privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்வாங்கோ நீங்க ஐயரா ஐயங்காரா ?

வாங்கோ நீங்க ஐயரா ஐயங்காரா ?

-

இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி அனுபவங்கள் – 2

ஹிந்து ஆன்மீக கண்காட்சிக்கு சென்று  முதல் அரங்கை பார்த்ததுமே ‘ஆன்மீக’ பரவசம் மெய்சிலிர்க்க வைத்தது.

vanniyar-varalatru-aivu-maiyamநத்தம் காலனியில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை கொளுத்தி, சொத்துக்களை சூறையாடிய வன்னிய சாதி வெறியர்களின் அரங்கம் தான் முதல் அரங்கம். இந்துமதவெறி வேறா, வன்னிய சாதிவெறி வேறா என்று எண்ணிக்கொண்டே அரங்கில் நின்று கொண்டிருந்தவர் அந்த அரங்கிற்கு வந்திருந்தவர்களிடம் விளக்கிக் கொண்டிருந்ததை கவனித்தோம்.

அக்கினி குண்டத்திலிருந்து பிறந்த வன்னிய குல ஷத்திரியர்களின் ஆண்ட பரம்பரை கதையை பெருமை பொங்க கூறிக்கொண்டிருந்தார். அவர் கூறிய அக்கினி குண்டத்திலிருந்து பிறந்த ஆண்டபரம்பரையினர் நத்தம் காலனியில் எப்படி குக்கர் விசிலைக் கூட விட்டுவைக்காமல் கொள்ளையடித்தனர் என்பதை விளக்குவதற்கும் ஒரு தனி ஸ்டாலை போட்டிருந்தால் இந்து ஆன்மீக சேவை நடைமுறையில் செய்து வரும் சேவை குறித்த பிராடிகல் கிளாசாகா இருந்திருக்கும்.

ஆண்டபரம்பரை பெருமை பீற்றிக்கொள்ளும் இந்த ஷத்திரியர்கள் எத்தகைய பார்ப்பன அடிமைகள் என்பதையும் அவரே உணர்த்தினார். “சிதம்பரம் கோவிலே பிச்சாவரம் ஜமீனோட சொத்து தாங்க ! இப்போ அவங்க செல்வாக்கா இல்லைங்கிறதனால தீட்ஷிதர்கள் சொல்பேச்சு கேட்க மாட்டேங்கிறாங்க, மத்தபடி தமிழில் பாடுற போராட்டத்தை எல்லாம் மனித உரிமை பாதுகாப்பு மையம்ங்கிற அமைப்பு தான் பன்னாங்க. தீட்சிதர்களும் தமிழில் பாடக்கூடாதுன்னு சொல்லலை, மேடையில ஏறக்கூடாது, உள்ள போகக்கூடாது, குறிப்பிட்ட நேரத்துல பாடக்கூடாதுன்னு தான் சொல்றாங்க. மற்றபடி அங்கே வேற எந்த பிரச்சனையும் இல்லைங்க” என்று சற்று நேரத்திற்கு முன்பு ஆண்ட பரம்பரை பெருமை பேசிய ஷத்திரிய வாய், பார்ப்பன அடிமைத்தனத்தை விதந்தோதியது. இத்தகைய சரணடைதலைத்தான் ஆர்.எஸ்.எஸ்-ம் எதிர்பார்க்கிறது.

nagarathar-nattukottaiஇந்து மதம் என்றாலே சாதி தான் என்றார் அம்பேத்கர். அதை வாசல்படியிலேயே நிரூபித்திருக்கிறார்கள், அதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும். சரி சாக்கடை என்றால் நாறத்தானே செய்யும் என்று அடுத்த அரங்கிற்கு நகர்ந்தோம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களுக்கும் இந்த ஆன்மீக கண்காட்சியில் அரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சாதி சங்க அரங்கிலும் அந்தந்த சாதியில் பிறந்த கட்டபஞ்சாயத்து ரவுடி முதல் சினிமா வாய்ப்பிற்காக கோடம்பாக்கத்தில் அலைந்து கொண்டிருப்பவர் வரை ஒருவரையும் விட்டு வைக்காமல் அத்தனை பேரின் படங்களையும் தேடிப்பிடித்து ஸ்டால் முழுவதும் ஒட்டி வைத்துக்கொண்டு இவரு எங்க ஆளு என்று பெருமை பீற்றிக் கொண்டிருந்தனர். இந்த சாதி சங்கங்களின் அரங்குகளில் எல்லாம் சொந்த சாதிக்குள் வரன் பார்க்கும் வேலை தான் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

