சாதிவெறி கதிரவன், முருகன்ஜியைக் கைது செய் – ஆர்ப்பாட்டம்

10

தேவர் சாதி ஆதிக்க வெறி
உசிலம்பட்டி அருகே பூதிப்புரத்தில் பெண்கவுரவக் கொலை!

கதிரவன் எம்.எல்.ஏ., பாரதிய பார்வர்டு பிளாக் முருகன்ஜி ஆகியோரைக் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

துரை அருகே பூதிப்புரம் கிராமத்தில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி விமலாதேவி என்ற பெண் உயிருடன் எரித்துப் படுகொலை செய்யப்பட்டார். தேவர் சாதி ஆதிக்க வெறியர்கள் சாதி கவுரவத்தைப் பாதுகாப்பதாகக் கூறி இந்தப் பச்சைப் படுகொலையை நடத்தியுள்ளனர்.

இந்தப் படுகொலையை மறைத்து அது தற்கொலை என்று கொலைக்குத் தூண்டியதாக பெண்ணின் பெற்றோர், உறவினர் வெட்டியான் உட்பட 9 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. ஊரே இது படுகொலைதான் என்று கூறியபின்பும், ஊடகங்களும் அதனை உறுதி செய்தபின்பும் காவல்துறை அதைக் கொலை வழக்காக மாற்றவில்லை. உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் சரவணக்குமார் சாதிப் பாசத்தின் காரணமாகக் கொலையை தற்கொலை என்று சாதிக்கிறார்.

மேலும் அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளரும் உசிலம்பட்டி எம்.எல்.ஏ வுமான பி.வி. கதிரவன் மற்றும் பாரதீய பார்வட்டு பிளாக் என்ற கட்டைப்பஞ்சாயத்து சாதிவெறிக் கூட்டத்தின் தலைவரான முருகன் ஜி ஆகியோர் இந்தக் கொலைக்கு மூலகாரணமாக இருந்துள்ளனர். இவர்கள் கொலையான பெண்ணின் பெற்றோருக்குச் கொடுத்த நெருக்கடியே கொலைக்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளது. ஆனால் இவர்கள் நெஞ்சை நிமிர்த்தி நகர்வலம் வந்து கொண்டிருக்கின்றனர். காவல் துறை இவர்கள் தோள் மீது கைபோட்டுக்கொண்டு சிரிக்கிறது.

இந்த அநியாயத்திற்கு எதிராக, மேற்படி “கதிரவன் எம்.எல்.ஏ., முருகன் ஜி ஆகியோரைக் கைது செய்ய வேண்டும். டி.எஸ்.பி. சரவணக்குமாரை பணிநீக்கம் செய்யவேண்டும்” எனக்கோரி மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை மாவட்டக் கிளையின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதுரை தேனிமாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் பங்கேற்றன.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரைக் கிளைத் துணைத் தலைவர் வழக்கறிஞர் பா.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் ம.உ.பா.மையத்தின் மதுரை துணைச் செயலாளருமான தோழர் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சார்பகத்தின் சென்னைத்தலைவரும் ம.உ.பா. மையத்தின் உறுப்பினருமாகிய தோழர் மு.திருநாவுக்கரசு, விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் உசிலை பகுதி அமைப்பாளர் தோழர் தென்னரசு, வி.வி.மு. செயலாளர் தோழர் பி.மோகன், ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணிராஜ் ஆகியோர் உரையாற்றினர்.

முதலாவது பேசிய வி.சி.கட்சியின் தென்னரசு,

“பிரமலைக்கள்ளர் சாதியைச் சேர்ந்த விமலாதேவி – தலித் இளைஞர் திலீப்குமாரைக் காதலித்து அவர்கள் இருவரும் கடந்த ஜுன் மாதம் விருத்தாச்சலத்தில் திருமணம் செய்து கொண்டனர். கேரளமாநிலம் பாலக்காட்டில் குடியிருந்த அவர்களைக் கண்டு பிடித்து போலீசு மற்றும் சாதித் தலைவர்கள் நைசாகப் பேசிக் கூட்டி வந்து டி.எஸ்.பி அலுவலகத்தில் வைத்து திலீப்குமாரை மிரட்டி விரட்டிவிட்டு பெண்னை பெற்றோருடன் அனுப்பிவிட்டனர். கடைசிவரை விமலா திலீப்குமாருடன் தான் வாழ்வேன் என்று உறுதியாக இருந்ததால் அவருடைய பெற்றோரை அவரைக் கொன்று எரித்துவிட்டனர். மேலும் தலித்துகளை மிரட்டி வருகின்றனர். எனக்கும் தொலை பேசி மூலமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்” என்றார்.

