privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது

பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது

-

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா? பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள் – 2

சட்டம் உருவாக்கிய இந்து மதம்

1955 -56-ல் இந்துக்களுக்கான உரிமையியல் சட்டத் தொகுப்புகள் நிறைவேற்றப்பட்டு விட்ட போதிலும் ஒரு மதம் என்ற முறையில் இந்து மதம் வரையறுக்கப்படாமலேயே இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறினால் இந்துக்களுக்கான சட்டம் தயார் நிலையில் இருந்தது. ஆனால் “யார் இந்து?” என்ற பிரச்சினை தீர்க்கப்படாமலேயே நீடித்தது.

இந்தக் கோமாளித்தனமான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க ஒரு குயுக்தியான தீர்வு கண்டுபிடிக்கப்பட்டது.

“யார் இந்து?”

  • யாருக்கெல்லாம் இந்துச் ‘சட்டத் தொகுப்பு’ பொருந்துமோ அவர்களெல்லாம் இந்துக்கள் .
  • யாருக்கெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தும்?
    யாருக்கெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தாதோ, அவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருக்கும் பொருந்தும் .
  • யாருக்குப் பொருந்தாது ?
    முசுலீம்கள் , யூதர்கள், பார்சிகள், கிறித்தவர்களுக்குப் பொருந்தாது.
  • ஆகையினால் இவர்களைத் தவிர அனைவரும் சட்டப்படி இந்துக்களே ”.

இந்துச் சட்டத் தொகுப்பு (1955-56) மேற்கூறிய விளக்கத்தின் அடிப்படையில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.

எனவே , “இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் ஆகியோர் மதத்தால் இந்துக்களே. அந்த இந்து பெற்றோருக்குப் பிறந்தவர்கள் பிறப்பால் இந்துக்களே. முசுலீம், கிறித்தவ, யூத, பார்சி மதங்களைச் சாராத மற்றவர்கள் அனைவரும் கூட இந்துக்களே. இவர்கள் அனைவருக்கும் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தும்” என்றது உச்சநீதி மன்றம்.

பல்வேறு வழக்குகளில் முரண்பட்ட பல காரணங்களுக்காக “நாங்கள் இந்து இல்லை” என்று வாதாடியவர்களை மறுத்து அவர்கள் நெற்றியில் இந்துப்பட்டம் கட்டித் திருப்பியனுப்பியது உச்சநீதி மன்றம்.

“இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டு அதை நடைமுறையில் கடைப்பிடித்து, தான் ஒரு இந்து என்று அறிவித்துக் கொள்பவன் இந்துதான். அதே நேரத்தில் ஒருவன் நாத்திகனாகி விடுவதாலோ, இந்து மதக் கோட்பாடுகளைக் கைவிடுவதாலோ, மேலை நாகரீகத்தைப் பின்பற்றுவதாலோ, மாட்டுக்கறி தின்பதாலோ அவன் இந்து இல்லை என்று கூறிவிட முடியாது”, 1963-ல் அளித்த ஒரு தீர்ப்பில் உச்சநீதி மன்றம் இவ்வாறு குறிப்பிட்டது.

இந்துச் சட்டத் தொகுப்பிற்கு ஆதாரமாக விளங்கும் தரும சாத்திரங்கள் எதுவும் பிற மதத்தினர் இந்துவாக மதம் மாறுவதை அனுமதிக்கவில்லை. அவை வருணப் பிறப்பை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கின்றன. பிற மதத்தினரை இந்துவாக மதம் மாற்ற தூய்மைப்படுத்தும் சடங்கு ஒன்றை ஆர்யசமாஜம் அறிமுகம் செய்தது. எனினும் இது தரும சாத்திரங்களால் அங்கீகரிக்கப் பட்டது அல்ல.

ஜேசுதாஸ் தீர்ப்பு!

ஜேசுதாஸ்
‘தாய் மதத்திற்கு’ த் திரும்பிய ஜேசுதாஸிற்கு இந்துச் சட்டத் தொகுப்பு என்ன வருணத் தகுதியை வழங்கும்?

1975 -ல் கேரள உயர்நீதி மன்றம் இப்பிரச்சினையில் புதிய தீர்ப்பு ஒன்றை அளித்தது;

“இந்துக்கள் அல்லாதார் உள்ளே வரக்கூடாது” என்ற அறிவிப்புப் பலகையைப் பல கோயில்களில் வாசகர்கள் கண்டிருக்கக் கூடும். இவ்விதியின் அடிப்படையில் பின்னணிப் பாடகர் ஜேசுதாஸ் குருவாயூர் கோயிலில் வழிபாடு செய்ய கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்தது. ஜேசுதாஸ் இதை எதிர்த்து வழக்கு தொடுத்தார். பிறப்பால் கத்தோலிக்க கிறித்தவரான அவர் “நான் இந்து மதத்தைப் பின்பற்றுபவன்” என்று நீதிமன்றத்தில் அறிவித்தார்.

“தான் இந்து மதத்தைப் பின்பற்றுபவன் என்று ஒருவர் அறிவிக்கும் பட்சத்தில், தீய உள்நோக்கங்கள் ஏதுமின்றி நல்ல எண்ணத்துடன் அவ்வறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், அவர் இறைவன் குறித்த இந்துக் கண்ணோட்டத்தை ஏற்றுக் கொண்டவராகிறார். எனவே இந்துவாக மதம் மாறிவிட்டார் என்று பொருள்.”

கேரள உயர்நீதி மன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பு மேல் பார்வைக்கு ‘அதி புரட்சிகரமானதாக’ த் தென்பட்டாலும், இந்துமத விரிவாக்கத்திற்குத் துணை செய்யும் சிக்கலில்லாத எளியதொரு சம்பிரதாயத்தை இது வகுத்துத் தந்துள்ளது என்பதே உண்மை.

‘தாய் மதத்திற்கு’ த் திரும்பிய ஜேசுதாஸிற்கு இந்துச் சட்டத் தொகுப்பு என்ன வருணத் தகுதியை வழங்கும்?

“கிறித்தவத்திலிருந்து இந்துமதத்திற்கு மீண்டும் மாறி வந்தவுடன், மறைந்திருந்த அவர்களது உண்மையான சாதி மீண்டும் உயிர்ப்பிக்கப்படும்” என்கிறது உச்சநீதி மன்றம். அவ்வாறு இந்துவாக மதம் மாறியவருடைய மூதாதையரின் சாதியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனால் அவர்கள் இந்துச் சட்டத்தின் முன் சூத்திரர்களாகக் கருதப்படுவார்கள்.

இந்துச் சட்டத்தின் முரண்பாடுகள்

வலையை அகல விரித்து அகப்பட்டவர்களையெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பிற்குள் இழுத்துப் போடும் அரசியல் நோக்கத்திற்காக இந்துச் சட்டத் தொகுப்பில் பல சமரசங்கள் செய்து கொள்ளப்பட்டன. எடுத்துக்காட்டாக,

  • தந்தை வழி வாரிசுரிமை மற்றும் கூட்டுக் குடும்பம் என்ற கோட்பாட்டையே இந்து சட்டம் பின்பற்றுகிறது. எனினும் கேரளத்தில் சில சமூகத்தினர் மத்தியில் நிலவும் ‘மருமக்கள் தாயம்’ மற்றும் ‘ அரிய சந்தானம்’ எனும் தாய்வழிக் குடும்ப முறையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல, இந்துச் சட்டத்தால் தடை செய்யப்பட்ட மண உறவுகளில் (அதாவது சிறிய தந்தையின் மகனை அல்லது மகளை மணம் செய்யக்கூடாது என்பன போன்றவை) பழங்குடியினர் மற்றும் சில சமூகத்தினர் திருமணம் செய்வது நீண்டகால மரபாக இருப்பதால் அதுவும் இந்துச் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
  • கோவா மாநில இந்துக்களில் சில பிரிவினரிடையே நிலவும் இருதார மணமும் சட்டத்தால அங்கீகரிக்கட்டுள்ளது. ஒருதார மணச் சட்டம் அவர்களுக்குச செல்லாது.
  • அண்ணன் மறைவிற்குப் பின் அவரது மனைவியைத் தம்பி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஜாட் சாதியினரின் மரபும் இந்துச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒருதார மணச் சட்டம் இங்கேயும் செல்லாது.
  • கேரளத்து மாப்ளா முசுலீம்களும், சித்தூர் மாவட்ட கிறித்தவர்களில் சிலரும் (வன்னியர்கள்) வாரிசுரிமை குறித்த பிரச்சினையில் மட்டும் அவர்களது மரபுப்படி இன்றும் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ்தான் வருகின்றனர்.

தனது பண்பாட்டுக்கு எள்ளளவும் தொடர்பற்ற குலமரபுகளையும், பண்பாடுகளையும் இந்துச் சட்டத் தொகுப்பிற்குள் பார்ப்பனியம் ஏன் அனுமதித்தது என்ற கேள்வி இங்கே எழலாம். மரபுகள் மற்றும் பண்பாடுகள் விசயத்தில் பார்ப்பனியம் தனக்குள்ளேயே வட்டார ரீதியாகப் பிளவுபட்டிருந்தது . மேலும், பார்ப்பனியப் பண்பாட்டின் எல்லைக்கு வெளியே இருந்த பலதரப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியினரின் உட்குழுப் பண்பாட்டில் ‘வரம்பு’ மீறி தலையிடுவதன் மூலம் ‘இந்து ஒற்றுமை’ என்ற தனது அரசியல் நோக்கத்திற்குக் கேடு விளைவித்துக் கொள்ள இந்திய ஆளும் வர்க்கம் விரும்பவில்லை.

ஆனால் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் மத்தியில் நிலவிவந்த ஜனநாயக பூர்வமான மரபுகளின் மீது, தான் கொண்டுள்ள வெறுப்பையும் அது மறைத்துக் கொள்ளவில்லை. எடுத்துக்காட்டாக மக்கள் மத்தியில் நிலவி வந்த (இன்னமும் நிலவி வரும் ) சிக்கலில்லாத எளிய ‘மணவிலக்கு’ முறையை ஒழுக்கக் கேட்டின் அடிப்படையாகப் பார்ப்பனியம் கருதியது. மணவிலக்கிற்கு நீதிமனறங்களின் தயவை நாடி அலையவைப்பதன் மூலம் அவர்கள் மீது ‘நல்லொழுக்கத்தை ‘த் திணித்து விடலாம் என்றும் கருதியது. இந்த வகையில் தலையிட்டு அவர்களை இந்து மயமாக்க முயன்றது.

எனினும், மரபு என்ற விசயத்தில் தனது தலைமையை நேருக்கு நேர் எதிர்க்கின்ற எதையும் அனுமதிக்க பார்ப்பனியம் தயாராக இல்லை.

சுயமரியாதைத் திருமணம் இந்து மரபா?

உச்சிக்குடுமி மன்றம்
ஜேசுதாஸின் மதமாற்றத்திற்கு ஒரு புதிய ‘சம்பிரதாயத்தை’ (மரபை) உருவாக்கிய நீதிமன்றம் அதே உரிமையை மக்களுக்கு மறுத்தபோது அதற்காகச் சிறிதும் வெட்கப்படவில்லை.

தி.மு.க ஆட்சியில் 1969 -ல் சுய மரியாதைத் திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு அந்த மண முறையின் கீழ் செய்யப்படும் திருமணம் பதிவு செய்யப்படாவிட்டாலும் செல்லும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. (சுயமரியாதைச் திருமணமும் இந்துச் சட்டத் தொகுப்பின் கீழ்தான் வருகிறது) ஆனால் இச்சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன் இத்திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் கிடையாது.

1954-ல் இது தொடர்பான வழக்கு முதன் முதலாக நீதிமன்றத்தின் முன் வந்தது. “பார்ப்பனியச் சடங்குகளை மறுக்கும் இந்த மணமுறை 1925 முதலே கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் இதையும் ஒரு மரபாக அங்கீகரிக்க வேண்டும்” என சுயமரியாதை இயக்கத்தினர் வாதாடியிருக்கின்றனர். “இந்த மணமுறை 25 ஆண்டுகளாகத்தான் பழக்கத்திலிருக்கிறது ; எனவே இந்தப் பழக்கத்தை ஒரு மரபு என்று அங்கீகரிக்க முடியாது” என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

1966-ல் இதே விசயத்திற்காக இன்னொரு வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் இன்னும் ஒருபடி மேலே சென்றது. “நவீன காலத்தில் ஆளாளுக்கு ஒரு சட்டத்தையோ மரபையோ உருவாக்க முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் மன்றம்தான் அதைச் செய்ய முடியும்” என்று தீர்ப்புளித்தது.

ஜேசுதாஸின் மதமாற்றத்திற்கு ஒரு புதிய ‘சம்பிரதாயத்தை’ (மரபை) உருவாக்கிய நீதிமன்றம் அதே உரிமையை மக்களுக்கு மறுத்தபோது அதற்காகச் சிறிதும் வெட்கப்படவில்லை. ஏனென்றால் அது இந்துச் சட்டத்தொகுப்பின் உணரச்சியின்படி நடந்து கொண்டது.

தரும சாத்திரங்களுக்கு விளக்கவுரை தரும் பார்ப்பனப் பண்டிதராக அமர்த்தப்பட்ட நீதிமன்றம், தனக்களிக்கப்பட்டுள்ள கடமையின் புனிதத்தையும் , அரசியல் நோக்கத்தையும் தெளிவாக விளங்கிக் கொண்டிருந்தது எனபதை அதன் எண்ணிறந்த தீர்ப்புகள் பிரதிபலிக்கின்றன.

இந்துச் சட்டத் தொகுப்பின் ஜனநாயகத் தன்மை குறித்த மாயை கலைய வேண்டுமானால் அதன் உண்மை நிலை குறித்த சில விவரங்களையாவது தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

‘பெண்ணுக்குத் தாய்வீடு நிரந்தரமல்ல’ என்ற கோட்பாட்டினடிப்படையில் பாரம்பரியச் சொத்தில் பெண்ணின் உரிமையை இந்து வாரிசுரிமைச் சட்டம் மறுக்கிறது. இந்த விசயத்தில் இசுலாமியச் சட்டம் கொஞ்சம் முற்போக்கானதென சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பெண்ணின் சொத்துரிமையைப் பறித்ததன் மூலம் இந்து நிலப்பிரபுக்கள் மற்றும் தரகு முதலாளிகளின் சொத்து பிளவுபடாமல் தடுக்கப்பட்டது. மேலும் இந்த பிளவுபடாத இந்து, கூட்டுக் குடும்பச் சொத்திற்கு பிற மதத்தினருக்கு இல்லாத விசேட வரிச் சலுகைகளும் தரப்பட்டுள்ளன.

முதல் மனைவி இருக்கும் போதே ஒரு கணவன் இரண்டாம் தாரமாக ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு, இது தொடர்பான வழக்கு நீதிமன்றம் செல்லும்போது பெண்ணுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இருப்பதில்லை. மணப்பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு மணமகன் வேள்வித் தீயைச் சுற்றி ஏழு அடி எடுத்து வைக்கும் ”சப்தபதி’ என்ற குறிப்பிட்ட சடங்கு நடைபெறவில்லை என்று ஒரு கணவன் நிரூபித்துவிட்டால், மற்றெல்லாச் சடங்களும் நடந்திருந்தாலும் அத்திருமணம் செல்லத்தக்கதல்ல என்று ஏராளமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அம்மியோ, அருந்ததியோ, புரோகிதனோ, தரகனோ, முப்பத்து முக்கோடி தேவர்களோ வந்து சாட்சி கூறியும் பயனில்லை. தலாக் என்று மூன்று முறை சொல்லி மணவிலக்குச் செய்யப்படும் இசுலாமியப் பெண்களுக்காக் கண்ணீர் சிந்தும் பார்ப்பன மதவெறியர்கள் இது பற்றி வாய் திறப்பதில்லை.

‘சப்தபதி நிரூபிக்கப்பட வேண்டியதில்லை’ என சமீபத்தில் தீர்ப்பு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறிருந்தாலும், சாத்திர சம்பிரதாயங்களின் சந்துகளில் புகுந்து பெண்ணுக்கு அநீதி இழைக்க வழி சொல்லிக் கொடுத்த பார்ப்பனப் பண்டிதர்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடி விட்டார்கள்.

குடும்பத்தை நிர்க்கதியாகத் தவிக்கவிட்டு ஓடுபவன், அதே குற்றத்தை துறவறம் என்ற பெயரில் செய்தால் அதை அவனது மத உரிமையாக இந்துச் சட்டம் அங்கீகரிக்கிறது. அதனடிப்படையில் மணவிலக்கும் வழங்குகிறது.

1929-ல் பிரிட்டீஷாரால் கொண்டுவரப்பட்ட குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம், குறைந்தபட்ச திருமண வயதாக பெண்களுக்கு -15, ஆண்களுக்கு- 18 என்ற நிர்ணயித்தது. 1978-ல் மீண்டும் ஒரு திருத்தத்தின் மூலம் இது பெண்களுக்கு -18, ஆண்களுக்கு -21 என்று உயர்த்தப்பட்டது.

இந்து கூட்டுக் குடும்பம்
தந்தை வபிளவுபடாத இந்து, கூட்டுக் குடும்பச் சொத்திற்கு பிற மதத்தினருக்கு இல்லாத விசேட வரிச் சலுகைகளும் தரப்பட்டுள்ளன.

எனினும் இந்தச் சட்டத்தை மீறி பத்து வயதுச் சிறுவனுக்கும் 5 வயது சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டு விட்டாலும் அதை ஏற்பாடு செய்தவர்களுக்கு மூன்று மாத தண்டனையோ 1000 ரூபாய் அபராதமோதான் விதிக்க முடியுமே தவிர, “அத்திருமணம் செல்லாது” என எந்த நீதிமன்றமும் அறிவிக்க முடியாது. மதச் சம்பிரதாயங்களால் உறுதி செய்யப்பட்ட ஒரு திருமணத்தை நீதிமன்றம் ரத்து செய்ய முடியாது என்பதே இந்த அணுகு முறைக்கான அடிப்படை.

இந்துத் திருமணச் சட்டத்தில் மொத்தம் 8 வகைத் திருமணங்கள் பற்றிக் கூறப்படுகின்றன. அவற்றின் பிரம்ம வகைப்பட்ட திருமணங்கள் மூன்று உயர் வர்ணத்தாருக்கும், அசுர வகைப்பட்ட திருமணங்கள் ‘சூத்திரர்’ க்கும் மனு நீதியால் அனுமதிக்கப் பட்டிருந்தன. பிரம்ம வகைப்பட்ட திருமணங்களை சூத்திரரும் நடத்தலாம் என்ற திருத்தம் பிரிட்டிஷ் ஆட்சியில்தான் அனுமதிக்கப்பட்டது.

பெண்ணுக்கும் அவள் வீட்டாருக்கும் பொருள் தந்து (பரிசம் ) பெண்ணை மண முடிப்பது அசுரத் திருமணம் என்றும், பெண்ணுடன் பொன்னையும் பொருளையும் மணமகனுக்குத் தானமாகக் கொடுப்பது (கன்னிகாதானம் ) பிரம்ம வகைப்பட்ட திருமணம் என்றும் மனுநீதி கூறுகிறது. இவை வெறுமனே பழைய ஏட்டுச் சுவடிகளில் இல்லை; இன்றும் இந்து திருமண சட்டத்தின் அடிப்படையாக உள்ளன. வரதட்சிணையை பார்ப்பன சாத்திரம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது; சட்டமோ அதைத் தடுப்பதாக முணுமுணுக்கிறது.

ஆகம விதிகளால் ஆளப்படும் கோயில்களில் பார்ப்பனரல்லாதாரும், பெண்களும் அர்ச்சகராக முடியாது என்ற நிலைமை இந்துச் சட்டத்தின் ஒரு அடிப்படையாக விளங்கும் மரபு என்பதனால் நியாயப்படுத்தப்படுகிறது; அரசியல் சட்டம் வழங்கும் மத உரிமையால் இதுவே பார்ப்பனர்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்படுகிறது

காப்பாளராக இருக்கும் உரிமையைப் பெண்களுக்கு வழங்குதல், மண உறவிற்கு வெளியே பிறந்த குழந்தைகளின் உரிமைகள், சாதி மறுப்புத் திருமணங்கள் ஆகியவற்றில் இந்துச் சட்டத் தொகுப்பு பெரிதும் அநியாயமாக நடந்து கொள்கிறது என முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் போன்றோரே குற்றம் சாட்டுகின்றனர்.

பெண்ணினத்திற்கு எதிராகக் கடவுளும் ஆணும் இணைந்து அமைத்த கூட்டணியில் மதவேறுபாடே கிடையாது. இந்து, கிறித்தவ, இசுவாமிய, யூத, பார்சி மதச் சட்டங்கள் அனைத்துமே பெண்களுக்கு எதிரானவைதான். ஆனால் இவற்றில் இந்து மதம் மட்டும் தான் சாதி ஆதிக்கத்தையும் சேர்த்துக் தனது சட்டத்தால் புனிதப்படுத்துகிறது.

இந்துச் சட்டத்தைச் சீர்திருத்தியது பார்ப்பனச் சனாதனிகளா?

இந்துச் சட்டத்தின் பிற்போக்குத் தனங்கள் பல சீர்திருத்தப் பட்டுள்ளன என்பது உண்மைதான். ஆனால் அச்சீர்திருத்தங்கள் பார்ப்பனச் சனாதனிகளால் மனமுவந்து முன்மொழியப்பட்டவை அல்ல. வைப்பாட்டி வைத்துக் கொள்ளும் சட்டபூர்வ உரிமையைக் கூட 1955 வரை அவர்கள் தானாக முன்வந்து கைவிடத் தயாராக இல்லை.

இந்துச் சட்டத் தொகுப்பிற்காக தரும சாத்திரங்களின் ‘ காலத்துக் கொவ்வாத’ பகுதிகள் சிலவற்றில் மாற்றங்கள் முன்மொழியப் பட்டபோது, அதை எதிர்த்து பார்ப்பன சநாதனி ஒருவர் அங்கே எழுப்பிய ஆட்சேபமே இதற்குச் சான்று;

“தாங்கள் விரும்புவதை அவர்கள் நிறைவேற்றிக் கொள்ளட்டும். நாங்கள் நீதிமன்றங்களைத் தவிர்க்கவே முயல்வோம். ‘இந்துச் சட்ட மசோதா ‘ என்று அழைக்கிறார்களே அதைப் பொருத்தவரை நாங்கள் கூறுவதெல்லாம் இதுதான்; எதை வேண்டுமானாலும் சட்டமாக்கிக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து அதை ‘இந்துச் சட்டம்’ என்று மட்டும் அழைக்காதீர்கள் ஏனென்றால் அது இந்துச் சட்டமே அல்ல.”

அப்படியானால் சநாதனிகளின் விருப்பத்துக்கு எதிராகத்தான் இந்துச் சட்டத் தொகுப்பு உருவாக்கப்பட்டதா? இது சீர்திருத்தவாதிகளுக்குத் கிடைத்த வெற்றியா? என்ற கேள்விகள் எழலாம். உண்மையில் இது சீர்திருத்தவாதிகளின் வெற்றியுமல்ல, பார்ப்பனியத்தின் தோல்வியுமல்ல.

ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரின் விருப்பமே ஆளும் வர்க்கத்தின் பொது விருப்பமாக ஆகி விடுவதில்லை. பார்ப்பன வருண தருமத்தை அப்படியே திணிக்க விரும்பிய குருட்டுச் சநாதனிகளின் விருப்பம், ஆளும் வர்க்கங்களின் அன்றைய நோக்கம், நலன் மற்றும் தேவைக்கு உகந்ததாக இல்லை.

“இந்து மதத்தைப் புத்துருவாக்கம் செய்வது -இந்தியாவை ஒன்றுபடுத்துவது” என்ற தமது ஒருங்கிணைந்த லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள மேற்படி விருப்பத்தை ஆளும் வர்க்கங்கள் ‘ தியாகம் ‘செய்தன. அவ்வளவே.

சனாதனிகளின் தியாகம்!

இந்த ‘தியாகத்தை’ த் தான் தனது தீர்ப்பில் பாராட்டுகிறார் நீதிபதி குல்தீப் சிங். யாருடைய மன உணர்விலிருந்து இந்தப் பாராட்டுரையை நீதிபதி வழங்கியுள்ளார் என்று புரிந்து கொள்ள வேண்டுமானால் அந்தத் ‘தியாகங்களில்’ சிலவற்றை வாசகர்கள் மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.

தீண்டாமைக்குத் தடை, தாழ்த்தப்பட்டோர் ஆலய நுழைவு, குழந்தைத் திருமணத் தடை, வரதட்சணைத் தடை, பலதாரமணத் தடை போன்ற இந்து மதக் கோட்காடுகளுக்கு எதிரான சட்டங்களை- தங்கள் மதவுணர்வுகளைப் பொருட்படுத்தாமல்- அனுமதித்தமைக்காகப் பார்ப்பன உயர்சாதி இந்துக்களுக்கு நன்றி கூறுகிறார் நீதிபதி.

ஆனால் உயர்சாதியினரும் ஆணாதிக்கவாதிகளும் ஜனநாயக உணர்வின்பாற்பட்டு இந்தச் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்டனரென்று நீதிபதி குறிப்பிடவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்காகத்தான் இந்தத் தியாகம் செய்யப்பட்டது என்ற உண்மையை நீதிபதி தெளிவாகவே கூறி இருக்கிறார்.

