privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்எப்படிங்க இவ்வளவு பேர் இவரை நம்புனாங்க ?

எப்படிங்க இவ்வளவு பேர் இவரை நம்புனாங்க ?

-

மோடி மாயை 1தேர்தலுக்கு முன்பு வரை ஒரு பெருங்கூட்டம் இணைய வெளியில் மோடி வழிபாட்டை நடத்திக் கொண்டிருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்னால், எதிர்ப் படுபவர்களில் பாதிபேர் ஏதோ ஒரு மல்டிலெவல் மார்கெட்டிங்கில் சேர்ந்து, நம்மையும் அந்தப் படுகுழிக்கு இழுக்க முயன்றதைப்போல, இரண்டு மாதங்களுக்கு முன்பு வரைக்கும் மோடிக்காக ஒரு பெரும் ஆள் சேர்ப்பு நடந்தது. “நீங்கள் இன்னுமா மோடியை ஆதரிக்க மறுக்கிறீர்கள்?” என மிடில் கிளாஸ் தேசபக்தர்கள் கேள்வியெழுப்பினார்கள். மோடியை ஆதரிக்காமல் இருப்பது தேசவிரோதம் எனுமளவுக்கு திமிர்வாதம் புரிந்தார்கள் ஆர்.எஸ்.எஸ் ரவுடிகள்.

அம்பிகள், அம்பானிகள் மற்றும் அமித் ஷா கூட்டணியானது, தான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் பெருவெற்றி பெற்றுவிட்டது. ஆனால் அதனை கொண்டாடித் தீர்க்க வேண்டிய தேசபக்தர்களோ, கள்ளக்காதலி வீட்டில் கடிகாரத்தை தொலைத்தவனைப்போல சொல்ல இயலாத சங்கடத்தில் தவிக்கிறார்கள். கெட்ட நண்பர்களில் சகவாசத்தால் இளமையில் தவறான வழிக்கு சென்று மோடியை முக்கி முக்கி ஆதரித்த ஃபேஸ்புக் பிரச்சாரகர்கள் பலர், மோடிஜியின் ஒருமாத கசப்பு மருந்திலேயே கலங்கி நிற்கிறார்கள்.

இத்தனைக்கும் “இந்தியாவின் சூப்பர்மேன், தெற்காசியாவின் டோரிமான், அகில உலக சோட்டாபீம்” மோடி அவர்கள் இன்னும் தனது டிரீட்மெண்டை ஆரம்பிக்கவே இல்லை. குனிய வைத்ததற்கே தினத்தந்தி வாசகர்களில் 61 சதவிகிதம்பேர் அரசின்மீது அதிருப்தி கொண்டுவிட்டார்களாம். கும்பிபாகத்துக்குப் பிறகு இவர்கள் என்ன கதியாவார்கள் என நினைக்கும்போதே நம் நெஞ்சம் நடுங்குகிறது.

“அளவுக்கு மீறி ஆதரித்து விட்டோமோ” எனும் கவலையில் இருக்கும் பலர் “ஃபேக் ஐடி ஆரம்பித்து மோடியை எதிர்க்கலாமா?” எனும் யோசனையில் இருப்பதாகக் கேள்வி. ஃபேக் ஐடிக்களால் ஆராதிக்கப்பட்ட மோடி, அதே ஃபேக் ஐடிக்களால் கழுவி ஊற்றப்படவேண்டுமென அந்த இறைவன் விரும்பினால் அதை யாரால் மாற்ற முடியும்? ஆர்.எஸ்.எஸ்சின் ஆயுள் மெம்பர் ரங்கராஜ் பாண்டேவும் மோடியின் தாசானு தாசர் வைத்தி மாமாவும் ஒரு மாதத்துக்குள் மோடி அரசாங்கத்துக்கு எதிராக பேசவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தமக்கு வருமென கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

மோடி பிரதமரானால், பொருளாதார வல்லுனர்களுக்கே தண்ணி காட்டும் பணவீக்கப் பிரச்சனைமுதல் மூத்திரசந்துகளில் ஒட்டப்படும் விரைவீக்க பிரச்சனை வரை சகலமும் தீர்ந்து விடும் என சத்தியம் செய்த வல்லுனர்கள் அத்தனை பேருமே, சொல்லி வைத்தாற் போல “தொடர்பு எல்லைக்கு வெளியே” இருக்கிறார்கள்.

மோடி மாயை 2
அல்லேலுயா கூட்டங்களுக்கும் மோடி வாலாக்களின் கூட்டங்களுக்கும் எந்த வேறுபாடுமில்லை!

வளர்ச்சி வளர்ச்சி என முழங்கிய பாஜக, ஆட்சிக்கு வந்த உடனே தன் வார்த்தையை காப்பாற்றும் முயற்சியை ஆரம்பித்துவிட்டது. கார்பரேட்டுக்கள் வளர்ச்சிக்கு இருந்த சிறிய அளவு முட்டுக்கட்டைகளும் நீக்கப்படுகின்றன. நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நல சட்டங்களை கார்ப்பரேட்டுகளின் தேவைக்கேற்ப ஒழிக்கப்பட இருப்பதற்கான சமிக்ஞைகள் வந்துவிட்டன. இராணுவ உற்பத்தி உள்ளிட்டு, சாத்தியமுள்ள எல்லா இடங்களிலும் அன்னிய மூலதனத்தை கொண்டுவருவோம் என அரசு தெளிவுபட சொல்லிவிட்டது. யார் கண்டது? ஐந்தாண்டு முடிவதற்குள் குடிமக்களின் படுக்கையறைகூட கார்பரேட்டுக்கள் வசம் ஒப்படைக்கப்படலாம். “எனது முப்பதுநாள் அனுபவங்கள்” எனும் மோடியின் கட்டுரை வளர்ச்சி வளர்ச்சி என பேசுகிறதே ஒழிய அதனால் எந்த மக்கள் பயனடையப் போகிறார்கள் என சொல்லவில்லை.

ஆனால் அந்தப் பக்கமோ ஆர்.எஸ்.எஸ்சின் கொள்கைகள் அமுலுக்கு வர ஆரம்பித்து விட்டன. மகராஷ்டிராவில் முதல் கலவரம் ஆரம்பமாகி ஒரு முஸ்லீம் இளைஞர் கொல்லப்பட்டிருக்கிறார். ஹிந்தியே இனி அலுவல்மொழி என டெல்லி பல்கலைக் கழகம் அறிவிக்கிறது. ஹிந்தியே இனி தொடர்பு மொழி என அரசு அறிவித்து விட்டு லேசாக பின்வாங்கியிருக்கிறது. கேட்டால் “வெள்ளைக்காரன் அவன் வசதிக்கு பயன்படுத்திய ஆங்கிலத்தை இன்னும் பயன்படுத்துவது அடிமைத்தனம்” என்கிறார் பாஜக ராகவன். அப்படிப்பார்த்தால் ஜட்டிகூட வெள்ளைக்காரன் அவன் வசதிக்கு உருவாக்கியதுதான். அடுத்தது அதையும் உருவிவிட்டு வலுக்கட்டாயமாக கோவணத்தை மாட்டிவிடுவார்களோ என அச்சமாக இருக்கிறது. மாட்டுச்சாணி சாம்பலில் பல்தேய்ப்பது மாட்டு மூத்திரம் குடிப்பது ஆகியவையும் ஆர்.எஸ்.எஸ்சின் புனிதக்கடமைகள் பட்டியலில் இருப்பதால் அச்சம் இன்னும் அதிகரிக்கிறது.

மோடியின் குறைந்தபட்ச செயல்திட்டமும் சிறப்பாக நிறைவேற ஆரம்பித்துவிட்டது. பெண்ணை வேவுபார்த்த விவகாரத்தில் மத்திய அரசு விசாரணை கைவிடப்பட்டுவிட்டது. அமித் ஷாவை விசாரித்த நீதிபதி மாற்றப்பட்டுவிட்டார். மீதமிருக்கும் வழக்குகளுக்கு எள்ளும் தண்ணியும் தெளிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. போதும் போதாததற்கு கோபால் சுப்ரமணியம் போன்ற ஆகாத ஆட்களை அவமானப்படுத்தும் காரியங்களும் ஜரூராக நடக்கின்றன.

மோடி மாயை 3
முதலாளிகளின் தேவைக்காக மோடியின் கலவர இமேஜை அழிக்க பெரு முயற்சி நடைபெற்றது.

இதில் அதிகம் ஏமாற்றமடைந்தது இந்திய நடுத்தர வர்க்க மக்கள்தான். அதுவும் மிடில்கிளாஸ் இந்துக்கள், கிருஸ்துவர்கள் தேர்தலுக்கு முன்பே தங்கள் மனதை ஓரளவுக்கு தயார்படுத்திக் கொண்டார்கள். முஸ்லீம்களுக்கு மோடி வந்துதான் நெருக்கடி வரவேண்டும் என்ற நிலை இல்லை. ஏறத்தாழ இந்தியாவின் எல்லா அரசுகளும், போலீசும், புலனாய்வு நிறுவனங்களும் முஸ்லீம் விரோத சிந்தனை கொண்டவையே என்பதால் அவர்கள் எல்லா ஆட்சியிலும் அச்சுறுத்தலுடனேயே வாழ்கிறார்கள். ஆனால் மிடில் கிளாஸ் இந்துக்களோ, ஒரு பக்கம் கலவரம் வந்தாலும் மறுபக்கம் வளர்ச்சியும் அமோகமாய் இருக்கும் என நம்பினார்கள். நட்டம் எனக்கில்லை லாபம் வந்தால் அது நமக்கு மட்டுமே எனும் குருட்டு நம்பிக்கை அவர்கள் வசம் இருந்தது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்து வைத்த முதல் ஆப்பு இவர்களுக்குத்தான்.

