privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காரச்சேல் - பாலஸ்தீனத்தில் தியாகியான அமெரிக்க மாணவி

ரச்சேல் – பாலஸ்தீனத்தில் தியாகியான அமெரிக்க மாணவி

-

ஃபீதாயின் ரச்சேல்

மெரிக்க இராணுவம் வானத்திலிருந்து ஈராக் மக்களைப் படுகொலை செய்யத் தொடங்குவதற்கு நான்கு நாட்கள் முன், அந்தக் கோழைத் தனத்தை நிராகரிக்கும் வீரமாக, அந்த ஆக்கிரமிப்புக்கு எதிரான தோழமையாக, பாலஸ்தீன மண்ணில் ரத்தம் சிந்தினாள் ஒரு கல்லூரி மாணவி.

மார்ச் 16. பாலஸ்தீன மக்களின் தாயகத்தை ஆக்கிரமிக்கும் யூதவெறி பிடித்த இசுரேல் இராணுவத்தின் புல்டோசர், ரச்சேல் கோரி என்ற அந்த வீராங்கனையின் மீது ஏறி இறங்கியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க  அவற்றின் மீது சொடுக்கவும்]

ரச்சேல், சர்வதேச ஒற்றுமை இயக்கம் என்ற அமைப்பின் உறுப்பினர். பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் இசுரேல் அரசையும் அதற்குத் துணை நிற்கும் அமெரிக்காவையும் எதிர்த்துப் போராடும் இந்த அமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் அமெரிக்க பிரிட்டிஷ் இளைஞர்கள்.

ரச்சேல் கோரி
ரச்சேல், சர்வதேச ஒற்றுமை இயக்கம் என்ற அமைப்பின் உறுப்பினர்

ரச்சேல் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி. “பயங்கரவாதத்துக்கெதிரான போர்” என்ற பெயரில் அமெரிக்கா நடத்தி வரும் இராணுவ வெறியாட்டங்களை எதிர்த்துப் போராடுவதில் அவள் முன்னணியில் நின்றதாக ரச்சேலை நினைவு கூர்கிறார்கள் அவளது ஆசிரியர்கள்.

குறிப்பாக பாலஸ்தீன மக்களின் துயரத்தைத் தன் சொந்தத் துயரமாகவே கருதினாள் ரச்சேல். ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமிக்கும் தருணத்தில் உலகின் கவனம் அங்கே திரும்பியிருக்கும் போது, பாலஸ்தீனத்தை இசுரேல் விழுங்கி விடும் என்று அவள் அஞ்சினாள்.

ரச்சேல் கோரி
ரச்சேலும் அமெரிக்க பிரிட்டிஷ் இளைஞர்கள் ஏழு பேரும் பாலஸ்தீனத்திற்கு வந்து விட்டனர்.

அதைத் தடுப்பது தம் கடமை என்று கருதிய ரச்சேலும் அமெரிக்க பிரிட்டிஷ் இளைஞர்கள் ஏழு பேரும் இரண்டு மாதங்களுக்கு முன்பே பாலஸ்தீனத்திற்கு வந்து விட்டனர். பாலஸ்தீனத்தில் இசுரேல் அன்றாடம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் காசா பகுதியில், ரஃபா எனும் சிறு நகரில் பாலஸ்தீன ஏழை மக்களின் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ்ந்தது அந்த இளைஞர் குழு.

திடீர் திடீரென இசுரேலிய இராணுவத்தின் புல்டோசர்கள் வருவதும் அவற்றை மறித்து நின்று போராடுவதும் ரச்சேல் குழுவினரின் அன்றாட நடவடிக்கையாகி விட்டது. அத்தகைய சம்பவம் ஒன்றினைத் தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் விவரிக்கிறாள் ரச்சேல்.

“நாங்கள் புல்டோசரை மறித்து நின்றோம். மண்வாரியில் எங்களை அள்ளி வீசினான் ஓட்டுனர். நாங்கள் வீட்டின் ஒரு முனையில் கிடந்தோம். மறுபாதியை இடித்துத் தள்ளியது புல்டோசர்.”

மார்ச் 16-ம் தேதி நடந்ததும் அதுதான். வெறியுடன் வந்து கொண்டிருந்தது இராணுவத்தின் புல்டோசர். அதன் பாதையில் மண்டியிட்டு அமர்ந்திருந்தாள் ரச்சேல். “நிறுத்து…நிறுத்து” என்று ரச்சேலின் தோழர்கள் கத்தினார்கள். பயனில்லை. ரச்சேலின் தலையைப் பிளந்தபின்தான் அது நின்றது.

“நிராயுதபாணிகளான பாலஸ்தீன மக்களைச் சுட்டுத் தள்ளுகிறது இசுரேல் இராணுவம். ஆனால் நிராயுதபாணியான ஒரு அமெரிக்கக் குடிமகனைச் சுட்டுத் தள்ளும் தைரியம் அவர்களுக்கு இருக்குமா?” என்று தன் பெற்றோருக்கு எழுதிய கடிதமொன்றில் குறிப்பிடுகிறாள் ரச்சேல்.

ரச்சேல் கோரி தெரு
ரச்சேல் கோரி தெரு (பாலஸ்தீனத்தின் ரமலா நகரில் ரச்சேல் பெயரில் தெரு)

பாசிஸ்டுகளை எடை போடத் தெரியாத அந்தப் பெண்ணின் வெகுளித்தனம் நம்மைக் கண்கலங்கச் செய்கிறது. வெள்ளைத் தோலானாலும், அமெரிக்கக் குடிமகனானாலும் தனது ஆதிக்கத்தை எதிர்த்து நிற்போர் யாரையும் பாசிஸ்டுகள் விட்டு வைப்பதில்லை என்ற உண்மை புரியும் தருணத்தில், புல்டோசரின் கொலைக்கரங்கள் அவளை நெருங்கிய அந்தத் தருணத்தில் ரச்சேல் ஓடவில்லை. மரணத்தின் தறுவாயில் தான் உணர்ந்து கொண்ட உண்மையை அமெரிக்க மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளட்டும் என்பதற்காக அவள் உயிர் விட்டாள்.

ரச்சேல் ஒரு மனிதாபிமானியா, வீராங்கனையா, தியாகியா, அல்லது போராளியா? அவள் ஒரு போராளி. ஃபிதாயீன்!

ஃபிதாயீன் என்ற அரபிச் சொல்லின் பொருள் தற்கொலைப்படை வீரன். பாலஸ்தீனத்தின் மீசை அரும்பாத இளைஞர்களும் இளம் பெண்களும் தம் உடலையே வெடிமருந்து கிடங்காக்கி வெடிக்கச் செய்து இசுரேலை நிலைகுலையச் செய்கிறார்கள். அவர்களுடைய இலக்கு யூதவெறி அரசு.

ரச்சேலின் இலக்கோ அமெரிக்க சமூகத்தின் அலட்சியம்; உலக மக்களின் மவுனம். வெடிமருந்துகளால் தகர்க்க முடியாத இந்த ‘எதிரியை’ முறியடிக்க அந்த அமெரிக்க மாணவி கண்டுபிடித்த அதி நவீன ஆயுதம் ரத்தம்.

“நாம் வாழும் வாழ்க்கை இந்தக் குழந்தைகளுக்குத் தெரிந்தால்…” –  ரச்சேலின் கடிதம்.

இசுரேல் இராணுவத்தால் கொல்லப்படுவதற்குச் சில நாட்கள் முன்னால் ரச்சேல் தன் பெற்றோர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து சில பகுதிகள் :

சிண்டி, கிரெய்க் கோரி
2007-ம் ஆண்டு நடந்த “ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வா” ஆர்ப்பாட்டத்தில் ரச்சேலின் பெற்றோர். சிண்டி, கிரெய்க் கோரி

நான் பாலஸ்தீனத்துக்கு வந்து சரியாக இரண்டு வாரங்களும் ஒரு மணி நேரமும் ஆகி விட்டது. ஆனால் இங்கே நான் காண்பதை உங்களுக்கு விவரிக்க, அதாவது அமெரிக்காவுக்குப் புரிய வைக்க வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன்.

குண்டுகளால் துளைக்கப்பட்ட வீட்டுச் சுவர்கள், கழுகுப் பார்வையால் கண்காணிக்கும் இராணுவம் – இவையிரண்டும் இல்லாத ஒரு வாழ்க்கையை இங்குள்ள குழந்தைகள் வாழ்ந்ததேயில்லை. இருப்பினும் “வாழ்க்கை என்பது எல்லா இடங்களிலும் இந்த மாதிரி இல்லை” என்பதை இங்குள்ள சின்னஞ்சிறு பிள்ளைகள் கூடப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

நான் இங்கே வந்து இறங்குவதற்கு இரண்டு நாட்கள் முன் ஒரு 8 வயதுச் சிறுவனை இசுரேலிய இராணுவம் சுட்டுக் கொன்று விட்டது. “அவன் பெயர் அலி” என்று என்னிடம் கிசுகிசுக்கிறார்கள் இங்குள்ள குழந்தைகள். “ஷரோன் யாரு – புஷ் யாரு” என்று அரபியில் அவர்கள் கேட்க, “ஷரோன் கிறுக்கன் – புஷ் கிறுக்கன்” என்று நானும் எனக்குத் தெரிந்த அரபு மொழியில் பதில் சொல்கிறேன். அரபு மொழியை இப்படித்தான் எனக்குக் கற்றுத் தருகிறார்கள் இந்தச் சிறுவர்கள். உலக அரசியலின் அதிகாரம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நான் முன்னர் புரிந்து வைத்திருந்ததைக் காட்டிலும் இங்கே இருக்கும் 8 வயது வாண்டுகள் தெளிவாக அறிந்திருக்கிறார்கள்.

புத்தகங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள், செய்திப் படங்கள் போன்ற பல வழிகளில் பாலஸ்தீனத்தைப் பற்றி நான் சேகரித்த அறிவு அனைத்தையும் விஞ்சுகிறது இங்குள்ள எதார்த்தம். நேரில் பார்த்தாலொழிய நீங்கள் இதைப் புரிந்து கொள்ளவே முடியாது; ஒருவேளை நேரில் வந்து அனுபவித்தாலும் முழுமையாகப் புரிந்து விட்டதாக நான் சொல்லிக் கொள்ள முடியாது.

என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். இங்குள்ள கிணறுகளை இடித்தாலும் தண்ணீர் வாங்கிக் குடிக்க என்னிடம் பணம் இருக்கிறது; நினைத்தால் நான் உடனே அமெரிக்காவுக்குத் திரும்பி விடலாம்; என் குடும்பத்தினர் யாரையும் இராணுவம் ராக்கெட் வீசிக் கொன்றதில்லை; எனக்கொரு வீடு இருக்கிறது; நான் ஆற அமரக் கடலைக் கண்டு ரசித்திருக்கிறேன்; பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பும் வழியில் இராணுவத்தால் கொல்லப்படுவேனோ என்ற பயமின்றி சந்தோஷமாக நான் வீடு திரும்பியிருக்கிறேன்.

ஒலிம்பியா ஆர்ப்பாட்டம்
அமெரிக்காவின் ஒலிம்பியா நகரில் அமைதி ஆர்ப்பாட்டம்

எனவேதான் இக்குழந்தைகள் வாழும் உலகத்திற்குள் கால் வைத்த மறுகணமே இந்தக் கொடூரங்களைக் கண்ணால் கண்ட மறுகணமே என் ரத்தம் கொதிக்கிறது. “ஒருவேளை ஒரு பாலஸ்தீனச் சிறுவன் அமெரிக்கா எனும் என்னுடைய உலகத்தை நேரில் வந்து பார்த்தால் அந்தப் பிஞ்சு மனம் எப்படித் துடிக்கும்” என்ற கேள்வி என்னை வாட்டுகிறது.

இவர்களைப் போலன்றி நான் வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்திருக்கிறேன். அமைதியான இடத்தில் வசித்திருக்கிறேன். கிணற்றை இடித்து குடிக்கும் தண்ணீரை இராணுவம் பறித்து விடும் என்று நான் கற்பனையில் கூட அஞ்சியதில்லை; இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் சுவர்கள் உட்புறமாக இடித்துத் தள்ளப்பட்டு நான் பதறி விழித்ததில்லை; தனது சொந்தங்களை இராணுவத்திற்கு காவு கொடுத்த யாரையும் நான் அமெரிக்காவில் சந்தித்ததில்லை; என்னுடைய வீட்டை நாற்புறமும் இராணுவக் கோபுரங்கள் கொலைவெறியுடன் குறிபார்க்கவில்லை.

ஆனால், இந்த பாலஸ்தீனச் சிறுவர்களோ நாம் வாழும் அமைதியான வாழ்க்கையை அறிந்ததே இல்லை. நினைத்துப் பாருங்கள். உங்கள் குழந்தைப் பருவம் முழுவதும் உயிர் வாழ்வதற்காக மட்டுமே நீங்கள் போராடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்குமென்று ! உலக வல்லரசின் ஆதரவுடன், உலகின் நான்காவது பெரிய இராணுவம் உங்களையும் உங்கள் வீட்டையும் துடைத்தெறிவதற்கு மூர்க்கத்தனமாக முனைந்து கொண்டேயிருக்க, அதையெதிர்த்து நீங்கள் போராடிக் கொண்டேயிருக்க… வாழ்க்கை என்பதே இதுதான் என்றால்…

அதனால்தான் எனக்கு இப்படித் தோன்றுகிறது. இந்த பாலஸ்தீனக் குழந்தைகள் அமெரிக்கா எனும் என்னுடைய உலகத்தை உண்மையிலேயே நேரில் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற கேள்வி என்னை வாட்டுகிறது.

நன்றி : ஃபிரண்ட்லைன் 11.04.2003
____________________________
புதிய கலாச்சாரம் மே 2003
____________________________

படங்கள்  : விக்கிபீடியா

ரச்சேல் கோரி கொல்லப்பட்ட உடன், அப்போதைய இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன்  “தெளிவான, ஒளிவு மறைவில்லாத விசாரணை நடத்தப்படும்” என்று வாக்குறுதியளித்தார்.

ஆனால், இசுரேலின் இராணுவ விசாரணை “இராணுவத்தின் மீது எந்தத் தவறும் இல்லை, புல்டோசரின் ஓட்டுனர் ரச்சேலைப் பார்க்கவில்லை” என்று முடிக்கப்பட்டது.

ரச்சேல் கோரியின் பெற்றோர் இஸ்ரேலிலுள்ள ஹைஃபா மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்தார்கள். அந்த நீதிமன்றம், இஸ்ரேலிய அரசு ரச்சேலின் மரணத்துக்கு பொறுப்பாகாது என்று தீர்ப்பு சொல்லி விட்டது.

ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு இராணுவங்களின் கொலைக்குற்றங்களுக்கான நீதி, ஏகாதிபத்தியங்களின் நீதிமன்றங்களில் கிடைக்கும் என்றும் யாரும் நம்பவில்லைதான்.

  1. எல்லா கட்டுரைகளும் நடுநிலையுடனும், பகுத்தறிவுடனும் எழுதப்படும் போது இஸ்ரேயேல் ,ஹமாஸ் தீவிரவாதிகள் பற்றி எழுதும் போது மட்டும் ஏன் தவறுகிறது வினவு? ஏன் ஹமாஸ் என்றும் தீவிரவாதிகள் பற்றி எழுதுவது இல்லை?.

    அங்கு மக்கள் போராடவில்லை, ஹமாஸ் என்னும் தீவிரவாதிகள், அடிப்படைவாதிகள்தான் யுத்தம் செய்கிறார்கள். மக்களை பயமுறுத்தி அவர்கள் யுத்த பூமியை விட்டு விலகி போவதை தடுக்கிறார்கள். நீங்கள் காசா மக்களுக்கு ஒரு நல்லது செய்ய வேண்டும் என்றால் ஹமாஸ் என்ன செய்கிறது என்பது பற்றி அறிந்து தெளிவாக எழுத வேண்டும். அதோடு அரபு இஸ்ரேல் பகை ஏன் என்ற வரலாறு தெரிந்திருக்க வேண்டும்.

    • தீவிரவாதி என்றால் யார்? இந்திய மக்களுக்கு சுபாஷ் சந்திர போஸ் ஒரு சுதந்திர போராட்ட தியாகி. ஆனால் ஆங்கிலேயர்களுக்கு தீவிரவாதி.நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்க கருப்பர்களுக்கு தியாகி. வெள்ளையர்களுக்கு தீவிரவாதி. எனவே தீவிரவாதி என்பது யார் யாரை கூருகிறார்களோ அதைப்பொருத்து உள்ளது. யூதர்களின் செய்திநிருவனங்கள் கூறுவதைநம்பி நீங்கள் ஏமாற்றப் படுகிறீர்கள் என்ற மனக்கவலை மட்டும் உள்ளது.

  2. கொண்ட இலட்சியத்திற்காக தன இன்னுயிரை தியாகம் செய்த வீர மங்கை ரச்சேல் உனக்கு என்னுடைய செவ்வணக்கங்கள் …….. ஆண்டுகள் 10 கழிந்த பின்பாவது அவரின் இந்த தியாகத்தை பற்றிய தகவல் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. நன்றி வினவு.

  3. \\பாசிஸ்டுகளை எடை போடத் தெரியாத அந்தப் பெண்ணின் வெகுளித்தனம் நம்மைக் கண்கலங்கச் செய்கிறது. வெள்ளைத் தோலானாலும், அமெரிக்கக் குடிமகனானாலும் தனது ஆதிக்கத்தை எதிர்த்து நிற்போர் யாரையும் பாசிஸ்டுகள் விட்டு வைப்பதில்லை//

    கல்லில் செதுக்கினாற்போன்ற உண்மை.

    சிங்களவனே ஆனாலும் வெள்ளை ”வேன்கள்” விட்டு வைக்கவில்லை.
    சிறுவனே ஆனாலும் பாலகிருசுணனை விட்டு வைக்கவில்லை.
    பார்ப்பனரே ஆனாலும் ஹேமந்த் கர்கரேயை விட்டு வைக்கவில்லை.
    சொந்த கட்சிக்காரன் என்றாலும் ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்த சுனில் ஜோஷி விட்டு வைக்கப்படவில்லை.