“அரசு, இந்திய ஆட்சிப்பரப்பு எங்கணும் ஒரு சீரான உரிமையியல் தொகுப்புச் சட்டம் குடிமக்களுக்கு உறுதியாகக் கிடைக்குமாறு பெருமுயற்சி செய்தல் வேண்டும்” – என்று கூறுகிறது இந்திய அரசியல் சட்டத்தின் 44- வது பிரிவு. (வழிகாட்டும் கோட்பாடு).

“விவகாரத்து மற்றும் ஜீவனாம்சம் பற்றிய பிரச்சினைகளில் எல்லா சமூகத்தினரையும் ஒரே சட்டத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் இந்திய ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதுதான் இந்த அரசியல் சட்டப் பிரிவின் நோக்கம்” என்று உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் பல இந்தச் சட்டப்பிரிவுக்கு விளக்கமளித்துள்ளன.

விவகாரத்துக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு சீரான விவாகரத்துச் சட்டத்தை ஒப்புக் கொள்ளாதவன் பிரிவினைவாதியா? இதென்ன மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் கதையாக இருக்கிறதே என வாசகர்கள் நினைக்கலாம் .

இந்த முடிச்சை அவிழ்க்கும்போது தான் பாரதீய ஐனதாவின் ‘ஒரே நாடு, ஒரே மக்கள் , ஒரே சட்டம் ‘ என்ற முழக்கத்தின் முடிச்சும் அவிழும்.

(தொடரும் …)

முதல் பாகம்  – இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா? பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள் – 1

  1. “கடவுள் என்பது என் தனி விருப்பம். அதில் தலையிட உனக்கு உரிமையில்லை” என்று சொல்வது சரியா, அப்படி சொல்பவர்களை என்ன செய்வது?

  2. பர்பனர்களை இழித்துறைக வீரு கொண்டெழும் பொச்சரிபுத்தான் வெளிப்படையாகவே உண்ரப் படுகிறது
    வேறு எந்த விதமான நொக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை எதோ இந்து மதம் தாம் எல்லா தாழ்வுகளுக்கும் காரணம் என்ற திராவிட அறிவிலிகளின் கோழைத்தனத்துக்கு ஒரு பட்டுக் குஞ்சலம்

  3. அவரவர் வீட்டு தனியறையில் என்ன ஆடை உடுத்துவது அல்லது உடுத்தாமலே இருப்பது, அவரவர் விருப்பம்! பொது இடத்தில் அப்படியிருக்க முடியாது! உதாரணமாக, ஆத்தாளுக்கு கூழ் ஊற்ற பஸ், கார்களை மறித்து கட்டாய வசூல் செய்து கடவுளை வணங்குவதும், பொது இடத்தில் ஆடு, மாடுகளை வெட்டி பலிகொடுத்து வணங்குவதும் (ஒலி பெருக்கி, அருவருப்பான ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன், கொக்கி போட்டு கரண்ட், சீர்யல், கட் அவுட் உள்பட) அனாகரிகமே!

    • //பொது இடத்தில் ஆடு, மாடுகளை வெட்டி பலிகொடுத்து வணங்குவதும் (ஒலி பெருக்கி, அருவருப்பான ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன், கொக்கி போட்டு கரண்ட், சீர்யல், கட் அவுட் உள்பட) அனாகரிகமே!//
      இது அநாகரிகமுனா காலைல 5 மணிக்கு அல்லாகு அப்பருனு கத்த்துரதும் அநாகரீகமே ஒட்டகத்தயும் ஆடுகளையும் அல்லாகு அப்பருனு ஈகை பெருநாளுக்கு பலி குடுப்பதும் அநாகரீகமே ஒரு சக மனிதனை அல்லாகு அப்பர் என்று கத்திக்கொண்டு கழுத்தறுப்பதும் அதை வீடியோவாக்கி வெளியிடுவதும் உச்ச கட்ட அநாகரீகம் அதை எதிர்க்காமல் அவர்களை போராளிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் இசுலாமை காக்க வந்தவர்கள் என்று பேசுவது அநாகரிகத்தின் உச்ச கட்டம் ஆகும்…

  4. பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம், அல்ல பார்பன மதம், எதிர்க்கதான் செய்யும்!

    முதலில் இந்து மதமே “பொது” அல்ல! இந்து மதத்தில் எதுவுமே “பொது” அல்ல!

    எல்லா புகழும் இறைவனுக்கே என்பது இஸ்லாம்! எல்லாம் பார்ப்பனனுக்கே என்பது மனுஸ்மிருதி! அவாளின் பிராமண மதத்தை “இந்து மதம்” என்று கொண்டால் இதுதான் விதி!

    பிராமணர்கள் ‘பிராமண’ மத கோட்பாடுகளை பின்பற்றுவது அவாள் விருப்பம்!

    “இந்து” என்று ஒரு பொது குல்லாய் போட்டு, ‘அருகில் வராதே! தீட்டாயுடுத்து!’ என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்! இவர்கள் படித்த அதே சாஸ்திரத்தை சூத்திரன் படித்து கோவிலுக்குள் செல்ல முடியவில்லையே! சூத்திரர் அனைவருமே நாத்திகர்களா?

  5. நாத்திகனும், புத்தனும் இந்து அல்லவா? இந்து சட்டத்தில் இவர்களுக்கு விதிவிலக்கு உண்டா?

  6. என்னமோ இத்தன நாள் பொது சிவில் சட்டம் கொண்டுவர இந்து மதவெறி பிடித்த பார்பனர்கள் சதி செய்ற மாதிரி பேசுனீங்க. இப்போ என்னடானா திடீருனு அப்படியே அந்தர் பல்டி அடிச்சு “பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது” என்ற தலைப்பில் பதிவு போட்டு எங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிறீர்கள். அப்படி பாத்தா லாஜிக் படி நீங்க பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கதானே வேண்டும்? ஏன் கேப்டன் மரதிரி பேசி எங்களை குழப்புகிறீர்கள்? அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயி மாதிரி உங்களுக்கு பாக்குறது எல்லாம் பார்பணர்கள் சதியாவே தெரியுது

    • பதிவு போடுவது எதை ஆதரித்து என்று கொஞ்சம் புரிந்து கொள்ள முயலுங்களென் அய்யா!

      பொது சிவில் சட்டம் கொண்டுவர இந்து மதவெறி பிடித்த பார்பனர்கள் சதி செய்ற மாதிரி என்ன , சதியே தான்! பொது ஆகம சட்டம் என்றால் பதுஙகும் ஆசாமிகள், பொது கல்வி என்றால் பம்மும் ஆசாமிகள், பொது சிவில் சட்டம் என்றால்………எலி ஏன் அம்மணத்தோடு ஓடுகிறது?

  7. இன்றைக்கு நான் போட்ட பின்னூடத்த எதற்கு அய்யா நீக்கினீர்கள். இத்தனைக்கும் அதுல கடுமையான கருத்து எதுவுமே நான் சொல்லவே இல்லயே. ஒருசில சந்தேகங்களை தானே கேட்டு இருந்தேன். அது கூட பொறுக்கவில்லையா உமக்கு? வரவர நீங்களும் தமிழ் இந்து தளம் மாதிரி ஆகிவிட்டு வருகிறீர்கள். இனிமேல் கருத்து சுகந்திரத்த பத்தி மட்டும் தயவுசெய்து பேசாதீர்கள்.

  8. பெரும்பானமையோர் மதம் என்று, பீற்றிக்கொள்ளும் இந்து ‘மதம்’ ஒரேமதமல்ல! பல்வேறு இன, மொழி, பிராந்திய வழக்குகள், இன குழுக்களின் உருவ வழிப்பாட்டை, இணைத்து, பார்பன மேலாதிக்கத்தை புகுத்த உருவாக்கபட்ட புராண மதமே, பிற்காலத்தில் இந்துமதமானது!

    “இந்து என்ற சொல்லை ஓரளவு விளக்க வேண்டும். இந்த சொல் பண்டைய பெர்சிஅவினர் சிந்துநதிக்கு கொடுத்த பெயராகும். சமஸ்கிருதத்திலுள்ள ‘ஸ’கரம், பண்டைய பெர்சியன் மொழியில் ‘ஹ’கரமாக மாறுகிறது. அவ்வாறு ‘சிந்து’, ‘ஹிந்து’ வானது ! ….பெரும்பாலும் ஒரு குறிபிட்ட பெயரில்லாமல், ஒரு குறிப்பிட்ட சம்பிரதாயமில்லாமல், ஒரு பொது அமைப்பேயில்லாமல் ஒன்று செர்ந்த பல மதங்களுடையவும், கொள்கைகளுடையவும், சட்டங்களுடையவும், சடங்களுடையவும் கலவையே ‘ஹிந்து’ மதம்”-ஸுவாமி விவேகானந்த சாகித்ய சர்வஸ்யம். பக்கம் 120.

    முதலில் பொதுவான இந்துமத சட்டத்தை கொணருங்களேன்!

    • திரு. அசாத்து சத்ரு அவர்கலே!

      இந்து சமூகம் என்பது வேறு!
      இந்து மதம் என்பது வேறு!

      நீங்கள் மதம் என்றால் என்ன என்று அளக்கும் மேற்கத்திய அளவுகோல் கொண்டு அளப்பது உங்கள் அரியாமையை, வெறுப்பை காட்டுகிறது. மேற்கத்திய சிந்தனையான ஓர் இறை! ஒரு தீர்க்கதரிசி! ஒரு மூல நூல்! நம்புவோர் நம்மவர், நம்பாதோர் விரோதிகள் என்ற பாகுபாடு!

      ஆனால் இந்து மதத்திலோ பலவித நம்பிக்கைகளின் ஒருங்கினைப்பு, இனக்கம், தொகுப்பு இது எவ்வளவு நல்ல விஷயம்!
      மேற்கத்திய மதங்கள் மற்றும் சித்தாந்தங்கள் “ஒரு வழி காட்டி!
      அது ஒன்றே வழி! அது நம்மை பொன்னுலகத்துக்கு அழைத்து செல்லும்”! என்று வற்புறுத்தியும் மிரட்டியும் ப்ரச்சாரம் செயிகின்றன. ஆனால் அங்கு ஒற்றுமை உள்ளதா?நீங்களே சொல்லுங்கள்..
      (தொடரும்)

  9. தென்றல் அவர்களுக்கு,

    // சைப் அலிகான் எழுதியிருக்கும் பதிவை யுனிவர்படி தனக்கு சாதகாமக சுட்டிக்காட்டுவது பித்தலாட்டமாகும்.//

    சைப் பொது சட்டத்தை ஆதரிப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறேன். மற்ற படி அவர் கூறும் எல்லாவற்றையும் கேள்வியின்றி நான் ஏற்றுக் கொள்ளவேண்டியதில்லை. அவர் லவ்ஜிகாதை மறுப்பது அவருடைய சொந்த கருத்து. மற்ற முகமதியர்களுக்காகவும் அவர் பேச முடியாதில்லையா. ஆனால் அவர் தனிப்பட்ட முறையில் பொது சட்டத்தை ஆதரிக்க அவருக்கு உரிமை யிருக்கிறது இல்லையா. வித்தியாசத்தைப் பாருங்கள். மேலும் அவர் முழுமையான முகமதியருமில்லை. எனவே அவருக்கு முழுமையான முகமதிய வட்டாரத்தில் நடப்பவற்றைப் பற்றி அறியாமலும் இருப்பாரில்லையா.
    லவ்ஜிகாத் தியரி அளவில் முடிந்ததுதான். ஒரே ஒருவர் அதை செயல் படுத்தியிருந்தாலும் அது உன்மைதான் என்றாகும். செயலிலும் நடப்பதுதான். இந்தியாவை வைத்து மட்டும் நான் பேசவில்லை. ஒரு முகமதியர் (முகமதியர் என்பதைக் காட்டிக் கொண்டோ அல்லது ஏமாற்றியோ) ஒரு முகமதியரல்லாத பெண்ணைக் கட்டிக்கொண்டு பின்னர் ஒரு முகமதியப் பெண்ணையும் கட்டிக் கொள்வாரேயானால் அதற்கு லவ்ஜிகாத் என்ற பெயர் பிடிக்காவிட்டால் வேறு பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

    தொடரும்…

    • Univerbuddy,

      ///எனவே அவருக்கு முழுமையான முகமதிய வட்டாரத்தில் நடப்பவற்றைப் பற்றி அறியாமலும் இருப்பாரில்லையா.///

      நீங்கள் பாதி முஸ்லீம் என்று சொல்லும் சைப் அலிகானினாலேயே முழுமையான முகமதிய வட்டாரத்தில் நடப்பவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாதென்றால், வேறு யாரால் தெரிந்து கொள்ள முடியும்?

      முழு முஸ்லீம்களால் மட்டும் தான் தெரிந்து கொள்ள முடியுமா? அல்லது முஸ்லீமீம்கள் மீது வெறுப்பை உமிழும் இந்து மத வெறியர்களால் தான் தெரிந்து கொள்ள முடியுமா?

      நீங்கள் மட்டும் முகமதிய வட்டாரத்தில் நடப்பதை முழுமையாக எப்படி அறிந்து கொள்கிறீர்கள்? முழு முஸ்லீம்களிடம் இருந்தா? அல்லது இஸ்லாமிய வெறுப்பைக் கக்கும் இந்து மத வெறியர்களிடம் இருந்தா?

      ஒரு முழு இஸ்லாமியர் லவ் ஜிகாத் பற்றி நீங்கள் அறிந்திருக்கும் “உண்மைகளை” “தியரிகளை” உங்களுக்கு சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

      நீங்கள் குரான் மற்றும் கதீசில் இருந்து என்று வாதிடக்கூடும். ஒரு இஸ்லாமியர் குரான் மற்றும் கதீசை நூற்றுக்கு நூறு வீதம் பின்பற்றுகிறாரா இல்லையா என்பதை நீங்கள் எவாறு அறிந்து கொள்கிறீர்கள், வரயறுக்கிறீர்கள்? ஏனெனில் பாதி முஸ்லீமான சைப் அலிகானினாலேயே முழுமையான முகமதிய வட்டாரத்தில் நடப்பவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாத போது தங்களால் எப்படி ?

      இதனால், இஸ்லாமிய வெறுப்பைக் கக்கும் இந்து மத வெறியர்களிடம் இருந்து தான் நீங்கள் “உண்மைகளை” “தியரிகளை” அறிந்து கொண்டிருக்க வேண்டும் என்றாகிறது. சரி தானே..

      • ஆணி,

        //நீங்கள் மட்டும் முகமதிய வட்டாரத்தில் நடப்பதை முழுமையாக எப்படி அறிந்து கொள்கிறீர்கள்? முழு முஸ்லீம்களிடம் இருந்தா?//

        கேள்விக்கு நன்றி.

        ஆம். சரியாகச் சொன்னீர்கள். அந்த முஸ்லீம் நண்பர்களின் பட்டியலைப் பாருங்கள். Ali Sina, Ibn Warraq, M A Khan, Wafa Sultan, Maryam Namazee, Ayan Hirsi Ali, Ayesha Ahmad, Taslima Nasrin, Senkodi, Pagaduu, etc.

        • யுனிவர்படி,

          ஆணி சொல்வதை முழுவதுமாய் தாங்கள் புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். தாங்கள் சொல்லும் முகமதிய வட்டாரம் என்பது சொற்ப எண்ணிக்கையில் அடங்குவது அதாவது பெரும்பான்மை இசுலாமிய மக்கள் அதில் அடங்க மாட்டார்கள். இது எப்படி என்றால் ஹிந்துத்வா பாசிசம் என்று நாம் வரையறுக்கும் போது அதில் எப்படி என்பது விழுக்காடுகள் இந்திய மக்கள் முழுவதும் அடங்க மாட்டார்களோ அது போல தான்.

          குர்ஆனில் உள்ள பிற்போக்குத்தனமான வாழ்வியல் நெறிகளை, எல்லா வசதிகளைப் பெற்ற மேட்டுக் குடிகளே முழுதாக பின்பற்றாத போது பெரும்பான்மை இசுலாமிய உழைக்கும் மக்கள் அதை பின்பற்றுவதற்கு வழியில்லை. இதற்க்கு ஒரு எடுத்துகாட்டு, எனது அலுவலகத்தில் ஒரு இசுலாமிய பெண் பணிபுரிகிறார். அவர் பர்தா அணிந்து கொள்கிறார். ஒரு நாள் அலுவலக காரில் செல்லும் போது அதன் ஓட்டுனராக ஒரு இசுலாமியர், இசுலாத்தில் பெண்கள் வெளியில் பணிப் புரிய அனுமதி இல்லை என்றார்.எதார்த்த சூழல் வேறு விதமாக உள்ளது என்பதை இதுக் காட்டுகிறது. அதாவது இருவரும் இசுலாமியர்கள். இங்கே பொருளாதார ரீதியில் அந்த பெண் இந்த ஓட்டுனரை விட வசதியானவர். ஆனால் இருவரும் அவர்கள் வசதிக்கு ஏற்றவாறு இசுலாத்தை பின்பற்றுகிறார்கள்.

          இந்தியாவில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை இன்னும் ஆளும் வர்க்க சித்தாந்தமாய் இருந்த போதும் அதன் கொடுக்குகள் சற்று காலத்திற்கேற்றவாறு பரிணாமம் அடைந்து உள்ளன. இசுலாமும் அதற்க்கு விதிவிலக்கல்ல. வெறும் இசுலாமிய எதிர்ப்பு என்று குறுகியப் பார்வையை மட்டுமே கொண்டு உலகம் முழுதும் உள்ள இசுலாமியர்களை பார்கின்றீர்கள்.அதனால் தான் அவர்களது எண்ணிக்கை தங்கள் கண்களுக்கு உறுத்துகிறது. இது, சமூக சூழல் தான் மனிதர்களின் வாழ்நிலையை தீர்மானிக்கிறது என்னும் மார்க்சிய அடிப்படையை மறுக்கிறது.

          அராபிய ஷேக்குகள் போல இந்திய கறிக்கடை பாய் இசுலாத்தின் நெறிகளை பின்பற்றுவதில்லை. இருவரும் ஒரே மதமாய் இருந்தாலும் இரு வேறு வர்க்கத்தை சேர்ந்தவர்கள். இருவரின் பார்வையும் வேறாய் தான் இருக்கும் அது குரான் பற்றியாக ஆக இருந்தாலும் சரி இசுலாத்தைப் பற்றியதாய் இருந்தாலும் சரி. ஏழை பார்பானும் ஒரு ஏழை கூலி தொழிலாளியும் பொதுவாக இங்கே இந்து என்று வரையறுக்கப்பட்டாலும் அவர்களின் வர்க்கம் வேறு அதனால் அவர்களின் பார்வையும் வேறு. சமூகப் பின்னணியை கணக்கில் எடுக்காமல் கண்ணிருந்தும் குருடராய் அனைத்து இசுலாமியர்களைப் புழுதி வாரி தூற்றுவதும் தம்மை கம்யூனிஸ்ட் என்று அழைத்துக் கொள்வதும் சற்றும் பொருத்தமாய் இல்லை.

          நன்றி.

  10. தென்றல் அவர்களுக்கு,

    //இந்தியா ஒரு இந்து நாடு என்று சொல்கிற பாசிசத்தின் வேர்தான் இது.//

    இங்கே முன்னர் போட்ட டிஸ்கியைப் போட்டுக் கொள்கிறேன். அதாவது அவர்களின் காலனியைப் போட்டுக் கொண்டு பேசுவது. எப்போது அது சரிவரவில்லையோ அல்லது கடிக்கிறதோ அதை கழட்டி விடுவேன்.

    முகமதிய நாடுகளில் மற்றவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக வாழவேண்டியவர்கள் தான். முகமதியர்களுக்கு இதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களுக்கு மதச்சார்பின்மை என்றால் என்ன என்றே தெரியாது. அப்படியிருக்க உலக அளவில் சிறுபான்மையாக உள்ள இந்துக்களிடமிருந்து இதை எதிர்பார்ப்பது எப்படி நியாயம். (ஆனாலும் இன்றைய கையறு நிலை அவர்களின் உட்பூசல்களுக்குக் கிடைத்த பரிசுதான்.)

    //யுனிவர்படி பரஸ்பர இணைவு என்றும் அமைதி வேண்டி இணைவது என்று ***//

    வரலாறு முழுக்க குழுக்களின் இணைவுகள் நடந்திருக்கின்றன. நான் அந்த அடிப்படையில் தான் இதைக் கூறுகிறேன். எல்லோருமே மனிதர்களாக ஒன்றினைவதே என் விருப்பம். இது படிப்படியாகத்தான் நடக்கும். அதாவது பெருங்குழுவிடம் சிறுங்குழு இணைவது பிறகு புதிய குழு அதனினும் பெருங்குழுவுடன் இணைவது… இசுலாமியர்களை கலகக்காரர்களாக நான் காட்டத்தேவை இல்லை. அது கைப்புண்.

    //சாகீர் இதே தளத்தில் நான் ஒரு தமிழன் என்றும்***//

    இது ஒரு பெரிய விசயமில்லை. சிறுபான்மையாக இருக்குமிடத்திற்கேற்ற பேச்சு தான். பிரிவினை மற்றும் ஆக்ரமிப்புகளினால் தான் இன்று 55 முகமதியநாடுகள் சாத்தியமாகியிருக்கின்றன.

    தொடரும்…

  11. தென்றல் அவர்களுக்கு,

    //பெருங்குழு என்பதன் பெயரில் இந்துத்துவத்தை அரியணையில் ஏற்றுகிறார்.//

    இந்தியத்துவத்தை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். இந்துத்துவத்திற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இந்த இந்தியத்துவத்தை இந்துத்துவமாக்குவதோ இல்லை இந்தியத்துவமாக வளர்த்தெடுப்பதோ நம் கையில் தான்.
    // இந்தியாவிற்கு பெரும்பான்மை என்ற ஒன்று கிடையாது. ***//

    வெள்ளையர்களின் காலையும் நக்கிப் பிழைத்திருக்கிறார்கள். முகமதியர்களின் காலையும் நக்கிப் பிழைத்திருக்கிறார்கள். பார்ப்பனர்களின் தோலையும் நக்கிப் பார்த்திருக்கிறார்கள். இன்றும் வெள்ளையர்களின் முகமதியர்களின் காலைத்தான் நக்கிப் பிழைத்திருக்கும் நிலையில் தான் பலர் இருக்கிறார்கள். மறுக்கவில்லை. அதற்காக முகமதியத்தை பொறுத்த வரையில் இங்கே ஒரு பெரும்பான்மை இருக்கிறது. அதை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம்.

    //மதப்பாசிசம் முறியடிக்கப்படவேண்டியது//

    ஆம். சந்தேகமில்லாமல். ஆனால் நமது நாடு வேறு மக்கள் இல்லாத கோளத்தில் இல்லை. நம்மைச்சுற்றி மதப்பாசிசம்தான் கோலோச்சுகிறது. அதையும் சேர்த்துத்தான் பேசவேண்டும் என்கிறேன்.

    //நைச்சியமாக பார்ப்பனியத்தை உட்புகுத்துகிறார் யுனிவர்படி//

    பார்ப்பனியம் தோன்றாத காலத்தில் கூட சடங்குகள் இருந்திருக்கும். பார்ப்பனியம் இல்லாத இடங்களில் கூட சடங்குகள் இருக்கிறது. எல்லாவற்றையும் பார்ப்பனியத்திற்கு கொடுத்து விட்டு நான் மொட்டை மரமாக நிற்பது அறியாமை. பிறப்பு முதல் இறப்பு வரை சடங்குகள் மனிதன் தோன்றியதிலிருந்தே வந்திருக்கிறது. இன்று இவற்றில் பெரும்பாலானவற்றை பார்ப்பன பூசாரிகள் தமதாக்கிக் கொண்டார்கள். அல்லது அப்படி செய்யவிட்டுவிட்டோம். ஆனால் எல்லாவற்றையுமே அப்படி விட்டுவிடுவது நமது மனித வரலாற்றை மறப்பதாகும். வாழைமரக்கல்யாணம் பார்ப்னர்களின் முன்னிலையில் நடைபெறுகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அது அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டதொன்றுமில்லை. நான் இது போன்ற கல்யாணம் செய்து தான் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை. குறிப்பாக பார்ப்பனர்களை அழைத்துத்தான் செய்யவேண்டும் என்று சொல்லவில்லை.

    //சால்ஜாப்பு சட்டம் ஒழுங்கு கெடவில்லை//

    அதாவது எந்த உயிருள்ள ஆணுக்கும் எந்த உயிருள்ள பெண்ணுக்கும் அநீதி நிகழ்த்தப்படவில்லை என்ற பொருளில் தான் சட்டம் ஒழுங்கு கெடவில்லை என்றேன்.

    //வாழை மரத்திற்கு தாலிகட்டுவது சரி என்றால்***//

    மிகவும் மெனக்கெட்டிருக்கிறீர்கள். வாழை மரத்திற்கு தாலிகட்டுவது பற்றியெல்லாம் சட்டத்தில் ஏதும் இருக்காது என்பது தான் நான் சொன்ன சட்டத்தால் ஏதும் செய்யமுடியாது என்பதன் பொருள்.

    //பார்ப்பனர்களுக்கான அதிகாரங்கள் *** பித்தலாட்டமில்லையா?//

    ஆம். சந்தேகமேயில்லை. இதைப்பற்றி நான் வேறு இடத்தில் பேசியிருக்கிறேன். எனது தளத்திலும் தான்.

