privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்இன்ஜினியரிங் கல்லூரி தலித் மாணவிகள் – புள்ளிவிவர மயக்கம் !

இன்ஜினியரிங் கல்லூரி தலித் மாணவிகள் – புள்ளிவிவர மயக்கம் !

-

மிழக பொறியியில் கல்லூரிகளில், தலித் மாணவிகளின் சேர்க்கை அதிகரித்திருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் (11.08.2014) ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது.

அண்ணா பல்கலைக் கழகம் கவுன்சலிங்
அண்ணா பல்கலைக் கழகம் கவுன்சலிங்

தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் புள்ளிவிவரப்படி 2006-07-ம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட சாதிகளின் மாணவிகள் 2,361 பேர் சேர்ந்தனர். 2013-14-ம் ஆண்டில் 10,505 மாணவிகள் சேர்ந்திருக்கின்றனர். பொதுப்பிரிவு மாணவிகளின் நிலையோ இந்த வேகத்தில் அதிகரிக்கவில்லை.

2006-07-ல் 4,498 ஆக இருந்த பொதுப்பிரிவு மாணவிகள், 2013-14-ல் 6,535-ஆக மட்டுமே அதிகரித்திருக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளிலும் 2013-14-ம் ஆண்டில் பொதுப்பிரிவு பெண்கள் 184-ஆக இருக்க, தலித் மாணவிகள் 577 ஆக சேர்ந்திருக்கின்றனர்.

இந்த ஆண்டுகளில் பொதுவாக பொறியியல் மாணவர் சேர்க்கை 2.5 மடங்கு அதிகரித்திருக்கும் போது தலித் மாணவிகளின் சேர்க்கை விகிதம் 4.4 மடங்காக அதிகரித்திருக்கிறது. தலித் ஆண் மாணவர்கள் 2013-14-ம ஆண்டில் 18,988 பேர் சேர்ந்ததை ஒப்பிட்டு பார்த்தாலும் மாணவிகளின் விகித வளர்ச்சி மிக அதிகம்.

“அவர்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைக்கு எதிர்வினையாக இந்த மாற்றத்தை பார்க்கலாம். அவர்களது சூழ்நிலையிலிருந்து வெளியே வரும் வழியாக, கல்வியை பார்க்கும் விழிப்புணர்வு வளர்ந்து வருகிறது” என்று லயோலா கல்லூரியின் உதவி பேராசிரியர் அம்ரிதா லெனின் கூறியிருக்கிறார்.

எனினும் இந்த புள்ளிவிவரங்கள் கூறும் தலித் மாணவிகளின் வளர்ச்சி உண்மையானதா?

2011-ம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 16.6% தலித் மக்கள் வாழ்கிறார்கள். ஒட்டு மொத்த இந்திய தலித் மக்கள் தொகையில் 7.2%-த்தைக் கொண்டிருக்கும் தமிழகம், தலித் மக்கள் வாழும் நான்காவது பெரிய மாநிலமாகும். தமிழகத்தின் மக்கள் தொகை விகிதப்படி இங்கே 18% தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.

தற்போதைய நிலவரத்தின் படி தமிழகத்தில் 570 பொறியியில் கல்லூரிகள் உள்ளன. சில நிர்வாக பிரச்சினைகள், அரசின் மேலோட்டமான கண்காணிப்பு நாடகம், நடவடிக்கை காரணமாக இந்த எண்ணிக்கை சற்று குறையலாம். எனினும் மேற்கண்ட தலித் மாணவிகள் குறைவாக சேர்ந்தாக கூறப்படும் 2006-07-ம் ஆண்டிற்கு பிறகு சுமார் 280-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இங்கே புதிதாக துவங்கப்பட்டுள்ளன. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 2013-ம் ஆண்டில் இரண்டு மடங்கு கல்லூரிகள் அதிகரித்திருக்கின்றன.

ஆகவே தலித் மாணவிகளின் சேர்க்கை வளர்ச்சியில் இந்த கல்லூரி பெருக்கம் மறைந்திருக்கிறது. மொத்தமுள்ள பொறியியல் கல்லூரிகள் உள்ள 2,36,417 இடங்களில் தலித் மக்களின் 18% சதவீத இருப்பின்படி 42,255 பேர் படிக்க வேண்டும். ஆனால் இரு பால் பிரிவு தலித் மாணவர்களை கூட்டினாலும் அது 30,000 மட்டுமே வருகிறது. இதில் அரசு கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான 15% இட ஒதுக்கீட்டின் படி சுமார் 2,000 இடங்கள் வரலாம். இவற்றில் கட்டணம் குறைவு என்பதோடு, இங்கு படித்தால் ஒப்பீட்டளவில் மதிப்பும், வேலை வாய்ப்பும் சற்று அதிகம் என்பதால் தலித் மாணவர்களில் அதிக மதிப்பெண் வாங்கும் பிரிவினர் கண்டிப்பாக சேர்ந்து விடுவார்கள். மீதி இடங்கள் அதிக கட்டணம் வாங்கும் தனியார் கல்லூரிகள். இதில்தான் பிரச்சினையே.

சரி, எது எப்படியோ தலித் மக்களின் விகிதத்திற்கு நெருக்கமாக இந்த எண்ணிக்கை வருகிறதே என்று சிலர் எண்ணலாம். அப்படி வைத்துக் கொண்டாலும் தலித் மாணவர்கள் சேர்க்கை வளரும் விகிதத்தில் மற்ற பிரிவினர்களும் இருக்க வேண்டுமல்லவா? அப்படி இல்லை என்பதை இந்தக் கணம் வரை கிட்டத்தட்ட பாதி இடங்கள் அதாவது 1,00,000-த்திற்கும் மேற்பட்ட இடங்கள் யாரும் சேராமல் இருக்கும் யதார்த்தம் நிரூபிக்கின்றது. பல கல்லூரிகள் ஒரு மாணவரைக் கூட சேர்க்காமல் கடை விரித்திருக்கின்றன.

இந்த காலி இடங்களை ஓரளவாவது நிரப்ப வேண்டுமென்பதற்காக சுயநிதிக் கல்லூரிகள் தமது சேர்க்கை காலத்தை நீட்டியிருக்கின்றன. பல்வேறு முறைகளில் மாணவர்களை சேர்க்க பிரச்சாரமும் செய்து வருகின்றன. அதிலொரு முயற்சியாகத்தான் இந்த ஊடகச் செய்தியை பார்க்க வேண்டியிருக்கிறது.

அமெரிக்கா, சீனாவின் கூட்டுத் தொகையை விட அதிகமான பொறியியல் மாணவர்களை இந்தியா வருடந்தோறும் உற்பத்தி செய்கிறது. கிட்டத்தட்ட 15 லட்சம் மாணவர்கள். இவற்றில் ஐ.டி நிறுவனங்கள் சராசரியாக ஆண்டு தோறும் சுமார் 50,000 மாணவர்களை மட்டும் பணிக்கு அமர்த்துகின்றன. அதுவும் தற்போது குறைந்து வருவதோடு, சம்பள விகிதமும் சரிந்து வருகிறது. இந்த எண்ணிக்கைக்கு நிகராகவோ இல்லை குறைவாகவோ உற்பத்தித் துறை நிறுவனங்கள் வேலைக்கு எடுக்கின்றன. இந்த ஒரு லட்சத்தை கழித்து விட்டால் மீதியுள்ளோரில் கால்வாசிப் பேர் ஏதோ ஒரு வேலையை மிகக் குறைந்த சம்பளத்திற்காக ஏற்கின்றனர். முக்கால்வாசிப்பேர் வேலையற்று இருக்கின்றனர். இவர்களும் இறுதியில் வேறுவழியின்றி ஏதோ ஒரு வேலை தேட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றார்கள்.

சாதி கௌரவம், சொத்துடைமை உள்ளவர்கள் மட்டும் திருமணத்திற்கு விலை பேசும் சரக்காக பொறியியல் படிப்பை பயன்படுத்துகிறார்கள். பெரும்பான்மையினர் படித்து நல்ல வேலை கிடைத்து அதிக சம்பளம் வாங்க முடியும் என அப்பாவித்தனமாக நம்பி ஏமாறுகிறார்கள்.

இது நடுத்தர வர்க்கத்திற்கு பட்டுத் தெரிந்த பிறகே பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாகும் நிலைமை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றது. இந்த நிலைமையில் தலித் மாணவிகள் அதிகம் சேர்கிறார்கள் என்பதை எப்படி பார்ப்பது?

தாழ்த்தப்ப்ட்ட மக்களில் நடுத்தர வர்க்கமாக, மாத சம்பளம் வாங்கும் பிரிவினரே இத்தகைய உயர்கல்விகளில் தமது பிள்ளைகளை சேர்க்கின்றனர். இதற்காக தமது சொத்துக்களையும், வாழ்நாள் வருமானத்தையும் அடகு வைத்து படிக்க வைக்கின்றனர். ஏழைகளில் இத்தகைய படிப்பிற்கு வரும் வாய்ப்பு மிகக் குறைவு. அதிலும் லட்சத்திற்கு ஒரு மாணவருக்கு தினமணி போன்ற ஊடகங்களின் கௌரவ நன்கொடை மூலம் வாய்ப்பு கிடைக்கலாம்.

ஆரம்பக் கல்வி, பள்ளிக் கல்வி படிப்பில் இடைநிறுத்தம் செய்து வெளியேறும் எண்ணிக்கையில் தலித் மக்கள் கணிசமாக இருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் குறிப்பிடத்தக்க அளவில் படிக்கும் இம்மக்களும், அரசுப் பள்ளிகள் திட்டமிட்டு ஒழிக்கப்படுவதிலிருந்தும் இதை புரிந்து கொள்ள முடியும். எந்த வசதிகளுமற்று நடத்தப்படும் அரசு கலைக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகளிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அதிகம் படிக்கிறார்கள். எனினும் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் கணிசமாக படிக்கின்றனர். மேற்கண்ட பிரச்சினைகள் இவர்களுக்கும் பொருந்தும்.

பொறியியல் படிப்பின் விகிதத்திற்கு நிகராக நிலவுடைமையிலோ இல்லை மற்ற தொழில் சொத்துக்களிலோ தாழ்த்தப்பட்ட மக்கள் இல்லை. கிராமங்களிலிருந்து கூலி வேலைக்காக குடும்பம் குடும்பமாக வெளியேறும் பிரிவினரில் இவர்களே குறிப்பிடத்தக்க அளவில் இருக்கின்றார்கள்.

இதன்படி பார்த்தால் சமூகத்தில் ஏற்படும் எத்தகைய விழிப்புணர்வும் இம்மக்களை கடைசியில்தான் எட்டும். அதனால்தான் பொறியியல் படித்தால் வேலை கிடைப்பது நிச்சயமில்லை, படிப்பதற்கு அதிக பணம் புரட்ட வேண்டும் என்ற யதார்த்தத்தின் படி மற்ற பிரிவு மக்கள் அதை புறக்கணிக்கத் துவங்கும் பொழுது தலித் மக்கள் அதில் அதிகம் சேர்கிறார்கள் என்பது வளர்ச்சியா இல்லை ஏமாற்றுதலா?

