privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்தமிழ் சினிமாவா தேவர் சினிமாவா ? - கேலிச்சித்திரம்

தமிழ் சினிமாவா தேவர் சினிமாவா ? – கேலிச்சித்திரம்

-

 vimaladeviபடம் : ஓவியர் முகிலன்

  1. நாங்கள் ஆண்ட பரம்பரை..பேண்ட பரம்பனரன்னு சொல்றவங்கா தாங்கய்யா…“காட்டுமிராண்டிக் கொலைகளுக்கு… கௌரவக் கொலை.. என்று பெயரிட்டது

  2. God father movie was copied and made in Tamil with the name Thevar Magan. In God father, the hero returns after studying in a far away place to his family house where his father live around as and underworld Dada or an influential man with an armed gang.
    The scene of death of Marlon brando was copied ditto in Thevar Magan also.
    God father dealt with criminal activities , life of Dada etc but Thevar Magan added the caste colour the full and full God father movie. When this is the case the team of Thevar Magan went to claim awards for a copied film

  3. சோ கால்டு காட்டுமிராண்டி கொலைகளுக்கு கெளரவக்கொலை என்ற பெயரை யார் வைத்தார்கள் என்பதை ஆய்வு செய்யும் இதே வேளையில், பள்ளுப்பாட்டு பாடல்பெற்ற பண்டைய காலம் தொட்டே பள்ளர்கள் என்று அறியப்பட்ட தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரை யார் வைத்தார்கள் என்பதையும் ஆய்வு செய்து கேலி சித்திரம் ஒன்றை ஓவியர் முகிலன் மூலமாக வரைய சொல்லி தனிப்பதிவை வினவு போடலாம். மேலும், இந்த திரு.பாரதிராஜா – திரு.கமலஹாசன் – திரு. சசிகுமார் மூவருமே மூன்று வித சாதி பின்னணிகளை கொண்டவர்கள். அதிலும் திரு.பாரதிராஜா மட்டும் தான் தேவர் சாதியை சேர்ந்தவர். அவர் சாதியால் தேவரென அறியப்பட்டாலும் தேவர் சாதி சார்ந்த விசயத்தில் மாற்று கருத்துடையவர். தன் மகனுக்கு கூட வேறுவொரு சாதியில் தான் திருமணம் முடித்துள்ளார் என நினைக்கின்றேன். ஆனால், இந்த மூவருக்குள்ளும் உள்ள ஒரே ஒற்றுமை என்னவெனில், மூவருமே தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சாதியால் வேறுபட்டிருந்தாலும் மக்களின் வாழ்க்கையைத்தான் படமாக பதிவு செய்துள்ளார்கள். அது தேவர்மகன் ஆகட்டும். வினவு திரை விமர்சனம் எழுதிய படமான சுந்தரபாண்டியனாக இருக்கட்டும். இது மக்களின் நடைமுறை வாழ்க்கையை தான் படத்திலும் காட்டிருப்பார்கள். இதை விமர்சிப்பது தவறில்லை. ஆனால், உங்களது விமர்சனத்தை கண்டு அஞ்சு யாருமே இனி தேவர் சாதி மக்கள் சார்ந்த படமே எடுக்கமால் இருக்க போவதில்லை. விரைவிலேயே திலகர் என்ற படம் வெளிவர விருக்கின்றது. அதுவும் முழுக்க முழுக்க தேவர் சாதி படம் தான். திருநெல்வேலி – வெள்ளலூர் கிராமத்தில் நடந்த உண்மை சம்பவம் தான். திலகரை, தேவர்மகன் பாட் 2 என்றும் சொல்கின்றனர். அந்த படத்தை எடுத்திருக்கும் இயக்குனர் வெள்ளாள பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர். அவருக்கு திரைத்துறையில் பாலுத்தேவர் என்ற அடைமொழியும் உண்டாம். இந்த பாலுத்தேவர் என்ற காதாப்பாத்திரத்தை வைத்து தான் பாரதிராஜா, சாதிங்கிறது படிச்சு வாங்கின பட்டமா?ன்னு கேட்டாரு. அவரையே இன்னைக்கு கேலி சித்திரம் மூலம் விமர்சிக்கிறீங்க. தொடரட்டும் உங்கள் பணி. நிறைய தேவர் சாதி இயக்குனர்கள் சமகாலத்தில் படம் இயக்கி கொண்டே இருக்கின்றனர். மேலும் பல புதுமுக இயக்குனர்களும் அணிவகுத்து காத்திருக்கின்றனர். குட்டிப்புலி படத்தை இயக்கிய தேவர்சாதி இயக்குனர் முத்தையாவின் அடுத்த படைப்பான கொம்பனுக்கும், பெருமாள் பிள்ளை இயக்கிய திலகருக்கும் வினவு விமர்சனம் எழுதுவீர்களென நம்புகிறேன். ஏனெனில் உங்களுக்கு அட்டைக்கத்தி/மெட்ராஸ் இயக்குனர் ரஞ்சித் மட்டும் தான் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக தெரியலாம். ஏனெனில் அவர் தேவர்சாதி இல்லை என்பதால்!

    • //சோ கால்டு காட்டுமிராண்டி கொலைகளுக்கு கெளரவக்கொலை என்ற பெயரை யார் வைத்தார்கள் என்பதை ஆய்வு செய்யும் இதே வேளையில், பள்ளுப்பாட்டு பாடல்பெற்ற பண்டைய காலம் தொட்டே பள்ளர்கள் என்று அறியப்பட்ட தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரை யார் வைத்தார்கள் என்பதையும் ஆய்வு செய்து கேலி சித்திரம் ஒன்றை ஓவியர் முகிலன் மூலமாக வரைய சொல்லி தனிப்பதிவை வினவு போடலாம். //

      [1] தேவர் சாதி வெறியை அம்பல படுத்தினா ஒடனே ஓடியாந்துடுவாறு இந்த இரா.ச.இமலாதித்தன்! காட்டுமிராண்டி கொலைகலை கெளரவக்கொலை என்ற பெயரிட்டு செய்வது தேவர் சாதி என்றாலும் வேறு எந்த சாதியானாலும் தட்டி கேட்க தமிழ் நாட்டில் நாதி அற்று போகவில்லை _______ !

      //மேலும், இந்த திரு.பாரதிராஜா – திரு.கமலஹாசன் – திரு. சசிகுமார் மூவருமே மூன்று வித சாதி பின்னணிகளை கொண்டவர்கள். அதிலும் திரு.பாரதிராஜா மட்டும் தான் தேவர் சாதியை சேர்ந்தவர். அவர் சாதியால் தேவரென அறியப்பட்டாலும் தேவர் சாதி சார்ந்த விசயத்தில் மாற்று கருத்துடையவர். தன் மகனுக்கு கூட வேறுவொரு சாதியில் தான் திருமணம் முடித்துள்ளார் என நினைக்கின்றேன். ஆனால், இந்த மூவருக்குள்ளும் உள்ள ஒரே ஒற்றுமை என்னவெனில், மூவருமே தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சாதியால் வேறுபட்டிருந்தாலும் மக்களின் வாழ்க்கையைத்தான் படமாக பதிவு செய்துள்ளார்கள்//

      சாதி திமிரை எவன்உயர்தி பிடித்தாலும் நாங்க கேட்போம் இல்ல ! அது கடுமையான விமர்சனமாக தான் இருக்கும்.உமக்கு ஏன் நோவுது ?போற்றி பாடடி பெண்ணே என்று கூவ வேறுஇணைய தளம் பாருமையா !

    • //சாதியால் வேறுபட்டிருந்தாலும் மக்களின் வாழ்க்கையைத்தான் படமாக பதிவு செய்துள்ளார்கள். அது தேவர்மகன் ஆகட்டும். வினவு திரை விமர்சனம் எழுதிய படமான சுந்தரபாண்டியனாக இருக்கட்டும். இது மக்களின் நடைமுறை வாழ்க்கையை தான் படத்திலும் காட்டிருப்பார்கள். இதை விமர்சிப்பது தவறில்லை. ஆனால், உங்களது விமர்சனத்தை கண்டு அஞ்சு யாருமே இனி தேவர் சாதி மக்கள் சார்ந்த படமே எடுக்கமால் இருக்க போவதில்லை.//

      சாதி வெறியை கக்கும் ,சாதி பெருமையா பேசும் இப்படங்கள் உங்களுக்கு வேண்டுமானால் கிளர்சியுட்டுவதாக இருக்கலாம்.ஆனால் விமலா தேவி போன்ற பெண்களை எரிக்கும் திவட்டிகள் அவைதான் என்பது சாதி பெருமையாலரான உமக்கு தெரியாது என்பதில் எமக்கு எந்த அய்யமும் இல்லை !