    //முகம்மதியத்தின் அடிப்படைக் கூறே பல மனைவிகள் தான் என்று கூறியதன் மூலம் அளவிற்கு மீறி எடையைச் சுமந்தது யார்?//

    பலதாரம் அடிப்படைக் கூறு என்று நான் கூறவில்லை. முகமதியர்கள் தான் அப்படிக் கூறுகிறார்கள். (முகமதியத்தில் பலதாரத்தின் உன்மை நிலைப் பற்றி நான் இந்த விவாதத்தில் பேசி இருக்கிறேன். எனது பதிவிற்கும் சுட்டி கொடுத்திருக்கிறேன்.) பார்ப்பனிய கதைகளுக்கும் முகமதிய வழிகாட்டல்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கின்றன. கீதையைப்பற்றியும் குரானைப் பற்றியும் நான் மேலே எழுதியிருப்பதை மறுபடியும் படியுங்கள். அது ஒரு எடுத்துக்காட்டு. வேண்டுமென்றால் விரிவாகவும் இதை பார்க்கலாம்.

    //தாங்கள் கொட்டாம்பட்டி பாயையும் ஏற்றுக்கொள்ளவில்லை//

    நீங்கள் வாணக்காரய்யாவைப் பற்றி பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். சரியா. அந்த பதிவு அவரைப் பற்றிய ஒரு நினைவு கூறல். அவரின் எழுத்துக்களோ பார்வைகளோ அதில் இல்லை. அவருடைய வாழ்க்கையைப் பற்றிய குறிப்புகளிலிருந்து அவரை நான் முகமதியராக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உன்மைதான். அதே சமயம் சைப்பை கூடத்தான் நான் முகமதியராக ஏற்றுக் கொள்ளவில்லை. அவரே அதை சொல்லிக் கொள்ளவில்லை என்பது அவருடைய பதிவிலேயே இருக்கிறது.
    அல்லது பழம் விற்பவரைப்பற்றிக் கூறுகிறீர்களா. அவரைப்பற்றி அங்கேயே நான் எனது நிலையை தெளிவு படுத்தியிருக்கிறேன். அதாவது தன்வீட்டுப் பெண்களை எப்படி நடத்துகிறார் என்பதைப்பொறுத்து அவரை வகைப்படுத்த முடியும் என்று கூறியிருக்கிறேன்.

    //துருக்கி முசுலீமும் இந்திய முசுலீமும் ஒன்று கிடையாது.***//

    நீங்கள் அஸ்கர் அலி வேண்டுமானால் அப்படிச் சொல்லலாம். அவர்கள் அப்படிச் சொல்லவில்லை. உம்மா என்கிறார்கள். ஐநா வில் OIC தான் மிகப் பெரிய voting bloc. ஐயகோ ஆபத்து என்று தான் கதறுகிறேன். இந்த 55 நாடுகளில் எப்படி இந்த நிலை வந்தது. அந்த ஒவ்வொரு நாட்டிலும் இந்த மாற்றம் சில பத்தான்டுகளில் இருந்து சில நூற்றாண்டுகளில் நடந்திருக்கிறது. மாற்றம் எப்படியெல்லாம் நடந்திருக்கும் என்று யுகித்துப் பார்ப்பது ஒன்றும் கடினமில்லை.
    சுன்னாவில் தான் எல்லாம் உள்ளது எனும் முகமதியர்கள் தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் வைத்தது தான் சட்டம். பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக போராடியவர்களை, நியாயத்தின் பக்கம் நின்றவர்களை நான் ஒன்றும் சொல்லவில்லை. எல்லா வரிகளிலும் ஒரு டிஸ்கி போட்டு எழுத முடியுமா.

    தொடரும்…

    • சிந்தனையாளர்களின் பார்வைக்கு….

      //ஒரே ஒருவர் அதை செயல் படுத்தியிருந்தாலும் அது உன்மைதான் என்றாகும். செயலிலும் நடப்பதுதான். \\ தோழர்கள் இந்த அர்த்தமற்ற பிதற்றலை புரிதல் வேண்டும்.. சம்பந்தமே இல்லாமல் ஒருவள் இஸ்லாத்திற்க்கு மாற்றவேண்டும் என்ற அடிப்படையில் மட்டுமே கொண்டு காதல் செய்து திருமணம் செய்வதினால் அவன் பெரும் இலாபம் என்ன , இதனால் அவன் எதனை சாதித்துவிட முடியும். இஸ்லாமியர்களிலேயே ஆயிரக்கணக்கான பெண்கள் திருமண வயதை எட்டியும் திருமணம் ஆகாமல் இருக்கும் தருவாயில், அவர்களை மனம்முடிப்பதால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மாப்பிள்ளையும் நல்வாழ்க்கையும் கிடைக்கும். இதுவே , லவ் ஜிஹாத் என்று இவர்களே உருவாக்கிய கான்செப்டின் அடிப்படையில் என்ன நன்மை விளைந்து விட முடியும்.
      1) சம்பந்தப்பட்டவன் இஸ்லாத்தின் மேல் உள்ள பற்றுதலின் காரணத்தால் தான் செய்தான் என்று இவர்கள் சொல்லும் கருத்தில் உண்மை இருப்பின், அவ்வாறு பற்று உள்ள ஒருவன் மார்க்கம் தடுத்த காதலை எப்படி செய்திருப்பான்? இஸ்லாத்தின் கான்செப்டில் திருமனத்திற்க்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கி பழகுவதே தவறு எனும்போது , இந்த லவ் ஜிஹாத் என்ற வாதம் அர்த்தமற்றதாகிறது.

      2) திருமணம் சைதுக்கொல்வது சிறந்தவிஷயம் என்றுதான் குரான் மற்றும் ஹதித் சொல்லும் விஷயமே அன்றி , மதம்மாற்றி திருமணம் செய்துக்கொள்வது சிறந்தது என்ற ஒரு கான்செப்ட் இல்லாத போது இதனை எப்படி இஸ்லாத்தினுடன் இணைப்பீர்கள்?

      3) மேலும் இவ்வாறு வற்புறுத்தலின் பெயரில் ஒருவள் மதம்மாறினால் அதனால் யாருக்கு என்ன பயன்? ஆன்மிகம் என்பது மனநிலை சம்பந்தப்பட்ட விஷயம்மாயிற்றே , இதில் வேஷமிட முடியுமா?

      4) மேலும் சில கிறுக்கர்கள் இவ்வகையான திருமணங்களால் இஸ்லாமியர்களின் பெண்களின் தொகை அதிகமாகிறது, ஜனத்தொகை அதிகமாகிறது என்று ஊளை விடுகிறார்கள். உண்மையில் இவ்வகை திருமணங்களால் இஸ்லாமியர்களின் ஜனத்தொகை அதிகமாக வாய்ப்பே இல்லை, ஏனனில் இவ்வகையான காதல் திருமணம் நடைபெறுவதே அபூர்வம் , அதிலும் காதலுக்காக மதம்மாறுவது என்பது அர்த்தமற்றசெயல் இச்செயல் நடைப்பெறுவது அபூர்வதிலும் அபூர்வம்.. மாறாக மாற்றுமத சகோதரர்கள் இஸ்லாத்தின் பக்கம் மீள்வதால் தான் அதிகமாகிறது என்பதே உண்மை.

      5) மற்றொரு வாதமும் முன்வைக்கப்படுகிறது.. அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அனுமதி இருப்பாதாலேயே இஸ்லாமியர்கள் அதனை செய்கிறார்கள் என்று..
      இதுவும் வெற்று பிதற்றலே… ஏனனில் தேவை உள்ளவன் சட்டம் அனுமதி அளிக்காவிட்டாலும் கூட ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர்களுடன் வாழவே செய்வான் என்பதை நாம் நடைமுறையில் பார்க்கவே முடிகிறது. இவர்களை எந்த சட்டமும் ஈதும் செய்து விட முடியாது. மேலும் , இதனால் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவது சகோதரிகளும் அவர்கள் பெற்ற பிள்ளைகளுமே , ஏனனில் இவர்கள் சமுதாயத்தில் ஒளிந்து வாழவேண்டிய அவலநிளையையே அனுபவிப்பார்கள்.மேலும் இவர்கள் சட்ட ரீதிலான எந்த அங்கீகாரமும் வழங்கப்படுவதும் இல்லை, சொத்திலும் பங்கில்லை.. இதனை நிச்சயமாக மனசாட்சி உடையவர்கள் மறுக்க இயலாது.
      ////சாகீர் இதே தளத்தில் நான் ஒரு தமிழன் என்றும்***//
      இது ஒரு பெரிய விசயமில்லை. சிறுபான்மையாக இருக்குமிடத்திற்கேற்ற பேச்சு தான்//
      ஆளுக்கொருவாறு இடத்துக்கொருவாறு பின்னூட்டம் மற்றும் விளக்கம் கொடுக்கவேண்டிய எந்தவொரு கட்டாயமும் எனக்கு இல்லை. நான் ஒரு இந்தியனாக தமிழனாக என்னுடைய வாழ்க்கையை நடத்துவதில் என்னுடைய மார்க்கம் எனக்கு முழு சுதந்திரத்தையும் தந்துள்ளது . இன்னும் சொந்த நாட்டின் மீது காதல் கொள்வதும் ஒரு சிறந்த செயலாகவே என்னுடைய மார்க்கம் எங்களுக்கு கற்றுத்தந்துள்ளது . எனவே தான் இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு அதிகமாகவும் அதே நேரத்தில் இந்த நாட்டை ஆண்ட ஆங்கிலேயனின் மொழியை கற்பதே பாவமான செயலாக கருதியதையும் அறிவுடையோரின் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்.

      \\பிரிவினை மற்றும் ஆக்ரமிப்புகளினால் தான் இன்று 55 முகமதியநாடுகள் சாத்தியமாகியிருக்கின்றன.// இதுவும் ஒரு அடிப்படை இல்லா பிதற்றலே? இஸ்லாமியர்கள் இருப்பதால் மட்டுமே அது இஸ்லாமிய நாடுகள் ஆகிவிடாது.

  12. தென்றல் அவர்களுக்கு,

    // இசுலாம் என்ற மதத்தை ஒடுக்கும் கருவியாக//

    பாகிஸ்தானில் அசியா பீவிக்கு முகமதைப் பற்றி ஏதோ கூறிவிட்டார் என்று மரணதன்டனை விதித்திருக்கிறார்கள். இதைப்போன்றா மற்ற மதங்கள் அரசுகளால் பயன் படுத்தப்படுகின்றன? உங்களுக்கு வித்தியாசத்தைப் தெரிய வைப்பதற்குத்தான் நான் மெனக்கெடுகிறேன். இதிலேயும் தேவைப்பட்டால் தொடர்வோம்.

    //உங்கள் ‘மனித மதத்திற்கு’ இசுலாமியர்கள் தேவையில்லை//

    இசுலாமியர்களும் தேவையில்லை. இந்துக்களும் தேவையில்லை. முகமதியர்களும் தேவையில்லை….மனிதர்கள் மட்டும் போதும்.

    //பாயின்டு எடுத்துதருகிறீர்கள்.//

    அவர்களுக்குத் தேவையான பாயின்டுகளை முன்னரே தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனது பாயின்டுகளிலிருந்து குறிப்பாக சிலவற்றை தேர்ந்தெடுத்து அவற்றை அவர்கள் பயன்படுத்தும் அபாயமும் இருக்கிறது. இதற்கு மாற்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனது நோக்கம் பொது நல வர்க்கத்திருக்கும் தடைகளைப் பற்றி விவாதிப்பது, நடப்பிலிருக்கும் அநீதிகளைப பற்றி விவாதிப்பது, இருதரப்பு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவை தான். நான் பேசாமல் இருநதுவிட்டால் அவர்கள் தங்கள் வேலையை நிறுத்திக் கொள்வார்களா. நான் முன்னரே இந்த கேள்வியைக் கேட்டிருக்கிறேன். பதிலில்லை.

    // இசுலாமியனும் இந்துவும் கைகோர்த்துதான் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராடவிருக்கிறார்கள்.//

    இப்படி நடந்தால் எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால் வாய்ப்பு என்ன. ரஸ்யாவில் ஒரே மத மக்களிடையே ஆளும் வர்க்கத்திற்கு எதிரான திரட்சி நடந்திருக்கிறது. அந்த திரட்சியை வைத்து தஜிகிஸ்தான் போன்ற முகமதிய நாடுகளையும் தனது ஆளுகையின் கீழ் கொண்டுவரமுடிந்தது. (அந்த திரட்சி பின்னர் பல சூழ்ச்சிகளால் நிலைக்கமுடியாமல் போயிற்று). ஆனால் நமது நாட்டின் நிலை என்ன. ஜாதிகள் மதங்கள் மக்களைப் பிரிக்கின்றன. இந்த பிரிவினை கொள்கைகளிலிருந்து உழைக்கும் மக்கள் தங்களை விடுவித்துக் கொள்ளாமல் தங்களை இசுலாமியனாகவும் இந்துவாகவும் அடையாளப் படுத்திக் கொண்டு ஒன்று திரளமுடிவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவே என்றே நான் நினைக்கிறேன். சீர்திருத்தப்பாதை ஒத்து வராது என்று கூறியிருக்கிறீர்கள். ஒரு ஆரம்ப கட்ட உத்தியாக அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இணையத்திலேனும் விவாதித்து வரலாற்றை தெரிந்து கொள்வது நடந்த தவறுகள் மறுபடியும் நடக்காமல் இருக்க உதவும் என்பது தான் என் நிலை.

    //உங்களுக்கு இருப்பது ஒரே ஒரு வாய்ப்பு மட்டும்தான்.//

    விவாதத்தில் அடுத்த அடுத்த கட்டத்திற்கு நகரும் போது கடைசி கட்டத்தில் எனக்குத் தெரிந்த பதில் பொதுவுடமைக் கொள்கைதான். ‘கம்யுனிசம் என்பது பிணச் சதை’ என்று நான் ஏன் சொல்லிவிட்டு போகவேண்டும். என் கருத்தில் எது கம்யுனிசத்திற்கு தடையாக இருக்கிறது என்று கூறிவிட்டு எனக்கு முத்திரை குத்துங்கள். நன்றி.

    முற்றும்.

  13. தென்றல் அவர்களுக்கு,

    P.S:
    //சசி தரூரும் அப்படித்தான்//

    இதைப்பற்றி விவரங்கள் தெரியவில்லை. விக்கிபீடியாவில் பார்த்தேன். போதிய விவரங்கள் இல்லை.

    //ஆணாதிக்கம் மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டிய எந்த அவசியமுமில்லை//

    அவசியமில்லையோ இருக்கிறதோ அதை கருவியாகப் பயன்படுத்துவதால் தான் அதைப்பற்றி விவாதிக்கிறோம்.

    //இசுலாமியர்கள் மட்டும் ஏன் தனித்து விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்?//

    அவர்கள் தானே எங்களுக்கு மதத்திலேயே அனுமதியிருக்கிறது என்கிறார்கள். அவர்கள் தானே பொது சட்டத்தை எதிர்க்கிறார்கள். ஹிரியானாவில் ஒரு துணை முதல்வர் இரண்டாம் மணம் செய்து கொள்வதற்காக முகமதியராக மாறிக் கொண்டார் கேள்விபட்டீர்களா.

    //ஆயிசா தான் முதலில் பிரச்சனையை வெளியில் கொண்டு வந்திருந்தார்.//

    நல்லது தான். ஆனால் இது முகமதியம் கொடுத்த அனுமதியினால் அல்ல. அவர் தனக்கிருக்கும் இயற்கையான உரிமையை நிலைநாட்டத் துணிந்ததனால்தான்.

    //நீதி பணக்காரர்களின் கண்ணசைவிற்கு ஏற்பத்தான் நடைபெறுகிறது//

    இது வேறு பிரச்சனை.

    //பொது சிவில் சட்டத்தின் கீழ் சசி தரூரையும் சோயப் மாலிக்கையும் தண்டிக்க இயலுமா?//

    சட்டமே எல்லாவற்றையும் செய்து விடும் என்றும் நான் கூறவில்லையே. அதே சமயம் புதிய சட்டங்கள் அந்த அளவுக்குத் தெளிவானதாக இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதற்கேற்ற சமூக மாற்றங்களும் ஏற்பட வேண்டும். சட்டம் ஒரு துவக்கம் அல்லது ஊன்று கோல் தான்.

    முற்றும்.

  14. சிந்தனையாளர்களின் பார்வைக்கு….

    //முகமதியர்கள் தான் அப்படிக் கூறுகிறார்கள். (முகமதியத்தில் பலதாரத்தின் உன்மை நிலைப் பற்றி நான் இந்த விவாதத்தில் பேசி இருக்கிறேன். எனது பதிவிற்கும் சுட்டி கொடுத்திருக்கிறேன்.) பார்ப்பனிய கதைகளுக்கும் முகமதிய வழிகாட்டல்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கின்றன. \\ முதலில் முகம்மதியம் என்ற ஒரு மார்க்கமோ மதமோ இல்லை என்று நான் பதிவுசைய விரும்புகிறேன். ஏனனில் முஹம்மது (ஸல்) அவர்களை வணங்கும் எந்த ஒரு மனித கூட்டட்தையும் இந்த உலகம் கண்டிருக்காது , இன்ஷா அல்லா இனியும் காணாது.

    இவரின் வெற்று வாதங்களை ஏற்கனவே என்னுடைய விளக்கங்களினால் தெளிவுப்படுத்தி உள்ளேன் . எனவே , தோழர்கள் சார்புநிலை அற்று பரிசீலிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    //இசுலாமியர்களும் தேவையில்லை. இந்துக்களும் தேவையில்லை. முகமதியர்களும் தேவையில்லை….மனிதர்கள் மட்டும் போதும்.\\
    அவருக்கு தேவை மனிதர்களும் இல்லை மனிதர்களின் உருவில் விலங்குகள்.. ஏனனில் இவருடைய் முற்போக்கு (?) சிந்தனையானது திருமனம என்னும் சடங்கே கூடாதாம் . நினைத்தவர்கள் நினைட்டவர்களுடன் சேர்ந்துக்கொண்டு வாழ்க்கை நடத்தவேண்டியதுதானாம்? ஏறத்தாள விலங்கு வாழ்க்கைதான்.

    கருத்தை பார்க்க https://www.vinavu.com/2014/09/23/common-civil-code-busting-the-myths-1/#comment-210313
    October 19, 2014 at 1:42 pm
    Permalink
    27.1.1.1.1.1.1.1

    //நான் பேசாமல் இருநதுவிட்டால் அவர்கள் தங்கள் வேலையை நிறுத்திக் கொள்வார்களா. நான் முன்னரே இந்த கேள்வியைக் கேட்டிருக்கிறேன். பதிலில்லை.// தோழர்களே , இந்த உலகத்திலேயே ஒரே ஒரு அறிவாளிதான் அதுவும் உனி தான் . இவர் மட்டும்தான் சிந்தித்து கேள்வி கேட்டிருக்கிறாராம் பதில் இல்லையாம். அட பக்கி , நான் கேட்ட பலவிளக்கங்களுக்கு உம்மிடத்தில் பதில் சொல்ல திராணி இல்லையே , இன்னும் இஸ்லாமியர்களுக்கு எதிராக நீர் அள்ளிப்போட்ட பல அவதூருகலுக்கும் திப்புவும் நானும் , இன்னும் பிற தோழர்களும் கேள்வி எழுப்பியதில் எதற்காவது ஆதாரத்தோடு பதில் அளிக்கவில்ல என்றாலும் கூட பரவாயில்லை குறைந்தபட்சம் தர்க்க மற்றும் எதார்த்தத்தின் அடிப்படைலாவது இவருடைய பதில் இருந்ததா? என்பதையும் தோழர்கள் பார்ப்பது நல்லது.
    https://www.vinavu.com/2014/09/23/common-civil-code-busting-the-myths-1/#comment-210313
    இவரின் முகமூடி கிழிவதை உணர்ந்ததால் தான் இவர் அங்கு விவாதத்தை தொடராமல் தொடர திராணி இல்லாமல் புதியதாக ஒண்ணுமே நடவாதது போல் புதிய கதைகளை இங்கு எழுத ஆரம்பித்து விட்டார்.

    //ஹிரியானாவில் ஒரு துணை முதல்வர் இரண்டாம் மணம் செய்து கொள்வதற்காக முகமதியராக மாறிக் கொண்டார் கேள்விபட்டீர்களா. \\ இப்போ உன்னுடைய பிரச்சனை என்ன இரண்டாவது திருமணமா? அல்லது இஸ்லாத்திற்க்கு மாறி திருமணம் சைதுக்கொண்டதா? இரண்டாவது திருமணம் செய்வதற்காக முஸ்லிம் ஆனதா? திரு மு கருணாநிதி எத்தனை பொண்டாட்டிக்காரர்? முலாயம் சிங்க் யாதவ், திக் விஜய் சிங்க் என்று நீண்டுக்கொண்டே போகும் இன்னும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் கணக்கெடுத்தால் அதனை மட்டுமே ஒரு பதிவாகவே வெளி இடமுடியும்.

    தோழர்களே , சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் எவை ஆனாலும் சரி அதன் அடிப்படை, இன்றைய எதார்த்த நிலை மற்றும் சொல்பவனின் மனநிலை போன்றவற்றை வைத்து உங்களின் புத்தியை எவ்வித சார்புத்தன்மையும் அற்ற நிலையில் பரிசீலனை செய்யுங்கள். சொல்லப்படும் விஷயமானது நடைமுறைக்கு சற்றும் பொருந்தாததாக இருக்கும் பட்சத்தில் அதற்க்கான ஆதாரம் மற்றும் விளக்கம் கேளுங்கள் . இல்லையேல் இங்கு காழ்புணர்வு என்ற எழுதுகோலால் கண்டதையும் எழுதிவிட்டு இதுதான் உண்மை சத்தியம் என்று கதை அளப்பார்கள்.

    நான் இல்லை என்றாலும் என்போன்ற நற்சிந்தனை உள்ள தோழர்களால் இதுபோன்ற கருத்தாக்கங்கள் தொடரும் என்ற நம்பிக்கையில் தற்போது விடைபெறுகிறேன் . நட்சிந்தனையோர் வளரவும் , கால்ப்புனர்வாளர்கள் திருந்தவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கும் என்னுடைய கருத்துக்களுக்கும் வாய்ப்பு அளித்தமைக்கு வினவு இக்கு என்னுடைய ஸ்பெஷல் தேங்க்ஸ்.

    • ஜாகிர்,

      சிறுபிள்ளைத்தனமான கேள்விகளை மற்றும் கருத்துக்களைத் தவிர்த்து தேறிய சிலவற்றிற்கு மட்டும் பதிலளிக்கிறேன்.

      //மார்க்கம் தடுத்த காதலை எப்படி செய்திருப்பான்?//

      இது காதலில்லை ஜிகாத். ஆணும் பெண்ணும் பழகுவதே தவறு. ஆனால் ஜிகாதில் கைப்பற்றப்பட்ட அல்லது கைப்பற்றப்படவிருக்கும் காபிர் பெண்களிடம் இது பொருந்தாது.

      //இதனை எப்படி இஸ்லாத்தினுடன் இணைப்பீர்கள்?//

      இப்படித்தான். முகமதியத்தின் படி முகமதியர்கள் முகமதியப்பெண்களைத்தான் நிக்கா செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை. மற்றும் அவர்கள் காபிர் பெண்களை தாராளமாகக் கவர்ந்து கொள்ளலாம்.

      //சொந்த நாட்டின் மீது காதல் கொள்வதும் ஒரு சிறந்த செயலாகவே என்னுடைய மார்க்கம் எங்களுக்கு கற்றுத்தந்துள்ளது//

      எப்படி என்று ஆதாரம் கொடுக்கமுடியுமா.

      //இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு//

      தமது அதிகாரம் கை நழுவிப் போவதை எந்த சுல்தான் தான் விரும்புவான். ஆனால் இதையும் பெருமையாகப் பேசி எதை சாதிக்கப்போகிறீர்கள்.

      //ஆங்கிலேயனின் மொழியை கற்பதே பாவமான செயலாக//

      காபிர்களின் சங்காத்தமே ஹராம் தான். அவர்களின் மொழிமட்டும் ஹலாலாகுமா.

      //ஆதாரத்தோடு பதில் அளிக்கவில்ல//

      எனது பதில்களில் உள்ள குறிப்பிட்ட சில வார்த்தைகளை இணையத்தில் தேடினாலே ஆதாரங்கள் கிடைத்து விடும். எப்படியோ. எதற்கு வேண்டும் என்று சொல்லுங்கள். கொடுத்துவிடலாம்.

      • நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் :

        தென்றல் ,ஜாகிர் போன்ற நண்பர்கள் இப்படி பட்ட அறிவு சிவியுடன் [ நபரிடம்] விவாதித்து நேரத்தை வீண் செய்வதை விட வேறு எதேனும் தேவையான் விவாதத்தில் ஈடுபடலாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். யாரோ ஒரு சில மதவாதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் மட்டுமே ஹைராம் நிலையில், பழி தீர்க்கும் உணர்வுடன் கருத்து வேட்டையாடிகொண்டு உள்ளார். ஒன்று அவரே மாறவண்டும் அல்லது காலம் போகும் போக்கில் அவர் மாறுவார் ,அல்லது கீழ்பாக்கம்…….