உசிலம்பட்டியில் நடந்த இந்தப்படுகொலை என்பது புதிதல்ல. நாடுமுழுவதும் இப்படிப்பட்ட படுகொலைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 30 கௌரவ கொலைகள் நடந்துள்ளன. பல கணக்கில் வரவில்லை. கௌரவக் கொலை என்று சொல்கின்றனர். இதில் என்ன கௌரவம் இருக்கிறது. இது கௌரவக் கொலை அல்ல காட்டுமிராண்டி கொலை. காதல் என்பது இயல்பானது. இது எப்படி குற்றமாகும்.

இந்தக் கொலை ஒரே நாளில் நடக்கவில்லை. திலீப்குமார் தொடர்ந்து புகார் அளித்தும் காவல் துறை அலட்சியம் காட்டியது. இந்தக் கொலையில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டியவர்கள் கதிரவன் எம்.எல்.ஏ மற்றும் முருகன் ஜி. ஆனால் அவர்கள் மீது இதுவரை வழக்கு கூட பதிவு செய்யவில்லை. கொலை செய்தவர்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரிகின்றனர்.

இந்தக் கொலையைக் கண்டித்து போஸ்டர் ஒட்டினால் சாதி வெறியர்களும், காவல்துறையும் கிழித்து விடுகின்றனர். கொலைக்கு காரணமானவர்கள் சுதந்திரமாக உலவ விடும் காவல் துறை, கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்த அனுமதி கேட்டால் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும் என்று கூறி அனுமதி மறுக்கின்றனர்.

உசிலை வட்டாரத்தில் சாதி வெறி தலை விரித்தாடுகிறது. கீரிப்பட்டி, பாப்பாப்பட்டியில் தாழ்த்தப்பட்டவர்கள் தேர்தலில் நிற்கத்தடை. செருப்புப் போடத் தடை. சைக்கிளில் செல்லத் தடை. தனிக் குவளை, தனி சுடுகாடு இன்னமும் தொடர்கிறது. இவற்றிற்கு எதிராக காவல் துறை என்றாவது நடவடிக்கை எடுத்தது உண்டா. பிறகு எதற்கு காக்கிச் சட்டை, கையிலே துப்பாக்கி, கௌரவக் கொலையைத் தடுக்க தனிச் சட்டம் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்காமல் தடுக்க தேவர் சமூகத்தில் இருப்போரும் போராட முன் வரவேண்டும்.

வழக்கறிஞர் திருநாவுக்கரசு, ம.உ.பா. மையம், மதுரை

இந்தியா முழுவதும் ஆதிக்க சாதியினரின் ஆட்சிதான் நடைபெறுகிறது. பிற்பட்டோரில் 700 உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர்களே மாறி மாறி ஆட்சி செய்து செய்து தலித்துகளை ஒடுக்கின்றனர். தமிழகத்தில் 7000 கிராமங்களில் இன்னமும் தீண்டாமை இருக்கிறது. அனைவருக்கும் ரத்தம் ஒன்றுதானே. பின் ஏன் இந்த சாதி வெறி? இந்த சாதி வெறியால் பாதிக்கப்படுவோர் தலித்துகள் தான். காதல் திருமணம் செய்து கொண்டால் யாருக்கும் தெரியாமல் தூக்கு மாட்டி கொலை செய்து விடுகின்றனர். இதுதான் ஜனநாயகமா? இதுதான் ஜனநாயக நாடா?