ஹிந்து ஆன்மீக கண்காட்சியின் பத்திரிகை தொடர்பாளர், “பல்வேறு இந்து அமைப்புகள் 260 கடைகளை போட்டார்கள்.” என்று கூறியிருக்கிறார். அந்த இந்து அமைப்புக்கள் சாதி சங்கங்கள்தான் என்பதும், சாதிக்குள் வரன் தேடிக் கொடுப்பதுதான் இந்து அமைப்புக்களின் ஆன்மீக சேவைகள் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.

tambrasஇந்து ஆன்மீகம் என்கிற பெயரில் சாதியை மேலும் இறுக வைக்க ஆர்.எஸ்.எஸ் கும்பல் செய்திருக்கும் ஏற்பாடுதான் இந்த கண்காட்சி.

ஒரு ஸ்டாலில் ஒரு மாமியும் மாமாவும் அமர்ந்திருந்தனர். நாம் அருகில் சென்றதும் எழுந்து “வாங்கோ வாங்கோ.. ஐயரா ஐயங்காரா” என்றார் மாமி, அப்போது தான் அது தாம்ப்ராஸ் ஸ்டால் என்று தெரிந்தது. “எதுவும் இல்லை” என்றோம். “அப்படின்னா கிளம்புங்கோ” என்பதை போல எழுந்து நின்ற மாமி உட்கார்ந்தார். வேற்றாள் என்று கண்டு கொண்டதும் அவாள்கள் நம்மை ஒதுக்குவதை எவ்வளவு நாசுக்காக செய்தார்கள் என்பதெல்லாம் மிகப்பெரிய முனைவர் பட்டபடிப்பிற்கு உரியது.

melmaruvathur-1அடுத்து மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சூத்திர   கம்பெனி   வந்தது. பார்ப்பனர்கள் யாரும் இந்த திசைபக்கம் திரும்பகூட இல்லை. இந்து ஒற்றுமைக்கு இது ஒன்றும் சாஸ்திர விரோதமில்லையே? இஸ்திரி பெட்டிகள், சக்கர நாற்காலிகள், தையல் எந்திரங்கள், அண்டா வழங்குதல் என்று நடிகர்கள் பாணியில் நலிந்த இந்துக்களுக்காக சில உதவிகளை செய்து அதை வீடியோவும் எடுத்துக் கொண்டிருந்தனர் ஓம் பராசக்தி குழுவினர். ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி ஊழலிலிருந்து பாதுகாப்பாக தப்பிப்பதற்கு செவ்வாடை அம்மா கம்பெனிக்கு இந்த அவாள் சேர்க்கை உதவலாம்.

தமிழ்நாடு ரெட்டி நலசங்கம் என்ற கடைக்கு முன் ஒரு வயதான பெரியவர் நின்றிருந்தார். “என்ன சார், இந்து ஆன்மீக கண்காட்சின்னு போட்டுட்டு இந்துக்களை இப்படி சாதி, சாதியா பிரிச்சு வைக்கும் வேலையை செய்றீங்களே, சரியா ” என்று கேட்டோம்.

reddy-nala-sangam-3“அய்யய்யோ, அப்படி எல்லாம் இல்லைங்க, நாங்களும் இந்துக்கள்தான், முஸ்லீம் மாதிரி இல்லை. ரெட்டி குலத்துக்கு சேவை செய்கிறோம். ஒவ்வொரு சாதிக்காரரும் அவங்கவங்க கம்யூனிட்டிக்கு உதவணும். நாங்க ஏழை ரெட்டி சாதி மாணவர்களுக்கு உதவி செய்கிறோம். வேறு சாதி ஏழை மாணவர் யாராவது வந்து கேட்டா, அவங்க சாதி சங்கத்தில கேட்கும்படி சொல்வோம்” என்றவர், கொஞ்சம் யோசித்து, “சில சமயம் தெரிஞ்சவங்கன்னு மத்த சாதிக்காரங்களுக்கும் உதவி செஞ்சிருக்கோம்” என்றார்.