அவர்களது பொருளாதாரத்தை சுயநிதிக் கல்லூரி முதலாளிகள் கைப்பற்றும் சதியை வளர்ச்சி, சாதி அடக்குமுறைக்கு எதிரான எதிர்வினை என்று மட்டும் சுருக்கிப் பார்ப்பது சரியா என்பதே நமது கேள்வி.

கிராம அளவில் நிலவுடைமை சமூக அமைப்பில் பொருளாதார ரீதியில் தலித் மக்களுக்கு விடுதலை கிடைக்காத வரை இத்தகைய சீர்திருத்த முயற்சிகள் அவர்களை மட்டுமல்ல, ஒடுக்கப்படும் மற்ற சாதி மக்களையும் திசை திருப்பும் ஒன்றாகும்.

குறைவு, கூடுதல் என்று எண்களை கொண்டு வளர்ச்சியை காட்டும் ஊடக அறிஞர்கள் சமூகத்தின் இயக்கத்தை உள்ளது உள்ளபடி பார்க்க மறுப்பது தற்செயலான ஒன்று அல்ல. ஏழைகளை ஏழைகளாக இருக்க வைக்கும் முயற்சி பழைய பஞ்சாங்க முறையில் இல்லை என்றாலும் இன்ஜினியரிங் வடிவில் வருதால் அதை புதிய கம்ப்யூட்டர் பஞ்சாங்கம் என்று வேண்டுமானால் அழைக்கலாம்.

மேலும் படிக்க

  1. தமிழ்நாட்டரசு அளிக்கும் முழு கல்வி உதவி தொகையில் 2012 கல்வி ஆண்டில் இருந்து SC/ST மாணவர்கள் சுய நிதி கல்வி நிறுவனங்களிளும்,அரசு கல்வி நிறுவனங்களிளும் படிக்கும் போது அவர்களின்[SC/ST] பொருளாதாரத்தை சுயநிதிக் கல்லூரி முதலாளிகள் கைப்பற்றும் சதி என்று வினவு ஏன் கூறுகின்றது ? அரசு அளிக்கும் முழு கல்வி உதவி தொகையில் கூட SC/ST மாணவர்கள் சுய நிதி கல்வி நிறுவனங்களிளும்,அரசு கல்வி நிறுவனங்களிளும் படிக்க கூடாது என்பது வினவின் எண்ணமா ?
    please see this:
    http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/sc-st-students-in-payment-seats-category-also-to-get-fee-concession/article2816107.ece

    All scheduled caste and scheduled tribe students of self-financing educational institutions in Tamil Nadu, including those admitted under the ‘payment seats’ category, will now be eligible for the benefits of a scheme under which all compulsory fees collected by the institutions would be paid on their behalf by the government.
    All courses recognised by the government would be covered by the scheme, and the entire fee fixed by the government-appointed Fee Committee for Self-Financing Colleges would be borne by the government under the Centre’s Post-Matric Scholarship scheme from 2011-12. This would involve an expenditure of over Rs. 75 crore per year and would be applicable to those whose parents or guardians had an annual income of Rs. two lakh or less.
    In engineering courses, for instance, only 17,689 seats out of 35,159 seats for Adidravidars and scheduled tribes were filled up, and the rest were vacant. The reason, it was found, was that SC/ST students could not afford to pay the compulsory fees collected by self-financing institutions due to poverty

    //இதன்படி பார்த்தால் சமூகத்தில் ஏற்படும் எத்தகைய விழிப்புணர்வும் இம்மக்களை கடைசியில்தான் எட்டும். அதனால்தான் பொறியியல் படித்தால் வேலை கிடைப்பது நிச்சயமில்லை, படிப்பதற்கு அதிக பணம் புரட்ட வேண்டும் என்ற யதார்த்தத்தின் படி மற்ற பிரிவு மக்கள் அதை புறக்கணிக்கத் துவங்கும் பொழுது தலித் மக்கள் அதில் அதிகம் சேர்கிறார்கள் என்பது வளர்ச்சியா இல்லை ஏமாற்றுதலா?

    அவர்களது பொருளாதாரத்தை சுயநிதிக் கல்லூரி முதலாளிகள் கைப்பற்றும் சதியை வளர்ச்சி, சாதி அடக்குமுறைக்கு எதிரான எதிர்வினை என்று மட்டும் சுருக்கிப் பார்ப்பது சரியா என்பதே நமது கேள்வி.//

  2. டயானா அக்கா,

    பிரைவேட் பள்ளிகள்ள 25% இடங்கள ஏழைகளுக்கு ஒதுக்கணும், அதுக்கு கவர்ன்மென்டே கட்டணம் செலுத்தும்கிற மேட்டர எப்படி ஏமாத்துனாங்கறதும் இதே இந்து பத்திரிகையில வந்துருக்கே, படிக்கலையா? அந்த புள்ளைங்களுக்கு மொட்டை போட்டு தீண்டாமை, வேற ஊர்கள்ள மறைமுக பீஸ்னு ஆயிரக்கணக்குல புடுங்கனதுன்னு ஊர் உலகமெல்லாம் தெரியாம இருக்கீங்க.

    நீங்க சொல்லியிருக்கிற ஆதாரத்துல கூட 35,159 சீட்டுல தான் தலித் மாணவருங்க சேர்ராங்க, மிச்ச சீட் வேகன்ட்டா இருக்கு, காரணம் ஏழ்மைங்கிற விவரத்த பாத்தா கூட கட்டுரையில அதாம் மேடம், காசு கொடுத்து படிக்கிற தலித் ஸ்டூடன்ச பத்திதான பேசுது.

    சரி, அவங்க சில லட்சம் செலவு பண்ணி படிக்கிறாங்க, அந்த கடனை அடைக்கிறதுக்கும், வேல வாங்குறதுக்கும் நீங்களோ, இல்ல இந்து பத்திரிகையோ காரண்டி எடுப்பீங்களா?

  3. சிஸ்டர் டயானா பொறியியல் படித்த எல்லாறுக்கும் வேலை அளிக்க முடியுமா ஏன் இல்லை என்பதை சீர் தூக்கி பாறுங்கள் இதில் சாதி வேறுபாடுகள் தேவை இல்லை அனாலும் அரசு தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு பாதி செலவில் பொறியியல் படிக்க வைக்கிறது என்கிறீர்கள் அது எத்தனை தனியார் கல்லூரிகளில் நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது எத்துனை கல்லூரிகள் அரசு உதவியையும் வாங்கிக்கொண்டு கட்டணமும் வாங்கி கொள்கின்றன என்பது த்ரியுமா உங்களுக்கு ஆக கூடி தனியார் பொறியியல் கல்லூரி நடத்துபவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதாரத்த மட்டும் அல்ல இந்திய அரசின் பணத்தையும் கொள்ளை அடிக்க வழி வகை செய்து உள்ளது என்பதே கட்டுறையின் நோக்கம் உங்களின் வருத்தம் எல்லா தரப்பு மாணவர்களையும் அரைக்கட்டணத்துடன் படிக்க வைக்க அரசு செய்வேண்டும் என்று சொல்வீர்களனால் இது தனியார் கல்லூரி நடத்தும் பொருக்கிகள் இன்னும் கொழுக்கவே வழி வகுக்கும் என்பதே உண்மை…..

  4. சகோதரர் மதுரை வீரன் மற்றும் p.joseph, உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி. sc/st பிரிவை சேர்ந்த மக்கள் அவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி கட்டண உதவித்தொகை போன்ற நியாயமான உரிமைகளை கூட அவர்கள் பயன் பெற்று வாழ்வில் முன்னேற முயலக்கூடாதா என்பதே என் கேள்வி ?என் பள்ளி வகுப்பு தோழன் இச் சலுகைகளை பெற்று B.Sc che ,M.Sc che , By Gate score M.Tech என்று கல்வி பயின்று இன்று நல்ல வேலையில் உள்ளார். என் கணவர்[நாங்கள் சாதி கலப்பு திருமணம் செய்தவர்கள்] கூட இச் சலுகைகளை பெற்று professional course B.Pharm வரை பயின்று இன்று மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் நல்ல வேளையில் உள்ளார். sc /st மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை கூட பூர்த்தி செய்யாமல்[backlog] தானே தமிழ்நாட்டரசு செயல் படுகின்றது. அதற்காக sc /st மக்களுக்கு வேலை வாய்ப்பில் அவர்களுக்கு [sc/st மக்களுக்கு] வாய்ப்பு தரவேண்டாம் என்று நாம் கூற முடியுமா ?”கற்கை நன்றே கற்கை நன்றே” என்ற நம் தமிழ் பாட்டியின் சுவடியின் அடுத்த வரியாது ஐயா ? திரு அம்பேத்கார் கூட யாரோ ஒரு மன்னன் இடம் இருந்து கல்வி உதவி தொகை பெற்று கல்வி பயின்று நமக்கு இன்று சட்ட மேதையாக காட்சி தருவது தவறா ?

  5. தலித் மாணவர்கள் அதிகமாக சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் இப்போது சேருவதற்கு காரணம் என்னவாக இருக்க முடியும் எனில் 2011-12 கல்வி ஆண்டு முதல் அவர்களுக்கு அளிக்கபடும் நியாயமான “முழு கல்வி கட்டண சலுகை” மட்டுமே. வினவு இணைய தளம் கூறுவது போன்று பொறியியல் படித்தால் வேளை கிடைக்காது என்ற விழிப்புணர்வு இல்லாமலோ அல்லது லயோலா கல்லூரியின் உதவி பேராசிரியர் அம்ரிதா லெனின் கூறியிருப்பது போன்று “அவர்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைக்கு எதிர்வினையாக”வோ இதனை காண தேவை இல்லை. SC/ST மாணவர்களுக்கு தற்போது B.Ed,B.E,B.Pharm போன்ற கல்விகளில் முழு கல்வி உதவி தொகை கிடைப்பதால் அவர்கள் அந்த கல்விகளை பயில முயலுகின்றனர். என் கணவரின் தம்பி Msc Phy படித்தவர். அவரின் BEd படிப்புக்கு நான் விசாரித்த போது SC/ST வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அவரை Rs 10,000 பணம் மட்டுமே கட்ட சொன்னார்கள். மீதி பணத்தை SC/ST scholarship ல் கழித்து கொள்வதாக கூறினார்கள். உடனே அவரை BEd படிப்புக்கு என் 1 பவுன் தங்க சங்கிலியை அடமானம் போட்டு சேர்த்தேன்.இந்த கல்வி கட்டண சலுகை மட்டும் இன்று அவருக்கு இல்லை என்றால், எங்கள் குடும்ப பொருளாதார நெருக்கடியில் அவரை எங்களால் BEd படிப்புக்கு சேர்க்க இயலாது போய் இருக்கும். கிடைக்கும் உரிய,முறையான வாய்ப்புகளை பயன் படுத்தி கல்வி கற்று முன்னேறுவது தான் என்னை பொறுத்த வரை இச் சமுகத்துக்கு நல்லது.