    • ஜாங்ரி புகாரி பாயி!
      தயவு செயிது நீங்கள் பார்ப்பன என்ற சொல்லை பயன்படுத்த்த வேன்டாம். யாரவது ஒரு மாற்று மத சகோதரர் உங்களை து**** அதாவது துருக்கியிலிருந்து வந்தவர் என்று சொன்னால் “அமைதி மார்க்கத்தை” கடைப்பிடிப்பீர்களா? அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ். ஆக மாறுவீர்களா?..
      வார்த்தைகளில் கண்னியம் வேண்டாமா?..

  15. விவாதத்தை தொடரும் நண்பர்களுக்கு,

    எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்கு என்னால் விவாதத்தை தொடர முடிவதற்கு வாய்ப்புகள் மிகக்குறைவு. புதிய வேலைகள். விவாதத்தை அதன் பிறகு தொடர்வேன். நீங்கள் உங்கள் கேள்விகளை கருத்துக்களை நிதானமாகப் பதியலாம். நன்றி.

  16. நண்பர்களே,
    பொது சமூக சட்டம் என்பது தேவை.அதனை மதவாதிகள் எதிர்க்கிறார்கள்.மதச்சட்டங்கள் மதவாதிகளின் ஆதிக்கத்திற்கு உதவுகின்றன.

    எ.கா
    உயர்சாதியினர் மட்டுமே பல கோயில்களில் பூசை செய்ய முடியும்.கோயில் சொத்துகள் பரம்பரையாக சிதம்பரம் தீட்சிதர்களால் நுகரப் படுகிறது.

    முஸ்லீம்கள் (முந்தைய மூன்று மனைவிகள் அனுமதி இன்றியே)நான்கு திருமணம் வரை செய்ய முடியும்.பெண்களுக்கு ஆண்களுக்கு கொடுப்பதில் பாதி சொத்து கொடுத்தல்.

    இந்தியாவில் கிறித்தவ விவாக இரத்து மிகவும் கடினம்.

    இவற்றை நீக்கிய பொது சமூக சட்டம் என்பதை நோக்கி பயணித்தல் மனித நாகரிகத்தின் வளர்ச்சி எனலாம்.
    மதங்கள் தோன்றிய காலத்தில் காட்டு மிராண்டி சட்டங்களை ஒதுக்குதலே நலம்.

    அதை விட்டு, என் மதச் சட்டம் எக்காலத்துக்கும் பொருந்தும் என (பிடி)வாதம் செய்பவர்களால் ஒரு பயனும் இல்லை!!!.

    இது திரு புகாரிக்கு

    // ஏனனில் இவருடைய முற்போக்கு (?) சிந்தனையானது திருமனம என்னும் சடங்கே கூடாதாம் . நினைத்தவர்கள் நினைட்டவர்களுடன் சேர்ந்துக்கொண்டு வாழ்க்கை நடத்தவேண்டியதுதானாம்? //
    குரானில் இஸ்லாமிய ஏக இறைவனும் திருமணம் இன்றி ஆண் பெண் உறவு கொள்ள அனுமதிக்கிறான் என்பது உங்களுக்கு தெரியுமா?

    4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்),””” அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் “”””- இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்(short cut!!!).
    23:6. ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர – (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
    ஆகவே இன்னும் குரான் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருந்தும் என்ற கூப்பாட்டை விட்டு விடுங்கள்.
    நன்றி!!!

    • tholar nasikethan,

      //முஸ்லீம்கள் (முந்தைய மூன்று மனைவிகள் அனுமதி இன்றியே)நான்கு திருமணம் வரை செய்ய முடியும்.பெண்களுக்கு ஆண்களுக்கு கொடுப்பதில் பாதி சொத்து கொடுத்தல்.\\

      முதலில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் பற்றி அதிகமாகவே விவாதம் செய்து ஆகிவிட்டது … இருந்தும் ஏனோ சகோதரர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் கேள்விகள் கேட்ட வண்ணம் உள்ளனர். சரி அனைவருக்கும் புரியும் வகையில் அட்டவணை இட்டே சொல்லிவிடுகிறேன்..
      1) முதலில் இஸ்லாத்தில் ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்துக்கொள்ளலாம் என்பது கொடுக்கப்பட்ட அனுமதி கட்டளை இல்லை என்பதை புரிந்துக்கொள்ளவும். மேலும் அவ்வாறு சைதுக்கொல்வதை சிறந்த விஷயம் என்னும் நோக்கில் எந்த ஒரு ஆதாரத்தையும் இஸ்லாத்தில் யாராலும் காட்டவும் இயலாது என்பதையும் புரியவும்.

      2) ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை செய்வதால் மட்டும் அவனுக்கு எந்தவொரு சிறப்பையும் இவ்வோலகத்திலேயோ அல்லது மறு உலகத்திலேயோ வழங்கப்படும் என்பது போன்ற விஷயங்களும் சொல்லப்படவில்லை.
      3)ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்த ஒரு நபர் அந்த மனைவிகளிடையே சமமாக நடந்துக்கொல்லுதல் வேண்டும் என்பது கட்டாய நிபந்தனை என்பதையும் ,மீறுவோர் தண்டனைக்கு ஆளாவர்கள்.

      4) ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிமார்களை பெற்றுள்ள ஒருவன் சமமாக நடத்தமுடியாது என்று பயந்தால் அவன் ஒருவளை மட்டுமே திருமணம் சைதுக்கொல்வது வேண்டும் என்று கீழ்க்கண்ட வசனம் கூருவதை கவனிக்கவும். அல்லது அடிமைகளிடம் வாழட்டும் என்றும் கூரப்பட்டு உள்ளது. இன்று அடிமை முறை இல்லை என்பதால் இதை பற்றிய விளக்கத்திற்க்கு செல்வதற்கு தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.

      *அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் – இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். அல்குரான் 4;3

      எனவே , ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை சையும்மாறு ஊக்குவிக்கும் நோக்கில் எந்தவொரு ஆதாரத்தையும் நாம் காண இயலாது. மாறாக , அவ்வாறு செய்பவர்கள் மற்றும் செய்ய விருப்படுபவர்கள் எவ்வகையில் நடந்துக்கொள்ளுதல் வேண்டும் என்பதனையே கூருகிரது..

      தாங்கலிடமிருந்து இவ்வகையான கேள்விகள் கூட எழலாம்.
      1) இஸ்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை முற்றிலுமாக தடைவிதித்திருந்தால் இஸ்லாமியர்கள் அவ்வாறு செய்யாமல் இருந்திருப்பார்கள் அல்லவா?

      என்னுடைய பதில்; முதலில் இஸ்லாமியர்களான எண்களின் நம்பிக்கை அனைத்து ஜீவராசிகளையும் படைத்தது ஒரே இறைவன் . படைத்த இறைவனுக்கு நன்றாகவே தெரியும் இந்த மனித சமுதாயத்தின் தன்மை ,அவனின் பலம் பலகீனம் என்று அனைத்து அறிந்த இறைவன் அவனை கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் கட்டுப்படுத்தியும் , வழிகாட்டவேண்டிய விஷயத்தில் வழிகாட்டியும் உள்ளான்.

      ஒரு வேலை ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் கூடாது என்பது போன்ற சட்டம் இருந்திருந்தால் கூட
      a) மனிதர்களில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட துணையை தேடும் வேட்கையில் திருமணம் இல்லா கள்ளத்தொடர்பை ஏற்படுத்தவே முற்படுவர் என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றல்ல.
      தினசரிகளில் இவ்வகையான செய்திகள் ஏராளம்.
      b)நம் நாட்டில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் இரண்டாவது திருமணம் செய்தல் இயலாது என்பது சட்டம் . நடைமுறை எதார்த்தம் என்ன ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தவர்களை தண்டிக்க முடிந்ததா? அல்லது தடுக்கத்தான் முடிந்ததா?
      c ) இந்த சட்டம் கடுமை ஆக்கப்பட்டால் சகோதரிகளில் எத்தனை பேர் கணவனால் விபச்சாரி என்ற பட்டத்தை சுமக்க நேரிடும் என்பதை சிந்தித்தீர? ஏனனில், அவனுக்கு இன்னுரு மனைவி வேண்டும் என்றால் விவாகரத்து பெற வேண்டும் , அதற்க்கு தகுந்த காரணம் இருக்கவேண்டும் . உண்மையில் காரணம் இல்லை என்றால் இவ்வகையான கேடுகெட்ட கணவன்கள் இவ்வகையான பொய்யான பழியை சுமத்தியாவது தன்னுடைய காரியத்தை சாதிக்கவே முயல்வார்கள் . முயன்றும் இருக்கிறார்கள் என்பதும் எதார்த்தம்.

      d )இன்னும் ஒரு சிலர் முந்தைய மனைவியை கொலை செய்த வழக்குகளையும் நாம் நடைமுறையில் காணவே முடிகிறது.

      நேரம் கிடைக்கும் போது முழுமையாக விவாதிப்போம்…
      தொடரும்..

  17. தொடர்ச்சி….
    e ) சம்பந்தப்பட்டவனின் முதல் மனைவியின் நிலை இவ்வாறு இருக்க , கள்ளத்தொடர்பில் உள்ள சகோதரியின் நிலையோ அதற்க்கு மேல் பரிதாபம் .
    i ) சமுதாயத்திலிருந்து விலகியே வாழ்க்கையை ஓட்டவேண்டிய கட்டாயம். அதாவது ரகசிய வாழ்க்கை.
    ii ) சொத்தில் பங்கு பெறுதல் இயலாத காரியம் , பெற்றெடுக்கும் பிள்ளைக்கும் வாரிசுரிமை கிடைக்காது.. மொத்தத்தில் சட்ட ரீதியலான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க இயலாது.
    iii ) திடீரென கணவன் கைவிட்டால் காவல்துறையையோ நீதித்துறையையோ அணுகுதல் முடியாது.
    ஆக இவ்வகை சட்டத்தினால் எவ்வித நன்மையையும் விளைய வாய்ப்புகள் இல்லை என்பதே என்னுடைய பார்வை.

    2)விவாகரத்தில் முந்தைய மனைவியர்களின் சம்மதத்தை வாங்க வேண்டியதில்லை என்பது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு அல்லவா? என்ற கேள்வியை தாங்கள் முன்வைக்கலாம்.

    a )முதலில் எந்த மனைவி தனது இரண்டாவது திருமனத்திற்க்கு அனுமதி வழங்குவாள் . அவள் அனுமதி கிடைக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட கணவன் என்ன நிலையை எடுப்பான். i ) விவாகரத்து ii ) சிலிண்டர் வெடிப்பு கொலை III ) கள்ளத்தொடர்பு iv ) திருமண ஆசையை விடுவது.
    இதில் நான் முன்பு சொன்ன i ,ii ,iii , செயல்பாடுகளை நடைமுறையில் காணவே முடிகிறது மேலும் இதன் விகிதாச்சாரமும் ஏறத்தாள ஒரேவகைதான். ஆனால் iv விஷயத்தை கடைப்பிடிப்போர் எத்தனை பேர் மற்றும் விகிதாச்சாரம் வெளியில் தெரிவதில்லை என்றாலும் அதிகம் இருக்காது என்றே கருதமுடிகிறது.

    b ) மேலும் நிச்சயமாக இரண்டாம் திருமணம் செய்வதற்கு முந்திய மனைவியின் சம்மதம் அவசியம் தேவை இல்லை மற்றும் சட்டத்தில் இத்திருமன்த்திட்க்கு இடம் இருக்கும் பட்சத்தில் தேவை அற்ற கள்ளத்தொடர்பு, விபச்சாரம், சமுதாயத்திலிருந்து விலகி வாழ்தல், தந்தை பெயர் சொல்லா (அ) தெரிய சமுதாயம் உருவாதல் போன்றவை தவிர்க்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட கணவனின் மனைவிமார்கள் யார் பாதிப்புல்லாக்கப்பட்டாலும் ஏமாற்றப்பட்டாலும் சட்டரீதியலான அணுகுமுறையை மேற்கொள்ள இயலுவதுடன், மானக்கேடான பல விஷயங்கள் தடுக்கப்படுவதர்க்கும் காரணமாகிறது.

    // குரானில் இஸ்லாமிய ஏக இறைவனும் திருமணம் இன்றி ஆண் பெண் உறவு கொள்ள அனுமதிக்கிறான் என்பது உங்களுக்கு தெரியுமா?\\

    தோழரே, ஒரு அவசரமும் இல்லை பொறுமையாக தாங்கள் அளித்த வரிகளின் முன் பின் சார்ந்த வரிகளையும் சரத்து படித்துவிட்டு தாங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள். ஏனனில் தாங்கள் கூருவதுபொல் திருமண மில்ல இல்வாழ்க்கை உண்டு என்ற நிலைப்பாடு இஸ்லாத்தில் இல்லை . தாங்களே பல வலைத்தளங்களை பார்த்து அறிந்து நல்ல படிப்பினையை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    //ஆகவே இன்னும் குரான் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருந்தும் என்ற கூப்பாட்டை விட்டு விடுங்கள்.\\ இறைவனால் வழங்கப்பட்ட சட்டத்திற்க்கு அழிவில்லை என்பதே என்னுடைய நிலைப்பாடு..
    nandri
    மிக்க நன்றி.

  18. நன்பர்,புஹாரி,
    1//முதலில் இஸ்லாத்தில் ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்துக்கொள்ளலாம் என்பது கொடுக்கப்பட்ட அனுமதி கட்டளை இல்லை என்பதை புரிந்துக்கொள்ளவும். //
    கட்டளையோ,அனுமதியோ அது முல்லாவின் விளக்கம் சார்ந்தது. பன்னிக் கரி தின்னக் கூடாது என்பது கட்டளை என்பீர்கள் ஆனால் குரானில் என்ன ஏக இறைவன் கூறுகிறார்?.
    2:173. தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்;””” ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் – வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.”””
    இங்கு மட்டும் அல்ல இன்னும் குரான் 5.3,6.145, 16:115.ஆகிய இடங்களிலும் நிர்பந்தத்தில் தின்று விட்டால் பாவமில்லை என்கிறார். இதைக் கட்டளை என்பீர்களா?
    குரானில் உள்ள மனித விரோத அனுமதிகளால் இன்னும் பலர் துன்புறுத்தப் படுகிறார்கள்..நான்கு மனைவிகளையும்,எண்ணற்ற பாலியல் அடிமைகளை வைத்துக் கொள்ள அல்லா வழங்கிய அனுமதியினால் 1960 CE வரையில் அவை நடைமுறையில் இருந்தது. இன்னும் ஐ எஸ் தீவிரவாதிகள் இன்றும் செய்கிறாகள்.
    http://www.cnn.com/2014/10/30/world/meast/isis-female-slaves/index.html?hpt=hp_t1
    அடிமைகள் ஒழிப்பினை காஃபிர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே முஸ்லீம் நாடுகள் வேறு வழியில்லாமல் கைவிட்டன.ஆகவே மத அடிப்படையிலான சட்டங்கள் இக்காலத்திற்கு ஏற்றதல்ல என்பதை உணரவும்.
    நன்றி!!!!

  19. //தாங்கள் கூருவதுபொல் திருமண மில்ல இல்வாழ்க்கை உண்டு என்ற நிலைப்பாடு இஸ்லாத்தில் இல்லை /
    நண்பர் புஹாரி,
    உங்கள் மத நிறுவனர் திரு முகமது அவர்களின் (இறந்த) மகன் இப்ராஹிம் அவர்களின் தாயார் யார்? அவரை திரு முகமது எப்போது திருமணம் செய்தார்? என்பத‌ற்கு சஹியான ஹதிது காட்டவும்.
    Thank you

    • //மனைவிகளையும்,எண்ணற்ற பாலியல் அடிமைகளை வைத்துக் கொள்ள அல்லா வழங்கிய அனுமதியினால் 1960 CE வரையில் அவை நடைமுறையில் இருந்தது. இன்னும் ஐ எஸ் தீவிரவாதிகள் இன்றும் செய்கிறாகள்.
      http://www.cnn.com/2014/10/30/world/meast/isis-female-slaves/index.html?hpt=hp_t1
      அடிமைகள் ஒழிப்பினை காஃபிர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே முஸ்லீம் நாடுகள் வேறு வழியில்லாமல் கைவிட்டன.ஆகவே மத அடிப்படையிலான சட்டங்கள் இக்காலத்திற்கு ஏற்றதல்ல என்பதை உணரவும்.\\
      தாங்கள் புரிந்து எழுதி உள்ளீர்களா இல்லை புரியாமல் எழுதி உள்ளீர்களா என்று எனக்கு புரியவில்லை. ஏனனில் அடிமை முறை அந்த காலக்கட்டத்தில் வழமையாக இருந்த ஒரு விஷயம் மேலும் இங்கு எதோ இஸ்லாம் தான் அதனை தோற்றுவித்தது போல் ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள் கால்புனர்வாளர்கள். மேலும் அந்த காலக்கட்டத்தில் அடிமைகளை எப்படி நடத்தவேண்டும் என்ற ஒரு சட்டம் கூட கிடையாது . அந்த காலக்கட்டத்தில் தான் இஸ்லாம் அடிமைகளை எப்படி நடத்துதல் வேண்டும் என்ற சட்டத்திட்டத்தினை கொடுத்தது. மேலும் , அதே காலகட்டத்திலேயே இஸ்லாம் அடிமை விடுதலையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் நோன்பை விட்டவன் அடிமையை விடுதலை விடட்டும் , மேலும் ஜகாத் பணத்தை அடிமையை விடுதலை செய்வதற்கு கூட பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற சட்டதிட்டங்கள் எல்லாம் இவ்வகை கால்புனர்வால்களின் கண்களுக்கு ஏனோ தெரிவதில்லை. அல்குரான் 90;10-14, 2;177,4:92, 5:89, 58:3.
      மேலும் இது சம்பந்தமான விலாவாரியான விவாதத்தை கீழ்க்காணும் லிங்கில் பார்க்கவும்.
      https://www.vinavu.com/2014/08/05/israeli-occupation-of-palestine-a-historical-perspective-r-jawahar/

      மேலும் , இஸ்லாம் அடிமட்துவட்தை ஆதரிக்கவில்லை அதே நேரத்தில் அடிமைகள் இருக்கும் ஒரு சூல்னிலை வந்தால் அவர்களை இப்படித்தான் நடத்தவேண்டும் என்ற கட்டளையைத்தான் பிறப்பித்துள்ளது என்பதை புரியவும் . அடிமைத்துவம் இல்லாதவரை இவ்வகை சட்டங்களுக்கு வேலை இல்லை அடிமைத்துவம் என்ற ஒன்று வந்தால் இந்த சட்டமும் அமுலுக்கு வரும் என்பதே சரியான புரிதலாக இருக்க முடியும்.

      மேலும் இன்றைய காலக்கட்டத்தில் அடிமை முறை என்ற ஒன்று வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, மேலும் இசிஸ் அமைப்பை எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக எடுப்பது எந்தவிதத்தில் சரியானதாக இருக்க முடியும். பல மில்லியன் இஸ்லாமியர்கள் வாழும் இந்த உலகத்தில் எடுத்துக்காட்டிட்க்கு தீவிரவாதிகள் தான் கிடைத்தார்களா என்ன? இப்படி ஒரு அளவுமுறையை அனைத்திலும் கடைப்பிடிப்பீர்களா? உதாரனத்திற்க்கு சிகிச்சைக்காக நல்ல மருத்துவரை தேடுவீர்களா அல்லது பிரபல்யமான போலி மருத்துவரை தேடுவீரா? …

      //ஆகவே மத அடிப்படையிலான சட்டங்கள் இக்காலத்திற்கு ஏற்றதல்ல என்பதை உணரவும்.\\ சட்டத்தை நேரத்தையும் காலத்தையும் சார்ந்தது இல்லை மாறாக சூல்னிலையை சார்ந்தது.. அடிமைமுறை என்ற சூல்னிலை வந்தால் அதற்க்கான சட்டம் வரும் . எனவே , சூல்னிலை தான் சட்டத்தை தீர்மானிக்கிறது . சட்டத்தை யார் இயற்றியது எப்போது இயற்றியது என்பதல்ல விஷயம் , அந்த சட்டத்தினால் நன்மை விளைந்ததா? தீமை விளைந்ததா? குற்றங்களை கட்டுப்படுத்தியதா என்பதே முக்கியம்.

  20. தோழர் நசிகேதன்,

    //கட்டளையோ,அனுமதியோ அது முல்லாவின் விளக்கம் சார்ந்தது. பன்னிக் கரி தின்னக் கூடாது என்பது கட்டளை என்பீர்கள் ஆனால் குரானில் என்ன ஏக இறைவன் கூறுகிறார்?.\\
    தங்களின் கருத்து உங்களுடைய அறியாமையையே வெளிப்படுத்துகிறது.. ஏனனில் பொதுவாக ஒரு சட்டம் கட்டாயமாக்கப்பட்டு இருக்கும் அதே நிலையில் அந்த சட்டத்தில் ஒரு சில காரணங்களால் தளர்வும் இருக்கும்.
    எ.கா ஒருவரை கொலை செய்வது இந்திய சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றம் என்பது தங்களுக்கு தெரியும் என்று எண்ணுகிறேன். மேலும் இதே கொலை ஆனது தனது உயெரை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் தற்காப்புக்காக நடந்திருந்தால் குற்றம் கிடையாது என்ற சட்டமும் உள்ளது தங்களுக்கு தெர்யுமா?
    அது போன்றே,
    இஸ்லாத்தில் பன்னியின் மாமிசமோ மற்றும் பிற தடைசையப்பட்ட பொருளோ உணவாக எடுப்பது தண்டனைக்குரிய குற்றமே , அதேநிலையில் பஞ்சத்தில் உள்ள ஒருவனுக்கு அல்லது உண்பதற்கு வேறு எந்த முகாந்தரமும் இல்லாத ஒருவனுக்கு இந்த நிலையில் தன்னுடைய உயிரை காப்பற்றிக்கொல்வதர்க்காக இதனை உணவாக உட்கொள்ளுதல் தவறாகாது.. இதில் என்ன தவறை கண்டீர். இங்கு சம்பந்தப்பட்ட நபர் பசி என்ற நிர்பந்தத்திட்க்கு ஆளாகிறார் எனவே அவர்மீது அது தவறாகாது . இதுபோன்றே ஒருவர் கையில் கத்தியை வைத்துக்கொண்டு இப்போது நீ இந்த தடுக்கப்பட்ட மாமிசத்தை உண்ணவில்லை என்றால் உம்முடைய தலை துண்டிக்கப்படும் என்று பயமுறுத்தினால் அந்த நிலையில் அவர் அந்த மாமிசத்தை உட்கொள்வது தவறாகாது. இங்கு சம்பந்தப்பட்ட நபர் தன்னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தத்திட்க்கு ஆளாகிறார் எனவே அவர்மீது அது தவறாகாது .

  21. //உங்கள் மத நிறுவனர் திரு முகமது அவர்களின் (இறந்த) மகன் இப்ராஹிம் அவர்களின் தாயார் யார்? அவரை திரு முகமது எப்போது திருமணம் செய்தார்? என்பத‌ற்கு சஹியான ஹதிது காட்டவும்\\

    இதில் நான் சொல்வதற்கு எதுவுமே இல்லை தோழரே, அடிமை முறி என்ற ஒன்று அன்றைய காலக்கட்டத்தில் இருந்த ஒரு வழக்கம் என்று என்றோ விளக்கி ஆகிவிட்டது இன்னும் ஒன்றும் தெரியாதது போல் பெயரை மாற்றிக்கொண்டு புதியவர் போல் கேள்விகள் கேட்டால் நான் என்ன சிய இயலும். இப்ராஹிமின் (ரலி) தாயார் ஒரு அடிமையாக ஒருவரால் முஹம்மது நபியவர்களுக்கு வழங்கப்பட்டவர்கள் என்பது தங்களுக்கு தெரியாதோ? இது எப்படி திருமணம் இல்ல மணவாழ்க்கைக்கு சான்றாகும். இது அடிமை முறைக்கல்லவா சான்றாகும் . மேலும் , இன்றிய கால சூல்னிலையில் அடிமை முறை என்ற ஒன்று இல்லாதபோது இதனை மேற்கோள் காட்டுவதன் மூலம் எதனை விளக்க விரும்புகிறீர்.