இப்படிப்பட்ட படுகொலைகள் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்து விடுகின்றன. இல்லையென்றால் எல்லாமே ஆதிக்க சாதியினரால் மறைத்தப்பட்டிருக்கும். தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இன்னமும் கோவிலுக்குள் போகமுடியவில்லை. ஆண்டான் அடிமைச் சமூகமும் மாறவில்லை. இந்த அநீதிகள் தொடருமானால் தமிழகம் முழுவதிலுமுள்ள வழக்கறிஞர்களைத் திரட்டிப் போராடுவோம்.

குருசாமி, செயலர், வி.வி.மு, உசிலை

வன்னியர்களை விட, கவுண்டர்களை விட நாங்கள் என்ன குறைந்தவர்கள என்ற திமிரில் திட்டமிட்டு கள்ளர் சாதி வெறியர்கள் இந்தக் கொலையை செய்துள்ளனர். விமலாதேவி தூக்குமாட்டி தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கோழை அல்ல. காவல் நிலையத்திலும், நீதி மன்றத்திலும், சாதி வெறியர்களிடத்திலும் துணிவாக பேசிய பெண். பாரதிய ஃபார்வெட் பிளாக் முருகன் ஜி அவரது தாலியைக் கழட்டச் சொன்ன போது, “முதலில் காதல் திருமணம் செய்து கொண்டு ஓடிப்போன உன் பெண்ணின் தாலியை அறுத்துவிட்டு அதன்பின் இங்கே வா” என்றும், கதிரவன் எம்.எல்.ஏ. விடம் “உன் வேலையைப் பார்த்து விட்டுப்போ” என்றும் பேசிய வீரப்பெண்மணி விமலாதேவி. அவர் காதலுக்காக போராடி செத்திருக்கிறார். அவரை தமிழக அரசு கௌரவப்படுத்த வேண்டும். கதிரவன் எம்.எல்.ஏ., முருகன் ஜி, உசிலை சாதி சங்க வழக்கறிஞர்கள் மீது வழக்கு நடத்த அனுமதி கேட்டால் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும் என்று சொல்லி காவல்துறை அனுமதி மறுக்கிறது. சட்டம் ஒழுங்கை கெடுப்பதே காவல்துறைதான். சட்டத்தை காவல்துறை மயிர் அளவிற்கு மதிப்பதில்லை.

மோகன், செயலர், வி.வி.மு, தேனி

இந்தக் கொலை நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. வட மாநிலத்தில் ரூப்கன்வர் உயிரோடு கொளுத்திய அந்த உடன் கட்டை ஏறும் கொடுமை தமிழ்நாட்டில் இல்லை என்று பெருமை பேசிக் கொண்டனர். ஆனால் அதற்கு சற்றும் குறைவில்லாமல் கௌரவக்கொலைகள் நடக்கின்றன. கொலையை செய்துவிட்டு அப்படித்தான் செய்வோம் என்று நெஞ்சை நிமிர்த்தி திரிகின்றனர், சாதிவெறியர்கள். அவர்களை காவல்துறை கண்டு கொள்வதில்லை. விமலா தேவியின் காதல் திருமணத்தில் சாதி வெறியோடு கட்டப்பஞ்சாயத்து செய்ய சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் வருகிறார். இவர் உசிலைப் பகுதியிலுள்ள கள்ளர் சமூகத்து பிரச்சனையெல்லாம் தீர்த்துவிட்டாரா?! நிலங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் பறிமுதல் செய்து கொண்டிருக்கிறதே, அதைத் தடுத்துவிட்டாரா? காதல் பற்றி படம் எடுப்பவன் எல்லாம் உன் சாதிக்காரன் தானே. அதைத் தடுக்கவேண்டியது தானே?

ஒரு காலத்தில் கள்ளர்கள் மாலை நேரத்தில் காவல் நிலையத்தில் போய் கையெழுத்துப்போட வேண்டும், கள்ளர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. உரிமைகள் மறுக்கப்பட்டன. கம்யூனிஸ்டுகளும் சமூகப் போராளிகளும் போராடித்தானே அவர்களுக்கு உரிமை பெற்றுத்தந்தனர். அன்றைக்கு இந்த சாதித் திமிர் எங்கே போனது. தாழ்த்தப்பட்ட நீதிபதியின் முன் கைகட்டி நிற்கிறாயே அப்போது உன் சாதித்திமிர் எங்கே போனது. ஆண்ட பரம்பரை என்று பெருமை பேசும் உனக்கு எதற்கு இட ஒதுக்கீடு, சலுகைகள் தூக்கி எறிய வேண்டியது தானே.