மோடிக்கு ஓட்டு போட்ட ஒரு நண்பர் ரயில் கட்டண உயர்வுக்குப் பிறகு குழப்பத்துடன் கேட்டார் “எப்படிங்க இவ்வளவு பேர் இவரை நம்புனாங்க?”. மோடிக்கு ஓட்டு போட்டவரே இத்தனை பெரிய மெஜாரிட்டியை எதிர்பார்த்திருக்கவில்லை. எப்படி நாடெங்கும் மக்கள் ஒரே மாதிரி ஏமாந்தார்கள் எனும் எண்ணம் பலருக்கும் இருக்கிறது. பவர் ஸ்டாரிடமே ஏமாறத்த யாராயிருக்கும் நாடு, பத்தாயிரம் கோடி செலவு செய்பவனிடம் ஏமாறுவதில் என்ன அதிசயம்?

அது ஒன்றும் கடினமான நுட்பமில்லை. ஏற்கனவே செவன் ஸ்டார் (திருப்பூர்), அனுபவ், சுசி ஈமு ஃபார்ம் போன்ற வெற்று விளம்பரங்கள் வாயிலாகவே தங்களை பிரபலமாக்கிக் கொண்டும் ஊரை ஏமாற்றினார்கள்.

“பிள்ளையார் பால் குடிக்கிறார்” என்ற வெறும் செய்தி பரப்பப்பட்டபோது அது எப்படி சாத்தியம் என அறிவுபூர்வமாக கேட்டவர்கள் அதிகமா? “எதுக்கும் பால் கொடுத்து பார்ப்போமே” என யோசித்தவர்கள் அதிகமா? “என்னைப்பார் யோகம் வரும்” எனும் கழுதைப் படத்தை கடையில் மாட்டியவர்களில், அதன் பலன் குறித்த தரவுகள் அடிப்படையில் படத்தை வாங்கியவர்கள் எத்துணை பேர்? ஒருவேளை யோகம் வந்தால் நல்லதுதானே எனும் நப்பாசையில் வாங்கியவர்கள் எத்தனை பேர்? கிட்டத்தட்ட இதே தொழில்நுட்பத்தின் அப்டேட்டட் வெர்ஷன்தான் மோடி விளம்பரங்களும். அது எப்படி சாத்தியமாக்கப்பட்டது என்பதை இன்னும் கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

மோடி மாயை 4
ஹிட்லரின் சீடர் காந்தியின் வேடம் தரித்ததை நம்புவதற்கு கூட இந்த நாட்டில் ஆட்கள் இருந்தார்கள்

டெக்னிக் 1: நம்மில் பெரும்பாலானவர்கள் முதலில் முடிவெடுக்கிறோம். அதற்கான காரணங்களை பிறகுதான் தேடுகிறோம். ஏனென்றால் முடிவெடுப்பதற்கான மூளை பாகம் வேறு, காரணங்களை ஆராய்வதற்கான மூளைப் பகுதி வேறு.. முடிவெடுப்பதற்கான மூளைப் பகுதியே வலுவானது என்பதால் விளம்பரங்கள் நம்மை முடிவெடுக்க தூண்டுகின்றன. எடுத்த முடிவை நியாயப்படுத்தும் செயலை பிறகு செய்கிறீர்கள். கேட்டரிங் கல்லூரி விளம்பரத்துக்கு சினேகா வருவது இந்த காரணத்தினால்தான். ரஜினியைக் காட்டிலும் வடிவேலு நிஜத்தில் வலுவானவராக இருக்கலாம். ஆனால் ரஜினி 100 பேரை அடித்தாலும் அதனை ரசிக்கும் நீங்கள் அதையே வடிவேலு செய்யும்போது சிரிக்கிறீர்கள். காரணம் ரஜினி ஒரு ஹீரோ எனும் உங்களது முடிவு. அதேபோல மோடியும் அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டர்தான். ஸ்டிரெய்ட்டாக ஹீரோவாக அறிமுகமானார், அவரது பஞ்ச் டயலாக்குகளுக்கு நீங்கள் கைதட்டினீர்கள். ஹீரோவை தலைவராக்கும் இயல்பு நமக்கு பாரம்பர்யமாக இருப்பதால் மோடிக்கு பிரதமராவதில் பெரிய சிக்கல் இருக்கவில்லை.

டெக்னிக் 2 : நீங்கள் மிகவும் பரிச்சயமான மற்றும் எளிய பெயருடைய வாய்ப்புக்களையே தெரிவு செய்கிறீர்கள். கடினமான மற்றும் புதிய ஐஸ்கிரீம் பெயர்களைத் தவிர்த்துவிட்டு அனேகம்பேர் வெனிலாவை தெரிவு செய்வது இதனால்தான். இதற்காகத்தான் மோடியின் பெயரை பிரபலப்படுத்த மட்டும் பல்லாயிரம் கோடிகளை இறைக்கப்பட்டன. மோடி குனிந்தார், நிமிர்ந்தார், கொட்டாவி விட்டார் என அவர் அசைவுகள் யாவையும் செய்தியாக்கப்பட்டன.

டெக்னிக் 3 : கிளுகிளுப்பான மனோ நிலையில் தரப்படும் வாய்ப்புக்களை நீங்கள் அதிகம் யோசிக்காமல் தெரிவு செய்கிறீர்கள். டேட்டிங் துணையை ஏற்பாடு செய்யும் நிறுவனம் ஒன்றில் நடத்தப்பட்ட உளவியல் ஆய்வொன்றில் இது நிரூபணம் செய்யப்பட்டது. ஒரே தகுதியுடைய இரண்டு குழுக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. முதல் குழு வாசிக்க, பாலியல் ரீதியாக தூண்டும் புத்தகங்கள் தரப்பட்டன. இரண்டாவது குழுவுக்கு அவை தரப்படவில்லை. பிறகு துணையாக தெரிவு செய்ய தரப்பட்ட  பெண்ணின் புகைப்படத்தை முதல் குழுவினர் உடனடியாக தெரிவு செய்தார்கள். இரண்டாம் குழுவினர் அப்படி செய்யவில்லை. அவர்கள் தெரிவு செய்ய இன்னும் கூடுதலான பெண்களது படங்களையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் கோரினார்கள். இரண்டு குழுவினருக்கும் ஒரேயொரு பெண்ணின் புகைப்படம் மட்டுமே தரப்பட்டது என்பது நம் கவனத்துக்குரியது.

மோடியை ஆதரவு மனக்கிளர்ச்சியை உருவாக்கவும் இப்படியான கவர்ச்சிகரமான முன் தயாரிப்புக்கள் செய்யப்பட்டன. சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஆதரவு அறிக்கை கொடுக்க வைக்கப்பட்டார்கள். குஜராத் செப்டிக் டேங்குகளில்கூட செண்ட் வாசம் அடிப்பதாக செய்திகள் பரப்பப்பட்டது. முடவர்கள் நடக்கிறார்கள், ஊமைகள் பேசுகிறார்கள் எனும் அல்லேலூயா பாணி பிரச்சாரம் கட்டவிழ்க்கப்பட்டது.

ரஜினி, விஜய் என சாத்தியப்பட்ட எல்லா பிரபலங்களையும் சந்தித்தார் மோடி. மேக்னா படேல் சாத்தியப்பட்டவரைக்கும் ஆடைகளை துறந்து ஆதரவு கேட்டார். வளர்ச்சி மோகம், வல்லரசு கனவு, சினிமா கவர்ச்சி போன்றவை தூண்டப்பட்டு மோடியின் முகம் காட்டப்பட்டது. உணர்ச்சி வேகத்தில் அறிவு வேலை செய்யாது எனும் நிரூபணமான தத்துவம் மீண்டும் உண்மையானது. (விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 2013 இல் குஜராத் வந்தபோது அவருடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள மோடி கடும் முயற்சி எடுத்தார். குஜராத் அரசு அதிகாரிகள் அவரை மோடியுடன் பேசவைப்பதற்காக அவர் பயணித்த இடங்களிலெல்லாம் விரட்டினார்கள். ஹரேன் பாண்டியாவின் குடும்பத்தை சந்தித்த சுனிதா, மோடியை சந்திக்க மறுத்தார் என்ற செய்தியை இங்கே நினைவ கூர்க)

டெக்னிக் 4 : பெரும்பான்மையானவர்களின் முடிவை பின்பற்றுவது எளிதானது மற்றும் பாதுகாப்பானது என நீங்கள் கருதுகிறீர்கள். கூட்டத்தின் முடிவோடு ஒத்து போவது உங்களது முடிவெடுக்கும் வேலையை குறையும், முடிவு தவறானால் அதனை எதிர்கொள்ளும் கட்டாயம் அந்த கூட்டம் முழுமைக்கும் ஏற்படும் என்பதால் தனிப்பட்ட முறையில் தனக்கான ஆபத்து குறைவதாக மனித மூளை கருதுகிறது. ஆகவே நம்மில் பெரும்பாலானவர்கள் பெரும்பான்மையோரது முடிவோடு ஒத்துப்போவதற்கே விரும்புகிறோம். கூட்டமே இல்லாத மற்றும் அதிக கூட்டமிருக்கிற என இரண்டு மாட்டுக்கறிக் கடைகள்!!! அருகருகே இருந்தால் நாம் அதிக கூட்டமிருக்கிற கடையையே தெரிவு செய்வோம் இல்லையா, அதுபோலத்தான்.