    //2006-07-ல் 4,498 ஆக இருந்த பொதுப்பிரிவு மாணவிகள், 2013-14-ல் 6,535-ஆக மட்டுமே அதிகரித்திருக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளிலும் 2013-14-ம் ஆண்டில் பொதுப்பிரிவு பெண்கள் 184-ஆக இருக்க, தலித் மாணவிகள் 577 ஆக சேர்ந்திருக்கின்றனர்.//

    //இந்த ஆண்டுகளில் பொதுவாக பொறியியல் மாணவர் சேர்க்கை 2.5 மடங்கு அதிகரித்திருக்கும் போது தலித் மாணவிகளின் சேர்க்கை விகிதம் 4.4 மடங்காக அதிகரித்திருக்கிறது. தலித் ஆண் மாணவர்கள் 2013-14-ம ஆண்டில் 18,988 பேர் சேர்ந்ததை ஒப்பிட்டு பார்த்தாலும் மாணவிகளின் விகித வளர்ச்சி மிக அதிகம்.//

    //“அவர்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைக்கு எதிர்வினையாக இந்த மாற்றத்தை பார்க்கலாம். அவர்களது சூழ்நிலையிலிருந்து வெளியே வரும் வழியாக, கல்வியை பார்க்கும் விழிப்புணர்வு வளர்ந்து வருகிறது” என்று லயோலா கல்லூரியின் உதவி பேராசிரியர் அம்ரிதா லெனின் கூறியிருக்கிறார்.//

    //ஆகவே தலித் மாணவிகளின் சேர்க்கை வளர்ச்சியில் இந்த கல்லூரி பெருக்கம் மறைந்திருக்கிறது. மொத்தமுள்ள பொறியியல் கல்லூரிகள் உள்ள 2,36,417 இடங்களில் தலித் மக்களின் 18% சதவீத இருப்பின்படி 42,255 பேர் படிக்க வேண்டும். ஆனால் இரு பால் பிரிவு தலித் மாணவர்களை கூட்டினாலும் அது 30,000 மட்டுமே வருகிறது. இதில் அரசு கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான 15% இட ஒதுக்கீட்டின் படி சுமார் 2,000 இடங்கள் வரலாம். இவற்றில் கட்டணம் குறைவு என்பதோடு, இங்கு படித்தால் ஒப்பீட்டளவில் மதிப்பும், வேலை வாய்ப்பும் சற்று அதிகம் என்பதால் தலித் மாணவர்களில் அதிக மதிப்பெண் வாங்கும் பிரிவினர் கண்டிப்பாக சேர்ந்து விடுவார்கள். மீதி இடங்கள் அதிக கட்டணம் வாங்கும் தனியார் கல்லூரிகள். இதில்தான் பிரச்சினையே.//

    • டயானா அக்கா,
      உங்க சுய முன்னேற்ற உறுதிய நெஞ்சார பாராட்டுறேன்.ஆனா உங்க அப்பாவித்தனத்துக்கு வருத்தப்படுறேன். நாராயணன் குடியரசுத் தலைவரான மாதிரி, பாலகிருஷ்ணன் நீதிபதி ஆனதெல்லாம் இந்த வினவுக்கு தெரியலன்னு வெச்சுக்குவோம். தலித்துங்க ஜனாதிபதி, தொழிலதிபர்,பில்கேட்ஸ் மாறி ஆவறதை இவங்க எதிரா பாக்குறாங்கன்னு கூட இருக்கட்டும். ஆனா மெஜாரிட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் ஏன் ஏழைங்களா இருக்காங்க? இல்லை உங்க குடும்பம் மாதிரி ஒன்னு ரெண்டு பேரு முன்னேறிட்டா எல்லா ம்க்களும் முன்னேறுனதா அர்த்தமா? இந்த வருசம் 1,00,000 இன்ஜினியரிங் சீட்டு வேகன்டா இருக்குண்ணா என்ன அர்த்தம்? மத்த ஆதிக்க சாதிக்காரங்க தலித்துங்க மாறி அதிகம் சேரலேங்கிறதுக்கு என்ன காரணம்? அரசாங்கம் உதவி பண்ணி படிக்கிறதுல என்ன தப்புன்னா, அரசு பள்ளி, கல்லூரிய மூடுறது நியாயமுன்னு வருது? அரசு மருத்துவமனையை தரமா நடத்தணுமுனு வினவு சொன்னா நீங்க அப்பல்லோவில் சிகிச்சை பாக்க அரசு உதவி செஞ்சா நல்லதுதானேன்னு சொன்னா சரியா?
      பெருச்சாளி சாகணுமுனு வீட்ட கொளுத்தறது மாதிரி இருக்கு உங்க சிந்தனை!

  6. அக்கா டயானா நீங்க எஸ் சி எஸ் டி களுக்கு குடுக்கும் சலுகைகளை பெற்று முன்னேற கூடாதா என்கிற உங்களின் ஆசையை வரவேற்க்கிரேன் அனால் அது அரசினால் தனியார் முதலாளிகளுக்கு குடுக்கப்படும் பணமே தவிர தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறுவதக்கு குடுக்கப்பட்டது அல்ல அதைத்தான் விளக்கி இருந்தேன் கல்வி கட்டண குறைப்பு அல்லது பாதி கட்டணம் என்கிற பெயரில் மோட்டார் கூட இல்லாத பொறியியல் கல்லூரியில் மின் பொறியாளரை உருவாக்குவதை நீங்கள் விரும்புகிறீர்களா ஒரு மின்சார பொறியாளர் மின் மாற்றி மின் மோட்டார் லிருந்து எல்லாவற்றையும் உருவாக்கவும் அதை சீர் படுத்து புதுமையை புகுத்தவும் தெரிந்த பொறியாளரையா விரும்புகிறீர்களா இது தாழ்த்த பட்டவர் மட்டும் இல்லை எல்லா சமுக பொறியாள பட்டதாரிக்கும் பொருந்தும்

    • சகோதரர் திரு ஜோசப், வண்டலூர் அருகில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கல்வி நிறுவனம்[Indian Institute of Information Technology Design & Manufacturing] என்ற மத்திய அரசு கல்வி நிறுவனத்துக்கு நூலக உதவியாளர் ஒப்பந்த பணிக்கு தேர்ந்தெடுக்கபடுவதற்காக நேர்முகத்தேர்வுக்கு போன மாதம் சென்றிருந்தேன். அங்கு வேலைச்செய்தால் கிடைக்கும் ஊதியம் கொண்டு நான் பெற்று இருந்த வங்கி கல்விக்கடனை அடைக்கலாமே என்ற எண்ணம். நேர்முகத்தேர்வுக்காக காத்து இருந்த போது பிரதான வாசல் தானியங்கி கண்ணாடி வாசல் கதவு மக்கார் செய்துகொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அது முழுமையாக செயலிழந்தது. உள்ளும், புறமும் செல்ல இயலாநிலை. அங்கு குழுமிய MTech,Eng Phd படித்து பேராசிரியர் வேலையில் இருப்பவர்கள் sensor வேலை செய்யவில்லை என்று பேசிக்கொண்டார்களே தவிர கதவை திறக்கவழிகூறவில்லை. இவர்கள் எல்லாம் சுயநிதிக்கல்லூரிகளில் படித்து இருபார்களா என்ன ? iit ,nit போன்ற உயர்கல்விநிறுவனங்களில் படித்தவர்கள் தானே ? 10 நிமிடம் கழித்து பராமரிப்பு[maintenance] பிரிவு worker வந்தார். தானியங்கி கதவருகில் இருந்த சுவிட்ச்அய் auto mode ல் இருந்து manual mode க்கு மாற்றி கதவை திறந்தார். அந்த சுவிட்ச்சை கையாலாக்கூட தெரியாமல் iit ,nit போன்ற உயர்கல்விநிறுவனங்களில் M.E,M.Tech,Eng Phd படித்தென்ன பயன் ? ITI படித்த maintenance பிரிவு workerக்கு உள்ள practical knowledge iit ,nit போன்ற உயர்கல்விநிறுவனங்களில் MTech ,Eng Phd படித்த பேராசிரியர்களுக்கு இல்லாத போது கல்வி தரத்தில் அரசு கல்லூரிக்கும் ,சுயநிதிக்கல்லூரிக்கும் என்ன வேறுபாடு ?நேர்முகத்தேர்வில் நூலக உதவியாளர் ஒப்பந்த பணி lower grade job எனவே MCA படித்த நீங்கள் தேவையில்லை என்று DIPLOMATIC காக கூறி என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

      //மோட்டார் கூட இல்லாத பொறியியல் கல்லூரியில் மின் பொறியாளரை உருவாக்குவதை நீங்கள் விரும்புகிறீர்களா ஒரு மின்சார பொறியாளர் மின் மாற்றி மின் மோட்டார் லிருந்து எல்லாவற்றையும் உருவாக்கவும் அதை சீர் படுத்து புதுமையை புகுத்தவும் தெரிந்த பொறியாளரையா விரும்புகிறீர்களா இது தாழ்த்த பட்டவர் மட்டும் இல்லை எல்லா சமுக பொறியாள பட்டதாரிக்கும் பொருந்தும்//

  7. சகோதரர் திரு ஜோசப், இன்று உள்ள மோசமான அரசு பள்ளிகள் ,அவற்றின் விழ்ச்சி அடைந்த அடிப்படை கட்டமைப்புகள் ,ஆசிரியர்கள் இல்லாதது இவற்றை எல்லாம் காரணம் காட்டி அங்கு மட்டுமே கல்வி பயில வசதியும் வாய்ப்பும் உள்ள SC/ST மாணவர்களை பார்த்து கல்வி கற்க வேண்டாம் என்று கூறுவிர்களா ? கிடைக்கும் வாய்ப்பை பெற்று தானே SC/ST மாணவர்கள் ஆரம்ப கல்வி கற்று இந்த அளவிலாவது முன்னேற்றம் அடைந்து உள்ளார்கள். என் கணவர் மேல்மருவத்துர் BPharm கல்லூரியில் முழு SC/ST scholarship ல் BPharm கற்க்கும் போது, ஆய்வக வசதிகள் தேவையான அளவுக்கு இல்லை தான். அதன் பின் அவர் வேலையில் சேர்ந்து பெற்ற practical knowledge ஐ கொண்டு தான் இன்று நல்ல நிலையில் உள்ளார். இந்த கல்வி கற்க கிடைத்த குறைந்த பட்ச வாய்ப்பை அவர் தவற விட்டு இருந்தால் அவர் வேறு என்ன செய்து இருக்க முடியும் ?

    SC/ST மாணவர்களுக்கு இன்று கிடைக்கின்ற கல்வி வாய்ப்பை/scholarship ஐ, அது நிறையோ அல்லது குறையோ, அவர்கள் பயன் படுத்தி முன்னேற தான் முயல வேண்டும். அதை விட்டு விட்டு குறைகளை காட்டி அவர்கள் படிப்பதை நிறுத்த கூடாது என்பது என்னுடைய எண்ணம். மேலும் சுய நிதி பொறியியல் கல்லூரிகளின் கல்வியின் தரம் பற்றி நாம் விவாதிப்பது மிக்க சரி என்ற போதும் அதையோ காரணம் காட்டி SC/ST மாணவர்களுக்கு சுய நிதி பொறியியல் கல்லூரிகளிள் SC/ST scholarshipல் கற்க அனுமதி அளிக்க கூடாது என்பது சமுக முன்னேற்றத்துக்கு பின்னடைவை தானே ஏற்படுத்தும் ? அரசு SC/ST பிரிவினருக்கு அளிக்க வேண்டிய வேலைகளை backlog ல் வைப்பதை/தவறை காரணம் காட்டி SC/ST பிரிவினருக்கு வேலை வாய்ப்பில் ஒதுகிடு தேவை இல்லை என்று கூற முடியுமா ?