    முடிவுரை..
    தாங்கள் கேட்ட கேள்விகளில் சில பொது சிவில் சட்டத்திற்க்கு சிறிதும் சம்பந்தமில்லாதவை. இருந்தும் பதில் சொன்னேன் தன்களின் புரிதலுக்காக . மேலும் , நான் நேற்று சொன்ன பல விஷயனகளில் தங்களுக்கு எதிலும் கேள்வி இல்லாமையால் வாதத்தை திசைத்திருப்பும் நோக்கமோ அல்லது இஸ்லாத்தை புரிதல் வேண்டும் என்ற உந்துதலோ உங்களை இந்த கேள்விகளை கேட்கவைத்துள்ளது என்பதையும் புரியமுடிகிறது. உண்மையில் தங்களின் திசைத்திருப்பும் நோக்கம் எனில் இனி இதற்க்கு நான் தீனி போடவிரும்பவில்லை. இல்லை இஸ்லாத்தை தெரிந்துக்கொள்ளும் நோக்கம் எனில் அதற்க்கு இந்த தளமோ நானோ உகந்தவனில்லை . எனவே, இஸ்லாத்தை தேடுவதுதான் தங்களின் நோக்கமானால் கால்ப்புனர்வாலர்களின் வேப்சிட்டிளிருந்தே தொடருங்கள் அது தங்களுக்கு நல்லதொரு படிப்பினையை தரும் .வெப் லின்கிட்க்கு உனி உங்களுக்கு உதவுவார் என்றே நினைக்கிறேன். பின்பு அவர்களின் குற்றச்சாட்டின் எதார்த்தநிலை என்ன என்பதையும் உங்களின் பகுத்தாராயும் திறனால் அறிந்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் சொல் படி நாம் நடக்க சிறுபிள்ளைகளும் அல்ல பாமரர்களும் அல்ல. யார் சொன்னாலும் சொல்லும் சொல்லில் உண்மை இருப்பின் ஏற்ப்போம் , இல்லையேல் எதிர்கேள்வி கேட்டு அறிவை வளர்த்துக்கொள்வோம் என்று கூரி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
    மிக்க நன்றி…

    • நண்பர் புஹாரி,
      மதப் புத்தகங்கள் அதிகாரத்தில் உள்ள மனிதர்கள் ,தங்களின் ஆட்சி அதிகாரம் நிலைக்க,பரவ எழுதப்பட்டவை.
      மனுநீதி உயர் சாதியினருக்கு சமூக உயர்வு கற்பித்து அத்னை நியாயப் படுத்துகிறது.
      பைபிளின் பழைய ஏற்பாட்டு புருடாக் கதைகள் யூத மேலாதிக்கத்தை வலியுறுத்தி இன்று வரை இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினை ஆக தொடர்கிறது.
      இஸ்லாம் என்பதும் ஒரு அரபு தேசிய இயக்கம் மட்டுமே ,அதன் நோக்கம் உலகளாவிய பேரரசு(கிலாஃபா) அமைத்தல் மட்டுமே. ஆன்மீகம் அதற்கு ஊறுகாய். அந்த பேரரசின் சட்டமே ஷரியா.முஸ்லீம்கள் மத ஆட்சி என்பதால் காஃபிர்களை ஒடுக்கும் சட்டங்கள் அமலில் இருந்தன. இப்போது உலகில் காஃபிர்கள் கை ஓங்கியதால் ஜிசியா, அடிமை முறை போன்றவை இல்லமல் போயின.குரானிய சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருந்தாது என்பதை உங்களின் பதில்களில் இருந்தே உணர முடியும்.
      முகமது ஒரு அழகிய முன் மாதிரி(perfect example!!!) என்று குரான் 33.21 சொன்னாலும், அவரின் சில செயல்களை( மகன் இப்ராஹிமின் தாயார் விடயம்) நீங்கள் மறுக்கும் கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.
      வரும் காலத்தில் பெண்ணுக்கு திருமண வயது 18,முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் தவறு. சொத்தில் பெண்ணுக்கும் சரிபாதி போன்றவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழல் வரும் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்காது.சுமார் 100 வருடம் முன்பு இந்திய,தமிழக சூழலும், அடிமை முறை,பல் தர,குழந்தைத் திருமணம் போன்றவை இயல்பாக இருந்தன. அண்ணல் அம்பேத்காரின் இந்து சமூக சட்டம் அமலுக்கு வந்த பின்தான் இங்கும் மாற்றம் ஏற்பட்டது.
      http://en.wikipedia.org/wiki/Hindu_code_bills
      அகவே நாகரிகமான, மனித உரிமை பேணும்,பொது சமூக சட்டம் நோக்கி அனைத்து மனித குழுக்களும் சென்றே ஆக வேண்டும்.

      இது ஏன் எனில்
      மனிதர்கள் நாகரிகம் அடையும் போது அவர்களின் மதம்,கடவுள்,கோட்பாடுகளும் நாகரிகம் அடைகின்றன.
      அப்படி அடையாதவை அழியும்!!!.[எ.கா அதனால் அண்ணன் பீ.ஜே பல ஆதரபூர்வ ஹதிதுகளையும், சகிக்க முடியாமல் இருப்பதால் யூதன் இட்டுக் கட்டியது என்கிறார் ஹி ஹி!!]
      நானும் முடிக்கிறேன்
      நன்றி!!!

  22. @zahirbukhari2014

    //இப்ராஹிமின் (ரலி) தாயார் ஒரு அடிமையாக ஒருவரால் முஹம்மது நபியவர்களுக்கு வழங்கப்பட்டவர்கள் என்பது தங்களுக்கு தெரியாதோ? இது எப்படி திருமணம் இல்ல மணவாழ்க்கைக்கு சான்றாகும். இது அடிமை முறைக்கல்லவா சான்றாகும்//

    அந்த கால பழக்கங்கள் தவறு , சிலைகளை வணங்குவது தவறு, அடிமை முறை தவறு என்று செய்தி சொன்னார் இறைவன் . அதே போல அந்த கால பழக்கங்கள் மாற்றியமைத்தார் என்றும் படிக்கிறோம் .

    இந்த ஒரு விசோயத்தில் மட்டும் இறைவன் காட்டிய வழியை மறந்து முன்னோர் காட்டிய வழியை அவர் ஏற்று கொண்டது ஏனோ ?

    மருமகளை தானே மனந்துதான் வாழ்க்கை தந்து இருக்க வேண்டுமா ? அவர் கூறி இருந்தால் ஆயிரம் மாப்பிளைகள் இறை கட்டளையாக ஏற்று கொண்டு இருந்து இருப்பார்களே…

  23. மதத்தை மறப்போம், மனிதத்தை வளர்ப்போம்.

    மதங்கள் நமக்கு சோறு போடுவதில்லை. நம் முயற்சி தான் நமக்கு சோறு போடுகிறது.

    வீண் வாதங்கள் வேண்டாம்.

    ஆகிற வேலையை பார்ப்போம்.

    இனியும் வினவு மதம் சம்மந்தமான கட்டுரைகளை வெளியிடுவதை தவிர்ப்பது நலம்.

    • Nasikethan, Raman..
      I do have answers for your all questions, but still it is not relevant to the topic Common civil code.That’swhy omitting and the brothers like katrathu kai alavu is feeling uneasy by these replies.

      Katrathu kai alavu,
      I don’t have any motive to do Islamic calling(DAWA) here and I know very well this is not the place for doing that.But people like univer…,Raman. Joseph were spreading false claims on Islam.So, if u want to blame someone blame these people who made hatred commands about Muslims and Islam. Those people who were started first and I have only given logical replies and relevant proofs to prove there baseless claims abt Islam.

      Most of my comments were logic based and if any of my comments were based on religion, pls note that I have also explained logically with current affairs.

  24. விவாதிக்கும் நண்பர்களுக்கு,

    விவாதம் மறுபடியும் அமைதியாகிவிட்டது. தென்றல் அவர்கள் எனது விளக்கங்களை ஏற்றுக் கொண்டுவிட்டார் போலிருக்கிறது. நல்லது. நசிகேதன் என்ற புதிய நண்பர் வந்திருக்கிறார். மகிழ்ச்சி.

    ஜாகிருக்கு சில பதில்களைக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். விரைவில்.

  25. சையப் அலிகான் பொது சிவில் சட்டத்தை சுட்டிக்காட்டுகிற பொழுது அவரைத் தாங்கள் முசுலீமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறியதுடன் மட்டுமில்லாமல் லவ் ஜிகாத் இருக்கிறது என்று புரளிகட்டி விட்டீர்கள். இதன் நோக்கம் என்ன? என்னதான் இசுலாமியன் பொதுசிவில் சட்டத்தை ஆதரித்தாலும் கூட தங்கள் நோக்கமும் நிகழ்ச்சி நிரலும் வேறானது என்பது தெளிவாக யாருக்கும் தெரியும். அது இசுலாமியர்களின் மீதான வன்மப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடுவதன்றி வேறல்ல. உங்களது நோக்கமும் பொதுசிவில் சட்டத்தைப் பற்றி விவாதிப்பதல்ல என்பதும் இதிலிருந்து தெரிகிறது.

    இவ்விதம் முற்றும் தெளிந்த உங்களுக்கு விவாதம் எதற்கு என்று தெரியவில்லை. மேலும் நான் எழுதிய மறுமொழிகளுக்கு எந்தஒருவிதமான பதிலும் தங்களிடமிருந்துவரவில்லை. ஒரு வாக்கியத்தை அடைப்புக்குறிக்குள் போட்டுக்கொண்டு பொதுசிவில் சட்டத்திற்கு சம்பந்தம் அல்லாத இசுலாமிய வன்மங்களை கட்டவிழ்த்து விடுகிறீர்கள். எல்லா நேரத்திற்கும் மறுமொழி, மட்டுமே பதில் அல்ல பட்டி!

    • தென்றல் அவர்களுக்கு,

      // நான் எழுதிய மறுமொழிகளுக்கு எந்தஒருவிதமான பதிலும் தங்களிடமிருந்துவரவில்லை//

      This is a quick reply, so using English.

      I have replied to almost all your points. I think the confusion is because of me moving the debate from 1st part of this article to this part. I had made 2 comments as a form of redirection in the 1st part. (It seems you had not opted to follow the debate in 2nd part, on my request).

      Please read, comments 11,12,13,14 & 15 for my replies in this post. Thanks for your cooperation.

    • தென்றல் அவர்களுக்கு,

      // சையப் அலிகான் *** அவரைத் தாங்கள் முசுலீமாக ஏற்றுக்கொள்ளவில்லை//

      அவரை முகமதியராக ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறுகிறேன். ஏனென்றால் அவர் முகமதியத்தின் படி நடக்கவில்லை என்று தோன்றுகிறது. முகமதியத்தின் படி நடப்பவர்களுக்கு முகமதியர்கள் என்று பெயரிடுவதே சிறந்தது என்பது எனது தேர்வு. நான் முகமதியர்களுக்கு முஸ்லிம் என்ற பதத்தை பயன்படுத்துவதில்லை. பெயரளவுக்கு முகமதியர்களாக இருப்பவர்களை வித்தியாசப் படுத்த முஸ்லிம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன். சில சமயங்களில் இது சிறிது குழப்பமாகவும் இருக்கலாம். இந்து என்ற வார்த்தையை பயன்படுத்தும் போது எழும் சங்கடத்தைப் போன்றதுதான் இதுவும்.

      // தங்கள் நோக்கமும் நிகழ்ச்சி நிரலும் வேறானது//

      இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு பொது சட்டத்தை ஒட்டியே பதில் கூறமுடியாது. எனக்கென்று பெரிதாக நிகழ்ச்சி நிரல் கிடையாது. குறிக்கோள்கள் மற்றும் ஆசைகள் உண்டு. பொதுவுடமை சமூகம் தோன்ற வேண்டும் என்பது எனது இறுதிக் குறிக்கோள். இடையில் போதுமான மனிதர்கள் மதத்தை விட்டு வெளிவந்துவிடவேண்டும் என்பதும் உலகில் முகமதியத்தின் தாக்கம் படிப்படியாக தேய்வு கண்டு காணாமல் போக வேண்டும் என்பதும் எனது முக்கியமான ஆசைகள்.
      இந்த பதிவில் பொது சட்டத்திற்கான ஆதரவை பதிவு செய்வதும் பதிவில் இருந்த சில குறைகளை சுட்டிக்காட்டுவதும் தான் எனது ஆரம்ப நோக்கம். தங்கள் எதிர்வினையை அடுத்து அது விவாதமாக நீண்டுவிட்டது. இது போன்ற மாறுதல்கள் எனது கையில் இல்லை. இதை நீங்கள் இசுலாமியர்களின் மீதான வன்மப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடுவது என்கிறீர்கள். நீங்கள் வேறு பதிவுகளில் செய்வது பார்ப்பனியர்களின் மீதான வன்மப்பிரச்சாரம் என்று சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா. முகமதியர்களைப் பற்றி மட்டும் ஏன் பேசக்கூடாது என்பதுதான் நான் மீண்டும் மீண்டும் கேட்கும் கேள்வி. வினவில் பொதுசிவில் சட்டத்தைப் பற்றி மட்டும் விவாதிப்பது எனது நோக்கமல்ல. இதில் உங்களுக்கு எதற்கு சந்தேகம். சட்டங்கள் வெற்றிடத்தில் இல்லை. அதைச் சார்ந்து பல விசயங்களும் இருக்கின்றன. தேவைக்கேற்ப எல்லாவற்றையும் பேசாமல் விவாதம் பொருளுல்லதாக இருக்காது. தேவையில்லாமல் நான் எங்கே தடமாறியிருக்கிறேன் என்று கூறமுடியுமா.

      // முற்றும் தெளிந்த உங்களுக்கு விவாதம் எதற்கு//

      மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் விவாதத்தில் பங்கு பெறுகிறேன். விவாதங்களைப் படித்துத்தான் நானும் விழிப்புணர்வை பெறுகிறேன். உங்கள் பங்களிப்பையும் ஆர்வத்துடன் படிக்கிறேன். பலவற்றை தெரிந்து கொள்கிறேன். உங்கள் வெறியாட்டுதல்கள் படு உக்கிரமாகத்தான் இருக்கின்றன. உங்களை ஆர்வத்துடன் கவனிக்கிறேன்.

      // பொதுசிவில் சட்டத்திற்கு சம்பந்தம் அல்லாத இசுலாமிய வன்மங்களை கட்டவிழ்த்து விடுகிறீர்கள்//

      ஒன்றைக் குறிப்பிடுங்கள். அதற்கு நான் விளக்கமளிக்கிறேன். முகமதியர்களிடம் முகமதியத்தைப் பற்றி பேசாமல் எதையுமே பேச முடியாது என்பதை விளக்குகிறேன். இதற்கு நீங்கள் வன்மம் என்று பெயர் வைக்கிறீர்கள். பரவாயில்லை.

      • \\அவரை முகமதியராக ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறுகிறேன். ஏனென்றால் அவர் முகமதியத்தின் படி நடக்கவில்லை என்று தோன்றுகிறது. முகமதியத்தின் படி நடப்பவர்களுக்கு முகமதியர்கள் என்று பெயரிடுவதே சிறந்தது என்பது எனது தேர்வு. நான் முகமதியர்களுக்கு முஸ்லிம் என்ற பதத்தை பயன்படுத்துவதில்லை. பெயரளவுக்கு முகமதியர்களாக இருப்பவர்களை வித்தியாசப் படுத்த முஸ்லிம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன். சில சமயங்களில் இது சிறிது குழப்பமாகவும் இருக்கலாம். இந்து என்ற வார்த்தையை பயன்படுத்தும் போது எழும் சங்கடத்தைப் போன்றதுதான் இதுவும்.\\

        ஒட்டுமொத்த முசுலீம்களையும் அயோக்கியர்களாக சித்தரிக்கிற வாதம் இது. இதன் பித்தலாட்டத்தை நாம் விவரிக்க வேண்டுமானால் முகம்மதியம் என்பதன் விளக்கத்தைக் கோர வேண்டும். முகம்மதுவை பின்பற்றுகிறவர்கள் எல்லாம் முகம்மதியர்கள் என்று யுனிவர்படி வரையறுப்பாரேயானால் அவரது நைச்சியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
        ஏனெனில் இசுலாமியத்தில் வஹாபியத்தை நாங்கள் மதவெறியாக அடையாளப்படுத்துகிறோம்.

        சான்றாக அரபு தேசியம் பேசிய நாசர் ஒரு இசுலாமியர். ஒருவேளை அரபு தேசியம் வென்றிருந்தால் வஹாபியத்தை நாம் கண்டிருக்கமாட்டோம். ஏனெனில் அரபுதேசியத்திற்கு மாற்றாக வஹாபியம் ஏகாதிபத்திய நாடுகளால் நிலைநிறுத்தப்பட்டன என்று பார்க்கிறோம். வஹாபியம் பேசுகிறவர் முசுலீம் தான்; ஆனால் அதுவல்ல அவருக்கு அடையாளம். அவர் மதவெறியர்; பார்ப்பனியம் சரி என்று பேசுகிற பார்ப்பனரைப்போன்றவர். எடுத்துக்காட்டாக பார்ப்பனியம் சரி என்று பேசுவதில் நமது வெங்கடேசன் வருவதில்லை. மாறாக அம்பியின் நிலைப்பாடு எப்பொழுதும் ‘கழிந்து வைப்பதிலே கால் வைக்க மறுக்கிற’ தூய்மைவாத பார்ப்பனியமாகும்.

        இசுலாமியர்களிலே இதே தளத்தில் சகீருடனும் திப்புவுடனும் சரிக்குச் சரி சமர் புரியலாம். ஆனால் பிஜே ஆர் எஸ் எஸ் வெறியனைப்போன்ற மதவெறியன். இதைப் புரிந்துகொள்ளாத ஜோசப்பும் இருக்கிறார்கள். விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய யுனிவர்படியும் இருக்கிறார்கள்.

        ஆக இந்துக்களுக்கு எதிரி பார்ப்பனியம்; இசுலாமியர்களுக்கு எதிரி வஹாபியம் மற்றும் பார்ப்பனியம். இதை எப்பொழுதும் மறைத்துவிட்டுத்தான் யுனிவர்படி தன் வாதத்தை வைக்கிறார் என்பதைக் கவனிக்கக் கோருகிறேன்.

      • யுனிவர்படியின் இரண்டாவது கேள்வி: “நீங்கள் வேறு பதிவுகளில் செய்வது பார்ப்பனியர்களின் மீதான வன்மப்பிரச்சாரம் என்று சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா. முகமதியர்களைப் பற்றி மட்டும் ஏன் பேசக்கூடாது என்பதுதான் நான் மீண்டும் மீண்டும் கேட்கும் கேள்வி”

        இதுவரை யுனிவர்படி வஹாபியர்கள் மீதான யாதொரு கண்டனத்தையும் தெரிவித்ததில்லை. அது அவருக்கு நோக்கமும் அல்ல. ஏனெனில் வஹாபியம் என்பதற்கு மாறாக முகம்மதியம் என்பதைப் பயன்படுத்துவதால் அவர் ஒட்டுமொத்த இசுலாமியர்களையும் வன்மத்துடன் அணுகுகிறார் என்பது தெளிவு. முதலில் நாம் இசுலாமியர்களை வஹாபியர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க கீழ்க்கண்ட தகவல்களை பரிசிலீக்க வேண்டும்.

        1. குரானை மூல மொழியில் மட்டுமே ஓத வேண்டும் என்று சொல்பவர் வஹாபியர். மொழிபெயர்த்து ஓதுகிறவர்கள் தரக்குறைவானவர்கள். இசுலாமிய ஸ்டடி சர்க்கிளில் இவ்விவாதம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இந்துக்களுக்கு சமஸ்கிருதம் என்று சொல்கிற பார்ப்பனியம் போல இசுலாத்தில் வஹாபியம் மக்களைப்பிரித்தாள்கிறது மொழி அடிப்படையில். நம்முடைய இசுலாமிய நண்பர்கள் இதை எளிதில் புறந்தள்ளுவார்கள். குறிப்பாக, சமஸ்கிருதத்தை இசுலாமியர்கள் எதிர்க்கிற பொழுது மதங்களுக்கான மொழி என்றில்லாமல் ‘தமிழ் என் தாய்மொழி’ என்று ஆர் எஸ் எஸ் கூட்டங்களின் மீது காறித்துப்பும்படி பதிவு செய்திருக்கிறார்கள். தமிழுணர்வை சந்தேகிக்க யாதொரு கண்ணியையும் இசுலாமிய நண்பர்கள் எதிரிகளுக்கு விட்டுவைக்கவில்லை என்று பார்க்கிறோம். ஆனால் என்றைக்காவது யுனிவர்படி வஹாபிய மொழிபாசிசத்தைப் பேசியிருக்கிறாரா? என்றைக்குமே அவர் இசுலாமியர்கள் என்றால் அயோக்கியர்கள் என்றுதான் சொல்லிவருகிறாரே தவிர இதில் தலையைக்கொடுப்பதில்லை. இதில் வஹாபியர்களை விட்டுவிட்டு முகம்மதியர்களை பார்ப்பனர்களோடு இணைத்து பேசுகிறார் என்றால் இதன் நைச்சியம் வாசிக்கிற எவருக்கும் விளங்காதா?

        2. வஹாபியர்கள் சமாதி வணக்கத்தை எதிர்க்கிறார்கள். தர்கா வழிபாடு கூடாது என்கிறார்கள். சந்தனக் கூடு மூட நம்பிக்கை என்கிறார்கள். On the other hand, பார்ப்பனியத்தில் அனைத்து கிராமப்புறக்கோயில்களும் குடமுழுக்கின் கீழ் வந்திருக்கின்றன. தலித்துகள் பூணுல் அணிவிக்கப்பட்டு பார்ப்பனியமாக்கபட்டிருக்கிறார்கள். புரட்சிகர இயக்கங்கள் இவ்விசயத்தில் ஒரு சேர வஹாபியத்தையும் பார்ப்பனியத்தையும் முறியடிக்கின்றன! அய்யனாரை வணங்குகிறவர் தன்னை இந்துவாக அறிவித்துக்கொள்வதைப்போன்று தர்கா வழிபாடு செய்கிறவர்கள் தன்னை இசுலாமியர்களாக அறிவிக்கிறார்கள். ஆனால் யுனிவர்படி போன்ற ஆட்கள் இவர்கள் மீதும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுகிற வேலையைச் செவ்வனே செய்கிறார்கள். இதைப் பற்றி வாய்திறக்காதவர்; முகம்மதியத்தைப் பற்றிப் பேசுவதில் என்ன தவறு? என்று கேட்கிறார். என்றைக்காவது இவர் இசுலாமியர்களின் பிரச்சனையைப் பற்றி பேசியிருக்கிறாரா? தற்பொழுதுவரை இசுலாமியர்கள் தான் பிரச்சனை என்று சொல்லிவருகிறார். இது அம்பலப்படுத்தப்படவேண்டியது.

        3. மூன்றாவதாக முஸ்லீம் லீக், இராமதாசுடன் சேர்ந்து சமூகப்பாதுகாப்பு பேரவையில் இணைந்திருக்கிறது. இதன் நோக்கம் தலித் பையன்கள் தங்களது பெண்களை மணக்ககூடாது என்பதாகும். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய கூட்டம் ஆர் எஸ் எஸ்ஸாகும். ஒரு பக்கம் இசுலாமியன் மீது லவ் ஜிகாத் அவதூறைக்கிளப்பிவிட்டுவிட்டு மறுபக்கம் அதே இசுலாமிய மற்றும் இந்து சாதிவெறியை, தலித்துகளுக்கு எதிராக திருப்பிவிடுகிறது ஆர் எஸ் எஸ் கூட்டம். புரட்சிகர இயக்கங்கள் இதை அம்பலப்படுத்தியிருக்கின்றன. ஏனெனில் இசுலாமியர்களின் பங்கோ அல்லது உழைத்துவாழ்கிற வன்னிய சாதிமக்களின் பங்கோ இதில் ஏதும் இல்லை. ஆதிக்க சாதிக பார்ப்பன பாசிஸ்டுகளும் வஹாபிய பாசிஸ்டுகளும் ஒன்று சேர்ந்து செய்கிற வேலை இது. ஆனால் இதைப்பற்றி வாய்திறக்காத யுனிவர்படி போன்ற கெட்ட எண்ணம் கொண்ட நபர்கள் லவ்-ஜிகாத் பற்றி பிளந்துகொண்டு வெறியேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

        4. புர்கா அடிமைத்தனம் தான். ஆனால் இதில் இவர் கிளப்பிவிட்ட புரளி அலாதியானது! புர்காவின் மூலமாக இசுலாமியர்கள் இரண்டாவது திருமணத்தை மறைக்கிறார்கள் என்று அள்ளிப்போட்டவர். இந்தளவு கேடுகெட்ட வாதத்தை ஆர் எஸ் எஸ் கூட வைத்ததில்லை. ஏனெனில் ஆர் எஸ் எஸ் காலிகளுக்கு இப்படி யோசிக்கிற அறிவு என்றைக்கும் இருந்ததில்லை.

        முகம்மதியர்களுக்கு எதிரான வன்மம் என்று நான் சுட்டிக்காட்டுகிற பொழுது, இந்துப் பார்ப்பனியத்தை எதிர்க்கிற என் வாதங்களை பார்ப்பனர்களுக்கு எதிரான வன்மம் என்று எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்கிறார்? மேற்கண்ட வாதங்களின் படி இந்தக் கேள்வி அயோக்கியத்தனமானது என்று தெரியும். ஏனெனில் வஹாபியம் என்றால் என்ன? பார்ப்பனியம் என்றால் என்ன என்பதை சில ஒப்புமைகளோடு விளக்கியிருக்கிறேன். வினவு தளத்திலேயே வர்க்க அடிப்படையில் ஒன்று சேர சாத்தியமுள்ள பார்ப்பனர்களிடம் நாம் மனம் திறந்து விவாதிக்கிறோம். ஆடிட்டர் சங்கர் ராமன் ஏன் இரத்த வெள்ளத்தில் கிடக்க வேண்டும் என்பதை பார்ப்பனியத்தின் அடிப்படையிலும் வர்க்க அடிப்படையிலும் பலபின்னூட்டங்களில் விளக்கியிருக்கிறேன். இதற்குமாறாக யுனிவர்படி, ரேச்சல் கோரி இசுலாமியர்களுக்கு உதவினார் என்ற ஒற்றைக்காரணத்திற்காக அவரது கொலையை விபத்து என்று அறிவித்தவர். வன்மப் பிரச்சாரம் எங்கிருக்கிறது?