    • நீங்கள் வினவில் வெளிவந்த “சாதி வெறியர்களுக்குச் சில சாட்டையடிக் கேள்விகள்” என்ற பதிவைப் படித்திருக்கிறீர்களா? அவற்றில் ஏதேனும் ஒரு கேள்விக்காவது உங்களால் நேர்மையாக பதில் சொல்ல முடியுமா?
      வினவு எந்த பக்கமும் பாரபட்சமாகப் பேசவில்லை. விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் பிழைப்புவாதத்தை அம்பலப்படுத்தியும்
      நீதிபதி தினகரின் ஊழல் பற்றியும் ஆ.ராசாவின் 2ஜி ஊழல் தொடர்பு பற்றியும் வினவில்
      நிறைய கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. அவர்களெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காக விமர்சனம் செய்யப்படாமல் இல்லை. இவ்வுண்மை உங்களுக்கும் தெரியும். ஆனால் சாதி உங்கள் கண்ணை மறைக்கிறது.

      பள்ளுப்பாட்டு வரை சென்று சங்க காலம் தொட்டு ஆராய்ந்து பார்க்கும்நீங்கள் ஒரு குறிப்பிட்ட சாதியினரைத் தாழ்த்துவதன் மூலம் பார்ப்பனீயத்தைப் பொறுத்தவரைநீங்களும் கீழானவர்கள்தாம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.’நான் தேவன்டா’ என்று சொல்லிக்கொண்டு உங்களால் கோவில் கருவறையில்நுழய முடியுமா?

      • /ஒரு குறிப்பிட்ட சாதியினரைத் தாழ்த்துவதன் மூலம் பார்ப்பனீயத்தைப் பொறுத்தவரைநீங்களும் கீழானவர்கள்தாம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.’நான் தேவன்டா’ என்று சொல்லிக்கொண்டு உங்களால் கோவில் கருவறையில்நுழய முடியுமா?/

        திரு. கார்த்திக்கரண்,

        இங்கே ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன். எந்தவொரு குறிப்பிட்ட சாதியினரையும் நான் தாழ்த்தவில்லை. யாரையும் என் சாதிக்கு உயர்வானர்கள் என்றோ தாழ்வானவர்கள் என்றோ கருதவில்லை. ஆனால், நான் தேவர் சாதி என்பதாலேயே, நான் அப்படி தாழ்த்துபவன் என்ற மாயை உங்களை போன்றவர்களுக்குள் திணித்தது எது? அந்த மாயை தான் இன்னும் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்தால் ஆதிக்க சாதிவெறியன் என பிறப்பிலிருந்தே திணிக்கின்றது. அந்த திணிப்பினாலாயே சிலர் மனமாற்இ பயணிப்பதும் தொடர்கிறது. இந்த பார்பனியம் மீது எனக்கு எந்த விதத்திலும் உடன்பாடில்லை. அவர்களுக்கு ஆதரவான நிலையை ஒருபோதும் எடுத்ததில்லை. நான் தேவன்டா என்ற வெற்று கூச்சலோடு யாரையும் தரம் தாழ்த்தவில்லை. இந்த கோவில் கருவறை விசயத்தில் நானும் தீண்டத்தகதாவன் என்பதை மிக ஆழமாகவே உணர்ந்திருக்கின்றேன். இது சுயவிளக்கமல்ல. என் மீதான உங்களின் பார்வையின் கோணத்தை இது மாற்ற இது உதவலாம் என்பதால் சொல்கிறேன். புரிதலுக்கு நன்றி!

        • இரா.ச.இமலாதித்தன் : தேவர்ன்னு சொன்னால் உமக்கு ஏன் நோகுது? நீங்க போற்றி பாடடின்னு சொன்னால் தான் இனி போற்றுதல் உருவாக போகுதா என்ன? [feed back 5]

          இரா.ச.இமலாதித்தன் : நான் தேவன்டா என்ற வெற்று கூச்சலோடு யாரையும் தரம் தாழ்த்தவில்லை. [feedback4.3.1]

  4. /சாதி திமிரை எவன்உயர்தி பிடித்தாலும் நாங்க கேட்போம் இல்ல ! அது கடுமையான விமர்சனமாக தான் இருக்கும்.உமக்கு ஏன் நோவுது ?போற்றி பாடடி பெண்ணே என்று கூவ வேறுஇணைய தளம் பாருமையா !/

    நீங்க நீங்கன்னு சொல்றியே நீ யாரு? வெளியில தெரியிறது ஒரு உருவம். ஆனா உள்ளுக்குள்ள பல ரூபங்கள்! 🙂 ன்னு சொல்ற வடிவேலு காமெடி தான் நினைவுக்கு வருது. சொந்த பேருல வந்து கூட பதில் சொல்ல திராணியற்ற உமக்கெல்லாம் இந்த பில்டப் தேவையா? எந்த கடுமையான விமர்சனமாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் பக்குவமும், விவேகமுள்ள வீரமும் எங்க கிட்ட இருக்கு. எனக்கு நோகுது என்பதெல்லாம் இருக்கட்டும், தேவர்ன்னு சொன்னால் உமக்கு ஏன் நோகுது? நீங்க போற்றி பாடடின்னு சொன்னால் தான் இனி போற்றுதல் உருவாக போகுதா என்ன? அந்த போற்றி பாடடின்னு இசையமைச்ச இளையராஜாவோ, அந்த படத்தின் இயக்குனர் பரதனும், நடிகர்கள் கமலஹாசன், நாசர், வடிவேலு, கெளதமி, ரேவதி உள்ளிட்ட யாரும் தேவர் சாதியில்லை என்பது தான் எதார்த்தம். எங்களுக்கு எந்த போலி பெருமைகளும் தேவையில்லை.

    • //எங்களுக்கு எந்த போலி பெருமைகளும் தேவையில்லை.///

      பெருமை தேவையில்லைனா என்னத்துக்கு தேவன்னு சொல்லிக்கிறீங்க?
      தேவன் என்பதே போலி பெருமை தானே?

      இந்து சாதி அமைப்பின் படி தேவன் என்பது சூத்திர சாதி தான். பார்ப்பானும் சூத்திரன் என்று தான் காலங்காலமாக வகைப்படுத்தி வைத்திருக்கிறான். இந்த மானங்கெட்ட பெருமை உங்களுக்கு தேவை தானா?

      அதுவும், சூத்திரன் என்று இழிவுபடுத்துவதை எதிர்த்து போராடாதவர்களுக்கு வீரமும், பெருமையும் ஒரு கேடா? நான் பார்ப்பனிய அடிமையா இருப்பேன், அது என் உரிமை, அது தான் என் பெருமை, அதனாலா நானும் நாலு சாதியை அடிமைப்படுத்துவேன்னு சொல்றதுக்கு நான்டுகிட்டு சாவலாம்.

      உண்மையான பெருமையும், வீர தீரமும் இருக்குறவங்க, சூடு சொரணை இருக்குறவங்க, சூத்திரன் என்று இழிவுபடுத்தும் பார்ப்பனியத்தை எதிர்த்து போராடுவார்கள். காட்டுமிராண்டித்தனமான சாதி ஒடுக்குமுறைகளையும், சாதி அமைப்பையும் ஒழிக்க போராடுவார்கள்.

      தேவனுங்களுக்கு தான் சூடு சொரணை இல்லையே, ‘போலி’ பெருமை தானே இருக்கு! அதனால தான் வெக்கங்கெட்ட தனமா, இன்னும் தேவன்னு சொல்லிகிட்டு திமிரோட திரியறீங்க. சாதி அமைப்பை, காட்டுமிராண்டித்தனத்தை பெருமையா பேசி திரியறீங்க.

      எது உண்மையான வீரம், உண்மையான பெருமை, உண்மையான திமிர்?
      பெரும்பான்மை எண்ணிக்கையை காட்டி ஆயிரம் வருசமா இருக்குற பிற்போக்கு தனத்தை கூட்டத்துடன் கூட்டமாக பின்பற்றுவது, கட்டி காப்பது வீரமில்லை.