    • //பார்ப்பனரே ஆனாலும் ஹேமந்த் கர்கரேயை விட்டு வைக்கவில்லை//

      What is your intention here ?

  4. Dear Vinavu,

    //இசுரேலிய இராணுவத்தின் புல்டோசர்கள் வருவதும் அவற்றை மறித்து நின்று போராடுவதும் ரச்சேல் குழுவினரின் அன்றாட நடவடிக்கையாகி விட்டது.//

    இதிலிருந்து நாம் அரிந்து கொள்ள முடிவது என்னவென்றால், ஆரம்பத்தில் குழுவினரும் புல்டோசர் ஒட்டுநரும் மிகவும் கவனமாகத்தான் தங்கள் தங்கள் பணியை செய்திருக்கிறார்கள். போகப்போக இருதரப்பிலும் தங்கள் தங்கள் செயல்களை படிப்படியாக தீவிரப்படுத்தியும் அதே சமயம் சிறிது மெத்தனத்தோடும் செய்திருக்க வாய்ப்புகள் உள்ளன. ராச்சலின் தோழர்கள் பல பக்கங்களில் நின்று கொண்டு புல்டோசர் ஒட்டுநரின் கவனத்தை சிதறடித்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. நடந்து ஒரு விபத்துதான்.

    அந்த விபத்து அன்று நடந்திருக்காவிட்டாலும் அடுத்த நாள் நடக்க வாய்ப்பு இருந்திருக்கிறது. அந்த விபத்து நடந்ததிலிருந்து இது போன்ற எதிர் கொள்ளல் இரு தரப்பிலிருந்தும் தவிர்க்கப் பட்டுவிட்டது என்றே கூற முடியும்.

    • இதற்கு இஸ்ரேல் பரவாயில்லை. பணி செய்தார்கள் என்று எழுதுகிற அளவிற்கு யுனிவர்படியை இயக்குவது எது? காவல்துறையும் இராணுவமும் ஆளும் வர்க்கத்தின் ஏவல் நாய்கள் என்கிற பொழுது உங்களுக்கு பணி செய்வதாக தோன்றுவது கொடூரமான சிந்தனையாக இருக்கிறது. காஷ்மீரிலும் தண்டகேரன்யாவிலும் நீங்கள் சொல்கிற இராணுவம் பணிபுரிந்துகொண்டிருக்கிறது. அச்சு அசலாக அரசுத் தரப்பு ஊடக அறிக்கைபோல இருக்கிறது உங்களது பின்னூட்டம்.

      • தோழர் தென்றல்,

        //பணி செய்தார்கள்//

        வேறு வார்த்தை கிடைக்காமல் இவ்வாறு எழுதியிருக்கிறேன்.

        //யுனிவர்படியை இயக்குவது எது?//

        நியாய உணர்ச்சி தான்.

        // காவல்துறையும் இராணுவமும் ஆளும் வர்க்கத்தின் ஏவல் நாய்கள்***//

        என் கருத்தும் இதேதான்.

        //காஷ்மீரிலும் தண்டகேரன்யாவிலும் நீங்கள் சொல்கிற இராணுவம் பணிபுரிந்துகொண்டிருக்கிறது.//

        இந்திய சூழ்நிலைக்கும் இஸ்ரேலிய சூழ்நிலைக்கும் வேறுபாடு இருக்கிறது. இந்திய சமூகத்திற்கும் இஸ்ரேலிய சமூகத்திற்கும் இடையே கூட வேறுபாடு இருக்கிறது.

        //அரசுத் தரப்பு ஊடக அறிக்கை//

        பெரும்பாலான அரசுத் தரப்பு ஊடக அறிக்கைகளின் பொய்த்தன்மையைப் பற்றி எனக்கு சந்தேகங்கள் கிடையாது. ஆனால் விபத்துக்களும் நடக்கின்றன. குறிப்பாக ராச்சலின் கேசில். அது விபத்தை வலிய உருவாக்கும் சூழல். இதைப் பற்றி இரண்டு வருடங்களுக்கு முன்னரே சற்றே விரிவாக படித்தேன்.

        நாம் கவனிக்க வேண்டியவை.

        1. அந்த புல்டோசர் சாதாரண வகையில்லை. படத்தை பெரிதாகப் பார்க்கவும். அது ராணுவத்திற்காக குறிப்பான முறையில் எல்லாபுறமும் கவசங்களால் மூடப்பட்டது. அதற்கு எல்லா பக்கமும் பார்க்கும் படி கண்ணாடிக் கூண்டு இல்லை. அதன் ஒட்டுனர் பார்ப்பதற்கு சிறிய திறப்புகளே இருக்கின்றன. அதற்கும் கம்பி வலை மறைப்பு உள்ளது. வண்டி மிகவும் உயரமானது. அதன் முன்னே உள்ள மண்தள்ளும் தகட்டின் உயரமே 7-8 அடி யிருக்கும். மிக அருகில், தரையில் உள்ளதை ஒட்டுனரால் பார்க்க முடியாது.

        2. That bulldozer was demolishing the houses located at/near the border from whom Muhamadans were tunneling into Israel for carrying out terrorist activities. So, for the safety of Israel, those houses had to be demolished. I hope they were given a just compensation.

        3. At least 7 foreigners and many locals have been obstructing the work of bulldozer, with loudspeakers, etc. This encounter seems to have become a common thing for both the side.

        4. The bulldozer driver is a soldier. He cannot just run away from such work. Otherwise he will be court-martialed, which will result in summary punishment. He had no choice than doing his ‘work’.

        5. I think this incident has stopped such encounters and such incidents.

        6. Please include here my other replies to others also

    • Univerbuddy ,

      [1]இந்த மர்மமான Univerbuddy , இஸ்ரேல் பயங்கரவாதத்தை “விபத்து” என்று புனைவது மூலம் தன் சுய ரூபத்தை[கிறிஸ்டியன் மேட்டுகுடி அடிப்படைவாதம்] வெளிகாட்டிகொள்கின்றார்.

      [2]இஸ்லாமியர்கள் என்றால் அவர்கள் விடயாத்தை மட்டும் நோண்டி நோண்டி பயங்கரவாதநூல் எடுக்கும் இவர்[Univerbuddy] யூதன்[இஸ்ரேல்] என்றவுடன் பயங்கரவாதம் இவருக்கு விபத்து ஆவது ஒன்றும் மர்மம் இல்லை. அமெரிக்க அடியாள் இஸ்ரேலின் அடிவருடிகள் வேறு எப்படி பேசுவார்கள் ?

      • சரவணன்,

        நான் யாருக்கும் அடிவருடியுமில்லை. எனக்கு யாரும் அடிவருடவும் வேண்டாம். நான் இஸ்ரேலை தார்மீக ரீதியில் ஆதரிக்கிறேன். அதற்கு மதம்பிடித்த மேட்டுக்குடியாகவோ, மதமில்லா தொழிலாளியாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. சிறிது கரிசனம் (empathy) இருந்தால் போதும்.

  5. univerbuddy ,

    நடந்தது விபத்தென சாதரணமாக கடந்து சென்று விடுகிறீர்கள். அது திட்டமிட்டு நடந்த/நடந்து கொண்டிருக்கும் ஒரு பயங்கரவாததின் ஒரு நிகழ்ச்சிபோக்காகும். தாங்கள் இவ்வாறு கூறுவதன் மூலம், அவரின் தியாகம் சிறுமைபடுத்தபடுகிறது. விபத்தென்றால், தூங்கி கொண்டிருந்தவர் மேல் புல்டோசர் மோதி இருந்துவிட்டாரா?

    போகிற போக்கில் புல்பூண்டு கூட முளைத்தெழா வண்ணம் கொத்து குண்டுகளையும் அள்ளி வீசி பச்சிளங்குழந்தைகள் உள்ளிட்டு ஏழை எளிய மக்களை அழித்தொழித்த பயங்கரவாதத்தின் ஒரு சிறு நிகழ்ச்சிபோக்கு தான் இந்த புல்டோசர் இடிப்பு பின் ரச்சேல் படுகொலையும். அதைப் பற்றிய பிரமாதமான ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. பயங்கரவாதத்தினை எதிர்ப்பதில் ஒரு பகுதியாக, அம்மக்களின் வீடுகளை இடித்தொழிக்கும் வேலைகளை அவர் தடுத்தார், அதனால் அவர் அழித்தொழிக்கப்பட்டார.

    நன்றி.

    • தோழர் சிவப்பு,

      நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருப்பதால் அதை விபத்தென்று ஏற்க முடியவில்லை. நானும் உணர்ச்சிவசப்படுபவன்தான். அவரின் நல்லெண்ணத்திற்கு துணிச்சலுக்கு நான் தலை வணங்குகிறேன்.

      //தூங்கி கொண்டிருந்தவர் மேல் புல்டோசர் மோதி இருந்துவிட்டாரா?//

      அவர் தூங்கிக் கொண்டிருந்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது. எனது மற்ற பதில்களையும் தொகுப்பாக பாருங்கள்.

      //கொத்து குண்டுகளையும் அள்ளி வீசி பச்சிளங்குழந்தைகள் உள்ளிட்டு ஏழை எளிய மக்களை அழித்தொழித்த பயங்கரவாத[ம்]//

      இஸ்ரேல் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்வதில்லை. அது அதனால் முடிந்தவரையில் மிகவும் கவனமாகத்தான் செய்கிறது. தனது பாதுகாப்பிற்காகவும் தனது சேதஙகளுக்கு பதிலடி கொடுப்பதற்குமே அது தனது ‘செயல்களை நிறைவேற்றுகிறது’.

      //***அதனால் அவர் அழித்தொழிக்கப்பட்டார.//

      அதை விட எளிய வழி அவரை கைது செய்து அமெரிக்காவிற்கு அனுப்புவதுதான். அவரின் மற்ற தோழர்களுக்கு அது தான் நடந்திருக்கும்.

  6. ///நிராயுதபாணிகளான பாலஸ்தீன மக்களைச் சுட்டுத் தள்ளுகிறது இசுரேல் இராணுவம்///
    ஹமாஸ் என்ற பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பைத்தான் முதலில் போரை ஆரம்பித்தது. அதன்பிறகுதான் இஸ்ரேல் தனது மக்களை காப்பாற்ற ராணுவத்தை அனுப்பியது. அது மட்டுமல்லாது எகிப்து மற்றும் ஐ.நா.சபை போரை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்தது. அதனை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஆனால் ஹமாஸ் பயங்கரவாதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் போர் மேகங்கள் இஸ்ரேலை சூழ்துள்ளன. அதனை ஒழித்து தனது மக்களை காப்பாற்ற வேண்டியது இஸ்ரேலின் கடமை.
    ____________________இப்படிதான் இப்போதைய உலகம் நடந்து வருகிறது. இஸ்லாமிற்கு ஆதரவு தெரிவித்து ‘வினவு” போன்றவைகள் வாழ்ந்து வருகிறார்கள்!!! பிழைக்கத் தெரிந்தவர்கள்!!! வாழ்க!!

    • மு.நாட்ராயன்,

      இஸ்ரேல் , அமெரிக்க தூதரக தொடர்பில் உள்ளவர்கள், அவற்றில் பொருள் உதவி பெறுபவர்கள் எப்படி தான் அமெரீக்கவுக்கும்,இஸ்ரேலுக்கும் விசுவாசமாக குரைப்பார்கள் மு.நாட்ராயன்!

  7. வினவு நடுநிலையான இணையத்தளம் அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனாலும் இது கொஞ்சம் ஓவர். றேச்சல் கோறியின் மரணம் நடந்திருக்கக் கூடாத விபத்து. எந்தவொரு அமெரிக்கனையும் வேண்டுமென்று கொலை செய்து, இஸ்ரேலின் ஒரேயொரு நண்பனும் காவலனுமாகிய அமெரிக்காவை பகைத்துக் கொள்ளவோ அல்லது அமெரிக்க மக்களின் நல்லெண்ணத்தை சிதைத்துக்கொள்ளுமளவுக்கோ இஸ்ரேலிய யூதர்கள் முட்டாள்கள் அல்ல. அமெரிக்கர்களின் கொலைகள் எந்தளவுக்கு இஸ்ரேலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது, அமெரிக்காவில் ஊடகங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் யூதர்களுக்குத் தெரியும். அதனால் இது நிச்சயமாக விபத்து தான்.

    அதை விட மத்தியகிழக்கிலும் வட-ஆபிரிக்காவிலுள்ள (பெரும்பான்மை முஸ்லீம் நாடுகள்) நாடுகள் எல்லாவற்றிலும் இஸ்ரேல் மட்டும் தான் ஊடக சுதந்திரமும், பேச்சுச் சுதந்திரமுள்ள ஒரேயொரு ஜனநாயக நாடு. இதில் வேடிக்கை என்னவென்றால் எத்தனையோ அப்பாவி அமெரிக்கர்களும் (பெண்கள் உட்பட), நடுநிலையான ஊடகவியலாளர்களும், ஒன்றுமே அறியாத மேலைநாட்டு சுற்றுலாப் பயணிகள் கூட இஸ்லாமிய தீவிரவாதிகளால், ஈவிரக்கமற்று, தலையை வெட்டிக் கூடக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்காக வெறும் கண்டனம் கூடத் தெரிவிக்காத பலர் இங்கு றேச்சல் கோறியின் வெகுளித்தனத்துக்காக கண்கலங்குவதைப் பார்க்க எனக்கும் அழுகை வருகிறது.

    • வியாசன்,
      வினவு நடுநிலையான இணையத்தளம் அல்ல இதை நீங்கள் கண்டுபிடித்து சொல்லும் அளவுக்கு தான் உங்கள் அறிவு இருக்கிறதென்றால் என்ன செய்வது?

      வினவு நடுநிலையான இணையத்தளம் என்று என்றைக்கும் சொல்லிக் கொண்டது இல்லை, அவர்களுடைய ‘பாட்டாளி வர்க்க சார்பை’ தெளிவாகவும் வெளிப்படையாகவும் தான் அறிவிக்கிறார்கள்.

      விவாதிக்கும் போது பணிவுடனும், திறந்த மனதுடனும் அணுக வேண்டும். உங்களது யாழ்பான வெள்ளாளத் திமிருடன், கனடிய டாலரும் சேர்ந்தால் இப்படி தான்.. அறிவு மட்டுப்பட்டுவிடும்.

      • வினவு நடுநிலையான இணையத்தளம் அல்ல என்பது ‘எல்லோருக்கும்’ தெரியும், அதாவது உங்களுக்குக் கூடத் தெரியும் என்று தான் நான் கூறினேனே தவிர. நான் புதிதாக கண்டுபிடித்துக் கூறுவதாகக் கூறவில்லை. அது உங்களின் கண்டுபிடிப்பு. 🙂

  8. //ஃபீதாயின் ரச்சேல்- ஃபிதாயீன் என்ற அரபிச் சொல்லின் பொருள் தற்கொலைப்படை வீரன். ///

    உலகில் அன்பும் சமாதானமும் நிலவவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் வன்முறையற்ற ஆர்ப்பாட்டங்களைத் தனது ஆயுதமாகக் கையிலெடுத்த றேச்சல் கோறியை, அவரது இறப்புக்குப் பின்பும் அவமதிக்கும் செயல் என்னவென்றால் அந்தப் பெண்ணை “ஃபீதாயின் ரச்சேல்- தற்கொலைப்படை” என்றழைப்பது தான்.

    தற்கொலைப்படை என்ற சொல்லையே எந்த அமெரிக்கனோ, மேலைநாட்டவர்களோ விரும்புவதில்லை. அப்பாவிச் சிறுவர்களையும், பெண்களையும் வெடிக்க வைத்து, அவர்களுடன் சேர்ந்து அப்பாவி மக்களையும் கொல்லுவதை, நீதியையும் சமாதானத்தையும் விரும்பிய றேச்சல் ஒருபோதுமே விரும்பியிருக்க மாட்டார். உதாரணமாக ஈழத்தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டம் கூட மேலை நாட்டு மக்களின் ஆதரவை இழந்ததற்குக் காரணம் விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல்களால் தான்.அதனால் றேச்சல் கோறியை “ஃபீதாயின் அல்லது தற்கொலைப்படை” என்றழைப்பதைப் போன்ற கொடுமையை விட வேறெதுவுமிருக்க முடியாது.

  9. //ஃபிதாயீன் என்ற அரபிச் சொல்லின் பொருள் தற்கொலைப்படை வீரன். //

    ஃபிதாயீன் என்ற அரபுச் சொல்லின் பொருள் தற்கொலைப்படை வீரன் என்பது தவறு என்பது போலத்தான் எனக்குப் படுகிறது, தயவு செய்து அரபு தெரிந்தவர்கள் யாரவது உறுதிப்படுத்துங்கள். இந்தக் கட்டுரையாசிரியர் ‘Bedouin’ என்ற அரபுச் சொல்லைத் தான் “ஃபிதாயீன்” என்று தமிழில் குறிப்பிடுகிறாரென்றால் அது தற்கொலைப்படை வீரனைக் குறிப்பதல்ல.

  10. புலனாய்வு புலிகள் யுனியும் வியாசனும் ஆராய்ந்து அறிக்கை கொடுத்து விட்டார்கள்.ரச்சேல் கொல்லப்பட்டது விபத்துதானாம்.பாசிசவாதிகள் முட்டாள்கள் என்பதை உலகறியும்.அவர்களை ஆதரிப்பவர்களும் அப்படித்தான் என்று இந்த ”ஆய்வறிக்கை” மெய்ப்பிக்கிறது.

    அறிவாளிகளே,பதிவில் வெளியாகியிருக்கும் புகைப்படங்களை சற்றே கவனித்து பார்த்தீர்களேயானால் உங்கள் கூற்று எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம்.

