privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 27/05/2014

ஒரு வரிச் செய்திகள் – 27/05/2014

-

செய்தி: “நவாஸ் ஷெரிப்ஜி இசுலாமாபாத்தில் தங்கியிருந்தாலும் வாரம் ஒரு முறை அவரது தாயாரை சந்திக்க செல்வார் என்பதை என்னிடம் தெரிவித்தார். இம்முறை அவரது தாயாருடன் உணவருந்திக் கொண்டிருக்கும் போது, தொலைக்காட்சியில் எனது தாயார் எனக்கு இனிப்பை ஊட்டிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த ஷெரிப்ஜியும், அவரது தாயாரும் உணர்ச்சிவசப்பட்டார்களாம்.” – டிவிட்டரில் மோடி.

நீதி: தன்னை அன்புடன் கவனித்துக் கொண்டிருந்த இஷ்ரத் ஜஹான் கொல்லப்பட்டது குறித்து அந்த இளம் பெண்ணின் தாயார் எப்படி உணர்ச்சிவசப்பட்டிருப்பார் என்று விவரிப்பாரா இந்த கல்லுளி மங்கன்!
_____________

செய்தி: ஆப்கானிஸ்தான் ஹராத்தில் இருக்கும் இந்திய தூதரகத்தை தாக்கியது, தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கம் என்று ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய் தெரிவித்தார்.

நீதி: ஹமீது பாய் இப்படி பட்டவர்த்தனமாக தெரிவித்தும், பாக்கிற்கு சவால் விட வேண்டிய மோடி, ஹைதராபாத் ஹவுசில் சிக்கன் பிரியாணி போட்டு நவாஸ் பாயுடன் அளவளாவிக் கொண்டிருக்கிறாரே, ஏன்?
___________

செய்தி: எங்களுக்குத் தேவைப்படும் ஆயுதங்களின் பட்டியலை இந்திய அரசிடம் கொடுத்திருக்கிறோம். அவற்றில் சில ஏற்கப்பட்டு எங்களுக்கு வினியோகிக்கவும் செய்யப்பட்டு விட்டது. மீதியை பிரதமர் மோடி பரிசீலித்து தருவாரென நிச்சயம் நம்புகிறோம்.ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய்.

நீதி: ஆப்கன் இந்திய தூதரகத்தை தாக்கியது பாக் ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழு என்று ஹமீது பாய் சொன்னது செய்தியா, லஞ்சமா என்று இப்போது புரிகிறதா?
____________

செய்தி: பிரதமர் அலுவலகத்திற்கு பொறுப்பேற்கச் சென்ற மோடி, அங்கே இருந்த காந்தி படத்திற்கு பூக்களால் அஞ்சலி செலுத்தினார்.

நீதி: இதை மேலே பார்த்துக் கொண்டிருக்கும் கோட்சே, இது பங்காளியின் நடிப்பா, இல்லை துரோகமா என்று புரியாமல் அழுகிறாராம்.
___________

செய்தி:  மோடி பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டு அறிவித்த முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக, கோரக்தாம் விரைவுவண்டி விபத்தில் இறந்தவர்களுக்கு 2 இலட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்குமாறு உத்திரவிட்டார்.

நீதி: மக்களிடம் நிலவிய காங்கிரசு வெறுப்பினால் விபத்து போல வெற்றிபெற்றவர், ஒரு ரயில் விபத்திற்கு நிவாரணம் வழங்கியது தற்செயலானதுதான். ஆனாலும் முதலிலேயே இப்படி ஒரு துக்க அறிவிப்பு வருவது இந்து மத தருமத்தின்படி ஏதோ ஒன்றின் கெட்ட சகுன அறிகுறியில்லையா?
_______________

செய்தி: பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடியின் அலுவலகத்தின் தலைவராக, பிரதமர் அலுவலக முதன்மை செயலராக, உ.பி.,யை சேர்ந்த நிர்பேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதி: ஹார்வர்டில் படித்துள்ளதால் அமெரிக்க விசுவாசமும், டிராய் ஆணையத்தில் தலைவராக பணியாற்றியுள்ளதால் முதலாளித்துவ அடிமைத்தனமும் கொண்ட மிஸ்ரா, தெரிவு செய்யப்படவில்லை என்றால்தான் அது செய்தி.
______________