மோடி மாயை 5
தேர்தலுக்கு முன்பேயே மோடிதான் பிரதமர் என்று அறிவித்து விடும் அளவுக்கு ஊடக பிரச்சாரம்

கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக மோடிதான் அடுத்த பிரதமர் என்றே பிரச்சாரம் செய்யப்பட்டது. மோடிக்கு ஓட்டுபோடுங்கள் என்றுகூட விளம்பரம் வரவில்லை மோடியை கொண்டுவரப் போகிறோம் என்றுதான் அனேக விளம்பரங்கள் வந்தன. சில சந்தர்பங்களில் காங்கிரஸ் பேச்சாளர்களே வருங்கால பிரதமர் மோடி என்று குறிப்பிட்ட சம்பவங்களும் நடந்தது. தொழிற்சாலை வைத்து உருவாக்கப்பட்ட லட்சக்கணக்கான ஃபேக் ஐடிக்களும் கோடிகளைக் கொட்டி நாடெங்கும் நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான கூட்டங்களும் மோடிக்கு பெரும்பான்மை மக்கள் ஆதரவு இருப்பதான தோற்றத்தை உருவாக்கின. அதை நம்பிய மக்கள் இல்லாத கும்பலோடு கோவிந்தா போட ஆரம்பித்தார்கள். கோயிந்தா சத்தம் மெஜாரிட்டியாகிவிட்டது.

டெக்னிக் 5 : பிழைக்க வழியற்ற சூழலில் எத்தகைய அடிமுட்டாள்தனமான வாய்ப்பையும் மனிதர்கள் பரீட்சித்துப் பார்க்க முற்படுவார்கள்.

ஆஸ்திரேலியா சென்று சேரும் சாத்தியம் ஏறத்தாழ பூஜ்ஜியம் என்ற நிலையிலும் ஈழ அகதிகள் சாதரண மீன்பிடி படகுகளில் பயணம் போகக் காரணம் இதுதான். தமிழக அகதி முகாமிலும் இலங்கையிலும் வாழ்வு விவரிக்க இயலாத அளவு துயரமானதாக இருக்கையில் ஏதோ ஒருவழியில் அவர்கள் அதிலிருந்து மீள விரும்புகிறார்கள், அது எத்தகைய அபாயகரமான வழியாக இருந்தாலும். காங்கிரஸ் ஆட்சியின் முடிவில் பெரும்பாலான பாமர மக்களிடம் உயிர் மட்டுமே மிச்சமிருந்தது. விலையேற்றம் வேலை உறுதியின்மை என ஏதேனும் ஒரு பெரிய நெருக்கடியிலேயே மக்கள் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு காட்டப்பட்ட ஒரே மாற்று மோடிதான். அது அபாயகரமானது என தெரிந்தாலும் அவர்களுக்கு இந்த அமைப்பில் வேறு மாற்று தெரிந்திருந்திருக்கவில்லை.

டெக்னிக் 6: அதீத அச்சத்தின்போது நீங்கள் அபாயத்தை வலிந்து ஏற்றுக்கொள்ள முற்படுவீர்கள். ஏனென்றால் சிலசமயங்களில் தண்டனை பற்றிய சஸ்பென்ஸ் தண்டனையைவிட மோசமானது. தமிழகத்தில் ஒரு தூக்குதண்டனைக் கைதி தானே தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். கருணை மனு மீதான முடிவு வராத நிலையில் தனது தண்டணைக்கு முதல்நாள் மாலை அவர் தற்கொலை செய்துகொண்டார் (விவரங்கள்: தூக்குமர நிழலில் நூலில், எழுதியவர் சி.ஏ பாலன்). மோடி வந்தால் நாடு என்னவாகுமோ எனும் அச்சம் ஒருவருக்கு அதிகரிக்கையில் அவரது மனம் அதை சரிசெய்ய ”மோடி வந்து அதோட பலனை இந்த ஜனம் அனுபவிக்கட்டும்… அப்பத்தான் இவர்கள் திருந்துவார்கள்” எனும் எண்ணத்தை உருவாக்குகிறது. மனநிலையை சமநிலைப்படுத்துவதற்கான ஒரு தற்காப்பு நடவடிக்கை இது (டிஃபென்ஸ் மெக்கானிசம்). அத்தகைய சந்தர்பங்களில் மோடியே வந்து தொலைக்கட்டும் எனும் சமாதானத்துக்கு சிலர் வர வாய்ப்பிருக்கிறது. மோடிக்கு எதிரான மனோநிலை கொண்டவர்களில் ஒரு பகுதியினர் அமைதியானதற்கு இதுவும் ஒரு காரணம்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஓட்டு போடுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை நாம் நீண்ட  அனுபவத்தின் வாயிலாக கற்றுக்கொண்டிருக்கிறோம். ஆகவே தேர்தலை ஒரு ஆள் மாற்றி விளையாடும் பொழுதுபோக்காக நாம் கையாளத் துவங்கிவிட்டோம். ஆகப் பெரும்பாலானவர்கள் ஜோடி நம்பர் ஒன் போட்டியில் ஓட்டுபோட மெனக்கெடும் அளவுக்குக்கூட பொதுத்தேர்தலின்போது அலட்டிக்கொள்வதில்லை. இந்த மனோபாவத்தை அதிகாரவர்க்கம் விரும்புகிறது, அதனை ஊடகங்கள் பெருமளவு ஊக்குவிக்கின்றன. கட்சிகளில் எம்.பி சீட்டுக்கான தகுதியாக பணபலம் மாறியிருப்பது ஒரு அவலமாக அல்லாமல் சுவாரஸ்யமான செய்தியாக பத்திரிக்கைகளால் பரிமாறப்படுகிறது. இந்த விளையாட்டு மனோபாவம் இந்த சுரண்டல் அரசு எந்திரத்தை நமது கோபத்தில் இருந்து காப்பாற்றுகிறது.

நண்பர்களே,

இது பெரிய திட்டங்களோடு விரிக்கப்பட்ட வலை. ஒருவேளை உங்களது தேர்வு மோடியாக இருந்திருக்கும் பட்சத்தில் அதுகுறித்து நீங்கள் இப்போது குற்ற உணர்வுகொள்ள அவசியமில்லை. முதலாளித்துவமானது மத அடிப்படைவாதிகளையும் ஃபாசிஸ்டுகளையும் உற்பத்தி செய்வதன் வாயிலாகவே ஜீவித்திருக்கிறது. இது கார்ப்பரேட்டுக்களுக்கு தாரைவார்க்கப்பட்ட ஒரு தேசம். இங்கே தேர்தல் என்பது நம்மை கழுவிலேற்றுபவனை நாமே தெரிவுசெய்யும் நடைமுறை. அரசு அதிகாரிகள், மதத்தீவிரவாதிகள், பொருளாதார வல்லுனர்கள், என்.ஜி.ஓக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகிய அனைத்து தரப்புமே கார்பரேட்டுக்களின் கூலிப்படைதான். ஒரு இடத்தில் வேலை செய்யவேண்டியது ஆர்.எஸ்.எஸ்ஸா  அல்லது என்.ஜி.ஓவா என்பதை பெருமுதலாளிகளின் தேவைதான் தீர்மானிக்கிறது. நாட்டை ஆளவேண்டியது மன்மோகனா அல்லது மோடியா என்பதையும் அவர்களே முடிவு செய்கிறார்கள்.

எழுபத்தைந்து சதவிகித முதலாளிகள் மோடியே பிரதமராக வரவேண்டுமென விரும்பினார்கள். இந்த நாடு அவர்களுக்கான ஒரு பெரிய ஆலை நிலம், ஒரு கொத்தடிமைச் சந்தை. பல்லாயிரம் கோடி முதலீடு போட்டு தாங்கள் விரும்பியவரை தங்களுக்கான ஒரு மேலாளராக நியமனம் செய்திருக்கிறார்கள், இது முன்பிருந்த மேலாளருக்கு செய்யப்பட்ட செலவைக் காட்டிலும் மிக அதிகம்.  போட்ட முதலீட்டுக்கான லாபத்தை அவர்கள் எடுத்தாக வேண்டும்.

மன்மோகன் ஆட்சியில் நாம் எதிர்கொண்ட துயரங்கள் இனி இன்னும் தீவிரமாகும். விவசாயிகள் தற்கொலை, விலையுயர்வு, வேலையிழப்பு என சகலமும் முன்னைக்காட்டிலும் தீவிரமாகும். ஆனால் சிலகாலத்துக்கு அவை “வளர்ச்சிக்கான தற்கொலை, வளர்ச்சிக்கான விலையுயர்வு” என ஊடகங்களால் விளக்கப்படும். கூடுதலாக மோடி நல்லவர் வல்லவர் எனும் தனிமனித துதிபாடல் ஒரு பக்கமாக நடக்கும் (ரயில் பயணத்தின்போது மோடி டீ வாங்கிக்கொடுத்தார், பெண்களுக்கு இடம்கொடுத்தார் என ஒரு கட்டுரையும், மோடியின் இளமைகால சாகசங்கள் என் ஒரு கட்டுரையும் தற்போதைக்கு தமிழ் இந்துவில் வந்திருக்கின்றன)

பிறகு மக்கள் அதிருப்தி அதிகமாகும் போதெல்லாம் பாஜகவின் வழக்கமான உத்தியான தீவிரவாத அச்சுறுத்தல் எனும் பீதி கிளம்பும். அதுவும் காலாவதியாகி, மோடியும் வேலைக்காகாதவர் என முதலாளிகள் முடிவு செய்யும் பட்சத்தில், அவரை அனுப்பிவிட்டு அடுத்த ஆப்ஷனை நமக்கு அம்பானியும் டாடாவும் அருளுவார்கள். தனக்கு கிடைத்த மிகக் கேவலமான தோல்வியைகூட ஒரு வழக்கமான பணி ஓய்வைப்போல மன்மோகன் “பக்குவத்துடன்” எதிர்கொண்டதற்குக் காரணம், அவர் இந்த ஆட்டத்தை நன்கறிந்தவர் என்பதுதான்.

முதலாளித்துவத்தின் லாபவெறி வரம்பற்றது. அதன் இறுதி இலக்கு நம்மை வீதிக்கு விரட்டுவதுதான். இதனை எதிர்கொள்ள இரண்டு உபாயங்கள் மட்டுமே இருக்கின்றன. ஒன்று இந்த அமைப்பை எதிர்த்து போராடும் வீரனாக நாம் வீதிக்கு வருவது. அல்லது முதலாளித்துவத்தால் நாம் வீதிக்கு விரட்டப்படும்வரை ஒரு ஏதிலியைப்போல மௌனமாக காத்திருப்பது.