“இப்ப பாருங்க, பக்கத்து ஸ்டால் ரெட்டி இளைஞர் சங்கத்தில உட்கார்ந்திருப்பது ஒரு நாயுடு பையன்தான். வேலைக்கு ஆளு கெடைக்கறதே கஷ்டமா இருக்கு. அதான் நாயுடு பையனா இருந்தாலும், நம்ம ஸ்டால்ல உட்காரச் சொன்னோம்” என்றார். பக்கத்து ஸ்டாலில் வேறு வேலை கிடைக்காத அந்த பையன் ரெட்டி சாதி பெருமையை பரப்பிக் கொண்டிருந்தான்.

இவை தவிர கம்மநாயுடு எழுச்சிப் பேரவை, ஹிந்து நாடார் மகமைகள், நகரத்தார் நாட்டுக்கோட்டை செட்டியார், தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை, வெள்ளாளர், பிள்ளைமார், செங்குந்தர், முதலியார், சேனைத்தலைவர் கூட்டமைப்பு, மற்றும் தமிழ்நாடு யாதவ மகாசபை ஸ்டால்களும் போடப்பட்டிருந்தன.

youth-for-dharmaநலிந்து வரும் இந்து தருமத்தை பாதுகாக்க சுவாமி தயானந்த சரஸ்வதி ஆரம்பித்த “தர்ம ரக்ஷண சமிதி” அமைப்பின் இளைஞர் பிரிவு கடையில் அந்த அமைப்பின் நடவடிக்கைகளை நம்மிடம் விளக்கியவர், விவேகானந்தா பள்ளியில் படித்து சின்ன வயதிலேயே இந்து தருமத்தை பாதுகாக்க உறுதி பூண்டாராம். இப்போது ஒரு மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே இந்து ஆன்மீக தொண்டு ஆற்றுகிறாராம்.

மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு ஆன்மீக ஆறுதல் கொடுப்பதைப் பற்றிச் சொன்னார். “கிருத்துவர்கள் பைபிளோடு, பன், பால் என்று கொண்டு போய் கொடுத்து ஜெபம் செய்கிறார்கள். அதன் மூலம் மதம் மாற்ற முயற்சிக்கிறார்கள். அதை முறியடிப்பதற்கு நாங்கள் இந்து ஆன்மீகத்தை நோயாளிகளுக்கு கொண்டு செல்கிறோம்” என்றார். அவர் எழும்பூர் மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு ஆன்மீக செய்தி சொல்லிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை காட்டினார். “அதோ அந்தப் பக்கம் நிற்பதுதான் கிருத்துவ மதமாற்றி. நாங்க போனதிலிருந்து அவங்க மதமாற்ற முயற்சி தடைபட்டிருக்கிறது” என்றார்.

yadhava-maha-sabha“நீங்களும் நோயாளிகளுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு போவீங்களா” என்றால் “அதெல்லாம் இல்லை. அவங்க மன ஆறுதலுக்கான ஆன்மீகம் மட்டும்தான் கொடுப்போம்” என்றார்.

அடுத்ததாக தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று அவர்கள் மத்தியில் இந்து மதத்துக்கு உயிர் கொடுக்கிறோம் என்று ஒரு புகைப்படத்தைக் காட்டினார். “அவங்களுக்கு பணமோ, பொருளோ வேண்டியதில்லை. நம்மோட அங்கீகாரம்தான் வேணும். நாங்க போனதும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அந்தப் பகுதியில் ஒரு சில குடும்பங்க மதம் மாறிட்டாங்க. நாங்க போன பிறகு மத்தவங்க நிச்சயமா மதம் மாற மாட்டோம்னு சொல்லிட்டாங்க. திரும்பவும் வரச் சொல்லியிருக்காங்க. நம்ம இந்து பண்பாட்டை அவங்க மறந்துடக் கூடாது” என்றார்.

“தருமபுரியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு இளைஞன் ஒருவன் வேறு சாதி பெண்ணை காதலித்து திரும்ணம் செய்ததற்காக அந்த மக்களின் வீடுகளை எல்லாம் அடித்து உடைத்தார்களே, அதற்கு எதிராக உங்கள் இளைஞர் இயக்கத்தினர் ஏதாவது செய்தீர்களா” என்று கேட்டால், “அதிலெல்லாம் நாம தலையிடக் கூடாது சார். அதெல்லாம் அரசியல். அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம். அரசியல்வாதிங்கதான் சாதிகளுக்குள்ள சண்டை ஏற்படுத்துகிறார்கள்”

vellalara-senkunthar-mudhaliyar“அப்போ சாதிகள் இருக்கணும்னு சொல்றீங்களா” என்று கேட்டதும், அதிர்ச்சியடைந்தவராக, “அப்போ சாதி ஒழியணும்னு நீங்க நினைக்கிறீங்களா, வருணாசிரம தருமத்தையே வேண்டாம்னு சொல்றீங்களா” என்று கோபப்பட்டார்.

பெரியார் பிறந்த தமிழகத்தில் இப்படி ஒரு கண்காட்சி நடத்தப்பட்டிருப்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் மிகப்பெரிய அவமானமாகும். இந்து ஆன்மீக கண்காட்சி என்கிற பெயரில் பார்ப்பன சனாதன தர்மத்தையும், சாதி அமைப்பையும் நியாயப்படுத்துகிறார்கள், சிறுபான்மை மக்கள் மீது வெறுப்புணர்வை தூண்டி விடுகிறார்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து சாதி சங்கங்களையும் ஊக்குவிக்கிறார்கள்.

இந்த விழாவின் கடைசி நாளில் விழா ஏற்பாட்டாளர்களில் முக்கியமானவரான குருமூர்த்தி ஜாதி  அமைப்புகள், ஆன்மிக தோற்றம், சமுதாய உருவாக்கத்தில் பங்களிப்பு, பொருளாதார ரீதியாக மற்றும் கலாச்சார ரீதியாக சமூக மூலதனம், ஜாதி  பற்றிய தவறான கோட்பாடுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தி பல்வேறு சாதி அமைப்பினரை பேச வைத்திருக்கிறார்.

nadar-peravaiஇந்த கண்காட்சி தமிழகத்தில் ஓரளவு அடித்து வெளுக்கப்பட்ட சாதி உணர்வையும், சாதி அமைப்புகளையும் வளர்க்கின்ற முயற்சியாகும், இது ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன பாசிச கும்பலை தமிழகத்தில் வளர்த்து விடுவதற்கான புதிய சதி.வட இந்தியா போன்று குறிப்பாக உத்திரபிரதேசத்தில் ஜாட் சாதிவெறியை தூண்டிவிட்டு குளிர் காய்ந்த இந்துமதவெறியர்கள் இங்கே ஆதிக்க சாதிகளை அரவணைத்து திராவிட இயக்கங்களின் செல்வாக்கை குறிப்பாக பெரியாரின் கருத்தை அழிக்க நினைக்கிறார்கள். நேரடியான இந்து ஆதிக்க சாதி வெறிதான் இந்துமதவெறியர்களின் பலம் என்பது பல மாநிலங்களில் நிரூபிக்கப்பட்ட ஒன்று.

முற்போக்கான தமிழகத்தை பிற்போக்கான குஜராத்தாகவும் மாற்றுவதற்கான திட்டம். இதற்கு அரசு நிறுவனங்களே உடந்தையாக இருப்பது மற்றொரு அபாயம். இந்த கண்காட்சியில் இந்திய தொல்லியல் துறை, இந்து அறநிலையத்துறை, தமிழ்நாடு சுற்றுலாத் துறை ஆகியவையும் பங்கேற்றிருக்கின்றன.

