போன்றோர் வழக்கு நடக்கும்வரை நடந்தாலும் மக்கள் வாக்களிக்க விரும்பும்வரை. தலைமகளுக்கு ஒட்டுப்போட மக்கள் வேண்டும்வரை, தேர்தல் பணியாற்ற தொண்டர்கள் வேண்டும்வரை, பதவிக்கு தமது தீர்மானத்தின்படி ஆட்சியை தக்கவைக்கும்வரை,தமது குடும்ப நபர்களையே கட்சி,ஆட்சி பதவிகளில் வைத்திருக்கும்வரை, உயிர்த்தோழி இருந்தால் போதும் ஒரு முறை மேலும் ஒருமுறை கீழுமாக ஆனாலும் வாழ்க்கை சென்றாலும் சரி அப்படியேதான் அரசியல் வாதிகளின் பயணங்களும், நாட்டின் நடப்புகளும். என்னுடையது 49 ஓதான்.

  2. திராவிடத்தை நம்புபவர்கள் திராவிடத்தின் பெயரில் சாதியை காப்பாற்றுகிறார்கள்……
    தமிழ்தேசியத்தை நம்புபவர்கள் தமிழினித்தின் பெயரில் சாதியை காப்பாற்றுகிறார்கள்……
    மொத்ததில் ரெண்டு பயலுவளும் சாதியை கடந்து வர முடியாத களவாணிகள் தான்……
    இதுல நான் தான் முற்போக்கு.. நீ பிற்போக்கு என்று மாறி மாறி அடிச்சுக்குறாங்க……

    வீணாப் போன தேர்தல் அரசியல மக்கள் ஏதோ ஒரு விதத்துல புரிஞ்சிருக்காங்க. அதை தெளிவுபடுத்தி மாத்து அரசியல, போராட்டத்தோட கொண்டு போனா இதே ஜனங்க முன்னாடி நின்னு போராடுவாங்க.!

    போங்கப்பா…… போய் தண்ணியக் குடிங்க……

  3. “இருந்த ஒரே கட்சில இருக்கனும், மாறுனா துரோகம் செய்றது மாறிதான் அதுக்குதான் நான் மாறல”
    இந்த _______ இப்படி . சென்னையில் வாழும் படிச்ச _______ ஓட்டே போடுறது இல்ல.

  4. என்னமோ போங்கப்பு ! இந்த வோட்டு உரிமை வேணும்னுதான் எகிப்து துநிசியாவுல எல்லாம் சனங்க உசுர கொடுத்து போராடுனாங்கலாமே .

    சவூதி பஹ்ரீனு சனங்க வோட்டு உரிமை வேன்னும்னு ஒத்தகால்ல நிக்கானவுலாம்

    அட சீனாவுல கூட காலஜ்ஜி பசங்க உசுர வுட்டனுகலாமே ?

    வட கொரியா , க்யூபாவுல மட்டும்தான் சந்தோசாம வோட்டு போடாம இருக்கங்கலாம .
    ஒரே வெசக்கி அங்க போயி பாத்துட்டு வந்து நம்மூரு சனங்கககிட்ட சொல்லோனும் . பயலுகளா , வோட்டே போடா வேணா , இங்க பணம் குடுக்குற மாதிரி உரிமைகள கொண்டாந்து நம்ம கையிலு துநிக்கராணுக . இந்த மாதிரி நம்மூரு ஆகணும்ல 🙂

Leave a Reply to சிவப்பதிவாளன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க