    முதல் படத்தில் வெட்ட வெளியில் கையில் ஒலி பெருக்கியுடன் புல்டோசரை மறித்து நிற்கிறார் ஈகை போராளி ரச்சேல்.அடுத்த படத்தில் அந்த புல்டோசர் இடிக்கப்போகும் வீட்டு சுற்று சுவரை ஒட்டி சக போராளி தோழர் ஒருவருடன் நிற்கிறார்.ஆக இடிக்க வரும் கயவர்களை ஒலிபெருக்கி மூலம் எதிர்ப்பு குரல் எழுப்பி தடுக்க முனைந்திருக்கிறார்.ரச்சேல் வெட்டவெளியில்தான் கொல்லப்பட்டிருக்கிறார்.அப்படியானால் சுற்று சுவரை ஒட்டி நின்று மறித்தது முதலில் நடந்திருக்க வேண்டும்.வெட்ட வெளியில் மறித்து நின்றது பின்னர் நடந்திருக்க வேண்டும்.ஆக முதல் இடிப்பு முயற்சியை ரச்சேல் தடுத்து நிறுத்தி இருக்கிறார்.அதனால் ஆத்திரமுற்ற ஓட்டுநர் இரண்டாவது முயற்சியில் வேண்டுமென்றே கொலை செய்யும் நோக்கத்தோடு வாகனத்தை இயக்கி ரச்சேலை கொலை செய்திருக்கிறான்.தொடர்ச்சியாக வாகனத்தை மறிக்கும் ரச்சேலை,ஒலிபெருக்கி கொண்டு கண்டனக் குரல் எழுப்பும் ரச்சேலை அந்த ஓட்டுநர் பார்க்காமல் ஓட்டி விபத்து ஏற்பட்டு அதில் ரச்சேல் இறந்து போனார் என்று சொல்வது கடைந்தெடுத்த பித்தலாட்டம்.

    மேலும் கூடுதல் விவரங்களுக்கு பார்க்க;

    http://electronicintifada.net/content/photostory-israeli-bulldozer-driver-murders-american-peace-activist/4449

    இந்த பாசிச படுகொலையைத்தான் விபத்து என்று சியோனிச அயோக்கியர்கள் அவிழ்த்து விட்ட அண்டப்புளுகை அள்ளிக் கொண்டு இங்கு வந்து வாந்தி எடுத்து நாறடிக்கிறார்கள் யுனியும் வியாசனும்.

    அடுத்து வியாசனின் குழாயடி சண்டை பெண்கள் பாணியிலான சாடைப்பேச்சு.

    \\அவர்களுக்காக வெறும் கண்டனம் கூடத் தெரிவிக்காத பலர் இங்கு றேச்சல் கோறியின் வெகுளித்தனத்துக்காக கண்கலங்குவதைப் பார்க்க எனக்கும் அழுகை வருகிறது//

    எந்தவொரு பயங்கரவாத செயலையும் அந்த ”பலர்” ஆதரித்திருந்தால் சுட்டிக்காட்டலாம்.அல்லது குறிப்பான நிகழ்வுகளை சொல்லி அந்த ”பலர்” அதனை கண்டிக்கிறார்களா இல்லையா என கேட்கலாம்.பொத்தாம் பொதுவாக வசை பாடுவதற்கு என்ன விவாதம் வேண்டிக் கிடக்கிறது.

    \\எந்தவொரு அமெரிக்கனையும் வேண்டுமென்று கொலை செய்து, இஸ்ரேலின் ஒரேயொரு நண்பனும் காவலனுமாகிய அமெரிக்காவை பகைத்துக் கொள்ளவோ அல்லது அமெரிக்க மக்களின் நல்லெண்ணத்தை சிதைத்துக்கொள்ளுமளவுக்கோ இஸ்ரேலிய யூதர்கள் முட்டாள்கள் அல்ல. //

    வீடுகளை இடிப்பதை எதிர்த்து அமெரிக்க மாணவர்கள் தொடர்ச்சியாக போராடி இருக்கிறார்கள்.இந்த தகவல் இசுரேலிய அரசுக்கு தெரியாமல் இருந்திருக்கும் என அறிவாளி வியாசன் கூட சொல்ல முடியாது.முதல் நாளிலேயே ரச்சேல் கொல்லப்படவில்லை.பிற்பாடு கொல்லப்படுகிறார் என்றால் என்ன பொருள்.

    அரசாள்வோரின் ஆணையின் பேரில்தான் இந்த கொலை நடந்திருக்கிறது என்பதை ஒரே ஒரு எளிய கேள்வி உணர்த்தி விடும்.

    தெளிவான மேலிட ஆணையில்லாமல் ஓட்டுநருக்கு ஒரு அமெரிக்கனை கொலை செய்யும் துணிவு வருமா.

    • திப்பு,

      ஒலக போலீஸ் அமேரிக்காவின் கீழக்கு ஆசிய அடியாள் இஸ்ரேல், தன் எசமானனுக்கு[USA] போன் செய்து , அமெரிக்க வெளிஉறவுக்கொள்கைக்கு எதிராக நடக்கும் இந்த அமெரிக்க பெண்ணை [ரச்சேலை ] என்ன செய்யலாம் என்று கேட்டு , அவரை கொலை செய்வதற்கு அனுமதி வாங்கி அதன் பின் புல்டோசர் மூலம் ஏற்றி கொன்று கொலையை விபத்தாக்க பிரச்சாரம் செய்ய யுனிவர்பட்டிக்கும் வியாசனுக்கும் கட்டளை இட்டதாக தான் பொருள்

      //வீடுகளை இடிப்பதை எதிர்த்து அமெரிக்க மாணவர்கள் தொடர்ச்சியாக போராடி இருக்கிறார்கள்.இந்த தகவல் இசுரேலிய அரசுக்கு தெரியாமல் இருந்திருக்கும் என அறிவாளி வியாசன் கூட சொல்ல முடியாது.முதல் நாளிலேயே ரச்சேல் கொல்லப்படவில்லை.பிற்பாடு கொல்லப்படுகிறார் என்றால் என்ன பொருள்.//

    • //இந்த பாசிச படுகொலையைத்தான் விபத்து என்று சியோனிச அயோக்கியர்கள் அவிழ்த்து விட்ட அண்டப்புளுகை அள்ளிக் கொண்டு இங்கு வந்து வாந்தி எடுத்து நாறடிக்கிறார்கள் யுனியும் வியாசனும்.//

      The Electronic Intifada ஒரு Pro-Palestinian இணையத்தளம். அதன் நோக்கம் இஸ்ரேல் –பாலஸ்தீன பிரச்சனையில் பாலஸ்தீனர்களின் கருத்தையும் அவர்களின் கண்ணோட்டத்தையும் கூறுவதேயல்லாமல். அது ஒரு நடுநிலையான இணையத்தளம் அல்ல. இதில் பெரிய பகிடி என்னவென்றால், தான் ஒரு பலத்தீன இணையத் தளத்தில் அவிழ்த்து விட அண்டப்புளுகை இங்கு அள்ளிக்கொண்டு வந்து வாந்தியெடுத்துக் கொண்டே, இஸ்ரேலிய நீதிமன்றத்தின் தீர்ப்பை அண்டப் புளுகு என்கிறார் திப்பு சுல்தான். 🙂

      மத்திய கிழக்கிலே ஊடக சுதந்திரமுள்ள ஒரேயொரு ஜனநாயக நாடு இஸ்ரேல் தான். அதனால் வேறு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் செய்திகளை விட இஸ்ரேலிலிருந்து வரும் செய்திகளில் ஒரளவாவது உண்மையிருக்கும் என்று நம்பலாம். எத்தனையோ அமெரிக்க, கனேடிய யூதர்கள் பாலத்தீன பிரச்சனை சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டுமென்பதில் அக்கறையும், ஈடுபாடும் கொண்டுள்ளளனர். எல்லா யூதர்களும் பலத்தீனர்களை அழிக்க வேண்டுமென்ற சிந்தனை கொண்டவர்கள் அல்ல. ஆனால் ஹமாஸ் போன்ற இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்தே அகற்றுவோம் என்று கூறும் தீவிரவாத இஸ்லாமிய இயக்கங்களால் பிரச்சனை தொடர்கின்றது என்பது தான் உண்மை.

      ______________
      //வீடுகளை இடிப்பதை எதிர்த்து அமெரிக்க மாணவர்கள் தொடர்ச்சியாக போராடி இருக்கிறார்கள்.///

      அந்த அமெரிக்க மாணவர்கள் இஸ்ரேலுக்குள் நுழைய் விசா கொடுத்து அவர்களை பலத்தீனியர்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் போராடுவதற்கு அனுமதித்ததே இஸ்ரேல் தான். ஏனென்றால் அமெரிக்க மாணவர்களின் ஜனநாயக முறையிலான வன்முறையற்ற போராட்டங்களைத் தடைசெய்வது அமெரிக்கர்கள் மத்தியில் இஸ்ரேலில் உள்ள ஜனநாயக உரிமைகளின் விடயத்தில் சந்தேகம் வந்து விடும் என்பதால் தான். 2003ம் ஆண்டில் றேச்சல் கூட இஸ்ரேலிய விசாவுடன் தான் ஜெருசலேமில் தங்கினார். அதனால் அமெரிக்க மாணவர்களின் போராட்டங்களையே தடுக்க துணியாத இஸ்ரேல் அவர்களின் ஒருவரை வேண்டுமென்றே கொல்லும் என்பது நம்ப முடியாதவொன்று. அமெரிக்காவில் இஸ்ரேலுக்குள்ள ஆதரவையும் நல்லெண்ணத்தையும் அமெரிக்கர்களைக் கொல்வதன் மூலம் அழித்துக் கொள்ள இஸ்ரேலிய யூதர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.

      //தெளிவான மேலிட ஆணையில்லாமல் ஓட்டுநருக்கு ஒரு அமெரிக்கனை கொலை செய்யும் துணிவு வருமா.///
      விபத்துக்கு யாரும் ஆணையிடுவதில்லை. எதிர்பாராமல் நடைபெறுவது தான் விபத்து.

      • வியாசன்,
        //ஒரு Pro-Palestinian இணையத்தளம்//
        //ஒரு நடுநிலையான இணையத்தளம் அல்ல.//

        நடுநிலை என்பதற்கு உங்களுடைய அளவுகோல் என்ன? நீங்கள் கொண்டிருக்கும் கருத்திற்கு எதிரான (எதிர் தரப்பின்) கருத்தை வெளியிடும் எந்த ஊடகமும் எதிர் தரப்பின் ஊடகம் என்றாகி விடுகிறதே! மேலும், அனைவருமே தன்னுடைய கொள்கைகளின் படி அல்லது தனக்கு கற்பிக்கப்பட்ட கருத்துகளை கொண்டு ஏதோ ஒரு நிலைப்பாட்டிற்கு வந்தே ஆகவேண்டும். அப்படி தான் வருகிறார்கள்.. நீங்களும் கூட..

        உங்கள் கருத்துகளை கொஞ்சமும் மாற்றிக் கொள்ளாமல் அறிவு நாணயமின்றி நீள நீளமாக முட்டாள் தனமாக புலம்பி பின்னூடமிடுவது விவாதம் ஆகிவிடாது வியாசன்.

        The Electronic Intifada வை விடுங்கள், கார்டியன் (the Guardian) போன்ற பத்திரிக்கைகளும் பாலஸ்தீன சார்புடையவை தானா? இண்டீபெண்டண்ட், டெலகிராஃப், வாசிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் ?

        உங்கள் பாசிச கருத்துகளை மாற்றிக்கொள்ளுங்கள் அல்லது உலகில் நான் மட்டுமே அறிவாளி என்ற ஆணவத்தை கைவிட்டு குறைந்த பட்சம் நீள நீளமாக கமெண்ட் போடுவதை விட்டுத் தொலையுங்கள்.

        • //The Electronic Intifada வை விடுங்கள், கார்டியன் (the Guardian) போன்ற பத்திரிக்கைகளும் பாலஸ்தீன சார்புடையவை தானா? இண்டீபெண்டண்ட், டெலகிராஃப், வாசிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் ?///

          The Electronic Intifada போன்ற Pro-Palestinian இணையத்தளங்கள், பத்திரிகைகளை விட ‘இண்டீபெண்டண்ட், டெலகிராஃப், வாசிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ்’ போன்ற வேறு ஏதாவது ஊடகங்கள் றேச்சல் கோறி இஸ்ரேலிய அரசால் திட்டமிட்டுக் கொல்லப்பட்டார் என்று கூறுவதைக் காட்டுங்கள் பார்ப்போம். Pro-Palestinian ஊடகங்கள் தவிர ஏனைய ஊடகங்கள் இந்த விடயத்தில் இரண்டு பக்கத்தினதும் கருத்துக்களையும் கூறுகின்றனரே தவிர, இங்குள்ள ஒரு சிலர் கூறுவது போல் இந்த அமெரிக்கப்பெண் இஸ்ரேலிய அரசால் திட்டமிட்டுக் கொல்லப்பட்டார் எனத் தீர்ப்புக் கூறவில்லை. இரண்டுக்குமுள்ள வேறுபாட்டை உங்களால் புரிந்து கொள்ள முடியுமேன்று நம்புகிறேன்.

      • கழுதை விட்டையை லட்டு என நம்பி கை நிறைய அள்ளிக்கொண்டு வந்த கபோதி போல வியாசனின் நீள, நீள மறுமொழி உள்ளது.ரச்சேல் குறி வைத்து கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை இணையத்தில் கிடைக்கும், பதிவில் உள்ள படங்களை வைத்து தர்க்க ரீதியாக சொல்லி இருக்கிறேன்.கூடுதல் விவரங்களுக்குதான் பாலத்தீன தளத்தை குறிப்பிட்டிருக்கிறேன்.வியாசனுக்கு வக்கு இருந்தால் அது குறித்து மறுப்பு சொல்லலாம்.மாறாக பாலத்தீன தளத்தை எப்படி குறிப்பிடலாம் என வக்கணை பேசுவது பித்தலாட்டம்.

        • திப்பு சுல்தான் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார் என்பதை அவரது உளறல் காட்டுகிறது. Pro-Palestinian இணையத்தளங்கள் இல்லாத வேறு ஊடகங்கள் ஏதாவது , நீங்கள் கூறுவது போல் றேச்சல் கோறி திட்டமிட்டு இஸ்ரேலிய அரசால் கொல்லப்பட்டாரெனக் கூறுவதைக் காட்டுங்கள் பார்ப்போம். எத்தனையோ நடுநிலையான பதிவுகளிளிருந்தெல்லாம் ஆதாரங்களை எடுத்து “தர்க்கரீதியாக” வாதாடிய நீங்கள், அந்த இணையத்தளங்களின் இணைப்புகளில் ஒன்றைக் கூடத் தர மறந்து விட்டு, Pro-Palestinian இணையத்தளமாகிய The Electronic Intifada மட்டும் ஆதாரமாகக் காட்டிய, மர்மத்தை மட்டும் என்னால் புருந்து கொள்ளவே முடியவில்லை. நீங்கள் காட்டிய இணைப்பைப் பற்றித்தான் என்னால் கருத்துக் கூறமுடியும் என்பது உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமென்று நம்புகிறேன்.

          • ரச்சேல் மரணத்துக்கு அனுதாபம் காட்ட வேண்டியது, கண்டனம் தெரிவிக்க வேண்டியது உலகில் அமைதியையும் ஜனநாயகத்தையும் விரும்பும் ஒவ்வொரு மனிதனின் கடமை.

            • இந்தக் கருத்து நியாயமானது. உலகில் அமைதியையும் சமாதானத்தையும் விரும்பிய ஒரு இளம்பெண் தனதுயிரை இழந்திருக்கிறார். இது நடந்திருக்க கூடாத விபத்து என்பதை நான் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். அவரது மரணத்துக்கு அனுதாபமும் கண்டனமும் தெரிவிக்கும் அதே வேளையில் ஒருபக்கச் சார்பாக இது திட்டமிட்ட கொலை என்று தீர்ப்புக் கூறுவதும் தவிர்க்கப்பட வேண்டியதொன்று. இந்த வழக்கின் மேன்முறையீட்டை இஸ்ரேலிய உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது ஏனென்றால் மத்திய கிழக்கு நாடுகள் எல்லாவற்றிலும் இஸ்ரேல் ஒன்று தான் ஊடக சுதந்திரமுள்ள ஒரேயொரு ஜனநாயக நாடு.

            • இது நான் எதிர் பார்த்தது தான்.எனது மறுமொழியின் இரண்டாம் பாகத்தை வெட்டி விட்டது வினவு.இரண்டாம் பாகத்தைத் எதிர் கொள்ள முடியாதவர்கள், முதல் பாகத்தை பிரசுரித்து, எதிர் கருத்து கொண்டவர்களும் இந்தப் பதிவை ஆதரிப்பது போல் காட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் என்ன?

              இவர்களெல்லாம் ஜனநாயகத்தைப் பற்றியும் ஒடுக்கப் பட்டவர்களையும் பற்றிப் பேசுவது வினோதம்.

              எழுத்தில் நேர்மையில்லாத நபும்சகத் தன்மை கொண்டது வினவு.
              உண்மையில் தைரியம் இருந்தால் இதை வெட்டாமல் வினவு வெளியிடுகிறதா என்று பார்ப்போம்.

          • The Guardian, Tuesday 18 March 2003:

            This weekend 23-year-old American peace activist Rachel Corrie was crushed to death by a bulldozer as she tried to prevent the Israeli army destroying homes in the Gaza Strip.

            Hi Viyasan, Is it implying that this was a accident?