செய்தி: மோடி தலைமையிலான அரசு பத்திரிகை சுதந்திரத்திற்கு உறுதி அளிப்பதாக இருக்கும், அரசை விமர்சிக்க சுதந்திரம் அளிப்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது, என்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில் மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

நீதி: மோடியை இணையத்தில் விமரிசத்தார்கள் என்று கோவாவிலும், பெங்களூருவிலும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மேற்கண்ட அறிவிப்புக்கு முன் நடந்தது என்று யாராவது நிம்மதியடைய முடியுமா?
__________________

செய்தி: “மோடி பிரதமராக பதவியேற்றதும் பாகிஸ்தான் பிரதமருடன் பேச்சு நடத்துவதாக அறிவித்திருந்தாலும், பாகிஸ்தானை நம்ப முடியாது. ஆனாலும், மோடி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. பாகிஸ்தான் வழிக்கு வராவிட்டால் அணு குண்டு பட்டனை மோடி அழுத்துவார்.” – சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.

நீதி: பதிலுக்கு பாகிஸ்தான் என்ன தீபாவளி வாணமா விடும்? அவர்களிடமும் அணுகுண்டு இருக்கிறது, பட்டன் உண்டு என்பது கூட இந்த முட்டாளுக்கு தெரியவில்லை. பொதுஅறிவு இல்லை என்பதாலேயே மதவெறியின் மகத்துவம் ஒளிரும் போல.
__________________

செய்தி: மைத்துனருக்கு பதவி கிடைக்காத பட்சத்தில், மனைவிக்காவது பதவியை பெற்று, கட்சியை காப்பாற்றும் நோக்குடன் விஜயகாந்த் டில்லி சென்றுள்ளார்.

நீதி: மட்டன் கடையைச் சுற்றி வரும் எல்லா தெருவோர பைரவர்களுக்கும் ஃபிரீ கறி கிடைத்து விடாது கேப்டன்!
________________

செய்தி: சி.பி.ஐ வழக்கு நிலுவையில் இருப்பதால் பா.ம.க.,வின் அன்புமணிக்கு அமைச்சர் பதவி அளிக்க பா.ஜனதா முன்வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நீதி: முசாஃபர் நகர் இந்து மதவெறியனும் விலங்கு கால்நடை மருத்துவருமான பல்யானுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் போது தருமபுரி வன்னிய சாதிவெறியனும் மனித கால்நடை மருத்துவருமான அன்புமணிக்கு கொடுத்தால் என்னடா குத்தம்.
________________

செய்தி: தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்படும்போது சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்படும். அதன்படி முதல்வருக்கு முதலிடம். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளனர். நான்காம் இடத்தில் இருந்த முனுசாமி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதால், ஐந்தாம் இடத்தில் இருந்த வைத்திலிங்கத்திற்கு, நான்காம் இடம் வழங்கப்பட்டுள்ளது. பழைய அமைச்சரவை பட்டியலில், 12-ம் இடத்தில் இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஐந்தாம் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து வரிசையாக, மோகன், வளர்மதி, பழனியப்பன், ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நீதி: சீனியாரிட்டி, செக்யூரிட்டி, செலிபிரிட்டி சமாச்சாரமெல்லாம் அடிமைகளுக்கு ஏதய்யா?
___________________

செய்தி:  முந்தைய ஐ.மு அரசு, 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மானியச் சுமையை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ அரசுக்கு விட்டுச் சென்றுள்ளது. இது புதிய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதி: மக்களுக்கு ஒரு இலட்சம் கோடியையும், முதலாளிகளுக்கு பல இலட்சம் கோடிகளையும் வழங்கிய காங்கிரசு அரசின் சாதனையை பாஜக எப்படி முறியடிக்கும் எனபதே இந்த கவலையின் மறைபொருள்.
_______________

செய்தி: இந்திய அரசியல் மாற்றங்கள் குறித்து 1400 ஆண்டுகளுக்கு முன்னரே பிரெஞ்சு அறிஞர் நாஸ்ட்ரடாமஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்திய அரசியலில் 21-ம் நூற்றாண்டில் பெரும் மாற்றம் நிகழும். நரேந்திர மோடி என்ற நபரின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும்; காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும். வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி என்ற நபர்களால் பாரதிய ஜனதா கட்சி எழுச்சி பெறும். வாஜ்பாய் நீண்ட நாட்கள் ஆட்சியில் இருக்க மாட்டார். அத்வானி, கட்சியை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பார். நரேந்திர மோடி நீண்ட நாட்கள் பதவியில் இருப்பார். சிறந்த இரும்பு மனிதரான அவர், தன் சாதனைகளை எடுத்துக் கூறி மக்களின் மனதில் இடம் பிடிப்பார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார் – தினமலர் செய்தி.

