privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாதிப்புவின் மோதிரம் மட்டுமா பறிபோகிறது ?

திப்புவின் மோதிரம் மட்டுமா பறிபோகிறது ?

-

காலனியாதிக்க எதிர்ப்பு மரபின் வீரன், திப்பு சுல்தானின் மோதிரம் ஒன்று வரும் மே 22-ம் தேதி லண்டனில் உள்ள கிறிஸ்டி என்ற ஒரு தனியார் ஏல நிறுவனத்தில் ஏலத்திற்கு வருகிறது. வழக்கமாக காந்தி கண்ணாடி, நேரு சட்டை, கென்னடி கடிதம் போன்றவைகள் ஏலம் வருவது போன்று திப்பு சுல்தானின் மோதிரம் ஏலம் வருவதைப் புறந்தள்ள முடியாது.

திப்புசுல்தானின் மோதிரம்
திப்புசுல்தானின் மோதிரம் (படம் : நன்றி The Hindu)

1799 மே 4-ம் தேதி நான்காவது மைசூர் போரில் திப்பு போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தார். அப்போது ஆட்சியளராக இருந்த ஆர்தர் வெல்லெஸ்லி இம்மோதிரத்தைக் கைப்பற்றினார். பிறகு அவர்களது குடும்பத்தில் இருந்து இன்னொரு யுத்த பிரபுவான ஃபிட்ஸ்ராய் சோமர்செட் என்பவரிடம் திருமணப் பரிசாக மோதிரம் கை மாறியது. தற்போது அவர்களது வழித் தோன்றல்கள் இதனை ஏலத்திற்கு கொடுத்துள்ளனர். இந்தியா இந்த ஏலத்தில் பங்கெடுத்து மோதிரத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று சிலர் குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்.

இந்த குரலோடு நாமும் சேர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அரவணைப்பில் வாழ்ந்து கொண்டு விடுதலை போரை காட்டிக் கொடுத்த எட்டப்பன், தஞ்சை சரபோஜி, புதுக்கோட்டை தொண்டைமான், ஆற்காடு நவாபு போன்ற அரசர்கள் போலன்றி திப்பு சுல்தான் சாகும் வரை சமரசமின்றி போராடி வீழ்ந்தார். ஒருவேளை வரலாறு வேறு மாதிரி அமைந்து திப்பு வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவில் நிலவுடைமை சமூக அமைப்பு அழிக்கப்பட்டு முதலாளித்துவ சமூக அமைப்பு கூட வந்திருக்கலாம். இன்னும் சாதிவெறி, மதவெறியை எதிர்த்து நாம் மூச்சுக் கொடுக்கும் சிரமத்தை தவிர்த்திருக்கலாம். ஆனால் ‘ஒருவேளை’ என்று வரலாற்றை திருப்பி போட முடியாது.

இந்துமதவெறியர்கள் திப்புவை அவதூறு செய்து வரலாற்றின் பக்கங்களிலிருந்து அவரது பணிகளை அழிக்க இன்றும் முயன்று வருகிறார்கள். அந்த அவதூறுக்கு இந்த மோதிரமே ஒரு பதிலை வைத்திருக்கிறது. 41.2 கிராம் எடையுள்ள அந்த மோதிரத்தில் இந்து கடவுளான ராமனின் பெயர் தேவநாகரி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு இசுலாமிய மன்னன் எப்படி “ராம்” பெயர் தாங்கிய மோதிரத்தை அணிந்தான் என்று இந்துமதவெறியர்கள் மட்டுமின்றி, இசுலாமிய மதவாதிகளும் கோபம் அடையலாம்.

வழக்கம் போல ‘பல இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் மதம் மாற்ற அவர் வற்புறுத்தினார், அதற்காக குழந்தைகளையும், பெண்களையும், முதியவர்களையும் திப்பு கொன்றார்’ என்ற கதையை இந்துத்துவாவாதிகள் இணையத்தில் கிளப்பி விட ஆரம்பித்து விட்டனர்.

திப்புசுல்தான்
திப்புசுல்தான்

பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய திப்பு உண்மையில் மத நல்லிணக்கவாதியாகவே விளங்கினார். இந்துக்களின் ஏகப்பிரதிநிதியாக சிவாஜியை இன்று முன்னிறுத்துகிறார்கள் சிவசேனா வகை வானரங்கள். ஆனால் அந்த மராத்திய போர் வீரர்களது படையெடுப்பிலிருந்து சிருங்கேரி மடத்தை காப்பாற்றியவர் திப்பு என்பது பலருக்கும் தெரியாத வரலாற்று உண்மை. பல இந்துக் கோவில்களுக்கு நிலத்தையும, பொன்னையும தானமாக வழங்கியுள்ளார் திப்பு. மைசூர் ராஜ்யத்தில் முதல் கிறிஸ்தவ ஆலயத்தை கட்டுவதற்கு நிலத்தை இலவசமாக வழங்கியவரும் திப்புதான். அவரது ஆஸ்தான அமைச்சர் பூர்ணய்யாவும் ஒரு இந்துதான்.

அமெரிக்க சுதந்திரப் போரை அங்கீகரித்ததுடன் அதனை 1776-ல் கொண்டாடிய சில உலக ஆட்சியாளர்களில் ஒருவர் திப்பு. தன்னை “குடிமகன் திப்பு” என்று பிரெஞ்சுப் புரட்சிக்கு பிறகு அழைத்துக் கொள்ளவும் அவர் தயங்கவில்லை. மூன்றாவது மைசூர் போரில் திப்பு தோற்ற பிறகு தனது ராஜ்யத்தில் பாதியையும், தனது பிள்ளைகளில் இருவரை பணயக் கைதியாகவும் வெள்ளையர்களிடம் கொடுத்து பின்னர் மீட்டார். நாட்டைக் காப்பாற்ற தனது பிள்ளைகளை பணயம் வைக்கும் நெஞ்சுரம் அவரிடம் இருந்தது. இன்றோ ஆளும் வர்க்கத்தின் வாரிசுகள் அனைத்தும் நாட்டை விற்பதற்கு வாரிசு அரசியலில் இடம் பிடித்திருப்பதை ஒப்பிட்டு பார்க்கலாம்.