      சிறுபான்மையாகவோ தன்னந்தனியாகவோ இருந்தாலும், பிற்போக்கு தனத்தை தகர்த்தெறிய போராடுவது தான் உண்மையான வீரம், உண்மையான பெருமை, உண்மையான திமிர். அது தேவன்னு சொல்லிக்கிற, குறிப்பிட்ட சாதிய சேர்ந்தவன்னு சொல்லிக்கிற ஒருத்தனுக்கும் இல்லை என்பது தான் உண்மை.

      இவரு ‘போலி’ பத்தியெல்லாம் பேச வந்துட்டாரு!

      • திரு கு.ரங்கன்,

        /பெருமை தேவையில்லைனா என்னத்துக்கு தேவன்னு சொல்லிக்கிறீங்க?
        தேவன் என்பதே போலி பெருமை தானே?/

        தேவன் என்பதில் என்ன போலி பெருமை இருக்கின்றது. இதில் என்ன போலியை கண்டு பிடித்தீர்? வழி வழியாக என் பாட்டன் அடைக்கலத்தேவன், தாத்தன் இராமமிர்த தேவர், என தந்தை வழியாக உபயோகப்படுத்தி வந்த தேவன் என்ற பட்டத்தை நான் பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கு? இதை பெருமையாகவோ – சிறுமையாகவோ – போலியாகவோ நான் நினைத்ததில்லை. இது எனக்கான அடையாளம் அதில் பெருமை என்று நீங்கள் நினைத்தால் நான் செய்ய முடியும்? அதிலும் போலி பெருமையென நீங்கள் சொல்வதில் எனக்கு எந்தவித கவலையுமில்லை. இந்த அடையாளம் தேவையா என்று நீங்க பதிலுக்கு கேள்வி கேட்கக்கூடும். அடையாளமில்லாமல் இங்கே எதுவுமில்லை. அது உயிருள்ள அனைத்துக்கும் ஒரு அடையாளமுண்டு. அதுபோலத்தான் இந்த தேவன் என்பதும். இங்கே தேவன் என்பதால் எந்த போலியும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

        /இந்து சாதி அமைப்பின் படி தேவன் என்பது சூத்திர சாதி தான். பார்ப்பானும் சூத்திரன் என்று தான் காலங்காலமாக வகைப்படுத்தி வைத்திருக்கிறான். இந்த மானங்கெட்ட பெருமை உங்களுக்கு தேவை தானா? /

        எனக்கிந்த சூத்திரன் என்பது தாழ்மையென்று நினைத்தது இல்லை. ஆனால் நீங்க சொல்லிருக்கும் தேவன் என்பது சூத்திரன் என்ற அறிவுப்பூர்வமான படிநிலையை இப்போது தான் கேள்விப்படுகின்றேன். அதுவும் சங்க காலத்துல பார்ப்பான் சூத்திரனென்று எப்போது சொன்னான் என்பதும் எனக்கு தெரியவில்லை. எங்களுக்கு இந்த பெருமை பற்றியெல்லாம் கவலையில்லை. ஆனால் மானம் பெரிதென வாழும் கூட்டம் இது. இங்கே மானங்கெட்டத்தனமாக / முட்டாள்தனமான கேள்விகளுக்கு பதில் சொல்வதே வீண் தான்.

        /அதுவும், சூத்திரன் என்று இழிவுபடுத்துவதை எதிர்த்து போராடாதவர்களுக்கு வீரமும், பெருமையும் ஒரு கேடா? நான் பார்ப்பனிய அடிமையா இருப்பேன், அது என் உரிமை, அது தான் என் பெருமை, அதனாலா நானும் நாலு சாதியை அடிமைப்படுத்துவேன்னு சொல்றதுக்கு நான்டுகிட்டு சாவலாம்./

        நாண்டுகிட்டு சாவுறதெல்லாம் ஒரு விசயமல்ல. வீரம் செறிந்த கூட்டம் காலம் காலமாக சாவை கண்டு அஞ்சியதில்லை என்பது கடந்தகால வரலாறு. ஆனால், அதற்காக பார்பான் எங்களை விட மேல் என நினைத்து கால் பிடித்ததில்லை. பார்பனர்கள் ஒட்டுமொத்தமாகவே புறக்கணிக்கபட வேண்டியவர்களே.

        /உண்மையான பெருமையும், வீர தீரமும் இருக்குறவங்க, சூடு சொரணை இருக்குறவங்க, சூத்திரன் என்று இழிவுபடுத்தும் பார்ப்பனியத்தை எதிர்த்து போராடுவார்கள். காட்டுமிராண்டித்தனமான சாதி ஒடுக்குமுறைகளையும், சாதி அமைப்பையும் ஒழிக்க போராடுவார்கள்./

        பார்பனியத்தை எதிர்க்கும் நோக்கம் சரி என்றாலும், சூடு சுரணையுள்ள மற்ற சூத்திரனெல்லாம் என்ன செய்றாங்க? அவர்களெல்லாம் திராவிட/தேசிய கட்சிகளின் பார்பனிய சிந்தனைக்கு தானே இன்னமும் அடிமையாக இருக்கின்றார்கள். அதை முதலில் சூடு சொரணையோடு உதறி தள்ளி வெளிய வரச்சொல்லுங்கள். காரணம் என்னவெனில், கஷ்டப்பட்டவன் தான் முதலில் எழணும். அப்போது, பார்பனியத்தை எதிர்க்கும் போது எந்த தேவனும் இது தவறென யாரிடமும் மல்லுக்கட்ட போவதில்லை. முதலில் உடைமைப்பட்டவன் முழுவதாக களத்திற்கு வரட்டும், அதன்பிற்கு தேவன் கிட்ட நீங்க வரலாம்.

        /தேவனுங்களுக்கு தான் சூடு சொரணை இல்லையே, ‘போலி’ பெருமை தானே இருக்கு! அதனால தான் வெக்கங்கெட்ட தனமா, இன்னும் தேவன்னு சொல்லிகிட்டு திமிரோட திரியறீங்க. சாதி அமைப்பை, காட்டுமிராண்டித்தனத்தை பெருமையா பேசி திரியறீங்க./

        இதெல்லாம் உசுப்பேத்தும் வார்த்தைகள். இதை எந்த தேவன் முன்னாடி நேரடியாக சொல்லிப்பாருங்கள், அப்போது தெரியும் அவனின் சூடு சொரணை வீரம் திமிரெல்லாம்! 🙂 இங்கே சொல்வதில் பலனொன்றுமில்லை. 🙂

        /எது உண்மையான வீரம், உண்மையான பெருமை, உண்மையான திமிர்?
        பெரும்பான்மை எண்ணிக்கையை காட்டி ஆயிரம் வருசமா இருக்குற பிற்போக்கு தனத்தை கூட்டத்துடன் கூட்டமாக பின்பற்றுவது, கட்டி காப்பது வீரமில்லை./

        இங்கே பிற்போக்கு தனம் என்பது எதை சொல்கிறீர்? ஆதித்தமிழனினத்தின் பல விசயங்கள் மாற்றானுக்கு பிற்போக்காகத்தான் தெரிகிறது. அதற்காக கட்டமைப்பு, பண்பாடு, கலாச்சாரத்தை வெகு எளிதாக விட்டுவிட முடியாது. இது தான் நம் பாரம்பரியம். அது எந்த சாதி படிநிலையில் இருந்தாலும் சரி. எல்லா பிற்போக்கு தனத்தையுமு முற்று முழுதாக கை கழுவ முடியாது.

        /சிறுபான்மையாகவோ தன்னந்தனியாகவோ இருந்தாலும், பிற்போக்கு தனத்தை தகர்த்தெறிய போராடுவது தான் உண்மையான வீரம், உண்மையான பெருமை, உண்மையான திமிர். அது தேவன்னு சொல்லிக்கிற, குறிப்பிட்ட சாதிய சேர்ந்தவன்னு சொல்லிக்கிற ஒருத்தனுக்கும் இல்லை என்பது தான் உண்மை./

        தெளிவாகவே சொல்லியாச்சு. தேவனுக்கு என்ன இருக்கு? என்ன இல்லை? என்பதை குப்பனும், ரங்கனும் சொல்லி தெரிய வேண்டியதில்லை, கடந்த கால வரலாறு சொல்லும் தேவனின் வீரத்தை. அது பூலித்தேவன், மருதுபாண்டியர்கள், ஜாம்பனோடை சிவராமன், வாட்டக்குடி இரணியன்… என பல ஆதாரங்கள் இங்கே உண்டு.

        /இவரு ‘போலி’ பத்தியெல்லாம் பேச வந்துட்டாரு!