            //இணையத்தளங்கள் இல்லாத வேறு ஊடகங்கள் ஏதாவது , நீங்கள் கூறுவது போல் றேச்சல் கோறி திட்டமிட்டு இஸ்ரேலிய அரசால் கொல்லப்பட்டாரெனக் கூறுவதைக் காட்டுங்கள் பார்ப்போம்.//

            • The Guardian, 28 August 2012:

              How the US and Israeli justice systems whitewash state crimes:

              Cindy Corrie, Rachel’s mother, said after the verdict that Israel “employed a ‘well-heeled system’ to protect its soldiers and provide them with immunity”. Indeed, the Israeli “investigation” into Corrie’s death has been such a laughable whitewash that even the US ambassador to Israel last week told the Corrie family that he “did not believe the Israeli military investigation had been ‘thorough, credible and transparent’, as had been promised by Israel.” All of this, writes McGreal, shows how “covering up the truth about the killings of innocents, including Corrie, became an important part of the survival strategy because of the damage the truth could do to the military’s standing, not only in the rest of the world but also among Israelis.”

              By
              Glenn Greenwald in The Guardian

              //இணையத்தளங்கள் இல்லாத வேறு ஊடகங்கள் ஏதாவது , நீங்கள் கூறுவது போல் றேச்சல் கோறி திட்டமிட்டு இஸ்ரேலிய அரசால் கொல்லப்பட்டாரெனக் கூறுவதைக் காட்டுங்கள் பார்ப்போம்.//

              • மேலை நாட்டு ஊடகங்கள், பத்திரிகைகளில் Columnists ஆல் எழுதப்படும் Opinion அந்தந்த எழுத்தாளரின் சொந்த அபிப்பிராயம் அல்லது கருத்தே தவிர, அவற்றை அப்படியே உண்மையானவை அல்லது இருபக்க வாதங்களையும் தீர விசாரித்து எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவென்றோ அல்லது Columnists கூறுவதெல்லாம் சரியானவை என்று எடுத்துக் கொள்வதோ அப்பாவித்தனமானது மட்டுமல்ல முட்டாள் தனமானதும் கூட என்பதை திரு. சிவகார்த்திகேயன் அறிவார் என்று நம்பிக்கையில் அவருக்கு எனது பதிலை எழுதுகிறேன்.

                இந்தியாவில் போன்றே எல்லா நாடுகளிலும் இடது சாரி, வலது சாரி, கம்யூனிஸ்ட், பழமைவாதி, புதுமை வாதி, Anti-Tamil, Pro-Tamil, Anti-Jew, Pro-Jew, anti-immigrants, pro-immigrants இப்படி எத்தனையோ வகையான Columnists உள்ளனர். அவர்களின் கருத்துக்கள் அவரது சொந்தக் கருத்துக்களே தவிர அது தான் உண்மை என்று அந்தக் கருத்தை வெளியிடும் பத்திரிகைகள் அங்கீகரிப்பதாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை.

                Glenn Greenwald என்ற வலதுசாரி activist இவர் இன்னொரு * Edward Snowden. இவர் இந்தியாவில் இருந்தால் வினவு இணையத்த்தளத்தின் நிர்வாகிகளில் ஒருவராக இருந்திருப்பார். 🙂 அவர் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்குமெதிராக கருத்தைத் தெரிவிக்காமல் இருந்திருந்தால் தான் ஆச்சரியப்பட வேண்டும். இவரது கருத்துக்கு முற்றிலும் எதிரான கருத்தை அதாவது றேச்சல் கோறியை ‘Exploited and Naïve’ இளம் பெண் அல்லது ‘Naïve nutcase’ என்ற கூறும் பல Columnists களின் கருத்துக்களையும் வெறும் கூகிள் தேடுதலிலேயே காணலாம்.

                *http://www.theguardian.com/world/2014/may/12/glenn-greenwald-uk-arrest-me-edward-snowden-nsa

                Glenn Greenwald is a former columnist on civil liberties and US national security issues for the Guardian. An ex-constitutional lawyer, he was until 2012 a contributing writer at Salon. He is the author of How Would a Patriot Act? (May 2006), a critique of the Bush administration’s use of executive power; A Tragic Legacy (June, 2007), which examines the Bush legacy; and With Liberty and Justice For Some: How the Law Is Used to Destroy Equality and Protect the Powerful.
                http://glenngreenwald.net/

                அதனால் வெறும் பத்திரிகைகளில் வரும் செய்திகளை அல்லது தனிப்பட்ட Columnists இன் கருத்துக்களின் அடிப்படையில் றேச்சல் கோறியின் மரணம் விபத்து அல்ல என்ற தீர்மானத்துக்கு வர முடியாது. பிரபாகரன் உயிரோடிருக்கிறார் அல்லது ஜோன் F. கென்னடியை கொலையிலுள்ள மர்மம் போன்று, றேச்சல் கோறியையும் திட்டமிட்டுக் கொலை செய்தனர் என்றொரு சிலரும், இல்லை அது விபத்து என்று மற்றவர்களும் தொடர்ந்து வாதாடலாம். ஆனால் சாட்சியங்களின் அடிப்படையில் அந்த மரணம் விபத்து என்பதற்கான பல ஆதாரங்கள் உண்டு என்பதை இஸ்ரேலிய நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கின் மேன்முறையீடு இஸ்ரேலின் உச்ச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது, அதுவரை காத்திருக்க வேண்டும் அல்லது ஐக்கியநாடுகளின் மனிதவுரிமைச் சபையை இந்த வழக்கின் விசாரணையை நடத்துமாறு கேட்டுக் கொள்ளலாமே தவிர வெறும் பத்திரிகைகளின் அடிப்படையில் விபத்து அல்ல என்ற தீர்ப்புக்கு வரமுடியாது.

                • The Guardian, 28 August 2012:
                  How the US and Israeli justice systems whitewash state crimes:

                  This Essay says…

                  ” All of this, writes McGreal, shows how “covering up the truth about the killings of innocents, including Corrie, became an important part of the survival strategy because of the damage the truth could do to the military’s standing, not only in the rest of the world but also among Israelis.”

                  Here Mr McGreal was a correspondent for The Guardian at Gaza strip and his above reports are taken by Glenn Greenwald to write his essay. Probably Glenn Greenwald might be a human rights activist but neither Leftist or Rightist as quoted by Mr. Viyasan.

                  Searching a person like Corrie with the keys in Google, ‘Exploited and Naïve’ ‘Naïve nutcase’ is not only insulting her but it is a insult for people who fight for these issues like “Free Tamil EElam” and “May 2009 Mulllai Tevu district Massacre”

                  //இணையத்தளங்கள் இல்லாத வேறு ஊடகங்கள் ஏதாவது , நீங்கள் கூறுவது போல் றேச்சல் கோறி திட்டமிட்டு இஸ்ரேலிய அரசால் கொல்லப்பட்டாரெனக் கூறுவதைக் காட்டுங்கள் பார்ப்போம்.//

                  • Fearless Heroine Or ‘Exploited And Naive’?

                    றேச்சல் கோறி பற்றி நான் பதிவு செய்த பல இணைய இணைப்புக்களை வினவு வெளியிடவில்லை, அதற்கு நான் பொறுப்பாக முடியுமா? இந்த இளம்பெண்ணின் மரணத்தை எவ்வாறு இஸ்ரேலை வெறுக்கிறவர்கள் exploit பண்ணுகிறார்கள் என்பதை பற்றிய பலரின் கருத்துக்கள் கூகிளில் உண்டு. நீங்களே தேடிப் படித்துக் கொள்ளுங்கள்.

                    • Dear Viyasan Initially You preached that ….

                      //இணையத்தளங்கள் இல்லாத வேறு ஊடகங்கள் ஏதாவது , நீங்கள் கூறுவது போல் றேச்சல் கோறி திட்டமிட்டு இஸ்ரேலிய அரசால் கொல்லப்பட்டாரெனக் கூறுவதைக் காட்டுங்கள் பார்ப்போம்.//

                      By the way I searched the newspapers and showing that She was killed by Israel Army bulldozer by purpose but not by accident.Now You again preached that search on the Google for Israel Government biased information as shown below.

                      //இந்த இளம்பெண்ணின் மரணத்தை எவ்வாறு இஸ்ரேலை வெறுக்கிறவர்கள் exploit பண்ணுகிறார்கள் என்பதை பற்றிய பலரின் கருத்துக்கள் கூகிளில் உண்டு. நீங்களே தேடிப் படித்துக் கொள்ளுங்கள்.//

                      Dear Viyasan What might be your intention for supporting USA backed Israel Government even for the killing of a US girl who support Gaza people? You don’t think Supporting this killing too give advantage to sri lankan Army for killing little boy Bala s/o Mr.prapakaran during May 2009 Massacre?
                      ————————

                      More over You just said that search for her with the keys in Google, ‘Exploited and Naïve’ ‘Naïve nutcase’ is totally different from deletion of your other comments by vinavu admin. Rachel Corrie was not run away from her motherland USA for attaining the financial advantage from Gaza people. She is not a refugee of USA to Gaza. She is a great fighter of our society against the evil activities of Israel.

                      //றேச்சல் கோறி பற்றி நான் பதிவு செய்த பல இணைய இணைப்புக்களை வினவு வெளியிடவில்லை, அதற்கு நான் பொறுப்பாக முடியுமா?//

          • ரச்சேல் கொலை செய்யப்பட்டார் என அழுத்தம் திருத்தமாக கூறும் கார்டியன் தலையங்கம்.

            http://www.theguardian.com/commentisfree/2012/aug/28/rachel-corrie-verdict-exposes-israeli-military-mindset?CMP=twt_fd&CMP=SOCxx2I2

            சியோனிச பயங்கரவாதிகள் ரச்சேலை கொலை செய்ததை கண்டிக்கும் பதிவு

            http://melchettmike.wordpress.com/2012/09/02/corrie-verdict-a-crushing-blow-for-human-rights/

            ரச்சேல் கொலை செய்யப்பட்டதை கண்ணால் கண்ட சாட்சியான டாம் டேல் ரச்சேல் விபத்தில் இறந்ததாக பசப்பும் தீர்ப்பை கண்டிக்கும் டெலிகிராப் பதிவு

            http://www.telegraph.co.uk/news/worldnews/9504256/Rachel-Corrie-death-eyewitness-attacks-Israeli-verdict-as-implausible.html

            இவற்றுக்கெல்லாம் மேலாக.ரச்சேல் கொலை விசாரணை குறித்து இசுரேலுக்கான அமெரிக்க தூதர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா அறிவாளியே ,

            http://www.haaretz.com/news/diplomacy-defense/u-s-israeli-probe-into-rachel-corrie-s-death-wasn-t-credible-1.460091

            சுட்டியிலிருந்து

            Israel’s investigation into the death of American activist Rachel Corrie was not satisfactory, and wasn’t as thorough, credible or transparent as it should have been, U.S. Ambassador to Israel Dan Shapiro told the Corrie family this week.

            இப்ப தெரியுதா அறிவாளியே ,அந்து போன ரீலை எவ்வளவு நேரமா ஒட்டிக்கிட்டு இருக்குரீர் என்று .அதுனால அடங்குங்க அறிவாளியே ,வாங்குன காசுக்கு மேல கூவ வேண்டாம் கூவல் திலகமே.

            • றேச்சல் கோறியின் மரணம் சம்பந்தமான செய்திகளில் மட்டும் அமெரிக்காவினதும், மேலைநாடுகளிலுமுள்ள சுதந்திர ஊடகங்களின் வலது சாரி எழுத்தாளர்களினதும் Columnists இனதும் கருத்துக்களையும், எழுத்துக்களையும் கேள்வியேதுமில்லாமல் அபப்டியே ஏற்றுக் கொள்ளும், இஸ்லாமியர்கள், மேலைநாட்டுப் பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும்- இஸ்லாத்தை, முஸ்லீம்களை, ஹமாஸ், Al-Qaeda, ISIS போன்ற இஸ்லாமிய தீவிரவாதிகளை, இஸ்லாமியநாடுகளைப் பற்றிக் – கூறும் கருத்துகளையும், செய்திகளையும் அப்படியே ஏற்றுக் கொண்டார்களேயானால் இந்த உலகில் பிரச்சனையே இருக்காதே என்ற ஆதங்கம் எனக்கு இதுவரை இருந்து வந்தது.

              ஜனாப். திப்பு சுல்தான் இந்த விடயத்தில் இவ்வளவு அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாக மேலைநாட்டுப் பத்திரிகைகளின் கருத்தையும் செய்திகளையும் அப்படியே ஏற்றுக் கொள்வதைப் பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, ஏனென்றால் இனிமேல் இந்த தளத்தில் இஸ்லாமையும், முஸ்லீம்களைப் பற்றிய விடயங்களை விவாதிப்பது மிகவும் இலகுவானது. மேலைநாட்டுப் பத்திரிகையாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்ற இணைப்பைக் கொடுத்தால் ஜனாப் திப்பு சுல்தான், எந்தவித எதிர்ப்புமில்லாமல், வாயை மூடிக் கொண்டு அப்படியே ஏற்றுக் கொண்டு விடுவார் போல் தெரிகிறது. 🙂

              • ஆமா.மீசைல மண் ஒட்டல

                //இணையத்தளங்கள் இல்லாத வேறு ஊடகங்கள் ஏதாவது , நீங்கள் கூறுவது போல் றேச்சல் கோறி திட்டமிட்டு இஸ்ரேலிய அரசால் கொல்லப்பட்டாரெனக் கூறுவதைக் காட்டுங்கள் பார்ப்போம்.//

      • \\அமெரிக்காவில் இஸ்ரேலுக்குள்ள ஆதரவையும் நல்லெண்ணத்தையும் அமெரிக்கர்களைக் கொல்வதன் மூலம் அழித்துக் கொள்ள இஸ்ரேலிய யூதர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.//

        சியோனிச பயங்கரவாதிகளின் கொலை முயற்சியில் முகத்தில் சுடப்பட்டு உயிர் தப்பி பிழைத்த அமெரிக்கர் பிரைன் அவரி

        http://www.democracynow.org/2005/2/25/u_s_peace_activist_brian_avery

        சியோனிச பயங்கரவாதிகளால் தொடர்ந்து வேட்டையாடப்படும் அமெரிக்க மக்களை பட்டியலிடும் பதிவு.

        http://windowintopalestine.blogspot.in/2010/06/americans-killed-by-israel.html

        யூத அமைப்புகளே காசா ஆக்கிரமிப்பு போரை எதிர்க்கும் பதிவு.

        http://www.democracynow.org/2014/7/23/not_in_our_name_jewish_activists

        • பலத்தீனிய தீவிரவாத இயக்கங்களும் இஸ்லாமிய activistsகளும் றேச்சல் கோறி போன்ற உண்மையிலேயே அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் அப்பாவி இளம் அமெரிக்கர்களை தமது பிரச்சாரங்களுக்கு பயனப்டுத்துவது மட்டுமல்ல, அவர்களை அவர்களின் உயிருக்கு ஆபத்தான இடங்களிலும் அவர்களின் நலன்களை முன்னெடுக்க மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர்______.

    • திப்பு,

      //பதிவில் வெளியாகியிருக்கும் புகைப்படங்கள்//

      All of them are not taken at the day and time of the incident. Probably they captured the incident in video too, but it was not revealed for apparent reasons.

      //விபத்து ஏற்பட்டு அதில் ரச்சேல் இறந்து போனார் என்று சொல்வது கடைந்தெடுத்த பித்தலாட்டம்.//

      எல்லா நாட்களும் அவரேதான் ஒலிபெருக்கியுடன் இருந்தாரா. மற்றவர்கள் எல்லாரும் தள்ளியிருந்தார்களா அல்லது அவர்களும் ராச்சலைப் போன்று நாலா பக்கமும் இடையூறு ஏற்படுத்தினார்களா.
      முதல் படம் அடுத்த படம் என்று இரண்டு படங்களை வைத்தே துப்பறிந்து விட்டீர்களே. பலே கில்லாடி தான் போங்க. ஆனால், வண்டியை கொலை செய்யும் நோக்கத்தில் ஒட்டினாலும் அது மெதுவாகத்தான் நகரும். திடீரென்று திரும்பியும் அது பக்கவாட்டில் நிற்பவர்களை இடித்து விடாது. இரண்டு படங்களிலும் அவர் வண்டியின் பாதையில் இல்லை. ஒரு ரோடு ரோலரின் முன் ஒரு மூதாட்டி நடக்கும் சத்யராஜ் படம் தான் நினைவுக்கு வருகிறது. ராச்சலை வண்டி நெருங்கும் போதோ, இடிக்கும் போதோ, தள்ளும் போதோ, ஏன் ஒரு போட்டோவும் இல்லை? என்ன நடந்திருக்கும் என்றால். குழு நாளுக்கு நாள் தங்கள் இடையூற்றை மேலும் மேலும் அபாயகரமாக செய்து கொண்டிருந்திருக்க வேண்டும். அதே சமயம் சரியான சமயத்தில் சிறிது விலகி தப்பித்திருக்கவேண்டும். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக ராச்சல் தடுக்கி விழந்து மண்தள்ளியில் மாட்டியிருக்க வேண்டும். இந்த மண்தள்ளியின் முன் இருப்பவர் நிற்கிறாரா இல்லை நகர்கிறாரா இல்லை கீழே விழுந்துவிட்டாரா என்று ஒட்டுநரால் பார்க்க முடியாது.

      //ஓட்டுநருக்கு ஒரு அமெரிக்கனை கொலை செய்யும் துணிவு வருமா.//

      • உநிவேர்புட்டி ,

        யூத மத வெறியர்களுக்கு புல்டோசர் கொண்டு காசா முனையில் மக்களீன் வீடுகளை இடிக்கும் தேவை என்ன ? இஸ்லாமியர் எனில் அவர் விடயங்க்களை நோண்டி நொங்கு எடுக்கும் உம் மூளை, யூதன் என்றவுடன் அல்லாடுவது, யூதனுக்கு ஒத்து ஊதுவது ஏன் தெரியுமா ? அதற்க்கு பெயர் தான் கிறிஸ்டியன் மேட்டுகுடி அடிப்படைவாதம் என்பது.