முதன்முதலாக போர்ப்படையினருக்கு சம்பளம் தந்த திப்பு, தனது படைகள் கைப்பற்றும் பகுதிகளில் மக்களிடம் கொள்ளையடிக்கக் கூடாது எனவும், தானியங்களை மக்களிடமிருந்து விலை கொடுத்துதான் வாங்க வேண்டும் என்றும் தனது படை வீரர்களுக்கு உத்திரவும் போட்டார். மது விற்பனையை தடை செய்தார். கஞ்சா பயிரிடக் கோரி பிரிட்டிஷார், விவசாயிகளை வலியுறுத்திய போது திப்பு அதனை தடை செய்தார். டாடாவோ அபினை சீனாவுக்கு ஏற்றுமதி செய்து வணிகம் செய்ய இங்கிலாந்திற்கு உதவினார்.

அடிமை விற்பனையை தடை செய்த திப்பு எந்த அரசு வேலைக்கும் கூலி கொடுக்காமல் மக்களிடம் வேலை வாங்க கூடாது என்று ஆணையிட்டார். “மக்கள் நலனை விட அரசின் கருவூலத்தை பெருக்குவதுதான் முதன்மையானதா?” என்ற கேள்வியையும் எழுப்பினார்.

பாலியல் தொழிலை தடை செய்ததுடன் தேவதாசி முறைக்கு எதிராகவும் ஆணைகளைப் பிறப்பித்தார். பார்ப்பனியம் இழிவுபடுத்திய இத்தகைய பல்வேறு கொடூரமான நடைமுறைகளை திப்பு தடை செய்தது முக்கியமானது. தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களுக்கு மேலாடை அணிய உரிமை வழங்கியதுடன் நில உடைமை தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைக்கவும் வழி செய்திருந்தார் என்பதை எட்கர் தட்ஸன் எனும் அறிஞர் பதிவு செய்திருக்கிறார். எந்த சாதி மதங்களை சேர்ந்தவராயினும் உழுபவருக்குதான் நிலம் சொந்தமாக இருக்க வேண்டும் எனச் சொன்ன திப்பு, ரயத்துவாரி முறையை அறிமுகம் செய்திருந்தார்.

சேலம் மாவட்டம் வேலூர் தாலுகாவில் பிரிட்டிஷாரின் வரிக்கொடுமை தாங்காமல் 4,000 விவசாயிகள் திப்புசுல்தான் ஆடசிபுரிந்த பகுதிக்கு 1792-க்கு பிறகு குடிபெயர்ந்தனராம். இதனை பின்னாட்களில் வந்த தாமஸ் மன்றோ பதிவு செய்கிறார். உள்ளூர் வணிகத்தை ஊக்குவித்த திப்பு மூன்றாவது மைசூர் போரின் தோல்விக்கு பிறகும் வெள்ளையரை தனது பகுதியில் வணிகம் செய்ய அனுமதிக்கவில்லை. இன்றைக்கோ பன்னாட்டு கம்பெனிகளில் வேட்டைக் காடாக இருக்கிறது தேசம்.

“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களை சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும். மொத்த ராணுவத்தின் கௌரவத்தை குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களை கௌரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்பு கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் ராணுவத்துக்கு ஆணையிட்டவர் திப்பு. விவசாயிகள் உட்பட அனைவருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என ஆணையிட்டார்.

திப்பு இறந்து விட்டதாக அவரது பிள்ளைகள் சொன்னதை வெல்லெஸ்லி முதலில் நம்பவில்லை. மன்னர் ஒருவர் போர்க்களத்திற்கு போவார் என்பதை அவர்களால் கனவிலும் நம்ப முடியவில்லை. பிறகு திப்புவைத் தேடிப் போகிறார்கள். போர்க்களத்தில் இறந்து கிடக்கிறார் திப்பு. அங்கிருந்து தான் வெல்லெஸ்லி இந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு போகிறான்.

மோதிர ஏலத்தை தடுக்க வேண்டும் என எல்லோரும் யோசிக்கின்றோம். ஆனால் தேசமே ஏலம் விடப்பட்டு மொத்த நாடும் பன்னாட்டு கம்பெனிகளிடம் கைகட்டி நிற்பது தெரிந்தும் தெரியாதது போல நிற்கிறோம். திப்புவுக்கு மரியாதை செய்வதென்பது மோதிரத்தை மீட்பதோடு மட்டுமல்ல தேசத்தை மீட்பதோடும் சேர்ந்திருக்கிறது.

–    முத்து

மேலும் படிக்க

  1. என்ன தான் “மதநல்லிணக்கமுள்ளவர்” என்றாலும் கூட ஒரு முஸ்லீம், அதிலும் திப்பு சுல்தான் வலுக்கட்டாயமாக இந்துக்களை இஸ்லாத்துக்கு மதம் மாற்றியது மட்டுமன்றி அதைப் பற்றி பீற்றிக் கொண்டதற்கும் ஆதாரங்கள் உண்டு. அப்படியான திப்பு சுல்தான் ராம் என்ற பெயர் பொறித்த மோதிரத்தை அணிந்திருந்தார் என்பது நம்புவதற்கு கொஞ்சம் கடினமானது. அதை விட இஸ்லாத்தில் ஆண்கள் நகை அணிவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மோதிரத்தை திப்பு சுல்தான் அணிந்திருந்தாரா அல்லது தனக்காக அவர் செய்வித்துக் கொண்டதற்கு ஆதாரம் உண்டா அல்லது இது அவர் இந்து மகாராஜாக்களிடமும், இந்து சமஸ்தானங்களிடமிருந்தும் கொள்ளையடித்த Booty களில் ஒன்றா, அதாவது ‘Royal Collection’ இல் ஒன்றா என்பதை முதலில் அறிய வேண்டும். விக்டோரியா மகாராணியிடம் கூட இந்தியாவில் கொள்ளையடித்த கோயில் நகைகள், வைரங்கள், சிலைகள் என்பன இருந்தன, அவற்றில் சில இன்றும் பிரிட்டிஷ் மியூசியத்தில் உண்டு. அதற்காக Queen Victoria இந்துக்களிடமும், இந்துமதத்திலும் அளவு கடந்த பற்றுக் கொண்டவர் என்று யாரும் வாதாடுவதில்லை. 🙂

    • ரெம்ப சரியா சொன்னிங்க இப்ப வர வர கம்முனுசம்னா சிவப்பு இல்ல பச்சைதானு தெரியுது வாழ்க பச்சை கம்முனிசம்

    • இந்துமதவெறியர்கள் திப்புவை அவதூறு செய்து வரலாற்றின் பக்கங்களிலிருந்து அவரது பணிகளை அழிக்க இன்றும் முயன்று வருகிறார்கள்.