        எதை எதை யார் பேசணும்ன்னு எதாவது சட்டத்திட்டம் இருக்கா?ன்ன்னு தெளிவா சொல்லிடுங்க. அதன்படி இனி பேசிடலாம். 🙂

        • வீரத்திற்கு வெறிக்கும் வித்தியாசம் தெரியாம கூவுறாரு சாதிவெறியன் இமாலாதித்தன்.

          உழைத்து வாழ்கிற இந்த சமூக மக்கள் கிட்ட “நீ ஆண்ட பரம்பரை” “வீரம் செறிந்த பரம்பரைன்னு” பேசுவதெல்லாம் பார்ப்பனியத்திற்கும் கால் கழுவிவிடுகிற வேலைதான்.

          எது வீரம்ன்னு சொல்றதுக்கு ஒரு எடுத்துக்காட்டு வைப்போம். தேசியமும் தெய்வீகமும் எனது இருகண்கள் என்று சொன்ன சாதிவெறியன் முத்துராமலிங்கம் சென்ற இடமெல்லாம் இரத்தக்கவுச்சியாக இருந்தது. இந்த சாதிவெறியை அம்பலப்படுத்தே அதே சமூகத்தைச் சேர்ந்த தினகரன் “முதுகளத்தூர் கலவரம்” என்று அன்றைய தேதிக்கு உயிரை மயிராக மதித்து தேவர் சாதி வெறியன்களுக்கு மத்தியில் அம்பலப்படுத்தினார். தன் சொந்தசாதிவெறியை அம்பலப்படுத்த முன்வந்த தினகரன் தான் உண்மையான வீரன். அவன் தான் மக்கள்திரளின் கதாநாயகன். இதற்கு மாறாக இன்றைக்கு தாத்த பேரிலே தேவன் இருக்குது அப்பன் பேருல தேவன் இருக்குது சொல்ற கூட்டம் எல்லாம் கோழைகள் மட்டுமல்ல அதே சமூக மக்களை சாதிவெறியை தூண்டி விட்டு குளிர்காயும் கூட்டம்.

          இன்றைக்கு மழைதண்ணி இல்லாம, இராமநாதபுரம் மாவட்டங்களில் இருக்க இந்த சமூகத்து மக்கள் கட்டிட வேலைபார்க்கிற பொழுது, இதுலேயே இன்னொரு கூட்டம் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து என்று பல குடும்பங்களை அழித்துவருகிறது. சொந்த சாதின்னு பேசுறவன் பத்து காசுவட்டிக்கு வட்டி கட்டாம போனா உன் வீட்டு பொண்ண கூட்டிவிடுன்னு சொல்றப்ப எங்க போச்சு மானம் மரியாதையெல்லாம்?

          இதே சமூகத்து மக்கள் கிட்ட சேதுராமன் மீனாட்சி மிசின் மருத்துவமனை என்ற பெயரில் செத்த பொணத்துக்கு கூட வைத்தியம் என்ற பெயரில் கொள்ளையடிக்கிறான். தன் சாதிக்காரன் தான் என்ற பெயரில் ஒரு அஞ்சு பத்து குறைப்பாரா இந்த மலைமுழுங்கி மகாதேவன்? இதைவிட இதே சாதி மக்களைதான் பன்னாட்டு கம்பெனிகளின் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு வயக்காட்டு எலிகளாக பயன்படுத்துறான் இந்த சாதிவெறியன். அப்ப எங்க போச்சு தேவர் சாதி வீரம்?

          உண்மையில் இந்த சமூகத்து மக்களுக்கு உண்மையான எதிரிகளே “நாமெல்லாம் தேவண்டான்னு” பேசுற சாதி வெறியங்க தான்.

          • //கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து என்று பல குடும்பங்களை அழித்துவருகிறது. சொந்த சாதின்னு பேசுறவன் பத்து காசுவட்டிக்கு வட்டி கட்டாம போனா உன் வீட்டு பொண்ண கூட்டிவிடுன்னு சொல்றப்ப எங்க போச்சு மானம் மரியாதையெல்லாம்?//
            தோழர் தென்றல் ஏன் கந்து வட்டியுடன் நிறுத்தி விட்டீர் கஞ்சா விப்பது,சாரயம் விப்பது,புறம்போக்கு நிலத்தை ஆட்டய போடுரது அரசியல்வாதிக்கு மாமா வேலை பார்ப்பது இதையெல்லாம் யார் செய்வது என்று ஆராய்ந்து பார்த்தால் இந்த சாதிக்காரர்களுக்கு கோவனம் கூட இல்லாமல் அம்மானமாக அல்லவா நிற்க்கும் இதில் மானம் ,வீரம் ,ஆண்டபரம்பரை …கிகீகிகீ சிரிப்புதான் வருகிறது…

          • தென்றல் என்ற முகமூடிக்கு,

            பார்ப்பனியத்துக்கு கால் கழுவி விடுமகிற வேலையை பற்றியெல்லாம் எனக்கு தெரியவில்லை. ஆனால், கால் கழுவும் வேலைக்கு போட்டியாக வந்து விடுவார்களோ என்று சிலர் எண்ணக்கூடும். அதைப்பற்றியெல்லாம் தரம் தாழ்ந்து விமர்சிக்க விரும்பவில்லை. ஸ்ரீ பசும்பொன் தேவர் சென்ற இடமெல்லாம் இரத்த கசிவு இருந்தது என்பதற்கான ஆதாரம் ஏதுமுள்ளதா? அப்படியே இருக்குமானால் அந்த நிகழ்வுக்கு ஸ்ரீ பசும்பொன் தேவர் தான் காரணம் என்பதற்கான ஆதாரம் இருக்கா? காமராஜரின் கைக்கூலியாக பணத்திற்காக மாரடித்த தினகரனின் எழுத்தால் காமராஜரின் அவரது சகாக்களும் மகிழ்ச்சியுற்றுருக்கலாமே தவிர, மற்ற யாருக்கும் இதில் எந்தவித அதிர்வும் இல்லை. மேலும், தினகரனின் கட்டுக்கதைகள் முழுக்க முழுக்க அரசியல் லாபத்திற்காகவும், ஸ்ரீ பசும்பொன் தேவரின் மக்கள் செல்வாக்கை தகர்க்கவும் தான் உருவாக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

          • / தாத்த பேரிலே தேவன் இருக்குது அப்பன் பேருல தேவன் இருக்குது சொல்ற கூட்டம் எல்லாம் கோழைகள் மட்டுமல்ல அதே சமூக மக்களை சாதிவெறியை தூண்டி விட்டு குளிர்காயும் கூட்டம்./

            இதற்கெல்லாம் நாகரீகமான முறையில் பதில் சொல்ல முடியும். இல்லையெனில், உங்களது பாணியிலும் பதில் சொல்ல முடியும். ஆனால் அது வேண்டாமென்று நினைக்கிறேன். என் அப்பன் தாத்த்ன் பாட்டன் பேருக்கு பின்னாடி தேவன் என்ற பட்ட பேரை பெருமையாகவும்/கெளரவமாகவும் போட்டுக்கொண்டனர். உமக்கும் அது போல பெருமையான பட்டப்பெயர் ஒருவேளை இருந்தால் நீரும் போட்டுக்கொள்ளலாம். அதை விட்டுவிட்டு என் தாத்தன் கோமணம் தான் கட்டிக்கிட்டாரு. நீ ஏன் பேண்ட் சர்ட் போடுறன்னு கேட்குற மாதிரி இருக்கு. உன் வழி உனக்கு; என் வழி எனக்கு. இதுல கண்டவனெல்லாம் நொட்டை சொல்றதுக்கெல்லாம் எல்லாத்தையும் மாத்திக்க முடியாது. இது கோழையா வீரனா என்பதையெல்லாம் நேரடியாக களத்தில் வந்து சொல்லி பார்த்து முடிவு செய்து கொள்ளவும்.

            • கோழையா வீரனா என்பதை நேரில் வந்து பார்த்துக்கொள்ளவும் என்று சவடால் விடாதப்பா!
              தேவர் சாதிவெறி என்பதை வாழ்வில் அந்த மக்களோடு சுமார் பத்துக்கும் மேற்பட்ட வருடங்கள் வாழ்ந்து அனுபவதித்திருக்கிறோம். நீர் சொல்வதைப் போல கம்பு கத்தி என்று அந்த சாதி வெறியர்கள் வந்தது என்பது உண்மை தான். ஏனெனில் கந்து வட்டி வாங்கி, கட்ட முடியாத குடும்பங்களில் எனது குடும்பமும் ஒன்று தான். ஆனால் அதே சமயம் கந்துவட்டி கும்பலால் பாதிக்கப்பட்ட அதே சமூக மக்கள் எங்களுக்கு ஆதரவாகவும் இருந்திருக்கின்றனர். அதுதான் நாங்கள் கோருகிற வர்க்கப்பார்வை.