  8. அக்கா டயனா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இது போன்ற பாஸிடிவே எண்ணம் தான் நமக்கு வேண்டும்.இருவது ஆண்டுகளுக்கு முன்னால் நான் படிக்க வில்லை என்றால் எனக்கு வேலை கிடைக்குமா கிடைக்காத என்று யோசனலியல் இருந்து படிக்காமல் விட்டுஇருந்தால் நான் இன்று பொறியியில் அராக மாரி, நல்ல வெலைஐல் இருந்துகொண்டு என்னாலான உதவிகளை என்மக்களுக்கு செய்துகொண்டு வருகேரேன். வாய்ப்பு கிடைக்கும் பொழுது படிப்பது நல்லுது .காலம் மாறும் ….அப்பொழுது நிச்சியமாக வேலை கிடைக்கும்.

  9. சகோதரி டயானா அரசு பள்ளிகல் எல்லாம் மோசமாக இல்லை ஒரு சில பள்ளிகளைத்தவிர எங்கள் பகுதியில் இருக்கும் அரசு பள்ளி நன்றாகவே உள்ளது கட்டிட வசதி மட்டும் இல்லாமல் ஆசிரியர்களும் நல்ல அனுபவம் வாய்ந்தவர்களே அரசு பள்ளியில் அனைத்தும் இலவசம் என்ன 8 மணி ஸ்டடி படி படினு டார்ச்ச்ர் பண்ணி எப்பிடியாவது முழு புத்தகத்தையும் மனப்பாடம் பண்ண வைக்கிற நடைமுறை மட்டும் அரசு பள்ளில கிடையாது பாடம் நடத்திட்டோம் நீ படிச்சா படி இல்லனா எப்பிடியும் போ அப்பிடினு நினைக்கிறதுதான் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆனா கல்லூரிகள கட்டணமும் கட்டி நல்ல ஆசிரியர்களும் இல்லாம ஆய்வகங்களும் இல்லாம தனியார் முதலாளிகள் கொழுப்தற்க்கு தான் இந்த திட்டம் என்ற உணர்விலதான் சொன்னேன் ம்த்தபடி அதை பயண்படுத்தி முன்னேறகூடாதுனு சொல்ல வில்லை

    • சகோதரர் திரு ஜோசப், ஒரு சில பள்ளிகளைத்தவிர பெரும்பான்மையான தமிழ்நாட்டரசு பள்ளிகள் மிக்க மோசமான உள்கட்டமைப்பு இன்றியும் ஆசிரியர்கள் இல்லாமலும் தானே உள்ளன. நேற்று கூட வினவு இணையதளத்தில் ஒரு கட்டுரை கண்டேன். அதில்…,””””தனியார் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருக்கிறார். அரசு பள்ளிகளில் நாற்பது சதவீத கல்வி போதனை நேரத்திற்குதான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மொத்தமாக பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை நாற்பதால் வகுத்து அந்த எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிப்பதால் பிரச்சினை தீராது. அரசு இதனைத்தான் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஐந்து வகுப்பு வரை இருந்தால் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். ஒரே ஒரு மாணவர் இருக்கும்பட்சத்தில் கூட அதற்கு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். ஐந்தாம் வகுப்பு முடிக்கும் மாணவருக்கு இவ்வளவு தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்ணயித்து விட்டால் எப்படியாவது முயன்று ஆசிரியர்கள் கற்பித்து விடுவார்கள். ஆனால் பாடத்திட்டத்தை இதுதான் என வரையறுத்து கொடுத்து விட்டு ஆசிரியர்களை முறையாக நியமிக்காவிடில் அரசு பள்ளிகள் என்றுமே முன்னேற முடியாது.”””என்று கூறப்பட்டுள்ளது. இதனை நம்மால் மறுக்கமுடியுமா ?
      2011-12 கல்வியாண்டுக்கு முன் வரை முழு SC/ST scholarship இல்லாமையால் அவர்களால் professional course கறக இயலவில்லை.அவ்வாண்டுக்கு பின் “முழு SC/ST scholarship” உள்ளதால் தற்போது கற்கின்றனர். 500 க்கும் மேல் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கல்வி தரத்தில் முதல் 100 to 150 கல்லூரிகளை SC/ST மாணவர்கள் counseling ல் தெரிவு செய்து படித்து முன்னேற வேண்டும் என்பது தான் என் ஆவல். அவர்களுக்கு சென்னையில் உள்ள சிவ நாடார் பொறியியல் கல்லூரி[100% government quota seats], கிரசன்ட் பொறியியல் கல்லூரி போன்ற நல்ல தரமான கல்லூரிகளை தமிழகம் எங்கும் தெரிவு செய்ய நாம் உதவலாமே!

      • பாருங்க எப்படி சேம்சைடு கோல் போடுறீங்க! இன்ஜினியரிங் கல்லூரிகள்ள தரமுன்னா அது அண்ணா பல்கலை தொடங்கி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிங்கதான். அங்க எல்லாம் தலித்துங்க உள்ளிட்டு எல்லாருக்கும் இட ஒதுக்கீடு இருக்கு. பெரிய நிறுவனங்களே இந்த கல்லூரிங்கள்ல இருந்தான் கொஞ்சமாச்சும் வேலைக்கு ஆளெடுக்கிறாங்க. ஆனா நீங்க மஞ்ச கடுதாசி கொடுத்துட்டு திவாலாகுன சிவசங்கரன் கல்லூரி, ஜேப்பியார் கல்லூரிக்கெல்லாம் ஆள் பிடிக்கிறீங்க! இதுல இருந்து என்ன தெரியுது? தரமான அரசு கல்லூரிகள்ள தலித்துங்க படிக்க கூடாதுங்கிறதுதான் உங்க கொள்கையா?

  10. பாபு அண்ணா ,

    உங்கள் வாழத்துதளுக்கு மிக்க நன்றி அண்ணா. நீங்கள் செய்யும் எளியோருக்கு கல்வி கற்பிக்க உதவி செய்யும் சேவையை விட வேறு என்ன நல்ல சேவை இவ்வுலகில் இருக்க முடியும் ? உங்கள் கல்விச்சேவைத்தொடர என் வாழ்த்து. வேலை கிடைப்பது ஒரு புறம் இருப்பினும் , கல்வி கற்பது என்பது SC/ST மாணவர்கள் உட்பட அனைவரின் உரிமை தானே ? என்ற உங்கள் கருத்து எனது வாதத்துக்கு வலிமை சேர்கின்றது ஆமாம் இருபது ஆண்டுகள் முன்பு கல்வி கற்ற நீங்கள், இப்போது வங்கி கல்விக்கடனில் கல்வி கற்ற என்னை அக்கா என்றழைக்கின்றிர்களே ! தமக்கையா அல்லது தங்கையா அண்ணா ?

  11. “இதன்படி பார்த்தால் சமூகத்தில் ஏற்படும் எத்தகைய விழிப்புணர்வும் இம்மக்களை கடைசியில்தான் எட்டும். அதனால்தான் பொறியியல் படித்தால் வேலை கிடைப்பது நிச்சயமில்லை, படிப்பதற்கு அதிக பணம் புரட்ட வேண்டும் என்ற யதார்த்தத்தின் படி மற்ற பிரிவு மக்கள் அதை புறக்கணிக்கத் துவங்கும் பொழுது தலித் மக்கள் அதில் அதிகம் சேர்கிறார்கள் என்பது வளர்ச்சியா இல்லை ஏமாற்றுதலா?”

    ஆகவே தோழர்கள், ‘பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது, கிடைத்தாலும் முன்பு போல சம்பளம் கிடைக்காது’ என்னும் உண்மையை தலித் மக்களுக்கு விளக்கி, உணர்த்தி அவர்களை பொறியியல் படிப்பில் சேருவதிலிருந்து தடுத்து, அவர்களுடைய நிலமைக்கு தரகு முதலாளிகளும், இந்து பார்ப்பன பாசிச மோடி அரசாங்கமும்தான் காரணம் என்ற நிலையிலேயே தொடர்ந்து மூளைச் சலவை செய்யும் பணியைத் தொடர வேண்டும்.

    • திரு மணவை சிவா,

      வினவை நீங்கள் செய்யும் கிண்டல் கேலி எல்லாம் ஒரு பக்கம் இருந்தாளும் , SC/ST வகுப்பு மாணவர்களை பொறியியல் படிப்பில் சேருவதிலிருந்து தடுக்க வினவுக்கு எதுவும் உள் நோக்கம் இல்லையே ! அவர்கள் 2011-12 முதல் கொடுக்கபடும் SC/ST மாணவர்களுக்கான முழு scholarship பற்றி அறியாததால் இக் கட்டுரையை எழுதியுள்ளார்களல்லவா ? அத் தவறை மட்டும் சுட்டி காட்டினால் போதுமே.இந்த விசயத்தில் வினவு இணையதளத்தார் காட்டும் மவுனமுங்களின் நகைசுவைக்கு இடமளிக்கின்றதென்று நினைக்கின்றேன். வினவு இணையதளத்தார் மூளைச் சலவை செய்யவேண்டியத்தேவை என்ன இருகின்றது ?

      //ஆகவே தோழர்கள், ‘பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது, கிடைத்தாலும் முன்பு போல சம்பளம் கிடைக்காது’ என்னும் உண்மையை தலித் மக்களுக்கு விளக்கி, உணர்த்தி அவர்களை பொறியியல் படிப்பில் சேருவதிலிருந்து தடுத்து, அவர்களுடைய நிலமைக்கு தரகு முதலாளிகளும், இந்து பார்ப்பன பாசிச மோடி அரசாங்கமும்தான் காரணம் என்ற நிலையிலேயே தொடர்ந்து மூளைச் சலவை செய்யும் பணியைத் தொடர வேண்டும்.//

  12. ஆமாக்கா, மக்கள் பணத்த எடுத்து தனியார் முதலாளிங்களுக்கு அள்ளிக் கொடுக்கறத தலித்துக்களுக்கான உதவின்னு அதாங்க, கொள்ளிய எடுத்து முதுக தேய்க்கிற மாதிரி இருக்கு உங்க சிந்தனை! எஸ்எடி மாணவர்கள் ஸ்காலர்ஷிப் மூலம் அதிகம் சேரும் போது மத்த சாதி மாணவர்கள் அதிகம் சேராம 1 இலட்சம் சீட்டு வேகண்டா இருக்கே அதுக்கு உங்க பதில் என்ன? எல்லா சாதி மாணவருக்கும் அரசு உதவி பண்ணி கல்லூரி முதலாளிங்கள வாழவைக்கலாமே? அப்பதானே நம்ம தலித்துக்களும் படிக்க முடியும்?

  13. திரு மதுரை வீரன், உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் ஒரே பதிவில் பதில் அளிக்கமுயலுகின்றேன்.

    திரு மதுரை வீரன் : எஸ்எடி மாணவர்கள் ஸ்காலர்ஷிப் மூலம் அதிகம் சேரும் போது மத்த சாதி மாணவர்கள் அதிகம் சேராம 1 இலட்சம் சீட்டு வேகண்டா இருக்கே அதுக்கு உங்க பதில் என்ன?