நீதி: ஆமாம், நாங்களும் அந்த புத்தகத்தை படித்திருக்கிறோம், அதில் அந்துமணியின் பாலியல் பொறுக்கித்தனங்களைக்கூட நாள்வாரியாக, நேரக்கணக்காக அட்சர சுத்தமாக குறிப்பிட்டிருக்கிறார், நாஸ்ட்ரடாமஸ். ஜெய் ஹிந்த்!
________________

செய்தி: கோரக்தான் விபத்தினை அடுத்து, பாதுகாப்புதான் எங்களது துறை நடவடிக்கைகளில் முக்கியமானதாக இருக்கும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறியிருக்கிறார்.

நீதி: கர்நாடகாவில் தங்களது அரசியல் வாழ்வினை பாதுகாக்க எடியூரப்பாவுடன் போட்டி போட்டு அடிக்கடி யாகம் நடத்தும் சதானந்த கவுடா, ரயிலில் பயணிக்கும் மக்களை பாதுகாக்க என்ன யாகம் நடத்துவார்?
____________

  1. // மக்களிடம் நிலவிய காங்கிரசு வெறுப்பினால் விபத்து போல வெற்றிபெற்றவர்

    நிதானமற்ற பேச்சு. பாஜக/மோடி வெற்றி ஒரு விபத்தாகவோ, காங்கிரஸ் மீதான வெறுப்பினால் மட்டுமோ, விளைந்ததாக தெரியவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு தனிக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது. எதிரியின் வெற்றியை ஏளனம் செய்வதால் அது இல்லை என்று ஆகிவிடாது. அது விவேகமற்ற செயலும் கூட. இவ்வளவு பிரச்சாரம் செய்த பிறகும் வாக்கு சதவீதத்தை உங்களால் காலே அரைக்கால் சதவீதம் கூட குறைக்க முடியவில்லை என்பதை உணர வேண்டும்.

    வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
    துணை வலியும் தூக்கிச் செயல்.

    நாஞ்சில் நாடனிடம் கேட்டால் இதை நச்சென்று சொல்லும் பொருத்தமான வரி ஒன்றை கம்ப ராமாயணம், மூதுரை என எங்கிருந்தாவது எடுத்துக் கொடுப்பார். என்னால் முடிந்தது பாடப் புத்தக மனப்பாட பகுதி செய்யுள் மட்டுமே!

    • //நிதானமற்ற பேச்சு. பாஜக/மோடி வெற்றி ஒரு விபத்தாகவோ, காங்கிரஸ் மீதான வெறுப்பினால் மட்டுமோ, விளைந்ததாக தெரியவில்லை//

      இன்னும் கூட முதலாளிகளின் ஆதரவும் அவர்கள் கட்டுப்பாட்டில்/ஆதரவில் உள்ள பத்திரிக்கை ,செய்தி தாள், தொலைக்காட்சிகளின் ஆதரவையும் சேர்த்திருக்கலாம் தான். வினவிற்கு என்னுடைய கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன்

    • உ பி யில் பாஜக 42% வாக்குகளும், அடுத்து வந்த சமாஜ்வாடி 22% வாக்குகளும் பெற்றன. ராஜஸ்தானில் பாஜக 54%, காங்கிரஸ் 30%. குஜராத்தில் பாஜக 59%, காங்கிரஸ் 33%. மத்தியப் பிரதேசத்தில் பாஜக 54%, காங்கிரஸ் 35%. உதாரணத்திற்கு சில மாநிலங்கள்.

      இந்த மாநிலங்களில் செயல்படும் ஊடகங்கள் என்ன? இவற்றை எத்தனை பேர் பார்க்கிறார்கள்,அல்லது படிக்கிறார்கள்? இம்மாநில மக்கள் மனநிலையை நிர்ணயிப்பதில் முதலாளிகள் எவ்வாறு பங்காற்றினார்கள்.

      சற்று விரிவாக விளக்க முடியுமா? நன்றி.