              தேவன விமர்சனம் பண்ணா தேவனெல்லாம் வருவாய்ங்க. சரி. தேவன் தேவனைய கொள்ளையடிச்சா யாரு வர்றாய்ங்க? சூடு சொரணை இருந்தா இதற்கு பதில் சொல்லும் சாதிவெறியனே! சேதுராமன் கொள்ளையிலிருந்து கந்துவட்டி கட்டப் பஞ்சாயத்து வரை அதே சமூகத்து மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களே? அதற்கென்ன பதில்? உம்மால் சொல்ல முடியாது. ஏனெனில் தேவன்-சாதி பெருமை பேசுகிறவன் எல்லாம் பொறுக்கித் தின்னும் கூட்டம். இதில் ரவுடி முருகன்ஜீயில் ஆரம்பித்து சேதுராமன் வரை அயோக்கிப் பித்தலாட்ட கும்பல் சிங்கம் சிறுத்தை என்று அலைந்துகொண்டிருக்கிறது. இந்த அசிங்கத்த எத்தனைதடவ நேர்ல பாக்கிறது?

              அப்புறம் ஒரு சந்தேகம். என்ன எதுக்குப்பா முகமூடின்னு சொல்ற? வினவு சர்வரில் நம்ம மெயில் ஐடி, எங்கு உட்கார்ந்து பின்னூட்டம் போடுறோம்? நம்ம முழு வரலாறு என்ன என்பது ஆளும் வர்க்கத்திற்கும் பொறுக்கித்தின்னும் போலீசு உளவாளிகளுக்கும் நல்லாவே தெரியும்பா! இதுல பேர் போட்டாலும் சரி பேர் போடலைன்னாலும் சரி ஆளும் வர்க்கத்தை ஆதரிக்கிறவன் கூட்டாளி; அதை எதிர்க்கிறவன் எதிராளி. இணையத்துல இதுதாம்பா கணக்கு. இதுல உம்மைப்போன்ற ஆட்களுக்கு முகமூடி தேவையில்லைங்கிறது ஒத்துக்கொள்ள வேண்டிய விசயம் தான். ஏனெனில் சாதிவெறியனுக்கு மானம் ரோசமே இல்லைங்கிறப்ப முகமூடி ஒரு கேடா? அம்மணமா அலைவதற்கு பேரு வெளிப்படையா இருந்தா என்ன? இல்லாட்டி என்ன?

              முத்துராமலிங்கத்தை மறவர்குல மாணிக்கம்ன்னு சொல்வாய்ங்க சினிமா கோமாளிகள். சாதிவெறியன் முத்துராமலிங்கத்துக்கு இந்த முகமூடி எதுக்குப்பா? மறவர் சமூகமே இராம்நாட்டில் சீமைக்கருவேலையை மூட்டம் போட்டு கரிக்கொட்டையை வித்து வாழ்க்கையை ஓட்டுது. இதுல மாணிக்கம் மரகதமுன்னு சாதிவெறியனை அழைத்தால் அதுதானப்பா முகமூடி?

            • தாத்தனும் அப்பனும் பேருக்குப் பின்னாடி தேவன் என்கிற பெயரை பெருமைக்கும் கவுரத்துக்கும் போட்டுக்கொண்டனர் என்று சொல்வதற்கு கிஞ்சத்திம் வெட்கப்படவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். என்ன கவுரவம்? என்ன பெருமைன்னு? வந்த சனங்களுக்கு எல்லாம் எடுத்துவிட வேண்டியதுதானே?

              பார்ப்பனியத்தின் நுகத்தடியில் சீரழிந்த சமூகத்தில் இதுவும் ஒன்னு. வெள்ளைக்காரன் காலத்தில இருந்த அதிகாரிங்க எல்லாம் பார்ப்பானுக தான். அவங்க மேற்பார்வையில தான் கைரேகைச் சட்டம், ராத்திரிச் சீட்டு, குற்றபரம்பரை சாதிகள் என்று காவல் நிலையத்தில் அகதியாக வாழ்ந்தது என்று பல கொடுமையச் சுட்டிக் காட்டலாம். பார்ப்பனியத்திற்கு அடிமையாக கசக்கிப்பிழியப்பட்ட சமூகத்திற்கு தேவன் என்று சொல்வதால் என்ன பெருமை மயிர் இருக்க முடியும்?

              உண்மையில் தேவன் என்கிற பட்டம் தனக்கு கீழ உள்ள சாதியை கொடுமைப்படுத்ததான் இருக்கு. பள்ளர்களும் குறவர்களும் குற்றப்பரம்பரை சாதியில் இருந்தபொழுது அவர்களையும் சேர்ந்துகொண்ட போராட முடியாத அளவிற்கு சாதிவெறியில் கோலோச்சத்தான் சாதிய பட்டங்கள் பயன்பட்டது. பார்ப்பனியத்தை எதிர்க்க துப்பில்லாம அதே பார்ப்பனியத்தை வாழ வைக்கத்தான் தேவன்கிற பட்டம். மேயற மாட்டை நக்கற மாட்டைப் பத்துச்சுன்ற கதையாக உழைத்து வாழ்கிற மக்களை தேவர்சாதிவெறிக்குள் தள்ளியதைத் தவிர தேவன் என்கிற பட்டம் என்ன செய்தது? சொல்லுமையா!

              உன் வழி உனக்கு; என் வழி எனக்கு என்று சவடால் வேறு! சாதிவெறியன்களுக்கு என்ன வழி தெரியும்? சிறுமணியேந்தல் பகுதியில் வாழ்கிற இதே சமூத்து மக்கள் இன்றைக்கு கொல்கொத்தாவிற்கு இட்லி விற்கப்போயிருக்கிறார்கள். சொந்த கிராமத்திலோ தேவர் சாதிவெறியர்கள் தூண்டிவிடுகிற சாதிச் சண்டை! வெள்ளாமை கிடையாது. முக்குலத்தோர் பேரவைன்னு சொல்ற அயோக்கிய கூட்டம் எல்லாம் இன்றைக்கு ஆர் எஸ் எஸ்ஸோடு, வன்னிய சாதிவெறியோடு ஆட்டம் போடுகிறது. நாளொருமேனியும் பொழுதொருவண்ணமும் வெறிப்பேச்சும் சாதியத் தீண்டாமையும் என்று இந்த பிழைப்புவாதிகளுக்கு பொழுது போய்கொண்டிருக்கிறது. ஆனால் மறுபுறமோ இதே சமூகத்து மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக இடம்பெயர்ந்திருக்கின்றனர். இதைத்தான் உன் வழி உனக்கு; என் வழி எனக்கு என்று புரிந்துகொள்ள முடியும்!

              தேவர் சாதிவெறிபேசுறவன் எல்லாம் இப்படி பொறுக்கித் திங்கும்பொழுது உள்நாட்டில் அகதியா போனாலும் பரவாயில்லை என்று நினைக்கிற இதே சமூகத்து மக்கள் உழைத்து வாழ்கிற பொழுது அவர்கள் சீந்திப் போட்ட மூக்குச் சளிக்கு ஒப்பாக மாட்டார்கள் இமலாதித்தன் மற்றும் முருகன்ஜி போன்ற தேவர் சாதிவெறியன்கள்.

        • சூத்திரன் என்றால் தாழ்மையென்று நினைத்து இல்லை என்கிறார் இமாலாதித்தன். நான் சார்ந்த சமூகம் உட்பட சூத்திரன் என்றால் தேவடியாள்களின் மகன் என்பதுதான் பார்ப்பனியத்தின் வரையறை. இதை தாழ்மையென்று நினைக்காத இமாலதித்தன் மானம் மரியாதை பற்றி பேசுவது பார்ப்பனியத்திற்கு தரகுவேலை பார்ப்பதன்றி வேறல்ல.