    என் பதில் : முழுமையான SC/ST scholarship கிடைப்பதால் அவ்வாய்ப்பை பயன் படுத்தி இந்த கல்வியாண்டு [2014-15] 30,000 SC/STவகுப்பு மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர்.அவர்களுக்கு கிடைக்கும் அறிய வாய்ப்பு இது.
    single window system: 69 % Rule of Reservation:
    மொத்த எண்ணிக்கை : 2,05,000 seats
    அனைத்து மாணவர்களும் சேர்ந்தது :1,26,000 seats
    SC/ST மாணவர்களுக்கான ஒதுக்கிடு : 19% [42,255 பேர்]
    SC/ST மாணவர்கள் சேர்ந்தது : 70% [30,000 பேர்]
    SC/ST மாணவர்கள் சேராதது : 30%[12,676 பேர்]
    OC, BC, BCM (BC Muslim), MBC & DNC மாணவர்களுக்கான ஒதுக்கிடு : 81%[1,66,050]
    OC, BC, BCM (BC Muslim), MBC & DNC மாணவர்கள் சேர்ந்தது =Total seats – vacant seats – SC/ST ஒதுக்கிடு
    2,05,000 – 80,700 – 42,255 =82,045 [50%]

    இந்த கணக்கின் படி SC/ST மாணவர்கள் தமக்கு அளிக்கப்பட்ட ஒதுகிட்டில் 70% இடங்களையும் ,OC, BC, BCM (BC Muslim), MBC & DNC மாணவர்கள் தமக்கு அளிக்கப்பட்ட ஒதுகிட்டில் 50% இடங்களையும் பூர்த்தி செய்து உள்ளார்கள் என்பது நமக்கு புலனாகிறது. SC/ST மாணவர்கள் அதிக அளவிற்கு பொறியியல் கல்வியில் சேர்ந்தமைக்கு காரணம் அவர்களுக்கு அளிக்கப்படும் “முழுமையான SC/ST scholarship” மட்டுமே ஆகும். அதை அவர்கள் பயன் படுத்தி கொண்டு பொறியியல் கல்வி கற்று முன்னேற முயலுகின்றனர். OC, BC, BCM (BC Muslim), MBC & DNC மாணவர்களுக்கும் “முழுமையான கல்வி scholarship” கிடைக்கும் என்றால் அவர்களும் அதிக அளவில் பொறியியல் கல்வியில் சேருவார்கள்.

    திரு மதுரை வீரன் : எல்லா சாதி மாணவருக்கும் அரசு உதவி பண்ணி கல்லூரி முதலாளிங்கள வாழவைக்கலாமே? அப்பதானே நம்ம தலித்துக்களும் படிக்க முடியும்?

    என் பதில் : “முழுமையான SC/ST scholarship” பொறியியல் கல்லூரி sc/st மாணவர்களுக்கு தேவை இல்லை என்று கூறுகின்றிர்களா ? ஆம் /இல்லை என்று நேரடியாக பதில் கூறவும்.

    திரு மதுரை வீரன் : சிவசங்கரன் கல்லூரி, ஜேப்பியார் கல்லூரிக்கெல்லாம் ஆள் பிடிக்கிறீங்க! இதுல இருந்து என்ன தெரியுது? தரமான அரசு கல்லூரிகளில் தலித்துங்க படிக்க கூடாதுங்கிறதுதான் உங்க கொள்கையா?

    என் பதில் : அரசு கல்லூகளில் SC/ST மாணவர்களுக்கான ஒதுக்கீடு முடிந்த உடன் தனியார் கல்லூரிகளில் சிறந்தவற்றைதெரிவு செய்து [சிவ நாடார் பொறியியல் கல்லூரி[100% government quota seats], கிரசன்ட் பொறியியல் கல்லூரி போன்ற நல்ல தரமான கல்லூரிகளை] “முழுமையான SC/ST scholarship” மூலம் படிக்க சொல்கின்றேன்.[சிவசங்கரன் கல்லூரி, ஜேப்பியார் கல்லூரிக்ளை எல்லாம் நான் தரமான கல்லூரி என்று உதாரணம் காட்டவில்லை]

    திரு மதுரை வீரன் : ஆனா மெஜாரிட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் ஏன் ஏழைங்களா இருக்காங்க? இல்லை உங்க குடும்பம் மாதிரி ஒன்னு ரெண்டு பேரு முன்னேறிட்டா எல்லா ம்க்களும் முன்னேறுனதா அர்த்தமா?

    என் பதில் : ஏழைங்களா இருக்கும் மெஜாரிட்டி SC/ST மக்கள் சுய முன்னேற்றத்துக்காக முயலக்கூடாதா? அதற்காக அவர்கள் கல்வி கற்க கூடாதா ?

    SC/ST மக்கள் கல்வி கற்காமல் வேறு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கூற வருகின்றிர்கள்?

    திரு மதுரை வீரன் : அரசாங்கம் உதவி பண்ணி படிக்கிறதுல என்ன தப்புன்னா, அரசு பள்ளி, கல்லூரிய மூடுறது நியாயமுன்னு வருது? அரசு மருத்துவமனையை தரமா நடத்தணுமுனு வினவு சொன்னா நீங்க அப்பல்லோவில் சிகிச்சை பாக்க அரசு உதவி செஞ்சா நல்லதுதானேன்னு சொன்னா சரியா?

    என் பதில் : வினவு இணைய தளமும் ,திரு மதுரை வீரன் அவர்களும் போராடி அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடமை ஆக்கும் வரை, SC/ST மக்கள் “முழுமையான SC/ST scholarship” மூலம் எங்கு கல்வி கற்க வாய்ப்பு கிடைத்தாலும்[அரசு /தனியார் ] அதனை பயன் படுத்தி கல்வி கற்று முன்னேற முயல வேண்டும் என்பது என் எண்ணம்.

    தமிழ்நாட்டரசு இப்போது அளிக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் வினவு தளத்தார் மற்றும் நீங்கள் , உங்கள் குடும்பத்துடம் சேர்ந்து பயன் அடைவீர்களா மாட்டிர்களா ?

    நன்றி திரு மதுரை வீரன்

  14. திரு மதுரை வீரன், உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் ஒரே பதிவில் பதில் அளித்து உள்ளேன். அது போல என் கேள்விகளை இங்கு வைக்கின்றேன். பதில் தாருங்கள்.
    1) SC/ST பிரிவு மாணவர்களுக்கு தமிழ்நாட்டரசு 2011-12 கல்வியாண்டில் இருந்து கல்விக்கு கொடுக்கும் “முழுமையான SC/ST scholarship” தேவையா அல்லது தேவையில்லையா ?
    2)SC/ST பிரிவு மாணவர்களுக்கு தமிழ்நாட்டரசு 2011-12 கல்வியாண்டில் இருந்து கல்விக்கு கொடுக்கும் “முழுமையான SC/ST scholarship” தேவையில்லை என்று கூறுவிர்கள் எனில் அதற்க்கான காரணத்தை அடுக்கவும்.
    3)SC/ST பிரிவு மாணவர்கள் தமிழ்நாட்டரசு 2011-12 கல்வியாண்டில் இருந்து கல்விக்கு கொடுக்கும் “முழுமையான SC/ST scholarship” மூலம் கல்வி கற்காமல் வேறு என்ன செய்ய வேண்டும் என நினைக்கின்றீர்கள் ?
    4)தனியார் மயம் ஆக உள்ள கல்வி நிறுவனங்கள் ,அரசுடமையாகும் வரை SC/ST பிரிவு மாணவர்கள் “முழுமையான SC/ST scholarship” மூலம் தனியார்/அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி கற்க கூடாதா ?
    5)தனியார் மயம் ஆக உள்ள கல்வி நிறுவனங்கள் அரசுடமையாகும் வரை SC/ST பிரிவு மாணவர்கள் வேறு என்ன செய்ய வேண்டும் ?
    எனக்கு பதிலளிக்க முயலுங்கள் திரு மதுரை வீரன் நன்றி.

  15. திரு மதுரை வீரன் மற்றும் திரு ஜோசப்,, இக் கட்டுரையும் இது தொடர்பான திரு மதுரை வீரன் மற்றும் திரு ஜோசப் ஆகியோர் பதிவுகளும் என்னை தூக்கத்தை தொலைக்கும் அளவுக்கு அதிகமாக சிந்திக்க வைக்கின்றன. இவர்கள் இருவரும் கூறுவது போல தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பயன் ஏற்படும் வகையில் SC/ST மாணவர்களுக்கு அளிக்கப்படும் “முழுமையான கல்வி scholarship” தவறா என்ற கேள்விக்கு நான் பதில் அளிக்கும் அதேசமயம் இது தொடர்பாக பல்வேறு ஒப்புமை கேள்விகளும் என்னுள் தவிர்க்க இயலாமல் எழுகின்றது. அவற்றை பற்றி ஆய்வு செய்யபோகிறேன்.

    *****ரேசன் கடைமூலம் குறைந்த விலையில் விற்கபடும் சக்கரை மூலம் எளிய மக்கள், நடுத்தர மக்கள் , உயர் நடுத்தர மக்கள் என்று அனைவரும் பயன் அடையும் அதே சமயத்தில் சக்கரை உற்பத்தி செய்யும் முதலாளிக்கு ஒரு கிலோவுக்கு Rs 5 லாபம் கிடைக்கிறது அல்லவா ? 1 கோடி ரேசன் அட்டைகள் தமிழகத்தில் இருக்குமெனில் ஒரு மாதத்துக்கு 1 * 5 = 5 கோடி லாபமும் , ஒரு ஆண்டுக்கு 1 * 5 * 12 = 60 கோடி லாபமும் குறைந்த பட்சம் சக்கரை உற்பத்தி செய்யும் முதலாளிக்கு கிடைக்கிறது அல்லவா ? எனவே ரேசன் சக்கரையை தடைசெய்யலாமா என்ற கேள்வி எழுகின்றது அல்லவா ?

    ***** இந்தியாவில் வாழும் 1 கோடிக்கும் மேல் உள்ள உயர் நடுத்தர வர்க்க குடும்பங்கள் சமையல் Gas க்கு மானியம் பெருகின்றார்களே ! அப்படி எனில் ஒரு gas calender க்கு Rs 400 மானியம் என்றாலும் ஒரு ஆண்டுக்கு 12 calender எனில் 1கோடி & 12 * 400 = Rs 4800 கோடிகள் மக்கள் பணத்தை இந்திய அரசாங்கம் பணக்கரர்களுக்காக தேவை இன்றி செலவு செய்கின்றது அல்லவா இதனை தடை செய்ய நீங்கள் கோராதது என் ?

    *****நம் தொழிலாளர்கள் ESI மூலம் பெரும் மருத்துவ நல திட்டங்கள் அனைத்தும் தனியார் மருத்துவ மனைகளுடன் தான் இணைக்க பட்டு உள்ளது என்பதால் நம் தொழிலாளர்களை பார்த்து ESI மூலம் பயன் பெறக்கூடாது என்று நாம் கூறுவது தவறு அல்லவா ? தனியார் மருத்துவ மனைகளுக்கும் லாபம் வரும் அதே நேரத்தில் நம் தொழிலாளர்களும் பயன் அடைவது உண்மை தானே? இத் திட்டத்தை தடை செய்வது சரியா ?