      • வெங்கடேசன் ,

        // எதிரியின் வெற்றியை ஏளனம் செய்வதால் அது இல்லை என்று ஆகிவிடாது//
        உண்மை தான் . அவர் இப்போது பிரதமரும் ஆகி விட்டார் …

        எனக்கு மாநிலங்கள் வாரியாக என்னென்ன ஊடகங்கள் இருக்கிறன்றன என்று தெரியவில்லை மற்றும் அவை மோடிக்கு சாதகமாக என்னென்ன செய்தனர் என்பதை ஒரு புள்ளி விவரம் போல் சொல்ல என்னிடம் இப்போது தகவல்கள் இல்லை . வேண்டுமானால், அதை திரட்ட முயற்சி செய்கிறேன் . ஆனால் ஊடகங்கள் அவர்க்கு சேவகம் செய்ததையும் பெரும்பாலான (தரகு) முதலாளிகள் அவரை ஆதரிப்பதையும் யாரும் மறுக்க முடியாது .

        மற்றும் நான் “இன்னும் கூட முதலாளிகளின் ஆதரவும் அவர்கள் கட்டுப்பாட்டில்/ஆதரவில் உள்ள பத்திரிக்கை ,செய்தி தாள், தொலைக்காட்சிகளின் ஆதரவையும் சேர்த்திருக்கலாம் தான்” என்று தான் குறிப்பிட்டு இருக்கிறேனே தவிர இவை மட்டுமே அவரை வெற்றியடைய செய்யவில்லையென்பதையும் அறிவேன்.

        நன்றி.

    • இந்திய ஊடகங்களில், தமிழ், ஆங்கில பத்திரிகைகள், டிவி சேனல்கள் மோடியை ஆதரித்ததை உணர முடிந்தது. ஆனால் இவற்றின் வீச்சு குறைவு. இந்தி ஊடகங்களை ஆராய்ந்தால் தெளிவு கிடைக்கும். தைனிக் ஜாக்ரனில் இருந்து தொடங்கலாம்! ஆனால், எனக்கு அந்த அளவு இந்தி பரிச்சயம் இல்லை. எனினும் அவையும் மோடியை ஆதரித்து இருக்க சாத்தியம் உண்டு. யாராவது ஆராய்ந்து சொன்னால் நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்.

      முதலாளிகள் ஆதரவின் வீச்சும் எனக்கு புரியவில்லை. பணக்கார முதலாளி நிறைய நன்கொடை தரலாம். பணம் தருவதற்கு மேல் அவர்கள் என்ன செய்ய முடியும் என எனக்கு புரியவில்லை. மறுபுறம் 2G பேர்வழிகள் பணத்திற்காக அடுத்தவரை எதிர் பார்க்கும் நிலையில் இருந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

  2. 2002 -ல் பார்ப்பன பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட அப்பாவி இஸ்லாமிய மக்களின் தாய் தந்தையர்கள் மற்றும் உறவினர்கள் எப்படி கதறிருப்பார்கள்!
    அந்த மனித படுகொலைகளை உலகமே கண்டது.
    இந்த படுகொலைகளில் கை நனைத்தவனும் பாசிச கொடுங்கோலனான மோடியை அங்கீகரிப்பவர்கள் எவனும் மனிதப் பிறவியே அல்லாதவர்கள்..

  3. வினவுக்கு ஒரு வேண்டுகோள்:

    தங்களது பதிவுகளில் இந்திய அரசியல்வாதிகளை கலாய்ப்பது என்ற பெயரில் அப்பட்டமாக பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுக்கும் விதம் பதிவிடுவது மிகவும் வருந்தத்தக்க விடயம்.

    ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுக்கு எதிரியாகவும், இந்தியாவுக்கு நண்பனாகவும் இருப்பதால் நீங்கள் ஆப்கானிஸ்தானையும் எதிர்க்கிறீர்கள்.

    என்ன தான் இருந்தாலும், இது நம் தாய்நாடு. பாகிஸ்தான் மேல் உங்களுக்கு அவ்வளவு பாசம் இருந்தால் ஒரு முறை அங்கு சென்று வாருங்கள். ஜனநாயகம், கருத்து சுதந்திரம் எல்லாம் எப்படி இருக்கிறதென்று உங்களுக்கு தெரியும்.

    மீண்டும் மீண்டும் இது போன்ற பாகிஸ்தானுக்கு ஜால்ரா அடிக்கும் பதிவுகள் வினவினில் வருமானால், இந்த வலைதளத்தின் விவாதங்களில் பங்கு கொள்வதை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியது தான்.