கண்டதற்கெல்லாம் கவிதை எழுதும் கலைஞர் கருணாநிதி விமாலாதேவி பற்றி ஏன் கவிதை எழுத வில்லை. எழுதினால் தேர்தலில் வாக்கு கிடைக்காது. இங்கே கொளுந்து விட்டு எரியும் சாதிக் கொட்டத்தை நாங்கள் அடக்குவோம்.

லயணல், மாவட்ட செயலர், ம.உ.பா. மையம்

கேவலமான ஒரு கொலையைச் செய்துவிட்டு அதை கவுரவக் கொலை என்று கூறுகிறார்கள். சாதி என்பது கவுரவமா? சாதி என்பது இழுக்கு. சாதிகளிலே உயர்ந்தவன் பிராமணன் (பார்ப்பான்) என்று தன்னைச் சொல்லிக்கொள்கிறவன் மற்ற சாதிகளை எல்லாம் தனக்குக் கீழானது என்று சொல்கிறான். இதிலே சூத்திர சாதிதான் கீழானது.

சூத்திரர்களை மனுதர்மம் வேசியின் மக்கள் என்று சொல்கிறது. இன்றைக்கு பெரும்பான்மை சாதியினர் சூத்திரர்கள் தான். தேவடியாமகன்கள் என்ற மிகப்பெரிய இழிவு சூத்திர சாதிகளின் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதை எதிர்த்துப் போராட வேண்டியவர்கள் தங்களுக்குக் கீழான சாதிவரம்புக்குள்ளே வராத, மனிதர்களாகவே மனுதர்மத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைகளாக அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதிலே பெருமை கொள்கிறார்கள்.

இது பார்ப்பனீயத்தின் சூழ்ச்சி. இதைத்தான், ஜெயலலிதா, சு.சாமி, பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., ராமதாசு இன்னும் பல சாதிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஏற்றுக் கொண்டு நடைமுறைப் படுத்துகிறவர்கள். பார்ப்பனர் அல்லாதவர்கள் அர்ச்சகர் ஆகி கருவறைக்குள்ளே போக முடிய வில்லை. தீண்டாமை நிலவுகிறது. தாய்த்தமிழ் மொழியை நீசபாசை என்று சொல்கிறான். இதையெல்லாம் ஏற்றுக் கொண்டு சாதிப் பெருமை பேசுவது மிகக் கேவலமானது.

வேறுவேறு சாதி மதம் இனம் மொழியைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு கழுதைக் குட்டியா பிறக்கும். மனிதக்குழந்தை தானே பிறக்கும். சாதி எங்கே தடையாக வருகிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத கேவலம் பார்ப்பனீயத்தால் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்றான் வள்ளுவர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார் கணியன் பூங்குன்றன். இதையெல்லாம் பேசுகிறவர்கள் சாதியை பேசி பிரித்து வைக்கிறார்கள். எனவே சாதியை ஒழிக்க சாதி மறுப்பு திருமணம், காதல் திருமணங்களை நாம் ஆதரிக்க வேண்டும். சாதியை இழிவாகக் கருதி சாதி மறுப்பு திருமணத்தை நம்முடைய குடும்பங்களிலே நடைமுறைப்படுத்த வேண்டும். சாதியின் பெயரால் மக்களிடம் வறட்டுப் பெருமையைப் பாதுகாத்து ஆதாயம் தேடிவரும் கதிரவன் எம்.எல்.ஏ முருகன் ஜி இன்றைய சாதித் தலைவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