    ***உதாரணத்துக்கு ஒரு தொழில்சாலையில் ஒரு ஆண்டு லாபம் Rs 100 கோடி என்று இருக்கும் போது , அந்த லாபம் முழுவதும் தொழில் பங்குதாரர்களுக்கே செல்லும் என்ற நிலையிருக்கும் போது , அதை காரணம் காட்டி தொழிலாளர்கள், முதலாளிகள் தொழில்சாலையில் வேலையே செய்ய கூடாது என்று கூறினால் அது சரியா ?தவறு தானே ? தொழிலாளர்கள் தொழில்சாலையில் வேலைக்கு செல்லவில்லை என்றால் அவர்கள் வயிற்றுக்கு உணவளிப்பது யார் ?

    ****என் கேள்வி :::: இப்படியாக அனைத்து விடயத்திலும் முதலாளிகளுடன்,பணக்காரர்களுடன் எழுதப்படாத சமரச ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ள இந்த ஒட்டுமொத்த சமுகத்துக்கு, SC/ST மாணவர்கள் அவர்களுக்கு அளிக்கப்படும் “முழுமையான கல்வி scholarship” மூலம் அரசு/தனியார் கல்வி நிலையங்களில் படிப்பதில் மட்டும் ஆயிரம் குறைகளைகளை காண்பது ஏன்? இது SC/ST மக்கள் மீது கருத்தியல் தளத்தில் நிகழ்த்த படும் சமுக நீதிக்கு எதிரான தாக்குதல் அல்லவா ?

    நன்றி திரு மதுரை வீரன் மற்றும் திரு ஜோசப்

  16. திரு மதுரை வீரன் மற்றும் திரு ஜோசப், எனக்கு சில நாட்கள் அவகாசம் கொடுங்கள். என் கணவர் ஒரு புத்தகத்தை படிக்கும் படி பரிந்துரை செய்து உள்ளார்.அதனை நூலகம் சென்று படித்து கொண்டு உள்ளேன். அப் புத்தகம் மிக பழமையானது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த கம்யூனிஸ்ட் காரரால் எழுதப்பட்டது அந்த புத்தகம். அதன் பெயர் மூலதனம்.எழுதிய கம்யூனிஸ்ட் காரர் பெயர் மார்க்ஸ். நமது தாத்தா பெரியார் போன்றே நீண்ட தாடியுடன் உள்ளார். அவர் சிந்தனைகள் மிகதெளிவாகவும் , அறிவிற்கு உட்பட்டும் உள்ளன. அந்த நூலை படித்து விட்டு அதன் பின் இந்த ஒட்டு மொத்த சமுகமும் எப்படி பணக்கரர்களுக்கு , முதலாளிகளுக்கு சாதகமாக எழுதப்படாத சமரச ஒப்பந்தம் செய்து கொண்டு பிழைப்பு நடத்துகின்றது என்பதையும் ,அதே சமையம் பொருளாதார நிலையில் பல பிரிவுகளாக உள்ள இச் சமுகத்தின் மேல் நிலையில் உள்ள பிரிவினர் ,நடுத்தர பிரிவினர் ஆகியோர் தமக்கு கீழ் உள்ள நலிந்த பொருளாதார பிரிவினரை[SC/ST மக்களை] எப்படி எல்லாம் ஏமாற்றி பணம் சம்பாரிக்க முயல்கின்றது என்பதையும் சிறு கட்டுரையாக எழுதி உங்கள் தவறான கருத்துகளை மாற்றுகின்றேன்.

    எங்கள் வலிமிகு வாழ்வின் நல்திசை காட்டும் கலங்கரைவிளக்கமாக மூலதனம் எழுதிய திரு மார்க்ஸ் இருப்பார் என்ற நம்பிக்கை என்னுள் இப் புத்தகத்தை படிக்கும் போது எழுகின்றது

  17. டயானா அவர்களுக்கு,

    தங்கள் பின்னூட்டங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. குறிப்பாக 16. அது வேடிக்கையாகவும் இருக்கிறது. எல்லாவற்றையும் 3 முறை படித்தேன். சரியான கேள்விகளும் கேட்டிருக்கிறீர்கள். நன்று.

    நன்றி.

    • உங்கள் கருத்துகளுக்கு நன்றியையா! வேலையிலா ,வேலைத்தேடும் பட்டதாரியாக இருப்பதால் பகல் பொழுதில் வீட்டு வேலைகளை முடித்து விட்டு நூலகம் செல்ல நேரம் கிடைக்கின்றது.தமிழ் இலக்கணத்தையும் பிற நாவல்களையும், நூல்கலையும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. திரு ராஜ் கொதமன் என்ற தமிழ் பேராசிரியர் எழுதிய காலச்சுமை என்ற நாவலையும் , திரு மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்ற அரசியல் பொருலாதாரம் பற்றிய புத்தகத்தையும் இணையாக படித்துக்கொண்டு உள்ளேன். திரு ராஜ் கொதமன் அவர்கள் காலச்சுமை என்ற நாவலை சுய சரிதை போன்று எழுதியுள்ளார். அதில் அவர் ஒடுக்கப்பட்ட சமுகத்தை சேர்ந்த அவர் நண்பர் திரு சோழராசன் அவர்களின் உண்மை கதையும் வரும்.காரைக்கால் வட்டாரத்தை சேர்ந்த திரு சோழராசன் அவர்கள் சமுகத்தின் அடிநிலையில் இருந்து படித்து asst professor வேலையில் அரசு கல்லூரியில்கணித துறையில் இருப்பார். அவர் ஒடுக்கப்பட்ட சமுகத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால் மாணவர்கள் அவரை ஒடுக்கப்பட்ட சமுகத்தை இழிவுபடுத்த நாகை வட்டாரத்தில் பயன் படுத்தும் “செடி” என்ற வடாரவழக்கில் பெயரிட்டு அழைப்பார்கள். அவர் வகுப்பில் நுழையும் போது செடியை பிடிங்கி ஆசிரியர் மேசையில் வைப்பார்கள். அவர் கல்லூரி முதல்வர் பிராமணர் என்பதால் அவரும் தருனம் கிடைக்கும் போது எல்லாம் மட்டம் தட்டுவார்.ஒரு நாள் கிருஸ்துவர்கள் நடத்தும் கல்லறை திருநாளுக்கு திரு சோழராசன் அவர்கள் கல்லூரி முதல்வரிடம் விடுப்புக்கு அனுமதி கோருவார். ஹிந்து SC உங்களுக்கு ஏன் விடுப்பு வேண்டும் என்று முதல்வர் கூறி விடுப்புக்கு மறுப்பு தெரிவிப்பார். ஆனால் அதே காரணத்துக்காக வேறு ஒரு பிராமண ஆசிரியருக்கு முதல்வர்விடுப்புக்கு அனுமதி கொடுத்து இருப்பார். இதை அறிந்த திரு சோழராசன் முதல்வரிடம் அவரின் ஒரவஞ்சனையான முடிவை சுட்டிக்காட்டி முதல்வரை வாயடைக்க செய்வார். போர்குணமமிக்க அந்த ஆசிரியர் civil service exam எழுதி தேர்சி பெற்று Asst commissar ஆக customs துறையில் சேர்ந்து மிக்க கண்டிப்பாகவும், நாணயத்துடன் வேலை செய்து கள்ளகடத்தலை நாகை வட்டாரத்தில் குறைத்தார். இத்தகைய போர் குணத்தை தான் நான் நமது SC /ST மாணவர்களிடம் நான் எதீர்பார்கின்றேன்.

  18. நல்ல கட்டுரை. உண்மையை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள்.

    அண்ணா யுனிவர்சிட்டி, பி.எஸ்.ஜி, சி.ஐ.டி என முதன்மை கல்லூரிகள் ஒருசில கல்லூரியில் படிப்பவர்களுக்கு மட்டும் தான் ஓரளவுக்கு பிரச்சணை இல்லை. அங்கேயும் எல்லாருக்கும் வேலை கிடைக்குறது இல்ல. ஆபர் லெட்டரை வெச்சிகிட்டு நெறைய பேரு அலையறாங்க.இன்னும் கம்பெனி கூப்டலயாம். ஒரு வருசம் ஆகுது. கேட்டா பெஞ்ச் ஸ்டென்த் அதிகமா இருக்குனு சொல்றாங்களாம். முன்னாடி ஆயிர கணக்கில் எடுத்துக்கொண்டிருந்த கம்பெனிகள் இப்போ கம்மியா தான் எடுக்குறாங்க.வேலை கிடைச்சவங்க கூட இப்போ ஐபிபிஎஸ் னு பேங்க் கோச்சிங் போய்கிட்டு இருக்காங்க.

    இவங்க நிலையே இப்படினா தெவுக்கு தெரு தொறந்து வெச்சிருக்கும் கல்லூரியில் படிப்பவர்கள் நிலை ரொம்ப மோசம். தமிழ்நாட்டில் பெட்டிகடைகளின் எண்ணிக்கையைவிட பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

    இதுக்கு அள்பிடிக்குறது அவங்களுக்கு தனி கலை. முன்னாடி எல்லாம் எங்க ஊரு இங்கிலீஸ் மிடியம் ஸ்கூல் டிச்சர்களை கேன்வாஸ்னு அனுப்பிவெப்பாங்க. அவங்க ஊருக்குள்ள வந்து இங்கிலீஸ் தான் உலகம் அது இதுனு பேசி பிள்ள பிடிப்பாங்க. இப்போ அதே புள்ள புடிக்குற வேலைய இன்ஜினியரிங் காலேஜ்காரனும் பன்றான்.

    உங்க பையன் வாழ்க்கையில முன்னேற வேண்டாமா? உங்களுக்கு அந்த ஸ்காலர்ஷிப் இருக்கு, பேங்குல லோன் இருக்கு, உங்க பையன் எடுத்த மார்க்க வெச்சி பீஸ் கொரைப்போம், இன்ஜியர்னாதான் நம்ம சாதிய மதிப்பான். அது இது மயிறு மட்டினு ஏதையாவது பேசி அவங்க வலையில விழ வெச்சிருவாங்க. மேலே டயானா பேசிறமாதிரியே பேசி ஆள் பிடிப்பாங்க.

    இதுல அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது எங்கள மாதிரி எஸ்சி தான். கடன்வாங்கியாவது புள்ளைகள படிக்கவெச்சி ஆளாக்கிறனு நினைக்குறதால் ஈஸியா ஏமாதிருதானுவ. நான் பாலிடெக்னிக் படிச்சிருந்தா இந்நேரத்துக்கு எதாவது வேலை கிடைச்சிருக்கும். டயானா மாதிரி தான், எதோ ஒரு கேன்வாஸ் பன்ற மேடம் எங்கப்பா கிட்ட பிரைன்வாஷ் பண்ணி தனியார் பொறியியல் கல்லூரில சேக்கவைச்சாங்க. இப்போ எங்க வேலை கேட்டாலும் இன்ஜினியர் வேண்டாம்பா. டிப்ளமோ போதும்னுறான்.

    மொதல்ல சுயமுன்னேற்றம், மயிறுனு பேசு ஆள்பிடிக்குறவங்கள பத்தி எழுதுங்க சார்.