  2. திப்பு குறித்த வரலாற்றுத் தரவுகளை எத்தனை முறை வாசித்தாலும் முதல் முறை வாசிக்கும் அதே பெருமித உணர்வையும், கண்களில் நீர் கோர்ப்பதையும் தவிர்க்க முடிவதில்லை.

    அடிக்கடி இது போன்ற வரலாற்றுத் தகவல்கள் கொண்ட பதிவுகளை வெளியிடுங்கள்.

  3. இந்திய மன்னர்கள் யாரும் விடுதலைக்காக போராடவில்லை. இவையெல்லாம் சாதி மத வெறி பிடித்த _______ சில பரப்பி விட்ட கதைகள்தான். ஆண்ட பரம்பரைகள் இதை வைத்து பீற்றீக்கொள்ளும்.

  4. வியாசன் அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்..

    கேரளாவில் இந்துக்கள் மட்டுமல்ல.. கிறித்துவர்களும் திப்பு சுல்தான் என்னும் மதவெறி பிடித்த ஞமலியால் பேரழிவுக்கு உள்ளானார்கள். எப்படி தான் வினவு மனசாட்சி இல்லாமல் திப்பு சுல்தானை ஒரு மாவீரன் போன்று வியந்தோதுகிறதோ தெரியவில்லை.. வினவின் இசுலாமிய விஸ்வாசத்திற்கு ஒரு அளவே இல்லையா..

        • TamilHindu விலுள்ள கட்டுரைகளை நான் கூட முழுமையாக நம்புவதில்லை ஏனென்றால் அது இந்துத்துவா இணையத்தளம். ஆனால் ‘கம்யூனிஸ்டு’ சரவணன் கூட Tamilhinduவை ஆதாரம் காட்டுகிறார். திப்புசுல்தானைப் பற்றிய பல விடயங்கள் வெறும் ‘பில்டப்பு’ தான் என்பதற்கு கூகிளிலேயே நடுநிலையான நூல்களும், கட்டுரைகளும் உண்டு. ஒரு திப்புசுல்தானைப் பற்றிய ஒரு TV Documentary க்குப் பின்பு தான், எல்லோரும் கும்பலில கோவிந்தா போட்டுக் கொண்டு திப்பு சுல்தான் ‘bandwagon’ இல் ஏறினார்கள் என்று கூடச் சிலர் கூறுகின்றனர். 🙂

          //You can also view tamilhindu.com website where lot of details about Tippu Sultan with Historical Evidence.//

  5. மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பார்ப்பன முரளிமனோகர் ஜோசி இருந்தபோது உண்மையான வரலாறை திரித்து பார்ப்பனகளை வரலாற்று நாயகர்களாக சித்தரித்து மோசடி செய்து அம்பலப்பட்ட கதை நாடறியும்.அந்த வரிசையில் திப்பு சுதந்திர போராட்ட தியாகியாக போற்றப்பட வாய்ப்பில்லை. ஆனால் வாஞ்சினாத அய்யர்,செண்பகராமன் அய்யர்,சத்தியமூர்த்திஅய்யர்,ராமகோபால அய்யர்,சோ ராமசாமி அய்யர் ….இவாள்தான் ஒரிஜினல் சுதந்திர போரட்ட வீரர்கள் ,மன்னிப்பு கடிதம் எழுதிகொடுத்து விட்டு ஒடிவந்த வாஜ்பாய் தான் ஒரிஜினலோ ஒரிஜினல் என கயிறு திரிப்பார்கள். பாவம் நம்ம பாரதமாதா .

  6. mathaveriyarkalaiyum , suthandhira poraattatthil panku kollaathavarkalaium thesa pithaakkal endru endru solla aarambitthaarkalo andre unmaiyaana thesapatru ullavarkalaium avarkalin aatchiyaium thiritthu kathai eluthavum aarambitthu vittaarkal. gandhi yai kondra RSS amaippaiye thesapakthi iyakkam endru ippo solvathillaiyaa athupondrathuthaan. RSS amaippitkku sibaarisu saiyum nabarkal pala murai thadai saiyappatta iyakkam thaan RSS enpathai ninaivil kolluthal nalam.

  7. Dear Vinavu,

    1. We Communists need not give any special respect to the trinkets used by any one. In that sense, this post is a wasted effort.
    2. You have added new details which were not in previous articles on Tippu. I am not sure how trustworthy are those details. We can never know. If these new details were true, it would make him a kaafir and his Muhamadan soldiers and subjects would not have accepted his leadership.
    3. I agree with the idea of Viyasan’s comment (at no. 1)
    4. Was he really wearing that ring? If yes, probably he was wearing it as a disguise to escape, if necessary, as a civilian.

  8. அய்யன்களுக்கு வேல குடுத்தான்னு ராஜராஜசோழன கிழி கிழின்னு கிழுச்சீக. அவன்கள அழிச்ச திப்புவுக்கு அதீத பாராட்டு.
    உம்ம நிலைப்பாடு தெள்ளத்தெளிவு ஒய்.

  9. பல இந்துக் கோவில்களுக்கு நிலத்தையும, பொன்னையும தானமாக வழங்கியுள்ளார் திப்பு….
    நாட்டைக் காப்பாற்ற தனது பிள்ளைகளை பணயம் வைக்கும் நெஞ்சுரம் அவரிடம் இருந்தது. இன்றோ ஆளும் வர்க்கத்தின் வாரிசுகள் அனைத்தும் நாட்டை விற்பதற்கு வாரிசு அரசியலில் இடம் பிடித்திருப்பதை ஒப்பிட்டு பார்க்கலாம்.
    தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களை சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும். மொத்த ராணுவத்தின் கௌரவத்தை குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களை கௌரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்பு கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் ராணுவத்துக்கு ஆணையிட்டவர் திப்பு/// above are true .
    இதோ ஐந்து ஆண்டுக்கு முன்னம் நடந்த ஈழப்போரில் பெண்கள் போது மக்கள் என்று பாராமல் அழிக்கவும் சூராயாதவும் செய்தனர் சிங்களர் இவர்கள் நாகரீக உலகில் வாழும் மக்களா இல்லை மாக்களா இவனின் தலைமை இந்தியாவுக்குள் நூழயலாமா ?