        ——

        பொதுவுடமைக்கு ஆசைப்படுகிறேன் என்று சொல்கிறவர் வர்க்கப்பார்வையை முற்றாக நிராகரித்துவிட்டு முகம்மதிய வர்க்கம் என்றும் பார்ப்பனிய வர்க்கம் என்றும் நூதன விளக்கம் கொடுக்கிறார். முகம்மதிய வர்க்கம் என்ற ஒன்று இருந்தால் அவர்கள் தங்களுக்கான தீர்வுகளை மதங்களுக்குள்ளேயே தேடுவார்கள். ஆனால் மெட்ரிக்குலேசன் பள்ளி மோசடியிலே பல புர்கா போட்ட தாய்மார்கள் கண்டன ஆர்பாட்டங்களில் கலந்துகொண்டு தனியார்மயத்தை எதிர்க்கிறார்கள். தாலி கட்டிய இந்துப்பெண்கள் பெண்கள் விடுதலை முன்னணியின் பலபிரச்சாரங்களில் நேரிடையாக கலந்துகொள்கிறார்கள். சங்கீத கலைஞர் டி. எம். கிருஷ்ணா மோடி குறித்த பிரமையை பார்ப்பனியத்தின் அடிப்படையில் விளக்குகிறார். அஸ்கர் அலியின் மகன், வட இந்தியாவில் வாழும் முசுலீம்களின் ஒருபிரிவினர் இருமதச் சடங்குகளையும் செய்வதை பார்ப்பன பயங்கரவாத மாநாட்டிலே நேரில் எடுத்துரைக்கிறார். இந்துக்களும்-இசுலாமியர்களும் பண்டிகை காலங்களில் ஒன்று சேர்ந்திருக்கிற பதிவுகள் நமக்குக் காணக்கிடைக்கின்றன. இதையெல்லாம் தவிர்த்துவிட்டு முகம்மதிய மற்றும் பார்ப்பனிய வர்க்கம் என்று கதைப்பது கடைந்தெடுத்த மோசடியாகும்.

        • //சமஸ்கிருதத்தை இசுலாமியர்கள் எதிர்க்கிற பொழுது மதங்களுக்கான மொழி என்றில்லாமல் ‘தமிழ் என் தாய்மொழி’ என்று ஆர் எஸ் எஸ் கூட்டங்களின் மீது காறித்துப்பும்படி பதிவு செய்திருக்கிறார்கள். தமிழுணர்வை சந்தேகிக்க யாதொரு கண்ணியையும் இசுலாமிய நண்பர்கள் எதிரிகளுக்கு விட்டுவைக்கவில்லை என்று பார்க்கிறோம். ஆனால் என்றைக்காவது யுனிவர்படி வஹாபிய மொழிபாசிசத்தைப் பேசியிருக்கிறாரா?// என்ன இசுலாமியர்களுக்கு தமிழ் பற்றா சொல்லவே இல்ல எந்த ஊருல தமிழ்ல தொழுராங்க எனக்கு தெரிஞ்சு இல்ல ஒரு வேளை அல்லாகு அப்பர்ன்றத தமிழா மாத்திட்டாகளா வாகபியோ சலாபியோ தர்காவோ எங்கயும் தமிழ்ல தொழ மாட்டாங்க தென்றல் ஏன்ன அவுக மதம் தமிழ்ல தொழ சொல்லவில்லை ஆனாமும் மதத்த மீறி தமிழ் பற்றுனு பொய் சொல்லுவாக ஜாக்கிரதயா இருங்க…

        • //மூன்றாவதாக முஸ்லீம் லீக், இராமதாசுடன் சேர்ந்து சமூகப்பாதுகாப்பு பேரவையில் இணைந்திருக்கிறது. இதன் நோக்கம் தலித் பையன்கள் தங்களது பெண்களை மணக்ககூடாது என்பதாகும்.//தலித் பையன் மட்டும் இல்ல மாற்று மத்தத்த சேர்ந்த எந்த பையனுக்கும் பொண்ணு குடுக்க இசுலாமியர்கள் விரும்ப்ப மாட்டார்கள் ஒரு வேளை தென்றளுக்கு குடுக்குறேன்னு சொல்லிருக்காகளோ என்னமோ தெரியல //இந்துக்களும்-இசுலாமியர்களும் பண்டிகை காலங்களில் ஒன்று சேர்ந்திருக்கிற பதிவுகள் நமக்குக் காணக்கிடைக்கின்றன//பிஜே பேச்ச ஆடியோவில கேட்டுட்டு அல்லாகு அப்பர் சொல்லிட்டு சாமிக்கு படைக்காத லட்டானு கேட்டுட்டு அத இந்துக்கள்ட வாங்கி தின்னுட்டா அதுதாம் மத சகிப்புதன்மையா சூப்பரான மத சகிப்பு தன்மை
          //குரானை மூல மொழியில் மட்டுமே ஓத வேண்டும் என்று சொல்பவர் வஹாபியர்.// அது வாகபியர் இல்ல பாஸ் இசுலாம்

        • பார்ப்பனிய பயங்கரவாதம்னா என்னாது தாழ்த்தப்பட்டவன் கோவிலுக்குள்ள விடமாட்டேன், நான் மட்டுதான் பூஜை செய்வேன்,கும்பாவிசேகத்துக்கு 1 லட்டம் பேமன்டும் வாங்கிட்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு பூணூல் அணிவிப்பதா ,இதையெல்லாம் பயங்கரவாதமுனு சொன்னா பஸ்ஸாண்டுலயும் ரயில்வே ஸ்டேசனிலும் குண்டு வச்சுட்டு அதுக்கு நாங்கதான் பொருப்புனு சொல்லுற இசுலாமிய அமைபுகள் எல்லாம் செய்வது என்ன முடக்கு வாதமா ,ஒன்னும் புரியல ஒரு வேல மூலதனத்தயும் கம்முனிஸ்டு கட்சி அறிக்கையையும் படிச்சாதான் புரியுமோ என்னவோ சந்தர்ப்பமும் குறிப்ப்ட்ட புத்தகங்களும் கிடைச்சா படிச்சு புரிஞ்சுக்க முயற்ச்சிக்கிறேன்…

        • தென்றல் அவர்களுக்கு,

          // ஒட்டுமொத்த முசுலீம்களையும் அயோக்கியர்களாக சித்தரிக்கிற வாதம்//

          இதற்கு முன்னரே பலமுறை பதிலளித்துவிட்டேன்.

          உங்களால் வெங்கடேசனை விட்டுவிடமுடிகிறது. அம்பியை இல்லை. 50/50. என்னால் திப்புவையே ஜாகிரையோ இப்ரஹிமையோ விட்டுவிடமுடியவில்லை. முகம்மதுவை பின்பற்றுகிறவர்கள் எல்லாம் முகம்மதியர்கள் தான். இதில் நைச்சியத்தைக் காண்பது உங்கள் வசதி.

          // வஹாபியத்தை நாங்கள் மதவெறியாக அடையாளப்படுத்துகிறோம்.//

          முகமதியத்திற்கு மாற்றாக வஹாபியம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது உங்கள் வசதி. உலகில் யாரும் வஹாபியன் என்று சொல்லிக்கொள்வதில்லை. முகமதியன் என்று கூடத்தான் சொல்லிக்கொள்வதில்லை என்று சொல்லிவிடாதீர்கள். முகமதர்ரசலுல்லா என்பதை மனப்பூர்வமாக ஏற்று முகமதின் வாழ்க்கைவழிகாட்டுதல்களின் படி நடப்பவன் முகமதியன் என்பது எனது வரையறை. மற்றவர்களாலும் இது பயன்படுத்தப்படுவதே.
          வஹாபியம் என்ற கருத்தையே நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் வஹாபியர்கள் என்பவர்களையும் நான் முகமதியர்கள் என்று தான் சொல்கிறேன். இந்திய இந்துக்களுக்கு எதிரி பார்ப்பனியம்; இந்திய இசுலாமியர்களுக்கு எதிரி முகமதியம் மற்றும் பார்ப்பனியம் என்பது எனது வாதம்.
          குரானை மூல மொழியில் மட்டுமே ஓதுகிறார்கள். இதில் யார் பிரச்சனை செய்கிறார்கள். மொழிபெயர்ப்பையும் ஒதுவோம் என்று யார் கூறினார்கள். அதிசயத்திலும் அதிசயம் தான்.
          தர்கா வழிபாடு செய்கிறவர்கள் தன்னை இசுலாமியர்களாக அறிவிக்கிறார்கள். நானும் அவர்களை முகமதியர்கள் என்று அழைக்கவில்லையே.
          என்றைக்காவது நான் இசுலாமியர்களின் பிரச்சனையைப் பற்றி பேசியிருக்கிறேனா என்றால் கண்டிப்பாக செய்திருக்கிறேன். இந்த பதிவில் இந்த விவாதம் கூட அவர்களுக்காகவும் தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பது என் நேர்மையான கோரிக்கை.
          சமூகப்பாதுகாப்பு பேரவை போன்ற விவகாரங்களில் எனது நிலை வினவின் நிலைதான்.
          லவ்-ஜிகாத் பற்றியும் எனது நிலையைத் தெளிவு படுத்தியருக்கிறேன். மூன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளில் வேவ்வேறு கோணங்களில் இதை செய்திருக்கிறேன். புதிதாக கூற ஒன்றுமில்லை.
          நானும் வர்க்க அடிப்படையில் ஒன்று சேர சாத்தியமுள்ள இஸ்லாமியர்களிடம் மனம் திறந்து அவர்களின் மார்க்கத்தைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று விவாதிக்கிறேன்.

          //முகம்மதிய வர்க்கம் என்ற ஒன்று இருந்தால் அவர்கள் தங்களுக்கான தீர்வுகளை மதங்களுக்குள்ளேயே தேடுவார்கள்.//

          அந்த வர்க்கம் அப்படித்தான் செய்கிறது. இது உங்கள் புலன்களுக்குப் படவில்லையா இல்லை வசதிக்காக Signal கிடைக்கவில்லையா. புர்கா போட்ட அல்லது போடாத பெண்களுக்கு இந்த வர்க்கத்தில் இல்லை அல்லது மிகக் குறைவு. பல புர்கா போட்ட தாய்மார்கள் கண்டன ஆர்பாட்டங்களில் கலந்துகொண்டு தனியார்மயத்தை எதிர்க்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களாக மனமுவந்து அந்த புர்காக்களை போட்டுக்கொள்ளவில்லை என்பது என் கருத்து. இங்கே இன்னுமொரு புதிய ‘புரளி’ கிளப்பி விடுவதிலிருந்து என்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை. பள்ளி அதிகாரிகளின் மற்றும் கையாள்களின் கண்களில் தங்கள் முகம் பட்டுவிடாமல் இருப்பதற்காகக்கூட சில பெண்கள் புர்காவைப் மாட்டிக் கொண்டு வந்திருக்கலாமில்லையா. 😉

          • யுனிவர்படி, முகம்மதியம் பற்றிய தங்களது வரையறையை கீழ்க்கண்ட விதம் தொகுத்திருக்கிறேன். தனித்துப்பார்த்தாலும், தொகுத்துப்பார்த்தாலும் வஹாபியர்களின் பார்வையைத்தான் அப்படியே பிரதிபலிக்கிறது. கண்ணனோ, குமாரோ, இசுலாமியர்களை வஹாபியம் பக்கம் தள்ளிவிட வேண்டாம் என்று என்னிடம் முன்னர் கண்டித்தார்கள். கற்றது கையளவு மதவெறி கண்டிக்கப்பட வேண்டும் என்றார். மழலை ஜோசப் பேன் கீழ் காத்து வாங்கிக் கொண்டிருக்கிறார் என்று கருதுகிறேன்.

            ஆனால் உங்கள் கருத்து இவ்விதம் போகிறது;

            1. முகம்மதுவை பின்பற்றுகிறவர்கள் எல்லாம் முகம்மதியர்கள் தான்.

            2. உலகில் யாரும் வஹாபியன் என்று சொல்லிக்கொள்வதில்லை. நீங்கள் வஹாபியர்கள் என்பவர்களையும் நான் முகமதியர்கள் என்று தான் சொல்கிறேன்.

            3. முகமதர்ரசலுல்லா என்பதை மனப்பூர்வமாக ஏற்று முகமதின் வாழ்க்கைவழிகாட்டுதல்களின் படி நடப்பவன் முகமதியன் என்பது எனது வரையறை. மற்றவர்களாலும் இது பயன்படுத்தப்படுவதே.

            4. தர்கா வழிபாடு செய்கிறவர்கள் தன்னை இசுலாமியர்களாக அறிவிக்கிறார்கள். நானும் அவர்களை முகமதியர்கள் என்று அழைக்கவில்லையே.

            எனது கருத்து:

            இரண்டாவது வரையறை மதவெறியர்களுடையது. சான்றாக பிஜே தன்னை வஹாபியன் என்று சொல்லிக்கொள்வதில்லை. இசிசிஸ் தன்னை வஹாபியன் என்று சொல்வதில்லை. ஒட்டுமொத்த இசுலாமியர்களை தீவிரவாதிகள் என்று ஆர் எஸ் எஸ் காலிகள் வன்மத்தைக் கட்டவிழ்க்கிற பொழுது இசிசிஸ், பிஜேவுடன் சேர்த்து ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் முகம்மதியர்கள் என்கிறார் யுனிவர்படி. இதன் மூலம் பலனடைகிறவர்கள் யார்?

            துருக்கி உழைப்பாளர் கட்சியை உடைத்தது சாம்பல் நிற ஓநாய்கள் என்ற கைக்கூலி படையாகும்(சான்று; கலையரசன் பதிவு). ஆனால் அந்த அலங்காரம் எல்லாம் யுனிவர்படிக்கு தேவையில்லை. சமூக ஜனநாயகவாதிகள் வரலாற்றிலே, பாசிஸ்டுகளாக மாறிப்போனார்கள் என்று வாசிக்கிறோம். சான்றாக ஹிட்லர் இப்படித்தான் யூதர்களை வரையறுத்தார்.

            மூன்றாவது கருத்தில் (ஒன்றும் கூட) முகம்மதுவை ஏற்கிறவன் எல்லாம் முகம்மதியர்கள் என்று ஒரேபோடாக போடப்படுகிறது. இதையும் பிஜே ஏற்பதில்லை. முகம்மதுவை தெய்வமாக கும்பிடுகிற இசுலாமியர்கள் வஹாபியர்களைப் பொறுத்தவரை அழிக்கப்படவேண்டியவர்கள். முகம்மது பிழைகள் செய்தார். அவர் ஒரு மனிதர் என்று பிஜே போடாத கூட்டம் இல்லை. பாடாத ராகம் இல்லை. முகம்மதுவை வணங்குகிறவர்கள் இணைவைப்பாளர்களாக கருதப்பட்டு காபீர்களாக அறிவிக்கப்படுகின்றனர். இங்கேயும் யுனிவர்படி பிஜேவிற்குத்தான் உதவி புரிகிறார்.

            நான்காவது கருத்தில் யுனிவர்படி முதல் மூன்று கருத்தில் இருந்து வேறுபடுகிறார். தர்கா கும்பிடுகிறவர்கள் இசுலாமியர்கள் என்று புதுக்குண்டு போடுகிறார். அவர்கள் முகம்மதியர்கள் அல்லர் என்கிறார். சரி அவர் வழியே யாரெல்லாம் இசுலாமியர்கள் என்று கேட்போம். முகம்மதியத்தை வரையறுக்கிற பொழுது பிஜேவிற்குத்தான் சேவகம் புரிகிறார். இசுலாமியர்களை வரையறுக்கிற பொழுது ஏதாவது தேறுகிறதா என்று பார்ப்போம்.

            • //மழலை ஜோசப் பேன் கீழ் காத்து வாங்கிக் கொண்டிருக்கிறார் என்று கருதுகிறேன்.//
              கரண்ட் பில் அதிகமாக போகுது இனி எங்க பேன் காத்து வாங்குறது விசிறிதான் ஏற்க்கனவே கரண்ட் ஒரு நாளைக்கு 5 மணி நேரத்துக்கு கிடையாது இதுல எங்க பேண் காத்து வாங்குறது என்னை எந்த வகையில் மழலை என்கிறீர்கள் ஏற்க்கனவே பெந்தேகொஸ்தே தீவிரவாதிகள பாத்தா பயமா இருக்குனு மன்னாறு உளர அதை அமோதித்தீர்கள் இப்ப இசுலாமை காப்பாற்ற என்னை குழந்தை என்கிறீர்கள் மத்தவங்க எதை செய்தாலும் அதை தலை கீழாக செய்வார்கள் இசுலாமியர்கள் அவருக்கு ஆதரவாளரான நீங்களும் அப்பாவி கிறிஸ்தவர்களை தீவிரவாதிகளாகவும் தீவிர வாதத்திற்க்கு துணை போவது அல்லாமல் அவர்களை முகநூல் மூலம் ஆதரிக்கும் முஸிலீம்களை அப்பாவிகள் என் கிறீர்கள் என்னமோ போங்க உங்கள மாறி எனக்கு பேச வராது…

              • \\ கரண்ட் பில் அதிகமாக போகுது இனி எங்க பேன் காத்து வாங்குறது விசிறிதான் ஏற்க்கனவே கரண்ட் ஒரு நாளைக்கு 5 மணி நேரத்துக்கு கிடையாது இதுல எங்க பேண் காத்து வாங்குறது\\

                ம. க. இ. கவும் அப்படித்தான்! சேர்ந்து போராடினால் தான் கரண்ட் வரும்.

                \\ என்னை எந்த வகையில் மழலை என்கிறீர்கள்?\\

                வளர்வதற்கு வாய்புள்ள நபர் என்ற வகையில்! உங்களிடம் இருக்கிற இசுலாமிய வெறுப்பு காலி பெருங்காய டப்பா! ஆனால் விவாதம் கோருவது வர்க்கப் பார்வை. இது உங்களிடம் சாத்தியமென்று நினைக்கிறேன்.

              • \\ ஏற்க்கனவே பெந்தேகொஸ்தே தீவிரவாதிகள பாத்தா பயமா இருக்குனு மன்னாறு உளர அதை அமோதித்தீர்கள் இப்ப இசுலாமை காப்பாற்ற என்னை குழந்தை என்கிறீர்கள்\\

                தோழர் மன்னாரு எல்லாம் உளறவில்லை. எளிமையாக விளக்கி இருந்தார். அமோதித்து ஜால்ரா போட வேண்டிய அவசியமில்லை. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு டீச்சர் பெந்தோஸ்கோஸ்தே தான்!

                இது என் ஜெப வீடு! நீ எழும்பிப் பிரகாசி! போன்ற வாசகங்கள் எல்லாம் மூன்றாம் வகுப்பிலே அத்துப்படி! டீச்சர் வீட்டுக்கு வார ஜெபத்திற்கு நாங்கள் செல்லும் நோக்கமே கேசரி, இட்லி திங்கத்தான்! ஆனால் ஒரு நாள் உபவாச ஜெபம் என்பதற்கு அர்த்தம் தெரியாமல் போய்விட்டோம்; நானும் எனது நண்பர்களும்! ஆகையால் மன்னார் கூறுவதை அமோதிக்கிறன் என்று சொல்வது சரியல்ல. இது உங்களுக்கு புரியவில்லை என்றால் கோவிந்தா-அல்லேலுயா கட்டுரையை மறுபடியும் வாசியுங்கள்.

              • \\ மத்தவங்க எதை செய்தாலும் அதை தலை கீழாக செய்வார்கள் இசுலாமியர்கள்\\

                இதை ஆமோதிக்கிற வகையில் ஒரு அனுபவம் ஒன்றை பகிர்ந்துகொள்ள விழைகிறேன். எனது நண்பரின் தகப்பனார் விபத்து ஒன்றில் மூளைச்சாவு அடைந்து ஒரிரு நாளில் இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். வீட்டுக்கும் தூங்கிவந்தாயிற்று. என் நண்பர் தகப்பனாரின் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர் இசுலாமியர் ஆவார். இவர்களின் நட்பு சற்றேறக்குறைய ஒரு முப்பது ஆண்டுகள் இருக்கும். சோலி எப்ப முடியுதோ அப்ப வந்து இழவு கேட்கலாம் என்று பலர் சென்று விட, விடிந்தால் பொங்கல் என்று துக்க காரியமாக முகம் சுளித்தது அக்கம் பக்கம். உயிர் பிரிகிற தருணம் அனைவருக்குமே மலம், ஜலம் வெளியேறும். பஞ்சு வைத்து துடைப்பதில் இருந்து, கல்யாணத்தில் அணிந்த சட்டையை அணிவித்தது வரை, கூட இருந்து காரியங்களை கவனித்தது இசுலாமிய குடும்பம். தங்கச்சிகாரி சொத்துப்பிரச்சனை காரணமாக அத்துணை வருடங்கள் பேசாதவள் இழவுக்கு பச்சை எடுத்துக்கொண்டு வந்தாள் (பச்சை என்பதில் கோடித்துணியும் இளநீர் மற்றும் நெல் இருக்கும்). ஆனால் நண்பர் குடும்பத்து பெண்களை ஆற்றுப்படுத்தியது புர்காபோட்ட இசுலாமிய பெண்கள் தான் மற்றும் அக்கம் பக்க நண்பர்களும் தான். பதினாறாம் நாளில் திருப்புவனத்திற்கு சென்று அய்யரின் முன்னிலையில் அப்பாவிற்கு மோட்ச காரியம் செய்தார் நண்பர். இழவு என்றால் தீட்டு என்று ஒதுங்கிவிட்டு, உத்திரிகிரியை செய்துவைக்கிற பார்ப்பான் பதினாறாம் நாள் தான் வர்றான். கோமியம் தெளித்து புனிதப்படுத்துகிறான். ஆனால் இழவு வீட்டில் சொல்லி அழ பார்ப்பனியம் மற்றும் சொத்துபத்து இருக்கிற சொந்தக்காரன் வரவில்லை. இப்பொழுது நீங்கள் சொல்வது படி மத்தவங்க எதைச் செய்தாலும் அதை தலைகீழாக செய்வார்கள் இசுலாமியர்கள் என்பது உண்மைதானே! இதில் இருக்கிற ஒரே அம்சம் வர்க்கம் தானே!

                • ரெம்ப உணர்ச்சி வயப்படாதீர்கள் எல்லா மத்தத்திலும் நல்லவர்கள் அன்பானவர்கள் உண்டு நான் பேசுரது பெரும்பாண்மை முஸிலீம்களையும் அவர்கள் சார்ந்து இருக்கும் மதத்தையும் தான் இப்பிடிக்காட்டுனா ஒவ்வொருத்தர் பின்னாடியும் ஒரு கதை இருக்கும் எது எப்பிடியோ நீங்க பழகுன முஸிலிம் எல்லாம் நல்லவங்களாவே இருந்துருக்காக இந்துவும் கிறிஸ்தவனும் உங்கள வெருப்பேத்திருக்கானுக அப்பிடிங்குறது மட்டும் புரியுது…

                  • \\ரெம்ப உணர்ச்சி வயப்படாதீர்கள் எல்லா மத்தத்திலும் நல்லவர்கள் அன்பானவர்கள் உண்டு நான் பேசுரது பெரும்பாண்மை முஸிலீம்களையும் அவர்கள் சார்ந்து இருக்கும் மதத்தையும் தான்\\

                    எல்லா மதத்திலும் நல்லவர்கள் அன்பானவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு பெரும்பான்மை முசுலீம்கள் மற்றும் அவர்கள் சார்ந்த இருக்கும் மதத்தை பேசுகிறேன் என்று சொன்னால் என்ன அர்த்தம்? முசுலீம்கள் என்று வருகிற பொழுது மட்டும் வடிவேலு மாதிரி ‘லைட்டா’ என்று சொன்னால் நஞ்சு கக்குகிறவர் யார்? வெறுப்பாக இருக்கிறவர் யார்?

                    உங்களுடைய இசுலாமிய வெறுப்பு, காலிபெருங்காயடப்பா என்று சொல்வதற்கு காரணமே நீங்கள் வைக்கிற வன்மத்திற்கு முகாந்திரங்கள் கிடையாது என்பது தான். சொல்லப்போனால் உங்கள் ஊரில் நடந்த பிரச்சனைக்கு, வர்க்க ரீதியாக ஆளைத் திரட்டி அமைப்பாக்கி போராட திராணியில்லாமல் முசுலீம்கள் என்றால் இப்படித்தான் என்று எழுதுவது பேண்டவனை விட்டுவிட்டு பீயை அடிப்பதற்கு ஒப்பானது. இது உங்கள் செயலற்ற தன்மையை, நாணயமற்ற தன்மையைத்தான் காட்டுகிறது. இந்த இடத்தில் சமூகபாசிஸ்டுகள் தன் திட்டத்தை செவ்வனே நிறைவேற்றுவதற்கு வழி அமைத்துக்கொடுப்பதற்கு தாங்களும் ஒரு கருவியாக செயல்படுகிறீர்கள்.

                    உங்கள் பிரச்சனைக்கு போராட விருப்பம் இல்லாததால், இரண்டு வேலைகளைச் செய்கிறீர்கள். ஒன்று. கங்கணம் கட்டிக்கொண்டு, மனதில் வெறியை ஏற்றிக்கொண்டு ஐந்தாம்படையாக சேவகம் புரிவது. இரண்டு; எந்த மதவெறி வேரறுக்கப்பட வேண்டுமென்று நினைக்கிறீர்களோ, அந்த மதவெறி முறியடிக்கப்படாமல் செயலற்றவனவாகவே வாழ்ந்து முடிப்பது. முக்கியமாக இரத்த சகதிக்கு மவுன சாட்சியாக இருப்பது.