          உண்மையில் முத்துராமலிங்கமும் இதைத்தான் செய்தார். பார்ப்பனியம் என்றால் அங்கே ஒரு ஜெயந்திரேன் இருக்கவேண்டும் என்பதில்லை. முத்துராமலிங்கமே போதுமானது. பெரியார் இந்துச் சட்டத்தை எதிர்த்த பொழுது முத்துராமலிங்கம் அதைப் பற்றி வாயே திறக்கவில்லை. தெய்வீகம் என்ற பெயரில் இவரும் சனாதன பார்ப்பனியத்திற்கு தரகுவேலை பார்த்தவர்தான். இது யோக்கியமான செயலா? சூத்திரன் என்பது இழிவானது இல்லையா? என்று அந்த சமூக மக்களையே கேட்டுப்பார்ப்போம்.

          பார்ப்பான் வடகலை தென்கலை என்று திரிகிற பொழுது, இனக்குழுச் சமூகம் வீரமங்கிளை, வெட்டுமங்கிளை, நாட்டுச்சங்கிளை என்று கிளை வைத்து தேவர் சாதிக்குள்ளேயே பிரித்தாள்கிறது.

          இதைவிட செத்தபிணத்திற்கு சீதேவி சுத்துகிற தேவர் சாதிமக்கள் படிகளில் நெல்லைக் குவித்து வெற்றிலை சொருகி பூணுல் அணிந்து பிணத்தைச் சுற்றிவருவார்கள். ஒரு சூத்திரனுக்கு இறுதிச் சடங்கு செய்கிற உரிமையே இல்லை என்பதால் தான் தேவனாக இருந்தாலும் சரி கள்ளனாக இருந்தாலும் சரி பூணுலைச் சுற்றிக்கொண்டு சீதேவி எடுக்கிறான். இதுதான் பார்ப்பனிய அடிமைத்தனம். நாங்கள் ஆண்ட பரம்பரை என்று கூவுகிற சாதி வெறியன்கள் நேர்மையிருந்தால் இந்த அடிமைத்தனத்திற்கு பதில் சொல்லட்டும். இதில் மற்ற சாதிகள் சூடு சொரணை இருந்தால் பார்ப்பனியத்தை உதறித்தள்ள முன்வரவேண்டும் என்கிறார் இமாலாதித்தன். தேவன் எப்படி சூத்திரன் ஆனான் என்ற சாதிப்பெருமை வேறு! இது கடைந்தெடுத்த அடிமைத்தனமா? இல்லை அயோக்கித்தனமா?

        • இமலா

          \\எனக்கிந்த சூத்திரன் என்பது தாழ்மையென்று நினைத்தது இல்லை//

          அப்டின்னா உங்க பொது அறிவு எவ்வளவு விசாலமானது.நீங்க இப்படி இருக்குறதுதா பார்ப்பனர்களுக்கு புடிக்கும்.

          \\எங்களுக்கு இந்த பெருமை பற்றியெல்லாம் கவலையில்லை. ஆனால் மானம் பெரிதென வாழும் கூட்டம் இது.//

          மானத்த பத்தி நீங்க , உங்க சாதிக்காரங்க பேசலாமா.பழைய கதைய உடுங்க.இன்னிக்கி நிலவரத்த பேசுவோம்.உங்க சாதிக்காரவுக அம்புட்டு பேரும் சொல்லி வச்ச மாதிரி அண்ணா தி.மு.க.வுக்குத்தான் வோட்டு போடுறீங்க.அம்மாவுக்கு அல்லக்கை சசிகலா அவுக சாதியாம்.எடுபுடி வேலை பாக்குறதுல உங்க ளுக்கு என்ன பீத்த பெருமை வேண்டிக் கிடக்கு.அந்த ஜெயலலிதா உங்க ஊர்ப்பக்கம் வந்தா தேவர் சாதின்னு கடா மீசை வச்சிருக்குற மந்திரி தடிமாடுங்கல்லாம் தடார் தடார்ன்னு கால்ல உளுவுரானுங்க.அதுவும் பத்தடி தூரத்துல அந்த அம்மா வரப்பொவே இங்க உழுந்து கெடக்குறாய்ங்க.இப்படி மானங்கெட்ட ஜென்மங்களை எங்காளு அமைச்சருல என்று வெட்டிப்பெருமை பேசிக்கிட்டு திரியிறீங்க.

          \\பார்பனியத்தை எதிர்க்கும் நோக்கம் சரி என்றாலும், சூடு சுரணையுள்ள மற்ற சூத்திரனெல்லாம் என்ன செய்றாங்க? //

          ஒப்புக்கு பார்பனியத்தை எதிர்க்கும் நோக்கம் சரி ன்னு சொல்றீங்க.தலித் மக்களை ஒடுக்குவதில் மத்த இடைநிலை சாதிகளை விட தேவர் சாதிதான் பார்ப்பானின் முன்னணி அடியாள் படையாக செயல்படுகிறது.இதை மறுக்க முடியுமா உங்களால்.அதனால்தான் அம்மக்களின் எதிர்த்தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழப்பதும் தேவர் சாதியினராக இருக்கிறார்கள்.

        • //வீரம் செறிந்த கூட்டம் காலம் காலமாக சாவை கண்டு அஞ்சியதில்லை என்பது கடந்தகால வரலாறு. ஆனால், அதற்காக பார்பான் எங்களை விட மேல் என நினைத்து கால் பிடித்ததில்லை. பார்பனர்கள் ஒட்டுமொத்தமாகவே புறக்கணிக்கபட வேண்டியவர்களே.// கிகீகிகீ இந்த வீரம் செரிந்த கூட்டத்தை சேர்ந்தவர்தான் ஓ பன்னீர்செல்வம் ஜெயாவில் காலில் மட்டும் அல்ல அவரின் கார் டயரில் விழுந்து வணங்கும் ஒப்பற்ற வீரன் இதுதான் உங்களின் வீரத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆண்ட பரம்பரை எப்படி ஆண்டிருக்கும் என்பதற்க்கு இன்றய முதல்வர் சிறந்த உதாரனம் உண்மையில் நீங்கள் மானம் காக்கும் பரம்பரை என்றால் ஒ பன்னிர்செல்வத்தை அல்லவா கவுரவக் கொலை செய்து இருக்க வேண்டும் எதற்க்கு அப்பாவி காதலர்களை கொல்ல வேண்டும் மேலும் இதற்க்கு முன்பும் இப்படித்தான் ஆண்ட பரம்பரையாக இருந்துஇருப்பார்களோ ,______________ உயர்த்தி பேச உங்களுக்கே கூச்சமாக இல்லையா ….

        • இமலாதித்தன்,

          ஆக, காட்டுமிராண்டித்தனம் தான் உங்க கலாச்சாரம், பண்பாடு அதை கைவிட முடியாதுன்னு சொல்றீங்க..

          சாதி இழிவை, ஒடுக்குமுறையை எதிர்த்து போராடுவதற்கு இந்த வீரர்கள் கடைசியாத்தான் வருவாங்கலாம், முதல்ல வரமாட்டாங்கலாம், அதுவரைக்கும் இவங்களும் தங்கள் பங்குக்கு நாலு சாதியை ஒடுக்கிகிட்டு தான் இருப்பாங்கலாம், ஏன்னா அது தான் வீரமாம்.

          சாதி இழிவை விட்டு வெளியே வர முயற்சிப்பவர்களுக்கு அருவாளைக் கொண்டு பதில் சொல்லும் வெறியர்கள், கஷ்ட்டபடுபவர்களை முதலில் வெளிவரச் சொல்லுவது நல்ல வேடிக்கை.

          நீட்டி முழக்கி நான் சொன்னதையே எனக்கு திருப்பி சொல்லிவிட்டு பதில் சொன்னதாக பெருமை வேறயா?

          //இதை எந்த தேவன் முன்னாடி நேரடியாக சொல்லிப்பாருங்கள், அப்போது தெரியும் அவனின் சூடு சொரணை வீரம் திமிரெல்லாம்!//

          //எனக்கிந்த சூத்திரன் என்பது தாழ்மையென்று நினைத்தது இல்லை. //

          தேவடியா மகன் என்று இழிவுபடுத்தும் சூத்திரன் என்பது உங்களுக்கு, உங்களைப் போல சாதி வெறியர்களுக்கு தாழ்மையாக இல்லாமல் இருக்கலாம், அது ஏன் என்று நீங்கள் தான் விளக்க வேண்டும்.

          ஆனால், மானமுள்ள எவருக்குமே, உங்களால் சாதி வெறி தூண்டிவிடப்படும் தேவர் சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கே கூட அது வேறு மாதிரியாகத்தான் இருக்கும்.