  10. திப்பு குறித்த வரலாற்றுத் தரவுகளை எத்தனை முறை வாசித்தாலும் முதல் முறை வாசிக்கும் அதே பெருமித உணர்வையும், கண்களில் நீர் கோர்ப்பதையும் தவிர்க்க முடிவதில்லை.

  11. இந்தியாவின் முன்னோடிகளான அவுரங்க ஜேப்பையும், திப்புவையும் பாசிசவாதிகள் ஒருபோதும் எற்றுக்கொள்ளமாட்டர்கள் காரணம் அவர்கள் தங்களது மதமான இஸ்லாத்தை சரிவர கடைபிடித்ததே இன்னும் இவர்கள் அக்பரை புகழ்வார்கள் காரணம் இவர் இஸ்லாத்தை விட்டு ஒதுங்கி வாழ்ந்தவர் என்பதால் – Anbarasu

  12. வினவு…

    திப்பு சுல்தான் தொடர்பான சுட்டியை அளித்தமைக்கு நன்றி…

    நிஜமாக கட்டுரையை முழுமையாக படித்தேன்..

    இந்த கட்டுரையில் திப்பு சுல்தானின் போர் திறன் மற்றும் அவரின் சமரசம் செய்து கொள்ளாத தன்மானம் ஆகியவை பற்றி கூறி இருக்கிறீர்கள். இது எங்களுக்கே தெரியும். இதை வைத்து அவர் மதவெறி இல்லாதவர் என்ற முடிவக்கு வர முடியாது. மதவெறி இல்லாமல் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களையும் அரவணைத்து போனார் என்பது பற்றி எங்கும் குறிப்பிட வில்லையே. உண்மை என்ன வென்றால் அவர் கடைசி வரி ஒரு தீவிர வஹாபிய இசுலாமிய அரசராக தான் இருந்தார்.

    //“நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.”//

    //“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால், தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை//

    இது போன்று திப்பு சுல்தான் கூறினார் என்பதற்கு ஏதேனும் விஞ்ஞான பூர்வமான சரித்திர சான்றுகள் இருகின்றதா.. ஏதாவது வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்து சென்றது எதாகிலும் உள்ளதா… இருந்தால் கூறவும்.

    ஆனால், திப்பு கிருத்துவர்களை கொடுமை படுத்தினார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன..

    Lewin B.Bowring , என்னும் வரலாற்று ஆய்வாளர் 1899ஆம் ஆண்டு Hyderali and Tipu Sultan என்னும் சரித்திர நூலினை தக்க ஆதரங்களுடன் வெளியிட்டுளார். அதில், திப்புசுல்தானின் கொடுமைகள் பின்வருவன.

    Mangalore was once ruled by Hyder Ali, but after second Mysore war (which Hyder Ali lost ) British gained control of this region. Tipu soon after coming to power waged battle against Britishers and regained its control In 1784 .

    What followed after conquest was barbaric atrocities against catholic Christians . Unlike his father Hyder Ali who respected other faiths. Tipu was a fanatic Muslim, he displayed his zeal for the faith of Islam by driving out Christians of coast region, Number of people driven out vary between 30,000-80,000 based on various historical accounts.

    Tipu ordered his subordinates to prepare a list of Christians who were residing in Canara region capture them and send them to SriRangaPattanam under guidance of trusty officers. Following orders Tipu’s commanders seized 60,000 Christians including women and children. Once captured all these 60K Christians were deported to SriRangapattana. In SriRangapattanam under the command of officers Christians were forcefully converted to Islam. These unfortunate people received the title of ‘ Ahmadi” or praiseworthy,’ and the date of their forcible conversion was commemorated by the phrase, ‘God is the protector of the religion of Ahmad” (source: Hyderali and Tipu Sultan By Lewin B.Bowring , 1899)

    Documents suggest that about 1/3rd of the people (Around 20,000) died en rout to SriRangapattana and Due to ill treatment of Captives in Srirangapattana Dungeons around 30,000 People perished.(Source: Wiki, Barcoor Manuscripts)

    Tipu demanded the surrender of the daughters of some of these native (mangalorean) Christians in order to have them placed in his palace, and that, on the refusal of the parents, the latter had their noses, ears, and upper lips cut off, and were then paraded through the streets on asses, with their faces towards the tails of the animals.(source: Hyderali and Tipu Sultan By Lewin B.Bowring , 1899) .

    மேற்சொன்ன அனைத்தும் கிறித்துவர்களுக்கு திப்புவால் இழைக்க பட்ட கொடுமைகள். இந்துக்கள் என்ன பாவம் செய்தார்கள், அவர்கள் நிலை இதை விட மோசம். அதை பற்றி “Lewin B.Bowring” விவரிக்கையில் ..

    “Nairs reluctantly agreed in the former alternative, knowing very well what the deportation meant. The next day, accordingly, all the males were circumcised, while both sexes were compelled to eat beef, as a proof of their conversion.” அதாவது,

    திப்புசுல்தான் திருவாங்கூர் போரில் ஏறக்குறைய 10,000 ஹிந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் கொன்றதுடன், 7000 பேர்களை அடிமைகளாகப் பிடித்தான் என்று குறிப்பிடுகிறான். இவ்வாறு அடிமைகளாகப் பிடிக்கப்பட்டவர்கள் ஸ்ரீரங்கபட்டணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, சுன்னத் செய்யப்பட்டுப் பின்னர் மாட்டிறைச்சியை உண்ணும்படி செய்யப்பட்டார்கள். அதன் பின்னர் அவர்கள் முஸ்லிம்களாக மத மாற்றம் செய்யப்பட்டார்கள்.