    • நண்பர் கற்றது கையளவிற்கு ஒரு வேண்டுகோள்,

      நீங்கள் இவ்வளவு ஏமாளியான தாய்நாட்டு பக்தராக இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. பாகிஸ்தான் ஆளும் வர்க்கமும் இந்திய ஆளும் வர்க்கமும் மக்களைச் சுரண்டுவதில் இணக்கமாகவே இருக்கின்றனர். இரு நாட்டு அரசியல்வாதிகளும் சேர்ந்து செய்கிற தொழில்கள் ஏராளம். நவாஸ் செரீப்புக்கு சொந்தமான சர்க்கரை ஆலைகள் முதல் பிஜேபியில் இருக்கிற தரகு முதலாளிகள் வரை பல்வேறு கொள்ளைகளில் கூட்டாகத்தான் இருக்கின்றனர்.

      பஞ்சாப் எல்லை ஓரத்தில் கண்டும் காணாமல் நடக்கிற கஞ்சா பிசினஸ் இரு நாட்டு ஒத்துழைப்போடும் தான். அமிர்ந்தர் சிங்கிடம் அருண் ஜேட்லி தோற்றுப்போனார் அல்லவா? அவரிடம் கேட்டுப்பாருங்கள் பாகிஸ்தானை அண்டிப் பிழைப்பதை பற்றி எடுத்துவிடுவார்.

      பிஜேபி காங்கிரசின் பிழைப்புவாதம் தான் பாகிஸ்தான் அரசியல். இந்த இருகட்சிகள் இருக்கும் வரை பாகிஸ்தான் பிரச்சனை நீடிக்கவே செய்யும். மற்றபடி உங்கள் நாட்டுப்பற்றிற்கு அரசியல்வாதிகள் மயிரளவு மதிப்பும் தரப் போவதில்லை என்பதை பரிசீலிக்க வேண்டுகிறேன்.

    • கற்றது கையளவு நண்பரே ,

      உங்களுக்கு இருக்கும் நாட்டுப்பற்று எங்களுக்கும் இருக்கிறது . அதில் மாற்றுக் கருத்து ஒன்றும் இல்லை. உங்களுக்கு அப்படி இருந்தால் அதைப் பற்றிக் குறிப்பாக கூறவும்.

      பாகிஸ்தானில் ஜனநாயம் இல்லை என்பதில் மாற்றுக் கருத்தில்லை . இது பொதுவாக மதசார்புள்ள நாடுகளில் நடக்கும் கூத்து/கொடுமை தான் . அதை விமர்சித்து வினவில் ஏராளமான கட்டுரைகள் வந்துள்ளன . தயை கூர்ந்து அவற்றைப் படிக்கவும்.

      மற்றபடி தாங்கள் சொன்னபடி பாகிஸ்தானுக்கு ஜால்ரா அடிக்கும் படியானக் கட்டுரைகளை வினவில் நான் படித்த ஞாபகம் இல்லை . எதாவது அப்படி ஒரு கட்டுரை ஒன்றை தாருங்கள் .நானும் படித்து வினவை விமர்சிக்கிறேன்.

      நன்றி

  4. நேற்றுவரை பாக்கிஸ்தான்,இலங்கைக்கு எதிராக வாய்சவடால் அடித்த மோடி,மற்றும் பாஜகவினர் இப்போது சார்க் கூட்டமைப்பு என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு ஈழ கொலைகாரனுடனும்,தலைவெட்டி செரீப்புடனும் விருந்து உண்டு கைகுலுக்குகின்றனர்.இந்த கேவலத்திற்கு பெயர் ராஜதந்திரமாம்.மண் மோகனுக்கும் மோடிக்கும் உள்ள வேறுபாடு தலைக்குள் இருக்கும் மூளையில் இல்லை .தலைமேல் இருக்கும் டர்பனில் தான் .