        • அண்ணே, யூனிபட்டியும், ரொபெக்கா மேரியும் யாருன்னு தெரியலையா?
          ஒன்னு இவெங்க அமெரிக்க என்ஜிவோ ஆளுங்களா இருக்கணும், இரண்டு அரவிந்தின் நீலகண்ட கோஷ்டியா இருக்கணும். எதுக்கெடுத்தாலும் முகமதிய வெறி,அது இதுன்னு டிராகுலா மாறி பேசுறதலேருந்து கொண்டை நன்னாத்தான் தெரியுது. இந்த ஆள்மாறாட்ட மோசடிங்கள கிறித்தவ மேட்டுக்குடின்னு கூப்புடறது ரொம்ப நாகரீகம்னே, இந்துத்துவ அமெரிக்க கூட்டு தயாரிப்பு கைக்கூலிங்கிறதுதான் கரெக்டான பேரு!

        • சரவணன்,

          //புல்டோசர் கொண்டு காசா முனையில் மக்களீன் வீடுகளை இடிக்கும் தேவை என்ன ? //

          I have already given the reason in the reply to Thendral. I copy-paste it below.

          2. That bulldozer was demolishing the houses located at/near the border from whom Muhamadans were tunneling into Israel for carrying out terrorist activities. So, for the safety of Israel, those houses had to be demolished. I hope they were given a just compensation.

          As for the issue of tunnels, you can use internet to get more details.

          • இந்தப் பதில் மிகவும் மோசடியானது. யுனிவர்படி நீங்கள் முகம்மதிசம் என்ற பெயரில் கழுத்தறுப்பு வேலையையே செய்கீறிர்கள். எப்படியென்று சொல்கிறேன் குறித்துக்கொள்ளுங்கள். சவுதி இசுரேலுக்கு ஆதரவாக பாலஸ்தீனர்களை கொன்று குவிக்கிறது என்றால் பாலஸ்தீனர்களை முகம்மதியன்கள் என்று வரையறுப்பது சவுதிக்கு கூஜா தூக்குகிற வேலையன்றி வேறு அல்ல. சொல்லபோனால் வஹாபிஸ்டுகளின் அடியாளாக வேலை செய்கிறீர்கள். கண்மூடித்தனமான உங்களது பின்னூட்டங்கள் இவ்விதம் அரசியல் விமர்சனம் அற்று இருப்பதோடு மட்டுமில்லாமல் டனல், புனல் என்று மனிதத்தன்மையற்றும் இருக்கிறது.
            ஹமாஸின் ஆயுதமேந்திய போராட்டம் மட்டுமே பாலஸ்தீனர்களின் விடுதலைக்கு தீர்வல்ல. சோசலிசப் புரட்சியன்றி அங்கே தீர்வு சாத்தியமல்ல என்று பாலஸ்தீன இடதுசாரிகளே புரிந்துவைத்திருக்கிற பொழுது முகம்மதிசம் என்று பச்சிளம் குழந்தைகளின் நிணத்தை குடிப்பதற்கு ஒரு சேரே அமெரிக்கா, இசுரேல் மற்றும் அரேபியா வகாபிசத்திற்கு கைக்கூலியாக செயல்படுகிறது உங்கள் பின்னூட்டங்கள். இதை பரிசீலியுங்கள்.

            • தோழர் தென்றல்,

              //கழுத்தறுப்பு வேலையையே செய்கீறிர்கள்//
              //உங்களது பின்னூட்டங்கள் *** மனிதத்தன்மையற்றும் இருக்கிறது.//
              //நிணத்தை குடிப்பதற்கு *** கைக்கூலியாக செயல்படுகிறது//

              இந்த வரிகள் என்னை தூக்கி வாரிப்போடுகின்றன. மன்னிக்கவும். நான் அப்படி உணரவில்லை. எனது நோக்கமும் அவையல்ல.

              Israel is such small place surrounded by hostile muhamadan majority countries. Tunnels were and are a big threat to it. They did what they thought right. Being 1000s of km away from them, it is easy for us to judge them. Bulldozing some buildings is a better solution than to let more bloodshed through bombings and other such activities. You need to consider both side before coming to a conclusion.
              //சவுதி இசுரேலுக்கு ஆதரவாக பாலஸ்தீனர்களை கொன்று குவிக்கிறது//

              I don’t understand this statement at all. If possible and interested, please explain it, with or without Sabeena.

              //சோசலிசப் புரட்சியன்றி அங்கே தீர்வு சாத்தியமல்ல என்று பாலஸ்தீன இடதுசாரிகளே புரிந்துவைத்திருக்கிற பொழுது//

              உலகமுழவதிலுமுள்ள இடதுசாரிகளும் இதை புரிந்துவைத்திருக்கிறார்கள் என்று தான் நினைக்கிறேன். இதில் என்ன புதுமை யிருக்கிறது. இதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.

              • நண்பர் யுனிவர்படி,

                தோழர் என்பது ரச்சேலுக்கு இருக்கட்டும். நம் இருவருக்குமே அதுவேண்டாம். அப்பொழுதாவது நம்மைப் போன்ற பின்னூட்ட கம்யுனிஸ்டுகளுக்கு போராட்டத்தின் மகத்துவம் நமக்கு புரிகிறதா என்று பார்ப்போம்.

                தூக்கிவாரிப்போட்டது தாங்கள் அல்லர். இசுரேல் குறித்த உங்களது பின்னூட்டங்களால் நான் உட்பட பல நண்பர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறோம். நீங்கள் தான் இதை விமர்சனமாக ஏற்க வேண்டும்.

                முகம்மதிசம் என்ற ஒற்றைவார்த்தைக்குள் அனைத்தும் உள்ளடக்குவதன் அரசியல் மோசடியானது. இதுகுறித்த உங்கள் பார்வை எந்தளவுக்கு தவறு எனில் சவுதி, இசுரேலுக்கு உதவியாக பாலஸ்தீன போரை பலநேரங்களில் மறைமுகமாக தற்பொழுது நேரடியாக ஆதரிக்கிறது என்பதை பார்க்கத்தவறிய ஒன்றே போதுமானது. முதலில் உங்கள் வறட்டு வாதத்தை கழற்றி எறியுங்கள். இசுலாமிய அடிப்படைவாதம் இசுலாமியர்களுக்குத் தான் முதல் எதிரி என்பது பலநேரங்களில் நிருபிக்கப்பட்டிருக்கிறது. இந்தப்போரையே எடுத்துக்கொண்டால், வஹாபிசத்திற்கு ஸ்பான்சர் செய்கிற அரபியா ஏன் காசா குழந்தைகளை கொன்றுகுவிப்பதை ஆதரிக்கிறது என்பதற்கு விளக்கம் தாருங்கள். உங்கள் முகம்மதிச இலக்கணத்தின் முட்டுச் சந்து இதில் தான் இருக்கிறது.

                ரச்சேல் அல்ல பிரச்சனை. ரச்சேலுக்கு பதில் வெறும் சுவர் இருந்தாலே போதுமானது இஸ்ரேலிய பயங்கரவாதத்தைக் கண்டிக்க. போலிகம்யுனிஸ்டுகளே இசுரேல் பயங்கரவாதத்தை கண்டிக்கிறார்கள். ஆனால் தற்பொழுது வரை உங்கள் நிலைப்பாடு என்ன?

                • தோழர் தென்றல், விவாதங்களில் வரும் விருச்சுவல் ஆசாமிங்களை தோழருங்கன்னு எடுத்துக்குற உங்க அப்பாவித்தனம் பாவமா இருக்கு!
                  யூனிபட்டியும், ரொபெக்கா மேரியும் யாருன்னு தெரியலையா?
                  ஒன்னு இவெங்க அமெரிக்க என்ஜிவோ ஆளுங்களா இருக்கணும், இரண்டு அரவிந்தின் நீலகண்ட கோஷ்டியா இருக்கணும். எதுக்கெடுத்தாலும் முகமதிய வெறி,அது இதுன்னு டிராகுலா மாறி பேசுறதலேருந்து கொண்டை நன்னாத்தான் தெரியுது. இந்துத்துவ அமெரிக்க கூட்டு தயாரிப்புல இவெய்ங்க இணையம் பூராவும் இருக்காங்க. யூனிபடியோட ஆரம்ப கால கருத்துக்கள்ள இருந்து பாத்தீங்கன்னா முசுலீம்களை பூண்டோட கொல்லனும்கிறதுதான் அவரோட லச்சியம். அதுக்காக இடையில பார்ப்பன எதிர்ப்பு, தோழர், கம்யூனிசம்னு வேசம் போட்டாரு. மாக்சியத்தோட வாடை தெரிஞ்சவங்க யாராவது இப்புடி மதவெறியனா இருப்பாங்களான்னு உங்கள மனசாச்சிக்கே விடுறேன். பாத்து எழுதுங்க! புரிஞ்சி நடந்துக்குங்க! பெறவு நீங்க என்ன ஆதாரம் போட்டாலும், வாதம் பண்ணினாலும் யுனிபட்டி முகமதியத்த அணுகுண்டு போட்டு அழி, மனித குலத்துக்கே எதிரி அவங்கதான்னு பிலாக்கணம் வைப்பாரு.

                • சரி தென்றல்,

                  //ரச்சேல் அல்ல பிரச்சனை.//

                  ராச்சலைப் பற்றித்தான் இந்தப் பதிவில் பேசுகிறேன். மற்றவற்றைப் பற்றியல்ல. பல நாடுகள் தங்கள் எல்லைகளை பாதுகாக்க ஆயிரக்கணக்கான மைல்களுக்கு வேலிகளையும் மதிற்சுவர்களையும் எழுப்புவது தொன்று தொட்டு நடப்பது தான். அண்டை நாட்டின் தன்மையைப் பொருத்து இது அமைகிறது. மங்கோலியர்களை கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான மைல்களுக்கு மதிற்சுவர்கள் தேவை பட்டிருக்கிறது. சிறிய நாடான இஸ்ரேல் தங்கள் அண்டை மக்களின் இயல்பைக் கருதியே மதிற்சுவர் எழுப்ப வேண்டி வந்தது. இதில் உள்ள நியாயத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். தகுந்த நேரம் வரும் போது இஸ்ரேலிய மக்களே அதை உடைப்பார்கள். அல்லது முகமதியர்கள் அதை உடைப்பார்கள். முன்னதையே நான் விரும்புகிறேன். இதுதான் எனது நிலை. (Whether any one agrees or not, I am a COMMUNIST and I do my part in that direction).

                  //இசுரேலுக்கு உதவியாக பாலஸ்தீன போரை பலநேரங்களில் மறைமுகமாக தற்பொழுது நேரடியாக ஆதரிக்கிறது//

                  இதைப் பற்றி விளக்கச் சொல்லியிருந்தேன். நீங்கள் செய்வதாகத் தெரிவதில்லை. இந்த கருத்து ஆதாரமற்ற கட்டுக்கதை என்று தான் நான் சொல்வேன்.

                  //இசுலாமிய அடிப்படைவாதம் இசுலாமியர்களுக்குத் தான் முதல் எதிரி என்பது பலநேரங்களில் நிருபிக்கப்பட்டிருக்கிறது.//

                  (நான் இசுலாமியத்தைப் பற்றி ராச்சல் பற்றிய இந்த பதிவில் பேசவில்லை என்றே நினைக்கிறேன்.) இருந்தாலும் இசுலாமியத்தைப் பற்றி மற்றவர்கள் பலர் அறியாமையில் தான் இருக்கிறார்கள். அதைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது இசுலாமியர்களுக்கும் சேர்த்து நல்லது தான் என்று தான் நான் நினைக்கிறேன். நான் இதை ஒவ்வொரு முறையும் பதிவை ஒட்டியே செய்கிறேன். பார்ப்பனியத்தை மட்டுமே பதிவுகள் போட்டாலும் எனக்கு சரிதான். அதைப்பற்றியும் நான் கருத்துக்கள் வைத்திருக்கிறேன். ‘mao’ சொன்னதைப் போல கம்யூனிசத்தைப் பற்றி மட்டுமா, அதற்கும் தயார். தற்போதைக்கு எனக்கு வினவை விட்டால் வேறு போக்கு கிடையாது. சில கருத்துக்கள் மட்டுறுத்தப் படுகின்றன. அதற்காக நான் கோபித்துக் கொள்வதில்லை. வினவு தனது பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதை நான் மதிக்கிறேன்.

                  • யுனிவர்படி அவர்களுக்கு,

                    சிறிய நாடான இஸ்ரேல் மீது முகம்மதிய நாடுகள் காஸாவைக் காரணம் காடி ஒரு அனாமேதய போர் தொடுப்பதாகவும், சவுதி அரேபியா இசுரேலுக்கு ஆதரவாக இருப்பதை தான் நம்பவில்லை எனவும் அது ஆதாரமற்ற கட்டுக்கதை எனவும் குறிப்பிட்டிருந்தீர்கள்.
                    தோழர் கலையரசன் அவர்கள், “காஸா இனவழிப்பு போருக்கு சவுதீ அரேபியா ஆதரவு” என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார் (http://kalaiy.blogspot.com/2014/07/blog-post_23.html). இதில் சில வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவை உங்களது கருத்துக்கள் முசுலீம்களின் மீதான வெறியை மட்டுமே கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. அவையாவன.

                    1. காஸாவில் கொல்லப்பட்ட பெரும்பான்மை அரபு மக்கள் முஸ்லிம்களாக இருந்த போதிலும், ஒரு “முஸ்லிம் நாடான” சவூதி அரேபியா அந்தப் படுகொலைகளை அங்கீகரித்துள்ளது. “ஒரே மதத்தவருக்கு இடையிலான ஒற்றுமை” வெளியில் மக்களை ஏமாற்றுவதற்காக மட்டுமே பயன்படும். உள்ளுக்குள்ளே அவரவர் பொருளாதார நலன்கள் மட்டுமே முக்கியமாக கருதப் படுகின்றன.

                    2. இஸ்ரேலிய தொலைக்காட்சியான சனல் 10 ல் நடந்த கலந்துரையாடல் ஒன்றில், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சாகுல் மபாஸ் (Shaul Mofaz) அதனை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார் (Mofaz proposes role for Saudi Arabia and UAE to disarm Gaza; https://www.middleeastmonitor.com/news/middle-east/12931-mofaz-proposes-role-for-saudi-arabia-and-uae-to-disarm-gaza).

                    3. பாலஸ்தீன பிரச்சினையில், “முஸ்லிம் நாடுகள்” எல்லாம் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கின்றன என்பது ஒரு கட்டுக்கதை. வரலாறு நெடுகிலும், இஸ்ரேலுடன் ஒத்துழைத்த “முஸ்லிம் நாடுகள்” பலவுள்ளன. ஜோர்டான் பகிரங்கமாகவும், சவூதி அரேபியா மறைமுகமாகவும், தொடக்கத்தில் இருந்தே இஸ்ரேலுடன் நட்புறவை பேணி வந்துள்ளன. அவை பாலஸ்தீனத்தில், இஸ்ரேலுடன் சமரச உடன்படிக்கை செய்து கொண்ட அப்பாசின் கட்சியை ஆதரிக்கின்றன.

                    4. சவூதி மன்னர் அப்துல்லாவின் மைத்துனர் துர்க்கி, புலனாய்வுத் துறைக்கு பொறுப்பாக இருப்பவர். அவர் அண்மையில், பெல்ஜியம் சென்று இஸ்ரேலிய ஜெனரல் ஆமோஸ் யால்டின் (Amos Yadlin) உடன் சந்தித்துப் பேசி இருக்கிறார். மத்திய கிழக்கில் ஒரு “புதிய சமாதானத் திட்டம்” குறித்து ஆராய்ந்துள்ளனர். அதன் முதற் கட்டமாக, ஹமாஸ் ஒழித்துக் கட்டப் பட வேண்டும்.

                    5. இஸ்ரேலுக்கும், சவூதி அரேபியாவுக்கும் பொதுவான நண்பர்களும், பொதுவான பகைவர்களும் இருக்கின்றனர். இரண்டு நாடுகளுக்கும் அமெரிக்கா சிறந்த நண்பன். அதே மாதிரி, ஈரான், சிரியா ஆகிய நாடுகள் ஜென்ம விரோதிகள். அண்மைக் காலம் வரையில், எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியும், சிரியாவும், ஈரானும் ஹமாசுக்கு உதவி வந்தன. சிரியா அரசு, உள்நாட்டுப் போரில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறது.

                    6. பாலஸ்தீனத்திற்குள் ஈரான் ஊடுருவதற்கு முன்னர், ஹமாஸ் ஒழித்துக் கட்டப் பட வேண்டும் என்பது இரண்டு கூட்டுக் களவாணிகளின் இரகசியத் திட்டம். (ஏற்கனவே இப்படி எல்லாம் நடக்கும் என்று மோப்பம் பிடித்த ஈரான், “பாலஸ்தீன மீட்புப் படை” ஒன்றை உருவாக்கி உள்ளது. ஆனால், அவர்களால் காசாவுக்குள் ஊடுருவ முடியுமா என்பது சந்தேகமே.)

                    7. காஸா ஆக்கிரமிப்புப் போரின் இறுதியில், இஸ்ரேலிய இராணுவம் ஆயிரக் கணக்கான பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து விட்டிருக்கும். ஆனால், ஹமாஸ் முற்றிலுமாக அழித்தொழிக்கப் பட்டதை தனது வெற்றியாக பறை சாற்றிக் கொள்ளும். அதற்குப் பின்னர், காஸாவில் எஞ்சியுள்ள மக்களுக்கு வீடுகள் கட்டித் தருகிறோம் என்று சொல்லிக் கொண்டு, சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் களத்தில் இறங்கும்.

                    ஈரான் தொடர்பாக இன்னொரு தகவலை முன்வைப்பது நலம். பாலஸ்தீன மீட்புப் படையை உருவாக்குகிற ஈரான் ஏன் ஆப்கன் அகதிகளை கொடூரமாகச் சுரண்டுகிறது? இத்துணைக்கும் ஆப்கன் அகதிகளின் பிரிவினர் சியா பிரிவினரே. முகம்மதிய நாடுகள் இவ்விதம் பலபிரிவாக சண்டையிடுகிற பொழுது இசுலாமியர்களே இசுலாமியர்களுக்கு எதிராக சண்டையிட்டு சாகிற பொழுது இசுரேலுக்கு கண்ணீர் விட்டு கதறுவதன் பின்னணி என்ன?