–          வில்லவன்.

  1. உங்களுக்கென்று சில வார்த்தைகள் பிராண்ட் நேம் ஆகி விடும் வாய்ப்புள்ளது போலிருக்கே. மூத்திரச்சந்து, வீரைவீக்கம், சந்து டாக்டர் இன்னும் பல. வார்த்தைகளைப் பார்த்ததும் நீங்க எழுதிய கட்டுரையாகத்தான் இருக்கும் என்றே கீழே வந்து பெயரைப் பார்த்தேன். ஏமாற்றவில்லை. நன்றி.

    கடைசி வரி பொருத்தமாக முத்தாய்ப்பாக உள்ளது. உண்மையான நிலவரமும் அது தான்.

    பேய் வேண்டுமா? பிசாசு வேண்டுமா? என்றால் ஏற்கனவே பேயை பார்த்தாகிவிட்டது. இந்த ஆட்சி பிசாசு போல இருக்கும் என்றால் அதையும் பார்த்து விட வேண்டியது தானே. குடும்ப பராம்பரிய சங்கிலி உடைபட வேண்டும் என்னைப் போன்று ஏராளமானோர் விரும்பிய விருப்பங்கள் இந்த தேர்தல் மூலம் நிறைவேறியுள்ளது.

    உங்கள் வார்த்தைகளின்படி கடந்த ஒரு வருட இடைவிடாத பிரச்சாரம் தான் இவரை பிரதமராகக் கொண்டு வந்தது என்றால் நிதிஷ்குமார் போன்றோர் மற்ற மாநில முதல்வரைவிட மிகச் சிறப்பாகத்தானே செயல்பட்டார். அவருக்கே மக்கள் அல்வா கொடுத்து விட்டார்களே? வடக்கு பிஹாரின் உள்ளடங்கிய பல பகுதிகள் இன்னமும் 1947 காலகட்டத்தில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். அவர்களை எந்த மாய மந்திரம் மாற்றியது?

    எதிரிகள் பலவீனமாக இருந்தார்கள் என்பதனை விட ஒற்றுமையாக சேர்ந்து செயல்பட மனதளவில் கூட தயாராக இல்லை என்பது தான் நாம் பார்க்கும், பார்த்த, எதிர்காலத்தில் பார்க்கப் போகின்ற முடிவுகள்.

  2. நம்மில் பெரும்பாலானவர்கள் முதலில் முடிவெடுக்கிறோம். அதற்கான காரணங்களை பிறகுதான் தேடுகிறோம்.
    அதற்கு வினவின் இந்த பதிவே சாட்சி..

  3. மகராஷ்டிராவில் முதல் கலவரம் ஆரம்பமாகி ஒரு முஸ்லீம் இளைஞர் கொல்லப்பட்டிருக்கிறார்.

    இதுக்கு மோடி காரணமென்றால் உத்திரப்பிரதேசத்தில் 3 பிஜெபி தலைவர்கள் கொல்லப்பட்ட்தற்க்கு யார் காரணம்?

    தமிழகத்தில் 3 மாதத்திற்கொருமுறை கொல்லப்படும் இந்துத்தலைவர்களின் கொலைகளுக்கு யார் காரனம்..இந்த விரைவீக்கதிற்கும் பாரதப் பிரதமர் தான்…

    னான் புடிச்ச முயலுக்கு மூணு காலு என்பது போல்….னீங்கள் பார்க்கும் எல்லா விரை வீக்கத்திற்க்கும் பாரத பிரதம்ர் தான் காரணம் என்பீரே..

    • ப்பீயா அப்படியே ஜெ.மாமியின் வருமான வரி வழக்கில் மோடி செஞ்ச ‘சேவை’பத்தி பதிவுலயும் ஒங்க கருத்த போடறது. தமிழ்நாட்டுல ‘இந்து’தலிவருங்க கொலை செய்ய பட்டதுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் காரணமா இல்லை அவங்க செஞ்ச சில பல மேட்டர் காரணமானு இப்ப இருக்குற ‘இந்து’ தலிவர்ங்க கிட்ட ரகசியமா கேளு. வெளிய சவிசயம் தெரிஞ்சா நாறிடும்ணுதான் பயங்கர வாத பூச்சாண்டி காட்றாங்க. இருந்து பரமக்குடி கொலையும், ராமநாத புரம் கொலையும் ‘இந்து’ தலிவர்களின் கட்ட பஞ்சாயத்தும், ‘கள்ள’ தொடர்பும்தான் காரணமுன்னு சந்தி சிரிக்குது….. மோடி பொண்டாட்டி மேட்டர் மாதிரி வேறு எந்த ‘தலிவானவது’ மாட்டியிருந்தா இந்நேரம் என்ன ஆட்டம் ஆடுவீங்க. மோடி செஞ்சா மட்டும் தப்பில்லை. என்ன இருந்தாலும் இந்து கல்ச்சர்(கஸ்மாலம்) இல்லியா……

    • ஹிந்து தலைவர்கள் என்றால் என்ன என்று கொஞ்சம் விளக்கவும், மேலும் இந்த கீழ்த்தரமானவர்கள் என்றைக்காவது ஹிந்து மதத்தை பற்றி மேடைகளில் பேசியதுண்டா? அல்லது பாதிக்கப்பட்ட பிபடுத்தப்பட்ட ஹிந்து சகோதரர்களுக்காக குறைந்த பட்சம் குரல் கொடுத்ததுண்டா? இவர்கள் செய்வதெல்லாம் காழ்ப்புணர்வு பிரச்சாரம், மற்றும் ஹிந்து அல்லாதோரை கீழ்த்தரமாக பேசுவது, இவற்றால் யாருக்காவது பிரயோஜனம் உள்ளதா? மத்தவனை திட்டுவது எப்படிப்பா ஒரு மதத்துக்கு சையும் தொண்டாக உங்களை போன்றோரால் பார்க்கப்படுகிறது?

    • //தமிழகத்தில் 3 மாதத்திற்கொருமுறை கொல்லப்படும் இந்துத்தலைவர்களின் கொலைகளுக்கு யார் காரனம்..//

      அவன் கள்ள காதலியோட புருஷன் காரணம்.

  4. டெக்னிக் 2 : நீங்கள் மிகவும் பரிச்சயமான மற்றும் எளிய பெயருடைய வாய்ப்புக்களையே தெரிவு செய்கிறீர்கள். கடினமான மற்றும் புதிய ஐஸ்கிரீம் பெயர்களைத் தவிர்த்துவிட்டு அனேகம்பேர் வெனிலாவை தெரிவு செய்வது இதனால்தான். இதற்காகத்தான் மோடியின் பெயரை பிரபலப்படுத்த மட்டும் பல்லாயிரம் கோடிகளை இறைக்கப்பட்டன. மோடி குனிந்தார், நிமிர்ந்தார், கொட்டாவி விட்டார் என அவர் அசைவுகள் யாவையும் செய்தியாக்கப்பட்டன.

    னீர் இங்க இருக்க வேண்டிட ஆளே இல்ல…

    இதே வேலையா ராகூல் செய்யலையா…மோடியின் பெயரை விட ராகூலும் + காந்தியும் இந்தியாவிற்க்கு பரிட்சயமான பெயரில்லையா?

    ராக்கூலும்… சோனியாவும் கொட்டாத காசையா பிரதமர் கொட்டிவிட்டார்?

    இதே வழியில் தான் நீங்கள் எழுதியா இம்மாம்பெரிய கதையில் மோடி குஜராத்தில் ஜெயித்தாரா என
    சொல்லவில்லையே? அப்படி முடிய்மாயின் நம்ம ஊர் அரசியல்வாதிகளிடம் இல்லாத காசா?

    • எதுக்கு வள வளனு பேசிக்கிட்டு…… மோடி ய பத்தி வினவு அவங்க கருத்த சொல்லிட்டாங்க….. இந்த கட்டுரைக்கு அப்பாற்பட்டு மோடியின் இந்த ஒரு மாத கால ஆட்சியை பற்றி உங்கள் கருத்து என்ன…? இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க…. உங்கள பத்தி நாங்க தெரிஞ்சுக்கறோம்.

  5. ///ஒரு பக்கம் கலவரம் வந்தாலும் மறுபக்கம் வளர்ச்சியும் அமோகமாய் இருக்கும் என நம்பினார்கள். நட்டம் எனக்கில்லை லாபம் வந்தால் அது நமக்கு மட்டுமே எனும் குருட்டு நம்பிக்கை அவர்கள் வசம் இருந்தது.///

    100% உண்மையான வார்த்தைகள். இந்த கருத்தை நானே பிறர் கூற கேட்டேன். “பாஜக என்றால் முஸ்லிம் தான் பயப்படனும் நமக்கு என்ன” கிடைத்தவரை லாபம் என்று சொன்னவர்கள் பலர். ஆனால் மோடி இவ்வளவு சீக்கிரமா ஆப்பை கூர் தீட்டுவார் என்று அவர்கள் நினைக்கவில்லை.

  6. அருமையான கட்டுரை , இன்னும் இது போல கட்டுரைகல் வர வாஇல்ட்துக்கல்.

  7. இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கு! மிக நேர்த்தியாக எழுதப்பட்ட – தொகுக்கப்பட்ட சிறப்பான கட்டுரை கட்டுரை. பல வழிகளில் மக்களை சிந்திக்க வைக்கும் கட்டுரை. வாழ்த்துகள்!

  8. //இதே வேலையா ராகூல் செய்யலையா…மோடியின் பெயரை விட ராகூலும் + காந்தியும் இந்தியாவிற்க்கு பரிட்சயமான பெயரில்லையா?