  • தாழ்த்தப்பட்டவர்கள் மீதான சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளது. ஆனால் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் சாதிப் பெருமைக்காகச் செய்கிற இந்தக் கொலைகளைத் தடுக்க தண்டிக்க தனிச் சட்டம் இல்லை. எனவே இதற்கென தனிச்சட்டம் உருவாக்க வேண்டும்.
  • சட்டங்களால் பெரிய பலன்கள் நடைமுறையில் இல்லை என்பதால் சமூக நீதியாக மக்களுக்கு இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒடுக்கப் படுகிறவர்களுக்கு ஆதரவாகப் போராட வேண்டும்.
  • இந்த வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
  • தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், விமலாதேவியைத் திருமணம் செய்த திலீப்குமார் மற்றும் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

மதுரையில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தல்லாகுளம் காவல் நிலையத்தில் அனுமதி கேட்கச்சென்ற வழக்கறிஞர் நடராஜனிடம் பல்வேறு நிபந்தனைகளைச் சொன்னதோடு 1 மணிநேரம் மட்டும் அனுமதி வழங்கினார். அதோடு மட்டுமல்லாமல், “எதிரித் தரப்பினரும் தங்களை எதிர்த்து பலர் அவதூறு செய்வதாகவும், சாதிப்பகையைத் தூண்டி கலவரம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் புகார் அளித்துள்ளனர். எனவே எந்த தனிநபரையும் தாக்கிப் பேசக் கூடாது. பார்த்து நடந்து கொள்ளுங்கள்” என்று மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஆர்ப்பாட்டத்துக்கான துண்டறிக்கை மாவட்ட நீதிமன்றத்தில் விநியோகிக்கப்பட்டது. அதை விநியோகிக்கக் கூடாது என்று தேவர்சாதி வழக்கறிஞர்கள் சிலர் சங்கச் செயலரிடம் புகார் அளித்துள்ளார். சாதிப்பெயரைப் போட்டு கோர்ட்டுக்குள் விநியோகிக்கக் கூடாது என்று செயலாளர் கூறியுள்ளார். ஆனால் அதற்கு முன் மொத்த நோட்டீசும் விநியோகிப்பட்டது.

சில இளம் சாதி வழக்கறிஞர்கள், “தேவர்சாதி என்று எப்படி போடுவாய். நீ எப்படி ஆர்ப்பாட்டம் நடத்துகிறாய்” என்று பார்ப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

நீதிமன்ற வாளாகத்துக்குள் சுவரொட்டி ஒட்டப்பட்டது. ஆர்ப்பாட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குறிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக மழை ஊற்றிய போதிலும் பெருமளவில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் பலர் வந்து பாராட்டிச் சென்றனர்.

தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை

10 மறுமொழிகள்

  1. கம்யூனிஸ்ட்களின் சதித் திட்டம் பிசுபிசுக்க இருக்கிறது.

  2. யார் மேல் ஜாதி?,யார் கீழ் ஜாதி? இந்த மாதிரி கோசங்களே அவமானகரமாக உள்ளது?
    தவறு செய்தவன் எவனோ,அவனை சட்டம்,தண்டிக்க வேண்டும் இல்லையெனில் தவறு செய்பவன், தவறை நினைக்கவே அஞ்சி நடுங்கும் சட்டம் உருவாகும் வண்ணம் ஒர் நாள் வர வேண்டும்.

  3. Vinavu comrades should first encourage love marriages between Scheduled caste sub groups such as between Devenders and Adidravidars and between Devender girls and Arunthathiar boys. Then we can march forward towards inter marriage between Backward classes and Dalits

    • வழிகாட்டுபவர்கள் வழி காட்டடும்,மனதொத்த இதயங்களுக்கு ஜாதி,மதம் ஒரு தடையாக இருக்கக்கூடாது, மதத்துடன் ஜாதிவெறியும் உடைய எவனுக்கும் இது புரிவது சற்று சிரமந்தான்.