ஒரே வரியில் சொல்லவேண்டுமானால் நடத்தப்பட்டிருப்பது இந்து ஆன்மீக கண்காட்சி என்கிற பெயரில் மிகப்பெரியதொரு ஆர்.எஸ்.எஸ் ஷாகாவாகும். பார்ப்பன பயங்கரவாதத்தைவிதைக்கும் இந்த காண்காட்சிதான் உண்மையில் சமூக இணக்கத்தை சீர்குலைத்து சாதிவெறியைத் தூண்டி அதையே இந்துமதவெறியாக மாற்றுவதற்கு துடிக்கிறது.

(தொடரும்)

– வினவு செய்தியாளர்கள்

இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி 2014 அனுபவங்கள் – 1 ஒரு பஞ்சாங்க கோஷ்டியின் உளறல் !

  1. பெரியார் பிறந்த தமிழகத்தில் இப்படி ஒரு கண்காட்சி நடத்தப்பட்டிருப்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் மிகப்பெரிய அவமானமாகும்.

  2. நால் வர்ணம் (பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்) எல்லாம் சென்ற நூற்றாண்டோடு முடிந்து போன ஒன்று என்று பேசுகின்ற பார்ப்பனர்கள் தங்களை ஐயர் என்றோ அல்லது ஐயங்கார் என்றோ அடையாளப்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் இவர்கள் தங்களை பிராமிண் என்று ஏன் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்? இவர்களது சங்கத்தை ஐயர் சங்கம் என்றோ அல்லது ஐயங்கார் சங்கம் என்றோ நிறுத்திக்கொள்ளாமல் தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் என்று ஒன்றை வைத்திருப்பது ஏன்? எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது இதுதானோ!

    • Their population is not significant enough to influence democracy. That is why.
      It is similar to “Mukkulathor” concept. If Aiyar population is more, they will never join with Aiyankaars.

      நால் வர்ணம் (பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்) எல்லாம் சென்ற நூற்றாண்டோடு முடிந்து போன ஒன்று என்று பேசுகின்ற பார்ப்பனர்கள் மற்றும்
      + சத்திரியன், வைசியன் என்பதே சரி

      தவறும் செய்து விட்டு , தங்களுக்கு சமந்தம் இல்லாதமாதிரி நடிப்பது.

  3. //இந்த கண்காட்சி தமிழகத்தில் ஓரளவு அடித்து வெளுக்கப்பட்ட சாதி உணர்வையும், சாதி அமைப்புகளையும் வளர்க்கின்ற முயற்சியாகும், இது ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன பாசிச கும்பலை தமிழகத்தில் வளர்த்து விடுவதற்கான புதிய சதி.வட இந்தியா போன்று குறிப்பாக உத்திரபிரதேசத்தில் ஜாட் சாதிவெறியை தூண்டிவிட்டு குளிர் காய்ந்த இந்துமதவெறியர்கள் இங்கே ஆதிக்க சாதிகளை அரவணைத்து திராவிட இயக்கங்களின் செல்வாக்கை குறிப்பாக பெரியாரின் கருத்தை அழிக்க நினைக்கிறார்கள்.//
    “மானமும், அறிவும் மனிதனுக்கு அழகுன்னு சொன்ன பெரியாரின் சொல்லை மறந்து விட கூடாது.

  4. வினவு சாதியை எதிர்கிறதா அல்லது யார் சாதி பெயரால் எந்த தவறு செய்தாலும் பிராமணர்கள் மேல் குற்றம் சுமத்துவதே தங்கள் நோக்கமா? கொஞ்சம் நடு நிலைமை தங்கள் articleல் இருந்தால் நல்லது.

  5. நீங்கள் நீங்களாகவே இருங்கள் இந்து என்கிற பெரும் விருசத்தின் கீழ் இதில் என்ன தவறு இந்த சமூகம் இப்படிதான் இருக்கும் இதை மாற்ற முடியாது வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே ஒரே வழி முதலில் கொண்டுவருதல் பின் ஒவொரு சாதிகளும் பெருமையும் பேரும் பெற்றவை என்று அறிய செய்தல் அந்த சாதிகள் எல்லாமே தாங்களும் இந்துக்கள் தான் என்று உணர்ந்து கொண்டு ஒற்றுமை படுவார்கள்

  6. ““அப்படின்னா கிளம்புங்கோ” என்பதை போல எழுந்து நின்ற மாமி உட்கார்ந்தார். வேற்றாள் என்று கண்டு கொண்டதும் அவாள்கள் நம்மை ஒதுக்குவதை எவ்வளவு நாசுக்காக செய்தார்கள் என்பதெல்லாம் மிகப்பெரிய முனைவர் பட்டபடிப்பிற்கு உரியது.”