    ராக்கூலும்… சோனியாவும் கொட்டாத காசையா பிரதமர் கொட்டிவிட்டார்?

    இதே வழியில் தான் நீங்கள் எழுதியா இம்மாம்பெரிய கதையில் மோடி குஜராத்தில் ஜெயித்தாரா என
    சொல்லவில்லையே? அப்படி முடிய்மாயின் நம்ம ஊர் அரசியல்வாதிகளிடம் இல்லாத காசா?
    //

    ராகூலும் சோனியாவும் கொட்டாத காசை முதலாளிகள் கொட்டினார்கள் – மோடிக்காக. காந்தி பெயர் 65 வருடங்களில் செல்லரித்து விட்டது – மக்களிடம் போணியாகவில்லை – இனிமேல் ஆகாது.

    குஜராத்தியில் ஜெயித்தது – போலீஸ் மற்றும் உளவுத்துறை ஆட்சி மூலம் – வினவின் பல கட்டுரைகளில் காண்க பையா அவரகளே!!!

  9. எந்தவித வீம்பு வாதத்திற்காகவும் இதை கேட்கவில்லை. உண்மையிலேயே முழுவதுமாய் புரிந்து கொள்ளவே விரும்புகிறேன்:

    ஒருவேளை மக்கள் திரண்டு போராட தயார் என்றே வைத்துக் கொள்வோம், அதன் பின் அவர்கள் செய்ய வேண்டியது என்ன? யாரை நோக்கி அவர்கள் போராட்டம் செல்ல வேண்டும்? இந்த தேர்தல் முறை தவறென்றால் நீங்கள் என்ன மாற்று முறையை முன் வைக்கிறீர்கள்? நீங்கள் சொல்லும் முறைப்படி யார் ஆள வேண்டும்? அந்த ஆட்சி மக்களுக்கு சாதகமாகத்தான் அமையும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

    வினவு தள நிர்வாகிகளே பதில் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி.

    • நண்பரே.., நீங்கள் இந்த ஏரியாவிற்கே புதுசு என நினைக்கிறேன்.
      வினவு வை ஆதரிப்பவன் என்ற முறையில் பதில் கூறுகிறேன். வினவு வின் பழைய கட்டுரைகளை தேடி தேடி படியுங்கள்.

      குறிப்பாக தேர்தல் சமயத்தில் வந்த தேர்தல் புறக்கணிப்பு குறித்தான கட்டுரைகளை படியுங்கள். இந்த போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணித்துவிட்டு புதிய ஜனநாயகத்துக்கான மாற்று அதிகாரத்துக்கான மக்கள் எழுச்சி என்றால் என்ன அது எப்படி என விளக்கியிருப்பார்கள்.

  10. தினமலர், பேஸ்புக் போன்ற இணையதள தகவல்கள் அடிப்படையில் மோடி ஆதரவு மங்கிவிட்டது என்ற முடிவுக்கு வருவது சரியெனப் படவில்லை. இன்னும் சிறிது காலம் சென்ற பிறகு, கள ஆய்வு செய்தால்தான் நிலைமை தெரியும். சொல்லப்போனால், 2019 தேர்தல் முடிவுகள் தெரிந்த பின்தான் மோடி ஆதரவு நிலை பற்றி நிச்சயத்தோடு சொல்ல முடியும்.

    • You understand other articles in depth and discuss them in a high level. I hope that you have not read this article in the same way. For example, second part of the article gives something else. Can you disagree it?

  11. சந்தையில் பொருள்களின் விற்பனையை அதிகரிக்க பயன்படுத்தபடும் உத்திகள்தாம் இவை. மோடியும் விற்பனை பொருளை போல் மக்கள் மனதில் பதியவைக்கப்பட்டுள்ளார், என்னதான் விளம்பரத்தின் வாயிலாய் மக்கள் தரமற்ற பொருளை விரும்பி வாங்கினாலும், உபயோகிக்கும் பொருளின் தரம் சில வாரங்களில் பல்லிளிக்க தொடங்கும், மோடியின் விசயத்திலும் இதுவே நடக்கிறது. தினமலரே கார்டூனில் (4/7/2014) காறிதுப்பும் அளவுக்கு மோடியின் நிலை தாழ்ந்துள்ளது.

    முதலாளிகள் மோடி எனும் பொருளை விற்பனை செய்ய பயன்படுத்திய உத்திகளை கட்டுரை சிறப்பாக விளக்கினாலும், நேசனல் ஜியாகிராபிக் சேனலில் வரும் “Brain Game” எனும் நிகழ்ச்சியை போல் உள்ளது. கட்டுரையில் மார்க்சிய அடிப்படை குறைவாக உள்ளதாகவே நினைக்கிறேன். அதாவது இறுதிப்பகுதியை இன்னும் அழுத்தமாகவும், சற்று விரிவாகவும் எழுதியிருக்கலாம். அரசு என்பது அடிமையுடமை காலத்திலிருந்து இன்றைய ஜனநாயக காலம் வர்க்க ஒடுக்குமுறைக்கான கருவி என்பதை தாண்டி வேறில்லை. நாட்டிற்க்கு நாடு ஜனநாயகம் என்பது வெவ்வேறு வடிவங்களில் இருந்தாலும் சுரண்டும் ஆளும் வர்க்கத்தின்(இன்று முதலாளிகள்) கைப்பாவையாகவே அரசு இருந்து வருகிறது. அனைவருக்கும் புரியும் படி எளிமையான நடையில் எழுதும் கட்டுரையாளர் இனிவரும் கட்டுரைகளில் அரசு எனும் கருத்தாக்கத்தையே அம்பலப்படுத்தி எழுத வேண்டுகிறேன். அப்பொழுதுதான் மக்கள்/படிக்கும் வாசகர்கள் மன்மோகன்சிங்கோ,மோடியோ அல்லது கெஜ்ரிவாலோ இவர்களின் மாயையிலிருந்து வெளிவர முடியும்.

  12. Let me guess ; you must be a leftist pseudo intellect who falls in the category of Arvind Kejriwal & CO. All shouting & no solution for any problem. People have given a chance to Modi ; because they believe Modi is much better option compared to a Remote controlled Prime Minister who has no control in his own government. Thinking retarded Rahul as PM candidate is akin to cursing India with Poverty & Mal-administration. What are the options we have here. and finally for some of the arm chair intellects like you ; harping on Gujarat riots is a way to advertise urself as a Secular person. May be you should also start talking about 5 lakh displaced kashmiri pandits, Genocide of Hindus in Pakistan and Bangladesh ; where their population got reduced from a major portion in 1947(around 20%) to negligible now(almost 2-3%). The killing of BJP members in West bengal etc..It would also be great if you can explain me the Kind of Secularism the so called Muslim countries(add Middle east too) provide to their minorities. No wonder people have shown the right place to Pseudo intellects like you.

    • Vinavu started its useless propaganda against Modi when other medias started predicting Modi as PM. Nobody saw Modi’s rule before. It is the fact that the people of India have only one option to replace the existing govt when they feel to do so. People always elect a person based on his recent activities and his efficiency not based on long-survival in the politics like Congress. It is far better selecting a person having few criminal background than the 100% corrupted congress. People felt that Modi is the better choice for the current situation. Hello Vinavu, we also want to understand, please tell us whom you declare as a PM who is having clear background records. I totally agree with Raj that Vinavu falls under the category of Arvind Kejiriwal & Co. who does nothing more than shouting.

  13. நிலவுகின்ற அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். மூன்றாவது முறையாக காங்கிரசு ஆட்சிக்கு வருவது மக்களுக்கு இருக்கின்ற கொஞ்ச நஞ்ச நம்பிக்கையை கூட தக்க வைக்க உதவாது என்பதை உணர்ந்து கொண்ட ஆளும் வர்க்கம் புதிய அடியாள் படையை ஆட்சிக்கு கொண்டு வர முடிவு செய்து விட்டிருந்தது.பழைய அடியாளை விட புதிய அடியாள் தங்கள் கொள்ளைக்கு ஒத்துழைப்பான் என்பதையும் அவனது கடந்த காலத்தை வைத்து முதலாளி வர்க்கம் உறுதி செய்திருந்தது.

    இந்த எதார்த்தத்தை காங்கிரசும் ஏற்றுக்கொண்டு விட்டிருந்தது.அதனால்தான் அதன் பெரிய தலைகளே தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்ததின் மூலம் ”நாங்கள் தோற்க போகிறோம்” என முன்னறிவிப்பு செய்தார்கள்.அப்படியும் யாராவது காங்கிரசு ஆட்சிக்கு வரும் என நம்பி வாக்களித்து விட கூடாது என்று ”தேர்தலுக்கு பின் மூன்றாவது அணிக்கு ஆதரவளிப்போம்” என்று அறிவித்தார்கள்.ஆக தேர்தலுக்கு முன்னரே பா.ச.க.வின் வெற்றியும் காங்கிரசின் தோல்வியும் முதலாளிகள் விரும்பியவாறு முடிவு செய்யப்பட்டு விட்டன.

    இதில் மக்கள்தான் இரக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். பொருளாதார கொள்கைகளை பொறுத்தவரை காங்கிரசுக்கும் பா.ச.க.வுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை.வேறுபாடு இருப்பதாக பம்மாத்து மட்டுமே இருக்கிறது.

    ஆனாலும் மோடியின் ஆட்சியில் நாடு ”முன்னேறி விடும்” என வடிவேலு மாதிரி நம்ப்ப்பி ஆட்டோவுல ஏறி உக்காந்துட்டாங்க.அது நேர இன்னொரு தெருல இருக்குற மூத்திர சந்துல போய் நிக்க போகுது.அங்க அதானி,அம்பானி ன்னு ஒரு ஏழெட்டு பேரு மூச்சு தெணற தெணற அடிக்கப்போறானுங்க.