    இது போன்று கணக்கில் அடங்காத பல மத படுகொலைகளை அன்றே அரங்கேற்றிய புராதன மோடி, ராஜபட்சே தான் இந்த திப்பு சுல்தான். இதற்கெல்லாம் முற்று முழுதாய் திப்புவை நாம் குறை சொல்வதற்கில்லை. என்ன செய்வது அவர் பின்பற்றிய மதம் அப்படி. மிகவும் குறுகிய மனம் படைத்த, சகிப்புத்தன்மை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் மார்கத்தின் பின்னணியில் இருந்து வந்தவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். வெறுமனே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தான் என்கிற காரணத்திற்க்காக அவரை சரித்திர நாயகனாக முன்னிலை படுத்துவதெல்லாம் பெரும் அபத்தம். So,The Bottom Line Is கம்யுனிஸ்டுகளுக்கு திப்பு ஒரு சரித்திர நாயகன் என்றால்.. Undoubtedly ஜெர்மானியர்களுக்கும், எகாதிபத்தியதிற்க்கும் HITLER ஒரு சரித்திர நாயகன்.

    • 1. Denys Forrest, Tiger of Mysore, The Life and Death of Tipu Sultan, Allied Publishers, 1970
      2. Confronting Colonialism: Resistance and Modernization under Haidar Ali and Tipu Sultan, A collection of essays – edited by Irfan Habib
      3. Saki, Making History: Karnataka’s People and Their Past: Volume I, Stone Age to Mercantilism, Vimukthi Prakashana, Bangalore, 1998
      4. Seema Alavi, The Eighteenth Century in India, OUP, 2002
      இன்னும் சில புத்தகங்கள் இருக்கின்றன. இவையே போதுமான தகவல்களை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளன.

    • //அவர் கடைசி வரி ஒரு தீவிர வஹாபிய இசுலாமிய அரசராக தான் இருந்தார். //

      கூமுட்டைத்தனமாக உளருவது என்று முடிவு செய்த பின் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக் கொள்ளலாம். வஹாபியம் தோன்றியது எப்போது, இந்தியாவுக்கு இறக்குமதியானது எப்போது, திப்புவின் காலம் என்ன….

      இந்த வெங்காய லெச்சணத்தில்..

      //விஞ்ஞான பூர்வமான சரித்திர சான்றுகள் இருகின்றதா.. ஏதாவது வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்து சென்றது எதாகிலும் உள்ளதா//

      அப்புடியேஏஏ குடுத்துட்டா மட்டும் ஒத்துகிட போறீங்களா என்ன?

    • முதலில் Lewin B. Bowring ஒரு வரலாற்றாய்வாளர் என்பது சுத்தப் பொய். ஆங்கில அரசின் கீழ் வேலை பார்த்த ஒரு சிவில் அதிகாரி. குறிப்பாக மைசூர் மற்றும் கூர்க் பகுதியில் ஆட்சியராக பணிபுரிந்திருக்கிறார். பிறகு கானிங் பிரபுவிடமும் ஆலோசகராக பணியாற்றி இருக்கிறார். Denys M.Forrest ஒரு முக்கியமான வரலாற்றாய்வாளர். இந்த புத்தகம் மட்டுமின்றி உலக தேயிலை வியாபாரம் பற்றி அவர் எழுதிய புத்தகமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இர்பான் ஹபீப் பற்றி தனியாக சொல்ல ஏதுமில்லை என நினைக்கிறேன்.

    • Lewin B.Bowring was born 25 years after Tippu’s death.
      He could have written this book for his subjects to feel how fortunate they were under British rule and getting converted to Xianity.

      When you read about history of any king in India, there will be two perspective.
      One from the perspective of the Kings subjects and another one from the neighboring countries aka his enemies.

      Tippu respected his subjects(Karnataka) religious freedom but not the enemies ( Malabar )
      If you take a hindu king, Pulikesi he is a hero in Karnataka/Maharastra but not in Tamilnadu

      You have to judge the king from his citizens perspective

      If you judge him with just religious perspective he is no Cyrus.

      • Rebecca Mary,

        திரு. ராமனின் இந்த பின்னூட்டத்திற்கும் ( 12.4 : https://www.vinavu.com/2014/05/21/tippu-sultan-ring-and-the-whole-nation-under-auction/#comment-139508) நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.

        திப்புவின் மரணத்திற்கு பிறகு பிறந்த Lewin B.Bowring கின் புத்தகத்தை நம்பும் நீங்கள், திப்பு சிருங்கேரி மடத்தை காப்பாற்றியது, மடத்திற்கு நிலம், நிதியளித்தது, ஒரு இந்து திப்புவின் முதன்மை அமைச்சராக இருப்பது, போன்ற பல ஆதாரங்களை நீங்கள் பரிசீலனைக்கு கூட எடுத்துக்கொள்ள மறுப்பதின் மர்மம் என்ன?

    • Rebecca Mary,

      //ஒரு தீவிர வஹாபிய இசுலாமிய அரசராக தான் இருந்தார்.///

      இதற்கு ஆதாரம் தர வேண்டும். இல்லையெனில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
      திப்பு வஹாபிய இசுலாமியர் அல்ல, அவர் பின்பற்றியது சூபி இஸ்லாம்.

      //இதை வைத்து அவர் மதவெறி இல்லாதவர் என்ற முடிவக்கு வர முடியாது. மதவெறி இல்லாமல் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களையும் அரவணைத்து போனார் என்பது பற்றி எங்கும் குறிப்பிட வில்லையே//

      திப்பு மதவெறியர் என்று சொல்வதற்கு (ஆதாரமே இல்லையென்றாலும்) நீங்கள் சுலபமாக முடிவெடுத்து விடுகிறீர்கள். இதற்கு கொடுக்கப்படுபம் அவதூறுகளின் நம்பகத்தன்மையை சந்தேகிப்பது கூட இல்லை.