          சூத்திரன் என்பதற்கு தவறான உறவில் பிறந்தவன் என்பது தான் பொருள், அது தான் நாம் என்று எந்த உழைக்கும் மக்களிடம்மாவது (அது தேவர் சாதியைச் சேர்ந்தவர்களே என்றாலும்), சொல்லிப்பாருங்கள், அப்போது தெரியும் எது உண்மையான வீரம் தீரம் என்று.

          பார்ப்பனியம் அழிக்கப்பட வேண்டியது தான்னு சொல்லும் உங்களுடைய தலைவர், குல தெய்வம் அப்படி சொல்லவில்லையே? முத்துராமலிங்கம் பார்பனியத்தை விமர்சித்து எதாவது சொல்லியிருக்குறாரா? அப்படி சொல்லலைன்னா முதல்ல அவர தான நீங்க தூக்கியெறியனும்?

          ‘ஆயிரம் வருசமா’ சொன்னதையே திரும்ப சொல்லி அது தான் பதில்ன்னு சொல்லாதீங்க இமலாதித்தன்.

    • அன்பு அண்ணன் இமலாதித்தன் தொட்டி மீன்களை பற்றி தெரியுமா உங்களுக்கு 4 அடி நீளம் 2 அடி அகலம் கொண்ட தொட்டியில் வளர்ந்த மீன் 4 அடி நீந்தி போனா அதன் மூக்கு இடிக்கும் திரும்பி நாலு அடி நீந்தி வந்தா கண்ணாடி சுவரில் அதன் மூக்கு மீண்டும் இடிக்கும் இப்படியே பழகி போன மீனை ஆற்றிலோ கடலிலொ விட்டால் கூட அது அந்த நாலு அடிக்குள் தான் நீந்துமாம் அது போலத்தான் பேசிகிறீர்கள் பார்ப்பனியம் ஒவ்வொரு சாதியையும் தனித் தீவுகளாக மாற்றி விட்டது ஒவ்வொறு சாதியும் தொட்டில் மீனகளைப்போல வாழ்கிறார்கள் தனது சாதி படி நிலையை விட்டு வெளியேற விடாமல் மூக்கு இடிப்பதாக அவர்களை கோவம் கொள்ள செய்கிறது இது நீங்கள் கோவம் கொண்டு சுட்டிக்காட்டும் தேவேந்திர குலம் என்னும் பள்ளர்களுக்கும் தேவர் சாதியினருக்கும் மற்றுமுள்ள எல்லா சாதியினருக்கும் பொருந்தும் ஆனால் உலகம் பெரிது அதை விட சூரிய குடும்பமும் பால்வீதியும் பெரிது என்பதை மறந்து வெரும் சாதி பெருமைகளுக்காக சண்டை இடுவது ம்ட்டும் அல்லாமல் ஒரு சாதிக்காரன் முன்னேறுவதை மற்றொரு சாதிக்காரன் தடுக்க விளைகிறான் இதானால் நமது தேசத்தின் முன்னேறமே பாதிக்கப்பட்டு பழம் பெருமை வாய்ந்த இந்தியா இன்னும் ஏழை நாடாக அமெரிக்காவிடம் கையேந்திக்கொண்டு இருக்கிறது இங்கு இருக்கும் திறமையாளர்களை சாதி பார்க்கமல் மதிக்க தனிமனிதனின் சாதி பெருமை இடம் கொடுக்கவில்லை இன்னும் எத்துனை காலத்திற்க்குதான் வெரும் சாதி பெருமை பேசி வாழ போகிறீர்கள் சினிமாவில மட்டும் இல்லாமல் அனைத்து இடங்களிளும் வெட்டி சாதி பெருமை பேசி என்ன கண்டீர்கள் சொறங்கு இருப்பவன் சொறிவதால் ஏற்ப்படும் அல்ப சுகத்தை தவிர எனவே எல்லோரயும் சமமாக மதித்து பழகி எல்லோரும் சகோதரர்கள் என்று எண்ணி ஒருவரை ஒருவர் தாழ்த்தி பேசாமல் வாழ்ந்தால் நாமும் மற்ற நாட்டினரைப்போல முன்னேறலாம் ….

      • திரு ஜோசப்,

        எனக்கு இந்த தொட்டி மீன்களை பற்றியும் தெரியும். கூடவே விலாங்கு மீன்களை பற்றியும் தெரியும். ஏனெனில் தொட்டி மீனாவது பழமைவாதி போல கிணற்று தவளையாக இருந்துவிடும். ஆனால் இந்த விலாங்கு மீன் என்பது, மீனுக்கு முகத்தையும் – பாம்புக்கு வாலையும் காட்டி உயிர்பிழைக்கும். அது போலத்தான் இங்கே பல சாதி ஒழிப்பு போராளிகள் இருக்கின்றனர். வெளியில் தலித்/ சிறுபான்மை/ சாதி ஒழிப்பு/ ஆதிக்க சாதிவெறி யென பேசி விட்டு, சாதிய அடிப்படையில் கிடைக்கும் சலுகைக்கு பின்வாசலை ஏறுவர்.

        /நீங்கள் கோவம் கொண்டு சுட்டிக்காட்டும் தேவேந்திர குலம் என்னும் பள்ளர்களுக்கும் தேவர் சாதியினருக்கும் மற்றுமுள்ள எல்லா சாதியினருக்கும் பொருந்தும்/

        சின்ன திருத்தம். கோபமெல்ல்லாம் எனக்கு யார் மீதுமில்லை. உதாரணத்திற்காக தான் சொன்னேன். சாணார் நாடாரானதும், சின்ன மேளம் – இசை வேளாளர் ஆனதும் என பல உதாரணங்கள் இங்கே உண்டு.

        /உலகம் பெரிது அதை விட சூரிய குடும்பமும் பால்வீதியும் பெரிது என்பதை மறந்து வெரும் சாதி பெருமைகளுக்காக சண்டை இடுவது ம்ட்டும் அல்லாமல் ஒரு சாதிக்காரன் முன்னேறுவதை மற்றொரு சாதிக்காரன் தடுக்க விளைகிறான் இதானால் நமது தேசத்தின் முன்னேறமே பாதிக்கப்பட்டு பழம் பெருமை வாய்ந்த இந்தியா இன்னும் ஏழை நாடாக அமெரிக்காவிடம் கையேந்திக்கொண்டு இருக்கிறது/

        நானும் இந்த கருத்தோடு தான் இருக்கின்றேன். என்க்கு இதில் எந்த மாற்று கருத்துமில்லை. ஆனால் நீங்களாகவே ஓர் அளவீடை என் மீது திணிக்கின்றீர்கள். இங்கே என் என்பது தேவர் என்ற சாதிய பின்புலத்தை தான் குறிக்கின்றது. ஆனால் எதார்த்ததில் இந்த மாற்றம் இப்போது அரங்கேறி வருகின்றது. காலம் செல்ல செல்ல எல்லாம் மாறும் என நம்புகிறேன்.

        மற்றப்படி சிரங்கை ஆறவிடாமலே இருக்க வைப்பதற்க்காக சில போலி வைத்தியர்கள் இங்கே பல ஆண்டுகளை தமிழர்களிடையே ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றனர் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். அதை புரிந்தால், இந்த சிரங்கு சுகம் யார் தருவது என்பதை உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.

        • இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் தேவன் என்ற சாதிய அடையாளத்துக்குள் உங்களை குறுக்கிகொள்கிறீர்கள் எனது பாட்டன் சொன்னான் அதனால் எனது சாதியை பாதுகாத்து கொள்கிறேன் என்கிறீர்களே இது ஏன் எனக்கு தெரிந்த வரையில் எத்துனையோ நண்பர்களிடம் பழகி இருக்கிறேன் பிராமனர் உட்பட யாரும் நீ என்ன சாதி என்று கேட்டு தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியது கிடயாது உங்களின் தேவர் சாதி நண்பர்கலைத்தவிர ஏன் இந்த பாகுபாடு ,நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ சாதிய பாகுபாடுகளை வளர்க்கவே முனைகிறீர் அதை எதிர்க்க வில்லை இங்கு சாதிய பாகுபாடுகளை எதிற்ப்பதாக சொல்லிக்கொண்டு ஏமாற்றும் பொது உடமை வாதிகளுக்கும் உமக்கும் என்ன வேறுபாடு அவ்ர்கள் சாதியை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டு சாதியை சொல்லி சலுகை பெருகிறார்கள் அதனால் நானும் தேவன் என்று பெருமை பேசி சாதியை நிலை நிருத்த விரும்பிகிறென் என்கிறீர் சரிதான் தேவர் சாதியினர்ருக்கும் மிகவும் பிற்ப்படுத்தப்பட்டவர் சீர் மரபினர் என்று சலுகை வழங்குகிறார்களே அதை வேண்டாம் என்று அல்லாவா நீங்கள் சொல்ல வேண்டும் ,அல்லது அதை ஏற்றுக்கொண்டேன் என்றால் நீங்கள் பிற்ப்பட்ட சாதியை விடவும் கீழானவர்கள் பிராமனர்களை விடவும் கீழானவர்கள் என்று ஒப்புகொண்ட்வர்களாக ஆகி விடுகிறீர்கள் அல்லவா எனவே தேவன் என்ற சாதி பெருமை அவசியமா இல்லை அர்த்தமற்றதா என்பதை யோசிக்கவும் அன்புடன் கேட்டுக்கொளூகிறேன்…