    • இதுதான் அரசியல் விஞ்ஞானம் என்பது 2004 ல் இடதுசாரிகள் மற்றும் மூன்றாம் அணி கட்சிகள் தயவில் ஆட்சி நடத்தியதை போன்றோ குஜ்ரால் தேவகௌடா போன்றோர் ஆட்சி காலம் ஏற்பட்டு விட்டால் பின்னர் மேலும் காலதாமதம் ஏற்பட்டு விடும்(சுரண்டுவதற்கு) என்பதால் மூன்றாவது முறையாக காங்கிரசு ஆட்சிக்கு வருவது ம் அதன் பின்னால் மீண்டும் அதிகாரம் தங்களை விட்டு போக கூடாது என மற்றோர் அடிமையை தேடி சாயம் பூசி கொண்டு வந்து பளபள ப்பு காட்டி நிறுத்தி விட்டார்கள் அதற்கு பின்னாலும் தான் ஏமாற்றப்பட்டதை ஒப்பு கொள்ளாமல் 2019 வரை காத்திருப்போம் என்று கூறும் அப்பாவிகளை நாம் பரிதாபபடவேண்டியது தவிர வேறு என்ன செய்ய முடியும்

  14. அரசியல் விமர்சகர்கள், அறிவு மேதைகள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் படிப்பில் முனைவர் பட்டம் வாங்க நினைப்பவர்கள், அறிவியலாளர்கள், பொதுமக்கள் யாவரும் இந்தக் கட்டுரையை படிக்கக்கடவது. முக்கியமாக காலையில் ஒரு டிவி, மாலையில் ஒரு டிவி என்று மாறி மாறி விவாதம் செய்யும் அதி முற்போக்குச் சிந்தனையாளர்கள் படித்தால் பாயிண்ட்டுகளை அள்ளிவிட ஏதுவாக இருக்கும்.

    தோழர் வில்லவனின் இந்த அருமையான அரசியல் / உளவியல்/ மருத்துவவியல் / ஆராய்ச்சிக் கட்டுரைக்காக அவரை நாங்கள் இனி தோழர் டாக்டர். வில்லவன் என்று அழைக்கப்போகிறோம்.

  15. Unique problems to India

    1, Caste,
    2, Population versus natural resources is in negative
    3, ecological disaster
    4, low OR poor reading habits among the “EDUCATED”
    5, skin deep analysis of the issues by leading personalities
    6, mother tongue is not the medium of learning in urban and semi urban
    7, and many many complicated issues which are quite unique to our country.

    in this situation , the ignorance of the masses is the major reason for right wings victory .
    information is pleanty
    data are available at a strike of button in system

    perspective is important only when it penetrates the large section of the people.

    so far INDIAN left WING ACTIVIST/PARTIES has FAILED TO REACH THE PEOPLE OF INDIA AND FAILED IN COMMUNICATING THEM THE REAL PERSPECTIVE IN A PRESENTABLE MANNER .

    VICTORY OF THE RIGHT WING IS BUILD ON THE FAILURE OF THE LEFT WING

    NET ACTIVISM , INNTELECTUAL ACTIVISM , REACHES A LIMIT AND REVOLVES AGAIN.

    IT TAKES ONLY A FEW MINUTES TO BREAK THE MYTH OF RIGHT WING BUT WHY PEOPLE OF INDIA GET FOOLED FOR 65 YEARS .
    BECAUSE WE FAILED.
    A NATION OF 110 CRORES WITH LOW LIVING STANDARDS. GEAR HAS SHIFTED TO REVERSE .

    ITS TIME TO RETHINK AND RE POSITION THE APPROACH AND WORKING METHODS.
    OTHERWISE WE WILL BE “GOING TO A POINT OF NO RETURN ”
    ITS HIGH TIME TO TAKE A CALL AND CHANGE THE COURSE

  16. இவனுங்க கண்டிப்பா மக்களை மிதிப்பானுங்கன்னு தெரியும். நம்பி ஒட்டு போட்ட மக்களை ஒரு 6 மாத காலத்திற்கு பிறகு மிதிப்பானுங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனால் வந்த ஒரு வாரத்துலயே மிதிக்க ஆரம்பிச்சிட்டானுங்க. செம ஸ்ப்பீடு மோடி அய்யா. 5 வருஷமா காங்கிரஸ் கவர்மெண்டே ஏற்றத் துணியாத ரயில் டிக்கெட் விலையை வந்த 10 நாட்களிலேயே அசால்டா ஏற்றினானுங்க பாருங்க அங்கத்தான் நிற்கிறார் மோடி. அப்புறம் டீசல், காஸ், மண்ணெண்ணெய் விலை ஏற்றம், தனியார்மயமாக்கம்னு.. இந்த ஒரு மாசத்திலேயே மோடியின் சாகசங்கள் பிரம்மிக்க வைக்குது. (திகில் அடிக்குதுங்கோ) நம்ம மன்மோகனுக்கு கோயில் கட்ட வச்சிடுவாங்க போலிருக்கு.

    • ஜூன் 10,2014 அன்று மிதியோ மிதி என்று மக்களை மிதிக்கும் பட்ஜெட் யை பார்க்க தானே போகிறோம்

  17. வில்லவா என்னயா சொல்ல வர???? ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு மாசம் தான் ஆகுது அதுக்குள்ளே—- ஊளை தாங்க முடியலை.. ஒன்னு மட்டும் நல்லா புரியுது…நக்சல்பாரி கூட்டத்தை ஆதரிக்கும் வினவு குழுவிற்க்கு ஜனநாயக ரீதியில் ஒருத்தன் ஜெயித்ததின் எரிச்சல் இன்னும் அடங்கவில்லை என்பது நல்லா தெரியுது…. உருப்படியா ஏதாவது எழுதித்தொலை… சும்மா வயித்தெரிச்சலை கொட்டி ஏன் எழவு கூட்ற????? .

    • //வில்லவா என்னயா சொல்ல வர????//
      If you are human then you can understand the article well. First discuss what are the wrong points in this article. Then you can come to other conclusions. ok?

  18. பிஜேபி வெற்றி, மோடி பிரதமர் என்பது எல்லாமே திட்டமிடப்பட்டதாகும். இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான இந்து மதத்தை சார்ந்த மக்களின் மனதில் மத உணர்வுகளின் மூலம் மோடி ஹீரோ ஆக்கப்பட்டார். பெரும்பான்மையான மக்களின் மத பாசம், மோடியின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சு, அதன் யதார்த்தம் ஆகியவற்றை உணர மறுத்தது. பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு பிரச்சனையும் சரியாகிவிடும் என்று மக்கள் நினைத்தது மக்களின் அறியாமை. குஜராத் மக்கள் தொகையில் கிட்டதட்ட 40% சதவிகித மக்கள் மோடிக்கு எதிராக வாக்களித்திருக்கும் போது எங்கோ தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு இந்திய மாநிலங்களின் முன்னேற்றத்திற்கு குஜராத்தை எடுத்துக்காட்டாக ஏன் நம் மக்கள் ஏன் கீறல் விழுந்த ரெகார்ட் போல் சொல்லிக்கொண்டிருந்தார்கள்?. மோடி இந்திய அளவில் விரைவில் பிரபலமடைந்ததற்கும் இன்று அவர் பிரதமர் பதவியில் இருப்பதற்கும் மூல காரணம் குஜராத்தை அவர் சிறந்த மாநிலமாக கொண்டு வந்திருக்கிறார் என்பதுதான். இது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் முழுக்க முழுக்க திட்டமிடப்பட்டு இந்து மக்களின் மனதில் மத உணர்வை கொஞ்சம் கொஞ்சமாக தூண்டிவிட்டு அதன்மூலமே பிஜேபியினர் ஆட்சியை பிடித்தார்கள் என்று நான் சொல்வதை ஏற்க மறுப்பவர்களை பார்த்து நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன், இதே மோடி வேற்று மதத்தை சார்ந்தவராக இருந்தால் குஜராத்தும், மோடியும் இவ்வளவு பிரபலமடைந்து இருப்பார்களா இல்லை இதே மோடி நான் RSS லிருந்து வெளியேறுகிறேன் நான் வேறு ஒரு மதத்திற்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அடுத்து வரும் ஒரு தேர்தலை அவர் சந்தித்தால் மோடியாலேயே குஜராத் முன்னேறியது என்று குஜராத்தை முன் மாதிரியாக வைத்து இதே மக்கள் வாக்களிப்பார்களா? ஆட்சிக்கு வந்தபிறகும் சரியாக செயப்பட முடியாமல் ஒவ்வொரு விஷயத்திற்கும் காங்கிரஸ் கட்சியை குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் நெருக்கி பிடித்தால் காங்கிரஸ் கட்சி செய்த சீர்கேட்டை சரி செய்ய எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்று ரெடிமேடாக ஒரு பதிலை வைத்திருக்கிறார்கள். ஐந்து வருட ஆட்சி முடிவில் இதே வார்த்தையை சொல்லிவிட்டு இன்னொரு ஐந்து வருடம் ஆட்சி செய்ய வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பார்கள். இதுதான் நடக்கும்.

  19. உங்கள் மீது மிகவும் மதிப்பு கொண்டவன் நான். இனி மேலும் இலங்கைத் தமிழர்களை ஈழ அகதிகள் என்று குறிப்பிடாதீர்கள்.ஈழ தமிழர்கள் என்று குறிப்பிடுங்கள்.இதை முன்பே ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறேன்.வினவு போன்ற ஒரு உயரிய சிந்தனை கொண்ட வலை தளம் இப்படி எழுதுவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.

  20. இந்தக் கட்டுரையின் மோடி பற்றிய விமர்சனத்தோடு பெரும்பாலும் ஒத்துப் போகும் அதே நேரத்தில் பாஜக பிரச்சாரத்தை அல்லேலூயாவுடன் ஒப்பிடுவதையும் மக்கள் ஓட்டுப் போட்ட விதத்தையும் சாடியதிலும் இருந்து மிகவும் விலகி நிற்கிறேன்.