  4. தோழர்களே,நீங்கள் எப்போது திருந்துவீர்கள்,நாலு சுவர்க்குள் நடக்கும் சர்ச்சயைக்கூட,ஊதி பெரிதாக்கி,வர்க்க போராட்டம் என்று வண்ணம் பூசி, நாட்டைக்கெடுத்ததுபோல்,தொழிற்சாலைகளை இழுத்து மூடியதுபோல்,கிராமங்களில் புகுந்து,மக்களின் நிம்மதியை கெடுக்கிறீர்கள்.சட்டம் உங்களுக்கு வளைந்து கொடுத்தால்தான்,அது சட்டம்,இல்லையென்றால் அது ஒரு சாராரின் கைப்பாவை.அப்படித்தனே!சந்தடி சாக்கில் சி டி ஆக்ட் பற்றி குறிப்பிட்டதிலிருந்து,உங்கள் நோக்கம் ஒரு இனத்தை கேவலப்படுத்தவேண்டுமென்பதுதான் என தெரிகிறது.பிறவிக் குணம் எல்லோருக்கும் உண்டு என்ப்தை மறந்துவிடாதீர்கள்

  5. Neenga adichukkonga arasiyalvathi kulirkayattum ella payalum suya mariyathaya vittuttu pitchayedukka poreenga kurai solla mattum engirunthu than varuvanugalo thirunthunga

  6. அடடே நான் ஒரு பாஸ்கரன் ஒரு குமாரோடு கம்புசுற்றியே போதுண்டா சாமி இவகளுக்கு புரிய வைக்க என்றாகிவிட்டது, தோழர் பாபுபகத் எச்சரிக்கை, திவ்யபாரதி பதிவு விவாதத்தை படித்து விட்டு எதையாவது முயற்சிக்கவும் இங்கு.

    ஆ ஆன்டிஸ்வாமி எப்புடி எப்புடிங்க நாலுசுவத்துக்குள நடப்பதை ஊதி பெருக்கிறோமா? இந்த வண்ணம் பூசுவது ராக்கி கட்டுவதெல்லாம் எங்களுக்கு தெரியாதுங்க, ஆனா ஒன்னு மட்டும் நிச்சயமா தெரியுமுங்க எல்லாத்துக்கும் அடிப்படை காரணம் வர்க்க உரிமைகள் பறிக்க படுவதே என்பது, நீங்க தானுங்க அதிகார வர்க்கத்துக்கு தோதா சாதி சாயம்அ டிக்கிறிங்க. உங்கள் போலவே இன , மத சாயம் வர்ணிஷு பாலிஷு அடிக்கவெல்லாம் இருக்காய்ங்க.

    எல்லாம் பாஸ்கரன் மற்றும் குமார்கிட்ட கிளாஸ் எடுத்திருப்பாய்க போல ஹிஹிஹ்

  7. முத்து நீங்க ஏன் அலுத்துகிரிங்க நானே இப்போ திவிய பாரதி பிரச்சினையில் தான் இன்னமும் கொஞ்சமும் மாறவில்லை மாறாக கூடிகொண்டிருபதை காட்டுகிறது, பழைய பதிவுகளியே பல பாஸ்கரன்கல் குமார்கள் எல்லாம் இருக்கிறார்கள். இப்போ வெறி முற்றியதில் அதிசயமில்லை.

  8. சின்னா, இந்த பதிவு சாதி ஆணவ படுகொலை தொடர்பாக கதிரவன் எம்.எல்.ஏ., பாரதிய பார்வர்டு பிளாக் முருகன்ஜி ஆகியோரைக் கைது செய்யக்கோரி நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பானது.அதனை பற்றி ஒத்த வார்த்தை பேச துப்பற்ற நீங்கள் என்னை பற்றி வினவில் புலம்பி தீர்ப்பதில் யாதொரு பயனும் இல்லை. விமலா என்ற கள்ளர் சமுகத்து பெண் தலித் இளைஞர் திலீப்குமாரைக் காதலித்து திருமணம் செய்துக்கொடமைக்காக அவரின் பெற்றவர்களால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த விசயத்தில் சாதி வெறியர்களை கண்டிக்க துப்பற்ற நீங்கள் காரண காரியங்கள் இன்றி உள்ரிகொட்டிகொண்டு உள்ளீர்கள். உங்களின் வெறி ஆம் சாதி வெறி என்பது பட்டியல் இன மக்களை மலம் அள்ளுபவர்களாக சித்தரித்த கள்ளர் சமுகத்து திவியாவின் சாதிவெறியை விட எந்த விதத்திலும் குறைந்தது அல்ல.