      ஆனால், திப்பு சிருங்கேரி மடத்தை காப்பாற்றியது, மடத்திற்கு நிலம், நிதியளித்தது, ஒரு இந்து திப்புவின் முதன்மை அமைச்சராக இருப்பது, போன்ற பல ஆதாரங்களை நீங்கள் பரிசீலனைக்கு கூட எடுத்துக்கொள்ள வில்லை என்பது தெரிகிறது. இந்த ஆதாரங்களை காட்டிய பின்பும் முடிவுக்கு வர முடியாது என்கிறீர்கள் என்றால் பிரச்சனை எங்குள்ளது ?

      உங்கள் “கருத்தை” நிலைநாட்ட உண்மையை திரித்து பேச உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அறிவு நாணயம் இருந்தால் திப்பு வாகாபியிசத்தை பின்பற்றியதற்கு தகுந்த ஆதாரம் தர வேண்டும். இல்லையெனில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

      • கன்னடத்தில் திரு பைரப்பா என்னும் எழுத்தாளர் எழுதிய நூல் உள்ளது.

        அதில் அவர் திப்புவின் கோர முகத்தை அனைவருக்கும் காட்டுகிறார்.

        நீங்கள் எடது சாரி ஸொம்புகள் எழுதும் புரட்டுகளை நம்பாமல் உண்மையாய் தேடும் வழியை பாருங்கள்.

        இவரது புத்தகத்ிர்க்கு ஆனந்தமூர்த்தி கிரீஷ் கர்நத் போன்ற எந்த சொம்பினாலும் பதில் கூற இயலவில்லை.

        • Denys Forrest நீங்கள் நினைப்பது போன்ற பக்கச்சார்பு உடையவர் அல்ல என நினைக்கிறேன். வரலாற்றாய்வாளரும் கூட

          • But he is an outsider,people of Malabar overwhelmingly hate Tipu Sultan,moreover he didn’t touch Shringeri Mutt because that would have caused a Hindu muslim war which would have screwed him.

            He is just another convert who sought political victories.

  13. மன்னாரு….

    //வஹாபியம் தோன்றியது எப்போது, இந்தியாவுக்கு இறக்குமதியானது எப்போது, திப்புவின் காலம் என்ன….//

    என்ன ஒரு புத்திசாலி தனம்… நான் கூறியது என்ன திப்பு வஹாபிச கொள்கைகளை கடைபிடித்தார் என்றால் அவர் காலத்தில் முன்பே வஹாபிசம் இருந்தது என்று அர்த்தமா . வஹாபிய கொள்கைகளை(ஓர் இறை கொள்கைக்கு முன்பு எந்த சமாதானமும் செய்து கொள்ளாமை, பிற மதங்களின் மீது சகிப்பு தன்மை இல்லாமை, நபி வழி என்று கூறிக்கொண்டு எந்த காலத்திற்கும் பயன் இல்லாத ஷரியத் சட்டங்களை மக்களின் மீது திணிப்பது, வன்முறையின் மூலம் மத மாற்றம் செய்வது) போன்றவைகளை “முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்” பிறப்பதற்கு முன்பே இந்தியாவில் கஜினி முஹம்மது, கோரி முஹம்மது,அவுரங்கசெப் முதல் திப்பு வரை பல இஸ்லாமிய அரசர்கள் கடைபிடித்து விட்டார்கள் என்று பொருள்.

    இன்னும் உங்களுக்கு புரியும் படி கூறவேண்டுமானால் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் என்று கூறிக்கொள்வோர் “இன்று கண்டறிந்துள்ள பல விஞ்ஞான உண்மைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் குரானில் இறைவன் சொல்லி இருக்கிறான்” என்று ஜல்லி அடிப்பதை போன்று தான் இதுவும். என்னை கேட்டால் அரபு நாட்டில் வஹாபிசம் தோன்றுவதற்கு முன்பே எங்கள் இந்தியாவில் பல அரசர்கள் பயங்கர வஹாபிச்டுகலாக இருந்தார்கள் என்று TNTJ PJ போன்றவர்கள் பெருமையாக மார்தட்டி கொள்ளலாம். கடைசியாக வந்த வாஹிபிஸ்ட் ஒசாமா பின் லேடன். ஆகவே, அதன் அடிப்படையில் பார்த்தால் திப்பு ஒரு வஹாபிஸ்ட் தான்.

    • நீங்கள் மோசடியாளர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள். திப்பு சுல்தான் சூபி நெறியைப் பின்பற்றியவர். இவர்கள் சமாதிகளை வணங்கியவர்கள். வஹாபிகளின் பார்வையில் திப்பு சுல்தான் காபிர்.

      சூபி நெறியில் இசை உண்டு. வஹாபிசத்தில் இது சைத்தானின் வேலை. எனவே வஹாபிசம் என்று திரிப்பது நேர்மையற்ற செயல். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    • மேலும் வாஹபிஸம் திப்பு வாழ்ந்த நாட்களில் தான் சௌதி அரபியாவில் முக்கிய சக்தியாக உருவானது.

      முகலாய அரசு வீழ்ந்த பின்னர் இந்தியாவில் முஸ்லிம்கள் வீழ்ந்துவித்தநர் என்று கருதி இஸ்லாமிய உலகம் திப்புவை ஒரு பெரிய அரசனாக உருவாக முயற்சி செய்து இருக்கலாம்.

      மேலும் அவர் துருக்கி அரபியாவுதன் தொடர்பும் வைத்திருந்தார்.

  14. முத்து…

    //முதலில் Lewin B. Bowring ஒரு வரலாற்றாய்வாளர் என்பது சுத்தப் பொய். ஆங்கில அரசின் கீழ் வேலை பார்த்த ஒரு சிவில் அதிகாரி. //

    lewin b.bowring சிவில் அதிகாரி தான். விஷயம் அதுவல்ல.. அவரின் நூலான “Hyderali and tipusultan”. என்னும் நூல் முழுக்க முழுக்க ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ள பட்டது தான். பிரிட்டிஷ் அரசிற்கு சாமரம் வீசுவதற்காக எழுதபட்டதல்ல. amazon.in இணையத்தில் கிடைக்கிறது விலை வெறும் 1145 ரூபாய் தான். நூலினை படித்து விட்டு பிறகு பேசவும்..