                    சவுதியின் வஹாபியம் இவ்வாறு இசுலாமியர்களுக்கு எதிராக இருக்கிற பொழுது இசுரேலுடன் சேர்ந்து பல்லிளிக்கிற பொழுது அமெரிக்காவிற்கு சலாம் போடுகிற பொழுது வஹாபியத்தைப் பற்றி எங்கு பேசியிருக்கிறீர்கள்? தற்பொழுதுவரை சவுதிக்கு ஆதரவாகத்தானே இருக்கிறீர்கள். இதில் யூத எதிர்ப்பு குரானிலேயே இருக்கிறது என்றால் சவுதி, ஜோர்டான் இசுரேலுடன் குலாவுவதற்கு என்ன காரணம் கூறுவீர்கள்?

                    • தென்றல் அவர்களுக்கு,

                      நீங்கள்/கலையரசன் கொடுத்த தகவல்கள் முரண்பாடுகளைப் போல் தெரியலாம். ஆனால் இந்த விசயத்தில் மேலும் விவரம் தெரிந்தவர்கள் இவற்றைப் பார்த்து சிரிக்கத்தான் செய்வார்கள்.

                      Let me be brief.

                      முகமதிய நாடுகள் இஸ்ரேலை இன்னும் அங்கீகரிக்கவில்லை என்று ஒரு உன்மை போதும் அவைகள் இஸ்ரேலுக்கு எதிரானவை என்பதை நிரூபிக்க.

                      ஜோர்டான் மன்னரும் மறைமுகமாகத்தான் ஒத்துழைக்கிறார். இல்லையென்றால் போரின் போது இஸ்ரேல் எகிப்தின் சினாய் பகுதியைக் கைப்பற்றியதைப் போல ஜோர்டான் முழுவதும் கைப்பற்றிப்பட்டிருக்கும்.

                      சவூதி அரேபியா எப்படி ஒத்துழைக்கிறது. இன்னும் அந்த நாட்டினுள் ஒரு யூதரும் பயணிக்கமுடியாது. இன வெறியின் உச்ச கட்டம் இது. (இதையெல்லாம் ‘இடதுசாரிகள்’ கவனித்தைப் போல் தெரியவில்லை.) பொருளாதார கொடுக்கல் வாங்கல்களில் மறைமுக உள்குத்தல்கள் மதவாதிகளுக்கு ஒன்றும் புதிதல்ல.

                      யூத எதிர்ப்பு குரானிலேயே இருக்கிறது என்பதால் தான் எந்த முகமதிய நாடும் இஸ்ரேலை அங்கீகரிக்க முடியவில்லை. அதனால் தான் பாலஸ்தீன கொசுறுக் குழுக்களாலும் இஸ்ரேலை அங்கீகரிக்க முடியாது. அதனால் தான் முகமதியத்தை வழிக்குக் கொண்டுவராமல் இந்த பிரச்சனைக்கு தீர்வென்பதில்லை. அதுவரை சும்மாவும் இருக்க முடியுமா. அதனால் தான் Mofaz proposes role for Saudi Arabia and UAE to disarm Gaza, etc. முகமதியத்தையும் மீறி சில பல மறைமுக நடவடிக்கைகள் நடக்கின்றன என்றால் அவற்றை முதல் ஆளாக நான் வரவேற்கிறேன்.

                      By the by,

                      // உங்களது கருத்துக்கள் முசுலீம்களின் மீதான வெறியை மட்டுமே கொண்டிருப்ப[து]//

                      நான் முகமதியத்தை வெறுக்கிறேன். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. மக்கள் என்று வரும் பொழுது முகமதியத்தைப் பின்பற்றுபவர்களை முஸ்லிம் என்றழைக்காமல் முகமதியர்கள் என்றழைக்கிறேன். இதனடிப்படையில், பாலஸ்தீன பிரச்சினையில், ‘முகமதியர்கள்’ ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.

                      // கலையரசன்//

                      I have been reading his blog since few months. I found it informative in many aspects. Only problem with him is that when it comes to Muhamadan subjects his logical senses go hay-wire, little more than that of Vinavu’s. That is why, I have so far not commented in his blog.

                      // காஸா ஆக்கிரமிப்புப் போர்//

                      Gaza is already in Israel’s control. Thus, the current operation in Gaza is not occupying war. The operation is meant to neutralize Hamas with pinpoint strikes, etc on its facilities, with least collateral damage. This is not genocide, as Kalaiyarasan and others, claim.

                    • தென்றல் அவர்களுக்கு,

                      Correction:

                      ஜோர்டானில் இஸ்ரேலிய தூதரகம் உள்ளது என்பதை இப்போதுதான் பார்க்கிறேன். அப்படியென்றால் அது இஸ்ரேலை அங்கீகரித்திருக்கிறது. அதாவது அவர்களின் உறவு வெளிப்படையானது தான்.

                      எகிப்தும் தனது சினாய் பகுதியை திரும்பப் பெறும் ஒப்பந்தத்தின் படி இஸ்ரேலை அங்கீகரித்திருக்கிறது என்பதை அறிவேன். சுருக்கமாக எழுதும்போது எல்லாவற்றையும் எழுத முடியாதில்லையா.

                    • தென்றலும் கலை என்பவரும் ஒரே ஆட்களாகக் கூட இருக்கலாம். இருவருமே கொஞ்சம் தெரிந்த விடயங்களை வைத்துக் கொண்டு ஊதிப்பெருக்கி தம்மை முற்போக்குவதிகளாக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். ——– இந்தப் பின்னணியில் தான் முகம்மதியர் சம்பந்தமான விடயங்களை எழுதும்போது “his logical senses go hay-wire” என்பதைப் பார்க்க வேண்டும். அவரது இலங்கையைப் பற்றிய ஆதாரமற்ற அரைப்பக்கப் பதிவுகளுக்கு மட்டுமல்ல, ஏனைய பல அரைவேக்காட்டுக் கருத்துக்களுக்கும் மறுப்புத் தெரிவிப்பது பெரிய விடமல்ல. ஆனால் வீண் வேலை. 🙂

                      ///I have been reading his blog since few months. I found it informative in many aspects. Only problem with him is that when it comes to Muhamadan subjects his logical senses go hay-wire, little more than that of Vinavu’s.//

            • //சோசலிசப் புரட்சியன்றி அங்கே தீர்வு சாத்தியமல்ல என்று பாலஸ்தீன இடதுசாரிகளே புரிந்துவைத்திருக்கிற பொழுது///

              உயர் திரு தென்றல் அவர்களின் மேலேயுள்ள அவரது கருத்தை அவர் மேலும் விவரித்தார் என்றால் சோசலிசம் கம்யூனிசம் பற்றி எல்லாம் தெரியாத என்னைப் போன்றவர்களும் அவரது கருத்துக்களைப் புரிந்து கொள்ள முடியும். பலஸ்தீனத்தில் இடது சாரிகள் என்றால் யார், பாலத்தீன விடுதலை இயக்கமா, அல்லது ஹமாசா அல்லது சாதாரண பாலஸ்தீனிய முஸ்லீம்களா? சோசலிசத்துக்கும் கம்யூனிசத்துக்கும் பெரிய வேறுபாடிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அத்துடன் முஸ்லீம்கள் கம்யூனிஸ்டுக்களாக இருக்க முடியாதென்பது என்னுடைய முஸ்லீம் நண்பர் ஒருவரது கருத்து.

              • முஸ்லிம்கள் கம்யூனிஸ்டுகளாக இருக்க முடியாது என்று கருதும் அறிவாளிகளுக்கு(?)

                Hashtnagar | A revolutionary struggle forgotten-Documentary
                http://www.dailymotion.com/video/x19i65t_hashtnagar-a-song-of-another-world_shortfilms
                http://redtribution.wordpress.com/2008/01/06/hashtnagar-a-revolutionary-struggle-forgotten/

                • நான் உங்களுக்கு ஏன் முஸ்லீம்கள் கம்யூனிஸ்டுகளாக இருக்க முடியாது என்பதற்கு ஆதாரத்துடன் எழுதிய பதிலை வினவு வெளியிடவில்லை. தமிழர்களின் கருத்துகள் அனைத்தையும், இனம், மத, கொள்கைச் சார்பற்று வெளியிடக் கூடியதொரு நடுநிலையான இணையத்தளம் தேவை.

              • // அவரது இலங்கையைப் பற்றிய ஆதாரமற்ற அரைப்பக்கப் பதிவுகளுக்கு மட்டுமல்ல, ஏனைய பல அரைவேக்காட்டுக் கருத்துக்களுக்கும் மறுப்புத் தெரிவிப்பது பெரிய விடமல்ல. ஆனால் வீண் வேலை //

                ஆடத் தெரியாதவள் தெருக்கோணல் என்றாளாம் !

                • பகத் யாரை மனதில் வைத்து சொல்கீன்றிர்கள்…….என்று ?

                  ஆமாம் எந்த ஊர் நாட்டிய மங்கை நடனம் ஆடும் போது தெருக்கோணல் என்று கூறி சென்றார்கள் என்பதற்கு வரலாற்றில் , தமிழ் இலக்கியத்தில் ஆதாரம் எதேனும் உம்மிடம் உண்டா ?கம்யூனிஸ்ட் என்று நீர் உம்மை கூறிகொண்டால் மட்டும் போதாது. முதலில் வினவு போன்ற முற்போக்கு கருத்தியலை முன்வைக்கும் தளங்களில் பேசும் கம்யூனிஸ்ட் என்று கூறிகொள்ளும் உம்மை போன்றவர்கள் சிறந்த முறையில் இது போன்ற தவறான கருத்துகளை எதீர்த்து போராட வேண்டும். ஆனால் நீர்…… ?

                  வினவு இக்கருத்தை வெளியீடுமா ?

                  • vinavu,

                    நிலபிர்புதுவ சமுகத்தின் பிற்போக்கு வார்த்தை பயன்பாடான “இதனை” கமுநிஸ்ட் என்று கூறி கொள்ளும் பகத் பயன் படுத்துவது அவருக்கே வெட்கமாக இல்லையா என்று கேள்வி எழுப்பி இருந்தேன். வினவு அதனை முழுங்கீ ஏப்பம் விட்டு விட்டது.

                    மேல் உள்ள என் கருத்தை வெளிஈடு செய்யாமல் இருக்கும் வினவுக்கு வரும் கோபத்துக்கு காரணம் என்னவோ ?

                    • என் போராட்டத்துக்கு பின் எம் கருத்தை முழுமையாக வெளீயீட்ட வினவுக்கு நன்றி

      • யுனிவர்பட்டிக்கு கொஞ்சமாவது அறிவு நாணயம் இருந்தால் \\All of them are not taken at the day and time of the incident.// என்று எதை வைத்து சொல்கிறார் என விளக்க வேண்டும்.வெறும் கற்பனைகள் விவாதம் ஆகா.

        \\Probably they captured the incident in video too, but it was not revealed for apparent reasons.//

        எதிராளி கொடுக்கும் ஆதாரங்களை ஒரு பார்வையாவது பார்த்து விட்டு எதிர்வாதம் எழுதினால் இந்த மாதிரியான கூமுட்டை யோசனை எல்லாம் வராது.ஏற்கனவே நான் கொடுத்திருக்கும் டெலிகிராப் சுட்டியில் காட்சி ஒளிப்பதிவு உள்ளது.

        http://www.telegraph.co.uk/news/worldnews/9504256/Rachel-Corrie-death-eyewitness-attacks-Israeli-verdict-as-implausible.html

        \\எல்லா நாட்களும் அவரேதான் ஒலிபெருக்கியுடன் இருந்தாரா. //

        மதவெறியர்களும் பாசிசவாதிகளின் ஆதரவாளர்களும் முட்டாள்கள் என்பதற்கு இதுவே சான்று.மற்ற நாட்களில் வேறு வேறு நபர்கள் ஒலிபெருக்கியுடன் இருந்தார்கள் என்று வைத்துக் கொண்டால் விவாதத்தில் இருக்கும் இரண்டு படங்களிலும் ரச்சேல் ஒலிபெருக்கியுடன் இருப்பதால் அவை இரண்டும் ஒரே நாளில் எடுக்கப்பட்டவை என்று உறுதியாகிறது.இப்படி தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொள்ளும் யுனி தனது உளறலின் அபத்தத்தை உணரட்டும்.

        \\வண்டியை கொலை செய்யும் நோக்கத்தில் ஒட்டினாலும் அது மெதுவாகத்தான் நகரும். திடீரென்று திரும்பியும் அது பக்கவாட்டில் நிற்பவர்களை இடித்து விடாது.இரண்டு படங்களிலும் அவர் வண்டியின் பாதையில் இல்லை. ஒரு ரோடு ரோலரின் முன் ஒரு மூதாட்டி நடக்கும் சத்யராஜ் படம் தான் நினைவுக்கு வருகிறது.//

        என்ன அறிவு,என்ன அறிவு,அறிவாளியே ,பதிவோ ,அல்லது நானோ தப்பிச்செல்லும் ரச்சேலை துரத்தி துரத்தி கொன்றார்கள் என்று சொல்லவில்லை.விடாப்பிடியாக மறித்து நின்றால் கொன்று விடுவது என்ற நோக்கத்தில்தான் வண்டி ஒட்டப்பட்டிருக்கிறது. கவனத்தை ஈர்க்கும் பளபளக்கும் வண்ண ஆடை அணிந்து ஒலி பெருக்கி மூலம் குரல் எழுப்பும் ரச்சேலை ஓட்டுநர் பார்க்காமல் இருந்திருக்க முடியாது.அதனால்தான் இதை கொலை என்கிறோம்.

        \\இரண்டு படங்களிலும் அவர் வண்டியின் பாதையில் இல்லை. //

        முதல் படத்தில் மட்டுமே பக்கவாட்டில் நிற்கிறார்.இரண்டாவது படத்தில் வண்டிக்கு நேர் எதிரில் நிற்கிறார்.மூன்றாவது நான்காவது படங்களில் பாதையில்தான் நிற்கிறார்.

        \\ராச்சலை வண்டி நெருங்கும் போதோ, இடிக்கும் போதோ, தள்ளும் போதோ, ஏன் ஒரு போட்டோவும் இல்லை? //

        இதற்கு கடுமையான சொற்களை பயன்படுத்திதான் விடையளிக்க வேண்டும்.மன்னிக்க வேண்டும் யுனி அல்ல.படிக்கும் வாசகர்கள்.ஏனெனில் அந்த அளவுக்கு திமிரும் வக்கிரமும் முட்டாள்தனமும் கொப்பளிக்கிறது இந்த எழுத்துக்களில்.

        ஏய்யா லூசாய்யா நீரெல்லாம்.குருதியும் சதையுமாக உயிரோடு நிற்கும் ஒரு பொண்ணை, தன்னோட சக போராளியை புல்டோசரை வைத்து இடிச்சு சாவடிக்கும்போது ரச்சேலின் தோழர்கள் அவரை காப்பாற்ற முனைவார்களா.அதை போட்டோ புடிப்பார்களா.உம்மை போன்ற கிறுக்கன்கள் வேண்டுமானால் போட்டோ புடிக்கலாம்.அல்லது இந்த போராட்டம் என்ன புகைப்படக்காரர்களை கையோடு அழைத்துக் கொண்டு வந்து இந்திய அரசியல்வாதிகள் நடத்தும் சம்பிரதாய சடங்குதனமான போராட்டமா.என்னய்யா மனுசன் நீரெல்லாம்.போய் மூளையை பினாயில் போட்டு கழுவுங்கய்யா.

        \\என்ன நடந்திருக்கும் என்றால். குழு நாளுக்கு நாள் தங்கள் இடையூற்றை மேலும் மேலும் அபாயகரமாக செய்து கொண்டிருந்திருக்க வேண்டும்.//

        மீண்டும் மீண்டும் வக்கிரம்.ஏழை பாலஸ்தீன மக்களின் வீடுகளை இடிக்காதே என உயிரை பணயம் வைத்து போராடுவது இவருக்கு ”இடையூறாம்”.சிவ கார்த்திகேயன் அழகாக சொல்லி இருக்கிறார்.ரச்சேலும் அவர் தோழர்களும் காசு பணத்துக்கு ஆசைப்பட்டா காசா வுக்கு வந்து போராடினார்கள்.இடையூறாம் இடையூறு .போய் வாயை கழுவுமய்யா.

        \\அதே சமயம் சரியான சமயத்தில் சிறிது விலகி தப்பித்திருக்கவேண்டும்.//

        கோழைகள் விலகி தப்பி இருப்பார்கள்.இல்லை இல்லை கோழைகள் அந்த மாதிரியான போராட்டங்கள் நடக்கும் திசையில் தலை வைத்து கூட படுக்க மாட்டார்கள்.ரச்சேல் ஈகை போராளியாக தன்னுயிரை தியாகம் செய்திருக்கிறார்.இதைத்தான் கட்டுரை அழகாக இப்படி சொல்கிறது.

        பாசிஸ்டுகளை எடை போடத் தெரியாத அந்தப் பெண்ணின் வெகுளித்தனம் நம்மைக் கண்கலங்கச் செய்கிறது. வெள்ளைத் தோலானாலும், அமெரிக்கக் குடிமகனானாலும் தனது ஆதிக்கத்தை எதிர்த்து நிற்போர் யாரையும் பாசிஸ்டுகள் விட்டு வைப்பதில்லை என்ற உண்மை புரியும் தருணத்தில், புல்டோசரின் கொலைக்கரங்கள் அவளை நெருங்கிய அந்தத் தருணத்தில் ரச்சேல் ஓடவில்லை. மரணத்தின் தறுவாயில் தான் உணர்ந்து கொண்ட உண்மையை அமெரிக்க மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளட்டும் என்பதற்காக அவள் உயிர் விட்டாள்.