    • மோடி பதவியேற்ற விழாக்கு பாகிஸ்தான் இலங்கை முக்கிய பிரச்சினை. நாடுகள் அழைத்து விருந்து சாப்பிடா இல்லை. சாப்பாடு போட்டு எச்சரிக்கை செய்துள்ளார். மோடி இதற்கு முன் காங்கிரசு கட்சி மொம்மை பிரதமர் வைத்து பாகிஸ்தான் இலங்கை. அமெரிக்க போன்ற நாடுகள். எல்லாம். ஒரு தனி சாம்ராஜ்ஜியம் நடத்தியது ஆனால் மோடி கிட்ட எந்த நாட்டு தலைவர் பருப்பு வேகாது. ஒரு முறை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளார் இனி பாகிஸ்தான் இலங்கை. எதாவது வாலு ஆட்டினால் ஒட்ட நறுக்கி விடுவார் மோடி அப்புறம் மோடியுன். மருமுகம் எல்லாரும் பார்க்க வேண்டிய நிலை வரும் சிங்கத்தை சீண்டி பார்த்தால் ராஜபக்ச சங்கு ஊதி விடுவார் மோடி

      • சந்தனபண்டியரே,

        முதல்ல நல்லா எழுத கத்துக்குங்க ….அப்புறம் இங்க வந்து வாதிடலாம். .என்ன அப்படி அவசரன்கிறேன் . அதுக்கு தான் தினமலரு படிக்கதீங்கனு சொல்றேன்.

        சரி யாருக்கெல்லாம் எச்சரிக்கை மனியாட்டியுள்ளார்னு தெரிஞ்சா நல்லாருக்கும் . ஏன்ன எனக்கும் நாட்டுப் பற்றிருக்குல. நானும் நாலு பேருக்கு சொல்லி பீதிக்கிவேன்ல …

        • சிப்பு..னேத்து செய்தி சேனல்களில் பிரதமரின் ஸ்போக் பெர்சன் சொன்ன செய்தி இது

          சந்தனபாண்டியன்

          • சந்தனபண்டியருக்கு என் மேல் என்ன கோவமோ தெரியல சிவப்பு’வ , சிப்பு ஆக்கிட்டாரு..
            உங்க பேர விட என் பேரு சிறியதாக தானே இருக்கு ….

      • சந்தனபண்டியரே,
        உங்கள தப்பா புரிஞ்சிகிட்டேன்…என்ன இருந்தாலும் மோடிய இப்படி அசிங்க படுத்த கூடாது. அவர போயி சிங்கம் புலின்னு …வளர்ச்சி பாதையில நம்மள அழச்சுட்டு போரவர போயி மத்தவங்க வால நறுக்க சொல்றீங்களே உங்களுக்கே இது நியாயமா இருக்கா……

        • 🙂 🙂

          அவர் ஆயுதத்தை எடுக்க வேண்டுமா அறவழியில் போகவேண்டுமா என்பதை அண்டைநாடுகளே முடிவு செய்ய வேண்டும்…..

  5. //செய்தி: “மோடி பிரதமராக பதவியேற்றதும் பாகிஸ்தான் பிரதமருடன் பேச்சு நடத்துவதாக அறிவித்திருந்தாலும், பாகிஸ்தானை நம்ப முடியாது. ஆனாலும், மோடி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. பாகிஸ்தான் வழிக்கு வராவிட்டால் அணு குண்டு பட்டனை மோடி அழுத்துவார்.” – சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.

    நீதி: பதிலுக்கு பாகிஸ்தான் என்ன தீபாவளி வாணமா விடும்? அவர்களிடமும் அணுகுண்டு இருக்கிறது, பட்டன் உண்டு என்பது கூட இந்த முட்டாளுக்கு தெரியவில்லை. பொதுஅறிவு இல்லை என்பதாலேயே மதவெறியின் மகத்துவம் ஒளிரும் போல. //

    India has effective missile shield which will kill the enemy missiles in mid air equivalent to american patriot missiles. Even china dont have. Keep in that mind.

  6. வினோத் ,

    பாகிஸ்தானில் இது இல்லை தான்.

    அதுக்காக இந்தியாவில் மட்டும் தான் அது இருக்குன்னு சொல்வீங்க போல.

    அமெரிக்க , சீனா , ரஷ்ய , இஸ்ரேல் இந்த நாடுகளில் எல்லாம் இந்த வசதி இருக்கு.

    சும்மா கூகுள்ல தேடித் பாத்தாலே இது தெரிஞ்சுருக்கும். சும்மா தினமலர மட்டும் படிச்சிட்டு இருந்தால் இப்படி தான் ……

    • sivapu,

      Cant you read my full comment. I clearly mentioned ‘equivalent to US patriot missiles’. Guy who knows about US patriot missles would also be knowing about all the countries which is capable of producing their missile sheild. our anti missles are kill percentage is 99.8 which explains that pakistan’s missiles would hardly reach indian targets.

      Next time please read my full comment. FYI, i am persuing courses in defence analysis and i wont read dinamalar.