                    உங்கள் நிலைப்பாட்டிற்கு இவ்வளவுதான் ஸ்கோப். இதைத்தாண்டி வேறோன்றும் கிடையாது!

                    • //ஐந்தாம்படையாக// ஆவேசத்துல என்ன வார்த்தை பேசுகிறோம் என்பதை மறந்து விட்டீர்களே நாலாம் சாதி பயல் என்பது சூத்திரனை சுட்டுவதற்க்காக பயன்படுத்தப்படுகிறது ஐந்தாம்படை என்பது தாழ்த்தபட்டவ்ர்களை குறிப்பதற்க்காக பயன்படுத்துகிறீர்களா தென்றல்… சரி விடுங்க பெரியார் சொன்னாறு ஜாதி வேறுபாடுகளை ஒழிக்க நினைக்கிறேன் சாதிக்கு காரணமான இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் இந்து மதத்திற்க்கு காரணமான கடவுளை ஒழிக்க வேண்டும் என்றார் ஆனா நீங்க என்னடானா இசுலாமியரகள் எல்லாம் நல்லவர்கள் அதனால் இசுலாமும் நல்லது என்று நினைக்கிறீர்கள் உங்கள மாறி படிக்காம மத்த மதத்துகாரங்க கிட்ட பழகாம நாங்க என்ன தனி தீவுல இருந்தா வந்து இருக்கோம் இசுலாமிய வெருப்பு என்பது காலி பெருங்கஃஅய டப்ப அல்ல இசுலாமை படியும் புரியும்

                  • \\இப்பிடிக்காட்டுனா ஒவ்வொருத்தர் பின்னாடியும் ஒரு கதை இருக்கும்\\

                    அத்துனை கதைகளையும் திரட்டு! அமைப்பாக்கு! ஒன்று சேர்ந்து போராடு! விழித்த விழியில் மேதினிக்கு ஒளிசெய்! நகைப்பை முழக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!, நடத்து உலகத்தை!

                  • \\எது எப்பிடியோ நீங்க பழகுன முஸிலிம் எல்லாம் நல்லவங்களாவே இருந்துருக்காக இந்துவும் கிறிஸ்தவனும் உங்கள வெருப்பேத்திருக்கானுக அப்பிடிங்குறது மட்டும் புரியுது…\\

                    இந்துவிற்கு வெளியே எங்கேயும் ஆள் தேடவேண்டிய அவசியமில்லை. என் வீட்டிலேயே உண்டு. நான் சார்ந்த சமூகம் எப்பொழுதுமே சாதிச்சூட்டில் அடைகாத்து சொகுசு அனுபவிக்கிற சமூகம். கிறித்தவர்கள் வெறுப்பத்தியிருக்கிறார்கள் என்று கூறுவதும் உங்களுடைய வெறுப்பான மனநிலை. பள்ளிக்கல்வியில் 2-5 பெந்தோகொஸ்தே, 6-12 கத்தோலிக்கம், இளங்கலை, முதுகலை- சிஎஸ்ஐ, இதில் பிரேயர் கொடுமை எல்லாம் போக, நல்ல நண்பர்கள் எல்லாம் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்களைப்போல் பெரும்பான்மை கிறித்தவர்கள் எல்லாம் வெறுப்பேற்றுகிறார்கள் என்று கூறுகட்டி அடிக்கவில்லை. அதே சமயம் எந்த கிறித்தவனின் வாழ்விற்கும் தென்னிந்திய திருச்சபையோ, இராமநாதபுர மறை மண்டலமோ பொறுப்பேற்றிருக்கிறதா? தலைமையில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எல்லாம் பொறுக்கித் தின்னும் கைக்கூலிகள். ஏகாதிபத்திய அடிவருடிகள்! இயேசுவைக் காட்டி அழுகிப்போன காலை ஜெபத்தால் குணம் ஆக்குகிறேன் என்று சொன்ன பால் தினகரன் கூட்டம் வைத்திருக்கிற காருண்யா பல்கலைக்கழகத்தில் ஒரு ஏழை கிறித்தவனுக்கு சீட்டு கிடைக்குமா? இதை எதிர்க்கிறவர்களையெல்லாம் கிறித்தவனுக்கு எதிரானவர்கள்; இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று சொல்வது மடமைத்தனம்.அவர்களுக்கே சேவகம் புரிவதற்கு ஒப்பானது.

                    • //அதே சமயம் எந்த கிறித்தவனின் வாழ்விற்கும் தென்னிந்திய திருச்சபையோ, இராமநாதபுர மறை மண்டலமோ பொறுப்பேற்றிருக்கிறதா? தலைமையில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எல்லாம் பொறுக்கித் தின்னும் கைக்கூலிகள்.//சி எஸ் ஐ ,ஆர் சி பெந்தகோஸ்த இதை எல்லாம் திருச்சபைகள் என்று யார் சொன்னது இவகள எல்லாம் கம்பெனிகள் இந்த கம்பெனிகள் எல்லாம் பேராயர் என்ற எம் டி ய தலைமையாக கொண்டு செயல் படுகின்றன உங்களுக்கு இந்த கம்பெனில வேலை வேண்டுமா நிச்சயம் கிடைக்கும் பாதிரியார் வேலை வேண்டும் என்றால் மட்டும் கொஞ்சம் பைபிள் படிக்கனும் மற்ற படி அதன் துணை நிருவனங்களான் பள்ளி கல்லூரிகளில் பணி வேண்டுமானாலும் கிடைக்கும் என்ன அராசாங்க வேலைக்கு மாறி கொஞ்சம் லஞ்சம் குடுக்கனும் பரவாயில்லையா

            • தென்றல் அவர்களுக்கு,

              நீங்கள் பிரச்சனையை இந்திய அளவில் சுருக்கிப் பார்க்கிறீர்கள். நான் அதன் உன்மையான பரிமானத்தைப்பற்றியும் பரிணாமத்தைப்பற்றியும் பேசுகிறேன்.

              //முகம்மதுவை ஏற்கிறவன் எல்லாம் முகம்மதியர்கள் என்று ஒரேபோடாக//

              நான் என்ன தீவிரவாதி என்றா சொல்லிவிட்டேன். ஏன் இந்த பதட்டம். முகம்மதுவை ஏற்கிறவன் முகம்மதியன் என்று தானே சொல்லியிருக்கிறேன். முகமதியம் (அல்லது முகமதியர்கள்) பெண்களை மற்றும் காபிர்களைப் பற்றிய அதன் நிலையை வைத்தே அபாயகரமானதென்று நான் வரையறுக்கிறேன். அதை அப்படித்தான் அணுகுகிறேன். அதனால் மேலும் பல பிரச்சனைகளும் இருக்கின்றன என்பது கூடுதல் தகவல்களே.

              //ஹிட்லர் இப்படித்தான் யூதர்களை வரையறுத்தார்.//

              ஹிட்லர் சமூக ஜனநாயகவாதியாக இருந்தானா என்று எனக்குத் தெரியவில்லை. யூதர்களுக்கும் முகமதியர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. யூதர்கள் அவர்கள் இருந்த இடங்களிலெல்லாம் ஒரு குறும்பான்மை மக்கள். ஹிட்லரின் கீழ் யூதர்களுக்கு நேர்ந்த கதி இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் நேர்ந்து விடக்கூடாது என்று நீங்கள் அஞ்சுவதாக தெரிகிறது. இந்திய இஸ்லாமியர்கள் ஜெர்மனியின் யூதர்களைப் போல் குறும்பான்மையும் இல்லை வேறு ஆதரவில்லாதவர்களும் இல்லை. இந்தியாவைச் சுற்றி 55 நாடுகளில் அவர்களுக்கு ஆதரவு இருக்கின்றது. உங்கள் அச்சம் பொருளற்றது.

              //***பிஜே போடாத கூட்டம் இல்லை. பாடாத ராகம் இல்லை.//

              இந்த பருப்பெல்லாம் முகமதிய நாடுகளில் வேகாது. இது காபிர் நாட்டிற்கேற்ற வேடம். இதையெல்லாம் ஒரு பாயின்ட் என்று எழுதி நம் நேரத்தை வீணாக்குகிறீர்கள். முகமதிய நாடுகளின் நிலையென்ன. சிரியாவில் காபியை இலவசமாகக் கேட்ட ஒரு ரௌடியிடம் முகமதே வந்தாலும் இலவசமாகத் தரமாட்டேன் என்று கூறிய 15 வயது சிறுவனை ஊரின் நடுவில் வைத்து சுட்டுக் கொன்றார்கள் முகமதிய புரட்சியாளர்கள். அசியா பீவியைப் பற்றி முன்னரே கூறியிருக்கிறேன். அவருக்கு சாதகமாக கருத்துத் தெரிவித்தார் என்பதற்காக சட்ட அமைச்சரையே அவரின் போலிசே சுட்டுக் கொன்றான். பங்களாதேசில் ஒரு அமைச்சர் (Latif Siddique) பதவி நீக்கம் செய்யப்பட்டு நாட்டிற்குள் நுழையமுடியாமல் இருக்கிறார். இது போன்று ஏராளமான செய்திகள் இருக்கின்றன. நீங்கள் அல்லாவைக் கூட ஏதேனும் பேசலாம் ஆனால் முகமதையல்ல. முகமதியர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். முகமதின் பெயரைச் சொன்னவுடனே ஒரு நீண்ட சொற்றொடரையும் மறக்காமல் சொல்லவேண்டும். அதன் பொருள் என்னவென்று கேட்டால் அதன் உன்மைப் பொருளைச் சொல்ல மாட்டார்கள். உஙகளுக்கு ஒரு புதிர். அதன் உன்மைப் பொருளைக் கண்டுபிடியுங்கள். உஙகளுக்கும் கொஞ்சம் தெளிவு வரலாம்.

              //பிஜேவிற்குத்தான் உதவி புரிகிறார்.//

              எனது செயல்கள் முகமதியர்களுக்கு அவர்களை முகமதியத்தைக் கைவிட வைப்பதைத்தவிர வேறு எந்த விதத்திலும் உதவப்போவதில்லை. தற்காலிகமாக சில நன்மைகள் நேரலாம். சில கூடுதல் உறுப்பினர்கள் சேரலாம். ஆனால் அது தற்காலிகம் தான். மக்களின் மத்தியில் விழிப்புணர்வு கூடுவதால் இதன் விளைவு சரிகட்டப்படும்.

              //யாரெல்லாம் இசுலாமியர்கள்//

              முகமதிய சமூகத்தில் பிறந்து முகமதியத்தைப் பற்றி நன்கு பரிச்சயமில்லாமலோ அல்லது பரிச்சயத்தோடா அதை முடிந்த வரை ஏற்றுக் கொள்ளாமல் பின்பற்றாமல் இருப்பவர்களை இசுலாமியர்கள் என்பது எனது வரையறை. அதாவது இஸ்லாம் என்றாலே பணிந்து போதல் எனும் போது இவர்கள் வேறு வழியில்லாமல் பணிந்து போனவர்கள் என்பதால் பெயர் பொருத்தம் அருமையாக வந்திருக்கிறது. எதுவும் தேறவில்லை என்று சொல்லிவிடாதீர்கள். நன்றி.

              • //இந்திய இஸ்லாமியர்கள் ஜெர்மனியின் யூதர்களைப் போல் குறும்பான்மையும் இல்லை வேறு ஆதரவில்லாதவர்களும் இல்லை. இந்தியாவைச் சுற்றி 55 நாடுகளில் அவர்களுக்கு ஆதரவு இருக்கின்றது. உங்கள் அச்சம் பொருளற்றது.//
                முற்றிலும் உண்மை இந்தியாவில் முஸிலீம்கள் தாழ்த்தப்பட்டவர்களை விட பாதுகாப்பாக உள்ளனர் பரமக்குடியில் சுட்டுக்கொள்ளப்பட்டது போல இசுலாமியர்களுக்கு நடக்காது நாயக்கன் கொட்டாயப்போல பொருளாதார சேதத்தை ஏற்ப்படுத்த முடியாது, குஜராத்தை சுட்டிக்காட்டலாம் சிலர் அதற்க்காக மோடி சர்வதேச லேவலில் சம்பாதித்துக் கொண்டு எதிர்ப்பால் இப்ப சமயசார்பற்றவர் என்ற வேடம் போட வேண்டியிருக்கிறது என்னா நிலைமைனா முஸிலீம்களை கொல்லனும்னா கலவர்த்த தூண்டனும் ரெம்ப மெனக்கிடனும் அனால் தாழ்த்தப்பட்டவ்ர்களைக்கொள்ளனுனுனா அவங்க கூட்டம் கூடி கோசம் போட்டா போதும் போட்டுத்தள்ளிடலாம்…

              • யுனிவர்புடி,

                நேரம் இல்லாததால் தங்களுக்கு பின்னூட்டம் அளிக்க இயலவில்லை.

                //இந்திய இஸ்லாமியர்கள் ஜெர்மனியின் யூதர்களைப் போல் குறும்பான்மையும் இல்லை வேறு ஆதரவில்லாதவர்களும் இல்லை. இந்தியாவைச் சுற்றி 55 நாடுகளில் அவர்களுக்கு ஆதரவு இருக்கின்றது//

                ஆகா, அங்க சுத்தி இங்க சுத்தி இப்படி நீங்க ஏன் அம்பலம் ஆகணும். இந்தியாவுல இசுலாமிய மக்கள் மேல நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை பார்த்து அந்த 55 நாடுகளும் இந்தியாவை என்ன செய்து விட்டன. குஜராத் படுகொலையாகட்டும், மும்பை கலவரமாகட்டும் எந்த இசுலாமிய நாடுகள் அதை தடுத்து நிறுத்தி விட்டன. ரிசானா என்ற இலங்கையை சேர்ந்த அப்பாவி இசுலாமிய பெண்மணி சவுதியில் படுகொலை செய்யப்பட்டபோது எங்கே அந்த 55 நாடுகள் சென்று விட்டன.

                இசுலாமியர் மேல் உங்களுக்கு கண்மூடித்தனமான வன்மம் இருக்கிறது. அதனால் தான் இசுலாமியரின் எண்ணிக்கையை பார்க்கிறீர்கள். இப்போது இசுலாமிய மக்கள் இந்தியாவில் என்னமோ சுகமாக இருப்பது போலவும், அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அந்த 55 நாடுகளும் படையெடுத்து வந்து அவர்களைக் காப்பாற்றுவது போலவும் கற்பனை செய்கிறீர்கள்.

                • //இந்தியாவுல இசுலாமிய மக்கள் மேல நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை பார்த்து அந்த 55 நாடுகளும் இந்தியாவை என்ன செய்து விட்டன//
                  என்ன செய்யல அஜ்மல் கசாப் அ அனுப்பலயா இந்திய சிப்பாய்களின் கழுத்தை அறுகவில்லையா இதை வினவே இசுலாமியர்களின் எதிர் விணை என்று ஒப்புக்கொள்ளவில்லையா
                  //ரிசானா என்ற இலங்கையை சேர்ந்த அப்பாவி இசுலாமிய பெண்மணி சவுதியில் படுகொலை செய்யப்பட்டபோது எங்கே அந்த 55 நாடுகள் சென்று விட்டன.//
                  என்ன பாஸ் பதில் சொல்லுறேன்னு ஏன் உளரல் கேள்வி கேக்குறீர் ரிசானா நாயக் க்விசயத்துல திருடனுகளே இந்த 55 நாடுகள் தான அவங்ககிட்டயே நியாயம் கேக்க சொல்லுறிங்கநீங்க ரெம்ப பகுத்தறிவாளர்தான் போங..

                  • யோசெப்,

                    கொஞ்சமாவது அறிவு நாணயம் இருந்தால் இப்படி பேசுவீர்களா. அஜ்மல் கசாப் இங்கு வந்தது இங்குள்ள இசுலாமியர்களைக் காப்பாற்றவா? உமக்கு இசுலாமிய எதிர்ப்பு காய்ச்சல் வந்துருச்சுன்னு நினைக்கிறேன். அய்யா யோசிச்சு மூளை வெளிய வந்துட போகுது. யுனிவர்படி இசுலாமியர்களுக்காக 55 நாடுகள் உள்ளன என்றார். ஆனால் ரிசானாவை படுகொலை செய்ததே அவர்கள் தான் என்று நான் கூறினேன். ரொம்ப யோசிக்காதீங்க.

                    • //கொஞ்சமாவது அறிவு நாணயம் இருந்தால் இப்படி பேசுவீர்களா. அஜ்மல் கசாப் இங்கு வந்தது இங்குள்ள இசுலாமியர்களைக் காப்பாற்றவா?//
                      நல்ல கேள்வி இத என்னான்ட கேட்டா எப்பிடி இசுலாமியர்களை காப்பாத்துறதா நினைச்சு வந்தவனையும் அவன அனுப்பி வச்சவனையும் அவனுக்காக _____ தான் கேக்கனும் ,ஏன்டா முட்டாள் சேக்குக்ளா தீவிரவாதத்துக்கு பணம் குடுக்குறீங்கனு கேப்பீங்களா ,கேப்பீங்களா, எனக்கு மூளை வெளிய வருதோ இல்லையொ உங்களுக்கு வந்துருச்சு சீக்கிரமா எடுத்து உள்ளார வச்சுக்குங்க இல்லேனா அத எடுத்து பிரியானி போட்டுடபோறாக…

                • சிவப்பு அவர்களுக்கு,
                  // இப்படி நீங்க ஏன் அம்பலம் ஆகணும்.//

                  நான் அம்பலமாகி ரொம்ப நாளாச்சி. இப்போது அம்பலமாவது உங்களின் அறியாமைதான். தொடர்ந்து படியுங்கள்.

                  // குஜராத் படுகொலையாகட்டும், மும்பை கலவரமாகட்டும்//

                  உங்களுக்கு ஹிட்லரின் கீழ் ஐரோப்பாவின் யூதர்களுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை போலிருக்கிறது. அதனால் தான் குஜராத் படுகொலையை இழுக்கிறீர்கள். Holocaust என்ற வார்த்தையைத் தேடித் தெரிந்து கொள்ளுங்கள்.

                  //அந்த 55 நாடுகளும் படையெடுத்து வந்து அவர்களைக் காப்பாற்றுவது போலவும் கற்பனை செய்கிறீர்கள்.//

                  அவர்கள் எதுவும் செய்யத்தேவையில்லை. அவர்களின் இருப்பே போதும். யூதர்களுக்கு நேர்ந்ததில் 1 சதம் கூட இஸ்லாமியர்களுக்கு நேராது. பெட்ரோல் போன்ற வற்றிற்காகவும் நாம் அவர்களைச் சார்ந்து இருக்கிறோம். மேலும் அந்த நாடுகளிலும் இந்திய குறும்பான்மை மக்கள் வாழ்கிறார்கள்.

                  அவர்கள் வெறும் கேலிச்சித்திரத்திரங்களுக்கே பல பேரை எரித்துக் கொன்றவர்கள். ஒரு ரயில் பெட்டி நிறைய மனிதர்களை எரித்தால் அதற்கான எதிர்வினை எப்படியிருக்குமென்று அவர்களுக்குத் தெரியும்.

                  ரிசானா நபீக் விசயத்தைப்பற்றி உங்கள் கேள்வி உங்களின் குழப்ப நிலையைக் காட்டுகிறது. உங்களை நீங்களாகத்தான் தெளிய வைத்துக் கொள்ளமுடியும். நன்றி.

                  • யுனிவர்படி,

                    நன்றி. கண்டிப்பாக நிறைய படிக்க முயற்சி செய்கிறேன.தாங்கள் எந்த ஆதாரத்துடன் இந்திய இசுலாமியர்களு 55 நாடுகளில் ஆதரவு உள்ளது என்று கூறுகிறீர்கள். இங்குள்ள இசுலாமியர்கள் படுகொலை செய்யப்படுவதை இங்குள்ள இசுலாமியர்களே தடுக்க முடியாத போது எப்படி அந்த 55 நாடுகளும் அவர்களை காக்க முடியும்.[அப்புறம் இரயிலை இசுலாமியர்கள் தான் எரித்தனர் என்பதற்கு தகுந்த ஆதாரம் கிடையாது. இதைப் பற்றி இங்கே பேசினால் விவாத நோக்கம் தவறி விடும்.]

                    ரிசானாவைக் கொன்றது சொந்த மதத்தின் கடுகோட்ப்பாட்டுவாதம் என்றால் , குஜராத்தில் இசுலாமியர்களை கொன்றொழித்தது இந்து பயங்கரவாதம். இது போன்ற கொடூரமான செயல்களை சொந்த நாட்டு மக்கள் தாம் ஒன்றுபட்டுத் தடுக்க முடியும்.55 நாடுகளும் ஒன்னும் பண்ண மாட்டாங்க. இதைதான் ரிசானவைக் குறிப்பிடும் போது சொல்ல இருந்தேன்.

                    குஜராத் படுகொலையை பற்றி நான் குறிப்பிட்டது தங்களது இசுலாமியர்களுக்கு 55 நாடுகள் ஆதரவாக உள்ளன என்ற கருத்திற்கு தான். அவர்களின் இருப்பு எப்படி இவர்களை பாதுகாக்கும் என்பதைதைக் கூர்ந்து விளக்கவும்.பெட்ரோலுக்காக அவர்களை சார்ந்து இருக்கிறோம் என்பது எப்படி இவர்களை காப்பாற்றும். எப்படிப் பார்த்தாலும் இது பொருளாதாரம் சர்ந்து தான் இருக்கு. பெட்ரோல் ஷேக்குகளும் இந்திய முதலைகளும் இலாபம் சம்பாதிக்க தான்னு தான் நினைத்து இருந்தேன் இப்போ தாங்கள் புதிதாக ஒரு கோணத்தை எடுத்து வைத்து உள்ளீர்கள். அதை விளக்கினால் நன்று.

                    நன்றி.

                    • சிவப்பு அவர்களுக்கு,

                      //இங்குள்ள இசுலாமியர்கள் படுகொலை செய்யப்படுவதை இங்குள்ள இசுலாமியர்களே தடுக்க முடியாத போது//

                      நாம் யூதர்களுக்கு நேரந்த அழிவை ஒப்பிட்டுப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் அதைப் பற்றி இன்னும் சரியாக தெரிந்து கொள்ளவில்லையென்று தெரிகிறது. அதனால் தான் மேலேயுள்ள வரியை எழுதியிருக்கிறீர்கள். நானே சுருக்கமாக எழுதுகிறேன். ஹிட்லிரின் ஆதிக்கத்தில் இருந்த ஐரோப்பா முழுக்க இருந்து யூதர்கள், போர்க்கால சட்டங்களின் மூலம், அடையாளம் காணப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டு பின்னர் காற்றுப்புகாத அறைகளில் அடைத்து விச வாயு செலுத்தி கொல்லப்பட்டனர். 50 அல்ல 2000 அல்ல, கிட்டத்தட்ட 60 லட்சம் யூதர்கள் இதில் படுகொலை செய்யப்பட்டனர், குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் வாலிபர்கள் எல்லோரும் இதில் அடக்கம், இந்த அழிவு பல ஆண்டுகள் நடந்தது. தப்பித்தவர்கள் மிகமிகக் குறைவு. அவர்களுக்காக எல்லா வழிகளும் எல்லைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதும் கொடிய குற்றமாக்கப்பட்டிருந்தது. யூதர்கள் படுகொலை செய்யப்படுவதை வேறு எந்த யூதர்களாலும் தடுக்க முடியாத நிலை. சிறிய எதிர்ப்பு காட்டினாலும் பொது இடமென்றும் பார்க்காமல் அப்படியே சுட்டுத் தள்ளப்பட்டனர். அதில்லாமல் எல்லா யூதர்களுமே பிடிக்கப்படவேண்டியவர்கள்தான்.
                      சுற்றியும் 1000 பேர் இருந்தாலும் ஒருவனை கத்தியாலோ துப்பாக்கியாலோ கொள்வதை யாரும் தடுத்துவிடமுடியாது. ஆனால் யூதர்களுக்கு நேர்ந்ததைப் போன்ற திட்டமிடப்பட்ட பல ஆண்டுகளாக துல்லியமாக நடத்தப்பட்ட இனவழிப்பு என்பது சாத்தியமில்லை. இப்போது எனது பதில் தெளிவாகியிருக்கும் என்று நம்புகிறேன்.

                      // இரயிலை இசுலாமியர்கள் தான் எரித்தனர் என்பதற்கு தகுந்த ஆதாரம்//

                      உங்களுக்கு சந்தேகம். ஆனால் அவர்களுக்கு?

                      // அவர்களின் இருப்பு எப்படி இவர்களை பாதுகாக்கும்//
                      // பெட்ரோலுக்காக அவர்களை சார்ந்து இருக்கிறோம் என்பது எப்படி இவர்களை காப்பாற்றும்.//

                      இப்படிப்பட்ட அப்பாவித்தனமான கேள்விகளை வினவில் நான் எதிர்கொள்வது இது தான் முதன்முறை.

                      கேட்பதற்குக்கூட ஆளில்லாதவன் என்ற கருத்தை நீங்கள் கேள்விபட்டதே கிடையாதா. யூதர்களுக்கென்று கேட்பார் யாருமில்லாத நிலை இருந்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை மற்ற குடிமக்கள் யாரும் மறைத்து வைத்துப் பாதுகாக்கிறார்கள் என்பது தெரிய வந்தால் அவர்களும் உடனே சுடப்படுவர். இப்படிப்பட்ட பரிதாப நிலையினால் தான் அவர்கள் அப்படி அழிக்கப்பட்டார்கள் என்பதும் அப்படிப்பட்ட நிலை முகமதியர்களுக்கில்லை என்பதும் தான் தென்றலுக்கு நான் கொடுத்த பதில்.