        \\ஆனால், துரதிர்ஷ்ட வசமாக ராச்சல் தடுக்கி விழந்து மண்தள்ளியில் மாட்டியிருக்க வேண்டும். //

        முக்காலமும் உணர்ந்த முனிவரா யுனி.ரச்சேலுக்கு கால் தடுக்கியதை இங்கேர்ந்தே பாத்து சொல்லிட்டாரே.

        \\இந்த மண்தள்ளியின் முன் இருப்பவர் நிற்கிறாரா இல்லை நகர்கிறாரா இல்லை கீழே விழுந்துவிட்டாரா என்று ஒட்டுநரால் பார்க்க முடியாது.//

        அதாவது முன்னாடி ஆள் இருப்பது தெரிந்திருக்கும்.ஆனால் அவர் நிற்கிறாரா இல்லை நகர்கிறாரா இல்லை கீழே விழுந்துவிட்டாரா என்று ஒட்டுநரால் பார்க்க முடியாது என்கிறார்.அப்படின்னா முன் இருப்பவர் அங்கேயே நிக்கிறாரா நகர்ந்துட்டாரா என்பதை பற்றி கவலை படாமல் வண்டியை ஒட்டி இருக்கிறான் என்றாகிறது.அதனால்தான் இதை கொலை என்கிறோம்.

        • திப்பு,

          I have already told you that your logical senses work fairly well when discussing kafir subjects but go OFF when dealing with Muhamadan subjects. So, it is futile to prolong our discussion. I will make it as brief as possible.

          //டெலிகிராப் சுட்டியில் காட்சி ஒளிப்பதிவு உள்ளது.//

          I just saw it. You call it video proof? இதற்கு கடுமையான சொற்களை பயன்படுத்திதான் விடையளிக்க வேண்டும். Only you Muhamadans are capable of calling it as video proof.

          // விடாப்பிடியாக மறித்து நின்றால் கொன்று விடுவது என்ற நோக்கத்தில்தான்//

          If it is the aim, the incident could have occurred on second day, if not first. I know some people are capable of such cruelty. I don’t want to use the name here. We know what happens in Muhamadans countries to people protesting against the governments.

          //***சக போராளியை புல்டோசரை வைத்து இடிச்சு சாவடிக்கும்போது ரச்சேலின் தோழர்கள் அவரை காப்பாற்ற முனைவார்களா.அதை போட்டோ புடிப்பார்களா//

          Then why she was not saved? They did not do it, because, it was unexpected. They knew how far they can go. It is not as you say, //புல்டோசரின் கொலைக்கரங்கள் அவளை நெருங்கிய அந்தத் தருணத்தில் ரச்சேல் ஓடவில்லை.//

          //அதாவது முன்னாடி ஆள் இருப்பது தெரிந்திருக்கும். ஆனால் அவர் நிற்கிறாரா இல்லை***//

          The bucket of bulldozer is 7-8 feet tall. Even the tallest man won’t be visible to the person at the control. Please see the photo closely.

          //அப்படின்னா முன் இருப்பவர் அங்கேயே நிக்கிறாரா நகர்ந்துட்டாரா என்பதை பற்றி கவலை படாமல் வண்டியை ஒட்டி இருக்கிறான்//

          The soldier driving that bulldozer was doing his ‘work’. He was being careful for so many days. If he wanted to avoid any accident, the only option for him was to desert his military assignment and attract court-martial. But I think he knew the importance of his ‘work’ and that someone has to do and that there are not many people in his country. He did what he has to ‘do’.

          With this I am closing my arguments on the issue of Rachel, the brave and naïve girl.

          • \\With this I am closing my arguments //

            சரிதான்.நரி இடம் போனால் என்ன,வலம் போனால் என்ன,மேல உழுந்து புடுங்காம போனா சரிதான்.எனக்கும் யுனியின் பொருளற்ற விதண்டாவாதங்களுக்கு மறுமொழி எழுதிக்கொண்டிருக்க விருப்பமில்லை.முதலில் விடியோ எடுத்திருப்பார்கள்.அதை ஏன் வெளியிடவில்லை என அறிவான கேள்வி ஒன்றை கேட்டார்.அதை வெளியிட்டால் ரச்சேல் கொல்லப்பட்டது விபத்து என தெரிந்து விடும் என்ற பொருள்பட \\Probably they captured the incident in video too, but it was not revealed for apparent reasons.// என்று பிதற்றினார்.விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினால் அது குறித்து ஒரு வரி கூட விளக்கம் சொல்லாமல் இதெல்லாம் ஒரு ஆதாரமா என்று ”என்ன கையப்புடுச்சு இழுத்தியா” வடிவேலு மாதிரி கேட்கிறார்.

            \\ If it is the aim, the incident could have occurred on second day if not first.//

            ரச்சேல் இடத்தில் ஒரு பாலஸ்தீன ஆணோ பெண்ணோ இருந்திருந்தால் அப்படி ஓரிரு நாட்களில் போட்டு தள்ளியிருப்பார்கள்.ஒரு அமெரிக்க குடிமகனை அவ்வளவு எளிதில் கொல்ல முடியுமா.,அதன் பின்விளைவுகளையும் அவற்றை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளையும் யோசித்து செய்திருக்கிறார்கள்.அதனால்தான் இந்த தாமதம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

            \\Then why she was not saved? They did not do it, because, it was unexpected. They knew how far they can go. It is not as you say, //

            ஆம்,ரச்சேல் கொல்லப்படுவார் என அவரது சக தோழர்கள் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.ஆனால் புல்டோசரால் மோதி தள்ளப்படும்போது அனிச்சை செயலாக காப்பாற்றும் எண்ணத்தில் அவரை நோக்கித்தான் ஓடியிருப்பார்கள்.யுனி போன்ற வக்கிர மனம் படைத்தோர் பத்து ஆண்டுகளுக்கு பிறகு மோதியதை ஏன் போட்டோ புடிக்கல என கேட்பார்களே என்று அஞ்சி போட்டோ எடுத்துக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள்.

            \\The bucket of bulldozer is 7-8 feet tall. Even the tallest man won’t be visible to the person at the control. Please see the photo closely.//

            பளபளக்கும் வண்ண ஆடை,ஒலி பெருக்கி காரணமாக புல்டோசர் தொலைவில் வரும்போதே ஓட்டுனர் ரச்சேலை பார்த்திருப்பார் என்பதுதான் எனது வாதம்.மறியல் செய்யும் நபர் பாதையை விட்டு விலகி விட்டாரா என்பதை உறுதிப்படுத்தாமல் தொடர்ந்து ஓட்டி வந்திருக்கிறான் அந்த கொலைகாரன்.அதற்கு என்ன பொருள்.விடாப்பிடியா மறித்து நின்றால் சாவட்டும் என்று தொடர்ந்து ஓட்டி வந்திருக்கிறான் .யுனியோ எட்டடி மண்தள்ளி ரச்சேலை மறைத்து இருக்கும் என்று நமது காதுல பூ வைக்கிறாரு.

            \\The soldier driving that bulldozer was doing his ‘work’………….attract court-martial. ……..what he has to ‘do’.//

            இந்த பூச்சாண்டியெல்லாம் எடுபடாது.ஒரு மாதமாக வீடுகளை இடிக்க விடாமல் ரச்சேல் குழுவினர் இசுரேல் இராணுவ வீரர்களை தடுத்து திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.அப்போதெல்லாம் கொடுத்த assignment ஐ செய்யவில்லை என court-martial.அவர்கள் மீது பாயவில்லையே .

            \\ I have already told you that your logical senses…………..Muhamadan subjects.//

            எதற்காக யுனி இதை சொன்னார்.சில நாட்களுக்கு முன்பு என்னை பொய்யன் என்று அபாண்டமாக குற்றம் சாட்டினார்.பழைய விவாதங்களின் சுட்டிகளை தந்து அவர் சொல்வதுதான் பொய் என நிரூபித்த போது இதனை சொன்னார்.ஒரு மனிதன் மீது அபாண்டமாக அவதூறு சொன்னோமே என்று குற்ற உணர்வு ஏதுமின்றி சுட்டிகள் தந்ததுக்கு ”நன்றி”சொல்லிட்டு logical sense பத்தி பேசுனாரு.வெட்கம் கெட்டுப்போய் அதையே மறுபடியும் சொல்லிட்டுருக்காரு.

  11. ஜிசியா வரி என்பது மிக சரியான ஒன்று. i இஸ்லாமிய நாட்டில் வாழும் மாற்று மதத்தினர் களுக்கு சகாத் எனும் சொத்து வரி கிடையாது. ஜிசியா எனும் இவ்வரியை செலுத்திவிட்டு தங்கள் மதத்தை சுதந்திரமாக பின்பற்றலாம். இவ்வரி அம்மக்களையும் அவரது உடமைகளையும் இஸ்லாமிய அரசு பாதுகாப்பதற்காக உள்ள சேவை வரி போன்றது. இது அம்மக்களை கொடுமை படுத்த அல்ல. ஒருவேளை அம்மக்கள் நேர்வழி பெற்றால் அதாவது இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றினால் இவ்வரியில் இருந்து விலக்கு உள்ளது, இவ் வரியை செலுத்த தவறினால் மரண தண்டனை உண்டு.

    இஸ்லாமிய மக்களுக்கு உள்ள சட்டம் அவர்கள் தங்கள் சொத்துகளுக்கு வரியாக சகாத் செலுத்தவேண்டும். இவ் வரியை முஸ்லீம்கள் செலுத்த தவறினால் மரண தண்டனை உண்டு. மேலும் இஸ்லாத்தை விட்டு வெளியேறினாலும் மரண தண்டனை உண்டு.

    ஜிசியா வரி சகாத் வரியை விட மிக குறைவே ஆகும். இப்போது புரிகிறதா இஸ்லாத்தின் நடுநிலை.

    • எனக்குத் தெரிந்து எந்த ஒரு இஸ்லாமிய அரசும் ஜகாத் வரி வசூலிப்பதில்லை. அது ஒவ்வொரு இஸ்லாமியரும் தானே முன் வந்து ஏழைகளுக்குக் கொடுக்கும் தானம். வருடத்தின் மற்ற மாதங்களில் கொடுக்காதவர்கள் கூட மற்றமுக்கியமாக ரமதான் மாதத்தில் கொடுக்கிறார்கள்.
      ஆனால் ஜசியா வரி அமலில் இருக்கும் இடங்களில் அரசாங்கமோ ISIL போன்ற அமைப்போ வசூலிக்கிறது.

  12. நண்பர் மூமின் அவர்களே,

    சற்று யோசித்து பாருங்கள். இதே போன்ற ஒரு சட்டத்தை மற்ற நாட்டினர் இசுலாமியர் மேல் சூட்டி அதனை சரிவர செலுத்தாவிட்டால் மரண தண்டனை விதித்தால் அதை இசுலாமிய மக்கள் ஒத்துக்கொள்வார்களா?

    • பாமரன் உங்களிடம் ஒரு பகிர்தல். பாலஸ்தீனப் பிரச்சனை மதம் சம்பந்தப்பட்டது எனில் எதற்காக சவூதி அரேபியா இசுரேலின் நண்பனாக நடந்துகொண்டு காசா முசுலீம்களை கொல்வதை அனுமதிக்க வேண்டும்? ஈழத்தில் இந்தியா நடந்துகொண்டதைப் போல (இந்துக்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன்) சவுதி காசா மீது நடந்துகொள்வது, ஆதிக்க நாடு தன் சொந்த பொருளாதார நலன்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான் என்பது தானே நிரூபணமாகிறது? இதில் மதம் எங்கிருந்து வந்தது? பணக்கார இசுலாமியர்கள் ஏழை இசுலாமியர்களை கண்டு கொள்வதில்லை என்ற உண்மை இந்துக்கள் விசயத்திலும் அப்படியே பொருந்துகிறது இல்லையா? பிறகு எதற்காக மதம் என்று கூப்பாடு போட வேண்டும்? சவுதிபோன்ற மேல்தட்டுவர்க்க பொறுக்கிகளின் அராஜகவாதமும் பொறுக்கித்தின்னும் பிழைப்புவாதமும் காசா பிரச்சனையில் மிகத் தெளிவாக தெரிகிற பொழுது இது மதம் சார்ந்த சண்டை என்று எத்துணைகாலத்திற்கு பிரச்சனையை திசை திருப்ப இயலும்?

      • உயர்திரு.தென்றல் அவர்களுக்கு….

        வினவு மற்றும் தங்களின் பணி மிகச் சிறப்பான ஒன்று. இந்துத்துவம் என்னும் நஞ்சையும் அதை தாங்கி பிடித்து வரும் ஆர்.எஸ்.எஸ் என்னும் கொடிய விஷ நாகத்தையும் ம.க.இ.க போன்ற உண்மையான புரட்சிகர அமைப்புகளால் மட்டுமே ஒழித்து கட்ட முடியும். மதத்திற்கு எதிரான முரணப்பாடுகள் அதனுள்ளேயே இருக்கின்றன என்னும் மார்க்சின் போதனையை இப்போது புரிந்து கொண்டேன். மார்க்சியமே மிகச் சிறந்த கொள்கை. ஸ்டாலினியமே மிகச் சிறந்த நடைமுறை கொள்கை. இதை உணர்ச்சி வயபடாமல் தெளிவாக சிந்தித்து தான் கூறுகிறேன். முன்பு நான் எதாவது தவறுதலாக பேசி இருந்தால் என்னை மன்னிக்கவும். தங்களுக்கு எப்போதும் என்னுடைய ஆதரவுகள் இருக்கும். நன்றி…

        • தாயுமானவன் அவர்களுக்கு,

          குழாயடிச் சண்டை நடந்துகொண்டிருக்கிற வேளையில் உங்கள் பின்னூட்டத்தை கவனிக்கத் தவறிவிட்டேன். உங்களை மதிப்பிடுவது என் நோக்கம் இல்லையென்றாலும் ஆர் எஸ் எஸ் கொடிய நஞ்சு என்று எப்படித் தெரிந்துகொண்டீர்கள் என்பதை விளக்கினால் நானும் பிறவாசகர்களும் பயன்பெறுவோம். முன்னொருமுறை ஏதோ ஒரு இணைய தளத்தில் சண்டையிட்டதாக சொல்லியிருந்தீர்கள். அதன் நீட்சியா இது?

          மக்களின் வழிப்பாட்டு முறைகள் எவ்விதம் அரசாலும் மதஅடிப்படைவாதிகளான பிஜே ஆர் எஸ் எஸ்ஸாலும் கடுமையாக ஒடுக்கப்படுகின்றன என்பதை ஆய்வு செய்யுங்கள். பள்ளிக்கல்வியில் மாவட்ட அளவில் தேர்ச்சிபெற்றவர் தாங்கள் என்று கருதுகிறேன். ஆகையால் புத்தகங்கள் தத்துவங்கள் கரைத்து குடிப்பது கடினம் அல்ல. சமகாலங்களில் நடைபெறுகிற மக்கள் சார் போராட்டங்கள் குறித்த உங்கள் பார்வை என்ன? என்பது குறித்து எழுதுங்கள்.

      • தோழர் தென்றல்,

        //இது மதம் சார்ந்த சண்டை என்று எத்துணைகாலத்திற்கு பிரச்சனையை திசை திருப்ப இயலும்?//

        முகமதிய விசயத்தில் இதைக் கூறும் நீங்கள் தான் ‘mao’ விடம் மதத்தின் பங்கை அதை அம்பலப்படுத்த வேண்டிய தேவையை நீண்ட பின்னூட்டமிட்டு விளக்கியிருந்தீர்கள்.

        As for your question of why Arabia is mute, they are not mute. But, no muhamadan country can afford to wage war on Israel, for the time being. All they can do is proxy wars, using Hamas, etc.

        Jew hate is in quran. Quran means nothing to us unbelievers, but not to believers. This is where you go wrong. Probably you have spent all your extra time in learning about Paarpaniyam, Saivam, etc.

  13. மத துவேச விஷம் கக்கும் உநிவேர்புட்டி ,

    உம் போன்ற மனிதனுக்கு மூளை இருந்தால் மட்டும் போதாதது. நல்ல மனசும் இருக்க வேண்டும். காசா முனை யார் பூமி. இஸ்ரேலுக்கு சொந்தமானதா ? பாலஸ்தினியனுக்கு சொந்தமானதா ?அது யார் வாழும் பூமி ? யுதனா ? பாலஸ்தினியனா ? ஒருவேளை __________ எனில் , வாழும் வீட்டை சிங்களவனின் தேவைக்காக அவனை புல்டோசர் கொண்டு இடிக்க விடுவாயா?. உம் வாயில் இருந்து வருவது எல்லாம் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான புழு பூத்த நாற்றம் எடுக்கும் விச தன்னை உள்ள வார்த்தைகள். ஏன் கிருஸ்துவ அமெரிக்கா ஈராக்கில் இலட்ச கணக்கான குழந்தைகளை பட்டினி போட்டு கொன்றது ? இதில் எல்லாம் கிருஸ்துவ மதத்துக்கு எதிரான ஆய்வை மேற்கொள்ள வேண்டியது தானே ?

    இதை செய்ய விடாமல் உம்மை தடுப்பவது எது ?

    கிறிஸ்டியன் மேட்டுகுடி அடிப்படைவாதமா ?

    அமெரிக்க என்ஜிவோ மூலம் பெறும் கைகூலி பணமா ?

    என்ன அரவிந்தின் நீலகண்ட கோஷ்டியா?

    என்ன அமெரிக்க அடியாள் இஸ்ரேலின் அடிவருடியா ?

    நான் உன்னை குற்றம் காண்பதுடன் மட்டும் போதாது ,உமக்கு இடம் அளிக்கும் வினவையும் தான் குற்றம் காண வேண்டும். இவனின் மத துவேச கருத்துகள் எளீய மதம் சார் மக்களை எப்படி பாதிக்கும் என்பதை வினவு உணர வேண்டும்.வினவின் நோக்கம் எளீய மதம் சார் மக்களையும் வர்கம் அடிப்படையில் இணைப்பது தான் என்னும் போது மத துவேச கருத்துகள் ம க இ க வின் நோக்கத்தை நிறைவேறுமா அல்லது சிதைக்குமா என்பதை வினவு தோழர்கள் யோசிக்க வேண்டும்.