    படித்துக் கொண்டு இருக்கும் போது சென்ற தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போட்டிருக்க முடியும் என்கிற கேள்விக்கு இவர்களின் பதில் என்ன தோன்றிக் கொண்டே இருந்தது. அதற்கு முத்தாய்ப்பாக ஒரு வாக்கியம் – ‘எல்லாவற்றுக்கும் மேலாக ஓட்டு போடுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை நாம் நீண்ட அனுபவத்தின் வாயிலாக கற்றுக்கொண்டிருக்கிறோம்.’ என்று பதில் வந்தது. ஆகா, புரிந்து விட்டது. 65 ஆண்டு கால இந்திய ஜனநாயகத்தின் முன்னேற்றங்கள், சாதனைகள் என்ன என்ன என்று கூட தெரியாத இந்தக் கட்டுரையாளர் எழுதுவதைப் படித்து என்ன பயன் என்று தோன்றி விட்டது.

  21. இந்திய தேர்தல் அமைப்பு முறையில் ஒரு கழிசடையை மாற்ற வேண்டுமானால் அந்த இடத்திற்கு ஒரு கசமாலத்தை தான் கொண்டுவர முடியும். வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலும் கோடீஸ்வரர்கள் மற்றும் குற்ற பின்ணணி உடையவர்கள். மக்கள் வரி பணத்தில் பத்தாயிரம் கோடிகள் விரயம் செய்து தேர்தல் திருவிழா நடத்தி டர்பன் கட்டாத மன்மோகன் சிங்கை மீண்டும் பிரதமர் ஆக்கியுள்ளனர்.இத்தாலியை சேர்ந்த கிறிஸ்தவ சோனியாவும்,சீக்கிய மன்மோகனும் பெட்ரோல்,டீசல்,கேஸ்,ரயில்கட்டணத்தை உயர்த்தும் போது மக்கள் பெரிதும் அவதியுற்றனர்.ஆனால் இந்து மோடி உயர்த்தும் போது அந்த சுமை மக்களுக்கு சுகமாக அமைகிறது. மக்களை நசுக்குவதில் காங்கிரஸ் காரனே தேவலாம் என ஒரு மாதத்திலேயே பேச வைத்துவிட்டனர்.இனி ஊழல் ஒன்றுதான் பாக்கி .அதிலும் கட் கரி,எடியூரப்பா,ரெட்டி பிரதர்ஸ் போன்ற பழம் பெருச்சாளிகள் துணையுடன் காங்கிரஸ் சாதனையை எட்டி பிடித்துவிடுவர்.

  22. Excellent.Even before the election one of my relatives who has become slave to Modi was asking my reaction for the “tremendous”support to Modi.I told him that I will call the rule of Modi as “Dark period” and added that India has seen such dark periods earlier also.But as the author has rightly said that those who understand the perils should not be complacent.

  23. தனக்கு கிடைத்த மிகக் கேவலமான தோல்வியைகூட ஒரு வழக்கமான பணி ஓய்வைப்போல மன்மோகன் “பக்குவத்துடன்” எதிர்கொண்டதற்குக் காரணம், அவர் Worked for corporate interest and USA and its allies interest.He worked as BJP PM being in the Congress without responsiblity & accountablity.He thought the defeat for congress and not for him.

  24. ….நிறைமதிக்கு …..அரசியலில்… பெரும்பாலும் comparative merit தான் பார்க்கமுடியும்..அதனால் பிஜேபி யை பேசும்போது referenceகு காங்கிரஸ்கு போய் தான் ஆக வேண்டும்

    வினவு writeup முழுவதுமாக படித்தேன்.

    ஒரு விளையாட்டு நடக்கும்போது விளையாடாத அல்லது விளையாடதெரியாத அல்லது டீமில் நுழையும் அளவுக்கு தகுதி இல்லாத சிலர் வெளியே நின்று கொண்டு விளையாடும் இரண்டு அணிகளையும் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

    “”.என்ன விளையாடுறான்..விளையாட்டா இது ….ச்சே ” …

    உங்கள் (வினவு) கட்டுரை அதுபோலத்தான் உள்ளது.

    மோடி தற்கொலை செய்தால் கூட அதற்கும் ஏதாவது வியாக்கினம் இருக்கும் உங்களிடம் !

    கட்டுரையில் உங்களையே அறியாமல் ஒரு உண்மையை சொல்கிறீர்கள் “மோடி இன்னும் சிகிட்சையே
    ஆரம்பிக்கவில்லை.” .என்று.

    சிகிட்சையே ஆரம்பிக்காதவரை குறை சொல்லி என்ன பிரரோசனம் ?

    மோடிகு மட்டும் தான் face book ல் பிரசாரம் செய்தார்கள்?

    வேற யாரும் செய்ய வில்லையா?
    எல்லோரும் -உங்களையும் சேர்த்து தான்- தானே முயற்சி செய்தீர்கள் ?

    சாக்ரடிஸ் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது..” பேசிப் பார்க்கட்டுமே !”…
    எல்லாருக்கும் பொதுதானே பேச்சு?

    உலகத்தின் உச்ச சக்தியான அமெரிக்காவே ” கெட்மோடி” என்ற பெயரில் எப்படியாவது மோடி தோற்க டாலர்களை கொட்டி முயற்சித்தது…என்ன நடந்தது?

    மோடி மட்டும்தான் பிரபலமானவர்களை சந்தித்தார?

    சோனியா இமாமை சந்திக்க வில்லயா ?
    சம்பந்தமே இல்லாத மோடியின் மனைவி சர்ச்சையை கூட எழுப்ப வில்லையா?
    அதுவும் யார் எழுப்பியது ? குடும்ப அரசியலுக்கு ஜாலரா அடிக்கும், 60 வயதுக்கு மேல் நடிகையுடன் திருமணம் என்று சமாளிக்கும் “தூய ” அரசியல்வாதி திக் விஜய் ….மக்கள் என்ன முட்டாள்களா ?

    நாட்டின் இளவரசர் ..ராகுல் இமேஜ் காக 600 கோடி காங்கிரஸ் செலவழிக்க வில்லையா?
    அந்த முழுபக்க விளம்பரங்கள் உங்கள் கண்ணில் பட வில்லையா?

    இதுவரை எத்தனையோ முறை காங்கிரஸ் அறுதி பெரும்பான்மை பெற்றபோது இந்த மாதிரி analysis செய்ய வில்லையா?
    ஏன் தமிழகத்தில் அம்மா எப்படி இத்தனை இடங்கள் பெற்றார் என்று ஆராய்ச்சி செய்ய வில்லையா?

    why single out மோடி ?

    மோடி & பிஜேபி நேர்மையாக transparant ஆக மக்களை சந்தித்தார்கள்.
    யாரை பிரதமராக ஆக்குவோம் என்று சொல்லித்தான் மக்களை சந்தித்தார்கள்..வேறு யாரவது அப்படி செய்தார்களா?

    மோடி ஒருநாளும் ஒரே நாளில் எல்லாவற்றையும் சரி பண்ணுவேன் என்று சொல்ல வில்லை..
    “.எனக்கு 60 மாதங்கள் கொடுங்கள்” என்றுதான் கேட்டார்.

    அவரை ஆதரித்தவர்கள் எங்கும் ஓடிவிடவில்லை.

    அதே id கள் அப்படியேதான் இருகின்றன..

    இந்த குறைந்த நாளில் என்ன பண்ணமுடியுமோ அதை இந்த அரசாங்கம் செய்கிறது..

    ஓரத்தில் நின்று உண்டியல் குலுக்கும் தெருஓர அரசியல் வாதி போல “அடேயப்பா 30 நாள் ஆகி விட்டது இன்னும் ரோடெல்லாம் அப்படியே தான் இருக்கிறது ” என்று கேட்டா ல் எப்படி?

    உங்கள் உதாரணங்கள் பொருந்த வில்லை.

    பிள்ளையார் பால் குடிக்கிறார் என்றதும் 8 கோடி தமிழர்களும்
    பால் தம்ளரோடு வந்தார்கள்..என்பதை போல எழுதுகிரீர்கள்.மிக சிறிய கூட்டம்தான் அப்படி சென்றது…மிக சிறிய கூட்டம் மோடியை ஆதரிக்க வில்லை..மிக பெரிய கூட்டம் நாட்டின் மேல் உண்மையான அக்கறையுடன் அவரை ஆதரித்திருக்கிறது

    பிழைக்க வழி இல்லாத பொழுது எதாவது ஒன்றை செய்வார்கள் என்ற உங்கள் உதாரணம் காங்கிரஸ்
    அரசால் அப்படி பட்ட நிலை இருந்தது என்பதை நீங்கள் ஒப்புகொள்கிறீர்கள் என்கிறது .
    அப்படியானால் அடுத்த அரசாங்கத்தை மக்கள் தேர்வு செய்தது சரிதானே?
    இல்லை என்றல் வேறு என்ன செய்திருக்க வேண்டும் ?

    எந்த பக்கமும் நில்லாமல் நா ன் மட்டும் சொல்வது சரி …என்று குறை கூறி கொண்டே இருப்பார்கள் சிலர் .நீங்கள் அந்த பக்கம்.போல…

    .மோடி அரசு கண்டிப்பா வேலை செய்யும் அரசு…
    அதை எப்படியாவது தடுக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு இருக்கிறார்கள் உங்களை போல…

    இல்லாவிட்டால் பிறக்கும் முன்னே ஜாதகம் பார்பீர்களா ?

  25. If they have guts,let them say that the increase in railway fare and regular increase in the prices of petrol and diesel are their decisions.Why they are telling that they carry out only the decisions of UPA?What is the necessity for the new Govt to implement previous Govt”s policies?