      • வினோத் ,
        எனக்கு கொஞ்சம் ஆங்கிலம் அவ்வளவா வராதுங்க அதான் ஏதோ கொஞ்சம் விடுபட்டு போச்சு .. இனிமேட்டு நல்லா படிச்சிட்டு எழுதுறேங்க …..

      • To the kind attention of the great Defence Analyst VIinothji,Respected sir,I am pleased to know from ur comments Bharat matha can intercept nuclear missiles and save her citizens like a thamil lady chased away tiger by just beating it with a MURAM..well.
        what about the possibility of pakistani war planes dropping nuclear bombs on your soil.

        • Complete air defence includes war planes also.Lot of layers including surface to air missile,air defence system with most advanced radars from isreal , i dont think so pakistan will have .1% of entering in to indian territory.

          Top defence establishments are not fool like you to attack the nuclear powered country with nuclear missiles without thinking much. They will make sure that there wont be
          any kind of nuclear retaliation from enemy side and they will make sure complete missile defence sheild is in place. Further more every day DRDO testing new kind of anti missile systems. you will surely see in near future(may be with in 5 years)that india is free of nuclear threat from pakistan

          Even if pakistan has some .0001% of attacking india with nuclear missile , i hope people including vinavu groups(especially you) will also face death.In that case i will be very happy.

          pakistan should be very happy as it has 15% muslim and vinavu kumbals support inside india.

          • The great Defence Analyst authenticate the proverb that is ”proud fools talk too much”.
            The question is regarding the possibility of pakistani war planes dropping nuclear bombs on Indian soil,not about missile defence sheild .you fool talked again about missile defence in length and ruled out nuclear air strike in two lines,that too,citing your ”excellent” radar system which you beggars got from Isreal.

            The effectiveness and excellency of radar systems operationalised by Indian military SOORAPPULIKAL is best known to war criminal Rajapakse as he had to spend several nights in bunker fearing LTTE war planes bombarding presidensial palace.Even a single sortie of LTTE war planes could not be detected in advance by radar system established by Indian military SOORAPPULIKAL.they detected them only when they were flying on Colombo.

            Only fools like you can believe that each and every sortie of enemy war planes can be detected and intercepted.

          • It wont be difficult for india to watch the movements of PAF which is so weak compared to IAF. Half of the PAF are F16 which requires US permission to engage in war. If india is able to stop cruise missile which is of in mach speed it wont be a problem for india to stop figher jets. They will mostly target major citites like mumbai,delhi,hyderabad(india wont care about hyderabad if it is nuked),chennai in india which already coverd by missile sheild. Even if they attack some small towns and villages there wont be any major economy loss. Also pakistan second strike capability is also less as they dont have any nuclear submarine like india.

    • yeah,

      china also have but it is not as much as effective like ours(not yours, as you dont like india having advanced military technologies ) pritivi air defence system and they are new to that techonolgy. They are using mostly russia’s s300 for their air defence.

      US,Russia,Isreal also having their own respective air defence which india dont need to worry. Because they are alies of india and ready to share the technology.

      Next time ask your mentor(vinavu) not to mention about pakistani’s nuclear missiles. Because in next five years pakistani nuclear missiles will be completely useless as india will acheive complete missile defence including cruise missiles from pakistani territory under modi’s government.

  7. //தெருவோர பைரவர்களுக்கும் ஃபிரீ கறி கிடைத்து விடாது //

    அடேய்!!! விலை மகள் பெத்த வினவு கட்டு(விரியன்)ரையாளர்களே !!!!

    “தெருவோர நாய்களுக்கும், ஃபிரீ கறி கிடைத்து விடாது ” என்று எழுத வேண்டியது தானே டா!!!

    அதென்னடா!! பைரவர்னு கடவுள் பேர சொல்லி, இந்துக்கள் மத நம்பிகையை அவமான படுத்துறீங்க…!!!!

    அந்த இந்துக்கள்ள, நீங்க யாருக்காக போராடுகிறீர்களோ, அந்த பாட்டாளி வர்கத்தினரும் அடக்கம்தானே???

    உங்கள்(வினவு) அழிவு காலம் நெருங்கிவிட்டது டா !!!

    “சவுக்கு” தளத்துக்கெல்லாம் கேஸ் போட்டு மொடக்குராணுக…..இந்த “வினவு”அ இன்னும் விட்டு வெச்சுருகானுகளே?!?!?!?!

Leave a Reply to Santhanapantian பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க