    //இர்பான் ஹபீப் பற்றி தனியாக சொல்ல ஏதுமில்லை என நினைக்கிறேன்//

    நிறைய இருக்கிறது. இர்பான் ஹபிப் அலிகர்ஹ் முஸ்லிம் பல்கலைகழகத்தில் வரலாறு படித்த மாணவர். மற்றும் அதே கல்லூரியின் வரலாற்று பேராசிரியரும் ஆவார். ஆகவே அடிப்படையில் திப்புவை ஆதரித்து அவர் நூல் எழுதியதில் ஆச்சர்ய பட தேவையில்லை. இதை விட பெரிய “Twist” என்னவென்றால் இர்பான் ஒரு இடது சாரி மார்க்சிய வரலாற்று ஆய்வாளர் ஆகவே திப்புவை மாத்திரமல்ல அவ்ரங்கசப்,கஜினி முகம்மத், நாதிர் ஷா போன்ற அரசர்களும் அறநெறி வழுவாமல் ஆட்சி நடத்தியவர்கள் என்று கூறினால் மிகையல்ல.திப்பு சுல்தான் குறித்து அவரின் நூலை படிப்பதை விட வினவு கொடுத்த கட்டுரையை படித்தாலே போதுமானது. ஏனென்றால் இரண்டிற்கும் எந்த வித்யாசமும் இல்லை மொழியை தவிர.

    • திப்பு சுல்தான் கத்தோலிக்க கிறித்துவர்களையும் இந்துக்களையும் சுன்னத் செய்து மாட்டுக்கறி உண்ணவைத்து மதம் மாற்றினார் என்று இங்குவந்து வாந்தி எடுக்கீறிர்கள்.

      மாட்டுகறி முசுலீம்களின் பிரதான உணவல்ல. இந்துக்களின் பிரதான உணவு! வேதங்கள், தைத்ர்ய பிராமணா மற்றூம் ஸ்மிருதிகளைப் வாசிக்கவும். முசுலீம்களின் வருகைக்கு முன்னர் மாட்டுக்கறி புழங்கியதற்கான ஆதாரங்களின் தொகுப்பு Beef eating in ancient India An evaluation of the evidence beef.sabhlokcity.com

      மாட்டுக்கறியை முசுலீம்களோடு மட்டும் தொடர்பு படுத்தும் இரண்டாவது மோசடியும் கண்டிக்கத்தக்கது.

      உங்களது வரலாற்று ஆய்வாளர் Lewin B. Bowringக்கு சிரியன் கத்தோலிக்குகள் அதாவது மலபார் கத்தோலிக்குகள் மாட்டுக்கறி தின்பார்கள் என்பது தெரியாதா? திப்பு வாயைத் திறந்து திணித்தானாக்கும்!

      திப்புவிடம் சிக்கிச் சீரழிந்தது நாயர் தரவாடுகள் என்பது வரலாற்று உண்மை. நாயர்களுக்கு கொடுத்த பதிலடி இந்துக்களுக்கு எதிரானதல்ல. நாயர்கள் தான் பிற சாதி, இந்துக்களுக்கு எதிரானவர்கள். முசுலீம்களுக்கும் எதிரானவர்கள். ஒரு திப்பு இல்லாது போனதால் தான் தலைவரியும் முலைவரியும்! அவன் இருந்திருந்தால் தரவாடுகள் கருவாடுகளாகியிருப்பார்கள். சாதியையும் கடந்திருக்க முடியும்.

      கத்தோலிக்கத்தை வெள்ளைப் பார்ப்பனீயம் என்று சும்மாவா சொல்கிறார்கள்? உங்களது பின்னூட்டத்தின் தொனி கத்தோலிக்கர்கள் கருப்பு வஹாபிஸ்டுகள் என்றும் வஹாபிஸ்டுகள் பச்சைப் பார்ப்பனர்கள் என்றும் பறைசாற்றுகிறது.

      திப்பு இந்த மூன்றையும் சார்ந்தவனல்ல!

    • lewin B. Bowring புத்தகத்தை 1145 ரூபாய் கொடுத்து படித்தமைக்கு ஆழ்ந்த வருத்தங்கள். அந்த புத்தகத்தின் ஸாப்டு காப்பியே இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. படித்தும் பார்த்து விட்டேன். ஆதாரங்களை குறிப்பிடாமல் கதைகளாக சொல்லிக் கொண்டு போகிறார். அடிக்குறிப்புகளில் ஒருவேளை ஆதாரம் இருக்கும் எனப் பார்த்தால் அதுவும் கதையின் நீட்சியாகவே இருக்கிறது. இதைத்தான் ஆய்வு என்று குறிப்பிடுகிறீர்களா?
      இர்பான் ஹபீப் அலிகார் முசுலீம் பல்கலையில் பயின்றவர் என்பதால் அவர் இசுலாமிய சார்போடுதான் இருப்பார் என்பது உங்களுக்கே கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா? இல்லை ஹபீப்பின் எந்த தலைப்பாவது lewin bowring தலைப்பான SIEGE OF MANGALORE – TIPU’S CRUELTY என்பது போன்ற பக்கச் சாய்புடன் இருப்பதாக குறிப்பிட முடியுமா?

  15. ஆணி…

    //இதற்கு ஆதாரம் தர வேண்டும். இல்லையெனில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.திப்பு வஹாபிய இசுலாமியர் அல்ல, அவர் பின்பற்றியது சூபி இஸ்லாம்.//

    இதே கேள்வியை தான் மன்னார் என்பவர் 12.2 இல் எழுப்பி இருக்கிறார். இதற்கான விளக்கத்தை என்னுடைய 13ஆம் மறுமொழியில் தெளிவாக கூறிவிட்டேன். மீண்டும் என்னிடம் வந்து ஆதாரம் கொடு என்றால் என்ன அர்த்தம். ஒருவன் மக்களை தன்னுடைய மதத்திற்கு மாற்றுவதற்கு வன்முறை வழியை கடை பிடிக்கிறான் என்றால் அது தான் வஹாபிசம். திப்பு தன்னுடைய காலத்தில் அதை தான் செய்தார். அதற்க்கான ஆதாரத்தையும் அளித்து விட்டேன். நீங்கள் ஏற்று கொள்ளவதும் ஏற்றுகொள்ளாமல் போவதும் உங்கள் இஷ்டம்….