      • மக்கள் இப்படித் தான் நம்ப வைக்கப்பட்டு அழிவு பாதைக்கு தள்ளப்படுகிறார்கள்.
        ஜனநாயகத்தை காக்கும் காவல் நாய்
        என்பது போலச் சித்தரிக்கப்பட்ட முதலாளித்துவ ஊடகங்கள்,எதார்த்தத்தில் கார்பரேட் கொள்ளையர்களின் பங்களா நாய்களாக இருக்கிறார்கள்,இந்த
        ஜனநாயக அமைப்பை
        நம்பியவர்களுக்கு ஒரு
        பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
        ‘மக்கள்’ பிரதிநிதிகளை
        தேர்தலில் தேற்றி விடு
        வது முதலாளித்துவப்
        பத்திரிக்கைகள்;அப்படி ஒருவரை தேற்றுவதும், வென்றப்
        பின் யாருக்கு எந்த பதவி என்பதைத் தீர்மானிப்பதும்முதலாளிகள் எனும் போது இவர்களின் விசுவாசம் யாரிடம் இருக்கும்???

        • BJP and Congressன் விசுவாசம் தரகு முதலாளிகள் மீது தான் இருக்கும்

          //பின் யாருக்கு எந்த பதவி என்பதைத் தீர்மானிப்பதும்முதலாளிகள் எனும் போது இவர்களின் விசுவாசம் யாரிடம் இருக்கும்???//

  26. பக்கம் பக்கமாக எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. ஐந்து வருடம் பொறுத்துதான் மாற்றம் செய்ய முடியும். ஏற்கனவே நடந்த ஆட்சியைவிட மோசமாக இருக்கவும் வாய்ப்புண்டு. மாறாக நல்லாட்சி செய்யவும் வாய்ப்புண்டு. மக்களின் தகுதியை மீறி நல்லது செய்ய, மிகச்சிறந்த தலைவன் வேண்டும். மோடி அப்படிப்பட்ட தலைவராக இருக்க அதிக வாய்ப்புண்டு.

  27. ஒரு 50 பேர் பயணம் செய்யும் பேருந்து ஒட்டுநருக்கே நல்ல ஓட்டுநராக பாதுகாப்புடன் ஒட்டுவாரா என பரிசீலனை செய்கிற போது 140 கோடி மக்களின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டவர் எப்படி இருக்கவேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பது நியாயமானதே.கிரிக்கெட் விளையாட்டில் சேவாக்குக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் யுவராஜ் சிங்குக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்பது போல மோடிக்கு ஒரு 60 மாதம் வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் ,ராகுலுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என கூறுவது ஏற்புடையதல்ல.பாஜக வின் அரசியல் ,பொருளாதார கொள்கைகள் எவ்விதத்திலும் காங்கிரசுடன் வேறுபட்டதல்ல எனும் போது வேறு புதிதாக என்ன செய்துவிட முடியும்?அவர்களிடம் சாதாரண மக்கள் நலனுக்கான திட்டங்களோ,கொள்கைகளோ எதுவும் இல்லாத போது மோடியால் என்ன சாதிக்கமுடியும்? மூன்று முறை குஜராத் முதல்வராக இருந்து டாடா,அம்பானி,அதானிகளுக்கு சேவையாற்றிய இவர் பிரதமர் ஆன பின் மக்கள் சேவகராக மாறிவிட்டாரா?அடுக்கடுக்கான அதிரடி விலை ஏற்றங்கள் செய்ய சளைக்காத இவர் முந்தைய ஆட்சியினரால் இயற்கை எரிவாயுக்காக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு உயர்த்தி வழங்கப்பட்ட தொகையை ரத்து செய்யும் துணிவு உண்டா? மோடியும் ,பாஜகவும் ஒரு போதும் சாதாரண மக்களின் பிரதிநிதிகளாக இருந்ததே இல்லை.நேசனல் கிரைம் ரெக்கார்ட்ஸ் பீரோ ஆப் இண்டியாவின் புள்ளி விவரப்படி 2010 இல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 15963. 2011இல் 14207, 2012 இல்13754. அய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சியாளர்களை மாற்றிமாற்றி பரிசோதனை நடத்திக்கொண்டு இருந்தால் சாவுகள் மட்டுமே நிச்சயம் தொடரும்.மோடியின் வளர்ச்சி பாதையில் டாடா,பிர்லா,அம்பானிகள் மட்டுமே பயணிக்க முடியும்.

  28. கொபாலஹரி

    உண்டு உண்டு:) .
    மக்களின்(corporates) தகுதியை மீறி நல்லது செய்ய, மிகச்சிறந்த தலைவன்(slave) வேண்டும். மோடி அப்படிப்பட்ட தலைவராக(slave ) இருக்க அதிக வாய்ப்புண்டு.

  29. @Sakthivel rajkumar you are right.

    சோனியா இமாமை சந்திக்க வில்லயா ?
    சம்பந்தமே இல்லாத மோடியின் மனைவி சர்ச்சையை கூட எழுப்ப வில்லையா?
    அதுவும் யார் எழுப்பியது ? குடும்ப அரசியலுக்கு ஜாலரா அடிக்கும், 60 வயதுக்கு மேல் நடிகையுடன் திருமணம் என்று சமாளிக்கும் “தூய ” அரசியல்வாதி திக் விஜய் ….மக்கள் என்ன முட்டாள்களா ?

    Great shot.

  30. வழக்கம் போல அருமையான, உண்மையான, உணர்வுள்ள கட்டுரை…..!!!

    கடந்த(2009) நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானியை முன்னிறுத்தி களமிறங்கிய பா.ஜ.க. படுதோல்வியடைந்தது. அத்வானியின் மூலம் தங்களுடைய கனவை நிறைவேற்றிடலம் என்ற கனவு சரிந்து, கட்சியில் உட்கட்சிப் பூசல், நிர்வாகத் திறமையின்மை, ஊழல் முறைகேடுகள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆபாசப் படம் பார்த்தல் என்று கட்சியின் மானம் சந்தி சிரித்துக் கொண்டிருந்த வேளையில், கர்நாடகாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சி படுதோல்வி அடைந்தது. இப்படியே சென்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில்(2014) மண்ணைக் கவ்வி விடுவோம் என்று சுதாரித்துக் கொண்ட பா.ஜ.க. மக்களிடம் எப்படி செல்வாக்கைப் பெறுவது என்று யோசித்து இறுதியில் அது கையில் எடுத்த அஸ்திரம்தான் “குஜராத்தின் வளர்ச்சி, அதற்கு காரணம் மோடி!”.

    “குஜராத்தைப் பாருங்கள்… அடேங்கப்பா… என்ன வளர்ச்சி?” என்று ஆர்ப்பரித்தார்கள் மோடியின் சீடர்கள். அவை எல்லாம் கட்டுக்கதை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. குஜராத்தில் பெரும் தொழிலதிபர்கள்தான் கொழுக்கிறார்கள். ஆனால் மக்கள்…? வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களில் குஜராத் இந்தியாவில் 9ஆவது இடத்தில் இருக்கிறது. கல்வி கற்றவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாட்டுக்குக் கீழே 5 ஆவது மாநிலம். குழந்தைகள் மரண வீதத்தில் இந்தியாவிலேயே முதலிடம் குஜராத்துக்குத்தான். பெண் குழந்தைகளை வெறுப்பதிலும், பெண் குழந்தைக் கொலைகளும் குஜராத்தில் அதிகம். ஆண்களுக்கு இணையாக பெண்கள் மிகக் குறைவாக இருப்பதில் இந்தியாவிலேயே 11 ஆவது இடத்தில் நிற்கிறது குஜராத். இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் இந்தியாவிலேயே அதிகம் உள்ள மாநிலம் குஜராத். இன்னும் ஏராளமாகப் பட்டியலிட முடியும்.

    பெரும் தொழிலதிபர்கள் வளருகிறார்கள் என்பதுதான் உண்மை. டாட்டா, அதானி, சத்ரலா, லார்சன் அண்ட் டூட்ரோ போன்ற பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு நிலங்களை ‘தாரை’ வார்த்துள்ளார் மோடி! 2011-2012ஆம் நிதி ஆண்டில் பெரும் ‘பகாசுர’ தொழில் நிறுவனங்களுக்கு சந்தேகப்படும் வகையில் நியாயமில்லாமல் ரூ.1275 கோடியை மோடி, வாரி இறைத்ததை மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ரூ.160 கோடியை அரசுக்கு செலுத்தாமல் ஏமாற்றிய அதானி நிறுவனத்துக்கு மோடி ஆட்சி ரூ. 240 மட்டும் அபராதம் விதித்து பிரச்சினையை முடித்துக் கொண்டது. ஏராளமாகப் பட்டியலிட முடியும்.

    கலவரங்கள் என்பது உணர்ச்சி உந்துதலின் அடிப்படையில் எதிர்பாராமல் சில பிரிவினரோ, கூட்டங்களோ சண்டையிட்டு கொள்வதே ஆகும். இது ஒரு சில மணி நேரம் நீடிக்கும் போதிய அளவில் காவல்துறை அந்த பகுதிக்கு வந்தடைந்ததும் கலவரம் நின்றுவிடும். ஆனால் இவர்கள் கலவரம் உண்டாக்கினால் அது நாள்கணக்கில் நடக்கும். ஒரு கூட்டம் கலவரங்களை நடத்துவதற்கென்றே சதி திட்டங்களை தீட்டி செயல்பட்டது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? தானாக உருவாகினால் அதன் பெயர் கலவரம் ஆனால் அதையே திட்டம் போட்டு உருவாக்கினால் அது பயங்கரவாதம். இந்த பயங்கரவாத செயலைத்தான் இந்த தேர்தலில் செய்து காட்டி இருக்கிறார்கள்.

Leave a Reply to ant பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க