    • திரு ரமேஷ் அவர்கள் ஆபர் லெட்டர்,பெஞ்ச் என்று எழுதியதை வைத்து அவர் கணினி அறிவியல் CSE ,IT படித்தது இருப்பார் என்று தோன்றுகிறது. அதன் பின் வேலை கிடைக்காத வருத்தமும் அவர் எழுத்துகளில் எதிரொலிக்கிறது. அவர் வங்கிக்கல்விகடன் மூலமாக அல்லது வேறு கடன் மூலமாக முழு கல்விகடடண scholarship கிடைக்கும் 2011-12 கல்வியாண்டுக்கு முன் படித்து இருப்பார். எனவே தான் இப்போது நடைமுறையில் உள்ள முழு கல்விகடடண scholarship பற்றி அவருக்கு தெரியவில்லை. பல்வேறு முற்போக்கான அரசியல், பொருளாதார, சமுவியல்,கல்வி கட்டுரைகளை எழுதும் வினவு தளம் 2011-12 கல்வியாண்டுக்கு பின் தமிழ்நாட்டரசால் வழங்கப்படும் முழு கல்விகடடண scholarship பற்றியறியாத நிலையில் , அந்த அரசானை [GO ]இக் கட்டுரையில் சுட்டி காட்டபடாதநிலையில் நான் அந்த விசயத்தை மேற்கோள் காட்டி விவாதிக்கின்றேன்.வங்கிக்கடன்பட்டு MCA முடித்து வேலை தேடும் நான், கடன் படாமல் SC/ST மாணவர்களை முழு கல்வி கடடண scholarship மூலம் BE,Btech,MBBS,B.Pharm, போன்ற professional education படிக்க சொல்லுவதில் திரு ரமேஷ் அவர்கள் கூறுவது போன்று “டயானா பேசிறமாதிரியே பேசி ஆள் பிடிப்பாங்க” என்று ஆள் பிடிக்கவேண்டிய நிலை எனக்கு இல்லை. முழு கல்விகடடண scholarship கிடைத்த 2011-12 கல்வியாண்டுக்கு முன் கல்விகடடண scholarship இல்லாமல் BE படித்த திரு ரமேஷ் அவர்கள், இன்று அதே BE யை முழு கல்விகடடண scholarship மூலம் SC/ST மாணவர்கள் படிக்கக்கூடாது என்று கூறுவது சிறிதும் பொருத்தமாக இல்லை. ஆண்டு ஒன்றுக்கு Rs 70 யை SC/ST மாணவர்கள் படிப்புக்காக[professional education scholarship] தமிழ்நாட்டரசு ஒதுகீடு செய்து உள்ளது, பயன் படுத்தபடாமல் போக வேண்டுமென்பது தான் திரு ரமேஷ் அவர்களின் எண்ணமா ? அதனை முழுமையாக பயன்படுத்துங்கள் என்று கூறும் என்னை பார்த்து திரு ரமேஷ் அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் தவரானவையாகும்.

      நன்றி திரு ரமேஷ்

  19. திரு ரமேஷ்,ஆண்டு ஒன்றுக்கு “”””Rs 70 கோடியை”””” யை SC/ST மாணவர்கள் படிப்புக்காக[professional education scholarship] தமிழ்நாட்டரசு ஒதுகீடு செய்து உள்ளது, பயன் படுத்தபடாமல் போக வேண்டுமென்பது தான் திரு ரமேஷ் அவர்களின் எண்ணமா ?

  20. டயானா அவர்களுக்கு,

    நீங்கள் கூறும் ஸ்காலர்ஷிப் பற்றி தெரிந்துதான் பேசுகிறேன்.
    உங்களை இப்படி உலகம் தெரியாமல் அப்பாவியாக வளர்த்திருக்கிறார்கள் என்று எண்ணும் போது சற்று வருத்தமாக இருக்கிறது.

    1) முதலில் அரசியல் சட்டங்களையும் அரசாணைகளையும் எப்படி வளைப்பது என்பது கல்லூரி கரன்பான்டென்டுகளுக்கு தெரியும்.

    2) அடுத்து அரசே கட்டணம் கட்டுவது அவர்களுக்கு இன்னும் லாபம். மாணவர்களே சேராமல் இருக்கும் பல பொறியியல் கல்லூரிகள் பெயரளவில் மாணவர்களை சேர்த்ததாக கணக்கு காட்டி பணம் வசூலித்துக்கொள்ளுவார்கள். ஆளும்கட்சியை கவனித்தால் போதும். தொழில் சிறப்பாக நடக்கும். இது தமிழ்நாட்டிற்கு புதிது அல்ல. மருத்துவ கல்லூரி இன்ஸ்பெக்சனுக்கு போலியாக மருத்துவபேராசிரியர்களையும் நோயாளிகளையும் தயாரித்து கணக்கு காட்டி பல கல்லூரிகள் சந்தி சிரித்துள்ளன.

    3)அடுத்து முக்கியமாக எஸ்சி மாணவர்களை இதை காட்டியே கல்லூரிக்குள் இழுக்கிறார்கள். அரசு டியூசன் பீஸ் போன்ற சில பீஸ்களை தான் கட்டும். ஹாஸ்டல் பீஸ்,எக்ஸாம் பீஸ், மெஸ் பீஸ், லேப் பீஸ் இன்னும் பல பெயர்களில் பீஸ் வசூலிப்பது வழக்கமான ஒன்று. வீடு பத்தடி தூரத்தில் இருந்தாலும் பஸ் பீஸ் வேறு கட்ட வேண்டும்.இவை எல்லாவற்றையும்விட ஃபைன் என்ற பெயரிலான வசூல் இருக்கிறதே அதை இதைவிட பெரிய கொடுமை. விடுமுறை எடுத்தால், வருகைபதிவு குறைந்தால் உள்ளிட்டு ஃபைன் என்ற பெயரில்மட்டும் வருடத்திற்கு ஒரு மாணவன் பல ஆயிரங்களை கட்டுறோம்.

    சரி அரசுதான் ஓரளவு பீசை கொடுத்துவிடுகிறது, அதை தாண்டி கல்லூரி பிடுங்கும் தொகையையும் கட்டுவிட்டால் தன் மகன் வாழ்க்கையில் பிழைத்துகொள்வான் என எஸ்சி மக்கள் அங்கு இங்கு பணம் புரட்டி சேர்த்துவிடுகிறார்கள்.

    ஆனால் இன்றைய நிலைமை என்ன?

    மைக்கிரோசாஃட், ஐபிஎம், சிஸ்கோ, வெளியே தெரியாமல் இன்போசிஸ், போன்ற நிறுவனங்களில் வேலை நீக்கம் நடக்கிறது. ஏற்கனவே படிச்சவனுக்கே வேலை இல்லை என்கிறார்கள். நல்ல கல்லூரியில் படித்து ஆபர் லெட்டர் வாங்கியவர்களை கூட இன்னும் பணிக்கு அழைக்காமல் காலம் தாழ்த்துகிறார்கள்.

    சாஃப்ட்வேர் தான் இப்படி என்று இல்லை நோக்கிய கம்பெனிய மூடிட்டான். நிலைமை இப்படி தான் இருக்கிறது.

    அரசு ஸ்காலர்ஷிப் வீணாக போகிறதே என்பதற்காக என் பணத்தையும் சேர்த்து செலவழித்து படுகுழிக்குள் விழ முடியாது. கல்லூரி நடத்துபவனுக்கு தால் லாபம். அரசிடமும் பணம் வாங்கிகொள்கிறான், எங்க அப்பணாத்தாவிடமும் கறந்துவிடுவான். கடைசியா வேலை கிடைக்காம நாங்க அலையனும். உனக்காக இவ்வளவு செலவு பண்ணேனடா வேலை இல்லாம இருக்கியே என வீட்டில் திட்டுவாங்கி குடும்ப அமைதியும் இழக்க வேண்டும். இது தான் உங்கள் விருப்பமா?

    அரசு பீஸ் கட்டுவது என்பது தூண்டில் புழு. அதை காட்டி வேறு பீஸ் மூலம் எங்களிடம் பணம் பிடிங்கிக்கொள்வார்கள். இதன் மூலம் பெரு முதலாளிகளுக்கு வேலை இல்லாத கூட்டம் அதிகரிக்கும். அதை காட்டியே ஏற்கனவே வேலைக்கு இருப்பவர் முதல் புதியவர்களான எங்களுக்கும் சம்பளத்தை குறைப்பார்கள். வாங்கிய கடனை கூட கட்டமுடியாத நிலைக்கு தள்ளப்படுவோம். தலித் மக்களை சுரண்டுவது தான் இதன் நோக்கம்.

    • திரு ரமேஷ்,

      அரசியல் சட்டங்களையும் அரசாணைகளையும் எப்படி வளைப்பது என்பது தெரிந்த கல்லூரி கரன்பான்டென்டுகள்,மாணவர்களே சேராமல் இருக்கும் பல பொறியியல் கல்லூரிகள் பெயரளவில் மாணவர்களை சேர்த்ததாக கணக்கு காட்டி பணம் வசூலித்துக்கொள்ளுதல் , ஹாஸ்டல் பீஸ்,எக்ஸாம் பீஸ், மெஸ் பீஸ், லேப் பீஸ் இன்னும் பல பெயர்களில் பீஸ் வசூலிப்பது,ஃபைன் என்ற பெயரில்மட்டும் வருடத்திற்கு ஒரு மாணவன் பல ஆயிரங்களை கட்டுதல் இவை எல்லாம் SC/ST மாணவர்கள் மட்டும் சந்திக்கும் பிரச்சனைகளா ? அல்லது ஒட்டு மொத்த மாணவர் சமுகமும் சந்திக்கும் பிரச்சனைகளா ? ஒட்டு மொத்த மாணவர் சமுகமும் சந்திக்கும் பிரச்சனை எனில் அதற்காக போராட வேண்டியது யார் ?

      மைக்கிரோசாஃட், ஐபிஎம், சிஸ்கோ, வெளியே தெரியாமல் இன்போசிஸ், போன்ற நிறுவனங்களில் வேலை நீக்கம் செய்தல்,நோக்கிய கம்பெனிய மூடுதல் என்பது SC/ST மாணவர்கள் மட்டும் சந்திக்கும் பிரச்சனைகளா ? அல்லது ஒட்டு மொத்த மாணவர் சமுகமும் சந்திக்கும் பிரச்சனைகளா ?

      அது எல்லாம் சரி.., இன்று MCA ,BE CSE படித்தவர்கள் எல்லாம் வேலைகிடைக்கவில்லை என்பதற்க்கா படித்த கல்வி சாண்றிதழ்களை எல்லாம் கிழித்து எறிந்துவிட்டு கூலி வேலைக்கு செல்வது இல்லையே ஏன் ?

      என்னை அப்பாவியாக வளர்த்தார்களா அல்லது தன் நம்பிக்கை பெற்று வாழும்படி என் தந்தை வளர்த்தாரா என்பதை தாங்கள் வேலை இல்லாத இன்நேரத்தில் ஆய்வு செய்வதை விட ME ,Mtech கல்விக்கு GATE exam எழுதி scholarship பெறும் முடிவு செய்திர்கள் எனில் அதன் பெயர் தான் முன்னேற்றம். UGC-NET lecturer ship examல் 2 மதிப்பெண்கள் குறைவாக பெற்று போன ஆண்டு தவறிய நான் இந்த முறை ,முயல்வதற்கு பெயர் அப்பாவி தனம் அல்ல . நம்பிக்கை,தன்நம்பிக்கை

  21. போராட்டம் மட்டும் தான் தீர்வு. நாம் அனைவரும் தான் போராட வேண்டும். வினவும் அதை தான் சொல்கிறது.