    அத்தோடு, திப்புவை மோடி,ராஜபட்சே ஆகியோருடன் கூடத்தான் ஒப்பிட்டு பேசி இருக்கிறேன். விட்டால், மோடி, ராஜபட்சேவின் காலம் என்ன? திப்புவின் காலம் என்ன? எப்படி அவருடன் ஒப்பிட்டு பேசலாம்.. எனக்கு ஆதாரம் கொடு என்று கேட்பீர்கள் போல..

    //உங்கள் “கருத்தை” நிலைநாட்ட உண்மையை திரித்து பேச உங்களுக்கு வெட்கமாக இல்லையா?//

    வெட்கம் கெட்டவர் யார்? மானம் கெட்டவர் யார்? என்பதெல்லாம் அஜ்மல் காசபை தூக்கில் போட்ட விவகாரத்திலேயே தெரிந்து விட்டது. நீங்கள் என்னை சொல்வது தான் நகை முரணாக இருக்கிறது. பொதுவாக கம்யுனிஸ்டுகளின் பேச்சில் நாகரிகம் இருக்காது என்பது எனக்கு தெரியும்.. அவர்களின் கருத்திற்கு மாறாக நம் கருத்தை முன் வைத்தால் நாகரிகம் இல்லாமல் பேசி வாயை அடைக்கப்பார்பார்கள். மாற்று கருத்தை முன் வைப்பவர்களை “மோசடியாளர்” என்று கூறுவது. தனி மனித தாக்குதலில் இறங்குவது போன்ற கீழ் தரமான செயல்கள் அனைத்திலும் இறங்குவது அவர்களின் இயல்பே. இதற்க்கு, நீங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா. இது நான் எதிர் பார்த்த ஒன்று தான்.

    //இல்லையெனில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.//

    இதென்ன , கம்யுனிச Fatwaaவா…. திப்புவை பற்றி என் கருத்தை நான் சொன்னேன். உங்கள் மறுப்பை நீங்கள் கூறுங்கள்.. திப்புவின் வாரிசை போன்று பேசுகிறீர்கள்.. நான் இருக்கிறது என்று சொன்னால் இல்லை என்று மறுக்க எவ்வளவு உரிமை உங்களுக்கு இருக்கிறதோ. அதே போன்று தான் எனக்கும். மன்னிப்பு கேள், மண்டியிடு என்றெல்லாம் கூறி வினவின் தரத்தையும், உங்களின் தரத்தையும் நீங்களே குறைத்து கொள்ளாதீர்கள்.

  16. தென்றல்…

    உங்களுக்கு மிக்க நன்றி ..

    //திப்புவிடம் சிக்கிச் சீரழிந்தது நாயர் தரவாடுகள் என்பது வரலாற்று உண்மை.//

    நாயர்களை மட்டுமல்ல, நம்பூதிரிகளும் இதில் அடக்கம்.. சரி எது எப்படியோ திப்பு மலையாளிகளை (நாயர்களை) சீரழித்தான் என்பதை உங்கள் வாக்கினால் ஒப்புகொண்டமைக்கு மிக்க நன்றி. இதை நிருபிக்க தான் இவ்வளவு நேரம் போராடி கொண்டிருந்தேன்.

    /நாயர்களுக்கு கொடுத்த பதிலடி இந்துக்களுக்கு எதிரானதல்ல. நாயர்கள் தான் பிற சாதி, இந்துக்களுக்கு எதிரானவர்கள்//

    நாயர்கள் சாதி வெறி பிடித்தவர்கள் அதனால் திப்பு சுல்தான் அவர்களுக்கு பாடம் கற்பிக்க அவர்களை போர் தொடுத்து அழித்தான் என்று கூற வருகிறீர்களா.. “செம்ம காமெடி” போ. எது எப்படியோ, நாயர்கள் சாதி வெறி பிடித்தவர்களா அல்லது சமரச ஞானிகளா என்பது இப்போது தேவை இல்லாத விவாதம்.. திப்பு மலையாளிகளை அழித்தான் என்பதை ஒப்பு கொண்டமைக்கு நன்றி திரு.தென்றல். இதற்க்கு மேல்,நாயர்களுக்கு கொடுத்த பதிலடி இந்துக்களுக்கு எதிரானதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது கேரள மக்கள் தான். வினவும்,தென்றலும் அல்ல..

    //மாட்டுகறி முசுலீம்களின் பிரதான உணவல்ல. இந்துக்களின் பிரதான உணவு! வேதங்கள், தைத்ர்ய பிராமணா மற்றூம் ஸ்மிருதிகளைப் வாசிக்கவும். முசுலீம்களின் வருகைக்கு முன்னர் மாட்டுக்கறி புழங்கியதற்கான ஆதாரங்களின் தொகுப்பு Beef eating in ancient India An evaluation of the evidence beef.sabhlokcity.com .

    இதை நீங்கள் R.S.Sகாரர்களிடம் போய் கேளுங்கள். என்னிடம் உள்ள ஆதாரத்தை நான் முன்வைத்தேன் அவ்வளவு தான்..

  17. I have greatregards for Tippu But Historical judgement should be objective and unbiased.
    Greatness of Tippu;

    I have personally seen a silver vessel for tulasi theertham in Sriranga patna temple gifted by Tippu
    Whatever mentioned would have been true and in Kongu country he appointed a trusted commander Theeran Chinna malai gounder.
    in Many of the pictures at his summer palace there were pictures of many gowda (okkaligas)Cheifteins
    He courageously fought till his end.

    The Other features against Tippu

    While i was living in Mangalorean catholic hostel in Bandra Mumbai. Many of my mangalorean friends used to say that Tippu was a tyrant who paraded them from canara region to Mysore and mistreated them
    Till today Melkote Iyengars of Mandayam district (Puratchi thalaivi Jeya laitha Amma hails from That Place )do not celebrate deepavali because one deepavali Eve only Tippus forces at his command butchered more than 700 . This was because one Samiah related to them was liasioning between wodeyar royal family and the British. If he was the political enemy of Tippu what his poor relations accountable for.This can never be justified Any historical truth will be passed from generations to generations in the folk form

    Any historical personality shoudlbe analysed with pros and cons

Leave a Reply to Anbarasu Selvan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க