        • //சின்ன திருத்தம். கோபமெல்ல்லாம் எனக்கு யார் மீதுமில்லை. உதாரணத்திற்காக தான் சொன்னேன். சாணார் நாடாரானதும், சின்ன மேளம் – இசை வேளாளர் ஆனதும் என பல உதாரணங்கள் இங்கே உண்டு.//

          நிலபிரபுத்துவ சமுகத்தில் தலித் மக்கள் ,சாணார் மக்கள் போன்ற அடிமை சாதிகள் ஆண்டானுக்கு சேவை செய்தது, விவசாய அடிமைகளாக , ஆயுதங்களை கூர் செய்வது போன்ற தொழில் செய்தது உண்மை தான். ஆனால் இன்று அவர்கள் படிப்பறிவிலும் ,பொருளாதாரத்திலும் முன்னேறி சமுகத்தில் தன்னை நிலை நிறுத்தியதும் உணமைதான்.

          ஆனால் நிலபிரபுத்துவ சமுகத்தில் குற்ற தொழில் ,திருட்டி பிழைத்தசாதிகளை போல இன்றும் அவர்கள் பழம் பெருமை பேசித்திரிவது இல்லை என்ற உண்மை உமக்கு தெரியாமைக்காக வருந்துவது தவிர வேறு என்ன செய்ய முடியும் ! உமது பின்னுட்டங்கள் ,சாதிய வக்கிரமாகாவும் , வெறித்தனமாகவும் உள்ளன இரா.ச.இமலாதித்தன்!

    • பேசுங்க இரா.ச.இமலாதித்தன்…, நல்லா பேசுங்க சார் ! அப்ப தானே உங்க மனசுல இருக்கும் சாதி வெறி வக்கிரம் எல்லாம் வெளியே வரும்! உங்க மனசும் ரிலாக்ஸ் ஆக்கும் ! ஆமாம் அப்படியே உங்க சாதிக்கு என்ன பெருமை இருக்கு என்றும் எடுத்து விடுங்க !

  5. திரு.இமலாதித்தன்,
    பள்ளர் எனும் தாழ்த்தப்பட்ட மக்கள் மாதம் ஒன்றிற்கு ஒரு கவுரவ கொலை செய்து அதை வீரம் என்று பறைசாற்றுவது கிடையாது. குறிப்பாக தங்களுக்கு அவர்கள் மீது கோபம் வர காரணம், . அவர்களே பெரும்பாலும் உங்களை தென் தமிழகத்தில் திருப்பி அடிகிறார்கள்.

    சக பாலினம் என்றும் பாராமல் விமலாதேவி போன்ற பெண்களை வெட்டி ,எரித்து .கவுரவ கொலை செயும் உங்களது ஆதிக்க சாதி வெறிதான் மிகவும் கண்டிக்கத்தக்கது ,கொடுரமானது இதை வீரம் என்று கருதி கொள்ளும் தங்கள் எண்ணம் தான் கேலி சித்திரத்தின் உளடக்கமாக மாறி விடுகிறது.எதோ தேவர்கள் குறி வைத்து நரக சுரர்களால் தக்கபடுகிரர்கள்..என்று முனிவர்கள் ரேஞ்சுக்கு பாவம தங்களுக்கு கோபம் வந்து விட்டது .

    எந்த சாதியை .பின் புலமாக கொண்டிருப்பினும் சாதியை உயர்த்தி பிடிப்பது, தனக்கு கீழ் உள்ளவனாக நினைப்பது ..என்று யார் செய்தாலும்
    அவர்கள் விமர்சனதிற்கு உரியவர்களே …தன இன மக்களை கீழாக நினைத்த நந்தனாக இருப்பினும்…..

  6. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் சாதியத்தை உயதி பிடிக்கும் இரா.ச.இமலாதித்தன் அவர்கள் PJ வுக்கு “அன்பு அண்ணன்” ஆகிவிட்டாரா ?

    • இமலாதித்தன் சொன்ன மாறி உங்க உண்மை பெயரில் வந்து பேசுங்க ஏன் சந்துக்குள்ள ஒழிஞ்சுகிட்டு சவுண்டு குடுக்கிறீங்க இமலாதித்தன் சாதி வெறிய வெளிப்படயா சொந்த பேருல பேசும் போது நீங்க நல்லத சொல்ல ஏன் பொய் பெயருல வரனும்….

      • தமிழ் என்பது மனிதரின் பெயராக சாதி மத வெறி உடைய உமக்கும்,அவருக்கும் [இமலாதித்தன்,p.joseph] தெரியாமக்காக நான் என்ன செய்ய முடியும் ?

  7. விமலாதித்தன் உங்க மனச தொட்டு சொல்லுங்க மதுரையில் நடக்கும் உங்கள் சாதி மானாடு மற்ற நடுனிலையானவர்களால் மதிக்கப்படுகிறதா அல்லது நீங்கள் ம்திக்கும்படி நடத்துகிறீர்களா

  8. இங்கே பெரும்பாலானோரின் எண்ணமாக ஆட்சிபீடத்தில் இருக்கும் தேவரின அரசியல் வாதிகளை பற்றியே பேசி இருக்கின்றீர்கள். எதார்த்தமாக யோசித்து பார்த்தால், பணம் பதவி புகழ் என்பதெல்லாம் கிடைக்கும் என்று தோன்றினால் சாதி/மத வேறுபாடின்றி எவன் காலிலும் விழ எந்த மத/சாதிக்காரனும் காத்துக்கொண்டு தான் இருக்கின்றனர். அதுபோலத்தான் தமிழகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் தேவரின தலைவர்களும் தங்களது இடத்தை தக்க வைத்து பணம் பதவி புகழை சம்பாரிக்க ஜெயலலிதா/கருணாநிதி என பலரது காலிலும் விழுந்து கிடக்கின்றனர். இதில் இங்கே அடிமையாக இருக்கும் அடிமை அடையாளமான ஓபிஎஸ் பற்றியெல்லாம் யாருக்கும் கவலை இல்லை. வேண்டுமென்றால், தேவர் சாதியை சார்ந்த ஒரு ஆள், தமிழக முதலமைச்சராக இருந்தார் என பின்னாட்களில் சொல்லிக்கொள்ள மட்டுமே உதவும். மத்தப்படி எவன் ஆட்சியில் இருந்தாலும் எவனுக்கும் லாபமில்லை. அவன் என்ன சாதியாக இருந்தாலும்…

    இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் ஓபிஎஸ் போன்றோர் தான் ஒட்டுமொத்த தேவரினத்தின் அடையாளமென நினைப்பதும், இந்த சாதியை சேர்ந்தவர்கள் அனைவரும் சாதிவெறியர்கள் என்றும் செம்மறி ஆட்டு மந்தை போன்ற எண்ணத்தை மனதில் இருந்து தகர்த்தெறிய முனையுங்கள். அதை விட்டுவிட்டு, சாதிவெறியன் என்று சொல்லும் ஒவ்வொரு முறையும், சாதி பாகுபாடற்ற மனநிலையில் உள்ள பல தேவர் சாதி தமிழனை, இன்னும் சாதி வெறியனாக மாற்றிக்கொண்டிருக்கின்றீர்கள் என்பதே நிதர்சனம். மற்ற்ப்படி இங்கே போலி பெயரில் சகட்டு மேனிக்கு கேள்வி கேட்கும் நபர்கள் அவர்களது தொலைபேசி எண்ணை பதியவும், தனிப்பட்ட முறையில் நான் நேரடியாக பேசி புரிய வைக்கின்றேன், குருட்டுத்தனமானவர்களின் கேள்விகளுக்கு இது தான் இந்த பதிவில் என் கடைசி பின்னூட்டம்.

Leave a Reply to Kaarthikkaran பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க