    //That bulldozer was demolishing the houses located at/near the border from whom Muhamadans were tunneling into Israel for carrying out terrorist activities. So, for the safety of Israel, those houses had to be demolished. I hope they were given a just compensation.//

    • Saravanan,

      நான் எழுதுவது மத துவேச விஷமல்ல. மதமே விஷம்தான் என்று புரிய வைப்பதற்காக. குறிப்பாக உழைக்கும் வர்க்கம்.

      உணர்ச்சி வசப்படாமல் எனது கருத்துக்களில் என்ன தவறு என்ற கூறுங்கள். ஒன்று கூறுங்கள். நாம் விவாதிக்க ஏதுவாக இருக்கும.

      • உநிவேர்புட்டி ,

        நீர் உண்மையில் மனிதன் தானா ? இல்லை IBM அமெரிக்கா சார்பாக வடிவமைத்த Artificial Intelligence [AI] supported computer system ஆ ?

        வைக்க பட்ட கேள்விகளை உம் ” Algorithmic design fault” காரணமாக கண்டும் காணாமலும் இது வரை சென்று விட்டு இப்போது நல்ல பிள்ளை போல வாங்க விவாதீக்கலாம் என்று கூறுவது உமக்கே வெட்கமாக இல்லை ????சரி மீண்டும் கேள்விகளை வைக்கின்றேன்.

        [1]நீர் இஸ்லாமியர்களை மட்டும் நோண்டி நோண்டி குறை கூரும் நோக்கம் என்ன ? மற்ற மதங்களை[ஹிந்து ,கிறிஸ்டியன் ] பற்றி வாய் தீரக்காத மர்மம் என்ன ? மற்ற மதங்களில் தவறே இல்லையா ?கிறிஸ்டியன் மதவாத தவறுகளை நீர் தட்டி கேட்டதற்கு ஆதாரமாக ஒரு, .ஒரேஒரு உன் பீன்னுட்டத்தை காட்டவும்

        [2]காசா முனை யார் பூமி. இஸ்ரேலுக்கு சொந்தமானதா ? பாலஸ்தினியனுக்கு சொந்தமானதா ?அது யார் வாழும் பூமி ? யுதனா ? பாலஸ்தினியனா ?

        [3]நீர் வாழும் வீட்டை சிங்களவனின் தேவைக்காக அவனை புல்டோசர் கொண்டு இடிக்க விடுவாயா?.

        [4]உம் வாயில் இருந்து வருவது எல்லாம் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான புழு பூத்த நாற்றம் எடுக்கும் விச தன்னை உள்ள வார்த்தைகள். ஏன் கிருஸ்துவ அமெரிக்கா ஈராக்கில் இலட்ச கணக்கான குழந்தைகளை பட்டினி போட்டு கொன்றது ? இதில் எல்லாம் கிருஸ்துவ மதத்துக்கு எதிரான ஆய்வை மேற்கொள்ள வேண்டியது தானே ?

        [5]இதை செய்ய விடாமல் உம்மை தடுப்பவது எது ? கிறிஸ்டியன் மேட்டுகுடி அடிப்படைவாதமா ?
        அமெரிக்க என்ஜிவோ மூலம் பெறும் கைகூலி பணமா ? நீர்என்ன அரவிந்தின் நீலகண்ட கோஷ்டியா? நீர் என்ன அமெரிக்க அடியாள் இஸ்ரேலின் அடிவருடியா ?

  14. Saravanan,

    //எளீய மதம் சார் மக்களையும் வர்கம் அடிப்படையில் இணைப்பது தான் என்னும் போது மத துவேச கருத்துகள் ம க இ க வின் நோக்கத்தை நிறைவேறுமா அல்லது சிதைக்குமா //

    If vinavu has not written about Rachel, we would not be speaking about bulldozer or tunnels, etc.

    Please READ the comment 12 of muslimmoomin and tell me what you think of it.

  15. உநிவேர்புட்டி ,

    //If vinavu has not written about Rachel, we would not be speaking about bulldozer or tunnels, etc.//

    ரச்சேல் என்ற இளம் தளீரை,எம் தங்கையை சிதைத்த பாசிச இஸ்ரேலில் கொடுரங்களை ஆதரிக்கும் படி வினவு எழுதீய கட்டுரையீல் உம்மிடம் மட்டும் தனியாக கோரிக்கை வீடுத்ததா ?

    “இதிலிருந்து நாம் அரிந்து கொள்ள முடிவது என்னவென்றால், ஆரம்பத்தில் குழுவினரும் புல்டோசர் ஒட்டுநரும் மிகவும் கவனமாகத்தான் தங்கள் தங்கள் பணியை செய்திருக்கிறார்கள். போகப்போக இருதரப்பிலும் தங்கள் தங்கள் செயல்களை படிப்படியாக தீவிரப்படுத்தியும் அதே சமயம் சிறிது மெத்தனத்தோடும் செய்திருக்க வாய்ப்புகள் உள்ளன. ராச்சலின் தோழர்கள் பல பக்கங்களில் நின்று கொண்டு புல்டோசர் ஒட்டுநரின் கவனத்தை சிதறடித்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. நடந்து ஒரு விபத்துதான். ”

    இதை கூறிய நயவஞ்சக மூளை யாருடையது ? உம்முடையது தானே ?

    நீர் கூறும் ….

    “அந்த விபத்து அன்று நடந்திருக்காவிட்டாலும் அடுத்த நாள் நடக்க வாய்ப்பு இருந்திருக்கிறது. அந்த விபத்து நடந்ததிலிருந்து இது போன்ற எதிர் கொள்ளல் இரு தரப்பிலிருந்தும் தவிர்க்கப் பட்டுவிட்டது என்றே கூற முடியும்.”

    இந்த செய்தி மூலம் நீர் கூற வருவது என்ன ?

    ரச்சேலை பாசிச இஸ்ரேல் புல்டோசர் ஏற்றி கொன்றதன் மூலம் இஸ்ரேலுக்கு எதிராகஅமெரிக்கா ,UK மனிதஉரிமையாலர்க்ளீன் எதிர்ப்பு முற்றும் முறீயடீக்கப்ட்டது என்பது தானே ? அது தானே உமது விருப்பம் ? அமெரிக்க அடியால் இஸ்ரேலுக்கு நீர் சொம்பு தூக்குவது , ஜால்ரா அடிப்பது, ஏன் ?

    //Please READ the comment 12 of muslimmoomin and tell me what you think of it.//

    உம்மை போன்றே மத வெறியர்கள்[muslimmoomin] உள்ளார்கள் என்பதும், அவர்களை கம்யுனிசத்தை ஏற்காத ஆனால் ஜனநாயக சக்திகள் மணவை சிவா,கற்றது கையளவு போன்றவர்கள் எதிர்கின்றார்கள் என்பது தான் அர்த்தம்.

    ரச்சேலை பாசிச இஸ்ரேல் புல்டோசர் ஏற்றி கொன்றதை ஆதரிக்கும் உமக்கும் ஜிசியா வரி ஆதரிக்கும் muslimmoomin க்கும் என்ன வேறுபாடு உள்ளது ?நீர் யூத வெறியர்கள் புல்டோசர் ஏற்றி கொன்றதை ஆதரிக்கின்றாய். muslimmoomin இஸ்லாமிய மத அடிப்படை வாதத்துடன் மாற்று மதத்தவருக்கு ஜிசியா வரி விதீப்படை ஆதரிக்கின்றான். உங்கள் இருவருக்குள் என்ன வேறுபாடு ?

    • Saravanan,

      I don’t have as much time as you do. If you ask just one question in relation to my opinions, I will try to answer in relation to Rachel’s issue. Otherwise, you have to keep sheding your hair alone, which is not good for you or Vinavu or anyone else.

      • உநிவேர்புட்டி ,

        உம்முடன் விவாதீப்பது எனபது சுவற்றுடன் தலையை முட்டிகொள்வதற்க்கு சமம் என்பது எமக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் கேட்கபட்ட கேள்விகள் அனைத்தும் உம்மை வினவு வாசகர்களீடம் அம்பல படுத்தி உம் வாயில் இருந்து வரும் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான புழு பூத்த நாற்றம் எடுக்கும் விசத்தை பற்றி எச்சரிக்கை செய்வதற்கு தான்.

  16. வினவு,

    ஈழம் மீதான விவாதம் வினவுக்கு

    பொருந்தா பின்னுட்ட வலியை கொடுக்கும் போது

    உனிவேர்புட்டியீன் கீழ்[ன] கருத்து ,

    மனிதம் மீது செலுத்த படும் வனம தாக்குதல் என்தால்

    எமக்கும் தீரா சகோதரத்துவ வலி கொடுக்கின்றது.

    வினவு கவனிக்குமா ? இல்லை தடம் புரலுமா ?

    //Feedback 11.3.1.2.1.1.1.2.1.1 by Univerbuddy:”நான் முகமதியத்தை வெறுக்கிறேன். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. மக்கள் என்று வரும் பொழுது முகமதியத்தைப் பின்பற்றுபவர்களை முஸ்லிம் என்றழைக்காமல் முகமதியர்கள் என்றழைக்கிறேன். இதனடிப்படையில், பாலஸ்தீன பிரச்சினையில், ‘முகமதியர்கள்’ ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.”//

  17. Contnd..from: 11.3.1.2.1.1.1.2.1

    தோழர் தென்றல் அவர்கள் அவரது தோழர் கலையரசனை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார். அதனால் தோழர் தென்றலின் தோழர் கலையரசனின் கருத்துக்களிலுள்ள ஓட்டைகளைப் பார்ப்போம்.

    1. காஸாவில் கொல்லப்பட்ட பெரும்பான்மை அரபு மக்கள் முஸ்லிம்களாக இருந்த போதிலும், “ ஒரு “முஸ்லிம் நாடான” சவூதி அரேபியா அந்தப் படுகொலைகளை அங்கீகரித்துள்ளது.” என்பது மிகப் பெரிய குற்றச்சாட்டு, இதற்கு தகுந்த ஆதரங்களை வெளியிடாமல் இப்படிக் கருத்து தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. சவூதி அரேபியாவுக்கு வக்காலத்து வாங்குவதல்ல என்னுடைய நோக்கம். இஸ்ரேலிய போர்க்குற்றங்களையும், படுகொலைகளையும் சவூதி அரேபியா வெளிப்படையாக ஐக்கியநாடுகள் சபையிலும் வெளியிலும் பலமுறை கண்டித்துள்ளது என்பது தான் உண்மை.

    2. பொருளாதார நலன்களுக்காக சவூதி அரேபியா இஸ்ரேலை ஆதரிக்கிறது என்பதும் நகைப்புக்குரியது. பொருளாதாரத்தில் சவூதி அரேபியா எந்தவித இயற்கை வளமுமற்ற இஸ்ரேலில் தங்கியிருக்கவில்லை. இஸ்ரேலுடன் சவூதி அரேபியாவுக்குள்ள புரிந்துணர்வுக்குக் காரணம் “Enemy of My Enemy is My Friend” என்ற கொள்கை தானே தவிர, சவுதி அரேபியா பாலஸ்தீனர்களுக்கு எதிரானது என்று கருத்தல்ல. அணுவாயுதபலம் கொண்ட ஈரான் உருவாகுமேயானால், அதனால் இஸ்ரேலுக்கு மட்டுமல்ல, சவூதி அரேபியாவுக்கும் ஆபத்து என்பதை சவூதி அரேபியா உணர்வதால் தான் அவர்கள் இஸ்ரேலுடன் ஒத்துழைக்கிறார்களே தவிர, அதனால், அவர்கள் பாலஸ்தீனர்களுக்கு எதிரானவர்கள் அல்லது காசாவில் முஸ்லீம்கள் கொல்லப்படுவதை ஆதரிக்கிறார்கள் என்பதைப் போன்ற முட்டாள்தனம் வேறெதுவுமிருக்க முடியாது. உதாரணமாக, அமேரிக்கா, கனடா போன்ற நாடுகள் கூட விடுதலைப்புலிகள் அழிக்கப்படுவதை ஆதரித்தன, இலங்கை அரசுக்கு உதவின. அதனால் அமெரிக்காவும், கனடாவும் கூட, ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதை அங்கீகரித்தன என்று யாரும் வாதாடுவதில்லை. ஹமாசின் விடயத்தில் சவுதி அரேபியாவின் நிலைப்பாடும் அது போன்றது தான்.

    3. ஹமாசின் தீவிரவாதமும், இஸ்ரேல் என்ற நாடு இருப்பதைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாது பிடிவாதமும் தான் பாலஸ்தீனப் பிரச்சனை தீராமல் இருப்பதன் காரணமாகும். பாலஸ்தீனர்களுக்கென ஒரு நாடு அமைவதை பெரும்பாலான இஸ்ரேலியர்கள் எதிர்க்கவில்லை. ஆனால் இஸ்ரேல் என்ற நாடு இருப்பதை முதலில் அரபுக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.ஹமாஸ் அதை ஏற்றுக் கொள்ளாதவரை பிரச்சனை நீடிக்கும், அது தான் உண்மை. அதனால் அரபுநாடுகளின் அரசுகள் ஹமாஸை ஆயுதத்தைக் கீழே வைக்குமாறு வற்புறுத்த வேண்டும், அதாவது அந்தச் செயற்பாட்டில் சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு ராச்சியமும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும், அவர்களுக்கென ஒரு “பாத்திரம் – role” ஒதுக்கப்பட வேண்டுமென்பது தான் முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் Shaul Mofaz இன் கருத்தே தவிர, சவூதி அரேபியா ஹமாஸுடன் போரிட்டு அல்லது இஸ்ரேலுடன் இணைந்து ஹமாஸுடன் போரிட்டு, முஸ்லீம்களை (அரபுக்களைக்) கொல்ல வேண்டுமென்பதல்ல.

    4. உண்மையில் பாலஸ்தீன பிரச்சனை சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும். அவர்களுக்கென நாடு அமைய வேண்டும் என்பதில் முஸ்லீம் நாடுகள் எல்லாம் ஒருமித்த கருத்தைத் தான் கொண்டுள்ளன. ஈரான், சிரியா, துருக்கி என்று வரும் போது தான் தமது நாடுகளின் பாதுகாப்பைக் கருதி, அதன் காரணமாக, சவூதி அரேபியா, ஜோர்டான், ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளின் கருத்துக்கள் வேறுபடுகின்றன. உதாரணமாக விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை எதிர்த்த நாடுகள் கூட, ஈழத்தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தைத் தான் கொண்டிருந்தனர். அதனால் ஹமாசை எதிர்க்கும் நாடுகள் எல்லாம் பாலஸ்தீன மக்களுக்கு எதிரானவர்கள் என்பது போல் யாரும் கருத்துத் தெரிவிப்ப்பது முட்டாள்தனமானது.

    5. மத்திய கிழக்கில் சமாதானத்துக்கு இடைஞ்சலாக இருப்பது ஹமாசும் அதன் இஸ்ரேலிய எதிர்ப்பும் தான், அவர்கள் இல்லாத மத்திய கிழக்கு புதிய சமாதானத் திட்டம்” குறித்து ஆராய்வது பாலஸ்தீன மக்களுக்கு எதிரானது என்று கருத்துக் கூறுவது எந்த வகையில் நியாயமானது என்று எனக்குத் தெரியவில்லை.

    6. எனது எதிரியின் எதிரி எனது நண்பன் என்பது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். அதனால் சவூதி அரேபியா தனது பாதுகாப்புக் கருதி, இஸ்ரேலுடன் உறவை அல்லது புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதை ஹமாஸுக்கு எதிரானதாகக் கருதலாமே தவிர, பலஸ்தீனர்களுக்கோ அவர்களின் விடுதலைக்கோ எதிரானதாகக் கருத முடியாது.

    7. பாலஸ்தீனர்களின் அமைதிக்கு மட்டுமல்ல, உலக அமைதிக்கே சவாலாக இருக்கப் போகிறது ஈரான். அதனால் அந்த நாட்டுக்கெதிராக, சவூதி அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்குமிடையே புரிந்துணர்வு இருப்பது வரவேற்க வேண்டியது. ஆனால் அதை பலசஸ்தீனர்களுக்கெதிரானது எனத் தீவிரவாத முஸ்லீம்களும், பிழைப்புவாதத்துக்காக அவர்களை ஆதரிப்பவர்களும் இணையத்தளங்களில் படம் காட்டுவது கண்டிக்கப்பட வேண்டியது.

    8. இஸ்ரேலிய போர்க்குற்றங்களை சவூதி அரேபியா மிகவும் கடுமையாகக் கண்டிப்பது மட்டுமல்ல அந்த விடயத்தில் இஸ்ரேலை எதிர்க்கிறதும் கூட. ஹமாஸ் இஸ்ரேலிய மக்களையும், குடியிருப்புகளையும் ஏவுகணைகளால் தொடர்ந்து தாக்குவதை நிறுத்தினால், இஸ்ரேலின் பதில் தாக்குதல்களைத் தடுக்க முடியும். ஹமாசை ஆயுதங்களைக் கீழே போட வைத்து சமாதானப் பேச்சு வார்த்தைகளை பலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் ஹமாஸை இயக்குவதும் அவர்களுக்கு ஆயுதங்களை அளிப்பது சிரியாவும் ஈரானும் தான். அதனால் அப்பாவி பலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதற்கு கண்டிக்கப்பட வேண்டிய நாடுகள் ஈரானும், சிரியாவுமே தவிர சவூதி அரேபியா அல்ல.
    ‘Saudi Arabia slams Israeli ‘war crimes’ in Gaza’
    http://english.alarabiya.net/en/News/middle-east/2014/07/23/Saudi-slams-Israeli-war-crimes-in-Gaza.html

Leave a Reply to மணவை சிவா பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க