    இங்கதான் வினவு நிக்குது.

    • பொருத்த்தம் இல்லா இடத்த்தை தெரிவு செய்து விட்டு இடத்த்துக்கு உரியவர்களை பற்றி பேசுவது அநாகரீகம் ஏன் அவர்களுக்குள் நீங்கள் மூக்கை நுழைக்கின்றீர்கள் அவர்கள் அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறார்கள் பிடித்துவிட்டு போகட்டுமே இதனால் மற்றவர்கள் அடையும் தீமை என்ன அடுத்தவன் மதத்தை விமசிக்கும் இழிவுகளை நிறுத்த்தப்பட வேண்டும்

      • ப்ரேமா அவர்களே,
        அவர்கள்நம்பிக்கையை அவர்களோடு மட்டுமா இருந்தது ? கருவ்றைக்குள் 100% இட ஒதுக்கீடு கேட்டது யார் ? அவர்கள் வாழ்க்கை முறையை அவர்களே வைத்துக் கொள்ளட்டுமே. தாங்கள்தான் சிறந்தவர்கள் என்று எதற்காக தம்பட்டம் அடிக்கிறார்கள்.

        • அவர்கள் தம்பட்டம் அடிப்பது இல்லை உங்கள் தாழ்வு மனப்பான்மை தான் காரணம் எங்கே எப்படி தம்பட்டம் அடிக்கிறார்கள் சாமி என்று சொல்லி குனிந்து காதை தடவுவது யாரு சும்மா தூக்கி பிடிக்காமல் கண்டுகொள்ளாமல் விடுவதே நல்லது முதலில் நாங்கள் கட்டுப்பாடான ஒழுக்கமும் நல்ல பண்பாடும் சிறந்த கல்வி பெற்று உழைப்பும் உள்ள நல்ல வாழ்க்கையை வாழ்ந்து மற்றவர்களை கணக்கில் எடுக்காமல் விடுவதே நல்லது. கோவில் களில் கருவறைகளுக்கு அவர்களுக்கு மட்டும் என்கிற நிலையில் என்ன தவறு

          கோவிலில் பூசை செய்ய தம்மை தகுதி படுத்தி வாழ்ந்து வருகிறார்கள் அவர்களே செய்து விட்டு போகட்டுமே உங்களுக்கு ஆசை இருந்தால் கோவிலை கட்டி பூசாரி வேலை பாருங்களேன் யாரு தடுத்தார்கள்

          • ///…உங்களுக்கு ஆசை இருந்தால் கோவிலை கட்டி பூசாரி வேலை பாருங்களேன் யாரு தடுத்தார்கள்..//

            அப்ப…இருக்கிற கோவிலெல்லாம் அவ்வாள் கட்டுனதா????…… சொல்லவேயில்ல….பீதிய கிளப்பாதிங்க…..

            • உண்மைகளை மறந்து அல்லது மறைத்த்து பேசுவதில் எந்த உபயோகமும் இல்ல்லை கோவில்களை கட்டிய அரசர்கள் செல்வந்தர்கள் தர்மகர்த்தாக்கள் தான் அவர்களை நியமித்தார்கள் இவர்களுக்கு அந்த உரிமை உள்ளது பூசகர்களும் அதட்க்கு தகுதியை கொண்டு இருப்பதனாலேயே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தொடர்கிறார்கள் எங்கள் குடும்பங்கள் என்ன முழுமையான மத நெறிமுறைகளை கடைபிடிக்கும் குடுப்பாங்களா இல்லையே எங்களுக்கு ஏன் தகுதி இல்லாத ஆசை.

              • So listen here everybody,Premaa only has the capacity to test a person whether he is adhering to all religious rituals.After the test done by Premaa,if he(she)is satisfied,he(she)will recommend his case even to SC.How come we have missed this talented person so far in Vinavu site.

