privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்பெங்களூரு கோவிலில் நுழைந்த தலித் சிறுவனுக்கு அடி உதை

பெங்களூரு கோவிலில் நுழைந்த தலித் சிறுவனுக்கு அடி உதை

-

bangalore-dalit-boy-temple-entry-1

படம் : ஓவியர் முகிலன்

பெங்களூரு நகரத்தில் உள்ள நெலமங்களா பகுதியில் ருத்ரேஸ்வரா சுவாமி கோவில் உள்ளது. அருகாமையில் சந்தோஸ் எனும் எட்டு வயது தலித் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கோவிலின் பார்ப்பனப் பூசாரி பிரசாதத்தை விநியோகித்துக் கொண்டிருந்தார். அதை வாங்க விரும்பிய சிறுவன் பூசாரியைப் பின் தொடர்ந்து கோவிலின் கருவறைக்குள் நுழைந்து விட்டான்.

பார்ப்பன பூசாரிகள் அல்லாதோர் கருவறைக்குள் நுழைவதற்கு பார்ப்பனியத்தின் ஆகமவிதி மற்றும் அரசியல் சட்டப்படியே தடை உள்ளது. அத்துடன் இங்கே ஒரு தலித் சிறுவனே நுழைந்து விட்டபடியால் கோவில் மற்றும் மூல விக்ரகங்களின் புனிதம் எவ்வளவு ‘கெட்டுப்’ போயிருக்கும் என்பதை ஒரு பார்ப்பனராக இருந்து பார்த்தால்தான் புரியும்.

மருத்துவமனையில் சிறுவன் சந்தோஷ்
மருத்துவமனையில் சிறுவன் சந்தோஷ்.
படம் நன்றி: The Hindu

நம்மவா ஆட்சி நடக்கும் போதே இப்படி இந்து தர்மத்திற்கு சோதனையா என்று எகிறிய அந்த பார்ப்பனப் பூசாரி சிறுவனை கடுமையாக தாக்கியிருக்கிறார். குறிப்பாக கோவில் தூணில் அவன் தலையை மோதவைத்திருக்கிறார். ரத்தம் வழிய வீடு திரும்பினான் சந்தோஷ்.

செருப்பு தைக்கும் தொழிலாளிகளான அவனது பெற்றோர் உடன் கோவில் சென்று பார்ப்பன பூசாரிகளிடம் பேசியிருக்கிறார்கள்.  பூசாரிகளோ அதை மறந்து விடுமாறு கோரியதோடு வெற்று தாளில் கைநாட்டு கையெழுத்தும் வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் சொன்ன விளக்கப்படி சிறுவனை திருடன் என நினைத்து தாக்கிவிட்டார்களாம். தீண்டாமை கொடுமைகள் அனைத்தோடும் இத்தகைய திருட்டு பட்டம் கூடவே திணிக்கப்படும். எனினும் சிறுவன் என்ன திருடினான் அல்லது எதை திருட முயன்றான் என்றெல்லாம் அவர்கள் சொல்லவில்லை. திரைக்கதையில் ஏதோ குழப்பம் போல.

பிறகு உள்ளூர் தலித் இயக்கங்கள் மூலம் இந்த பிரச்சினை செய்தியாக ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது. தாக்கிய பார்ப்பனர்கள் இதை மறக்கச் சொல்கிறார்கள். நாமோ இதை மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் கூடாது.

  1. இந்தியாவில் சுத்தப்படுத்தவேண்டியது மனித மனங்கள்தான் தெருக்கள் அல்ல.
    aaab ki bar modi sarkar 🙁

Leave a Reply to akilesh.r.d. பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க