                      பெட்ரோலியத்தை நம்பித்தான் இந்த உலகமே சுற்றிக்கொண்டிருக்கிறது. அது வணிகம், லாபம் மட்டுமில்லை, ஆயுதமும் அதிகாரமும் கூட. oil embargo 1973 என்று தேடிப்பாருங்கள். யூதர்களுக்கு நேர்ந்தது அரசினால் மட்டுமே செய்யமுடியும். இந்தியாவுக்கு oil மறுக்கப்பட்டால் ஆட்சியிலிருக்கும் இந்துத்வா கும்பலால் என்ன செய்யமுடியும் என்று யோசித்துப் பாருங்கள். நன்றி.

                    • சிவப்பு அவர்களுக்கு,

                      // இரயிலை இசுலாமியர்கள் தான் எரித்தனர் என்பதற்கு தகுந்த ஆதாரம்//

                      நீங்கள் சொன்னதைப் போல, இதைப் பற்றி இங்கே பேசினால் விவாத நோக்கம் தவறி விடும்.

                      //இங்குள்ள இசுலாமியர்கள் படுகொலை செய்யப்படுவதை இங்குள்ள இசுலாமியர்களே தடுக்க முடியாத போது//

                      நாம் யூதர்களுக்கு நேரந்த அழிவை ஒப்பிட்டுப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் அதைப் பற்றி இன்னும் சரியாக தெரிந்து கொள்ளவில்லையென்று தெரிகிறது. அதனால் தான் மேலேயுள்ள வரியை எழுதியிருக்கிறீர்கள். நானே சுருக்கமாக எழுதுகிறேன். ஹிட்லிரின் ஆதிக்கத்தில் இருந்த ஐரோப்பா முழுக்க இருந்து யூதர்கள், போர்க்கால சட்டங்களின் மூலம், அடையாளம் காணப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டு பின்னர் காற்றுப்புகாத அறைகளில் அடைத்து விச வாயு செலுத்தி கொல்லப்பட்டனர். 50 அல்ல 2000 அல்ல, கிட்டத்தட்ட 60 லட்சம் யூதர்கள் இதில் படுகொலை செய்யப்பட்டனர், குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் வாலிபர்கள் எல்லோரும் இதில் அடக்கம், இந்த அழிவு பல ஆண்டுகள் நடந்தது. தப்பித்தவர்கள் மிகமிகக் குறைவு. அவர்களுக்காக எல்லா வழிகளும் எல்லைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதும் கொடிய குற்றமாக்கப்பட்டிருந்தது. யூதர்கள் படுகொலை செய்யப்படுவதை வேறு எந்த யூதர்களாலும் தடுக்க முடியாத நிலை. சிறிய எதிர்ப்பு காட்டினாலும் பொது இடமென்றும் பார்க்காமல் அப்படியே சுட்டுத் தள்ளப்பட்டனர். அதில்லாமல் எல்லா யூதர்களுமே பிடிக்கப்படவேண்டியவர்கள்தான்.
                      சுற்றியும் 1000 பேர் இருந்தாலும் ஒருவனை கத்தியாலோ துப்பாக்கியாலோ கொள்வதை யாரும் தடுத்துவிடமுடியாது. ஆனால் யூதர்களுக்கு நேர்ந்ததைப் போன்ற திட்டமிடப்பட்ட பல ஆண்டுகளாக துல்லியமாக நடத்தப்பட்ட இனவழிப்பு என்பது சாத்தியமில்லை. இப்போது எனது பதில் தெளிவாகியிருக்கும் என்று நம்புகிறேன்.

                      // அவர்களின் இருப்பு எப்படி இவர்களை பாதுகாக்கும்//
                      // பெட்ரோலுக்காக அவர்களை சார்ந்து இருக்கிறோம் என்பது எப்படி இவர்களை காப்பாற்றும்.//

                      இப்படிப்பட்ட அப்பாவித்தனமான கேள்விகளை வினவில் நான் எதிர்கொள்வது இது தான் முதன்முறை.

                      கேட்பதற்குக்கூட ஆளில்லாதவன் என்ற கருத்தை நீங்கள் கேள்விபட்டதே கிடையாதா. யூதர்களுக்கென்று கேட்பார் யாருமில்லாத நிலை இருந்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை மற்ற குடிமக்கள் யாரும் மறைத்து வைத்துப் பாதுகாக்கிறார்கள் என்பது தெரிய வந்தால் அவர்களும் உடனே சுடப்படுவர். இப்படிப்பட்ட பரிதாப நிலையினால் தான் அவர்கள் அப்படி அழிக்கப்பட்டார்கள் என்பதும் அப்படிப்பட்ட நிலை இசுலாமியர்களுக்கில்லை என்பதும் தான் தென்றலுக்கு நான் கொடுத்த பதில்.

                      பெட்ரோலியத்தை நம்பித்தான் இந்த உலகமே சுற்றிக்கொண்டிருக்கிறது. அது வணிகம், லாபம் மட்டுமில்லை, ஆயுதமும் அதிகாரமும் கூட. oil embargo 1973 என்று தேடிப்பாருங்கள். யூதர்களுக்கு நேர்ந்தது அரசினால் மட்டுமே செய்யமுடியும். இந்தியாவுக்கு oil மறுக்கப்பட்டால் ஆட்சியிலிருக்கும் இந்துத்வா கும்பலால் என்ன செய்யமுடியும் என்று யோசித்துப் பாருங்கள். நன்றி.

  26. சிவப்பு அவர்களுக்கு,

    நீங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பொது சட்டத்தை ஒட்டி பதிலளிக்க முடியாது என்பதைக் கவனிக்கவும். எனக்கு வந்த கேள்விகளில் பெரும்பாலானவை அப்படிப்பட்டது தான். என் மீது குறைபட்டுக்கொள்ளும் மற்றவர்களும் இதை கவனிக்கட்டும். நன்றி.

    //ஆணி//

    அவர் ஒரு கிடிக்கிப்பிடி கேள்வி கேட்டிருக்கிறார் என்பதைத்தாண்டி அவர் கேள்வியில் பெரிதாக புரிந்துகொள்ள ஒன்றும் இல்லை. அவர் கேள்விக்கேற்ற பதிலைக் கொடுத்திருக்கிறேன்.

    // முகமதிய வட்டாரம் என்பது சொற்ப எண்ணிக்கையில் அடங்குவது //

    பார்ப்பனியத்தை வெவ்வேறு மக்கள் வெவ்வேறு அளவுகளில் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் கூட்டுத்தொகை விழுக்காடு எவ்வளவு வரும் என்பதை உங்கள் ஊகத்திற்கு விட்டுவிடுகிறேன். அதே அளவுக்கு முகமதியம் பின்பற்றப்பட்டாலும் அது ஆபத்தானது தான்.

    // ஓட்டுனராக ஒரு இசுலாமியர்//

    இவர் நீங்கள் சொல்லும் தொழிலாளர் வர்க்கம் தானே. பொருளாதார ரீதியில் அந்த பெண் இந்த ஓட்டுனரை விட வசதியானவர் என்று வேறு சொல்கிறீர்கள். அவர் ஏன் முகமதியத்தை அவ்வளவு கராராக பேசுகிறார் என்பதற்கு பதில் என்ன. அவர் ஆண் என்பதும் மற்றவர் பெண் என்பதும் கூட இதற்கு பதிலாக இருக்கலாம். இந்த எடுத்துக்காட்டு எவ்வளவு முரண்பாட்டுடன் இருக்கிறது என்பதை ஏன் நீங்கள் யோசிக்கவில்லை. அந்த பெண்ணை மூடியுள்ள பர்தா அவராக விரும்பி அணியவில்லை. அவர்கள் இருவரும் அவர்கள் வசதிக்கு ஏற்றவாறு இசுலாத்தை பின்பற்றுகிறார்கள். ஆனால் எத்தனை நாளைக்கு. முகமதியர்களின் தொகைக் கூடக்கூட வசதியாவது கிசதியாவது. இந்தியாவிலேயே 5 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலை இப்போது இல்லை. கிட்டத்தட்ட எல்லா பெண்களும் முகமூடி-புர்காவில். பெண் குழந்தைகளுக்கும் கூட கிட்டத்தட்ட இதே நிலை வந்து கொண்டிருக்கிறது. இதைப் பற்றி கவலைகொள்ளாமல் இருப்பது எப்படி.
    பிற்போக்குத்தனமான நெறிகளை மற்றவர்களின் மீது திணிப்பதன் மூலமே ஒரு கும்பல் தங்கள் வசதிகளைப் பெறுகிறது. இதை உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ளவிட்டால் புரிந்து கொண்டு அந்நெறிகளை உதறியெறியாவிட்டால் விசச்சுழற்சியிலிருந்து எப்படி விடுபடுவது.

    // இசுலாமும் அதற்க்கு விதிவிலக்கல்ல//

    உன்மைதான். ஆனால் முகமதியர்கள் அப்படித்தான் கூறுகிறார்கள். விதிவிலக்காகத்தான் அதை அணுக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நீங்களும் அதைப்பற்றி பேச மறுப்பதன் மூலம் அதற்கு விதிவிலக்கு அளிக்கத்தான் செய்கிறீர்கள். கவனிக்கவும்.
    எண்ணிக்கை என்பது அவ்வளவு சாதாரண விசயமல்ல. நான்கு பேர் சேர்ந்தாலே தங்களை பெரிய ரௌடிகளாக நினைத்துக் கொள்ளும் மனப்பான்மை வந்துவிடுகிறது. எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற துணிச்சல் வருகிறது. நாம் நூற்றாண்டுகளின் வரலாற்றை அறிந்து கொண்டு அதற்கேற்ற வழிமுறைகளைக் கையாளாவிட்டால் நமக்கு விடுதலை என்பதே கிடையாது.

    // இந்திய கறிக்கடை பாய்//

    இப்போது இவர் வீட்டு பெண்களும் முகமூடி-புர்கா அணிகிறார்கள். எப்படியோ. நான் இவரைப் பற்றி மட்டும் அஞ்சவில்லை. அரேபிய சேக்குகளைப் பற்றியும் தான். இன்றைய முதலாளித்துவ உலகில் நாடுகளின் எல்லைகள் பொருளற்றது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். சேக்குகள் அரேபியாவில் இருப்பதால் நமக்கு என்ன என்று இருக்கும் நிலையில் நாம் இல்லை. சேக்குகளின் பணம்தான் இந்கே இருக்கும் பலரை (ஊடகங்கள், கட்சிகள், குழுக்கள், etc.) ஆட்டுவிக்கிறது. அவர்களின் தாக்கம் உலகெங்கும் பரவியிருக்கிறது. அதாவது அது பார்ப்பனியர்களின் தாக்கத்தை விட பலம் வாய்ந்தாக இருக்கிறது. புதிய கலிபாவின் மூலம் ஜிகாத் தொடுத்திருப்பவர்கள் சிலர் ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதையும் கவனியுங்கள்.

    // அனைத்து இசுலாமியர்களைப் புழுதி வாரி தூற்றுவது//

    நான் பேசுவது முகமதியத்தைப் பற்றி. அதைப் பின்பற்றாத மக்களைப் பற்றியல்ல. நாம் பார்ப்பணியத்தைப் பின்பற்றுகின்றவர்களை மட்டும் பேசுவதைப்போல. இதைப் பற்றி முன்னரே கூறிவிட்டேன். வர்க்கம் என்ற வார்த்தை நமது வினவு வாசக நண்பர்களுக்கு இதை மேலும் தெளிவு படுத்தும் என்று நினைக்கிறேன். நான் பேசுவது முகமதிய வர்க்கத்தைப் பற்றித்தான். (பார்ப்பனிய வர்க்கத்தைப் பற்றியும் கூடத்தான்.) வேறுபாட்டைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நன்றி. நன்றி. நன்றி.

  27. இசுலாமியர்கள் மசூதிகளிலும் இந்து கோவிலிலும் தமிழ் மொழியில் அர்ச்சனை/தொழுகைகள் நடக்க வேண்டும். முயற்சி திருவினையாக்கும். முயற்சிப்போம்.

    அவரவர் மதங்களில் உள்ள தீவிர எண்ணம் கொண்டவர்களால் அந்த மதத்தை பின்பற்றும் அனைவருக்கும் கெட்ட பெயர் வருகிறது.

    நாம் பின்பற்றும் மதங்களில் குறை இருந்தால் அதை தைரியமாக எதிர்க்க வேண்டும்.

    இந்து மதத்தில் சாதிப்பிரிவினை ஒரு கேடு என்றால் இசுலாமியத்தில் பெண்ணடிமைத்தனம், சகிப்புத்தன்மையின்மை போன்றவை கேடாக உள்ளன. அதே போல ஒரு இசுலாமியன் செய்யும் தவறை, தைரியமாக தவறென்று உரைக்க வேண்டும். பட்டும் படாமல், தொட்டும் தொடாமல் பூசி மெழுகுவது தவறு.

    நான் பிறந்த இந்து மதத்தில் உள்ள குறைகளை என்னால் தைரியமாக எடுத்துரைக்க முடிகிறது.
    அது போல இசுலாமியர்களும் முன்வந்தால் இந்த மத தீவிரவாதிகளின் கை ஓங்காது.

    • //இசுலாமியர்கள் மசூதிகளிலும் இந்து கோவிலிலும் தமிழ் மொழியில் அர்ச்சனை/தொழுகைகள் நடக்க வேண்டும். முயற்சி திருவினையாக்கும். முயற்சிப்போம்.//
      இந்து கோவில்களில் வேண்டுமானால் தமிழ் அர்ச்சனை சாத்தியம் அதுவும் பல எதிர்ப்புகளை முறியடித்து கொண்டு வரப்படலாம் அதற்க்காக நாம் முயற்ச்சி செய்வொம் கண்டிப்பாக நடக்கும் ஆனால்,இசுலாமிய பள்ளி வாசல்களில் தமிழா நோ சாண்ஸ் பாஸ்…

  28. \\ ஆவேசத்துல என்ன வார்த்தை பேசுகிறோம் என்பதை மறந்து விட்டீர்களே நாலாம் சாதி பயல் என்பது சூத்திரனை சுட்டுவதற்க்காக பயன்படுத்தப்படுகிறது ஐந்தாம்படை என்பது தாழ்த்தபட்டவ்ர்களை குறிப்பதற்க்காக பயன்படுத்துகிறீர்களா தென்றல்…\\

    ஐந்தாம் படை என்றால் என்ன அர்த்தம் என்று படித்துத் தெரிந்துகொள்ளவும். http://ta.wiktionary.org/wiki/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88

    மேலும் விசயங்களைச் சரியாக புரிந்துகொள்ளுங்கள். பார்ப்பனிய இந்து மதம் தாழ்த்தப்பட்டவர்களை ஒரு படையாக சேர்த்துக்கொண்டதில்லை. பார்ப்பனிய இந்து மதம் பஞ்சமர்கள் என்று கருதி விலக்கிவைக்கப்பட்டவர்களாகக் கருதுகிறது. சூத்திரன் பிரம்மாவின் பாதங்களில் இருந்துவருபவன். பஞ்சமனுக்கு பிரம்மாவின் உடம்பில் இடமே கிடையாது.

    • \\பெரியார் சொன்னாறு ஜாதி வேறுபாடுகளை ஒழிக்க நினைக்கிறேன் சாதிக்கு காரணமான இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் இந்து மதத்திற்க்கு காரணமான கடவுளை ஒழிக்க வேண்டும் என்றார் ஆனா நீங்க என்னடானா இசுலாமியரகள் எல்லாம் நல்லவர்கள் அதனால் இசுலாமும் நல்லது என்று நினைக்கிறீர்கள்\\

      மாறி மாறி பேசுகிறீர்கள். இங்கு நாம் கோருவது வர்க்கப்பார்வை. பெரியார் தெளிவாகச் சொல்லியிருக்கிறார், மதநல்லிணக்கம் என்பது ஐவருக்குப் பத்தினியாக இரு என்பது! அதுவல்ல நமது நோக்கம். ஏகாதிபத்தியத்தை எதிர்க்க, தனியார்மயத்தைத் தகர்க்க, அதற்கு கைக்கூலிகளாகச் செயல்படும் மதப்பாசிசமான வஹாபியம், பார்ப்பனியம், கத்தோலிக்க பார்ப்பனியம், பெந்தோகொஸ்தே வெறி, புத்தவெறியை அனைத்தையும் முறியடிக்கவேண்டும். இதுதான் நமது முதன்மையான புரிதல்.

      இதைவிட்டு விட்டு, இசுலாமியர்கள் நல்லவர்கள்; இசுலாம் நல்லது என்று நான் சொல்வதாக; இசுலாமியர்கள் கெட்டவர்கள்; இசுலாம் கெட்டது என்ற உங்களின் புரிதலின் படி புரிந்துகொள்கிறீர்கள். இந்தப் புரிதல் மதவெறியர்களுக்கு உரியது. அவர்களுக்கு தான் இந்த வேலைத்திட்டம் தேவை. இந்து-ராஷ்டிரம் என்று சொல்கிற ஆர் எஸ் எஸ் இதைச் செய்தால் தான் தங்களது திட்டத்தில் முன்னேற முடியும். இசிசிஸ், வஹாபியம் தவிர பிறகு அனைத்தும் தவறு என்று சொல்வதால் தான் கொன்றழிக்கின்றன. இவர்கள் இருவருமே ஏகாதிபத்தியக் கைக்கூலிகள்.
      இப்பொழுது இதைப் புரிந்துகொள்ள வேண்டியது உங்களது கடமை.

      1. இசுலாம் நல்லது என்று சொல்லிவிட்டால் நமக்கு வர்க்கப்பார்வை, கம்யுனிசம் எல்லாம் தேவையில்லை. ஆனால் புரட்சிகர இயக்கங்கள் சோசலிசத்தைக் கட்டியமைக்கப் போராடுகின்றன. யுனிவர்படி சுட்டிக்காட்டுகிற 55 நாடுகளிலும் புரட்சிகர இயக்கங்கள் இருக்கின்றன. முசுலீம்கள் தான் வர்க்கப்போராட்டத்தை முன்னெடுத்து தன்னை புரட்சியாளானாக புடம் போடுகிறார்கள். இதைப் பற்றி எந்த நாதாரிகளாகவது பேசியிருக்கிறார்களா? ஊடகங்கள் பேசியிருக்கின்றனவா? பேச மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் விசயத்தில் தெளிவாக இருக்கிறார்கள்.

      2. மாறாக இசுலாமியர்கள் கெட்டவர்கள் என்று தாங்கள் சொல்லவருவதன் மூலமாக எதைச் சுட்டிக்காட்டுகிறீர்கள்? ஆர் எஸ் எஸ் போன்று தெளிவாக உங்கள் திட்டத்தை முன்வைக்கவும். ஆனால் உங்களிடம் இருப்பது வெறும் மொன்னைக்கத்தி; இத்தகைய வெறுப்பை வைத்து முகச்சவரம் கூட செய்யமுடியாது! வேண்டுமானால் ஐந்தாம் படையாக வேலை பார்க்கலாம்; அல்லது ஆர் எஸ் எஸ் கைக்கூலியாக இருக்க வேண்டியதுதான்!

      • அய்யா தென்றல் நான் இப்ப பெரியார் சொன்ன மத நல்லினக்கத்தை பத்தி கேட்டேனா, பெரியார் மதத்த ஒழிக்கனுமுனு சொன்னாறு அதுக்கு காரணமான கடவுளை ஒழிக்கனுமுனு சொன்னாறு ,நான் சொல்லுறது இசுலாமயும் அல்லாவையும் ஒழிக்கனும்ன்றேன் இதுல என்னயா தப்பு இசுலாம் மற்ற மதத்தினரை கொல்லும்படி ஏவுகிறது மற்ற மதங்கள் எல்லாம் முட்டாள் தனம் என்றால் இசுலாமு முட்டாள் தனத்துடன் வன்முறையையும் போதிக்கிறது இப்ப கூட வினவு ஒரு பதிவு போட்டு இருக்கு 2 ஏழை கிறித்துவ பெண்கள் கொடுர கொலை என்று அவர்களை கொன்றது இசுலாமிய வழி நடத்தலின் படிதான் இசுலாமிய தேசத்துல கொல்லப்பட்ட இந்து சகோதரர்களுக்காக யாரை பலி வாங்க, கிறிஸ்துவர்களிக்காக யாரை பலி வாங்குவது,அப்ப இங்கு உள்ள இந்துக்களின் கோபம் இசுலாமியர்கல் மீது திரும்புவது இயற்க்கை தானே தென்றல்

      • இசுலாமியர்கலுக்கு அவர்களின் தீவிரவாதத்திற்க்கு உனிவர்புட்டி சொன்ன இசுலாமிய நாடுகளிள் இருந்து உதவி கிடைக்கிறது அவர்கள் மத்தால் ஒன்றினைகிறார்கள் இந்தியாவை பொருத்தவரை நல்லவர் வேசம் போடுகிறார்கள் ஏனென்றால் போட்டே ஆக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது ஒருவனை எதிர்த்து கொள்வதை விட உறவாடி கொள்வது என்பது போல ,ஆனாலும் இது ஏது அறியாத முஸ்லீம்களும் இருக்கிறார்கள் அவர்கள் குறைவு இசுலாமில் தீவிர மத பற்றாலர்கள் அதிகம் மாற்று மத்தத்தை விட என்று சொல்லுகிறோம் அதனால் மாற்று மதங்களை விட இசுலாம் ஒழிக்க பட வேண்டிய பாஸிஸம் …அப்புறம் நீங்க சொன்னதுக்காக ஒரு ஜோக் ப்ளேடு இல்லாமல் வெரும் வெருப்பை வைத்து சேவிங் கூட பன்ண முடியாது வெருப்ப வச்சு எப்பிடிடா சேவிங் பண்ண முடியும் சின்ன புள்ள தனமால இருக்கு…

    • \\உங்கள மாறி படிக்காம மத்த மதத்துகாரங்க கிட்ட பழகாம நாங்க என்ன தனி தீவுல இருந்தா வந்து இருக்கோம் இசுலாமிய வெருப்பு என்பது காலி பெருங்கஃஅய டப்ப அல்ல இசுலாமை படியும் புரியும்\\

      பழகி வந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு இசுலாமை படியும் புரியும் என்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு? நான் படிக்கச் சொன்னால் பட்டறிவு போதும் என்று சொல்கிறீர்கள். பட்டறிவு சரி என்றால் இசுலாமை படியுங்கள் என்கிறீர்கள். ஏம்ப்பா இப்படி கொல்லுறீக! வஹாபிய வெறியை முறியடிக்க நேரடியாக வாருங்கள்! இப்பொழுதுதெல்லாம் தவ்ஹீத்களின் மதராசாக்கள் வந்திருக்கின்றன. இசுலாமிய சகோதர சகோதரிகளிடம் நேரிடையாக செல்வோம். வஹாபிய மதவெறியை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவோம். வர்க்கப்போராட்டத்திற்கு அணிதிரட்டுவோம். இதற்கு வருவதற்கு தைரியம் இருக்கா? அதைவிடுத்து வீண் பேச்சு எதற்கு? வெளிக்கி இருந்து கொண்டு வெள்ளரிக்காய் தின்பது எதற்காக?

      • தென்றல் அவர்களுக்கு,

        //யுனிவர்படி சுட்டிக்காட்டுகிற 55 நாடுகளிலும் புரட்சிகர இயக்கங்கள் இருக்கின்றன. முசுலீம்கள் தான் வர்க்கப்போராட்டத்தை முன்னெடுத்து தன்னை புரட்சியாளானாக புடம் போடுகிறார்கள்.//

        இதை நான் கண்டிப்பாக மறுக்க மாட்டேன். அந்த புரட்சியாளர்களின் நிலை கூடுதல் அபாயங்கள் சூழ்ந்தது. ஊடகங்கள் அவர்களை இருட்டடிப்பு செய்யவே செய்கிறது. அல்லது ஊடகங்களின் புலன்களில் இது போன்ற விசயங்கள் படுவதில்லை. எனவே தான் முசுலீம் வர்க்கப்போராட்ட புரட்சிகர இயக்கங்களைப் பற்றி பொதுவாக எதுவும் தெரிவதில்லை. வினவு அவர்களைப் பற்றி தன்னால் இயன்றவரை கண்டறிந்து வெளியிடவேண்டும். கலையரசன் அவர்கள் இந்த அரிய பணியை தன்னால் இயன்றவரை செய்கிறார் என்பதைக் காண முடிகிறது.

        //இசுலாமிய சகோதர சகோதரிகளிடம் நேரிடையாக செல்வோம். வஹாபிய மதவெறியை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவோம்.//

        இங்கே கொஞ்சம் கவனம் தேவை. துணிச்சல் தேவைதான். அசட்டுத் துணிச்சல் அபாயகரமானது. வகாபியம் என்று பேசினால் அதிக பட்சம் தர்காவிற்குப் போகும் உரிமையை காப்பாற்றி வைக்கலாம். அதற்கு மேல் என்ன முடியும் என்பது கேள்விக்குறியே. இணைய விவாதத்திலேயே கிறுக்குப் பயலே பக்கி என்று திட்டித்தீர்க்கிறார்கள். நேரில் மாட்டினால் அவ்வளவுதான். தற்போதைக்கு இணையத்தில் விவாதிப்பதே நலம்.

Leave a Reply to Ajaathasathru பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க