    அனைத்து சாதி மக்களும் துப்புரவு தொழிலில் உள்ள புள்ளிவிவரங்களை கொடுத்தும் அதற்கு பதில் அளிக்க திராணியற்ற நீங்கள் இங்கே தொடர்பின்றி என்னை பற்றி எழுதியுள்ளீர்கள். மீண்டும் கேட்கின்றேன்..,

    1. இப்ப விஷம் (விசயம்) என்ன வென்றால் திவியபாரதி அதே அழஅலைபாயுதே படத்தை எண்ணற்ற முறைகளில் பார்த்து ரசித்தாக வாகுமுலத்தை அவரின் முக நூல் பக்கத்தில் கொடுகின்றார். அவர் தனி நபர் எனில் நாம் யாருமே கவலை படவேண்டியது இல்லை.. அதே நேரத்தில் அவர் ஒரு கம்யுனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்.அந்த கட்சியின் மாணவர் அமைப்பின் தலைவர் வேறு.! அதனை எல்லாம் தாண்டி அவர் அலைபாயுதே பட்டத்தை ஆராதனை செய்து கொண்டே அவர் எடுக்கும் ஆவண படம் எப்படி பட்டதாக இருக்கும்? அந்த தொழிலில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தொழிலாளர்களின் நலன்களை முன்னிறுத்தி இருக்குமா? அல்லது மேட்டுக்குடி சாதிகாரர்களின் பார்வையில் இருந்து இருக்குமா?

    2 திவியா அவர்கள் ஆவண படம் எடுக்கும் போதே போன ஆண்டு 2016 , நண்பர் கவுதமன் அவர்கள் பட்டியல் இன சாதி பெயர்களை வெளியிடாதீர்கள் என்று கூறியும் திவியா பட்டியல் இன மக்களின் சாதி பெயர்களை மட்டுமே வெளியிட்டது ஏன்? சமுகத்தில் அவர்களை இழிவு செய்வது அன்றி வேறு என்ன நோக்கம்.?

    3.புள்ளி விவரங்களின் அடிப்படையில் கேட்கின்றேன். சாதி ஆணவ படம் எடுத்த திவியாவுக்கு பட்டியல் இன மக்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது எப்படி? மதுரை மாநகராச்சிய்ல் உள்ள144 பிற்ப்பட்ட இன தொழிலாலாளர்களில் ஒருவர் கூட படத்தின் பிரேமுக்கும் வராத காரணம் என்ன?

    4.தேனியிலேயே 18 துப்புரவுத்தொழிலாளர்கள் கள்ளர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டவர்கள் இருக்க அவர்களை பற்றிய தகவல்கள் எப்படி திவியாவின் சாதி ஆணவ படத்தில் வராமல் போனது?

    5.மலக்குழியில் சிக்கி பரிதாபமாக இறந்தவர்கள் பல சாதியினரையும் சேர்த்தவர்களாக இருக்க சாதி ஆவண படத்தில் அவர்களை பற்றிய விவரங்கள் காணமல் போனது ஏன்?

    பதில் அளிக்க வக்கு இருக்கா உங்களுக்கு? முந்தைய பதிவில் வன்னிய சாதி வெறியை மறைக்க பார்த்தார் தானே நீங்கள். உங்கள் முற்போக்கு முகமூடி எப்போதோ கிழிந்து வினவில் தொங்குவது கூட தெரியாமல் வினவில் சுற்றி திரிகிண்றீகள் நீங்க.

    இதனை பேசி யது யார்? ///இதில் வேறு சிலரும் சம்பந்த பட்டிருப்பதாக தோன்றுகிறது. தமிழகம் மேலும் கேரளம் மீதும் வன்மம் கொண்டிருபோரின் தூண்டுதலாகவும் இருக்கலாம். சே இவர்களெல்லாம் ஏன் எல்லோரையும் நெருங்கும் ஆபத்தை புரியாமல் சாதியை கட்டிபிடித்து கொண்டிருக்கிறார்கள்./// வன்னிய சாதி வெறிகயை மறைக்க பிரச்சனையை திசை திருப்பிய ஆசாமி நீங்கள் தானே சின்னா?

Leave a Reply to babubagath பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க