          • Premaa,Do you mean to say that those who claim the Karuvarai as their own have built those temples?What qualifications they have to be archagars?Out of 116 Meenakshi temple archagars,only 28 have studied agamam.Out of 41 archagars in Kabali temple,only 4 heave learned agamam.Whereas 206 students who studied agamam are waiting in the corridor of SC awaiting justice.Why we should build temples and become Poosaris when these students have qualified themselves as Archagars?Who gave you the authority to talk in that manner?

            • இதற்க்கு ஒரு வழி தான் உண்டு கிறித்தவத்தில் ப்ரொடோஸ்தான் இருப்பது போல் இந்து மதத்திலும் உருவாக்கி பாதிரிகள் மாதிரி பூசகர்களை உருவாக்குவது தான் மற்றும் படி செயட்கை அந்தணார்களை மக்கள் நம்ப மாட்டார்கள் மதம் நம்பிக்கை சார்ந்தது அந்த நம்பிக்கையை கெடுத்துக்கொண்டு பூசை செய்கிறோம் என்று சொன்னால் யார்ர் நம்புவார்கள்

              • How do you come to the conclusion that they are artificial brahmins?First of all why they should become brahmins to worship God?And how do you say that they are not having faith in the religion?206 people spent one and half year to learn agamams and even after 8 years,they have not gone for any other job.What more agnipariksha you will impose to test their religious faith?By the by, clarify my doubt.Are you Harikumar wearing the mask as “Premaa”?Vinavu should clarify this identity crisis.It will save lot of our precious time.

  7. கொடுமைடா சாமி, சாதியை ஒழித்தது கட்டுவோம் என்று நினைத்தால் இப்போது ஒவ்வொரு சாதிக்கும் ஒரு ஸ்டால் என்று தூக்கி நிறுத்துகிறார்கள்.

    அய்யா சாதி அபிமானிகளே, ஒரு விபத்தில் உங்கள் ஆருயிர் உறவுக்கு இரத்தம் தேவைப்பட்டால் இந்த சாதி இரத்தம் தான் வேண்டும் என்று அடம் பிடித்து கொண்டு இருப்பீர்களா?

    சாதி, மதம், மொழி, இனம், வர்க்கம், நாடு, இந்த அனைத்து பிரிவினைகளையும் எப்போது விட்டோழிப்போமோ, அப்போது தான் மானிடம் உருப்படும். இந்த உலகம் நமக்கு சொந்தமானது அல்ல. நாம் அனைவரும் வாடகைக்கு குடியிருக்கிறோம். வந்த நேரம் முடிந்ததும் போகப்போகிறோம். இந்த இடைப்பட்ட காலத்தில் அனைவருக்கும் பயன் தரும் வழியில் வாழப்பழகுவோமே நண்பர்களே. பிரிவினை பேச்சுகள் எதற்கு? பகைமை எதற்கு?

  8. உண்மையில் இந்து மதம் என அழைப்பதை விட பிராமண மதம் என அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.ஒருவனது பிறப்பின் அடிப்படையில் பேதங்களை வகுத்து வைத்திருக்கும் இந்து மதத்தில் இருந்து கொண்டு எப்படி வேற்றுமையில் ஒற்றுமை காணமுடியும் ? சூத்திரன் என்றால் பார்ப்பா னின் வைப்பாட்டி மகன் என்ற இழிவை சுமந்து கொண்டு எதற்காக அம்மதத்தில் இருக்க வேண்டும்?

  9. குரு, பிராமணர்கள் மட்டும் கொண்டதல்ல இந்து மதம். அங்கு அவரவர் வழியில் முறையில் சாமி கும்பிட்டு கொண்டிருக்கின்றனர். இழிவான தரம் தாழ்ந்த கருத்துக்களை, ஒரு மதத்தினை நம்பும் சாமானிய மக்களை ஒட்டுமொத்தமாக இழிவு செய்யும் கருத்துக்களை தவிர்க்கலாம். ஆக்கபூர்வமாக யோசிக்கலாம்.

Leave a Reply to Raman பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க