    /ஒட்டு மொத்த மாணவர் சமுகமும் சந்திக்கும் பிரச்சனை எனில் அதற்காக போராட வேண்டியது யார் ?/

  22. போராடவேண்டிய விடயத்தை விட்டுவிட்டு, SC/ST மாணவர்களுக்கு கிடைக்கும் இந்த கல்விச்சலுகை[scholarship] பற்றி அதனை பயன் படுத்த வேண்டாம், தேவையில்லை என நீங்கள் கூறுவது ஏன் திரு ரமேஷ் ?

    • சிஸ்டர் டயானா நீங்க இந்த விசயத்த அப்பாவித்தனமா ஆதரிக்கிறீங்களா இல்லை வஞ்சகத்துடன் பேசுரீங்களானு எனக்கு புரியல அண்ணா யுனிவர்சிட்டில இட ஒதுக்கீட்டின் மூலம் கல்லூரிகள் கிடைக்காதா என்று பார்த்தது அந்தக்காலம் அனா அண்ணா யுனிவர்சிட்டில இருந்து எந்த மாணவணாயாவது நம்ம கல்லூரிக்கு அனுப்பி வைக்க மாட்டார்களா என்று கல்லூரி நடத்துவவர்கள் ஏங்கி அலைவது இந்த காலம் இதை ஏன் சொல்லுறேன்னா சில பொறியியல் கல்லூரிகள் அந்த அளவுக்கு தரம் தாழ்து மாணவர் சேர்க்கைகு கெஞ்சுகின்றன் அர்சிடம் அவர்களிடம் உள்கட்டமைப்பு வசதியோ ஆய்வகங்களோ இல்லாத இல்லை அனால் அவர்கள் ஒரு விசயத்தில் அரசுடன் பேசி பெற்று இருக்கிறார்கள் பேசி என்றால் லஞ்சம் குடுத்து என்றும் வைத்துக்கொள்ளாலாம் அதாவது ஸ் சி /ஸ் டி மாணவர்களை நாங்கள் எங்கள் கல்லூரியில் சேர்த்துக்கொள்கிறோம் அதற்க்கான 4 ஆண்டு செலவு ஆன 3 லட்சம் ரூபாய அரசிடம் இருந்து பெற்றுக்கொள்கிறாரகள் இப்ப அந்த ஆடர கவர்மென்ட் ல இருந்து வாங்கினப்பிறகுகு புரொக்கர் வச்சு ஸ் சி /ஸ் டி பசங்கள தங்கள் கல்லூரியில் சேர்க்க ஒரு மாணாவணுக்கு ரூபாய் பத்து ஆயிரம் வரை கமிசன் தருகிறார்கள் நானும் எம் டெக் முடித்தவன் என்கிற முறையில் எனக்கும் இந்த ஆபர் வந்த்தது நான் அதை செய்ய விரும்பவில்லை அனால் நீங்கள் இதை செய்கிறீர்களோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது தயவு செய்து மாணவர்களின் வாழ்கையில் விளையாடாதீர்கள் அன்புடன் உங்களின் சகோதரன்

      • ஜோசப் தம்பி, இது டயானா சிஸ்டரான்னு எப்படி கன்ஃபார்ம் பண்றீங்க?

        டயானா மேடத்திண்ட பெயருல வரும் கருத்துங்கள,
        வாத பாணி, கோட் ஸ்டைல், கருத்து பொழிவு அல்லாவற்றையும் சீர் இருத்தி பாத்தால் இது நம்ம அண்ணன், சரவணன் எனும் செந்தில்குமரன்தான் ………இது மாரியாத்தா சத்தியமா அரசமரசத்தடி சோசியர் சொன்ன உறுதியான சேதி. அண்ணே இது உங்களுக்கு மூணாவது அவதாரமாண்ணே!

        • திரு வெற்றிவேல் உங்கள்யூகம் சரிப்பட்டதாகவே எனக்கு தெரிகிறது.

          ஆனால்.. ஆண்னாக இருந்தால் என்ன? பெண்ணாக மாறுவேஷம் போட்டால் என்ன? கருத்தை கருத்தால் வெல்லுகிற தகமையை பெற்றிருக்க வேண்டும்.

          சொல்லுகிற கருத்து உலகத்தில் உள்ள 99 வீதமான மனிதவாழ்வை உறுதிப்படுத்த வேண்டும்.

          குண்டுசட்டிக்குள் குதிரையோட்டிய காலம் கழிந்துவிட்ட நேரம் இது.

      • திரு ஜோசப்,

        நான் என் பதில் எண் 15ல் எழுப்பும் கேள்விகளை நீங்கள் கண்டுகொள்ளாமல்,பதிலளிக்காமல் [ரேசன் கடை சக்கரை மூலம் முதலாளிக்கு கிடைக்கின்ற லாபம்,உயர் நடுத்தர வர்க்க குடும்பங்கள் சமையல் Gas க்கு பெறும் மானியம்,ESI மூலம் பெரும் மருத்துவ நல திட்டங்கள் அனைத்தும் தனியார் மருத்துவ மனைகளுடன் தான் இணைக்க பட்டு உள்ளது,ஒரு தொழில்சாலையில் ஒரு ஆண்டு லாபம் Rs 100 கோடி என்று இருக்கும் போது , அந்த லாபம் முழுவதும் தொழில் பங்குதாரர்களுக்கே செல்லும் என்ற நிலை] இப்போது வந்து ” அப்பாவித்தனமா ஆதரிக்கிறீங்களா இல்லை வஞ்சகத்துடன் பேசுரீங்களானு எனக்கு புரியல ” என்று என்னை குற்றம் கூறுவது ஏன் ?

        SC/ST பிரிவு மாணவர்களுக்கு தமிழ்நாட்டரசு 2011-12 கல்வியாண்டில் இருந்து கல்விக்கு கொடுக்கும் “முழுமையான SC/ST scholarship” தேவையா அல்லது தேவையில்லையா ? SC/ST பிரிவு மாணவர்களுக்கு தமிழ்நாட்டரசு 2011-12 கல்வியாண்டில் இருந்து கல்விக்கு கொடுக்கும் “முழுமையான SC/ST scholarship” தேவையில்லை என்று கூறுவிர்கள் எனில் அதற்க்கான காரணத்தை அடுக்கவும். SC/ST பிரிவு மாணவர்கள் தமிழ்நாட்டரசு 2011-12 கல்வியாண்டில் இருந்து கல்விக்கு கொடுக்கும் “முழுமையான SC/ST scholarship” மூலம் கல்வி கற்காமல் வேறு என்ன செய்ய வேண்டும் என நினைக்கின்றீர்கள் ?தனியார் மயம் ஆக உள்ள கல்வி நிறுவனங்கள் ,அரசுடமையாகும் வரை SC/ST பிரிவு மாணவர்கள் “முழுமையான SC/ST scholarship” மூலம் தனியார்/அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி கற்க கூடாதா ? தனியார் மயம் ஆக உள்ள கல்வி நிறுவனங்கள் அரசுடமையாகும் வரை SC/ST பிரிவு மாணவர்கள் வேறு என்ன செய்ய வேண்டும் ?

        1)அனைத்தும் தனியார் மயம் ஆன இந்தியாவில் மேலே நான் கூறியது போல அனைத்து மக்கள் நல திட்டங்களும் தனியாருக்கும் பலன் அளிக்கும் போது , SC/ST மாணவர்களுக்கு கொடுக்கப்படும் scholarshipல் மட்டும் அதே காரணத்துக்காக நீங்கள் குறைகூறும் போது ….,

        2)B.E / BTech / B. Arch படிப்புகளுக்கு அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் அளிக்கப்படும் ‘First Graduate Fee Waiver Scholarship Scheme’ தனியாருக்கும்[Self financing educational Institution] பலன் அளிக்கும் போது , ஆனால் அதன் மீது எந்த முரண்பாடும் இந்த விவாதத்தில் எழாத போது,[நீங்கள் எழுப்பாத போது], SC/ST மாணவர்களுக்கு கொடுக்கப்படும் scholarshipல் மட்டும் அதே காரணத்துக்காக நீங்கள் குறைகூறும் போது ….,

        3)நான் என் பதில் எண் 15ல் கூறியுள்ள அனைத்து அரசு திட்டங்க்ளிலும் குறைகள் , ஊழல் இந்திய அளவில் இருக்கும் போதும், SC/ST மாணவர்களுக்கு கொடுக்கப்படும் scholarshipல் மட்டும் அதே காரணத்துக்காக நீங்கள் குறைகூறுவது ….,

        மன்னிக்கவும் திரு ஜோசப், உங்கள் நோக்கத்தின் மீது தான் எனக்கு சந்தேகம் எழுகின்றது !

        நன்றி திரு ஜோசப்.

        ###சிஸ்டர் டயானா நீங்க இந்த விசயத்த அப்பாவித்தனமா ஆதரிக்கிறீங்களா இல்லை வஞ்சகத்துடன் பேசுரீங்களானு எனக்கு புரியல###

  23. வெற்றிவேல் அண்ணா இதுலயுமா பித்தலாட்டம் எனக்கு இப்பவே கண்ண கட்டுது டயானா சிஸ்டர் எனக்கு புருசன் இருக்கார் நாங்க கலப்பு திருமணம் பன்னிக்கிட்டோமுனு வேற சொல்லூறாங்க நான் எதைத்தான் நம்புறது …………

  24. திரு ஜோசப்,

    உங்களுக்கு என் கேள்விகளுக்கு பதில் கூற முடியாத நிலை வரும் போது “பித்தலாட்டம்”,”டயானா சிஸ்டர் எனக்கு புருசன் இருக்கார் நாங்க கலப்பு திருமணம் பன்னிக்கிட்டோமுனு வேற சொல்லூறாங்க நான் எதைத்தான் நம்புறது” என்று அரசியல் மேடை பேச்சை பேசி விவாதத்தை திசை திருப்ப வேண்டியது தான் !வேறு என்ன செய்ய முடியும் எதிராளியை மட்டம் தட்டுவதற்கு ?

    நன்றி திரு ஜோசப்.

    //வெற்றிவேல் அண்ணா இதுலயுமா பித்தலாட்டம் எனக்கு இப்பவே கண்ண கட்டுது டயானா சிஸ்டர் எனக்கு புருசன் இருக்கார் நாங்க கலப்பு திருமணம் பன்னிக்கிட்டோமுனு வேற சொல்லூறாங்க நான் எதைத்தான் நம்புறது …………//

  25. அண்ணன் சரவணனை வினவிலிருந்து அடியோடு அகற்றி விட்டார்கள் என்ற ஆத்திரத்தில் நான் இங்கு பின்னூட்டமிடுவதைக் குறைத்துக்கொண்டேன், அவருக்காக நான் அமைதியாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்க, அவர் என்னடாவென்றால், பொம்பிளை வேடம் போட்டுக் கொண்டு, பின்வழியாக மேடைக்கு வந்து விட்டார் போலிருக்கிறது. ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்று சும்மாவா சொன்னார்கள். 🙂 🙂

Leave a Reply to Dayana பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க